text
stringlengths
16
178
அறிவுடையாரை அரசனும்‌ விரும்பும்‌.
அறிவுதரும்‌ வாயும்‌ அன்பு உரைக்கும்‌ நாவும்‌
அறிவு புறம்போய்‌ அண்டது போல
அறிவு பெருத்தோன்‌ அல்லல்‌ (நோய்‌) பெருத்தோன்‌.
அறிவு மனதை அரிக்கும்‌.
அறிவேன்‌ அறிவேன்‌ ஆலிலை புளியிலைபோலிருக்கும்‌.
அறுகங்கட்டைபோல்‌ அடிவேர்‌ துளிர்க்கிறது.
அறுகங்கட்டையும்‌ ஆபத்துக்குதவும்‌
அறுக்க ஊறும்‌ பூம்பாளை, அணுக ஊறும்‌ ஏற்றின்பம்‌.
அறுக்கமாட்டாதவன்‌ இடுப்பிலே ஐம்பத்தெட்டு அரிவாள்‌.
அறுதலி மகனுக்கு அங்கமெல்லாம்‌ சேட்டை.
அறுதலிமகனுக்கு வாழ்க்கைப்பட்டு விருதாவிலே தாலி அறுத்தேன்‌.
அறுத்த கோழி துடிக்குமாப்‌ போல.
அறுத்தவள்‌ ஆண்பிள்ளை பெற்றகதை
அறுத்தவிரலுக்குச்‌ சுண்ணாம்பு தடவமாட்டான்‌, ஆண்டிவந்தாலும்‌ பிச்சைபோடமாட்டான்‌.
அறுத்துக்‌ கொண்டதாம்‌ கழுதை எடுத்துக்கொண்டதாம்‌ ஓட்டம்‌.
அறுந்த விரலுக்குச்‌ சுண்ணாம்பு கிடையாது.
அறுபது நாளைக்கு எழுபது கந்தை.
அறுபத்துநாலடிக்‌ கம்பத்தி லேறி ஆடினாலும்‌,அடியிலிறங்கித்தான்‌ தியாகம்‌ வாங்கவேண்டும்‌.
அறுபத்தெட்டுக்‌ கோரம்பலம்‌.
அறுப்புக்காலத்தில்‌ எலிக்கு ஐந்துபெண்சாதி.
அறுவாய்க்கு வாய்பெரிது, அரிசிக்குக்‌ கொதிபெரிது
அறைக்கீரைப்‌ புழுதின்னாதவனும்‌ அவசாரிகையில்‌ சோறுண்ணாதவனும்‌ இல்லை.
அறையில்‌ ஆடி, அல்லவோ அம்பலத்தில்‌ ஆடவேண்டும்‌.
அறையில்‌ இருந்தபேர்களை அம்பலம்‌ ஏற்றுகிற புரட்டன்‌.
அறைவீட்டுச்செய்தி அம்பலத்தில்‌ வரும்‌.
அற்ப ஆசை கோடிதவத்தைக்‌ கெடுக்கும்‌
அற்பக்கோபத்தினால்‌ அறுந்தமூக்கு ஆயிரம்‌ சந்தோஷம்‌ வந்தாலும்‌ வருமா?
அற்பசகவாசம்‌ பிராணசங்கடம்‌.
அற்பசுகம்‌ கோடிதுக்கம்‌.
அற்பத்திற்கு அழகு குலைகிறதா?
அற்பத்‌ துடைப்பமானாலும்‌ அகத்தூசியை அடக்கும்‌
அற்பர்‌ சிநேகம்‌ பிராண கண்டிதம்‌.
அற்பர்‌ சிநேகம்‌ பிராண சங்கடம்‌.
அற்பனுக்கு பவிஷு(ஐசுவரியம்‌) வந்தால்‌ அர்த்த ராத்திரி குடை பிடிப்பான்‌.
அற்பன்கை ஆயிரம்பொன்னிலும்‌ சற்புத்திரன்‌ கைத்தவிடு நன்று.
அற்பன்‌ பணம்‌ படைத்தால்‌ அர்த்தராத்திரி குடைபிடிப்பான்‌.
அற்பன்‌ பணம்‌ படைத்தால்‌ வைக்க வகை அறியான்‌.
அற்றது பற்றெனில்‌ உற்றது வீடு.
அற்றத்துக்கு உற்றதாய்‌.
அனந்தத்துக்கு ஒன்றாய்‌ உரையிட்டாலும்‌ அளவிடப்‌ போகாது.
அனல்குளிர்‌ வெதுவெதுப்பு இம்மூன்றுகாலமும்‌ ஆறு காலத்திற்குள்‌ அடங்கும்‌.
அனற்றை இல்லா ஊரிலே வண்ணாரிருந்து கெட்டார்கள்‌.
அனுபோகம்‌ தொலைந்தால்‌ அவிழ்தம்‌ பலிக்கும்‌.
அன்பற்ற மாமியாருக்குக்‌ கால்பட்டால்‌ குற்றம்‌ கை பட்டால்‌ குற்றம்‌.
அன்பற்ற மாமியாருக்குக்‌ கும்பிடுகிறதும்‌ குற்றந்தான்‌.
அன்பற்றார்‌ வாசலிலே பின்பற்றிப்‌ போகாதே.
அன்பான சிநேகிதனை ஆபத்தில்‌ அறி.
அன்பில்லார்‌ தமக்கு ஆதிக்கம்‌ இல்லை.
அன்பு இருந்தால்‌ ஆகாததும்‌ ஆகும்‌.
அன்புடையானைக்‌ கொடுத்துஅலையச்சே அசல்வீட்‌டுக்காரன்‌ வந்து அழைத்தகதை.
அன்புள்ள குணம்‌ அலையில்லா நதி.
அன்பே பிரதானம்‌ அதுவே வெகுமானம்‌.
அன்று ஆயிரம்‌ பொன்னிலும்‌, நின்றற ஒருகாசு பெரிது.
அன்றில்லை இன்றில்லை அழுகல்‌ பலாக்காய்‌, கலியாணவாசலிலே கலந்துண்ண வந்தாயே!
அன்று இறுக்கலாம்‌ நின்றிறுக்கலாகாது.
அன்று எழுதினவன்‌ அழித்து எழுதுவானோ?
அன்று கண்டதை அடுப்பில்போட்டு ஆக்கினபானையைத்‌ தோளில்‌ போட்டுக்கொண்டு திரிகிறதுபோல்‌.
அன்று கண்ட மேனிக்கு அழிவு இல்லை.
அன்று கண்டனர்‌ இன்றுவந்தனர்‌.
அன்று கழி அன்று கழி.
அன்று குடிக்கத்‌ தண்ணீரில்லை ஆனைமேல்‌ அம்பாரி வேணுமாம்‌.
அன்று கொள்‌ நின்று கொள்‌ என்றும்‌ கொள்ளாதே.
அன்றுசாப்பிட்ட சாப்பாடு இன்னும்‌ ஆறுமாசத்திற்‌குத்‌ தாங்கும்‌.
அன்றுதின்ற ஊண்‌ ஆறுமாசத்துப்பசியை அறுக்கும்‌.
அன்றுதின்ற சோறு ஆறு மாதத்திற்கு ஆமா?
அன்றுமில்லை காற்று, இன்றுமில்லை குளிர்‌.
அன்றுமில்லை தையல்‌, இன்றுமில்லை பொத்தல்‌.
அன்றைக்காடை இன்றைக்குக்கொடை என்றைக்கு விடியும்‌ இடையன்‌ தரித்திரம்‌?
அன்றைக்கு அடித்த அடி ஆறுமாதம்‌ தாங்கும்‌.
அன்றைக்குக்‌ இடைக்கிற ஆயிரம்‌ பொன்னிலும்‌ இன்‌றைக்குக்‌ கிடைத்த அரைக்காசு பெரிது.
அன்றைக்கெழுதினதை அழித்தெழுதப்‌ போகிறானா?
அன்றைக்குச்‌ சொன்னசொல்‌ சென்ம சென்மத்துக்‌கும்‌ உறைக்கும்‌.
அன்றைக்குத்‌ தின்கிற பலாக்காயைவிட இன்றைக்குத்‌ தின்கிற களாக்காய்‌ பெரிது.
அன்னதானத்திற்குச்‌ சரி என்ன தானமிருக்கிறது?
அன்னநடை நடக்கப்போய்க்‌ காகம்‌ தன்‌ நடையும்‌ இழந்‌தாற்போல.
அன்னநடை நடக்கப்போய்த்‌ தன்‌ நடையும்‌ கெட்டாற்‌ போல.
அன்னப்பாலுக்குச்‌ சிங்கி யடித்தவன்‌ ஆவின்‌ பாலுக்‌குச்‌ சர்க்கரை தேடுகிறான்‌.
அன்னப்பிடி வெல்லப்பிடி ஆச்சுது.
அன்ன மயம்‌ இன்றிப்‌ பின்னை மயம்‌ இல்லை.
அன்னமயம்‌ பிராணமயம்‌.
அன்னம்‌ இட்டாரைக்‌ கன்னம்‌ இடலாமா?
அன்னம்‌ இறங்குவதே அபான வாயுவால்‌.
அன்னம்‌ ஓடுங்கினால்‌ அஞ்சும்‌ ஓடுங்கும்‌.
அன்னம்‌ மிகக்கொள்வானும்‌ ஆடை அழுக்கு ஆவானும்‌ பதர்‌.
அன்னம்‌ முட்டானால்‌ எல்லாம்‌ முட்டு.
அன்னிய சம்பந்தமே யல்லாமல்‌ அத்தை சம்பந்தமில்லை என்கிறான்‌.
அன்னிய மாதர்‌ அவதிக்கு உதவுவாரா?
அன்னைக்கு உதவாதவன்‌ ஆருக்கு மாகான்‌.
அன்னையும்‌ பிதாவும்‌ முன்னறி தெய்வம்‌.