template_id
int64
1
2
template_lang
stringclasses
1 value
inputs
stringlengths
132
27.8k
targets
stringlengths
63
27.6k
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: இயற்கை பச்சைப் பாய் விரித்து அழைக்க காலைக்கதிரவன் விளக்காக இயற்கை மகள் இருகை நீட்டி அழைக்கிறாள். டிங்டாங்... டிங்டாங்... என கடிகாரம் ஏழு முறை அடித்து ஓய துயில் கலைந்தான் ரமேஷ். எழுந்து கண்களைக்கசக்கி அறையைப் பார்த்தான். நந்தினியும், குழந்தைகளும் அங்கு இல்லை. படுக்கையை உதறி வெளியில் பால்கணியை நோக்கினான். சுற்றிலும் அடுக்குமாடி கட்டிடங்கள் சீட்டுக்கட்டுகளாய் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. "அம்மா பால்" என பால்காரன் ஒருபுறம் கூவினான். "கத்தரி... முருங்கை... கீரை... அம்மா" ... என காய்கறி விற்பவள் கூவினாள். கனவில் வந்த இயற்கை காட்சியை மனதில் ஒரு முறை நினைத்து உவகை கொண்டான். காலைக் கடன்களை முடித்துக் கொண்டு ஹாலுக்கு வந்தான். குழந்தைகள் ஸ்ருதியும், சுவாதியும் படித்துக் கொண்டிருந்தனர். நந்தினி கொடுத்த காபியை வாங்கிக் கொண்டு செய்தித்தாளைப் புரட்டினான். "சே! வர வர மனிதத் தன்மையே செத்துப் போயிடும் போலிருக்கு" - ரமேஷ் "எதைக் கண்டு இப்படிக் காலைலயே இப்படி அலுத்துக்கிறீங்க". "இங்க பார் நந்தினி ஒரு யானை பாகனை அந்த யானை துவம்சம் செய்றதை ஒருத்தன் புகைப்படம் எடுத்து பேப்பர்ல போட்டிருக்கிறான். இதை செய்ற நேரம் அவனைக் காப்பாத்தி இருக்கலாம் அல்லவா" "மனுஷத் தன்மைனா என்னப்பா" அப்பாவியாய் கேட்டாள் மூன்றாவது படிக்கும் மூத்தமகள் ஸ்ருதி. "சொல்றேண்டா செல்லம்" என குழந்தையைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டு, "மனுஷத் தன்மைன்னா யாராவது ஆபத்திலே உதவியில்லாம இருந்தா உதவி செய்யனும். பசின்னு யாராவது கேட்டா சோறு போடனும். மொத்தத்துல இல்லாதவங்களுக்கு உதவி செய்யனும். "ஆமா டாடி நேத்து எங்க க்ளாஸ் லில்லி மயங்கி விழுந்துட்டா டீச்சர் எங்கிட்டதான் தண்ணி வாங்கி கொடுத்தாங்க" என்று உற்சாகமாக சொன்னாள் இளையவள் ஸ்வாதி. "வெரி குட் அப்படித்தான் எல்லாருக்கும் உதவனும்". "சரி... சரி... ரெண்டு பேரும் சீக்கிரம் கிளம்புங்க" என்று குரல் கொடுத்தாள் நந்தினி. அடுத்த அரைமணி நேரம் வரை எல்லோரும் சாவி கொடுத்த இயந்திரமாக சுழலத் தொடங்கினர். "எங்க என் ஸ்கூட்டர் சாவி சீக்கிரம் கொண்டு வா" "நான் இங்க குழந்தைகள கவனிக்கிறதா உங்கள கவனிக்கிறதா நீங்களே வந்து எடுங்க தினமும் இது ஒரு வேலையாப் போச்சு. பல்லைக் கடித்துக் கொண்டு வந்து ஸ்கூட்டர் சாவியை எடுத்துக் கொண்டு அதை ஸ்டார்ட் செய்யத் தொடங்கினாள். பல முறை முயன்றும் வண்டி ஸ்டார்ட் ஆக மறுத்தது. சிறிது நேரம் நின்று ஆசுவாசப் படுத்திக் கொண்டு இருந்தான். அப்போது - எதிரில் ஒரு சிறுவன் மெதுவாக வந்து கொண்டிருந்தான். அவன் அழுக்கு படிந்த கந்தல் ஆடையும், மழையில் நனைந்த சணல் போல் திரிந்து கிடந்த அவன் தலைகேசமும் கையில் நெளிந்து இருந்த ஈயத்தட்டும் அவன் யாசகன் என்று கூறாதே விளங்கிற்று. "ஐயா... சாப்பிட்டு ரெண்டு நாளாச்சு பசிக்குது... ஏதாவது போடுங்க சாமி... " ஆமா வர்ற ஆத்திரத்துல ரெண்டு போடத்தான் போறேன். காலங்கார்த்தாலேயே உன் முன்னாடி முழிச்சிட்டு போனா விளங்குன மாதிரி தான்". "ஐயா... ரொம்ப பசிக்குதுய்யா" என்றான் கொஞ்சம் கிட்ட நெருங்கி. "விட்டா தலைமேலேயே ஏறுவ போலிருக்கே ச்சீ.. போடா" என்று அவனை தள்ள பக்கத்தில் இருந்த கதவில் பட்டு அவன் கந்தல் சட்டை மேலும் கிழிந்தது. அவன் சட்டையின் கிழிசல் அளவை ஒரு முறை வெறுமையாகப் பார்த்தான் பின் பேசாமல் போய்விட்டான். ரமேஷ் அதைக் கண்டும் காணாதது போல் இருந்துவிட்டான். "என்ன ரெடியா..." உள்நோக்கி குரல் கொடுத்தான். "இதோ வந்திட்டோம் டாடி..." குழந்தைகள் ஓடி வந்தன. ஏற்கனவே இருந்த கோபத்தில் வண்டியை தன் மனைவியாக பாவித்து ஒரு உதைவிட்டான். உடனே ஸ்டார்ட் ஆகியது. டாட்டா... மம்மி என குழந்தைகள் கை அசைக்க கிளம்பினான். டாடி எல்லோருக்கும் உதவி செய்றது தான் மனித நேயம்ன்னு சொன்னீங்க நீங்க மட்டும் ஏன் அந்த பையனுக்கு சோறு குடுக்கல... அப்ப நீங்க மனுஷன் இல்லையா... " என்று வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினாள் ஸ்வாதி. "ஷட்-அப்" என்று பொரிந்தான். ஸ்கூலில் குழந்தைகளை விட்டு விட்டு அலுவலகம் வந்து வேலையில் மூழ்கினான். சிறிது நேரத்தில் யூனியன் லீடர் வந்தார். "ரமேஷ் சார்... தீபாவளி போனஸ் இந்த வருஷம் கிடையாதுன்னு எம்.டி சொல்றாரு நீங்க கொஞ்சம் என்னன்னு கேளுங்க" "அப்படியா... சரி என்னன்னு கேட்டு நான் போனஸ் கிடைக்க ஏற்பாடு செய்றேன். நீங்க நிம்மதியாப் போங்க. நாளைக்கு நல்ல பதிலா சொல்றேன்" மாலை 5 மணிக்கு எம்.டி அறைக்குள் நுழைந்தான். "சார் ... போனஸ் ... இல்லைன்னு சொன்னீங்களாமே" "வேற என்ன மிஸ்டர் சொல்றது. போன தடவை லாபம் இரட்டிப்பு மடங்கு வந்ததால் இரண்டு பங்கு போனஸ் கொடுத்தேன். இப்ப முதலுக்கே மோசம்" என்றார். அவருடன் அரை மணி நேரம் வாதாடியும் பயனற்றுப் போகவே கவலையுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தான். சே... போனஸ் வாங்கி கொஞ்சம் கடன் அடைக்கலாம் என்று இருந்தேனே என்று யோசனை பண்ணியபடி வரும் வேளையில்... "க்ரீச்" என சத்தம் கேட்டது அடுத்த நிமிடம் சாலையில் உருண்டான் ரமேஷ். அவன் கண் விழித்தான். இருட்டி இருந்தது தான் ஏதோ மருத்துவமனையில் இருப்பதை உணர்ந்தான். பக்கத்தில் நந்தினியும், குழந்தைகளும், கூடவே... அவன். அவன்... அவன் ஏதோ முனகினான். "ஆமாங்க காலைல அடிச்சு வெரட்டினீங்களே அந்த பையன் தான்" "சார்... நீங்க அந்த மோட்டார் பைக்கில வந்திட்டு இருந்தீங்களா அப்படி அந்த கடை வாசல்ல திருஷ்டி பூசணிக்காய் உடைத்து வாசல்ல திருஷ்டி பூசணிக்காய் உடைத்து இருந்தாங்க. நீங்க தெரியாம வண்டிய அதில விட்டவுடனே வழுக்கிடுச்சு" என்றான் அந்த சிறுவன். அவன் வெற்று உடம்பை கைகளால் மறைத்த படி நின்றான். "நீங்க விழுந்ததைப் பார்த்துட்டு இவன் ஓடி வந்து பார்த்தப்ப உங்க தலைல இரத்தம் வழிஞ்சுகிட்டு இருந்திருக்கு. அப்புறம் தன் சட்டையை கழற்றி உங்க தலைக்கு கட்டுப் போட்டு உங்கள இங்க சேர்த்துட்டு எனக்கு வந்து சொன்னான். அப்புறம் தான் நான் வந்தேன்." என்றாள் நந்தினி. சிறுவனின் கிழிசல் சட்டையைப் போலவே தன் மனதும் கிழிந்ததை உணர்ந்தான். அப் பத்து வயது பாலகனின் குழந்தைத் தனமான பண்புகளில் தனக்கு இல்லாத மனிதப் பண்பைக் கண்டு, கண்ணீர் மல்க அவன் கையைப் பற்றி கண்களில் ஒற்றிக் கொண்டான். குழந்தைகள் புரியாமல் விழித்தனர். நந்தினி மட்டும் பொருள் பொதிந்த பார்வையை அவன் மேல் நாட்டி புன்னகைத்தாள்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'திரும்பி வந்த அம்பு' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: முல்லா, நாத்திகன், தெய்வ நம்பிக்கை, துறவி தலைப்பு: நாத்திகன் பட்ட அவஸ்த்தை
முல்லா வசித்துவந்த ஊரில் ஒரு நாத்திகன் வசித்து வந்தான்.கொஞ்சமும் தெய்வ நம்பிக்கை இல்லாதவன். தெய்வ நம்பிக்கை உடைய முல்லா போன்றவர்களை எப்பொழுது பார்த்தாலும் கேலியும் கிண்டலும் செய்து பரிகசித்துக்கொண்டிருப்பான்.ஓரு நாள் சந்தைக் திடலில் அந்த நாத்திகன் நின்று கொண்டிருந்தான். அந்தப் பக்கமாக முல்லா நடந்து வந்து கொண்டிருந்தார். அங்கே திரளாகக் கூடியிருந்த மக்களுக்கு மத்தியிலே முல்லாவை அவமானப்படுத்த வேண்டும் என்று எண்ணினான்.முல்லா அருகே வந்ததும்," முல்லா அவர்களே உலகத்திலேயே நீங்கள்தான் முற்றம் துறந்த துறவி என்று மக்கள் பேசிக்கொள்கிறார்களே? அப்படி எதை நீர் துறந்து ஞானியானீர்" என்று நாத்திகன் கேலியாகக் கேட்டான். " எந்த முட்டாள் அந்த மாதிரி சொன்னான் என்னைவிட மிகவும் மகத்துவம் வாய்ந்த துறவி ஒருவர் இருக்கிறாரே!" என்றார் முல்லா.நாத்திகனுக்கு மட்டுமல்ல அங்கு நடமாடிக் கொண்டிருந்த மக்களகட்க்கும் முல்லா சொன்ன தகவல் ஆச்சரியத்தை விளைவித்தது.முல்லாவையும்விட மேலான தறவி இந்த ஊரில் யார் இருக்க முடியும் என்று அவர்களுக்கு விளங்கவில்லை.நாத்திகனும் அந்தத் தகவலைக் கேட்டு வியப்படைந்து" முல்லா இந்த ஊரில் உள்ள அந்த மகத்துவம் வாயந்த துறவி யார்?" என்ற கேட்டான்." அந்தத் துறவி நீர் தான்" என்று முல்லா கூறியதைக் கேட்ட நாத்திகன் அதிர்ச்சியடைந்து விட்டான்." நானா அந்தத் துறவி அது எப்படி?" என்று கேட்டான்." என்னைப் போன்ற சாதாரணத் துறவிகள் கேவலம் உலகத்தில் இருக்கும் பொருட்களைத் தான் துறப்பது வழக்கம் நீரோ கடவுளையே துறந்து விட்ட துறவியாயிற்றே உம்மை மிஞ்சக் கூடிய துறவி உலகத்தில் ஏது?" என்று முல்லா பதிலளித்தார். அங்கே சூழ்ந்திருந்த மக்கள் நாத்திகனைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்க ஆரம்பித்தனர். நாத்திகன் தலைகுனிந்தவாறு அந்த இடத்தை விட்டு வேகமாக அகன்று விட்டான்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: பேராசிரியர், மலைப்பகுதி, ஹார்ட் அட்டாக், பியூன், குழந்தை, தாய், தந்தை, டாக்டர், சொர்க்கம், நரகம் தலைப்பு: கூட்டத்தின் பலம்
உனது மனதின் உள்ள விஷயங்கள் அனைத்தும் கட்டுதிட்டத்தினாலும் திட்டமிடுதலாலும் உருவாக்கப்பட்டவைதான். சமுதாயம் இதைத்தான் செய்கிறது. நாம் கடந்த காலம் முழுவதும் இது போன்ற அசிங்கமான வகையில்தான் வாழ்ந்து வந்திருக்கிறோம். அங்கு அப்படி எதுவும் இல்லாத போதும் மற்றவர்களால் அது உருவாக்கப்படுகிறது என்ற கருத்தை எனது பேராசிரியர்களில் ஒருவர் ஏற்றுக் கொள்ள வில்லை. நான் இதை நிருபிக்கிறேன் என்று நான் கூறினேன்.. அவருக்கு என்னை மிகவும் பிடிக்கும், அவரது மனைவியும் என்னிடம் மிகவும் அன்பாக இருப்பார். நான் அவரது மனைவியிடம் சென்று, நாளை காலை பேராசிரியர் எழுந்தவுடன், நீங்கள் அதிர்ச்சியடைந்தது போல காட்டிக் கொண்டு அவரிடம் சென்று, என்னாயிற்று உங்களுக்கு? இரவு படுக்கைக்கு செல்லும்போது நன்றாகத்தானே இருந்தீர்கள்! இப்போது உங்களது முகம் வெளுத்தாற்ப்போல இருக்கிறதே, உடம்பு சரியில்லையா உங்களுக்கு? எனக் கேட்க வேண்டும் எனக் கூறினேன். அடுத்த நாள் காலை பேராசிரியர் இதை உடனே மறுத்து விட்டார். அவர் "என்ன உளருகிறாய்? நான் நன்றாகத்தான் இருக்கிறேன்". என்று கூறி விட்டார். நான் அடுத்ததாக அவரது தோட்டக்காரரிடம், "அவர் தோட்டத்துக்கு வந்தவுடன் நீங்கள், என்னவாயிற்று? கடவுளே! என்ன நிகழ்ந்தது? உங்களால் நடக்க முடிய வில்லை, நீங்கள் நடுங்குகிறீர்கள். உங்களுக்கு என்னவோ நடந்து விட்டது, உள்ளே சென்று உட்கார்ந்து ஓய்வு எடுங்கள். நான் போய் டாக்டரை கூப்பிடுகிறேன் என்று கூற வேண்டும்." என்று கூறினேன். மேலும் நான் இவர்கள் இருவரிடமும் அவர் என்ன கூறினாரோ அதை அப்படியே அவரது வார்த்தைகளிலேயே எழுதி வையுங்கள். நான் வந்து பெற்றுக் கொள்கிறேன். என்று கூறினேன். அவர் தோட்டக்காரரிடம், "ஆமாம், என்னவோ போல இருக்கிறது, நான் ஓய்வு எடுக்க வேண்டும், என்னால் பல்கலைகழகத்துக்கு போக முடியாது. ஆனால் டாக்டரை கூப்பிட வேண்டிய அவசியம் இல்லை." எனறார். அவர் முழு ஆரோக்கியத்துடன் இருந்தார். எந்த பிரச்னையும் இல்லை. அதனால் அவர் பல்கலைகழகத்துக்கு அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ போவதாக முடிவெடுத்தார். அவர் செல்லும் வழியில் நான் நம்பும் பலரிடமும் சொல்லி வைத்தேன்…. அடுத்ததாக வழியில் ஒரு போஸ்ட் மாஸ்டர் இருந்தார், நான் அவரிடம், "நீங்கள் மிகவும் வேலையாக இருந்தால் கூட தவற விட்டு விடாதீர்கள். பேராசிரியர் உங்களை கடந்து செல்லும் போது எங்கே செல்கிறீர்கள்?, என்ன செய்கிறீர்கள்?, உங்களுக்கு பயித்தியமா? உங்களுக்கு உடம்பு சரியில்லை, நீங்கள் என் வீட்டிற்கு வந்து ஓய்வு எடுங்கள், நான் டாக்டரை கூப்பிடுகிறேன் என்று சொல்லுங்கள். அவர் கூறுவதை குறித்துக் கொள்ளுங்கள்." என்றேன். நான் குறிப்புகளை சேகரித்து கொள்கிறேன் என்று கூறினேன். பேராசிரியர், "ஆமாம், நேற்று இரவிலிருந்து என்னவோ தவறாகிப் போனது போல ஒரு உணர்வு. என்ன தவறாகிப் போனது என்று எனக்கு சரியாக தெரியவில்லை. ஆனால் என்னவோ சரியில்லை. நான் இன்னும் நெடுநாள் வாழப் போவதில்லை என்பது போன்ற ஒரு அச்சம், ஒரு நடுக்கம் உள்ளே ஓடுகிறது." என்றார். அவரது வீடும் பல்கலைகழகமும் கிட்டதட்ட ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கும். அவர் எப்போதும் நடந்துதான் போவார். ஆனால் அன்று அவர் வழியில் வந்த மற்றொரு பேராசிரியரின் காரை நிறுத்தி, "என்னால் நடந்து பல்கலைகழகத்தை வந்தடைய முடியுமா என்று தெரியவில்லை". என்றார். பல்கலைகழகம் இருந்த இடம் மலைப்பகுதி, மேடும் பள்ளமுமானது. இவரது வீட்டிலிருந்து அவரது தத்துவ பிரிவு இருந்த இடம் மேடானது. அந்த பிரிவு மலைஉச்சியின் மீது அமைந்திருந்தது. அவரது வீடு கீழே பள்ளத்தில் இருந்தது. பேராசிரியர், "எனக்கு மூச்சு வாங்குகிறது… உடம்பு நடுங்குகிறது. எனக்கு காய்ச்சல் என்று நான் நினைக்கிறேன். என்ன என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. எனக்கு என்னமோ போல் இருக்கிறது". எனக் கூறி லிப்ட் கேட்டார். அவரை கடந்து போன பேராசிரியரும் என்னால் அனுப்பி வைக்கப்பட்டவரே. அவர் மிக மோசமான நிலையில் இருப்பதைப் போல நீங்கள் காரை நிறுத்தி, என்ன பிரச்னை என கேட்க வேண்டும் என்று கூறியிருந்தேன்.. காருக்குள் இவர், "நீங்கள் வந்திருக்கக் கூடாது, நீங்கள் டாக்டரிடம் போயிருக்க வேண்டும். உங்களது கண்கள் பஞ்சடைத்துப் போயிருக்கிறது, உங்களது முகம் வெளுத்துப் போயிருக்கிறது, பழுதாகிப்போன ஓவியம் போல இருக்கிறீர்கள். ஒரே நாள் இரவு என்னவாயிற்று? இரவில் ஹார்ட் அட்டாக் வந்ததா என்ன? அது மிகவும் மோசமாக பாதித்திருக்கும் போலிருக்கிறதே." என்று கூறினார். அதற்கு அவர், "நான் தூங்கிக் கொண்டிருக்கும் போது ஹார்ட் அட்டாக் வந்திருக்கும்போல இருக்கிறது. அப்போது எனக்குத் தெரியவில்லை, இப்போது என்னால் உணர முடிகிறது. எல்லா விதமான அறிகுறிகளும் எனது வாழ்வு முடிவுக்கு வந்து விட்டது போல காட்டுகிறது". என்றார். அவர், தத்துவ பிரிவுக்குள் நுழையும் போது அங்கு வாசலில் உட்கார்ந்திருக்கும் பியூனிடம் நான், அவர் வந்தவுடன் நீ உடனே எழுந்து அவரை தாங்கிப் பிடித்துக் கொள் என்று கூறியிருந்தேன். அவன், "ஆனால் அவர் மிகவும் கோபப்படுவாரே, நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என்றே எனக்குப் புரியவில்லை. நீங்கள் இதுபோல இதற்கு முன் கேட்டதே இல்லையே." என்றான். அதற்கு நான், "நானும் பேராசிரியரும் ஒருவிதமான பரிட்சார்த்தமான நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறோம். நீ, நான் சொல்வதை மட்டும் செய். குறுக்கிடாதே. நீ அவரை பிடித்துக் கொண்டு, நீங்கள் விழ இருந்தீர்கள் என்று சொல்." என்றேன். அவனும் அப்படியே செய்தான். பேராசிரியர் அவனுக்கு நன்றி கூறினார். அநத பியூன் அவரிடம் நீங்கள் கீழே விழ இருந்தீர்கள் என்று சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. அவரே அவனிடம், "நீ இங்கில்லையென்றால் நான் கீழே விழுந்திருப்பேன்!" என்று கூறினார். பிரிவினுள்ளே நான் அவருக்காக காத்துக் கொண்டிருந்தேன். நான் அவரைப் பார்த்தவுடன், "கடவுளே, நீங்கள் ஆவி போல காணப்படுகிறீர்கள், உங்களுக்கு என்ன நடந்தது?" என்று கேட்டேன். அவரைப் பிடித்து, ஒரு சாய்வான நாற்காலியில் உட்கார வைத்தேன். அவர், "ஒரு விஷயம் நான் உன்னிடம் சொல்ல வேண்டும். என்னுடைய குழந்தைகள் மிகவும் சிறியவர்கள். – அவருக்கு இரண்டு குழந்தைகள் – என்னுடைய மனைவி அனுபவமற்ற சிறிய பெண். என் தாயும் தந்தையும் இறந்து விட்டனர். வேறு யாரும் எனக்கு கிடையாது. நான் போய் விட்டால் அவர்களை காப்பாற்ற கூடிய வேறு யாரையும் எனக்குத் தெரியாது. நான் உன்னைத்தான் நினைத்தேன்" என்றார். நான், "நீங்கள் கவலைப்படாதீர்கள். நான் உங்கள் குழந்தைகள் மற்றும் உங்கள் மனைவி ஆகியோரை உங்களை விட நன்றாக வைத்துக் காப்பாற்றுவேன். ஆனால் நீங்கள் இந்த உலகத்தை விட்டு போவதற்கு முன் நான் உங்களிடம் சில குறிப்புகளை காண்பிக்க விரும்புகிறேன்." என்றேன். அவர், "சில குறிப்புகளா என்ன?" என்றார். "நான் போய் அவற்றை சேகரித்துக் கொண்டு வருகிறேன்" என்றேன். அவர், "யாரிடமிருந்து?" என்று கேட்டார். நான், "உங்கள் மனைவி, உங்கள் தோட்டக்காரர், போஸ்ட் மாஸ்டர், உங்களை இங்கே இறக்கி விட்ட பேராசிரியர், நீங்கள் விழாமல் உங்களை பிடித்த பியூன்." என்றேன். அவர், "இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?" எனக் கேட்டார். நான், "இதெல்லாமே ஏற்கனவே திட்டமிடப்பட்டதுதான். இல்லாத ஒன்றை வைத்து மனிதனை ஏமாற்ற முடியாது என நீங்கள் சொல்ல வில்லை?" என்றேன். நான் சென்று எல்லா குறிப்புகளையும் பெற்று வந்தேன். அதை ஒவ்வொன்றாக அவரிடம் காண்பித்தேன். மேலும் நான் அவரிடம், "எப்படி நீங்கள் சிக்கிக் கொண்டீர்கள் என்று நீங்களே பாருங்கள். ஒன்றுமில்லை என்பதை உங்கள் மனைவியிடம் முற்றிலுமாக மறுத்தீர்கள். தோட்டக்காரரிடம், ஒரு வேளை ஏதாவது இருக்கலாம் என்று கூறியுள்ளீர்கள். ஆனால் அது ஒருவேளை என்றுதான் இருக்கிறது. அதில் உங்களுக்கு உறுதி இல்லை. ஆனால் அந்த எண்ணம் வந்து விட்டது. போஸ்ட் மாஸ்டரிடம், ஆமாம், ஏதோ ஆகி விட்டது. காலையிலிருந்து ஏனோ நான் மிகவும் நன்றாக இல்லாமல்தான் இருக்கிறேன், மிகவும் சோர்வாக இருக்கிறது என்று கூறி இருக்கிறீர்கள். பேராசிரியரிடம் காரில் வரும்போது நீங்களே தூங்கும்போது ஹார்ட் அட்டாக் வந்துவிட்டதாக ஒத்துக் கொண்டு இருக்கிறீர்கள். மிகவும் சோர்வாக உணர்ந்திருக்கிறீர்கள் – அவர் மிகவும் வலிமையுள்ள மனிதர் – தத்துவ பிரிவு வரை நடந்து வர முடியாது என நீங்களே நினைத்தீர்கள். மேலும் அந்த பியூன் குதித்து உங்களை தாவிப் பிடித்துபோது, நீங்கள் நான் விழ இருந்தேன், பிடித்துவிட்டாய், மிகவும் நன்றி என்று கூறியிருக்கிறீர்கள். இது உங்கள் மீது திணிக்கப்பட்ட ஒரு கருத்து. அவ்வளவுதான்." என்று கூறினேன். என்ன நிகழ்ந்தது பார்த்தீர்களா? இதை தொடர்ந்து நிகழ்த்தியிருந்தால் இந்த மனிதன் இறந்து போகக்கூடும். ஒரு தர்க்க வாதத்தில் அவர் ஒத்துக் கொள்ளாத ஒரு நிலையை நான் நிரூபிக்க முயன்றேன், அவ்வளவுதான். அவர் இறந்து போவதை நான் விரும்ப வில்லை. இல்லாவிடில் டாக்டரிடம் பேசி, அவர், "உனது நாட்கள் எண்ணப்படுகின்றன, அதனால் என்ன செய்ய விரும்புகிறாயோ – உயில் எழுதுவது மற்றும் வேறு ஏதாவது – அதை செய். நான் உதவக்கூடியது எதுவுமே இல்லை, உனது இதயத்தின் வாழ்நாள் முடிந்து விட்டது. அது எந்த நிமிடமும் ஓய்வெடுத்துக் கொள்ளக்கூடும்." என்று அவரை சொல்ல சொல்லியிருக்கலாம். நான் அவரை ஒரு கருத்தின் மூலமாக கொன்றிருக்க முடியும். இந்த குறிப்புகளை பார்த்த உடனேயே அவர் சரியாகி விட்டார், மிகவும் ஆரோக்கியமாகி விட்டார். அவர் சிரித்துக் கொண்டே பியூனைப்பார்த்து, "அவர் சொல்வதை கேட்காதே, அவர் மிகவும் அபாயகரமான மனிதர், அவர் கிட்டதட்ட என்னை கொன்று விட்டார்," என்றார், மேலும் அவர் அந்த மற்றொரு பேராசிரியரிடம், "இது சரியல்ல, நீ எனக்கு ஹார்ட் அட்டாக் என்று பரிந்துரை செய்தாய்" என்று கூறினார். போஸ்ட் மாஸ்டரிடம், "நீங்கள் எனது பக்கத்து வீட்டுக்காரர், என்னை இறப்பு வரை தள்ளுவது சரியா" என்று கேட்டார், அவர் மிகவும் கோபமடைந்தது தனது மனைவியிடம்தான். அவர், "அவன் மற்ற எல்லோரையும் சரி கட்டிவிட்டான். – அவர் எல்லோருடைய மதிப்பையும் பெற்றிருந்தார் – ஆனால் என்னுடைய மனைவியே என்னை ஏமாற்றி விட்டாள், அவன் பேச்சைக் கேட்டாள் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. நாங்கள் ஒரு வாத போட்டியில் இருந்தோம், அது என்னுடைய மதிப்பு மரியாதை சம்பந்தப்பட்டது, நீ அதை கெடுத்துவிட்டாய்" எனக் குற்றஞ்சாட்டினார். ஆனால் அவரது மனைவி, "நீங்கள் அவருக்கு நன்றி செலுத்தவேண்டும், இல்லாத ஒன்றிற்காக மனிதனை கட்டுதிட்டம் செய்ய முடியும் என அவர் உங்களுக்கு நிரூபித்ததற்காக நீங்கள்தான் நன்றி சொல்ல வேண்டும்." என்றார். நீ கிறிஸ்துவன் என நீ உன்னை பற்றி நினைக்கிறாயா? அது உன் மேல் திணிக்கப்பட்டது. நீ உன்னை கடவுள் என நினைக்கிறாயா? ஒரு கருத்து உன்மேல் திணிக்கப்பட்டது. சொர்க்கம் நரகம் என்பது உண்டென்று நினைக்கிறாயா? அது வேறொன்றுமில்லை, திட்டமிட்டதுதான். உன்னுள் உள்ள அனைத்தும் திட்டமிட்டதுதான்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: விஜய நகர மன்னர் கிருஷ்ணதேவராயரிடம் அப்பாஜி என்று ஒரு மந்திரி இருந்தார். அவர் இதற்கு முன் கிருஷ்ணதேவராயருக்குக் கப்பம் கட்டும் ஒரு குறு நில மன்னரிடம் மந்திரியாக இருந்தார். அந்த மன்னர் ஏதோ காரணத்தால் வரிசையாக சில ஆண்டுகள் கப்பம் கட்ட இயலவில்லை. கிருஷ்ண தேவராயரின் கோபத்துக்கு அஞ்சினார். அவர் சர்வ சாதாரணமாக சம்பந்தப்பட்ட மன்னரை அழைத்து அவரைத் தனிமையில் வைத்து பிரம்பாலேயே அடிப்பார், பிறகு புண்மேல் உப்பு தடவச் செய்வார். அப்பாஜி அம்மன்னனை அழைத்துக் கொண்டு கிருஷ்ண தேவராயரைப் பார்க்க வந்தார். ஊருக்கு வெளியில் ஒரு சத்திரத்தில் மன்னனைத் தங்க வைத்தார். தான் தகவல் தெரிவிக்கும் வரை மன்னன் கிருஷ்ண தேவராயரின் முன்னால் வரக் கூடது என்றுக் கூறி விட்டு அவர் மட்டும் சென்று கிருஷ்ண தேவராயரை சென்று பார்த்தார். கிருஷ்ண தேவராயரும் அவரை வரவேற்று தன்னுடன் வைத்துக் கொண்டார். சில நாட்கள் கழிந்தன.கிருஷ்ண தேவராயரும் அப்பாஜியும் விஜய நகர சந்தை வீதியில் உலாவிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று கிருஷ்ண தேவராயர் அப்பாஜியின் முகத்தைப் பார்க்காமல் அவரிடம் “ஆமாம், உங்கள் மன்னர் எங்கே? அவரை நான் பார்க்க வேண்டுமே” என்றார்.அப்பாஜியும் உரியன செய்வதாக வாக்களித்தார்.பிறகு தன் மன்னனிடம் ரகசியத் தூதனுப்பி தன் சொந்த நாடுக்கு உடனே விரைந்துச் செல்லுமாறுக் கூறினார். மன்னரும் ஓடி விட்டார். சில நாட்கள் கழித்து கிருஷ்ண தேவராயர் அப்பாஜியிடம் அவர் மன்னன் இன்னும் வராததற்கானக் காரணம் கேட்டார். அப்பாஜீ அவரிடம் நடந்ததைக் கூறினார்.கிருஷ்ண தேவராயர் ஆச்சரியத்துடன் அவரிடம் “நீங்கள் செய்தது உங்கள் மன்னனைக் காப்பாற்றி விட்டது. அவருக்குத் தக்கத் தண்டனை கொடுக்கவே எண்ணியிருந்தேன். ஆனால் இதை எப்படி உணர்ந்துக் கொண்டீர்கள்?” என்று கேட்டார்.அப்போது அப்பாஜீ “மகாராஜா, நீங்கள் என் மன்னனைப் பற்றிப் பேசும் போது உங்கள் பார்வைப் போன திசையைக் கவனித்தேன். அங்கு ஒரு கசாப்புக் கடையில் ஆடுகள் தோலுறிக்கப்பட்டுத் தொங்கிக் கொண்டிருந்தன. அதைப் பார்த்தவுடனேயே உங்களுக்கு எம் மன்னன் ஞாபகம் வந்தது. ஆகவே இது நல்லதுக்கல்ல என்று நான் உணர்ந்துக் கொண்டேன்” என்றார். அதன் பிறகு அப்பாஜி மகராஜாவிடம் மந்திரியாக இருந்தார். அது வேறு கதை, சோக முடிவுடன். அரசர்களுடன் நெருங்கி பழகுவது எப்போதுமே கத்திமுனையில் நடப்பது போலத்தான்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'கிருஷ்ணதேவராயரிடம் அப்பாஜி மந்திரி ஆன கதை' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: ஓர் அடர்ந்த காட்டில் சிங்கம் ஒன்று இருந்நது. அது அந்தக் காட்டில் இருந்த மற்ற விலங்குகளை எல்லாம் கண்டபடி வேட்டையாடிக் கொன்று தின்று கொண்டிருந்தது. இவ்வாறு நாளுக்கு நாள் அதன் வெறிச் செயல் அதிகமாகிக் கொண்டு வந்தது. இதைக் கண்ட மற்ற விலங்குகளெல்லாம் ஒன்றாகக் கூடி அந்தச் சிங்கத்தினிடம் சென்றன. சிங்கமே. இந்தக் காட்டில் உள்ள விலங்குகளை எல்லாம் கண்டபடி வீணாகக் கொன்று கொண்டிருக்க வேண்டாம். இப்படிச் செய்து கொண் டிருந்தால் விரைவில் இந்தக் காட்டில் விலங்குகளே இல்லாமல் போய்விடும். ஆகையால் நாங்கள் இதற்கு ஒர் ஏற்பாடு செய்கிறோம். நாள் ஒன்றுக்கு ஒரு விலங்கு ஆக உனக்கு இரையாக அனுப்பிக் கொண்டிருக்கிறோம்” என்றன. சிங்கம் இந்த ஏற்பாட்டுக்கு ஒப்புக் கொண்டது. அதுபோல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலங்காக வத்து சிங்கத்திற்கு இரையாகிக் கொண்டிருந்தன. ஒரு நாள் ஒரு முயலின் முறை வந்தது. இனி நாம் பிழைக்க முடியாது. இருந்தாலும் ஒரு முயற்சி செய்து பார்க்கலாம். இதில் நாம் வெற்றி பெற்றால் காட்டு விலங்குகளை எல்லாம் காப்பாற்றிய பெருமை நமக்குச் சேரும். நாமும் சாவினின்று தப்பலாம்’ என்று அந்த முயல் ஒரு சிந்தனை செய்தது. சிங்கத்தின் பசி வேளைக்குச் செல்ல வேண்டிய முறைப்படி செல்லாமல், நெடுநேரம் கழித்துச் சென்றது முயல். வேளை தப்பி வந்த முயலைக் கண்ட சிங்கத்திற்குக் கோபம் வந்து விட்டது. ‘ஏ அற்ப முயலே, பெரிய மதயானை கூட என் பசி வேளைக்குத் தப்பி வந்ததில்லை. நீ ஏன் பிந்தி வந்தாய்?’ என்று சீறியது. ஐயா, கோபம் கொள்ளாதீர்கள். உங்கள் பசி வேளைக்குச் சரியாக வந்து சேர வேண்டும் என்று சரியான நேரத்தில்தான் புறப்பட்டேன். ஆனால் வழியில் மற்றொரு கொடிய சிங்கத்தைக் கண்டு, எங்கே அதன் கண்ணில் பட்டால் அதற்கு இரையாகி விடுவோமோ என்று பயந்து ஓரிடத்தில் ஒளிந்து கொண்டிருந்தேன். மெல்ல மெல்ல அந்தச் சிங்கம், அங்கிருந்த ஒரு பெரிய குகைக்குள் நுழைந்து சென்ற தைக் கண்ட பிறகு, வெளிப்பட்டு வேகமாக உங்களி டம் வந்து சேர்ந்தேன்’ என்றது அந்த முயல். ‘என்னைத் தவிர இன்னொரு சிங்கமும் இந்தக் காட்டில் இருக்கிறதா? எங்கே அதைக் காட்டு பார்க்கலாம்!” என்றது சிங்கம். உடனே முயல் சிங்கத்தை அழைத்துக் கொண்டு போய்ப் பக்கத்தில் இருந்த ஒரு பாழுங் கிணற்றைக் காட்டியது. சேறும் நீருமாக இருந்த அந்தக் கிணற் றுக்குள் சிங்கம் எட்டிப் பார்த்தது. தெளிவாகக் கிடந்த அந்தக் கிணற்று நீரில் சிங்கத்தின் நிழல் தெரிந்தது. - முயல் சொல்லிய மற்றொரு சிங்கம் அது தான் என்று எண்ணிய அந்த மூடச் சிங்கம், ஆத்திரங் கொண்டு கிணற்றுக்குள்ளே பாய்ந்தது. கிணற்றுக்குள் இருந்த சேற்றில் சிக்கி அது வெளியில் வர முடியாமல் உயிரிழந்தது. சூழ்ச்சியினால் யாரையும் வெல்லலாம் என்பதற்கு இந்தக் கதை நல்ல எடுத்துக் காட்டாகும்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'சிங்கத்தைக் கொன்ற முயல்' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: உழவன், மரம், பேய்கள், கிழப்பேய், புதுப்பேய் தலைப்பு: எள்ளு போச்சு! எண்ணெய் வந்தது!
ஓர் ஊரில் உழவன் ஒருவன் இருந்தான். அவன் பெரிய மீசையுடன் பார்ப்பதற்குப் பயங்கரமாக இருந்தான். உழுவதற்காக அவன் வைத்திருந்த கலப்பை உடைந்து விட்டது.புதிய கலப்பை செய்வதற்கு மரம் வெட்டுவதற்காகப் பக்கத்திலிருந்த காட்டுக்குள் நுழைந்தான் அவன்.அங்கிருந்த பெரிய மரம் ஒன்றைத் தேர்ந்து எடுத்தான். "நல்ல வைரம் பாய்ந்த மரம். இதில் கலப்பை செய்தால் நீண்ட காலம் உழைக்கும்" என்று சொல்லிக் கொண்டே கோடரியால் உதை வெட்டத் தொடங்கினான். அந்த மரத்தில் நிறைய பேய்கள் குடி இருந்தன. அந்த மரத்தை வெட்டுவதைக் கண்டு அவை பயந்து நடுங்கின.மரத்தை விட்டுக் கீழே இறங்கிய எல்லாப் பேய்களும் அவன் காலில் விழுந்தன. பேய்களைக் கண்ட அவனுக்கு அச்சத்தால் மூச்சே நின்று விடும் போல இருந்தது. என்ன நடக்கப் போகிறதோ என்று நடுங்கியபடியே இருந்தான்.கிழப்பேய் ஒன்று, "ஐயா! இந்த மரத்தில் நாங்கள் பரம்பரையாக வாழ்ந்து வருகிறோம். எதற்காக இதை வெட்டுகிறீர்கள்? எங்களுக்கு வாழ்வு கொடுங்கள்" என்று கெஞ்சியது.இதைக் கேட்டதும் அவனுக்குப் போன உயிர் திரும்பி வந்தது. தன் நடுக்கத்தை மறைத்துக் கொண்டான்.பேய்களைப் பார்த்து அதிகாரக் குரலில், "நிலத்தில் எள் விதைக்க வேண்டும் புதிய கலப்பை செய்வதற்காக இந்த மரத்தை வெட்டுகிறேன். நீங்கள் என் காலில் விழுந்ததால் பிழைத்தீர்கள். இல்லையேல் உங்களை எல்லாம் ஒழித்து இருப்பேன். என் வீட்டுத் தோட்டத்தில் பத்துப் பேய்களைக் கட்டி வைத்து இருக்கிறேன்" என்று கதை அளந்தான் அவன்."ஐயா! மரத்தை வெட்டாதீர்கள். நாங்கள் வேறு எங்கே போவோம்? எங்கள் மீது இரக்கம் காட்டுங்கள்" என்று எல்லாப் பேய்களும் அவன் காலைப் பிடித்துக் கொண்டு அழுதன."கலப்பை இல்லாமல் நான் என்ன செய்வேன்? என்னிடம் இரக்கத்தை எதிர்பார்க்காதீர்கள். மரத்தை வெட்டியே தீருவேன்" என்றான் அவன்.கிழப்பேய் அவனைப் பார்த்து, "ஐயா! உங்கள் நிலத்தில் ஓராண்டிற்கு எவ்வளவு எள் விளைகிறது?" என்று கேட்டது."ஐம்பது மூட்டை எள்?" என்றான் அவன்."ஆண்டிற்கு நூறு மூட்டை எள் நாங்கள் தருகிறோம். இந்த மரத்தை வெட்டாதீர்கள்" என்று கெஞ்சியது அது.உங்கள் மீது இரக்கப்பட்டு இந்த மரத்தை வெட்டாமல் விடுகிறேன். ஒவ்வோர் ஆண்டும் அறுவடை நேரத்தில் நூறு மூட்டை எள் வந்தாக வேண்டும். வரத் தவறினால் இந்த மரத்தை வெட்டுவதோடு நிற்க மாட்டேன். உங்களையும் அழித்து விடுவேன்" என்றான் அவன்."எங்கள் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி. நாங்கள் சொன்ன சொல் தவற மாட்டோம்" என்றது அந்தப் பேய்.மகிழ்ச்சியுடன் அவனும் வீடு வந்து சேர்ந்தான்.அறுவடைக் காலம் வந்தது. பல இடங்களில் விளைந்த எள்ளைப் பேய்கள் திருடின. எப்படியோ நூறு மூட்டை எள்ளைச் சேர்த்து அவனிடம் கொண்டு வந்தன.பேய்களைப் பார்த்து அவன், "சொன்னபடியே எள் கொண்டு வந்து இருக்கிறீர்கள். என்னை ஏமாற்ற முயன்றால் நான் பொல்லாதவனாகி விடுவேன். ஆண்டு தோறும் இப்படியே வர வேண்டும்" என்று மிரட்டி அவற்றை அனுப்பி வைத்தான்.நடுங்கியபடியே பேய்கள் அங்கிருந்து சென்றன.சில நாட்கள் கழிந்தன. புதுப்பேய் என்ற பெயருடைய பேய் தன் உறவினர்களைப் பார்க்க அங்கு வந்தது. எல்லாப் பேய்களும் இளைத்துத் துரும்பாக இருப்பதைக் கண்டது அது."சென்ற ஆண்டு உங்களைப் பார்த்தேன். மகிழ்ச்சியாக இருந்தீர்கள். இன்றோ மெலிந்து சோகத்துடன் காட்சி அளிக்கிறீர்கள். என்ன நடந்தது? சொல்லுங்கள்" என்று கேட்டது அது.நடந்தது அனைத்தையும் சொன்னது ஒரு பேய்."நூறு மூட்டை எள்ளைத் தேடி அலைவதிலேயே எங்கள் காலம் கழிகிறது" என்று எல்லாப் பேய்களும் வருத்தத்துடன் சொல்லின.புதுப்பேயால் சிரிப்பை அடக்க முடியவில்லை. "நீங்கள் இவ்வளவு முட்டாள்களா? நாம் பேய்கள் அல்லவா? நமக்குத்தான் மனிதர்கள் பயப்பட வேண்டும். நாம் அவர்களுக்குப் பயப்படலாமா?" என்று கேட்டது."அவன் சாதாரண மனிதன் அல்ல. எத்தனையோ பெரிய பேய்களை வீட்டில் கட்டி வைத்து இருக்கிறான். எதற்கும் அஞ்சாத முரடன். அதனால்தான் நூறு மூட்டை எள் தர ஒப்புக் கொண்டோம்" என்றது ஒரு பேய்."போயும் போயும் ஒரு மனிதனுக்கா அஞ்சுகிறீர்கள்? வெட்கம்! வெட்கம்! இன்றே அவனைக் கொன்றுவிட்டுத் திரும்புகிறேன்" என்று புறப்பட்டது புதுப்பேய்."வேண்டாம். நாங்கள் சொல்வதைக் கேள். நீ அவனிடம் மாட்டிக் கொண்டு துன்பப்படப் போகிறாய்" என்று எச்சரித்தன மற்ற பேய்கள்.உழவனின் வீட்டிற்குச் சென்றது புதுப்பேய். வாய்ப்பை எதிர்பார்த்து மாட்டுத் தொழுவத்தில் பதுங்கி இருந்தது அது.வெளியூரில் இருந்து வாங்கி வந்த பல மாடுகள் அங்கே கட்டப்பட்டு இருந்தன. புதுப்பேய் என்ற ஊரில் வாங்கிய மாடும் அவற்றுள் ஒன்று. அது முரட்டு மாடாக இருந்தது.புதிய மாடுகளுக்கு அடையாளம் தெரிவதற்காக சூடு வைக்க நினைத்தான் அவன்.தன் வேலைக்காரனைப் பார்த்து, "டேய்! அந்தப் புதுப்பேயை இழுத்து வந்து கட்டு. பழுக்கக் காய்ச்சிய இரும்புத் துண்டால் பெரிய சூடு போட வேண்டும். வெளியூர் என்பதால் நம்மைப் பற்றித் தெரியாமல் ஆட்டம் போடுகிறது. சூடு போட்டவுடன் அதுவும் இங்குள்ளவை போல ஆகிவிடும். ஒழுங்காகப் பணிந்து நடக்கும்" என்று உரத்த குரலில் கத்தினான் அவன்.பதுங்கி இருந்த புதுப்பேய் இதை கேட்டு நடுங்கியது. "ஐயோ! எல்லாப் பேய்களும் தடுத்தனவே! என் ஆணவத்தால் அவற்றை மீறி வந்தேனே! பெரிய மீசையுடன் இருக்கும் இவனைப் பார்த்தாலே பயமாக இருக்கிறதே. சிறிதும் இரக்கம் இல்லாதவன் போலத் தோன்றுகிறான். நாம் நன்றாக மாட்டிக் கொண்டோம். தப்பிக்க வழியே இல்லை. நமக்குப் பெரிய சூடு போடத்தான் போகிறான். என்ன செய்வது?" என்று குழம்பியது அது.மாட்டைக் கட்டுவதற்காக உழவன் பெரிய கயிற்றுடன் வந்தான்.அவன் கால்களில் விழுந்த புதுப்பேய், "ஐயா! என்னை மன்னித்து விடுங்கள். தெரியாமல் நான் இங்கே வந்து விட்டேன். எனக்குச் சூடு போட்டு விடாதீர்கள்" என்று கெஞ்சியது.தன் நடுக்கத்தை மறைத்துக் கொண்ட அவன், "என் எதிரில் வர உனக்கு என்ன துணிச்சல்? உன்னை என்ன செய்கிறேன் பார்?" என்று கோபத்துடுன் கத்தினான்.இவனிடமிருந்து எப்படித் தப்பிப்பது என்று சிந்தித்தது அது, "எல்லாப் பேய்களும் என்னை உங்களிடம் அனுப்பி வைத்தன" என்று பொய் சொன்னது."எதற்காக அனுப்பினார்கள்? உண்மையைச் சொல். இல்லையேல் உன்னைத் தொலைத்து விடுவேன்" என்று இடிக்குரலில் முழங்கினான் அவன்."பேய்கள் உங்களுக்கு ஆண்டுதோறும் நூறு மூட்டை எள் தருகின்றன. நீங்கள் அவற்றை எண்ணெய் ஆக்குவதற்காக ஏன் துன்பப்பட வேண்டும்?" எள்ளுக்குப் பதில் நூறு பீப்பாய் எண்ணெய் தருவதாக அவை முடிவு எடுத்தன.உங்களுக்கு எள் வேண்டுமா? எண்ணெய் வேண்டுமா? இதைத் தெரிந்து வருவதற்காக என்னை அனுப்பி வைத்தன. உங்களுக்கு என்ன வேண்டும்? சொல்லுங்கள்" என்று நடுங்கியபடியே கேட்டது அது."இனிமேல் எனக்கு எள் வேண்டாம். எண்ணெயாகவே தாருங்கள். ஏதேனும் தவறு நடக்குமானால் உங்கள் அனைவரையும் தொலைத்து விடுவேன். ஓடு." என்று விரட்டினான் அவன்.எப்படியோ தப்பித்தோம் என்று ஒரே ஓட்டமாக ஓடியது அது. மூச்சு வாங்கக் காட்டை அடைந்தது.அதன் நிலையைப் பார்த்த மற்ற பேய்களும் என்ன நடந்திருக்கும் என்பது புரிந்தது."என்ன புதுப்பேயே? வீரம் பேசிவிட்டுச் சென்றாயே? அவனைக் கொன்று விட்டாயா?" என்று கேலியாகக் கேட்டது ஒரு பேய்."உங்கள் பேச்சைக் கேட்காதது தப்புதான். முரடனான அவனிடம் நான் நன்றாகச் சிக்கிக் கொண்டேன். எனக்குப் பெரிய சூடு வைத்து இருப்பான். அதை இப்பொழுது நினைத்தாலும் என் உள்ளம் நடுங்குகிறது" என் அறிவு வேலை செய்தது. எப்படியோ அவனிடம் இருந்து தப்பி விட்டேன்? என்றது புதுப்பேய்."அவன் பெரிய ஆளாயிற்றே! அவனிடம் என்ன சொல்லித் தப்பினாய்?" என்று கேட்டது ஒரு கிழப் பேய்."நூறு மூட்டை எள்ளாகத் தருவதா? அல்லது நூறு பீப்பாய் எண்ணெயாகத் தருவதா? என்று கேட்டு வர நீங்கள் அனுப்பியதாகச் சொன்னேன். அவனும் இனிமேல் நூறு பீப்பாய் எண்ணெயே தருமாறு கட்டளை இட்டான்" என்று நடந்ததைச் சொன்னது புதுப்பேய்."என்ன காரியம் செய்துவிட்டாய். நூறு மூட்டை எள்ளைக் கொடுத்துவிட்டு நிம்மதியாக இருந்தோம் இனிமேல் நூறு பீப்பாய் எண்ணெய் தருவதாகச் சொல்லி விட்டு வந்திருக்கிறாய். அவ்வளவு எண்ணெயைச் சேர்ப்பதற்காக நாங்கள் தூக்கம் இல்லாமல் துன்பப்பட வேண்டும். நாங்கள் தடுத்தும் நீ கேட்கவில்லையே. இனி என்ன செய்வது" என்று வருத்தத்துடன் புலம்பின அங்கிருந்த பேய்கள்.எல்லாப் பேய்களும் தங்கள் தலைவிதியை நொந்து கொண்டன. ஆண்டுதோறும் உழவனுக்கு நூறு பீப்பாய் எண்ணெயைத் தந்து வந்தன."தன் அறிவுக்கூர்மை தன்னைக் காப்பாற்றியது. உழைக்காமலேயே வளமாக வாழும் வாய்ப்பும் வந்தது" என்று மகிழ்ந்தான் அவன்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: நரி, திராட்சைப் பழங்கள், தவறு, புளிக்கும் தலைப்பு: நரியும் திராட்சையும்
ஒரு காட்டில் ..நரி ஒன்று மிகவும் தாகத்துடன் நடந்து வந்துக் கொண்டிருந்தது. அப்போது ஒரு கொடியில் திராட்சைப் பழங்கள் கொத்துக் கொத்தாய் பழுத்திருந்ததை அது பார்த்தது. நம் தாகத்திற்கு ஏற்றது இந்த திராட்சைப் பழங்கள் என எண்ணியது. ஆனால் பழங்கள் சற்று உயரத்தில் நரிக்கு எட்டாத இடத்தில் இருந்தது. நரி சில அடிகள் பின்னுக்குச் சென்று வேகமாக ஓடி வந்து குதித்து பழங்களைப் பறிக்க எண்ணியது.ஆனால் வெற்றி கிடைக்கவில்லை. அதுபோல சிலமுறை செய்தும்..அதனால் பழங்களை பறிக்க முடியவில்லை. தன்னால் எட்ட முடியாத...தனக்குக் கிடைக்காத அந்த திராட்சைப் பழங்கள் புளிக்கும் என தனக்குத்தானே ஆறுதல் கூறிக்கொண்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தது. நமக்குக் கிடைக்காத பொருள் ஒன்றின் மீது தவறு கண்டுபிடிக்கும் குணம் கூடாது. மேலும் நரி தன் மூளையை உபயோகித்து..வேறு வழிகளிலும் முயன்றிருந்தால் பழம் அதற்குக் கிடைத்திருக்கும். கிடைக்காவிட்டால் குறைகூறுவது சிலருக்கு வழக்கம்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: ஓர் ஊரில் செல்வன் ஒருவன் இருந்தான். வெளியூரில் இருந்து வந்த ஒருவன் அவனிடம் வேலைக் காரனாகச் சேர்ந்தான். கள்ளம் கபடம் இல்லாத அந்த வேலைக்காரன் உண்மையாக உழைத்தான். செல்வன் அவனுக்குக் கூலி எதுவும் தரவில்லை. மூன்றாண்டுகள் கழிந்தன. செல்வனைப் பார்த்து அவன், ஐயா என் செந்த ஊருக்குச் செல்ல விரும்புகிறேன். எனக்குச் சேர வேண்டிய கூலியைத் தாருங்கள் என்று கேட்டான். கருமியான அந்தச் செல்வன் அவனை ஏமாற்ற நினைத்தான். தன் பையிலிருந்து மூன்று செப்புக் காசுகளை எடுத்து அவனிடம் தந்தான். நீ என்னிடம் மூன்று ஆண்டுகள் உழைத்தாய். ஒவ்வோர் ஆண்டிற்கும் ஒரு காசு கூலி, என்றான் செல்வன். வேலைக்காரனுக்குப் பணத்தின் மதிப்பு ஏதும் தெரியாது. நன்றி ஐயா! என்று சொல்லிவிட்டு மகிழ்ச்சியுடன் புறப்பட்டான். காட்டு வழியாகச் சென்று கொண்டிருந்தான். அவன் எதிரில் ஒரு குள்ளன் வந்தான். அந்தக் குள்ளன் இரண்டடி உயரமே இருந்தான். அவனின் நீண்ட வெள்ளைத் தாடி தரையில் புரண்டது தலையில் பல வண்ணத் தொப்பி அணிந்து இருந்தான். வேடிக்கையான தோற்றத்துடன் காட்சி அளித்தான் அவன். எதிரில் வந்தவனைப் பார்த்துக் குள்ளன், ஐயா! நான் ஏழை, குள்ளனாக இருப்பதால் யாரும் எனக்கு வேலை தருவது இல்லை. பசியாலும் பட்டினியாலும் வாடுகிறேன். என் மீது இரக்கப்பட்டு ஏதேனும் உதவி செய்யுங்கள், என்று கெஞ்சினான். உன்னைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது. நான் மூன்றாண்டுகள் கடுமையாக உழைத்ததற்குக் கிடைத்த கூலி இது. இதை நீ வைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக இரு. எனக்கு வலிமை இருக்கிறது. மீண்டும் உழைத்து என்னால் பொருள் ஈட்ட முடியும், என்று சொல்லி விட்டுத் தன் பையில் கை விட்டான். மூன்று செப்புக் காசுகளை எடுத்துக் குள்ளனிடம் தந்தான். அதை பெற்றுக் கொண்ட குள்ளன், நீ நல்லவன் உன்னிடம் ஏழைக்கு இரக்கப்படும் பண்பு உள்ளது. மூன்று காசுகளை என்னிடம் தந்து உள்ளாய். என்னால் எதுவும் செய்ய முடியும். உன் மூன்று விருப்பங்களைச் சொல். எப்படிப் பட்டதாக இருந்தாலும் உடனே நிறைவேற்றி வைக்கிறேன், என்றான். சிந்தனையில் ஆழ்ந்த அவன், குறி வைத்தால் குறி தப்பவே கூடாது. அப்படிப்பட்ட வில்லும் அம்புகளும் தேவை. நான் புல்லாங்குழலை இசைத்தால் கேட்பவர் யாராக இருந்தாலும் ஆட வேண்டும் அத்தகைய புல்லாங்குழல் தேவை. நான் எதைக் கேட்டாலும் மற்றவர்கள் அதை மறுக்கக் கூடாது. இதுவே என் மூன்று விருப்பங்கள், என்றான். அடுத்த நொடியே குள்ளனின் கையில் வில்லும் அம்புகளும் புல்லாங்குழலும் இருந்தன. அவற்றை அவனிடம் தந்தான் குள்ளன். உன் விருப்பங்கள் நிறைவேறும், போய் வா, என்றான். குள்ளனை வணங்கிவிட்டு மகிழ்ச்சியுடன் புறப்பட்டான் அவன். சிறிது தூரம் சென்றிருப்பான். அங்கே ஒரு திருடன் கையில் பொற்காசுப் பையுடன் நின்று இருந்தான். அருகே இருந்த மரத்தில் ஒரு பறவை கத்திக் கொண்டிருந்தது. இந்தப் பறவை மட்டும் என் கையில் கிடைத்தால் போதும். என் பசிக்கு நல்ல உணவாகும். என்ன செய்வேன்? அதை அடித்து வீழ்த்த வில்லோ அம்புகளோ என்னிடம் இல்லையே, என்று சொல்லிக் கொண்டு இருந்தான் திருடன். இதைக் கேட்டான் அவன் தன் வில்லில் அம்பு பூட்டிப் பறவைக்குக் குறி வைத்தான். குறி தவறவில்லை. பறவை அருகில் இருந்த புதரில் விழுந்தது. திருடனே! அந்தப் பறவையை எடுத்துக் கொள், என்று கத்தினான் அவன். முள் நிறைந்த புதர் அருகே சென்றான் திருடன். பறவையை எடுப்பதற்காகக் குனிந்தான். உடனே அவன் புல்லாங்குழலை வாயில் வைத்து இசைக்கத் தொடங்கினான். தன்னை அறியாமல் பாட்டிற்கு ஏற்ப ஆடத் தொடங்கினான் திருடன். சிறிது சிறிதாக இசையை அதிகப்படுத்திக் கொண்டே சென்றான் அவன். இசைக்கு ஏற்ப திருடன் இங்கும் அங்கும் வேகமாக ஆடத் தொடங்கினான். சுற்றி இருந்த முட்கள் அவன் உடைகளைக் கிழித்தன. உடலுக்குள் தைத்து வேதனையை ஏற்படுத்தின. திருடன் வலியைத் தாங்க முடியவில்லை. ஐயா! பாடுவதை நிறுத்துங்கள் என்று கெஞ்சினான். எத்தனை பேருக்கு நீ எவ்வளவு துன்பம் தந்து இருப்பாய்? யாருக்காவது இரக்கம் காட்டி இருக்கிறாயா? கொடியவனான உனக்குத் தக்க தண்டனை இதுதான், என்ற அவன் மேலும் வேகமாக இசைக்கத் தொடங்கினான். முட்கள் மேலும் மேலும் திருடனின் உடலைக் கிழித்தன. ஐயா! இனிமேல் என்னால் தாங்க முடியாது. என்னை மன்னித்து விடுங்கள். இனிமேல் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யமாட்டேன். நல்லவனாகி விட்டேன். நான் திருடிச் சேர்த்த இந்த பொற்காசுகளை உங்களுக்குத் தந்து விடுகிறேன். பாடுவதை நிறுத்துங்கள், என்று பரிதாபமாகச் சொன்னான் திருடன். நீ திருந்தி விட்டதாகச் சொல்கிறாய். பெருந்தன்மையுடன் பொற்காசுகளை எனக்குத் தருவதாகச் சொல்கிறாய். பாட்டை நிறுத்துகிறேன், என்ற அவன் புல்லாங்குழலை வாயிலிருந்து எடுத்தான். உடலெங்கும் குருதி சொட்டச் சொட்ட எழுந்தான் திருடன். சொன்னபடியே அவனிடம் பொற்காசுப் பையைத் தந்தான். அதைப் பெற்றுக் கொண்ட அவன் அங்கிருந்து மகிழ்ச்சியுடன் புறப்பட்டான். அவன் கண்ணுக்கு மறைந்ததும் திருடன், டேய்! அயோக்கியப் பயலே! என்னிடம் உன் வேலையைக் காட்டுகிறாயா? நீ விரைவில் கொடுமையாக இறக்கப் போகிறாய், என்று திட்டினான். குறுக்கு வழியாகப் பக்கத்தில் இருந்த நகரத்தை அடைந்தான். நீதிபதியிடம் சென்ற திருடன், ஐயா! நான் உழைத்துத் தேடிய பொற்காசுகளைக் காட்டில் ஒரு திருடன் பறித்துக் கொண்டான். நீங்கள்தான் மீட்டுத் தர வேண்டும், என்றான். அந்தத் திருடன் எப்படி இருப்பான்? என்று கேட்டார் நீதிபதி. எப்படியும் இந்த நகரத்திற்கு அவன் வருவான். தோளில் வில், கையில் புல்லாங்குழல் வைத்திருப்பான். எளிதில் கண்டுபிடித்து விடலாம், என்றான் திருடன். வீரர்களை அழைத்தார் நீதிபதி. இவன் குறிப்பிடும் ஆள் கிடைத்தால் கைது செய்து இழுத்து வாருங்கள், என்று கட்டளை இட்டார். நடக்கப் போவதை அறியாத அவன் நகரத்திற்குள் நுழைந்தான். வீரர்கள் அவனைக் கைது செய்தனர். நீதிபதியின் முன்னர் அவனை இழுத்து வந்தனர். அவனைப் பார்த்ததும் திருடன், நீதிபதி அவர்களே! இவன் தான் திருடியவன், இவனிடம் என் பொற்காசுப் பை இருக்கலாம், என்று கத்தினான். வீரர்கள் அவனைச் சோதனை செய்தனர். பொற்காசுப் பை கிடைத்தது. உடனே அவன், ஐயா! நான் திருடன் இல்லை. இவன்தான் திருடன். இவனே விருப்பப்பட்டு இந்தப் பொற்காசுகளை எனக்குத் தந்தான். நான் சொல்வதை நம்புங்கள், என்றான். முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவர்க்கு யாராவது இவ்வளவு பொற்காசுகளைத் தருவார்களா? நீ பொய் சொல்கிறாய். நீ திருடன் தான். இவனைத் தூக்கில் போடுங்கள், என்று கட்டளை இட்டார் நீதிபதி. அங்கிருந்த தூக்கு மேடைக்கு அவனை வீரர்கள் இழுத்துச் சென்றனர். அவன் கழுத்தில் தூக்குக் கயிற்றை மாட்ட ஒரு காவலன் வந்தான். நீதிபதி அவர்களே! இறப்பதற்கு முன் என் கடைசி ஆசை. இந்தப் புல்லாங்குழலை நான் சிறிது நேரம் இசைக்க வேண்டும்.. அனுமதி தாருங்கள், என்று கேட்டான் அவன். புல்லாங்குழலை அவனிடம் தருமாறு கட்டளை இட்டார் நீதிபதி. அங்கிருந்த திருடன். ஐயோ! வேண்டாம். புல்லாங்குழலை அவனிடம் தராதீர்கள். எல்லோருக்கும் ஆபத்து என்று கத்தினான். சாகப் போகிறவனின் கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டும். அவன் புல்லாங்குழலை இசைப்பதால் என்ன கெடுதி வந்துவிடப் போகிறது இசைக்கட்டும் என்றார் நீதிபதி. அப்படியானால் என்னை இந்தத் தூணோடு சேர்த்துக் கட்டி விடுங்கள். பிறகு அனுமதி கொடுங்கள், என்றான் திருடன். உடனே திருடன் தூணில் கட்டப்பட்டான். புல்லாங்குழலை அவன் இசைக்கத் தொடங்கினான். இசைக்கு ஏற்ப எல்லோரும் ஆடத் தொடங்கினார்கள். காவலன் கையில் இருந்த தூக்குக் கயிறு நழுவிக் கீழே விழுந்தது. அவன் இசைப்பதின் வேகம் அதிகரித்துக் கொண்டே சென்றது. எல்லோரும் வேகமாக ஆடினார்கள். தூணில் கட்டப்பட்டு இருந்த திருடனும் கை கால்களை ஆட்டினான். பாடுவதை நிறுத்து. உன்னை விடுதலை செய்கிறேன், என்று ஆடிக் கொண்டே கெஞ்சினார், நீதிபதி. பாடுவதை நிறுத்தினான் அவன். எல்லோரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். திருடனின் அருகே சென்ற அவன், உண்மையைச் சொல்.. பொற்காசுகளை நான் உன்னிடம் இருந்து திருடினேனா? அல்லது நீயாக எனக்குத் தந்தாயா? மீண்டும் இசைக்கத் தொடங்குவேன், என்றான். கட்டப்பட்டு இருந்ததால் மூச்சுத் திணறிய திருடன், நானாகத்தான் தந்தேன். நான்தான் திருடன். வீணாக இவன் மீது பொய்க் குற்றம் சுமத்தினேன், என்றான். உண்மையை அறிந்த நீதிபதி அந்தத் திருடனுக்குத் தூக்குத் தண்டனை விதித்தார். எல்லோரையும் வணங்கிய அவன் அங்கிருந்து தன் ஊருக்குப் புறப்பட்டான்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'பாடாதே! செத்தேன்!' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: மெக்ஸிகோ தேசத்து மீனவன், இளைஞன் தலைப்பு: மெக்ஸிகோ தேசத்து மீனவன்
மெக்ஸிகோ தேசத்து ஏழை மீனவன் ஒருவன் கடற்கரையில் அவனது கட்டுமரத்தில் மேல் படுத்து பானகம் பருகிக் கொண்டும் பாட்டுப் பாடிக் கொண்டும் கவலையில்லாமல் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தான். கடற்கரைக்கு வந்த துடிப்பான இளைஞன் ஒருவன் இதைக் கவனித்தான். கடற்கரையை விட்டுச் சென்ற இளைஞன் சில மணி நேரம் கழித்து மீண்டும் கடற்கரைக்கு வந்த போதும் மீனவனை அதே நிலையில் பார்த்தான். இளைஞனுக்குப் பொறுக்கவில்லை. மீனவனிடம் சென்று "ஐயா! இப்படி வேலை செய்ய வேண்டிய காலத்தில் படுத்துப் பொழுதை வீணடிக்கிறீர்களே. இப்படி படுத்துக் கிடக்கும் நேரத்தில் கடலுக்குள் சென்று மீன் பிடித்தால் நாலு காசாவது கிடைக்குமே!" என்றான். அதற்கு மீனவன் "காசு கிடைச்சா…?" என்று ரஜினி பாணியில் கேட்டான். இளைஞன் "காசு சேர்த்தால் நீங்கள் இந்தக் கட்டுமரத்தை விற்றுவிட்டு ஒரு படகு வாங்கலாம். அதை எடுத்துக் கொண்டு கடலுக்குள் போனால் இன்னும் நிறைய மீன் பிடித்து வரலாம். ஒவ்வொரு நாளும் பணம் அதிகமாக சம்பாதிக்கலாம்" என்று சொன்னான். மீனவன் "அதிகம் சம்பாதிச்சா….?" என்று கேட்டான். இளைஞன் பொறுமையாக "ஐயா, நீஙகள் உங்களுக்கு நல்லதொரு வீடு கட்டிக் கொள்ளலாம். சிறிது சிறிதாகப் பொருள் சேர்த்து மீன் பிடி கப்பல் ஒன்றை வாங்கலாம். ஆழ்கடலுக்குள் சென்று பல வகை மீன்களைப் பிடித்து வரலாம். உள்நாட்டுச் சந்தை தவிர வெளிநாட்டுச் சந்தைகளுக்கும் நீங்கள் அவற்றை ஏற்றுமதி செய்யலாம்" என்று சொன்னான். மீனவன் "ஏற்றுமதி செஞ்சா…?" என்று திருப்பிக் கேட்டான். இளைஞனுக்கு மீனவனின் அறியாமை குறித்து சிறிது அதிருப்தி ஏற்பட்டாலும் பொறுமையை தக்க வைத்துக் கொண்டு "ஏற்றுமதி செய்தால் உங்களுக்கு அந்நியச் செலாவணி கிடைக்கும். அதை வைத்து நீங்கள் பெரிய மாளிகை போன்ற வீட்டைக் கட்டிக் கொள்ளலாம். படகு போன்ற கார் வாங்கலாம். மேலும் மீன்பிடி கப்பல்கள் வாங்கி மீன் பிடிக்க அனுப்பலாம். நாட்டிலேயே பெரிய மீன் தொழில் கழகம் ஒன்றை அமைக்கலாம். பேரும் புகழும் பெருந்தனமும் கிடைக்குமே" என்றான். மீனவன் மறுபடியும் "இதெல்லாம் கிடைச்சா…" என்றான். இளைஞன் "உங்களுக்கு அதற்குப் பின்னால் வேலை செய்ய வேண்டிய தேவையே இருக்காது. மகிழ்ச்சியாக நாளெல்லாம் உலகின் அழகான நீலக் கடல் சார்ந்த கடற்கரைகளில் மணலில் படுத்து பானகம் பருகிக் பாட்டுப் பாடிக் கொண்டே வாழ்க்கையை அனுபவிக்கலாம்" என்றான். "நான் இப்பவே அதைத்தானே நண்பா செய்து கொண்டிருக்கிறேன்" என்றான் மீனவன். மெக்ஸிகோ தேசத்து ஏழை மீனவன் ஒருவன் கடற்கரையில் அவனது கட்டுமரத்தில் மேல் படுத்து பானகம் பருகிக் கொண்டும் பாட்டுப் பாடிக் கொண்டும் கவலையில்லாமல் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தான். கடற்கரைக்கு வந்த துடிப்பான இளைஞன் ஒருவன் இதைக் கவனித்தான். கடற்கரையை விட்டுச் சென்ற இளைஞன் சில மணி நேரம் கழித்து மீண்டும் கடற்கரைக்கு வந்த போதும் மீனவனை அதே நிலையில் பார்த்தான். இளைஞனுக்குப் பொறுக்கவில்லை. மீனவனிடம் சென்று "ஐயா! இப்படி வேலை செய்ய வேண்டிய காலத்தில் படுத்துப் பொழுதை வீணடிக்கிறீர்களே. இப்படி படுத்துக் கிடக்கும் நேரத்தில் கடலுக்குள் சென்று மீன் பிடித்தால் நாலு காசாவது கிடைக்குமே!" என்றான். அதற்கு மீனவன் "காசு கிடைச்சா…?" என்று ரஜினி பாணியில் கேட்டான். இளைஞன் "காசு சேர்த்தால் நீங்கள் இந்தக் கட்டுமரத்தை விற்றுவிட்டு ஒரு படகு வாங்கலாம். அதை எடுத்துக் கொண்டு கடலுக்குள் போனால் இன்னும் நிறைய மீன் பிடித்து வரலாம். ஒவ்வொரு நாளும் பணம் அதிகமாக சம்பாதிக்கலாம்" என்று சொன்னான். மீனவன் "அதிகம் சம்பாதிச்சா….?" என்று கேட்டான். இளைஞன் பொறுமையாக "ஐயா, நீஙகள் உங்களுக்கு நல்லதொரு வீடு கட்டிக் கொள்ளலாம். சிறிது சிறிதாகப் பொருள் சேர்த்து மீன் பிடி கப்பல் ஒன்றை வாங்கலாம். ஆழ்கடலுக்குள் சென்று பல வகை மீன்களைப் பிடித்து வரலாம். உள்நாட்டுச் சந்தை தவிர வெளிநாட்டுச் சந்தைகளுக்கும் நீங்கள் அவற்றை ஏற்றுமதி செய்யலாம்" என்று சொன்னான். மீனவன் "ஏற்றுமதி செஞ்சா…?" என்று திருப்பிக் கேட்டான். இளைஞனுக்கு மீனவனின் அறியாமை குறித்து சிறிது அதிருப்தி ஏற்பட்டாலும் பொறுமையை தக்க வைத்துக் கொண்டு "ஏற்றுமதி செய்தால் உங்களுக்கு அந்நியச் செலாவணி கிடைக்கும். அதை வைத்து நீங்கள் பெரிய மாளிகை போன்ற வீட்டைக் கட்டிக் கொள்ளலாம். படகு போன்ற கார் வாங்கலாம். மேலும் மீன்பிடி கப்பல்கள் வாங்கி மீன் பிடிக்க அனுப்பலாம். நாட்டிலேயே பெரிய மீன் தொழில் கழகம் ஒன்றை அமைக்கலாம். பேரும் புகழும் பெருந்தனமும் கிடைக்குமே" என்றான். மீனவன் மறுபடியும் "இதெல்லாம் கிடைச்சா…" என்றான். இளைஞன் "உங்களுக்கு அதற்குப் பின்னால் வேலை செய்ய வேண்டிய தேவையே இருக்காது. மகிழ்ச்சியாக நாளெல்லாம் உலகின் அழகான நீலக் கடல் சார்ந்த கடற்கரைகளில் மணலில் படுத்து பானகம் பருகிக் பாட்டுப் பாடிக் கொண்டே வாழ்க்கையை அனுபவிக்கலாம்" என்றான். "நான் இப்பவே அதைத்தானே நண்பா செய்து கொண்டிருக்கிறேன்" என்றான் மீனவன்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: பிசிராந்தையார், நட்பு , குழவி, பொத்தியார், கோப்பெருஞ் சோழன், புலவர், சோழ நாடு, உறையூர், நகர வீதியில், முதியவர்கள், தீய செய்திகள் தலைப்பு: உயர்ந்த நட்பு
சோழ நாட்டின் தலை நகரம் உறையூர். எப்பொழுதும் ஆரவாரமாக இருக்கும் அந்த நகரம் அன்று அமைதியாக இருந்தது. நகர வீதியில் முதியவர்கள் இருவர் சந்தித்தனர். "முத்தனாரே! அரசவையில் இருந்துதானே வருகிறீர். ஏதேதோ தீய செய்திகளைக் கேள்விப் படுகிறோமே. மக்கள் கூட்டமாக அழுது புலம்புகிறார்களே. நாடெங்கும் இதே பேச்சாக உள்ளதே. உண்மையா?", "இளவழகனாரே! நீங்கள் கேள்விப்பட்ட செய்தி உண்மைதான். அதனால்தான் சோழ நாடே அவலத்தில் ஆழ்ந்து உள்ளது. நகர வீதிகளில் எங்கும் அழுகை ஒலி கேட்கிறது.", "முத்தனாரே! எல்லாம் அறிந்தவர் நீங்கள். அரசவையில் என்ன நிகழ்ந்தது? விளக்கமாகச் சொல்லுங்கள்.", "தன்மானம் மிக்கவர் நம் அரசர். புதல்வர்களால் மானத்திற்கு இழுக்கு வந்து விட்டதாகக் கருதுகிறார். அதனால்தான் வடக்கிருந்து உயிர் விடும் முடிவுக்கு வந்து விட்டார்.", "எங்கு தான் தந்தைக்கும் மைந்தர்களுக்கும் பிணக்கு இல்லை.", "இளவழகனாரே! நம் அரசர் நீதிநெறி தவறாதவர். வீரம் மிக்கவர். எல்லா நாட்டு அரசர்களும் மதித்துப் போற்றும் நற்பண்பாளர். ஆனால் அவருக்குப் பிறந்த மக்கள் இருவருமே தீயவர்களாக உள்ளனர். அவர்களைத் திருத்த அரசரும் தம்மாலான முயற்சி செய்தார். முயற்சி பயன் ஏதும் தர வில்லை. தீயவர்களான அவர்கள் தந்தையையே வெறுக்கத் தொடங்கினார்கள்.", "நாட்டு மக்கள் எல்லோரும் அறிந்த செய்திதானே இது.", "இளவழகனாரே! இப்படி நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. நம் அரசரை எதிர்த்தனர் அவர் மக்கள். அவருடன் போர் செய்யத் துணிந்து விட்டார்கள். அந்தத் தீயவர்களுக்கு ஆதரவாகப் புல்லர்கள் சிலரும் துணை நின்றனர். இதைக் கேட்ட அரசர் கோபத்தால் துடித்தார். "என்னையே எதிர்க்கத் துணிந்து விட்டார்களா என் மக்கள்? அவர்களை இந்த வாளுக்கு இரையாக்குவேன்" என்று போருக்கு எழுந்தார். சினம் கொண்ட அவரைப் புலவர் புல்லாற்றூர் எயிற்றியனார் தடுத்தார்.", "முத்தனாரே! தீயவர்களைக் கொன்று ஒழிப்பது அரச நீதிதானே. எதற்காகப் புலவர் எயிற்றியனார் குறுக்கிட்டார். அவர் என்ன சொன்னார்.?", "அரசே! நீங்கள் யாரோடு போரிடச் செல்கிறீர்கள்? உங்கள் மக்களுடனா? உங்களுக்குப் பின் ஆட்சிக்கு உரியவர்கள் அவர்கள்தானே. அவர்களை வென்ற பின் யாருக்கு இந்த நாட்டைத் தரப் போகிறீர்கள்? இந்த வெற்றியால் உங்களுக்குப் புகழ் வருமா? போரில் தன் மக்களையே கொன்றான் சோழன். இப்படித்தான் உலகம் உங்களை ஏசும். இந்தப் போரில் தோற்றாலோ மாறாகப் பழிதான் உங்களைச் சூழும். நான் சொல்வதை எண்ணிப் பாருங்கள். போரில் வென்றாலும் பழிதான். தோற்றாலும் பழிதான் என்றார் எயிற்றியனார்.", "முத்தனாரே! இதைக் கேட்ட அரசர் என்ன செய்தார்?", "கோபத்தை அடக்கிக் கொண்ட அவர் சிந்தனையில் ஆழ்ந்தார். "புலவரே! நீங்கள் சொன்னது உண்மைதான். நான் போ‘ரில் வெற்றி பெற்றாலும் தோற்றாலும் பழிக்கு ஆளாவேன். இதிலிருந்து நான் மீள வழியே இல்லை. என் மக்களின் பொருந்தாச் செய்கையினால் பழிக்கு ஆளாகிவிட்டேன். இந்தப் பழி நீங்க வடக்கிருந்து உயிர் துறக்கப் போகிறேன். என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை" என்று உறுதியுடன் சொன்னார்.", "ஆ! நம் அரசரா அப்படிச் சொன்னார்?", "அரசர் சொன்னதைக் கேட்டு அவையில் இருந்த எல்லோரும் கலங்கி விட்டனர்.", "முத்தனாரே! வடக்கிருத்தால் என்றால் என்ன?", "பெரியவர்கள் தங்கள் மானமே பெரிது என்று கருதுவார்கள். மானத்திற்குச் சிறிது இழிவு வந்தாலும் உயிரை விடத் துணிவார்கள். அப்படி உயிரைத் துறக்கின்ற முறைக்கு வடக்கிருத்தல் என்று பெயர். வடக்கிருத்தலுக்கு ஏற்ற இடத்தைத் தேர்ந்து எடுப்பார்கள். அங்கே வடக்கு நோக்கி அமர்வார்கள். உண்ணா நோன்பு இருந்து உயிரை விடுவார்கள். அது மட்டும் அல்ல. அவருக்காக உயிரை விட முன்வருபவர்களும் அவரோடு வடக்கு இருப்பார்கள்.", "முத்தனாரே! உண்ணா நோம்பிருந்து உயிர்விடும் முறையா வடக்கிருத்தல். மிகக் கடுமையாக உள்ளதே.", "இளவழகனாரே! அரசர் வடக்கிருக்கும் இடத்தைப் புலவர் பொத்தியார் தேர்ந்து எடுத்தார். அரசரும் அங்கே சென்று வடக்கிருக்க அமர்ந்து விட்டார். புலவர்கள் பலரும் அவருடன் சென்று விட்டனர். செய்தி அறிந்த மக்களும் கூட்டம் கூட்டமாகச் சென்று கொண்டிருக்கிறார்கள்.", "முத்தனாரே! நம் அரசரின் பெருமை யாருக்கு வரும்? வடக்கிருக்கும் போதும் நண்பர்கள் சூழ இருக்கிறாரே.", "இளவழகனாரே! நானும் அரசருடன் வடக்கிருக்கத்தான் செல்கிறேன்" என்று புறப்பட்டார் முத்தனார். வடக்கிருப்பதற்காகப் பெரிய திடலைத் தேர்ந்து எடுத்து இருந்தார்கள். அதன் ஒரு பக்கத்தில் கோப்பெருஞ் சோழன் அமர்ந்து இருந்தார். அவர் அருகே புலவர் பொத்தியார் உள்ளார். பல புலவர்கள் நெருக்கமாக அமர்ந்து இருக்கின்றனர். திடல் முழுவதும் மக்கள் கூட்டமாக அமர்ந்து உள்ளனர். "அரசே! இவ்வளவு பெரிய திடலில் எத்தனை பேர் என்று பாருங்கள். எல்லோரும் நெருக்கமாக அமர்ந்து உள்ளனர். நாட்டு மக்களின் உள்ளத்தைக் கவர்ந்தவர் நீங்கள். அதற்கு இதுவே நல்ல சான்று" என்றார் பொத்தியார். "பொத்தியாரே புலவர்கள் பலரும் என்னுடன் நெருக்கமாகவே அமர்ந்து உள்ளீர்கள். வடக்கிருக்கும் போதும் உங்களுடன் இலக்கியச் சுவை நுகருகின்றேனே. என் வாழ்வில் பெரும் பேறாகக் கருதுகின்றேன். என் வேண்டுகோள் ஒன்று. எனக்காக நீங்கள் அனைவரும் ஓர் உதவி செய்ய வேண்டும்." அங்கிருந்த புலவர்கள் திகைத்தனர். "அரசே! எங்களை வடக்கிருக்க வேண்டாம் என்று சொல்லி விடாதீர்கள். உங்கள் கட்டளை வேறு எதுவாக இருந்தாலும் நிறைவேற்றுகிறோம்" என்றார் பொத்தியார். "புலவர்களே! பெரும்புலவர் பிசிராந்தையார் என் உயிர் நண்பர். நான் வடக்கிருக்கும் செய்தி அறிந்ததும் அவர் இங்கே ஓடி வருவார். அவருக்கு என் அருகே ஓர் இடம் ஒதுக்கி வையுங்கள். இது என் வேண்டுகோள்" என்றார் அரசர். இதைக் கேட்டு எல்லோரும் வியப்பு அடைந்தனர். "அரசே! நீங்கள் சொல்வது பாண்டிய நாட்டுப் புலவராகிய பிசிராந்தையாரைத்தானே. அவர் தம் ஊராகிய பிசிரை விட்டு அதிகம் வெளியே வந்தது இல்லை. பல ஊர்கள் சுற்றும் புலவர்கள் நாங்கள். அவர் பெயரைத்தான் கேட்டு இருக்கிறோம். அவரை நேரில் பார்த்தது இல்லை. அவர் நம் சோழ நாட்டிற்கு வருகை தந்ததாகவும் எனக்குத் தெரிய வில்லையே" என்று கேட்டார் பொத்தியார். "நீங்கள் சொல்வது உண்மைதான். பிசிராந்தையார் நம் சோழ நாட்டிற்கு வருகை தந்தது இல்லை. நானும் பாண்டிய நாட்டிற்குச் சென்றது இல்லை. நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்ததும் இல்லை.", "அரசே! நீங்களும் பிசிராந்தையாரும் சந்தித்தது இல்லை என்கிறீர்கள். பேசிப் பழகவில்லை என்கிறீர்கள். உங்களுக்காக வடக்கிருந்து உயிர் விட அவர் இங்கே வருவார். அவருக்கு இடம் ஒதுக்கி வையுங்கள் எனச் சொல்கிறீர்கள். அவர் இங்கே வருவாரா? எங்களால் நம்ப முடியவில்லையே" என்று கேட்டார் பொத்தியார். "பொத்தியாரே! நானும் பிசிராந்தையாரும் உள்ளம் ஒன்றுபட்ட உயிர் நண்பர்கள். என்னுடைய உள்ளம் அவர் அறிவார். அதே போல அவருடைய உள்ளத்தை நான் அறிவேன். நல்ல நட்பிற்கு, உயர்ந்த நட்பிற்குப் பேசிப் பழக வேண்டுமா?", "அரசே! பேசாமல் பழகாமல் நட்பு எப்படி வளர முடியும்? உங்கள் பெருமையையும் புகழையும் பிசிராந்தையார் அறிந்து இருக்கலாம். அதே போல அவருடைய புலமைச்சிறப்பை நீங்கள் அறிந்து இருக்கலாம். இருவரும் ஒருவர் மீது ஒருவர் மதிப்பு கொண்டிருக்கலாம். இந்தச் சூழலில் அவர் உங்களுக்காக வடக்கிருக்க வருவார் என்கிறீர்களே. இதை என்னால் நம்ப முடியவில்லை.", "பொத்தியாரே! பிசிராந்தையார் என்னை நண்பனாக விளித்துப் பாடல் எழுதி உள்ளார். நானும் அவருக்கு மடல் எழுதி உள்ளேன். மடல் வழியாக நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு அறிவோம். நல்ல நட்பிற்குப் புணர்ச்சி பழகுதல் வேண்டா. இது உங்களுக்குத் தெரியாதா? எனக்காக உயிரை விட பிசிராந்தையார் இங்கே வருவார். இது உறுதி. என் அருகில் அவருக்கு ஒரு இடம் ஒதுக்கி வையுங்கள்.", "அரசே! பிசிராந்தையார் இங்கு வருவதாக வைத்துக் கொள்வோம். நீங்கள் வடக்கிருக்கும் செய்தி அவரை அடைய இரண்டு திங்களாவது ஆகும். இல்லக் கடமைகளை எல்லாம் ஒழுங்கு செய்ய வேண்டும். அதன் பிறகே அவர் புறப்பட முடியும். இங்கு வர மேலும் சில நாட்கள் ஆகும். அதற்குள் நீங்கள் விண்ணுலகம் சென்று விடுவீர்கள். அவர் வந்தாலும் உங்களைச் சந்திக்க முடியாது. இங்குள்ள இட நெருக்கடி உங்களுக்கே தெரியும். இந்தச் சூழலில் உங்களுக்கு அருகில் அவருக்கு இடம் ஒதுக்க வேண்டுமா?", "பொத்தியாரே! எங்கள் நட்பின் ஆழத்தை நீங்கள் அறியவில்லை. அவருடைய வருகைக்காக என் உள்ளம் துடிப்பது எனக்குத்தான் தெரியும். என் உயிர் நண்பர் வளமான காலத்தில் சந்திக்காமல் இருந்து இருக்கலாம். இப்பொழுது என்னைக் காண ஓடோடி வருவார்.", "அரசே! என்னை மன்னியுங்கள். இட நெருக்கடியால்தான் மறுத்துப் பேச வேண்டி வந்தது. உங்களுக்கு அடுத்தே பிசிராந்தையாருக்கு இடம் ஒதுக்கி உள்ளோம். இப்பொழுது உங்களுக்கு மகிழ்ச்சிதானே.", "மகிழ்ச்சி பொத்தியாரே! என் மக்கள் மீது கொண்ட பிணக்கு. அதனால் ஏற்பட்ட சூழல்களால் உங்களை மறந்து விட்டேன். உங்கள் மனைவி கருவுற்று இருப்பதாக மகிழ்ச்சியுடன் சொன்னீர்களே. குழவி பிறந்து விட்டதா? ஆண் குழவியா? பெண் குழவியா?", "அரசே! பெற்ற மகவைப் பார்ப்பதா பேறு? உங்களுடன் உயிர் விடுவதே பெரும் பேறு.", "பொத்தியாரே! வடக்கிருக்கும் மரபு உங்களுக்குத் தெரிந்து இருக்குமே. யார் யார் வடககிருக்கலாம். யார் யார் கூடாது என்ற விதி தெளிவாக உள்ளதே. திருமணம் ஆகாதவர்கள். கருவுற்ற மனைவியை உடையவர்கள். அவர் வருவாயையே நம்பி இருக்கும் குடும்பத்தினர். இப்படிப்பட்டவர்கள் வடன்கிருத்தல் கூடாது. வடக்கிருப்பவர்கள் இல்லக் கடமைகளை நிறைவேற்றியவர்களாக இருக்க வேண்டும். மானத்திற்கு இழுக்கு வந்ததால் நான் வடக்கிருக்கிறேன். இல்லக் கடமைகளை நிறைவேற்றியவர்கள் மட்டுமே என்னுடன் வடக்கிருக்க வேண்டும்.", "அரசே! வடக்கிருக்கும் மரபை நான் நன்கு அறிவேன். இருந்தாலும்.", "மனைவி கருவுற்று இருக்கும் நிலையில் எப்படி இங்கு வந்தீர்? இதனால் எனக்குத்தானே பழி வந்து சேரும். உடனே இங்கிருந்து புறப்படுங்கள். மகவின் அழகிய திருமுகத்தைப் பாருங்கள். தமிழ்ப் பெயர் சூட்டுங்கள். உங்கள் மனைவிக்கும் உறவினர்களுக்கும் ஆறுதல் சொல்லுங்கள். இல்லக் கடமைகளை நிறைவேற்றிய மகிழ்ச்சியில் இங்கே வந்து வடக்கிருங்கள்.", "அரசே! அறநெறிகளை விதிமுறைகளைச் சொல்லி என்னை இங்கிருந்து அனுப்பி விடாதீர்கள். உங்களுடனேயே வடக்கிருந்து உயிர்விட விரும்புகிறேன். என் எண்ணத்திற்கு மாறாக நடந்து கொள்ளாதீர்கள். இது என் அன்பு வேண்டுகோள்.", "பொத்தியாரே! நீங்கள் என்ன சொன்னாலும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். இல்லப் பொறுப்புகளை நிறைவேற்றிய பின்னரே வடக்கிருக்க வேண்டும். என் மீது உங்களுக்கு உண்மையான அன்பிருந்தால் இல்லத்திற்குச் சொல்லுங்கள். பிறக்கும் குழந்தையில் திருமுகத்தைக் கண்டு மகிழுங்கள். இல்லக் கடமைகளை முடித்து விட்டு இங்கே வாருங்கள். இது என் அன்புக் கட்டளை.", "அரசே! உங்கள் அன்பை மீறும் ஆற்றல் எனக்கு இல்லை. இப்பொழுதே என் இல்லத்திற்குச் செல்கிறேன். நான் மீண்டும் இங்குத் திரும்பச் சில திங்கள் ஆகும். அப்பொழுது நீங்கள் விண்ணுலகம் சென்றிருப்பீர்கள். உங்கள் திருமுகத்தை என்னால் காண இயலாது. உங்கள் நினைவாகவே இங்கே வடக்கிருந்து உயிர் விடுவேன்" என்று கண்ணீர் வழிய புறப்பட்டார் பொத்தியார். கோப்பெருஞ் சோழனும் புலவர்களும் அவரை வழியனுப்பி வைத்தார்கள். கோப்பெருஞ் சோழன் வடக்கிருக்கும் செய்தி எங்க்ம் பரவியது. நாள்தோறும் பலர் அங்கு வந்து வடக்கிருந்தனர். சில நாட்களில் கோப்பெருஞ் சோழன் உயிர் துறந்தார். வடக்கிருந்த இடத்திலேயே அவரை நல்லடக்கம் செய்தார்கள். அங்கே நடுகல் நட்டார்கள். அவரோடு வடக்கிருப்பவர்களும் ஒவ்வொருவராக இறந்தனர். மூன்று திங்கள் கழிந்தது- புலவர் பொதியார் அங்கு வந்தார். வடக்கிருக்கும் பெரியவர்கள் சிலர் அவரை வரவேற்றார்கள். தமக்கு உரிய இடத்தில் அவர் அமர்ந்தார். கோப்பெருஞ் சோழனுடன் உயிர் துறக்க இயலவில்லையே" என்று கலங்கினார். "ஆ! நண்பனே! நற்பண்பாளனே! உலகம் போற்றும் புகழோனே! மானமே பெரிதென்று உயிர் துறந்தாயே! உன் புகழ் உலகு உள்ளளவும் நிலைத்து நிற்குமே! கடமைகளை முடித்து விட்டு வரச் சொன்னாயே! அப்படியே வந்து விட்டேன். என்னை விட்டு எங்கே சென்றாய்? இறக்கும் போது அருகில் இருக்கும் பேறு கிடைக்க வில்லையே. கொடியவனாகி விட்டேனே. காலனே! நண்பன் இல்லாமல் நான் உயிர் வாழ்வேனா? என் உயிரையும் உடனே எடுத்துச் செல்" என்று புலம்பினார் அவர். அங்கிருந்த பெரியவர் ஒருவர், "புலவரே! உங்களுக்கு அறிவுரை கூறும் தகுதி எனக்கு இல்லை. மானத்தின் பெருமை காக்க உயிர் விட்டார் நம் அரசர். நாமும் அவருக்காக உயிரை விட வந்து உள்ளோம். இங்கே அழுகை ஒலியோ புலம்பல் ஒலியோ கேட்க வேண்டாம். நம் அரசரைப் பற்றிய இனிய நினைவுகளைச் சொல்லுங்கள். வாழ்க்கையின் உண்மை நிலையினை விளக்குங்கள். நல்ல அறிவுரைகளை வாரி வழங்குங்கள். அவற்றைக் கேட்டுக் கொண்டே நாங்கள் பெருமிதத்துடன் உயிர் விடுகிறோம்" என்றார். "பெரியவரே! மன்னியுங்கள். எல்லை மீறிய உணர்ச்சியில் என்னேயே மறந்து விட்டேன். உங்கள் அறிவுரைக்கு நன்றி. உயர்ந்த குறிக்கோளுக்காக இங்கே உயிர் விட வந்துள்ளோம். அழுது புலம்பி அதன் மதிப்பைக் குறைக்க மாட்டேன். நிலையான மெய்ப் பொருள்களைப் பற்றி இனி நாம் உரையாடுவோம். சாகும் போதும் இனிமையாகச் சாவோம்" என்று உணர்ச்சி பொங்கச் சொன்னார் பொத்தியார். மறுநாள் அங்கே பெரியவர் ஒருவர் வந்தார். அறிஞரைப் போல அவர் தோற்றம் இருந்தது. நீண்ட பயணம் செய்தவரைப் போலக் காட்சி அளித்தார் அவர். வடக்கிருக்கும் போலக் காட்சி அளித்தார் அவர். "மதிப்பிற்கு உரியவரைப் போல இவர் தோற்றம் உள்ளது. யார் என்று கேட்போம்" என்று நினைத்தார் பொத்தியார். எழுந்து அவரை வரவேற்றார். "பெரியவரே! நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? சொல்லுங்கள்? அப்பொழுதுதான் உங்களுக்கு உரிய இடத்தை ஒதுக்க முடியும்" என்றார் பொத்தியார். "ஐயா! நான் பாண்டிய நாட்டுப் புலவன். என் ஊர் பிசிர். பிசிராந்தையார் என்று என்னை அழைப்பார்கள். உயிர் நண்பர் கோப்பெருஞ் சோழன் வடக்கிருக்கும் செய்தி கிடைத்தது. வடக்கிருந்து உயிர் துறக்க நானும் இங்கு வந்தேன்.", "ஆ! தமிழ் கூறும் நல்லுலகம் போற்றும் பெரும்புலவர் பிசிராந்தையாரா நீங்கள்? பாண்டியன் அறிவுடை நம்பி மக்களிடம் அதிக வரி வாங்கினான். அவனுக்கு அறிவுரை சொல்வதற்காகக் "காய்நெல் அறுத்து" என்ற பாடலை பாடினீர்களே? அரசர்கள் எப்படி வரி வாங்க வேண்டும். இதற்கு இலக்கணமாக அந்தப் பாடலையே பயன் படுத்துகிறார்களே.", "நீங்கள் சொன்ன அத்தனைக்கும் உரியவன் அடியேன்தான். அன்பின் மிகுதியால் பலர் என்னை இப்படிப் புகழ்கிறார்கள். நீங்கள் யார் என்று சொல்ல வில்லையே?", "பெரும்புலவரே! என் பெயர் பொத்தியார்.", "புலவர் பொத்தியாரா! என் உயிர் நண்பருக்கு எல்லாமாக இருந்தவரா? உங்களைச் சந்திக்கும் பேறு கிடைக்கும் என்று கனவிலும் நினைக்க வில்லை. கோப்பெருஞ் சோழனுடன் நீங்களும் உயிர் துறந்து இருப்பீர்கள் என்று நினைத்தேன்.", "நீங்கள் நினைத்தது போலத்தான் நடந்திருக்க வேண்டும். என் மனைவி கருவுற்று இருந்தாள். அவள் மகவு ஈன்ற பிறகு வருமாறு அரசர் கட்டளை இட்டார். "என் இல்லக் கடமைகளை முடித்து விட்டேன். வடக்கிருக்க நேற்றுத்தான் இங்கு வந்தேன். அப்படி நடந்ததும் நல்லதற்குத்தான் அதனால் உங்களைச் சந்திக்கும் பேறு பெற்றேன்." கோப்பெருஞ் சோழன் தமக்கு அருகிலேயே உங்களுக்கு இடம் ஒதுக்கி வைத்துள்ளார். நீங்கள் இங்கே அமரலாம்.", "பொத்தியாரே! எந்த இடம்? காட்டுங்கள்.", "என் அருகில் உள்ள இந்த இடம்தான்." பிசிராந்தையார் அந்த இடத்தில் அமர்ந்தார். அருகிருந்த மற்ற புலவர்கள் அவரை வியப்புடன் பார்த்தார்கள். பொத்தியார் தயக்கத்துடன் "பெரும் புலவரே! எனக்கு ஓர் ஐயம்?" என்று கேட்டார். "எதுவாக இருந்தாலும் தயங்காமல் கேளுங்கள்.", "நான் கோப்பெருஞ் சோழனுக்கு நெருங்கிய நண்பன். நான் அவரைப் பிரிந்ததோ அவர் என்னைப் பிரிந்ததோ இல்லை. நான் அறிந்து கோப்பெருஞ் சோழனை நீ சந்தித்ததோ பேசியதோ இல்லை. உங்கள் பெரும்புலமையைப் அவர் அறிந்து இருக்கலாம். அவருடைய வள்ளன்மையைப் பற்றியும் புலமையைப் பற்றியும் நீங்கள் கேட்டிருக்கலாம். ஒருவரை ஒருவர் அறியாமலே நட்பும் கொண்டிருக்கலாம். மடல் வழியாக இருவர் நட்பும் வளர்ந்திருக்க வாய்ப்பு உண்டு. பார்க்கலாம். பழகாமல் உங்கள் இருவருக்கும் நெருங்கிய நட்பு எப்படி மலர்ந்தது? எனக்கு வியப்பாக உள்ளது.", "பொத்தியாரே! உயர்வுதான் நட்பிற்கு அடிப்படை. பேசுவதும் பழகுவதும் நட்பின் வெளிப்பாடுகள். உள்ளத்தால் கலப்பதே உயர்ந்த நட்பு. நானும் கோப்பெருஞ் சோழனும் உள்ளத்தால் ஒன்றுபட்டு இருந்தோம். ஆனால் உடலால் பிரிக்கப்பட்டு இருந்தோம். நீண்ட தொலைவு எங்களைச் சந்திக்க இயலாமல் தடுத்தது. அதனால் என்ன? உள்ளம் ஒன்றுபட்ட நாங்கள் மடல் வழியாக உணர்வுகளைப் பரிமாறிக் கொண்டோம். அவர் உள்ளத்தை நான் அறிவேன். என் உள்ளத்தை அவர் அறிவார். இணைந்த எங்கள் உள்ளங்கள் காலத்தாலோ நாட்டாலோ பிரிக்கப் படுவன அல்ல" என்றார் பிசிராந்தையார். "புலவரே! உங்களை வியப்பதா? அல்லது கோப்பெருஞ் சோழனை வியப்பதா? யாரை வியப்பது என்று புரியாமல் குழம்பி நிற்கிறேன்.", "பொத்தியாரே! என்ன சொல்கிறீர்?", "என்னுடன் வடக்கிருந்து உயிர் துறக்கப் பிசிராந்தையார் வருவார். அவருக்காக என் அருகே ஓர் இடம் வையுங்கள் என்றார். நாங்கள் கோப்பெருஞ் சோழனிடம் எவ்வளவோ மறுத்து உரைத்தோம். ஆனால் அவரோ நீங்கள் இங்கே வருவீர்கள் என்று உறுதியுடன் சொன்னார். அவர் சொன்னது போலவே நீங்களும் இங்கே வந்திருக்கிறீர்கள். இருவரில் யார் செயலை வியப்பது என்று தான் குழப்பம்.", "பொத்தியாரே! ஒருவர் உள்ளத்தை இன்னொருவர் அறிவதே உண்மை நட்பு. இதில் வியப்பதற்கு என்ன உள்ளது? என் நண்பர் வடக்கிருக்கும் செய்தியைக் கேள்விப்பட்டேன். நான் செய்ய வேண்டிய இன்றியமையாக் கடமைகளை விரைந்து முடிந்தேன். இங்கு வந்தேன் அதற்குள் என் உணிர் நண்பர் விண்ணுலகம் சென்று விட்டார். காணாமலே காதல் என்பார்கள். பிறகு சந்தித்து உரையாடி மகிழ்வார்கள். என் நிலையைப் பாருங்கள். என் உயிர் நண்பரை நான் இதுவரை சந்தித்தது இல்லை. அவருடைய உள்ளத்தை அறிவேன். அவர் தோற்றம் எப்படி இருக்கும் என்பதை அறியேன். இங்கு வந்ததும் அவரைச் சந்திக்க இயல வில்லை. என் வருகைக்காக அவர் விண்ணுலகில் ஆவலுடன் காத்திருப்பார். விரைவில் என் உயிர் நீங்க வேண்டும். என் நண்பரைச் சந்தித்து மகிழ வேண்டும். இதுதான் என் ஆவல்" என்றார் பிசிராந்தையார். "பிசிராந்தையாரே! நீங்களும் கோப்பெருஞ் சோழனும் சிறந்த நட்பிற்கு எடுத்துக் காட்டாகத் திகழ்கிறீர்கள். இனி இந்த உலகமே உங்கள் நட்பைப் போற்றிப் புகழப் போகிறது. உங்கள் இருவர் புகழும் என்றும் நிலைத்து நிற்கும். உங்கள் காலத்தில் வாழும் பேறு பெற்றதை எண்ணி நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்" என்றார் பொத்தியார். 1. "எண்ணில் காட்சி யிளையோர் தோற்பின் நின்பெருஞ் செல்வம் யார்க்கெஞ் சுவையே அமர்வெஞ் செல்வ நீயவர்க் குலையின் இகழுந ருவப்பப் பழியெஞ் சுவையே (புறநானூற்றுப் பாடல் 212, அடிகள் 15 முதல் 18 வரை, புல்லாற்றூர், எயிற்றியனார் பாடியது). 2. வடக்கிருத்தல்: - வடக்கிருத்தலாவது ஊர்ப் புறத்தே தனியிடங்கண்டு அறமுரைக்கும் சான்றோர் புடைசூழப் புல்லைப் பரப்பி அதன் மீதிருந்து உண்ணா நோன்பு மேற்கொண்டு அறங்கூறும் தவம் செய்தலாகும். (புறநானூறு - இரண்டாம் தொகுதி - ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை உரை - கழக வெளியீடு) 3. தென்னம் பொருப்ப னன்னாட் டுள்ளும் பிசிரோ னென்பவென் னுயிரோம் புநனே செல்வக் காலை நிற்பினும் அல்லற் காலை நில்லலன் மன்னே (புறநானூற்றுப் பாடல் 215, பாடல் அடிகள் 6 முதல் 10 வரை) 4. இசை மரபாக நட்புக் கந்தாக இனையதோர் காலை யீங்கு வருதல் வருவ னென்ற கோனது பெருமையும் அதுபழு தின்றி வந்தவ னறிவும் வியத்தொறும் வியத்தொறும் யிப்பிறந் தன்றே (புறநானூற்றுப் பாடல் 217, பாடல் அடிகள் 5 முதல் 9 வரை)
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: ஒரு மரக் கிளையில் ஆணும் பெண்ணுமாக இரண்டு காகங்கள் கூடு கட்டிக் கொண்டு வாழ்ந்து வந்தன. அந்தக் காகங்கள் அம்மரக் கிளையில் நெடு நாளாகத் தங்கியிருந்து வந்தன. அந்த மரத்தில் இருந்த ஒரு பொந்துக்குக் கரும்பாம்பு ஒன்று புதிதாக வந்து சேர்ந்தது. அந்தக் கரும்பாம்பு, பெண் காகம் இடுகின்ற முட்டைகளை எல்லாம் ஒன்று விடாமல் குடித்துக் கொண்டிருந்தது. காகங்களால் இதைப் பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை. ஆண் காகம் தன் உயிர் நண்பனான நரி யொன் றிடம் போய் யோசனை கேட்டது. அந்தப் பாம்பைக் கொல்வதற்கு நான் ஒரு வழி சொல்கிறேன். அரசியாரின் குளியல் அறைக்குப் பறந்து போ. அவர்கள் குளிக்சுச் செல்லும் போது கழற்றி வைக்கும் நகைகளில் ஒன்றைக் கொண்டு வந்து பொந்தில் போட்டு விடு. பிறகு என்ன நடக்கிறது என்று பார்!' என்றது நரி. காகம் அப்பொழுதே அரண்மனைக்குப் பறந்து சென்றது. அரசி அப்போதுதான் நகைகளைக் கழற்றி வைத்துவிட்டுக் குளிக்கத் தொடங்கினாள். காகம் போய் ஒரு நகையைக் கெளவிக் கொண்டு பறந்தது. அரசி கூவினாள். உடனே வேலை ஆட்கள் ஓடி வந்தார்கள். அரசி நடந்ததைக் கூறிய தும் வேலையாட்கள் காகத்தைப் பின் தொடர்ந்து ஒடி வந்தார்கள், காகம் பறந்து வந்து, பாம்பு இருந்த பொந்துக்குள் நகையைப் போட்டுவிட்டு வேகமாகப் பறந்து சென்றது. பின் தொடர்ந்து வந்த வேலைக்காரர்கள் இதைக் கண்டார்கள். உடனே வேகமாக ஓடி வந்து அந்த மரப் பொந்தைப் பிளந்தார்கள். உள்ளேயிருந்த பாம்பு சீறிக் கொண்டு வெளியில் வந்தது. அரண்மனையாட்களில் ஒருவன், தன் வாளால் அதை இரு துண்டாக வெட்டிப் போட்டான். பிறகு வேலைக்காரர்கள் பொந்துக்குள் கிடந்த நகையை எடுத்துக் கொண்டு போய் அரசியிடம் கொடுத்தார்கள். காகங்கள் எவ்விதமான கவலையும் இல்லாமல் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து மேலும் பல நாட்கள் இன்பமாக வாழ்ந்து வந்தன. சூழ்ச்சியினால் எதையும் எளிதாக முடிக்கலாம் என்பதற்கு இந்தக் கதை ஓர் எடுத்துக் காட்டாகும்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'கரும்பாம்பைக் கொன்ற காகம்' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: முல்லா, முரடன், கைவாள், தங்கப் பறவை தலைப்பு: வானத்தில் பறந்த தங்கப் பறவை!
ஒருநாள் முல்லா ஒரு காட்டு வழியாக வெளியூருக்குச் சென்று கொண்டிருந்தார். வழியில் ஒரு முரடனிடம் அவர் சிக்கிக் கொண்டு விட்டார். அந்த முரடனுக்கு முல்லாவைப் பற்றியும், அவருக்கு இருக்கும் புகழைப் பற்றியும் நன்றாகத் தெரியும். அவரை அவமானப்படுத்த எண்ணிய முரடன் தன் கைவாளை உருவிக் கொண்டு " முல்லா அவர்களே உம்மைப் பெரிய மேதாவி என்றும் எவ்வளவு பெரிய ஆபத்து ஏற்பட்டாலும் உம்முடைய அறிவினாலேயே தப்பிப் பிழைப்பீர் என்றும் பேசிக் கொள்கிறார்களே அது உண்மைதானா?" என்று கேட்டான். " மக்களுக்குப் பொய்பேசத் தெரியாது.. அவர்கள் உண்மையைத்தான் பேசுகிறார்கள்" என்றார் முல்லா. " அப்படியானால் உமது அறிவுச் சாதுரியத்தை நிரூபித்துக் காண்பியும் பார்க்கலாம். இதோ இந்த உடை வாளால் உமது கழுத்தை வெட்டப் போகிறேன், உம்மால் தப்பிப் பிழைக்க முடியுமா ?" என்று முரடன் கேட்டான். " உம்முடைய கைவாளுக்குத் தப்பிப் பிழைக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை" என்று கூறிய முல்லா திடீரென வானத்தைப்பார்த்து விட்டு மகிழச்சியுடன் சிரித்தார். " என்ன சிரிக்கிறீர் " என்று முரடன் கேட்டான். " அன்பரே, உமது கைவாள் எனது தலையைத் துண்டிக்கும் முன்பு அதோ வானத்திலே கண்களைப் பறிக்கும் அழகுடன் சிறகுகளை அசைத்துப் பறக்கும் அந்த வினோதமான தங்கப் பறவையை ஆசை தீரப் பார்த்து விடுகிறேன். அதற்குப் பிறகு நீர் எனது தலையை வெட்டி விடலாம் " என்றார் முல்லா. " தங்கப் பறவையா வானத்தில் பறக்கிறது?" என்ற முரடன் வியப்புடன் ஆகாயத்தை அண்ணாந்து நோக்கினான். முல்லா குபீரெனப் பாய்ந்து முரடன் கையிலிருந்த வாளைத் தட்டிப் பறித்து விட்டார். " நண்பனே, உம்முடைய உயிர் என் கையில் இருக்கிறது. நான் நினைத்தால் உமது தலையை வெட்டி வீழ்த்திவிட முடியும் " என்றார் முல்லா. " முல்லா அவர்களே நீர் வெற்றி பெற்றுவிட்டீர் என்னை மன்னிக்க வேண்டும்" என்று முரடன் தாழ்ந்து அவரை வணங்கினான். " அன்பனே, கடவுள் சித்தமில்லாமல் எந்த உயிரையும், யாரும் அழித்துவிட முடியாது என்பதை உணர்ந்து கொள்ளும் " என்று கூறி வாளை முரடனிடம் கொடுத்து விட்டு முல்லா தன்வழி நடந்தார்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: குரு, சீடர், பூனை, கிராமம், விதை, பசு, புல், துறவி, பயிர், பால், நிலம், திருமணம், கஷ்டம் தலைப்பு: பிடிப்பின் வலை
எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது. ஒரு குரு இறக்கும் தருவாயில் இருந்தார். அப்போது அவர் தனது தலைமை சீடரை அருகில் கூப்பிட்டு அவரது காதில் மெதுவாக "ஒரு விஷயத்தை நன்றாக நினைவில் கொள், ஒரு போதும் பூனையை வீட்டிற்குள் அனுமதிக்காதே." என்று சொல்லி விட்டு இறந்து விட்டார். "இது என்ன? எதற்காக அவர் என்னை கூப்பிட்டு வீட்டிற்க்குள் பூனையை அனுமதிக்காதே" என்றார் என்று புரியவில்லை அந்த தலைமை சீடருக்கு. அவர் வயது முதிர்ந்த கிழவர்களிடம் கேட்டுப்பார்த்தார். இதில் ஏதோ ஒரு செய்தி இருக்க வேண்டும் என அவர் நினைத்தார். இது ஏதோ ஒரு குறியீடாக இருக்கலாம், இல்லாவிடில் அவர் இதை ஏன் சொல்ல வேண்டும் இதற்கு எந்த விளக்கமும் கொடுக்காமல் அவர் இறந்து போய் விட்டார். ஏன் நீங்கள் பூனைகளுக்கு எதிராக இருக்கிறீர்கள் என்று நான் கேட்டிருப்பேன். உங்களது வாழ்க்கை முழுவதும்…. உங்களது ஒழுக்கம் வழிமுறை நெறிமுறை விளக்கம் வரையறை அனைத்தும் இதற்குத்தானா? – பூனையை வீட்டினுள் அனுமதிக்காதே. ஒரு வயதான மனிதர் கூறினார், "எனக்கு அது என்ன என்று தெரியும். இது அவரது குருவால் அவருக்கு கொடுக்கப்பட்ட செய்தி. ஏனெனில் அவர் ஒரு பூனையால் அவதிக்குள்ளானார். அந்த குரு கிராமத்துக்கு வெளியே ஒரு குடிசையில் வசித்து வந்தார். அவரிடம் இரண்டே இரண்டு கோவணங்கள் மட்டுமே இருந்தன". ஒரு துறவிக்கு அது மட்டுமே உடை. உங்களுக்கு அது உள்ளாடை ஆனால் அவருக்கு அது மட்டுமே ஆடை. அவரிடம் இரண்டு கோவணங்கள் மட்டுமே இருந்ததில் பிரச்னை என்னவென்றால் அங்கிருந்த எலிகள் அவருடைய கோவணத்தை கடித்து விடுகின்றன. அவர் கிராமத்திலுள்ளவர்களிடம் "இந்த எலிகள் மிகவும் தந்திரமானவை. அவை என்னுடைய கோவணத்தை கடித்து விடுகின்றன. என்ன செய்வது?" என்று கேட்டார். ஒருவர், "அது மிகவும் சுலபம். நாங்கள் கிராமத்தில் பூனையை வைத்துக் கொள்வோம். நீங்களும் ஒரு பூனையை வைத்துக் கொள்ளுங்கள். நான் ஒரு பூனையை பிடித்துவந்து தருகிறேன்." என்றார். அந்த குரு, "சரி, இது ஒரு எளிய வழிதான்." என்று ஒத்துக் கொண்டார். பூனை வந்தது. அது அதன் வேலையை மிகச் சரியாக செய்தது. எல்லா எலிகளையும் தின்று முடித்து விட்டது. இப்போது பிரச்னை துவங்கி விட்டது. எலிகள் தீர்ந்துவிட்டன. பூனைக்கு பசி வந்துவிட்டது. அது எனக்கு பால் வேண்டும் எனக் கேட்டது. அது எப்போதும் துறவி எதிரே வந்து பசியோடு உட்கார்ந்து கொண்டிருந்தது. பூனைகள் பசியோடிருக்கும்போது பார்த்தால் மிகவும் பாவமாக தோன்றும். அது அதன் வேலையை முடித்து விட்டது. ‘நான் உனக்கு என்னாலான எல்லா உதவிகளையும் செய்து விட்டேன், எல்லா எலிகளையும் தின்று விட்டேன். ஆனால் இப்போது எனக்கு பசிக்கிறது" என்று சொல்லாமல் சொல்லியது. அந்த குரு திரும்பவும் வந்து, "இப்போது என்ன செய்வது அந்த பூனை என் முன்னால் வந்து உட்கார்ந்து கொண்டு பசியோடு என்னை பார்க்கிறது. எனக்கு உணவு கொடு இல்லாவிடில் நான் போகிறேன். நான் போய் விட்டால் எலிகள் திரும்பவும் வந்து விடும். என்பது போல பார்க்கிறது. அதை அது சொல்லவில்லை, ஆனால் நான் அதை அதன் கண்களில் பார்க்கிறேன். அதற்கு பால் கொடுப்பதற்கு எனக்கு பால் வேண்டும். "என்று கேட்டார். அந்த மனிதன், "ஒவ்வொரு நாளும் நீங்கள் பாலுக்கு வர வேண்டியிருக்கும். என்னிடம் பல பசுக்கள் உள்ளன. அதில் ஒன்றை கொடுக்கிறேன். அதை வைத்துக் கொள்ளுங்கள்." என்றான். அவர் பசுவை வாங்கிக் கொண்டு சென்றார். ஆனால் அதனால் பிரச்னைகள்தான் அதிகமாயின. இப்போது பசுவுக்கு புல் தேவை பட்டது. அதனால் அவர் திரும்பவும் கிராமத்துக்குச் சென்றார். மக்கள், "நீ ஒரு கிறுக்கன், பிரச்னை பிரச்னை. நீங்கள் ஏன் உங்கள் குடிசையை சுற்றி உள்ள இடத்தில் புல் வளர்த்துக் கொள்ளக் கூடாது?. அங்கே ஏகப்பட்ட இடம் சும்மா தரிசாக கிடக்கிறது. நாங்கள் விதை தருகிறோம். இந்த விதைகளை வைத்து எதையாவது விதைத்து வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்கும் உதவும். நீங்களும் சாப்பிட்டு பசுவுக்கும் எதையாவது கொடுங்கள்." என்றனர். அதனால் அந்த குரு, விதை விதைத்து வளர்க்க ஆரம்பித்தார். ஆனால் திரும்பவும் பிரச்னை வந்தது. இப்போது அந்த பயிரை அறுவடை செய்ய வேண்டும். ஆனால் அவரோ ஒரு துறவி, அவர் இந்த வேலைகளை செய்ய கூடாது. ஆனால் ஒரு விஷயம் மற்றொரு விஷயத்திற்கு கொண்டு செல்கிறது. அதனால் அவர் திரும்பவும் கிராமத்திற்கு சென்றார். "பயிர் அறுவடைக்கு தயாராகி விட்டது. ஆனால் அதை செய்ய என்னிடம் கருவிகள் எதுவும் கிடையாது. அதனால் எனக்கு உதவி வேண்டும்." என்று கேட்டார். மக்கள், "இங்கே பாருங்கள் உங்களோடு மிகவும் தொந்தரவாகி விட்டது. உங்களால் எந்த பயனும் இல்லை. எதற்கும் உங்களால் தீர்வு காண முடியாது. நாங்கள் தான் எதற்கும் தீர்வு காண வேண்டும். இது மிகவும் எளிது. இங்கே ஒரு விதவை பெண் இருக்கிறாள். அவள் உங்களை, உங்கள் பசுவை, உங்கள் பயிரை, உங்கள் உணவை, எல்லாவற்றையும் – எல்லாவற்றையும் என்றால் பூனை. எலி …… அவள் மிகவும் அனுபவம் வாய்ந்த பெண்." ஆனால்! என்ற துறவி நான் ஒரு துறவி. என்றார். அவர்கள், இந்த துறவு எல்லாவற்றையும் மறந்து விடுங்கள். என்ன வகையான துறவி நீங்கள்.! உங்களிடம் பசு, பூனை, நிலம். பயிர் ஆகிய எல்லாமும் உள்ளன. ஆனால் நீங்கள் நான் ஒரு துறவி என்று சொல்லிக் கொள்கிறீர்கள். எல்லாவற்றையும் மறந்து விடுங்கள். மேலும் இந்த திருமணம் போலியான ஒன்று. உங்களுக்கு அந்த பெண்ணிடம் எந்த உறவும் கிடையாது. அவள் வறுமையில் கஷ்டத்தில் இருக்கிறாள். நீங்களும் சிரமத்தில் இருக்கிறீர்கள். இருவரும் சேர்ந்து இருந்தால் உங்களுக்கு நல்லது." என்றனர். அவர், "அப்படியானால் சரி, அது சட்டபூர்வமானதாக இல்லாவிடில் சரி. அதில் எந்த சிரமமும் இல்லை. ஏனெனில் எனது குரு திருமணம் செய்து கொள்ளாதே என்று தான் கூறியுள்ளார். இதற்கு எதிராக எதுவுமே சொல்லவில்லை. நான் தான் திருமணம் செய்யவில்லையே. நான் அந்த பெண்ணுடன் வாழ்வதைப் பற்றி இந்த கிராமம் எதுவும் சொல்லாமல் இருக்கத்தான் இந்த ஏற்பாடு என்பதால் இது எனக்கு சரிதான். நான் அவளை எனது மனைவி என்று சொல்லிகொள்ளலாம், ஆனால் உண்மையில் நான் அவளது கணவனாக எதுவும் செய்யவேண்டியதில்லை, அவளும் எனது மனைவியாக உண்மையில் எதுவும் செய்யவேண்டியதில்லை." என்று ஒத்துக் கொண்டார். அவர் அந்த பெண்ணுடன் பேசினார். அவள், எனக்கு மறுபடியும் திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை. ஒருமுறை செய்ததே போதும். ஆனால் நீங்களும் சிரமத்தில் இருக்கிறீர்கள், நானும் சிரமத்தில் இருக்கிறீர்கள். அதனால் ஒருவருக்கொருவர் ஒத்தாசை செய்து கொள்வோம். அந்த விதத்தில் இது எனக்கு சரிதான்." என்றாள். அதனால் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இப்போது எல்லாமும் நன்றாக போய்க் கொண்டிருந்தது. அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும் சில நாட்களில் அவள் அவருக்கு சிசுரிஷை செய்தாள். மெதுமெதுவாக அவர் அந்த பெண்ணை விரும்ப ஆரம்பித்தார். ஒரு ஆண் ஆண்தான், ஒரு பெண் பெண்தான். பெண்ணும் அவரை விரும்ப ஆரம்பித்தாள். அவர்கள் இருவருமே தனிமையை உணர்ந்தனர். ஒரு குளிர்கால இரவில் இங்கே குளிராக இருக்கிறது நாம் ஏன் நெருங்கி இருக்கக் கூடாது என மற்றவர் கேட்கவேண்டும் என இருவருமே விரும்பினர். இறுதியில் அந்த பெண், இங்கே மிகவும் குளிராக இருக்கிறது என்று கூறினாள். அந்த துறவியும் இங்கேயும் குளிராக இருக்கிறது என்றார். அப்போது அந்த பெண், உங்களுக்கு தைரியம் இல்லைபோல தோன்றுகிறதே என்றாள். அவர், அதுசரிதான். நீ இங்கே வா, எனக்கு தைரியம் இல்லை. நான் ஒரு துறவி, நீ ஒரு அனுபவமுள்ள பெண்மணி. நீ இங்கே வா. இருவரும் சேர்ந்திருந்தால் கதகதப்பாக இருக்கும். என்றார். கதகதப்பாகத்தானே இருக்கும். இப்படித்தான் அவரது முழு துறவறமும் வீணாகிப்போனது. அவர் இறக்கும்போது அவர் தனது சீடர்களிடம் உங்களுடன் எந்த பூனையையும் தங்க விடாதீர்கள். என்று கூறி விட்டு இறந்தார். வயதான மனிதன் அந்த தலைமை சீடரிடம், "அதிலிருந்து உங்களது பாதையில் ஒவ்வொரு குருவும் தனது சீடர்களிடம் பூனையைப் பற்றி கவனமாக இருங்கள் என்று கூறுவது வழக்கமாகிப் போனது. பூனையைப் பற்றி கவனமாக இருப்பது மிகவும் கடினம். எப்படியோ பூனை உள்ளே வந்து விடும் – வாழ்க்கை மிகவும் விசித்திரமானது". என்றார்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: விஜயநகரப் பேரரசின் அவை கலைந்தது. அரசர் கிருஷ்ண தேவராயர் வெளியேறிக் கொண்டிருந்தார். மற்ற உறுப்பினர்களும் பின் தொடர்ந்தனர். அப்போது அமைச்சர் தெனாலிராமனிடம் மெல்லிய குரலில், “தெனாலி... உனக்கோ வயதாகி விட்டது. ஏன் நீ அரசரிடம் கேட்டு பணி ஓய்வு பெறக் கூடாது?” என்றார். அது அரசரின் காதில் விழுந்து விடவே, அரசர் சிரித்தவாறு, “தெனாலிராமா! வேண்டுமானால் சொல்... மகிழ்ச்சியோடு தருகிறேன்” என்றார். “அப்படியானால் சரி... ஆனால், ஒரு நிபந்தனை! எனக்குப் பதிலாக வரப்போகிறவரை நான்தான் சோதித்துத் தேர்வு செய்து தருவேன்...” என்றார். “அதற்கென்ன... அப்படியே செய்யலாம்...!” என்று அரசர் ஏற்றுக் கொண்டார். “அப்படியானால் உங்கள் மோதிரத்தை என்னிடம் கொடுங்கள்” என்றார் தெனாலிராமன். ஏன்...? எதற்கு? என்று அரசர் கேட்கவில்லை. கழற்றப் போனார். அதற்குள் முந்திக் கொண்டு, அமைச்சர் தன் மோதிரத்தைக் கழற்றிக் கொடுத்து விட்டார். பெற்றுக்கொண்டே தெனாலிராமன், “அடுத்த வியாழக்கிழமை சோதனை... அதில், வெற்றி பெறுபவர் எனது பதவியைப் பெறுவார்... நான் ஓய்வில் போய்விடுகிறேன்” என்றார். மோதிரத்தைப் பெற்றுக் கொண்ட தெனாலி, ஒரு சிறிய மர டப்பாவில் அதை வைத்து மூடி, அரண்மனையில் இருந்த யானை நீர்குடிக்கும் ஆழமான பெரிய தொட்டியினுள் அதைப் போட்டு விட்டு, “யார் இதை எடுக்கிறாரோ, அவரே எனக்குப் பின் என் பதவிக்கு வரமுடியும்...” என்றார். அடுத்த சில நாட்களில், பதவித் தேர்வுக்கு மனு செய்திருந்த இளைஞர்கள் அனைவரும் வந்து ஆழமான தொட்டியைப் பார்த்தனர். அப்போது தொட்டி முற்றிலும் வறண்டு போயிருந்தது. மோதிர டப்பா அடியில் கிடந்தது. அதனுள் எப்படி இறங்கி அதை எடுப்பது? அனைவரும் பல்வேறு உபாயங்களைச் செய்து பார்த்தனர். எவராலும் எடுக்க முடியவில்லை. அதற்குள் தெனாலிராமன் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. அமைச்சர், அவர் காதில் விழும்படியாகவே, “தெனாலிராமன் அந்த மோதிரத்தைத் தானே அபகரித்துக் கொள்ளச் செய்யும் தந்திரம் இது... இல்லாவிட்டால், அவனே அதை வெளியில் எடுத்துக் காட்டட்டுமே...!” என்றார். அதைக் கேட்டதும், தெனாலிராமன் நேராக அரண்மனைக்குச் சென்றார். அரசர் ஒவ்வொரு வருடமும் ஹோலிப் பண்டிகையின் போது அந்த யானைத் தொட்டியில்தான் வண்ணநீரை நிரப்புவது வழக்கம். அதற்கு நீர் நிரப்பவும் வடி கட்டவும் தனித்தனிக் குழாய்கள் உண்டு. தெனாலி சென்று நீர் நிரப்பும் குழாயை திறந்து விட்டார். தொட்டியில் நீர் நிரம்பவே, அடியில் கிடந்த சிறிய மர டப்பா நீரில் மிதந்து மேலே வந்துவிட்டது. அதை எடுத்துத் திறந்து மோதிரத்தை அரசர் கையில் ஒப்படைத்து விட்டார். அரசரிடமிருந்து அது அமைச்சரைப் போய்ச் சேர்ந்து விட்டது. மகிழ்ச்சி அடைந்த அரசர் கிருஷ்ண தேவராயர், “மோதிரத்தை எடுத்துத் தருபவர் தான் உனக்குப் பிறகு உன் பதவிக்கு வர முடியும் என்றாய்... இப்போது நீயே எடுத்துத் தந்து விட்டாய்... எனவே, உன் பதவி உன்னையே வந்தடைந்து விட்டது. ஆகவே, உனக்கு ஓய்வு தருவது பற்றி இனி நான் எண்ணிக் கூடப் பார்க்க முடியாது” என்றார். அமைச்சர் வெட்கித் தலைகுனிந்தார்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'மோதிரம்' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: ''அப்பா...'' பெரிதாகக் கத்திக் கொண்டே ரவி வீட்டுக்கு வந்த போது வீடு நிசப்தமாக இருந்தது. வழக்கம் போல் அப்பா வாசலுக்கு வந்து வரவேற்கவில்லை. ரவிக்கு ஏமாற்றமாக இருந்தது. தெருத் திண்ணையில் ஏறி, வலப்பக்க அறைச்சன்னல் மேல் கால் வைத்து லேசாய்த் தள்ளியதில் அது திறந்தது. உள்ளே கைவிட்டு முக்கோண மாடத்திற்கு எம்பிய போது கால் நழுவியது. ''அப்பா...'' மீண்டும் கத்தியவாறு ஜன்னல் கம்பியைக் கெட்டியாகப் பிடித்தான்... விழாமல் தப்பித்தான். அதற்குள் உள்ளே சப்தம் கேட்டது. ''ரவி...கண்ணு... இதோ வந்துட்டேன்...'' என்று அப்பாவின் குரல்தான்... ரவிக்கு நிம்மதியாக இருந்தது. கதவு திறந்தவுடன் தோளில் இருந்த புத்தகப் பையை அப்படியே திண்ணையில் எறிந்து விட்டு உள்ளே ஓடினான். அப்பாவின் மடியில் தாவி ஏறினான். சக்கர நாற்காலியில் இருந்த கண்ணப்பன் சமாளிக்கத் தடுமாறினார். ''பார்த்து பார்த்து... மெல்ல ரவி... அப்பாவுக்கு வலிக்குமில்லை?'' நாற்காலி உருண்டு பின்னோக்கி நகர்ந்தது. முற்றத்துத் தூண் மேல் இடித்து நின்றது. ''ரவி... பை எங்க?'' கேட்ட குரலுக்கு ரவி வாசலைக் கை காட்டினான். ''அப்பா... இன்னிக்கு எங்க ஸ்கூல் பின்னால இருக்கற வேப்ப மரத்தில ஏறினோம்... செந்தில் கீழ விழுந்துட்டான், மருந்தெல்லாம் போட்டாங்க'' என்று கைகளை விரித்துச் சொன்ன போது கண்ணப்பனுக்குக் கவலையாக இருந்தது. முரட்டுப் பிள்ளையாக இருக்கிறானே! ''ரவி... பாரு... புஸ்தகப் பையை இப்படி எல்லாம் வெளியிலேயே போட்டுட்டு வரக் கூடாதுன்னு சொல்லியிருக்கேனில்லை... அம்மா பார்த்தா அவ்வளவுதான்... தொலைஞ்சோம்... போ... முதல்ல எடுத்துட்டு வந்து ஆணியில மாட்டி வைச்சிட்டு கைகால் கழுவிட்டு வா... ரெண்டு பேரும் காப்பி குடிக்கலாம்... சரியா?'' என்று சொல்ல, ரவி கொஞ்ச நேரம் யோசித்தான். ''அப்பா... சீக்கிரம் குடிச்சிட்டு இன்னிக்கும் கிரிக்கெட் விளையாடலாமாப்பா? அம்மா வர்றதுக்குள்ள?'' குரல் கெஞ்சியது. கண்ணப்பன் மனம் நெகிழ்ந்தது... ''விளையாடலாண்டா கண்ணா... ஆனா நான் சொன்னபடி கேட்கணும்... நல்ல பிள்ளையா இருந்தாதான் எல்லாம், என்ன?'' ''சரிப்பா'' என்றபடி மடியிலிருந்து இறங்கி திண்ணைக்கு ஓடினான். விலுக்கென்று உதைத்து அவன் இறங்கியதில் கண்ணப்பனின் கட்டுப்போட்ட காலில் சுரீரென்று வலி... பல்லைக் கடித்துப் பொறுத்துக் கொண்டார். வெயில் தாழத் தொடங்கியிருந்தது. நாலரை மணிக்கு வெயில் பளிச்சென்றிருந்தாலும் இன்னும் அரை நேரத்தில் சட்டென்று விழுந்து விடும். காலையிலிருந்து வீட்டில் கவிழ்ந்திருந்த நிசப்தம் இப்போது விடைபெற்றுக் கொண்டாலும் உள்ளறைச் சுவர்களில் இன்னும் அந்த மௌனம் பயமுறுத்திக் கொண்டிருந்தது. மல்லிகா பஸ் மாற்றி வீடு வந்து சேர இன்னும் குறைந்தது ஒரு மணி நேரமாகும். ஆறு மணியல்லாமல் வீடு வர அவளால் முடிவதில்லை. இதில் ஓவர்டைம் என்றால் இன்னும் நேரமாகும்... பஸ் நிறுத்தத்தில் வெளிச்சம் இருந்தாலும் நடந்து வருகிற பாதை இருட்டுதான். நேரமாகி வருகிற மனைவியைப் போய் அழைத்து வர இயலாத நிலை எத்தனைக் கொடுமை! அமுதா பள்ளி முடிந்ததும் தட்டச்சு வகுப்பிற்குப் போய்விடுவாள். பஸ் நிலையத்துக்கு அருகில்தான்... சில சமயம் அம்மாவும் மகளும் சேர்ந்து வருவார்கள். அவர்கள் வரும் வரை ரவியை சமாளிக்க வேண்டும். ரொம்ப முரடனாக இருக்கிறான். நீண்ட நாள் கழித்துப் பிறக்கிற குழந்தைகள் இப்படித்தான் துறு துறுவென்று இருக்கும் போல... மல்லிகா வரும் போதே அலுத்துக் களைத்து வருவாள். கோபமும் எரிச்சலும் சட்சட்டென்று தெறிக்கும். அவளைக் குறை சொல்வதில் நியாயமில்லை, இருந்திருந்தாற் போல் கணவன் உடல் நிலை சீர்கெட்டு, இதய அறுவை சிகிச்சை, சர்க்கரையில் அஜாக்கிரதையாக இருந்து ஒரு கால் துண்டாடப்பட்டு வீட்டோடு சக்கர நாற்காலியில் கிடப்பதில், வெளியே போய் அறியாதவள் மேல் திடீரென்று வீட்டுப் பொறுப்பு முழுவதும் விழுந்தால்... ஒற்றை ஆளாக அவள்தான் என்ன செய்வாள்? நடுத்தரக் குடும்பத்துக்கு இத்தனை சோதனை தாங்குமா? கண்ணப்பன் வேலை செய்த கம்பெனி ஆதரவு கொடுத்ததில் குடும்பம் அந்த மட்டுக்கும் இவ்வளவாவது நிற்கிறது. மல்லிகாவின் எப்போதோ படித்த எஸ்.எஸ்.எல்.சி.க்கு வந்த மவுசு... தூசி தட்டின சான்றிதழ் போதுமென்று கம்பெனி கொடுத்த குமாஸ்தா உத்யோகம் பெரும் வரம். தள்ளியிருக்கிற கோயமுத்தூர் ஜிஹெச்சில் ஆபரேஷன் முடிந்து வீடு திரும்பிய பிறகு ஆயிரத்தெட்டு எச்சரிக்கை. சர்க்கரை விஷயத்தில் மிகுந்த கட்டுப்பாடு, நேர நேரத்துக்கு மருந்து மாத்திரைகள், எப்போதும் ஓய்வு, ''சிரமப்படவே கூடாது, அடிபடக்கூடாது...'' ஆனால் அது எப்படி முடியும்? ஓடியாடி வேலை செய்த கால்களால் சும்மாயிருக்க முடியுமா? கால்கள் இல்லை, கால்தான்... இன்னும் அந்தப் புண் ஆறவில்லை. மனைவி வெளியே போய் வேலை பார்க்கும்போது வீட்டு வேலையாவது செய்து வைத்தால் அவளுக்கு எத்தனை உபயோகமாக இருக்கும்! சக்கர நாற்காலியை உருட்டி உருட்டி, சின்னச் சின்ன வேலைகளைச் செய்து முடிப்பார். வீட்டை அரைகுறையாகக் கூட்டி, முற்றத்தில் காய்கிற துணிகளை உட்கார்ந்தபடியே கம்பி நீட்டி சேகரித்து, மடித்து அலமாரியில் வைத்து, காலையில் போட்டு வைத்து விட்டுப் போன பாத்திரங்களைத் துலக்கி அடுக்கி... சமையலறைக்குப் போவதில்தான் சிரமம். கொஞ்சம் உயரமான நிலைப்படியைத் தாண்டுவதற்குள் உயிர் போய் உயிர் வந்துவிடும். மல்லிகா ''நீங்க ஒண்ணுமே செய்ய வேண்டாம்... பேசாம ஓய்வு எடுங்க... எதையாவது செய்யப் போய் மறுபடியும் உங்களுக்கு ஒண்ணு ஆச்சுன்னா முதல்ல நான் இருக்க மாட்டேன்'' என்பாள்... அச்சம்... நியாயமான அச்சம்... பெயரளவுக்காவது புருஷன் இருந்தால் போதும். நடமாடக்கூட வேண்டாம். உயிரும் சதையுமாய் அசைந்து கொண்டிருந்தால் போதும், எத்தனைக் கஷ்டமும் படத்தயார். ஆனால் மொத்தமாக கணவனே இல்லாது போனால் வரக் கூடிய இருட்டுக்கு அவள் தயாராயில்லை. அமுதா விவரம் தெரிந்தவள். வீடு வந்ததும் முதலில் அப்பாவுக்குத் தேவையானதைச் செய்து விட்டுப் பிறகுதான் உடை மாற்றுதல் முதற்கொண்டு மற்றதெல்லாம். ஆனால் துறு துறுவென்றிருக்கிற ஆறு வயதுப் பிள்ளையை எப்படிக் கட்டுப்படுத்துவது? சதா விளையாட வேண்டும். மரமேற வேண்டும், திண்ணையில் ஏறி ஜன்னல் மேல் கால் வைத்து தொப்பென்று தெருவில் குதிக்க வேண்டும். மல்லிகாவின் முதல் அச்சம் ரவிதான். ஓய்வெடுக்க வேண்டிய கணவரைப் பாடாய்ப்படுத்துகிறானே என்று... சதா ''அப்பா... திருடன் போலீஸ் விளையாடலாம்பா, அப்பா மாடிக்குப் போலாம்பா, அப்பா அத்திப் பழம் அடிக்கலாம்பா...'' இவனிடமிருந்து எப்படிக் காப்பாற்றுவது? காலையில் கையோடு பள்ளிக்கு அழைத்துப் போய் விடலாம், மதியம் வீட்டுக்கு வர முடியாதபடி கையில் டிபன் பொட்டலம்... ஆனால் மாலை பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு ஓடி வருகிற பிள்ளையை என்ன செய்ய முடியும்? அடக்கிப் பார்த்தாள். ஆர்ப்பரிக்கிற அலை, போவது போல போக்குக் காட்டி விட்டு மீண்டும் பெரிதாகத் திரும்பி வருவது போல்... திட்டையும் அடியையும் வாங்கிக் கொண்டு மீண்டும் அதையேதான் செய்வான். ''நாசமாப் போறவனே, கடங்காரா'' என்று ஒரு நாளைக்கு நூறு முறை வசவு வாங்குவான். கண்ணப்பனிடம் கெஞ்சினாள். ''நீங்களாவது ஜாக்கிரதையா இருங்களேன்... செல்லம் கொடுக்காதீங்க... பக்கத்தில் விடாதீங்க... ரெண்டு அதட்டல் போட்டு தூரத்தில் வையுங்க... உங்க கால்ல விழுகறேன்...'' சொன்னதல்லாமல் அவர் காலில் விழுந்து அழுதாள். மகளும் அழுதாள். அம்மாவும் அக்காவும் அழுவதைப் பார்த்து ரவியும் அழுதான். ''உன்னால்தாண்டா குட்டிப் பிசாசே இத்தனைக் கஷ்டமும்'' என்று அக்கா புலம்புவது கேட்டாலும் ரவிக்கு புரியவில்லை. கண்ணப்பன் எத்தனை ஜாக்கிரதையாக இருந்தாலும் குழந்தையை நிஜமாக அதட்ட முடியவில்லை. மேலே வந்து விழுகிறவனை ''தூரப்போ'' என்று தள்ள முடியவில்லை. மற்ற நேரங்களில் கடுமையாக இருப்பது போல் காட்டிக் கொண்டாலும் மல்லிகா வீட்டில் இல்லாத அந்த மாலை நேரத்து இரண்டு மணி நேரமும் ரவிக்கு எந்த அணையும் போட முடியவில்லை. பழைய காலத்து வீடு. பெரிய வீடு. கண்ணப்பனின் அப்பா தந்து விட்டுப்போன ஒரே சொத்து. முற்றமும், நாலு பக்கம் தனித்தனி அறைகளும், இரண்டாவது கட்டும், கொல்லைப்புறமும், முற்றத்து உள்ளிலிருந்து மேலே வளைந்து வளைந்து போகும் மாடிப்படியும், சிறிய மாடியறையும் கொல்லென்று கிடக்கும். இப்படியொரு வீட்டில் ஓடிப் பிடித்து விளையாடக்கூடாது என்று அந்தச் சிறு பிள்ளைக்குக் கட்டளை போடுவது எத்தனைக் கொடுமை! திருடன் போலீஸ் விளையாடப் போய் சக்கர நாற்காலி திட்டில் முட்டிக் கீழே விழுந்து காலில் அடிபட்டு இரத்தம் வர ஆரம்பித்து... மல்லிகா ''ஜாக்கிரதை ஜாக்கிரதை'' என்று எதற்கு அத்தனை அஞ்சினாளோ அது நடந்தே விட்டது. இரத்தம் உறையாமல் பெருகுகிற தன்மை... கீழே விழுந்து, அக்கம்பக்கம் யாரையும் கூப்பிட முடியாமல் அப்படியே கிடந்து, இரத்தம் ஏகத்திற்கு சேதம் ஆகி, அலுவலகம் முடிந்து வீட்டுக்குள் நுழைந்த மல்லிகா நிலைமையைக் கண்டு அலறி, அதிர்ச்சியில் நின்றதில் மறுபடியும் நேர விரயமாகி... அன்றைக்கு ஏதோ நல்ல காலம்... பக்கத்து வீட்டுக்கு உறவுக்காரர்கள் யாரோ காரில் வந்திருந்தார்கள். உடனே அள்ளிப் போட்டுக் கொண்டு போய் துடியலூரில் ஒரு நர்சிங் ஹேமில் முதலுதவி செய்து, ஜி.ஹெச்சில் அனுமதிக்கப்பட்டு... கண்ணப்பன் உயிர் பிழைத்தது அதிசயம் தான்... வீடு வந்த பிறகு கையில் கிடைத்த ஸ்கேலால் ரவியை விளாசித்தள்ளி விட்டாள் மல்லிகா. கண்ணப்பன் பல நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பிறகு, அவர் இருக்கும் அறைப் பக்கம் கால் போனால் காலை ஒடித்து விறகாக அடுப்பில் வைத்து விடுவேன் என்று மிரட்டி வைத்தாள். அதற்கெல்லாம் அஞ்சி கொஞ்சம் அடங்கியிருந்த ரவி, அவர் உடல் கொஞ்சம் தேறியதும் பழையபடி உற்சாகத்தில் துள்ள ஆரம்பித்து விட்டான். மல்லிகா பட்ட சிரமங்களைப் பார்த்து வேதனைப் பட்டுப்பட்டு கண்ணப்பனுக்கு மனம் காய்த்துப் போய் விட்டது. ஏனோ அர்த்தமற்ற இந்த வாழ்க்கை சீக்கிரம் முடிந்து விடும் என்று தோன்றவும் தொடங்கி விட்டது. அதற்குள் ரவியைக் கட்டுப்படுத்துவானேன் என்று முன்னெப்போதுமில்லாத வாஞ்சை... போதாதா ரவிக்கு? கொஞ்ச நாட்களாக, பள்ளியில் கிரிக்கெட் விளையாட்டு பழகிக் கொண்டு வந்து தினம் வீட்டில் அதை விளையாட வேண்டும் என்று அடம்பிடித்துக் கொண்டிருந்தான். கண்ணப்பன் மல்லிகாவுக்குத் தெரியாமல் பக்கத்து வீட்டில் சொல்லி ஒரு பிளாஸ்டிக் மட்டையும் பந்தும் வாங்கி வரச் செய்திருந்தார். அதைக் காப்பாற்றத்தான் பெரிய யோசனையாக செய்ய வேண்டியிருந்தது. ரவியின் விளையாட்டு சாமான்கள் பூராவும் தூக்கி நிஜமாகவே அடுப்பில் போட்டுப் பொசுக்கி விட்டிருந்தாள் மல்லிகா. ''எதையாவது விளையாடறேன்னு அப்பா மேல பட்டுதோ தொலைச்சுருவேன் கடங்காரா...'' வீட்டில் மல்லிகா கண்ணுக்குப் படாமல் இந்த மட்டையையும் பந்தையும் எங்கே ஒளித்து வைப்பது? ரவிதான் அற்புதமான ஓரிடைத்தைக் கண்டு பிடித்தான். இருட்டான மாடிப்படி வளைவில் மேலறைக்குத் திரும்புமுன் இடது பக்கம் ஒரு சிறு மரப்பலகை பெயர்ந்திருந்தது. ஒரு பக்கம் நன்றாக சுவரோடு ஒட்டிக் கொண்டிருந்ததால் மறு பக்கம் திறந்து மூடும்படி அமைந்து விட்டது. திறந்தால் ஓரடி உயரத்திற்கு ஓர் இடம். இருட்டுக்குள் இருட்டாக ஒரு பெட்டி போல் இருந்தது. கிரிக்கெட் மட்டையும் பந்தும் அங்கே ஒளிந்தன. மாலை வந்ததும் அதை எடுத்து வந்து அப்பாவிடம் கொடுத்து ஆசை தீர விளையாடுவதும் அம்மா வருமுன்பு சர்வஜாக்கிரதையாக மாடி வளைவில் ஒளித்து வைப்பதுமாக இருந்தான். வைப்பதுமல்லாமல் அப்பாவிடம் வந்து கண்களை மட்டும் ரகசியமாக உருட்டி ''ஒளிச்சு வைச்சிட்டேன்'' என்று தலையை ஆட்டுவான். ஞாபகமாக ''நாளைக்கு மறுபடியும் விளையாடலாம்பா... நீ இன்னிக்கு காஜி குடுக்கவேயில்லை'' என்பான். இத்தனூண்டு பிள்ளைக்கு எத்தனை விவரம்! கண்ணப்பன் அமுதாவின் பரீட்சை அட்டையை ஒரு கையில் கேடயமாக வைத்துக் கொண்டு அடி ஏதும் மேலே படாமல் மட்டை பிடித்து சமாளித்து வந்தார். முதலில் மட்டை அவர் பிடித்தால், ஆட்டம் முடிகிற போது ரவி பிடிக்க வேண்டும். ரவி மட்டை பிடிக்கு முன்பு மல்லிகா வரும் சப்தம் கேட்டால் ஆட்டம் அத்தோடு முடிந்து விடும். ஆனால் ரகசியமாக ராத்திரி தூங்கும் வரை, ''அப்பா எனக்கு நீ காஜி குடுக்கவேயில்லை'' என்று சொல்லிக் கொண்டே இருப்பான். தூக்கத்தில் கைகளைத் தூக்கி மட்டை வீசுவான். ''காஜி, காஜி'" என்று முனகுவான். ரவி பள்ளியிலிருந்து கற்றுக் கொண்டு வந்த எண்ணற்ற சங்கேத வார்த்தைகளில் காஜியும் ஒன்று. கிரிக்கெட் மொழி. முதலில் மட்டை பிடிப்பவர், ஆட்டம் முடியும்போது பந்து வீசுபவராக இருக்க வேண்டும். நேரமில்லாமல் அல்லது அவுட்டாகாமல், முதலில் பந்து வீசியவருக்கு மட்டை சந்தர்ப்பத்தை மிச்சம் வைத்தால் அது ''காஜி'". ஒவ்வொரு நாளும் இந்த ஆட்டத்துக்காகவே பள்ளி விட்டதும் தலை தெறிக்க ஓடி வருவான். மாடிக்கு ஓடி மட்டையைத் தூக்கிக் கொண்டு வருவான். ''அப்பாவ் வந்துட்டேன்...'' கத்தியபடி வந்தவன் கை காலைத் துடைத்துக் கொண்டு, வேகவேகமாக காபி குடித்து விட்டு, மட்டையையும் பந்தையும் எடுத்துக்கொண்டு வந்தான். விளையாட்டு தொடங்கியது. அரை மணிக்குப் பிறகு கண்ணப்பனுக்கு முடியவில்லை. மூச்சு வாங்கியது. வேர்க்கத் தொடங்கிது. ''விபரீதம்'' என்று உள்ளம் எச்சரித்தது. மெதுவாக ஆட்டத்தை நிறுத்தினார். ரவி அடம்பிடிப்பான் என்று தெரிந்து, ''அம்மா சீக்கிரம் வர்றா போலிருக்கு, சீக்கிரமா ஓடிப் போய் மட்டையை வைச்சிட்டு வந்திரு'' என்று அவசரப்படுத்தவே, ரவி தலைதெறிக்கப் படியேறி ரகசிய இடத்தில் வைத்து விட்டு சாது போல் இறங்கி வந்து அப்பா அருகே நின்று கொண்டான். ஆனால் அம்மாவைக் காணோம். ஏமாற்றம்! ''என்னப்பா அம்மா வரவேயில்லை? நீ அவுட்டானதும் நான்தான் பேட்டிங் பண்ணணும், அதுக்குள்ள ஏன் நிறுத்தின?'' ''கண்ணு, அம்மா வர்ற மாதிரி சத்தம் கேட்டதா அதனாலதான்... திடீர்னு வந்துட்டா என்ன பண்றது? அப்புறம் தெரியாம விளையாடறதும் நிண்ணு போயிடும்... மட்டையெல்லாம் அடுப்புக்குப் போயிடும். உனக்கு அடி விழும் இல்லை? அதனாலதான் ஜாக்கிரதையா இருக்கணும்ணு அப்படிச் சொன்னேன்.'' கண்ணப்பன் சமாதானப்படுத்தியதில் கொஞ்சம் ஆறுதலடைந்தான். இருந்தாலும் அடுத்த நிமிஷமே ''அப்பா ஐஸ் நம்பர் விளையாடலாம்பா'' என்று ஆரம்பித்தான். போச்சுடா, மல்லிகா வரும் வரை இவனை எப்படி சமாளிப்பது? பேசிகீசித்தான் பிடித்து வைக்க வேண்டும். ''வேண்டாம் கண்ணு... நாம ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் பேசிகிட்ட இருக்கலாம். இன்னிக்கு ஸ்கூல்ல என்ன சொல்லிக் கொடுத்தாங்க?'' ''கழித்தல் கணக்கு சொல்லிக் கொடுத்தாங்க. எங்க கணக்கு டீச்சர் ரெஜிஸ்தர்ல இங்க்கை கொட்டினதுக்காக பெருமாளை அடிச்சாங்க. கடங்காரா, இனிமே இங்க் மேல கையை வைப்பியான்னு திட்டினாங்க... அப்பா, கடன்காரன்னா என்னப்ப?'' ''கடன்காரன்னா... நாம யார் கிட்டயாவது ஏதாவது வாங்கியிருந்தோம்னா உடனே திருப்பிக் கொடுத்திடணும். அப்படிக் கொடுக்கலேண்ணா அவங்க வந்து திருப்பிக் கேட்பாங்க. கொடுக்காம விட்டோம்னா நாம கடங்காரங்க ஆயிடுவோம்...'' ''அன்னிக்கு மீசை மாமா வந்து உங்ககிட்ட கடனைத் திருப்பித்தான்னு கேட்டாரே, அந்தக் கடனா?'' எல்லாவற்றையும் இந்தப் பொடியன் கவனித்திருக்கிறான். வீட்டு மேல் வாங்கிய கடன். வட்டி ஒழங்காய்க் கொடுத்தும் அசலைத் திருப்பிக் கேட்கிறார் செட்டியார். ''ஆமாப்பா... அப்பாவுக்கு உடம்பு சரியில்லை. அவர்கிட்டதான் கடன் வாங்கியிருக்கோம்? திருப்பிக் கொடுக்கணுமில்லை? அதைத்தான் கேட்கிறார்.'' ''ஏம்பா திருப்பிக் கொடுக்கலை?'' ஆரம்பித்து விட்டது. குழந்தைகளின் கேள்விகள். எண்ணற்ற கேள்விகள். ஒன்று சொன்னால் அதிலிருந்து இன்னொரு புதுக் கேள்வி... நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத கேள்விகளெல்லாம் எப்படித்தான் இந்தப் பிஞ்சுத் தலைகளிலிருந்து உதயமாகிறதோ? ''நம்ம கிட்ட இப்ப இல்ல... அதனால கொடுக்கல.'' ''கொடுக்காமயே போன்னு துரத்திலாமாப்பா?'' ''ஐயையோ... அப்படி எல்லாம் செய்யக் கூடாது. வாங்கின கடனை ஒழுங்கா திருப்பிக் கொடுக்கிறவங்கதான் ரொம்ப நல்லவங்க. நம்மகிட்ட இருந்தால் நாமே திருப்பிக் கொண்டு போய் கொடுத்திடணும். கடனை அவங்க கேட்கிற மாதிரி வச்சுக்கக்கூடாது.'' ''நீ நல்லவனாப்பா?'' கண்ணப்பனுக்குக் கண்கள் பொங்கின. யார் நல்லவன் யார் கெட்டவன்? எல்லாம் நல்லபடியாக இருக்கிற போது நல்லவனாக இருக்க முடிகிறது. கொஞ்சம் தாழுகிற போது எல்லாமே மாறிப் போய் விடுகிறது. கனவிலும் நினைத்துப் பார்த்திராத வார்த்தைகள் எதிர்பாராதவர்களிடமிருந்து வருகிற போது... ஒரு வேளை கெட்டவனாகி விட்டோமோ? வாழ்க்கை கெட்டுப் போனவன் கெட்டவனா? ''நா எல்லாம் ரொம்ப நல்லவங்கப்பா... கண்டிப்பா கடனை திருப்பிக் கொடுத்திருவோம். நீ கவலைப்படாதே, என்ன கண்ணு?'' ''இல்லப்பா... கெட்டவங்கன்னா சாமி வந்து ராத்திரி கண்ணைக் குத்துமா... எங்க டீச்சர் சொன்னாங்க. அப்பா, நான் நல்லவனாப்பா?'' குழந்தையின் கேள்வியில் ஒரு கெஞ்சல் இருந்தது. உடனே பதில் தெரியாவிட்டால் கடவுள் எதிரே வேலை வைத்துக் கொண்டு கண்ணைக் குத்தக் தயாராக இருக்கிற பயத்தில் கண்கள் விரிந்திருந்தன. ''இப்பதான சொன்னேன்? நாம எல்லாம் நல்லவங்க... நீ நல்லவன், அம்மா நல்லவ, அமுதா நல்லவ...'' ''அப்புறம் ஏம்ப்பா அம்மா சும்மா என்னை கடங்காரான்னு திட்டறாங்க? நான் கடன் ஏதும் அம்மா கிட்ட வாங்கவேயில்லப்பா.'' இதைச் சொல்லும் போது அழுகை. ''அதுக்கில்லை கண்ணு... அம்மா சும்மா கோபத்தில சொல்றது அது...'' ''ஆனா நான் கடன் வாங்கவே இல்லைப்பா... நிஜமா...'' ''கடன்னா பணம்தானா? நாளைக்கு நீ பெரியவனாகி அம்மாவுக்கு வீடு, கார் எல்லாம் வாங்கிக் கொடுக்கணுமில்லை, அதுக்காகத்தான் இப்பவே சும்மா சொல்லி வச்சுக்கறா...'' அடுத்த கேள்விக்கு அவன் வாயைத் திறப்பதற்குள் வாசலில் செருப்பு சத்தம் கேட்டது. ரவியின் வாயும் அடைபட்டது. கண்ணப்பன் அவனை மடியிலிந்து இறக்கிவிட்டு, வாய்மேல் கை வைத்து, ''ஒழுங்கா இருக்கணும். என்கிட்ட வரக்கூடாது. போய் கதவைத் திறந்து விட்டுட்டு அம்மாவோட பையை வாங்கிட்டு வா...'' என்று இரகசியம் போலச் சொன்னார். ரவி இறங்கி ஓடினான். வீடு அமைதியாக இருப்பதை ஒரு சந்தேகத்தோடு பார்த்தபடியே உள்ளே வந்தாள் மல்லிகா. நேரே கண்ணப்பனிடம் போனாள். ''ரவி ஏதாவது படுத்தினானா? உங்களுக்கு உடம்பு எப்படியிருக்கு? நல்லா இருக்கீங்க இல்லை?'' என்று கேள்விகளை அடுக்கினாள். ''ம்... ஒண்ணுமில்லை... அசதியா இருக்கிற மாதிரி இருக்கு... நல்லாத்தான் இருந்தேன்... மாத்திரையெல்லாம் சரியா சாப்பிட்டேன்... ஆனா இப்ப லேசா சிரமமா இருக்கு'' என்றார். அன்றிரவு அவரால் தூங்க முடியாமல் காலில் விண்விண்ணென்று வலி. பல்லைக் கடித்துக் கொண்டு புரண்டு படுத்தார். பக்கத்தில் ரவி தூக்கத்திலேயே ''அப்பா காஜி கொடுப்பா...'' என்று முனகினான். மல்லிகா எழுந்து வலி குறைக்க மாத்திரை தந்து விட்டு, ரவி முனகுவதைப் பார்த்து ''என்ன, என்னவோ உளர்றானே'' என்றாள். அதற்கு, ''அவன் ஸ்கூல்ல கிரிக்கெட் விளையாடிட்டு வந்திருக்கான். அதைத்தான் சொல்றான்'' என்றார். அடுத்த மூன்று நாட்களும் அமுதா பள்ளிக்குப் போகவில்லை. அப்பாவுடனே இருந்தாள். மல்லிகா ஒரு நாள் விடுப்பு எடுத்து உடன் இருந்தாள். விளையாட்டு என்று சொல்லிக் கொண்டு ரவியால் அப்பாவின் கிட்டக்கூட நெருங்க முடியவில்லை. ஒரு வாரத்தில் கண்ணப்பனை மருத்துவமனையில் சேர்க்கும்படியாயிற்று. பத்தாம் நாள் கதை முடிந்தது. உடலை வீட்டுக்குக்கூட கொண்டு வராமல் மருத்துவமனையிலிருந்தே தகனத்துக்குக் கொண்டு செல்லும்படியாயிற்று. வீடு முழுக்கக் கூட்டம், உறவுக்காரர்கள் மயம், அழுகை... ஏனென்று ரவிக்குப் புரியவில்லை. எல்லோரும் இவனையல்லவா இழுத்து வைத்துக் கொண்டு அழுதார்கள்! அப்பா ஏன் வீட்டிற்கு வரவில்லை என்று தெரியவில்லை. எப்போது மருத்துவமனைக்குப் போனாலும் கொஞ்ச நாள் கழித்து கட்டுடனோ, சக்கர நாற்காலியுடனோ திரும்பி வந்துவிடுவார். இந்த முறை இன்னும் வரவில்லை. கேட்டால் ''அப்பா செத்துப் போயிட்டார். இனிமே வர மாட்டார்'' என்றுதான் எல்லோரும் சொன்னார்கள். ரவியால் அதை நம்பமுடியவில்லை. அதெப்படி அப்பா வராமல் இருப்பார்? கண்டிப்பாக வருவார். எப்போதும் அடிக்கிற அம்மாவிடம் என்னை விட்டு விட்டுப் போகவே மாட்டார். வாங்கிய கடனெல்லாம் அடைக்க வேண்டி வீட்டை செட்டியாருக்கே விற்று விட்டு, வேறு சிறு வீட்டிற்குப் போவதென்று முடிவானதும் ரவி வீட்டை விட்டு வெளியே வர முடியாதென்று அடம்பிடித்தான் ''அப்பா இந்த வீட்டுக்குத்தான் திரும்பி வருவார்... அவருக்கு வேற வீடு தெரியாது'' என்று கத்தியழுதான். கூட சேர்ந்து மற்றவர்கள் அழுதாலும் வேறு வீட்டிற்குக் கட்டாயமாகக் கொண்டுபோய் விடுவார்கள் என்று ரவிக்குத் தெரிந்தே இருந்தது. ''தூங்கும் போது தூக்கிக் கொண்டு போய் விடுவார்கள்.'' அவனுடைய கவலையெல்லாம் அப்பா திரும்பி வந்தால் அந்த வேற வீடு எங்கேயிருக்கிறது என்று யார் காட்டுவார்கள்? நான்கு தெரு தள்ளி இவன் பள்ளிக்கு அருகே இருந்த சிறு வீட்டிற்கு சுத்தம் செய்ய அமுதா போன போது இவனும் கூடப் போனான். சட்டென்று ஒரு யோசனை வந்தது. இந்தப் புது வீட்டு அடையாளத்தை எழுதி அந்தப் பழைய வீட்டில் வைத்து விட்டால் என்ன? அப்பா வந்தால் பார்த்துத் தெரிந்து கொள்வார். பள்ளியில் இருந்த போது கணக்கு நோட்டிலிருந்து பேப்பர் கிழித்த புழுக்கைப் பென்சிலை சுவரில் தேய்த்து எழுத்துக் கூட்டி, ''ஸ்கூல் கிட்ட பச்சை வீடு'' என்று நினைத்துக் கொண்டு அடித்து அடித்து எழுதி சட்டைப் பையில் வைத்துக் கொண்டான். வீட்டில் எங்கும் உடனே வைக்க முடியாதபடி வீட்டு சாமான்கள் கொஞ்சம் கொஞ்சமாக மூட்டை கட்டப்பட்டுக் கொண்டிருந்தன. செட்டியாருக்குக் கைகூப்பி சாவியைக் கொடுத்து விட்டு, சாமான்கள் எல்லாம் ஏறிப் போன மாட்டு வண்டியில் கடைசி ட்ரிப்பில் ஏறிக்கொண்ட மல்லிகாவும் அமுதாவும் ரவியை ஏறச் சொன்னபோது பெரியதாக அழுது பார்த்தான்... ''நான் வர மாட்டேன்... அப்பா வருவாரு...'' ''ஏற்கெனவே நொந்து போயிருக்கேன். நீ வேற ஏண்டா படுத்தற நாயே'' என்று இரண்டு அறை முதுகில் வைத்து வண்டியில் ஏற்றிக் கொண்டாள் மல்லிகா. வண்டி தெருத் திரும்பும் போது, யாரும் எதிர்பாராத சமயம், டக்கென்று கீழே குதித்து வீட்டை நோக்கி ஓடினான் ரவி. செட்டியார் தெரு இறங்கிப் பக்கத்து வீட்டில் நின்று பேசிக் கொண்டிருந்தார். உள்ளே ஓடியவன் தலைதெறிக்க மாடிப்படி ஏறினான்... ''அப்பா வந்தா இங்கதான் வருவார். அவருக்கு நல்லாத் தெரியும் இந்த இடம்... வேற யாரும் கண்டுபிடிக்க மாட்டாங்க... வர மாட்டாராமே... அதெப்படி? அப்பா நல்லவர்னு சொன்னாரே... கடன் வாங்கினா நாமே திருப்பிக் கொடுத்திடணும்னு சொன்னாரே... எனக்க காஜி கடன் வச்சிட்டுப் போயிருக்காரு... திருப்பிக் கொடுக்க வருவாரு... நான் இந்த வீட்டில இல்லாவிட்டாலும் இங்க வந்து பார்த்துட்டு நேரா வேற வீட்டுக்கு வருவாரு...'' என்று எண்ணங்கள் குதித்தோடி வந்தன. அப்பாவுக்கும் பிள்ளைக்கும் மட்டுமே தெரிந்த அந்த ரகசிய இடத்தில் ரகசிய விலாசக் கடிதம் ஒளித்து வைக்கப்பட்டது. ஏற்கெனவே பந்தும் மட்டையும் பின்னாலேயே ஓடி வந்த அமுதா இவன் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு போய் வண்டியில் ஏற்றினாள். ''எங்கடா போன? ஏண்டா என் உயிரை வாங்கற கடங்காரா? என்று மல்லிகா அழுது கொண்டே தப்தப்பென்று நான்கு அறை வைத்தாள் முதுகில். ஓவென்ற அழுகைக்கிடையே, ''நான் கடங்காரனில்லை, அப்பாதான் கடங்காரன்'' என்று பெரிதாக அவன் அலறியதற்குப் பிரதிபலனாக மேலும் இரண்டு மொத்து விழுந்தது.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'அப்பா... அப்பா...' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: சிறுவன், தாத்தா, பேய், சுவாமி விவேகானந்தர் தலைப்பு: துணிச்சலான சிறுவன்
விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது பழமொழி. சின்ன வயதிலேயே அந்தச் சிறுவன் மிகவும் துரு துருவென்று இருப்பான்.ஒருநாள் அவனும் அவனது நண்பர்களும் சேர்ந்து ஒரு மரத்திலே ஏறி, மரக்கிளையில் இருந்து தலை கீழாகத் தொங்கி விளையாடிக் கொண்டிருந்தார்கள். விபரீதமான இந்த விளையாட்டைப் பார்த்த அந்தப் பையனுடைய தாத்தா, பையன்கள் கீழே விழுந்தால் உயிருக்கு ஆபத்தே என்று நினைத்தார். உடனே அனைவரும் கீழிறங்கி வாருங்கள் என்று சப்தம் போட்டார். அவர்கள் வந்ததும்," இந்த மரத்திலே ஒரு பேய் இருக்கிறது. இப்படி மரத்தில் ஏறி விளையாடினால் அது உங்கள் அடித்துக் கொன்றுவிடும். அதனால் மரத்தில் ஏறாமல் கீழேயே விளையாடுங்கள்" என்று பயமுறுத்தினார். இதைக் கேட்டு எல்லா சிறுவர்களும் பயந்துவிட்டார்கள். நமது சுட்டிப் பையனும் சரி சரி என்று தலையை ஆட்டினான். ஆனால், அவர் அந்தப் பக்கம் போனதும், மறுபடியும் மரத்திலே ஏற ஆரம்பித்தான். அவனது நண்பர்கள், "ஐயையோ…ஏறாதே….பேய் உன்னை அடித்துவிடும்" என்று கத்தினார்கள்." இந்த மரத்திலே பேய் இருக்கிறதாக தாத்தா சொன்னார்…சரிதான். ஆனாலப்படிப் பேய் இருந்திருந்தால் இன்னேரத்துக்கு அது நம்மை அடித்துக் கொன்றிருக்கும். தாத்தா சும்மா நம்மைப் பயமுறுத்தியுள்ளார்." என்று சிறுவர்களுக்குப் பதில் கூறினான். அதற்கு மற்ற சிறுவர்கள்," அது சரி…உன் தாத்தா சொன்னபோது…சரி என்று தலையை ஆட்டினாயே…அது ஏன்?" என்று கேட்டதற்கு, "எதிர்த்துப் பேசினால் அவர் மனது கஷ்டப்படுமே. அதனால் தான் அவரை சமாதானப்படுத்த சரி என்றேன்". குழந்தைகளா, மரத்தில் ஏறிய அந்தப் பையன் யார் தெரியுமா?….. எண்ணற்ற இளைஞர்களுக்கு வழிகாட்டியாக விளங்கும் சுவாமி விவேகானந்தர்தான், அந்தச் சிறுவன். அதோ படத்தில் இருக்கிறார் தானே, அவரே தான். அவரைப் பற்றி நிறைய கதைகல் இருக்கின்றன, விரைவில் சொல்கிறேன்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: வாழ்க்கை ஒரு விந்தை. ஆனால் அதை ஒரு பிரச்சினையாக நம்மால் மாற்றிவிட முடியும். ஒரு விந்தையை ஒரு பிரச்சினையாக ஆக்கியவுடன் சிக்கல் தொடங்கிவிடும். ஏனெனில் அதற்குத் தீர்வு கிடையாது. ஒரு விந்தை விந்தையாகவே இருக்கிறது; அது தீர்க்க முடியாதது. அதனால்தான் அதை விந்தை என்கிறோம். வாழ்க்கை பிரச்சினைக்குரிய ஒன்றல்ல. நாம் செய்யும் அடிப்படைத் தவறுகளில் ஒன்று இது. நாம் உடனடியாக ஒரு கேள்விக்குறியைப் போட்டுவிடுகிறோம். ஒரு விந்தைக்கு முன்பாகக் கேள்விக்குறியை வைத்துவிட்டால், வாழ்க்கை முழுக்க அதற்கான பதிலைத் தேடிக்கொண்டிருக்க வேண்டும். அது கிடைக்கவும் போவதில்லை. அது மிகுந்த விரக்தியையும் கொண்டுவரும். அதனால் எதையும் பிரச்சினையாக ஆக்காமல் சந்தோஷமாக இருங்கள். எதனையும் சொந்தம் கொண்டாடாமல் இருப்பது வாழ்க்கையின் மகத்தான அனுபவங்களில் ஒன்று. எதிலும் பட்டுக்கொள்ளாமல் இருப்பதும், எதன் அங்கமாகவும் உணராமல் இருப்பதும் கடந்துபோகும் பேருணர்வைத் தருவதாகும். ஒரு அமெரிக்க சுற்றுலாப் பயணி தனக்கு விருப்பமான சூபி துறவியைச் சந்திக்கச் சென்றார். பல ஆண்டுகளாக அவருடைய செய்திகளால் அவர் வசீகரிக்கப்பட்டிருந்தார். சூபி துறவியின் அறைக்குள் நுழைந்தார். அறைக்குள் நுழைந்த அவருக்கோ பெரும் வியப்பு. அந்த அறை முற்றிலும் காலியாக இருந்தது! சூபி துறவி அறையின் மூலையில் உட்கார்ந்திருந்தார். அங்கே அறைகலன்கள் எதுவும் இல்லை. ஒரு அமெரிக்கரால் நாற்காலிகள் இல்லாத அறையைக் கற்பனையே செய்ய இயலாது. “இங்கே உட்கார்வதற்கு ஒரு அறைகலன்கூட இல்லையே?” என்றார் அமெரிக்கப் பயணி. அந்த வயதான துறவி சிரித்துக்கொண்டே, உன்னுடையது எங்கே? என்று கேட்டார். “நான் இங்கே பயணியாக அல்லவா வந்தேன். நான் எப்படி நாற்காலியை எடுத்துவர முடியும்” என்று கேட்டார். சூபி துறவி பதிலளித்தார். “நானும் இங்கே சில நாட்களுக்குப் பயணியாகவே வந்துள்ளேன். அதற்குப் பிறகு போய்விடுவேன். உன்னைப் போலவே” என்றார். இந்த உலகம் சிறந்த யாத்திரைத் தலம். அவ்வளவுதான். சொந்தம் கொண்டாடுவதற்குரிய இடம் அல்ல. கபீர் சொல்வது போல தாமரை இலையாக இரு.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'நானும் ஒரு பயணிதான்' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: ஓர் ஊரில் உழவன் ஒருவன் இருந்தான். அவன் பெரிய மீசையுடன் பார்ப்பதற்குப் பயங்கரமாக இருந்தான். உழுவதற்காக அவன் வைத்திருந்த கலப்பை உடைந்து விட்டது. புதிய கலப்பை செய்வதற்கு மரம் வெட்டுவதற்காகப் பக்கத்திலிருந்த காட்டுக்குள் நுழைந்தான் அவன். அங்கிருந்த பெரிய மரம் ஒன்றைத் தேர்ந்து எடுத்தான். "நல்ல வைரம் பாய்ந்த மரம். இதில் கலப்பை செய்தால் நீண்ட காலம் உழைக்கும்" என்று சொல்லிக் கொண்டே கோடரியால் உதை வெட்டத் தொடங்கினான். அந்த மரத்தில் நிறைய பேய்கள் குடி இருந்தன. அந்த மரத்தை வெட்டுவதைக் கண்டு அவை பயந்து நடுங்கின. மரத்தை விட்டுக் கீழே இறங்கிய எல்லாப் பேய்களும் அவன் காலில் விழுந்தன. பேய்களைக் கண்ட அவனுக்கு அச்சத்தால் மூச்சே நின்று விடும் போல இருந்தது. என்ன நடக்கப் போகிறதோ என்று நடுங்கியபடியே இருந்தான். கிழப்பேய் ஒன்று, "ஐயா! இந்த மரத்தில் நாங்கள் பரம்பரையாக வாழ்ந்து வருகிறோம். எதற்காக இதை வெட்டுகிறீர்கள்? எங்களுக்கு வாழ்வு கொடுங்கள்" என்று கெஞ்சியது. இதைக் கேட்டதும் அவனுக்குப் போன உயிர் திரும்பி வந்தது. தன் நடுக்கத்தை மறைத்துக் கொண்டான். பேய்களைப் பார்த்து அதிகாரக் குரலில், "நிலத்தில் எள் விதைக்க வேண்டும் புதிய கலப்பை செய்வதற்காக இந்த மரத்தை வெட்டுகிறேன். நீங்கள் என் காலில் விழுந்ததால் பிழைத்தீர்கள். இல்லையேல் உங்களை எல்லாம் ஒழித்து இருப்பேன். என் வீட்டுத் தோட்டத்தில் பத்துப் பேய்களைக் கட்டி வைத்து இருக்கிறேன்" என்று கதை அளந்தான் அவன். "ஐயா! மரத்தை வெட்டாதீர்கள். நாங்கள் வேறு எங்கே போவோம்? எங்கள் மீது இரக்கம் காட்டுங்கள்" என்று எல்லாப் பேய்களும் அவன் காலைப் பிடித்துக் கொண்டு அழுதன. "கலப்பை இல்லாமல் நான் என்ன செய்வேன்? என்னிடம் இரக்கத்தை எதிர்பார்க்காதீர்கள். மரத்தை வெட்டியே தீருவேன்" என்றான் அவன். கிழப்பேய் அவனைப் பார்த்து, "ஐயா! உங்கள் நிலத்தில் ஓராண்டிற்கு எவ்வளவு எள் விளைகிறது?" என்று கேட்டது. "ஐம்பது மூட்டை எள்?" என்றான் அவன். "ஆண்டிற்கு நூறு மூட்டை எள் நாங்கள் தருகிறோம். இந்த மரத்தை வெட்டாதீர்கள்" என்று கெஞ்சியது அது. உங்கள் மீது இரக்கப்பட்டு இந்த மரத்தை வெட்டாமல் விடுகிறேன். ஒவ்வோர் ஆண்டும் அறுவடை நேரத்தில் நூறு மூட்டை எள் வந்தாக வேண்டும். வரத் தவறினால் இந்த மரத்தை வெட்டுவதோடு நிற்க மாட்டேன். உங்களையும் அழித்து விடுவேன்" என்றான் அவன். "எங்கள் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி. நாங்கள் சொன்ன சொல் தவற மாட்டோம்" என்றது அந்தப் பேய். மகிழ்ச்சியுடன் அவனும் வீடு வந்து சேர்ந்தான். அறுவடைக் காலம் வந்தது. பல இடங்களில் விளைந்த எள்ளைப் பேய்கள் திருடின. எப்படியோ நூறு மூட்டை எள்ளைச் சேர்த்து அவனிடம் கொண்டு வந்தன. பேய்களைப் பார்த்து அவன், "சொன்னபடியே எள் கொண்டு வந்து இருக்கிறீர்கள். என்னை ஏமாற்ற முயன்றால் நான் பொல்லாதவனாகி விடுவேன். ஆண்டு தோறும் இப்படியே வர வேண்டும்" என்று மிரட்டி அவற்றை அனுப்பி வைத்தான். நடுங்கியபடியே பேய்கள் அங்கிருந்து சென்றன. சில நாட்கள் கழிந்தன. புதுப்பேய் என்ற பெயருடைய பேய் தன் உறவினர்களைப் பார்க்க அங்கு வந்தது. எல்லாப் பேய்களும் இளைத்துத் துரும்பாக இருப்பதைக் கண்டது அது. "சென்ற ஆண்டு உங்களைப் பார்த்தேன். மகிழ்ச்சியாக இருந்தீர்கள். இன்றோ மெலிந்து சோகத்துடன் காட்சி அளிக்கிறீர்கள். என்ன நடந்தது? சொல்லுங்கள்" என்று கேட்டது அது. நடந்தது அனைத்தையும் சொன்னது ஒரு பேய். "நூறு மூட்டை எள்ளைத் தேடி அலைவதிலேயே எங்கள் காலம் கழிகிறது" என்று எல்லாப் பேய்களும் வருத்தத்துடன் சொல்லின. புதுப்பேயால் சிரிப்பை அடக்க முடியவில்லை. "நீங்கள் இவ்வளவு முட்டாள்களா? நாம் பேய்கள் அல்லவா? நமக்குத்தான் மனிதர்கள் பயப்பட வேண்டும். நாம் அவர்களுக்குப் பயப்படலாமா?" என்று கேட்டது. "அவன் சாதாரண மனிதன் அல்ல. எத்தனையோ பெரிய பேய்களை வீட்டில் கட்டி வைத்து இருக்கிறான். எதற்கும் அஞ்சாத முரடன். அதனால்தான் நூறு மூட்டை எள் தர ஒப்புக் கொண்டோம்" என்றது ஒரு பேய். "போயும் போயும் ஒரு மனிதனுக்கா அஞ்சுகிறீர்கள்? வெட்கம்! வெட்கம்! இன்றே அவனைக் கொன்றுவிட்டுத் திரும்புகிறேன்" என்று புறப்பட்டது புதுப்பேய். "வேண்டாம். நாங்கள் சொல்வதைக் கேள். நீ அவனிடம் மாட்டிக் கொண்டு துன்பப்படப் போகிறாய்" என்று எச்சரித்தன மற்ற பேய்கள். உழவனின் வீட்டிற்குச் சென்றது புதுப்பேய். வாய்ப்பை எதிர்பார்த்து மாட்டுத் தொழுவத்தில் பதுங்கி இருந்தது அது. வெளியூரில் இருந்து வாங்கி வந்த பல மாடுகள் அங்கே கட்டப்பட்டு இருந்தன. புதுப்பேய் என்ற ஊரில் வாங்கிய மாடும் அவற்றுள் ஒன்று. அது முரட்டு மாடாக இருந்தது. புதிய மாடுகளுக்கு அடையாளம் தெரிவதற்காக சூடு வைக்க நினைத்தான் அவன். தன் வேலைக்காரனைப் பார்த்து, "டேய்! அந்தப் புதுப்பேயை இழுத்து வந்து கட்டு. பழுக்கக் காய்ச்சிய இரும்புத் துண்டால் பெரிய சூடு போட வேண்டும். வெளியூர் என்பதால் நம்மைப் பற்றித் தெரியாமல் ஆட்டம் போடுகிறது. சூடு போட்டவுடன் அதுவும் இங்குள்ளவை போல ஆகிவிடும். ஒழுங்காகப் பணிந்து நடக்கும்" என்று உரத்த குரலில் கத்தினான் அவன். பதுங்கி இருந்த புதுப்பேய் இதை கேட்டு நடுங்கியது. "ஐயோ! எல்லாப் பேய்களும் தடுத்தனவே! என் ஆணவத்தால் அவற்றை மீறி வந்தேனே! பெரிய மீசையுடன் இருக்கும் இவனைப் பார்த்தாலே பயமாக இருக்கிறதே. சிறிதும் இரக்கம் இல்லாதவன் போலத் தோன்றுகிறான். நாம் நன்றாக மாட்டிக் கொண்டோம். தப்பிக்க வழியே இல்லை. நமக்குப் பெரிய சூடு போடத்தான் போகிறான். என்ன செய்வது?" என்று குழம்பியது அது. மாட்டைக் கட்டுவதற்காக உழவன் பெரிய கயிற்றுடன் வந்தான். அவன் கால்களில் விழுந்த புதுப்பேய், "ஐயா! என்னை மன்னித்து விடுங்கள். தெரியாமல் நான் இங்கே வந்து விட்டேன். எனக்குச் சூடு போட்டு விடாதீர்கள்" என்று கெஞ்சியது. தன் நடுக்கத்தை மறைத்துக் கொண்ட அவன், "என் எதிரில் வர உனக்கு என்ன துணிச்சல்? உன்னை என்ன செய்கிறேன் பார்?" என்று கோபத்துடுன் கத்தினான். இவனிடமிருந்து எப்படித் தப்பிப்பது என்று சிந்தித்தது அது, "எல்லாப் பேய்களும் என்னை உங்களிடம் அனுப்பி வைத்தன" என்று பொய் சொன்னது. "எதற்காக அனுப்பினார்கள்? உண்மையைச் சொல். இல்லையேல் உன்னைத் தொலைத்து விடுவேன்" என்று இடிக்குரலில் முழங்கினான் அவன். "பேய்கள் உங்களுக்கு ஆண்டுதோறும் நூறு மூட்டை எள் தருகின்றன. நீங்கள் அவற்றை எண்ணெய் ஆக்குவதற்காக ஏன் துன்பப்பட வேண்டும்?" எள்ளுக்குப் பதில் நூறு பீப்பாய் எண்ணெய் தருவதாக அவை முடிவு எடுத்தன. உங்களுக்கு எள் வேண்டுமா? எண்ணெய் வேண்டுமா? இதைத் தெரிந்து வருவதற்காக என்னை அனுப்பி வைத்தன. உங்களுக்கு என்ன வேண்டும்? சொல்லுங்கள்" என்று நடுங்கியபடியே கேட்டது அது. "இனிமேல் எனக்கு எள் வேண்டாம். எண்ணெயாகவே தாருங்கள். ஏதேனும் தவறு நடக்குமானால் உங்கள் அனைவரையும் தொலைத்து விடுவேன். ஓடு." என்று விரட்டினான் அவன். எப்படியோ தப்பித்தோம் என்று ஒரே ஓட்டமாக ஓடியது அது. மூச்சு வாங்கக் காட்டை அடைந்தது. அதன் நிலையைப் பார்த்த மற்ற பேய்களும் என்ன நடந்திருக்கும் என்பது புரிந்தது. "என்ன புதுப்பேயே? வீரம் பேசிவிட்டுச் சென்றாயே? அவனைக் கொன்று விட்டாயா?" என்று கேலியாகக் கேட்டது ஒரு பேய். "உங்கள் பேச்சைக் கேட்காதது தப்புதான். முரடனான அவனிடம் நான் நன்றாகச் சிக்கிக் கொண்டேன். எனக்குப் பெரிய சூடு வைத்து இருப்பான். அதை இப்பொழுது நினைத்தாலும் என் உள்ளம் நடுங்குகிறது" என் அறிவு வேலை செய்தது. எப்படியோ அவனிடம் இருந்து தப்பி விட்டேன்? என்றது புதுப்பேய். "அவன் பெரிய ஆளாயிற்றே! அவனிடம் என்ன சொல்லித் தப்பினாய்?" என்று கேட்டது ஒரு கிழப் பேய். "நூறு மூட்டை எள்ளாகத் தருவதா? அல்லது நூறு பீப்பாய் எண்ணெயாகத் தருவதா? என்று கேட்டு வர நீங்கள் அனுப்பியதாகச் சொன்னேன். அவனும் இனிமேல் நூறு பீப்பாய் எண்ணெயே தருமாறு கட்டளை இட்டான்" என்று நடந்ததைச் சொன்னது புதுப்பேய். "என்ன காரியம் செய்துவிட்டாய். நூறு மூட்டை எள்ளைக் கொடுத்துவிட்டு நிம்மதியாக இருந்தோம் இனிமேல் நூறு பீப்பாய் எண்ணெய் தருவதாகச் சொல்லி விட்டு வந்திருக்கிறாய். அவ்வளவு எண்ணெயைச் சேர்ப்பதற்காக நாங்கள் தூக்கம் இல்லாமல் துன்பப்பட வேண்டும். நாங்கள் தடுத்தும் நீ கேட்கவில்லையே. இனி என்ன செய்வது" என்று வருத்தத்துடன் புலம்பின அங்கிருந்த பேய்கள். எல்லாப் பேய்களும் தங்கள் தலைவிதியை நொந்து கொண்டன. ஆண்டுதோறும் உழவனுக்கு நூறு பீப்பாய் எண்ணெயைத் தந்து வந்தன. 'தன் அறிவுக்கூர்மை தன்னைக் காப்பாற்றியது. உழைக்காமலேயே வளமாக வாழும் வாய்ப்பும் வந்தது' என்று மகிழ்ந்தான் அவன்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'எள்ளு போச்சு! எண்ணெய் வந்தது!' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: அரசன், நாடு, புலி, துறவி, பறவைகள், விலங்கு, ஆற்றல், அரண்மனை, காடு தலைப்பு: விலங்குகள் பேசுவது புரிந்தால்
முன்னொரு காலத்தில் ஒரு நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். ஒருசமயம், காட்டு வழியாகச் சென்றான் அவன். அங்கே புலியிடம் சிக்கிக் கொண்டிருந்த துறவி ஒருவரைக் காப்பாற்றினான். மகிழ்ந்த துறவி, பறவைகள், விலங்குகள் என்ன பேசினாலும் இன்றுமுதல் உனக்குக் கேட்கும், இப்படிப்பட்ட ஆற்றல் உனக்குக் கிடைத்திருக்கிறது என்ற உண்மையை யாரிடமும் சொல்லக் கூடாது. அப்படிச் சொன்னால் தலை வெடித்து நீ இறந்து விடுவாய். போய் வா, என்றான். துறவியை வணங்கிவிட்டு அரண்மனைக்குப் புறப்பட்டான் அவன். வழியில் இருந்த விலங்குகள் பறவைகள் பேசிக் கொள்வது அவனுக்குத் தெளிவாகக் கேட்டது. தற்செயலாகக் கிடைத்த விந்தையான ஆற்றலை எண்ணி மகிழ்ந்தான் அவன். இரவு நேரம், அவனும் அரசியும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள், அப்பொழுது சிறிதளவு தேனும் ஒரு உருண்டை சோறும் தவறித் தரையில் விழுந்தன. அங்கிருந்த எறும்பு ஒன்று, ஓடி வாருங்கள், கூட்டமாக ஓடி வாருங்கள், நமக்கு இனி உணவுப் பஞ்சமே இல்லை. அரண்மனை மதுக் குடம் உடைந்து தேன் வெள்ளமாகப் பாய்கிறது. பெருஞ்சோற்று மலையே நமக்காகக் கிடக்கிறது, என்று உரத்த குரலில் தன் கூட்டத்தை அழைத்தது. இதைக் கேட்ட அரசன், இரண்டு சொட்டு தேன், தேன் வெள்ளமா? ஒரு உருண்டை சோறு பெருஞ்சோற்று மலையா? இந்த எறும்பிற்கு அறிவே இல்லையா? இப்படியா வருணிப்பது? என்று நினைத்தான், அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை. தன்னை மறந்து கலகலவென்று சிரித்தான் அவன். அருகிலிருந்த அரசி, ஏன் சிரிக்கிறீர்கள்? என்று கேட்டாள். ஒன்றும் இல்லை, என்று மழுப்பினான் அவன். சாப்பிட்டு முடித்த அரசன் பட்டு மெத்தையில் படுத்தான். அரசி வெற்றிலை பாக்கு மடித்துத் தந்து கொண்டிருந்தாள். அறையில் இனிய மணம் பரவியது. அங்கிருந்த ஆண் ஈ ஒன்று, பெண் ஈயை அழைத்து, எவ்வளவு இனிய சூழல் வா! நாம் இருவரும் அரசனின் முதுகில் இருந்து ஓடியாடி விளையாடுவோம். மகிழ்ச்சியா இருப்போம். இதைப் போன்ற நல்வாய்ப்பு யாருக்குக் கிடைக்கும்? என்றது. என் முதுகு இந்த ஈக்களுக்கு மெத்தையா? என்று நினைத்தான் அரசன். அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை. மீண்டும் கலகலவென்று சிரித்தான். ஏன் சிரிக்கிறீர்கள், என்று கேட்டாள் அரசி. ஒன்றும் இல்லை, என்று வழக்கம் போல மழுப்பினான் அவன். உண்மையைச் சொல்லுங்கள். என்னிடம் எதையோ மறைக்கிறீர்கள்? நீங்கள் சொல்லாவிட்டால் நான் இனிமேல் உங்களுடன் பேச மாட்டேன். என் மீது உயிரையே வைத்திருப்பதாக நீங்கள் சொன்னதெல்லாம் நடிப்பு, என்று கோபத்துடன் சொன்னாள் அவள். என் உயிருக்கும் மேலாக நான் உன்னிடம் அன்பு வைத்திருக்கிறேன். நான் சிரித்ததற்கான காரணம் மட்டும் கேட்காதே என்றான் அவன். நீங்கள் சொல்லித்தான் ஆக வேண்டும், என்று வற்புறுத்தினாள் அவள். உண்மையைச் சொன்னால் என் உயிர் போய்விடும், என்றான் அவன். அதெல்லாம் எனக்குத் தெரியாது. நீங்கள் சிரித்ததற்கான காரணம் எனக்குத் தெரிய வேண்டும், என்று அடம்பிடித்தாள் அவள். என்ன செய்தாலும் தன் மனைவியைச் சமாதானப் படுத்த முடியாது என்று உணர்ந்தான் அவன். என் உயிரைவிட உனக்கு நான் சிரித்ததற்கான காரணம் தெரிய வேண்டும். நாளை மாலையில் உனக்கு அந்த உண்மையைச் சொல்கிறேன். அப்படியே என் பிண ஊர்வலத்துக்கும் ஏற்பாடு செய்து வை. என்று வருத்தத்துடன் சொன்னான் அவன். பொழுது விடிந்தது. வழக்கம் போல அரண்மனைத் தோட்டத்தில் உலாவ வந்தான் அவன். மாலையில் இறக்கப் போகிறோம் என்ற எண்ணத்தில் சோகமாக இருந்தான். அரண்மனை முழுவதையும் அரசன் இறக்கப் போகும் செய்தி பரவி இருந்தது. உலாவிக் கொண்டிருந்த அவன் பின்னால் வளர்ப்பு நாய் சோகமாக வந்து கொண்டிருந்தது. சிறிது தூரத்தில் அரண்மனைச் சேவல் பெட்டைக் கோழிகள் சூழ ஆரவாரமாக உலாவிக் கொண்டிருந்தது. இதைப் பார்த்த நாயால் கோபத்தை அடக்க முடியவில்லை. ஏ! சேவலே! உனக்குச் சிறிது கூட நன்றி கிடையாதா? நமக்கு இவ்வளவு காலம் உணவு அளித்துக் காப்பாற்றியவர் இந்த அரசர். இன்று மாலை இவர் இறக்கப் போகிறார். எல்லோரும் சோகமாக இருக்கின்றனர். இந்தச் சூழலில் நீ மகிழ்ச்சியாக இருக்கிறாயே? இது நியாயமா? என்று கேட்டது. அதற்குச் சேவல், நம் அரசர் பெரிய முட்டாள். அவருக்கு இருப்பது ஒரே ஒரு மனைவி. அவளுக்காக உயிரைவிடத் துணிந்துள்ளார். எனக்கு எத்தனை மனைவிகள் இருக்கிறார்கள் நீயே பார். என் பேச்சைக் கேட்டுத்தான் அவர்கள் நடக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களுக்குத் தண்டனை தருவேன். மனைவிக்காக இந்த அருமையான உயிரை நான் இழக்க மாட்டேன், என்று பதில் சொன்னது. இந்தச் சிக்கலிலிருந்து அரசர் உயிர் பிழைக்க வழி இருக்கிறதா? என்று கேட்டது நாய். அரசர் மட்டும் அரசியிடம் உன்னைச் சவுக்கால் நூறு அடி அடிப்பேன். அதன் பிறகுதான் உண்மையைச் சொல்வேன் என்று சொல்லட்டும். எல்லாம் நல்லபடியாக நடக்கும், என்றது சேவல். நாயும் சேவலும் பேசிக் கொண்டிருந்ததை ஒன்று விடாமல் கேட்டான் அரசன். அரண்மனை திரும்பினான் அவன். மாலை நேரம் வந்தது. அவன் அருகே வந்த அரசி, இப்பொழுது உண்மையைச் சொல்கிறீர்களா? என்று கேட்டாள். நீ முதலில் சவுக்கால் நூறு அடி பெற வேண்டும். அதன்பிறகு நான் உண்மையைச் சொல்லிவிட்டு இறந்து விடுவேன், என்றான் அரசன். நான் சவுக்கடி பெற்றுக் கொள்கிறேன். எப்படியும் உண்மை தெரிந்தாக வேண்டும், என்றாள் அவன். அறைக்குள் அவளை அழைத்துச் சென்றான் அரசன். கையில் சவுக்கை எடுத்த அவன் அவளை ஒங்கி அடித்தான். பத்து அடியைக் கூட அவளால் தாங்க முடியவில்லை. மென்மையான அவளுடைய உடலிலிருந்து குருதி கசியத் தொடங்கியது. ஐயோ! போதும் அடிப்பதை நிறுத்துங்கள். உங்கள் உண்மையும் வேண்டாம். சவுக்கடியும் வேண்டாம், என்று அலறினாள் அவள். சவுக்கால் அடிப்பதை நிறுத்தினான் அவன். அதன்பிறகு இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: முன்கோபக்காரப் பையன், அப்பா, கிராம மக்கள் தலைப்பு: நாவினால் சுட்ட வடு
ஒரு முன்கோபக்காரப் பையன் இருந்தான். முணுக்கென்றால் அவனுக்குக் கோபம் வரும். கோபம் வந்தால் தலைகால் தெரியாமல் வாய்க்கு வந்த படி வயது வரம்பில்லாமல் எல்லோரையும் பேசி விடுவான். பின்னர் அவர்களிடம் வருத்தப் படுவான். நாளடைவில் அவனை சுற்று வட்டாரத்தில் பலருக்கு இதனாலேயே பிடிக்காமல் போனது. அவனைத் தவிர்க்க ஆரம்பித்தார்கள். பையனுக்குத் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றினாலும் எப்படி என்றுதான் தெரியவில்லை. அவனுடைய அப்பா பொறுத்துப் பொறுத்து பார்த்து விட்டு ஒரு நாள் அவனிடம் ஒரு வாளி நிறைய ஆணிகளையும் ஒரு சுத்தியலையும் கொடுத்தார். ஒவ்வொரு முறை ஆத்திரப் படும் போதும் சம்பந்தப் பட்டவர்களைத் திட்டுவதைத் தவிர்த்து விட்டு வீட்டுக்குப் பின்னால் உள்ள மர வேலியில் ஒரு ஆணியை ஆத்திரம் தீரும் வரை அறைந்து ஏற்றி விடும் படி அறிவுரைத்தார். முதல் நாள் வேலியில் சுமார் 50 ஆணிகளை அறைந்து ஏற்றினான். நாட்கள் செல்லச் செல்ல அவனைக் கோபமூட்டுபவர்கள் முன் வன்மையாகப் பேசுவதைக் கட்டுப் படுத்தக் கற்றுக் கொண்டான். கோபம் வந்தால்தான் உடனே ஆணி அடிக்கப் போக வேண்டுமே! நாளடைவில் வாளியையும் சுத்தியலையும் எடுத்துக் கொண்டு வேலிப் பக்கம் போகுமுன் கோபவெறி குறைந்து போய், வேலியில் ஆணி அறைவது குறையத் தொடங்கியது. சில நாட்களில் வேலியில் ஆணி அடிக்க வேண்டிய தேவையே அவனுக்கு இருக்கவில்லை. அப்பாவிடம் போய் விபரத்தைச் சொன்னான். அவர் உள்ளுக்குள் மகிழ்ச்சியடைந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் அவனிடம் ஒரு ஆணி பிடுங்கும் கருவியைக் கொடுத்து வேலியில் அவன் அடித்த ஆணிகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கச் சொன்னார். அனைத்தையும் பிடுங்க் அவனுக்கு முழுதாக ஒரு நாள் பிடித்தது. எல்லா ஆணியையும் பிடுங்கிய பிறகு அப்பாவும் மகனும் வேலியை பார்க்கப் போனார்கள். அப்பா வேலியில் ஆணிகளைப் பிடுங்கிய இடத்தில் இருந்த வடுக்களை மகனுக்குக் காட்டி "கோபம் வந்தால் அறிவிழந்து சொல்லும் சுடுசொல்லும் இந்த ஆணியைப் போலத்தான். ஆணியைப் பிடுங்குவது போல் நீ பேசியதற்கு மன்னிப்புக் கேட்டாலும், அந்த சொல் தைத்த இடத்தில் உள்ள வடு இந்த ஆணி ஏற்படுத்திய வடுவைப் போலவே மறைவது மிகக் கடினம்" என்று அவனுக்கு எடுத்துக் கூறினார். மகனும் கருத்தை நன்றாக உணர்ந்து திருந்தி ஊர் போற்றும் வகையில் வளர்ந்து வாழ்க்கையில் வெற்றிகள் பல பெற்றான்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: தன்னுடைய தர்பாருக்கு விசாரணைக்காக வரும் வழக்குகளில் பலவற்றை அக்பர் பீர்பாலிடம் ஒப்படைப்பதுண்டு. ஒருநாள், அக்பரின் அனுமதியுடன் தர்பாருக்கு வந்த மதுசூதன் என்ற வியாபாரி அவரை வணங்கியபின், “பிரபு! என் பெயர் மதுசூதன்! நான் ஒரு நெய் வியாபாரி! ஒரு மாதத்திற்கு முன் அஸ்லாம்கான் எனும் என் நண்பன் என்னிடம் வந்து 20 முகராக்கள் கடன் கேட்டான். பதினைந்து நாள் களுக்குள் திருப்பித் தருவதாகச் சொன்னவன் இதுவரை அதைத் திருப்பித் தரவேயில்லை” என்றார். “நீ கொடுத்த கடனுக்கு அவனிடம் இருந்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கியிருக்கிறாயா?” என்று அக்பர் கேட்டார். “அஸ்லாம்கானை எனக்கு இருபது வருடங்களாகத் தெரியும். அதனால் கடன் பத்திரத்தில் கையெழுத்து வாங்கவில்லை. ஆனால் நான் சொல்வது உண்மை!” என்றார். உடனே பீர்பாலின் பக்கம் திரும்பிய அக்பர், “பீர்பால்! இந்த வழக்கை நீ கவனிக்கிறாயா?” என்று கேட்டார். அதற்குச் சம்மதித்த பீர்பால் மாலையில் மதுசூதனைத் தன் வீட்டில் சந்திக்கச் சொன்னார். மாலையில் மதுசூதன் வீட்டிற்கு வந்ததும், அவரை நடந்தவற்றை மீண்டும் விளக்கச் சொன்னார். அவர் சொன்னதெல்லாம் கேட்டபிறகு, “ஆக, நீங்கள் அஸ்லாமுக்குக் கடன் கொடுத்ததற்கு அத்தாட்சி எதுவும் இல்லை. சாட்சிகளும் இல்லை” என்றார் பீர்பால். அதற்கு மதுசூதன், “ஆமாம்!” என்றார். அவருக்கு தைரியமளித்து அனுப்பியபின், பீர்பால் அஸ்லாம் கானைத் தன்னை சந்திக்கும்படி தகவல் அனுப்பினார். சற்று நேரத்தில் நல்ல உடை அணிந்த வாட்டசாட்டமான ஓர் ஆள் பீர்பாலைத் தேடி வந்தார். “நான் தான் அஸ்லாம்கான்! என்னை வரச் சொன்னீர்களாமே!” என்றார். “உங்களைத் தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும். உங்கள் மீது ஒருவர் புகார் கொடுத்திருக்கிறார். அதைப்பற்றி உங்களை விசாரிக்க வேண்டும்” என்றார் பீர்பால். “என் மீது புகாரா? நான் மிகவும் நாணயமானவன்! என் மீது புகார் வர சிறிதும் வாய்ப்பு இல்லையே!” என்றான் அஸ்லாம். மதுசூதன் அவர் மீது தொடுத்து உள்ள வழக்கைப்பற்றி பீர்பால் விவரித்ததும், “நான் ஏன் அவரிடம் இருந்து கடன் வாங்க வேண்டும்? எனக்கு ஏராளமாக சொத்து இருக்கிறது. நெய் வியாபாரத்தில் நல்ல லாபமும் சம்பாதிக்கிறேன். மதுசூதன் என் மீது வீணாகப் பழி சுமத்துகிறான்” என்றான் அஸ்லாம். “இருக்கலாம்! ஆனால் வழக்கு என்று வந்து விட்டபின் அதை நன்கு விசாரிக்க வேண்டியிருக்கிறது” என்றார் பீர்பால். “அல்லா எனக்கு ஏராளமான செல்வத்தை வழங்கி இருக்கிறார். எனக்கு யாரிடமும் கடன் வாங்க வேண்டிய அவசியம் இல்லை” என்று அஸ்லாம் அடித்துக் கூறினார். உடனே பேச்சை மாற்றிய பீர்பால், “அஸ்லாம்! உங்களால் எனக்கு ஓர் உதவி செய்ய முடியுமா?” என்றார். “சொல்லுங்கள்” என்று அஸ்லாம் கூற, “கிராமத்திலுள்ள என் நண்பனிடம் எனக்கு ஒரு டின் நெய் அனுப்பச் சொன்னேன். அவன் இரண்டு டின் அனுப்பி விட்டான். ஒரு டின் நெய்யை எங்காவது விற்று விட்டால் நல்லது” என்றார் பீர்பால். “அதை என்னிடம் கொடுங்கள். அதை விற்றுப் பணத்தை உங்களுக்கு அனுப்புகிறேன்” என்றான் அஸ்லாம். “நன்றி! நாளைக்கே உங்கள் கடைக்கு ஒரு டின் அனுப்பி வைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு பீர்பால் அவரை அனுப்பி வைத்தார். மறுநாள், மதுசூதன் வீட்டுக்குச் சென்ற பீர்பால், அஸ்லாம்கானிடம் கூறியதுபோல் கூறிவிட்டு நெய்யை விற்றுத்தரமுடியுமா என்று கேட்டார். மதுசூதனும் அதற்கு ஓப்புக் கொண்டதும், இரண்டு பேர் கடைக்கும் இரண்டு நெய் டின்கள் அனுப்பப்பட்டன. மறுநாள் பீர்பால் தன் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கையில், மதுசூதன் மூச்சிரைக்க ஓடிவந்தார். “பீர்பால்! நீங்கள் அனுப்பியிருந்த டின்னில் ஒரு பொற்காசு இருந்தது. அதைக் கொடுக்க வந்தேன். நெய் விற்ற பணம் இதோ!” என்று அவர் மொத்தத்தையும் பீர்பாலிடம் தந்தார். “அட! நான் அனுப்பிய டின்னில் பொற்காசு இருந்ததா? நான் மிகவும் அதிருஷ்டசாலி! நன்றி, மதுசூதன்” என்றார் பீர்பால். “அதிருக்கட்டும். என்னுடைய வழக்கு என்ன ஆயிற்று?” என்று மதுசூதன் கேட்க, “அதுவா! நான் விசாரணை நடத்திக் கொண்டு இருக்கிறேன். நாளைக்கு முடிவு தெரியும்” என்றார் பீர்பால். அடுத்த நாள் பீர்பால் வீட்டுக்கு வந்த அஸ்லாம் “உங்களுடைய நெய் விற்ற பணம் இதோ!” என்று பணத்தை அளித்தார். அவருக்கு நன்றி தெரிவித்தப்பின் அவரை உட்காரச் சொல்லிவிட்டு பீர்பால் தன் வேலைக்காரனை அழைத்து அவன் செவிகளில் ரகசியமாக ஏதோ கூறினார். அவர் என்ன கூறினார் என்று அஸ்லாமின் செவிகளில் விழவில்லை. அதைப்பற்றி அவன் பொருட்படுத்தவும் இல்லை. பீர்பால் தன் வேலைக்காரனிடம் ரகசியமாகக் கூறியது இதுதான்! “நேராக நீ அஸ்லாமின் வீட்டுக்குப் போ! அவருடைய மகனைக் கூப்பிடு! அவனுடைய தந்தை பீர்பாலின் வீட்டிலிருப்பதாக கூறு! பிறகு நெய் டின்னில் இருந்த ஒரு பொற்காசை எடுத்துவர மறந்து விட்டதாகவும், அதை உடனடியாக எடுத்து வரவும் அவன் தந்தை கூறியதாகச் சொல்!” என்றார். வேலைக்காரனை அஸ்லாமின் வீட்டுக்கு ரகசியமாக அனுப்பியபின், பீர்பால் தன் வரவேற்பறையில் அமர்ந்திருந்த அஸ்லாமிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டு வேண்டும் என்றே காலத்தைக் கடத்தினார். சற்று நேரத்தில் அஸ்லாமின் மகனுடன் பீர்பாலின் வேலைக்காரன் திரும்பினான். அந்தச் சிறுவன் அஸ்லாமை நோக்கி ஓடிவந்து, “அப்பா! நீங்கள் எடுத்துவரச் சொன்ன பொற்காசு இதோ! இது நமக்கு நேற்று நெய் டின்னில் கிடைத்தது” என்று உண்மையை உளறிவிட, அஸ்லாம் கோபத்துடன் “அதிகப்பிரசங்கி! உன்னை யார் இங்கே வரச்சொன்னது? நெய் டின்னில் பொற்காசா? நீ என்ன மடத்தனமாய் உளறுகிறாய்?” என்று உண்மையை மறைக்க அரும்பாடு பட்டார். “அவனை ஏன் மிரட்டுகிறீர்கள் அஸ்லாம்? பையன் உண்மையைத் தான் கூறுகிறான். நீங்கள்தான் மூடி மறைக்கிறீர்கள். இந்தப் பொற்காசை நான்தான் நெய் டின்னில் வைத்தேன். உங்களை சோதிப்பதற்காகத்தான் அதைச் செய்தேன். இனியும் பொய் பேச முயன்றால், உங்கள் தலை போய்விடும்” என்று பீர்பால் மிரட்ட, அஸ்லாம் உண்மையை ஒப்புக் கொண்டு பொற்காசை பீர்பாலிடம் திருப்பித் தந்தார். “சரிதான்! நீங்கள் மதுசூதனிடம் கடன் வாங்கிய 20 முகராக்களையும் இதேபோல் என்னிடம் திருப்பித் தந்துவிடுங்கள்” என்றார் பீர்பால். “நான் மதுசூதனிடம் கடன் வாங்கவே இல்லை” என்று அஸ்லாம் பழைய பல்லவியைப் பாட, இதைக் கேட்டதும் பீர்பால் “அஸ்லாம்! இனியும் பொய் பேசினால், உங்களுக்கு தூக்கு தண்டனை நிச்சயம்!” என்று அஸ்லாம் கானை பயமுறுத்த, அவன் உண்மையை ஒப்புக்கொண்டு கடனைத் திருப்பிக் கொடுப்பதாகக் கூறி பீர்பாலிடம் மன்னிப்புக் கேட்டு, வாங்கிய கடனை மொத்தமாக திருப்பி அளித்தான். பீர்பாலின் புத்திசாலித்தனத்தை, அக்பர் வெகுவாகப் பாராட்டினார்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'நெய் டப்பாவில் பொற்காசு' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: முல்லா, துணி, தலைப்பாகை, சால்வை, கடைக்காரர், பணம், மூளை தலைப்பு: பதிலுக்குப் பதில்
ஒரு நாள் முல்லா ஒரு துணிக் கடைக்குச் சென்றார். அங்கு தலைப்பாகைகளும் விற்கப்பட்டன. தமக்கு ஒரு தலைப்பாகை வாங்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் முல்லா அங்கு சென்றார். அழகான ஒரு தலைப்பாகையைத் தேர்ந்தெடுத்து விலை பேசினார். பிறகு தலைப்பாகையைத் தலையில் அணிந்து கொண்டார். அந்தக் கடையில் அழகான சால்வைகளும் விற்கப்படுவதை முல்லா கண்டார். தலைப்பாகைக்கு பதிலாக சால்வையை வாங்கி விடலாம் என்று அவருக்குத் தோன்றியது. அதனால் அவர் கடைக்காரனைப் பார்த்து இந்தப் தலைப்பாகை;குப் பதிலாக சால்வையை வாங்கிக் கொள்கிறேன். இரண்டின் விலையும் ஒன்றாகத்தானே இருக்கிறது? என்றார். உங்கள் விருப்பம்போல எதை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள் என்றார் கடைக்காரர். முல்லா தலைப்பாகையை கழற்றிக் கொடுத்து விட்டு சால்வையை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். ஐயா, நீங்கள் வாங்கிய சால்வைக்குப் பணம் கொடுக்கவில்லையே என்று கடைக்காரர் கேட்டார். நான் ஏன் பணம் கொடுக்க வேண்டும். தலைப்பாகைக்குப் பதிலாகத்தானே சால்வையை வாங்கிக் கொண்டேன் என்றார் முல்லா. அப்படியானால் தலைபாகைக்கு பணம் கொடுங்கள் என்றார் கடைக்காரர். தலைப்பாகைக்கு ஏன் பணம் தரவேண்டும்? அதைத்தான் உங்களிடம் திருப்பி கொடுத்துவிட்டேனே? என்று கூறிவாறு கடையை விட்டுக் கம்பீரமாக வெளியே நடந்தார். கடைக்காரருக்கு ஒன்றுமே விளங்கவில்லை. அவருடைய மூளை குழம்பி விட்டது.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: ஒரு நாள் அரன்மனையில் பெரிய விருந்து நடந்தது. ராஜகுருவும் தெனாலிராமனும் ருசித்து, ரசித்து உண்டு மகிழ்ந்தார்கள். விருந்துக்குப் பின் இருவரும் ஒரு மண்டபத்தில் அமர்ந்து சாவதானமாக பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது ராஜகுரு "இது போன்ற விருந்து உடலுக்கும் உள்லத்துக்கும் நல்ல சுகம் அளிக்கிறது" என்றார். இதைக் கேட்ட தெனாலிராமன் அவரை சீண்டிப்பார்க்க தீர்மானித்தார். "உண்பதை விட, உண்டதைக் கழிப்பதில் தான் தனிச் சுகம் இருக்கிறது" என்றார் தெனாலிராமன். ராஜகுருவோ சற்று முறைப்பாக "ராஜாங்க விருந்தைப் பழிக்காதே ராமா! இது போன்ற விருந்தை உண்பதே தனி சுகம் தான்" என்றார். தெனாலிராமனோ "கொண்டதை விட கழிப்பதில் தனிசுகம் இருக்கிறது என்பதை நான் ஒரு நாளைக்கு உங்களுக்கு உணர்த்துகிறேன்" என்று கூறி அங்கிருந்து சென்று விட்டார். ராஜகுரு ஒரு நாள் ஒரு தனியறையில் இருந்த சமயம் பார்த்து வெளியே பூட்டி விட்டார் தெனாலி ராமன். உள்ளேயிருந்த குருவுக்கு மலம் கழிக்க வேண்டிய அவசியம் வந்து விட்டது. கதவு வெளியே பூட்டப்பட்டிருந்ததால் அவர் பல முறை தட்டினார். பலனில்லை. அவசரத்தில் தவியாய் தவித்துக் கொண்டிருந்தார். அவரை நன்றாக தவிக்க விட்டு, கொஞ்ச நேரம் கழித்து ராமன் கதவைத் திறந்தான். அவர் வேகமாக வெளியே வந்து கழிவரை நோக்கி ஓடினார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்த ராஜகுரு தெனாலிராமனைப் பார்த்து மூச்சு வாங்கப் பேசினார். "அப்பாடா! ராமா! கழிப்பது தனிசுகம் தான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் இது போன்ற விபரீத விளையாட்டை இனிமேல் செய்யாதே" என்றார். தெனாலிராமன் தான் சொன்னதை செய்துகாட்டிவிட்டதை நினைத்து இருவரும் அடக்க முடியாமல் சிரித்தனர்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'இராஜாங்க விருந்து' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: ஒரு காட்டில் சிங்கம் ஒன்று அட்டகாசம் செய்துவந்தது. இதனால், எல்லா மிருகங்களும் கூடிப் பேசின. பிறகு, சிங்கத்துடன் சேர்ந்து அமைதியாக வாழலாம் என்று முடிவுசெய்தன. எல்லா மிருகங்களும் தங்களுக்கு கிடைக்கும் உணவை சரிசமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. அதுபோலவே நடந்துகொண்டிருந்தது. இப்படியிருக்கையில் ஒரு நாள், சிங்கம் ஒரு பெரிய மானை வேட்டையாடி வீழ்த்தியது. உடனே எல்லா மிருகங்களும் கூடிவிட்டன. சிங்கம் மானின் இறைச்சியை நான்கு பங்காகப் பிரித்தது. இருப்பதிலேயே சிறந்த பாகத்தை சிங்கம் தனக்கென எடுத்துக்கொண்டது. "இது எனக்கு, ஏனென்றால் நான்தான் சிங்கம்" என்று சொன்னது. பிறகு, அடுத்த பகுதியையும் தனக்கென எடுத்துக்கொண்டது. "இதுவும் எனக்குத்தான் உரிமையாகிறது. காரணம் நான்தான் கூட்டத்திலேயே வலிமையானவன்" என்றது. மூன்றாவது பங்கை எடுத்து தன் பக்கம் வைத்துக்கொண்டு, "இருப்பதிலேயே வீரமானவனான எனக்கு இது" என்றது. பிறகு நான்காவது பங்கை மற்ற மிருகங்களின் முன்பாக வைத்துவிட்டு, "யாருக்காவது தைரியம் இருந்தால் இதைத் தொடுங்கள் பார்க்கலாம்" என்றது. பிற மிருகங்கள் ஒன்றும் செய்யமுடியாமல் விழித்தன. வலுத்தவன் சொல்வதே சட்டம்
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'சிங்கத்தின் பங்கு' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: சிங்கம், மானை, மிருகங்கள், பகுதி, பங்கை, சட்டம் தலைப்பு: சிங்கத்தின் பங்கு
ஒரு காட்டில் சிங்கம் ஒன்று அட்டகாசம் செய்துவந்தது. இதனால், எல்லா மிருகங்களும் கூடிப் பேசின. பிறகு, சிங்கத்துடன் சேர்ந்து அமைதியாக வாழலாம் என்று முடிவுசெய்தன. எல்லா மிருகங்களும் தங்களுக்கு கிடைக்கும் உணவை சரிசமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. அதுபோலவே நடந்துகொண்டிருந்தது. இப்படியிருக்கையில் ஒரு நாள், சிங்கம் ஒரு பெரிய மானை வேட்டையாடி வீழ்த்தியது. உடனே எல்லா மிருகங்களும் கூடிவிட்டன. சிங்கம் மானின் இறைச்சியை நான்கு பங்காகப் பிரித்தது. இருப்பதிலேயே சிறந்த பாகத்தை சிங்கம் தனக்கென எடுத்துக்கொண்டது. "இது எனக்கு, ஏனென்றால் நான்தான் சிங்கம்" என்று சொன்னது. பிறகு, அடுத்த பகுதியையும் தனக்கென எடுத்துக்கொண்டது. "இதுவும் எனக்குத்தான் உரிமையாகிறது. காரணம் நான்தான் கூட்டத்திலேயே வலிமையானவன்" என்றது. மூன்றாவது பங்கை எடுத்து தன் பக்கம் வைத்துக்கொண்டு, "இருப்பதிலேயே வீரமானவனான எனக்கு இது" என்றது. பிறகு நான்காவது பங்கை மற்ற மிருகங்களின் முன்பாக வைத்துவிட்டு, "யாருக்காவது தைரியம் இருந்தால் இதைத் தொடுங்கள் பார்க்கலாம்" என்றது. பிற மிருகங்கள் ஒன்றும் செய்யமுடியாமல் விழித்தன. வலுத்தவன் சொல்வதே சட்டம்
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: பரமார்த்தரு, பரமார்த்தகுருவின் சீடர்கள், முட்டாள், மூடன், மட்டி, கந்தபுர ஊர் மக்கள், நரபலி சாமியார் நாகப்பா, அரசன், அரண்மனைக் காவலர்கள் தலைப்பு: நரபலி சாமியார்
பரமார்த்தரும் சீடர்களும் கந்தபுரம் என்ற ஊருக்குள் நுழைந்தார்கள். அப்போது அந்த ஊர் மக்கள் பெரும் அச்சத்தில் இருந்தார்கள். அதற்குக் காரணம் நரபலி சாமியார் நாகப்பா அந்த ஊரில் உலவுகிறான் என்பதுதான்! "குருவே! நாம் எந்தக் காரியத்தைச் செய்தாலும் நமக்கே ஆபத்தாக முடிகிறதே! அது ஏன்?" என்று மட்டி கேட்டான். "நாம் எல்லோரும் போன பிறவியில் நிறைய பாவம் செய்து விட்டோம் போலிருக்கிறது!" என்றார் பரமார்த்தர். "குருவே! உடனே இதற்கு ஏதாவது பரிகாரம் செய்தே ஆக வேண்டும்" என்று சொன்னான், முட்டாள். குருவும் சீடர்களும் அன்று இரவே ரகசியமாக ஆலோசனை செய்தார்கள். "குருவே! முனிவர்களைப் போல யாகம் செய்தால் நாம் பாவம் எல்லாம் போய்விடும்" என்றான் மூடன். "அதற்கு நிறைய பணம் செலவாகும். நம்மால் முடியாது. வேண்டுமானால், நரபலி கொடுக்கலாம்" என்றார் பரமார்த்தர். "நரபலியா? ஐயையோ!" என்று சீடர்கள் அனைவரும் அலறினார்கள். "சீடர்களே! நமக்கு நல்ல காலம் பிறக்க வேண்டுமானால் நரபலி கொடுத்தே ஆக வேண்டும் வேறு வழியே இல்லை" என்று முடிவாகச் சொல்லி விட்டார், பரமார்த்தர். "அப்படியானால் யாரைப் பலி கொடுப்பது?" என்று கேட்டான் மண்டு. "வேறு யாரையாவது பிடிக்கப் போனால் மாட்டிக் கொள்வோம்! அதனால்……சீடர்களே… உங்களில் யாராவது ஒருவர்தான் பலியாக வேண்டும்! இந்த நல்ல செயலுக்கு யார் முன் வருகிறீர்கள்?" என்றார் பரமார்த்தர். அவ்வளவுதான்! "ஐயோ நான் பலியாகிவிட்டால், அப்புறம் உங்கள் சுருட்டுக்குக் கொள்ளி வைப்பது யார்?" என்று அழ ஆரம்பித்தான் முட்டாள். "ஐயையோ நான் மாட்டேன்" என்று மூடனும் மூக்கால் அழுதான். "குருவே! நாங்களும் பலியாக மாட்டோம்" என்றபடி மற்ற சீடர்களும் தூர ஓடப் பார்த்தனர். பரமார்த்தருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நெருதூரம் தாடியை உருவிக் கொண்டு யோசனை செய்தார். "சரி, சீடர்களே! நீங்கள் யாரும் பலியாக வேண்டாம்! வேறு ஒரு வழி தோன்றுகிறது. அதன்படிச் செய்வோம்" என்று சொல்லிப் படுத்து விட்டார் பரமார்த்தர். மறுநாள், சீடர்கள் அனைவரும் "எங்கள் குரு நரபலி கொடுக்கப் போகிறார்" என்று ஊர் முழுவதும் பெருமையோடு சொல்லிக் கொண்டு திரிந்தார்கள். அதனால் அந்த ஊர் அரசனுக்கும் செய்தி எட்டியது. பரமார்த்தரை, நரபலி சாமியார் நாகப்பா என்று தவறாக நினைத்து விட்டான். "நாகப்பாவையும் அவன் கூட்டத்தையும் கையும் மெய்யுமாகப் பிடித்து வாருங்கள்" என்று ஆணையிட்டான். நரபலி இடுவதற்காகக் குறிப்பிட்ட நாளும் வந்தது! பரமார்த்தரும் சீடர்களும் யாருக்கும் தெரியாமல் பதுங்கிப் பதுங்கிச் சென்று கொண்டு இருந்தார்கள். ஊர்க் கோடியில் இருந்த காளி கோயிலை அடைந்ததும் பரமார்த்தர் பரம சந்தோஷம் அடைந்தார். மண்டை ஓட்டு மாலையும், நீளம் நீளமான பற்களுமாக இருந்த பத்ரகாளி சிலையைப் பார்த்த சீடர்கள் பயந்து நடுங்கினார்கள். "ஏ, காளியம்மா! வாக்குக் கொடுத்தபடி உனக்கு நரபலி கொடுக்கப் போகிறோம்! நீதான் எங்களைக் காப்பாற்ற வேண்டும். ஜெய் காளி" என்று காளியின் கால்களில் விழுந்து வணங்கினார் பரமார்த்தர். சீடர்களும் ‘தடால்" என்று விழுந்து கும்பிட்டார்கள். நடு இரவு ஆகிவிட்டதை அறிவிப்பதற்கு, அரண்மனையில் இருந்து மணியோசை கேட்டது. அப்போது, கோயிலைச் சுற்றிலும் மறைந்தபடி நின்று கொண்டிருந்த அரண்மனைக் காவலர்கள் சுறுசுறுப்பானார்கள். "சீடர்களே! சீக்கிரம் நாம் கொண்டு வந்த உயிரைப் பலி பீடத்தின் மீது வையுங்கள்!" என்று அவசரப்படுத்தினார், பரமார்த்தர். சீடர்களும் அவசரம் அவசரமாகத் தாங்கள் கொண்டு வந்த உயிரைப் பலி பீடத்தில் வைத்தனர். "ஓம்…ரீம்…பத்ரகாளி!…… இந்தா நரபலி!" என்று ஆவேசமாய்க் கத்தியபடி, பலி பீடத்தின் மீது கொடுவாளை வீசினார், பரமார்த்தர். உடனே அரண்மனை வீரர்கள் ஓடிவந்தது பரமார்த்தரையும் சீடர்களையும் சுற்றி வளைத்துப் பிடித்தனர். பரமார்த்தர் யாரைப் பலியிட்டார் என்று எல்லோரும் ஆவலோடு பலி பீடத்தைப் பார்த்தனர். அங்கே… ஒரு பல்லி, இரண்டு துண்டாகிக் கிடந்தது. அரண்மனை வீரர்களுக்கு ஒரே அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. "சே, நரபலி சாமியார் என்று நினைத்தோம். இவர் நரபல்லி சாமியாராக அல்லவா இருக்கிறார்" என்றபடி பரமார்த்தரையும் சீடர்களையும் அரசனிடம் அழைத்துச் சென்றார்கள். மன்னா! ஏன் எங்களைக் கைது செய்தாய்? நாங்கள் செய்த தவறு என்ன?" என்றார் பரமார்த்தர். "நரபலி கொடுப்பது எங்கள் நாட்டுச் சட்டப்படி குற்றம்" என்றான் மன்னன். "நாங்கள் என்ன, மனிதர்களையா பலி கொடுத்தோம்? கேவலம் ஒரு பல்லியைத்தானே கொன்றோம்" என்று சொன்னார் பரமார்த்தர். "அதுதான் நீங்கள் செய்த தவறு! எங்கள் நாட்டு மக்களின் குலதெய்வம் பல்லி! என் நாட்டுக் கொடியில் இருப்பதும் பல்லி சின்னம்! அந்தப் பல்லியைக் கொன்று, அவமரியாதை செய்த குற்றத்திற்காக உங்கள் அனைவரையும் சிறையில் இட ஆணையிடுகிறேன் என்று கட்டளையிட்டான், கந்தபுர மன்னன். ஐயோ! நரபலி கொடுத்தால் நல்லது நடக்கும் என்று நினைத்தோம். அதுவும் ஆபத்தில் கொண்டு வந்து விட்டு விட்டதே" என்று புலம்பியபடி குருவும் சீடர்களும் சிறைக்குச் சென்றார்கள்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: கடவுள், உயிரினங்கள், கழுதை, குரங்கு, நாய் தலைப்பு: மனிதனுக்கு கிடைத்த ஆயுள்
எல்லா உயிரினங்களுக்கும் வாழ்நாளை எவ்வளவு காலம் வைக்கலாம், என்று சிந்தித்தார் கடவுள். எல்லாவற்றிற்கும் சமமாக முப்பது ஆண்டுகள் என்று முடிவு செய்தார் அவர். தன் இருப்பிடத்திற்கு எல்லா உயிரினங்களும் வரச் செய்தார். அவற்றைப் பார்த்து, உங்கள் ஒவ்வொருவருக்கும் முப்பது ஆண்டு ஆயுள் தருகிறேன். இந்த வாழ்நாள் போதும் என்பவர்கள் இங்கிருந்து சென்று விடலாம். குறை உடையவர்கள் இங்கேயே இருங்கள். தீர விசாரித்து அவர்கள் குறையைத் தீர்த்து வைக்கிறேன், என்றார் அவர். கழுதை, குரங்கு, நாய், மனிதன் ஆகிய நால்வர் மட்டுமே அங்கே இருந்தனர். மற்ற எல்லோரும் அங்கிருந்து மகிழ்ச்சியுடன் புறப்பட்டனர். முதலாவதாக நின்றிருந்த கழுதையை அழைத்தார் கடவுள். உன் குறை என்ன? என்று கேட்டார். கடவுளே! என் நிலையைப் பாருங்கள். நான் நாள்தோறும் ஏராளமான சுமைகளைச் சுமந்து துன்பப் படுகிறேன். ஓய்வோ தூக்கமோ எனக்குக் கிடைப்பது இல்லை. எப்பொழுதும் பசியால் துன்பப் படுகிறேன். முதுகில் சுமையுடன் வரும் நான், தெருவோரம் முளைத்து உள்ள புற்களில் வாயை வைத்து விடுவேன். என்னை அடித்துத் துன்புறுத்துவார் என் முதலாளி. மகிழ்ச்சி கொடுமைகளை இல்லை. என் வாழ்க்கையே நரகம். இந்தக் கொடுமைகளை எல்லாம் என்னால் எப்படி முப்பது ஆண்டுகள் தாங்கிக் கொள்ள முடியும்? என் மீது கருணை கொண்டு என் ஆயுளைக் குறைத்து விடுங்கள், என்று கெஞ்சியது. சரி! பன்னிரண்டு ஆண்டுகள் குறைத்து விடுகிறேன். இனி உன் வாழ்நாள் பதினெட்டு ஆண்டுகள் தான், என்றார் கடவுள். இதைக் கேட்ட கழுதை மகிழ்ச்சியுடன் அங்கிருந்து புறப்பட்டது. அடுத்ததாக இருந்த நாயை அழைத்தார் கடவுள் உன் குறை என்ன? என்று கேட்டார். கடவுளே நான் வலிமையுடன் நன்றாக மோப்பம் பிடிக்கும் திறமையுடனும் இருக்க வேண்டும். என் காதுகள் துல்லியமான சிறு ஓசையைக் கூடக் கேட்க வேண்டும். அப்பொழுதுதான் எனக்கு மதிப்பு. நான் முதுமையடைந்து தளர்ந்து விட்டால் எல்லோருமே என்னை வெறுக்கின்றனர். எனக்கு உணவும் கிடைப்பதில்லை, என்றது நாய். உனக்கு நான் தந்திருக்கும் வாழ்நாள் மிக அதிகம் என்று கருதுகிறாய். குறைத்து விடுகிறேன். இனி உன் வாழ்நாள் பன்னிரெண்டு ஆண்டுகள் தான், என்றார் கடவுள். மகிழ்ச்சி அடைந்த நாயும் கடவுளை வணங்கிவிட்டுப் புறப்பட்டது. குரங்கு கடவுளின் முன் குதித்து வந்து நின்றது. உனக்கு என்ன குறை? என்று கேட்டார், கடவுள். பல்லைக் காட்டியக் குரங்கு, கடவுளே! முப்பது ஆண்டுகள் என்பது நீண்ட காலம் ஆயிற்றே. அவ்வளவு காலமா நாங்கள் கொடுமையை அனுபவிக்க வேண்டும்? உணவுக்காக நாங்கள் மனிதர்களிடம் பல்லைக் காட்டுகிறோம். நாட்டியம் ஆடுகிறோம். என்னென்னவோ செய்கிறோம். இருந்தாலும் எங்களுக்குக் கிடைப்பவை அழுகிப் போன பழங்கள் தான். முதுமை அடைந்து விட்டால் எங்களால் கிளைக்குக் கிளை தாவ முடியாது. அப்பொழுது எங்கள் நிலை மிகப் பரிதாபமாக ஆகி விடும். எங்களால் எந்தச் செயலும் செய்ய முடியாது. ஆகவே எங்கள் ஆயுளைக் குறையுங்கள், என்று வேண்டியது. இனி உங்களுக்குப் பத்து ஆண்டுகள் தான் வாழ்நாள், என்றார் கடவுள். குரங்கும் மகிழ்ச்சியுடன் அங்கிருந்து புறப்பட்டது. கடைசியாக இருந்த மனிதனை அழைத்தார் கடவுள். உன் குறை என்ன? உனக்கு எவ்வளவு ஆயுளைக் குறைக்க வேண்டும்? என்று கேட்டார். கடவுளே! முப்பது ஆண்டுகள் என்பது எங்களுக்கு மிகக் குறைந்த ஆயுள் ஆகும். அப்பொழுது தான் நாங்கள் ஏதேனும் ஒரு கலையை முழுமையாகக் கற்றிருப்போம். நாங்கள் குடியிருப்பதற்காக ஒரு வீட்டைக் கட்டி முடித்திருப்போம். எல்லாக் கடமைகளையும் முடித்துவிட்டு மகிழ்ச்சியாக நாங்கள் இருக்கத் தொடங்கும் காலம் அது. நாங்கள் இதுவரை உழைத்த உழைப்பிற்குப் பயன் நுகரும் பருவம் அது. இந்தச் சூழலில் எங்கள் உயிரைப் பறிப்பது கொடுமை ஆகும். முப்பது ஆண்டு வாழ்நாள் என்பது எங்களுக்குப் போதவே போதாது. எங்களுக்கு அதிக ஆயுள் வேண்டும், என்று வேண்டினான் அவன். இங்கு வந்த நீ குறையுடன் சொல்லக் கூடாது. கழுதையிடம் பெற்ற பன்னிரெண்டு ஆண்டுகள், நாயிடம் பெற்ற பதினெட்டு ஆண்டுகள், குரங்களிடம் பெற்ற இருபது ஆண்டுகள் இங்கே உள்ளன. அந்த ஐம்பது ஆண்டுகளையும் நீ கூடுதலாகப் பெற்றுக் கொள்ளலாம். இனி உன் வாழ்நாள் எண்பது ஆண்டுகள். உனக்கு மகிழ்ச்சிதானே, என்று கேட்டார் கடவுள். மகிழ்ச்சிதான் என்ற அவன் கடவுளை வணங்கி விட்டுப் புறப்பட்டான். எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதை அறிந்தார் கடவுள். கூடுதல் ஆயுள் கேட்டுப் பெற்ற மனிதனின் நிலைக்காக அவர் வருத்தப்பட்டார். கடவுளிடம் வரம் பெற்ற நாளிலிருந்து மனிதன் எண்பது ஆண்டுகள் வாழத் தொடங்கினான். முதல் முப்பது ஆண்டுகளை அவன் மகிழ்ச்சியாகக் கழித்தான். இந்த காலத்தில் தான் அவன் அறிவுள்ளவனாக, வீரனாக, பயனுள்ளவனாக வாழ்ந்தான். ஏனென்றால் கடவுள் அவனுக்கே கொடுத்த ஆயுள் இது. அடுத்த பன்னிரெண்டு ஆண்டுகள் கழுதையின் ஆயுள். அதனால் அவன் இந்தக் காலத்தில் கழுதையைப் போலப் பிறர் சுமைகளைத் தூக்கினான். சூழ்நிலையால் அடிபட்டுப் பசியாலும் பட்டினியாலும் வாடினான். நாற்பத்து இரண்டிலிருந்து அறுபது வரை நாயின் ஆயுள் அவனுடையது. இந்தக் காலத்தில் அவன், தான் சேர்த்த பொருள்களைக் காவல் காக்கும் நாய் போல வாழ்ந்தான். பிறர் அதைக் கைப்பற்ற வந்தால் குரைத்து வாழ்க்கை நடத்தினான். அறுபதிலிருந்து அவன் வாழ்க்கை குரங்கு வாழ்க்கைதான். தன் பேரக் குழந்தைகளிடம் குரங்கைப் போலப் பல்லைக் காட்ட வேண்டியதாயிற்று. கிளைக்குக் கிளை தாவும் குரங்கு போல அவன் மகன் வீடு, மகள் வீடு என்று மாறி மாறிச் செல்ல வேண்டியதாயிற்று. அவனும் பல்லெல்லாம் விழுந்து கன்னம் ஒட்டிக் குரங்கைப் போலக் காட்சி அளித்துப் பிறகு இறந்தான்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: அந்த ஆண்டு ஆந்திராவில் மழையே பெய்யவில்லை. அதனால் ஏரி, குளம், குட்டை அனைத்தும் வறண்டு கிடந்தன. அதனால் விவசாயம் நடைபெறவில்லை. அதனால் தண்ணீர்ப் பஞ்சமும் உணவுப் பஞ்சமும் தலை விரித்தாடியது. அப்போது அக்கிராமத்துக்கு ஒரு சாமியார் வந்து சேர்ந்தார். அவர் வந்து சேர்ந்த அன்றே பலமான மழை பெய்ய தொடங்கியது. ஆறு, ஏரி, குளம், குட்டை எல்லாம் நிரம்பிவிட்டன. சாமியார் வந்ததன் காரணமாகத்தான் நல்ல மழை பெய்துள்ளது என்று எண்ணிய அவ்வூர் மக்கள் சாமியாரை வாயாரப் புகழ்ந்து அவரை வணங்கி ஆசி பெற்றனர். இதை பார்த்துக் கொண்டிருந்த தெனாலி ராமன் கலகலவென நகைத்துக் கொண்டிருந்தான். இதைப் பார்த்த சாமியார், தெனாலிராமனை அருகில் அழைத்து தம்பி நீ ஏன் சிரிக்கிறாய்? என வினவினார். அதற்கு தெனாலிராமன் "மழை பெய்வதும் பெய்யாமல் போவதும் இறைவன் செயலே. அப்படியிருக்க தாங்கள் வந்தவுடன் தங்கள் மகிமையால்தான் மழை பெய்துள்ளது என்று மக்கள் எண்ணுவது ஒரு பனை மரத்தில் நன்கு பழுத்துள்ள பனம் பழம் கீழே விழும் நேரத்தில் காக்கை உட்கார்ந்ததாம். காக்கை உட்கார்ந்ததும் பனம் பழம் கீழே விழுந்ததாம். அப்போது அதை பார்த்தவர்கள் காக்கை உட்கார்ந்ததனால் தான் பனம் பழம் விழுந்தது என்று சொன்னார்களாம். அது போலவே இவ்வூர் மக்கள் செயலும் இருந்ததால் தான் சிரித்தேன்" என்றான் தெனாலிராமன். இதைக் கேட்ட சாமியார் உண்மையை உணர்ந்து அவன் மேல் கோபப்படவில்லை. தம்பி உன்னிடம் திறமை இருக்கிறது. நீ காளி மகாதேவியின் அருளைப் பெற்றால் பிற்காலத்தில் புகழ் பெற்று விளங்குவாய் என்று நல்லாசி கூறினார். இதைக்கேட்ட தெனாலிராமன் காளிமகாதேவியின் சந்நிதியை அடைந்தான். அவளின் திருஉருவத்தைக் காண பலவாறு வேண்டி தவம் இருந்தான். கடைசியில் தெனாலிராமன் முன் தோன்றினாள் காளிதேவி. அவளது உருவத்தைப் பார்த்துப் பயப்படுவதற்குப் பதிலாக பலமாக சிரித்தான். அவன் சிரிப்பதைப் பார்த்த காளிதேவி, என் கோர உருவத்தைப் பார்த்து எல்லோரும் அஞ்சுவார்கள். நீயோ பலமாகச் சிரிக்கிறாய்? ஏன் என்று வினவினாள். அதற்கு தெனாலிராமன் எனக்கு சளிபிடித்தால் என்னுடைய ஒரு மூக்கை சிந்துவதற்கு என்னுடைய இரண்டு கைகளே போதவில்லை. அப்படியிருக்க உனக்கு ஆயிரம் தலை உள்ளது. ஆனால் கைகள் இரண்டே பெற்றுள்ளாய். உனக்கு சளிபிடித்தால் ஆயிரம் மூக்கையும் எப்படி இரண்டு கைகளால் சிந்துவாய் என்று எண்ணினேன். அதனால் எனக்கு சிரிப்பு வந்தது என்றான். இதைக் கேட்டதும் காளிமகாதேவியே சிரித்து விட்டாள். பின் மகனே உன்னை ஆசீர்வதிக்கிறேன். பெரும் பேரும் புகழும் பெற்றுத்திகழ்வாய். உனக்கு கஷ்டம் நேரும் போதெல்லாம் என்னை நினை. உனக்கு உதவி செய்கிறேன் எனக்கூறி மறைந்தாள் காளிதேவி. விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் அரண்மனையில் தாத்தாச்சாரியார் என்பவர் ராஜகுருவாக இருந்தார். தெனாலி கிராமத்துக்கு அருகில் உள்ள ஊர் மங்களகிரி அவ்வூருக்கு ராஜகுரு தாத்தாச்சாரியார் வந்திருந்தார். அவ்வூர் மக்கள் ராஜகுருவை வணங்கி ஆசி பெற்றுச் சென்றனர். இதையறிந்த தெனாலிராமன் ராஜகுருவை சந்தித்தான். தன்னுடைய விகடத் திறமையாலும் பேச்சாற்றலாலும் ராஜகுருவின் "சிஷ்யன் ஆனான். ராஜகுருவின் நட்பு கிடைத்த பின் தன் குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பதாகவும் அதனால் மன்னர் கிருஷ்ணதேவராயரிடம் சிபாரிசு செய்து அரண்மனையில் வேலை கிடைக்க ஏற்பாடு செய்யுமாறும் வேண்டிக் கொண்டான். அவன் வேண்டுகோள்படியே ராஜகுருவும் அரண்மனையில் வேலையில் சேர்த்து விடுவதாக வாக்களித்தார். நான் போய் ஆள் அனுப்புகிறேன். அதன் பின் நீ வா என்று சொல்லி விஜயநகரத்துக்குச் சென்று விட்டார். தெனாலிராமன் மிகக் கெட்டிக்காரனாக இருக்கிறான். இவனை மன்னரிடம் சொல்லி அரண்மனையில் விகடகவியாக சேர்த்துவிட்டால் நம் வேலை போய்விடும் என்று எண்ணிய ராஜகுரு தெனாலிராமனுக்கு ஆள் அனுப்பவே இல்லை. தெனாலிராமனும் ராஜகுருவிடமிருந்து ஆள் வரும் வரும் என்று எதிர்பார்த்து பல மாதங்கள் ஓடிவிட்டன. எந்தத் தகவலும் அவனுக்குக்கிட்டவில்லை. ஆகையால் விஜயநகரம் சென்று ராஜகுருவை நேரில் பார்த்து அரண்மனையில் சேர்ந்து விட வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டான். அதன்படியே மனைவி, மகனுடன் பல நாட்கள் நடந்து விஜய நகரம் வந்து சேர்ந்தான். பலவித இடையூறுகளுக்கிடையே தெனாலிராமன் ராஜகுருவை அவரது இல்லத்தில் சந்தித்தான். தெனாலிராமனைப் பார்த்ததும் ராஜகுரு அதிர்ச்சி அடைந்தார். யாரப்பா நீ? உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். இதைக் கேட்ட தெனாலிராமன் பதறினார். ராஜகுருவே நான்தான் தெனாலிராமன். தாங்கள் மங்களகிரிக்கு வந்த போது நண்பர்கள் ஆனோம். நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தாங்கள் அரசவையில் என்னைச் சேர்த்து விடுவதாகச் சொன்னீர்கள். ஆள் அனுப்பிய பின் வா என்றீர்கள். பல மாதங்களாக தங்களிடமிருந்து ஆள் வராததால் தான் நான் நேரில் வந்துள்ளேன். தயவு செய்து என்னை பற்றி மன்னரிடம் சொல்லி அரசபையில் சேர்த்து விடுங்கள் என்று வேண்டினான். உன்னை யாரென்றே எனக்குத் தெரியாதப்பா.... மரியாதையாக வெளியே போ.... இல்லையேல் அவமானப்படுவாய் என்று விரட்டினார். வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட தெனாலிராமன் பழிக்குப்பழி வாங்கத் துடித்தான். காளி மகாதேவியைத் துதித்தான் அன்று கிருஷ்ணதேவராயரின் அரண்மனை அமர்களப்பட்டுக் கொண்டிருந்தது. அறிஞர் பெருமக்களும் மற்றவர்களும் மண்டபத்தில் குழுமியிருந்தனர். தெனாலிராமனும் ஓர் ஆசனத்தில் அமர்ந்தான். மன்னர் கிருஷ்ண்தேவராயர் வந்தவுடன் சபை கூடியது. வேற்றூரிலிருந்து வந்த தத்துவஞானியை விழாவைத் தொடங்கி வைத்து விவாத மன்றத்தை ஆரம்பிக்கச் சொன்னர். தத்துவ ஞானியும் ஏதேதோ சொன்னார். ஒருவருக்கும் ஒன்றும் விளங்கவில்லை. அவர் பேச்சின் இறுதியில் மாய தத்துவம் பற்றி நீண்ட நேரம் பேசினார். அதாவது நாம் கண்ணால் காண்பதும் மாயை, உண்பதும் மாயை என்று சொன்னர். இதைக்கேட்ட அறிஞர்கள் முதல் அரசர்வரை எவருமே வாய் திறக்கவில்லை. ராஜகுரு மௌனமாகி விட்டார். சுற்றும் முற்றும் பார்த்த தென்னாலிராமன் எழுந்து நின்றான். தத்துவஞானியைப் பார்த்து, "ஐயா தத்துவ ஞானியாரே ஏன் பிதற்றுகிறீர் நாம் உண்பதற்கும் உண்பதாக நினைப்பதற்கும் வித்தியாசமே இல்லையா?" எனக் கேட்டான். அதற்கு தத்துவஞானி வித்தியாசம் இல்லை என்றான். அதை சோதிக்க தெனாலிராமன் அரசரிடம் ஒருவிருந்துக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார். விருந்து ஏற்பாடு ஆயிற்று. அனைவரும் பந்தியில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினார். தத்துவஞானிக்கு உணவு பரிமாறியும் சாப்பிடக்கூடாது எனக் கட்டளை இட்டுவிட்டனர். அதனால் தத்துவஞானி தன் தவறை உணர்ந்தான். இதைப்பார்த்த அரசர் தெனாலிராமனின் திறமையைப் பாராட்டி பொன் பரிசளித்தது மட்டுமில்லாமல் அன்று முதல் அவரது அரசவை விகடகவியாக்கினார்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'அரசவை விகடகவியாக்குதல்' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: ஒரு குரு வேலை செய்யும் விதம் திருடன் வேலை செய்யும் விதத்தைப் போன்றது. ஒரு ஜென் கதை. ஜென்குருக்கள் இதை மிகவும் விரும்புவர். நீ இந்த கதையை முதன்முறையாக கேட்கும்போது மிகவும் ஆச்சரியப் படுவாய். – இது ஒரு திருடன் குருவான கதை. ஜப்பானில் ஒரு திருடன் மிகச் சிறந்த திருடனாக இருந்தான். அவன் நாடு முழுவதும் பிரபலமானவனாக, எல்லோருக்கும் தெரிந்தவனாக இருந்தான். அவன் திருட்டில் கை தேர்ந்தவனாக இருந்ததால் யாராலும் அவனை பிடிக்க முடியவில்லை. அவன் கையும்களவுமாக பிடிபட்டதேயில்லை. – அவன்தான் திருடியவன் என எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும்கூட – அரசரின் கஜானாவிலிருந்து கூட அவன் திருடியிருக்கிறான். அவன் தனது முத்திரையை பதித்துவிட்டு போவதால் அவன்தான் வந்து போயிருக்கிறான் என எல்லோரும் அறிவர். அதன்மூலம் அது ஒரு கௌரவமான விஷயமாக மாறிவிட்டது. அந்த கை தேர்ந்த கள்வன் உன்னிடம் வந்து திருட உன்னிடம் ஏதோ ஒரு பொருள் இருக்கிறது என்பதே ஒரு மரியாதையாக மாறிவிட்டது. அதனால் அது ஒரு கௌரவம். மக்கள், “நேற்று இரவு அந்தக் கள்வன் என் வீட்டிற்க்கு வந்திருந்தான். என பெருமையாக சொல்லிக் கொண்டனர். ஆனால் அவனுக்கு வயதாகி விட்டது. அவனது மகன் இளைஞன். அவன் தனது தந்தையிடம், உங்களுக்கு வயதாகி விட்டது. அந்தக் கலையை எனக்குக் கற்றுக் கொடுங்கள். எனக் கேட்டான். அந்த தந்தை, சரி இன்று இரவு என்னுடன் வா – ஏனெனில் அது சொல்லித் தரக் கூடிய விஷயமல்ல. என்னுடைய ஆற்றலை கண்டுக் கொள்ளத் தான் வேண்டும். உனக்கு புத்திசாலித் தனமிருந்தால் அதை நீ கணடு கொள்வாய். அதை உனக்கு கற்றுத் தர முடியாது, ஆனால் உன்னால் அதை பிடித்துக் கொள்ள முடியும். நான் உனக்கு தர முடியாது, ஆனால் உன்னால் தெரிந்து கொள்ள முடியும். என்னுடன் இன்றிரவு வா. பார்க்கலாம். என்றான். முதல்தடவை என்பதால் மகன் மிகவும் பயந்தான். இயல்புதானே! சுவற்றை உடைத்து மாளிகைக்குள் சென்றனர். அந்த வயதான காலத்தில்கூட தந்தையின் கரங்கள் நடுங்கவில்லை, ஆடவில்லை, ஒரு டாக்டரின் கரங்கள் போல ஆடாமல் அசையாமல் உறுதியாக நின்றது. அவன் தனது சொந்த வீட்டில் வேலை செய்வதுபோல பயமின்றி சுவற்றில் ஓட்டை போட்டான். சத்தம் கேட்டுவிடுமோ என சந்தேகமே படாமல் தனது வேலையின் திறமை மீது நம்பிக்கை கொண்டு அங்கே, இங்கே யாராவது வருகிறார்களா என திரும்பியே பார்க்கவில்லை. ஆனால் அது குளிர்கால இரவாக இருந்தபோதிலும் இளைஞனுக்கு வேர்த்து கொட்டியது. அவன் பயத்தில் நடுங்கினான். ஆனால் தந்தை தனது வேலையை சப்தமின்றி செய்தான். கள்வன் வீட்டினுள் நுழைந்தான். மகன் தொடர்ந்து நுழைந்தான். அவனது கால்கள் நடுங்கியது. அவன் எந்த விநாடியும் விழுந்துவிடுவோம் என நினைத்தான். அவனுக்கு சுயஉணர்வே இல்லை. ஏனெனில் பயம்……… பிடிபட்டுவிட்டால் பின் என்ன செய்வது. தந்தை அந்த வீட்டினுள் ஏதோ அது அவனது சொந்த வீடு போல நுழைந்தான். அவனுக்கு அந்த வீட்டைப்பற்றி, வீட்டினுள் உள்ள பொருட்கள் இருக்கும் இடம் எல்லாமே தெரிந்திருந்தது. அந்த இருட்டில் கூட எந்த சாமான்கள் மீதும் மோதிக்கொள்ளாமல், கதவில் முட்டிக்கொள்ளாமல் சென்றான். சப்தமேயில்லாமல், எந்த சப்தமும் செய்யாமல் அவன் அந்த மாளிகையின் உள்ளறையை சென்றடைந்தான். அவன் ஒரு அலமாரியை திறந்து மகனிடம் உள்ளே போய் ஏதாவது விலைமதிப்பான பொருட்கள் இருக்கிறதா என பார்க்கச் சொன்னான். மகன் உள்ளே போனான். தந்தை கதவை மூடி வெளியே தாழிட்டுவிட்டு, திருடன், திருடன் ஓடிவாங்க என கத்தியபடி சுவற்றில் அவர்கள் உருவாக்கியிருந்த ஓட்டை வழியாக தப்பிப் போய்விட்டான். இப்போது இது மிகவும் அதிகம். மகனால் என்ன இது என புரிந்துகொள்ள முடியவில்லை. இப்போது அவன் அந்த அலமாரிக்குள் நடுங்கி வேர்த்துக் கொட்டியபடி இருந்தான். வீடு முழுவதும் விழித்துக் கொண்டு விட்டது. திருடன் எங்கே என தேடியது. அப்பாவா இது, என்னை கொன்றே விட்டார், என நினைத்தான். என்ன வகையான பாடம் இது அவன் இதுபோன்ற ஒரு விஷயத்தை கனவில்கூட நினைத்துப் பார்த்ததில்லை. தந்தை பயங்கரமான கனவை மகனுக்கு தந்து விட்டார். இவன் பிடிபடுவது உறுதியாகி விட்டது. தந்தை வெளியேயிருந்து கதவை தாழிட்டுவிட்டார். மகன் கதவை திறந்து தப்பித்து போகமுடியாது. ஒரு மணிநேரத்திற்கு பின் மகன் வீட்டை அடைந்தபோது தந்தை குறட்டைவிட்டு தூங்கிக் கொண்டிருந்தான். மகன் அவன் போர்வையை விலக்கி, என்ன மடத்தனம் இது, எனக் கேட்டான். தந்தை, நீ திரும்பி வந்து விட்டாய். என்ன நடந்தது என சொல்ல வேண்டிய அவசியம் இல்லை – நீயும் போய் தூங்கு. இப்போது உனக்கும் இந்தக் கலை தெரிந்துவிட்டது. நாம் இதை விவாதிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் மகன், என்ன நடந்ததென்று நான் உங்களிடம் சொல்லியே தீர வேண்டும். என்றான். தந்தை, நீ சொல்ல விரும்பினால் சொல், மற்றபடி அது எனக்கு அவசியமில்லை. நீ திரும்பி வந்ததே போதுமான அத்தாட்சி. நாளை இரவிலிருந்து நீயே சொந்தமாக போய் செய்ய ஆரம்பிக்கலாம். ஒரு திருடனுக்கு தேவையான புத்திசாலித்தனமும் சுதாரிப்பும் கவனமும் உன்னிடம் உள்ளது. எனக்கு உன்னைப் பற்றி மிகவும் சந்தோஷமாக உள்ளது, என்றான். ஆனால் மகன் மிகவும் ஆர்வமாக இருந்தான். அவன் முழு விஷயத்தையும் விவரித்து சொல்ல விரும்பினான். அவன் அத்தகைய மிகப் பெரிய வேலை செய்திருந்தான். அவன், கேளுங்களேன். இல்லாவிடில் என்னால் தூங்கவே முடியாது. நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். நீங்கள் கிட்டத்தட்ட என்னை கொன்றே விட்டீர்கள். என்றான். தந்தை, அது அப்படிப்பட்ட கடினமான காரியம்தான். ஆனால் ஒரு குருவானவர் இப்படிதான் வேலை செய்தாக வேண்டும். என்ன நடந்தது முழு கதையையும் சொல் என்றார். மகன், எங்கிருந்தோ – உறுதியாக அது என்னுடைய மனதிலிருந்தோ, என்னுடைய அறிவிலிருந்தோ அல்ல – அது உதித்தது. என்றான். தந்தை, நீ ஒரு திருடனோ, தியானம் செய்பவனோ, காதலனோ, விஞ்ஞானியோ, கவிஞனோ, ஓவியனோ அது முக்கியம் அல்ல. வாழ்வு என்னவாக இருந்தாலும் இதுதான் திறவுகோல். வாழ்வின் தளம் எதுவாக இருப்பினும் நிகழ்வது ஒன்றே – எதுவும் தலையிலிருந்து நிகழ்வது அல்ல. எல்லாமும் நாபியிலிருந்து நிகழ்வதுதான். அதை உள்ளுணர்வு என்றோ, மனமற்ற நிலை என்றோ, தியானம் என்றோ கூறிக்கொள்ளலாம். இவை யாவும் ஒரே விஷயத்தின் வேறுவேறு பெயர்கள். அவ்வளவுதான். அது உன்னுள் செயல்பட ஆரம்பித்துவிட்டது. அதை நான் உன்னுடைய முகத்தில் பார்க்கிறேன். உன்னைச் சுற்றி சக்தி இயக்கத்தை பார்க்கிறேன். நீ ஒரு கை தேர்ந்த கள்வனாக போகிறாய். கை தேர்ந்த கள்வனாக இருப்பதன் மூலமாக நான் தியானநிலையை அடைய முடிந்தது. அதனால் நினைவில் கொள். இதுதான் உனக்கும் தியானத்தை அடைவதற்கான வழி. என்றார். மகன், நான் அந்த அலமாரிக்குள் நின்று கொண்டிருந்தேன். மக்கள் எழுந்து திருடனை தேடிக் கொண்டிருந்தனர். ஒரு வேலைக்காரி கையில் விளக்குடன் வந்ததை சாவித் துவாரத்தின் வழியாக பார்த்தேன். எங்கிருந்தோ உதித்த யோசனையின் பேரில் பூனையை போல சத்தம் கொடுத்தேன் நான். இதற்குமுன் நான் அப்படி செய்ததேயில்லை. – வேலைக்காரி பூனை அலமாரிக்குள் மாட்டிக் கொண்டுவிட்டது என நினைத்து அலமாரி கதவை திறந்தாள். அவள் கதவை திறந்தவுடன் நான் என்ன செய்தேன் எப்படி செய்தேன் என எனக்குத் தெரியாது. ஆனால் அது நிகழ்ந்தது – நான் மெழுகுவர்த்தியை ஊதி அணைத்துவிட்டு, அந்த பெண்ணை தள்ளிவிட்டு ஓடினேன். மக்கள் என்னை துரத்தினார்கள். வீட்டிலுள்ளவர்கள் எல்லோரும் விழித்துக் கொண்டு விட்டனர். பக்கத்து வீட்டுக்காரர்களும் விழித்துக் கொண்டு விட்டனர். தப்பித்து ஓடி வந்த என்னை எல்லோரும் துரத்தி வந்தனர். அவர்கள் என்னை பிடித்து விடக் கூடிய அளவு நெருங்கி வந்துவிட்டனர். அந்த சமயத்தில் நான் ஒரு கிணற்றை கடந்து ஓடினேன். கிணற்றின் ஓரத்தில் பெரிய பாறை ஒன்று இருப்பதை பார்த்தேன். இப்போது அந்த பாறையை என்னால் தூக்க முடியுமா என்பது சந்தேகம்தான். ஆனால் அதை அப்போது நான் செய்தேன். அது போன்ற அபாயமான சந்தர்ப்பங்களில் உங்களது முழு சக்தியையும் உங்களால் செலவிடமுடியும். நீங்கள் மேம்போக்காக இருக்க மாட்டீர்கள். வாழ்க்கை அபாயத்தில் இருக்கும்போது முழு சக்தியோடு இருப்பீர்கள். நான் அந்த பாறையை நகர்த்தி, அதை தூக்கினேன். – அதை என்னால் நகர்த்த முடியும் என்பதையே என்னால் நம்ப முடியாது. அதை எடுத்து கிணற்றில் வீசிவிட்டு ஓடினேன். பாறை கிணற்றில் விழுந்த சத்தத்தால் என்னை பின்தொடர்ந்த மக்கள் என்னை பின் தொடர்வதை நிறுத்தி விட்டனர். அவர்கள் அந்த கிணற்றை சூழ்ந்து கொண்டனர். நான் கிணற்றில் குதித்து விட்டதாக அவர்கள் நினைத்துக் கொண்டனர். இப்படித்தான் நான் தப்பி வந்தேன். என்றான். தந்தை, நீ இப்போது தூங்கு போ, என் வேலை முடிந்தது. இனிமேல் எதையும் என்னை கேட்காதே. உன்னிஷ்டப்படி செயல்படலாம் என்றார்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'திறன் பிறந்தது' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: தரையில் எறும்பு மெல்ல ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பூரான் அதன் அருகே வந்தது. “நண்பா! நான் வருவதைக் கூடக் கவனிக்காமல் எங்கே சென்று கொண்டிருக்கிறாய்?” என்று எறும்பிடம் கேட்டது. எறும்பு “பூரான் நண்பா! உன்னைக் கவனித்துக் கொண்டிருந்தால் என் கடமையை நான் சரிவரச் செய்ய முடியாதே” என்று ஊர்ந்து கொண்டே சொன்னது. “அப்படியென்ன முக்கியமான கடமை?” என்று பூரான் கேட்டது. எறும்பும் ஊர்வதை நிறுத்தாமல் “மழைக்காலத்திற்குத் தேவையான உணவை வெயில் காலத்திலேயே தேடிச் சேர்த்து வைப்பது என் கடமை. உன்னிடம் பேசிக் கொண்டிருந்தால் என் கடமையைச் செய்ய முடியாது” என்று கூறிச் சென்று விட்டது. பூரான், எறும்பு தன்னை ஏமாற்றி விட்டதாகக் கருதியது. எறும்பை மட்டம் தட்டியே தீர வேண்டும் என்று நினைத்துக் கொண்டது. அடுத்த நாள் எறும்பு வரும் வழியில் நின்று அதை வழி மறித்தது. “எறும்பே, கடமையை சரிவரச் செய்வதால் மட்டும் நீ வல்லவனாக முடியாது!. உன்னால் என்னைப் போல வேகமாக ஊர்ந்து வர முடியுமா? அப்படி வந்தால் நீ என்னை விட வல்லவன் என்று ஒத்துக் கொள்கிறேன்” என்று கேட்டது. அதற்கு எறும்பு “வீண் பேச்சு வேண்டாமே. நான் என் கடமைச் செய்ய விடேன்” என்று பணிவாகக் கேட்டது. பூரான் “தப்பித்து ஓடப் பார்க்காதே!” என்று கேலி செய்தது. அதற்கு எறும்பு மிக அமைதியுடன் “பூரானே. உன் அளவுக்கு வேகமாக என்னால் ஊர முடியாது. அந்த தைரியத்தில் நீ பேசுகிறாய். ஆனால், நான் செய்யும் சில காரியங்களை உன்னாலும் செய்ய முடியாது. அதனால் யார் வலியவன் என்ற பரிட்சையெல்லாம் வேண்டாம்” என்று திரும்பவும் கூறியது. பூரானோ “அப்படி என்ன சாகசத்தை நீ கிழித்து விடப் போகிறாய். சாதூரியமாகப் பேசக் கற்று வைத்திருக்கிறாய்” என்று கூறியது. எறும்பு பூரானை பதில் பேசாமல் ஒரு தண்ணீர் தொட்டியின் அருகில் அழைத்துச் சென்றது. பூரானை வேடிக்கை பார்க்கச் சொல்லி விட்டு கரையின் அருகில் இருந்த ஒரு துரும்பில் தொற்றிக்கொண்டு தண்ணிரில் விழுந்து அந்த துரும்பைப் பற்றிக் கொண்டு தண்ணீரில் மிதந்தது. பூரானைப் பார்த்து “உன்னால் இப்படிச் செய்து காட்ட முடியுமா?” என்று கேட்டது. பூரானுக்கு அப்போதுதான் எல்லோருக்கும் சில வல்லமைகளும் சில இயலாமைகளும் இயற்கையிலேயே உண்டு என்று புரிந்தது. எறும்பிடம் மன்னிப்புக் கேட்டது. அன்றிலிருந்து பூரான் எறும்பின் கருத்துகளை மதித்து நடந்து அதற்குச் சிறந்த நண்பனாகத் திகழ்ந்து வந்தது.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'எறும்பு, பூரான் வல்லவர் யார் ?' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: குரங்குகள், மின்மினிப் பூச்சி, பறவை, புத்திமதி தலைப்பு: முட்டாளுக்கு புத்தி சொல்வது வீண்
ஒரு காட்டில் பல குரங்குகள் கூட்டமாக வசித்து வந்தன. குளிர்காலத்தில் ஒருநாள் மிகவும் கடுமையான குளிராக இருந்தது. குரங்குகளால் குளிரைத் தாங்க முடியவில்லை. கொஞ்சம் நெருப்பு கிடைத்தால் சருகுகளைப் போட்டுத் தீமூட்டி குளிர் காயலாம் என்று ஒரு கிழக்குரங்கு கூறிற்று. நெருப்புக்கு எங்கே போவது என்று குரங்குகள் யோசித்துக் கொண்டிருந்தபோது ஒரு மின்மினிப் பூச்சி பளிச் பளிச் சென்று மின்னியவாறு பறந்து சென்று கொண்டிருந்தது. அதைக் கண்ட ஒரு குரங்கு அதோ நெருப்பு போகிறது என்று கூறிற்று. மற்றொரு குரங்கு அந்த மின்மினிப் பூச்சியைப் பிடித்து வந்து தரையில் போட்டது. மற்ற குரங்குகள் சுற்றிலும் கிடந்த குப்பை கூளங்களைச் சேகரித்து வந்து மின்மினிப் பூச்சிமீது போட்டன. பிறகு குரங்குகள் நெருப்பு கொழுந்து விட்டு எரியப் போகிறது என எதிர்பார்த்து சூழ்ந்து அமர்ந்து கொண்டன. ஆனால் தீ எரியும் வழியைக் காணோம் பிறகு குரங்குகள் வாயினால் குப்பையை ஊதி நெருப்பை எரிய விடும் முயற்சியில் ஈடுபட்டன. மரத்தில் அமர்ந்து குரங்குகளின் கோமாளிக் கூட்டத்தைக் கவனித்துக் கொண்டிருந்த ஒரு பறவை கலகலவென்று சிரித்தபடி மரத்தை விட்டிறங்கி கீழே வந்து அமர்ந்தது, பிறகு குரங்குகளை நோக்கி நண்பர்களே மின்மினிப் பூச்சியை நெருப்பு என்று எண்ணிக் கொண்டு தீ மூட்ட வீண் பிரயாசை எடுக்கிறீர்கள். நீங்கள் என்னதான் வாயால் ஊதினாலும் மின்மினிப் பூச்சியிடமிருந்து நெருப்பு வரவே வராது. வீண் வேலையை விட்டுவிடுங்கள் என்று புத்திமதி கூறிற்று. உனக்கு ஒன்றும் தெரியாது. வாயை மூடிக்கொண்டு உன் வேலையைப் பார் என்று கூறிவிட்டு குரங்குகள் மறுபடியும் குப்பையை வாயால் ஊதித் தீ உண்டாக்க முயற்சியெடுத்தன. பறவை, குரங்குகளின் முட்டாள்தனத்தை எண்ணிப் பரிதாபப்பட்டு திரும்பத் திரும்ப குரங்குகளுக்கு புத்திமதி கூறிக் கொண்டிருந்தது. இதனால் கோபமுற்ற குரங்குகள் பறவை மீது பாய்ந்து அதனைப் பிடித்து தரையில் மோதிக் கொன்று விட்டன. முட்டாளுக்கு புத்தி சொன்னால் வினைநமக்குதான்…
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: மனிதன், குரு, மடாலயம், பிட்சு, தியான பாதை, சீடன், சமையலறை, அரிசி, ஏழை, நகரம், கற்பனை, மௌனம், அந்தரங்கம், அகந்தை, மலை, ஆன்மீகம் தலைப்பு: குரு மலர்தல்
ஒரு பழமையான சீனக் கதை கூறுகிறேன். மிகப் பெரிய மடாலயம் ஒன்றில் ஒரு குரு இருந்தார். அதில் 5000 பிட்சுக்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும் தியான பாதையை – தன்னை உணர்தல் – பின்பற்றினர். தன்னை உணர்தல் புத்தர் கூறிய வழிகளில் ஒன்று. ஒருநாள் ஒரு மனிதன் அந்த மடாலயத்திற்கு வந்தான். அவன் ஒரு சீடனாக விரும்பினான். குரு அவனை ஏற்றுக் கொண்டார். ஆனால் அவன் கிராமத்தான், படிக்காதவன், எளிமையானவன். அதனால் குரு அவனிடம், சமையலறையில் போய் அரிசியை சுத்தம் செய்வதுதான் உன் வேலை என்றார். அங்கு சமையலறை மிகப் பெரியது. 5000 துறவிகளுக்கானது. இந்த ஏழை அதிகாலையில் அரிசியை சுத்தம் செய்ய ஆரம்பித்தால் இரவு வரை செய்தான். சொற்பொழிவுகளுக்கோ, பிரார்த்தனைகளுக்கோ போக அவனுக்கு நேரமில்லை.. சமய நூல்களை படிக்கவோ, ஆன்மீக விவாதங்களை கேட்கவோ அவனுக்கு நேரமில்லை. இந்த 5000 துறவிகளும் பண்டிதர்கள். அதனால் இந்த மடாலயம் நாடு முழுவதும் ஆன்மீக விவாதங்களுக்கு மிகவும் பெயர் போனது. இருபது வருடங்கள் கடந்தன. அந்த மனிதன் இத்தனை ஆண்டுகளாக அரிசியை சுத்தம் செய்வதை தவிர வேறெதுவும் செய்யவில்லை. அவன் வருடங்களை கணக்கிடுவதை மறந்துவிட்டான். என்ன பயன் அவன் நாட்களை, தேதிகளை என யாவற்றையும் மறந்தான். இறுதியில் அவன் தனது பெயரைக் கூட மறந்துவிட்டான். இருபது வருடங்களாக யாரும் அதை உபயோகிக்கவில்லை. யாரும் அவனை பெயர் சொல்லிக் கூப்பிடவில்லை. அது அவனது பெயர்தானா என்பதுகூட அவனுக்கு சந்தேகமாகிவிட்டது. இருபது வருடங்களாக அவன் அரிசியை சுத்தம் செய்யும் ஒரே ஒரு சிறிய விஷயத்தை மட்டுமே தொடர்ந்து செய்து வந்தான். காலையில் எழுந்ததிலிருந்து இரவு படுக்க போகும் வரை அதை மட்டுமே செய்தான். குரு தான் இறக்கும் நேரம் வந்துவிட்டதை அறிவித்தார். அவர் தனது வாரிசை தேர்ந்தெடுக்க விரும்பினார். அதற்காக அவர் ஒரு அறிவிப்பு செய்தார். தன்னை உணர்ந்து விட்டதாக யாராவது நினைத்தால் அவர் உண்மையை உணர்ந்த விதமாக ஏதாவது ஒரு வாக்கியத்தை எனது குடிலின் சுவற்றில் எழுத வேண்டும் எனக் கூறினார். அந்த மடத்தில் உள்ள துறவிகளிலேயே தன்னை மிகச் சிறந்த பண்டிதராக நினைத்த ஒருவர் முயற்சித்தார். ஆனால் அவர் அந்த குடிலின் சுவரில் எழுதிய வாசகம் அவருடைய சொந்த அனுபவம் அல்ல. அது அவருக்கும் தெரியும். எப்படி அது அவருக்குத் தெரியாமல் போகும் அவர் நூல்களிலிருந்து எடுத்ததுதான் அது. இந்த வயதான குருவை ஏமாற்றுவது மிகவும் கடினம். சொந்த அனுபவத்திலிருந்து வந்தது அல்ல இது என அவர் எளிதாக கண்டுபிடித்துவிடுவார் என பயந்தார். அதனால் அவர் தனது பெயரை எழுதவில்லை. காலையில் வயதான குரு வந்து பார்த்துவிட்டு வேலையாளை கூப்பிட்டு அங்கு எழுதியிருந்ததை அழித்துவிடும்படி கூறு, எனது சுவற்றை பாழடித்த முட்டாள் யாரென்று கண்டுபிடி. என்றார். அந்த பண்டிதர் குரு இது ஒரு சிறப்பான உணர்தல் என பாராட்டினால் பின் நான்தான் இதை எழுதினேன் எனக் கூறலாம். இல்லாவிடில் மௌனமாக இருந்து விடலாம். யாருக்குத் தெரியும். 5000 பேரில் யார் வேண்டுமானாலும் இப்படி எழுதக் கூடும் என நினைத்ததால் அவர் அதில் கையொப்பமிடவில்லை. கிட்டத்தட்ட பன்னிரண்டு பண்டிதர்கள் முயற்சித்தனர். ஆனால் யாருக்கும் தனது பெயரை எழுத தைரியம் வரவில்லை. குரு எல்லா நாளும் அழித்து வந்தார். அவர், தன்னை உணரும் பக்குவம் உங்களில் யாருக்கும் வரவில்லை. தான் என்ற பெயரில் எல்லோரும் நானைத் தான் வளர்த்துக் கொண்டுள்ளீர்கள். நான் உங்களுக்கு திரும்ப திரும்பக் கூறி வந்திருக்கிறேன். ஆனால் நான் என்பது ஒரு சுகம், அதிலும் ஆன்மீக நான் என்பது மற்ற எல்லா வகையான நான்களை விட மிகவும் சுகமானது. அதனால் அடுத்த தலைமை யார் என நானே கண்டு பிடிக்கிறேன். என்றார். ஒருநாள் இரவு வயதான குரு இருபது வருடங்களுக்கு முன் வந்த மனிதனிடம் சென்றார். இருபது வருடங்களாக அவன் அரிசியை சுத்தம் செய்வதைத் தவிர வேறெதுவும் செய்யாததால் குருவை அவன் பார்க்கவே இல்லை. குரு அவனை எழுப்பினார். அந்த மனிதன் குருவைப் பார்த்து யார் நீ எனக் கேட்டான். ஏனெனில் இருபது வருடங்களுக்கு முன் தீட்சையளித்த போது சில நிமிடங்கள் தான் பார்த்தான். அதனால் என் தூக்கத்தைக் கெடுத்ததன் காரணம் என்ன எனக் கேட்டான். குரு, நான்தான் உன் குரு. மறந்து விட்டாயா உனக்கு உன் பெயராவது நினைவில் இருக்கிறதா எனக் கேட்டார். அந்த மனிதன் அது சிரமம். ஏனெனில் நீங்கள் எனக்கு கொடுத்த வேலையை செய்ய பெயர், புகழ், படிப்பு, பதவி, பட்டம் என எதுவும் தேவையில்லை. இது மிக எளிமையான வேலை. எனவே நான் எல்லாவற்றையும் மறந்து விட முடிகிறது. இதுதான் எனது பெயர் என என்னால் உறுதியாக கூற முடியவில்லை. சில பெயர்கள் எனது நினைவுக்கு வருகிறது. ஆனால் அதில் எது என்னுடையது என எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் உங்களுக்கு மிகவும் நன்றி கூற கடமைப் பட்டிருக்கிறேன். எனக் கூறி அவர் குருவின் பாதத்தில் விழுந்தார். தயவுசெய்து எனது வேலையை மாற்றி விடாதீர்கள். நான் எல்லாவற்றையும் மறந்து விட்டேன். ஆனால் நான் எல்லாவற்றையும் அடைந்து விட்டேன். நான் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத ஒரு நிலை இப்போது எனக்கு கிடைத்து விட்டது. வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு மௌனத்தை நான் அடைந்து விட்டேன். சில சமயங்களில் நான் பேரானந்த நிலையை உணர்கிறேன். அந்த தருணங்களில் இறந்தால் கூட நான் வருத்தம் கொள்ள மாட்டேன், வாழ்க்கை என்னை வஞ்சித்துவிட்டது எனக் கூற மாட்டேன். என் தகுதியை விட அதிகமாகத்தான் அது எனக்கு அளித்திருக்கிறது. எனது வேலையை மாற்றி விடாதீர்கள். நான் அதை நன்றாகத் தான் செய்திருக்கிறேன். யாராவது எனது வேலையை பற்றி புகார் கூறினார்களா என்றார். குரு, இல்லை, யாரும் புகார் கூற வில்லை. ஆனால் உனது வேலை மாறி விட்டது, ஏனெனில் உன்னைத்தான் எனக்கு அடுத்த தலைமையாக தேர்ந்தெடுத்திருக்கிறேன். என்றார். அந்த மனிதன், நான் அரிசி சுத்தம் செய்பவன். குருவாக இருப்பதைப் பற்றியோ, சீடர்களைப் பற்றியோ எனக்கு எதுவுமே தெரியாதே. எனக்கு எதுவும் தெரியாது என்னை மன்னித்து விடுங்கள். நான் தலையை பதவியை ஏற்க வில்லை. ஏனெனில் அவ்வளவு பெரிய பதவியை சமாளிக்க என்னால் முடியாது. எனக்கு அரிசி சுத்தம் செய்ய மட்டுமே தெரியும். என்றான். குரு, மற்றவர்கள் அடைய முயற்சி செய்து தோல்வியுற்றனர். அதில் நீ வெற்றி பெற்று விட்டாய். நீ முயற்சி செய்யாததால் நீ அடைந்து விட்டாய். நீ இந்த சிறிய விஷயத்தை மட்டுமே செய்து கொண்டிருந்தாய். அதில் நினைவுகளுக்கோ, உணர்ச்சிகளுக்கோ, கோபத்துக்கோ, போராட்டத்துக்கோ, ஒப்பிடுதலுக்கோ, லட்சியங்களுக்கோ, இடமில்லை. அதனால் மெதுமெதுவாக உனது அகந்தை அழிந்து விட்டது. அந்த அகந்தையுடன் உனது பெயரும் அழிந்தது. நீ பெயருடன் பிறக்கவில்லை. அகந்தைதான் பெயருடன் இருந்தது. அதுதான் அகந்தையின் ஆரம்பம். ஏனெனில் அந்த அகந்தை தான் உன்னை என்னிடம் கொண்டு வந்தது. அகந்தை அழிந்ததின் விளைவாக நீ உனது குருவான என்னைக் கூட மறந்து விட்டாய். அந்த வினாடி வரை ஆன்மீக லட்சியபாதையில் இருந்தாய். இப்போது நீ அடைந்து விட்டாய். நீதான் சரியானவன். அதனால் எப்போதும் குரு அவரது அடுத்த வாரிசுக்கு கொடுக்கும் இந்த அங்கி, இந்த தொப்பி, இந்த வாள் ஆகிய எல்லாவற்றையும் பெற்றுக் கொள். ஆனால் ஒரு விஷயம் நினைவில் கொள். இவற்றை பெற்றுக் கொண்டு இந்த மடத்தை விட்டு எவ்வளவு தூரம் போக முடியுமோ, அவ்வளவு தூரம் ஓடிப் போய்விடு. ஏனெனில் உனது உயிர் அபாயத்தில் உள்ளது. இந்த அகந்தை பிடித்த 5000 பேரும் உன்னைக் கொன்று விடுவார்கள். நீ மிகவும் எளிமையாக, வெகுளியாக, இருப்பதால் அவர்கள் உன்னிடம் வந்து அங்கி, தொப்பி, வாள் இவற்றை கேட்பார்கள். நீயும் கொடுத்துவிடுவாய். நீ இவற்றை எடுத்துக் கொண்டு எவ்வளவு தூரம் போக முடியுமோ அவ்வளவு தூரம் மலை ஏறி போய்விடு. விரைவில் எப்படி மலர் மலர்ந்தால் தேனீக்கள் தேடி வருமோ அதுபோல மக்கள் உன்னை வந்தடைவர். நீ மலர்ந்து விட்டாய். நீ சீடர்களை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. வெகு தொலைவான ஒரு இடத்தில் வெறுமனே அமைதியாக இருந்தால் போதும், மக்கள் உன்னைத் தேடி வருவர். நீ என்ன செய்தாயோ, அதையே மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடு. என்றார். ஆனால் என்ற அந்த மனிதன் நான் எந்த பாடத்தையும் படிக்கவில்லை. எப்படி சொல்லிக் கொடுப்பது என எனக்குத் தெரியாதே. என்றான். குரு, சிறிய விஷயங்களை அமைதியாக, மௌனமாக, எந்த குறிக்கோளும் இல்லாமல். இந்த உலகத்திலோ, அடுத்த உலகத்திலோ எதையாவது பெற வேண்டும் என்ற ஆசையின்றி, செய்யச் சொல். அப்போதுதான் வெகுளித்தனமானவனாக, ஒரு குழந்தையை போல மாற முடியும். அந்த வெகுளித்தனம்தான் உண்மையான ஆன்மீகம் என்பதை சொல்லிக் கொடு. என்றார்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: அது ஒரு அடர்ந்த காடு. பக்கத்துக் கிராமத்திலிருந்து கழுதை ஒன்று அந்தக் காட்டிற்கு வழி மாறி வந்தது. வரும் வழியில் பல மிருகங்கள் பயத்துடன் ஓடி வந்தன, அதில் ஒரு மானும் இருந்தது. அந்த கழுதை மானிடம், “ஏன் அனைவரும் இப்படி வேகமாக பயத்துடன் ஓடி செல்கின்றன?” என்று கேட்டது. அதற்கு மானோ, “இந்த காட்டில் சிங்கம் ஒன்று உள்ளது. அதைக்கண்டு தான் நாங்கள் அனைவரும் இப்படி ஓடுகின்றோம்.” என்று கூறிவிட்டுச் சென்றது. கழுதையும் சிங்கத்தின் வீரத்தை நினைத்துகொண்டே காட்டிற்குள்ளே சென்றது. சிறிது துரம் கடந்து சென்றது களைபடைந்த கழுதை ஒரு ஓடையைப் பார்த்தது. கழுத்தையும் தண்ணீர் குடிக்க அந்த ஓடைக்கு அருகில் சென்றதும் அங்கே சில வேட்டைக்காரர்கள் தாங்கள் வேட்டையாடிய மான், புலி, சிங்கம் போன்ற மிருகங்களின் தோலை அங்கிருந்தப் பாறைகள் மேல் உலர வைத்திருந்தனர். அதைப் பார்த்ததும் கழுதைக்கு ஒரு ஆசை வந்தது. உடனே ஒரு சிங்கத்தின் தோலை எடுத்துத் தன் உடம்பின் மேல் போர்த்திக்கொண்டது. அந்த கழுத்தையும் பார்பதற்க்கு சிங்கம் போலவே இருந்ததனால், மற்ற மிருகங்களும் கழுதைப் பார்த்துப் பயந்து ஒதுங்கிப் சென்றன. மிருகங்கள் எல்லாம் தன்னைப் பார்த்துப் பயந்து மரியாதையாக வழிக் கொடுத்து ஒதுங்கிப் போனதைப் பார்த்து கழுதைக்கு, கர்வம் தலைக்கேறியது. சிறிது தூரம் அந்த கழுதை அந்த காட்டில் உலாவி கொண்டிருந்தது. செல்லும் வழியில் நரி ஒன்றினை அந்த கழுதை பார்த்தது. சரி இந்த நரியையும் பயமுறுத்தலாம் என்று நினைத்து, நரியின் அருகில் சென்றது. நரியும் பயத்தில் நடுங்கிக்கொண்டே “சிங்க ராஜ, நான் தெரியாமல் இந்த பக்கம் வந்துவிட்டேன் இனி நான் இந்த காட்டிற்கே வர மாட்டேன்”, என்று கழுதையிடம் கூறியது. கழுதையும் சிங்கம் போல கர்ஜிக்கணும்னு நினைச்சு "ங்கெ ங்கெ"ன்னு கத்தியது. அதோட குரல் அது கழுதைன்னு நரிக்கு காட்டிக் கொடுத்தது. அதன் பிறகு அந்த கழுதைய நரி மதிக்கவேயில்லை. “எனக்கு கோவம் வருவதற்குள் இங்கிருந்து சென்றுவிடு”, என்றது கழுதை. அதற்கு நரியோ, கழுதையைப் பார்த்து “முடியாது” என்று பதில் கூறியது. மேலும் நரி கழுதையிடம், “நீ சிங்கம் போன்று வேஷம் போட்டாலும் உன்னுடைய உண்மையான குணத்தை உன்னால் மாற்ற முடியாது.” என்று கூறியது. கழுத்தையும் வெட்கித் தலைகுனிந்தது. நாம் நாமாக இருக்கும் போதுதான் மதிப்படைகிறோம். அடுத்தவர் போல வேடம் போட்டாலோ அல்லது அவரைப் போல நடந்து கொள்வதாலோ அவமானம்தான் மிஞ்சும்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'சிங்கத் தோல் போர்த்திய கழுதை' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: முல்லாவுக்கு சங்கீதம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று திடீரென ஆசை வந்து விட்டது. சங்கீதம் கற்றுக் கொடுக்கும் ஒரு பாட்டு வாத்தியாரிடம் சென்றார். " ஐயா எனக்குச் சங்கீதம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசையாக இருக்கிறது. எனக்குச் சங்கீதம் கற்றக் கொடுப்பீர்களா?" என முல்லா அவரிடம் கேட்டார். " சங்கீதம் கற்றுக் கொடுப்பது தானே என் தொழில் நிச்சயம் தங்களுக்குக் சங்கீதம் கற்றுக் கொடுக்கிறேன் " என்றார் பாட்டு வாத்தியார். " நான் என்ன கட்டணம் தரவேண்டும்?" என்று முல்லா கேட்டார். " முதல் மாதம் 100 பொற்காசுகள் தரவேண்டும் அடுத்த மாதம் அறுபது பொற்காசு கொடுத்தால் போதும், மூன்றாவது மாதம் ஐம்பது பொற்காசுகள் கொடுங்கள். இவ்வாறு கட்டணம் குறைந்து கொண்டே போகும் " என்றார் பாட்டு வாத்தியார். " சரி வருகிறேன் " என்று கூறிவிட்டுப் புறப்பட்டார் முல்லா. " ஏன் புறப்பட்டு விட்டீர்கள்? சங்கீதம் கற்றுக் கொள்ளவில்லையா?" என பாட்டு வாத்தியார் கேட்டார். " ஒரு பத்து மாதம் கழித்து வரலாம் என்று நினைக்கிறேன். ஏனென்றால் மாதா குறையும் உமது கட்டண முறையில் பத்த மாதம் கழித்து நீர் இலவசமாகவே எனக்குக் கல்வி கற்றுத் தரவேண்டியிருக்கும். அதனால் பத்து மாதம் கழித்தே வருகிறேன் " என்று கூறிவிட்டு முல்லா நடந்தார்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'முல்லா கற்ற இசை' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: பழைய ஊர் ஒன்றில் ஒரு கோயில் இருந்தது. கோயில் திருப்பணிக்காக மரங்களை அறுத்துக் கொண்டு வந்து போட்டிருந்தார்கள். அந்த மரங்களில் ஒன்றை இரண்டாக அறுத்துக் கொண்டிருந்த தச்சன், பாதி அறுத்தபின் அறுத்த பிளவிலே ஆப்பு வைத்துவிட்டு, மீதியை அறுக்காமல் சென்று விட்டான். கோயிலை யடுத்திருந்த மாதுளை மரச் சோலையில் பல குரங்குகள் இருந்தன. அந்தக் குரங்குகளில் சில, தாவி விளையாடிக் கொண்டே மரம் அறுத்துக் கிடந்த இடத்திற்கு வந்து சேர்ந்தன. அவற்றில் ஒரு குரங்கு பாதி பிளந்து கிடந்த மரத்தின் மேல் வந்து உட்கார்ந்தது. அது சும்மாயிருக்காமல், அந்த மரப்பிளவில் வைத்திருந்த ஆப்பை அசைத்து அசைத்துப் பிடுங்கியது. ஆப்பைப் பிடுங்கியவுடன், பிளந்திருந்த மரத்தின் இரு பகுதிகளும் நெருங்கின. அவற்றிற் கிடையிலே மாட்டிக் கொண்ட அந்தக் குரங்கு உடல் நசுங்கி உயிர் விட்டது. ஆகையால் தனக்குத் தொடர்பில்லாத ஒரு காரியத்தில் தலையிடக்கூடாது.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'ஆப்பு பிடுங்கிய குரங்கு' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: அந்த ஆண்டுக் கோடைக்காலம் மிகக் கடுமையாக இருந்தது. ஆறு, குளங்கள், கிணறுகள் வற்றிப் போயின. செடி, கொடிகள் வாடி வதங்கின. நண்பகலில் தெருக்கள் வெறிச்சோடிப் போயின. வெயிலுக்கு பயந்து மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். ஒரு நாள் அதிகாலையில், சக்ரவர்த்தி அக்பர், சில அதிகாரிகள் புடைசூழ வெளியே உலாவக் கிளம்பினார். பீர்பலும் அவர் கூடவே சென்றார். அக்பர் கோடையின் கொடுமையைப் பற்றி பேசிக் கொண்டே வந்தார். அவர்கள் செல்லும் வழியில் ஒரு கிணறு தென்பட்டது. அதைப் பார்த்த அக்பர், “தலைநகரில்உள்ள கிணறுகள் யாவும் வற்றி விட்டன என்று கேள்விப்பட்டேன். இந்தக் கிணற்றில் தண்ணீர் இருக்கிறதா பார்ப்போம்” என்று சொல்லிக் கொண்டே அதன் அருகில் சென்று குனிந்து பார்த்தார். “இது மிகவும் ஆழமான கிணறு. அடியில் தண்ணீர் இருக்கிறதா, இல்லையா என்றே தெரியவில்லை” என்று அக்பர் கூறவும், அதைக் கேட்ட பீர்பால், “பிரபு! தண்ணீர் இருக்கிறதா என்று அறிய ஒரு கல்லைத் தூக்கிப் போட்டால் தெரிந்து விடுமே! தண்ணீர் இருந்தால் கல்பட்டு தெளிக்கும்,” என்று சொல்லிவிட்டு, கிணற்றினுள் ஒரு கல்லை எறிந்தார். கல் அடியில் சென்று விழுந்த ஒலியைக் கேட்டதுமே, கிணறு முற்றிலும் வற்றியுள்ளது என்று தெரிந்தது. “பீர்பால்! கிணற்றினுள் ஒற்றைக் கல்லாகப் போடக் கூடாதென்று சொல்லுவார்கள். அதனால் இன்னொரு கல்லை நான் போடுகிறேன்” என்று சொல்லிக் கொண்டே, தன் விரலில் இருந்த ஒரு வைர மோதிரத்தை அக்பர் கிணற்றினுள் போட, சுற்றியிருந்த அனைவரும் திகைத்துப் போயினர். “பிரபு! வைரமோதிரத்தை ஏன் போட்டீர்கள்?” என்று பீர்பால் கேட்க, “வைரமும் ஒரு கல்தானே! அதனால்தான் போட்டேன்” என்றார் அக்பர். “ஆயினும் கல்லெல்லாம் வைரக்கல்லாகுமா? நீங்கள் செய்தது சரியா?” என்று பீர்பால் கேட்டார். “அதனால் என்ன, பீர்பால்! யாரையாவது கிணற்றில் இறங்கச் சொல்லி மோதிரத்தை எடுத்து விட்டால் போகிறது!” என்ற அக்பர் தொடர்ந்து, “கிணற்றுள் இறங்கினால் யார் வேண்டுமானாலும் மோதிரத்தை எடுத்து விடலாம். ஆனால் யாராவது கிணற்றுக்குள் இறங்காமலே அந்த மோதிரத்தை எடுக்க முடியுமா?” என்று கேட்டார். “முடியவே முடியாது, பிரபு!” என்றார் கூட இருந்த பிரமுகர் ஒருவர். “முடியாதது என்று ஒரு காரியமும் இல்லை. முயன்று பாருங்களேன்” என்று அக்பர் சொல்ல, “பிரபு! அது யாராலும் செய்ய முடியாத காரியம்” என்றார் அதே பிரமுகர். மற்றவர்களும் அதை ஆமோதித்தனர். “பீர்பால்! நீ என்ன நினைக்கிறாய்?” என்று அக்பர் கேட்க, “அதைப் பற்றித்தான் நானும் யோசிக்கிறேன்” என்ற பீர்பால், தன் தலைப்பாகையை அவிழ்த்துவிட்டுத் தனது தலையைச் சொறிந்தார்.”தலையைச் சொறிந்தால் மட்டும் யோசனை தோன்றிவிடுமா?” என்று மிட்டாலால் என்ற அதிகாரி பீர்பலை நோக்கி ஏளனத்துடன் கேட்டார். “தலையைச் சொறிந்தால் எனக்கு நல்ல யோசனை தோன்றும். ஆனால் உங்களுக்குத் தோன்றாது!” என்று பீர்பால் லாலை நோக்கிக் கூறினார். “எனக்குத் தோன்றாது, ஆனால் உனக்குத் தோன்றுமோ? அது எப்படி?” என்று மிட்டாலால் கேலியாகக் கேட்க, “எனக்கு மூளைஇருக்கிறது. அதனால் தலையைச் சொறிந்ததால் மூளை வேலை செய்யும். ஆனால் உங்களுக்கு என்ன செய்தாலும் யோசனை தோன்றாது” என்று பீர்பால் அவனுக்கு பதிலடி கொடுத்தார். “பிரபு! எனக்கு யோசனை தோன்றிவிட்டது!” என்று பீர்பால் உற்சாகத்துடன் கூற, “அப்படியா? நீ எப்படி மோதிரத்தை கிணற்றுள் இறங்காமலே எடுப்பாய்?” என்று ஆர்வத்துடன் அக்பர் கேட்டார். நூலின் மறுமுனையை திணற்றுக்கருகே இருந்த ஒரு மரத்துடன் சேர்த்துக் கட்டினார். பிறகு, வைரக்கல்லைக் குறிபார்த்து ஏற்கெனவே கிணற்றின் உள்ளேஇருந்த சாணத்தின் மீது வீசியெறிந்தார். கல் சரியாக சாணத்தின் மீது விழுந்தது. தன்னுடைய வேலைக்குத் தானே ஒரு சபாஷ் போட்டுக் கொண்டு, அங்கிருந்த காவலர்களை அதைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு பீர்பால் வீடு திரும்பினார். வீடு திரும்பியபின் உணவருந்தி விட்டு நிம்மதியாகத் தூங்கினார். பிறகு மாலையில் எழுந்து கிணற்றை நோக்கிச் சென்றார். காலையில் அவர் வீசியெறிந்த சாணம் வெயிலில் நன்றாகக் காய்ந்து உலந்திருந்தது. அதன் மீது அவர் வீசிய கல்லும் சாணத்துடன் நன்றாக ஒட்டிக் கொண்டிருந்தது. பிறகு பீர்பால் மிகவும் நிதானமாகவும், ஜாக்கிரதையாகவும் நூலைப் பிடித்து மேலே இழுக்க, கல் கிணற்றுக்குள்இருந்து மேலே வந்துவிட்டது. கல்லில் ஒட்டிய சாணமும் உலர்ந்து போய் அதனுடன் சேர்ந்து பத்திரமாக இருந்தது. அதிலிருந்து மோதிரத்தை எடுத்து, சுத்தமாகக் கழுவியபின், பீர்பால் அரண்மனை தர்பாருக்குச் சென்றார். அந்த நேரத்தில் அக்பர் தர்பாரில் தன் அதிகாரிகளுடன் அமர்ந்திருந்தார். அவரை வணங்கிய பீர்பால், “பிரபு! நான் வெற்றிகரமாகத் தங்கள் மோதிரத்துடன் வந்திருக்கிறேன்” என்றதும் அக்பருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. “கிணற்றுள் இறங்காமலேயே மோதிரத்தை எடுக்க உன்னால் எப்படி முடிந்தது?” என்று அக்பர் ஆவலுடன் கேட்க “மூளையைப் பயன்படுத்தினால் முடியாதது ஒன்றுமில்லை என்று நீங்கள் சொன்னதை நிரூபித்து விட்டேன்” என்று கூறிய பீர்பால், தான் மோதிரத்தை மீட்டதை விளக்கிக் கூறினார். “பலே! சபாஷ்! உன்னைப் போல் புத்திசாலியை நான் பார்த்ததே இல்லை!” என்று பாராட்டிய அக்பர் பொற்காசுகள் நிரம்பிய பையை பீர்பாலுக்குப் பரிசளித்தார்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'கிணற்றுக்குள் வைர மோதிரம்' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: மரத்தடியில், உட்கார்ந்த நிலையிலேயே தூங்கிக் கொண்டிருந்தார், பரமார்த்தர். திடீரென்று விழித்துக் கொண்டிருந்தார், பரமார்த்தர். திடீரென்று விழித்து எழுந்து, "சீடர்களே! புத்தருக்குப் போதி மரத்தடியில் ஞானம் பிறந்ததாம். அதுபோல் இப்போது எனக்கு இந்த பூவரசம் மரத்தடியில் புத்தி பிறந்து விட்டது!" என்று மகிழ்ச்சியுடன் கத்தினார். அதைக் கேட்ட சீடர்கள், "புத்தருக்கு ஒரு போதி; எங்கள் பரமார்த்தருக்கு ஒரு பூவரசம்! புத்தி கொடுத்த மரமே, நீ வாழ்க!" என்று அந்த மரத்தைச் சுற்றி வந்து வணங்கினார்கள். "சீடர்களே! நாம் யாருடனாவது கூட்டு சேர்ந்து பயிர் வைப்போம்; கொள்ளை லாபம் அடிப்போம்!" என்றார் குரு. பரமார்த்தரின் யோசனையைக் கேள்விப்பட்ட ஒருவன், அவர்களுடன் கூட்டாகப் பயிர் செய்வதற்கு ஒப்புக் கொண்டான். எப்படியும் குருவும், சீடர்களும் ஏமாந்து விடுவார்கள் என்று நம்பினான். "கூட்டு வாணிகம் என்பதால், மண்ணுக்கு மேலே விளைவதை ஒருவரும், பூமிக்குக் கீழே கிடப்பதை இன்னொருவரும் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இருவருக்கும் லாபம் சமமாக இருக்கும். உங்களுக்குப் பூமிக்குக் கீழே விளைவது வேண்டுமா? மேலே கிடைப்பது வேண்டுமா?" என்று கேட்டான், கூட்டாளி. குருவும் சீடர்களும் தனியாகச் சென்று யோசித்தார்கள். "குருவே! பூமிக்கு மேலே இருப்பது வேண்டாம்! அதை யார் காவல் காப்பது? பூமிக்கு அடியில் இருப்பதையே எடுத்துக் கொள்வோம். எல்லாம் பத்திரமாக இருக்கும்!" என்றனர் சீடர்கள். சீடர்கள் பேச்சை நம்பிய பரமார்த்தரும், "பூமிக்குக் கீழே இருப்பது எல்லாம் எங்களுக்கே!" என்று கூறி விட்டார். ஏமாற்ற நினைத்த கூட்டாளியோ, சோளம், கம்பு, கேழ்வரகு என்று மண்ணுக்கு மேலே கிடைப்பவையாகப் பயிரிட்டான்! செடிகள் நன்றாகச் செழித்து வளர்வதைக் கண்ட பரமார்த்தர், "பலே! மண்ணுக்கு மேலேயே இவ்வளவு செழிப்பாக இருந்தால், அடியில் இன்னும் வளமாகக் காய்க்குமே! இந்தத் தடவை நமக்கு நல்ல லாபம் நிச்சயமாகக் கிடைக்கப் போகிறது!" என்று மகிழ்ந்தார். சீடர்களும் நம் கூட்டாளியும் நன்றாக ஏமாந்து போனான். நம்முடைய திட்டம் அவனுக்குப் புரியவில்லை! என்று நினைத்தனர். அறுவடைக் காலம் வந்தது. குருவையும் சீடர்களையும் அழைத்து வந்த கூட்டாளி, "இதோ பாருங்கள்! பேசிய பேச்சை மீறக்கூடாது. பூமிக்கு அடியில் இருப்பதை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள். மேலே இருப்பதை மட்டும் நான் கொண்டு போகிறேன்" என்று கூறினான். அவன் எல்லாவற்றையும் அறுத்துச் சென்ற பிறகு, குருவும் சீடர்களும் வெறும் மண்ணைக் கிளற ஆரம்பித்தார்கள். எங்கு தோண்டினாலும் வெறும் வேர் மட்டுமே இருந்தது. "குருவே! மோசம் போனோம்!" என்று அலறினான் மட்டி. "ஏதோ மாய வேலை நடந்து விட்டது!" என்று அழுதான் மடையன். "குருவே! பாதாள உலகத்தில் இருப்பவர்கள் தான் எல்லாவற்றையும் அடியிலிருந்தே திருடிக் கொண்டு போய் விட்டார்கள்!" என்றான் முட்டாள். "இத்தனை நாட்கள் கஷ்டப்பட்டு உழைத்தோம். எல்லாம் பாழாகி விட்டதே!" என்று வருத்தப்பட்டார், பரமார்த்தர். "குருதேவா! அடுத்த முறை பயிர் செய்யும் போது மேலே இருப்பதை நாம் எடுத்துக் கொள்வோம். நாம் ஏமாந்தது போல அவனும் ஏமாற வேண்டும்!" என்றான் மூடன். அடுத்த முறை பயிர் செய்யும் காலம் வந்தது. இந்தத் தடவை மண்ணுக்கு மேலே இருப்பது எல்லாம் எங்களுக்கு!" என்று கூறிவிட்டனர், குருவும் சீடர்களும். மறுபடியும் ஏமாற்ற நினைத்த கூட்டாளி, இந்தத் தடவை வேர்க் கடலையும் மரவள்ளிக் கிழங்கும் பயிர் வைத்தான். குருவும் சீடர்களும் கடுமையாக உழைத்தார்கள். "குருவே! செடிகள் வளமாக வளர்கின்றன. கொள்ளை லாபம் கிடைக்கப் போகிறது!" என்றான் மண்டு. அறுவடை நேரம் வந்தது. "சீக்கிரம் மேலே இருப்பதை எல்லாம் கொண்டு போங்கள். நான் மண்ணை தோண்ட வேண்டும்" என்றான் ஏமாற்றுக்காரன். செடியில் ஒன்றுமே காய்க்காததைக் கண்ட சீடர்கள், வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டனர். "குருதேவா! இந்தத் தடவையும் மோசம் போய் விட்டோம்!" என்று கண்ணீர் விட்டான் மட்டி. "இரவு பகலாகக் காவல் காத்தும் பயனில்லாமல் போச்சே!" என்றும் புலம்பினான் மடையன். இது ஏதோ சைத்தான் வேலையாகத்தான் இருக்கும்!" என்றான் முட்டாள். பரமார்த்தர், தனிமையில சிந்தனை செய்து ஒரு முடிவுக்கு வந்தார்! "சீடர்களே! இது சைத்தான் வேலையுமல்ல; சனீஸ்வரன் வேலையுமல்ல! எல்லாம் நான் செய்த தவறுதான்!" என்றார். "என்ன! நீங்கள் செய்த தவறா? என்ன அது?" என்று சீடர்கள் வியப்போடு கேட்டனர். "மரத்தடியில் படுத்துத் தூங்கியபோது, புத்தி வந்ததாகக் கூறினேன். அது தவறு. அந்த மரம் பூவரசம் மரம் இல்லை என்பது தான் நேற்று தான் தெரிந்தது. வேறு ஏதோ ஒரு மரத்தடியில் மாறிப் போய்த் தவறுதலாகத் தூங்கி விட்டேன்! வாருங்கள், உண்மையாக பூவரசம் மரத்தடிக்குப் போவோம்!" என்றார். சீடர்களும், "பூவரசம் மரமே! புத்தி கொடு!" என்று மீண்டும் தவம் செய்யத் தொடங்கினார்கள்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'பூவரசம் மரமே புத்திகொடு' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: பள்ளிவாசலில் தொழுகை நேரம். முஸ்லீம்கள் பலர் ஒன்று சேர்ந்து தொழுகையில் பங்கு கொண்டு வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில் முல்லாவும் இருந்தார். தொழுது கொண்டிருந்த ஒருவன் திடீரென்று தனக்கு அருகே தொழுகையில் ஈடுபட்டிருப்பனைப் பார்த்து ” அடடா நினைவு மறதியினால் என் வீட்டுக் கதவை மூடாமல் வந்து விட்டேன் ” என்றான். ” தொழுகை நேரத்தில் நீ பேசியதானல் என் பிரார்த்தனையைக் கலைத்து விட்டாய். அதனால் நீ மறுபடியும் தொழுது பிரார்த்தனை செய்ய வேண்டும் ” என்றான் அவன். ” நீயுந்தான் இப்போது என்னுடன் பேசி பிரார்த்தனையைக் கலைத்துக் கொண்டாய். நீயுந்தான் மீண்டும் தொழுகையில் ஈடுபட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும் ” என்றான் மற்றவன். அவர்கள் உரையாடலைக் கேட்டு முல்லா மெல்லச் சிரித்தார். ” ஏன் சிரிக்கிறீர் ” என அந்த இருவரும் கேட்டனர். ” பொதுவாக மனித சுபாவத்தை நினைத்துப் பார்த்ததும் சிரிப்பு வந்துவிட்டது. மனிதன் தான் ஒழுங்காக முறையாகப் பிரார்த்தனையில் ஈடுபடுவதைவிட மற்றவன் ஒழுங்காகப் பிரார்த்தனை செய்கிறானா என்பதைக் கவனிப்பதில் அதிக அக்கறை செலுத்துகிறான் ” என்றார் முல்லா. அந்த இரண்டு பேரும் வெட்கமடைந்து தலைகுனிந்து கொண்டார்கள்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'பிரார்த்தனையும் மனிதனும்!' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: தினசரி அதிகா​லையில் கிருஷ்ண​தேவராயருக்கு முகம் மழிப்பதற்கு சவரத் ​தொழிலாளி ஒருவன் அரண்ம​ணைக்கு வருவது வழக்கம். தினசரி கா​லையில் முகத்​தை மழித்து முடி​யைத் திருத்துபவராதலால் அந்தத் ​தொழிலாளியிடம் ​வேடிக்​கையாக எ​தையாவது​ பேசுவது கிருஷ்ண​தேவராயரின் வழக்கம். அவனும் மன்னர் ​கேட்கும் ​கேள்விகளுக்கு இணக்கமாகப் பதிலு​ரைப்பான். ஒருநாள் அவன் கிருஷ்ண​தேவராயருக்கு முகம் மழித்துக் ​கொண்டிருக்கும் ​போது,”நீ நாட்டு மக்களிடம் சகஜமாகப் பழகுபவனாயிற்​றே. நமது நாட்டு மக்களின் வாழ்க்​கைத் தரம் எந்த நி​லையில் இருக்கிறது என்று உனக்குத்​ தெரிந்திருக்கு​மே என்றார். ”​ மேன்​மை தாங்கிய மகாராஜா அவர்க​ளே! தங்களு​டைய ஆட்சியில் மக்கள் நன்கு சுபிட்சமாக இருக்கின்றனர். மக்களின் ஒவ்​வொருவர் இல்லத்தில் கு​றைந்தபட்சம் எலுமிச்சம்பழம் அளவிற்குத் தங்கம் இருக்கிறது. அதனால் எவரும் கவ​லையில்லாமல் இருக்கின்றனர்” என்றார் சவரத்​தொழிலாளி. சவரத்​ தொழிலாளி ​சென்ற பின்னர் எப்​போதும் ​போன்று மன்ன​ரைக் காண அப்பாஜி வந்தார் அப்பாஜியிடம் சவரத் ​தொழிலாளி கூறிய​தை மன்னர் கூறினார். ”இவன் இப்படிக் கூற என்ன காரணம்? இவன் ​சொன்னது ​போன்று எப்படி ​எல்லோரிடமும் எலுமிச்சம்பழ அளவில் ​பொன் இருக்கும்? எலுமிச்சம்பழ அளவு ​பொன் என்பது சாதாரண மக்கள்​ வைத்திருக்க முடியாது! ​பெரும் பணக்காரர்களிடத்தில் அல்லவா இருக்கும். ஆ​கையினால் இதுபற்றித் ​தெரிந்து ​கொள்ள ​வேண்டும்!” என்று வினவினார். ”இதற்கு வி​ரைவில் வி​டை​யைக் கூறுகி​றேன்” என்று அப்பாஜி மன்னரிடம் கூறிவிட்டுச் ​சென்றுவிட்டார். மறுநாள் வழக்கம்​போல் சவரத் ​தொழிலாளி அரண்ம​னைக்கு வந்து கிருஷ்ண​தேவராயருக்கு முகம் மழித்துக் ​கொண்டிருந்தான். அச்சமயம் அப்பாஜி, காவலர்க​ளை அ​ழைத்து ”சவரத் ​தொழிலாளியின் இல்லத்​தை ​சோத​னை ​செய்துவிட்டு வி​ரைவில் வாருங்கள்” என்று கட்ட​ளையிட்டார். காவலர்கள் சவரத் ​தொழிலாளியின் இல்லத்திற்குச் ​சென்று ​சோத​னை ​செய்த​போது, அடப்பப் பெட்டியில் எலுமிச்சம்பழ அளவுக்கு ​பொன் இருப்ப​தைக் கண்டு வந்து கூறினர்.அத ​னை மன்னரிடம் ​கொடுத்துவிட்டு, மன்னர் ​பெருமா​னே! அடுத்த நாள் சவரத் ​தொழிலாளி வந்ததும், முதலில் ​கேட்டது ​போன்று ​கேளுங்கள். அவனிடமிருந்து ​வேறு விதமான பதில் கி​டைக்கும்” என்றார் அப்பாஜி. வழக்கம் ​போல் கா​லை கிருஷ்ண​தேவராயருக்கு முகம் மழிக்க சவரத் ​தொழிலாளி வந்தமர்ந்தான். வரும்​போ​தே அவனது முகம் வாடியிருந்தது. அவன் தனது ​வே​லை​யை ஆரம்பிக்கும் சமயம், ”இப்​​பொழுது குடிமக்கள் எவ்வாறு இருக்கிறார்கள்? ஏதாவது மாறுதல் உண்டாகியிருக்கிறதா?” என்று வினவினார் மன்னர். ”​பெருமதிப்பிற்குரிய மகாராஜா அவர்க​ளே! அ​தை ஏன் ​கேட்கின்றீர்கள்? எல்​லோரும் மனக்கலக்கத்துடன் இருக்கின்றனர். ​ கையில் இருக்கும் எலுமிச்சம் பழ அளவு தங்கத்​தை இழந்துவிட்டால் மக்கள் எப்படி மகிழ்ச்சியுடன் வாழ முடியும்?” என்று சவரத்​ தொழிலாளி கண்களில் நீர் மல்க ​தொண்​டை அ​டைக்கக் ​கூறினான். அச்சமயம் வந்த அப்பாஜி, ”மன்னர் ​பெருமா​னே! இப்​போது வி​டை ​தெரிந்து விட்டதா? உலகத்திலுள்ள ஒவ்​வொருவரும் தன்னு​டைய மன இயல்புக்கு ஏற்பதான் மற்றவர்களின் நி​லை​யை நிர்ணயிக்கின்றனர். தன்​னைப் ​போல்தான் பிறரும் இருப்பார்கள் என்று நி​னைக்கின்றனர். தான் நல்ல வருமானத்துடன் வாழ்ந்தால் மற்றவர்களும் அப்படித்தான் வாழ்வார்கள் என்றும், தான் கஷ்டநி​லையில் வாழ்ந்தால் மற்றவர்களும் கஷ்டத்துடன் தான் வாழ்கிறார்கள் என்று மனப்பக்குவத்தில் வாழ்கின்றனர்” என்றார் அப்பாஜி. உட​னே காவல​னை அ​ழைத்து, ”கஜானாவில் பாதுகாப்புடன் இருக்கும் எலுமிச்சம்பழ அளவு ​பொன்​னைக் ​கொண்டு வந்து சவரத் ​தொழிலாளியிடம் ​கொடுங்கள்” என்று ஆ​ணையிட்டார் மன்னர். ​ கொண்டு ​கொடுத்த ​பொன்னுடன் சிறிது ​பொன்னும் பரிசாகச் சவரத் ​தொழிலாளிக்குக் ​கொடுத்தார். அவனும் மனம் மகிழ்ந்து பணிவுடன் வணங்கி இன்முகத்துடன் ​வாங்கிச் ​சென்றான். மனித இயல்​பை விளக்கிக் காட்டிய அப்பாஜியின் அறிவுத் திற​மை​யைப் பாராட்டினார் கிருஷ்ண​தேவராயர்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'தன்​னைப் ​போல்தான் வாழ்வார் உலகிலுள்​ளோர்களும்' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: வெள்ளம், நாயகன், தினகரி, தினகரியின் அம்மா, வீட்டுக்காரர், பொண்ணு, பையன், வாட்ச்மேன், துண்டை தலைப்பு: வெள்ளம்
பாலம் நெருங்க நெருங்க இன்னொரு உலகத்தின் நுழைவது மாதிரி இருந்தது. இரண்டு ஓரத்திலும் நின்று பாலத்தின் கீழ் பார்த்துக் கொண்டிருந்தார்கள். வண்டியின் சக்கரம் நகர நகர, ஆறு புரண்டு கொண்டிருந்தது தெரிந்தது. வழக்கமாக ஆற்றுக்கு நடுவில் உறை இறக்கி, யாராவது இரண்டு பேர் வெளியில் மொண்டு குளித்துக்கொண்டு இருப்பார்கள். ஒரு ரிப்பன் போல தண்ணீர் நெளிந்து கொண்டு கிடக்கும். தலை சிதைந்த பாம்புபோல அந்த இடத்திலேயே ஈரம் கிடந்து தத்தளிப்பது இவ்வளவு அகலமும் நீளமுமான பாலத்தில் இருந்து பார்க்க கஷ்டமாக இருக்கும். இன்னொரு பக்கம் பூராவும் சலவைத் துறை. ஆற்றின் நடுப்படுகையிலேயே துணி உலர்ந்து கொண்டிருக்கும். காற்றின் விசிறலில் துணிகளின் நீள அகலங்களில் அலை எழும்பிப் படபடக்கும் போது மடியிலிருந்து தடவி எடுத்துக் கொண்டது போல இருக்கும். யாராவது இதுதான் பாடல்பெற்ற அந்த ஆறு என்று சொன்னால் நம்ப முடியாது. ஆனால் இன்று நம்பும்படியாக இருக்கிறது. அந்தப் பழைய பெயரைப் புதுப்பித்துக் கொண்டதுபோல கரையற்றுச் சீறிக்கொண்டிருந்தது. தன்னுடைய பெயரைத் தானே சொல்லிக் கொண்டு, நான்தான் நான்தான் என்று நிரூபிப்பதுபோல, புத்தம்புதிதாக நுரை தெறித்துக் கொண்டிருந்தது. வெள்ளம் அப்படி உரக்கக் கத்தக் கத்த, கத்தலின் எதிரொலி மீண்டும் வெள்ளத்தில் கனத்து வந்து விழுந்து, விழுந்த இடத்திலிருந்து நீர் சுழன்று சுழன்று நாலாபுறமும் தெறித்தது. செம்மண்ணும் செங்காவியுமாக நிறத்தைக் கரைத்துக்கொண்டு அப்படியே வானத்தோடு போய் அப்பிக் கொள்வதுபோல தண்ணீர் முட்டிக்கொண்டு இருந்தது. கருத்த மேகங்கள் வெள்ளத்தில் இறங்கிக் கொண்டிருந்ததா அல்லது தண்ணீர் சுருண்டு மேலே ஏறிக் கொண்டிருந்ததா தெரியவில்லை. "அம்மாவைக் கொண்டுவந்து காட்டுங்க "ப்பா" - தினகரி பின்னால் இருந்து கொண்டே சொன்னாள். "காலேஜூக்கு லீவ் போட்டிடுறியா" - நிஜமாகவே கேட்டேன். "பரீட்சை இல்லாவிட்டால் இங்கேயே நின்றுவிடலாம்" தினகரி சொல்லும்போது எனக்கும் அப்படித்தான் இருந்தது. இது போன்ற நேரத்தில் அலுவலகம் போகக் கூடாது. கல்லூரி போகக்கூடாது. சமைக்கக்கூடாது துவைக்கக் கூடாது. வெள்ளம் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும். வெள்ளம் மட்டும் தானா. மழை பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும். மழையும் பெய்யாமல் வெயிலும் அடிக்காமல் இருக்கிற நாட்களில் தட்டான்கள் பறப்பதை பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டும். கடற்கரையில் அலை நனைத்துக் கொண்டு நிற்கவேண்டும். தம்பி கையை தினகரி பிடித்துக்கொள்ள தினகரி விரல்கள் அம்மா கையை கவ்வி இருக்க கவ்வின கையில் என்கை புதைத்துக்கொண்டு, மலையின் சரிவுகளில், சருகுகுளை மிதித்துக் கொண்டு நடந்து கொண்டே இருக்கவேண்டும். கல்தூண்கள் நிரம்பிய கோவில் பிரகாரங்களில் உட்கார்ந்திருக்க வேண்டும். நிலாச்சாப்பாடு சாப்பிட என்று மொட்டை மாடிக்குப் போய், அப்புறம் நிலாவைப் பார்க்காமல் உட்கார்ந்திருக்க வேண்டும். தம்ளர்கள், தண்ணீர்ச் செம்பு, சாப்பிட்ட தட்டுகள் போல வேறு சிலசில பாத்திரங்களாக மாறி அவரவர் நினைவில் வேர்விட்டு இருட்டில் முளைக்க வேண்டும். இப்படி நல்லதும் கெட்டதுமாய் எவ்வளவோ தோன்றுகிறது. ஆனால் அது எல்லாம் நடக்கக்கூடியதா என்ன. அலுவலகக் கதவும் பள்ளிக்கூடத் கதவும், சமையல் கட்டுக் கதவும் அகலமாகத் திறந்து கொண்டிருக்கையில் இதையெல்லாம் அவ்வப்போது இப்படி நினைத்துக் கொள்ள வேண்டியது தான். "என்னைக் கொண்டுபோய்க் காலேஜில் விட்டுட்டு அம்மாவைக் கூட்டிக்கொண்டு வந்து காண்பியுங்க அப்பா" தினகரி வெள்ளத்தைப் பார்த்துக் கொண்டேதான் சொல்லியிருக்கவேண்டும். எல்லோரும் வெள்ளத்தை மட்டும் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். பக்கத்தில் நிற்கிறவரை யாரும் பார்க்கவில்லை. யாருடனும் பேசவில்லை. தனித்தனியாக வெள்ளம் ஒவ்வொருவரையும் தன்னோடு கூட்டிக்கொண்டு போய்விடும் போல. சில்லென்ற குளிருக்குச் சேலையைப் போர்த்திக் பல்லில் கடித்துக் கொண்டிருந்த முகத்தில் வெள்ளம் தளும்பிக் கொண்டிருந்தது. புத்தகப் பையுடன் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த பையனை சைக்கிள் காரியரில் வைத்துக் கொண்டு காலை ஊன்றிப் பார்த்துக் கொண்டிருந்தவர் முகத்தில் தளதளவென்று ஈரம் சிலுப்பி அலையடித்தது. வடக்கு வளவுத் தாத்தா உன்னைத் தூக்கிட்டுப் போய் நம்ம ஊரிலே வெள்ளம் காண்பிச்சது எல்லாம் ஞாபகம் இருக்கா? - இன்றைக்கு மட்டுமல்ல. தினகரியை இதற்கு முன்பு எத்தனையோ தடவை கேட்டாயிற்று. ஒவ்வொரு தடவையும் சிரிக்க மட்டும் செய்திருக்கிறாள். பார்த்ததாகவும் எடுத்துக் கொள்ளலாம். பார்க்கவில்லை என்றும் எடுத்துக் கொள்ளலாம். அப்படி ஒரு சிரிப்பு. அவள் ஒன்றரை வயதுக் கைப்பிள்ளையாக இருக்கும்போது பார்த்தது என்ன ஞாபகம் இருக்க முடியும்? ஆனால் அரசரடிப்பாலம் முங்க முங்க, பேட்டை ரோடு வரை தண்ணீர் வந்த அந்த வெள்ளம் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. தினகரியின் விவரிக்க முடியாத ஞாபகங்களின் மடிப்புகளில் கண்டிப்பாக அந்த வெள்ளம் எங்கேனும் ஈரமாக ஒளிந்திருக்கும் என்றே தோன்றுகிறது. எப்போதாவது சொல்வாள். சொல்லாவிட்டாலும் ஒரு ஈரம் இன்னொரு ஈரத்தையும், ஒரு தீ இன்னொரு தீயையும் உடனடியாகத் தொட்டுவிடும்படியாக ஏதேனும் சங்கிலிகளை அவளுக்குள் வைத்திருக்கும். "அம்மாவைக் கூட்டிக் கொண்டாந்து காட்டுங்க "ப்பா" என்று சொல்வது கூட அப்படி ஒரு ஈரம் அல்லாமல் வேறு என்ன. காட்டணும் தான். காட்ட வேண்டும் கூட சதா வீட்டுவேலை என்று இருக்கிற பெண்களை இப்படிக் கொஞ்சநேரம் மழையிலும், பணியிலும், மலையடிவாரத்திலும், அருவிக் கரையிலும் நிறுத்தினால் நன்றாகத்தான் இருக்கும் தினகரி அம்மா மட்டுமல்ல. எல்லோருடைய முகமும் அப்படி இருக்கும்போது கொள்கிற தோற்றமும் வேறு. குறுக்குத்துறை முன்னடித்துறையில் பித்தளைக் குடத்துடன் படியேறுகிற முகம், குடையும் வைத்துக்கொண்டு நனைந்தும் வந்துகொண்டிருந்த முகம், கட்டுமானம் ஆகிக்கொண்டிருக்கிற கட்டிடத்துக்குள்ளேயே தலையில் வைத்த துணிச்சுருளையும் பாண்டுச் சட்டியும், சிமெட்டிப் பாலுமாக நிற்கிற முகம், கரியும் கலர் சாக்பீஸ் கட்டியுமாக இரண்டு மணி நேரமாக நடுரோட்டில் வரைந்த படம் கொஞ்சம் கொஞ்சமாக மழையில் கரைவதையும், ஈயத்தகடு போல வீசப்பட்டிருந்த நாணயங்களின் மேல் மழைத் தண்ணீர் விழுவதையும் ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொண்டிருக்கிற, இடுப்பில் பிள்ளை வைத்திருக்கிற நைந்த முகம், ஆட்டோவிலிருந்து இறங்கி, வீட்டுக்குள் வருவதற்குள் நனைந்துவிட்ட சிரிப்பு முகம், மேலே ஒரு பாறை விளிம்பில் இருந்து, கீழே புரள்கிற கடலையே பார்த்துக் கொண்டிருக்கிற சிவப்புப் புடவை கட்டின கருகமணிப் பாசிமுகம். இப்படியெல்லாம், எல்லோரும் அழகாகத்தான் இருக்கிறார்கள். தினகரி அம்மாவும் அப்படித்தான் இருப்பாள். இப்போது மறுபடியும் வீட்டுக்குப்போய், அவளை இவ்வளவு தூரம் கூப்பிட்டுக் கொண்டுவந்து காண்பித்து, மறுபடியும் வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு அலுவலகம் போக முடியாது. நேரமாகிவிடும். ஏற்கனவே இன்று தாமதம். இன்னும் கொஞ்சம் நின்று பார்க்கலாம் என்று தோன்றுகிற நாட்களில் தான் இதைவிடச் சீக்கிரமாய் போகவேண்டும்படி ஏதாவது ஒரு நிர்ப்பந்தம் வந்துவிடுகிறது. ஏற்கனவே நிர்ணயித்து வைத்திருந்த வேலைகள் அலுவலகத்தில் இப்போது காத்திருக்கும். சாயந்திரம் கண்டிப்பாகக் கூப்பிட்டுக்கொண்டு வரவேண்டும். மறுபடியும் தினகரி, தினகரி அம்மா என்று இந்த இடத்தில் நிற்க வேண்டும். கங்கையும், யமுனையும் ருத்ரப் பிரயாகையும் திரிவேணி சங்கமும் இதுதான். பெயர் இழந்து, பெயர் அழிந்து, பெயர் புனைந்து ஓடுகிற மகாநதியின் ஏதாவது ஒரு கரையில் நிற்கவேண்டும் இதுதான் அந்த நதி. அந்தக் கரை. யோசித்துக்கொண்டே ஓட்டும்போது, பாலம் பின்னால் போயிற்று. "ஹோ" என்கிற காவிச்சுழிப்பு எட்டுத்திசையிலும் கைபரப்பிக் கொண்டிருந்தது. பார்வையில் விழுந்தது ஒரு பகுதியின் ஏதோ ஒரு தெறிப்பு, ஏதோ ஒரு நுரை எனினும் என்கூடவே ஆறு வந்தது. இரண்டு சக்கரங்களுக்கு அடியில் வெள்ளம் கீறிப்பிளந்து வகிடு எடுத்து உறுமுவதுபோல இருந்தது. குனிந்தால் கையில் அள்ளிவிடுகிற அண்மையில் தண்ணீர்த் தகடு அலைந்தது அன்றைக்கு முழுவதும் அலைச்சலாகத்தான் போயிற்று. அலுவலகத்தில் நுழைந்ததுதான் தெரியும். வேலை ஆளை உள்ளே இழுத்தது. அது இன்னொரு மாதிரி வெள்ளம். இன்னொரு மாதிரிக் கசம்.. வெறும் மணல்திட்டு மாதிரிக்கிடக்கிறதே சற்று உட்காரலாம் என்று நினைத்தால் திடீரென்று ஆளை முக்குகிறமாதிரி அடித்துப் புரண்டு கொண்டு வரும், வேலை இருக்கிறது என்று தயாராகி நின்றால், மருத மரத்தையும், பாசஞ்சர் ரயிலையும் பார்த்துக் கொண்டு நிற்கவைத்து, கரண்டையை நனைக்கிற அளவு நகர்ந்துகொண்டுபோகும். ஒன்று மாற்றி ஒரு சிக்கல், ஒரு சிக்கலை எடுப்பதற்குள் இன்னொரு முடிச்சின் இறுகல் என்று தொட்டுக் கொண்டேபோய், பழைய புள்ளி விபரங்கள், கணக்கெடுப்புக்கள், விவாதங்கள், தட்டச்சுக்கள், ஒப்புதல்கள், மீண்டும் விவாதங்கள், தொலைபேச்சுக்கள், மறு ஆலோசனைகள், கையெழுத்துக்கள், இடையில் தேநீர், மறுபடி தேநீர் என்ற இரவு பத்தாகி விட்டது. எப்போது இருட்டு விழுந்தது என்று தெரியவில்லை. இரண்டாவது "ஷிப்ட்" காவலர்கள் "பஞ்ச்" செய்துகொண்டிருந்தார்கள். எல்லா மேஜைகளிலும் ஃபைல்கள், மின்விளக்கு விசிறிக் சுழற்சி. வண்டியை ஷெட்டிலிருந்து எடுக்கும்போது மழைபெய்து கொண்டுதான் இருந்தது. வாட்ச்மேன் குனிந்து பிளாஸ்டிக் குவளையில் பாலூற்றிக் கொண்டிருந்தார். பிறந்து இரண்டு நாள் இருக்குமா தெரியவில்லை. நாய்க்குட்டிகள் ஐந்தாறு முட்டிக் கொண்டு இருந்தன. ஒரு சமயம் எல்லாம் அழகாக இருப்பதுபோல இருந்தது. எல்லாம் சரியாக இருப்பதுபோல் இருந்தது. வாட்ச்மேனைத் தொந்தரவு செய்ய மனமில்லை. இறங்கிப் போய் கதவை திறந்து, மறுபடி சாத்தி வெளியேறுகையில் மழை மீண்டும் வலுக்க ஆரம்பித்திருந்தது. நிற்கத் தோன்றவில்லை நனைய நனைய மேலும் விரைவு கொள்கையில் நடமாட்டம் குறைவான பாதையின் சரிவுகளில் தண்ணீர் ஓட ஆரம்பித்திருந்தது. தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களாய்ப் பெய்கிற மழையில் ஒரு குளிரின் கனத்த திரை இறங்கியிருந்தது. வெள்ளம் இன்னும் அதிகரித்துவிட்டிருக்கும் என்று தோன்றியது. இன்றைக்கு முடியவில்லை. நாளைக்குக் காலையாவது தினகரி அம்மாவைக் கூப்பிட்டுக் கொண்டுப் போய்க்காட்ட வேண்டும். ஒரு வேலை தினகரியே இதற்குள் அம்மாவைக் கூட்டிக்கொண்டு போயிருப்பாளோ. தினகரியும் அம்மாவும் குடையில் போவது மாதிரி, ஒரு குடைக்குள் இரண்டு பேரும் ஒடுங்கிக் கொண்டு பாலத்தின் மேல் நிற்கிற மாதிரி, அவர்களைத் தவிர யாருமற்ற பாலத்தில், அடர்ந்து இறங்குகிற மழையில் காணாமல் போன, தென்னை அசைவுகளும், கரையோரத் தோப்புகளுமாக அவர்கள் வந்து கொண்டிருக்கிற மாதிரி.... வீடு அதற்குள் வந்துவிட்டிருந்தது. மின்சாரம் இல்லைபோல. எங்கும் இருட்டாக இருக்கையில், வண்டியின் முன்விளக்கு வெளிச்சம் கற்றையாக அலைந்து எங்கெங்கு எல்லாமோ ஈரத்தில் விழுந்தது. ஹார்ன் அடிக்காமலேயே நான் வந்துகொண்டுவிட்டதைத் தெரிந்து, கதவைத் திறக்கும் போதே.... "நனைஞ்சுக்கிட்டா வாரீங்க" - என்று சத்தம் வந்தது. "துண்டை எடுத்துகிட்டு வாம்மா. அப்பா தலையை துவட்டிகிடட்டும்" என்று தினகரி பெயரைச் சொல்லி உத்தரவு போட்டது. பார்த்து வாங்க. இருட்டா இருக்கு என்று பத்திரப்படுத்தியது. "பார்த்து வீட்டுக்குள்ளே வாங்க. ஆட்கள் இருக்கு" நான் வீட்டுக்குள் நுழையும்போது ஹாலின் மத்தியில் ஒரு அரிக்கேன் லைட் பொருத்திவைக்கப்பட்டிருந்தது. என்னைப் பார்த்ததும் யாரோ இரண்டு பேர் எழுந்திருந்தார்கள். வணக்கம் சொன்னார்கள். சுவரோரமாக ஒரு பெண் குழந்தை சுருண்டு தூங்கிக் கொண்டிருந்தது. அந்த மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் பார்க்கும்போது என்னைப் பார்த்ததும் எழுந்திருந்து நின்றவர்களின் காலடியில் பதுங்கியிருந்த இருட்டுக்குள் அந்தக் குழந்தை படுத்திருப்பது போல இருந்தது. தலையை துவட்டுவதற்குத் துண்டை என் கையில் கொடுத்தவாறு சொல்ல ஆரம்பித்தாள். "பெரிய தெரு, நடுத்தெரு, வேம்படித்தெரு பூராவும் ஒரே வெள்ளக்காடாம். வீட்டுக்குள்ளே எல்லாம் தண்ணியாம். தறிக்குழி எல்லாம் தெப்பத்திலே நிற்குதாம். பாவு மட்டத்துக்கு முங்கிப்போச்சாம். நெசவு செஞ்சது பாதி நின்னது பாதியிண்ணு அப்படி அப்படியே விட்டுவிட்டு, எல்லா ஜனமும் தெருவுல நிக்கிதாம். பத்து அறுபது வருஷத்துல இவங்க கண்காண இப்படி ஒரு கஷ்டம் வந்தது இல்லையாம்." இதை இவள் சொல்லும்போதே இருட்டுக்குள் நின்றவர்கள் திடீரென்று பெருங்குரலில் அழ ஆரம்பித்தார்கள். முக அடையாளமே தெரியாமல் நிற்கிற அவர்களின் குரல் மட்டும் விக்கித்து ஒரு கூரான ஆயுதம்போல நெஞ்சில் செருகியது. "நாங்க இனிமே என்னம்மா ஐயா எந்திரிக்க போறோம்" என்று வாய்விட்டு அதே குரலில், நிர்ணயிக்க முடியாத வயது நடுங்கியது. எனக்கு அவர்கள் கையைப் பிடித்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது. "தெரிஞ்சவங்களோ, தெரியாதவங்களோ, நம்மளால் வேறு என்ன பண்ணமுடியப்போகுது. அந்தப் பச்சைப் பிள்ளையாவது படுத்துகிடட்டும்னு நான்தான் இவங்களை கூட்டியாந்தேன். பள்ளிக்கூடம் ரெம்பிக் கிடக்கு. கல்யாண மண்டபம் ரெம்பிக் கிடக்கு. நம்ம வீடும் ரெண்டு நாளைக்கு ரெம்பிக் கிடக்கட்டுமே" இதை சொல்லும் போது அவள் தினகரியைத் தன்னோடு அனைத்துக் கொண்டு நின்றாள். கை தினகரியின் தலையை வருடிக் கொண்டிருந்தது. இன்னும் அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். ஹரிக்கேன் லைட் வெளிச்சத்தில் அந்தச் சின்னஞ்சிறு பெண் குழந்தை ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தது. வயிறு இறங்கி ஏறியது. நான் பார்த்துக் கொண்டே இருந்தேன். வெள்ளத்தைப் பாலத்தின் அடியில்தான் பார்க்கவேண்டுமா என்ன?..
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: பரமார்த்தரு, பரமார்த்தகுருவின் சீடர்கள், முட்டாள், மூடன், மட்டி, நாட்டு அரசன், மந்திரிகள், தளபதி தம்புசாமி, அமைச்சர் அப்புசாமி, மந்திரி மலர்வண்ணன், இளவரசர் இந்திரன் தலைப்பு: ஓலைச் சுவடி பத்திரிகை
"குருநாதா! நாம் ஒரு ஓலைச் சுவடி பத்திரிகை ஆரம்பித்தால் என்ன?" என்று கேட்டான் முட்டாள். "பத்திரிகையா? அதனால் நமக்கு என்ன லாபம்?" என்றார் பரமார்த்தர். "தினம் தினம் நம்மைப் பற்றிப் புகழ்ந்து எழுதிக் கொள்ளலாம். நமக்குப் பிடிக்காதவர்களை விருப்பம் போல் திட்டலாம்" என்றான் மூடன். "அப்படியானால் நம் பத்திரிகைக்குத் ‘தினப் புளுகு" என்று பெயர் வைக்கலாம்" என்றார் குரு. "பெயருக்குக் கீழே "கெட்டிக்காரன் புளுகு - எட்டு நாள் உண்மை!" என்று போடலாம்" என்றான் மண்டு. அன்று முதல் பரமார்த்தரின் மடம், பத்திரிகை அலுவலகம் ஆயிற்று. பரமார்த்தர், ‘தினப் புளுகு" நாளிதழின் ஆசிரியராக பதவி ஏற்றுக் கொண்டார். மட்டியும், மடையனும் நிருபர்களாக நியமிக்கப்பட்டனர். இருட்டத் தொடங்கியதும், நிருபர்களான மட்டியும், மடையனும் வெளியே புறப்பட்டனர். அப்போது அந்த நாட்டு அரசன், நகர சோதனை செய்வதற்காக மாறு வேடத்தில் புறப்பட்டான். அதைக் கண்ட மட்டி, "அரசர் ஏன் மாறு வேடத்தில் போகிறார்?" என்று கேட்டான். "திருடுவதற்காக இருக்கும்" என்றான் மடையன். "ஒவ்வொரு வீடாக எட்டிப் பார்க்கிறாரே, ஏன்?" என்று சந்தேகம் கொண்டான், மட்டி. "எந்த வீட்டில் கொள்ளையடிக்கலாம் எனத் திட்டம் தீட்டுகிறார்" என்று விளக்கினான், மடையன் "அப்படியானால் இதைச் சும்மா விடக் கூடாது. முதல் பக்கத்திலேயே பெரிதாக எழுத வேண்டும்!" என்றான் மட்டி. மடத்துக்கு வந்ததும், திரட்டி வந்த செய்திகளை எழுதத் தொடங்கினார்கள். வேலியே பயிரை மேய்கிறது! பொதுச் சொத்தைக் கொள்ளையடிக்க அரசரே திட்டம்!! இரவு நேரத்தில், மாறு வேடத்தில் ஒவ்வொரு வீடாக எட்டிப் பார்த்தார். இந்தத் தலைப்பின் கீழ், அரசரைக் கண்டிபடித் தாக்கி எழுதினார்கள். "தேர்தலில் நம்மை எதிர்த்துப் போட்டி போட்டவர்களைச் சும்மா விடக்கூடாது. பழி வாங்கியே தீர வேண்டும்" என்றான் மண்டு. "மந்திரிகள் பேரிலும் ஊழல் பட்டியல் தயாரிப்போம்" என்று கத்தினான் மூடன். உடனே மட்டியும் மடையனும் கீழ்க்கண்டவாறு செய்திகளை எழுதினார்கள். அரசு பணத்தில் அட்டகாசம்! தளபதி தம்புசாமி குடித்து விட்டுக் கலாட்டா! அறிவுகெட்ட அமைச்சர் அப்புசாமி, ஆறு கட்டு சுருட்டு லஞ்சம் வாங்கினார். ஊழலோ ஊழல்! மந்திரி மலர்வண்ணன் மாடி வீடு கட்டிய மர்மம் என்ன? இளவரசர் இந்திரனின் லீலை! இளம் பெண்ணின் கையைப் பிடித்திழுத்து வம்பு! இதே போல் தங்களுக்குப் பிடிக்காதவர்களை எல்லாம் விருப்பம் போல் தாக்கி எழுதினார்கள். "நம்மைப் பற்றிக் கொஞ்சம் புகழ்ந்து எழுதிக் கொள்வோமே!" என்றான் முட்டாள். "என்ன எழுதுவது?" எனக் கேட்டான் மூடன். சுருட்டு மன்னர் பரமார்த்தரின் சாதனை! ஒரே நாளில் தொடர்ந்து முப்பது சுருட்டு பிடித்தார்! என்று எழுதினான், முட்டாள். ‘மண்ணில் புரளுவது எப்படி?" என்ற தலைப்பில் மண்ணில் புரளுவதால் உடல் நலம் ஏற்படும் எனப் பேட்டி கொடுத்தான் மட்டி! ‘தொப்பை வளர்ப்பது எப்படி?" என்ற ஆராய்ச்சிக் கட்டுரையை ‘அறிவியல்" பகுதியில் எழுதினார் பரமார்த்தர். ‘பரமார்த்தருக்குச் சிலை! மக்கள் போராட்டம்! ‘தத்துவத் தந்தை" பரமார்த்த குருவுக்கும், அவரது சீடர்களுக்கும் சிலை வைக்க வேண்டும் என்று கோரி, மக்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்தச் சிலையை அரண்மனைக்கு எதிரேதான் வைக்க வேண்டும் என்றும் மக்கள் கோஷமிட்டபடி ஊர்வலம் சென்றார்கள்!" இதே போல் ஒவ்வொருவருக்கும் தங்களைப் பற்றிக் கண்டபடி கிறுக்கி வைத்தனர். எல்லாவற்றையும் கொண்டு போய்ப் பரமார்த்தரிடம் கொடுத்ததும், "எல்லாம் நன்றாகத்தான் எழுதியிருப்பீர்கள். விடிந்ததும் விற்றுவிட்டு வாருங்கள்" என்று கூறிவிட்டுப் படுத்து விட்டார். பொழுது விடிந்ததும், சீடர்கள் பத்திரிகைகளை எடுத்துக் கொண்டு விற்கப் போனார்கள். ‘தினப் புளுகு வாங்கலையோ, தினப் புளுகு! நாலு பக்கம் நாற்பது காசு!" என்று கத்தினான் முட்டாள். சிலர் ஓடிவந்து ஓலையில் எழுதப்பட்ட பத்திரிகையை வாங்கிப் பார்த்தனர். செய்திகளைப் படித்து விட்டு அதிர்ச்சி அடைந்தனர். செய்தி, அரசருக்கும் மற்ற அமைச்சர்களுக்கும் எட்டியது. நீதி தவறாத மன்னனைப் பற்றியும், அவனது மந்திரிகளைக் குறித்தும் கண்டபடி தவறா எழுதியதற்காகப் பரமார்த்தர் மீதும், சீடர்கள் மீதும் ‘குற்றப்பத்திரிகை" வாசிக்கப்பட்டது. "பரமார்த்தரோ, "இதெல்லாம் உண்மை என்று யார் சொன்னது? பத்திரிகையின் பெயரைப் பாருங்கள்; ‘தினப் புளுகு" என்று தானே போட்டிருக்கிறோம்" என்று கூறினார். அதன் பின் குருவும், சீடர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: விவசாயி, விவசாயி மகன், கழுதை, வழிப்போக்கர்கள், குழந்தைகள் தலைப்பு: விவசாயி, மகன், கழுதை
ஒரு முறை விவசாயி ஒருவர் தன்னுடைய கழுதையை விற்று விடத் தீர்மானித்தார். அருகிலுள்ள கிரமாத்துக்குத் தன் கழுதையையும், மகனையும் அழைத்துக் கொண்டு சென்றான். அவர்கள் இருவரும் கழுதையை இழுத்துக் கொண்டு நடந்தே போனார்கள். செல்லும்போது அதைப்பார்த்த வழிப் போக்கர் ஒருவர் இவர்களைப் பார்த்துச் சிரித்தார். பிறகு, ‘கழுதை சும்மாதானே செல்கிறது. யாராவது ஒருவர் அதன் மீது ஏறிச் செல்லலாமே" என்றார். அதுவும் சரியென்று தந்தை மகனை கழுதையின் முதுகில் ஏற்றி விட்டார். சிறிது தூரம் சென்றதும் எதிரே வந்த ஒருவர், ‘ஏனப்பா வயதான தந்தையை இப்படி நடக்க வைத்து விட்டு, நீ கழுதையின் மேல் அமர்ந்து செல்வது நியாயமா?" என விவசாயி மகனைப் பார்த்து கேட்டார். உடனே மகன் கீழே இறங்கிக் கொண்டு தந்தையை கழுதை மீது அமரச் சொன்னான். தந்தையும் அவ்வாறே செய்தார். இப்படியாக இன்னும் சிறிது தூரம் பயணித்த பிறகு, இன்னொருத்தர் தந்தையை பார்த்து கடிந்து கொண்டார். ‘ஏனய்யா இப்படி சின்ன பிள்ளையை நடக்க விட்டு நீங்கள் கழுதை மேல் பயணிக்கலாமா?" என கேட்டார். தந்தையும் மகனும் ஆளாளுக்கு இப்படிச் சொல்கிறார்களே என்ன செய்வது என பலவாறாக யோசித்து முடிவில் இருவருமே அந்த கழுதையிம் முதுகில் ஏறிச் செல்வோம் என ஏறிக் கொண்டனர். சிறிது தொலைவு சென்றதும், இரண்டு பேருமாக கழுதை மீது அமர்ந்து செல்வதைப் பார்த்த சிலர், ‘அடக் கொடுமையே இப்படியா இந்த வாயில்லா பிராணியைத் துன்புறுத்துவார்கள். இவர்களுக்கு இரக்கமே இல்லையா?" என எள்ளி நகையாடினர். அவர்கள் பேச்சைக் கேட்டவுடன் விவசாயிக்கு மிகவும் கோபம் ஏற்பட்டது. உடனே இருவரும் கழுதையின் மீதிருந்து கீழே குதித்தார்கள். மனம் குழம்பிப் போன தந்தையும் மகனும், கழுதையைத் தூக்கிக் கொண்டு செல்வது தான் சிறந்தது என்று அவர்கள் இருவரும் தீர்மானித்தனர். மிகவும் சிரமப்பட்டுக் கழுதையின் கால்களைக் கட்டியபிறகு, ஒரு கொம்பில் அதைக் கட்டி அதைத் தோளில் தூக்கி வைத்துக் கொண்டு அவர்கள் தொடர்ந்து நடந்தனர். கிராமத்தை அடைவதற்கு முன்னால் ஆற்றின் மீதிருந்த ஒரு பாலத்தை அவர்கள் கடக்க வேண்டியிருந்தது. விவசாயியும் அவன் மகனும் மிகவும் சிரமப்பட்டுக் கழுதையைத் தூக்கிக் கொண்டு வரும் வினோதக் காட்சியை, ஆற்றுக்கு அக்கரையில் இருந்த குழந்தைகள் பார்த்துக் கைகொட்டிச் சிரித்தனர். பெரிய சத்தத்தைக் கேட்டுப் பயந்து போன கழுதை பெரிதாக துள்ளிக்குதிக்க ஆரம்பித்தது. அதைத் தூக்கிக் கொண்டு வந்த தந்தை, மகன் இருவரின் பிடியும் நழுவியது. அந்தப் பரிதாபமான கழுதை ஆற்று நீரில் தூக்கி எறியப்பட்டது! கால்கள் கட்டப்பட்டிருந்ததால் அதனால் நீந்த முடியவில்லை! அது இறக்க நேரிட்டது. இப்படி சுயமாக சிந்தித்து முடிவெடுக்காமல் அடுத்தவர் சொல்வதைக் கேட்டதால் தங்களுக்கு அடிபட்டதோடு கழுதையும் இறந்து போய்விட்டதே எனக் கவலை பட்டபடியே நடந்தனர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து. எல்லோரையம் திருப்திப் படுத்த முடியாது. சொல் புத்தியைவிட சுயபுத்தி மிக அவசியம்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: அக்பர், பீர்பால், நேர்மை, பால், பாத்திரம், தண்ணீர் தலைப்பு: மக்கள் நேர்மையானவர்களா?
ஒருநாள் அக்பர் தனது அரசவையில் கூடியிருந்தவர்களிடம், "எனது அரசாட்சியில் மக்கள் நேர்மைக்கு எடுத்துக்காட்டாக வாழ்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இது பற்றி உங்கள் கருத்து என்ன?" என்று கேட்டார் உடனே சபையிலிருந்த அனைவரும் "ஆம் அரசே… உங்கள் பொன்னான ஆட்சியில் அனைவரும் நேர்மையைக் கடைபிடிக்கின்றனர். இதை யாரும் மறுக்கவே முடியாது." என்றனர். ஆனால் பீர்பால் மட்டும் அமைதியாக இருப்பதைக் கண்ட அக்பர், "ஏன் மவுனமாக இருக்கிறாய் பீர்பால்…மக்கள் நேர்மையாக இருப்பதைப் பற்றி உன் கருத்து என்ன?" என்று கேட்டார். உடனே பீர்பால், "இதற்கு நான் பதிலளிக்க வேண்டுமென்றால், நீங்கள் ஒரு காரியம் செய்ய வேண்டும் அரசே…மக்கள் அனைவருக்கும் நீங்கள் விருந்து வைக்க வேண்டும். விருந்துக்கு வரும்போது ஒரு குடத்தில் பால் கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிட வேண்டும்," என அக்பரிடம் வேண்டுகோள் வைத்தார். பீர்பால் கேட்பதில் ஓர் உள்ளர்த்தம் இருப்பதை உணர்ந்து கொண்ட அக்பர், உடனே விருந்து பற்றி பொதுமக்களிடம் தெரிவிக்கும்படி உத்தரவிட்டார். தண்டோரா போட்டபடியே அனைத்து வீதிகளுக்கும் சென்ற அரசவை அறிவிப்பாளர், "நமது பேரரசர் அனைவருக்கும் விருந்து வைக்கிறார். விருந்துக்கு வருவோர் கண்டிப்பாக ஒரு குடத்தில் பால் கொண்டு வர வேண்டும். இது அரசு உத்தரவு," என்று உரத்த குரலில் அறிவித்தார். இதைக் கேட்டு குழப்பமுற்ற மக்களில் பலர், "அரசர் விருந்தளிப்பது மிகுந்த மகிழ்ச்சிக்குய விஷயம் தான். ஆனால் குடத்தில் எதற்காக பால் கொண்டு செல்ல வேண்டும்," என்று ஒருவரை ஒருவர் கேட்டுக்கொண்டனர். அங்கிருந்த பெண்கள், "சரி ஒரு குடம் பால் தானே…கொண்டு போய் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்" என்று குழப்பத்துடன் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தனர். அரசர் அறிவித்த விருந்து நடைபெறும் நாள் வந்தது. அக்பர், பீர்பால் உள்பட அரசவையில் முக்கியப் பதவிகளில் இருப்போர் அனைவரும் கூடியிருந்தனர். பீர்பால் ஏற்பாட்டின் படி, திடலின் பிரதான வாசலில் மிகப் பெரிய பாத்திரம் மூடி போட்டு வைக்கப்பட்டிருந்தது. மூடியில் பெரிய ஓட்டை போடப்பட்டிருந்தது. பொதுமக்கள் அனைவரும் உத்தரவின் படி தாங்கள் கொண்டுவந்த பாலை, மூடியிலிருந்த ஓட்டை வழியாக பாத்திரத்தில் கொட்டி விட்டு வெறும் குடத்துடன் திடலுக்குள் நுழைந்தனர். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அக்பர், "நீ சொன்னபடி செய்தாகிவிட்டது பீர்பால். இவ்வளவு பாலையும் என்ன செய்யப் போகிறோம்?" என்று கேட்டார். உடனே பீர்பால் காவலர்களைப் பார்த்து, "பாத்திரத்தை மன்னருக்கு அருகில் கொண்டு வாருங்கள்" என உத்தரவிட்டார். பாத்திரம் அருகில் கொண்டுவரப்பட்டதும், அதன் மூடியை அகற்றச் சொன்னார் பீர்பால். மூடி அகற்றப்பட்டதும் பாத்திரத்தைப் பார்த்த மன்னர், அதில் வெறும் தண்ணீர் மட்டுமே இருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனார். "பீர்பால்…என்ன இது, பால் இருக்க வேண்டிய பாத்திரத்தில் வெறும் தண்ணீர் உள்ளதே?" என அதிர்ச்சி மாறாமல் கேட்டார். ஆனால் இதை முன்பே எதிர்பார்த்தது போல நிதானமாக பேசிய பீர்பால், "மக்களின் நேர்மை பற்றி என்னிடம் நீங்கள் கேட்ட கேள்விக்கு இதுதான் பதில் அரசே! மற்றவர்கள் பால் கொண்டு வரட்டும், நாம் தண்ணீர் கொண்டு போய் பாத்திரத்தில் கொட்டினால் யார் கண்டுபிடிக்க முடியும் என்று ஒவ்வொருவரும் நினைத்துள்ளனர். எனவே தான் பாத்திரம் முழுதும் தண்ணீர் உள்ளது. கூட இருப்பவர்களின் பேச்சைக் கேட்டு எந்த முடிவுக்கும் வந்து விடக்கூடாது அரசே.." என்று சிரித்தபடியே கூறினார். பீர்பாலின் அறிவுக்கூர்மையை மெச்சிய அக்பர், அவரை ஆரத் தழுவிக்கொண்டார்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: சக்கரவர்த்தி அக்பர் திடீர் திடீரென உணர்ச்சிவசப்படுபவர்! அவர் எப்போது உற்சாகத்துடன் இருப்பார், எப்போது எரிந்து விழுவார் என்று சொல்ல முடியாது. பல சமயங்களில், அவரையே கேலி செய்வதுபோல் அமைந்துள்ள நகைச்சுவைத் துணுக்குகளைக் கேட்டும் கோபம் அடையாமல் சிரிக்கவும் செய்வார். ஆனால், சில சமயங்களில் சில சாதாரண துணுக்குகள் கூட அவரை கோபமுறச் செய்யும். தர்பாரிலுள்ள அனைவருக்கும் அக்பரின் அடிக்கடி மாறுபடும் மனநிலையைப் பற்றித் தெரியும். அக்பரின் பேகத்திற்கும் இது தெரியும். ஆனால், பேகம் அதைப் பொருட்படுத்தாமல் பல சமயங்களில் அவரைக் கிண்டல் செய்வதுண்டு. சிலசமயம் அவளுடைய கேலிப் பேச்சினால் கோபமடைந்தாலும், சக்கரவர்த்தி உடனே அவளிடம் சாந்தமாகி விடுவார் என்ற அனுபவம்தான் காரணம்! ஒருநாள் மாலை நேரம், அக்பரும் பேகமும் அந்தப்புரத்தில் அருகருகே அமர்ந்திருந்தனர். சாளரத்தின் வழியே வீசிய தென்றல் காற்றில் மல்லிகை மணம் தவழ்ந்தது. அதை அக்பர் வெகுவாக ரசித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரைக் கிண்டல் செய்ய வேண்டுமென்று பேகத்திற்குத் தோன்றியது. “ஏது! மல்லிகை மணம் உங்களை மயக்குகிறதோ? என்னிடம் இல்லாதது மல்லிகையில் அப்படி என்ன இருக்கிறது?” என்று வாயைக் கிண்டினாள். “ஆம்! மல்லிகை மணம் என்னை மயக்குகிறது. அதிலுள்ள மயக்கம் உன்னிடம் இல்லை!” என்றார் திடீரென எரிச்சலுற்ற அக்பர். “என்னைத்தான் நேசிக்கிறீர்கள் என்று நினைத்தேன். என்னைவிட மல்லிகை மீதுதான் மோகமா?” என்று பேகம் மீண்டும் வம்புக்கிழுத்தாள். “ஆமாம்! உன் மீது மோகம் இருக்கவேண்டுமென்று என்ன அவசியம்?” என்றார் மேலும் கோபமுற்ற அக்பர். “மனைவி என்ற முறையில் உங்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்க எனக்கு உரிமை உண்டு!” என்று பதிலளித்தார் பேகம். “அந்த உரிமை யாருக்கும் கிடையாது. நான் மற்றவர்களைப் போல் சாதாரண மனிதனில்லை. ஏனெனில் நான் சக்கரவர்த்தி!” என்று உரக்க முழங்கினார் அக்பர். “என்ன? எனக்குக்கூட கிடையாதா? நான் என்ன சாதாரணப் பெண்ணா?” என்றார் பேகம். அக்பர் தான் கேலியாகக் கேட்டதில் கோபமடைந்து விட்டார் என்று உணர்ந்த அவளுடைய கண்கள் பனித்தன. “அந்த ஸ்தானத்தை நீ இழக்கும் வேளை நெருங்கிவிட்டது!” என்று அக்பர் ஒரு குண்டைத் தூக்கிப் போட, அதை சற்றும் எதிர்பாராத பேகம் அழுதே விட்டாள். ஆனால், அவள் கண்ணிரைப் பொருட்படுத்தாத அக்பர், “என்னுடன் உனக்கான உறவு இன்றுடன் முடிந்தது. நீ உன் பிறந்தவீட்டுக்கு நாளைக்கே போய்விடு! உனக்குப் பிடித்த பொருள்களை நீ எடுத்துச் செல்லலாம்” என்று சொல்லிவிட்டு கோபத்துடன் வெளியேறி விட்டார். தன்னுடைய விளையாட்டு இப்படி வினையாகும் என்று சற்றும் எதிர்பாராத பேகம் துடிதுடித்துப் போனாள். ஏதோ கோபத்தில் கூறிவிட்டாரென்றும், விரைவில் அவர் கோபம் தணிந்து விடுமென்றும் தன்னை சமாதானம் செய்து கொண்டாள். ஆனால், அன்றிரவு அக்பர் அவளைத்தேடி அந்தப்புரத்திற்கு வரவேயில்லை. ‘ஐயோ, விஷயம் விபரீதமாகி விட்டதே!’ என்று பதைபதைத்துப் போன பேகம், மறுநாள் தன் தாதி மூலம் “நான் உங்களுடைய மனத்தை என் கேலிப்பேச்சினால் புண்படுத்தியதற்கு மிகவும் வருந்துகிறேன். தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்” என்று கடிதம் எழுதிஅனுப்பினாள். ஆனால், அக்பர் “உங்கள் பேகத்தைப் பெட்டி, படுக்கைகளுடன் நாளையே கிளம்பச் சொல்!” என்று இரக்கமின்றி பதில் சொல்லி அனுப்பினார். அதைக்கேட்டு இடி விழுந்தது போலான பேகம், அளவற்ற கோபமடைந்தத் தன் கணவரை எப்படி சமாதானப்படுத்துவது என்று வழிதெரியாமல் தவித்தாள். கடைசியில் அவளுக்கு பீர்பால் ஞாபகம்வர, அவரை உடனே வரவழைத்தாள். உடனே பேகத்தைத் தேடிவந்த பீர்பால் அவள் முன்னிலையில் வணக்கம் தெரிவித்தபின் தன்னை அழைத்தக் காரணம் கேட்க, பேகம் கண்களில் நீர் தளும்ப நடந்த விஷயத்தைக் கூறியவுடன் “நான் சொல்வதை அப்படியே செய்யுங்கள்! உங்கள் பிரச்சினை தீர்ந்து விடும்!” என்று பீர்பால் பேகத்திற்கு தைரியம் கூறிவிட்டு வீடு திரும்பினார். உடனே பீர்பாலின் யோசனைப்படி, தன் பொருள்களை எடுத்துப் பெட்டியில்வைத்துக் கொள்ளத் தொடங்கினாள். தன்னுடையது மட்டுமின்றி, அக்பரின்பொருள்களையும் எடுத்து வைக்க ஆரம்பித்தாள். பிறகு தன் தாதி மூலம்அக்பருக்கு, “பிரபு! நான் பிறந்த வீடு செல்லத் தயாராகி விட்டேன். ஆனால்,போவதற்கு முன் உங்களை ஒரேயோரு முறை சந்தித்து மன்னிப்புக் கோரவிரும்புகிறேன்” என்று செய்தி அனுப்பினாள். அதற்கு சம்மதித்த அக்பர், ஒரு மணி நேரம் சென்றபின் அந்தப்புரத்தை அடைந்தார். அவரை வாயிலில் நின்று புன்னகையுடன் வரவேற்ற பேகம் அவருக்கு இருக்கையளித்து உபசரித்தாள். ஆனால், அவளுடைய உபசரிப்பை அலட்சியம் செய்த அக்பர், கடுமையான குரலில் “நீ எப்போது போகப் போகிறாய் என்று மட்டும் சொல்!” என்றார். “இதோ கிளம்பிக் கொண்டே இருக்கிறேன். ஆனால், போவதற்கு முன், நான் இதுவரை உங்கள் மனத்தைப் புண்படுத்திய அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் மன்னிப்புக் கேட்கிறேன். மன்னித்தேன் என்று உங்கள் வாயினால் கேட்ட பின்னரே, என்னால் நிம்மதியாகப் பிறந்த வீடு செல்ல முடியும்” என்று பேகம் உருகினாள். “சரி, மன்னித்து விட்டேன்! இப்போது புறப்படுகிறாயா?” என்று வேண்டா வெறுப்புடன் கூறிய அக்பர் எழுந்து செல்லத் தயாரானார். உடனே அவரை அமரச் சொன்ன பேகம், “தயவு செய்து நான் அன்புடன் அளிக்கும் இந்தப் பழச்சாறை அருந்துங்கள்” என்று ஒரு கோப்பையை நீட்டிய பின், “இதுதான் நான் உங்களுக்கு அளிக்கப் போகும் கடைசி பானம்!” என்று விம்மியழ, அக்பரும் சற்றே மனமிளகி, அந்தப் பழச்சாறைக் குடித்தார். குடித்த பிறகு பேகத்தை நோக்கி, “உனக்கு மிகவும் பிடித்தமான பொருள்கள் எதுவானாலும் நீ இங்கிருந்து எடுத்துச் செல்ல உனக்கு ஏற்கெனவே அனுமதி அளித்துவிட்டேன். நான் வருகிறேன்” என்று விறைப்புடன் அக்பர் கூற, பேகத்தின் இதழ்களில் ஒரு விஷமப் புன்னகை அரும்பியது. பிறகு, எழுந்து இருந்து செல்ல முற்பட்ட அக்பருக்கு திடீரென உடலை என்னவோ செய்ய, “எனக்கு ஒரே தூக்கமாக வருகிறது” என்று தள்ளாடினார். உடனே விரைந்து சென்று அவரைத் தாங்கிப் பிடித்த பேகம், “ஐயோ! ஏன் இப்படித் தடுமாறுகிறீர்கள்? சற்று நேரம் உட்கார்ந்து விட்டுச் செல்லுங்கள்” என்று அவரைக் கையைப் பிடித்து அழைத்து வந்து படுக்கையில் உட்காரச் செய்தாள். அடுத்தகணம் தன்னை அறியாமல் படுக்கையில் சாய்ந்த அக்பர், அப்படியே தூங்கி விட்டார். தான் பழச்சாறில் கலந்த மருந்து வேலை செய்வதைக் கண்டு மகிழ்ந்த பேகம், உடனே தன் கைகளைத் தட்டி சில காவலர்களை அழைத்து, அக்பரை படுக்கையோடு சேர்த்து எடுத்துச் சென்று பல்லக்கில் வைக்கும்படி உத்தரவிட்டாள். அப்படியே அவர்கள் செய்ய, உடனே பேகம் தங்கள் இருவரது உடைமைகளையும் மற்றொரு பல்லக்கில் ஏற்றித் தானும் ஏறிக்கொள்ள, உடனே இரண்டு பல்லக்குகளும் ஆள்களால் சுமக்கப்பட்டு, பேகத்தின் பிறந்த வீட்டை அடைந்தன. தன் வீட்டையடைந்ததும், பேகம் அங்கிருந்த பணியாட்களுக்கு இட்டக் கட்டளையின்படி, அவர்கள் அக்பரைப் படுக்கையோடு தூக்கிக் கொண்டு வந்து படுக்கையறையில் கிடத்தினார்கள். “ஐயோ! ஏன் இப்படி சக்கரவர்த்தியை தூக்கி வருகின்றனர்? அவருக்கு உடல் சரியில்லையா?” என்று பேகத்தின் பெற்றோர் பதறிப்போக, “ஒன்றுமில்லை. கடந்த சிலநாள்களாக இருந்த மிக அதிகமான வேலையினால், பல்லக்கில் வரும்போது தூங்கிக் கொண்டே வந்தார். உண்மையில் ஒரு நாள் ஒய்வு எடுக்கவே அவர் இங்கு வந்துள்ளார்” என்று பேகம் பதிலளித்தாள். ஒரு மணி நேரம் கழித்து கண்களைத் திறந்த அக்பர், பேகத்தை நோக்கி, “நான் எங்கிருக்கிறேன்?” என்று கேட்டார். “நீங்கள் என் பிறந்த வீட்டில்தான் இருக்கிறீர்கள்” என்று பேகம் புன்னகையுடன் கூற, அக்பருக்கு சுரீர் என்று கோபம் தலைக்கேறியது. “நான் தூங்கிக் கொண்டிருக்கும்போது என்னை இங்கு தூக்கி வர உனக்கு யார் அனுமதி கொடுத்தது?” என்று அவர் சீறினார். “நீங்கள் தான் பிரபு!” என்று அவர் சீறினார். “என்ன உளறுகிறாய்? நான் எப்போது அனுமதி தந்தேன்?” என்று அக்பர் கேட்க, அதற்கு பேகம், “உனக்குப் பிடித்த பொருள் எதுவானாலும் நீ இங்கிருந்து அதை எடுத்துச் செல்லலாம் என்று அனுமதி அளித்ததே நீங்கள்தான்! எனக்கு உலகிலேயே மிகவும் பிடித்த பொருள் நீங்கள்தான்! அதனால் உங்களை என்னுடன் எடுத்து வந்ததில் என்ன தவறு?” என்று சாமர்த்தியமாக மடக்கினாள். “ஓ!” என்ற அக்பர் திடீரென வாய்விட்டு சிரித்தார். “நீ மிகவும் சாமர்த்தியமாக செயற்பட்டு இருக்கிறாய். சரி வா! நாம் நம் அரண்மனைக்குப் போவோம்!” என்ற அக்பர், தொடர்ந்து, “அதிருக்கட்டும்! உனக்கு இந்த அபாரமான யோசனையை சொல்லிக் கொடுத்தது யார்?” என்று கேட்டார். அதற்கு பேகம் “நீங்கள்தான் மிகவும் புத்திசாலியாயிற்றே! கண்டுபிடியுங்களேன்!” என்றாள் . “அது நிச்சயம் பீர்பாலாகத் தானிருக்கும்” என்றார் அக்பர்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'விலைமதிப்புள்ள பொருள்' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: முல்லா, கல்விமான்கள், உண்மையின் மதிப்ப, பொய், இரும்பு, தங்கம் தலைப்பு: கல்விமானுக்கு எழுந்த சந்தேகம்
ஒரு நாள் அயல்நாட்டில் இருந்து வந்த இரண்டு கல்விமான்கள் முல்லாவைச் சந்தித்து அவருடன் உரையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அந்தக் கல்விமான்களில் ஒருவர் முல்லாவை நோக்கி" முல்லா அவர்களே! உலகத்தில் பொய்யைக் காட்டிலும் உண்மையின் மதிப்பு அதிகமாக இருக்கிறது, அது ஏன்?" என ஒரு சந்தேகத்தைக் கேட்டார். நானும் உம்மை ஒரு கேள்வி கேட்கிறேன் உலகத்தின் இரும்பைவிடத் தங்கத்துக்கு அதிக மதிப்பு இருக்கிறதே. அது ஏன்? என்று பதில் கேள்வி கேட்டார் முல்லா. உலகத்தில் இரும்பு தாரளமாக எங்கம் கிடைக்கிறது. அதனால் இரும்பின் மதிப்பு மிகவும் குறைவாக இருக்கிறது. தங்கமோ உலகத்தில் மிகவும் அரிதாகத்தான் எங்காவது ஒரிடத்தில் கிடைக்கிறது. அதனால்தான் தங்கத்தின் மதிப்பு அதிகமாக இருக்கிறது என்றார் கல்விமான். பொய்க்கும் உண்மைக்கும் இந்த உதாரணமும் பொருந்தும். பொய் உலகத்தில் யாரிடமும் தாராளமாக் கிடைக்கிறது. ஆனால் உண்மை பேசுபவர்களைக் கண்டுடிபிடிப்பதுதான் அரிதாக இருக்கிறது. இவ்வாறு உண்மை எளிதில் கிடைக்காத பொருளாக இருப்பதால்தான் அதற்கு அதிகமான மதிப்பு இருக்கிறது என்று முல்லா பதில் சொன்னார். அந்த விளக்கத்தைக் கேட்டு கல்விமான்கள் இருவரும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: தொலைபேசி ஒலித்தது பாத்திபன் கனவு படித்துக் கொண்டிருந்தேன். யார் இந்த நேரத்தில்? என்று எண்ணியபடி தொலைபேசியை எடுத்தேன். மகன்தான் பேசினான். ''அப்பா மதியை பள்ளியில் சேர்க்க வேண்டும். காலை ரயிலுக்கு புறப்பட்டு வண்டலூர் இறங்கி கொளப்பாக்கம் வந்துருங்க... என்றான். ''மதிக்கு இன்னும் நாலு வயது கூட ஆகலேயே இதற்குள்ளாகவா சேர்க்க வேண்டும்'' என்றேன். ''சரி வரேன்பா'' என்று தொலைபேசியை வைத்தேன். மீண்டும் பாத்திபன் கனவில் மூழ்கினேன். மனைவி வந்தாள்... ''எங்கிருந்து போன் என்றாள்'' ''மகன்தான் பேசினான். மதியை பள்ளியில் சேர்க்கப்போகிறார்களாம்.'' ''இதற்குள்ளாகவா.. மூணரை வயசுதானே ஆகிறது.'' ''அங்கு மூணு வயது பிள்ளைகளே பள்ளிக்குப் போறாங்களாம் நான் காலை ரயிலுக்குப் போகிறேன்...'' என்றேன். ''மதிக்கு ஏதாவது செய்து தருகிறேன் எடுத்துக்கொண்டு போங்க...'' என்று கூறிவிட்டு உள்ளே சென்றாள் மனைவி. காலை ரயிலில் கிளம்பி வண்டலூரில் இறங்கி கொளப்பாக்கம் செல்லும் பேருந்தில் ஏறி கொளப்பாக்கத்தில் இறங்கினேன். மகன் வந்திருந்தான். அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் வீடு இருந்தது. மோட்டர் பைக்கில் சென்றோம் பேரன் வீட்டு வாயிற்படியிலேயே கூடையோடு பள்ளிக்குச் செல்லத் தயாராக உட்கார்ந்திருந்தான். தாத்தா எப்ப வருவார்னு? காத்திருப்பது போல உட்கார்ந்திருந்தான். என்னைப் பார்த்ததும்.... ''தாத்தா வந்துட்டாங்க...''ன்னு குதித்து கும்மாளம் போட்டான் அருகில் சென்று தூக்கிக் கொண்டேன். ''ஸ்கூல் போவலாம் தாத்தா'' என்றான் மழலை மொழியில். அவனது ஆர்வம் கண்டு மகிழ்ந்தேன். வாங்கிச் சென்ற ஆப்பிள் பழங்களில் ஒன்று எடுத்து நறுக்கிக் கொடுத்தேன்... மதிக்கு ஆப்பிள் தின்பதில் கவனம் சென்றது. மருமகள் கொடுத்த குளிர்ந்த பழச்சாற்றை குடித்தேன். இங்கே நிறைய கான்வென்ட் பள்ளிக்கூடம் இருக்குதுப்பா... நீங்க போய் பார்த்துவிட்டு எந்தப் பள்ளியில் சேர்க்கலாம் என்று சொல்லுங்கள் சேர்த்துவிடலாம்... என்று மகன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ''போகலாமா தாத்தா'' என்றான் மதி. ''இன்னிக்கு லீவுடா... தாத்தா நாளைக்கு அழைச்சிட்டு போவார்டா'' என்றான் மகன் மதி அமைதியானான். மகன் அலுவலகம் சென்றுவிட்டான். பட அட்டைகள் வாங்கிப் போயிருந்தேன்... அதைப்பார்த்து பெயர்களைச் சொன்னான். தமிழிலும், ஆங்கிலத்திலும் இருந்த பட அட்டைகளை அவன் ஒவ்வொன்றாக எடுத்து படம் பார்த்து சொன்னான். மதிய உணவு இருவரும் சாப்பிட்டு விட்டு சற்று ஓய்வுக்குப் பின் எழுந்தேன். மதி தூங்கிக் கொண்டிருந்தான். ஓசை படாமல் எழுந்து பள்ளிகளைப் பார்த்து வரக் கிளம்பினேன். வீட்டு அருகிலேயே அரசு தொடக்கப்பள்ளி இருந்தது. வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன. கட்டிடத்தின் உள்ளே மூன்று வகுப்புகளும் வேப்பமரத்து நிழலின் இரண்டு வகுப்புகளும் இயங்கி வந்ததைப் பார்த்தேன். பள்ளிக்கு எதிரில் குப்பை கூளங்கள் நிறைந்து காணப்பட்டது. சிறிது தூரம் சென்றேன். JAMES CONVENT SCHOOL என்ற பெயர்ப்பலகை காணப்பட்டது. உள்ளே சென்றேன். ஒருவர் வரவேற்று உட்கார வைத்தார். ''இங்கு என்னென்ன வகுப்பு உள்ளது என்று கேட்டேன்.'' பிரிக்கேஜி, எல்.கே.ஜி., யு.கே.ஜி., மூன்று நிலை வகுப்புகள் என்றார் அவர் வகுப்புகள் குறைவாக உள்ளதே என்றேன். சென்ற ஆண்டுதான் தொடங்கப்பட்டது. இதன் பிரதானப் பள்ளி தாம்பரத்தில் உள்ளது. அதில் இதுவும் ஒன்று என்றார். அவரைச் சேர்த்து நான்கு பேர்களே இருந்தனர். மாணவ - மாணவியர் கீழே சிப்பு டிராயரும் மேலே மஞ்சள் சட்டையும் போட்டிருந்தனர். ஒவ்வொரு வகுப்பிலும் முப்பது முப்பத்தைந்து பேர்கள் இருந்தனர். கட்டணம் எவ்வளவு என்று கேட்டேன். மயக்கமே வந்துவிட்டது. அதை நடத்துபவர் ஆசிரியர் பயிற்சி பெற்றவரும் அல்ல. மின்சார இலாக்காவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அதில் வேலை செய்யும் மூன்று பெண்களில் இருவர் அவரது மகள்கள். ஒருவர் வெளியூர் பெண். அனைவருமே மேனிலைப்பள்ளித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள். வியாபார நோக்கில் இயங்கும் பள்ளி என்று உணர்ந்தேன். அந்தப் பள்ளிக்கு ஒரு வேனும் நிறுத்தப்பட்டிருந்தது. சொந்தமாக வாங்கியதாக இருக்காது. மாணவ - மாணவிகளின் மாதாந்திர வசூலில் தவணை முறையில் வாங்கியது என வேனில் இருந்த டிரைவரிடமிருந்து தெரிந்து கொண்டேன். பிரதான சாலையைக் கடந்துசென்றேன். அங்கே John kennedy matriculation school என்ற பெயர்பலகை கண்ணில் பட்டது. கூரைக் கொட்டகை அங்கும் இங்கும் தனித்தனியே இருந்தன. ஒரு புதிய கட்டிடம் பூச்சு வேலை நடந்து கொண்டிருந்தது. சில ஆசிரியைகள் நின்றிருந்தனர். ஓடு போட்ட சில கொட்டகைகளிலும் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன விசாரித்தேன். எல்.கே.ஜி படிப்புக்கட்டணம், கட்டிடநிதி, சிறப்புக் கட்டணம், வேன் கட்டணம் என்று பெருந் தொகையும். சீருடையும் பள்ளியிலேயே வாங்க வேண்டும் என்ற கண்டிப்பும் எனக்கு எரிச்சல் ஏற்பட்டது. இந்த பள்ளியை நடத்தும் ஒரு அம்மையார் உயர்நிலைப்பள்ளி ஆசிரியராக இருந்தவர். ஓய்வு பெற்றவர். குழந்தைகள் மண் தரையில்தான் உட்கார்ந்திருந்தனர். ஆசிரியை ஒருவரை விசாரித்ததில் ஆசிரியர்களுக்கு மாதச் சம்பளம் ஐநூறு மட்டுமே என்பதும் இரண்டு பேர்கள் மட்டுமே பட்டப்படிப்பு மற்றவர்களில் ஒருவர் ஆசிரியர் பயிற்சி பெற்றவர் மற்றவர்கள் அனைவருமே மேனிலைப் பள்ளிக்கல்வி முடித்தவர்கள். ஆங்கிலக்கல்வியை பயன்படுத்திக் கொண்டு அவரவர்கள் விருப்பதிற்கு ஏற்ப கட்டணங்கள் வசூலிக்கிறார்கள். அரசு இதை முறைப்படுத்தவும் மனமில்லை. வேதனையோடு சாலையிலேயே மற்றொரு பள்ளி இருப்பதாக கேள்விப்பட்டுச் சென்றேன். அது ஒரு கிறிஸ்த்துவப்பள்ளி. ஊரில் இருந்து சற்று தொலைவில் இருந்ததால் அது பற்றி விசாரிக்காமலேயே திரும்பினேன். பேருந்துக்குக் காத்திருந்த ஒருவரை இது பற்றி விசாரித்தேன். வண்டலூர் பகுதியில் நல்ல பள்ளிகள் இருப்பதாகவும். வேன் வசதி இருப்பதாகவும் கூறினார். மறுநாள் சென்று பார்க்கலாம் என்று வீட்டிற்குச் சென்றேன். மகனிடம் சொன்னேன். நாளை வண்டலூர் சென்று பார்த்து விட்டு வரச்சொன்னான். வண்டலூர் சென்றேன். பெயர்பலகை காணவில்லை, சுவற்றில் எழுதி இருந்தார்கள். உள்ளே சென்று விசாரித்தேன். பிறந்த சான்றிதழ், பள்ளி சேர்க்கை விண்ணப்பத்திற்கு தனி கட்டணம் பெற்றோர் படித்தவர்களாக இருக்க வேண்டும், பட்டம் பெற்றிருந்தால் முதல் சலுகை, பருவக் கட்டணம் மிகவும் கணிசமான தொகை தெரிவிக்கப்பட்டது. புத்தகங்கள், நோட்டுகள் தனி கட்டணம், வேனுக்குத்தனி கட்டணம், எல்லாம் கூட்டிப்பார்த்தேன் பள்ளியில் சேர்க்கும் போது ஆயிரத்தி நானூறு ரூபாய் ஆயிற்று; வேன் கட்டணம் தனி. இந்தப் பள்ளியை நிர்வகித்தவர்கள் ஒய்வு பெற்ற கல்வி இலாகா எழுத்தர் என்று கேள்விப்பட்டேன். அங்கு வேலை செய்பவர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் ஆனால் சிலர் மட்டுமே பி.எட்., படித்தவர்கள். மற்றவர்கள் அஞ்சல் வழியில் பட்டப்படிப்பு முடித்தவர்கள். இப்பள்ளியின் சீருடை கோடு போட்டிருந்தது... படிப்புக் கட்டணம் மிகமிக அதிகம். விடைபெற்று வெளியே வந்தேன். மனம் மிகவும் அழுத்தமாக இருந்தது. கிராமப்புற பள்ளிகளில் ஐந்து வயது பூர்த்தியான குழந்தைகளை முதல் வகுப்பில் சேர்க்கும்போது குருதட்சணை என்ற பண்பாட்டுடன் வெற்றிலை பாக்கு, மிட்டாயுடன் தட்சணையாக ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் வைத்து உயிர் எழுத்துக்களைச் சொல்லச் செய்து கலைமகள் படத்திற்கு முன்பு வணங்கி பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இலவச சீருடை, இலவச சத்துணவு, புத்தகங்கள் எல்லாம் அரசுப்பள்ளிகளில் இலவசமாகவே கிடைக்கும். மாவட்டத் தொடக்ககல்வித் திட்டத்தின் கீழ் கிராமப்புறப் பள்ளிகள் அனைத்தும் இன்று மிகவும் சிறப்பாக நடைபெறுவதைக் காண முடிந்தது. அரசின் இலவசக் கல்வி என்பது நடுத்தரக் குடும்பத்திற்கு ''முகச்சுளிப்பை'' ஏற்படுத்தியுள்ளது. இதனால் கட்டணம் வசூலித்தால் கூட நல்லது என்று எண்ணவேண்டியுள்ளது. அதன் பிறகு இரயில்வே பாதையைத் தாண்டி ஒரு பள்ளி இருப்பதாக அங்கு சென்றேன். கட்டணம் குறைவாகவே இருந்தது. பள்ளியும் எனக்கு பிடித்திருந்தது. ஆசிரியர்கள் அனைவரும் பட்டம் பெற்றவர்கள். அதை நிர்வகிக்கும் ஒரு அம்மையாரை சந்தித்தேன். அவர் அனைத்து விபரமும் கூறினார். வேன் உண்டு. வேலை கிடைக்காத பட்டதாரி ஆசிரியைகள், ஆசிரியர் பயிற்சி பெற்ற வேலை கிடைக்காதவர்கள் பணியாற்றுவதாகவும், அவரும் சகோதரர்களும் கூட அங்கே பணியாற்றுகின்றார்கள் என்பதை கேள்விப்பட்டு மகிழ்ந்தேன். பள்ளித் தூய்மையாக வைக்கப்பட்டிருந்தது. பேரன் மதிநிலவனுக்கு விண்ணப்பப் படிவம் வாங்கிக் கொண்டு வந்தேன் மகனிடம் சொன்னேன். ''அங்கேயே சேர்த்துவிடலாம் அப்பா'' என்றான். மறுநாள் மதியை சேர்க்க பேருந்தில் சென்றோம். மதிய உணவு கையிலேயே எடுத்துக் கொண்டு போனோம். பேருந்தில் போகும் போது வேறு பள்ளியில் படிக்கும் தன் மகனை அழைத்துக் கொண்டு அவன் தாயும் பேருந்தில் வந்தாள். வண்டலூர் மிருகக் காட்சிசாலை ஒட்டி குருவிகள் மற்றும் பறவைகள் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. அதைபார்த்த யு.கே.ஜி. மாணவன். ''அம்மா, அம்மா அதோ பாருங்கள் பறவைகள்'' என்றான். உடனே அந்தத் தாய் அவன் கன்னத்தில் பளார் என்று அறைந்து விட்டு ''ஆயிரம் ஆயிரமாய் செலவு செய்து கான்வென்டில் படிக்க வைக்கிறேன் மம்மின்று சொல்லாமே அம்மாவாம் அம்மா... சொல்லு Mummy, There are Birds'' என்றாள்''. குழந்தை தேம்பிக் கொண்டே தாய் சொன்னதைத் திருப்பிச் சொன்னான். மிகவும் வேதனைப்பட்டேன்... ஆங்கில மோகம் எந்த அளவுக்கு வளர்ந்துள்ளது என்பதற்கு இந்த ஒரு நிகழ்ச்சியே சான்று, தாயை ''அம்மா'' என்று கூப்பிடுவது கூட அந்தத் தாய்க்கு விருப்பமில்லை... ஆங்கிலத்திலேயே கூப்பிட வேண்டும் என்று நினைப்பது எவ்வளவு கொடுமை! பேருந்தில் உள்ளவர்களுக்கும் அந்தத் தாயின் மேல் கோபமே ஏற்பட்டது... அந்தக் குழந்தையின் கன்னத்தில் கைவிரல்கள் அப்படியே பதிந்திருந்தன. மன வேதனையுடன் வண்டலூரில் இறங்கினேன். வண்டலூரில் இறங்கி, இரயில்வே தண்டவாளங்களை கடந்து சென்றோம். நாங்கள் சென்றபோது பள்ளியில் இறை வழிபாடு நடந்து கொண்டிருந்தது. ஏதோ ஒரு பாடலும் சில சமஸ்கிருத சுலோகங்களும் மாணவிகள் சொல்ல மற்றவர்களும் சொன்னர்கள். மாணவர்கள் மத்தியில் இதை ஏன் திணிக்கிறார்கள் என்று எண்ணினேன். முடிந்ததும் பள்ளி நிர்வாக அறைக்குக் சென்றோம். உரிய கட்டணங்களைக் கட்டி விட்டு விண்ணப்பத்துடன் கொடுத்தோம். LKG வகுப்பில் மதியை அழைத்துப் போய் உட்காரவைத்து விட்டு திரும்பியதும் ''தாத்தா'' என்று அழுதுகொண்டே என்னை நோக்கி ஓடி வந்தான். அவனை மீண்டும் அழைத்துச் சென்று உட்கார வைத்தேன், அழுகை நிற்கவில்லை. ஆசிரியை வந்து அவனை தூக்கிக் கொண்டார்.... என்னைப் போகச் சொன்னார்... நான் வந்துவிட்டேன். மகனுக்கு அலுவலக நேரமானதால் சென்று விட்டான். முப்பது நிமிடங்கள் கழித்து வகுப்பறை பக்கம் இருந்த சன்னல் வழியே பார்த்தேன். ஆசிரியை ஏதோ வேடிக்கைக் காட்டிக் கொண்டிருந்தார். மாணவ-மாணவிகள் சிரித்துக் கொண்டிருந்தார்கள். மதியின் சிரிப்பை பார்த்து மனம் அமைதி அடைந்தது. மதிய உணவுக் கூடையை எடுத்துக்கொண்டு நின்றிருந்த வேனில் போய் உட்கார்ந்தேன். ஓட்டுநர் என்னிடம் சிநேகமாகப் பேசினார். மதியை தினமும் கொளப்பாக்கம் அழைத்து கொண்டு வந்து, திரும்பவும் கொண்டுவந்து விடுவதாகவும் கூறினார். மகன் குடியிருக்கும் வீட்டுப் பையன்களும் அந்த வேனில் வருவதாகக் கூறினார். மகிழ்ந்தேன். பள்ளியிலேயே நின்றிருந்த வேனில் காலைப்பிரிவு வேளை பள்ளி முடியும் வரை ஓட்டுநரிடம் பேசிக் கொண்டிருந்துவிட்டு மணி அடித்ததும் எழுந்து போனேன். மாணவ-மாணவிகளோடு ஒரு கையில் பையை குடுவையை இழுத்துக் கொண்டு மதி வந்த காட்சி சிரிப்பூட்டியது. பையையும் குடுவையையும் வாங்கிக் கொண்டு பள்ளி எதிரில் இருந்த மரத்தடி நிழலுக்குச் சென்றோம். துண்டு ஒன்றை விரித்து நானும் அவனும் உட்கார்ந்தோம். உணவை ஊட்டினேன். பிறகு அவனே சாப்பிட்டான். ''மதி... என்ன படிச்சியா?'' என்று கேட்டேன். ''தாத்தா... பாட்டு சொன்னேன்...'' ''சொல் பார்க்கலாம்'' என்றேன். அவன் மழலை மொழியில் ஏதோ சொன்னான், ஒன்றும் புரியவில்லை. சிறிது நேரம் விளையாடிக் கொண்டிருந்தான். அந்த பள்ளியில் LKG முழு வேலையும் நடந்ததால் மதிய வேளை பள்ளித்துவங்கும் வரை அங்கேயே இருந்தோம். வேனுக்கு அவனை அழைத்துச் சென்று ஓட்டுநரிடம் மதியை அறிமுகப்படுத்தினேன். சிறிது நேரத்திலேயே ஓட்டுநருடன் நட்பாகப் பழகினான் மணி அடித்தது. வகுப்புக்கு அழைத்துச் சென்றேன். மீண்டும் அழுதான் சமாதானப்படுத்தி உட்காரவைத்தேன்... பையையும் தண்ணீர் குடுவையையும் வைத்துவிட்டு எழுந்து ஓடி வந்தான். ஆசிரியை வகுப்பில் நுழைந்ததும். ''மதி வா... நல்ல பிள்ளையாச்சே... வா.'' என்று கனிவுடன் கூப்பிட முரண்டு பிடித்தான். அதே போல சில குழந்தைகளும் அழுது கொண்டு உட்கார்ந்திருந்தனர். அவர்களைப் பார்த்து மதியும் அழுதான். ஆசிரியை என்னைப் பார்த்து போகும்படி சைகைக் காட்டினார். நான் அங்கிருந்து நழுவினேன். ஆனால் அவன் ''தாத்தா... தாத்தா....'' என்று அழுதது என் காதில் ஒலித்தது. மாலை 3-45 அளவில் பள்ளி முடிவுற்றது. மதி மற்றொரு கையில் தண்ணீர் குடுவையுடன் சிரித்துக் கொண்டே வந்தான். வந்தவன் என்னிடம் வராமல் ஆசிரியை உட்கார வைத்த வரிசையில் உட்கார்ந்தான். என்னைப் போலவே பல தாய்மார்களும், தாத்தாமார்களும் பிள்ளைகளை அழைத்துப் போக காத்திருந்தனர். வேனில் போக வேண்டியவர்களின் பெயர்களை ஆசிரியை படிக்க அங்கிருந்த பணியாளர் அவர்களை அழைத்துக் கொண்டு வந்தார். மதியும் அவர்களுடன் வந்தான். என்னைப் பார்த்து சிநேகமாக சிரித்தான். குடுவையைத் திறந்து தண்ணீர் கொடுத்தேன். குடித்தான். வேனில் தூக்கி உட்காரவைத்தேன். மகன் குடி இருக்கும் வீட்டுப்பிள்ளைகள் இருவரும் வேனில் உட்கார்ந்தனர். மதி அவர்களுடன் சிரித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான். வேன் ஓட்டுநர் அவனை அவர் அருகில் உட்கார வைத்துக்கொண்டார். மற்ற குழந்தைகள் ஏறி உட்கார்ந்தனர். ''தாத்தா ஏரிக்கோ...'' என்றான் மழலை மொழியில், ஓட்டுநர் அவனிடம் ஏதோ சொன்னார். வேன் புறப்பட்டது நான் கையை அசைத்தேன். அவனும் அவ்விதமே அசைத்தபடி சென்றான். நான் அவ்வூரைத்தாண்டி, இரயில்வே தண்டவாளங்களை கடந்து, சென்னைக்குச் செல்லும் சாலையைக் கடந்து பேருந்துக்காக நின்றிருந்தேன். பேருந்து வர காலதாமதம் ஆனதால் தனியார் வேனில் ஏறி கொளப்பாக்கம் சென்று மகன் குடியிருந்த சந்திரபுரத்துக்குச் சென்றேன். மருமகள் மதியைப்பற்றி, கேட்க நடந்தவைகளைச் சொன்னேன் அதற்குள் மகனும் அலுவலகத்தில் இருந்து வந்தான். மதியின் முதல்நாள் பள்ளி வாழ்க்கை பற்றி அவனும் ஆர்வத்துடன் கேட்டான். சொன்னேன். அதற்குள் வேன் வரும் ஒலி கேட்கவே நாங்கள் மூவரும் மதியை வரவேற்க இறங்கிபோனோம். மதி சிரித்துக்கொண்டே புத்தகப்பையுடன் தண்ணீர் குடுவையுடனும் இறங்கி வந்தான். அவனுடன் இந்த வீட்டு பிள்ளைகளும் இறங்கி வந்தார்கள். ''ஏன் இவ்வளவு நேரம் ஆயிற்று என்று ஓட்டுநரைக் கேட்டேன்''. ஊராப்பாக்கம், வண்டலூர், கொளப்பாக்கம் பிள்ளைகளை இறக்கி விட்டுவிட்டு சந்திரபுரம் வரவேண்டும். அதனால்தான் லேட் என்றார் ஓட்டுநர். மறுநாள் காலை எட்டரை மணிக்கெல்லாம் வேன் வந்துவிட்டது. அவசர அவசரமாக அவனை எழுப்பி குளிப்பாட்டி, சாமி கும்பிடவைத்து, இரண்டு இட்லி ஊட்டி விட்டு பள்ளிச்சீருடை போடும் போது அழத்தொடங்கி வெளியே பையோடு அழைத்து வர மருமகள் பாடு திண்டாட்டம் தான். வீட்டைவிட்டு வெளியே வந்ததும். விளையாட்டு காட்டிக் கொண்டிருக்கும் போது வேன் வந்துவிட்டது. உடனே துள்ளிக் குதித்தான். ஓட்டுநர் அவனை சிநேகமாக அழைக்க மகிழ்ச்சியுடன் அவர் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டான். வேன் புறப்பட்டதும் கை அசைத்தபடி சென்றான் மதி. நான் பதினோரு மணியளவில் அவனுக்கு மதிய உணவு எடுத்துக் கொண்டு வழக்கம் போல் கொளப்பாக்கத்தில் இருந்து பேருந்தில் வந்து இரயில்வே தண்டவாளம் தாண்டி பள்ளிக்குச் சென்று காத்திருந்தேன். காலைப் பள்ளி வேளை முடிந்து மணி அடித்ததும் மதி வந்தான். உடனே என்னிடம் வராமல் மாணவ - மாணவியுடன் அமர்ந்தான். ஆசிரியை போகச் சொன்னதும். தண்ணீர் குடுவையை எடுத்துக்கொண்டு என்னிடம் வந்தான். வழக்கம்போல் மரத்தடியில் சாப்பிட்டுவிட்டு, விளையாடி விட்டு மதியம் பள்ளித் தொடங்கியதும் அழத்தொடங்கினான். சமாதானப்படுத்தி உட்கார வைத்துவிட்டு வந்தேன். பின்னாலேயே தாத்தா... தாத்தா... என்று அழு குரல் கேட்டது. ஆசிரியை அவன் கைகையப்பற்றி அழைத்துப் போவதைக் கண்டேன். சிறு பிள்ளைதானே அப்படித்தான் இருப்பான் என்று எண்ணியபடி வீடு வந்தேன். இந்த நடைமுறை வழக்கம்போல் இருபது நாட்கள் நீடித்தது. சில நாட்கள் அழுவான், சிலநாட்கள் பள்ளிக்கு போக முரண்டு பிடிப்பான், சில நாட்கள் உற்சாகமாகப் போவதும் உண்டு. ஒருநாள் வேன் ஓட்டுநர் ஒரு தமிழ் வழிப் பள்ளியைப் பற்றிக்கூறினார். அங்கு போய் பார்த்துவரச் சென்றேன். சென்னை அம்பத்தூர் மேனாம்பேடு பகுதி. ஒரு வீட்டின் மொட்டை மாடி, கீற்று வேயப்பட்ட கொட்டகை. செங்குத்தான படிகளில் ஏறிப்போய் பார்த்தேன். மனம் மகிழ்ச்சியில் கூத்தாடியது. அத்தனையும் சின்னஞ்சிறு அரும்புகள். இளஞ்சிவப்பு வண்ணச் சீருடையில் ஆயிரம் பூக்கள் மலர்ந்தது போல் இருந்தது. பெயர்பலகையில் ''தாய்த் தமிழ்த் தொடக்கப்பள்ளி'' என எழுதப்பட்டிருந்தது உள்ளம் மகிழ்ந்தது. ப்ரிகேஜியை-அரும்புகள் என்றும் எல்.கே.ஜி.யை மொட்டுக்கள் என்றும் யூ.கே.ஜி.யை மலர்கள் என்றும் அழகு தமிழால் பெயரிட்டு அழைப்பதைக் கண்டு மிகவும் மகிழ்ந்தேன். கட்டணம் அரும்புகளுக்கு மாதம் ரூ.25, மொட்டுகளுக்கும் ரூ.25, மலர்களுக்கு ரூ.30, முதல் வகுப்பு மாதம் ரூ.40, சேர்க்கைக் கட்டணம் ரூ.100 மட்டுமே வசூலிக்கப்படுவதையும் அறிந்து வியப்படைந்தேன். மற்றபடி எந்த கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. மூன்றாம் வகுப்பிலிருந்து ஆங்கிலம் கற்பிக்கப்படுகிறது. மாணவ, மாணவியரை அழைத்து வரும் மூதாட்டியை ஆயா என்று அழைக்காமல் ''தாயம்மா'' என்று அழைக்கிறார்கள். அதேபோல ''மிஸ்'' என்றோ ''மேடம்'' என்றோ அழைக்காமல் ''ஆசிரியை'' என்றே மாணவ, மாணவிகள் அழைப்பது வித்தியாசமாக இருந்தது. ஐந்தாம் வகுப்புவரை நடப்பதைப் பார்த்துவிட்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினேன். வாழ்க தமிழ் வழிப்பள்ளி என்றும் மனம் வாழ்த்தியது. திடீரென்று மகனுக்கு அரசு குடியிருப்பிலேயே வீடு கிடைத்ததால் பேரன் மதியின் படிப்பு அப்பள்ளியில் நின்றது. பள்ளி, அலுவலகம், வீடு ஒரே காம்பவுண்டுக்குள் அமைந்ததால் மத்திய அரசு தொடக்கப்பள்ளிக்கு புதிய சீருடை தைத்து புதிய புத்தகங்கள் வாங்கி மதியை மீண்டும் L.K.G. யில் சேர்க்கப்பட்டான். வகுப்பில் உட்கார முரண்டு பிடித்தான். அழுதான்.... வழக்கமான விசும்பல் நீடித்தது. இப்பொழுதெல்லாம் மகிழ்ச்சியுடன் பள்ளிக்குப் போவதும் அவனே கூட நடந்தே வீட்டுக்கு வந்து விடுவதும் கண்டேன். நான் ஊருக்கு வந்துவிட்டு ஒரு மாதம் கழித்துச் சென்றேன். நான் வருவதை அறிந்து குட்டி சைக்கிளில் என்னை வரவேற்று அழைத்துப் போக அந்த வளாகத்தின் வாயிற்படியிலேயே காத்திருந்து அழைத்துச் செல்ல வந்தவன் ''தாத்தா எப்ப வருவார்'' என்று வாயிற்படி காவலரைக் கேட்டபடி இருந்தானாம். நான் சென்றதும் சைகிளை விட்டு விட்டு ஓடி வந்து கட்டி கொண்டான். ''ஸ்கூல் போறேன் தாத்தா'' என்றான் தங்கப் பேரன். .
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'தாத்தா எப்ப வருவார்?' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: விக்கிரமன், வேதாளம், மன்னன் பூஷணன், மன்னன் மணிதரன், வாலிபன் சாமந்தன், சாமந்தநின் தந்தை மணிகண்டன், கடன்காரர்கள், கடற்கன்னி, ஜலேந்திரன், மந்திரி தலைப்பு: கடல்கன்னியை சிறைவைத்த மன்னன்
அதற்குள், பூலோகத்தைச் சுற்றிப் பார்க்கச் சென்றிருந்த ஜலேந்திரன் கடலுக்குத் திரும்பினான். அங்கு ஹிசிகாவைக் காணாமல் தேடிஅலைந்து, அவள் பூலோகத்தில் இருப்பதாகக் கேள்விப்பட்டு, ரத்னகிரியில் அவளைத் தேடியலைந்தான். இறுதியில் சாமந்தன் மூலம் அவள் மன்னரின் அந்தப்புரத்தில் சிறைப்பட்டிருப்பதைத் தெரிந்து கொண்டு, அவன் மணிதரனை சந்தித்தான். மன்னனிடம் ஹிசிகாவை விடுதலை செய்யுமாறு கெஞ்சினான். அவனுக்கு பதிலளிக்க விரும்பாமல் மணிதரன் தன் மந்திரியை நோக்கினான். மன்னனின் மனத்தைப் புரிந்து கொண்ட மந்திரி ஜலேந்திரனை நோக்கி, "ஜலேந்திரா! எங்கள் ராஜ்யத்தில் நிலத்தில் வசிப்பவர்களாயினும், கடலில் வசிப்பவர்களாயினும் அனைவரும் எங்கள் ராஜாவின் ஆதிக்கத்திற்குக் கட்டுப்பட்டவர்கள். அதனால் ஹிசிகா மன்னரின் உடைமை!" என்றார். "மந்திரியாரே! உங்கள் மன்னரின் ஆதிக்கத்திற்குக் கட்டுப்பட்டவர்கள் நாங்கள் என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் மன்னரேயானாலும், தனிப்பட்ட நபர்களின் அந்தரங்கத்தில் குறுக்கிட அவருக்கு அதிகாரமில்லை" என்றான். "வார்த்தையை அளந்து பேசு! உங்கள் அந்தரங்கத்தில் மன்னர் குறுக்கிடவில்லை. ஹிசிகா ஒரு குற்றவாளி! கடலில் வசிப்பவர்கள் பூலோகத்தில் மன்னரின் அனுமதியின்றி நுழையக் கூடாது. அதனால்தான் அவளை சிறை வைத்து இருக்கிறோம். அதே குற்றத்திற்காக உன்னையும் சிறைப்பிடிக்க முடியும். நீங்கள் தண்டனையிலிருந்து தப்ப வேண்டுமெனில் ஒரு நிபந்தனை உள்ளது" என்றார் மந்திரி. அந்த நிபந்தனை என்னவென்று சொல்லுங்கள்!" என்றான் ஜலேந்திரன். "கடலில் முத்துகளும், இரத்தினங்களும் மிகுந்துள்ளன என்பது உனக்குத் தெரியும். நீ எங்களுக்கு ஒரு லட்சம் இரத்தினக்கற்கள் கொண்டு வந்து கொடுத்தால், ஹிசிகா விடுதலை செய்யப்படுவாள்" என்றார் மந்திரி. அதற்கு அவன் ஒப்புக் கொண்டு, கடலுக்குள் சென்று ஒரு லட்சம் இரத்தினக்கற்கள் சேகரித்துக் கொண்டு வந்து மணிதரனிடம் அளித்தான். ஆனால் அப்படியும் ராஜா ஹிசிகாவை விடுதலை செய்யவில்லை. மாறாக, இரத்தினக்கற்களை விற்ற பணத்தை தன் படை பலத்தைப் பெருக்கவும், ஏராளமான ஆயுதங்கள் வாங்கவும் செலவழித்தான். இந்த செய்தி ஒற்றர்களின் மூலம் வராககிரி மன்னன் பூஷணனை எட்டியது. உடனே பூஷணன் ஒரு பெரும் படையுடன் திடீரென கூர்மகிரியின் மீது படையெடுத்தான். கடுமையாக மூண்ட போரில் மணிதரன் கொல்லப்பட்டான். கூர்மகிரி பூஷணன் வசம் வந்தது. சிறைப்பட்டிருந்த ஹிசிகாவை விடுதலை செய்த மன்னன் பூஷணன், ஜலேந்திரனை அழைத்து, "அன்பினால் இணைந்த உங்களை சேர்த்து வைக்க விரும்புகிறேன். நீங்கள் உங்கள் உலகத்திற்குச் செல்லுங்கள்" என்று கூறினான். மன்னன் பூஷணன் தங்களை என்ன செய்வானோ என்று கலங்கிய ஹிசிகாவிற்கும், ஜலேந்திரனுக்கும் அவனுடைய பெருந்தன்மை மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. "மகாராஜா! உங்கள் உதவிக்காக உங்களுக்கு எங்களால் முடிந்த அளவு முத்துகளும், இரத்தினமும் தரவிரும்புகிறோம்" என்றனர். அதைக் கேட்டுப் புன்னகைத்த பூஷணன், "நீங்கள் எனக்கு எதுவும் தர வேண்டாம். உங்கள் இருப்பிடத்திற்குச் சென்று வளமுடன் வாழங்கள்" என்று கூறி விடை கொடுத்தான்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: அக்பர், பீர்பல், கபாலிபுரம், கபிலன், ஓவியன், ராஜன், கருமி, திரைச் சீலை, நிலைக்கண்ணாடி தலைப்பு: ஏமாற்றாதே, ஏமாறாதே
கபாலிபுரம் என்ற மாநகரில் கபிலன் என்ற ஓவியன் இருந்தான். ஓவியம் வரைவதில் மிகுந்த திறமை உடையவன். யாரைப் பார்த்தாலும் அவர்களை அப்படியே ஓவியம் வரைந்து விடுவான். ஓவியத்திற்கும் அந்த ஆளுக்கும் சிறு வேறுபாடு கண்டுபிடிக்க முடியாது. அவ்வளவு பொருத்தமாக ஓவியம் வரைவான். பணக்காரர்களை ஓவியமாக வரைந்து கொடுப்பான். அந்த ஓவியத்தை நல்ல விலை கொடுத்து வாங்குவர். அதைத் தங்கள் வீட்டில் அழகாக மாட்டி வைப்பர். அந்த ஊரில் ராஜன் என்ற செல்வன் இருந்தான். யாருக்கும் எதையும் தராத கருமி அவன். அவனுடைய பிறந்த நாள் விழா வந்தது. நிறைய உறவினர்கள் விழாவிற்கு வந்திருந்தனர். ராஜனின் இயல்பை அறியாத கபிலன் அந்த விழாவிற்குச் சென்றான். ராஜனை வணங்கிய அவன், "ஐயா! நான் சிறந்த ஓவியன். உங்களை அப்படியே ஓவியமாக வரைந்து தருகிறேன். உங்களையே நேரில் பார்ப்பது போல இருக்கும். அதை வரவேற்பு அறையில் அழகாக மாட்டி வைக்கலாம். அந்த ஓவியத்திற்கு எவ்வளவு பணம் தருவீர்கள்?" என்று கேட்டான். "உறவினர்கள் தன்னைப் பெருமையாக நினைக்க வேண்டும். பிறகு பணம் தராமல் இவனை ஏமாற்றலாம்" என்று நினைத்தான் ராஜன். "நீ வரையும் ஓவியம் என்னைப் போலவே இருக்க வேண்டும். அப்படி இருந்தால் ஆயிரம் பணம் தருகிறேன். இல்லாவிட்டால் பணம் எதுவும் தரமாட்டேன்," என்றான். "உங்களைப் போலவே ஓவியம் வரைந்து ஒரு வாரத்தில் தருகிறேன். குறை ஏதும் இருந்தால் பணம் தர வேண்டாம்," என்றான் ஓவியன். ராஜனைப் போலவே ஓவியம் வரைந்து எடுத்து வந்தான். அந்த ஓவியத்தை மேலும் கீழும் பார்த்தான் ராஜன். "இந்த ஓவியம் என்னைப் போலவா இருக்கிறது? நீயே பார். இவ்வளவு நரையா என் தலையில் உள்ளது? என்னைக் கிழவனாக்கிவிட்டாயே… நான் இருப்பது போல இளமையாக ஓவியத்தை வரைந்து கொண்டு வா," என்றான். அந்த ஓவியத்தை எடுத்துச் சென்றான் கபிலன். அதில் சில மாற்றங்கள் செய்தான். அந்த ஓவியத்தை மீண்டும் ராஜனிடம் கொண்டு வந்தான். "என்னைத் தானே ஓவியம் வரையச் சொன்னேன். நீ எவனோ ஓர் இளைஞனை வரைந்து உள்ளாயே… இளமையும் முதுமையும் கலந்தது போல உன்னால் வரைய முடியாதா?" என்று கேட்டான். அந்த ஓவியத்தில் மேலும் சில மாற்றங்களைச் செய்தான் கபிலன். "இந்த ஓவிய மும் என்னைப் போல இல்லை. வேறு ஓவியம் வரைந்து கொண்டு வா," என்றான் ராஜன். "எப்படி வரைந்தாலும் இவன் ஓவியத்தை வாங்கப் போவது இல்லை. ஏதேனும் குறை சொல்லித் திருப்பி அனுப்பப் போகிறான். என்ன செய்வது?" என்று சிந்தித்தான் கபிலன். பீர்பாலிடம் வந்து நடந்ததை சொன்னான், "அந்தச் செல்வன் ஓவியம் வாங்காமல் என்னை ஏமாற்றுகிறான். என் உழைப்பிற்கு நீங்கள்தான் ஊதியம் வாங்கித் தர வேண்டும்," என்று வேண்டினான். ராஜனை வரவழைத்தார் பீர்பால். "ஏன் இந்த ஓவியனை ஏமாற்ற நினைக்கிறீர். பலமுறை திருத்தம் செய்தும் ஓவியத்தை வாங்க மறுக்கிறீராமே?" என்று கேட்டார். "அமைச்சரே! நான் யாரையும் ஏமாற்றவில்லை. என்னைப் போல ஓவியம் வரைந்து தா. ஆயிரம் பணம் தருகிறேன் என்று இவனிடம் சொன்னேன். இவன் வரைந்த ஓவியம் என்னைப் போல இல்லை. அதனால்தான் பணம் தரவில்லை. என்னைப் போலவே ஓவியம் வரைந்து தரச் சொல்லுங்கள். ஆயிரம் பணத்திற்குப் பதில் இரண்டாயிரமே தருகிறேன்," என்றான் ராஜன். "ஓவியம் என்றாலே சிறு சிறு குறைகள் இருக்கத்தானே செய்யும். இது உங்களுக்குத் தெரியாதா?" என்று கேட்டார் பீர்பால். "அதெல்லாம் எனக்குத் தெரியாது. என்னைப் போலவே ஓவியம் வரைந்து தரச் சொல்லுங்கள். இரண்டு பங்கு பணம் தருகிறேன். குறை இருந்தால் ஒரு பணமும் தரமாட்டேன்," என்று அடாவடியாகப் பேசினான் அவன். "ஒரு வாரம் சென்று வாருங்கள். உங்களைப் போலவே ஓவியம் இங்கு இருக்கும். அதில் குறை இருந்தால் பணம் தரவேண்டாம்," என்றார் பீர்பால். "அந்த ஓவியத்திலும் எப்படியும் குறை கண்டுபிடித்து பணம் தராமல் தப்பிக்கலாம்" என்று புறப்பட்டான் ராஜன். "நீ ஓவியம் ஏதும் வரைய வேண்டாம். அடுத்த வாரம் இங்கு வா. பணத்துடன் செல்லலாம்," என்றார். ஒரு வாரம் சென்றது. பீர்பாலின் மாளிகைக்கு ஓவியன் முதலில் வந்தான். பிறகு ராஜன் வந்தான். "உங்களைப் போலவே வரையப்பட்ட ஓவியம் இது. திரைச் சீலையால் மூடப்பட்டுள்ளது. சீலையை விலக்கிப் பாருங்கள். சிறு குறையும் உங்களால் கண்டுபிடிக்க முடியாது," என்றார். "எப்படியும் வரைந்து இருக்கட்டும். குறை கண்டுபிடித்து விடலாம்" என்று திரையை விலக்கினான் அவன். அங்கே அவனைப் போலவே ஓவியம் இருந்தது. ஆனால், அந்த ஓவியம் அசைந்தது; கண்களை இமைத்தது. "அது ஓவியம் அல்ல. எதிரே உள்ளவர் வடிவத்தை அப்படியே காட்டும் நிலைக்கண்ணாடி. அதில் தன் வடிவம் தெரிகிறது" என்பது அவனுக்குப் புரிந்தது. "அமைச்சரே! இது ஓவியம் அல்ல. முகம் பார்க்கும் கண்ணாடி," என்றான் அவன். "கண்ணாடியில்தான் நம் வடிவம் அப்படியே தெரியும். குறை எதுவும் காணமுடியாது. ஓவியம் என்றால் குறைகள் இருக்கத்தான் செய்யும். இந்தக் கண்ணாடியை எடுத்துச் செல்லுங்கள். ஓவியனுக்கு இரண்டாயிரம் பணம் தாருங்கள்," என்றார் பீர்பால். "அமைச்சரே! இது நியாயம் அல்ல!" என்றான் அவன். "நியாயத்தைப் பற்றி நீங்கள் பேசாதீர்கள். குறையே இல்லாமல் யாராலும் ஓவியம் வரைய முடியாது. இதை அறிந்த நீங்கள் என்ன செய்தீர்கள்? இந்த ஓவியங்களை எத்தனை முறை வரையச் சொன்னீர்கள்? "நம் வடிவம் கண்ணாடியில்தான் குறை இன்றித் தெரியும். இரண்டாயிரம் பணம் தந்து இதை வாங்கிச் செல்லுங்கள். இல்லையேல் ஏமாற்ற முயன்றதற்குக் கடுமையான தண்டனை கிடைக்கும்," என்றார் பீர்பால். "ஆயிரம் பணம் கொடுத்து அந்த ஓவியத்தையே வாங்கி இருக்கலாம். வீட்டில் அழகாக மாட்டி வைத்து இருக்கலாம். எல்லாரும் பார்த்து மகிழ்ந்து இருப்பர். பத்துப் பணம் பெறாத கண்ணாடி இது. இதற்கு இரண்டாயிரம் பணம் தர வேண்டி வந்ததே" என்று தன்னையே நொந்து கொண்டான் அவன். ஓவியனிடம் இரண்டாயிரம் பணம் தந்தான். அந்தக் கண்ணாடியை எடுத்துக் கொண்டு வருத்தத்துடன் சென்றான் பணக்காரன்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: “கடவுள் நேரடியாக பூமிக்கு வருவதாகச் சொல்லப்படுகிறதே. தன்னுடைய தூதுவர்களை அனுப்பமல் ஏன் அவரே நேரடியாக வரவேண்டும்?”இது பேரரசர் அக்பர் பீர்பாலை பார்த்து கேட்ட சந்தேகம் பீர்பால் கூறினார் “இதற்கு உடனே விடை கூற முடியாது, சற்று அவகாசம் வேண்டும்” சில நாட்கள் கழித்து அக்பர் குடும்பத்தாரோடு கங்கையில் படகில் செல்ல வேண்டியிருந்தது. ஆழமான பகுதியில் செல்லும் போது அக்பரின் பேரனை தூக்கி பீர்பால் கங்கை நதியில் போட்டு விட்டார். அக்பருக்கு ஆத்திரம் வந்தாலும், உடனே ஆற்றில் குதித்து தனது பேரனைக் காப்பாற்றினார்.பீர்பாலை பார்த்து “முட்டாளே! ஏன் இக்காரியத்தைச் செய்தாய்?” என கோபமாகக் கேட்டார். அதற்கு பீர்பால், பேரரசே! உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன். குழந்தை தண்ணீரில் விழுந்த பொழுது, படைத்தளபதியை, என்னை மற்றும் வீரர்களை நோக்கி ‘குழந்தையைக் காப்பாற்று’ என்று ஆணையிடாமல் நீங்கள் குதித்தது ஏன்? என்று கேட்டார்.அதற்கு அக்பர் “குழந்தையைக் காப்பாற்றுவது என் கடமையா? அல்லது ஆணையிட்டுக் கொண்டிருப்பது பெருமையா?” எனப் பதிலுக்கு கேட்டார்.பீர்பால் அமைதியாக கூறினார், “சக்ரவர்த்தி அவர்களே! நீங்கள் என்னிடத்தில் கடவுள் தானே பக்தர்களைக் காக்க உலகிற்கு வருவது ஏன்? வேலையாட்கள் இல்லையா? என்று கேட்டீர்கள். எத்தனை பேர் இருந்தாலும், நீங்களே குழந்தையைக் காக்க நினைத்தது போல, ஆபத்தில் இறைவன் தானே வந்து மக்களைக் காப்பான்.” என்றார்
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'கடவுளும் தூதுவர்களும்' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது. ஒரு குரு இறக்கும் தருவாயில் இருந்தார். அப்போது அவர் தனது தலைமை சீடரை அருகில் கூப்பிட்டு அவரது காதில் மெதுவாக “ஒரு விஷயத்தை நன்றாக நினைவில் கொள், ஒரு போதும் பூனையை வீட்டிற்குள் அனுமதிக்காதே.” என்று சொல்லி விட்டு இறந்து விட்டார். “இது என்ன? எதற்காக அவர் என்னை கூப்பிட்டு வீட்டிற்க்குள் பூனையை அனுமதிக்காதே” என்றார் என்று புரியவில்லை அந்த தலைமை சீடருக்கு. அவர் வயது முதிர்ந்த கிழவர்களிடம் கேட்டுப்பார்த்தார். இதில் ஏதோ ஒரு செய்தி இருக்க வேண்டும் என அவர் நினைத்தார். இது ஏதோ ஒரு குறியீடாக இருக்கலாம், இல்லாவிடில் அவர் இதை ஏன் சொல்ல வேண்டும் இதற்கு எந்த விளக்கமும் கொடுக்காமல் அவர் இறந்து போய் விட்டார். ஏன் நீங்கள் பூனைகளுக்கு எதிராக இருக்கிறீர்கள் என்று நான் கேட்டிருப்பேன். உங்களது வாழ்க்கை முழுவதும்…. உங்களது ஒழுக்கம் வழிமுறை நெறிமுறை விளக்கம் வரையறை அனைத்தும் இதற்குத்தானா? – பூனையை வீட்டினுள் அனுமதிக்காதே. ஒரு வயதான மனிதர் கூறினார், “எனக்கு அது என்ன என்று தெரியும். இது அவரது குருவால் அவருக்கு கொடுக்கப்பட்ட செய்தி. ஏனெனில் அவர் ஒரு பூனையால் அவதிக்குள்ளானார். அந்த குரு கிராமத்துக்கு வெளியே ஒரு குடிசையில் வசித்து வந்தார். அவரிடம் இரண்டே இரண்டு கோவணங்கள் மட்டுமே இருந்தன”. ஒரு துறவிக்கு அது மட்டுமே உடை. உங்களுக்கு அது உள்ளாடை ஆனால் அவருக்கு அது மட்டுமே ஆடை. அவரிடம் இரண்டு கோவணங்கள் மட்டுமே இருந்ததில் பிரச்னை என்னவென்றால் அங்கிருந்த எலிகள் அவருடைய கோவணத்தை கடித்து விடுகின்றன. அவர் கிராமத்திலுள்ளவர்களிடம் “இந்த எலிகள் மிகவும் தந்திரமானவை. அவை என்னுடைய கோவணத்தை கடித்து விடுகின்றன. என்ன செய்வது?” என்று கேட்டார். ஒருவர், “அது மிகவும் சுலபம். நாங்கள் கிராமத்தில் பூனையை வைத்துக் கொள்வோம். நீங்களும் ஒரு பூனையை வைத்துக் கொள்ளுங்கள். நான் ஒரு பூனையை பிடித்துவந்து தருகிறேன்.” என்றார். அந்த குரு, “சரி, இது ஒரு எளிய வழிதான்.” என்று ஒத்துக் கொண்டார். பூனை வந்தது. அது அதன் வேலையை மிகச் சரியாக செய்தது. எல்லா எலிகளையும் தின்று முடித்து விட்டது. இப்போது பிரச்னை துவங்கி விட்டது. எலிகள் தீர்ந்துவிட்டன. பூனைக்கு பசி வந்துவிட்டது. அது எனக்கு பால் வேண்டும் எனக் கேட்டது. அது எப்போதும் துறவி எதிரே வந்து பசியோடு உட்கார்ந்து கொண்டிருந்தது. பூனைகள் பசியோடிருக்கும்போது பார்த்தால் மிகவும் பாவமாக தோன்றும். அது அதன் வேலையை முடித்து விட்டது. ‘நான் உனக்கு என்னாலான எல்லா உதவிகளையும் செய்து விட்டேன், எல்லா எலிகளையும் தின்று விட்டேன். ஆனால் இப்போது எனக்கு பசிக்கிறது’ என்று சொல்லாமல் சொல்லியது. அந்த குரு திரும்பவும் வந்து, “இப்போது என்ன செய்வது அந்த பூனை என் முன்னால் வந்து உட்கார்ந்து கொண்டு பசியோடு என்னை பார்க்கிறது. எனக்கு உணவு கொடு இல்லாவிடில் நான் போகிறேன். நான் போய் விட்டால் எலிகள் திரும்பவும் வந்து விடும். என்பது போல பார்க்கிறது. அதை அது சொல்லவில்லை, ஆனால் நான் அதை அதன் கண்களில் பார்க்கிறேன். அதற்கு பால் கொடுப்பதற்கு எனக்கு பால் வேண்டும். “ என்று கேட்டார். அந்த மனிதன், “ஒவ்வொரு நாளும் நீங்கள் பாலுக்கு வர வேண்டியிருக்கும். என்னிடம் பல பசுக்கள் உள்ளன. அதில் ஒன்றை கொடுக்கிறேன். அதை வைத்துக் கொள்ளுங்கள்.” என்றான். அவர் பசுவை வாங்கிக் கொண்டு சென்றார். ஆனால் அதனால் பிரச்னைகள்தான் அதிகமாயின. இப்போது பசுவுக்கு புல் தேவை பட்டது. அதனால் அவர் திரும்பவும் கிராமத்துக்குச் சென்றார். மக்கள், “நீ ஒரு கிறுக்கன், பிரச்னை பிரச்னை. நீங்கள் ஏன் உங்கள் குடிசையை சுற்றி உள்ள இடத்தில் புல் வளர்த்துக் கொள்ளக் கூடாது?. அங்கே ஏகப்பட்ட இடம் சும்மா தரிசாக கிடக்கிறது. நாங்கள் விதை தருகிறோம். இந்த விதைகளை வைத்து எதையாவது விதைத்து வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்கும் உதவும். நீங்களும் சாப்பிட்டு பசுவுக்கும் எதையாவது கொடுங்கள்.” என்றனர். அதனால் அந்த குரு, விதை விதைத்து வளர்க்க ஆரம்பித்தார். ஆனால் திரும்பவும் பிரச்னை வந்தது. இப்போது அந்த பயிரை அறுவடை செய்ய வேண்டும். ஆனால் அவரோ ஒரு துறவி, அவர் இந்த வேலைகளை செய்ய கூடாது. ஆனால் ஒரு விஷயம் மற்றொரு விஷயத்திற்கு கொண்டு செல்கிறது. அதனால் அவர் திரும்பவும் கிராமத்திற்கு சென்றார். “பயிர் அறுவடைக்கு தயாராகி விட்டது. ஆனால் அதை செய்ய என்னிடம் கருவிகள் எதுவும் கிடையாது. அதனால் எனக்கு உதவி வேண்டும்.” என்று கேட்டார். மக்கள், “இங்கே பாருங்கள் உங்களோடு மிகவும் தொந்தரவாகி விட்டது. உங்களால் எந்த பயனும் இல்லை. எதற்கும் உங்களால் தீர்வு காண முடியாது. நாங்கள் தான் எதற்கும் தீர்வு காண வேண்டும். இது மிகவும் எளிது. இங்கே ஒரு விதவை பெண் இருக்கிறாள். அவள் உங்களை, உங்கள் பசுவை, உங்கள் பயிரை, உங்கள் உணவை, எல்லாவற்றையும் – எல்லாவற்றையும் என்றால் பூனை. எலி …… அவள் மிகவும் அனுபவம் வாய்ந்த பெண்.” ஆனால்! என்ற துறவி நான் ஒரு துறவி. என்றார். அவர்கள், இந்த துறவு எல்லாவற்றையும் மறந்து விடுங்கள். என்ன வகையான துறவி நீங்கள்.! உங்களிடம் பசு, பூனை, நிலம். பயிர் ஆகிய எல்லாமும் உள்ளன. ஆனால் நீங்கள் நான் ஒரு துறவி என்று சொல்லிக் கொள்கிறீர்கள். எல்லாவற்றையும் மறந்து விடுங்கள். மேலும் இந்த திருமணம் போலியான ஒன்று. உங்களுக்கு அந்த பெண்ணிடம் எந்த உறவும் கிடையாது. அவள் வறுமையில் கஷ்டத்தில் இருக்கிறாள். நீங்களும் சிரமத்தில் இருக்கிறீர்கள். இருவரும் சேர்ந்து இருந்தால் உங்களுக்கு நல்லது.” என்றனர். அவர், “அப்படியானால் சரி, அது சட்டபூர்வமானதாக இல்லாவிடில் சரி. அதில் எந்த சிரமமும் இல்லை. ஏனெனில் எனது குரு திருமணம் செய்து கொள்ளாதே என்று தான் கூறியுள்ளார். இதற்கு எதிராக எதுவுமே சொல்லவில்லை. நான் தான் திருமணம் செய்யவில்லையே. நான் அந்த பெண்ணுடன் வாழ்வதைப் பற்றி இந்த கிராமம் எதுவும் சொல்லாமல் இருக்கத்தான் இந்த ஏற்பாடு என்பதால் இது எனக்கு சரிதான். நான் அவளை எனது மனைவி என்று சொல்லிகொள்ளலாம், ஆனால் உண்மையில் நான் அவளது கணவனாக எதுவும் செய்யவேண்டியதில்லை, அவளும் எனது மனைவியாக உண்மையில் எதுவும் செய்யவேண்டியதில்லை.” என்று ஒத்துக் கொண்டார். அவர் அந்த பெண்ணுடன் பேசினார். அவள், எனக்கு மறுபடியும் திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை. ஒருமுறை செய்ததே போதும். ஆனால் நீங்களும் சிரமத்தில் இருக்கிறீர்கள், நானும் சிரமத்தில் இருக்கிறீர்கள். அதனால் ஒருவருக்கொருவர் ஒத்தாசை செய்து கொள்வோம். அந்த விதத்தில் இது எனக்கு சரிதான்.” என்றாள். அதனால் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இப்போது எல்லாமும் நன்றாக போய்க் கொண்டிருந்தது. அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும் சில நாட்களில் அவள் அவருக்கு சிசுரிஷை செய்தாள். மெதுமெதுவாக அவர் அந்த பெண்ணை விரும்ப ஆரம்பித்தார். ஒரு ஆண் ஆண்தான், ஒரு பெண் பெண்தான். பெண்ணும் அவரை விரும்ப ஆரம்பித்தாள். அவர்கள் இருவருமே தனிமையை உணர்ந்தனர். ஒரு குளிர்கால இரவில் இங்கே குளிராக இருக்கிறது நாம் ஏன் நெருங்கி இருக்கக் கூடாது என மற்றவர் கேட்கவேண்டும் என இருவருமே விரும்பினர். இறுதியில் அந்த பெண், இங்கே மிகவும் குளிராக இருக்கிறது என்று கூறினாள். அந்த துறவியும் இங்கேயும் குளிராக இருக்கிறது என்றார். அப்போது அந்த பெண், உங்களுக்கு தைரியம் இல்லைபோல தோன்றுகிறதே என்றாள். அவர், அதுசரிதான். நீ இங்கே வா, எனக்கு தைரியம் இல்லை. நான் ஒரு துறவி, நீ ஒரு அனுபவமுள்ள பெண்மணி. நீ இங்கே வா. இருவரும் சேர்ந்திருந்தால் கதகதப்பாக இருக்கும். என்றார். கதகதப்பாகத்தானே இருக்கும். இப்படித்தான் அவரது முழு துறவறமும் வீணாகிப்போனது. அவர் இறக்கும்போது அவர் தனது சீடர்களிடம் உங்களுடன் எந்த பூனையையும் தங்க விடாதீர்கள். என்று கூறி விட்டு இறந்தார். வயதான மனிதன் அந்த தலைமை சீடரிடம், “அதிலிருந்து உங்களது பாதையில் ஒவ்வொரு குருவும் தனது சீடர்களிடம் பூனையைப் பற்றி கவனமாக இருங்கள் என்று கூறுவது வழக்கமாகிப் போனது. பூனையைப் பற்றி கவனமாக இருப்பது மிகவும் கடினம். எப்படியோ பூனை உள்ளே வந்து விடும் – வாழ்க்கை மிகவும் விசித்திரமானது”. என்றார்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'பிடிப்பின் வலை' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: எதையும் காரண காரியத்தோடு செய்தாலும், அதைப் பகிரங்கமாக வெளியே தெரியாமல் பார்த்துக்கொள்வது ஜென் தத்துவத்தின் அடிப்படை. ஒரு ஜென் துறவி பேசும் பேச்சுக்கு இருப்பதைப்போல், அவரின் மௌனத்துக்கும் அர்த்தமுண்டு. ஜென் துறவிகளின் மனநிலைக்கேற்பவே செய்கைகளும் அமையும். ஆடுவது, பாடுவது, சத்தம் போடுவது, கோபப்படுவது... என ஜென் கதைகளில், அந்தத் துறவிகள் செய்யும் செயல்களுக்கு அளவே இல்லை. ஒரு திருடன் நம் வீட்டுக்குள் நுழைந்தால் நாம் என்ன செய்வோம்? ஒன்று பயந்து நடுங்குவோம்; சிலர் எதிர்த்துப் போராடக்கூடச் செய்வார்கள்: சிலர் சத்தம் போட்டு ஊரைக் கூட்டுவார்கள். ஜப்பானில் வாழ்ந்த ஜென் துறவி ஷிசிரி கோஜுன் என்ன செய்தார் தெரியுமா? அது ஒரு முன்னிரவுப் பொழுது... தன் ஆசிரமத்தின் தாழ்வாரத்தில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தார் ஷிசிரி கோஜுன். அவர் படித்துக்கொண்டிருந்தது புத்த ஜாதகக் கதைகள். அதில் அப்படியே ஆழ்ந்து போயிருந்தார். திடீரென்று ஒரு சத்தம்... “ஏய்... உன்னைத்தான்... இப்போ திரும்பப் போறியா, இல்லியா?’’ ஷிசிரி நிமிர்ந்து பார்த்தார். ஒருவன் கையில் மின்னும் கத்தியுடன் அவரை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தான். அந்த ஆசிரமத்தில் வேறு யாராவது இருக்கிறார்களா என்று நோட்டம்விட்டான். “நீ யாரப்பா... உனக்கு என்ன வேண்டும்?’’ ``நானா... இன்னுமா உனக்குப் புரியலை? உன் வீட்ல திருட வந்திருக்கேன். ம்... உன்கிட்ட இருக்குற பணம் எல்லாத்தையும் கொடு. இல்லைனா என்ன நடக்கும் தெரியுமா?’’ “என்ன நடக்கும்?” “ம்... என் கையில என்ன இருக்குனு பார்த்தேல்ல..? பணம் வேணுமா... உயிர் வேணுமா?’’ “சரி, சரி... உனக்குப் பணம்தானே வேண்டும்? என்னைத் தொந்தரவு செய்யாதே! நீயே போய் எடுத்துக்கொள். அதோ... அந்த மேசை இழுப்பறையில் சிறிது பணம் வைத்திருக்கிறேன்’’ என்ற ஜென் துறவி ஷிசிரி மீண்டும் புத்த ஜாதகக் கதையைப் படிப்பதில் ஆழ்ந்துபோனார். திருடன் அசந்துபோனான். `இப்படியும் ஒரு மனுசனா? என் கையில இருக்குற கத்தியைப் பார்த்துக்கூட இந்த ஆளுக்குப் பயம் வரலையே! ஒருவேளை வேற யாராவது பின்னாடி வந்து நம்மை அடிச்சுப் போடத் திட்டம் போட்டிருக்கானா? சே... சே... அப்படியிருக்காது. ஆளைப் பார்த்தாலே சாது மாதிரி தெரியுது. அப்படியே யாராவது இருந்திருந்தாலும், இந்நேரம் என்னைப் பிடிக்க வந்திருக்கணுமே..!’ இப்படியெல்லாம் யோசித்தவனாக அவன் ஜென் துறவி காட்டிய மேசையருகே போனான். மேசையைத் திறந்தான். அதிலிருந்த மொத்தப் பணத்தையும் அப்படியே எடுத்தான். அப்போது ஷிசிரியின் குரல் கேட்டது. “என்னப்பா பணத்தை எடுத்துவிட்டாயா? நான் சொன்னேன் என்பதற்காக மொத்தப் பணத்தையும் எடுத்துக்கொண்டு போய்விடாதே. நாளை நான் செலுத்தவேண்டிய வரி பாக்கி கொஞ்சம் இருக்கிறது. அதற்காகக் கொஞ்சம் பணத்தை மட்டும் எனக்காக வைத்துவிடு. என்ன... சரியா?’’ திருடன் யோசனையுடன் அவரைப் பார்த்தான். அந்தத் துறவியின் குரல் அவனை என்னவோ செய்தது. அவனால் அதை அலட்சியம் செய்ய முடியவில்லை. எடுத்த மொத்தத் தொகையிலிருந்து சிறிது பணத்தை எடுத்து மேசை இழுப்பறையில் வைத்தான். கிளம்பினான். அவன் வாசல் கதவை அடைந்தபோது, ஷிசிரியின் குரல் அவனைத் தடுத்தது. “ஏனப்பா... வந்தாய், என் பணத்தை எடுத்தாய். ஒரு நன்றிகூடச் சொல்லாமல் போகிறாயே... இது உனக்கே சரி எனப்படுகிறதா?’’ திருடன் அதிர்ந்து போனான். இவ்வளவு தைரியமாகத் தன்னிடம் பேசும் ஒரு மனிதனை அவன் வாழ்நாளில் கண்டதில்லை. அவன் ஷிசிரியின் அருகே வந்தான். “எனக்குப் பணம் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி ஐயா...’’ என்றான். வெளியேறினான். ஷிசிரி மறுபடியும் வாசிப்பதில் ஆழ்ந்துபோனார். அந்தத் திருடன் வெகுநாள்களாக, பல வழக்குகளாக உள்ளூர் காவலர்களால் தேடப்பட்டு வந்தவன். ஷிசிரியின் ஆசிரமத்திலும் அவன் கைவரிசைக் காட்டிய செய்தி வெளியே பரவியது. காவலர்கள் தங்கள் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தினார்கள். ஒரு நாள் அவன் மாட்டிக்கொண்டான். விசாரணை நடந்தது. ஷிசிரியின் ஆசிரமத்தில் திருடியதற்கு சாட்சி சொல்லும்படி அவருக்கு அழைப்பு போனது. அவரும் வந்தார். அவரிடம் விசாரித்தார்கள். “இவன் என்னிடம் எதையும் திருடவில்லை. என்னிடமிருந்து சிறிது பணத்தைப் பெற்றுக்கொண்டான். அதற்கு நன்றிகூட சொல்லிச் சென்றான்” என்றார் ஷிசிரி கோஜுன். அப்படி அவர் சொன்னது அவன் உள்ளத்தைத் தொட்டுவிட்டது. ஆனாலும், பிற குற்றங்களுக்காக அந்தத் திருடன் சிறையில் அடைக்கப்பட்டான். வெளியே வந்ததும், அவன் ஷிசிரியிடமே சீடனாகச் சேர்ந்தான். பல ஆண்டுகள் அவருடன் இருந்து ஞானமும் பெற்றான். கருணை... இதைப்போல மனிதர்களைக் கலங்கடிக்கச் செய்யும் சிறந்த ஆயுதம் வேறு இருக்க முடியாது. அந்த ஆயுதத்தை கையில் எடுத்திருந்தார் ஜென் துறவி ஷிசிரி. அதற்கான பலன் கிடைத்தது. அதோடு, திருட வந்தவனுக்கே நன்றி சொல்லிப் பணம் பெற்றுச் செல்லும் பண்பைக் கற்றுக்கொடுத்தது அவர் திறமை. இரக்கம், கருணை இந்தக் குணங்களுக்கு எப்பேர்ப்பட்ட கல் நெஞ்சக்காரரையும் கரைய வைக்கும் சக்தி உண்டு. ஜென் தத்துவம் காலம் காலமாக வலியுறுத்துவது இந்தக் குணங்களைத்தான்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'துறவி கையில் எடுத்த ஆயுதம்!' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: மரியாதை இராமன், சோமன், பணக்காரன், பொல்லாதவர், தேங்காய், மாட்டு வண்டி, பணப்பை,  சன்மானம், வழிப்போக்கர், பூபாலன், ஏழை, விவசாயம், புறா, வைர மோதிரம், கடைக்காரர், குற்றவாளி,  தீர்ப்பு, ஊர் மக்கள், சபை, தொழில் தலைப்பு: நேர்மை கொண்ட உள்ளம்
மரியாதை இராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் மிகவும் பொல்லாதவர் பணத்தாசைப் பிடித்தவர். தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு சரியான கூலி கொடுக்கமாட்டார். ஒரு முறை சோமன் தன் தோட்டத்தில் விளைந்த தேங்காய்களை சந்தையில் விற்று விட்டு, கிடைத்த பத்தாயிரம் ரூபாயுடன் தன்னுடைய மாட்டு வண்டியில் காட்டு வழியாக வீட்டுக்கும் வரும் போது தனது பணப்பையைத் தொலைத்துவிட்டார். வீட்டுக்கு வந்ததும் வண்டியில் பணப்பையை தேடி பார்த்து கிடைக்காமல் புலம்பி தள்ளினார். மாட்டு வண்டி ஓட்டி வந்தவர் முதல் அனைவரையும் கேட்டு பார்த்து கிடைக்காமல் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார். அப்போ அவரது மனைவியார் "உங்க பணப்பையை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் கொடுக்கிறேன் என்று சொல்லுங்க, கண்டிப்பாக யாராவது கொண்டு வந்து கொடுப்பாங்க" என்றார். ஆகா இது நல்ல திட்டமாக இருக்கிறதே என்று நினைத்து அடுத்த நாளே ஊர் முழுவதும் தண்டோரா போட்டு சொல்லிவிட்டார். ஊர் மக்களும் பணப்பை கிடைத்தால் கொடுத்து சன்மானம் வாங்கலாம் என்று நினைத்தார்கள். அப்படி தேடி பார்த்தும் யாருக்கும் பணப்பை கிடைக்கவில்லை. இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு பின்பு அருகில் இருந்த ஊரிலிருந்து அந்த ஊருக்கு ஒரு வழிப்போக்கர் வந்தார். அவர் பெயர் பூபாலன். மிகவும் நல்ல குணமுடையவர். ஏழையாக இருந்தாலும் கவுரவமாக வாழ பிரியப்படுபவர். தன்னால் முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவுபவர். அவர் விவசாயம் செய்த நிலத்தில் நிலத்தடி நீர் கிடைக்காததால் விவசாயம் சரியாக செய்யமுடியவில்லை, வேறு தொழில் செய்யவோ தன்னிடம் பணமும் அனுபவமும் இல்லை என்பதால் பக்கத்து ஊருக்கு சென்று ஏதாவது வேலை செய்து, சம்பாதித்து பின்னர் தொழில் தொடங்க நினைத்து வந்தார். போகிற வழியில் காட்டுப்பாதையில் இருந்த அம்மன் கோயிலுக்கு போய் வேண்டிக் கொண்டார். அப்படி காட்டுவழியில் போகும் போது அங்கே ஒரு புறா அடிப்பட்டு கீழே கிடந்தது, அதை பார்த்து இரக்கப்பட்ட பூபாலன் அந்த புறாவை தூக்கிக் கொண்டு அருகில் இருந்த குளத்திற்கு கொண்டு சென்று தண்ணீரை எடுத்து அந்த புறாவின் வாயில் ஊற்றினார், பின்னர் அந்த புறாவை அருகில் இருந்த மரக்கிழையில் வைத்துவிட்டு வந்தார். அவர் அப்படி வரும் போது பாதையின் ஓரத்தில் காலில் ஏதோ மாட்டியதை கண்டார், அது ஒரு பை. அதில் நிறைய பணமும் இருந்தது. அதை எடுத்தவுடன் பூபாலனுக்கு யாரோ பாவம், தன் பணப்பையை விட்டு விட்டு போயிட்டாங்க, அப்படி தொலைத்தவர் மனம் எத்தனை வேதனைப்படுமோ, எனவே விரைவில் அவரை கண்டுபிடித்து கொடுத்துவிட வேண்டும் என்று ஊருக்கு விரைந்தார். அப்போ ஊருக்குள் சென்ற போது அங்கே இருந்த கடையில் விசாரித்த போது கடைக்காரர் சோமனைப் பற்றி சொல்லி, அவர் தான் தொலைத்தவர், நீங்க இதை கொடுத்தால், கண்டிப்பாக சன்மானம் கொடுப்பார் என்றார். உடனே பூபாலனும் சோமன் வீட்டை தேடி பிடித்து சென்று பணப்பை கிடைத்த விபரத்தை சொன்னார், சோமனுக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. உடனே அந்த பணப்பையை வாங்கிக் கொண்டார், அதே நேரம் அவரது கெட்ட எண்ணமும் வெளிப்படத் தொடங்கியது. பணப்பை கிடைத்து விட்டது, பணமும் சரியாக இருக்குது, இப்போ ஏன் இவனுக்கு சன்மானம் கொடுக்க வேண்டும், சன்மானம் கொடுக்காமல் தப்பிக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார் சோமன். கெட்ட மனம் கொண்ட சோமன் பூபாலனைப் பார்த்து "நீ என்னை ஏமாற்றப் பார்க்கிறாய், நான் என்னுடைய பையில் வைர மோதிரம் ஒன்றையும் வைத்திருந்தேன், அது காணவில்லை, மரியாதையாக கொடுத்து விடு, உன்னை சும்மா விடமாட்டேன்" என்று கத்தினான். பூபாலனுக்கு ஒன்றுமே புரியவில்லை, ஒருவேளை இவர் சொன்னது போல் வைர மோதிரம் இருந்து தொலைந்து போயிருக்குமா, நாம் தான் எடுக்கவில்லையே, இவரிடம் சன்மானம் வாங்குவதை விட பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம் என்று யோசித்தார். சோமனோ விடாமல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தார், பூபாலன் பணப்பை கொண்டு வந்த செய்தியை ஊராருக்கு சொன்ன கடைக்காரர், கஞ்சப்பயல் சோமன் அப்படி என்னத்தான் பரிசு கொடுக்கப் போறான் என்று பார்ப்போம் என்று அனைவரையும் அழைத்து வந்தார். வந்த இடத்தில் பூபாலன் குற்றவாளி போல் நிற்பதை கண்ட ஊரார் சோமனை சும்மா விடக்கூடாது, இந்த பிரச்சனையை மரியாதை இராமனிடம் தான் கொண்டு சென்று தீர்ப்பு கேட்க வேண்டும் என்று சொன்னார்கள். சிறிது நேரத்தில் சோமன், பூபாலன், ஊர் மக்கள் அனைவரும் மரியாதை இராமன் முன்னால் போய் நின்றார்கள். சோமன் தான் பணப்பையும், அதில் இருந்த வைர மோதிரம் தொலைத்த கதையையும், பூபாலன் தான் பணப்பை கண்டுபிடித்த கதையையும் சொன்னார்கள். ஏற்கனவே சோமன் அறிவித்த தண்டோரா பற்றி மரியாதை இராமனுக்கு தெரியும், அப்போ தண்டோரா போடும் போது வைரமோதிரம் பற்றி ஒன்றும் சொல்லாததும் தெரிந்தது தான். ஆக மொத்தம் சோமன் ஏமாற்றுகிறான் என்பதை புரிந்துக் கொண்ட மரியாதை இராமன், சோமனுக்கு சரியான தண்டனை கொடுக்க நினைத்து இவ்வாறாக தீர்ப்பு கூறினார் "சோமன் தொலைத்த பையில் பணமும், வைர மோதிரமும் இருந்தது என்று அவரே சொல்லியிருக்கிறார். இப்போ பூபாலன் கொண்டு வந்த பையில் பணம் மட்டுமே உள்ளது, ஆக இது சோமனின் பையே இல்லை, வேற யாரோ தொலைத்த பை. அப்படி தொலைத்தவர் இதுவரை யாரும் புகார் கொடுக்கவில்லல, அவ்வாறு யாரும் புகார் கொடுக்காதவரை நம்ம ஊர் வழக்குப்படி கிடைத்த பணத்தில் 10 பங்கு அம்மன் கோயில் செலவுக்கு கொடுத்துவிட்டு, மீதியை எடுத்தவரே வைத்துக் கொள்ளலாம், ஆக பூபாலன் அந்த பணத்தை தன் சொந்த உபயோகத்து வைத்துக் கொள்ளலாம், சோமனின் பணம் மற்றும் வைர மோதிரம் கொண்ட பையை கண்டுபிடித்தவுடன் சோமனே சன்மானம் கொடுப்பார், சபை கலையலாம்". மரியாதை இராமன் தீர்ப்பு சொன்னதும் சோமனுக்கு இதயமே நின்று போனது போல் ஆகிவிட்டது. பூபாலன் கிடைத்த பணத்தில் 10 சதவிதம் அம்மன் கோயிலுக்கு கொடுத்துவிட்டு, மீதியை தன் சொந்த ஊருக்கு கொண்டு சென்று தொழில் செய்து நலமாக வாழ்ந்து வந்தார்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: நீதிபதி, முல்லா, மன்னர், மக்கள், தற்பெருமை, மீன் பிடிக்கும் வலை, அரண்மனை, உப்பரிகை, பணியாளன் தலைப்பு: மீன் பிடித்த முல்லா
முல்லா வசித்த ஊரில் நெடுநாட்களாக நீதிபதி யாரையும் மன்னர் நியமிக்கவில்லை. மக்கள் இது குறித்து மன்னரிடம் முறையிட்டனர். " தற்பெருமை சற்றும் இல்லாத அடக்கமான ஒருவரை உங்கள் ஊரில் நீதிபதியாக நியமிக்க எண்ணியிருக்கிறேன். இதுவரை அத்தகைய தகுதி படைத்தவர் என் கண்களில் படவில்லை . அதனால் தான் உங்கள் ஊரில் நீதிபதியாக யாரையும் நியமிக்கவில்லை" என்றார் மன்னர். இந்தச் செய்தியை முல்லா அறிந்தார். ஒரு நாள் காலையில் முல்லா ஒரு பழைய மீன் பிடிக்கும் வலையை உடலில் போர்த்தியவாறு அரண்மனைப் பக்கமாக நடமாடிக் கொண்டிருந்தார். அரண்மனை உப்பரிகையில் உலாவிக் கொண்டிருந்த மன்னர் முல்லா மீன் வலையை போர்த்திக் கொண்டு உலாவுவது கண்டு ஆச்சரியமடைந்தார். தனது பணியாளன் ஒருவனை அனுப்பி முல்லாவை அழைத்து வரச் சொன்னார். " முல்லா நீர் ஏன் இப்படி மீன் வலையைப் போர்த்திக் கொண்டு உலாவுகிறீர்?" என்று வினவினார். " மன்னர் அவர்களே, நான் ஆதி நாளில் மீன் பிடிக்கும் தொழிலைத்தான் செய்து கொண்டிருந்தேன். நான் என்னதான் முல்லா ஆகிவிட்டாலும் பழைய தொழிலை மறக்கலாமா? எந்தத் தொழிலையும் கேவலமாகச் கருதக் கூடாது என்பதற்காக மறுபடியும் மீன் பிடிக்கப் போகிறேன் " என்றார் முல்லா. இத்தனைக் காலமாகத் தாம் எதிர்பார்த்த அடக்கமான மனிதர் முல்லாதான் என்று மன்னருக்குத் தோன்றியது. அதனால் அவரையே மன்னர் நீதிபதியாக நியமித்தார். சில நாட்கள் சென்ற பிறகு தெரு வழியாகச் சென்று கொண்டிருந்த முல்லாவை அரண்மனை உப்பரிகையிலிருந்து மன்னர் கண்டார். அவரிடம் மீன் வலை இல்லாததை அவர் கவனித்தார். " என்ன முல்லா மீன் வலையைக் காணோம் " என்று மன்னர் கேட்டார். " மன்னர் பெருமானே, மீனைப் பிடித்து விட்ட பிறகு வலை எதற்கு" என்றார் முல்லா. முல்லா மீன் என்று குறிப்பிட்டது நீதிபதி பதவியை.மன்னர் அதைப் புரிந்து கொள்ளவில்லை.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: ஓர் ஊரில் துணி வெளுக்கும் தொழிலைச் செய்து வந்தாள் ஒருத்தி. அவளுக்கு மூன்று மகள்கள் இருந்தனர். Auml;வருமே அழகிகளாக விளங்கினார்கள். எவ்வளவு உழைத்தும் அவர்களால் வயிறார உண்ண முடியவில்லை. வறுமையில் வாடினார்கள். ஒருநாள், அவர்கள் வீட்டிற்கு அழகான இளைஞன் ஒருவன் வந்தான். அம்மா! நான் பக்கத்து ஊரைச் சேர்ந்தவன். செல்வனாக இருக்கிறேன். என் வீட்டு வேலைகளைச் செய்ய ஒரு பெண் தேவை. உங்கள் மகள்களில் ஒருத்தியை அனுப்பி வையுங்கள். நான் அவளை அரசி போல வைத்துக் கொள்கிறேன், என்று இனிமையாகப் பேசினான். இதைக் கேட்ட மூத்த மகள், அம்மா! இங்கு நாம் வறுமையில் வாடுகிறோம், நான் இவருடன் செல்கிறேன், என்றாள். அவர் சொல்கின்ற வேலைகளைச் செய்து நல்ல பெயர் வாங்கு, என்று அவளை அனுப்பி வைத்தாள் தாய். அவளை அழைத்துக்கொண்டு நடந்தான் இளைஞன். நீண்ட தூரம் சென்ற பிறகு அவர்கள் ஒரு மாளிகையை அடைந்தார்கள். இதுதான் என் மாளிகை. இங்கு நீ உன் விருப்பம் போல இருக்கலாம் எந்த அறையை வேண்டுமானாலும் திறந்து பார்க்கலாம். ஆனால் அந்தக் கடைசி அறையை மட்டும் நீ திறந்து பார்க்கக் கூடாது. என் கட்டளையை நீ மீறினால் நான் பொல்லாதவனாகி விடுவேன். எல்லா அறைகளின் சாவியும் இங்கே உள்ளது, என்றான் அவன். நான் ஏன் உங்கள் கட்டளையை மீறப் போகிறேன். அந்த அறையைத் திறந்து பார்க்க மாட்டேன், என்றாள் அவள். தோட்டத்தில் இருந்த ஒரு சிவப்பு ரோசாப் பூவைப் பறித்து வந்தான் அவன். அதை அவள் தலையில் சூடினான். நான் வெளியே செல்கிறேன். எப்பொழுது வருவேன் என்று எனக்குத் தெரியாது. அந்த அறையை மட்டும் திறக்காதே, என்று சொல்லிவிட்டுச் சென்றான். ஒவ்வொரு அறையாகப் பார்த்துக் கொண்டே வந்தாள் அவள். ஒவ்வொரு அறையிலும் விலை உயர்ந்த பொருள்கள் இருந்தன. ஒரு அறையில் நவரத்தினங்களும் பொற்காசுகளும் கொட்டிக் கிடந்தன. எவ்வளவு நல்ல வாழ்க்கை கிடைத்து இருக்கிறது? நாம் இங்கேயே மகிழ்ச்சியாக இருக்கலாம், என்று நினைத்தாள் அவள். பூட்டி இருந்த கடைசி அறை அவள் கண்ணில் பட்டது. அவளால் ஆர்வத்தை அடக்க முடியவில்லை. அந்த அறைக்குள் அப்படி என்னதான் இருக்கும்? ஏன் நம்மைப் பார்க்க வேண்டாம் என்று தடுக்கிறார்? மெல்லத் திறந்து பார்த்துவிட்டு உடனே மூடி விடுவோம். கண்டிப்பாக அவருக்குத் தெரிய வாய்ப்பு இல்லை என்று நினைத்தாள் அவள். சாவியைப் போட்டு மெதுவாக அந்தக் கதவைத் திறந்தாள். உள்ளிருந்து அழுகுரலும் ஓலமும் கேட்டன. உள்ளே நுழைந்தாள். அங்கே கொடிய தீயில் பல உயிர்கள் வெந்து கொண்டிருந்தன. காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்! என்று அவை கெஞ்சின. தன்னை அழைத்து வந்திருப்பது பிசாசு என்ற உண்மை அவளுக்குப் புரிந்தது. அவசரமாக அந்தக் கதவை மூடிப் பூட்டுப் போட்டாள். எதுவுமே நடவாதது போலத் தன் அறைக்குள் வந்து அமர்ந்தாள் அவள். அந்தத் தீயின் வெப்பத்தால் அவள் தலையில் இருந்த பூ வாடி விட்டது. இதை அவள் கவனிக்கவில்லை. மீண்டும் அங்கு வந்த இளைஞன் அவளை மேலும் கீழும் பார்த்தான். என் கட்டளையை மீறி விட்டாய். அந்த அறையைத் திறந்து பார்த்து இருக்கிறாய். உனக்கு என்ன தண்டனை தெரியுமா? என்று கோபத்துடன் கத்தினான் அவன். நான் திறக்கவில்லை, என்று நடுங்கிக் கொண்டே சொன்னாள் அவள். உன் தலையில் உள்ள ரோசாப் பூ எப்படி வாடியது? என்னிடமா பொய் சொல்கிறாய்? நீயும் அந்தத் தீயில் கிடந்து புலம்ப வேண்டியதுதான், என்று அவளை இழுத்துக் கொண்டு சென்றான் அவன். என்னை மன்னித்து விடுங்கள், இனி மேல் நான் இப்படிச் செய்ய மாட்டேன், என்று கதறினாள் அவள். அவளை அந்தத் தீயில் தள்ளிவிட்டு அறையைப் பூட்டினான் அவன். துணி வெளுப்பவளின் வீட்டிற்கு மீண்டும் வந்தான் அவன், அம்மா! உங்கள் பெண் எங்கள் வீட்டில் நன்றாக இருக்கிறாள். அங்கே அவளுக்கு வேலை அதிகமாக இருக்கிறது. தங்கையையும் அழைத்து வரச்சொன்னாள். அதனால்தான் வந்தேன், என்றான். அடுத்தவளும் அவனுடன் புறப்பட்டான். இருவரும் மாளிகையை அடைந்தார்கள். வழக்கம் போல அவளுக்கும் சிவப்பு ரோசாப் பூவை சூடினான் அவன். எந்தக் காரணத்தை முன்னிட்டும் கடைசி அறையை மட்டும் திறக்காதே, என்று சொல்லிவிட்டுச் சென்றான் அவன். ஆர்வத்தை அடக்க முடியாத அவளும் அந்த அறையைத் திறந்தாள். திரும்பிவந்த அவன் அவளையும் தீக்குள் தள்ளினான். துணிவெளுப்பவளின் வீட்டிற்கு மூன்றாம் முறையாக வந்தான் அவன், உங்கள் இரு மகள்களும் என் மாளிகையில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அவளுக்கு அங்கே வேலை அதிகமாக இருக்கிறதாம். கடைசித் தங்கையையும் அழைத்து வரச் சொன்னார்கள். அதற்காகத்தான் வந்தேன், என்றான் அவன். என் மகள்கள் மகிழ்ச்சியாக இருந்தால் அதுவே எனக்குப் போதும் இவளையும் அழைத்துச் செல், என்றாள் தாய். கடைசி மகளையும் அழைத்து கொண்டு அவன் புறப்பட்டான், இருவரும் மாளிகையை அடைந்தனர். வழக்கம் போல அவள் தலையிலும் ரோசாப் பூவை அணிவித்தான் அவன். என் அக்கா ரெண்டு பேரும் எங்கே? என்று கேட்டாள் அவள். வேறு வேலையாக வெளியே சென்று இருக்கிறார்கள். வர ஒரு வாரம் ஆகும். நீ இந்த மாளிகையில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் கடைசி அறையை மட்டும் திறக்கக் கூடாது மீறினால் உனக்குக் கடுந்தண்டனை கிடைக்கும். நான் வெளியே செல்கிறேன். திரும்பி வர நேரம் ஆகும், என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான் அவன். அக்கா இருவரையும் காணவில்லை, வந்தவுடன் தலையில் ரோசாப் பூவைச் சூடுகிறான். ஒரு அறைக்கு மட்டும் செல்ல வேண்டாம் என்கிறான். ஏதோ சூழ்ச்சி நடக்கிறது, என்பது அவளுக்குப் புரிந்தது. அறிவுக்கூர்மை, உடைய அவள் சிந்தனையில் ஆழ்ந்தாள். திறக்கக் கூடாது என்று தடுத்த அறைக்கும் ரோசாப் பூவிற்கும் ஏதோ தொடர்பு உள்ளது, என்று அவளுக்குத் தோன்றியது. தலையில் இருந்த ரோசாப் பூவை எடுத்தாள். அருகில் இருந்த கிண்ணத்தில் அதை வைத்து மூடினாள். மெதுவாக நடந்து அந்த அறைக் கதவைத் திறந்தாள். உள்ளே தீயில் பலர் துடித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அவர்களில் தன் இரண்டு அக்காவும் இருப்பதைக் கண்டு திகைத்தாள். எங்களால் இந்த வேதனையைத் தாங்க முடியவில்லை. தங்கையே! நீதான் எப்படியாவது எங்களைக் காப்பாற்ற வேண்டும். புத்திசாலியாகிய நீ ரோசாப் பூவை சூடாமலேயே வந்து இருக்கிறாய். நீ வந்திருப்பது அந்தப் பிசாசிற்குத் தெரிய வாய்ப்பே இல்லை, என்றாள் மூத்தவள். கவலைப் படாதீர்கள் நான் உங்களை எப்படியும் காப்பாற்றுகிறேன், என்று வெளியே சென்றாள் அவள். பழையபடி அந்த அறையைப் பூட்டினாள். ரோசாப் பூவை எடுத்துத் தலையில் மீண்டும் அணிந்து கொண்டாள். இரவு நேரம், அவன் வந்தான். ரோசாப் பூ வாடாததைக் கண்டான். அவள் அந்த அறைக்குள் நுழைந்திருக்க மாட்டாள் என்று நினைத்தாள். நாள்தோறும் அவள் தலையில் புதிய ரோசாப் பூவை சூடிவிட்டுச் சென்றான் அவன். தன் இரண்டு அக்காவையும் எப்படித் தப்பிக்க வைப்பது என்று சிந்தனையில் ஆழ்ந்தாள் அவள். நான்கு நாட்கள் சென்றன. இளைஞனைப் பார்த்து அவள், இங்கே எனக்கு ஏராளமான வேலை இருக்கிறது. துணி துவைக்க நேரமே இல்லை. அழுக்குத் துணிகளை எல்லாம் பெரிய மூட்டையாகக் கட்டி வைத்து இருக்கிறேன். என் அம்மாவின் வீட்டில் தந்துவிட்டு வாருங்கள், என்றாள். நாளை மாலை அந்த மூட்டையைத் தூக்கிச் செல்கிறேன், என்றான் அவன். பொழுது விடிந்தது. அவன் வழக்கம் போல வெளியே சென்றான். அறைக்குள் சென்ற அவள் மூத்த அக்காவை வெளியே கொண்டு வந்தாள். நீ நம் வீட்டிற்குச் செல்ல ஏற்பாடு செய்துள்ளேன். நான் சொல்கின்றபடி நடந்து கொள். எல்லோரும் தப்பிக்கலாம் என்றாள் அவள். பெரிய சாக்கிற்குள் அக்காவை நுழைத்தாள் அவள். சுற்றிலும் அழுக்குத் துணிகளை வைத்தாள். சாக்கை இறுகக் கட்டினாள். இளைஞன் வந்தான். அவனிடம் அவள், அழுக்குத் துணி மூட்டை தயாராக உள்ளது. அதைத் தூக்கிச் செல்லுங்கள். வழியில் எங்கும் மூட்டையை வைக்கக் கூடாது. வைத்தால் எனக்குத் தெரிந்து விடும். என்னை ஏமாற்ற முடியாது. மூட்டையைக் கீழே வைத்தால் வைக்காதே என்று குரல் கொடுப்பேன். இருட்டுவதற்குள் இந்த மூட்டையை என் அம்மாவிடம் சேர்த்து விடுங்கள். அவரிடம் அடுத்த வாரம் வேறு அழுக்கு மூட்டை கொண்டு வருகிறேன். இதைத் துவைத்து வையுங்கள். அப்பொழுது எடுத்துச் செல்கிறேன் என்று சொல்லுங்கள். அங்கே அதிக நேரம் தங்காதீர்கள் உடனே புறப்பட்டு விடுங்கள் என்றாள் அவள். சூழ்ச்சியை அறியாத அவன் மூட்டையை தூக்கிக் கொண்டு புறப்பட்டான். மூட்டை மிகவும் கனமாக இருந்தது. அழுக்கு மூட்டையா இவ்வளவு கனம்? கீழே வைத்து விட்டு இளைப்பாறலாம் என்று நினைத்தான் அவன். தோளில் இருந்து மூட்டையைக் கீழே இறக்க முயற்சி செய்தான். அதற்குள் இருந்தவள், நான் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன். மூட்டையைக் கீழே வைக்காதே, என்று குரல் கொடுத்தாள். மாளிகைக்குள் இருக்கும் பெண்தான் பேசுகிறாள். எவ்வளவு தொலைவில் நடப்பதும் அவள் கண்களுக்குத் தெரிகிறதே? இறக்கி வைத்தால் நம்மைப் பற்றித் தப்பாக நினைப்பாளே, என்று நினைத்தான் அவன். மூட்டையைத் தூக்கிக் கொண்டே நடந்தான். ஒரு வழியாக வீட்டை அடைந்தான் அவன். கதவைத் தட்டி, அம்மா! உங்கள் பெண் அழுக்குத் துணி மூட்டையை அனுப்பி இருக்கிறாள். நன்கு துவைத்து வையுங்கள். அடுத்த வாரம் வேறு துணி மூட்டையுடன் வருகிறேன். அப்பொழுது இதை எடுத்துச் செல்கிறேன். எனக்குத் தங்க நேரம் இல்லை. உடனே வீடு திரும்ப வேண்டும், என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான் அவன். அடுத்த வாரம், தன் இரண்டாவது அக்காவை மூட்டைக்குள் வைத்துக் கட்டினாள் அவள். வழக்கம் போல அவளையும் தூக்கிச் சென்றான் அவன். வழியில் மூட்டையை வைக்க அவன் முயற்சி செய்தான். மூட்டையைக் கீழே வைக்காதே நான் பார்த்துக் கொண்டு இருக்கிறேன், என்ற குரல் கேட்டது. எப்படியோ ஒரு வழியாக அவள் வீட்டை அடைந்தான். வீட்டு வாசலிலேயே அவனுக்காகத் துணி வெளுப்பவள் காத்திருந்தாள். அவளைப் பார்த்து அவன், அம்மா! உன் மகள் அழுக்குத் துணி அனுப்பி இருக்கிறாள். ஒரு வாரத்திற்குள் எப்படித்தான் இவ்வளவு துணி சேர்கின்றதோ தெரியவில்லை. இதையும் வெளுத்து வையுங்கள். அடுத்த முறை வரும்போது இரண்டு மூட்டை துணிகளையும் எடுத்துச் செல்கிறேன். இப்பொழுது மிகவும் களைப்பாக இருக்கிறேன். நான் வருகிறேன், என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான் அவன். தன் இரண்டாவது மகளும் வந்து சேர்ந்ததை எண்ணி மகிழ்ந்தாள் அவள். களைப்புடன் மாளிகைக்கு வந்து சேர்ந்தான் அவன். என் வீட்டில் துணி மூட்டையைச் சேர்த்து விட்டீர்களா? என்று கேட்டாள் அவள். துணி மூட்டையா அது? என்ன கனம்? என்னால் தூக்கிக் கொண்டு நடக்கவே முடியவில்லை. நான் கீழே வைக்க முயன்றால் போதும். எப்படித்தான் உனக்குத் தெரியுமோ? உடனே நீ கீழே வைக்காதே, என்று குரல் கொடுக்கிறாய். அதைத் தூக்கிச் செல்ல நான் படும் துன்பம் எனக்குத்தான் தெரியும். இனிமேல் அழுக்குத் துணி மூட்டையை நான் எடுத்துச் செல்ல மாட்டேன், என்றான் அவன். இன்னும் ஒரே ஒருமுறை மட்டும் எடுத்துச் செல்லுங்கள். அதன் பிறகு நானே இங்கு துவைத்துக் கொள்கிறேன். துணியைக்கூட நீங்கள் அங்கிருந்து கொண்டு வர வேண்டாம். இந்த முறை மூட்டை அதிக கனமாக இருக்கும், என்றாள் அவள். இதுதான் கடைசி முறை, இனிமேல் முட்டையைத் தூக்கிச் செல்ல மாட்டேன், என்றான் அவன். பிறகு வெளியே சென்று விட்டான். அந்த மானிகைக்குள் இருந்த விலை உயர்ந்த பொருள்களை எல்லாம் திரட்டினாள் அவள். அவற்றை எல்லாம் சாக்கு மூட்டைக்குள் போட்டாள். புறப்படும் நாள் வந்தது. இளைஞனிடம் அவள், எனக்கு உடல் நலம் சரியில்லை. நான் அறைக்குள் படுத்திருப்பேன். என்னை எழுப்ப வேண்டாம். இன்று மட்டும் இருட்டியதும் அந்த மூட்டையை எடுத்துச் செல்லுங்கள். வழியில் எங்கும் கீழே வைக்காதீர்கள். என்னை ஏமாற்ற முயற்சிக்க வேண்டாம். இங்கிருந்தபடியே எங்கும் நடப்பதை என்னால் சொல்ல முடியும், என்றாள். நீ மூட்டை கட்டி வை. நான் திரும்பி வந்ததும் எடுத்துச் செல்கிறேன், என்று வழக்கம் போல வெளியே புறப்பட்டான் அவன். உடனே அவள் தன் படுக்கையில் தலையணைகளை வைத்தாள். மேலே போர்வையைப் போட்டு மூடினாள். சிறிது தூரத்தில் இருந்து படுக்கையைப் பார்த்தாள். யாரோ படுத்திருப்பதைப் போன்று தோன்றியது. சாக்கு மூட்டைக்குள் நுழைந்தாள் அவள். தன்னைச் சுற்றிப் பல பொருள்களை வைத்தாள். வெளியே ஒரு கையை மட்டும் நீட்டி சாக்கைக் கட்டினாள். பிறகு கையை உள்ளே இழுத்துக் கொண்டாள். சிறிது நேரத்தில் இளைஞன் உள்ளே வந்தான். படுக்கையில் அவள்தான் படுத்து இருக்கிறாள் என்று நினைத்தான். சாக்கு மூட்டையைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டான். மூட்டை மிகவும் கனமாக இருந்தது. தள்ளாடிக் கொண்டே நடந்தான் அவன். பாதி தூரம் கூடக் கடக்கவில்லையே, மூட்டையைக் கீழே வைத்து விட்டு இளைப்பாறுவோம் என்று நினைத்தான் அவன், தோளில் இருந்து கீழே இறக்க முயற்சி செய்தான். உடனே அவள், நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். கீழே வைக்காதே, என்று குரல் கொடுத்தாள். அவனும் பலமுறை கீழே வைக்கலாம் என்று நினைத்தான், ஒவ்வொரு முறையும் அவள் குரல் கொடுத்துக் கொண்டே வந்தாள். எப்படியோ முயன்று அவர்கள் வீட்டை அடைந்தான் அவன். கடைசி மகளின் வருகைக்காகத் தாய் வெளியேயே காத்திருந்தாள். பெரிய மூட்டையுடன் அவனைப் பார்த்ததும் துணி வெளுப்பவளுக்கு மகிழ்ச்சிதாங்கவில்லை. மூட்டையை இறக்கி வைத்தான் அவன். அப்பாடா! தொல்லை ஒழிந்தது. இனி மூட்டை தூக்கி வரும் வேலை எனக்கு இல்லை, என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான் அவன். சாக்கை அவிழ்த்தாள் அவள். விலை உயர்ந்த பொருள்களுடன் மகளும் வெளியே வந்தாள். மகளைக் கட்டித் தழுவிக் கொண்ட அவள், உள் அறிவுக் கூர்மையால் எல்லோரும் அந்தப் பிசாசிடம் இருந்து தப்பி விட்டோம். நிறைய பொருளும் கொண்டு வந்தாய். இனி நமக்கு வறுமையே இல்லை, என்றாள். அம்மா! என் திறமையை அந்தப் பிசாசு இந்நேரம் அறிந்து கொண்டிருக்கும். இனி அது நம் வழிக்கே வராது. கவலை இல்லாமல் நாம் இருக்கலாம், என்றாள் மகள். மிகுந்த களைப்புடன் தன் மாளிகையை அடைந்தான் அவன். நீ சொன்னபடியே மூட்டையைச் சேர்த்து விட்டேன். மூட்டையா அது? என்ன கனம்? என்று படுக்கையைப் பார்த்துப் பேசினான். படுக்கையில் எந்த அசைவும் இல்லை. போர்வையை நீக்கிப் பார்த்தான். தலையணைதான் இருந்தது. பரபரப்புடன் சென்று கடைசி அறையைத் திறந்தான். அந்தப் பெண்கள் இருவரையும் காணவில்லை. மூவரும் எப்படித் தப்பித்து இருப்பார்கள் என்று குழம்பினான் அவன். மெல்ல மெல்ல அவனுக்கு உண்மை விளங்கியது. நானே ஒவ்வொருவராகச் சுமந்து சென்று அவர்கள் வீட்டில் விட்டு வந்திருக்கிறேன். நன்றாக ஏமாந்து விட்டேன், என்று வருந்தினான் அவன். நம் உண்மை உருவத்தை அவர்கள் புரிந்து கொண்டார்கள். இனி அவர்களை ஏமாற்ற முடியாது, என்று நினைத்தான் அவன், அவர்கள் வீட்டிற்குச் செல்லும் எண்ணத்தையே விட்டு விட்டான்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'மூட்டையை வைத்தால்...' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: பிசலாயி, கல்தச்சன், காவல் தெய்வம், மாரியம்மன், ஆவுடையார், நத்தைகள், கதை, காளான் தலைப்பு: நத்தைக் கதை
நம்பமுடியாத கதை; என்றாலும் நம்பித்தானாக வேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை. 1945 ஆகஸ்டு மாதம் 9 -ஆம் நாள் பிரெஞ்சு ராணுவக் கப்பல் ஒன்று புதுக்சேரியைவிட்டு வெளியேறுவதற்கான தாயரிப்புகளில் இருந்தபோது நடந்ததுதான் இக்கதை. என்னுடைய பிரச்சினைகளெல்லாம் ஓரிரு வரிகளில் சொல்லி முடிக்கப்பட வேண்டிய ஒரு செய்தியை கதையாக எப்படி எழுதி முடிப்பது என்பது பற்றியே. தினமும் உறங்கப் போகும் போது படுக்கையில் என் மகளுக்கு ஒரு கதை சொல்ல வேண்டும். அக்கதை நான் படித்த கதையாக இருக்கக்கூடாது. அந்தத் தருணத்தில் வார்த்தைகளை அடுக்கி அடுக்கி சம்பவங்களைத் திரட்டி உருவாகக் கூடியதாக அக்கதை இருக்கவேண்டும். கதையில் முதல் வரியை; அதாவது, கடலில் மிதக்கும் ஆளில்லாத கட்டுமரத்தில் தாவி ஏறிக்கொண்ட ஒரு டால்ஃபின் நிலவையே பார்த்துக் கொண்டிருக்கிறது என்பது போன்ற ஓர் அடியைக் கொடுத்துவிட்டு கதையைக் கட்டச் சொல்வாள். நான் அதிலிருந்து கதையை ஆரம்பிக்க வேண்டும். சில சமயங்களில் கதைக்குள் அவளும் புகுந்து தன் போக்கிற்குக் கதையை திசைத் திருப்பிவிடுவாள். கதை முடியும் நிலையை எட்டுவதை அறியும்போது தீடீரென வேறு ஒரு சம்பத்தை இட்டிக் கட்டி அதன் முடிவைத் தள்ளிப் போடுவாள். நிலாவிற்குள்ளிருந்து புத்தர் எட்டிப் பார்த்து டால்ஃபினை நோக்கி கையசைக்க அது கட்டுமரத்தில் வாலை டப்டப்பென்று அடித்துத் துள்ளிக் குதிப்பதை கதையாக்குவது எனக்கு மிகுந்த சிரமமாக இருக்கும். இதில் தர்க்கம் எங்குமே சிதைவுபடக் கூடாது. இடையில் புகுந்து அவள் கேட்கும் கேள்விகள் நம் தவறைச் சுட்டிக்காட்டி நம்மை கூச வைத்துவிடும். இப்படியாக கதைசொல்லிக் கதைசொல்லி நானும் எளிய முறையில் கதையெழுதப் பழகிக் கொண்டிருக்கிறேன். ஆனால், நான் கதை சொல்லும்போது தேவைப்படாத நம்பகத் தன்மை என்பது கதை எழுதும்போது அவசியம் தேவை என்று நிர்பந்திக்கப்படுகிறேன். அதனாலேயே நான் எழுதிவரும் கதை நம்பமுடியாத கதை என்றாலும் நம்பித்தானாக வேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை. இக்கதைகூட என் மகள் முதலடி எடுத்துக் கொடுக்க நான் அவளுக்குச் சொன்னதையே சற்றே இடம் வலம் மாற்றி இடம் புறம் மாற்றி உங்களுக்காக எழுதுகிறேன். இக்கதையில் எது என் மகள் சொன்ன முதலடியாக இருக்கும் என்பதை நீங்களே படித்துக் கண்டுபிடித்துக் கொள்ளுங்கள். அதிகாலை, கடலை பனிமூட்டம் போல ஏதோவொன்று கவிந்திருந்தது. அலையடிக்கும் ஓசை மட்டுமே கேட்க அலைகள் கண்ணுக்குத் தெரியவில்லை. வெள்ளை இருட்டு. விடைபெறும் கப்பல் ஒன்றின் சைரன் ஒலி அடிவயிற்றிலிருந்து எழுகிறது. உற்று கவனிக்க, பனிமூட்டத்தினூடாக மங்கலான வெளிச்சப் பூங்கொத்து நகர்வது தெரிகிறது. பிசலாயி காலைக் கடனைக் கழிக்க ஆண்கள் வருவதற்குள்ளாக முந்திக்கொண்டு கடலுக்கு வருவது வழக்கம். இன்றும் அப்படித்தான்; இத்தனை அதிகாலையில் எழுந்த வந்துவிட்டாள். புதுச்சேரி கடலோர நிலம் அதன் மண்ணரிப்புக்குப் பேர்போனது என்பதால் கரைநெடுக்க பெரும் பெரும் பாறைகளைக் கொட்டிக் கொண்டேயிருக்கிறார்கள். அந்தப் பாறைகளின் இடைச்சந்துகளில் மலத்தை இறக்கிவிட்டு பாறைகளைத் தாவித்தாவி கீழிறங்கி மணலில் கால்பதித்தால் ஓடிவந்து குழந்தையைப் போல அலை கால்களைக் கட்டிக் கொள்ளும். பிசலாயி பாறைகளில் கால் பதிக்க கருங்கல் அத்தனைக் கறுப்பாகவும் இயல்புக்கு மாறாக வெதுவெதுப்பாகவும் பாதங்களைச் சுட்டது. பாறைகள் மட்டும் வெள்ளை மூட்டத்திற்குள் கழுவப்பட்ட எருமைகளின் முதுகுகளைப் போல பளீரென இருந்தன. பாதங்கள் சூடேறிக்கொண்டே வருவதை உணர்ந்த அவள் கீழிறங்கி மணலில் குதித்து நீரில் கால்களை நனைத்தாள். நீர் வெதுவெதுப்பாக இருந்தது. குறு அலைகள் புரண்டபடி சற்று தள்ளி எதையோ உருட்டியபடி இருந்தன. அவள் அருகில் சென்று பார்த்தாள். வெள்ளை வெளேரென்று பளிங்குப் பாறையில் கிண்ணம் வடித்துக் கவிழ்த்தது போல பெரிதாக ஒன்று மணலில் புதைந்திருந்தது. அலைகள் அதன்மீது ஏறியேறி வழிந்து கொண்டிருந்தன. அந்த மிகப் பெரிய வடிவத்தை கண்கள் விரிய தொட்டுப் பார்த்தாள். கதகதப்பாகத் தகித்தது. அலை நீர் அதன் மேல் பட்டுப் புகைந்தது. அதிசயமான ஒரு பாறையாக இருக்கிறதே என முணுமுணுத்தபடி கால் கழுவினாள். விடிந்தது. கடலுக்குச் சென்ற தன் கணவன் கரையேறி வந்ததும் அவனுக்கான காலைக்கடன்களை முடித்துவிட்டு அவன் இரண்டு மொந்தை கள் குடித்து முடிக்கும்வரை குத்துகாலிட்டு அமர்ந்திருந்தாள். குடித்து முடித்ததும் தூங்குவதை வழக்கமாகக் கொண்ட அவனை இழுத்துக்கொண்டு கொட்டப்பட்டிருக்கும் யானைத் தலைகளைப் போன்ற பாறைகளைத் தாவித்தாவி ஓடினாள். அவன் அவளைத் தொடர்ந்தான். அவள் பாறையிலிருந்து கீழே குதித்து மறைந்துபோக அவனும் ஓடி கீழேக் குதித்து ஓடிச்சென்று அவளைத் தழுவினான். அவள் அவனை விலக்கியபடி அலையில் மூழ்கியிருந்த பளிங்குக் கிண்ணத்தைக் காட்டினாள். அவன் அதிசயத்தோடு அப்பாறையைத் தொட்டுத் தழுவினான். அலையில் மூழ்கிய அதன் அடிப்பாகத்தைத் தொட்டுத் தடவியவன் வட்டப் பாறையிலிருந்து கனப்பரிமாணம் கொண்ட தண்டு ஒன்று மண்ணில் புதைந்திருப்பதை அவளுக்குச் சொன்னான். இருவராலும் அப்பாறையைப் புரட்ட முடியவில்லை. அவளிடம் ஏதோவொரு ஆர்வம் தொற்றிக்கொள்ள மற்றவர்களையும் அழைத்துக் கொண்டுவர ஓடினாள். பத்துப்பன்னிரெண்டு பேர் அப்பளிங்குக் காளான் குடையை உருட்டிக் கொண்டும் தூக்கித்தூக்கி எடுத்து வைத்தபடியுமாக தெருவுக்குக் கொண்டுவந்தார்கள். மீனவக் குடிகள் குவிந்துவிட்டன. காளான் குடையை நிமிர்த்திய பிறகு எல்லோரும் கையெடுத்துக் கும்பிட்டனர். அறையுங்குறையுமாக செதுக்கி முடிக்கப்படாத ஆவுடையார். லிங்கம் முழுமைகொண்ட பிறகு சக்திபீடம் முடிக்கப்படாமல் வெறும் பாறையாக செதுக்கிக் கழிக்கப்பட்டது போல இருந்தது. லாரிகளில் கொண்டுவந்து கரையோரமாகப் பாறைகளைக் கொட்டுவது வழக்கம். அப்பாறைகளோடு பாறையாக ஒரு பளிங்குப் படிமம் வந்து சேர்ந்திருக்கலாம் என்று நினைத்தவர்கள், அப்படிமத்தைத் தூக்கி வந்து மாரியம்மன் கோயிலின் முன்னேயுள்ள மண் புற்றுக்கு இடப்பட்ட கீற்றுக் கொட்டகைக்குள் அமர்த்தினார்கள். சக்திபீடம் முரட்டுப் பாறையாக இருந்தது. ஆங்காங்கே பாறை பொங்கிப் பூத்து உறைந்திருந்தது. இதைச் செதுக்கி வடிவுக்குக் கொண்டு வந்துவிட்டால் நம்மூருக்கு ஒரு தாயும் தந்தையும் கிடைத்து விடுவார்கள் என மாரியம்மன் கோயில் பூசாரி சொல்ல; சரி அம்மையப்பனைச் செதுக்கி ஒரு வடிவுக்குக் கொண்டு வந்துவிடுவோம் என பஞ்சாய்த்துக் தலை கூரியது. அன்றைய தினம் பார்த்து ஊருக்குள் வந்த அம்மி கொத்துபவனை வைத்து பீடம் செதுக்கப்பட்டது. முதலில் அவன் அதைச் செதுக்கத் தயங்கினான். இது ஏதோவொன்று; ஆவுடையார் இல்லை என மறுத்தான். இது சாத்திரக்கேடு என எடுத்துச் சொன்னான். அம்மி கொத்துபவன் சிற்ப சாத்திரம் பற்றி பேசுவானேன் என ஒரு பெரியவர் நீட்டி முழக்கிச் சொல்ல; கோபம் கொண்ட அவன் ஏதும் பேசாமல் பிடத்திற்கு சுற்று வட்டப் பகுதியைச் செதுக்கி கோமுகம் அமைத்து வடிவு கொடுத்த அழகைக் கண்டவர்கள் அவனை யாரென விசாரித்தனர். கல்தச்சன் தன்னை மாமல்லனின் வழித்தோன்றல் எனக் கூறிக்கொண்டு சன்மானத்தைப் பெற்றுக்கொள்ள மறுத்து தனது தோள்துண்டு நிறைய வகை வகையாக கருவாடுகளைக் கட்டிக் கொண்டு சென்றான். ஆவுடையார் அபிஷேகம் கொண்ட அன்று மாலை மேற்கில் சரிந்த சூரியன் மேற்கிலேயே தங்கிவிட்டது போல செக்கர்வானமாக இரவு விரிந்தது. ஓரிரவு மழையில் ஊரெல்லாம் ஓடிய வெள்ளம் கடல் சேர்ந்து அதையும் செம்புல நீராக மாற்றும் அழகை இதுவரைக்கும் கண்டிருந்த மீனவக் குடிக்கு வானும் கடலும் ஒருசேர வியப்பதைத் தந்தன. எங்கும் செம்பட்டை நிறம்; உடல்தோறும் பொருள்தோறும் காற்று வெளியெங்கும் வழிந்தது. மழை நின்ற பிறகும் அச்செவ்விரவு விடியவேயில்லை. கடல் மட்டம் உயர்ந்து ஊருக்குள் வந்ததில் எல்லோரும் மிரண்டார்கள். புயலில்லை மழையில்லை கடலில் கொந்தலிப்பில்லை; ஆனால், கடலின் நீர் மட்டம் முழங்கால் அளவுக்கு உயர்ந்து ஊருக்குள் புகுந்தது கண்டு புதுச்சேரி நகரமே திகைத்தது. கடல் நீர் உள்ளே ஏறி எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் மேற்கிலிருந்த ஊசுட்டேரியில் நிரம்பியது. வீடுகளுக்குள் நீர் புகுந்தது. எத்தனை நாட்கள் இப்படிக் கழிந்தது என்பது யாருக்குமே தெரியவில்லை. தெருக்களில் ஓடிய நீரில் பெரிய பெரிய ஆழ்கடல் மீன்கள் செத்து மிதந்தன. மாட்டு வண்டிகளைக் கட்டிக்கொண்டு விழுப்புரம் சாலையின் மேட்டுப் பகுதியை நோக்கி சிலர் இடம் பெயர்ந்து கொண்டிருந்தனர். பெரியகடை மணிக் கூண்டு நேரம் தவறாமல் ஒலித்து காலம் பற்றிய பிரக்ஞை அறுந்து நழுவாமல் குடிகளைக் காத்தது எனச் சொன்னால் மிகையாகாது. நீரிலேயே மனித நடமாட்டம் அவ்வப்பொழுது நடந்தது. கொஞ்சம் போல நீர்மட்டம் வடியத் தொடங்கியது. மேற்காக கோரிமேட்டின் உச்சிப் பகுதியில் தங்கியிருந்த மீனவக் குடிகளைத் தேடிக்கொண்டு எங்கிருந்தோ கல்தச்சன் வந்து சேர்ந்தான். அவனது இரு கைகளிலும் கொப்புளங்கள் கண்டிருந்தன. அவன் கோபத்தில் கத்தினான், நான் அப்போதே சொன்னேன். அது ஆவுடையர் அல்ல வேறு ஏதோவொன்று; யாரும் என் பேச்சைக் கேட்கவில்லை. அதைத் தொட்டுச் செதுக்கியதில் எனது கைகள் அமிலத்தில் நனைந்தது போல புண்ணாகி விட்டன பாருங்கள். அந்தப் படிமத்தை உடனடியாகமீண்டும் கடலுக்குள் விசிவிடுங்கள் அதை ஊருக்குள் வைத்திருந்தால் மொத்த குடியும் அழிந்துவிடும் என கத்தினான். மீனவக் குடியினர் முட்டியளவு நீரில் புதைந்து கிழக்கு நோக்கி நகர்ந்தனர். அவர்களின் குடிசைகள் சேரும் சகதியுமாகக் கிடந்தன. படகுகள் நீரில் புதைந்தும் கவிழ்ந்தும் கிடந்தன. வலைகளும் கட்டுமரங்களும் கடலோடு ஓடி விட்டிருந்தன. இறந்த மீன்கள் ஒதுங்கிய பகுதிகள் நாறின. மாரியம்மன் கோவில் மட்டுமே மிஞ்சியது. கொட்டகையற்ற இடத்தில் பெரிய புற்று கரைந்துசேற்றுக் குவியலாக இருந்தது. ஆவுடையார் படிமம் மட்டும் தகதகவென்று கண்களைக் கூசச் செய்யும் ஒளியை உமிழந்தபடிச் சுடர்ந்தது. செவ்விருட்டு கொஞ்சம் நீர்த்தது போல இருந்தது. ஆனால் இது இரவா அல்லது பகலா என யாருக்கும் தெரியவில்லை. பகல் இரவு என்பது வானவெளியின் நிறத்தைத் தவிர வேறில்லை என்பது உறுதிபட்டது.. பத்திருபதுபேர் கைகளில் துணியைக் சுற்றிக்கொண்டு அப்படிமத்தைத் தொட்டுத் தூக்கி உருட்டியபடி கடலுக்குச் சென்றார்கள். நீர் வடிந்து ஓடும் சாக்கடைப் பாட்டை வழியாக அதை கயிறுகட்டி இழுத்தபடி கடலுக்குக் கொண்டுவந்து புதைந்து கிடந்த இரண்டொரு கட்டுமரங்களை எடுத்துச் சேர்த்துக் கட்டி அந்தக் கல்லை அதில் ஏற்றி நீருக்குள் தள்ளிக்கொண்டே போனார்கள். மாரியம்மன் கோயிலுக்குள் நெருங்கியடித்துச் சுருண்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மீனவக் குடிகளை சுளீர் என்ற வெள்ளி வெளிச்சம் சுட்டு எழுப்பியது. கண் திறந்தால் ஊரே வெளிச்சத்தில் மிதந்து கொண்டிருந்தது. நீல வானம். சேருபடிந்த செம்மண் பூமி. நடுவானில் வெண்சுடர்ச் சூரியன் எல்லாம் பழையபடி புதிதாக இந்தப் பூமி பிறந்தது போல இருந்தது. எல்லோரும் கூவியபடி மகிழ்ச்சியோடு கடலை நோக்கி ஓடினார்கள். கடலில் தொடுவான தூரத்தில் கப்பலைவிட பெரியதாக வானத்தை முட்டுவது போல மிகப்பெரிய காளான் குடை ஒன்று சில நிமிடங்கள் தோன்றி மறைந்ததை எல்லாரும் கண்டு திகைத்தார்கள். அது தலைகீழாகப் புரட்டிப்போட்ட ஆவுடையார் போல இருந்ததாக பிசலாயி கண்கள் விரிய சொன்னாள். ஊரில் எல்லோருக்கும் மறு நாளிலிருந்து எல்லாம் மறந்து போனது. முன்பு கிடைத்த பல மீன் வகைகள் கிடைக்கவில்லை என்பது மீனவர்களுக்குத் தெரியவந்தது. இத்துடன் கதை முடிந்தது என்றாலும் இந்த இடத்தில் என் மகள் குறுக்கிட்டாள்; வேண்டாம் அப்பா இந்தக் கதை. இந்தக் காளானை நான் ஃபோட்டோவில் பார்த்திருக்கிறேன். இது கக்கா அப்பா; இந்தக் கதை வேண்டாம். அது காளான் இல்லை; பெரிய புகை. அது விஷம். அதை சுவாசிச்சா எல்லோரும் செத்துப் போயிடுவோம். அது கக்கா கதை; அது வேண்டாம். அவள் சிணுங்கத் தொடங்கிவிட்டாள். குழந்தைக்குச் சொல்கிற கதையா இது என என் அருமை பிசலாயி முணுமுணுத்தபடி படுக்கையில் சரிந்தாள். நான் என் மகளை அணைத்துக் கொண்டு அவளுடைய காதில் கிசுகிசுத்தேன்; ஒரு ஊருல ஒரு நத்தை இருந்துச்சாம். அது எதையோ தேடிகிட்டு தோட்டத்து வழியா போச்சாம் அப்போ மழை தூறல் போட ஆரம்பிச்சிச்சாம். நத்தை வழியில முளைச்சிருந்த காளான் குடைய பார்த்துச்சாம். அட, மழைக்கு இதுக்குக் கீழ நாம ஒதுங்கலாமே என நெனச்சுதாம். காளான் படர்ந்து அழகா இருந்துச்சாம். நத்தை அதுக்குக்கீழ போயி நின்னுக்கிச்சாம். நத்தையோட உடம்பு காளான்மேல உரச, நத்தையோட எச்சில் சில்லுன்னு காளான் மேல் பட்டுச்சாம். காளானுக்கு உடம்பு கூசுச்சாம். அதுக்கு கிச்சுகிச்சு பண்றது போல இருந்துச்சாம். காளான் தொண்டைய செருமிக் கொண்டு நத்தையே நீ உனது ஓட்டுக்குள்ளேயே ஓடுங்களாமே ஏன் எனது குடைகுள் ஒதுங்குகிறாய் எனக்கேட்டுச்சு. அதுக்கு நத்தை கொஞ்சநேரம் கழிச்சி நான் போயிடுவேன்னு சொல்லிச்சாம். அப்போ அந்த வழியா இன்னொரு நத்தை வந்துச்சாம். அதுவும் காளான் பக்கம் வந்த உள்ளே ஒதுங்கிச்சாம். முதல் நத்தை எனக்கே எடம் இல்ல நீ வேற வரியா என்று அதை தள்ளி விட்டுச்சாம். இரண்டாவது நத்தை முதல் நத்தையை திருப்பித் தள்ள இரண்டுக்கும் சின்ன சண்டை வந்தது. அந்தச்சண்டையில் ரெண்டும் சேந்து காளான தள்ளிவிட காளான் தலைகீழா கவிந்திடுச்சாம். ரெண்டு நத்தைகளும் திடுக்கிட்டு காளானப் பாத்து நிற்க ரெண்டுக்கும் துக்கம் துக்கமா வந்துச்சாம். முதல் நத்தை இப்படிச் சொல்லிச்சாம்; இனி நாம....
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: சிங்கமும் கழுதைப்புலியும் பசுவைப் பிடித்து வைத்திருந்தன. ஒரு நாள் சிஙகம் பசுவைக் கொன்றது. கழுதைப்புலி தன் குட்டியை சிங்கத்திடம் அனுப்பி தன் பங்கைக் கேட்டது. கழுதைப்புலியின் பங்காக பசுவின் குடலை மட்டும் கொடுத்து அனுப்பியது சிங்கம். கழுதைப் புலியோ, “நீ ஏன் குடலைக் கொண்டு வந்தாய்? அரைவாசிப் பங்குதானே நமக்கு உரியது?” என்று கேட்டது. குட்டி கழுதைப்புலி சொல்லியது: “நான் சின்னப்பயல். பெரியவர்கள் கொடுப்பதைத்தான் கொண்டு வர முடியும். நான் எப்படி சிங்கத்தோடு விவாதிக்க முடியும்”. அதைக்கேட்டு கோபமான கழுதைப்புலி அந்தக் குடலோடு சிங்கத்தைப் பார்க்கப் போனது. சிங்கம் உணவை உண்டு குகைக்குள் ஒய்வெடுத்துக் கோண்டிருந்தது. கழுதைப்புலி வந்ததைக் கண்டு கண்களை அச்சமூட்டும் வகையில் வைத்திருந்தது. “ஏன் இங்கே வந்தாய்?” - கர்ஜித்தபடி சிங்கம் கேட்டது. பசுவில் பாதி கேட்க வந்த கழுதைப்புலி தற்போது தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு பேசியது: “ராஜ சிங்கமே! நீங்கள் குடல் அனுப்பியதற்கு மிக்க நன்றி, ஆனால் அதனை உங்களிடமே சேர்க்க முடிவு செய்து விட்டோம்”. குடலை சிங்கத்திடம் கொடுத்து விட்டு திரும்பிய கழுதைப்புலியிடம் குட்டி கேட்டது: “பசுவில் பாதி கேட்கப்போன நீங்கள் குடலையும் கொடுத்து விட்டு வருகிறீர்களே?” “மகனே! சிங்கம் மிகக் கொடுரமாக இருந்தது. அதைக்கண்டு நடுங்கி விட்டேன். எனவே எனது பங்கையும் கொடுத்துவிட்டுப் பாராட்டி விட்டு வந்தேன். எல்லாம் நன்மைக்காக” என்றது தாய் கழுதைப்புலி. நம்மை விட வலிமையானவர்களைக் கோபப்படுத்துவதை விட அவர்களை சாந்தப்படுத்துவதே பாதுகாப்பானது.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'சிஙகமும் பங்கும் ஆப்பிரிக்கக் குட்டிக் கதை' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: நான் ஜபல்பூர் எனப்படும் ஊரில் இருபது வருடங்கள் தங்கி இருந்தேன். அதன் பழைய பெயர் ஜபலாபுர். அது மிகப் பெரிய ஞானிகளில் ஒருவரும், உபநிஷதத்தை எழுதியவருள் ஒருவருமான சத்யகம் ஜபால் என்ற ஞானியின் பெயரால் அழைக்கப்பட்டது. இந்த கதை சத்யகம் ஜபால் தெடர்புடையது. சத்யகம் குழந்தையாய் இருக்கும் போதே மிகவும் கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பார். அவர் அனுபவிக்காதவரை அவர் எதையும் நம்புவதில்லை. அவர் இளைஞனாக ஆன போது – அவருக்கு பன்னிரெண்டு வயதானபோது – அவர் தனது தாயிடம், “இந்த நாட்டின் இளவரசன் காட்டில் இருக்கும் குருகுலம் செல்கிறான். அவனுக்கும் எனது வயதுதான். நானும் போக விரும்புகிறேன், நானும் வாழ்க்கை என்றால் என்னவென்று கற்றுக் கொள்ள விரும்புகிறேன். அதற்கு இதுதான் நேரம்.” என்றார். தாய், “அது மிகவும் கஷ்டம், சத்யகம். ஆனால் எனக்குத் தெரியும், நீ பிறவியிலேயே தேடுதல் ஆர்வமுடையவன். நீ உன்னை ஒருநாள் ஒரு குருவிடம் அனுப்பச் சொல்லிக் கேட்பாய் என்று நான் பயந்து கொண்டேதான் இருந்தேன். நான் ஒரு ஏழைபெண். ஆனால் அது பிரச்னையல்ல. பிரச்னை என்னவென்றால் நான் இளமையாக இருந்தபோது பல வீடுகளில் வேலை செய்துகொண்டிருந்தேன். நான் ஏழை, ஆனால் அழகானவளாக இருந்தேன். அதனால் உனது தந்தை யாரென்று தெரியாது. நான் உன்னை ஒரு குருவிடம் அனுப்பினால் அவர்கள் உன் தந்தை யாரென்று கேட்பார்கள். உன் தந்தை யாரென்று தெரியாது என்று சொன்னால் அவர்கள் உன்னை ஏற்றுக் கொள்ளாமல் போகக் கூடும். ஆனால் முயற்சி செய்வதில் எதுவும் தப்பில்லை. நீ போய் நான் உன்னிடம் இப்போது சொன்னது போலவே உண்மையை அப்படியே சொல். நான் ஏழையாக இருந்ததால் பலர் என்னுடைய உடலை உபயோகித்திருக்கின்றனர். என்னுடைய தந்தை யாரென்று எனக்குத் தெரியாது என்பதை சொல். உன்னுடைய பெயர் சத்யகம் என்றும் உன் தாய் பெயர் ஜபாலா என்றும் சொல். அப்போது அவர்கள் உன்னை சத்யகம் ஜபால் என்று அழைக்கட்டும். உண்மையை பொறுத்தவரை உனது தந்தை யாரென்பது ஒரு பிரச்னையல்ல.” சத்யகம் காட்டில் உள்ள ஒரு வயதான குருவிடம் சென்றான். நிச்சயமாக முதல் கேள்வி, உன்னுடைய பெயர் என்ன? உன்னுடைய தந்தை பெயர் என்ன? என்று கேட்பார்கள் என்று தெரிந்தே போனான். அவர்கள் கேட்டவுடன் அவன் தன் தாய் சொன்னதை அப்படியே சொன்னான். அங்கு பல இளவரசர்கள், பணக்காரர்களின் புதல்வர்கள் ஆகியோர் சீடர்களாக இருந்தனர். அவர்கள் சிரிக்க ஆரம்பித்தனர். ஆனால் அந்த வயதான குரு, “நான் உன்னை என் சீடனாக ஏற்றுக் கொள்கிறேன். உனது தந்தை யாரென்பது பொருட்டல்ல. நீ ஆணித்தரமாகவும், நேர்மையாகவும், பயமில்லாமலும் இருப்பது தான் இங்கு முக்கியமான விஷயம். எந்தவிதமான தர்மசங்கடமும் இல்லாமல் உண்மையை சொல்லும் நேர்மை உன்னிடம் இருப்பதுதான் சிறப்பு. உன் தாய் உனக்கு சரியான பெயர்தான் கொடுத்திருக்கிறாள் சத்யகம் சத்யகம் என்றால் உண்மையை அடைவது மட்டுமே தேடுதலாக கொண்டவன் என்று பொருள். உனக்கு மிக அழகான தாய் கிடைத்திருக்கிறாள், நீ இன்றிலிருந்து சத்யகம் ஜபால் என்று அழைக்கப்படுவாய். இங்கு பிராமணர்கள் மட்டுமே சீடர்களாக ஏற்றுக்கொள்ளப் படுவது தான் சம்பிரதாயம். நான் உன்னை ஒரு பிராமணன் என்று பிரகடனப்படுத்துகிறேன். ஏனெனில் பிராமணர்களுக்கு மட்டுமே இந்த உண்மையை ஒத்துக் கொள்ளும் தைரியம் இருக்கும்.” என்றார். அவை மிக அழகான நாட்கள். அந்த வயதான குருவின் பெயர் உதாலக். சத்யகம் அவருடைய மிக நெருங்கிய அன்பான சீடனாக ஆனான். அவருக்கு தகுதி இருந்தது. அவர் மிகவும் தூய்மையானவராகவும் மிகவும் நிர்மலமானவராகவும் இருந்தார். ஆனால் உதாலக்கு சில வரையறைகள் இருந்தன. அவர் கற்றுக் கொடுப்பதில் மிகச் சிறந்தவராக இருந்த போதிலும் அவர் ஞானமடையவில்லை. அதனால் அவர் சத்யகமுக்கு எல்லா சமயநூல்களையும் கற்றுக் கொடுத்தார், அவருக்கு தெரிந்த எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்தார், ஆனால் அவர் எல்லோரையும் நம்பவைப்பது போல சத்யகம்மை நம்பவைக்கவில்லை. சத்யகம் கேள்வி கேட்பார் என்பதற்காக அல்ல. அவருடைய நிர்மலமான தன்மை அந்த அளவு உண்மையானதாக இருந்தது. அவர், “நான் உனக்கு சொல்லிக் கொடுத்தது எல்லாமே நான் நூல்களில் இருந்து படித்ததுதான். அவை எனக்கு சொந்தமானவை அல்ல. நான் அவற்றை அனுபவப்படவில்லை. அதை நான் வாழ்ந்து பார்த்ததில்லை. இன்னும் உள்ளே காட்டிற்க்குள் வாழும் ஒரு மனிதரை எனக்குத் தெரியும். அவர் மிகவும் அன்பானவர், கருணையானவர், உண்மையே வடிவானவர். நீ அவரிடம் போ.” என்று கூறி சத்யகம்மை அவரிடம் அனுப்பி வைத்தார். உதாலக் அவரைப் பற்றிக் கேள்விப் பட்டிருந்தாரே தவிர அவரை நேரில் பார்த்ததில்லை. உதாலக் மிகப் பிரபலமானவர், சிறந்த பண்டிதர்……. சத்யகம் அந்த இன்னொருவரிடம் சென்றார். அவர் சத்யகம்முக்கு பல புதிய சமய நூல்களையும், எல்லா வேதங்களையும், இந்த உலகத்தின் பழைமையான நூல்களையும் கற்பித்தார். பல வருடங்களுக்கு பிறகு, “இப்போது உனக்கு அனைத்தும் தெரியும், இனி கற்பதற்கு எதுவும் இல்லை. நீ திரும்பி வீட்டுக்குப் போகலாம்.” என்றார். முதலில் சத்யகம் உதாலக்கை காண சென்றார். உதாலக் ஜன்னல் வழியே காட்டிக்குள்ளிலிருந்து வரும் ஒத்தையடிப் பாதையின் வழியே சத்யகம் வருவதை பார்த்தார். அவர் அதிர்ச்சியடைந்தார். சத்யகம்மின் நிர்மலமான தன்மை காணாமல் போயிருந்தது. அதற்கு பதிலாக பெருமை குடியிருந்தது – எல்லோருக்கும் ஆவது போலவே, அவருக்கு இப்போது இந்த உலகத்திலுள்ள தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும் தெரியும் என்ற நினைப்பே ஆணவத்தை கொடுத்திருந்தது. அவர் உள்ளே வந்தார். அவர் உதாலக்கின் பாதங்களை தொட குனியும்போது உதாலக், “எனது பாதங்களில் விழாதே. முதலில் நீ உன்னுடைய நிர்மலமான தன்மையை எங்கே தொலைத்தாய் என எனக்குத் தெரிய வேண்டும். நான் உன்னை தவறான மனிதரிடம் அனுப்பி விட்டேன் போலத் தெரிகிறது” என்றார். சத்யகம், “தவறான மனிதரிடமா, அவர் அறிய வேண்டிய அனைத்தையும் எனக்கு கற்றுக் கொடுத்தார் .“ என்று கூறினார். உதாலக், “நீ எனது பாதங்களில் விழுவதற்கு முன் நான் உன்னை ஒன்று கேட்க விரும்புகிறேன் – நீ எதையாவது அனுபவப்பட்டாயா அல்லது எல்லாமே வெறும் தகவல்கள் மட்டும்தானா? ஏதாவது நிலைமாற்றம் நிகழ்ந்ததா? உனக்கு தெரிந்திருப்பவை அனைத்தும் உன்னுடையவை என்று கூற முடியுமா?” என்று கேட்டார். சத்யகம், “அப்படி எதையும் கூற முடியாது. நான் அறிந்திருப்பவை அனைத்தும் நூல்களில் உள்ளவை மட்டுமே. நான் எதையும் அனுபவப்படவில்லை” என்று கூறினார். அப்போது உதாலக், “நீ போன பிறகு வேறொரு மனிதரைப் பற்றி நான் கேள்விப்பட்டேன். நீ அவரிடம் போ. உனக்கு அனுபவப்படாத வரை திரும்பி வராதே. நான் உன்னை அனுப்பும் போது இருந்ததை விட மதிப்பு குறைந்தவனாக திரும்பி வந்திருக்கிறாய். மதிப்பிட முடியாத ஒன்றை நீ இழந்து விட்டாய். அறிவு என்று நீ அழைப்பது கடன் வாங்கப் பட்டதாக இருந்தால் அது உனது அறியாமையை மூடி மறைப்பதாக மட்டுமே இருக்கும். அது உன்னை அறிந்தவனாக ஆக்காது. நான் சொல்லும் இந்த மனிதரிடம் செல், அவரிடம், உண்மையை பற்றி, கடவுளைப் பற்றி, அன்பைப் பற்றி மேலும் அதிக விவரங்கள் பெறுவதற்காக வரவில்லை என்று கூறு. நீ கடவுளை, அன்பை, உண்மையை தெரிந்து கொள்வதற்காக வந்திருக்கிறாய் என்று சொல். உங்களால் இதை செய்ய முடியுமென்றால் நான் இங்கே இருக்கிறேன். இல்லையென்றால் நான் நேரத்தை வீணாக்காமல் வேறு ஒரு குருவை தேடிப் போகிறேன் என்று சொல்” என்று கூறினார். சத்யகம் சென்று அப்படியே கூறினார். அந்த குரு ஒரு மரத்தடியில் தனது சில சீடர்களுடன் உட்கார்ந்திருந்தார். இந்த கோரிக்கையை கேட்டவுடன் அவர், “அது சாத்தியமானதுதான், ஆனால் நீ வித்தியாசமான ஒன்றை கேட்கிறாய். இங்கே பல சீடர்கள் உள்ளனர். அவர்கள் இன்னும் அதிக விவரமான தகவல்கள் கேட்கின்றனர். இதைப் பற்றி, அதைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புகின்றனர். ஆனால் உனக்கு தகவல்கள் சேகரிக்க விருப்பம் இல்லையென்றால், நீ உண்மையை தெரிந்து கொள்வதற்காக எதையும் செய்ய தயார் என்றால் சத்தியத்திற்கான உனது தேடுதல் உன்னையே நீ அர்ப்பணித்துக்கொள்ள தயாராக இருக்குமானால் நான் உனக்காக ஒரு வழி கண்டுபிடிக்கிறேன்”. என்றார். சத்யகம், “நான் எனது வாழ்க்கையை அர்ப்பணிக்க தயாராக இருக்கிறேன். ஆனால் உண்மையறியாமல் திரும்பி செல்ல என்னால் முடியாது. எனக்கு சதயகம் என்று பெயரிட்ட எனது தாயிடமோ, அல்லது நான் உண்மையை கூறிய ஒரே காரணத்தினாலேயே நான் பிராமணனா இல்லையா என்று கவலைப் படாமல் என்னை ஏற்றுக் கொண்ட எனது குருவிடமோ திரும்பி போக முடியாது. என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள்.” என்று கேட்டான். குரு, “இங்கே நீ பார்க்கும் இந்த பசுக்களை கூட்டிக் கொண்டு உள்ளே காட்டிற்க்குள் சென்று விடு. எந்த மனிதருடனும் தொடர்பு கொள்ள முடியாத வண்ணம் எவ்வளவு அடர்ந்த காட்டிற்க்குள் செல்ல முடியுமோ அவ்வளவு தூரம் உள்ளே சென்று விடு. நீ மொழியை, வார்த்தைகளை மறக்கவேண்டும் என்பதுதான் காரணம். பசுக்களுடன் வாழ், அவற்றை பாதுகாத்து வா, உனது குழலுடன் விளையாடு, நடனமாடு – ஆனால் வார்த்தைகளை மறந்துவிடு. இந்த பசுக்களின் எண்ணிக்கை ஆயிரம் ஆனவுடன் திரும்பி வா.” என்றார். இங்கே இருந்த மற்ற சீடர்களுக்கு என்ன நிகழ்கிறதென்றே புரியவில்லை – ஏனெனில் அங்கு இருந்தது ஒரு டஜன் அல்லது இரண்டு டஜன் பசுக்கள்தான். அவை எப்போது ஆயிரம் பசுக்கள் ஆவது ? ஆனால் சத்யகம் பசுக்களை கூட்டிக் கொண்டு அடர்ந்த காட்டுக்குள், மனித சஞ்சாரமற்ற இடத்துக்கு, மனித வாடையற்ற இடத்துக்கு சென்றார். முதல் சில தினங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. பசுக்கள் மட்டுமே அவரது தோழமையாக இருந்தன. அவை மிக அமைதியான மக்கள். அவன் தனது புல்லாங்குழலை வாசிப்பான், காட்டில் தனியாக நடனமாடுவான், மரத்தடியில் படுத்து ஓய்வெடுப்பான். முதல் சில வருடங்கள் தொடர்ந்து பசுக்களை கணக்கெடுத்து வந்தான். பின் மெது மெதுவாக அதை விட்டு விட்டான். ஏனெனில் அவை ஆயிரமாக மாறுவது இயலாததாக தோன்றியது. மேலும் எப்படி கணக்கெடுப்பது என்பதையும் அவன் மறந்துவிட்டான். மொழி மறைந்துவிட்டது. வார்த்தைகள் மறைந்துவிட்டன. கணக்கு எடுக்க இயலவில்லை. இந்த கதை மிகவும் அழகானது. பசுக்களின் எண்ணிக்கை ஆயிரம் அடைந்தவுடன் பசுக்கள் கவலைப்பட ஆரம்பித்தன. ஏனெனில் அவைகள் வீடு செல்ல விரும்பின. இவனுக்கு எப்படி எண்ணுவது என்பது மறந்து போய் விட்டது. இறுதியில் பசுக்கள், “நாம் இவனுக்கு சொல்லியாக வேண்டும். இல்லாவிடில் இந்த தனிமையான வனமே நமது கல்லறையாகிவிடும்.” என்று முடிவெடுத்தன. அதனால் ஒருநாள் பசுக்கள் சத்யகம்மை பிடித்து நிறுத்தி, “இங்கே பார், சத்யகம், நாங்கள் இப்போது ஆயிரம் பசுக்களாகி விட்டோம். நாம் இப்போது வீடு திரும்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது.” என்றன. சத்யகம், “உங்களுக்கு மிகவும் நன்றி. நீங்கள் இப்போது என்னிடம் இதை சொல்லியிராவிட்டால்…….. நான் வீட்டை பற்றியும் திரும்பி போவது பற்றியும் மறந்து விட்டேன். ஒவ்வொரு கணமும் மிகவும் அழகானதாக….. பரவசமாக இருக்கிறது. இந்த மௌனத்தில் மலர்கள் பூச்சொரிகின்றன. நான் எல்லாவற்றையும் மறந்து விட்டேன். நான் யார் என்பதையும் நான் எதற்காக இங்கே வந்தேன் என்பதையும் நான் மறந்து விட்டேன். இங்கே எல்லாமும் முடிவடைந்துவிட்டது. புல்லாங்குழல் வாசிப்பது மட்டுமே போதும். மரத்தடியில் ஓய்வெடுப்பது மட்டுமே போதும், இந்த அழகான பசுக்கள் சுற்றிலும் அமைதியாக இருப்பதை பார்ப்பது மட்டுமே மிக அருமையானது. ஆனால் நீங்கள் வற்புறுத்தினால், நாம் திரும்பிப் போவோம்.” என்றான். அந்த குருவின் சீடர்கள் சத்யகம் ஆயிரம் பசுக்களோடு திரும்பி வருவதை பார்த்தனர். அவர்கள் குருவிடம், “அவன் ஆயிரம் பசுக்களோடு திரும்பி வருவான் என நாங்கள் நினைக்கவேயில்லை. அவன் வந்து விட்டான். நாங்கள் எண்ணி விட்டோம் அவை மிகச் சரியாக ஆயிரம் பசுக்கள் உள்ளன. அவன் வருகிறான்.” என்றனர். அவன் வந்து நின்றான்……..பசுக் கூட்டத்தின் நடுவே நின்றான். குரு தனது சீடர்களிடம், “நீங்கள் தவறாக எண்ணியிருக்கிறீர்கள். அங்கே ஆயிரத்தோரு பசுக்கள் உள்ளன. நீங்கள் சத்யகம்மை எண்ண மறந்து விட்டீர்கள். அவன் உங்களது உலகத்தை விட்டு தாண்டி போய் விட்டான். அவன் நிர்மலமான தன்மையினுள், மௌனத்தினுள், அறிவுக்கெட்டாதனுள் நுழைந்து விட்டான். அவன் பசுக்கள் எப்படி நிற்கிறதோ அங்கேயே நிற்கிறான் பாருங்கள்.” என்றார். குரு, “சத்யகம், நீ வெளியே வரலாம். இப்போது நீ உன்னை இங்கே அனுப்பிய உனது குருவிடம் செல்லலாம். அவர் மிகவும் வயதானவர், அவர் உன் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கக் கூடும். உன் தாய் உனக்காக காத்துக் கொண்டிருப்பாள்.” என்றார். சத்யகம் தனது முதல் ஆசிரியரிடம் – சத்யகம் ஒரு தகவல் களஞ்சியமாக மட்டுமே மாறியதால் தனது வெகுளித்தனத்தை தொலைத்து, தனது நிலையிலிருந்து கீழிறங்கி ஒரு பிராமணனாக இல்லாமல் போய் விட்டார் எனக் கூறி தனது பாதத்தில் விழக் கூடாது என தடுத்த உதாலக்கிடம் – திரும்பி வந்தார். இவர் வருவதை ஜன்னல் வழியாக பார்த்த உதாலக் பின் வாசல் வழியாக ஓடிப் போய் விட்டார். ஏனெனில் இப்போது சத்யகம் தனது பாதங்களில் விழ அனுமதிக்க கூடாது. தான்தான் அவர் பாதங்களில் விழ வேண்டும். ஏனெனில் உதாலக் இப்போது வெறும் பண்டிட் மட்டுமே, ஆனால் சத்யகம் இப்போது விழிப்புணர்வு பெற்று அறிந்தவராகி விட்டார். உதாலக் வீட்டிலிருந்து தப்பிப் போய் விட்டார். “என்னால் அவரை சந்திக்க முடியாது. நான் வெட்கமடைகிறேன். உதாலக் இறந்து போய்விட்டார். அவர் உன்னை நினைத்துக் கொண்டே இறந்தார் என சத்யகம்மிடம் சொல்லி விடு. அவரை அவருடைய தாயிடம் போக சொல்” என தனது மனைவியிடம் சொல்ல சொல்லிவிட்டு போய் விட்டார். வெவ்வேறு விதமான மக்கள் இருக்கிறார்கள். சத்யகம் வீடு திரும்பினார். தாய்க்கு மிகவும் வயதாகி விட்டிருந்தது. ஆனால் அவள் காத்துக் கொண்டே………..இருந்தாள். “உண்மை எப்போதும் ஜெயிக்கும் என்பதை நீ நிரூபித்துவிட்டாய், சத்யகம். பிராமணன் என்பவன் பிறப்பது இல்லை, பிராமணன் என்பது அடையவேண்டிய ஒரு குணாதிசியம் என்பதை நீ நிரூபித்துவிட்டாய். ஒவ்வெருவரும் பிறப்பால் சூத்திரர்தான், ஏனெனில் ஒவ்வொருவரும் பிறப்பில் ஒன்றானவரே. ஒருவன் தன்னை தூய்மைப் படுத்திக் கொள்வதனாலும், ஒருமை படுத்திக் கொள்வதனாலும், மையம் மற்றும் ஞானத்தை அடைவதனாலும், தான் ஒரு பிராமணன் என்பதை நிரூபிக்கவேண்டும். பிராமண குடும்பத்தில் பிறப்பதால் மட்டுமே அவன் பிராமணன் ஆவதில்லை.” என்றாள்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'யார் பிராமணன்' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: நான் குத்புதின் அன்சாரி, வயது 29. தையல்காரன். அம்மா, மனைவி, மூன்று வயதுள்ள மகள் என சுருங்கியிருக்கும் என் குடும்பம் அகமதாபாத் பாபு நகர் காலனியில் வாழ்கிறது. உங்களுக்கு என்னைத் தெரியும். நான் காற்றின் தொடக்க காலமான ஜனவரியில் பாபு நகரில் மிகவும் உயரமான கட்டடத்தின் மேலே ஏறி பட்டம் விட்டவன். கடையை மூடிவிட்டு இரவில் வீட்டுக்குப் போகும்போது காசிருந்தால் என் மகளுக்கு மிகவும் பிடித்தமான பாஸிலாலின் பட்டர் ஸ்காச் ஐஸ்கிரீம் வாங்குவேன். சில நேரங்களில் அமைதியாய் இருக்க வேண்டும் என்று தோன்றினால் எல்லீஸ் பாலத்தின் மேலே ஏறிநின்று நீருடனோ அல்லது நீரற்று வெறுமையோடோ இருக்கிற சபர்மதி ஆற்றைப் பார்த்துக்கொண்டிருப்பேன். நான் பார்க்கப் பார்க்க வளர்ந்த பாபுநகரின் சில பெண் பிள்ளைகள் தங்களின் திருமணத் துணி தைக்க வரும்போது, அதன் தொடர்ச்சியாக மனதில் எழும் இன்ப அலைகளை, நான் ரிலீப் ரோட்டில் பரப்பியிருக்கும் கடைகளிலிருந்து சிவப்பு கண்ணாடி வளையல்கள் வாங்கி, எங்களின் ஒரே அறையைக் கொண்ட வீட்டில் மிகவும் ரகசியம் காக்கும் கொசு வலைக்குள் என் மனைவியின் கைகளில் அணிவித்துப் பார்ப்பேன். மாதத் தவணையில் 14 இன்ச் டி.வி. வாங்கிய போது நான் ஏலக்காய் டீ போடுவதையும் கற்றுக்கொண்டேன். க்யோம்கி, சால்பி, கட்பஹீ“தி போன்ற சீரியல்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போது, அம்மாவும், மனைவியும் நான் தயாரித்த டீயை நன்றி கூட சொல்லாமல் வாங்கிக் குடித்தது எனக்குச் சிரிப்பை வரவழைத்தது. என் அம்மாவுக்கு சினிமா பார்ப்பதைவிட அதிகமான பிரியம் வெளியே சென்று தின்பண்டங்கள் வாங்கித் தின்பதில்தான் இருந்தது. வழியோரக் கடைகளில் கபாபும், கறி குருமாவும், வறுத்த கறியும், சங்கல்ப் ரெஸ்டாரண்டில் கொண்டு வந்து வைக்கும் ஃபேமிலி ரோஸ்டைப் பார்த்து என் மகள் கைகொட்டிச் சிரித்து உண்பதும், கோபி டைனிங் ஹாலில் தயிர் சேர்த்துச் செய்த தின்பண்டமும், கத்தரிக்காய், வள்ளிக்கிழங்கு, உருளைக்கிழங்கு எல்லாம் சேர்த்து செய்த உந்தியாவுமாக சுத்த வைஷ்ணவ குஜராத்தி பட்சணமும் அம்மாவை சந்தோஷப்படுத்தும். மாதத்தில் ஒரு முறையாவது இந்த சந்தோஷத்தை அம்மாவுக்குக் கொடுக்க சீரியல்கள் இல்லாத மாலைகளில் ஆட்டோ வைத்துக்கொண்டு போவோம். ஆனால் நான் குத்புதின் அன்சாரி. வருங்காலத்தின் ஒரு ஞாபக சின்னமானேன். டில்லிக்கு இந்தியா கேட் போல. ஜெய்ப்பூருக்கு ஹவா மஹால் போல. கல்கத்தாவின் ஹெளரா பிரிட்ஜ் போல. பம்பாய்க்கு கேட் வே ஆப் இந்தியா போல. அகமதாபாத்திற்கு ஒரு சின்னமில்லாமல் இருந்தது. காந்தியின் சபர்மதி ஆஸ்ரமம் அகமதாபாத்தின் சின்னமாகாமல் போனதற்கு, அது அவ்வளவு எடுப்பாக இல்லாமல் போனதே காரணம். சின்னம் பிரதானமானது. சின்னமில்லாத நகரங்களுக்கு முகமில்லை. சித்தி சையத்தின் மசூதியில் கல்லில் செதுக்கி வைத்த மரத் துண்டுகளுடன் கலந்து கிடக்கும் மர உருவம் ஐ.ஐ.எம் அகமதாபாத்தின் நினைவாகிப் போனது. குறிப்பிட்டு எதுவும் சொல்ல முடியாமல், அடையாளம் காண முடியாமல் போன நாட்களில் தான் நான் அதைச் செய்தேன். 2002ம் வருடம் எப்போது இல்லாத காற்றையும் சேர்த்துதான் தொடங்கியது. வடக்கு கிழக்காக அடித்த காற்று என் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் தூங்கு மூஞ்சி மரத்தை அதிகமாக சப்தமிட வைத்த போது இந்த வருடம் பட்டம் விட மிகவும் தோதாக இருக்கும் என நான் நினைத்தேன். நான் பாய்சந்தைப் பார்க்கப் போனேன். பள்ளியில் என்னுடன் ஒன்றாய்ப் படித்தவனும், ரெயில்வேயில் வேலை செய்பவனுமாகிய பாய்சந்த்தான் எங்களுடைய ஏரியாவில் மிகவும் உயரமாகப் பட்டம் விடும் ஆள். நான் பாயிடம் ''இம்முறை தைமாத சங்கராந்தியில் உன்னைத் தோற்கடிப்பேன்'' என சொல்லியிருந்தேன். அவன் என் முதுகில் தட்டியபடி சொன்ன ''சரி செய்'' என்ற வார்த்தைகள் என்னைக் குளுமையாக்கவேயில்லை. அன்றே நான் அயூப் பதங்க வாலாவின் கடைக்குப் போய் பிரம்பில் ஒட்ட வைத்துச் செய்த மூன்று பட்டங்களும் நூலும் வாங்கினேன். அதற்குப் பிறகுதான் அம்மாவின் வேலை தொடங்கியது. பழைய பாட்டில்கள் விற்கும் கடையிலிருந்து பாட்டில்கள் வாங்கி அம்மாவிடம் உடைத்துக் கொடுத்தேன். நான் தைத்துக் கொடுத்த கனமான கை உறைகளைப் போட்டுக் கொண்ட, அம்மா கண்ணாடிச் சில்லுகளை வெற்றிலை இடிக்கும் சின்ன உரலில் போட்டுத் தூளாக்கினாள். அரைத்த கண்ணாடித் தூளைப் பசையுடன் கலந்து பட்டத்தின் நூலில் தடவிக் காய வைத்தேன். தைமாத சங்கராந்தி தினத்தன்று வானத்தில் இடமே இல்லாமல் போனது. பல வண்ணத்தில் பறந்த பட்டங்களின் கூட்டத்தால் என்னுடைய பக்கத்து வீட்டுக்காரன கபூத் பாஜ் அசன் ஷேக்கின் வீட்டுப் புறாக்கள் அன்று கூட்டிலேயே முடங்கிக் கிடந்தன. என்னை மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்திக் காண்பிக்கும் இளம் பச்சை நிற கண்களைக் கொண்ட வானத்தின் மேலே வாயு மண்டலத்தில் சுழலும் காற்றின் ஆதியைத் தேடிக் கொண்டிருந்தேன். சட்டென ஆகாயத்தில் நான் பார்த்த ஒரு பருந்து கறுப்புப் பொட்டு பட்டக் கயிற்றை ஒரு முறை உலுக்கிவிட்டது. என் பட்டம் பருந்தைத் தாங்கி நிற்கும் வாயுவின் சுழலுக்குள் நகர்ந்தது. பிறகு அது தானாகவே உயரே போகத் தொடங்கியது. மனசு நிராதரவாய் போக ஆரம்பித்தது. உயரத்தின் நடுக்கம் என்னைப் பாதிக்க ஆரம்பித்தபோது நான் நூலைத் தளர்த்திப் பட்டத்தை லேசாக்கினேன். அன்றைக்கு எங்கள் ஏரியாவில் மிக அதிக உயரம் பட்டம் விட்டவன் நானாகத்தான் இருந்தேன். நான் பட்டத்தைக் கீழே இறங்கினேன். இனி தான் சண்டையே தொடங்கும். முதலில் நான் கிழித்து எறிந்தது பாய்சந்தின் பட்டத்தைத்தான். கண்ணாடிப் பசை பூசிய என் பட்டக் கயிற்றில் வெயில் பட்டபோது வாளின் அலகுபோல ஜொலித்தது. நான் மைதானத்தில் ஓடிக்கொண்டே போய் பல பட்டங்களின் கயிற்றையும் அறுந்தெறிந்தேன். அப்போதுதான் பிந்தியா என் சட்டையைப் பின்னால் பிடித்து இழுத்தபடி சொன்னாள். ''பர்ஜி சாச்சா என் பட்டத்தை அறுக்க வேணாம்.'' பிந்தியா பிறந்தபோது அவளுக்குப் பெரிய பின் போட்டுக் குத்தப்பட்ட நாப்கினைத் தைத்து கொடுத்தது நான்தான். பிறகு சின்ன கவுன்கள். ஃப்ராக்குகள். இப்போது பாவாடை சட்டையும் கூட என் அளவுகள் குறிக்கும் புத்தகங்களினூடாக அவள் வளர்ந்து வளர்ந்து இதோ பன்னிரெண்டு வயதில் நிற்கிறாள். ''நான் அறுப்பேன். போட்டிக்கு வரலேன்னா நீ ஏன் மைதானத்துக்கு பட்டத்தை எடுத்திட்டு வாறே.'' நான் கேட்டபோது பிந்தியா எனக்குப் பட்டத்தின் கதையைச் சொன்னாள். பட்டமென்றால் பெண் குழந்தைகளுக்குக் காதலன். ஆண் குழந்தைகளுக்குக் காதலி. கயிறுதான் அவர்களின் காதல். அது அறுத்தெறியப்படும்போது காதல் உடைபடுகிறது. கயிறு அறுந்த பட்டத்தை மீண்டும் மீட்டு எடுக்கும்போது அது புனர்ஜென்மம். அதனால் பிந்தியா என்னிடம் சொன்னாள். ''பாஜி சாச்சா ஒரு போதும் என்னுடைய கயிற்றை அறுத்தெறிய வேண்டாம்.'' நான் சிரித்தேன். அவள் திரும்பவும் சிரித்தபோது உதட்டுக்குப் பக்கத்தில் விழுந்த குழிகள் பொய்யாய் கவலைப்பட்டதையும் பார்த்தேன். வீட்டுக்குத் திரும்பி வரும்போது என்னைச் சுற்றியும் மகர ராசியில் காதலும் காமமும், மீண்டும் பல நாட்களுக்குப் பிறகு சந்திக்கும் சந்திப்புகளுமாய் தொடர்ந்த வண்ணம் இருந்தது. என்னுடைய பக்கத்து வீட்டுக்காரனான அசன் ஷேக் மொட்டை மாடியிலிருக்கும் தனி அறையில் புறாக்களுக்கிடையில் தங்கியிருந்தான் கீழ்போர்ஷனில் வாடகைக்கிருப்பவர்கள் தரும் பணத்தை வைத்துக் கொண்டு ஷேக் புறாக்களுக்கு தீனி வாங்கிப் போட்டுக் கொண்டிருந்தான். நடுவில் ஆக்ராவிலோ, டெல்லியிலோ போய் ''சிக்கந்தரி,'' ''காபூளி'' போடற உயர் ஜாதிப் புறாக்களை வாங்குவார். அசன் கை தட்டினால் புறாக்கள் மாடியின் பல பாகங்களுக்கும் பறந்து, வானத்தில் போய் ஒன்றாய் குழுமி, தூரமாய் பறந்து, விமானம் திரும்புவதுபோல சாய்ந்து சாய்ந்து திரும்பி, மீண்டும் வளைந்து மாடிக்கு வந்து சேரும். லாவகமாகச் சுழன்று ஆடும். நர்த்தகியின் உடை வட்டமிடுவது போல அப்புறாக்கள் ஒரு முறை சுழன்று தான் மாடியில் இறங்கும். புறாக்களின் சிறகசைப்பும், உடல் குலுக்கமும், பொட்டுப் பொட்டாய் கண் சிமிட்டி வீட்டிற்குத் திரும்பி வருவதின் சந்தோஷமும் பார்த்து என் மகள் எப்போதும் கைதட்டிச் சிரிப்பாள். அவள் கைகளில் அமர்ந்து மட்டுமே தீனியைக் கொத்தும் அனுமதியைப் புறாக்களுக்கு அசன் ஷேக் கொடுத்திருந்தார். பிப்ரவரியிலேயே அடைகாத்து உட்கார்ந்த புறாக்கள் ஏதோ நடக்கப் போவதை முன் கூட்டியே தெரிவித்ததாய் அசன் ஷேக் சொன்னார். புறாக்கள் எத்தனை முறை கை தட்டினாலும் வெளியே பறந்துபோக மறுக்கின்றன. ஏதோ நடக்கப் போகிறது. அன்றே கோதுமை மாவும், கடலை மாவும், பருப்பும், உருளைக்கிழங்கும் சேகரிக்க ஆரம்பித்துவிட்டேன். கேஸ் சிலிண்டர்கள் மட்டும் கிடைக்கவில்லை. என்னுடைய பதட்டத்தைப் பார்த்து அம்மாகூட திட்டினாள். ''நீ என்ன பைத்தியக்காரத்தனமாக என்னென்னவோ செய்யறே. இது விலை அதிகமாயிருக்கும் காலம். இப்போ போய் எல்லாத்தையும் வாங்கி வைக்கிறயே. அகமதாபாதிகளும் குஜராத்திகளும் கருணை உள்ளவர்கள். சைவர்கள் பாபுஜியின் ஆட்கள், ஒரு எறும்பைக் கூட நோகடிக்காமல், ஜீவராசிகள் ஏதாவது இருக்குமா என்று தரையையே பார்த்து நடக்கும் ஜைனர்கள். அவங்க கடவுள் யாரு? பகவான் ரஞ்ஜோத் யுத்தத்தில் பங்கு கொள்ள மறுத்த பகவான் ஸ்ரீகிருஷ்ணர். அந்த பைத்தியக்காரன் பொண்டாட்டி புள்ள இல்லாத புறா வளக்கிறவன் ஏதோ சொன்னான்னு ஏன் இப்படியெல்லாம் நடந்துக்கற.'' அம்மா சொன்னது சரிதானென்று எனக்குத் தோன்றிய ஒரு நாள் இரவுதான் பாய்சந்த் என் வீட்டுக் கதவைத் தட்டினான். ''குத்புதீன்..... '' பாய்சந்தால் மூச்சு விட முடியவில்லை. ''நான் வேலையை முடிச்சிட்டு ரயில்வே ஸ்டேஷனிலிருந்து நேரா இங்கு வரேன். பரோடாவுக்குப் பக்கத்தில் கோத்ரா ஸ்டேஷனில் வெளியில் ஒரு போகி கொளுத்தறாங்க. குத்புதின், நம் கிளாசில படிச்சாளே சாந்திபென் எப்பவும் கணக்கில் ஃபஸ்டா வருவாளேடா. அவளும், அவ புருஷன் கொழந்தை எல்லாம் செத்திட்டாங்க. டவுன்ல மைக் வைச்சிட்டாங்க. அயோத்தியிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த சாந்தி பெண்னைப் போன்ற ராமபக்தர்களைக் கொன்று கோத்ரா அவுட்டரில் குடியிருக்கும் உன் மதத்துக்காரர்களுக்கு எதிராக .... எனக்கு பயமாக இருக்கிறது....'' அசன் ஷேக்கின் புறாக்கள் சொன்னது சரி. ''நான் வரும் வழியிலேயே விரேன் ஷாவின் டாடா சுமோவை புக் பண்ணிட்டேன். நானும் ஆஷாவும் குழந்தைகளும் உதய்ப்பூரில் இருக்கும் அண்ணன் வீட்டுக்குப் போகப்போறோம். குத்புதீன் நீ என்ன செய்யப்போற? இங்கேயிருந்து கிளம்பிடு. இதைச் சொல்லத்தான் நான் இப்ப ஓடிவந்தேன். வரேன் பார்க்கலாம்.'' நான் ரொம்ப நாட்களுக்குப் பிறகு அம்மாவின் முகத்தில் பயம் படருவதை உணர்ந்தேன். இன்றைய இரவு என் மகளைத் தவிர யாரும் தூங்கவில்லை. மறுநாள் காலையிலும் நான் வாசல் கதவோ ஜன்னலோ திறக்கவில்லை. அவசரப்பட்ட மகளுக்காக நான் பின் கதவைத் திறந்து கொடுத்தேன். அவள் மண்ணை வாரி விளையாடத் தொங்கினாள். சிறிது நேரத்தில் ஏதோ சப்தம் கேட்பதை உணர்ந்தவுடனேயே நான் காதைக் கூர்மையாக்கினேன். என் மகள் ஒரு புறாவைப் பிடித்தபடி உள்ளே வந்தாள். ''அழகாயிருக்கு இல்ல புறா'' அவள் என் கையில் கொடுத்த புறா கழுத்து முறிந்து இறந்து கிடந்தது. நான் வெளியே எறிந்தபடி பார்த்தபோது அசன் ஷேக்கின் உரத்த சப்தம் கேட்டது. ''அய்யோ என் புறாக்கள்'' திடுக்கிட்டுத் திரும்பியபோது கலகக்காரர்கள் பெட்ரோல் ஊற்றித் தீ வைத்த அசன் ஷேக்கினைத் தான் நான் பார்த்தேன். பிறகு அவர்கள் என் வீட்டிற்கே வந்துவிட்டார்கள். அவர்கள் என் வீட்டைச் சுற்றியும் மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்தார்கள். மூடி பிடுங்கப்பட்ட சிலிண்டர்களைத் தீயில் எறிந்தபோது அதில் என் அம்மாவும் மனைவியும் மகளும் மூலைக்கொருவராய் சிதறிப்போனார்கள். எப்படி என்றே தெரியாமல் பின் வாசல் வழியாக ஓடிப்போனேன். வெளியே வந்தபோது மண்ணெண்ணெய் பாட்டில்களும், பெட்ரோல் கேன்களும், வாட்களும், கோடாலிகளுமாக என்னைச் சுற்றி நின்றவர்கள் நம்மைப் போலவே மனிதர்களாக இருந்தார்கள். அவர்களின் இடுப்பின் பருமன் என்னுடைய அளவுக் குறிப்பேட்டில் பதிவாகியிருந்தது. நான் தைத்துக் கொடுத்த உடைகள் அணிந்த பெண்கள் என்னடைய மனைவியுடன் ''கோன் கியோம் கீ சாஸ்பீ கபி பஹீதி'' என சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். நான் அடையாளம் கண்டு பிடிக்க முடியாத ஆட்கள் வாட்களும் சூலங்களும் போர்டுகளுமாகக் காட்சியளித்தார்கள். அவர்கள் கையிலிருந்த போர்டுகள் சொன்னது. ''முஸ்ஸிம்களின் கடைகளிலிருந்து எதையும் வாங்காதே'' நான் என்னடைய பச்சைக் கண்களுக்கு நடுவில், ப்ரியத்தை இழுத்துப் பூட்டி விட்டு கருங்கல் சீழ்பிடித்து நிற்கும் பிந்தியாவைப் பார்த்தேன். அவளுடைய அம்மாவின் கையில் அரிவாள் இருந்தது. நான் அங்கே குழுமியிருக்கும் ''ரேபிட் ஆக்ஷன் ஃபோர்ஸ்''காரர்களிடம் என்னைக் காப்பாற்றுமாறு கெஞ்சினேன். அப்போதுதான் ஒரு துப்பாக்கியின் ஸேப்டி காட்ச் மாற்றும் சப்தம் கேட்டது. சட்டென நான் திரும்பிப் பார்த்தபோது ஒரு தங்க முடியுள்ள வெள்ளைக்காரன் கேமராவை கிளிக் செய்வதைக் கவனிக்க முடிந்தது. ம்... பிறகு நடந்ததை நீங்கள் பத்திரிகையில் பார்த்திருப்பீர்கள். குத்புதின் அன்சாரியையும் குடும்பத்தையும் வெறித் தாக்குதலோடு சுற்றி வளைத்திருந்தார்கள். அந்த ஆள் போலீஸ்காரர்களிடமும் RAF காரர்களிடமும் தன்னுடையதும் தன் குடும்பத்தினுடையதும் உயிரைக் காப்பாற்றும்படி கெஞ்சினான். மாலை ஆறு மணிவரை நீண்டு கொண்டிருந்த இந்த அக்னிப் பரீட்சை முடிவுக்கு வந்தது. மிலிட்டரி வந்தபோது தான். மிலிட்டரிக்காரர்கள் அவர்களுடைய ட்ரக்கில் என்னை ஏற்றிக் கொண்டு என் வீட்டிற்குப் போனார்கள். இடிபாடுகளுக்கிடையில் என் அம்மாவையும், என் மனைவியையும், மகளையும் கண்டு பிடித்தார்கள், எங்களை ஷா அலம் முகாமில் கொண்டு போய்விட்டார்கள். ராய்ட்டரின் புகைப்படக்காரர் எடுத்த என் படம் பத்திரிகையில் வந்தது. பார்வை நிலைக்காமல் அலை பாய்ந்த என் கண்ணில் பச்சை நிறம் இருண்டு போக, நிறைந்த கண்ணீருமாய், ஈரமான பத்திரிகைத் தாளில் உறைந்துபோன என் கூக்குரலும், கைகூப்பியவாறு நான் கேட்கும் மன்னிப்பும் சமீபித்திருக்கும் மரணத்தை உங்களுக்குத் தத்ரூபமாக்கியிருக்கும். நான் அகமதாபாத்தின் சின்னமானேன். நான் சின்னமான சாலையின் இருபுறமும் பிணங்கள் கிடந்தன. உயரமான கட்டிடங்கள் எரிவதால் வானத்தில் கரும்புகை படர்ந்திருந்தது. அவற்றின் இடையிலான நான் இதுவரை காணாத பருந்துக் கூட்டங்களைப் பார்த்தேன். வழி நெடுகிலும் பள்ளிக் குழந்தைகளின் பாதி எரிந்த சிவப்பு ரிப்பன்கள் கிடந்தன. பெண்களின் ரத்தம் தோய்ந்த உள்ளாடைகள், கிழித் தெறியப்பட்ட பாடப்புத்தகங்கள். உடைந்த கண்ணாடி வளையல்கள். பாதி எரிந்த குடும்ப ஃபோட்டோ ஆல்பங்கள் சுவர்களில் முஸ்லீம்களின் கடைகளை பகிஷ்கரிக்கச் சொல்லும் விளம்பரங்கள், தலைபோன பொம்மைகள், வின் ஸ்கிரீன் உடைந்து பாதி எரிந்த கார்கள், தீ அணைந்து தீராத சைக்கிள் ரிக்ஷாக்களின் குவியல்கள், திறந்து வயிற்றிலிருந்து உருவின் குடல்போல வெளியே இழுத்தெறியப்பட்ட அனுமல்லிக்கினுடையதும், பங்கஜ் உத்தாஸினுடையதும் ஆடியோ கேஸட்டுகள், அதிகம் அடி வாங்கிக் கொடுத்த மார்க் குறைந்த ரேங்க் கார்டுகள், பட்டங்கள், கிழித்த பட்டங்கள் .... மிதித்து நசுக்கப்பட்ட பட்டங்கள்... கயிறு அறுந்த பட்டங்கள். நான் பட்டங்களைப் பார்ப்பதில்லை என்று தீர்மானித்தாலும் அவை எல்லா இடங்களிலும் ப்ரத்யட்ச்மானது. அம்மா அடிக்கடி சொல்வதை யோசித்துப் பார்த்தேன். ''நீ அன்சாரி, மோமின், தையல்காரன், ஒரு போதும் உன் கைகளால் நூல் அறுக்கப்படக்கூடாது.'' ராய்ட்டரின் புகைப்படக்காரல் நூலறுந்த நகரத்தின் பதிவாய் என்னை ஆக்கியிருந்தார். மறுவாழ்வு இல்லத்தின் பெண்கள் பகுதியில் தனியாய் வாழும் என் குடும்பத்தை நான் பார்க்கவில்லை. நான் இரவு பகலாய் நடந்தேன். எதை எதிர்பார்த்தென்று தெரியாமல் நடந்தேன். என் யாத்திரைக் கிடையில் மண்ணில் ஏதோ மின்னுவதை உணர்ந்தேன். அது ஒரு உடைந்த கண்ணாடித் துண்டாக இருந்தது. அதன் மேலே ஸ்டிக்கர் பொட்டு ஒட்டியிருந்தது. நான் என்னுடைய முகத்தைப் பார்த்து ஐந்தாறு நாட்களாகியிருந்தது. முகத்தில் சின்ன சின்னதாய் ரோமங்கள் படர்ந்திருந்தன. கண்களில் முழுமையாய் பயம் போகவில்லை. நான் மறந்துபோன ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டும்போல இருந்தது. ''அது சிரிப்பு'' எத்தனை முறை முயன்றபோதும் முகம் விகாரமான தேயல்லாமல் சிரிக்க முடியவில்லை. பக்கவாதக்காரனை உருவி விடுவதுபோல என் கன்னத்தையும் வாயைச்சுற்றியும் அழுத்திவிட்டேன். அப்போதுகூட என் பிரதிபிம்பம் சிரிக்கவில்லை. என் முகத்தின் ரத்த நாளங்கள் தளர்ந்து கிடந்தன.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'கூக்குரல்' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: கந்தசாமி என்ற ஒரு ஏழை தன் மனைவியுடன் சிறு குடிசை ஒன்றில் வாழ்ந்து வந்தான். வயதாகி விட்டதால் வேலைக்கும் செல்ல முடியாது போகவே, தங்களிடம் இருந்த பொருட்களை விற்று சாப்பிட வேண்டி ஏற்பட்டது. நாட்கள் செல்லச்செல்ல…அவர்கள் உண்ண உணவின்றி தவித்தனர். இந்நிலையில் அவன் ஆண்டவனை நோக்கி …’இறைவா எங்களை ஏன் இப்படி படைத்தாய்…இது இப்படியே நீடித்தால்….வறுமை தாங்காது…நாங்கள் இறப்பதை தவிர வேறு வழியில்லை’ என வேண்டினான். அவன் மீது இரக்கம் கொண்ட இறைவன் அவன் முன் தோன்றி அவனின் குறைகளைத்தீர்க்க….அவனுக்கு வாத்து ஒன்றை பரிசளித்தார். அந்த வாத்து தினம் ஒரு பொன் முட்டை இடும் என்றும்…அதை விற்று அன்றடம் குடும்பத்திற்கு தேவையானவற்றை வாங்கி வாழ்நாளைக் சந்தோஷமாக கழிக்கலாம் என்றும் கூறி மறைந்தார். வாத்து தினம் ஒவ்வொரு பொன் முட்டையிட …அவர்கள் அதனை விற்று வாழ்கையை இனிதாகக் கழிந்தனர். ஒரு நாள் கந்தசாமியின் மனைவி தன் கணவனிடம் சென்று ‘தினம் தினம் இந்த வாத்து ஒவ்வொரு பொன் முட்டையே இடுகின்றது, இப்படியே இருந்தால் நாம் எப்படிப் பெரிய பணக்காரர் ஆவது என்று சொல்லி, இந்த வாத்தின் வயிற்றில் இருக்கும் எல்லா முட்டைகளையும் நாம் எடுத்தால் அதை விற்று பெரிய பணக்காரர் ஆகிவிடலாம் என்று ஒரு உபாயம் சொன்னாள். இதைக் கேட்ட கந்தசாமிக்கும் அது சரியெனப் தோன்றியது. உடனே, கந்தசாமி அந்த வாத்தைப் பிடித்து வாத்தின் வயிற்றில் இருக்கும் எல்லா முட்டைகளையும் எடுக்க வாத்தை கொன்று அதன் வயிற்றைக் கிழித்தான். “ஆ” என்ன ஆச்சரியம் அந்த வாத்தின் வயிற்றில் ஒருமுட்டையுமே இருக்கவில்லை. அதன் வயிறில் மற்றைய வாத்துகள்போல் வெறும் குடலே இருந்தது கண்டு ஏங்கினர். தினம் ஒரு பொன் முட்டையிட்ட வாத்து இறந்து விட்டதால், வறுமை அவர்களை மீண்டும் சூழ்ந்துகொண்டது. தங்கள் பேராசையே பெரும் தரித்திரத்தை தந்தது என மனம் வருந்தி ஏழ்மையாகவே வாழ்ந்து உண்ண உணவின்றி இறந்தனர். ஆசை அளவுக்கு மிஞ்சினா; அது பேராசை. பேராசை பெரு நஷ்டத்தையும் கஷ்டத்தையும் தரும்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'பேராசை பெரும் நஷ்டம்' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: கபீர், கமால், சீடர்கள், ஞானி, ஏழை, மனைவி, மகன், திருடன், கங்கை , மரணம் தலைப்பு: பிரபஞ்ச தன்னுணர்வு
கபீரைப் பற்றிய ஒரு கதை எனக்கு நினைவுக்கு வருகிறது. கபீர் ஒரு ஞானி, ஆனால் ஏழை. அவரது வேறுபட்ட நடவடிக்கைகளால் ஒவ்வொரு நாளும் அவரது மனைவியும் மகனும் சங்கடத்துள்ளானார்கள். ஏனெனில் ஒவ்வொரு நாள் காலையும் நூற்றுக்கணக்கான சீடர்கள் வருவார்கள். கபீர் ஆடுவார், தானே எழுதிய பாடலை பாடுவார். அவர் படித்தவரல்ல. அவர் எந்த சொற்பொழிவும் தருவதில்லை. ஆனால் அவர் பாடுவார், ஆடுவார். அவரது பாடல்கள் மிக ஆழ்ந்ததாக, அற்புதமானதாக, எளிமையான பாடல்களாக இருக்கும். பாடிக் கொண்டே அவர் ஆடுவார். கூட்டம் முழுவதும் அவருடன் சேர்ந்து ஆடும், பாடும். இது மணிக்கணக்கில் தொடரும். பின் மதிய உணவு நேரம் வந்துவிடும். பின் கபீர் ஒவ்வொருவரிடமும் "போய் விடாதீர்கள், இந்த ஏழையின் வீட்டில் சாப்பிட்டுவிட்டுதான் போக வேண்டும்" என்று கூறுவார். மனைவியும் மகனும் சங்கடத்துள்ளாவார்கள். ஒவ்வொருநாளும் அத்தனை பேருக்கான உணவுக்கு எங்கே போவது ? இவர்கள் மூவருக்கான உணவுக்கு சமாளிப்பதே பெரும்பாடு. அவரது மகனும் ஒரு தனித்தன்மை வாய்ந்த மனிதன். அவன் அவன் வழியில் ஒரு குருவாகக் கூடியவன். ஆனால் அவன் கபீரிடம் இருந்து முற்றிலும் வேறுபட்டவன். அவர்கள் இருவரும் ஒரு இடத்தில் கூட ஒத்துப் போனதேயில்லை. கபீர் கமால் மூலமாக மிகவும் சோர்ந்து போய்விட்டார். அவர், கமால் எனக்கு வந்து பிறந்ததால் எனது பாரம்பரியம் முடிந்தது. இவன் நான் அவனுக்கு கொடுக்கும் செல்வங்களை எடுத்துச் செல்ல மாட்டான் என்று எழுதினார். ஏனெனில் கமாலுக்கு என்று ஒரு தனி வழி இருந்தது. அவர்கள் ஒத்துப் போனதேயில்லை. கமால் இந்த பாடலையும் நடனத்தையும் மடத்தனம் என்பான். அவன், மௌனமாக அமர்ந்து இருந்தால் ஏதாவது நிகழலாம் – எதற்கு தேவையில்லாமல் ஏகப்பட்ட சத்தம் போட்டு அக்கம் பக்கத்தாரை தொந்தரவு செய்ய வேண்டும் வயதான காலத்தில் சும்மாயிருக்காமல்……… உங்களால் மற்றவர்களும் அவர்கள் வயதானவர்களாக இருந்தால் கூட ஆட வேண்டி வருகிறது, அவர்கள் சோர்ந்து போகிறார்கள் என்று கூறுவான். அவன் ஒரு போதும் ஆடலிலும் பாடலிலும் பங்கெடுத்துக் கொண்டதேயில்லை. அவன், "மௌனமாக இருப்பது பாடுவதை விட சிறந்தது. இது தேவையேயில்லை. அமைதியாக உட்கார்ந்து இருக்கும்போது இதைவிட அழகான நடனத்தை நான் உணர்கிறேன்." என்பான். ஒரு கட்டத்தில் மகனும் மனைவியும் கபீரிடம் "நீங்கள் மற்றவர்களை இங்கே சாப்பிட்டுவிட்டு போங்கள் எனக் கூறுவதை நிறுத்துங்கள். நாங்கள் இந்த நகரத்தில் உள்ள எல்லோரிடமும் கடன் வாங்கியாகிவிட்டது. இப்போது யாரும் நமக்கு எதுவும் கடன்தர தயாராக இல்லை. அவர்கள் எப்படி திருப்பித் தரப் போகிறீர்கள் என்று கேட்கிறார்கள். நம்மிடம் இப்போது வீட்டில் எதுவும் இல்லை. நீங்கள் நிறுத்திக் கொள்ளுங்கள் "என்று கூறினார்கள். கபீர், "அது இயலாத காரியம். ஆடி பாடி கொண்டாடிய பிறகு எனது வீட்டிற்கு வந்த மக்களுக்கு சாப்பாடு போடாமல் இருக்க முடியாது. என்னால் அப்படி செய்ய முடியாது. வழி கண்டு பிடியுங்கள். என்னடா பையன் ! நீ ஏதாவது ஒரு வழி கண்டு பிடிக்க முடியாதா ? என்று கேட்டார். கமால் "நான் திருடனாவது ஒன்றுதான் வழி!" என்றான். கபீர், "அற்புதம்! நீ ஏன் இதை முன்பே யோசிக்கவில்லை.? என்றார். இதுதான் பிரபஞ்ச தன்னுணர்வு. திருடுவது கூட தவறில்லை. இந்தியாவில் கபீரை பின்பற்றும் மக்கள் – அவர்கள் மிகக் குறைந்த அளவில் தான் இருக்கிறார்கள். – இந்த கதையைப் பற்றி குறிப்பிடுவதில்லை. நான் அவரை பின்பற்றும் மக்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போது இந்த கதையை குறிப்பிட்டேன். உடனே தலைமை குரு என் காதில், தயவுசெய்து இந்த கதையை சொல்லாதீர்கள். ஏனெனில் இது எங்களை பிரச்னையில் கொண்டு போய்விடும். கபீர் இதில் திருடுவது சிறந்த ஐடியா என்று சொல்கிறார். என்று கிசுகிசுத்தார். ஆனால் கமால் உண்மையிலேயே ஒரு தனித்துவமான மனிதன். அதுதான் கமால் என்ற வார்த்தையின் பொருள். கமால் என்றால் அசாதாரணமான, தனித்துவமான என்று அர்த்தம். அவன் கபீர் அற்புதம் என்று சொன்னதால் அசந்து போய்விடவில்லை. அவன், "சரி, இன்றிரவு நான் போய் திருடுகிறேன். ஆனால் நீங்களும் என்னுடன் வரவேண்டும். நான் என்னால் முடிந்த அளவு முயற்ச்சிக்கிறேன். எனக்கு உதவுங்கள். நான் திருடி தரும் பொருட்களை வெளியே நின்றவாறே வாங்கி கொண்டு வந்து வீடு சேர்த்துவிடுங்கள். இந்த அளவு நீங்கள் செய்தால் போதும்" என்றான். கபீர் "மிகவும் நல்லது" என்றார். அதன்படி அவர்கள் இரவு ஒரு பணக்காரனின் வீட்டிற்கு திருட சென்றனர். பின்புறத்தில் கமால் உள்ளே நுழைவதற்க்காக சுவரில் ஓட்டை போட்டான். கபீர் வெளியே உட்கார்ந்து மெதுவாக அவரது பாடலை பாடிக் கொண்டிருந்தார். கமால், "பாடுவதை நிறுத்துங்கள், மடத்தனமாக இருக்காதீர்கள். நாம் இங்கே துறவிகளல்ல. நாம் திருட வந்துள்ளோம்" என்றான். கபீர், "நாம் எங்கே இருந்தாலும் நாம் எப்படியோ அப்படிதான். நாம் என்ன செய்கிறோம் என்பது ஒரு பொருட்டல்ல. நீ உன் வேலையை செய்கிறாய். நான் என் வேலையை செய்கிறேன். நீ பொருட்களை கொண்டு வந்து கொடு, நான் எடுத்துச் செல்கிறேன். எனக்கு வயதாகிவிட்டது. இல்லாவிடில் நானும் உன்னுடன் வருவேன். "என்றார். கமால் உள்ளே சென்றான். அவன் இந்த விஷயத்தை கடைசி வரை பார்த்துவிடலாம் என முடிவு செய்தான். அவன் பொருட்களை திருடி கொண்டு வந்து துவாரத்தின் வழியே வெளியே போட்டுவிட்டு இவற்றை நீங்கள் எடுத்துச் செல்லுங்கள் என கபீரிடம் கூறிவிட்டு அவனும் அந்த துவாரத்தின் வழியே வெளியே வர முயற்சித்துக் கொண்டிருந்தான். அப்போது அந்த வீட்டிலுள்ள வேலையாட்கள் விழித்துக் கொண்டனர். சுவரை உடைக்கும் சத்தம், யாரோ பாடுவது போன்ற சத்தங்கள் மெலிதாக கேட்டன. மேலும் கமால் உள்ளே போனபின் கபீர், தான் எங்கே இருக்கிறோம் என்பதை முற்றிலுமாக மறந்துவிட்டார். அவர் சத்தமாக பாடி ஆட ஆரம்பித்துவிட்டார். எனவே எல்லோரும் விழித்துக் கொண்டு விட்டனர். அவர்கள் தேடியபடி வந்து உள்ளே பாதி வழியில் இருந்த கமாலின் கால்களை பிடித்துக் கொண்டனர். இந்த கதை மிகவும் வித்தியாசமானது. இது கற்பனையாக இருக்க முடியாது. கமால், "அப்பா,! என்னை பிடித்து விட்டார்கள். இந்த பொருட்களை எடுத்துச் செல்லுங்கள். உள்ளே என் கால்களை பிடித்துக் கொண்டு விட்டனர். போதுமான அளவு சிக்கலில் என்னை சிக்க வைத்து விட்டீர்கள். இதுவே கடைசி – வணக்கம். நான் சிறைக்குப் போகப் போகிறேன்." என்றான். கபீர், "சிறைக்கா? தேவையில்லை. நான் ஒரு கத்தி வைத்திருக்கிறேன்" என்றார். கமால் "என்ன சொல்கிறீர்கள்?" என்று கேட்டான். கபீர், "நான் உனது தலையை வெட்டி என்னுடன் எடுத்து சென்று விடுகிறேன். திருடன் யார் என்று யாருக்கும் தெரியாது." என்று கூறினார். கமாலால் நம்பவே முடியவில்லை. அவன் இந்த விளையாட்டை கடைசி வரை விளையாடி பார்க்கலாம் என்று நினைத்தான். – ஆனால் இந்த கிழவன் அதை முடிவு வரை கொண்டு செல்கிறானே என்று யோசித்தான். ஆனாலும் கமால் ஒரு தீரமுள்ள மனிதன். எனவே அவன் "சரி.!எனது தலையை வெட்டி எடுத்து சென்று விடுங்கள் "என்றான். அவன் இது போல நடக்காது என்று நினைத்தான். ஆனால் கபீர் கமாலின் தலையை வெட்டி அவன் கொண்டு வந்து தந்த பொருட்களுடன் சேர்த்து வீட்டிற்கு எடுத்து சென்று விட்டார். உள்ளே இருந்தவர்கள் கமாலை உள்ளே இழுத்தனர். தலையில்லா முண்டத்தைக் கண்டு, இப்போது இது ஒரு பிரச்னை. யார் இவன் என்று ஆலோசித்தனர். ஒரு வேலையாள், "எனக்குத் தெரிந்த வரை இது கபீரின் மகன் கமால். என்னை தூக்கத்திலிருந்து எழுப்பிய குரல் கபீரினுடையது. அவர் வெளியே இருந்திருக்க வேண்டும். இது போன்ற ஒரு செயலில் அவர் ஈடுபட்டிருப்பது மிகவும் விசித்திரமானது. அவர் ஒரு ஞானி. அவரது சொந்த மகன் இது….. அவர் இவனது தலையை வெட்டி எடுத்து சென்று விட்டார் போல தெரிகிறது." என்றான். அந்த வேலையாள் கபீரின் வீட்டில் ஒவ்வொரு நாள் காலையிலும் நடக்கும் பிரார்த்தனை கூட்டத்திற்கு சில நாட்கள் போவான். அவன் அந்த செல்வந்தரிடம், "ஒரு வேலை செய்யலாம். கபீரும் அவரது சீடர்களும் பிரார்த்தனை கூட்டத்திற்கு முன் குளிப்பதற்காக கங்கை கரைக்கு வரும் வழியில் உள்ள நால்ரோட்டில் இந்த உடலை தொங்க விடலாம்" என்று கூறினான். அந்த வீட்டின் சொந்தக்காரனான அந்த செல்வந்தன், "அதனால் என்ன நடக்கும்?" என்று கேட்டான். வேலையாள் "இதை மட்டும் செய்யுங்கள் அதில் ஒன்றும் தவறில்லை "என்றான். உடல் நால்ரோட்டில் தொங்க விடப்பட்டது. கபீர் குளித்துவிட்டு ஆடி பாடியபடி வரும்போது கமால் உடனடியாக தனது கரத்தை உயர்த்தி "இந்த மடத்தனத்தை நிறுத்துங்கள்!" என்றான். இப்படித்தான் அது கமால் என அடையாளம் காணப்பட்டது. நிச்சயமாக அது கமால்தான். அவர்கள் கபீரிடம் உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா என்று கேட்டனர். அவர் "தெரியுமே! ஏனெனில் அவனது தலை எனது வீட்டில் உள்ளது. நான் தான் வெட்டினேன்." என்றார். அநத பணக்காரனால் அதை நம்பவே முடியவில்லை. அவன் "ஆனால் நீங்கள் ஒரு ஞானியாயிற்றே?" என்று கேட்டான். கபீர், "நான் ஒரு ஞானிதான். நான் ஞானி போல என்று இருந்திருந்தால் அந்த திருடும் செயலில் ஈடுபட்டிருக்க மாட்டேன். நான் ஒரு ஞானி போல என்று இருந்திருந்தால் நானே எனது மகனை கொன்றிருக்கமாட்டேன். நான் ஒரு ஞானிதான். எனது தன்னுணர்வின் உயர்வுக்கு முன் எதுவுமே ஒரு பொருட்டல்ல. உனது பணம் என்று நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். அது உன்னுடைய பணமல்ல. அப்படி இருக்கும்போது அதை எடுத்துச் செல்வதில் என்ன தவறு? எதுவுமே யாருடையதுமல்ல எனும்போது திருடுவதில் என்ன தவறு? மகன் எப்படியும் என்றாவது ஒருநாள் சாகத்தான் போகிறான். எனவே அவனது தலையை வெட்டியதில் தப்பென்ன? மரணம் நிச்சியம் நிகழத்தான் போகிறது. என்னுடைய தன்னுணர்வின் முன் எதுவுமே தவறல்ல, எதுவுமே சரியல்ல. "என்றார்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: முல்லா நீதிபதி பதவி வகித்த சமயம் நிகழ்ந்த நிகழ்ச்சி இது. ஒரு நாள் வெளியூர்க்காரன் ஒருவன் முல்லாவிடம் வந்து " நீதிபதி அவர்களே, நான் இந்த ஊருக்குப் புதிது. நான் இரவு இந்தப் பக்கம் நடந்து சென்றபோது உங்களுர் ஆள் ஒருவன் என்மீது பாய்ந்து என்னிடமிருந்த பணம், தலைப்பாகை சட்டை ஆகிய எல்லாவற்றையும் திருடிக் கொண்டு போய்விட்டான், தயவு செய்து கண்டு பிடித்து என் உடமைகளை மீட்டுத் தரவேண்டும் " என்று வேண்டிக் கொண்டான். " நீர் சொல்வதைப் பார்த்தால் இது எங்கள் ஊர் திருடன் கை வரிசையாக எனக்குப்படவில்லை. இது வெளியூர்த் திருடனின் வேலைதான் " என்றார் முல்லா. " இவ்வளவு தெளிவாக எவ்வாறு கூறுகிறீர்கள் ஐயா!" என்ற வெளியூர்க்காரன் வியப்போடு கேட்டான். " எங்கள் ஊர்த்திருடனாக இருந்தால் உமது இடுப்புத் துணியைக்கூட விட்டிருக்க மாட்டான். கௌபீனதாரியாக விட்டு விட்டு இடுப்புத் துணியையும் அவிழ்த்துக் கொண்டு போயிருப்பான் " என்று முல்லா கூறினார்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'முல்லா வழங்கிய தீர்ப்பு' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: குறட்டி, மஞ்சளாறு காடு, சிறுத்தை, புலி, மரம், கரும்புள்ளிகள், ஆறு, மான், பிராணி, மலைப்பாம்பு தலைப்பு: மலைப்பாம்பும் மான் குட்டியும்
குறட்டி என்ற பெயர் கேட்டால் மஞ்சளாறு காட்டில் சிறுத்தைகளும், புலிகளும் கூட பயப்படும். இருபது அடிக்கும் நீளமாக மரங்களின் கிளைகளில் படர்ந்து இருக்கும் தனது அழகிய உடம்பும், கரும்புள்ளிகளும் அதற்கு பெருமையாக இருந்தது. கரும்பழுப்பு, பழுப்பு என்று பல நிறங்களில் மலைப்பாம்புகள் இருக்குமே தவிர இப்படி லட்சணமான கரும்புள்ளிகளுடன் பார்ப்பது ரொம்பவும் அரிது. மலைப்பாம்புகள் பொதுவாக பறவைகள், முயல் போன்ற சிறிய பிராணிகளைப் பிடித்து உண்ணும். சில சமயம் மான் போன்ற சற்றுப் பெரிய விலங்குகளைக் கூடத் தாக்கும். ஆனால் குறட்டி சற்று வித்தியாசமானது. காட்டெருமைக்கன்று, சிறுத்தை போன்றவற்றைக் கூட தனது குறட்டிப்பிடியில நொறுக்கி எடுத்துவிடும். அதனால் அதற்கு குறட்டி என்று பெயர் வழங்கி வந்தது. குறட்டி தனது தலையை ஒரு கிளையின் மீது வைத்தபடி ஆற்றங்கரையையே பார்த்துக் கொண்டு இருந்தது. மிரண்டு மிரண்டு ஆற்றங்கரையில் வரும் மிளா மான் குட்டி அதன் கண்ணில் பட்டது. நீண்டு கிடந்த தனது உடலை வேகமாக தன்னை நோக்கி இழுத்தது. அநேகமாக அந்த மான்குட்டி மிகவும் குறுகலாக ஓடும், அந்த ஆற்றைக் கடந்து வரலாம். அப்படிக் கடந்து வந்தால் குறட்டி இருக்கும் வழியாகத்தான் வரவேண்டும். அந்த மிளா மான் ஆற்றில் இறங்கியது. குறட்டியில் வாயில் நீர் சுரந்தது. மீதமுள்ள குறட்டி தனது உடலை கிளையில் சுற்றி தனது தலையை மட்டும் தொங்க வைத்தபடி அசையாமல் இருந்தது. பார்வை மட்டும் ஆற்றில் இறங்கிய மான் மீது இருந்தது. ஆற்றில் மான் நீந்தியது. இதே மரத்திலிருந்துதான் குறட்டி ஒரு நாள் ஒரு சிறுத்தையை மடக்கிப் பிடித்தது. ரப்பர் போன்ற தனது உடம்பை கயிறு போல் பாவித்து இறுக்கிய வேகத்தில் சிறுத்தையின் எலும்புகள் மடமடவென்று முறிந்தன. மான் கரையேறி விட்டது. குறட்டி அசையாமல் இருந்தது. அந்த மரத்திற்கு அருகாமையில வந்த பாதையில் சுற்றிப் பார்த்தபடி நடந்து வந்தது அந்த மான். சொல்லி வைத்ததுபோல் அந்த மரத்தடியில் வந்து நின்றது. குறட்டி மான்குட்டியில் கழுத்தில் மாலையாய் விழுந்தது. "அம்மா" என்று கதறியது மான்குட்டி. எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்து போனது. அப்படி இப்படி கூட அசையாமல் நின்றது. குறட்டிக்குக் கூட ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. குறட்டி அதன் முகத்தைப் பார்த்தது பாவமாக இருந்தது. அதற்குள் குறட்டி ரப்பர் போன்ற நீண்ட தனது உடலால் மானைச் சுற்றிது. மான் தேம்பி அழுதது. அதன் கண்களில் கண்ணீர் வழிந்தது. குறட்டி இப்படி திடீர் தாக்குதல் நடத்தும் போது எந்த ஒரு மிருகமும் இதனிடம் தப்பிக்க போராட்டம் நடத்துமே தவிர இப்படி அழுது ஆர்ப்பாட்டம் செய்யாது. "ஆமாம்.... ஏன் அழுகிறாய்" என்றது குறட்டி. மான் தனது அழுகையை நிறுத்திவிட்டு உறுதியான குரலில் சொன்னது. "இப்போது சாவு என்பது நிச்சயமாகி விட்டது. சாகும் முன்னர் அம்மாவின் உயிரைக் காப்பாற்றிய பெருமையாவது என்னைச் சேரும். நீங்கள் மனது வைத்தால் எனக்கு உதவலாம்" என்றது. "நான் எப்படி உதவ முடியும்?" என்றது. "மொட்டச்சி அம்மன் பாறைக்குச் சென்று நாவல் பழங்களை எடுத்து என் அம்மாவிற்கு கொடுத்துவிட்டு மீண்டும் இங்கு வந்து சேருகிறேன். பின்னர் உன் இஷ்டப்படி என்னைக் கொன்று சாப்பிடு" என்றது மான். "நீ மீண்டும் என்னிடம் திரும்பி வருவாய் என்பதற்கு என்ன உத்திரவாதம்?", "நான் சொல்வதில் உனக்கு நம்பிக்கை இல்லை என்றால் நீ என் கூடவே வா.. நாவல் பழங்களை என் தாயிடம் சேர்த்ததும் நீ என்னைக் கொன்று சாப்பிடு", "உன்னை விட்டால் என்னால் பிடிக்கமுடியாது? உன் வேகம் என்ன, என் வேகம் என்ன?" என்றது குறட்டி. "என் மீது நம்பிக்கை இல்லை என்றால் நீ என்ன சொல்கிறாயே அதற்கு நான் கட்டுப்படுகிறேன்", "நான் உன் உடலை சுற்றியபடியே இருப்பேன். என்னை சுமந்த படியே செல்ல வேண்டும்" என்று சொன்னது குறட்டி. அது அதற்கு ஒத்துக் கொண்டது. குறட்டியை சுமந்தபடியே சென்றது மான். மொட்டச்சி அம்மன் பாறைக்குச் சென்றது. நாவல் பழங்களை சேகரித்துக் கொண்டது. மலைப்பாம்பு தன் உடலைச் சுற்றியிருக்க உற்சாகத்துடன் நடந்தது. தனது அம்மாவுக்காக தன்னுடைய உயிரைக் கொடுக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது அதற்கு சந்தோஷமாக இருந்தது. மான் தன் இருப்பிடத்திற்கு அருகாமையில் வந்தது. தன் இருப்பிடத்தையும் படுத்துக்கிடக்கும் அம்மாவையும் காட்டியது. குறட்டி அதன் உடம்பிலிருந்து மெல்ல இறங்கியது. "நாவல் பழங்களைக் கொடுத்துவிட்டு தப்பிக்கலாம் என்று நினைத்தால்.... அப்புறம் நோய் வாய்ப்பட்டிருக்கும் உனது அம்மா எனக்கு உணவாக நேரிடும்" என்றது குறட்டி. "நீ செய்த உதவியை ஒரு நாளும் மறக்க மாட்டேன். என் வார்த்தையை மீறமாட்டேன்" என்று சொல்லிவிட்டு துள்ளி ஓடியது மான் குட்டி. குறட்டி மெல்ல ஊர்ந்து மரங்களின் ஊடே மறைந்து கொண்டது. அங்கு அதற்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு பதினைந்து இருபது மான்கள் உடல் நலம் விசாரித்தபடி இருந்தன. அதில் இரண்டு மூன்று மான்கள் ஒன்று சேர்ந்தால் கூட அவற்றின் கொம்புகளால் தனது தலையைக் குத்திக் கிழித்து விட முடியும். இப்படித்தான் சென்ற வாரம் ஒரு மலைப்பாம்பை இரண்டு பெரிய மிளா மான்கள் கொம்பினால் நசுக்கி எடுத்துவிட்டன. அந்த மாலைப் பாம்பு அங்கேயே உயிரை விட்டது. பயம் என்றால் என்னவென்று தெரியாத குறட்டிக்குக் கூட கொஞ்சம் நடுக்கமாக இருந்தது. "கையில் கிடைத்ததை விட்டு விட்டோமோ?" என்று கூட ஆதங்கமாக இருந்தது. எதற்கும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. குறட்டி பெரிய தனது உடலை வளைத்து நெளிந்தபடி மறைவிடம் நோக்கி நகர ஏதோ அரவம் கேட்டது. அதே மான்குட்டி தனியாக வந்தது. "என் கடமை முடிந்தது... எனது வார்த்தையை நான் காப்பாற்றி விட்டேன்.....உனக்கு எனது நன்றி" என்று சொன்னவாறு குறட்டியின் முன்னால் வந்து நின்றது மான்குட்டி. குறட்டியின் முரட்டுத் தோலையும் மீறி அதன் உடல் புல்லரித்தது. "என்னைப் பற்றியா சொன்னாய்" என்றது குறட்டி "இல்லை எனக்கு உதவி செய்த உன்னை காட்டிக் கொடுக்க மாட்டேன்.", "உன்னை கொன்று தின்னப் போகும் நான் எப்படி உனக்கு உதவியவன் ஆவேன்?", "நீ சொன்னது சரிதான்.. ஆனால் நீ உதவாவிட்டால் என் அம்மாவைக் காப்பாற்ற முடியாது போயிருக்கும். பெற்றோருக்காக தனது உயிரைத் தருவதைவிட பெருமை தரக்கூடிய விஷயம் உலகத்தில் வேறு என்ன இருக்க முடியும்?" குறட்டி தனது தலையை மெல்ல உயர்த்தி மான்குட்டியின் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தது. "தாய்க்காக தனது உயிரை தரத்துணிந்த உன்னை வணங்கினாலே ....எனக்குப் பெருமை" என்று சொல்லியபடி குறட்டி அதனை உயிரோடு விட்டுச் சென்றது. மான்குட்டி குறட்டியை ஆச்சரியமாகப் பார்த்துது. மரக்கிளைகளில் தவழ அதன் உடம்பின் கரும்புள்ளிகள் வைரமாக மின்னின.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: ஒரு மிகப் பெரிய துறவி தன்னுடைய சீடன் ஒருவனிடம் அவனுடைய பாடத்தின் கடைசி அத்தியாயத்தை படிப்பதற்காக அரசவைக்கு போகச் சொன்னார். சீடன் தேர்வு பெற்று விட்டதை அறிவிப்பதற்கு முன் அவன் அரசவைக்கு சென்று அங்கு சில நாட்கள் தங்கி இருக்க வேண்டுமென்று சொன்னார். இதுதான் குருவின் விருப்பமா என்று எண்ணிய சீடன் சென்றான். இந்த அரசர் மிகப் பெரும் துறவியாக இருக்கலாம், அவர் என்னுடைய குருவை விட மிகச் சிறந்தவராக இருக்க வேண்டும் இல்லாவிடில் எப்படி என் குரு தன்னுடைய ஒவ்வொரு சீடனையும் கடைசி தேர்வுக்கு, கடைசி பாடத்திற்கு அங்கே அனுப்புவார் என்று எண்ணினான். ஆச்சரியம்தான், எல்லாவற்றையும் துறந்த ஒரு துறவி தன்னுடைய சீடர்களை எதையும் துறக்காத, பதவி வெறி பிடித்த, அடுத்த நாடுகளை வெற்றி கொள்ளும் வெறி பிடித்த சாதாரண ஒரு அரசனிடம், ஆயிரக்கணக்கான மக்கள் சாவதைப் பற்றி ஒரு சிறிதும் கவலைப்படாத, பொருட்களிடம் பற்றுக் கொண்ட மனிதனிடம் எதற்காக அனுப்புகிறார் அதில் ஏதாவது ரகசியம் இருக்க வேண்டும் நானும் எதற்காக அனுப்பப்படுகிறேன் தெரியவில்லையே என்று நினைத்தவாறே சென்றான். அவன் சென்ற நேரம் மாலை நேரம். அவன் உடனடியாக அரசவைக்கு அழைத்துச் செல்லப் பட்டான். அது அரசர் மதுவருந்தும் நேரம், மேலும் ஒரு அழகான நடன மாது நடனமாட வந்திருந்தாள். அரசவை அந்த மாலை நேரத்தை அனுபவிக்க ஆரம்பித்திருந்தது. இது எல்லாவற்றையும் பார்த்த அந்த இளம் துறவி அதிர்ச்சியடைந்து, திகிலடைந்து போனான். அவன் அரசரிடம் நான் இங்கே சில நாட்கள் தங்க வந்தேன். ஆனால் என்னால் இங்கே ஒரு மணி நேரம்கூட தங்க முடியாது. என்னை என் குருநாதர் எதற்காக இந்த நரகத்திற்கு அனுப்பினார் என்று நினைத்துப் பார்க்க முடியவில்லை. என்றான். அரசர், உன்னை உன் குருநாதர் இங்கே அனுப்பினார் என்றால் அதற்கு ஏதாவது காரணம் இருக்கும். இவ்வளவு சீக்கிரமாக தீர்மானித்துவிடாதே. இரண்டு மூன்று நாட்களில் என்ன நிகழ்ந்துவிடப் போகிறது மேலும் நினைவில் கொள், இது உனது இறுதி கட்ட பரீட்சை. என்னுடைய அங்கீகாரம் இல்லாமல் நீ தேர்வடைந்தவன் என்று ஒரு போதும் அறிவிக்கப்படமாட்டாய். நீ உன்னுடைய குருலத்திலேயேதான் உன் வாழ்நாள் பூராவும் இருக்கவேண்டி வரும். அதனால் நீ உணர்வுடன் பேசு. இங்கே மூன்று நாட்கள் இரு. நீ இங்கே என்னை மதிப்பிட வரவில்லை, நான் உன்னை மதிப்பிடவே நீ இங்கே வந்திருக்கிறாய் என்பதை நினைவில் கொள். இது மிகவும் அதிகம். எல்லாவற்றையும் துறந்த ஒரு துறவியை ஒரு அரசன் மதிப்பிடுவதா ஆத்திரமடைந்தாலும் என்ன செய்வது திரும்பி போனால் குருநாதர் மகிழ்ச்சியடையமாட்டார். எப்படி இருந்தாலும் இங்கே இருந்துதான் தீர வேண்டும் என்பது உறுதி என்றால் எப்படியோ இந்த மூன்று நாட்களை இங்கேயே கடத்திவிட்டு இந்த தலைகனம் பிடித்த மனிதனிடமிருந்து வேண்டியதை சாதித்து சென்று விடலாம். அரசர் கூறினார், அமைதியடைந்து சுயஉணர்வு கொள். முதலில் குளி, நீ வரப் போகும் செய்தி முதலிலேயே எனக்கு வந்துவிட்டது. அதனால் நான் உனக்காக எல்லாம் தயார் நிலையில் வைத்திருக்கிறேன். கவலைப்படாதே. இளமை அப்படித்தான். எதையும் சீக்கிரமே தீர்மானம் செய்யச் சொல்லும். தீர்மானம் செய்யாமல் இருக்க, அல்லது உடனடியாக மதிப்பீடு செய்யாமல் இருக்க ஒரு சிறிதளவு அனுபவம் வேண்டும். நீ இதுவரை எதையும் பார்த்ததில்லை. இங்கே மூன்று நாட்கள் இரு, கவனி, பார். நீ மதிப்பீடு உன் வாழ்நாள் முழுவதும் செய்யலாம். அதில் எந்த பிரச்னையும் இல்லை. முதலில் என்னுடைய ஒப்புதல் பெற்றுக் கொள். என்னுடைய மதிப்பீட்டை கவனித்து அதன்படி நடந்து கொள்ள முயற்சி செய். அப்போதுதான் நீ என்னிடமிருந்து சாதகமான தீர்ப்பை பெறலாம். இல்லாவிடில் நீ திரும்ப திரும்ப உனது வாழ்க்கை முழுவதும் இங்கே வர வேண்டியிருக்கும். அதனால் போய் குளி. நான் சகல ஏற்பாடும் செய்து வைத்திருக்கிறேன். இந்த இளம் துறவி இதுவரை அரசனின் குளியலறையை பார்த்ததேயில்லை. அது போன்ற அழகான ஒரு இடத்தில் அவன் இருந்ததேயில்லை. நிர்வாணமான பெண்கள் மசாஜ் செய்ய அங்கே இருந்தனர்…..அவன், கடவுளே, இந்த பரீட்சை என்னை முடித்துவிடும் போலிருக்கிறதே. இந்த மூன்று நாட்களில் இவர் என்னை கொன்று விடப் போகிறார். என்றான். அவன் எதுவும் சொல்வதற்கு முன், உண்மையில் அவன் பதட்டத்தின் உச்சியில் இருந்தான். அவன் எப்போதும் பெண்களிடமிருந்து தப்பித்து வந்திருந்தான், இப்போது இங்கே நிர்வாணமான பெண்கள்…. அவன் இதற்கு முன் இவ்வளவு அழகான பெண்களை பார்த்ததேயில்லை, அதுவும் அவர்கள் மசாஜ் செய்யப் போகிறார்கள். ஆனால் அவன் எதுவும் சொல்வதற்கு முன் உண்மையில் அவனால் எதுவும் பேச முடியவில்லை, அவன் பேசும் சக்தியை இழந்திருந்தான். அவனால் ஆஹாஹாஹா என்று மட்டுமே சொல்ல முடிந்தது. வேறு எதுவும் சொல்ல முடியவில்லை. அவர்கள் அவன் ஆடைகளை கழற்ற ஆரம்பித்தனர். அவன் எதையும் செய்யும்முன், அவன் நிர்வாணமாக நின்றிருந்தான். அந்த நான்கு பெண்களும் அவனை முழுமையாக தங்கள் வசம் எடுத்துக் கொண்டு அவனை குளியல்அறையின் தொட்டியில் அமிழ்த்தினர். அதில் முழுமையாக பன்னீர் இருந்தது. இந்தியாவில் அரசர்களும் மிகப் பெரும் பணக்காரர்களும் பன்னீரில்தான் குளிப்பர். இரவில் குளியல்தொட்டியில் நூற்றுக்கணக்கான ரோஜாக்களை போட்டு வைத்தனர். அதனால் அந்த வாசம் தண்ணீரில் ஊறி விடும். காலையில் அந்த இதழ்களை எடுத்து விட்டால் நீ அந்த ரோஜாக்களை பார்க்காவிட்டாலும் ரோஜாவாசம் உன்னை சூழ்ந்திருக்கும். அவன் இதுவரை தன் வாழ்நாளில் அது போன்ற ஆடம்பரமான எதையும் பார்த்ததேயில்லை. அந்த குளியல் தொட்டி முழுவதும் தங்கத்தால் ஆனது. அரிய வகை எண்ணெய் ஊற்றி அவன் மசாஜ் செய்யப்பட்டான். அதிலிருந்து தப்பிப்பதற்குள் அவனுக்கு போதும் போதுமென்றாகி விட்டது. அதற்குள் அவன் உறைந்தவன் போலாகி விட்டான். பின் அரசர் அவனை விருந்துக்கு அழைத்தார். அவன் இதுவரை இது போன்ற உணவு வகைகளை ருசித்ததேயில்லை. ருசிக்காமல் சாப்பிட வேண்டும் என்றுதான் அவன் இதுவரை படித்துள்ளான். இங்கோ, ருசியான, சுவையான அற்புதமான உணவு. அதன் வாசனையே மணமே உனக்கு பசியெடுக்க வைத்துவிடும். அரசர், உட்கார், உட்காரந்து சாப்பிடு. ருசிக்காமல் சாப்பிட வேண்டும் என்ற உனது ஒழுங்கை நினைவில் கொள். உனது குருநாதரின் இல்லத்தில் உள்ள சுவையில்லாத உணவை சாப்பிடும்போது அதை நினைவில் கொள்வதில் என்ன சிரமம் ஒரு ஒழுங்கினால்தான் அதை அங்கே நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமா அங்கே சுவையில்லை. எந்த முட்டாளும் ஒழுங்காக இருப்பான். இங்கே அதை நினைவில் கொள். இளைஞன் அதில் உள்ள கஷ்டத்தை பார்த்தாலும் அதில் உள்ள நியாயத்தையும் பார்த்தான். அரசர், குளியல் எப்படி இருந்தது சொல்லவே இல்லையே, அந்த பெண்கள் நன்றாக இருந்தார்களா ஏனெனில் அவர்கள்தான் மசாஜ் செய்வதில் சிறந்தவர்கள் நீ திருப்தியடைந்திருப்பாய் என நினைக்கிறேன். அவன் திருப்தியா, நான் மூன்று நாட்களை எப்படியோ கடத்த நினைக்கிறேன். எனக்கு நம்பிக்கை இல்லை, அப்படி கடந்து விட்டால்….. இதுதான் முதல் மாலை. இந்த மூன்று நாட்களும் எனக்கு மூன்று வாழ்க்கை போல இருக்கிறது. இந்த உணவு அதை என் வாழ்நாள் முழுவதும் என்னால் மறக்க முடியாது. நான் துறவி, மேலும் இந்த அழகான பெண்களை என்னால் மறக்கமுடியாது. இது என்ன வகையான பரீட்சை நான் இத்தனை வருடங்களாக என்னை தயார் செய்து வைத்திருப்பதற்கு நேர் எதிரான அனுபவங்களை நீங்கள் எனக்கு கொடுக்கிறீர்கள் என்றான். பின் மது வந்தது. அரசர் அவனுக்கு சிறிது ஊற்றிக் கொடுத்தார். இளைஞன், இது அதிகப்படியானது. ஏனெனில் மது எனது குருநாதரின் இல்லத்தில் தடை செய்யப்பட்ட ஒன்று. என்றான். அரசர், இது உனது குருவின் இல்லம் அல்ல. இது உனது பரிசோதகரின் இல்லம். உனக்கு ஒப்புதல் வழங்கும் பரிட்சை. கவனமாக இரு, நான் சொல்வதை செய். உனது குருநாதர் சுயஉணர்வின்றி இருக்காதே என்று தான் கூறியிருக்கிறார். சுயஉணர்வின்றி இருக்காதே. குடி, சுயஉணர்வை இழக்காமல் இரு. குடிக்காமல் சுயஉணர்வோடு இருப்பதில் என்ன பிரச்னை யாரும் அதை செய்யலாம், எல்லோரும் அப்படித்தான் இருக்கின்றனர். குடி, திருப்தியாகும் வரை குடி. ஏனெனில் திரும்பவும் உனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். நான் உனக்கு சொல்லுகிறேன். குடிப்பதற்க்கும் சுயஉணர்விழப்பதற்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் உன்னுடன் குடிக்கிறேன். உண்மையில் மாலையில் இருந்து நான் குடித்துக் கொண்டேதான் இருக்கிறேன். நான் சுயஉணர்வை இழந்து விட்டேன் என்று உன்னால் சொல்ல முடியுமா அதனால் குடி. அவன் குடிக்க வேண்டி வந்தது. பின் என்ன நடக்கிறது என்றே அவனுக்கு தெரியாது. என்ற அளவுக்கு அவன் சுயஉணர்வை இழந்து விட்டான். மது, மாது, அழகான உடை, யாவும் அவனை மயக்கி விட்டன. அவன் தங்க வேண்டிய இடத்திற்கு அரசர் அவனை தூக்கிச் சென்றார். அவனால் நம்பவே முடியவில்லை. அவன் தான் சொர்க்கத்திற்கு வந்து விட்டதாக எண்ணினான். மது பலருக்கு சொர்க்கத்தை பற்றிய நினைப்பை கொடுத்து விடும். அதனால்தான் எல்லா மதங்களும் மதுவிற்கு எதிராக இருக்கின்றன. ஏனெனில் மது உனது சொர்க்க ஆசையை பூர்த்தி செய்துவிடும்போது யார் சர்ச், கோவில், ஆசிரமம் ஆகியவற்றைப் பற்றி கவலைப்படுவார்கள் மதுவை குடித்தால் போதும் சொர்க்க ஆசை நிவர்த்தி ஆகும் எனும்போது யார் வேறு எதையும் செய்வார்கள் அவன் தான் சொர்க்கத்தில் இருப்பதாக எண்ணினான். அவன் தான் தேர்வடைய வந்திருப்பதை சுத்தமாக மறந்து விட்டான். அரசர் அவனுக்கு அவனுடைய படுக்கையை காண்பித்தார். அவன் படுத்த மறுகணம் அவன் தன் தலைக்கு மேல் நூலில் ஒரு வாள் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்தான். எல்லா மயக்கங்களும் காணாமல் போய் விட்டது. திடீரென அவன் தான் சொர்க்கத்தில் இல்லையென கண்டான். அந்த வாள்… யாரையும் எங்கிருந்தாலும் – சாவு – உடனே பூமிக்கு கொண்டு வந்து விடும். அவன் அரசரிடம் எதற்காக இந்த வாள் இங்கே தொங்கிக் கொண்டிருக்கிறதென்று கேட்டான். அரசர், இது உன்னை சுயஉணர்வில் வைத்திருப்பதற்காக அங்கே தொங்கிக் கொண்டிருக்கிறது என்று கூறினார். இதுதான் உனது அறை. இப்போது தூங்கு. கடவுளின் கருணையிருந்தால் நாள் இருவரும் உயிரோடிருந்தால் சந்திப்போம். என்றார். அவன், உங்களுக்கு எதுவும் நடக்காது. நீங்கள் உயிரோடிருப்பீர்கள். பிரச்னை எனக்குத்தான். கடவுளின் கருணையிருந்தால்கூட எனது தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் இந்த கூரான வாளை தாங்கிப் பிடிக்கும் சக்தி இந்த நூலுக்கு இருக்குமா என்பது எனக்கு சந்தேகம்தான். ஒரு தென்றல் காற்று போதும், அது எந்த வினாடியும் அறுந்து விழுந்துவிடும். நான் செத்தேன். என்றான். அரசர், கவலைப்படாதே. நீ இறந்து விட்டால்கூட உனது குரு சொல்லிருப்பாரே மறுபிறப்பு பற்றி – நீ மறுபிறப்பு எடுப்பாய் – மறுபடியும் பிறப்பாய். நீ கற்றது அனைத்தும் உன்னுடன் வரும். அதனால் இந்த கடைசி கணங்களை தவற விட்டு விடாதே. அது விழலாம், அதற்கு நான் உறுதிமொழி கொடுக்கமுடியாது. நீ இந்த கணங்களை எப்படி உபயோகப்படுத்திக் கொள்கிறாய் என்பது உன்னை பொறுத்தது. தன்னுணர்வோடு இரு, நீ தன்னுணர்வோடு இறந்தால் அதை விட சிறப்பானது எதுவும் கிடையாது. என்றார். இளைஞன், நான் இறக்க விரும்பவில்லை. நான் இங்கே ஒப்புதல் பெறவே வந்தேன். ஆனால் நீங்கள் என்னை வாழ்விலிருந்தே காலி செய்கிறீர்கள். என்றான். அரசர், இதுதான் ஒருவர் ஒப்புதல் பெறும் வழி. நீ தூங்கு. என்ன நிகழ்கிறதோ அதுவே நிகழும். அதுதான் உனது குரு சொல்லிக் கொடுத்தது. இதைதான் இந்துக்கள் சொல்கிறார்கள் அவனின்றி அணுவும் அசையாது, ஒரு இலை கூட அவனது விருப்பமின்றி அசையாது, பின் எப்படி ஒரு வாள் உன்னை கொன்று விடும். அதுதான் அவன் விருப்பம் என்றால் வாளோ, வாளின்றியோ நீ கொல்லப்படுவாய். அதனால் தூங்கு, நான் அப்படித்தான் தூங்கப் போகிறேன். உன்மேல் ஒரே ஒரு வாள்தான் தொங்கிக் கொண்டிருக்கிறது. அங்கே என்மேல் ஆயிரக்கணக்கான வாட்கள் தொங்கிக் கொண்டிருக்கிறது. சீக்கிரமே என் குறட்டை சத்தத்தை அடுத்த அறையில் இருந்து நீ கேட்கலாம். என்றார். இளைஞனால் இரவு முழுவதும் தூங்க முடியவில்லை. இரவு முழுவதும் அடுத்த அறையில் அரசர் விடும் குறட்டை சத்தம் அவனுக்கு கேட்டது. காலையில் அரசர் அவனது அறைக்கு வந்தார். இளைஞன் விழிப்புடன் வாளை பார்த்தவாறே படுத்திருந்தான். இந்த முழு உலகத்திலும் வாளைத் தவிர வேறு எதுவும் இல்லை. அரசர், நான் குளிக்கப் போகிறேன். அவரது அரண்மனைக்கு பின் புனித கங்கை ஆறு ஓடிக் கொண்டிருந்தது. என்னுடன் வா, சிறிது தூரம் நடந்து விட்டு ஆற்றில் நீச்சல் அடித்து வரலாம். வா என அழைத்தார். அவர்கள் சென்றனர். அந்த துறவியிடம் கோவணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. கோவணம் என்பது ஒரு சிறிய துண்டு துணியைத்தவிர வேறெதுவும் இல்லை. தையல் ஏதுமற்ற மிகச் சிறிய உள்ளாடை. உன்னுடைய இடுப்பைச் சுற்றி ஒரு நூலை கட்டிக் கொண்டு அதில் முன்னால் ஒரு முனையையும் பின்னால் ஒரு முனையையும் கட்டிக் கொண்டால் முடிந்தது. தையல் ஏதும் தேவையில்லை. அதை எங்கேயும் எப்போதும் செய்யலாம். இதைத்தான் இந்து துறவிகள் அணிவர். ஏனெனில் தையல் சிக்கலான விஷயம். அதில் மற்றவர்கள் உதவி தேவை. பணம் தேவை. அவை எல்லாம் தவிர்க்கப்பட வேண்டும். இந்து துறவி எல்லாவற்றையும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தவிர்க்க வேண்டும். ஒரு பிச்சை பாத்திரம் அதுவும் உலோகத்தால் ஆனது அல்ல. தேங்காய் மூடி அதுதான் பிச்சை பாத்திரம். அதை உன் கையோடு கட்டிக் கொண்டால் முடிந்தது. பிச்சை பாத்திரம் போலவே உன் கோவணமும். ஒரு குச்சி – எதற்காக குச்சி என்று வியப்படைவாய். அது இந்திய நாய்களுக்காக. அவை சீருடைகளுக்கு எதிரானவை. துறவியின் சீருடை பெரிதாக இல்லையென்றாலும் சீருடை சீருடைதானே. பிச்சை பாத்திரம், கோவணம், ஒரு குச்சி ஆகிய இவையே அந்த இளைஞன் தன்னுடன் கொண்டு வந்த பொருட்கள். காலையில் அவன் அந்த மூன்று பொருட்களை திரும்பவும் எடுத்துக் கொண்டான். ஏனெனில் அரசர் கொடுத்த மிக மதிப்பு வாய்ந்த ஆடைகளோடு, உடையோடு வெளியே வர அவனுக்கு மிகவும் தர்மசங்கடமாக இருந்தது. அவன், அரண்மனையில் இருக்கும்போது நான் அவற்றை அணிந்து கொள்கிறேன். ஆனால் வெளியே வரும்போது அவற்றை நான் போட்டிருப்பதை யாராவது பார்த்துவிட்டால் அது எனக்கும் உங்களுக்கும் சங்கடமாகி விடும். அதனால் நான் என் கோவணத்தை கட்டிக் கொள்கிறேன் என்றான். அரசர், அது உன் பிரச்னை என்று கூறி விட்டார். ஆகவே அரசர் தனது ராஜ ஆடையிலும் இவன் தனது கோவணத்தோடும் சென்றனர். இருவரும் தங்களது ஆடைகளை கழற்றி கரையில் வைத்துவிட்டு குளிக்க நதியில் இறங்கினர். அவர்கள் குளித்துக் கொண்டிருக்கும்போது துறவி அரசரிடம் உங்களது அரண்மனையில் தீ பிடித்திருக்கிறது என்று கத்தினான். அரசர், நீ பார்ப்பதற்க்கு முன்பே நான் பார்த்துவிட்டேன். ஆனால் கவலைப்பட ஏதுமில்லை. இப்போது என்ன செய்ய முடியும் அது தீப்பிடித்துவிட்டது. கடவுளின் விருப்பமின்றி எதுவும் நடவாது. அதனால் கவலைப்படாதே. நீ குளி. என்றார். துறவி, என்ன சொல்கிறீர்கள், நான் என் துணிகளை காப்பாற்றிக் கொள்கிறேன். அது அரண்மனைக்கு அருகில் இருக்கிறது என்று கூறியவாறே ஓடிப் போய் தன் ஆடைகளை எடுத்துக் கொண்டான். அரண்மனை பற்றி எரிகிறது அரசரின் ஆடைகள் அங்கே இருந்தன. ஆனால் அவன் தனது ஆடைகளை பற்றி மட்டும் கவலைப்பட்டான். அரசர் குளித்துமுடித்தார். அரண்மனை எரிந்து முடிந்தது. அது அவரது ஆணையின்மேல் பற்ற வைக்கப்பட்டிருந்தது. துறவி, அதிர்ச்சியில் நடுக்கத்தில் இருந்தான். கோடிக்கணக்கான ரூபாய்கள்…….. எத்தனை நஷ்டம் என்றான். ஆனால் அரசர், கவலைப்படாதே அது உன்னுடையது அல்லவே உன்னுடைய பொருட்கள் பாதுகாப்பாக உள்ளதா என்றார். அவன் எனது பொருட்கள் பாதுகாப்பாக இருக்கிறது என்றான். அரசர், அது உனக்கு போதும் – நீ உன் பொருட்களை பற்றி மட்டுமே கவலைப்பட வேண்டும். இவைதான் உன் செல்வம், உனது ராஜாங்கம். ஆனால் எனது முழு ராஜாங்கமும் பற்றி எரிந்து போனாலும் நான் கவலைப்பட மாட்டேன். அது பிரச்னையே அல்ல. ஏனெனில் நான் இங்கில்லாத போதும் உலகம் இருந்தது, அரசாங்கம் இருந்தது. ஒரு நாள் நான் இல்லாமல் போவேன், அப்போதும் உலகம் இங்கிருக்கும். இங்கே நான் ஒரு சாட்சியாளன், பார்வையாளன் மட்டுமே. இதில் நான் ஏன் ஒன்றி போக வேண்டும் ஆனால் நீ எதையும் துறக்கவில்லை என்பதை நீ நினைவில் கொள்ள வேண்டும். நீ இன்னும் பார்வையாளனாகவில்லை. உன்னால் எனது வீடு பற்றி எரிவதைக்கூட பார்க்கமுடியவில்லை. உனது துணி எரிந்துபோயிருந்தால் உனக்கு பயித்தியம் பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன். என்னுடைய இழப்பை பார்த்த்திலேயே உனக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. ஆனால் அதற்க்கும் உனக்கும் என்ன சம்பந்தம் நான் குடித்ததை பார்த்ததிலேயே நீ அதிர்ச்சியடைந்துவிட்டாய், ஆனால் நான் குடிக்கும்போதுகூட நான் ஒரு சாட்சியாளன்தான். என்னைச் சுற்றி அழகான பெண்கள் இருந்ததை பார்த்த போது அதிர்ச்சியடைந்து விட்டாய். ஆனால் அப்போதும் நான் பார்வையாளன்தான். ஆனால் நீ சாட்சியாளனாக இல்லை. இந்த இரண்டு நாட்களில் விழித்துக் கொள். காலம் அதிகமில்லை. மிகவும் குறைவாகவே உள்ளது. சாட்சியாளனாக இரு. நான் உனக்கு சான்றிதழ் கொடுப்பதற்கு முன் நீ தேர்வடையவேண்டும். நீ ஒரு பார்வையாளன் என்பதை நீ நிரூபிக்க வேண்டும். அவன் நான் எப்படி நிரூபிப்பது என்று கேட்டான். அரசர், இன்று எல்லாவற்றையும் முயற்சி செய். அது எதுவாக இருந்தாலும் அது நீ கவனிப்பதற்கு உதவி செய்வதாக மாற வேண்டும். வெறுமனே கவனி, தப்பிக்க முயற்சி செய்யாதே. அமுக்காதே, சண்டையிடாதே. தவிர்க்காதே. கவனி, விஷயங்கள் நிகழட்டும். என்றார். மூன்றாவது நாளில் இறுதி பரீட்சை ஒரு அழகிய நடனம். இந்த துறவியின் கையில் எண்ணெய் நிரம்பிய ஒரு கோப்பை கொடுக்கப்பட்டது. ஒரு சிறிதளவு அசைந்தால்கூட எண்ணெய் சிந்திவிடும். நடனமாதர்கள் – அனைவரும் நிர்வாணமாக – சுற்றிலும் வட்டமாக நடனமாடுவர். அரசர் நடுவில் அமர்ந்திருப்பார். அந்த இளைஞன் அந்த அரிய வகை எண்ணெய் நிரம்பிய கோப்பையை கையில் வைத்துக் கொண்டு சுற்றி வர வேண்டும். ஒரு சிறிதளவு எண்ணெய் சிந்தினாலும் போச்சு, நீ தேர்வடையவில்லை. என்று கூறப்பட்டிருந்தது. அவ்வளவு அழகான மாதர்கள் நடனமாடும்போது அக்கம் பக்கம் திரும்பி என்ன நடக்கிறதென்று பார்க்கும் ஆசை யாருக்குத்தான் வராது தூண்டுதல் இருக்கத்தான் செய்யும். ஆனால் அந்த கோப்பையிலிருந்து ஒரு சொட்டு எண்ணெய்….. ஒரே ஒரு கணம் கவனமில்லாமை…… பெண்களை அவன் சுற்றி வந்தான். அவர்களை அவன் கடந்து வந்தான். அவன் சுற்றி வர வர, அவனுள் சாட்சிபாவம் மெதுமெதுவே படிந்தது. அவன் நடனத்தை மறந்தான், இக்கணம், எண்ணெய், கவனம் மட்டுமே இருந்தது. கவனித்தல் ஒரு சிறிய விஷயம். ஆனால் அதில் ஏதும் ஆணவத்தை பூர்த்தி செய்யக் கூடியதில்லை. தியானமும் அப்படித்தான். பல்வேறு பெயர்கள் – கவனித்தல், சாட்சி, தியானம், விழிப்போடு இருத்தல் – ஒரே விஷயத்துக்கு பலப் பெயர்கள். இவை யாவும் நீ ஏதும் செய்யாத போதுதான் நிகழும். இப்போது இதுதான் கேள்வி செய்யாமல் இருப்பது என்பது என்ன நீ எப்படி என்று கேள்வி கேட்கும்போது நீ அதை தவற விட்டு விடுகிறாய் ஏனெனில் எப்படி என்றாலே செய்வதுதான் நீ – செய்யாமல் இருப்பதை அடைவதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் என்று கேட்கிறாய். செய்யாமல் இருப்பது என்பதை நீ வெறுமனே புரிந்து கொள்ள வேண்டும். மடத்தனமான கேள்வியை கேட்காதே. செயல் மூலம் உனது ஆணவம் நிறைவடைவதை புரிந்துகொள்ள முயற்சி செய். நீ எதை செய்தாலும் – பிரார்த்தனை, பட்டினி, கோவிலுக்கு போவது, துறவியாவது – நீ எதை செய்தாலும் அது உன் ஆணவத்திற்கு தீனிதான். உனது ஆணவம் உனக்கும், பிரபஞசத்திற்க்கும், உனக்கும், உண்மைக்கும் இடையே தடை. எதையும் செய்யாதே. நீ இந்த மடத்தனம் எதையும் செய்யாமல் ஏன் வாழக்கூடாது பசிக்கும்போது சாப்பிடு. தாகம் எடுக்கும்போது தண்ணீர் குடி தூக்கம் வரும்போது தூங்கு விழிப்பு வரும்போது எழுந்து கொள். மற்ற எல்லாவற்றையும் மறந்துவிடு. தேவையான சிறிய விஷயங்களை செய். சாதாரண வாழ்க்கையை வாழ். நீ கண்டுபிடிப்பாய். ஜீஸஸ் தேடு, கண்டடைவாய் என்றார். நான் தேடினால் கிடைக்காது என்கிறேன். ஜீஸஸ் கேளு அது உனக்கு கொடுக்கப்படும் என்றார். நான் கேட்டால் அது உனக்கு கொடுக்கப்படாது என்கிறேன். ஜீஸஸ் கதவை தட்டு திறக்கும் என்றார் . நான் கதவை தட்டினால் அது ஒருபோதும் உனக்கு திறக்காது என்கிறேன். உண்மையில் தட்ட வேண்டிய அவசியமே இல்லை. கதவு திறந்துதான் இருக்கிறது. உள்ளே நுழை.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'சாட்சிபாவம்' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: குரு, சீடன், தீட்சை, அரசர், இளைஞன், பணம், நிலம், மாளிகை, அரண்மனை, கடவுள், பிரார்த்தனை, மண்டியிட்டு, கண்ணீர், இராஜ்ஜியம், பெண், அடிமை தலைப்பு: தீட்சை
பழமையான கதை ஒன்று உண்டு. கடைசி தீட்சை சீடனுக்கு அளிக்கப்படவுள்ளது. குரு, உன்னுடைய கடைசி தீட்சை மிகவும் மறைமுகமான ஒரு வழியிலேயே அளிக்கப்படும், என கூறினார். குரு அவனுடைய வழியில் வைத்த எல்லா கஷ்டங்களிலும் சீடன் தேறிவிட்டான், அவன் தன்னை நிரூபித்துவிட்டான். இப்போது கடைசி தீட்சை . . . மற்றும் அவன் கடைசி தீட்சையிலும் தேறிவிட்டால், அவன் ஞானமடைந்தவன் என அறிவிக்கப்படுவான் சீடன் குருவின் காலை தொட்டு, நான் தயாராக இருக்கிறேன். வெறுமனே எனக்கு கட்டளையிடுங்கள் மற்றும் எது செய்யப்படவேண்டுமோ அதை நான் செய்வேன், என கூறினான். குரு ,நீ அரசரிடம் செல்லவேண்டும், மற்றும் அதிகாலையில் செல்லவேண்டும், அரசரை பார்க்கும் முதல் ஆளாய் நீ இருக்கவேண்டும். ஏனெனில் அரசருக்கு ஒரு பழக்கம் உள்ளது, முதலில் வருபவர்கள் யாராக இருந்தாலும், வருபவர் எதை கேட்டாலும், அரசர் கொடுத்துவிடுவார். ஆனால் நாடு செல்வ செழிப்போடு இருப்பதால் யாராவது செல்வது மிகவும் அபூர்வம். வருடங்கள் கடந்துவிட்டன, எதை கேட்டும் யாரும் போவதில்லை. ஆனால் தவறவிட்டுவிடாதே – மிகவும் சீக்கிரமாகவே அங்கு இரு. அரசர் காலையில் அவருடைய தோட்டத்திற்குள் நுழைவார், சூரியன் உதயமாகும்போது, அரசர் தோட்டத்திற்குள் நுழைவார் – அங்கு இரு. மற்றும் அவர் உன்னை உனக்கு என்ன வேண்டும் ? என்று கேட்பார் மற்றும் உனக்கு என்ன வேண்டுமோ, அதை அவரிடம் கேள், என கூறினார். இந்த கடைசி தீட்சை எந்த விதமானது என்பதை சீடனால் புரிந்துகொள்ள முடியவில்லை, ஆனால் கட்டளை பின்பற்றப்படவேண்டும், அவன் சென்றான். அவன் தவறவிடவில்லை, அதிகாலை மூன்று மணிக்கு அவன் அரசருக்காக காத்திருந்தான். சூரியன் உதயமாகும் சமயத்தில், அரசர் தோட்டத்தில் நுழைந்தார் அந்த இளைஞன் அரசரை வணங்கினான். அரசர் ,நீ எதையாவது கேட்பதற்காக வந்திருக்கிறாயா ? நீ எதை வேண்டுமானாலும் கேட்கலாம்! நீ என்ன கேட்டாலும், நான் அதனை உனக்கு தருவேன், என கூறினார். மிகப்பெரிய ஆசை இளைஞனை ஆட்கொண்டது. அவன் ஒரு ஏழை, மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவன், மற்றும் அரசர் எதுவாக இருந்தாலும் என்று கூறுகிறார் ? நிச்சயமாக தெரிந்துகொள்வதற்காக, அவன் திரும்பவும் கேட்டான். எது வேண்டுமானாலும் என்று சொல்வதன் மூலம் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ? அரசர் சரியாக அதைத்தான் சொல்கிறேன் – எதுவாக இருந்தாலும் நீ என்னுடைய இராஜ்ஜியத்தை கேட்டால் கூட நான் அதனை உனக்கு தந்துவிடுவேன். நீ உனக்கு எவ்வளவு பணம் வேண்டுமோ அவ்வளவு கேட்கலாம். . . . ,என கூறினார். ஏழை இளைஞனால் அதிகமாக யோசிக்கமுடியவில்லை. அவன் ஒருவேளை பத்தாயிரம் ரூபாய் போதுமானது என எண்ணினான். ஆனால் ஓர் ஆசை, ஏன் பத்தாயிரம் ? உனக்கு ஒருவேளை இப்படி ஒரு வாய்ப்பு திரும்பவும் கிடைக்காமலேயே போகலாம் – ஏன் ஒரு இலட்சம் கேட்கக்கூடாது ? மற்றும் பிறகு மற்றொரு ஆசை, மற்றும் ஆசை மேலும் ஆசை. . . ஏனெனில் மனம் தொடர்ந்து இன்னும் இன்னும் என கேட்டுகொண்டேயிருக்கிறது. எனவே அவன் என்ன முடிவு செய்தாலும், மனம் இன்னும் அதிகமாக என்று கேட்டுகொண்டேயிருந்தது. அரசர் நீ கேட்பதற்கு இன்னும் தயாராகவில்லை போல தெரிகிறது, நான் எனது காலை நடைப்பயிற்சிக்கு செல்கிறேன், அந்த நேரத்தில் நீ முடிவு செய். மற்றும் நான் திரும்ப வரும்போது, நீ என்ன கேட்டாலும் அது உனக்கு தரப்படும், என கூறினார். அந்த அரை மணிநேரம் சித்ரவதையாக இருந்தது, அவன் போய்கொண்டேயிருந்தான், நான் இதை கேட்கலாம் மற்றும் அதையும் கேட்கலாம், ஒரு தங்க ரதம், மற்றும் பல கோடி ரூபாய் பணம், மற்றும் மிக அதிக அளவிலான நிலம் – நான் எனக்கே உரிய ஒரு சிறிய இராஜ்ஜியத்தை உருவாக்குவேன். ஆசைகள் மற்றும் கனவுகள். . . மற்றும் அரசர் வந்தார். அந்த அரை மணி நேரம் மிகவும் வேகமாக போய்விட்டது. அரசர் அங்கு நின்றுகொண்டிருந்தார் மற்றும் அரசர் , இளைஞனே நீ இன்னும் முடிவு செய்யவில்லையா ? என கேட்டார். பிறகு திடீரென இளைஞன் , நான் எதை கேட்டாலும் அது அரசர் வைத்திருப்பதை விட குறைவாகவே இருக்கும், எனவே ஏன் எல்லாவற்றையும் கேட்ககூடாது ? எண்ணிக்கைக்கு முடிவு கட்டிவிடலாம் என எண்ணினான் ! எனவே அவன் ,ஐயா, நீங்கள் தர விரும்பினால், நான் எல்லாவற்றையும் உங்களிடம் இருப்பது அனைத்தையும் கேட்கிறேன். உங்களுடைய முழு இராஜ்ஜியம், உங்களுடைய அனைத்து செல்வங்களும், உங்களுடைய மாளிகைகள் – - அனைத்தும் வேண்டும். நீங்கள் வெறுமனே அரண்மனையை விட்டு வெளியேறிவிடுங்கள் ! மற்றும் நீங்கள் திரும்பவும் அரண்மனைக்குள் செல்லக்கூடாது. நீங்கள் ஏதையும் எடுத்துகொள்ளக் கூடாது. நீங்கள் வெறுமனே வெளியேறிவிடுங்கள் – - இராஜ்ஜியத்தைப்பற்றி எல்லாவற்றையும் மறந்துவிடுங்கள். நான் உங்களுக்கு நீங்கள் அணிந்திருக்கும் ஆடைகளை மட்டுமே அனுமதிக்கமுடியும். அதைக்கூட அவன் எதிர்ப்போடுதான் செய்தான், அதுகூட அவனுக்கு குறைவதாக தோன்றியது. அரசர் மண்டியிட்டு, கடவுளிடம் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தார், அவருடைய கண்களில் ஆனந்த கண்ணீர் உருண்டோடியது, பரவச கண்ணீர் ! மற்றும் அவர் கடவுளிடம் நான் இப்படிப்பட்ட ஒரு மனிதனுக்காகத்தான் காத்துகொண்டிருந்தேன் ! ஆனால் முடிவில் என்னுடைய பிரார்த்தனைக்கு செவி சாய்த்துவிட்டீர்கள், இப்போது அவன் வந்துவிட்டான், நான் இந்த எல்லா முட்டாள் தனங்களில் இருந்தும் விடுபட்டுவிட்டேன். நன்றி நீங்கள் என் பிரார்த்தனைக்கு செவி சாய்த்துவிட்டீர்கள், அது அதிக இருந்தாலும், நான் அதிக காலம் காத்திருக்க வேண்டியிருந்தது இருந்தாலும், நீங்கள் எனது பிரார்த்தனைக்கு செவிசாய்த்துவிட்டீர்கள், நான் நன்றியால் நிறைந்துள்ளேன் என நன்றி கூறிக்கொண்டிருந்தார். அரசர் இந்த விஷயங்களை கடவுளிடம் கூறிக்கொண்டிருக்கும்பொழுது இளைஞன் அங்கு நின்றுகொண்டிருந்தவன் என்ன விஷயம் ? இராஜ்ஜியத்தை துறப்பது குறித்து இந்த மனிதன் அதிக மகிழ்ச்சியை உணர்கிறான் என்றால், நான் எதற்குள் நுழைகிறேன் ? இந்த மனிதன் சொல்வதைப்போல் 30 வருடங்களாக என்னுடைய முழு இராஜ்ஜியத்தை ஏற்றுகொள்ளும் ஒருவனை அனுப்பு, என்னுடைய முழு இராஜ்ஜியத்தையும் கேட்கும் ஒருவனை அனுப்பு என இந்த மனிதன் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தான் என்றால் – 30 வருடங்களாக அவன் பிரார்த்தனையில் ஈடுபட்டிருக்கிறான் எனில், பிறகு இது எந்த மதிப்பும் உடையது அல்ல. நான் தேவையற்ற பிரச்சனைக்குள் நுழைகிறேன் என யோசிக்க தொடங்கினான். இளைஞனும் மண்டியிட்டான், அரசரின் கால்களை தொட்டு சார் நான் ஒரு இளைஞன் . . ஓர் இளைய முட்டாள். தயவுசெய்து மன்னித்துவிடுங்கள். எனக்கு எதுவும் வேண்டாம். கடவுளிடம் உங்களுடைய பிரார்த்தனை, கடவுளிடம் உங்களுடைய நன்றியுணர்வு என்னுடைய முழு மனதையும் முடித்துவிட்டது. நான் காட்டிற்கு என்னுடைய குருவிடம் திரும்பி செல்கிறேன், என கூறினான். அரசர் அவனிடம் சம்மதிக்க வைக்க முயன்றார். போகாதே, வெறுமனே பார். அரண்மனைக்குள் வா ! நான் என்னுடைய அரண்மனை, என்னுடைய இராஜ்ஜியம், என்னுடைய செல்வங்கள் மட்டுமல்ல, அதோடு என்னுடைய அழகான பெண்ணையும் உனக்கு தருகிறேன், வந்து வெறுமனே பார் ! என்றார். ஆனால் இளைஞன் நான் இங்கு ஒரு நொடிகூட இருக்கமுடியாது – - ஏனெனில் மனம் என்னை ஏமாற்றிவிடலாம். ஒரு உள்ளார்ந்த புரிதல் நிகழ்ந்துவிட்டது, மற்றும் நீங்கள் கடவுளிடம் நன்றியுணர்வு கொண்டதைபோல நான் உங்களிடம் நன்றியுணர்வோடு இருக்கிறேன். நான் தெளிந்துவிட்டேன் ! என கூறினான். மற்றும் இளைஞன் தன்னுடைய குருவிடம் சென்று நடந்த முழு கதையையும் சொன்னபோது, குரு உன்னுடைய கடைசி தீட்சை முடிந்துவிட்டது. இப்போது எதுவும் எப்போதும் உன்னை ஒரு அடிமையாக்காது. இப்போது நீ கவனமாக, உணர்வோடு, சுதந்திரமாக இருக்கிறாய், நீ தேறிவிட்டாய் – - நான் மகிழ்ச்சியடைகிறேன். நான் இங்கிருந்து கவனித்துகொண்டிருந்தேன், நீ முழு இராஜ்ஜியத்தையும் கேட்டபோது, என்னுடைய இதயம் அழுதது. நான் ,எனவே இந்த முட்டாளிடம் 15 வருட உழைத்தது, எல்லாம் முடிந்தது என நினைத்துகொண்டிருந்தேன். ஆனால் நீ எடுத்த முடிவால் நான் அடைந்த மகிழ்ச்சியை நீ கற்பனை செய்துகூட பார்க்கமுடியாது, என கூறினார். நீ திரும்பவும் வந்துவிட்டாய், உன்னால் அந்த விஷயத்தை பார்க்கமுடிந்தது, நீ கவனித்துகொண்டிருந்தாய். என குரு கூறினார். கவனித்து கொண்டிரு, வெறுமனே கவனி. . . . மக்களிடம் பணம் உள்ளது, மக்களிடம் மாளிகைகள் உள்ளன, மக்களிடம் நீ ஆசைப்படும் அனைத்தும் உள்ளன – - வெறுமனே கவனி, வெறுமனே பார். அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா ? அவர்கள் நிறைவாக இருக்கிறார்களா? அவர்கள் உன்னைவிட மகிழ்ச்சியற்று இருக்கலாம் மற்றும் உன்னைவிட அதிகமாக நிறைவற்று உணரலாம் – - பிறகு அவர்களை பின்தொடராதே. அவர்கள் குருடர்கள் ! அவர்கள் மற்ற குருட்டு மக்களை பின்தொடர்ந்திருக்கிறார்கள். அவர்களை பின் தொடராதே, கூட்டத்தை பார்த்து காப்பியடிக்காதே.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: மன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா. நகரமெல்லாம் தோரணம், வீடெல்லாம் அலங்காரம்! மக்கள் தங்கள் பிறந்த நாள் போல மன்னரின் பிறந்த நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடினர். முதல்நாள் இரவே வீதிகள் தோறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், வாண வேடிக்கைகள், அரண்மனையில் வெளிநாடுகளிலிருந்து வந்த தும்துவர்களுக்கு விருந்து ஏகதடபுடலாக நடந்தது. மறுநாள் அரச சபையில் அரசருக்கு மரியாதை செலுத்துதல் நடந்தது. முதலில் வெளிநாடுகளிலிருந்து வந்த அரசப் பிரதானிகள், தங்கள் நாட்டு மன்னர்கள் அனுப்பிய பரிசுகளைத் தந்தனர். பிறகு அரசப் பிரதானிகள், பொதுமக்கள், மன்னருக்கு பரிசளித்து மரியாதை செலுத்தினார்கள். அதன்பிறகு அரசரின் நெருங்கிய நண்பர்கள் தங்கள் பரிசுகளை அளித்தனர். அப்போதுதான் பெரியதொரு பொட்டலத்துடன் தெனாலிராமன் உள்ளே நுழைந்தான். அரசர் உள்பட எல்லாரும் வியப்போடு பார்த்தனர். மற்றவர்களிடம் பரிசுகளை வாங்கித் தன் அருகே வைத்த மன்னர், தெனாலிராமன் கொண்டு வந்த பரிசுப் பொட்டலம் மிகப் பெரிதாக இருந்ததால் அவையிலுள்ளவர்கள் ஆவலோடு என்ன பரிசு என்று பார்த்ததால் அந்தப் பொட்டலத்தைப் பிரிக்கும்படி தெனாலிராமனிடம் கூறினார் அரசர். தெனாலிராமன் தயங்காமல் பொட்டலத்தைப் பிரித்தான். பிரித்துக் கொண்டே இருந்தான். பிரிக்கப் பிரிக்கத் தாழைமடல்கள் காலடியில் சேர்ந்தனவே தவிர பரிசுப் பொருள் என்னவென்று தெரியவில்லை. அதனால் எல்லாரும் ஆவலுடன் கவனித்தனர். கடைசியில் மிகச்சிறிய பொட்டலமாக இருந்ததைப் பிரித்தான். அதற்குள் நன்றாகப் பழுத்துக் காய்ந்த புளியம்பழம் ஒன்றிருந்தது. அவையினர் கேலியாகச் சிரித்தனர். அரசர் கையமர்த்திச் சிரிப்பு அடங்கியவுடன், ""தெனாலிராமன் கொடுத்த பரிசு சிறிதாக இருக்கலாம். அதற்கு அவன் கொடுக்கப் போகும் விளக்கம் பெரிதாக இருக்கலாமல்லவா?'' என்று அவையினரைப் பார்த்துக் கூறிவிட்டு தெனாலிராமன் பக்கம் திரும்பி, ""ராமா இந்த சிறிய பொருளைத் தேர்ந்தெடுத்ததின் காரணம் என்ன?'' எனக் கேட்டார். ""அரசே, ஒரு நாட்டை ஆளும் மன்னர் எப்படி இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை விளக்கும் பழம் புளியம்பழம் ஒன்று தான். மன்னராக இருப்பவர் உலகம் என்ற புளிய மரத்தில் காய்க்கும் பழத்தைப் போன்றவர். அவர் பழத்தின் சுவையைப் போல இனிமையானவராக இருக்க வேண்டும். ""அதே நேரத்தில் ஆசாபாசங்கள் என்ற புளியம்பழ ஓட்டில் ஒட்டாமலும் இருக்க வேண்டும் என்பதை விளக்கவே இந்த புளியம்பழத்தைப் பரிசாகக் கொண்டு வந்தேன். புளியம்பழமும் ஓடும்போல இருங்கள்!'' என்றான். அவையினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மன்னர் கண்கள் பனிக்க ஆசனத்தைவிட்டு எழுந்து தெனாலிராமனைத் தழுவி, ""ராமா எனக்குச் சரியான புத்தி புகட்டினாய். ஒரு பிறந்த நாள் விழாவிற்கு இத்தனை ஆடம்பரம் தேவையில்லை. ""பொக்கிஷப் பணமும் பொது மக்கள் பணமும் வீணாகும்படி செய்து விட்டேன். உடனே விசேடங்களை நிறுத்துங்கள். இனி என் பிறந்தநாளன்று கோயில்களில் மட்டுமே அர்ச்சனை ஆராதனை செய்யப்பட வேண்டும். அவசியமில்லாமல் பணத்தை ஆடம்பரமாகச் செலவு செய்யக்கூடாது,'' என உத்தரவிட்டார். தெனாலிராமனின் துணிச்சலையும் சாதுரியத்தையும் எல்லாரும் பாராட்டினர். அரசர் தனக்கு வந்த பரிசுப் பொருள்களில் விலை உயர்ந்தவற்றைத் எடுத்து தெனாலிராமனுக்குப் பரிசாகத் தந்தார்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'பிறந்த நாள் பரிசு' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: பிரபாகர், லலிதா, சுப்ரமணியன், வசுமதி, கோபால், லதா தலைப்பு: கற்பு எனப்படுவது யாதெனில்
டைரக்டரின் அறையிலிருந்து வெளிப்பட்டு கையெழுத்து வாங்கிய கடிதத்தை நடந்தபடியே வாசித்து தன் இருக்கைக்கு வந்து வசுமதி அமர்ந்த போது இன்டர்காம் அழைத்தது. பிரபாகர் நினைத்த போதே மெலிதாக சிரிப்பு வந்தது. முந்தானையைக் கையால் நீவியபடியே இன்டர்காமை எடுத்து "யெஸ்"......பிரபா.... சொல்லு" என்றாள். "மணி என்ன தெரியுமா? இரண்டரை! சாப்பிடணும்னு ஏதாவது ஐடியா இருக்கா?", "நிறைய இருக்கு. ஆனா வசதிப்பட மாட்டேங்குது, என்ன பண்ணலாம்?" என்றால் அலுங்காமல். "ப்சு... விளையாடாதே... இன்னிக்கு மூன்றரை மணிக்கு நான் பர்மிஷன்ல போறேன் தெரியுமில்லை? சீக்கிரமா சாப்பிட்டுட்டு கிளம்பலாம்னா..." வசுமதி இப்போது சீரியசாகி, "ஒகே. அப்ப ஒண்ணு பண்ணு. நீயும் சந்தரும் சாப்பிடுங்க. ஒரு முக்கியமான விஷயம் கன்வே பண்ண வேண்டியிருக்கு. முடிச்சிட்டு வந்து ஜாய்ன் பண்ணிக்கறேன்" என்றாள். பேச்சு முடியவில்லை. தொடர்ந்தது. "ரைட்.... அப்ப நீ கீழே வர்றப்ப பெட்டில தோத்ததுக்கு 100 ரூபாய் எடுத்துகிட்டு வந்திடு" என்றான் பிரபாகர். "நூறு ரூபாயா? எந்த பெட்? எப்ப தோத்தேன்?" என்றால் வசுமதி ரொம்ப அப்பாவியாக. "நீ கொடுக்க வேண்டியிருந்தா மட்டும் உனக்கு சகலமும் மறந்திடுமே! போன சனிக்கிழமை "Rembrandtesque"ஐத் தப்பா ஸ்பெல் பண்ணிட்டு, சரிதான்னு சாதிச்சியே அதுக்காகத்தான்", "பிரபா.. நூறு ரூபாய் பந்தயம்ங்கிறதெல்லாம் ரொம்ப அநியாயம். இப்ப இருந்து ஐம்பது ரூபாவா வைச்சுக்கலாமா?" - கொஞ்சலாக. "அம்மாடி... எத்தனை நூறு ரூபாய் என்கிட்ட இருந்து நீ கறந்திருப்பே? விதிமுறைகளை எல்லாம் மாத்த முடியாது. வேணுன்னா நான் உன்கிட்ட எப்பவாவது தோத்தேன்னா அப்ப இருந்து மாத்திக்கலாம்." சரியான உடும்பு என்ற முணுமுணுத்தபடியே இன்டர்காமை வைத்தாள் வசுமதி. பதினைந்து நிமிடங்கள் கழித்து வசுமதி டைனிங் ஹாலை அடைந்த போது சந்தரும் பிரபாகரும் சாப்பாட்டு மேசையில் தட்டும் பாத்திரங்களும் ஏகமாய்ப் பரத்தியபடி சுவாரசியமாய் பாதி சாப்பாட்டை முடித்திருந்தார்கள். வசுமதியைப் பார்த்தவுடன் பிரபாகர் பாத்திரங்களை ஒரு புறமாக ஒதுக்கி அவளுக்கு இடம் கொடுக்க முனைந்த போது, சிரமப்படாதே பிரபா... நான் அந்த டேபிள்லே உட்கார்ந்துக்கறேன்" என்றவாறே ஒரு நூறு ரூபாய்த் தாளை பிரபாகர் டேபிள் மீது வைத்துவிட்டு, எதிர்ப்புறமிருந்த மற்றொரு மேசையில் அமர்ந்து கேரியரைத் திறந்தாள். "காலையில வர்றப்ப என்னவோ சொல்ல ஆரம்பிச்சயே, என்ன அது?" என்று ஆரம்பித்தாள். பிரபாகர் யோசித்து, "எப்ப சொன்னேன்? என்றான். "காலையில என்னமோ படிச்சே, சொன்னா எனக்குக்கூட கோபம் வரும்னு சொன்னியே!" என்றாள். "ஓ அதுவா? அது எதுக்கு இப்ப? இன்னொரு சமயம் சாவகாசமாய்ப் பேசலாம்" என்றான். "முடியாது, இப்பவே சொல்லு. காலையில இருந்து போர்டு மீட்டிங். ப்ரொக்ராம் ஷ"ட்டுன்னு காஞ்சு போய் கிடக்கறேன்." வசுமதி பிடிவாதமாய்க் கேட்க, சந்தர் "ஏண்டா, பர்மிஷன் வேற போட்டிருக்கே.. ஒழுங்கா கல்யாணத்துக்குப் போய்ச் சேரணும்னு ஆசையில்லையா?" என்று சொல்லவே, வசுமதி மேலும் ஆவலானாள். "அது வந்து வசு, நேத்து ஒரு கதை படிச்சேன். எழுதினது... யார்னு ஞாபகம் இல்லை. அதிலே ஒருத்தன் அவனோட லவர்கிட்ட"Chastity is nothing but lack of opportunity," அதாவது கற்பு எனப்படுவது சந்தர்ப்பமின்மையே தவிர வேறெதுவுமில்லை"ன்னு சொல்றான். அதுவும் அவன் சொல்லலை. பெர்னாட்ஷா சொன்னாராம். கதையோட கரு கூட கிட்டத்தட்ட அதுதான்" என்றான் பிரபாகர். வெண்டைக் காயை எடுத்து வாயில் வைத்த வசுமதி, பிரபாகரை உற்றுப் பார்த்து, என்ன சொல்ல வர்றே? என்றாள். "கதை முழுதும் படிச்சேன். அற்புதமா இருந்தது. அப்புறம் ரொம்ப நேரம் யோசிச்சுப் பார்த்தேன். பெர்னாட்ஷா சொல்றது சரிதான்னு தோணிச்சு. பெண்கள் கற்பு, கற்புன்னு அனாவசியமா அடிச்சுக்கறாங்கன்னு படுது. அதெல்லாம் கட்டுக்காவல் இருக்கற வரைதான். கொஞ்சம் சாதகமான சந்தர்ப்பம் கிடைச்சா கற்பாவது, ஒண்ணாவது? There is no such thing called கற்பு" என்ற பிரபாகர், சந்தரின் வார்த்தைகளை மதித்து இந்த விஷயத்தை அந்த சமயத்தில் வசுமதியிடம் சொல்லாது இருந்திருக்கலாம். வசுமதி குளிர்ச்சியான பெண், கோபமான பெண். ஆனால் எப்போது குளிர்வாள், எப்போது கோபிப்பாள் என்பது மர்மமான விஷயம்! இருந்தும் அவள் இமைகளைப் படபடவென்று ஐந்தாறு முறை தொடர்ச்சியாகக் கொட்டினால் அழப் போகிறாள் என்பது வரை பிரபாகருக்குத் தெரியும். வசுமதியை அத்தனை தூரம் அறிவான். பள்ளி, கல்லூரி, இப்போது அலுவலகம் என்று சிறுவயதிலிருந்து பழகியதில் வலுவான, வார்த்தைகளுக்கு மிஞ்சிய நட்பு! இருந்தும் இப்போது அனுமானிக்கத் தவறி விட்டான். வசுமதி எடுத்த எடுப்பில் வெடித்தாள். "கொஞ்சமாவது அறிவு இருக்கா? ஏன் இப்படி பொறுக்கித்தனமா பேசறே?" பிரபாகருக்கு இயல்பாகக் கோபம் வந்தது. இருந்தும் நிதானித்து, "என்ன வசு, உண்மைன்னு தோணற ஒரு கருத்தைச் சொல்ல பொறுக்கியா இருக்கணுமா?" என்றான். வசுமதி குளிரவில்லை. இன்னும் கோபித்தாள். "அப்ப சந்தர்ப்பம் கிடைச்சா எல்லாப் பெண்களும் கெட்டுப் போயிடுவாங்கங்கறே. வெல், இதுக்குப் பதில் சொல்லு! உங்கம்மாவுக்குத் தப்பு செய்யறதுக்கு இத்தனை வருஷத்தில் ஒரு சந்தர்ப்பம் கூடவா கிடைக்கலை?" வார்த்தைகளை அனாயாசமாக அள்ளித் தெளித்தாள். பிரபாகருக்குத் தலைக்குள் ரத்தம் ஜிவ்வென்று பாய்ந்தது. "இப்ப பொதுவாத்தானே பேசிகிட்டு இருக்கோம்? எதுக்கு எங்கம்மாவை இழுக்கறே? ஆயிரம் தரம் சொல்வேன். பெண்களுக்கு கற்புன்னு ஒண்ணு கிடையாது. எல்லாம் ஒரு ஷோ தான்." சாப்பிடுவதை நிறுத்தி அவனையே முறைத்துக் கொண்டிருந்த வசுமதி கையிலிருந்த ஸ்பூனை சட்டென்று அவரைக் காயுடன் அப்படியே பிரபாகரை நோக்கி விட்டெறிந்தாள். இதை கொஞ்சம் எதிர்பார்த்தவன் போல் சந்தர் அதைக் "காட்ச்" பிடித்து, "அம்மா தாய்க்குலமே! நீங்க சும்மா வாயாலே பேசினாலே எங்களுக்குப் புரியும், இதெல்லாம் எதுக்கு?" என்றவாறே பிரபாகர் பக்கம் திரும்பி, "ஏண்டா மடையா, அப்பவே சொன்னேனில்லை? ஏதோ சாப்பிட வந்தோம், நாட்டுக்குத் தேவையான விஷயமா - கிர்க்கெட்ல யார் ஜெயிச்சாங்க, தேர்தல் எப்ப வரும்னு பேசிட்டுப் போனோம்னா எவ்வளவு நல்லா இருக்கும்! பெரிய இவங்க... கற்பு இருக்கா இல்லையாமா? கால் காசு பெறாத விஷயம்" - நிலைமையை மட்டுப்படுத்த அவன் பேசியது வசுமதிக்கு இன்னும் வெறுப்பூட்டியது. பிரபாவுக்கு அவங்க அம்மாவைச் சொன்னவுடனே எப்படிக் கோபம் வருது பார்த்தியா? ஏன் அவன் சொன்ன அந்த "கேட்டகரி"யில் அவங்க அம்மா, தங்கச்சி மட்டும் இல்லையாமா? அத்தனை ஏன்? எத்தனை நாள் உன்கூட நேரம், காலம் பார்க்காம ஊர் சுத்தியிருக்கேன்? கேவலம் ஒரு லவ் லட்டர் கூட நீ கொடுக்கற மாதிரி வைச்சுக்கலியே!" தணிந்து சமநிலைக்கு வந்திருந்த பிரபாகர் இப்போது வசுமதியை உசுப்பிவிட ஆசைப்பட்டான். "நீ கொஞ்சம் அழகா இருந்திருந்தா, கொடுத்திருப்பேனோ என்னவோ" என்றான் சாவதானமாக. பெண்களின் அடுத்த பலவீனம்! வசுமதியின் அழகு அங்கு பிரசித்தம்! இருந்தும் பிரபாகரின் வார்த்தைகளை அவளால் தாங்க முடியவில்லை. சாப்பிட்டுக் கொண்டிருந்ததை அப்படியே ஜன்னல் வழியாக வெளியே கவிழ்த்தாள். கை கழுவி, பாத்திரங்களை சப்தத்துடன் அடுக்கினாள். "ஆமாம்... அழகா இல்லாமதான் வாரத்துக்கு நாலு லவ் லெட்டர் வருது" நாற்காலியைப் பின்னுக்குத் தள்ளி, சந்தர் கூப்பிடக்கூப்பிட கேட்காமல் செருப்புத் தேய வெளியே நடந்து போனாள். மூன்றரை மணிக்கு மீண்டும் பிரபாகர் வசுமதியைக் கூப்பிட்டு தான் கிளம்புவதாகச் சொன்ன போதும் அவள் கோபம் தணிந்திருக்க வில்லை. "எங்கேயோ போய்த் தொலை, ஏன் என்கிட்ட சொல்றே?" என்று சீறினாள். லேசான மனப்பாரத்துடன் கிளம்பி, திருப்தியில்லாத மனத்துடனே ஊட்டிக்குப் புறப்பட்டுப் போனான். மறுநாள் பெரியப்பா மகன் கோபால் கல்யாணத்திலும் உற்சாகமில்லாமலே இருந்தான். நண்பர்கள் "என்னப்பா அண்ணன் கல்யாணம் முடிஞ்சது, அடுத்தது நம்மளதுதானே? என்று கிண்டலடித்த போது கூட ஒப்புக்காக சிரித்து வைத்தான். மாலையில் மணமக்களுடனேயே கிளம்பலாம் என்றிருந்த போது, சின்ன மாமா வந்து கார் சாவியை அவன் கையில் கொடுத்தார். பிரபு.... லலிதாவோட சிநேகிதிக்கு கோயமுத்தூர்ல நாளைக்குக் கல்யாணமாமா. இன்னிக்கே அங்கே இருக்கணும்ங்கறா. காலையில் முகூர்த்தம் முடிஞ்சதில் இருந்து போகலாம் போகலாம்னு நச்சிகிட்டு இருக்கா. என்னால உடனே கிளம்ப முடியாது. பொண்ணு, மாப்பிள்ளையை சாயந்திரம் கோயிலுக்குக் கூட்டிக்கிட்டுப் போயிட்டு வந்துட்டுதான் கிளம்ப முடியும். தலைக்கு மேலே வேலை கிடக்கு. காரை கொடுக்கச் சொல்லி பிடிவாதம் பிடிக்கறா. அவ டிரைவிங் இந்த ரூட்டுக்கு ஒத்துவராது. கொஞ்சம் முன்னாடியே கிளம்பி, நீயே அவளைக் கொண்டு போய் விட்டுடு" என்ற போது திடும் என்று மனதில் உற்சாகம் பொங்கியது. காரணம் லலிதா இன்னும் நான்கு மாதங்களில் அவனுக்கு மனைவியாகப் போகிறவள். சொந்த மாமா பெண் என்பதால் லலிதா அவனுக்குப் புதியவளல்ல. இருந்தாலும் கல்யாணத் தேதி நிச்சயிக்கப்பட்ட பின்பு எல்லாமே வித்தியாசமாகத் தோன்றியது. லலிதாவுடன் மாலைநேர மலைவழிப் பயணம் என்பது சோர்ந்திருந்த பிரபாகருக்கு சந்தோஷமளித்தது. லலிதா தயாராகக் கையில் பெட்டியுடன் வந்து நின்றாள். "கிளம்பலாம் பிரபா. இப்பவே கிளம்பினாதான் போய்ச்சேர சரியாயிருக்கும். லதா தெரியுமில்லே? உயரமா, சுருட்டை முடியா... பீளமேட்டில வீடு.... நீங்ககூட ஒருதரம் என்னை அவங்க வீட்டிலே கொண்டுபோய் விட்டீங்களே எக்சாமுக்குப் படிக்க ஞாபகமிருக்கா?" மாமா குறுக்கிட்டு, "உடனே கிளம்பணுமா? மத்தியானம் விருந்து சாப்பிடாமக் கிளம்பினா நல்லாயிருக்காது. ஏற்கெனவே கோபால் நீ கோயிலுக்குக்கூட வராம கிளம்பறேன்னதும் முகத்தைத் தூக்கி வைச்சுக்கிட்டு இருக்கான். இப்பவே பிரபுவும் கிளம்பினா ரொம்ப வருத்தப்படுவான். சாப்பிட்டுட்டு ஒரு மூணு மணிக்குக் கிளம்பினீங்கன்னா ஆறு, ஆறரைக்கெல்லாம் போய்ச் சேர்ந்திடலாம். நீயும் வீட்டுக்குப் போய் குளிச்சுக் கிளம்பறதுக்கு சரியாயிருக்கும் என்றதும் லலிதா முகம் வாடினாள். மாமா அந்தப் பக்கம் நகர்ந்ததும், "லதா எனக்கு ரொம்ப க்ளோஸ் ஃபிரண்டு தெரியுமில்லை? சீக்கிரமா போய் அவகூட இருக்கலாம்னா விட மாட்டேங்கறாங்க என்ன பண்ணுவீங்களோ தெரியாது. கோபால் கிட்ட நான் ஏற்கெனவே சொல்லிட்டேன். என்னைக் கொண்டுபோய் அங்கே சேர்க்க வேண்டியது உங்க பொறுப்பு" என்றாள். சாப்பிட்டு விட்டு கோபாலிடம் சொல்லிக் கொள்ளப் போனபோது, அவன், "பிரபு, நல்லவேளை வந்தே! இவரு மிஸ்டர் வில்லியம் கிளன்டேல், ஆபிஸ் விஷயமா பெர்லின்லேயிருந்து வந்தார். நான்தான் கல்யாணத்துக்குக் கூட்டிகிட்டு வந்தேன். ஊட்டியிலே ரெண்டுநாள் தங்கியிருக்கப் பிரியப்படறார். நீ அவரைக் கூட்டிகிட்டுப் போய் நல்ல ஹோட்டலாப் பார்த்து அரேன்ஜ் பண்ணிட்டு வந்துருடா" என்றான், ஒரு உயரமான வெளி நாட்டவரை அறிமுகப்படுத்தி. பெரியப்பா மகன்தான் கோபால் என்றாலும் சொந்த சகோதரன் போல. மறுக்க முடியுமா? லேசாகத் தயக்கம் காட்டிய போது, அவனே "லலிதா சொன்னா. அஞ்சு மணிக்கு இங்கேயிருந்து கிளம்பினாக்கூட எட்டு மணிக்கெல்லாம் போய்ச் சேர்ந்திடலாம் என்றான் சமாதானமாக. எல்லாம் முடிந்து ஐந்தரை மணிக்குக் கிளம்பிய போது லலிதா உம்மென்றிருந்தாள். முகத்திலேயே கோபம் தெரிந்தது. சமாதானப்படுத்த முயன்றான். "சொல்லாம கொள்ளாம நான் பாட்டுக்கு வண்டியை எடுத்துகிட்டு கிளம்பியிருக்கணும். அப்ப எல்லாம் சரியா இருந்திருக்கும்" என்றாள். அப்புறம் பேசாமலேயே வந்தாள். பிரபாகர் ஹேர்பின் வளைவுகளில் அனாயசமாகத் திருப்பிய போது மட்டும், "வேகம் வேண்டாம் பிரபா, மெதுவாகவே போங்க" என்றாள். பிரபாகர், உன்னைக் கொண்டுபோய் ராத்திரிக்குள்ள கல்யாண வீட்டில் சேர்க்க வேண்டியது என் பொறுப்பு. கவலைப்படாம இப்ப ஏதாவது பேசு பார்ப்போம்" என்றதற்கு, கவலைப்படாம எப்படி இருக்கறது? மழை வர்ற மாதிரி இருக்கு போய்ச் சேருவோமான்னு தெரியலை. இதுக்குத்தான் முன்னாடியே கிளம்பலாம்னு அடிச்சுகிட்டேன் என்றாள். சொன்னது போலவே மழை பிடித்துக் கொண்டது. பரலியாற்றில் மழை வலுத்து, மேலே செல்ல முடியாமல் காரை நிறுத்தி ஒரு கடையில் டீ குடித்து மழை கொஞ்சம் மட்டுப்பட்டதும் மீண்டும் இறங்கி, மேட்டுப் பாளையத்துக்கு சற்று முன்பு வந்த போது, கார் இரண்டு மூன்று சிலுப்பல்களோடு நின்று போனது. மழையில் நனைந்து கொண்டே, பானெட்டைத் திறந்து ஆராய்ந்து பார்த்தான், பிரயோசனமில்லை. பாட்டரி கனேக்ஷன் அவுட்! சோல்டர் செய்தாக வேண்டும். இருட்டில் கடந்து போன ஒன்றிரண்டு வாகனங்களை நிறத்த முயன்று பயனில்லாமல் போன போது பிரபாகர் நிஜமாகவே கவலைப்பட ஆரம்பித்தான். லலிதாவைத் தனியாக பஸ்சில் கோவைக்கு அந்த நேரத்தில் அனுப்ப முடியாது. காரை அத்துவானத்தில் விட்டுவிட்டு தானும் அவளோடு கிளம்பிப் பஸ்சில் போக முடியாது என்ன செய்வது? "லலிதா...." மெல்ல அவள் தோளைத் தொட்டு "சாரி" என்றான். "நீங்க என்ன பண்ணுவீங்க?" என்றவள், அடுத்த நிமிடம் விசும்பி அழ ஆரம்பித்தாள். ஏமாற்றத்தில் அழுகிறாள் என்பது புரிந்தாலும், ஒன்றும் செய்ய முடியாத இக்கட்டில் கையைப் பிசைந்து, மீண்டும் சாலையோரம் நின்று கடந்து போகும் வாகனங்களை நிறுத்த முயற்சித்தான். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. இருட்டில், மழைநேரத்தில், மனித நடமாட்டம் இல்லாத இடத்தில் நின்று கொண்டு ஒருவன் கையசைத்தால் யாராக இருந்தாலும் லிஃப்ட் கொடுக்க யோசிக்கத்தான் செய்வார்கள். கொஞ்ச நேர முயற்சிக்குப் பின்பு கடந்து போன ஒரு மோட்டார் பைக் வட்டமடித்துத் திரும்பி அருகில் வந்த போது, ஆச்சரியத்தில் பிரமித்துப் போனான். வந்தது சுப்ரமணியன். கல்லூரித் தோழன். மேல் படிப்பு முடித்து வெளிநாட்டில் இருக்கிறான் என்று கேள்விப்பட்டான். இப்போது... இங்கே.... "டிரெயினிங் முடிஞ்சு, இப்ப இங்கே புது யூனிட்ல இருக்கேன். யூனிட்ல இருந்து வீட்டுக்கு ஃபோன் வந்தது. ஒரு மெஷின் ப்ரேக் டவுனாயிடுச்சு. அவசர வேலை. அதுதான் ராத்திரியில கிளம்பிட்டேன். நாளைக்கு டெல்லியில இருந்து யூனிட் விசிட் வரப் போறாங்க" என்று விவரித்தவன், "பிரபு, உன்னைப் பார்ப்பேன்னு நினைக்கவேயில்லடா.. ஹெள நைஸ்" என்றான். பிரபாகர் நிலைமையைச் சொன்னான். பலவித யோசனைகளுக்குப் பிறகு,, "சரி, இருக்கறதிலயே பெஸ்ட் ஐடியா இதுதான். நான் பைக்ல போய் மேட்டுப்பாளையத்திலிருந்து ஆட்டோ கூட்டி கிட்டு வர்றேன். நீயும் அவங்களும் என் வீட்டுக்குப் போய் ஏதாவது சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடுங்க. நான் யூனிட் போய் ஆள் அனுப்பி, வொர்க்ஷாப்பில இருந்து மெக்கானிக் கூட்டிக்கிட்டு வர ஏற்பாடு பண்றேன். அவங்க காரை ரெடி பண்ணி வீட்டுக்கு எடுத்துட்டு வரட்டும். உடனே நீங்க கிளம்பலாம். காலை கிளம்பறதானாலும் சரி..." அலுவலகத் தொலைபேசி எண், வீட்டுச் சாவி, அட்ரஸ் கொடுத்தவன், காருக்குள் குனிந்து, "மேடம், கவலைப்படாம போங்க. சீக்கிரமா கிளம்பிடலாம்" என்றான் லலிதாவிடம். லலிதா புன்னகைத்து நன்றி தெரிவித்தாள். ஆட்டோவில் சுப்ரமணியம் வீடு வந்து சேர்ந்து கதவைத் திறந்த போது வியந்தார்கள். அழகான, கச்சிதமான வீடு! ஒரு முன்பக்க அறை, ஒரு ஹால், இரண்டு படுக்கையறைகளுடன், சின்ன சமையலறை... எல்லாமே சுத்தமாக வைக்கப்பட்டிருந்தன. பிரபாகர் இப்போது முற்றிலும் வேறு மனநிலையிலிருந்தான். திருமண வீட்டுக் களைப்பு, கார் பிரயாணம், மழை, தாமதம் எல்லாம் முற்றிலும் மறந்து போய் விட்டது. "இந்தாங்க, முதல்ல தலையைத் துவட்டுங்க" என்ற லலிதா கொடியில் இருந்த டவலை எடுத்து அவனிடத்தில் நீட்டினாள். அவளையே பார்த்தான் கொஞ்ச நேரம். பிறகு "நமக்கு கல்யாணம் முடிஞ்சு, தனியா வீடு பார்த்து வந்த மாதிரி இருக்கு, இல்லை?" என்றான். "இல்லை", "என்ன இன்னும் கோபமா?", "எப்படியும் லேட்டாயிடுச்சு. இனிக் கோபப்பட்டு என்ன பண்றது?" தலையைத் துவட்டிவிட்டு டவலை அவளிடத்தில் கொடுத்தவன், வாங்க முயன்ற அவள் விரல்களைப் பற்றினான். அருகே இழுத்தான். "ப்ச், என்ன பிரபா இது, விடுங்க...." என்றவள் தன்னை விடுவித்துக் கொண்டாள். கொடியில் டவலை உலர்த்தியவளை நெருங்கி, மீண்டும் கைகளில் சேர்த்துக் கொண்டான். "எனக்குப் பசிக்குது, விடுங்க என்னை. எதாவது சாப்பிட இருக்கான்னு பார்க்கறேன்" - யதார்த்தமாய்ப் பேசி, மீண்டும் விடுதலை பெற்று சமையலறைக்குள் புகுந்தாள். ரொட்டித் துண்டுகள், ஜாம், சூடாக்கப்பட்ட பாலுடன் வந்தவள் பிரபாகருக்குத் தந்து தானும் உண்ணத் தொடங்கினாள். சாப்பாடு முடித்து அவளையே பார்த்துக் கொண்டிருந்த பிரபாகர், "லலிதா, நீ ரொம்ப அழகாயிருக்கே" என்றான் ஆங்கிலத்தில். "தாங்க்யூ", "கண்களைக் கட்டிப் போட்டாள் - அப்படின்னு கதைகள்ல படிச்சிருக்கேன். இப்பதான் அது என்னண்னு புரியுது.", "அப்படியா?", "சரி....." சாப்பிட்டுவிட்டு காலி தம்ளர்களுடன் சமையலறையை நோக்கி நகர்ந்தவள் மீண்டும் சிறைப்பட்டாள். கன்னம், கண்கள், கூந்தல் என்று ஆராயப்பட்டாள். "இன்னிக்கு எனக்கு நீ ரொம்பப் புதுசா இருக்கே" என்றான் ரொம்பக் கிசுகிசுப்பாக அவள்காதருகே.... "எனக்கு நீங்க பழசாத்தான் இருக்கீங்க. நீங்க பண்றதுதான் ரொம்பப் புதுசா இருக்கு" என்றவள், தன் இடையைச் சுற்றியிருந்த அவன் கைவிரல்களைப் பிரித்துத் தூர விலக்கினாள். தோள்களைக் குலுக்கி அவன் வலது கரத்தினின்றும் விடுபட்டாள். ஸ்திரமாய் அவனை விட்டு நகர்ந்தாள். "ஏன் ஓடறே? என்னைப் பிடிக்கலையா?" கேள்வி அவனுக்கே அபத்தமாகப் பட்டது. உள்ளே சென்று தம்ளர்களைக் கழுவிய பிறகு, இடது பக்கப் படுக்கையறைக்குள் புகுந்து, பிரபாகர் உணருமுன் கதவைத் தாளிட்டுக் கொண்டாள். இரண்டு, மூன்று முறை கதவைத் தட்டியும் பிரயோசனமில்லை. அந்தக் கதவுகள் திறக்கப்படவில்லை. கார் சரி செய்யப்பட்டு வந்து, தொலைபேசியில் சுப்ரமணியனை அழைத்து பல முறை நன்றி தெரிவித்து, வீட்டைப் பூட்டி, சாவியை அவன் யூனிட் ஆளிடம் கொடுத்தனுப்பி விட்டு, வண்டியைக் கிளப்பி லலிதாவைக் கோவையில் கல்யாண வீட்டில் விடும் போது மணி இரவு பன்னிரண்டரை. "தாங்க்ஸ் பிரபா... குட் நைட்.... நாளைக்கு வீட்டில இருக்க மாட்டேன். நாளன்னிக்கு சாயந்திரம் வீட்டுக்கு வாங்க. முடியலேன்னா ஃபோன் பண்ணுங்க," இயல்பாகப் பேசியவள், அவன் உள்ளங்கையை மெத்தென்று அழுத்தி விடைபெற்றாள். மறுநாள் பதினொன்றரை மணிக்கு அலுவலகம் திரும்பிய பிரபாகர், முதல் வேலையாய் வசுமதியை இன்டர்காமில் அழைத்தான். "ஹாய்" பிரபா, எப்ப வந்தே? நீ இல்லாம நேத்திக்கு ஒரே போர்" - உற்சாகத்தில் பொங்கினாள். அதுதான் வசு, குளிர்ச்சியாக இருக்கிறாள். "உடனே கான்ட்டீனுக்கு வா, உன்கிட்ட பேசணும்." இப்ப எம்.டி. கூப்பிடுவாரு. இன்னும் பத்து நிமிஷத்துல வர்றேன், சரியா?" ஆவி பொங்கிய காபியை டபராவில் ஊற்றி ஆற்றிய வசுமதி, ஒவ்வொரு வாயாக ரசித்துக் குடித்தவாறே கேள்விகளை அடுக்கினாள். "சொல்லு, கல்யாணம்லாம் எப்படி நடந்தது? பொண்ணு எப்படி? எத்தனை மணிக்குத் திரும்பி வந்தே?" பிரபாகர் பதில் பேசாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். "ஹேய், என்ன இது? ஒண்ணும் பேச மாட்டேங்கறே? இப்ப எதுக்கு இவ்வளவு அவசரமா கூப்பிட்டே? எங்கயாவது அடி, கடி வாங்கினியா?" என்றாள். "அதெல்லாம் ஒண்ணுமில்லை. உனக்கச் சேர வேண்டிய நூறு ரூபாயை உடனே கொடுத்தாதான் மனசு ஆறும் போலத் தோணிச்சு. அதான் கூப்பிட்டேன்.", "ஹை, நூறு ரூபாயா? கொடு...கொடு... ஆமா எந்த பெட்டில தோத்தே? எனக்கே தெரியாம எப்ப தோத்தே? சரி எதுவா இருந்தா என்ன? முதல்ல பணத்தைக் கொடுத்திட்டு அப்புறம் பேசு... தெரியும் எனக்கு. வசுமதிக்கு இன்னிக்குப் பண வரவுன்னு" - மூச்சு விடாமல் பேசியவள் கையை நீட்டினாள். நீட்டப்பட்ட கையில் ஐம்பது ரூபாய்த்தாளை வைத்தான் பிரபாகர். "ஏய், என்ன இது? எதுல தோத்தேன்னும் சொல்ல மாட்டேங்கறே! இப்ப என்னடான்னா ஐம்பது ரூபாதான் தர்றே... மிச்ச ஐம்பது ரூபாயை யார்கிட்டே இருந்து கலெக்ட் பண்றதாமா? - சிணுங்கினாள். "பெர்னாட்ஷா கிட்டே இருந்து" - பிரபாகரின் பதிலில் லேசான பெருமிதம் இருந்தது.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: அன்று காலை, அக்பரைப் பார்த்தஉடனேயே அவர் அன்று என்ன செய்ய நினைக்கிறார் என்று பீர்பலுக்குத் தெரிந்து விட்டது. குதிரைச் சவாரிகேற்ற உடையை அவர் அணிந்திருந்தார். வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டிருந்த ஆயுதங்களைக் கவனித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் வேறு எங்கும் பார்க்காமல் ஆயுதங்களின் மீதே மிகவும் கவனமாக இருந்தார். அக்பர் அன்று வேட்டையாடத்திட்டமிட்டிருக்கிறார் என்று பீர்பல் புரிந்து கொண்டார். வேட்டையாடுவது அக்பருக்கு மிகவும் பிடித்தப் பொழுதுப் போக்கு! ஆனால் அவர் வேட்டைஆடுவது பீர்பலுக்குப் பிடிக்கவில்லை. அதை எப்படித் தடை செய்வது என்பதைப் பற்றியே அவர் சிந்திப்பார். சற்று நேரங்கழித்துத் தன் கவனத்தை ஆயுதங்களிலிருந்து விடுத்து, பீர்பலின் மீது செலுத்திய அக்பர் “நான் இன்று என்ன செய்யப் போகிறேன் தெரியுமா?” என்று பீர்பலைப் பார்த்துக் கேட்டதும், “மற்றவர்களின் மனத்திலுள்ளதை அறிந்து கொள்ளும் திறமை எனக்குக் கிடையாது” என்றார் பீர்பல். “பொய் சொல்லாதே, பீர்பல்! நான் என்ன செய்யப் போகிறேன் என்று உனக்கு நன்றாகத் தெரியும். வேண்டுமென்றே தெரியாதது போல் நடிக்கிறாய். மிதமான குளிர்வீதம் இந்தக் காலைப் பொழுதில் வேட்டைஆடச் சென்றால் மிகவும் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து! உன் கருத்து என்னவோ?” என்றார். “தங்களின் கருத்தே என்னுடைய கருத்தும்!” என்றார் பீர்பல். “அப்படியானால், நீயும் என்னுடன் வேட்டையாட வர வேண்டும்!” என்றார் அக்பர். “தங்கள் கட்டளைப் படி நடக்க சித்தமாக இருக்கிறேன்” என்று பணிவுடன் பீர்பல் பதிலளித்தார். “பீர்பல்! நீ உடனிருந்தால் களைப்பே தெரிவதில்லை. நாவில் உனக்கு இத்தனை வலிமையைக் கொடுத்த இறைவன், உடலிலும் கொடுத்து இருக்கிறாரா என்பதையும் அறிய ஆசைப்படுகிறேன்” என்றார். “ஆகட்டும் பிரபு!” என்றார் பீர்பல். சற்று நேரத்திற்குப்பின், அக்பர் ஒரு பெரிய படை வீரர்களின் அணியுடன் காட்டை நோக்கிப் புறப்பட்டார். பீர்பலும் அக்பருடன் சென்றார். காட்டினுள் நுழைந்தபிறகு, அக்பரின் வீரர்கள் தாரை, தப்பட்டை ஆகியவற்றை உரக்க ஒலித்துக் காடே அதிரச் செய்தனர். அந்த சத்தத்தைக் கேட்டு காட்டு மிருகங்கள் மிரண்டு அங்குமிங்கும் சிதறி ஓட, அக்பரும், மற்றவர்களும் அவற்றைத் துரத்திச் சென்று, கொன்று குவித்தனர். திடீரென ஒரு புலி புதரிலிருந்து சீறிப் பாய்ந்து அவர்களை நோக்கி வந்தது. தாரை, தப்பட்டைகளின் ஒலியினால் எரிச்சல்அடைந்த புலி அவர்கள் மீது பாய முனைந்த போது, அக்பர் தன் கையில் இருந்த ஈட்டியை அதன்மீது எறிய, பயங்கரமாக உறுமிக் கொண்டே புலி மண்ணில் சாய்ந்தது. புலி இறந்து விட்டதால் அக்பர் உற்சாகமுற்றுக் கையை உயர்த்திக் கூச்சலிட, சுற்றியிருந்த வீரர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். மாலைக்குள் அக்பர் மற்றொரு புலியையும் வீரத்துடன் வேட்டையாடிக் கொன்றார். பிறகு அனைவரும் சென்று ஓய்வு எடுக்க, அக்பர் தனியாக அமர்ந்து பீர்பலுடன் உரையாடிக் கொண்டிருந்தார். மாலை மங்கிய நேரம்! பகல் முழுவதும் வானில் பறந்து திரிந்து கொண்டிருந்த பறவைகள் தங்கள் கூடுகளுக்குத் திரும்பிக் கொண்டு இருந்தன. அவற்றின் இனிமையான குரல்களை இருவரும் கேட்டு ரசித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் அமர்ந்துஇருந்த இடத்திற்கு அருகில் இருந்த ஒரு மரத்தில் இரு ஆந்தைகள் பறந்து வந்து உட்கார்ந்து ஒலியெழுப்பத் தொடங்கின. அவற்றின் ஒலியை வெகு நேரம் உன்னிப்பாகக் கவனித்த அக்பர், “இந்த ஆந்தைகளின் மொழி நமக்குப் புரிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!” என்றார் பீர்பல். “பிரபு! அவற்றின் மொழி எனக்குத் தெரியும்!” என்றார் பீர்பல். “அப்படியா? பிறகு ஏன் சும்மாயிருக்கிறாய்? அவை என்ன பேசுகின்றன என்று உடனே சொல்!” என்றார் அக்பர். “பிரபு! அவையிரண்டில் ஒன்று மணப்பெண்ணின் தந்தை! மற்றொன்று பிள்ளையின் தந்தை! அவை வரதட்சிணையைப் பற்றி விவாதம் செய்து கொண்டு இருக்கின்றன. பிள்ளையின் தந்தை மிருகங்களே இல்லாத நாற்பது காடுகள் சீர்வரிசையாகத் தர வேண்டும் எனக் கேட்கிறது. பெண்ணின் தந்தை தன்னால் இருபது காடுகள் மட்டுமே தரமுடியும் என்று சொல்கிறது,” என்றார் பீர்பல். தொடர்ந்து, “பெண்ணின் தந்தையான அந்த ஆந்தை மேலும் தனக்கு ஆறு வாரகாலம் அவகாசம் தந்தால், மீதி இருபது காடுகளையும் ஏற்பாடு செய்ய முடியும் என்கிறது,” என்றார். “இது என்ன உளறல்? மிருகங்களேஇல்லாத காடுகள் அதற்கு எங்கிருந்து கிடைக்கும்? இருபது காடுகள் தருவதாக அது எப்படி ஒப்புக் கொண்டது?” என்றார் அக்பர். “அது உளறவில்லை! சரியாகத்தான் சொல்கிறது. நீங்கள் இருக்கும் தைரியத்தில்தான் அது அப்படிப் பேசுகிறது!” என்றார் பீர்பல். “சரிதான்! ஆந்தைதான் உளறுகிறது என்று நினைத்தால் நீயும் உளறுகிறாயே!” என்றார் அக்பர். “நான் உளறவில்லை, பிரபு! ஆந்தையும் உளறவில்லை! நீங்கள் ஒருமுறை வேட்டையாட வந்தாலே, காட்டில்உள்ள மிருகங்கள் அனைத்தும் கொல்லப்பட்டு விடுகிறது. அதுபோல் இதுவரை நீங்கள் இருபது காடுகளை மிருகங்களேயில்லாமல் செய்து விட்டீர்கள். இன்னும் அடுத்த ஆறு வாரத்தில் நீங்கள் இருபது முறை வேட்டையாடினால், மீதியுள்ள இருபது காடுகளும் காலியாகிவிடும்! அந்த தைரியத்தில்தான் அந்த ஆந்தை அவ்வாறு கூறுகிறது!” என்றார் பீர்பல். பளீரென முகத்தில் அறைந்ததுபோல் இருந்த பீர்பலின் விளக்கம் அக்பரை மௌனமாக்கி விட்டது. தன் செய்கைக்கு முதன்முதலாக வெட்கித் தலை குனிந்த அக்பர், “பீர்பல்! என் கண்களை நீ இன்று திறந்து விட்டாய்! என்னுடைய மகிழ்ச்சிக்காக காட்டில் வாழும் மிருகங்களைக் கொன்று குவிப்பது ஈனமான செயல் என்று புரிந்து கொண்டேன். இன்றுமுதல் வேட்டையாடுவதை நிறுத்தி விடப் போகிறேன்” என்றார் அக்பர். பீர்பலுக்குத் தன் செவிகளையே நம்ப முடியவில்லை. இத்தனை எளிதாக அக்பரின் மனம் மாறும் என்று அவர் நினைக்கவில்லை. “பீர்பல்! என்ன அப்படிப் பார்க்கிறாய்? நான் இப்போது சொன்னதைக் கேட்டு அந்த ஆந்தை என்ன சொல்கிறது என்று எனக்குச் சொல்!” என்றார் அக்பர். “சக்கரவர்த்தியின் மனம் மாறிவிட்டதால், இனி என்னால் மிருகங்கள்அற்றக் காடுகளை வரதட்சிணையாக அளிக்க முடியாது என்று அது கூறுகிறது!” என்று பீர்பல் கூறவும், அக்பர் பலமாகச் சிரித்தார்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'ஆந்தைகளின் மொழி' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: புத்தருக்கு 600 ஆண்டுகளுக்குப் பிறகு போதி தர்மர் சீனா போய் சேர்ந்த பொழுது அங்கு ஏற்கனவே 30,000 புத்தமத கோவில்களும் மடாலயங்களும் மேலும் 2,00,000 புத்த பிட்சுக்களும் சீனாவிலிருந்தனர். இரண்டு லட்சம் புத்த பிட்சுக்கள் எனபது சிறிய எண்ணிக்கையல்ல. அது சீனாவின் மொத்த மக்கள் தொகையில் 5 சதவிகிதம். பிரயக்தாரா, போதிதர்மருடைய குரு, அவரை சீனாவுக்கு அனுப்பினாள், ஏனெனில் அவருக்கு முன்பு சீனாவுக்கு சென்ற மக்கள் ஞானமடைந்தவர்களாக இல்லாத போதிலும் ஒரு சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தனர். அவர்கள் சிறந்த பண்டிதர்கள், மிகவும் கட்டுக்கோப்பான மக்கள், மிகவும் அன்பானவர்கள், அமைதியானவர்கள், கருணை கொண்டவர்கள் ஆனால் யாரும் ஞானமடைந்தவர்களல்ல. மேலும் இப்போது சீனாவுக்கு இன்னொரு கௌளதமபுத்தர் தேவைப்பட்டார், நிலம் தயாராயிருந்தது. சீனாவை சென்றடைந்த முதல் ஞானமடைந்த மனிதர் போதிதர்மர்தான். நான் தெளிவாக்க விரும்பும் விஷயம் என்னவென்றால் கௌளதமபுத்தர் அவருடைய சங்கத்தில் பெண்களுக்கு தீட்சையளிக்க அச்சப்பட்டார். போதிதர்மர் கௌளதமபுத்தரின் பாதையில் வந்த போதிலும் ஒரு பெண்ணால் தீட்சை பெறும் அளவுக்கு தைரியமுடையவராயிருந்தார். அங்கு மற்ற ஞானமடைந்த மக்கள் இருந்தனர். ஆனால் அவர் ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்தார். இந்த காரணம் என்னவென்றால் ஒரு பெண்ணாலும் ஞானமடைய முடியும், அது மட்டுமல்ல, அவளுடைய சீடர்களும் ஞானமடைய முடியும் என்பதை காட்டுவதற்காகவே. எல்லா புத்தமத ஞானமடைந்த மக்களுக்கிடையிலும் போதிதர்மர் பெயர் தனித்து நிற்கிறது. அது கௌளதமபுத்தருக்கு அடுத்ததாக இருக்கிறது. இந்த மனிதரைப்பற்றி பல செவிவழி செய்திகள் உள்ளன. அவை அனைத்திலும் ஏதோ ஒரு முக்கியத்துவம் உள்ளது. முதல் செவிவழி செய்தி : அவர் சீனாவை அடைந்தபோது – சீனாவை சென்றடைய அவருக்கு மூன்றாண்டுகள் ஆயின. – அவரை வரவேற்க சீனப்பேரரசர் வூ வந்திருந்தார். போதிதர்மருடைய புகழ் அவருக்கு முன்பாக அங்கு சென்றடைந்திருந்தது. பேரரசர் கௌதமபுத்தருடைய தத்துவத்திற்கு சிறந்த சேவை செய்திருந்தார். ஆயிரக்கணக்கான பண்டிதர்கள், புத்தமத புத்தகங்களை பாலிமொழியிலிருந்து சீனமொழிக்கு மொழிபெயர்த்துக் கொண்டிருந்தனர், மேலும் பேரரசர் மொழிபெயர்ப்புகளுக்கு ஒரு சிறந்த காவலராக விளங்கினார். அவர் ஆயிரக்கணக்கான கோவில்கள் மற்றும் மடாலயங்களை கட்டியிருந்தார். மேலும் அவர் ஆயிரக்கணக்கான பிட்சுக்களுக்கு உணவளித்துக் கொண்டிருந்தார். அவர் அவருடைய முழு பொக்கிஷத்தையும் கௌதமபுத்தரின் சேவைக்காக செலவழித்துக் கொண்டிருந்தார். அதனால் போதிதர்மருக்கு முன்பு அங்கு சென்ற புத்தபிட்சுக்கள் அனைவரும் பேரரசரிடம் அவர் பெரிய புண்ணியத்தை சம்பாதித்துக் கொண்டிருப்பதாகவும், அவர் சொர்க்கத்தில் ஒரு கடவுளாக அவதரிப்பார் எனவும் சொல்லி வந்திருந்தனர். எனவே அவர் போதிதர்மரிடம் கேட்ட முதல் கேள்வியே, “நான் பல மடாலயங்களை கட்டியுள்ளேன், பல பண்டிதர்களுக்கு உணவளித்து வருகிறேன், புத்த தத்துவங்களை படிப்பதற்காக நான் ஒரு பல்கலைகழகத்தையே நிறுவியுள்ளேன், நான் இந்த முழு பேரரசையும் அதன் பொக்கிஷங்களையும் கௌதமபுத்தரின் சேவைகளுக்காக அர்ப்பணித்துள்ளேன். அதற்குப் பரிசாக எனக்கு என்ன கிடைக்கும்?” என்பதாக இருந்தது. போதிதர்மரைப் பார்த்து அவருக்கு சிறிது அதிர்ச்சியாகவே இருந்தது. மனிதர் இப்படி இருப்பார் என அவர் நினைக்கவேயில்லை. போதிதர்மர் மிகவும் கோபக்காரராக காட்சியளித்தார். அவர் மிகப்பெரிய கண்களை கொண்டிருந்தார். ஆனால் அவர் ஒரு மென்மையான மலர் போன்ற இதயத்தை – ஒரு தாமரை மலரை போன்ற இதயத்தை – கொண்டிருந்தார். ஆனால் அவருடைய முகம் உன்னால் எவ்வளவு அபாயகரமாக கற்பனை செய்ய முடியுமோ அவ்வளவு கடுமையானதாக காட்சியளித்தது. ஒரு கண்ணாடி போட்டிருந்தால் அவர் ஒரு மாபியாகும்பல்காரரைப் போல இருந்திருப்பார். மிகுந்த அச்சத்துடன் பேரரசர் வூ அந்த கேள்வியை கேட்டார். அதற்கு போதிதர்மர், “எதுவுமில்லை, எந்த பரிசுமில்லை அதற்கு பதிலாக நீ ஏழாவது நரகத்தில் விழ தயாராக இரு” என்று கூறினார். பேரரசர், “நான் எந்த தவறும் செய்யவில்லையே? எதற்காக ஏழாவது நரகம்? புத்த பிட்சுக்கள் கூறும் எல்லாவிஷயங்களையும் நான் செய்து வருகிறேனே” என்று கேட்டார். அதற்கு போதிதர்மர், “நீ உன்னுடைய சொந்த குரலை கேட்கத் தொடங்கும்வரை உனக்கு யாரும் உதவ முடியாது. அது புத்த மதத்தை சேர்ந்தவர்களாயினும் சரி, சேராதவர்களாயினும் சரி. மேலும் நீ இன்னும் உனது உள் குரலை கேட்கவில்லை. நீ அதைக் கேட்டிருந்தால் நீ இப்படி முட்டாள்தனமான கேள்வியை கேட்டிருக்க மாட்டாய். கௌதமபுத்தரின் பாதையில் எந்த வெகுமதியும் கிடையாது. ஏனெனில் வெகுமதிக்கான ஆசையே ஒரு பேராசையாக மனதிலிருந்துதான் வருகிறது. கௌதமபுத்தரின் முழு கற்பித்தலும் ஆசையற்ற தன்மையே. மேலும் புண்ணிய செயல்கள் என்று கூறப்படும் கோவில்கள் மற்றும் மடாலயங்கள் கட்டுதல், ஆயிரக்கணக்கான துறவிகளுக்கு உணவிடுதல் போன்ற எல்லா செயல்களும் உள் மனதில் ஒரு ஆசையோடு நீ செய்திருந்தால் நீ நரகத்தை நோக்கிச் செல்லும் உனது பாதையை தயார் படுத்துகிறாய். நீ இந்த செயல்களை உனது ஆனந்தத்தின் விளைவாக, உனது ஆனந்தத்தை முழு பேரரசுடன் பகிர்ந்து கொள்ளும் விதமாக செய்தால், எந்த வெகுமதிக்குரிய ஒரு சிறு ஆசைகூட உனக்கு இல்லாமல் இருந்தால் அந்த செயலே அந்த செயலின் வெகுமதியாகும். இல்லாவிடில் நீ முழுவிஷயத்தையும் தவறவிட்டுவிடுகிறாய். என்றார். பேரரசர் வூ, “என் மனது எண்ணங்களால் நிரம்பி வழிகிறது. நான் எனது மனதை அமைதிபடுத்த முயன்று வருகிறேன், ஆனால் நான் தோற்றுவிடுகிறேன். இந்த எண்ணங்களாலும் அதன் சத்தத்தின் காரணமாகவும் நீங்கள் உள்குரல் என்று கூறும் விஷயத்தை என்னால் கேட்க முடியவில்லை. எனக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாது. “ என்று கூறினார். போதிதர்மர், “அப்படியென்றால் நாளை அதிகாலை 4 மணிக்கு நான் மலையில் தங்கப்போகும் இடத்திற்க்கு எந்த மெய்க்காப்பாளனும் இல்லாமல் தனியாக வா. அங்கு நான் உனது மனதை எப்போதும் அமைதியோடு இருப்பதாக ஆக்கிவிடுகிறேன்“ என்று கூறினார். பேரரசர் இந்த மனிதர் உண்மையிலேயே வரம்புமீறிய மூர்க்கத்தனமானவர் என்று எண்ணினார். அவர் ஏராளமான பிட்சுக்களை சந்தித்திருக்கிறார். அவர்கள் மிகவும் பரிவு காட்டுபவர்கள். ஆனால் இவரோ ஒரு பெரிய தேசத்தின் பேரரசர் என்று கூட கவலைப்படவில்லை. மேலும் அதிகாலை இருட்டில் 4 மணிக்கு அவரிடம் செல்வது என்பது…………… மேலும் இந்த மனிதன் ஆபத்தானவனாக தோன்றுகிறான். போதிதருமர் எப்போதும் தன்னுடன் ஒரு கைத்தடியை வைத்திருப்பார். பேரரசர் முழு இரவும் தூங்கவில்லை. “போவதா? வேண்டாமா? இந்த மனிதன் என்ன வேன்டுமானாலும் செய்யக்கூடும், அவர் நம்பமுடியாத மனிதராக தோன்றுகிறார்” மற்றும் இன்னொரு பக்கம் அவரது இதயத்தின் ஆழத்தில் அவர் போதிதருமருடைய நேர்மையை உணர்ந்தார். அவர் நடிப்பவரல்ல, அவர் நீ ஒரு அரசர், தான் ஒரு புத்தபிட்சு என்பதைப்பற்றி ஒரு துளிகூட கவலைப்படவில்லை. அவர் தான் ஒரு பேரரசர் போலவும் அவருக்கு முன்பு நீ ஒரு பிச்சைக்காரன் என்பது போலவும் நடந்து கொள்கிறார். நான் உனது மனதை எப்போதும் அமைதியாக இருக்கும்படி செய்துவிடுகிறேன் என்று சொன்ன விதமும்…… பேரரசருக்கு புதிராயிருக்கிறது, ஏனெனில் “இந்தியாவிலிருந்து வரும் ஞானவான்களை கேட்டு வருகிறேன். அவர்கள் அனைவரும் எனக்கு யுக்திகளையும் வழிமுறைகளையும் அளித்தனர், அவற்றை நான் பயிற்சி செய்து வருகிறேன், ஆனால் எதுவும் நடைபெறவில்லை. ஆனால் இந்த புதிய மனிதன் கிட்டத்தட்ட ஒரு கிறுக்கனைப்போல, மது அருந்தியவனைப்போல, அவ்வளவு பெரிய கண்களையுடைய, பயத்தை உருவாக்கக்கூடிய ஒரு வித்தியாசமான முகத்தைக் கொண்டவராக இருக்கிறார். ஆனால் அவர் நேர்மையானவராகவும் தோன்றுகிறார். அவர் ஒரு காட்டுத்தனமான மனிதன். ஆனால் இந்த அபாயம் தகுதியுடையதே.! அவர் என்ன செய்யக்கூடும், அதிகபட்சம் அவர் என்னைக் கொல்ல முடியும்” என்று எண்ணினார். முடிவில் அவரால் ஆர்வத்தை அடக்க முடியவில்லை. ஏனெனில் ‘அந்த மனிதன் நான் உனது மனதை எப்போதும் அமைதியாக இருக்கும்படி செய்துவிடுகிறேன்’ என்று வாக்களித்துள்ளார். பேரரசர் வூ அதிகாலை 4 மணிக்கு தனியாக இருளில் அவரது இடத்தைச் சென்றடைந்தார். அந்த கோவில் படிகளில் போதிதர்மர் அவருடைய தடியுடன் நின்று கொண்டிருந்தார், அவர், “இரவு முழுவதும் போவதா வேண்டாமா என்று குழம்பினாலும் நீ வருவாய் என எனக்குத் தெரியும். ஒரு ஏழை பிட்சுவைப் பார்த்து, ஒரு ஏழை பிச்சைக்காரனைப்பார்த்து, இந்த உலகத்தில் ஒரு தடியைத் தவிர ஏதும் இல்லாதவனைப் பார்த்து இவ்வளவு பயப்படும் நீ எப்படிப்பட்ட பேரரசன் ? நான் இந்த தடியை வைத்து உனது மனதை அமைதியாக்கப் போகிறேன். “ என்று கூறினார். பேரரசர், “கடவுளே ஒரு தடியை வைத்து மனதை அமைதிபடுத்துவதை யாராவது எப்போதாவது கேள்விபட்டதுண்டா? அவனை முடித்துவிடலாம், தலையில் ஓங்கி அடிக்கலாம், பிறகு முழு மனிதனும் அமைதியாகிவிடுவான். ஆனால் மனம் அமைதி அடையாதே. ஆனால் இப்போது திரும்பி போவது என்பது முடியாத காரியம்” என எண்ணினார். போதிதர்மர், “இங்கே கோவில் வராண்டாவில் உட்கார், சுற்றிலும் ஒரு மனிதன் கூட இல்லை, கண்களை மூடிக்கொள், உனக்கு முன்னால் நான் எனது தடியுடன் உட்கார்ந்து கொள்கிறேன். மனதை பிடிப்பதே உனது வேலை. வெறுமனே உனது கண்களை மூடிக்கொண்டு உள்ளே சென்று அது எங்கே இருக்கிறதென்று தேடு. நீ அதனை பிடிக்கிற நொடியில் வெறுமனே எனக்கு அது இங்கே இருக்கிறதென்று கூறு, மற்றதை எனது தடி பார்த்துக்கொள்ளும்” என்று கூறினார். உண்மையை, அமைதியை, மௌனத்தை தேடும் தேடுதலையுடையவன் அடையக்கூடிய, அடைந்த அனுபவங்களிலேயே மிகவும் வித்தியாசமான அனுபவம் அது. பேரரசர் வூக்கு இப்போது வேறு வழியில்லை. கண்களை மூடி அங்கே அமர்ந்தார். போதிதர்மர் சொல்வதை செய்யக்கூடியவர் என்பதை பேரரசர் நன்றாக உணர்ந்தார். அவர் தன்னுள்ளே எல்லாபக்கமும் தேடினார், அங்கு மனமில்லை. அந்த தடி அதன் வேலையை செய்துவிட்டது. முதன்முறையாக அவர் அப்படி ஒரு சூழலில் இருந்தார். செய்தாகவேண்டும் …… நீ மனதை ஒருவேளை கண்டுபிடித்தால், இந்த மனிதன் அவருடைய தடியை வைத்து என்ன செய்யப்போகிறார் என்று உனக்குத் தெரியாது. மேலும் அந்த மௌனமான மலைப்பகுதியில், போதிதர்மருடைய இருப்பில்…. அவருக்கென ஒரு சக்தி வட்டமிருந்தது……. பல ஞானமடைந்த மக்கள் இருந்திருக்கிறார்கள், ஆனால் போதிதர்மர் தனியாக எதிலும் ஒட்டாமல் எவரெஸ்ட் சிகரம் போல தனித்து நிற்கிறார். அவருடைய ஒவ்வொரு செயலும் தனித்துவமானது மற்றும் ஆணித்தரமானது. அவருடைய ஒவ்வொரு அசைவும் அவருடைய சொந்த கையெழுத்தைக் கொண்டது, அது கடன் வாங்கப்பட்டதல்ல. பேரரசர் மனதை கடுமையாகத் தேடினார், ஆனால் முதன்முறையாக அவரால் அதை கண்டுபிடிக்க முடியவில்லை. அது ஒரு சிறிய தந்திரம். நீ ஒருபோதும் உன் மனதை தேடாததால் மட்டுமே அது அங்கே இருக்கிறது. நீ ஒருபோதும் அதைப்பற்றிய விழிப்புணர்வோடு இருப்பதில்லை என்பதாலேயே அது அங்கே இருக்கிறது. நீ அதைத் தேடும்போது, நீ அதைப்பற்றிய விழிப்புணர்வோடு இருக்கும்போது விழிப்புணர்வு நிச்சயமாக அதனை முழுமையாக கொன்று விடுகிறது. மணிநேரங்கள் கடந்துவிட்டன. சூரியன் மௌனமாக மலைகளின் மீது, ஒரு குளிர்ந்த தென்றலுடன் உதயமாகிக்கொண்டிருக்கிறான். போதிதர்மரால் பேரரசர் வூ வின் முகத்தில் அப்படி ஒரு அமைதியையும், அப்படியொரு மௌனத்தையும், அப்படியொரு அசைவற்ற தன்மையையும் அவர் ஒரு சிலையைப் போல இருப்பதையும் பார்க்க முடிந்தது. போதிதர்மர் வூ வை உலுக்கி, நிறைய நேரமாகிவிட்டது. நீ மனதை கண்டுபிடித்துவிட்டாயா?” என்று கேட்டார். பேரரசர் வூ, “உங்களது தடியை உபயோகிக்காமலேயே நீங்கள் எனது மனதை முழுமையாக அமைதிபடுத்திவிட்டீர்கள். எனக்கு எந்த மனமுமில்லை, நீங்கள் கூறிய உள் குரலை நான் கேட்டேன். இப்போது நீங்கள் கூறியது சரி என்று நான் உணர்கிறேன். எதையும் செய்யாமலேயே நீங்கள் என்னை நிலை மாற்றமடையச் செய்துவிட்டீர்கள். இப்போது எல்லா செயல்களுக்கும் அதைச் செய்வதே அதன் வெகுமதியாக இருக்க வேண்டும், இல்லாவிடில் அதனை செய்ய வேண்டியதில்லை என்று நான் உணர்ந்து கொண்டேன். உனக்கு வெகுமதியளிக்க அங்கு யார் இருக்கிறார்கள்? இது ஒரு குழந்தைதனமான சிந்தனை, அங்கு தண்டனை கொடுக்க யார் இருக்கிறார்கள்? உன்னுடைய செயலே தண்டனை. உன்னுடைய செயலே வெகுமதி. நீ சென்றடையும் இடத்தை தீர்மானிக்கும் அதிகாரம் உன்னிடமே உள்ளது என்பதை நான் அறிவேன் இப்போது.” என்று கூறினார். போதிதர்மர், “நீ ஒரு அபூர்வமான சீடன். வெறும் ஒரு அமர்தலிலேயே மனதின் எல்லா இருட்டும் மறைந்துவிடும் அளவிற்கு விழிப்புணர்வையும் மிகுந்த ஒளியைக் கொண்டுவரும் துணிச்சலும் உள்ள மனிதனாக இருக்கிறாய். நான் உன்மீது அன்பு செலுத்துகிறேன், நான் உன்னை மதிக்கிறேன், ஆனால் ஒரு பேரரசனாக அல்ல.” என்று கூறினார். வூ அவரை அரண்மனைக்கு வருமாறு வற்புறுத்தினார். போதிதர்மர், “அது என்னுடைய இடமல்ல, நான் காட்டுத்தனமானவன். நான் என்ன செய்வேன் என்று எனக்கேத் தெரியாது என்பதை நீ பார்க்கலாம். நான் நொடிக்கு நொடி இயல்பாக வாழ்கிறேன். நான் மிகவும் கணிக்க இயலாதவன். நான் தேவையில்லாமல் உனக்கும் உனது சபைக்கும் உன்னைச் சேர்ந்தவர்களுக்கும் பிரச்னைகளை உருவாக்கலாம். நான் அரண்மனைகளுக்காக ஆக்கப்பட்டவனல்ல. என்னை என்னுடைய காட்டுத்தனத்தில் வாழவிடு.” என்று கூறினார். இரண்டாவது செவிவழி செய்தி என்னவென்றால் டாய் என்ற பெயர் கொண்ட இந்த மலையில் வசித்த போதிதர்மர்தான் தேநீரை உருவாக்கிய முதல் மனிதர் என்பதாகும். டீ என்னும் பெயர் டாய் என்னும் பெயரிலிருந்து வந்ததாகும். ஏனெனில் அது டாய் என்னும் மலையில் உருவாக்கப்பட்டது. எல்லா மொழியிலும் உள்ள தேநீரை குறிக்கும் சொற்கள் ஒரே மூலத்திலிருந்தே வந்துள்ளன. ஆங்கிலத்தில் அது டீ, ஹிந்தியில் அது சாய், சைனீஸ் வார்த்தை ச்சா என்றும் கூறப்படுகிறது. மராத்தியில் அது ச்சா என்றழைக்கப்படுகிறது. போதிதர்மர் தேநீரை உருவாக்கிய விதம் சரித்திரபூர்வ உண்மையாக இருக்க முடியாது. ஆனால் அது முக்கியத்துவமானது. அவர் கிட்டதட்ட எல்லா நேரங்களிலும் தியானம் செய்து கொண்டிருந்தார். ஆனால் இரவில் சில நேரங்களில் தூங்கத் தொடங்கி விடுவார். எனவே தூங்காமல் இருப்பதற்காக, அவருடைய கண்களுக்கு ஒரு பாடத்தை கற்றுக் கொடுப்பதற்காக அவரது கண் இமைகளின் முடிகள் அனைத்தையும் பிடுங்கி அவர் கோவில் நிலத்தில் எறிந்து விட்டார். கதை என்னவென்றால் இந்த கண் இமைகளிலிருந்துதான் தேநீர் செடி வளர்ந்தது. அவைதான் முதல் தேநீர் செடிகள். அதனால்தான் தேநீரை குடித்தபிறகு உன்னால் தூங்க முடியாது. மேலும் புத்த மதத்தில் தியானத்திற்காக தேநீர் அருந்துவது பழக்கமாகி விட்டது. தேநீர் மிகவும் உதவி புரியக் கூடியது. எனவே முழு புத்த உலகமும் தியானத்தின் ஒரு பகுதியாக தேநீர் அருந்துகிறது. ஏனெனில் அது உன்னை சுறுசுறுப்புடனும் விழிப்புடனும் வைத்திருக்கிறது. இரண்டு லட்சம் புத்த மத பிட்சுக்கள் சீனாவிலிருந்தாலும் கூட போதிதர்மர் தனது சீடர்களாக ஏற்றுக் கொள்ள தகுதியுடையவர்களாக நான்கு பேரை மட்டுமே கண்டு பிடிக்க முடிந்தது. அவர் உண்மையாகவே மிகவும் குறிப்பாக தேர்ந்தெடுத்தார். அவரது முதல் சீடரான ஹூய்கோவை கண்டுபிடிக்க அவருக்கு கிட்டதட்ட ஒன்பது ஆண்டுகள் பிடித்தது. இது ஒரு சரித்திர உண்மை. ஏனெனில் மிகவும் பழமையான குறிப்புகள் உள்ளன. கிட்டதட்ட போதிதர்மருடைய காலத்திய குறிப்புகள் எல்லாவற்றிலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றவை குறிப்பிட படா விட்டாலும் வூ வை அரண்மனைக்கு திருப்பி அனுப்பிய பிறகு அவர் கோவில் சுவற்றைப் பாரத்தபடி அமர்ந்திருந்தார் என்பது குறிப்பிடப்படுள்ளது. அவர் அதனை ஒரு சிறந்த தியானமாக ஆக்கிக் கொண்டார். அவர் வெறுமனே எளிமையாக சுவற்றை பார்த்துக் கொண்டே இருப்பார். அதிகநேரம் நீ சுவற்றை பார்த்துக் கொண்டேயிருந்தால் உன்னால் யோசிக்க முடியாது. மெதுமெதுவாக அந்த சுவற்றைப் போலவே உனது மனதின் திரையும் காலியாகி விடுகிறது. மேலும் அதற்கு இரண்டாவது காரணமும் இருந்தது. என்னுடைய சீடனாக இருக்கும் தகுதியுடைய யாராவது ஒருவர் வரும்வரை நான் யாரையும் பார்க்க மாட்டேன் என அவர் அறிவித்தார். மக்கள் வருவார்கள், அவருக்கு பின் அமர்வார்கள். அது ஒரு வித்தியாசமான சூழ்நிலை. இந்த முறையில் யாரும் பேசியதில்லை. அவர் சுவற்றிடம் பேசுவார். மக்கள் அவருக்கு பின் அமர்ந்திருப்பார்கள். ஆனால் அவர் வருபவர்களை பார்க்க மாட்டார். ஏனெனில் அவர் வருபவர்கள் என்னை அதிகமாக காயப்படுத்துகிறார்கள். அவர்கள் வெறும் சுவறைப் போல இருக்கிறார்கள். யாரும் புரிந்து கொள்வதில்லை. இப்படிப்பட்ட ஒரு அறியாமை நிலையில் மக்களைப் பார்ப்பது ஆழமான வலியை ஏற்படுத்துகிறது. ஆனால் உண்மையான ஒரு சுவறைப் பார்ப்பது கேள்வியேயில்லை. ஒரு சுவர் எப்படியிருந்தாலும் அது சுவரே. அது கேட்க முடியாது. எனவே காயப்பட தேவையில்லை. யாராவதொருவர் அவருடைய செயலின் மூலம் அவர் எனது சீடராக தயாராக இருக்கிறார் என்று நீரூபித்தால் மட்டுமே நான் வருபவர்களைப்பார்த்து திரும்புவேன் என்று கூறினார், ஒன்பது வருடங்கள் கடந்து விட்டன. மக்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எந்த செயல் அவருக்கு திருபதியளிக்கும் என்று அவர்களால் கண்டறிய முடியவில்லை. பிறகு அந்த இளைஞன் ஹூய்கோ வந்தான். அவன் அவனுடைய கைகளில் ஒன்றை வாளால் வெட்டி அந்தக் கையை போதிதர்மர் முன் வீசிவிட்டு, இது ஆரம்பம்தான். நீங்கள் திரும்புங்கள் அல்லது என் தலை உங்கள் முன் உருளும். நான் எனது தலையையும் வெட்டப்போகிறேன் என்றான். போதிதர்மர் திரும்பி, நீ எனக்கு சீடனாக தகுதியுடைய மனிதன். தலையை வெட்ட வேண்டியதில்லை. நாம் அதனை உபயோகப்படுத்த வேண்டும் என்று கூறினார். இந்த மனிதன் ஹூய்கோதான் அவரது முதல் சீடர். முடிவில் போதிதர்மர் சீனாவை விட்டு செல்லும்போது அவர் ஹூய்கோவிற்குப்பிறகு மேலும் மூன்று சீடர்களை சேர்த்திருந்தார். அவர் சீனாவை விட்டு செல்ல முடிவெடுத்த பிறகு தனது நான்கு சீடர்களையும் அழைத்து, எளிமையான வார்த்தைகளில், சிறிய வாக்கியங்களில், தந்தி முறையில் என்னுடைய போதனைகளின் மூலத்தைக் கூறுங்கள். நாளைக்காலையில் நான் இமயமலைக்கு திரும்பிச் செல்ல முடிவெடுத்துள்ளேன். அதனால் உங்கள் நால்வரில் ஒருவரை வாரிசாக தேர்ந்தெடுக்க விரும்புகிறேன். என்றார். முதலாமவன், மனதை தாண்டிச் செல்வது, முற்றிலும் மௌனமாக இருப்பது, அதன்பிறகு அனைத்தும் தானாகவே நடக்கிறது எனக் கூறினான். போதிதர்மர், நீ கூறியது தவறல்ல, ஆனால் நீ என்னை திருப்திபடுத்தவில்லை. உன்னிடம் எனது தோல் உள்ளது என்றார். இரண்டாமவன், நான் இல்லை, பிரபஞ்சம் மட்டுமே உள்ளது, என்பதை அறிந்து கொள்வதே உங்களது அடிப்படையான போதனை என்றான். போதிதர்மர், சிறிது பரவாயில்லை, ஆனால் அது எனது தகுதியளவிற்கில்லை. உன்னிடம் எனது எலும்புகள் உள்ளன. என்றார். மூன்றாவது மனிதன், அதைப்பற்றி ஏதும் சொல்ல முடியாது. எந்த வார்த்தையும் அதை கூறும் சக்தியற்றது என்றான். போதிதர்மர், நன்று, ஆனால் நீ ஏற்கனவே அதைப் பற்றி ஏதோ ஒன்றைக் கூறிவிட்டாய் உனக்கு நீயே முரண்பட்டு விட்டாய் வெறுமனே உட்கார். உன்னிடம் எனது சதை உள்ளது என்றார் நான்காவதாக அவரது முதல் சீடன் ஹூய்கோ அவரது காலில் விழுந்தான். அவனது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. போதிதர்மர், நீ அதை சொல்லிவிட்டாய். நீதான் எனது வாரிசாகப் போகிறாய் என்றார். ஆனால் இரவில் ஏதோ ஒரு சீடன் அவன் வாரிசாக தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதற்காக அவருக்கு விஷமளித்துவிட்டான். எனவே அவர்கள் அவரை புதைத்தனர். ஆனால் வித்தியாசமான மூன்றாவது செவிவழி செய்தி என்னவென்றால் ஒரு அரசாங்க அதிகாரி மூன்று வருடங்களுக்குப் பிறகு சீனாவிற்கு வெளியே இமயமலையை நோக்கி போதிதர்மர் நடந்துபோய்க் கொண்டிருப்பதை பார்த்தார். போதிதர்மருடைய கையில் அவருடைய தடியிருந்தது. மேலும் அவருடைய செருப்பு அந்த தடியிலிருந்து தொங்கிக் கொண்டிருந்தது. மேலும் அவர் வெறும் காலில் நடந்து கொண்டிருந்தார். அந்த அதிகாரிக்கு அவரைத் தெரியும். அந்த அதிகாரி அவரிடம் பலமுறை வந்திருக்கிறார். அவர் ஒருமாதிரி இருந்தாலும்கூட போதிதர்மர் மீது அந்த அதிகாரி அன்பு செலுத்தினார். அதிகாரி அவரிடம் இந்த தடிக்கும் இதில் ஒரு செருப்பு தொங்குவதற்கும் என்ன அர்த்தம் என்று கேட்டார். போதிதர்மர் விரைவில் நீ அறிந்து கொள்வாய். நீ எனது மக்களை சந்தித்தால் வெறுமனே அவர்களிடம் நான் ஒரேடியாக இமயமலைக்கு செல்கிறேன் என்று கூறிவிடு என்று கூறினார். அதிகாரி, அவரால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக போதிதர்மர் வாழ்ந்து கொண்டிருந்த மலையில் இருக்கும் மடாலயத்திற்கு சென்றார். அங்கு அவர் போதிதர்மருக்கு விஷம் வைக்கப்பட்டதையும் அவர் இறந்து விட்டதையும் கேள்விப்பட்டார். அங்கு அவரது சமாதியிருந்தது. அதிகாரி பேரரசரின் எல்லைப்பகுதியில் நியமிக்கப்பட்ட காரணத்தால் இதைப்பற்றி கேள்விப்பட வில்லை. அவர், கடவுளே, நான் அவரைப் பார்த்தேன். நான் ஏமாந்திருக்க முடியாது. ஏனெனில் நான் முன்பே அவரை பலமுறை பார்த்திருக்கிறேன். அவர் அதே மனிதன்தான். அதே கோபக்கண்கள், அதே தீப்போன்ற காட்டுத்தனமான உருவம், மேலும் உச்சக்கட்டமாக அவர் அவருடைய தடியில் அவருடைய ஒரு செருப்பை சுமந்திருந்தார் என்று கூறினார். சீடர்களால் அவர்களது ஆர்வத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அவரது சமாதியைத் திறந்தனர். அவர்கள் அங்கு கண்டதெல்லாம் ஒரே ஒரு செருப்பு மட்டுமே. அந்த காரணத்தை விரைவில் நீ அறிந்து கொள்வாய் என்று போதிதர்மர் ஏன் கூறினார் என்று அந்த அதிகாரி புரிந்து கொண்டார். நாம் யேசுவின் உயிர்த்தெழுதல் பற்றி மிகவும் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் யாரும் அதிகமாக போதிதர்மரின் உயிர்த்தெழுந்தது பற்றி பேசுவதில்லை. ஒருவேளை அவர்கள் அவரை புதைத்தபோது அவர் கோமாவில் இருந்திருக்கலாம், அவர் சுயநினைவுக்கு வந்தவுடன் சமாதியிலிருந்து வெளியே வந்து ஒரு செருப்பை அங்கேயே விட்டுவிட்டு இன்னொரு செருப்பை அவரது தடியில் கட்டிக் கொண்டு திட்டமிட்டப்படி அவர் சென்று விட்டார். அவர் அழிவற்ற இமயமலையின் பனிக்கட்டிகளில் இறக்க விரும்பினார். அவர் அவரைக் குறித்து எந்த சமாதியும், எந்த சிலையும் இருக்கக்கூடாது என விரும்பினார். அவர் அவருக்கு பின்பு தொழுவதற்கு எந்த காலடி தடத்தையும் விட்டு வைக்கவில்லை. அவரை நேசிப்பவர்கள் அவரது சொந்த இருப்பினுள் நுழைய வேண்டும். நான் தொழப் போவதில்லை மற்றும் அவர் கிட்டதட்ட காற்றில் மறைந்துவிட்டார். என்ன நடந்தது, எங்கு அவர் இறந்தார் என்பது குறித்து யாரும் எதையும் கேள்விப்படவில்லை. அவர் கண்டிப்பாக இமயமலையின் அழிவற்ற பனிகளில் எங்கோ புதைந்திருக்கவேண்டும்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'போதிதர்மரின் வழிகள்' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: இந்துமதி, ராஜேஸ்வரி, இலட்சுமியம்மாள், கார்த்திகேயன், பெண்மணி, நிதியுதவி, கார்த்திக் தலைப்பு: மாற்றம்
தன் முன்னால் தரையில் அமர்ந்து, கதறியழும் வயதானப் பெண்ணை, மாவட்ட ஆட்சியாளர் இந்துவால், தேற்ற முடியவில்லை. பக்கத்தில் உள்ள, ஒரு சிறு கிராமத்திற்கு நிதியுதவி செய்யச் சென்றபோதுதான், அந்தப் பெண்மணி, அவளது காலில் விழுந்து அழுதாள். ஏன் அழுகிறாள்? தன் மகளுக்குத் திருமணம் நிச்சயித்துவிட்டு, பல நாட்களாய் சிறுகச், சிறுகச், சேர்த்த காசைக் கொண்டு, தன் மகளுக்கு நகை வாங்க நகருக்குச் செல்லும்போது, எவனோ ஒரு பிட்பாக்கெட்காரன் இரக்கமின்றி எடுத்துவிட்டான். இந்த சம்பவத்தைக், கேட்டுக் கொண்டிருக்கும் இந்துமதியின் மனம் பதினைந்து ஆண்டுகளுக்கு, முன்பு நடந்த நிகழ்வுக்கு சென்றது. எல்லா மரங்கள், செடிகளும், கொடிகளும், முதுமைக்கு விடைகொடுத்து, இளமையைச் சந்திக்கக் காத்திருக்கும், மார்கழி மாதம் அது. மருதாணியின் வெளுப்பைப் போல், இன்றும் வழக்கமாக சூரியன் வெளுத்தான் சற்று தாமதமாக... பட்டனை அழுத்தியவுடன் இயங்குகின்ற இயந்திரமாய், மணி அடித்தவுடன், மாணவர்களின் சலசலப்போடு புது கிளுகிளுப்போடு, வகுப்பறை ஆரம்பித்தது. அது அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி. ஐந்து ஆசிரியர்கள் மட்டுமே இருந்தனர். அன்று ஆறாம் வகுப்பு ஆசிரியர் கார்த்திகேயன், வரவில்லை. ஆசிரியர் வரவில்லையென்றால் சொல்லவேண்டுமா? அவ்வளவு தான் ஒருவர். ஒருவரின் குடுமியைப் பிடித்தும், அடித்தும் விளையாடிக் கொண்டிருந்தனர். ஏ குண்டு, கொழுக்கட்டை, கருவாச்சி என ஒருவர், மற்றவரை அவர்களது பட்டப் பெயர்களால் அழைக்கலாயினர். ராஜேஸ்வரியின் தந்தை, சிங்கப்பூரில் இருக்கிறார். தினமும் விதவிதமான, உடையுடன், பள்ளிக்கு வருவாள். இவளது அருகில் பள்ளியில், அமர்ந்து இருப்பவள் இந்துமதி. அவளது தந்தை சிறு வயதில் இறந்துவிட்டார். எனவே அவளது அம்மாவும், இரண்டு தங்கச்சிகளும், தான் இவளுக்குப் பெரிய சொத்து. இவளது அம்மாவினுடைய உழைப்பில் தான், குடும்பம் நடக்கிறது. இவளது அம்மா இலட்சுமியம்மாள் பஞ்சு ஆலையில் வேலைப் பார்க்கிறாள். வழக்கம் போல், ராஜேஸ்வரி தனது தந்தை சிங்கப்பூரில் இருந்து கொண்டுவந்த, பேனாவை வைத்துப் பெருமையடிக்கத் துவங்கினாள். ஐயா! எங்கப்பா சிங்கப்பூர்ல இருந்து கொண்டுவந்த சிங்கப்பூர் பேனா, சிவப்பு மை பேனா, பார்த்தியா? எவ்வளவு அழகா, இருக்குன்னு. வறுமை இந்துவின் வார்த்தைகளுக்குத் தாழிட்டது, இருப்பினும். ஏப்பா! ஏப்பா! இதை எனக்குத் தர்றியா? என ராஜியிடம் கேட்கிறாள். ராஜி... ம்ம் அசுக்குப், பிசுக்குப், போடி உனக்குத் தரமாட்டேன், என்று சொல்லி அவளைத் தொடக்கூட அனுமதிக்கவில்லை. "பணக்கார வர்க்கத்தை வேடிக்கைப் பார்த்து, ஆசையை அடக்கிக் கொள்வதை, வாடிக்கையாக்க வேண்டும்." என்பது, அந்தப் பிஞ்சு நெஞ்சத்திற்குத் தெரியவில்லை. ரொம்பப் பீத்திக்காதடி, நானும் எங்கம்மாக்கிட்ட இந்த மாதிரி பேனா, வாங்கிக் கேப்பேன்னு தேம்பித் தேம்பி சொல்லிக் கொண்டே அழுகிறாள். இந்துவின் வீடு, பள்ளியில் இருந்து சற்று தூரத்தில் உள்ளது. மாலையில் பள்ளி முடிந்ததும், வீட்டிற்குச் செல்லும்போது, வழியோரம் காணப்படும் கருவை மரங்களின் இலைகளையும், மஞ்சள் பூக்களையும், உதிர்த்து, உதிர்த்து, அவைகளிடம் தனது கோபத்தைக் காட்டிக் கொண்டே போனாள். வீட்டை அடைந்ததும், அவள் தனது பையை ஒரு மூலையில் வீசி எறிந்துவிட்டு, பக்கத்து வீட்டுக்குத் தொலைக்காட்சிப் பார்க்கச் சென்று விட்டாள். இந்துமதியின் தாய் ஆலையை விட்டு வந்ததும், "இந்து, இந்து", என அழைக்கவே அவளைக் காணவில்லை மறுமுறை "இந்து, இந்து" என அழைக்க... "அம்மாக் கத்துறது ஊருக்கேக் கேட்கும் போல, ச்சே செத்த நேரம் கூட நிம்மதியாப் படம் பார்க்க முடியல, என முனங்கியவாறே", வீட்டிற்குள் நுழைந்தாள். "நானே ஒத்தக் கையாளு, பொம்பளப் பிள்ளை கொஞ்சம் ஒத்தாசையா இருக்கக் கூடாது", எனக் கூறிவிட்டு சமைக்கத் துவங்குகிறாள். இந்துமதி அம்மாவிடம் தயங்கிக் கொண்டே, " அம்மா, அம்மா இந்த இராஜிப் பிள்ளை வச்சிருக்கிற பேனா மாதிரி எனக்கு வாங்கித்தர்றியாம்மா?", "யாருடி இவ, வேற வேலையில்லை பெரிய இடத்துப் பிள்ளைங்க அப்படி, இப்படின்னு, வச்சிருப்பாங்க. அதையெல்லாம் பார்த்துட்டுக் கேட்கக் கூடாது", தலையில் ஒரு கொட்டு வைக்கிறாள் அம்மா. இந்துமதி கலங்கிய கண்களோடும், வீங்கிய முகத்தோடும், பள்ளிக்குச் சென்றாள். இடைவேளையில் ராஜி இல்லாதநேரம், அவளது பேனாவைத் திருடுகிறாள். இராஜி அழுதுகொண்டே "சார், சார் என் பேனாவைக் காணோம் சார்! எங்கம்மா அடிப்பாங்க சார்" என்றாள். தன் ஆசிரியரிடம் புகார் செய்தாள். இந்துமதியின் விழிகள் அங்கும், இங்கும் உருண்டோடின. அச்சம் அவளை, ஆட்கொண்டது. வாத்தியார் கார்த்திக் மிகவும் பண்பானவர். அவர் தனது மாணவர்களை விட்டு அனைத்துப் பைகளையும், சோதனையிடச் சொல்கிறார். இந்துவின் பையில் பேனா, இருப்பது தெரியவருகிறது. ஆசிரியர் இந்துவைத் தனியாக அழைத்து, "இந்து இங்க வாப்பா, நீ நல்லப்பிள்ளையாச்சே ஏன் இந்தத் தப்புப் பண்ணுன?" இந்து அழுகிறாள். "சார், இந்த மாதிரி பேனா எங்கம்மாக்கிட்ட வாங்கித் தரச் சொன்னேன், சார். அம்மா, அதுக்கு இதெல்லாம் பெரிய இடத்துப் பிள்ளைங்க வச்சிருக்கது, நம்மெல்லாம் அதுக்கு ஆசைப் படக் கூடாதுன்னு, சொல்லுச்சு சார். ஏன் சார் நான் ஆசைப்படக் கூடாதா?" எனக் கேட்கும் அவள் கண்களில் ஏக்கம் தெரிகிறது. ஆசிரியர் கார்த்திக், "ச்சே ச்சே அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. நம்மாலயும் வாங்க முடியும். ஆனா பிறர் பொருளுக்கு, ஆசைப் படக் கூடாது. ஆனா உண்மையா இருக்கணும். இல்லைன்னா, சாமி நம்மளத் தண்டிக்கும் திருடுனாப் படிப்பு வராது! நீ விரும்புற பொருட்களையெல்லாம் வாங்க முடியும் எப்போ தெரியுமா? நீ நல்லாப் படிச்சு, வேலைக்கு வந்தா, நீ விரும்புற பொருட்களையெல்லாம் வாங்கலாம்" என்னும் ஆசிரியரின் வார்த்தைகள் இந்துவின் காதில் எதிரொளிக்கின்றன... கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் அந்தப் பெண்மணியைத் தேற்றத் துவங்கினாள்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: மதின் என்ற இளைஞன், பேய், முனிவர், அமைச்சர் ராஜசேகர், மன்னன் தலைப்பு: பேயால் வந்த வாழ்வு
முன்னொரு காலத்தில் மதின் என்ற இளைஞன் பொன்னேரி என்ற சிறிய கிராமத்தில் வாழ்ந்து வந்தான். இவனது பெற்றோர் இறந்துவிட்டனர். இனி அந்த ஊரில் இருக்கப் பிடிக்காமல் பக்கத்திலுள்ள ஊருக்கு வேலை தேடிச் சென்றான். உச்சி வெயில் அதிகமானது. அப்போது ஆலமரத்தடியில் படுத்து துõங்கினான். அவனை யாரோ தட்டி எழுப்புவது போல் இருந்தது. துõக்கம் கலைந்து விழித்த போது ஒரு பேய் மரத்தின் கிளையில் உட்கார்ந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் அவனுக்கு மிகவும் பயமாக இருந்தது. பேய்… பேய்… என்று அலறினான். ""தம்பி பயப்படாதே… நானும் உன்னைப் போல் மனிதன் தான். தற்சமயம் பேயாக இருக்கிறேன்." மதினுக்கு கை கால்கள் நடுங்க ஆரம்பித்து விட்டது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தான். ""உன் பெயரென்ன தம்பி?", ""மதின்!", ""எங்கே போய்க் கொண்டிருக்கிறாய்?", ""வேலைத் தேடி நகரத்திற்குச் சென்று கொண்டிருக்கிறேன்.", ""நானும் உன்னைப் போல் இருந்தவன் தான். நுõறு வருடங்களுக்கு முன் வாழ்ந்து வந்தேன். ஒரு நாள் இந்த காட்டிற்கு வந்தேன். இங்கே தவம் செய்த முனிவரைப் பார்த்து கேலியாக சிரித்தேன். ஆத்திரம் அடைந்த முனிவர் என்னை பேயாகும்படி சபித்துவிட்டார். ""பிறகு நான் அவரைப் பார்த்து மன்றாடினேன். ""ஐயா, தயவு செய்து இந்தச் சாபத்திற்கு ஏதேனும் விமோசனம் சொல்லுங்கள். இப்படி மனித பேயாய் நான் எத்தனை நாட்கள் திரிவது?" என்று கேட்டான். ""சரி, நீ கெஞ்சிக் கேட்டுக் கொள்வதால் உனக்கு விமோசனம் தருகிறேன். உன் கதையை எந்த மனிதன் பொறுமையோடு கேட்கிறானோ அன்று நீ மீண்டும் மனிதனாவாய். பிறகு விண்ணுலகுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, இம்மனிதப் பிறவியிலிருந்து விடுதலை அடைவாய்…" என்றார். ""பல காலம் நான் மற்றவர்களிடம் என் கதையை சொல்ல முயன்றேன். அவர்கள் என்னைப் பார்த்ததும் ஓடிவிடுகிறார்கள்" என்று கூறிய பேய் மறைந்து போய் அழகான வாலிபன் தோன்றினான். சிறிது நேரத்தில் அவன் மேல் எழுந்து வானத்தை நோக்கிச் சென்றான். என்னை ""எப்போது நினைத்துக் கொண்டாலும் உனக்கு நல்லதே நடக்கும். நீ எடுத்த காரியத்திலும் வெற்றி அடைவாய்," என்ற பேய் மேகத்தின் நடுவில் மறைந்து போனது. மதினுக்கு எல்லாமே கனவு போல் இருந்தது. புதிய நகரை அடைந்தான். அங்கே நாடே விழாக்கோலம் கொண்டது. என்ன விஷயம் என்று கேட்டான். ""உனக்குத் தெரியாதா? அரசரின் பிறந்த நாள் விழாவை நாளை கொண்டாட இருக்கின்றனர். வாண வேடிக்கைகள், கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் எல்லாம் நடக்கும். ஏழைகளுக்கு அன்னதானம் நடக்கும். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும் அரண்மனை உபசரிப்பும் கொடுப்பார்கள்," என்றான். சிலம்பம், மல்யுத்தம் என நடந்த அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று அரசரின் சிறப்பு விருந்தினராக விரும்பிய மதின் பேயை மனதில் நினைத்துக் கொண்டான். பேயின் உதவியால் எல்லா போட்டிகளிலும் வென்றான். அவனுக்கு ஓர் அறை கொடுக்கப்பட்டது. அரண்மனை உணவும் வழங்கப்பட்டது. ஒரு வாரம் தங்கி விருந்துண்டு தன் அறைக்குச் சென்றான் மதின். அங்கிருந்த அழகிய மஞ்சத்தில் படுத்தவுடன் உறக்கம் வந்துவிட்டது. நடு இரவில் விழித்த மதின், தன் அறையில் சிறிது நேரம் உலாவினான். அப்போது சுவற்றில் காட்டெருமையின் கொம்பு பதிக்கப்பட்டுள்ளதைக் கண்டான். அதைப் பிடித்துப் பார்த்தபோது "கிர்ர்…" என்ற சப்தம் கேட்டது. அவனுக்கு மிகவும் ஆச்சரியமாகப் போய்விட்டது. அதைப் பிடித்துத் திருகிய போது, தரையில் ஒரு சுரங்க வழி ஏற்பட்டது. ஒரு தீபத்தைக் கையில் எடுத்துக் கொண்டு படிக்கட்டுகளில் இறங்கினான். கீழே பெரிய அறை ஒன்று இருந்தது. எங்கு பார்த்தாலும் போர் ஆயுதங்களும் முத்து மாலைகளும் தங்க மாலைகளும் கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்தன. துõரத்தில் யார் நின்று கொண்டிருப்பது? அமைச்சர் ராஜசேகர்… இங்கு என்ன செய்கிறான்? உற்றுப் பார்த்தான். நகைகள், பணத்தை திருடி பையில் போட்டுக் கொண்டிருந்தான். அங்கிருந்த வாளை உருவி, அவனை வெட்டச் சென்றான் மதின். அதற்குள் ரகசிய வழியில் தப்பி விட்டான் அமைச்சன். பிறகு மதின் தன் இருப்பிடத்திற்குச் சென்று காட்டெருமைக் கொம்பைத் திருகி தரையை முன்பு போல மூடச் செய்தான். இதை எப்படியாவது அரசரிடம் சொல்ல வேண்டும் என்று மனதில் உறுதி செய்து கொண்டான். இரவோடு இரவாக அமைச்சரை பற்றி மன்னனிடம் கூறினான். பல நாட்களாக பொக்கிஷ அறையில் திருடு போவதை அறிந்திருந்த அரசர், எத்தனையோ காவல் போட்டும் கண்டுபிடிக்க முடியாத ரகசியத்தை மதின் சொன்னதும் மகிழ்ந்தார். உடனே அமைச்சரை கைது செய்ய ஆட்களை அனுப்பினார் மன்னர். குடும்பத்துடன் தப்ப இருந்த அமைச்சரை கைது செய்து சிறையில் அடைத்தான் அரசன். அரசனது முன்னோர்கள் வைத்திருந்த இந்த ரகசிய வழி அரசனுக்கே தெரியவில்லை. இதை எப்படியோ அறிந்த அமைச்சன், இத்தனை நாட்களாக ரகசிய வழியில் நுழைந்து நகை திருடிய விஷயம் இப்போது தான் புரிந்தது. மதினை பாராட்டிய மன்னன் அவனையே தன் அமைச்சனாக்கிக் கொண்டான். பேயால் தனக்கு கிடைத்த வாழ்வை எண்ணி மகிழ்ந்தான் மதின்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: நான் மிகவும் நேசிக்கும் ஜென் கதை ஒன்று உள்ளது. நண்பர்கள் மூவர் காலைநேரத்தில் உலாவ சென்றிருந்தினர். அப்போது அவர்கள் திடீரென மலையில் ஜென் துறவி ஒருவர் நின்றிருப்பதை கண்டனர். அந்த மூன்று நண்பர்களில் ஒருவன், “அவர் அவருடைய நண்பர்களுடன் வந்திருக்க வேண்டும், இவர் அவர்களை விட முன்னால் வந்திருக்க வேண்டும். அதனால் இவர் அவர்களுக்காக காத்திருக்கிறார் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினான். இன்னொருவன், “நீ கூறுவதை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது. ஏனெனில் அந்த மனிதரை பார்க்கும் போது ஒரு விஷயத்தை என்னால் நிச்சயமாக கூற முடியும். அவர் யாரோ ஒருவருக்காக காத்திருக்கவில்லை என்பதே அது. ஏனெனில் அவர் ஒருபோதும் பின்னால் திரும்பி பார்க்கவில்லை. அவர் வெறுமனே ஒரு சிலையைப் போல நின்று கொண்டிருக்கிறார். தனியாக விடப்பட்டு மற்றவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கும் யாராக இருந்தாலும் சிறிது நேரத்திற்கு ஒருமுறை அந்த நபர் வந்துவிட்டாரா இல்லையா என்று பார்ப்பார்கள். ஆனால் இவர் நகரவே இல்லை. அவர் எந்த நண்பனுக்காகவும் காத்துக் கொண்டிருக்கவில்லை. இந்த துறவியை நான் அறிவேன். அவரிடம் ஒரு பசுமாடு இருக்க வேண்டும், அந்த பசு இந்த அடர்த்தியான காட்டிற்க்குள் தொலைந்து போயிருக்க வேண்டும். இதுதான் இருப்பதிலேயே மிகவும் உயரமான இடம், எனவே அங்கிருந்து அவரால் இந்த காடு முழுவதையும் பார்த்து அந்த பசு எங்கிருக்கிறது என்று கண்டறிய முடியும் என்று அவர் அங்கிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார் ” என்றான். மூன்றாவது நபர், “ உன்னுடைய சொந்த வாதத்தை நீயே மறுத்துவிட்டாய். அவர் பசுவை தேடிக் கொண்டிருந்தால் அவர் சுற்றிலும் பார்த்துக் கொண்டிருப்பார், அவர் ஒரு திசையை பார்த்தபடி வெறுமனே ஒரு சிலையைப் போல அங்கு நின்று கொண்டிருக்கமாட்டார். தொலைந்து போன பசுவை தேடும் வழி இதுவல்ல “ என்று கூறினான். அவன், “ எனக்கு தெரிந்த வகையில் அவர் அவருடைய காலை நேர தியானத்தை செய்து கொண்டிருக்கிறார் “ எனக் கூறினான். ஆனால் மற்ற இருவரும், “ ஜென்னின் அடிப்படை தத்துவமே நீ எங்கு வேண்டுமானாலும் தியானம் செய்யலாம், எதை செய்து கொண்டிருந்த போதிலும் தியானம் செய்யலாம் என்பது தானே. எனவே அந்த மலைக்கு அதிகாலையில் குளிரில் சென்று நின்று கொண்டு தியானம் செய்ய வேண்டிய அவசியம் என்ன?” என்று கேட்டார்கள். “ அவர் அவருடைய கதகதப்பான மடாலயத்தில் அவர்களுடைய தனிச்சிறப்பு வாய்ந்த தியான ஆலயத்தில் தியானம் செய்திருக்க முடியும். அவர் அங்கு இருந்திருக்கலாம் – மலைக்கு செல்ல வேண்டிய தேவை என்ன ? இல்லை இதை நாங்கள் ஒத்துக் கொள்ள முடியாது “ என்று கூறினார்கள். அவர்கள் விவாதித்தனர். முடிவில் அவர்கள் நாம் மலைக்கு செல்வதுதான் சிறந்ததாக இருக்கும். அது நேரத்தை வீணடிப்பதாக இருக்கலாம், ஆனால் அவர் என்ன செய்கிறார் என்று முடிவு செய்ய இதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை என்று கூறினார்கள். மனதின் ஆர்வம் அத்தகையது – மிகவும் குரங்குத்தனமானது எதற்காக நீ இப்போது உன்னை சிரமப்படுத்திக் கொள்கிறாய் ? அவர் செய்வது என்னவாக இருந்தாலும் செய்துவிட்டு போகட்டும். அவர் ஒருவேளை அவருடைய பசுவை தேடிக் கொண்டிருந்தால் அது அவருடைய பிரச்னை. ஒருவேளை அவர் அவருடைய நண்பருக்காக காத்துக் கொண்டிருந்தால் அது அவருடைய விருப்பம். ஒருவேளை அவர் தியானித்துக் கொண்டிருந்தால் அது அவருடைய சொந்த விஷயம் – நீ எதற்காக உன்னுடைய மூக்கை அதற்குள் நுழைக்கிறாய் ? ஆனால் மக்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் விவாதம் செய்ததில் மிகவும் உற்சாகமடைந்து அவர்கள் நாம் மேலே சென்றாக வேண்டும் என்று முடிவு செய்தனர். அவர்கள் வெறும் சிறிய காலை நேர உலாவலுக்குத்தான் வந்தனர் என்பதை மறந்து விட்டனர். மேலும் மலைக்கு செல்வதற்கு பல மணி நேரம் ஆகும் என்பது மட்டுமல்ல மலையிலிருந்து கீழே இறங்கி வரும்போது சூரியன் கிட்டத்தட்ட உச்சியில் இருப்பான் என்றாலும் கூட கேள்வி……… அவர்கள் ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டும். அது மட்டுமல்ல, உண்மையில் அவர்கள் தாங்கள்தான் சரி என்று நிரூபிக்க விரும்பினார்கள். ஒவ்வொருவரும் நான்தான் சரி என்பதை நிரூபிக்க விரும்பினார்கள். இப்போது அதனை முடிவு செய்யக்கூடிய ஒரே மனிதன் அந்த துறவிதான். அவர்கள் மூச்சு வாங்கிக் கொண்டு அங்கு அடைந்தனர். துறவி அரைக் கண்ணை மூடிக்கொண்டு அங்கு நின்றிருந்தார். அது புத்த மத வழி – நீ தியானம் செய்யும்பொழுது, கண்களை பாதி மூடிக் கொள்வது — ஏனெனில் ஒருவேளை நீ கண்களை முழுவதுமாக மூடிவிட்டால் நீ தூக்கத்தில் விழுந்துவிடக்கூடும். அப்போது தியானத்தில் செல்வதை விட தூக்கத்தில் விழ அதிக சாத்தியக்கூறு உள்ளது. நீ ஒருவேளை உன்னுடைய கண்களை முழுவதுமாக திறந்திருந்தால் நீ ஆயிரத்தோரு விஷயங்களில் ஆர்வம் கொள்வாய். ஒரு அழகான பெண் கடந்து செல்கிறாள், அப்போது தியானம் தொலைந்து விடுகிறது. எது வேண்டுமானாலும் தொல்லை கொடுக்கலாம். எனவே கண்களை பாதி மூடிக் கொண்டிருந்தால் நீ வெளியில் என்ன நடக்கிறது என்று சரியாக பார்க்கமாட்டாய், நீ பாதி கண்களை திறந்து வைத்திருக்க வேண்டும் எனவே நீ தூக்கத்தில் விழுந்து விட மாட்டாய். முதல் மனிதன் கேட்டான், “குருவே, நாங்கள் உங்களைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் நாங்கள் உங்கள் மடாலயத்திற்கு வரும் வாய்ப்பை பெற்றதில்லை. காலை நேர நடைக்காக வந்த நாங்கள் அதிர்ஷ்டவசமாக உங்களைக் கண்டோம். எங்களுக்கு ஒரு கேள்வி உள்ளது. அதற்கு நீங்கள் விடையளிக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். நீங்கள் நண்பருக்காக காத்திருக்கிறீர்களா ?” அரைகண் மூடிய நிலையில் அந்த துறவி, “ எனக்கு யாரும் இல்லை, நான் தனியாக உள்ளேன். நான் தனியாக பிறந்தேன், நான் தனியாகத்தான் இறப்பேன், மற்றும் இந்த இரு தனிமைகளுக்கிடையில் என்னுடன் யாரோ இருக்கிறார்கள் என்று என்னை நானே முட்டாளாக்கிக் கொள்ள முயற்சி செய்யவில்லை. நான் தனியாக உள்ளேன், மேலும் நான் யாருக்காகவும் காத்திருக்கவில்லை “ என்று கூறினார். இரண்டாவது மனிதன் மகிழ்ச்சியோடு, “ அப்படியானால் நிச்சயமாக உங்களுடைய பசு இந்த அடர்த்தியான காட்டில் தொலைந்திருக்க வேண்டும், நீங்கள் கண்டிப்பாக அதனைத்தானே தேடிக் கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டான், துறவி, “ வித்தியாசமான அடி முட்டாள்கள்தான் இங்கு வருவார்கள் போலத் தெரிகிறது. என்னிடம் ஒரு பொருளும் இல்லை. என்னிடம் எந்த பசுவும் இல்லை, மடாலயத்தில்தான் அது உள்ளது, அது என்னுடைய வேலை அல்ல, அதனால் நான் எதற்காக பசுவைத் தேடி என்னுடைய நேரத்தை வீணடிக்கவேண்டும் ? என்று கூறினார். மூன்றாவது மனிதன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். அவன், “ இப்போது நீங்கள் மறுக்கமுடியாது. நீங்கள் கண்டிப்பாக தியானம் செய்து கொண்டிருக்கவேண்டும். அப்படித்தானே நீங்கள் உங்களுடைய காலை நேர தியானத்தை செய்து கொண்டிருக்கிறீர்கள்தானே ?” என்று கூறினான். துறவி சிரித்தார். அவர் “ நீதான் மூவரில் மோசமான முட்டாள். தியானம் செய்யப்படுவதல்ல, அது ஒரு செயலல்ல. நீ தியானத்தில் இருக்கலாம். ஆனால் அதை நீ செய்ய முடியாது. அது ஒரு நிலை. எனவே நிச்சயமாக நான் தியானம் செய்து கொண்டிருக்கவில்லை. நான் தியானத்தில் இருக்கிறேன், ஆனால் அதற்காக இந்த மலைக்கு வர வேண்டியதில்லை, எங்கு இருந்தாலும் நான் தியானத்தில் இருக்கிறேன். தியானம் எனது தன்னுணர்வு. எனவே நீங்கள் அனைவரும் சென்று விடுங்கள். மேலும் அரைக் கண்ணை மூடியபடி இருக்கும் யாரையும் ஒருபோதும் தயவுசெய்து தொந்தரவு செய்யாதீர்கள். அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் “ என்று கூறினார். அப்போது அவர்கள் மூவரும் மன்னித்துவிடுங்கள்….. நாங்கள் முட்டாள்தனமாக நடந்து கொண்டுவிட்டோம், நிச்சயமாக மைல்கணக்கில் கடந்து வந்து உங்களிடம் இப்படிப்பட்ட……. எங்களுக்கு அவமானமாக உள்ளது. நாங்கள் முட்டாள்கள்தான், ஆனால் இப்போது எங்கள் மூவரிடம் இருந்தும் தனித்தனியாக இல்லாமல் ஒரே கேள்விதான். பிறகு நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டனர். அப்போது அந்த துறவி ஏதும் சொல்லவில்லை. அந்த ஏதும் அற்ற தன்மையே சாட்சிபாவம். நீ சாட்சிபாவமாக இருக்கும் பொழுது, நீ ஆச்சரியமடைவாய். அதாவது சலிப்பு. சோகம், ஆனந்தம், பரவசம் – எதுவாக இருந்தாலும் அது உன்னை விட்டு விலகி செல்லத் தொடங்குகிறது. உன்னுடைய சாட்சிபாவத்தன்மை ஆழமாக மாற மாற, சக்தி மிக்கதாக ஆகும்போது, அதிக ஒருமை தன்மை கொண்டதாக மாற மாற எந்த அனுபவமாக இருந்தாலும் – நல்லது அல்லது கெட்டது அழகானது அல்லது அசிங்கமானது – அது மறைந்து விடுகிறது. அங்கு தூய்மையான ஏதும் அற்ற தன்மை உன்னை சுற்றி நிலவுகிறது. சாட்சிபாவம் ஒன்று மட்டுமே உன்னைச் சுற்றியுள்ள அளவிடமுடியாத ஏதும் அற்ற தன்மையை குறித்த உணர்வை உனக்கு ஏற்படுத்தும். மேலும் அந்த அளவிடமுடியாத ஏதும் அற்ற தன்மையில்……அது காலியானது அல்ல, நினைவில் கொள். புத்தமத வார்த்தையான சூன்யதா என்பதை மொழி பெயர்க்க ஆங்கிலத்தில் வேறு எந்த வார்த்தையும் இல்லை. அந்த ஏதும் அற்ற தன்மையில்….. அது காலியானது அல்ல, அது உன்னுடைய சாட்சிபாவத்தால் நிரம்பியுள்ளது, உன்னுடைய சாட்சிபாவத்தன்மையால் நிறைந்துள்ளது, உன்னுடைய சாட்சிபாவத்தின் ஒளியால் நிறைந்துள்ளது.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'மனதின் இடைவிடா தீர்மானங்கள்' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே நற்பகல் நேரம், மத்தியான வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது.மரத்தடியில் ஒருவன் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான். அந்த வழியாக வந்த விறகுவெட்டி அவனைப்பார்த்தான். “கடுமையான உழைப்பாளியாக இருக்க வேண்டும் உழைத்த களைப்பால்தான் இந்த வெயிலிலும் இப்படிஉறங்குகிறான்.” என நினைத்துக்கொண்டே சென்றான். அடுத்ததாக திருடன் ஒருவன் அந்த வழியாக வந்தான் “இரவு முழுவதும் கண்விழித்து திருடி இருப்பான் போல தெரிகிறது அதனால்தான் இந்த சுட்டெரிக்கும் வெயிலிலும் அடித்துப்போட்டதுபோல் தூங்குகிறான் “ என நினைத்துக்கொண்டே சென்றான். மூன்றாவதாக குடிகாரன் ஒருவன் அந்த வழியாக வந்தான் .“காலையிலேயே நன்றாக குடித்துவிட்டான் போல இருக்கிறது அதனால்தான் குடிமயக்கத்தில் இப்படி விழுந்து கிடக்கிறான்” என நினைத்துக்கொண்டே சென்றான். சிறிது நேரத்தில் துறவி ஒருவர் வந்தார். “இந்த நண்பகலில் இப்படி உறங்கும் இவர் முற்றும் துறந்த ஞானியாகத்தான் இருக்க வேண்டும் வேறுயாரால் இத்தகைய செயலை செய்ய முடியும்” என அவரை வணங்கிவிட்டு சென்றார்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: மணிவர்மன், ராணி பத்மாவதி, நாட்டு மக்கள், முனிவர், வேலப்பன், ரத்னா,குழந்தை தலைப்பு: நாட்டுப்பற்று
முன்னொரு காலத்தில் மணிவர்மன் என்னும் மன்னர் மதுரையை சீரும் சிறப்புமாக ஆட்சிபுரிந்து வந்தார். அவனுடைய மனைவி ராணி பத்மாவதி மீது உயிரையே வைத்திருந்தார். அந்நாட்டு மக்கள் தங்கள் அரசனையும் அரசியையும் மிகவும் நேசித்தனர். எங்கும் பசுமையும் வளமையும் குடிகொண்ட அந்த நாட்டில் மக்களுக்கு எந்த ஒரு குறையும் வைக்காமல் மன்னன் ஆட்சி செய்து வந்தார். மக்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும் அரசன், அரசி இருவருக்கும் மனதுக்குள் ஒரு பெரும் குறை இருந்தது. திருமணமாகி, பல ஆண்டுகள் ஆகியும் தங்களுக்குக் குழந்தை பிறக்கவில்லை என்பதுதான் அது. எதிர்காலத்தில் தங்கள் நாட்டை ஆள ஒரு வாரிசு இல்லையே என மக்களும் மிகவும் கவலைப்பட்டார்கள். ராணி கலங்கும்போதெல்லாம் மன்னன் அவரை சமாதானம் செய்துவந்தார். ஒரு நாள் மதுரை மாநகருக்கு முனிவர் ஒருவர் விஜயம் செய்தார். மன்னரும் மகாராணியும் அவரை அன்போடு வரவேற்று உபசரித்தனர். முனிவரின் காலில் விழுந்து வணங்கி, தங்கள் குறையை அவரிடம் தெரிவித்தனர். முனிவர் மன்னரை நோக்கி, ""இந் நாட்டு மக்களில் யாராவது ஒரு தாய், தான் பெற்ற ஒரே குழந்தையை வைகை நதிக்கு அர்ப்பணித்தால் உனக்குக் குழந்தை பிறக்கும்" என்று கூறினார். அதைக் கேட்டதும் மன்னரும் ராணியும் அதிர்ச்சி அடைந்தனர். எந்த ஒரு தாயும் இதற்கு ஒத்துக்கொள்வது என்பது இயலாத காரியம் என்று நினைத்து இருவரும் தயங்கினர். முனிவரும் "இதைத் தவிர வேறு வழியில்லை" என்று கூறி அங்கிருந்து சென்றார். மன்னர் அமைச்சரை நோக்கி, ""யாரேனும் ஒரு தாய், தான் பெற்ற ஒரே குழந்தையை வைகை நதிக்கு அர்ப்பணித்தால், நாட்டில் பாதி பரிசாக அளிக்கப்படும்" என்று முரசு அறிவிக்கச் சொன்னார். நாடெங்கும் முரசு அறிவிக்கப்பட்டது. ஆயினும் மக்களில் எந்தத் தாயும் தங்களுடைய குழந்தையை ஆற்றில் விடுவதற்கு முன்வரவில்லை. நாட்கள் பல கடந்தன. அரசனும் அரசியும் மிகவும் சோர்ந்துபோயினர். அரசனின் உடல்நிலை இக் கவலையால் மிகவும் பாதிக்கப்பட்டது. அரசனும் அரசியும் கவலைப்படுவதை அரசனின் மெய்க்காப்பாளன் வேலப்பனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவனுக்கு ஓர் ஆண்குழந்தை இருந்தது. பிறந்து ஒரு வருடமே ஆகியிருந்த அக் குழந்தையை வேலப்பனும் அவனது மனைவி ரத்னாவும் மிகவும் நேசித்தனர். சில நாள்கள் சென்றன. கவலையினால் மன்னர் நோயுற்று, படுத்த படுக்கையானார். அரசன் மீது மிகுந்த அன்பு வைத்திருந்த வேலப்பனால் இந்தத் துயரைத் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. ஒரு குழந்தையின்றி, மன்னர் படும் வேதனையைப் பார்க்கச் சகிக்காமல் ஒரு முடிவுக்கு வந்தான். வீட்டுக்குச் சென்று தன் மனைவி ரத்னாவை அழைத்தான். "குழந்தையில்லாத ஏக்கத்தில் நம் மன்னர் இறந்துவிட்டால், பின்னர் நம் நாடு, சரியான தலைமையில்லாமல் பகைவர்களின் கையில் சிக்கி, அடிமையாகிவிடும்" என்றான். "அதற்கு நாம் என்ன செய்வது?" என்றாள் ரத்னா. "நம் நாட்டைக் காப்பாற்ற நாம் ஒரு தியாகம் செய்யவேண்டும். நமது குழந்தையை வைகை ஆற்றுக்கு அர்ப்பணிக்க வேண்டும்" என்றான். ரத்னா இதைக் கேட்டதும் அதிர்ச்சியில் மயங்கும் நிலைக்குச் சென்றாள். குழந்தையைப் பிரிவது - அதுவும் ஆற்றில் விடுவது என்பதை அவளால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை. ஆயினும் குழந்தையை விட நாடும், மன்னரும் மிக முக்கியம் என்பதைப் பலவாறு தன் மனைவியிடம் எடுத்துச் சொன்னான் வேலப்பன். கணவனின் வார்த்தையை மீறாத அவன் மனைவியும் கண்ணீரோடு அதற்குச் சம்மதித்தாள். மறுநாள் குழந்தையை எடுத்துக்கொண்டு ஆற்றுக்கு வந்தாள். நடப்பதையெல்லாம் பார்த்துக்கொண்டு எந்தவிதச் சலனமும் இல்லாமல் வைகை ஓடிக்கொண்டிருந்தது. ரத்னா ஆற்றில் இறங்கி, கண்ணீரோடு கடைசியாய்த் தன் மகனை முத்தமிட்டாள். ஒரு மூங்கில் தட்டில் குழந்தையைக் கிடத்தி, ஆற்றில் விட்டாள். பிறகு கதறி அழுதவாறே வீட்டுக்குச் சென்றாள். இச் செய்தி அரசனுக்கும் அரசிக்கும் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வேலப்பனையும் ரத்னாவையும் அழைத்து, கண்களில் நீர் மல்க நன்றி தெரிவித்தனர். அவர்கள் இருவரையும் புகழ்ந்து, "வேலப்பா, நீங்கள் இருவரும் செய்திருக்கும் தியாகத்துக்கு இந்த நாட்டையே பரிசாக உங்களுக்குக் கொடுத்தாலும் ஈடு செய்ய முடியாது. ஆயினும் நான் அறிவித்தபடி இந்த நாட்டில் பாதியை உங்களுக்குப் பரிசாகத் தருகிறேன்" என்றார் அரசர். வேலப்பன் மன்னரை வணங்கி, "பிரபு! தாங்கள் அளிக்கும் பரிசுக்காக நாங்கள் இதைச் செய்யவில்லை. தங்கள் மீதுள்ள அன்பினாலும் இந்த நாட்டின் மீது நாங்கள் வைத்திருக்கும் பாசத்துக்காகவும்தான் நாங்கள் இந்தக் காரியத்தைச் செய்தோம்" என்று கூறி, அரசன் அறிவித்த பரிசை ஏற்க மறுத்துவிட்டான். மன்னர் மிகவும் வற்புறுத்தியும் அவர்களிருவரும் பரிசை ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை. நாடே அவர்களின் தியாகத்தைப் போற்றிப் புகழ்ந்தது. சில நாள்களில் அரசி தாய்மைப்பேறு அடைந்தார். மன்னரும் மக்களும் மிகவும் மகிழ்ந்தனர். மாதங்கள் உருண்டோடின. அரசிக்கு ஓர் அழகிய ஆண்குழந்தை பிறந்தது. செய்தியறிந்து நாடே திருவிழாக் கோலம் பூண்டது. வேலப்பனும் ரத்னாவும் தங்கள் துக்கத்தை மறந்து, இந்த மகிழ்ச்சியில் பங்குகொண்டனர். அன்றிரவு ரத்னாவுக்குத் தன் குழந்தை ஞாபகம் வந்தது. வைகைக் கரைக்குச் சென்றாள். குழந்தையைத் தான் விட்ட இடத்துக்குச் சென்று நின்றுகொண்டு, மகன் நினைவில் கண்ணீர்விட்டுக்கொண்டிருந்தாள். அப்போது.. திடீரென ஒருவர் ரத்னாவின் முன்னே குழந்தையோடு நிற்பது போலிருந்தது. கண்களைத் துடைத்துவிட்டு, ரத்னா உற்றுப்பார்த்தாள். மன்னருக்கு ஆசி வழங்கிய அதே முனிவர்தான். கையில் குழந்தையோடு நின்று கொண்டிருந்தார். அந்தக் குழந்தை, ரத்னாவின் குழந்தையேதான். ரத்னா வியப்புடனும் மகிழ்ச்சியுடனும் முனிவரைப் பார்த்தாள். குழந்தையை ரத்னாவிடம் கொடுத்த முனிவர், அவளைப் பார்த்து, "நீ குழந்தையை ஆற்றில் விட்டவுடன் நான்தான் எடுத்து வளர்த்து வருகிறேன். நீயும் உன் கணவனும் செய்த இந்த மாபெரும் தியாகத்தைப் பாராட்டுகிறேன். உங்கள் இருவருடைய நாட்டுப்பற்றை இந்த உலகம் உணரவே இதுபோல் செய்தேன். எதிர்காலத்தில் உன் மகன், இளவரசனுக்குத் துணையாக நின்று இந்த நாட்டைக் காப்பான்" என்று கூறி, ஆசி வழங்கினார். குழந்தையுடன் ரத்னா வீட்டுக்கு ஓடோடி வந்த மறுநிமிஷம், இச் செய்தி காட்டுத்தீ போல் பரவியது. அரசனும் அரசியும் ரத்னாவுக்கு மீண்டும் குழந்தை கிடைத்ததை அறிந்து மிகவும் மகிழ்ந்தனர். அக் குடும்பத்தை அழைத்து, அரசவையில் உரிய மரியாதை தந்து கவுரவித்தனர். அவர்களின் நாட்டுப்பற்றை நாடே கவுரவித்தது.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: அத்தை வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற நான் அடம்பிடிக்கத் தொடங்கினேன். அத்தை எனக்குள் வசீகரமாய் இருந்தாள். ஆனாலும் அதை ஒரு திட்டமிடலோடு செய்ய வேண்டியிருந்தது. உயரமான, பெரிய விழிகளோடு பெண்களின் அழகுகளாக வர்ணிக்கப்படுகின்ற நீண்ட கூந்தலை கொண்டவள். எங்களுக்கும் அத்தை வீட்டுக்கும் உறவு அறுந்துபோயிருந்தது. அதற்கு காரணம் வேறொன்றுமில்லை. அப்பாவைவிட நான்கு வயது மூத்தவள்... நான்கே நாள் பழக்கத்தில் ஒரு ஆணோடு ஓடிப்போனவள்........ தகுதியற்ற சேர்மானத்தை கொண்டிருந்தவள் என்ற காரணமே போதுமானதாக இருந்தது அப்பாவுக்கு அப்போது 18 வயது..... தகப்பனற்ற வீட்டில்... இப்படியொரு சம்பவம் நடந்ததால் அதை எதிர்கொள்வது மிகவும் சிரமமாக இருந்தது அப்பாவுக்கு... அதிலிருந்து அப்பா இந்த உறவை வேண்டாம் என்று முற்றிலுமாக புறக்கணித்து இருந்தார். அப்பாவுக்கு திருமணம் நடந்தபோத கூட அத்தைக்கு அழைப்பில்லை. அதன் பிறகு அக்கா பிறந்தாள். பிறகு நான் பிறந்தேன். அதுவரைக்கும் அத்தை எங்கள் ஊர்ப்பக்கம் வரவில்லை. எனக்கு 10 வயது இருக்கும்போது எங்கள் ஊர் சீனிவாசன் அத்தையை டவுனில் பார்த்து பேசி இருக்கிறார். அடுத்த மாதமே தன் வீட்டில் நடக்கும் காதணி விழாவுக்கு அத்தைக்கு பத்திரிகை வைத்தார். அந்த வீட்டிற்கு வந்த அத்தை என்னை வாரியெடுத்து அணைத்துக்கொண்டாள். அத்தையின் கண்களிருந்து நீர் வடிந்தது. குழுமியிருந்த பெண்கள் எல்லாம் என்னிடம் ''உங்க அத்தைடா'' என்று சுட்டினார்கள். அத்தை அழுததற்கான காரணம் ஒன்றும் விளங்கவில்லை. அத்தை என் நெற்றியிலும் கன்னத்திலும் மாறிமாறி முத்தமிட்டாள். அப்போது அம்மா என்னைப் பார்த்து கோபப்பட்டதை அம்மாவின் கண்கில் தெரிந்த ''அனல்'' உணர்த்தியது.. அதற்கு பிறகு ஊரிலிருப்பவர்கள் அத்தைக்கு மறக்காமல் அழைப்பு விடுத்தார்கள் வீட்டு சுபகாரியங்களுக்கு. அப்போது எல்லாம் அக்காவுக்கும் எனக்கும் தின்னுவதற்கு என்று ஏதாவது வாங்கி வந்திருப்பாள். அம்மா பேச்சைக்கேட்டு அக்கா அந்த தின்பண்டங்களை புறக்கணித்தாள் என்றாலும், நான் அவற்றை தின்றுவிடுவேன். இப்படியாக தொடர்ச்சியாக வந்தபொழுதெல்லாம் அம்மா கூட அவளிடம் பேசவில்லை. அத்தை பற்றிய பேச்சுக்களை முற்றிலுமாக அம்மா தவிர்த்தே வந்தாள். அத்தை பற்றிய ஒரு சித்திரம் எனக்குள் மிகவும் விவரிக்க முடியாத பெருந்துயரத்தை கொண்டதாகவே தோன்றியது. இதற்கிடையில் பத்து ஆண்டுகள் அத்தை எங்கள் ஊருக்கு எந்த விஷேங்களுக்கும் வரவில்லை. ஊரிலிருப்பவர்கள் மறக்காமல் அவளுக்க அழைப்பு அனுப்பியபோதும் அத்தை வரவில்€ல். சிலர் அத்தைவீடு மிகவும் வசதியாகிவிட்டதாகவும், நில புலன்கள் பெருகிவிட்டதாகவும், அரவை மில், மாடி வீடு என்று சுபவாழ்வு வாழ்வதாகவும் என்னிடம் சொன்னார்கள். இதற்கிடையில் நான் பிளஸ் டூ வகுப்பை முடித்து விட்டிருந்தேன் நான் எடுத்திருந்த மதிப்பெண்கள் குறித்து சொல்வதற்கு ஒன்றுமில்லை. எனக்கு கல்லூரியில் ''சீட்'' கிடைக்கவில்லை. சும்மா ஊர் பேருந்து நிலையத்தில் என்னையொத்த சிலரோடு உட்கார்ந்து வெட்டிக்கதைகள் பேசிக்கொண்டிருந்த நாளில்தான் அத்தையை எதேச்சையாக சந்திக்க நேரிட்டது. அத்தை உயரம் அப்படியே இருந்தாலும் அவளின் நீண்ட கூந்தல் குறைந்து முக வசீகரம் குறைந்து இருந்தது. உதடுகள் உலர்ந்து முதுமையை அடைந்திருந்தாள். பத்தாண்டுகளுக்கு முன்பாக அத்தை பற்றிய எனது சித்திரம்..... மிகப் பெரிய இடைவெளியை உணர்த்தியது. அத்தை எளிதாக என்னை அடையாளம் கண்டவள் பக்கத்து ஊரில் ஒரு விஷேசத்துக்கு செல்வதாகவும் என்னை பார்த்ததும் பஸ்சிலிருந்து இறங்கிவிட்டதாகவும் சொன்னாள்.... என் படிப்பைப்பற்றி கேட்டாள், ஒழுங்காக படிக்கச் சொல்லிவிட்டு.... ஒரு மணி நேரமாக என்னைப்பார்த்து சில வார்த்தைகள் மட்டும் பேசினாள்...... மாமாவுக்கு நாலு வருசமாக உடம்பு சரியில்லை. எங்க வீட்டுக்கு நீ.... வர்றீயா என்று கெஞ்சலுடன் கேட்டாள். ஒங்கப்பன் இப்படி அக்கா பாசம் இல்லாமல் இருக்கான்.... நீயாவது அத்தை மேல பாசமா....இருடா....என்று கடிந்தாள்...... எப்ப ராசா என் வீட்டுக்கு வர்றே......இருபத்தைஞ்சு வருசமாயிட்டுடா இந்த உறவு அறுந்துபோயி,'' என்றபடி அவள் கண்கள் ஈரமாகின. அதை நான் விரும்பவில்லை '' வர்ற வாரம் சனிக்கிழமை கண்டிப்பா நான் வர்றேன்'' என்று உறுதியளித்தேன். அத்தை போய் விட்டிருந்தாள். வீட்டில் தொடர்ந்து பேசத் தொடங்கினேன். அத்தையை நான் பார்த்ததைப் பற்றியும். அத்தையோடு பேசியது குறித்தும்தெரிந்த, அப்பா என்னோடு பேசுவதை நிறுத்தியிருந்தார். நான் வெட்டியாக இருப்பதை அவர் விரும்பவில்லை. என் பேச்சு அவருக்கு எரிச்சலூட்டுவதாகவும் சமயங்களில் கோபத்தை அளிப்பதாகவும் இருந்தது. அம்மா முகம் சுளித்தாள். அக்காவுக்கு திருமண ஏற்பாட்டை துரிதப் படுத்திக் கொண்டிருந்தார் அப்பா. ''நான் அத்தை வீட்டுக்குப் போகிறேன்'' என்று அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். அதை அம்மா பெரிதுபடுத்தாமல் இருந்தாள். பணம் வேண்டும் என்பதை அம்மாவிடம் தெரிவித்தேன். அவளிடம் திரும்ப திரும்பச் சொல்லி அத்தை வீட்டுக்கு செல்வதை உறுதி செய்து ஓரிரு நாள் தங்கிவிட்டு வரும் எண்ணத்தோடு கிளம்பினேன். தெற்கே 120 கி.மீ தூரத்தில் இருந்தது அத்தையின் கிராமம். முதன் முதலாக தனிமை பயணம் மிகவும் இன்பத்தை கிளர்த்தியது. மூன்று பஸ் பிடித்து.... அந்த மேட்டு கிராமத்துக்கு நான் சென்றபோது மாலையாகியிருந்தது. கிராமத்துக்குள் நுழைந்தபோது தார் சாலை முடிவுற்று போயிருந்தது. மண் சாலைகளில் நடக்கத் தொடங்கினேன். எதிரே தென்பட்டவர்களிடம் அத்தையின் பெயரைச் சொர்லி ''வீடு எங்கே இருக்கிறது'' என்று நான் கேட்ட போது அவர்கள் ''முதலில் நீ யார்?'' என்று கேட்டார்கள். '' தம்பி மகன் '' என்று அறிமுகப்படுத்திக் கொண்டதை அவர்கள் நம்புவதற்கு தயங்குவது போல் இருந்தது. அத்தையின் பெயரைச் சொல்லி.... குடத்தோடு நீர்பிடிக்க வந்த பெண்ணிடம் கேட்டேன்.... இந்தா....... கடைசி மெத்தை ஓடு என்றாள். தெற்கு பார்த்த வீடு...... கச்சிதமாக திண்ணை..... இரண்டு ஆட்டுக்குட்டிகள் விளையாடிக் கொண்டிருந்தன. வர்ணங்கள் அற்ற கதவு வெள்ளை மட்டும் அடிக்கப்பட்டிருந்தது. திருஷ்டி பொம்மை நிறம் மங்கி. முகப்பு சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்தது. வாசலில் நின்று '' அத்தை '' என்றேன்..... ஒரு முகம் மட்டும் தெரிந்தது. அடுத்த நொடிப்பொழுதில்... அத்தை கையில் கரண்டியோடு ஓடிவந்தாள். சோற்றை கிண்டியிருக்க வேண்டும் பதம் கவனிக்கும் பொருட்டு.... என்னை பார்த்ததும் பாசத்தின் நெகிழ்வில் கண்கள் கசிந்தன. சட்டென்று என் கையிலிருந்த் ''பேக்'' கை வாங்கிக் கொண்டே உள்ளே அழைத்தாள். ''பாருங்கடி இதுதான்..... உங்க மாமா'' என்றாள். இரண்டு பெண்களும் என்னைப் பார்த்ததும் லேசாக சிரித்தார்கள். பெரியவள் என்னிடம் பேச வேண்டும் என்ற நோக்கில் ''வாங்க'' என்று மெலிதாகச் சொன்னாள்... சின்னவள் என்னிடம் சகஜமாக உரையாடத்தொடங்கினாள். அத்தையின் மகன் மில்லுக்குப்போயிருப்பதாகவும் இப்போது வந்துவிடுவான் என்றும் அத்தை சொன்னாள். என்னைக் கண்ட ஆனந்தத்தில் வீடு களைகட்டத் தொடங்கியது. ''மாமா எங்கே?'' என்றேன் அத்தை என்னை ''வா'' என்று அழைத்துக் கொண்டு பக்கத்து அறைக்குள்சென்றாள். மரக்கட்டிலில் இருமியபடி மாமா படுத்திருந்தார். என்னை பார்த்து யாரென்று அத்தையிடம் கேட்டார். உடல் நலிந்து மூச்சுவிட திணறியபடி கிடந்தார். என்னை ஏறெடுத்துப் பார்த்துவிட்டு அடுத்த நிமிடமே தலையை கீழே கவிழ்த்துக் கொண்டார். நான் அத்தையிடம் கேட்டபோது கதை கதையாகச் சொன்னாள். மாமா இப்படிப் பட்ட இலட்சிய மனிதரா? என்பது வியப்பளித்தது. அப்பாவை கீழ்த்தரமான மோசமான மனிதர் என்ற நினைத்து கடிந்து —க்‘ண்டேன். வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்தபோது, விவரிக்க முடியாத பெரும் மகிழ்ச்சி அடைந்தேன். எங்கே பார்த்தாலும் கிளிகள் கூட்டம் கூட்டமாக மரங்களிலும் கிளைகளிலும் வீட்டுக் கூரைகளிலும் உட்கார்ந்து கத்தியபடி இருந்தன. அடுத்த நிமிடமே வாசலுக்கு வந்து வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன் பச்சை நிறம்.... கிளிகளின் தீராத பாடல் காற்றில் கலந்து கொண்டிருந்தது. தீவிர ரசனையோடு கிளிகளை பற்றி பேசினேன். அத்தைக்கு சிரிப்பு வந்தபோது அத்தையின் மூக்கு கூட கிளி மூக்கு போலிருந்தது. பெரியவளின் மூக்கு கூர்மையாக இருந்தாலும்... சற்று உள்ளங்டகியிருந்தது. கிளியின் வசீகரமும், நுனி சிகப்பும் இல்லாதிருந்தது. சின்னவளின் மூக்கு ஆண் கிளிகளின் மூக்கு போல சற்று முரட்டுத் தனமாய் எடுப்பாய் இருந்தது. அதிகாலையிலேயே கிளிகள் சிறகுதிர்த்து பறந்து பறந்து ஒரு மரத்திலிருந்த வேறோரு மரத்துக்குச் செல்வதும், பாடுவதும் விளையாடுவதுமாக இருந்தன. தானிய வயல்களிலிருந்து...... இங்கே கூட்டம் வருவதும்..... ஒரு கூட்டம் அங்கே சென்று தானியங்களை கொறிப்பதுமாக இருந்தது. நான் அத்தையிடமும், பெரியவளிடமும், சின்னவளிடமும் கிளிகளைப் பற்றியே பேசினேன். என் கனவுகளில் வந்து உரையாடிக் கொண்டிருந்தன கிளிகள். கிளிகளுக்கான தானியங்களான சோளங்களையும் கேழ்வரகுகளையும் அடுக்குப் பானைகளிலிருந்து அள்ளி வீசினேன். அத்தை என்னிடம் லேசாக கடிந்து கொண்டள். இவ்வூரில் அனேக பெண்களின் மூக்கு கிளிகளின் மூக்குப் போல் எனக்குத் தோன்றியது என்றாலும், அத்தை மகள் பெரியவளின் சினேகிதி ரஞ்சிதாவின் மூக்கு அப்படியே ஒரு கிளியிடம் கடன் வாங்கி வைத்தது போலிருந்தது. ரஞ்சிதா அடிக்கடி என்னிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தாள். அத்தையிடம் எனக்கு ஒரு கிளி வேண்டும் என்று சொன்னேன். உள்ளூர் செல்லப்பாவிடம் சொல்லி இருப்பதாகச் சொன்னாள் அத்தை. அவன் ''கண்ணிகள்'' வைத்திருந்தான். ஆனால் கிளிகள் அதன் மூக்கால் அந்த கண்ணிகளைச் சேதப்படுத்தியிருந்தன. தோழனாக மாற்றிக் கொள்ள அவனை ஊருக்கு மேற்கே அவனிருக்கும் குடிசைக்கு போய் தினமும் சந்தித்துக் கொண்டிருந்தேன். அவன் எனக்காக எப்படியாவது ஒரு கிளியை பிடித்து தந்துவிடுவதாக உறுதியளித்தான். ரஞ்சிதா எனக்கு கிளி வளர்க்கும் கூடு ஒன்றை அவளே தன் சுயமாக சிந்தித்து மூங்கில் குச்சிகளால் தயாரித்துக் கொடுத்தாள். அதிலிருந்த தொழில் நுட்ப வேலை மிகவும் உன்னதமான பாட்டுக்காரனின் அறிவை ஒத்திருந்தது. கிளிகள் சதா நேரமும்.... கீச்...... கிச் என்று ஒசையெழுப்பியபடி இருந்தது. கிராமமே ஒரு இசைக் குவியலில் மிதந்து கொண்டிருந்தது. வயதானவர்களுக்கும், நோயாளிகளுக்கும், கடும் உழைப்பாளிகளுக்கும் இந்த கிளிகள் பெரும் தொல்லையாக இருக்கிறது என்று கிராம பஞ்சாயத்து போட்டு கிளிகளை விரட்டுவது குறித்து பேசத் தொடங்கினார்கள். இவர்களுக்கு இதனால் என்ன பிரச்சினை என்று அத்தையிடம் கேட்டேன். பதிலேதும் சொல்லாமல் மவுனமாய் இருந்தாள். செல்லப்பா கிளியோடு என்னைப் பார்க்க வந்தான். அதன் சிறகுகள் இரண்டையும் நறுக்கி விட்டிருந்தான். பறக்காது பயப்படாமல் வைத்துக் கொள்ளலாம் என்றான். கிளியின் வெதுவெதுப்பும், கோவை நிற சிகப்பு மூக்கும் எனக்குள் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கூட்டம் கூட்டமாக உட்கார்ந்து இருக்கும் கிளிகளிடம் என் கையிலிருக்கும் கிளியை காட்டினேன். அதற்கு ''செல்லம்மா'' என்றொரு பேரும் வைத்தேன். ஊரிலிருந்து கிளிகளை விரட்டுவதற்கான ஏற்பாட்டை கிராம நிர்வாகம் எடுக்கத் தொடங்கி விட்டதாக அத்தை சொன்னாள், ஆனால் அதை நான் நம்பவில்லை. ஓரிரு நாட்கள் தங்கிவிட்டு செல்வது என்பது மறந்து 15 நாட்களுக்கு மேல் ஆகியிருந்தன. யாவற்றையும் மறந்தவன் ஆகி இருந்தேன். கிளிகளோடு என் பொழுதுகள் கரைந்து சொண்டிருந்தன. கிளியை என் அருகில் வைத்துக் கெண்டு தூங்கிக்கொண்டிருந்தேன். கிளி என்னிடம் பேசத் தொடங்கியிருந்தது. அப்பொழுது இரவு மெல்ல விடியத் தொடங்கிய அதிகாலை நேரம்.... ஊரையே குலுக்கிப் போடும். ஐந்து வேட்டுக்கள் தொடர்ந்து போடப்பட்டன. திடிக்கிட்டு எழுந்த நான் பெரும் அதிர்ச்சிக்குள் உறைந்தேன்...... வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்தபொழுது, கிளிகள் அச்சத்தோடு பறந்து போய்க் கொண்டிருந்தன கீழ்திசை நோக்கி. கலவர பூமியாக கீச்.... கீச்..... துயர குரல் நடுக்கத்தில் ஒலித்தது. சில நிமிடங்களிலே அனைத்து கிளிகளும் பறந்து போயிருந்தன.... அந்த ஊரிலிருந்து உடனே கிளம்பிவிட தயாரானேன். அத்தை என்னை உணர்ந்து கொண்டாள். ''இனிமே எப்பொழுது இங்கு வருவார்?'' என்று சின்னவள் கேட்டாள். ''கிளி வர்றப்போ'' - என்றேன்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'கிளிகளின் திசை' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: அண்ணன், தங்கை, தாய், தந்தை, அப்பத்தா, தாத்தா, பரத், நந்தினி, பெரிய பருந்து தலைப்பு: தொலைந்த மூக்கு
அண்ணன் தங்கை இருவருக்கும் எப்போதும் சண்டை தான். அண்ணன் பரத் மகா குறும்பன். இரண்டாம் வகுப்பில் படிக்கின்றான். தங்கை நந்தினி இன்னும் பள்ளிக்கு செல்லவில்லை.சின்னப் பெண். தாய் தந்தை இருவரும் பணி புரிகின்றார்கள். அப்பத்தாவும் தாத்தாவும் இவர்களுடன் இருக்கிறார்கள். பரத் , நந்தினி குடும்பம் இருப்பது ஒரு அடுக்குமாடி குடியிருப்பில். அந்த குடியிருப்பில் மொத்தம் 5 மாடி. மூன்றாவது மாடியில் இவர்கள் குடியிருக்கின்றார்கள். ஒரு சனிக்கிழமை காலை அப்பாவும் அம்மாவும் பணிக்கு சென்றபின்னர் பரத்தும் நந்தினியும் விளையாடிக் கொண்டு இருந்தனர். தாத்தா வெளியே தன் நண்பர்களைக் காண கிளம்பினார் "பரத் தங்கையை சீண்டாமல் விளையாடு. சண்டை போட்டுக்க கூடாது சரியா? தாத்தா சீக்கிரம் வந்துவிடுகின்றேன்", "சரிங்க தாத்தா" - இருவரும். விளையாட்டு சாமான்கள் எடுத்துக்கொண்டு இருவரும் மொட்டைமாடியில் விளையாடச் சென்றனர். நிழலாக இருந்த ஓரத்தில் விளையாடினர்.எந்த பொருள் பரத் எடுத்தாலும் உடனே நந்தினி அது வேண்டும் என்பாள். அப்போது திடீர் என்று பரத் "உஷ் உஷ்" என்று கத்தியபடி ஓடினான். "அண்ணா என்ன ஆச்சு?" பயத்துடன் அண்ணன் சட்டைக்கு பின்னால் ஒளிந்து கொண்டாள்.. "ஒரு பருந்து வந்தது பார்த்தியா?", "இல்லையே", "பெரிய பருந்து""அச்சோ அப்புறம்?. ஏன் விரட்டிக்கொண்டு ஓடினீர்கள்?", "அழக்கூடாது சரியா. அந்த பருந்து உன் மூக்கை கடிச்சி எடுத்துக்கொண்டு போய் விட்டது. அது தான் துரத்திக்கொண்டு சென்றேன். அதற்குள் பறந்தே போய்விட்டது".. இவன் சொல்லி முடிப்பதற்குள் நந்தினி அழ ஆரம்பித்துவிட்டாள்.."அம்மா என் மூக்கு..என் மூக்கு" என்று அழுதபடி படிக்கட்டுகளில் இறங்கி தன் வீட்டிற்கு சென்றாள். அவள் விட்ட சத்தத்திற்கு அந்த கட்டிடத்தில் உள்ள அனைவருமே பயந்துவிட்டனர். யார் என்ன சொல்லியும் அழுகை நின்ற பாடில்லை. அப்பத்தா அதெல்லாம் ஒன்றும் இல்லை.அண்ணன் விளையாடுகிறான் என்றாள். கேட்கவே இல்லையே. அழுதபடியே இருந்தாள்.கை கால் உதைத்தாள். தாத்தா அந்த சமயம் வீட்டிற்குள் வந்தார். "என்னாச்சு பாப்பாக்கு? ஏன் என் தங்கம் அழுகின்றது?" தன் அழுகையை நிறுத்தி "தாத்தா, நானும் அண்ணனும் விளையாடிக் கொண்டு இருந்தோம்.ஒரு பெரிய பருந்து கறுப்பு நிறத்தில் வந்தது. என் மூக்கை…" மீண்டும் அழுகை… "அழாமல் சொன்னால் தானே புரியும்…", "என் மூக்கை கடிச்சி எடுத்துக்கொண்டு போய்விட்டது..ம்ம்ம்..ம்ம்ம்" நிலைமையை புரிந்து கொண்டார் தாத்தா. "ஓ உன் மூக்கு தானா அது?" என்றார். அமைதியானாள் நந்தினி. "நான் தெருவில் வந்த போது ஒரு பருந்து வந்து என்னிடம் பேசியது.ஒரு அழகான குட்டி பெண்ணின் மூக்கை எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன். பாவம் அவள் நல்ல பெண், சமத்து பெண், என்று சொல்லிவிட்டு மூக்கை என்னிடம் கொடுத்து விட்டு பறந்து சென்றது.", "இதோ பத்திரமாக என் பாக்கெட்டில் வைத்திருக்கிறேன்.எங்கே கிட்டவா..கண்ணை மூடிக்கொள்.." பாக்கெட்டில் இருந்து ஏதோ எடுப்பது போல் பாவனை செய்து அவள் முகத்தில் வைத்து அழுத்தினார். "ஆகா. மூக்கு ஒட்டியாச்சே..போய் கண்ணாடியில் பார்." நந்தினி கண்ணாடியை நோக்கி ஓடினாள்.."படவா..குழந்தையை ஏன் இப்படி ஏமாற்றுகிறாய்" என்று செல்லமாக பரத் கன்னத்தை கிள்ளினார் தாத்தா.. "ஹைய்யா மூக்கு வந்துடுச்சே..ஜாலி..ஜாலி..அண்ணா மூக்கு வந்துடுச்சு…ஜாலி ஜாலி…" மீண்டும் மாடிக்கு சென்று விளையாட துவங்கினர் ஆனந்தமாக.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: முல்லா, நாத்திகன், தெய்வ நம்பிக்கை, துறவி, சந்தைக் திடல் தலைப்பு: நாத்திகன் பட்ட அவஸ்த்தை
முல்லா வசித்துவந்த ஊரில் ஒரு நாத்திகன் வசித்து வந்தான். கொஞ்சமும் தெய்வ நம்பிக்கை இல்லாதவன். தெய்வ நம்பிக்கை உடைய முல்லா போன்றவர்களை எப்பொழுது பார்த்தாலும் கேலியும் கிண்டலும் செய்து பரிகசித்துக்கொண்டிருப்பான். ஓரு நாள் சந்தைக் திடலில் அந்த நாத்திகன் நின்று கொண்டிருந்தான். அந்தப் பக்கமாக முல்லா நடந்து வந்து கொண்டிருந்தார். அங்கே திரளாகக் கூடியிருந்த மக்களுக்கு மத்தியிலே முல்லாவை அவமானப்படுத்த வேண்டும் என்று எண்ணினான். முல்லா அருகே வந்ததும், " முல்லா அவர்களே உலகத்திலேயே நீங்கள்தான் முற்றம் துறந்த துறவி என்று மக்கள் பேசிக்கொள்கிறார்களே? அப்படி எதை நீர் துறந்து ஞானியானீர் " என்று நாத்திகன் கேலியாகக் கேட்டான். " எந்த முட்டாள் அந்த மாதிரி சொன்னான் என்னைவிட மிகவும் மகத்துவம் வாய்ந்த துறவி ஒருவர் இருக்கிறாரே!" என்றார் முல்லா. நாத்திகனுக்கு மட்டுமல்ல அங்கு நடமாடிக் கொண்டிருந்த மக்களகட்க்கும் முல்லா சொன்ன தகவல் ஆச்சரியத்தை விளைவித்தது. முல்லாவையும்விட மேலான துறவி இந்த ஊரில் யார் இருக்க முடியும் என்று அவர்களுக்கு விளங்கவில்லை. நாத்திகனும் அந்தத் தகவலைக் கேட்டு வியப்படைந்து " முல்லா இந்த ஊரில் உள்ள அந்த மகத்துவம் வாய்ந்த துறவி யார்?" என்ற கேட்டான். " அந்தத் துறவி நீர் தான் " என்று முல்லா கூறியதைக் கேட்ட நாத்திகன் அதிர்ச்சியடைந்து விட்டான். " நானா அந்தத் துறவி அது எப்படி?" என்று கேட்டான். " என்னைப் போன்ற சாதாரணத் துறவிகள் கேவலம் உலகத்தில் இருக்கும் பொருட்களைத் தான் துறப்பது வழக்கம் நீரோ கடவுளையே துறந்து விட்ட துறவியாயிற்றே உம்மை மிஞ்சக் கூடிய துறவி உலகத்தில் ஏது?" என்று முல்லா பதிலளித்தார். அங்கே சூழ்ந்திருந்த மக்கள் நாத்திகனைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்க ஆரம்பித்தனர். நாத்திகன் தலைகுனிந்தவாறு அந்த இடத்தை விட்டு வேகமாக அகன்று விட்டான்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: திரு. சந்திரசேகர் அவர்களுக்கு, கிருத்திகா எழுதுகிறேன். இது போன்றதொரு கடிதத்தை அநேகமாக என்னிடமிருந்து நீங்கள் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள். இங்கே நான், அம்மா, அப்பா, அனைவரும் நலம். அங்கே நீங்கள் நலமா?'' என்பது போன்ற சம்பிரதாயமான விசாரிப்புகளை உள்ளடக்கிய கடிதம் அல்ல இது என்பதை இப்போதே தெரிவித்துக் கொண்டு விடுகிறேன். இந்தக் கடிதத்தை என்னுடைய அறையில் என்னுடைய டேபிளில் வைத்து எழுகிறேன். இந்த என்னுடைய என்ற உணர்ச்சி எத்தனை சுகமானது என்பது அனுபவித்தால்தான் புரியும். உங்களுக்குப் புரிய நியாயமில்லை. என்னுடைய அறையில் அதிக மாற்றங்களில்லை. ரகு கொஞ்ச நாள் உபயோகப் படுத்தியிருக்கிறான். அப்புறம் சரிப்படவில்லை என்று மாடியறைக்கே போய்விட்டான். ஜன்னலோரமாய் நிற்கும் மாமரத்தின் நிழலையும் அதன் குளிர்ச்சியையும் நீண்ட நாட்களுக்கு பிறகு அனுபவிப்பதில்... மனசு நிஜமாகவே சாந்தமடைந்திருக்கிறது. நீங்கள் என்னைப் பார்த்துவிட்டுப் போன அன்று இதே ஜன்னலோரமாய், இதே மாமரத்தின் பின்னணியில், லேசாக இருள் மூடத் தொடங்கின மாலையில், ''மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி'' என்று அதிகம் குரலெழுப்பாமல் ரகசியமாய்ப் பாடிக் கொண்டது நினைவுக்கு வருகிறது. கூடவே சிரிப்பும் வருகிறது. இங்கு வந்து பத்து நாட்களில் நேற்றுவரை சுதந்திரமாய் இருந்த மனசு இன்றைக்குத் திடீரென்று கொதிக்கத் தொடங்கிவிட்டது. உங்களுக்குக் கடிதம் எழுதினால்தான் ஆறும் போலத் தெரிந்ததால் எழுதத் தொடங்கி விட்டேன். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நான் இங்கே வந்த காரணம் இன்னும் சரியாகத் தெரியவில்லை. செல்ல மகள் வந்திருக்கிறாள். கொஞ்சம் சீராடி விட்டுப் போகட்டுமே என்று மேலே விழுந்து உபசாரம் செய்கிறார்கள். விருந்தாளியைப் போலத்தான் இருக்கிறது. ''அம்மா, இதெல்லாம் வேண்டாம், என்னை கொஞ்சம் ப்ரீயாக இருக்க விடு'' என்று கேட்டுக் கொண்டேன். காலம் இரண்டு வருஷம் பின்னோக்கிப் போய்விடக் கூடாதா என்று இருக்கிறது. அதே கிருத்திகாவாய், வயலினும், வாசிப்புமாய், இதே மாமர நிழலில் மதியம் தி. ஜானகிராமனை வாசித்துக் கொண்டே உறங்கிப் போய்... நினைக்கவே எவ்வளவு ஆனந்தமாய் இருக்கிறது! சில நிகழ்ச்சிகளெல்லாம் என் வாழ்வில் இன்னும் நடக்கவேயில்லை என்று திரும்பத்திரும்பக் கட்டாயமாக நினைத்துக் கொள்கிறேன். சந்திரசேகர் என்று யாரையும் எனக்குக் கொஞ்சம்கூட அறிமுகமே இல்லை என்றாகி விட வேண்டும். எவ்வளவு நன்றாக இருக்கும் இல்லை? நானும்தான் பி.ஏ. இலக்கியம் படித்தேன். இலக்கியம் படிப்பவர்கள் பெரும்பாலும் யதார்த்தவாதிகளாய் இருப்பதில்லை. அதனால் தான் என் பிள்ளைகளுக்கு இலக்கியத்தைத் தவிர்த்து விட்டேன் என்று அப்பாவின் நண்பர் சொன்ன போது ஏன் சிலபேர் இப்படியிருக்கிறார்கள் என்று வியந்திருக்கிறேன். ஷேக்ஸ்பியரும் கீட்சும் படித்துப் படித்து மனசு கனவில் மிதக்கத் தொடங்கிவிடும், யதார்த்தம் புரியாது என்றார். எதை யதார்த்தம் என்கிறார்கள்? புருஷன் நல்லவனாய், மனைவியை நம்புபவனாய், பெண்களை மதிப்பவனாய் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதை யதார்த்தமில்லை என்கிறார்களா? ஷேக்ஸ்பியர் படித்தால்தான் நல்ல கணவன் வேண்டும் என்று கனவு காண முடியுமா? அதுதான்.... நீ இப்படித்தான் இருக்க வேண்டும், ஆம்பிளை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்று ரொம்ப காலமாய் சொல்லிச் சொல்லி, கடைசியில் நிஜம் மறந்து போய் இதுவே வேதமாய் நிலைத்து விட்டது. பெண்களும் இந்த அடிமைத்தனத்தில் கொஞ்சம் குளிர் காய்கிறாற் போலத்தான் தெரிகிறது. சமுதாயத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையில் உள்ள மிகப் பெரிய அதிகார வித்தியாசத்தை மறந்து போய் ஆதிகாலம் தொட்டு இருந்து வருகிற மரபுகளில் திளைத்துப் போய் விட்டார்கள். இங்கே புருஷன் ஊருக்குப் போய்விட்டால் பெண்களுக்குத்தான் பசலை காண்கிறது. பெண்களுக்குத்தான் வளையல் கழன்று விழுகிறது, இடுப்பு மெலிகிறது. ஏன் இது போன்ற எந்த அடையாளமும் ஆண்களுக்குக் குறிப்பிடப்படவில்லை? ஊருக்குப் போனவன் ஒழுக்கமாய் இருக்க வேண்டியதில்லை. பெண்டாட்டியை நினைத்து உருக வேண்டியதில்லை என்பது மறைமுகமாகப் பெண்களுக்கு அறிவுறுத்தப்படுகிறதா? ''பெண்ணே! நீ பெண். அதனால் உருகு, பசலைப்படு, இடைதுவண்டு விழு! அவன் ஆண்! அதனாலேயே அதிகாரமிக்கவன். அவன் உன்னை நினைக்க வேண்டியதில்லை. அவன் திரும்பிவர வேண்டும் என்பது மட்டுமே உன் எண்ணமாய் இருக்கவேண்டும். ஒழுக்கமாய்த்தானா என்பது போன்ற ஆராய்ச்சிகள் எல்லாம் நீ செய்யக்கூடாது என்று காலங்காலமாய் இருந்து வருகின்ற சமூகக் கட்டளைகளை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நான் பெண், நீ ஆண், இது இயற்கை. இது நேர்ந்து விட்டது - it just happened! அவ்வளவு தான். மற்றபடி உணர்விலோ செயலிலோ வித்தியாசம் இல்லை. அப்புறம் எங்கே இருந்து வந்தது நான் பெரியவன், நீ சின்னவள் என்ற சித்தாந்தம்? நீ கற்பு என்றால் நானும் கற்பு. நீ ஊர் மேய்ந்து விட்டு வரும் போது நான் மட்டும் போர்த்திக் கொண்டு படுத்திருக்க வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கிறாய்? இதில் இன்னொரு வேடிக்கை, குனிந்த தலை நிமிராமல், கண்மறைப்புப் போட்ட குதிரையாய் நேரே போய், நேரே வருகிறவன் பெண்டாட்டியைப் பார்த்து ஜன்னலைத் திறக்காதே, வாசல் படியில் நிற்காதே என்று அதட்டினால், அட, கொஞ்சம் ஒத்துக் கொள்ளலாம். பெண்டாட்டியின் சிநேகிதி கொஞ்சம் பகட்டாய் உடுத்தி சிரிப்பாய்ப் பேசுகிறாள் என்பதற்காக, ''நாளைக்கு ஆறுமணிக்கு அருள்ஜோதிக்கு வா, காத்திருப்பேன்'' என்று கடிதம் எழுதுகிறவன் ''ஆபீஸ் விட்டவுடன் நேராய் வீட்டுக்கு வா'' என்று மனைவியை எப்படி அதட்ட முடியும்? நான் வேலைக்கு போகிறேன், நீயும் வேலைக்குப் போகிறாய். நான் நாலு பெண்களுடன் பேசுகிறேன், உனக்கும் அலுவலகத்தில் நாலு ஆண்களுடன் பேச வேண்டியிருக்கிறது, தவிர்க்க முடியாது. அதனாலென்ன என்று சொல்கிறவன்தான் அபூர்வமாகி விட்டான். சரி, காணாத இடத்தில் என்ன நடக்கிறதோ என்று சந்தேகம் வந்து தொலையட்டும். பரவாயில்லை, அதையாவது எதிலாவது சேர்த்துக் கொள்ளலாம். நீ ஹாலில் இருக்கும் போது, சமையலறை ஜன்னல் வழியாக மனைவி அடுத்த வீட்டுக்காரனோடு ஓடிப்போய் விடுவாள் என்று இரண்டு நிமிஷத்துக்கொரு தரம் சமையலறைக்கும் வாசலுக்கும் நடக்கிறவன் எப்பேர்ப்பட்ட புருஷன்! அப்பேர்ப்பட்ட மகா புருஷனைத்தான் அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து நல்ல சுபதினத்தில் கல்யாணம் செய்து கொண்டேன். அப்பேர்ப்பட்டவனுக்காகத்தான் ஒரு மாலைப் பொழுதில் மயங்கி மயங்கிக் கனவு கண்டேன். தோழி கேளடி என்று பாட்டுப் பாடினேன் என்றால் சிரிப்பு வராதா? யோசித்துப் பார்க்கிறேன் இதன் பின்னாலிருக்கும் மனோதத்துவம்தான் என்ன என்று. பெண் பார்க்க அழகாயிருக்கிறாள். நாகரீகமாய்ப் பழகுகிறாள். கை நிறைய சம்பாதிக்கிறாள் என்றால், உடனே தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற பேராசை. சொந்தமாக்கிக் கொண்ட பின்பு, இப்படித்தானே அடுத்தவனும் நினைப்பான் என்ற ஆற்றாமை, எப்படிப் தடுப்பது - இயலாமை... கடைசியில் அகப்படுவது அவள்தான். பார்க்கின்ற பெண்கள் மேலெல்லாம் ஆசைப்படுவதை நீ முதலில் நிறுத்து, சந்தேகம் எங்கிருந்து வருகிறது என்று பார்க்கலாம். அழகாயிருப்பது தப்பா? நீ ஆசைப்பட்ட மாதிரிதானே அடுத்தவனும் படுவான்? நீ ரசித்ததை என்னால் தடுக்க முடிந்ததா? அடுத்தவனை மட்டும் நான் எப்படி நிறுத்த முடியும்? நீ ஒரு படி மேலே போய்க் கல்யாணம் செய்து மனைவியாக்கிக் கொண்டாய். அடுத்தவன் அந்த சந்தர்ப்பம் இல்லாமல் பார்ப்பதோடு நிறுத்திக் கொள்கிறான். இதில் நான் என்ன செய்ய முடியும்? நான் அப்படியில்லை என்று சொல்லத்தான் முடியும் அனுமாரைப் போல நெஞ்சைப் பிளந்தா காட்ட முடியும்? இல்லை, பர்தா போட்டுக் கொண்டு ஜன்னல், கதவு எல்லாவற்றையும் அடைத்துக் கொண்டு அறைக்குள் மூச்சுத் திணறி சாகவா முடியும்? சாகலாம், மனசு எதிர்பார்த்த விதமாய் நடந்து கொள்கிற கணவனுக்காக உயிரை விடுவதுகூட சுகம்தான். சதா வேவு பார்க்கிற, நடுராத்திரி எழுந்து கைப்பையைச் சோதனையிடுகிறவனுக்காக சாக முடியுமா? அது இந்தப் பிறப்பையே அவமானப் படுத்துவதாகாது? உனக்காக நான் சாவதற்கு நீ தகுதியுடையவனாக இருக்க வேண்டாமா? இதையெல்லாம் வாயால் பேசி, கூட்டம் போட்டு கோஷமிட்டு திருத்த முடியாது. என்னைக் கேட்டால் இந்த மாதிரி ஆசாமிகளுக்கெல்லாம் சரியான தண்டனை அவர்கள் செய்வதையே திருப்பிச் செய்வதுதான். நீ என் மேல் சந்தேகப்பட்டால் நான் உன் மேல் சந்தேகப்படுகிறேன். நீ என் அலுவலகத்துக்கு போன் செய்து நான் இருப்பதை உறுதி செய்தால், நான் அரை நாள் லீவு போட்டு உன் அலுவலகத்திற்க வந்து நீ இருப்பதை உறுதி செய்து கொள்கிறேன். நீ வீட்டுக்கு வந்த மச்சினி மேல் வாஞ்கையாய்க் கையைப் போட்டுக் குசலம் விசாரித்தால், நான் விடுமுறையைக் கழிக்க வந்த சின்ன மைத்துனனுக்குத் தலைவலித் தைலம் தேய்த்து விட்டு அன்பைக் காட்டிக் கொள்கிறேன். இந்த Tit for Tat கொஞ்சம் பயனுள்ள மருந்ததாகத் தெரிகிறது. இப்படிச் சுகமாய் உட்கார்ந்து பொறுமையாய் எழுதுகிற போது இதெல்லாம் தோன்றுகிறதே, ஏன் நிஜத்தில் அப்படிச் செய்யாமல் போய் விட்டேன்? நீ பன்றி சேற்றில் புரள்கிறாய் என்பதற்காக, நானும் அதிலே உருள முடியுமா என்ற, இலக்கியம் படித்ததினால் உண்டான இயல்பான நாசூக்கா அல்லது தமிழ்நாட்டிலே பிறந்து பண்பாடு நெறிமுறை போன்ற ஒன்றிரண்டு கலைக்குதவாத வார்த்தைகளைக் கற்றுக் கொண்ட மனப்பாங்கா? ஏதோ ஒன்று.... செய்து காட்டு, நான் சூடுபட்டேன் என்று வாயால் சொன்னால் எதிராளிக்குப் புரியாது. நீ சூடு வைத்துக் காட்டு என்று அறிவு, இப்போது ஆயிரம் தரம் சொன்னாலும் மனசு ஏனோ அதை ஒத்துக் கொள்ள மாட்டேனென்கிறது. மணி மூன்றாகி விட்டது. அம்மா இத்தோடு இரண்டு தடவை எட்டிப் பார்த்துவிட்டு சிரித்துக் கொண்டே போய்விட்டாள். மகள் மாப்பிள்ளைக்கு ஏதோ அந்தரங்கமாய் எழுதுகிறாள் போலிருக்கிறது என்று நினைத்திருப்பாள். ''சாப்பிடக்கூட வராமல் அப்படியென்ன மாஞ்சு மாஞ்சு லெட்டர் வேண்டிக் கிடக்கு'' என்று ரகு கூட சத்தம் போட்ட விட்டு போய்விட்டான். அதெல்லாம் போகட்டும்.... இப்படி மனசிலிருக்கிற ஆங்காரத்தையெல்லாம் அப்பட்டமாய் லெட்டரில் எழுதி விட்டேனே, காரணம் தெரியுமா? எல்லாம் அந்த மனோகர் சொல்லிக் கொடுத்திருப்பான் என்று தத்துப்பித்தென்று நீங்கள் யூகிக்கப் போகிறதை நினைத்தால் எனக்கு இப்போதே சிரிப்பு வருகிறது. காரணத்தை கடிதத்தின் கடைசியில், பின் குறிப்பில் சொல்கிறேன். அப்புறம்.... அப்புறம் என்ன? பிரமாதமான விசேஷம் ஏதும் இல்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு ரகுவுடன் (இனிமேல் இங்கே வராதே என்று அல்பத்தனமாய் விரட்னீர்களே அந்த ரகுபதி இல்லை, என் சொந்தக் தம்பி ''ரகு'' என்கிற ரகுராமன்) ஜெயா அத்தை வீட்டுக்குப் போய் வந்தேன். நான் வந்திருக்கிறதைக் கேள்விப்பட்டு கஸ்தூரி வந்திருந்தாள். இரண்டு பேருமாய் என்னுடைய அறையில், இருக்றி கேசட்டுக€யெல்லாம் போட்டுப் பாட்டாய்க் கேட்டுத் தீர்த்தோம். வணங்காமுடி, தமிழில் இராமாயணம் என்று இரண்டு வீடியோ கேசட்டுகள் அப்பா எடுத்து வந்தார். என்ன பிரமாத இராமாயணம்? அத்தனை கஷ்டப்பட்டு, யுத்தம் செய்த, ஆயிரக்கணக்கில் பலி கொடுத்து கடைசியில் எவனோ சொன்னான் என்று மனைவியைக் காட்டுக்கு அனுப்புன புண்ணியவானைத்தானே புராணமாய்க் காட்டுகிறார்கள்? இதை என்ன சினிமாவில் பார்க்கிறது? என்று திருப்பி அனுப்பி விட்டேன். நேற்றிரவு வெளிவாசல் படியில் உட்கார்ந்து மனசுக்குத் தோன்றின படியெல்லாம் வயலின் வாசித்துக் கையைப் புண்ணாக்கிக் கொண்டேன். அப்புறம் அம்மா திட்டிக் கொண்டே தேங்காய் எண்ணெய்த் தடவி விட்டாள். சொல்ல மறந்து விட்டேனே. லைப்ரரிக்குப் போயிருந்தேன். உங்கள் பாஷையில் ஆறு ''குப்பைகள்'' எடுத்து வந்தேன். அதில் ஜெயகாந்தனின் ''பாரிசுக்குப் போ'' என்ற குப்பை நன்றாக இருந்தது. இன்னொரு தடவை படிக்கலாம் என்று வைத்திருக்கிறேன். அப்புறம் வைசாலி அத்தை வந்திருந்தார். ''என்னடி, ஏதாவது விசேஷமா? என்று குடைந்தார். ''நீங்கள் வேறு, எனக்குக் குழந்தை பிறந்தால் அதற்கு அப்பா யாராக இருக்கும் என்று மண்டையை உடைத்துக் கொள்வதிலேயே என் வீட்டுக்காரர் ஆயுசை முடித்துக் கொள்வார்'' என்று மனசில் நினைத்துக் கொண்டேன், சொல்லவில்லை. நேற்று சாப்பாட்டு நேரத்தில் கடலையும் விரல் நகங்களையும் இணைத்து ஒரு கவிதை தோன்றியது, எழுதினேன். சுமாராய் வந்தது. யோசிக்காமல், பத்திரிகைக்கு அனுப்பி விட்டேன். வேறு.... வேறு என்ன? எனக்குப் பசிக்கிறது. சாப்பிடப் போகலாம். என்று நினைக்கிறேன். இன்னொரு விஷயம். ஊருக்குப் போன முட்டாள் எப்படியும் காய்ந்து போய்த் திரும்பி வருவாள் என நீங்கள் எதிர்பார்ப்பீர்கள் என்று எனக்குத் தெரியும். நாளைக்கு மனோகரிடம் சொல்லி எம்.ஏ. (இலக்கியம் தான்) அப்ளிகேசன் ஃபாரம் வாங்கி வரச் சொல்லப் போகிறேன். அதாவது மேலே படிக்கலாம் என்று உத்தேசப்படுகிறேன். காற்றை உண்டு, கனவைச் சுவாசித்துக் கொண்டிருக்கலாம் பாருங்கள்! நானில்லா விட்டாலும் உங்களால் உயிர்வாழ முடியும் என்பது எனக்குத் தெரியும். ஆனால் சந்தேகப்படாவிட்டால் செத்துப் போய் விடுவீர்களே! ஆகவே ஸ்ரீமான் சந்திரசேகர் அவர்களே! எங்கேயாவது பார்க்கிலோ, பீச்சிலோ ஓர் ஓரமாய் உட்கார்ந்து என்னைத் தொந்தரவு செய்யாமல், எதையாவது சந்தேகப்பட்டுக் கொண்டிருங்கள். வந்தனம். - கிருத்திகா பி.ஏ. ஆத்திரத்தையெல்லாம் கொட்டி எழுதி விட்டேன். ஆனால் இதைப் போஸ்ட் செய்வதா வேண்டாமா என்று இதை எழுதும் இந்த நிமிடம் வரை தீர்மானிக்கவில்லை. ''எல்லாவற்றையும் மறந்து விட்டேன். திருந்தி, புதுசாய் வந்திருக்கிறேன், நீயும் வா'' என்று நீங்கள் வந்து அழைத்தால் எல்லாப் பெண்களையும் போல நானும் கரைந்து போய் ''போனால் போகட்டும் விடுங்க'' என்று உங்களுடன் வந்த விடுவேன் என்றுதான் தோன்றுகிது. உள்ளூர அப்படி நடக்கக் கூடாதா என்கிற நப்பாசை இருப்பதை உணர முடிகிறது. எப்படியாயினும், தன்மானத்தை விடாமல், திடமாய் யோசித்து நல்ல முடிவாய் எடுப்பேன் என்று நம்பிக்கைப்படுகிறேன். நன்றி: சந்திரக்கற்கள்
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'ஸ்ரீமான் கணவருக்கு ஒரு கடிதம்' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: கற்றறிந்த பண்டிதர், பரிசல் ஓட்டுபவன் தலைப்பு: ஞான பண்டிதர்
ஒரு கற்றறிந்த பண்டிதர். அவர் தமக்கு நிகர் யாருமில்லை என்ற கர்வ குணமுள்ளவர். படிப்பறிவில்லாதவர்களைக் கண்டால் அவருக்கு அறவே பிடிக்காது. ஒரு நாள் அவர் ஓரு அகலமான ஆற்றைக் கடந்து அக்கரை செல்ல வேண்டியிருந்தது. பரிசலில் போவதைத் தவிர வேறு வழிகள் இல்லை. பரிசல் ஓட்டுபவன் ஒரு பரம ஏழை. பார்ப்பதற்கு மிகச் சாதாரணமாயிருந்தான். அவன் படிப்பறிவில்லாதவன் என்பது அவன் பேச்சிலேயே தெரிந்தது. பண்டிதருக்கு அவனை விட்டால் வேறு வழி தெரியாததால் "அக்கரையில் உள்ள ஊரில் விட்டு விடப்பா" என்று சொல்லிப் பரிசலில் ஏறிக்கொண்டார். பரிசலும் ஆற்றுக்குள் செல்ல ஆரம்பித்தது. பரிசல் ஓட்டுபவன் மௌனமாக பரிசலை செலுத்திக் கொண்டிருந்தான். பண்டிதருக்குச் சும்மாயிருக்க முடியவில்லை. பரிசல்காரனைப் பார்த்து "நீ வேதம் படித்திருக்கிறாயா?" என்று கேட்டார். "அப்படின்னா என்ன சாமி?" என்று பரிசல்காரன் திருப்பிக் கேட்டான். "வேதம் படிக்காதவன் வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா?" என்று பண்டிதர் கிண்டலாகக் கேட்டார். பின்னரும் சும்மாயிருக்காமல் "சரி உனக்கு கீதை தெரியுமா?" என்றார். பரிசல்காரன் விழித்தான். "என்னப்பா உன் வாழ்க்கை? கீதை கூடப் படிக்காமல் நீ என்னத்தைச் சாதிக்கப் போகிறாய்" என்று மறுபடியும் பரிகசித்தார். இன்னூம் கொஞ்சம் தூரம் பரிசல் ஆற்றில் சென்றது. உனக்கு "ராமாயணம், மஹாபாரதம் கதையாவது தெரியுமா?" என்று அவனை மறுபடியும் வம்புக்கு இழுத்தார். அவன் பொறுமையாக "சாமி, நமக்கு இந்தப் பரிசலை ஓட்டுவதைத் தவிர வேறு எதுவும் தெரியாதுங்க!" என்று பதில் சொன்னான். "இப்படிப் படிப்பறிவே இல்லாமல் இருக்கிறாயே. நீ வாழ்ந்து என்ன பயன்?" என்று அவனை இகழ்ந்தார். இதற்குள் பரிசல் ஆற்றின் நடுவே வந்து விட்டிருந்தது. ஆற்றின் வேகத்தில் பரிசல் திடிரென தத்தளிக்க ஆரம்பித்தது. பரிசல்காரன் பண்டிதரைப் பார்த்து "சாமி! உங்களுக்கு நீச்சல் தெரியுமா?" என்று கேட்டான். பண்டிதர் "தெரியாதே! ஏனப்பா?" என்று கேட்டார். பரிசல்காரன் "ஏன் சாமி? இம்புட்டு படிச்சிருக்கிங்களே! உங்களுக்கு நீச்சல் தெரியலையே! இப்ப ஆத்துல வெள்ளம் வந்துருச்சே. பரிசல் தாங்காது. நீந்த முடியலைன்னா வாழ்க்கைக்கே ஆபத்தாச்சே!" என்று சொல்லிவிட்டு ஆற்றில் குதித்து நீந்திப் போய்விட்டான்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: கந்தன் என்பவரிடம் இரண்டு நல்முத்துக்கள் இருந்தன. அவை இரண்டும் விலை மதிப்பு உடையவை. நீண்ட நாட்களாக அவைகளை அவர் காப்பாற்றி வந்தார். ஒரு முறை அவர் வியாபார விஷயமாக வெளியூர் செல்ல நேரிட்டது. அந்த இரண்டு முத்துக்களையும் வீட்டில் வைத்து விட்டுச் செல்ல அஞ்சினார். தாம் இல்லாத சமயத்தில் திருடர் எவராவது வீட்டில் புகுந்து திருடிவிடக் கூடும் என்று பயந்த அவர் தம்முடைய நண்பனான கேசவனிடம் அந்த முத்துக்களை கொடுத்து வியாபார விஷயமாக வெளியூர் செல்வதாகவும் திரும்பி வந்த உடன் வாங்கிக் கொள்வதாகவும் சொல்லிச் சென்றார். கந்தன் சில நாள் கழித்து ஊருக்கு திரும்பி வந்து கேசவனிடம் தான் கொடுத்து வைத்திருந்த நல்முத்துக்களைத் திருப்பித் தருமாறு கேட்டார். ஆனால் கேசவனோ "நல்முத்துக்களா? யாரிடம் கொடுத்தாய்? கனவு ஏதாவது கண்டுவிட்டு வந்து உளறுகிறாயா?" என்று கேட்டுவிட்டான். தன் நண்பன் இவ்வாறு பேசுவான் என்று சற்றும் எதிர்பாராத கந்தன் மிகவும் மனம் வருந்திப்போனான். இனி இவனிடம் பேசிப் பிரயோஜனம் இல்லை என்று முடிவு செய்தவன் நேராக மரியாதை இராமனிடம் சென்று முறையிட்டான். வழக்கை பொறுமையாகக் கேட்டறிந்த மரியாதை இராமன் அந்த வழக்கில் இருந்த சில கஷ்டங்களை எடுத்துச் சொன்னார். "அய்யா, உங்கள் வழக்கில் நான் எப்படித் தீர்ப்பு வழங்க முடியும்? நீங்கள் விலையுயர்ந்த முத்துக்களைக் கேசவனிடம் கொடுத்த போது பார்த்த சாட்சிகள் எதுவும் இல்லை. அப்படி இருக்கும் போது கேசவனிடமிருந்து எப்படி விலை உயர்ந்த முத்துக்களை வாங்க முடியும்? நீங்கள் வீட்டுக்குப் போங்கள். வேறு உபாயம் ஏதாவது செய்வோம்" என்று கூறி கந்தனை வீட்டுக்கு அனுப்பி வைத்தான் மரியாதை இராமன். மறுநாள் ஓர் ஆள் அனுப்பிக் கேசவனைக் கூட்டி வரச்சொன்னான் மரியாதை இராமன். கேசவன் வந்ததும் அவனிடம் ஒரு சிறு பேழையைக் கொடுத்தார். அதற்குள் நிறைய முத்துக்கள் இருந்தன. "என்னிடமிருந்த முத்துமாலையின் சரம் அறுந்து விட்டது. நீங்கள் முத்துக்களைக் கோர்ப்பதில் நிபுணரென்று கேள்விப்பட்டேன். இதில் 100 முத்துக்கள் உள்ளன. இதை மாலையாகக் கோர்த்து வந்து கொடுங்கள்" என்றான் மரியாதை இராமன். கேசவன் மரியாதை இராமன் கொடுத்த பேழையுடன் வீட்டுக்கு வந்தான். பேழையை ஒரு பெட்டியின் மேல் வைத்துவிட்டு அவசரமாகக் கொல்லைப் புறம் சென்றான். திரும்பி வந்து பார்த்த போது அந்தப் பேழை கீழே விழுந்திருந்தது. அப்பொழுது தான் ஒரு பூனை அறையில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தது. பெட்டிக்கு மேல் உள்ள பால் உரிக்காகப் பூனை தாவும் போது பேழை விழுந்திருக்க வேண்டுமெனக் கேசவன் நினைத்தான். உடனே கீழே விழுந்து சிதறிக் கிடந்த முத்துக்களை ஒன்று விடாமல் பொறுக்கி எடுத்து எண்ணினான். அதில் 98 முத்துக்களே இருந்ததைப் பார்த்து ஒரு கனம் அதிர்ந்தான் கேசவன். 'அய்யோ! நீதிபதி 100 முத்துக்கள் கொடுத்தனுப்பினாரே! அவற்றில் 2 குறைகிறதே! எங்கே போயிருக்கும்' என்று வீடெல்லாம் ஓர் இடம் பாக்கி விடாமல் தேடினான். கடைசி வரையில் 2 முத்துக்கள் கிடைக்கவேயில்லை.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'முத்துக்களை மோசடி செய்த வழக்கு' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: வீராயி, வீராயியின் கணவர், தாம்பூலம், வீராயி, விறகுக் கட்டு தலைப்பு: என்ன இந்த வாழ்க்கை
நாளுக்குநாள் மெலிந்து கொண்டே போகும் தினசரிக்காலண்டராய் இளைத்துப் போன தேகம். வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு கலவையை ஆசைத்தீரச் சேர்த்து கடைவாயில் அதப்பும் தாம்பூலம். வாய் அசைபோட அசைபோட தாம்பூல எச்சிலில் குளித்த கருஞ்சிவப்பு உதடுகள். மழைகாணாமல் விருவோடிக் கிடக்கும் கரிசல் நிலமாய் எண்ணெய் தடவாத பரட்டைத் தலையுடன் விறகு பொருக்கப் புறப்பட்டாள் வீராயி. மணி பதினொன்றிருக்கும். இரண்டு ஜென்மமாய் பூமியில் வாழ்ந்து தோசைத் தடிமனாய்த் தேய்ந்து போன இரப்பர் செருப்பை மாட்டிக் கொண்டு வீராயி நடந்த நடையில் ஒரு வெறித்தனம் இருந்தது. வேகமான நடைக்கு ஒத்துவராததால் முழங்கால் தெரிய சேலையை தூக்கிச் சொருகிக் கொண்டாள். அரிவாளையும் கயிரையும் கக்கத்தில் இடுக்கிக் கொண்டு ஊரைத் தாண்டி, ஊத்தோடை தாண்டி, வேடியப்பன் கோயில் தாண்டி இருபது நிமிச நடைக்குப் பிறகு கொத்துக் கொத்து முள்ளோடு குலுங்கி நிற்கும் கருவேலங் காடு புகுந்து, திசையெல்லாம் தன் கண்ணொளியை வீசினாள். கண்ணில் பட்டு, கையில் கிடைத்த மஞ்சனத்தி, கருவேலஞ்சுள்ளிகளை கணிசம் பார்க்காமல் பொருக்கிக் குவித்தாள். கயிரை இரண்டு கொடியாக விரித்து, விறகுக் குச்சிகளை அற்புதமாய் ஒழுங்குபட அடுக்கி, நீளமான கட்டுக்கட்டி நிமிர்ந்த போது, இனம் புரியாத திருப்தி ஒன்று தன் நெஞ்சில் குடிபுகுந்ததாய் உணர்வு ஏற்பட்டது வீராயிக்கு. விறகுக் கட்டைத் தூக்கிவிட ஆள்தேடி சுற்றி பார்வையை வீசினாள். தூரத்தில் கூலியாட்கள் சிலர் களைபறித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களை கூப்பிடவும் பயம். "ஒரு வேளை தோட்டக்காரன் பார்த்துவிட்டால் கண்டபடி திட்டுவானே" என்ன செய்வது?" என்று சிறியதொரு சிந்தனைப் போராட்டம் நடத்தினாள். எப்படியாவது தூக்குவதென்று முடிவு செய்தவளாய் காலை அகல விரித்து, ஒருக்களித்து நின்று, உயிரையெல்லாம் ஒன்றாய்த் திரட்டி ஒரு நரம்புக்குள் செலுத்துவதாய் தன் தேகத்திற்கு வலிமையேற்றினாள். பெருங்காற்றை உள்ளிழுத்து நுரையீரல் நிரப்பிக் கொண்டாள். விறகுக் கட்டை செங்குத்தாய் நிறுத்தி கட்டின் பாதியில் குனிந்து தன் தலை பொருத்தி, இருகப் பிடித்துக் கொண்டு நிமிர்ந்தாள். தலைக்கேறியது விறகுக் கட்டு. சுட்டெரிக்கும் நெருப்புக் கோடாரியை கையில் வைத்துக் கொண்டு மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது மத்தியான வெயில். வரண்ட தாகம் தொண்டையைச் சுரண்டிக் கொண்டிருந்தது. தலைமேல் இருந்த பாரம் பிடரித்தலையை நெரித்துக் கொண்டிருந்தது. விரைந்து வீடு செல்லும் வேட்கை கால்களுக்குச் சிறகு முளைக்க வைத்தது. ஓடுவதைப் போல நடந்தாள்; வீராயி எடுத்து வைத்த ஒவ்வொரு எட்டும் பூமியை புல்லரிக்கும்படி செய்து புழுதியைக் கிளப்பியது. எடுத்த காலைப் பதிக்கும் முன் இன்னொரு காலை எடுத்து வேகமாக நடைபோட்டாள். திடீரென செருப்பையும் மீறி குதிங்காலில் நறுக்கென்று இறங்கியது கொடூர முள்ளொன்று. கண்ணுக்கு மட்டும் இருட்டியதாய் ஒரு கருப்பு நிறம் தோன்றி மறைந்தது. உச்சியில் யாரோ ஓங்கி அடித்து விட்டது போன்ற பிரம்மை. தேகத்தில் மின்சாரம் தீண்டியதாய் மிரட்சி, காலில் குத்திய ஒரு முள் உடம்பெல்லாம் குத்தியதாய் சொல்லமுடியாத வலி. "அய்...யய்யோ அம்மா" - என சக்தியை ஒன்ற கூட்டி ... குரல்வளை... திடப்படுத்தி... வீராயி கதறி அலறிய போது, அந்தக் காடெல்லாம் எதிரொலித்தது. "என்ன இந்த வாழ்க்கை" என வீராயி சலிப்படைந்து முணுமுணுத்த வார்த்தைகள் அந்த எதிரொலியில் கரைந்துகொண்டிருந்தது.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: ஒரு நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அந்நாட்டு அமைச்சர் எது நடந்தாலும் “எல்லாம் நன்மைக்கே!” என்று சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான். ஒரு நாள் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அரசன் மாம்பழம் ஒன்றைக் கத்தியால் அறுத்தான். தவறுதலாகக் கத்தி அவனின் சுண்டு விரலை அறுத்து விட்டது. இரத்தம் வெளியேறி வலி தாங்க முடியாமல் அரசன் துடித்தான். வழக்கம் போல் அமைச்சர், “அரசே! எல்லாம் நன்மைக்கே!” என்றான். இதைக் கேட்டுக் கோபமடைந்த அரசன், “நான் விரல் வெட்டுப்பட்டுத் துடிக்கிறேன். எல்லாம் நன்மைக்கே என்று சொல்வதா?, காவலர்களே அமைச்சரைச் சிறையில் கொண்டு போய் அடைத்து விடுங்கள்” என்று உத்தரவிட்டான். காவலர்களும் அமைச்சரை அரசனின் உத்தரவுப்படி சிறையில் கொண்டு போய் அடைத்து வைத்தனர். அப்போதும் அமைச்சர், “எல்லாம் நன்மைக்கே!” என்றார். நாட்கள் பல கடந்தன. வேட்டையாடுவதில் ஆர்வமுடைய அரசன் தனியாகக் காட்டிற்குச் சென்றான். அங்கே மலைவாசிகள் காளிக்குப் பலி கொடுப்பதற்காக ஒருவனைத் தேடிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் அரசன் சிக்கிக் கொண்டான். அங்கு வந்த கோவில் பூசாரி பலி கொடுப்பதற்காக மலைவாசிகள் கொண்டு வந்த அரசனை முழுமையாகச் சோதித்தான். பின்பு, “காளிக்கு எந்தக் குறையுமில்லாதவனை மட்டுமே பலியிட முடியும். இவனோ சுண்டு விரல் பாதியாக உள்ளான். இவனை விட்டு விடுவோம்” என்றான். விடுதலை பெற்ற அரசன்! அரண்மனைக்கு வந்தான். உடனடியாக அமைச்சரை விடுவிக்க உத்தரவிட்டான். நடந்ததை எல்லாம் அமைச்சரிடம் சொன்ன அரசன், “சுண்டு விரல் வெட்டுப்பட்டதால் உயிர் பிழைத்தேன். அன்று எல்லாம் நன்மைக்கே என்று நீர் சொல்லியதன் உண்மை உணர்ந்தேன். உம்மைச் சிறையில் அடைத்ததற்காக வருந்துகிறேன்” என்றான். அரசே என்னைச் நீங்கள் சிறையில் அடைத்ததும் நன்மைக்கே. எப்பொழுதும் உங்களைப் பிரியாமலிருக்கும் நான், என்னைச் சிறையிலடைக்காமல் இருந்திருந்தால் உங்களுடன் காட்டிற்கு வந்திருப்பேன். அந்த மலைவாசிகள் என்னையும் உங்களுடன் சிறைப்படுத்தி இருப்பார்கள். விரல் வெட்டுப் பட்டதால் நீங்கள் உயிர் பிழைத்தீர்கள். எந்தக் குறையும் இல்லாத என்னை அவர்கள் பலியிட்டு இருப்பார்கள். நீங்கள் என்னைச் சிறையில் அடைத்ததால் நான் உயிர் பிழைத்தேன். “எல்லாம் நன்மைக்கே!” என்றார் அவர்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'எல்லாம் நன்மைக்கே' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: முல்லா, கூரை, மனிதன், மருத்தவமனை, காயம் தலைப்பு: பாவத்தின் பலன்
ஓரு தடவை முல்லா தெருவழியே நடந்து சென்று கொண்டிருந்தார். ஒரு வீட்டின் கூரையில் நின்று கொண்டு வீட்டைப் பழுதுபார்த்துக் கொண்டிருந்தன் ஒருவன் கால் தவறிக் கீழே விழுந்தான். அந்த நேரமாகப் பார்த்து அங்கே நடந்து சென்று கொண்டிருந்த முல்லாவின் மீது அந்த மனிதன் வந்து விழுந்தான். விழுந்தவனுக்கு எந்தவித அடியோ காயமோ ஏற்படவில்லை. ஆனால் முல்லா பயங்கரமான அடிபட்டுப் படுகாயமடைந்தார். முல்லாவை அருகிலிருந்த மருத்தவமனைக்கு சிலர் எடுத்துச் சென்று சிகிக்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். முல்லாவுக்கு பலமாக அடிபட்டு மருத்துவமனையில் கிடக்கிறார் என்ற செய்தியறிந்து நண்பர்களும் பொதுமக்களும் திரளாகச் சென்று முல்லாவைச் சந்தித்து ஆறுதல் கூறினர். " என்ன நடந்தது?" என்று கூட்டத்திலிருந்த ஒருவர் கவலையோடு கேட்டார். " எல்லாம் உலக நியதிப்படிதான் நடந்தது. உலகத்தில் யாரோ ஒருவன் பாவமோ குற்றமோ செய்ய அவன் தப்பித்து கொள்கிறான். ஆனால் நிரபாரதி பாவத்தின் பலனை அல்லது குற்றத்திற்கான தண்டணையை அனுபவிக்கிறான். அது மாதிரி தான் இதுவும் நான் கூரை மேலிருந்து விழவில்லை ஆனால் விழுந்தவனுக்குக் காயம் இல்லை விழாத எனக்கு காயம் ஏற்பட்டது" என்று சிரித்துக் கொண்டே முல்லா பதிலளித்தார்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: அக்பரும் – பீர்பாலும நாட்டின் நிலைப்பற்றி ஆலோசனை செய்து கொண்டிருக்கும் போது வாக்கு வாதம் நீடித்து, மறுநாளும் தொடர்ந்தது.பீர்பால் மறுநாள் அரச சபைக்குச் சென்றால் மாறுபட்ட கருத்தை கூறும்போது மன்னருக்குக் கோபம் வந்து நாடு கடத்தினாலும் கடத்துவார் என நினைத்து, அவசர வேலையாக வெளியூர் செல்வதினால் வர இரண்டு மாதங்கள் ஆகும் என்பதை தெரிவித்துவிட்டு டில்லிக்குக் கிழக்கே உள்ள இருநூறு மைல் தொலைவில் இருந்த ஒரு ஊருக்குச் சென்று தற்காலிகமாக வசிக்கலானார். ஒருநாள் – அந்நாட்டின் அங்காடிக்குப் பக்கம் சென்றுக் கொண்டிருந்தார் பீர்பால்.அங்கே ஒருவன் “ஒரு உபதேசம் நூறு வெள்ளி காசுகள்” என்று கூவிர் கொண்டிருந்தான்.அவன் அருகில் சென்று உபதேசம் பற்றி விவரம் கேட்டார் பீர்பால்.அவன் “தன்னிடம் அருமையான நான்கு உபதேச மொழிகள் வைத்திருக்கிறேன். இந்த நான்குக்கும் நானூறு வெள்ளிக் காசுகள்” என்றான்.அது என்ன உபயோகமான உபதேச மொழிகள் – கேட்டுத்தான் பார்ப்போமே என நினைத்து அவனிடம் நூறு வெள்ளிக் காசுகளைக் கொடுத்து எனக்கு ஒரு உபதேச மொழியை உபதேசியுங்கள் என்றார் பீர்பால். “ஒரு விஷயம் சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் அதனைச் சிறியது என்று எண்ணிவிடக் கூடாது!” என்றான். மீண்டும் நூறு வெள்ளிக் காசுகளைக் கொடுத்து. “இரண்டாவது உபதேச மொழியை உபதேசியுங்கள்” என்றார் பீர்பால் “எவரிடமாவுத் தாங்கள் குறை, குற்றம் கண்டால் அதனை மற்றவர்க்கு வெளிபடுத்தக் கூடாது!” என்றான்.இரண்டு உபதேசமும் பயனுள்ளதாக இருக்கிறதே. சரி மூன்றாவது உபதேசத்தைக் கேட்கலாம் என்று அவனிடம் மூன்றாவதாக மேலும் நூறு வெள்ளிக் காசுகளைக் கொடுத்தார். அவன், “தங்களை யாராவது விருந்திக்கு அழைத்தால் மறுப்பேதும் கூறாது கையில் எந்த வேலையிருந்தாலும் பின்பு வந்து பார்த்துக் கொள்ளலாம் என்று உடனே விருந்துக்குச் சென்றுவிட வேண்டும்” என்றான்.இன்னும் இருப்பது ஒரு உபதேச மொழிதான் என்று மறுபடியும் நூறு வெள்ளிக் காசுகளைக் கொடுத்து நான்காவது உபதேச மொழி என்ன? என்றார் பீர்பால். “யாரிடமும் அடிமையாக வேலைச் செய்யாதே!” என்றான். நாநூறு வெள்ளிக் காசுகளைக் கொடுத்து நான்கு உபதேச மொழிகளைக் கேட்டுத் தெரிந்து கொண்டு சென்ரு கொண்டிருக்கும்போது. களைப்பு மேலிட ஒரு மரத்திந் நிழலில் உறங்கினார்.அவ்வழியாகக் குதிரையில் அந்நாட்டின் சிற்றரசன் வந்துக் கொண்டிருந்தான். மரத்தின் நிழலில் பீர்பால் உறங்குவதைக் கண்டு குதிரையிலிருந்து கீழே இறங்கி அவரிடம் சென்றான்.மதிப்பிற்குரிய பீர்பால் அவர்களே என்னைத் தெரிகிறதா என்று வினவினான்.ஏற்கெனவே அக்பரிடம் படைத் தலைவனாக இருந்து இந்நாட்டு மன்னாக ஆக்கப்பட்டவர் என்பது தெரிந்துள்ளமையால், தாங்கள் இந்நாட்டின் மன்னர் அல்லவா என்றார் பீர்பால். பீர்பாலின் மதிநுட்பமானப் பதிலைக் கண்டு தன்னுடைய அரசவையில் முக்கியப் பதவி வகிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான் அவரும் அந்தப் பதவியை ஒப்புக் கொண்டார்.ஒருநாள் – பீர்பால், அரசாங்க அலுவல் காரணமாக அந்தப்புரத்திற்குச் செல்ல நேரிட்டது.அச்சமயம் காவல் அதிகாரியும், அந்தப்புரத்துப் பணிப்பெண் ஒருவளும் அளவுக்கு மீறி மது அருந்தி விட்டு நிலைத்தடுமாறி ஆடை இன்றி அருவெறுப்புடன் படுத்திருந்தனர். இவர்களின் அவல நிலையைக் கண்ட பீர்பால் தன்னுடைய மேல் சால்வையை அவர்களின் மீது போர்த்தி விட்டு சென்றார். மயக்கம் தெளிந்து பார்த்த அவர்கள், தங்கள் மீது பீர்பாலின் விலையுயர்ந்த சால்வை போர்த்தப்பட்டிருப்பதைக் கண்டு பீதியடைந்தனர்.இந்த விஷயம் மன்னருக்கு பீர்பால் தெரிவித்து விட்டால் மயங்கிய நிலையில் இருந்த இருவருக்கும் நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்ற யோசனையுடன் பொய்யான புகார் ஒன்றைக் கூற அந்தப் பெண் மன்னரிடம் சென்றாள். மன்னர் அவர்களே அந்தப்புரத்தில் பணிப்புரிந்து கொண்டிருக்கும் போது பீர்பால் அவர்கள் பலவந்தப் படுத்தி என்னைக் கெடுத்து விட்டார். இதோ பாருங்கள் அவரது சால்வை என்று கூறினாள்.சால்வையுடன் பணிப்பெண் கூறிய குற்றச்சாட்டு உண்மையென்று எண்ணி சற்றும் யோசனை செய்யாமல் ஒரு கடிதம் எழுதி பீர்பாலிடமே கொடுத்து, இந்த ரகசிய கடித்த்தை சேனாதிபதியிடம் சேர்த்து விடுங்கள் என்றான் மன்னன்.மன்னன் கொடுத்த அந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு சேனாதிபதியின் இருப்பிடத்திற்குச் சென்றார். செல்லும் வழியில் ஒரு நண்பர் பீர்பாலைப் பார்த்து மேன்மை மிக்கவரே தாங்கள் தயவு செய்து எனது வீட்டில் நடைபெறும் விருந்தில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.ஐயா எனக்கு முக்கியமான அரசாங்க வேலையுள்ளது. இந்தக் கடிதத்தை உடனடியாக சேனாதிபதியிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்றார் பீர்பால்.அச்சமயம் அந்தப்புரத்தில் அலங்கோலமாக பெண்ணுடன் மதியிழந்து படுத்திருந்த காவல் அதிகாரி அங்கு வந்திருந்தார். பீர்பால் அவர்களே அந்த அவசரக் கடித்தை இப்படிக் கொடுங்கள் அதோ வருகிறாரே காவல் அதிகாரி தனக்கு வேண்டியவர். அவரிடம் கொடுத்தால் உடனே சேனாதிபதியிடம் சேர்த்து விடுவார் என்று கூறி பீர்பாலிடம் இருந்த கடிதத்தை வாங்கி காவல் அதிகாரியிடம் கொடுத்தார் அந்த நண்பர்.காவல் அதிகாரியும், கடிதத்தை சேனாதிபதியிடம் உடன் சேர்த்து விடுகிறேன் என்று கூறி கடிதத்தைக் கொண்டு சென்றான்.பீர்பால் அவர்கள் நண்பரின் விருந்தில் தட்டாது கலந்து கொண்டார். விருந்தும் சிறப்பாக நடந்தது.கடிதத்தை வாங்கிச் சென்று சேனாதிபதியிடம் கொடுத்த காவல் அதிகாரியின் தலை வெட்டப்பட்டு தட்டில் வைத்து விருந்தில் இருந்த பீர்பாலிடம் கொடுத்தார் சேனாதிபதி. பீர்பால் அவர்களே மன்னரின் கடிதப்படி இந்தக் கடிதத்தைக் கொண்டு வருபவரின் தலையைத் துண்டிக்கும்படி குறிப்பிட்டுள்ளமையால்த் துண்டித்துக் கொடுத்துள்ளேன் என்று தட்டுடன் துண்டித்த தலையைப் பீர்பாலிடம் சேனாதிபதி கொடுத்தான்.சேனாதிபதியிடம் தட்டைப் பெற்றுக் கொண்ட பீர்பால் நேராக மன்னரின் காலடியில் வைத்தார்.பீர்பாலை உயிருடன் கண்ட மன்னர் ஆச்சர்யமடைந்தார்.உங்களுடைய தலையை அல்லவா வெட்டும்படி கடிதம் எழுதி இருந்தேன். காவல் அதிகாரியின் தலை வெட்டுண்டது எப்படி? என வினவினார் மன்னர். அரசன் தவறு செய்யலாம் – ஆண்டவன் எப்போதும் தவறு செய்வதில்லை. பணிப்பெண்ணைக் கெடுத்தவன் இந்த காவல் அதிகாரிதான். உண்மையான குற்றவாளிக்கு ஆண்டவன் தந்த தண்டனையாகும் இது என்றார் பீர்பால்.முன்பின் யோசனை செய்யாமல் நடந்து கொண்டதற்கு மன்னன். பீர்பாலிடம் மன்னிக்கக் கோரி எப்போதும் போன்று தன்னிடம் இருக்க கோரினான்.இனி நான் இங்கே இருக்க முடியாதுய சக்ரவர்த்தியை விட்டு பிரிந்து வந்து இரண்டு மாதங்கள் கடந்து விட்டது. ஆகையினால் நான் டில்லி செல்ல வேண்டும் என்று கூறி பீர்பால் புறப்பட்டார்.காசு கொடுத்து உபதேசம் பெற்றதுதான் இன்று தன் உயிரைக் காத்தது – இனி எவரிடமும் வேலை செய்யக் கூடாது என்று மனவுறுதியுடன் அக்பரின் அரசவையைச் சென்றடைந்தார் பீர்பால்.இரண்டு மாதம் கழித்து வந்த நண்பர் பீர்பாலைக் கண்டதும் அக்பர் பெருமகிழ்ச்சி கொண்டார்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'ஆண்டவன் அளித்த தண்டனை' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: திடீரென்று பரமார்த்தரின் படுக்கை அறை தீப்பிடித்து எரிந்து போனது. அத்துடன் குருவின் தாடியும் கொஞ்சம் பொசுங்கி விட்டது! அதைக் கண்டு சீடர்கள் ஐவரும் கவலையுடன் இருந்தனர். குருதேவா! உங்கள் மூன்றடி நீளமுள்ள தாடி, இப்படிக் குறுந்தாடியாக ஆகிவிட்டதே! என்று அழுதான், மட்டி. போனால் போகட்டும். இதற்காகக் கவலைப் படாதீர்கள். மீசை குறைந்தாலும் வீரம் குறையாது. தாடி குறைந்தாலும் தொப்பை குறையாது, என்ற பழமொழி உங்களுக்குத் தெரியாதா? இதோ என் தொப்பை அப்படியே இருக்கிறது பாருங்கள், என்றார், பரமார்த்தர். அதைக் கேட்டு சீடர்கள் மகிழ்ந்தனர். குருவே! இப்படியே இருந்தால் வயிற்றைக் கவனிப்பது எப்படி? எனக் கேட்டான் மடையன். குருநாதா! நேற்று அரசரின் பிறந்த நாள் விழா நடைபெற்றது. அப்போது, உடல் ஊனம் உள்ளவர்களுக்கு வேலைதரும் திட்டம் ஒன்றை அறிவித்தார்கள். அதனால் எப்படியாவது நாங்கள் உடல் ஊனம் உள்ளவர்கள் மாதிரி நடித்துச் சம்பாதித்து வருகிறோம், என்றான், முட்டாள். சுரி. எல்லோரும் ஒன்றாகப் போனால்தான் தொல்லை வருகிறது. அதனால் தனித்தனியே போய் வாருங்கள். ஊமை மாதிரியும், செவிடு மாதிரியும், குருடாகவும், நொண்டியாகவும் நடியுங்கள். மண்டு மட்டும் எனக்குத் துணையாக இங்கேயே இருக்கட்டும், என்று கூறி, தம் தொப்பையில் வழிந்த வியர்வையைத் தொட்டு வீரத் திலகம் இட்டு அனுப்பினார், குரு. படைத் தளபதியிடம் சென்ற மட்டி, ஏதாவது வேலை தரும்படி கேட்டான். நான் ஒரு ரகசியம் சொல்கிறேன். அதை அரசரிடம் சொல்லி விட்டு வா, என்றார், தளபதி. செவிடனாக நடித்தால் வேலை கிடைக்கும் என்று நினைத்த மட்டி, என்ன? புடலங்காயா? நான் பார்த்தது இல்லையே! என்றான். தளபதி மறுபடி ரகசியத்தைச் சொன்னார். ஓகோ! மன்னருகூகு ஒரே ஒரு மூக்குதான் இருக்கிறதா? தெரியுமே! என்றான், மட்டி. தலையில் அடித்துக் கொண்ட தளபதி, இந்தச் செவிட்டுப் பயலை வைத்துக் கொண்டு என்ன செய்வது? என்று முணுமுணுத்தார். அதைக் கேட்ட மட்டிக்குக் கோபம் வந்தது. யார் செவிடன்? நீ செவிடன்! உங்க ராஜா செவிடன்! அவங்க தாத்தா செவிடன்! என்று திட்டினான். அவ்வளவுதான். அடுத்த நிமிடம், மட்டியின் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுங்கள், என்று கட்டளையிட்டார், தளபதி. அரசாங்க வைத்தியரிடம் போனான், மடையன். நான் உங்களுக்கு உதவியாக இருக்கிறேன், என்று கூறினான். சரி... சீக்கிரம் ஓடிப் போய் சில மூலிகைகளைப் பறித்து வா, என்றார், வைத்தியர். எப்படியும் வேலை கிடைத்துவிட வேண்டும் என்று நினைத்தான், மடையன். அதனால், நிதானமாக எழுந்து, நொண்டி போல நடித்தான். அடப்பாவி! பாம்பு கடித்த ஆளுக்குப் பச்சிலை பறித்து வரச் சொன்னால், இப்படி நொண்டுகிறாயே? என்று திட்டினார், வைத்தியர். மடையனுக்குக் கோபம் ஏற்பட்டது. யாரைப் பார்த்து நொண்டி என்றாய்? இதோ பார் என் பலத்தை, என்றபடி தன் கால்களால் வைத்தியரை எட்டி உதைத்தான். தூரப் போய் விழுந்த வைத்தியர், யாரங்கே... என்னை ஏமாற்றிய இவனைத் தூணில் கட்டி வைத்து, சுற்றிலும் நூறு கழுதைகளை அவிழ்த்து விடுங்கள். எல்லாம் சேர்ந்து இவனை உதைக்கட்டும் என்று ஆணையிட்டார். தலைமைப் புலவரிடம் போய் சேர்ந்தான், முட்டாள். பழைய ஓலைகளில் எழுதி இருப்பதைப் படித்துச் சொல்ல வேண்டும். இதுதான் உன் வேலை, என்றார் புலவர். இவரிடம் குருடனைப் போல் நடித்தால் கடைசி வரையில் வேலையில் இருக்கலாம், என்று முடிவு செய்தான், முட்டாள். புலவர் ஓர் ஓலையைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார். முட்டாளோ, ஒரு கண்ணை மூடிக் கொண்டு, ஒரு கண்ணை உருட்டிப் பார்த்து, கூஜா கோணியுடன் அம்மன ஆலயம் சென்றார், என்று படித்தான். அட முட்டாளே! ராஜா ராணியுடன் அம்மன் ஆலயம் சென்றார், என்பதைத் தப்பும் தவறுமாகப் படிக்கிறாயே, உனக்கென்ன கண் குருடா? என்று கேட்டார் புலவர். புலவா! என் கண்கள் ஒன்றும் குருடு இல்லை! இதோ பார்! என்றபடி இரண்டு கண்ணையும் திறந்து காட்டினான், முட்டாள். என்னையா ஏமாற்றினாய்? உன்னை என்ன செய்கிறேன் பார், என்ற புலவர் இவனை இழுத்துச் சென்று இரண்டு கண்களிலும் சூடு போடுங்கள் என்று உத்தரவிட்டார். மூடனோ, நேராக அரசனிடமே சென்றான். ஊமை மாதிரி நடித்தால் வேலை கிடைத்து விடும் என்று நம்பி, பேசாமல் நின்றான். என்ன வேண்டும்? என்று கேட்டான் மன்னன். அப்போதும் பேசவில்லை மூடன். நான் கேட்கிறேன். நீ பேசாமல் நிற்கிறாயே? ஊமையா? என்று கேட்டான், அரசன். பெப்...பெப்... பே..., என்று ஊமை மாதிரி பேசினான், மூடன். ஐயோ பாவம்! ஊமை போலிருக்கிறது, என்றான் மன்னன். அதற்குள் பொறுமை இழந்த மூடன் பாவம் பார்த்தது போதும் மன்னா! இந்த ஊமைக்கு ஏதாவது வேலை போட்டுக் கொடுங்கள், என்று பேசினான். அவன் நன்றாகப் பேசுவதைக் கேட்ட அரசன், வாய் இருந்தும் ஊமை மாதிரி நடித்து என்னை ஏமாற்றிய இவன் வாயைத் தைத்து விடுங்கள்! என்று கட்டளை இட்டான். குருவும், மண்டுவும் மடத்தில் இருந்தனர். அந்த நான்கு பேரும் வேலையில் சேர்ந்து விட்டார்கள் போலிருக்கிறது. வேலை முடிந்து, நிறைய பணத்துடன் திரும்பி வருவார்கள். அதனால் பானையில் இருக்கும் பழைய சோற்றை நாய்க்குக் கொட்டி விடு! புதிய சோறாகவே பொங்கிச் சாப்பிடலாம், என்றார், பரமார்த்தகுரு. அவர் சொன்னபடி சோற்றை வாரி நாய்க்குக் கொட்டினான், மண்டு. சற்று நேரத்துக்கெல்லாம் அழுது புலம்பியவாறு வந்து நின்ற சீடர்களைக் கண்டதும் ஐயோ! இருந்த பழைய சோற்றையும் நாய்க்குப் போட்டு விட்டோம்! இனி எதைச் சாப்பிடுவது? என்று புலம்பியபடி, பசியால் மயங்கி விழுந்தார், பரமார்த்தர்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'தாடி சிறுத்தாலும் தொப்பை குறையாது' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: தினகரன், ராஜூ, ஐயப்பன், டிக்கெட், அலமேலு, கோபி, சரவணன் தலைப்பு: மனசு
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இதே கதைதான். இந்த நேரம் என்றில்லை, இன்ன பொழுது என்றில்லை. வந்துவிடுகிறான் தினகரன். யார் வெற்றிலை - பாக்கு வைத்து அழைத்தார்கள் இவனை. ராஜூவுக்கு எரிச்சலான எரிச்சல். அவனுக்கு இதெல்லாம் கட்டோடு பிடிக்கவில்லை. இவனை யார் வரச்சொன்னது. போன ஞாயிற்றுக்கிழமை. சித்திரைவெயிலுக்கு பயந்து, கதவை ஒருச்சாத்திவிட்டுப் படுத்திருந்தான் ராஜூ. வீடோ ரொம்ப சின்னது. மத்தியானம், இரண்டு, இரண்டரை மணி இருக்கும். கடுமையான வெக்கை. புழுக்கம். மேஜைக் காற்றாடியை மூன்றில் வைத்திருந்தான். அப்படியிருந்தும் தூங்க முடியவில்லை. பக்கத்தில் அலமேலு ஒருக்களித்துப் படுத்தபடி, அதிசயமாக "குமுதம்" பார்த்துக் கொண்டிருந்தாள். மருமகன் ஐயப்பன்தான் வந்து சொன்னான், தினகரன் வந்திருப்பதை. இவர்கள் வளவில் மூன்று வீடுகள். எதிரே வடக்கு பார்த்த வீடு. தெற்கே பார்த்து இரண்டு வீடுகள். உள்ளபடியே, அது ஒரு வீடுதான். வாடகைக்காக இரண்டாக மறித்து, சுவர்வைத்துப் பிரித்திருந்தார்கள். இந்த வீடு ஒரு முடுக்கு மாதிரி. நீளமாய் இருக்கும். விசாலம் கிடையாது. முன்புறம் சின்ன தார்சா. நடுவில் சரியாக இரண்டு பேர் படுக்கிற மாதிரி பட்டாளை. பின்னால் அடுக்களை. பின்புழக்கம் உண்டு. மேல வீடுதான் உண்மையிலேயே வீடு. அதுவும் இவர்கள் புழக்கத்தில்தான் இருக்கிறது. அதாவது, இவன் மாமனார், மாமியார், மருமக்கள் - அலமேலுவின் அண்ணன் பிள்ளைகள். மூத்த தாரத்து மக்கள். பஞ்சபாண்டவர்கள் - மதினி, சகலர் எல்லோரும் இருக்கிறார்கள். பெரிய வீடு அது. யாராவது வந்தால் அங்கேதான் இருக்க வைப்பது. சொந்தக்காரர்கள், ரொம்ப வேண்டியவர்களை மட்டும் தாம் இந்த வீட்டில் கூப்பிட்டுவைத்துப் பேசுவது. இருக்கச் சொல்வது. இடவசதி - இல்லை, இட நெருக்கடிதான் காரணம். அந்த வீட்டுத் திண்மையில் தான் தினகரனை உட்காரச் சொல்லியிருந்தார்கள். அலமேலு போய்ப் பார்த்துப் பேசிவிட்டு வந்தாள். அவள் வந்தவுடன் ராஜூ ஆத்திரமாய்க் கேட்டான். "இவனுக்கெல்லாம் நேரம் காலம் கிடையாதா ஒரு வீட்டுக்கு வர. பொண்டாட்டி, பிள்ளை இருக்கற மனுஷன் மாதிரியே தெரியலியே இவனப் பாத்தா. இந்த வேனா வெயில்ல ஒரு உடை உடுத்தி நடை நடந்து வந்திருக்கானே முட்டாப்..." ராஜூவுக்கு கோபம் வந்தால் கெட்ட வார்த்தைகள்தாம் வரும், தன்னியல்பையும் மீறி. "இல்ல. நாளைக்கிதான் பணம்கட்ட கடைசி நாளாம். அதச் சொல்லத்தான் வந்தாராம்" என்றவள், இவன் முகத்தைப் பார்த்துவிட்டு மேலவீட்டுக்குப் போய்ப் படுத்துக்கொண்டாள். அதற்கு முந்திய ஞாயிற்றுக்கிழமை. காலையில் பத்து மணி இருக்கும். கோடைக் காலத்தில் ஆற்றில் தண்ணீர் இல்லையென்று, மேற்கே கொஞ்சம் தள்ளி ஊற்று இருக்கிற இடத்துக்குப் போய்க் குளித்து விட்டு வருகிறான். போக வர இரண்டு மைல் நடை. திரும்புகையில், எதிர்வெயில் வேறு. காலையிலே மனுஷன் குளிக்கிறதுக்கு இந்தப் பாடா. பசியும் எரிச்சலுமாய்த் தெரு வாசல்படி ஏறியவன் கண்ணில் முதலில் பட்டது தினகரனின் கட்டம்போட்ட சட்டைதான். பெரியவீட்டு வாசலில் நின்று பேசிக் கொண்டிருக்கிறான். எதிரே தார்சாவில் ஸ்டீல் சேரில் உட்கார்ந்திருந்த அலமேலு இவனைப் பார்த்ததும் விருட்டென்று எழுந்து கொண்டாள். "இட்லி எடுத்துட்டு வரட்டா" என்று கேட்டுக் கொண்டே வந்தாள். "குளிச்சிட்டு வர்றீங்களா" என்று கேட்டபடியே புறப்பட்டுப் போய் விட்டான் தினகரன். துணிகைக்கூடக் காயப்போடாமல், தலைகூட சீவாமல், சாப்பிட உட்கார்ந்து விட்டான் ராஜூ. இட்லி எடுத்துவைத்துக் கொண்டிருந்த அலமேலுவிடம் கோபமாய்க் கேட்டான். "எங்கடி வந்தானாம். ஞாயிற்றுக்கிழமை வந்திரப்பிடாது இவனுக்கெல்லம். புறப்பட்டு வந்துர்றான் புடுங்கி மாதிரி. போவேண்டியதுதானே கொழுந்தியா வீட்டுக்கு. அடுத்த தடவ வரட்டும், கேட்டுர்றேன்.", "ஏன் இப்டி வாயில வந்ததல்லாம் பேசுறீங்க. புது ஏ.சி.டி.ஓ. வந்திருக்காராம். "அக்கவுண்டயெல்லாம் சீக்கிரமா முடிச்சிக் கொண்டுட்டு வாங்க"ன்னு சொல்லிட்டுப் போறாரு. அவ் வீட்டுக்காரிக்குத் திரும்பவும் உடம்பு சரியில்லியாம். சொல்லிக்கிட்டிருக்கையிலியே அழுதிட்டாரு. பாவம்" என்ற அலமேலு எச்சில்தட்டை எடுத்துக் கொண்டு போய் விட்டாள். இவனுக்குத்தான் மனசு சமாதானமாக வில்லை. போன மாசம். புனித வெள்ளி. அரசு விடுமுறை. சாயங்காலம், அஞ்சு அஞ்சரை மணி இருக்கும். வழக்கத்திற்கு மாறாக, அடித்துப்போட்ட மாதிரி, தூங்கிக் கொண்டிருந்தாள் அலமேலு. வாரத்தில் ஆறுநாள் மாடு மாதிரி வேலை பார்க்கிற அசதி. அலைகிற அலைச்சல். தினகரன் வந்திருப்பதை வந்து சொன்னான் - இரண்டாவது - மருமகன் - லட்சுமணன். யாராக இருந்தாலும் தூங்கும்போது எழுப்புவது எப்போதுமே இவனுக்கு சம்மதமில்லாத காரியம். "அத்த தூங்குறா, நாளக்கி வந்து பாருங்க"ன்னு சொல்லு" என்று லட்சுமணனிடம் சொல்லி அனுப்பிவைத்தான் ராஜூ. ராஜூவுக்குத் தினகரனைப் போய்ப் பார்க்கப் பிடிக்கவில்லை. "வாங்க" என்று மரியாதைக்குக் கேட்கக்கூடத் தோன்றவில்லை. "இருங்க" என்று சொல்ல இஷ்டமில்லை. "சனியன், போய்த் தொலைந்தால் சரிதான்" என்றிருந்தான். ஆனால் தினகரன் போகவில்லை. இருந்து கொண்டிருந்தான். லட்சுமணனோடு பேசிக் கொண்டிருந்தான். கால்மணி நேரம் கழிந்திருக்கும். இவன், "என்னப்பா" என்று கோபமாய்க் கேட்டான். லட்சுமணன் வந்து பைய, "அவரு இன்னும் போல. இருந்துட்டு இருக்காரு, அதான்" என்றதும், "அதுக்கு என்னை என்ன செய்யச் சொல்த" என்று கடுப்போடு இரைந்தவனின் சத்தம் கேட்டு விழித்துக் கொண்டாள் அலமேலு. வாரிச்சுருட்டிக்கொண்டு எழுந்தாள். பின்வாசல் பக்கம் போய் முகம் கழுவிக்கொண்டு நிற்கிறாள். அதற்குள் அவனே திண்ணையில் வந்து நின்றான். முகம் துடைத்துக் கொண்டிருந்த அலமேலுவை ராஜூ சுட்டெரித்து விடுவது போலப் பார்க்க, அவள் இவனை பாவம் போலப் பார்த்தபடி நின்றாள். "எப்ப வந்தீங்க, எப்டி இருக்கீங்க" என்று இவனை விசாரித்த தினகரனிடம் ஒப்புக்காகப் பேசும்படியாய்த் தொலைந்தது. "என்ன, இந்த நேரத்துல தூங்குறீங்க" என்று அலமேலுவைக் கேட்டவன், "சின்னத்தம்பி" படத்துக்கு டிக்கெட் கிடைக்க மாட்டேங்கு"ன்னு சொன்னீங்கல்ல. தியேட்டர் பக்கம் - ஆபீஸ்லர்ந்து போயிருந்தம். நாலு டிக்கெட் கேட்டு வாங்கிட்டு வந்தேன். அதக் கொடுத்திட்டுப் போலாமேன்னுதான்" என்று பர்ஸிலிருந்து சினிமா டிக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்தான். லட்சுமணனைக் கூப்பிட்டு "பூஸ்ட்" வாங்கிக் கொண்டு வரச் சொன்னாள் அலமேலு. காபி குடிக்க மாட்டானாம், மயிராண்டி. நாலு நாளைக்கு முன்தான் சொன்னாள் அலமேலு. அலுவலகத்தில் இவள் பொறுப்பில் - ஐயாயிரம் ரூபாய் - சார்ட்டேஜாம். எங்கேயாவது வட்டிக்கு வாங்க முடியுமா என்று அலைந்து பார்த்தாள். யார் யாரிடமெல்லாமோ கேட்டுப் பார்த்தாள். தினகரனிடமும் சொல்லியிருக்கிறாள். "சங்கிலிய வேணா தர்றேன். அடகுவச்சு எடுத்துக்குங்க" என்றானாம். மைனர் செயின். அஞ்சு பவுன். அலமேலு இவனிடமே வந்து கேட்டாள், என்ன செய்ய என்று. ராஜூ என்ன சொல்வான். "வேண்டாம், அப்டில்லாம் வாங்க வேண்டாம்" என்று சொல்லிவிட்டான். தனது கையாலாகத்தனம் நெருட, அன்றைக்கு ராத்திரி பூரா தூக்கமே வரவில்லை ராஜூவுக்கு. அலமேலு நல்ல பெண்தான். அவளை ஒன்றும் தப்புச் சொல்ல முடியாது. ஆனால், சில பெண்களுக்குப் பிற ஆண்களிடம் சகஜமாகப் பேசும் குணம் உண்டு. அலமேலுவிடமும் இந்த அம்சம் இருக்கிறது. அதுதான் இப்படி. இந்த வினை. இவள் வேலையும் அதற்கேற்ற மாதிரி அமைந்துவிட்டது. ஆறு மாதத்திற்கு ஒருமுறை வணிக வரி அலுவலகத்திற்குப் போக வேண்டும். எப்படித்தான் நல்லபடியாகக் கணக்கு வைத்திருந்தாலும் கண்டமேனிக்கு வரி தீட்டி விடுவார்கள். விசாரணை, அபராதம் இதெல்லாம் இல்லாமல் தப்பித்துவர வேண்டும். இதற்கெல்லாம் அங்கேயே ஒரு தெரிந்த ஆள் இருந்தால் நல்லது. அலமேலு கணக்குப் புஸ்தகங்களைக் கொடுத்துவிட்டு வந்து விடுவாள். தினகரன் வில்லங்கம் இல்லாமல் பார்த்துக் கொள்வான். ராஜூவுக்கு நிலையான வேலையில்லை. நிலையான வேலையில்லாதவனுக்கு நிரந்தரமான வருமானம் எப்படி இருக்கும். வீட்டில் சும்மாதான் இருக்கிறான். இரண்டு பையன்கள் படிப்புச் செலவு, வீட்டு நிர்வாகம் எல்லாம் அலமேலுதான். இவள் வேலை பார்க்கப் போய்த்தான் குடும்பம் நடக்கிறது. உண்மையிலேயே, தினகரன் பாவம்தான். மனைவிக்குப் கர்ப்பப்பை ஆப்பரேஷன் ஆகிவிட்டது. அதுதான் இப்படி அலைகிறானோ, ஜொள்ளு கேஸ•. பெண்களோடு பேசிக் கொண்டிருந்தாலே போதும் என்கிற டைப்பு. சீச்சீ. இப்படியெல்லாம் தப்பாக நினைக்கக்கூடாது. அவனென்ன தாம்பத்ய வாழ்க்கையை அனுபவிக்காதவனா. பனிரண்டு வயதில் பையன் இருக்கிறான். அவனுடைய பழைய புஸ்தகங்கள்தாம் ஒவ்வொரு வருஷமும் இவன் பையனுக்கு. மெனக்கெட்டு எடுத்துக்கொண்ட வந்து கொடுத்துவிட்டுப் போவான் தினகரன். தெரிந்தவர்கள் என்று வருகிறான். இல்லையென்றால், வருவானா. ஆனாலும், ஒரு இங்கிதம் வேண்டாம். செத்த மூதி. கடன்காரன் மாதிரி வந்து விடுகிறான். புருஷன்காரன் என்ன நினைப்பான் என்று தோன்றாதா இவனுக்கு. இரண்டு மூன்று தடவை அலமேலுவிடம் எரிச்சல்பட்டே சொல்லிவிட்டான் ராஜூ. "இவன் இப்டி வீடு தேடி வர்றது எனக்குப் பிடிக்கல அலமேலு. இவன் ஏன் வர்றான். நீ சொல்லிரு. "என் புருஷன் ஒரு முசுடு. எதாவது சொல்லிருவாரு"ன்னு சொல்லிரு அலமேலு". "இதயெல்லாம் எப்படிங்க சொல்லமுடியும். அவருக்கே தெரியணும்" என்று அலமேலு சொல்வதும் சரிதான். முந்தா நாள். சித்திரை விஷ•. வீட்டிலேயே அடைந்து கிடக்கிறோமே, பிள்ளைகளோடு இவளோடு எதாவது சினிமாவுக்குப் போகலாமே என்று எல்லோருமாகப் போனார்கள். ஆறரை மணிக் காட்சி. படம் முடிந்து வெளியே வந்தார்கள். தியேட்டர் வாசலை விட்டு இறங்குகிறார்கள். கூட்டத்தை எதிர்த்து வந்து கொண்டிருக்கிறான் தினகரன். வீட்டுக்குப் போயிருந்தானாம். சொன்னார்களாம். வந்துவிட்டான். வழக்கமான நாகரிகம், மரியாதையெல்லாம் தூக்கித் தூரப் போட்டுவிட்டான் ராஜூ. அவனைப் பார்க்காததுபோல, விறுவிறுவென்று சரவணனையும் கோபியையும் இரண்டு கையில் பிடித்துக்கொண்டு முன்னே நடந்து போய்க்கொண்டே இருந்தான். சம்பிரதாயத்திற்காக ஒரு நிமிஷம் நின்று விசாரித்துவிட்டு, வேக வேகமாக நடந்து வந்து இவனோடு சேர்ந்து கொண்ட அலமேலு கேட்டாள்; " என்னங்க, ஏன் இவ்வளவு வேகமாக நடக்கிறீங்க ". "என்னடி இது. தியேட்டருக்கே வந்துட்டான். பொண்டாட்டிய தேடிட்டு வர்ற மாதிரில்ல வர்றான். இவனையெல்லாம் என்னடி செய்றது" என்று வெடித்தான் ராஜூ. "சத்தம் போடாதீங்க. எல்லோரும் பாக்காங்க. வீட்ல வந்து பேசுங்க" என்று அமைதிப்படுத்தினாள் அவள். வீட்டுக்கு வந்து சேர்ந்து, கைலியை மாற்றிக்கொண்டு சாப்பிட உட்கார்ந்தான் ராஜூ. பிள்ளைகள் இரண்டு பேரும் ஒன்றும் சாப்பிடாமலேயே தூங்கிவிட்டார்கள். அலமேலு பழையதை எடுத்து வைத்து மோர் ஊற்றிக் கொண்டிருந்தாள். சாதத்தைப் பிசைந்தபடியே ஆங்காரமாகச் சொன்னான் இவன். "ஏய், இந்த பாருடி. அவன் இன்னொரு தடவ இங்க வந்தா, நான் மனுஷனா இருக்க மாட்டேன். அவன்ட்ட சொல்லிரு. இல்ல, அசிங்கமா போயிடும்.", "சரி, சரி. விடுங்க இழவு சனியனை. அவர்தான் மடையன்னா நாமளுமா" என்ற அலமேலு சாப்பிடாமலேயே போய்ப் படுத்துக் கொண்டாள். "என்ன மனுஷங்க" என்ற நினைப்பே வேதனையாக இருந்தது. மாடக்குழியில் இருந்த "அவில்" மாத்திரையை எடுத்துப் போட்டுக் கொண்டான். கொஞ்ச நேரத்தில் கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது. அப்போது அலமேலுவின் பாவமான முகமே மனசை உறுத்திக் கொண்டிருந்தது. அவளிடம் அப்படி நடந்து கொண்டிருக்கக் கூடாது என்பதே கடைசி ஞாபகமாக இருந்தது.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: அக்பர், பீர்பால், வீரசிம்மன், பானை, பறங்கிக்காய், பொற்காசு, அபராதம் தலைப்பு: அறிவுப் பானை
வீரசிம்மன் ஒரு குறுநல மன்னர்! சிற்றரசராக இருந்த அவர். அக்பருடைய ஆதிக்கத்தில் இருந்தார். முகலாய சாம்ராஜ்யத்திற்கு கப்பம் செலுத்தி, அவர்களுடன் நட்புறவோடிருந்தார். தனது ராஜ்யத்தில் குடிமக்களின் நிம்மதியையே பெரிதாக மதித்த வீரசிம்மன், முகலாயர்களின் அடிமையாக இருந்ததைப் பொருட்படுத்தவில்லை. ஆனால், அவருடைய ராஜ்யத்தில் இருந்த சில இளைஞர்கள் மன்னர் தன்மானத்தை அடகுவைத்து விட்டதாகக் கருதினர். அந்த இளைஞர்கள் தயக்கமின்றி அவரை அணுகி அவருடைய கொள்கைக்குத் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தனர். சுதந்திரம் தங்களுடைய பிறப்புரிமை என்றும், நாட்டின் அமைதிக்காக, முகலாயர்களின் அடிமைகளாகத் திகழ்வது அவமானம் என்றும் தங்கள் கருத்தை வெளிப்படுத்தினர். அதற்கு வீரசிம்மன், "நானும் சுதந்திரத்தை விரும்புகிறேன். ஆனால் அதைப் பெறுவதற்காக, இரத்த ஆறு ஓடுவதை நான் விரும்பவில்லை, முகலாயர்கள் மிகப்பலம் பொருந்தியவர்கள். அவர்களுடைய படைப்பலத்திற்கு முன் குறுநல மன்னனாகிய என்னால் ஒன்றும் செய்ய முடியாது" என்றார். அதற்கு அவர்கள் "படைப்பலத்தை மட்டும் ஏன் ஒப்பிடுகிறீர்கள்? நம்முடைய அறிவினால் முகலாயர்களை வெற்றி கொள்ள முடியாதா?" என்றனர். "நம்மிடம் அத்தகைய அறிஞர்கள் இருக்கிறார்களா?" என்றார் வீரசிம்மன். "ஏன் இல்லாமல்?" என்றனர் இளைஞர்கள். "ஒன்று தெரிந்து கொள்ளுங்கள்! அக்பரின் சபையில் உள்ள அறிஞர்களைப் போல் வேறு எங்குமே காண முடியாது" என்றார். "அவர்களுடைய அறிவுத்திறமையை சோதித்துப் பார்த்து விடலாமே!" என்று சவால் விட்ட ஓர் இளைஞன் "நான் ஒரு சோதனை சொல்கிறேன். நீங்கள் அக்பரிடம் அவருடைய தர்பாரிலிருந்து அறிவு நிரம்பிய ஒரு பானையை அனுப்பச் சொல்லி வேண்டுங்கள்" என்றான். "அறிவு நிரம்பிய பானையா? அது ஏன்? தண்ணீரைப் பிடிப்பதுபோல் பானையில் அறிவை நிரப்ப முடியுமா?" என்று கேட்டார் மன்னர். "அது இயலாது என்று நினைக்கிறீர்களா?" என்றான் அவன். "ஆம்! அது முடியாத ஒன்று!" என்றார் மன்னர். "இயலாததை செய்து முடிப்பவன்தான் அறிவாளி! அக்பரின் தர்பாரில் உலகிலேயே சிறந்த அறிவாளிகள் உள்ளனர் என்று சொன்னீர்களே! அத்தகைய தலைசிறந்த அறிவாளிகள் நாங்கள் கேட்டதை செய்யட்டுமே!" என்று திமிராகக் கேட்டான் அவன். மன்னரும் வேறு வழியின்றி அதற்கு ஒப்புக் கொண்டார். சில நாள்கள் கழித்து, வீரசிம்மன் நன்கு பேசவல்ல ஒரு தூதனை கை நிறைய வெகுமதிகளுடன் அக்பரிடம் அனுப்பினார். வீரசிம்மனின் தூதன் அக்பரின் தர்பாரில் நுழைந்து அவரை வணங்கி விட்டு, தனது மன்னர் கொடுத்தனுப்பியிருந்த வெகுமதிகளை அக்பரிடம் சமர்ப்பித்துவிட்டு, மன்னரின் வாழ்த்துகளையும் தெரிவித்தான். "வீரசிம்மன் நலமாக இருக்கிறாரா?" என்று அக்பர் வினவினார். "சக்கரவர்த்தியின் தயவு இருக்கும் போது எங்கள் மன்னரின் நலத்தைப் பற்றிக் கேட்க வேண்டுமா!" என்றான் தூதன் பணிவுடன். "உங்கள் மன்னருக்கு என் வாழ்த்துகளைத் தெரிவிப்பாய்!" என்ற அக்பர், "மன்னரிடமிருந்து எனக்கு ஏதாவது செய்தி உண்டா?" என்று கேட்டார். "பிரபு! உங்கள் தர்பாரில் பல அறிஞர்கள் நிறைந்துள்ளனர். அதனால் அறிவு நிரம்பிய ஒரு பானையை தயவு செய்து நீங்கள் கொடுத்தருளும் படி எங்கள் மன்னர் வேண்டிக் கொள்கிறார்"என்றான் தூதன். அதைக் கேட்டு தர்பாரில் இருந்தவர் வியப்படைந்தனர். அறிவை எப்படிப் பானையிலிட்டு நிரப்ப முடியும்? ஆனால் அக்பர் அதைப் பற்றி தீவிரமாக சிந்திக்கவில்லை. தன் தர்பாரில் ஏராளமான அறிஞர்கள் இருக்கையில், இந்த விஷயத்தை அவர்களே கவனித்துக் கொள்வார்கள் என்று விட்டு விட்டார். அதனால் அவர் வீரசிம்மன் விரும்பிய பொருள் ஒரு மாதத்திற்குள் அனுப்பப்படும் என்று தூதனிடம் சொன்னார். "பிரபு! உங்கள் கருணைக்கு எல்லையே இல்லை! உங்களுடைய ஆதிக்கத்திலிருப்பதை எண்ணி எங்கள் மன்னர் பெருமைப்படுகிறார்" என்று தூதனும் சாமர்த்தியமாக அக்பர் மனம் குளிரும்படி பேசிவிட்டு, திரும்பிச் சென்றான். அவன் சென்ற பிறகு, அக்பர் தன் தர்பாரிலிருந்த அறிஞர்களை நோக்க அவர்களுள் ஒருவர் "பிரபு! வீரசிம்மன் கேட்டிருப்பதை கொடுக்க முடியவே முடியாது" என்றார். "முடியாதது என்று ஒன்றுமே கிடையாது. அதைக் கொடுத்தே ஆக வேண்டும்" என்று அக்பர் கோபத்துடன் கூறியதும், அனைவரும் பயத்தினால் ஒன்றும் பேசாமல் இருந்து விட்டனர். "பிரபு!" என்று மெதுவாக அழைத்தவாறே எழுந்த பீர்பால், "எனக்கு ஒரு பதினைந்து நாள் அவகாசம் கொடுங்கள். இந்த சவாலை நான் சமாளிக்கிறேன்" என்றார். "நிச்சயமாக இதை வெற்றிகொள்ள முடியுமா?" என்று அக்பர் கேட்டார். "நான் எப்போதாவது சொல்லிவிட்டு செய்யாமல் இருந்திருக்கிறேனா?" என்று பீர்பால் திருப்பிக் கேட்டதும், "நல்லவேளை! என்னுடைய தர்பாரில் நீ ஒருத்தனாவது அறிவாளியாக இருக்கிறாயே!" என்று பீர்பாலைப் புகழ்ந்து விட்டு மற்றவர்களை ஏளனத்துடன் பார்த்தார். அன்று மாலை வீடு திரும்பிய பீர்பால், தன் தோட்டத்தை நன்றாகப் பார்வையிட்டார். மற்ற காய்கறிச் செடிகளுடன், ஒரு பரங்கிக் கொடியையும் பார்த்தார். அதில் பல பூக்கள், பிஞ்சுகள், காய்கள் இருந்தன. உடனே வீட்டிற்குள் சென்ற அவர் ஒரு காலிப் பானையை எடுத்து வந்தார். அதைத் தரையில் வைத்து விட்டு, பரங்கிக் கொடியில் பிஞ்சுடன் கூடிய ஒரு பகுதியை அந்தப் பானையினுள் நுழைத்து பரங்கிப் பிஞ்சு பானைக்குள் இருக்குமாறு செய்துவிட்டு, கொடியின் நுனியை வெளிப்புறம் நோக்கி இழுத்து விட்டார். பார்ப்பதற்கு, பறங்கிக் கொடி பானையினுள் புகுந்து, பிறகு வெளியே வந்தது போல் இருந்தது. "சரியாக இருக்கிறது!" என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்ட பீர்பால், தன் மனைவியிடமும், தோட்டக்காரனிடமும் அந்தப் பானையையும், பரங்கிக் கொடியையும் மிகவும் பத்திரமாகப் பாதுகாக்கச் சொன்னார். தினமும் அவர் தோட்டத்திற்கு வந்து பானையினுள் இருந்தப் பரங்கிப் பிஞ்சைப் பார்வையிட்டு வந்தார். பத்து நாள்களில் பிஞ்சு காயாகிப் பெருத்தது. அப்படியே விட்டு வைத்தால் காய் இன்னும் பெரிதாக வளர்ந்து பானையை உடைத்து விடும் என்ற நிலை வந்த போது, பீர்பால் பானைக்குள் சென்று, வெளியே வந்த கொடியின் பாகங்களைக் கத்தியால் அறுத்து விட்டார். இப்போது பானைக்குள் நன்கு வளர்ந்த பறங்கிக்காய் மட்டுமே இருந்தது. பானையின் வாயினை துணியினால் இறுக மூடி அடைத்த பீர்பால் பின்னர், அதை தர்பாருக்கு எடுத்துச் சென்றார். அக்பரிடம் பானையை அளித்த பீர்பால், "பிரபு… இதுதான் மன்னர் வீரசிம்மன் விரும்பிய அறிவுப்பானை! இதை அவரிடம் அனுப்பி வையுங்கள்" என்றார். அதைக் கண்ட அக்பர், "என்ன, பீர்பால்! விளையாடுகிறாயா? பானையில் எப்படி அறிவை நிரப்ப முடியும்? இதற்குள் உண்மையில் என்ன இருக்கிறது?" என்று ஆர்வத்துடன் அக்பர் கேட்டார். "பிரபு, அறிவுப்பானைக்குள் அறிவுதான் இருக்கும். வீரசிம்மன் பானைக்குள் இருக்கும் அறிவை எடுத்துக் கொண்டு, பானையை திருப்பி நமக்கு அனுப்பி விட வேண்டும். அதை வெளியில் எடுக்கும் போது அது நசுங்கக் கூடாது. பானையும் உடையக் கூடாது. ஒருக்கால் பானை உடைந்து போனால், வீரசிம்மன் பத்தாயிரம் பொற்காசு அபராதம் செலுத்த வேண்டும். இவை அனைத்தையும் அவருக்குத் தெரிவித்து விடுங்கள்" என்றார் பீர்பால். "என்ன? அபராதம் பத்தாயிரம் பொற்காசுகளா?" என்று அக்பர் கேட்டார். "அறிவின் விலை மிகவும் அதிகம் பிரபு" என்றார் பீர்பால். அவ்வாறே பானையை தூதன் மூலம் கொடுத்தனுப்பியபின், ஆர்வத்தை அடக்க முடியாத அக்பர், "பீர்பால்! பானைக்குள் என்னதான் வைத்திருக்கிறாய் என்று எனக்கு கூறு" என அவசரப்படுத்தினார். உடனே பீர்பால் தான் செய்ததைச் சொன்னார். "பிரபு, வீரசிம்மன் தனது குறும்புத்தனமான கேள்விக்கு சரியாக மூக்குடைப்படுவார். பானைக்குள் இருக்கும் பரங்கிக்காயை அவரால் பானையை உடைக்காமல் முழுதாக வெளியே எடுக்க முடியாது. பரங்கிக்காயை அறுத்து வெளியே எடுப்பதும் கூடாது. அதனால் அவர் நம்மிடம் வசமாக சிக்கிக் கொண்டார். "அடப்போக்கிரி!" என்று பீர்பால் முதுகில் செல்லமாகத் தட்டினார் அக்பர். பானையைப் பெற்ற வீரசிம்மன் பானையினுள் ஒரு பெரிய பரங்கிக்காய் இருப்பதைப் பார்த்தார். கூடவே அந்த இரண்டு நிபந்தனைகளையும் கேட்டார். பரங்கிக்காயை அறுக்கவும் கூடாது. அதே சமயம் முழுதாக வெளியே எடுக்க முயன்றால் பானை உடையும். உடனே அந்த அதிகப் பிரசங்கி இளைஞர்களை அழைத்த மன்னர், அறிவுப்பானையை அவர்களிடம் காட்டி விளக்க, அவர்கள் முகத்தில் அசடு வழிந்தது "உங்கள் பேச்சைக் கேட்டு நானும் முட்டாள் ஆனேன். முன்னமே சொன்னேன், அக்பரின் சபையில் அறிஞர்களுக்குப் பஞ்சமில்லை என்று. என் பேச்சை நீங்கள் கேட்கவில்லை. அபராதத் தொகையை ஈடுகட்ட, நீங்கள் காலம் முழுவதும் என்னிடம் சம்பளமின்றி உழைக்க வேண்டும்" என்றார். பிறகு தலைவிதியை நொந்து கொண்டு, அபராதத் தொகையை அக்பருக்கு அனுப்ப, அவர் அதில் பாதியை பீர்பாலுக்கு வழங்கினார்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: பரமார்த்தரு, பரமார்த்தகுருவின் சீடர்கள், முட்டாள், மூடன், மட்டி, மண்டை ஓடு தலைப்பு: பூதம் காத்த புதையல்
பரமார்த்த குருவும் சீடர்களும் படுத்துத் தூங்கிக் கொண்டு இருந்தார்கள்.தூக்கத்தில், "ஆகா! தங்கம்! வெள்ளி! வைடூரியம்!" என்று உளறிக் கொண்டு இருந்தார், பரமார்த்தர்.திடுக்கிட்டு எழுந்த சீடர்கள், குரு உளறுவதைக் கண்டு அவரை தட்டி எழுப்பினார்கள். தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்ட பரமார்த்தர், "புத்தி கெட்டவர்களே! ஏன் என்னை எழுப்பினீர்கள்? அற்புதமான கனவு ஒன்று கண்டு கொண்டு இருந்தேன். கெடுத்து விட்டீர்களே!" என்று சீடர்களைத் திட்டினார்.உடனே எல்லோரும் அவரைச் சூழ்ந்து கொண்டு கனவா? என்ன கனவு கண்டீர்கள்?" என்று கேட்டார்கள். பரமார்த்தர், சிறிது நினைவுபடுத்தி, "புதையல்! புதையல்!" என்று கத்தினார்."புதையலா? எங்கே? எங்கே?" என்று குதித்தார்கள், சீடர்கள்.பிறகு, சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, "சீடர்களே, இந்த அறையின் பின்னால் உள்ள தோட்டம் தான் என் கனவில் வந்தது. தோட்டத்தின் சனி மூலையில் ஒரு பானை நிறைய பொன்னும் வெள்ளியுமாய்க் கிடக்கிறது!" என்று மெல்ல கூறினார்."அடேயப்பா! பானை நிறைய தங்கமா?" என்று மகிழ்ச்சியால் கீழே விழுந்து புரண்டான் மட்டி."குருவே! இந்தப் புதையலை வைத்துக் கொண்டு நாம் என்ன செய்வது?" என்று கேட்டான் மூடன்.அதற்குள் முட்டாள், "நம் குருவுக்குப் பெரிய குதிரையாக, அழகான குதிரையாக வாங்கலாமே!" என்று பதில் சொன்னான்."நாம் கூட ஆளுக்கு ஒரு குதிரை வாங்கிக் கொள்ளலாம்!" என்று மகிழ்ந்தான் மட்டி."குருவே! இந்த இடம் சரியில்லை. இதை இடித்து விட்டு ராஜாவுக்குப் போட்டியாக அரண்மனை கட்ட வேண்டும்!" என்று யோசனை சொன்னான் மூடன்."இனிமேல் நமக்குக் கவலையே இருக்காது. தினமும் வடையும் பாயாசமுமாகச் சாப்பிடலாம்!" என்று குதித்தான், மடையன்."குருவே! அப்படியானால் நாம் எல்லோரும் இப்போதே ஓடிப்போய் அந்த இடத்தைத் தோண்டிப்பார்ப்போம்" என்றான் முட்டாள்."ஆமாம்! அதுதான் நல்லது. பகலில் தோண்டினால் ஊர் பூராவும் தெரிந்து விடும். அப்புறம் எல்லோரும் பங்கு கேட்பார்களே!" என்றான் மடையன்."மடையன் சொல்வதும் சரிதான். வாருங்கள், எல்லோரும் போய் இப்போதே தோண்டுவோம்!" என்று தோட்டத்துக்குப் போனார்கள்.வெளிச்சம் தெரிவதற்காகக் கையில் கொள்ளிக் கட்டையைப் பிடித்துக் கொண்டு நின்றான், முட்டாள்.யாராவது பார்க்கிறார்களா? என்று பார்த்து விட்டு, தம்முடைய கைத்தடியால் ஓர் இடத்தில் வட்டமாகக் கோடு போட்டார், பரமார்த்தர். உடனே மட்டியும் மடையனும் வேகம் வேகமாக அந்த இடத்தைக் கையால் பரக் பரக் என்று தோண்ட ஆரம்பித்தார்கள்.சிறிது நேரம் ஆனதும், "கை எல்லாம் வலிக்கிறதே!" என்று மூச்சு வாங்க உட்கார்ந்து விட்டனர்."குருவே! புதையலை விடக்கூடாது!" என்றபடி மூடனும், மண்டுவும் தொடர்ந்து பள்ளம் பறித்தார்கள்.நான்கு பேரும் மாறி மாறி தோண்டிக் கொண்டே இருந்தபோது, திடீரென்று வெள்ளையாக ஏதோ ஒன்று தட்டுப்பட்டது."ஆ! புதையல்! புதையல்!" என்று குதித்தபடி இன்னும் வேகமாகத் தோண்டினான், மட்டி.உடனே பரமார்த்தர் குழிக்குள் கையை விட்டுப் பார்த்தார். உருண்டையாக ஏதோ ஒன்று கிடைத்தது.எல்லோரும் ஆசையோடு அதை வெளிச்சத்தில் காட்டிப் பார்த்தார்கள்.பரமார்த்தரின் கையில் இருந்தது ஒரு மண்டை ஓடு!அவ்வளவுதான்! "ஐயோ! ஐயோ!" என்று அலறியபடி ஆளுக்கொரு பக்கமாய் விழுந்தடித்து ஓடினார்கள்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: அக்பர், பீர்பல், குதிரை, ஆயுதங்கள், காடு, பூனை, காடு, நகை தலைப்பு: ஆந்தைகளின் மொழி
அன்று காலை, அக்பரைப் பார்த்தஉடனேயே அவர் அன்று என்ன செய்ய நினைக்கிறார் என்று பீர்பலுக்குத் தெரிந்து விட்டது. குதிரைச் சவாரிகேற்ற உடையை அவர் அணிந்திருந்தார். வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டிருந்த ஆயுதங்களைக் கவனித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் வேறு எங்கும் பார்க்காமல் ஆயுதங்களின் மீதே மிகவும் கவனமாக இருந்தார். அக்பர் அன்று வேட்டையாடத்திட்டமிட்டிருக்கிறார் என்று பீர்பல் புரிந்து கொண்டார். வேட்டையாடுவது அக்பருக்கு மிகவும் பிடித்தப் பொழுதுப் போக்கு! ஆனால் அவர் வேட்டைஆடுவது பீர்பலுக்குப் பிடிக்கவில்லை. அதை எப்படித் தடை செய்வது என்பதைப் பற்றியே அவர் சிந்திப்பார். சற்று நேரங்கழித்துத் தன் கவனத்தை ஆயுதங்களிலிருந்து விடுத்து, பீர்பலின் மீது செலுத்திய அக்பர் "நான் இன்று என்ன செய்யப் போகிறேன் தெரியுமா?" என்று பீர்பலைப் பார்த்துக் கேட்டதும், "மற்றவர்களின் மனத்திலுள்ளதை அறிந்து கொள்ளும் திறமை எனக்குக் கிடையாது" என்றார் பீர்பல். "பொய் சொல்லாதே, பீர்பல்! நான் என்ன செய்யப் போகிறேன் என்று உனக்கு நன்றாகத் தெரியும். வேண்டுமென்றே தெரியாதது போல் நடிக்கிறாய். மிதமான குளிர்வீதம் இந்தக் காலைப் பொழுதில் வேட்டைஆடச் சென்றால் மிகவும் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து! உன் கருத்து என்னவோ?" என்றார். "தங்களின் கருத்தே என்னுடைய கருத்தும்!" என்றார் பீர்பல். "அப்படியானால், நீயும் என்னுடன் வேட்டையாட வர வேண்டும்!" என்றார் அக்பர். "தங்கள் கட்டளைப் படி நடக்க சித்தமாக இருக்கிறேன்" என்று பணிவுடன் பீர்பல் பதிலளித்தார். "பீர்பல்! நீ உடனிருந்தால் களைப்பே தெரிவதில்லை. நாவில் உனக்கு இத்தனை வலிமையைக் கொடுத்த இறைவன், உடலிலும் கொடுத்து இருக்கிறாரா என்பதையும் அறிய ஆசைப்படுகிறேன்" என்றார். "ஆகட்டும் பிரபு!" என்றார் பீர்பல். சற்று நேரத்திற்குப்பின், அக்பர் ஒரு பெரிய படை வீரர்களின் அணியுடன் காட்டை நோக்கிப் புறப்பட்டார். பீர்பலும் அக்பருடன் சென்றார். காட்டினுள் நுழைந்தபிறகு, அக்பரின் வீரர்கள் தாரை, தப்பட்டை ஆகியவற்றை உரக்க ஒலித்துக் காடே அதிரச் செய்தனர். அந்த சத்தத்தைக் கேட்டு காட்டு மிருகங்கள் மிரண்டு அங்குமிங்கும் சிதறி ஓட, அக்பரும், மற்றவர்களும் அவற்றைத் துரத்திச் சென்று, கொன்று குவித்தனர். திடீரென ஒரு புலி புதரிலிருந்து சீறிப் பாய்ந்து அவர்களை நோக்கி வந்தது. தாரை, தப்பட்டைகளின் ஒலியினால் எரிச்சல்அடைந்த புலி அவர்கள் மீது பாய முனைந்த போது, அக்பர் தன் கையில் இருந்த ஈட்டியை அதன்மீது எறிய, பயங்கரமாக உறுமிக் கொண்டே புலி மண்ணில் சாய்ந்தது. புலி இறந்து விட்டதால் அக்பர் உற்சாகமுற்றுக் கையை உயர்த்திக் கூச்சலிட, சுற்றியிருந்த வீரர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். மாலைக்குள் அக்பர் மற்றொரு புலியையும் வீரத்துடன் வேட்டையாடிக் கொன்றார். பிறகு அனைவரும் சென்று ஓய்வு எடுக்க, அக்பர் தனியாக அமர்ந்து பீர்பலுடன் உரையாடிக் கொண்டிருந்தார். மாலை மங்கிய நேரம்! பகல் முழுவதும் வானில் பறந்து திரிந்து கொண்டிருந்த பறவைகள் தங்கள் கூடுகளுக்குத் திரும்பிக் கொண்டு இருந்தன. அவற்றின் இனிமையான குரல்களை இருவரும் கேட்டு ரசித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் அமர்ந்துஇருந்த இடத்திற்கு அருகில் இருந்த ஒரு மரத்தில் இரு ஆந்தைகள் பறந்து வந்து உட்கார்ந்து ஒலியெழுப்பத் தொடங்கின. அவற்றின் ஒலியை வெகு நேரம் உன்னிப்பாகக் கவனித்த அக்பர், "இந்த ஆந்தைகளின் மொழி நமக்குப் புரிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!" என்றார் பீர்பல். "பிரபு! அவற்றின் மொழி எனக்குத் தெரியும்!" என்றார் பீர்பல். "அப்படியா? பிறகு ஏன் சும்மாயிருக்கிறாய்? அவை என்ன பேசுகின்றன என்று உடனே சொல்!" என்றார் அக்பர். "பிரபு! அவையிரண்டில் ஒன்று மணப்பெண்ணின் தந்தை! மற்றொன்று பிள்ளையின் தந்தை! அவை வரதட்சிணையைப் பற்றி விவாதம் செய்து கொண்டு இருக்கின்றன. பிள்ளையின் தந்தை மிருகங்களே இல்லாத நாற்பது காடுகள் சீர்வரிசையாகத் தர வேண்டும் எனக் கேட்கிறது. பெண்ணின் தந்தை தன்னால் இருபது காடுகள் மட்டுமே தரமுடியும் என்று சொல்கிறது," என்றார் பீர்பல். தொடர்ந்து, "பெண்ணின் தந்தையான அந்த ஆந்தை மேலும் தனக்கு ஆறு வாரகாலம் அவகாசம் தந்தால், மீதி இருபது காடுகளையும் ஏற்பாடு செய்ய முடியும் என்கிறது," என்றார். "இது என்ன உளறல்? மிருகங்களேஇல்லாத காடுகள் அதற்கு எங்கிருந்து கிடைக்கும்? இருபது காடுகள் தருவதாக அது எப்படி ஒப்புக் கொண்டது?" என்றார் அக்பர். "அது உளறவில்லை! சரியாகத்தான் சொல்கிறது. நீங்கள் இருக்கும் தைரியத்தில்தான் அது அப்படிப் பேசுகிறது!" என்றார் பீர்பல். "சரிதான்! ஆந்தைதான் உளறுகிறது என்று நினைத்தால் நீயும் உளறுகிறாயே!" என்றார் அக்பர். "நான் உளறவில்லை, பிரபு! ஆந்தையும் உளறவில்லை! நீங்கள் ஒருமுறை வேட்டையாட வந்தாலே, காட்டில்உள்ள மிருகங்கள் அனைத்தும் கொல்லப்பட்டு விடுகிறது. அதுபோல் இதுவரை நீங்கள் இருபது காடுகளை மிருகங்களேயில்லாமல் செய்து விட்டீர்கள். இன்னும் அடுத்த ஆறு வாரத்தில் நீங்கள் இருபது முறை வேட்டையாடினால், மீதியுள்ள இருபது காடுகளும் காலியாகிவிடும்! அந்த தைரியத்தில்தான் அந்த ஆந்தை அவ்வாறு கூறுகிறது!" என்றார் பீர்பல். பளீரென முகத்தில் அறைந்ததுபோல் இருந்த பீர்பலின் விளக்கம் அக்பரை மௌனமாக்கி விட்டது. தன் செய்கைக்கு முதன்முதலாக வெட்கித் தலை குனிந்த அக்பர், "பீர்பல்! என் கண்களை நீ இன்று திறந்து விட்டாய்! என்னுடைய மகிழ்ச்சிக்காக காட்டில் வாழும் மிருகங்களைக் கொன்று குவிப்பது ஈனமான செயல் என்று புரிந்து கொண்டேன். இன்றுமுதல் வேட்டையாடுவதை நிறுத்தி விடப் போகிறேன்" என்றார் அக்பர். பீர்பலுக்குத் தன் செவிகளையே நம்ப முடியவில்லை. இத்தனை எளிதாக அக்பரின் மனம் மாறும் என்று அவர் நினைக்கவில்லை. "பீர்பல்! என்ன அப்படிப் பார்க்கிறாய்? நான் இப்போது சொன்னதைக் கேட்டு அந்த ஆந்தை என்ன சொல்கிறது என்று எனக்குச் சொல்!" என்றார் அக்பர். "சக்கரவர்த்தியின் மனம் மாறிவிட்டதால், இனி என்னால் மிருகங்கள்அற்றக் காடுகளை வரதட்சிணையாக அளிக்க முடியாது என்று அது கூறுகிறது!" என்று பீர்பல் கூறவும், அக்பர் பலமாகச் சிரித்தார்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: பரமார்த்தகுரு, முட்டாள், மூடன், மட்டி, மடையன், பேயன், மதுராந்தகம், மன்னன், தந்தம், வெள்ளை யானை, ஐராவதம், அரண்மனை, கருப்பு யானை தலைப்பு: வெள்ளை யானை பறக்கிறது
மதுராந்தகம் மன்னனுக்குக் கண் பார்வை மங்கிக் கொண்டே போனது. வெள்ளை யானையின் தந்தங்களைத் தேய்த்து, கண்களில் பூசிக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் மறுபடி கண்பார்வை வந்துவிடும், என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். வெள்ளை யானையை உயிரோடு பிடித்து வந்தால், ஒரு ஊரையே பரிசாகத் தருவதாக அறிவித்தான், மன்னன். இந்தச் செய்தி பரமார்த்தருக்கும், அவரது சீடர்களுக்கும் எட்டியது. குருநாதா! நமக்குத் தெரிந்தவரை யானை கருப்பு நிறமாகத்தானே இருக்கிறது? வெள்ளை யானை கூட உண்டா என்ன? எனக் கேட்டான், மட்டி. தேவலோகத்தில் ஐராவதம் என்று ஒரு யானை இந்திரனிடம் இருக்கிறது. அது வெள்ளையாக இருக்குமாம், என்றான் மடையன். குருவே! அந்த யானையைப் பிடித்துவர உங்களுக்குத் தைரியம் இருக்கிறதா? என்று கேட்டான், முட்டாள். உடனே குருவுக்குக் கோபம் வந்து விட்டது! கோழையே! என்னால் முடியாத காரியம்கூட உண்டா? ஆனால், இந்திரனுக்கும் எனக்கும் போன ஜென்மத்தில் இருந்தே தீராத பகை. அதனால் அங்கே போவதற்கு நான் விரும்பவில்லை, என்று கூறியபடி தாடியை உருவிக் கொண்டார். குருதேவா! எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது... வீட்டுக்கு வெள்ளை அடிப்பது மாதிரி, யானைக்கும் வெள்ளை அடித்து விட்டால் என்ன? என்று கேட்டான், மண்டு. ஆமாம் குருவே! யானையின் மேல் சுண்ணாம்பு தடவி விட்டால் போதும். கருப்பு யானை வெள்ளையாக மாறிவிடும்! என்று குதித்தான், மூடன். ராஜாவுக்குத்தான் சரியாகக் கண் தெரியாதே! அதனால் அவரால் நம் மோசடியைக் கண்டுபிடிக்க முடியாது! என்று மகிழ்ந்தான், முட்டாள். ஆகா! ஆளுக்கு ஒரு ஊர் பரிசாகக் கிடைக்கப் போகிறது. இனிமேல் நாம் எல்லோரும் குட்டி ராஜாக்கள்தான்! என்றபடி மண்ணில் புரண்டான், மட்டி. பலே, பலே! இப்போதுதான் உங்கள் மூனை நன்றாக வேலை செய்கிறது! எனப் பாராட்டினார், பரமார்த்தர். அப்போதே தன் சீடர்களை அழைத்துக் கொண்டு, யானைப் பாகனிடம் போனார். ஒருநாளைக்கு மட்டும் உங்கள் யானையை வாடகைக்குக் கொடுங்கள். தேவையான பணம் தருகிறோம். நீங்களும் கூடவே வரவேண்டும், என்று வேண்டினான் மட்டி. பணத்துக்கு ஆசைப்பட்ட பாகனும் சரி என்று சம்மதித்தான். நன்றாக இருட்டிய பிறகு, பானை பானையாகச் சுண்ணாம்பு கொண்டு வந்தான், மடையன். அதை எடுத்து அபிஷேகம் செய்வது போல, பானையின் மேல் ஊற்றினான், முட்டாள். கொஞ்சம் சுண்ணாம்பை வாரி எடுத்து, பயந்து கொண்டே யானையின் வாயில் பூசிவிட்டான், மண்டு. பரமார்த்தரும் தம் கைத் தடியால் வரி வரியாக வெள்ளை அடித்தார். குருவே! யானை கருப்பாக இருக்கும்போது தந்தம் வெள்ளையாக இருக்கிறது, அதுபோல யானை வெள்ளையாக இருந்தால், தந்தம் கருப்பாக அல்லவா இருக்க வேண்டும்? எனக் கேட்டான், பாகன். ஆமாம்! நீ சொல்வதும் சரிதான்! என்றபடி அடுப்புக் கரியைத் தேய்த்து, தந்தங்களில் பூசி விட்டான், முட்டாள். இது தேவலோகத்தில் இருந்து பிடித்து வந்தது என்பதை அரசன் நம்ப வேண்டும். அதனால் இரண்டு இறக்கைகள் கட்ட வேண்டும், என்றார் பரமார்த்தர். குருவின் யோசனையை உடனே செயல்படுத்தினான், மூடன். எல்லா வேலையையும் முடிந்தது. யானையைச் சுற்றி வந்து பார்வையிட்ட குரு, அற்புதம்! இது இந்திர லோகத்து யானையேதான்! என்றபடி அதன் தும்பிக்கையைத் தொட்டுக் கும்பிட்டார். மறுநாள், அரண்மனைக்கு முன்னால் மக்கள் கூட்டம் ஜே ஜே என்று இருந்தது. வெள்ளை யானையைப் பார்ப்பதற்காக மந்திரிகள் புடைசூழ மன்னனும் வந்தான். திறந்த வெளியில் கட்டி இருந்த யானையைப் பார்த்த அரசன், அதிசயமாக இருக்கிறதே! இந்த யானையை எங்கிருந்து பிடித்து வந்தீர்கள்? என்று கேட்டான். தேவலோகம் வரை தேடிக் கொண்டு போனோம்! என்று புளுகினான், மண்டு. ஐயோ! இதைப் பிடிக்க நாங்கள் பட்ட பாடு எங்களுக்குத்தான் தெரியும்! என்றான் மூடன். தந்தம் மட்டும் கருப்பாக இருக்கிறதே? என்று மந்திரி கேட்டதும், அது வைரம் பாய்ந்த தந்தம்! அப்படித்தான் இருக்கும்! என்றான் முட்டாள். இவர்கள் பேசிக் கொண்டே இருக்கும்போது, திடீரென்று பலத்த காற்று அடிக்க ஆரம்பித்தது. உடனே யானையின் மீது கட்டப்பட்ட இறக்கைகள் பிய்த்துக் கொண்டு கீழே விழுந்தன. உடனே பலத்த மழையும் பெய்ய ஆரம்பித்தது. மழை நீர் யானையின் மீது பட்டதும் கொஞ்சம் கொஞ்சமாகச் சுண்ணாம்பு எல்லாம் கரைந்து, வெள்ளை யானை கருப்பாக மாறியது. இதைப் பார்த்த குருவுக்கும் சீடர்களுக்கும் பயத்தால் உடம்பு வெட வெட என்று நடுங்கியது! சிறிது நேரத்திலேயே பரமார்த்தரின் சாயம் வெளுத்து விட்டது - ஊகும் - கருத்து விட்டது. வழக்கம்போல் தண்டனைக்கு ஆளானார்கள். தேவலோகத்தில் ஐராவதம் என்று ஒரு யானை இந்திரனிடம் இருக்கிறது. அது வெள்ளை
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: ஒரு கிராமம் ஒன்றில் சிறு ஆசிரமத்தில் பரமார்த்தர் என்னும் குரு இருந்தார். அவருக்கு 5 சீடர்கள் உள்ளனர்.அவர்கள் யாவருமே அடி முட்டாள்கள். எந்த ஒரு காரியத்தையும் முட்டாள் தனமாகவே செய்வார்கள். முட்டாள்தனமான காரியங்களால் சில சமயம் ஏமாந்தும் போவார்கள். இப்படிதான் ஒருநாள் அனைவரும் தலயாத்திரை செல்லவதற்காக ஆயத்தம் செய்து கொண்டு இருந்தனர். உணவை சமைத்து எடுத்து செல்ல எண்ணி பரமார்த்த குரு ஒரு சீடனை அழைத்தார். அவனிடம் சிறிது பணமும் துணி பையையும் கொடுத்து நீ சந்தைக்கு சென்று சமயலுக்கு தேவையான சுத்தமான உப்பு வாங்கிவா; என்று அனுப்பினார். சீடனும் சரியேன செல்லலானான். வழியில் ஆற்றை கடந்து சந்தையை சென்றடைந்தான். அங்கு ஒரு கடைக்கு சென்ற சீடன் ;ஐயா சுத்தமான உப்பு இருக்கிறதா; என்றான். கடைக்காரர் உப்பை அளந்து எடுத்து சீடனின் பையில் போட்டு கொடுத்தார். உப்பை பார்த்த சீடன் ;இது சுத்தமானதுதானே?; என வினாவினான். இதைக்கேட்ட கடைக்காரர் ஐயா உப்பில் சுத்தமானது சுத்தமற்றது என்று இல்லை உப்பு ஒரே மாதிரிதான் இருக்கும்; என்றார். கோபமாக ஆ… நீ என்ன இப்படி பேசுகிறாய்! உப்பில் சுத்தமானது இருக்கிறது. என் குரு எனக்கு கூறியிருக்கிறார். வேறோன்றும் பேசாமல் இது சுத்தமானதா என்று மட்டும் கூறு; என்று முட்டாள்தனமாக கேட்டான் சீடன். வியந்து போன கடைக்காரர் என்ன சொன்னாலும் புரியவைக்கயிலாத முட்டாள் இவன் என்று எண்ணி ;ஐயா உங்கள் குரு அறிவாளி! நான்தான் தெரியாமல் பேசிவிட்டேன். நீங்கள் வேண்டும்மென்றால் காய்கறிகளை சமைக்கும் முன் நீரில் கழுவி சுத்தம் செய்வது போல் உப்பையும் கழுவி சுத்தம் செய்துகொள்ளலாம்; என்றார். இதைக்கேட்ட சீடன் ;இப்போதுதான் நீர் சரியாக யோசித்து பேசியுள்ளாய், இந்தாருங்கள் பணம் என்று பணத்தை கொடுத்து விட்டு அவர் சொன்னதை நம்பி மகிழ்சியுடன் கிளம்பினான். போகும் வழியில் ஆற்றை கடந்து செல்லும் போது சீடனுக்கு ஒரு யோசனை தோன்றியது. ;இந்த உப்பை, அப்படியே எடுத்துச் சென்றால் குரு இது சுத்தமானதா என்று கேட்டு கோபமடைவார். அதை விட இந்த ஆற்று நீரில் உப்பை அலசிச்சென்றால் உப்பு சுத்தமாகிவிடும், குருவுக்கு இது சுத்தமானதுதான் என்று கூறலாம்,அவரும் பாராட்டுவார். என்றவாறே உப்பை துணியுடன் நீரில் முக்கி எடுத்துக தன் தோலில் போட்டுக்கொண்டு சென்றான். போகிற வழியில் உப்பு முழுவதுமாக நீரில் கரைந்தே போயிற்று.உப்பு கரைந்துபோனதை அவன் உணரவில்லை. வீடும் வந்தது சீடன் வருவதைக் கண்ட குரு “வாவா…ஏன் தாமதம் உப்பு வாங்கிவிட்டாயா?” என்றவாறு உள்ளிருந்து அவசரமாக வந்தார். ஆம் குருவே நீங்கள் கூறியதுபோல் சுத்தமான உப்பு வாங்கிவந்தேன்; என்று துணிபையை கொடுத்தான் சீடன். அதை வாங்கி பார்த்த குரு “என்னடா பை காலியாக உள்ளது எங்கேடா உப்பைக் காணோம்” என்றார். “இல்லை குருவே உப்பு வாங்கும்போது கடைக்காரனிடம் இது சுத்தமானதா என்று கேட்டப்பொழுது உப்பை நீரில் கழுவி சுத்தம் செய்யலாம் என்றான். நானும் வருகிற வழியில் ஆற்று நீரில் உப்பை அலசி எடுத்து வந்தேன். அவ்வளவுதான் என்றான். இதைக் கேட்ட குருவும்…உன் யோசனை நல்ல யோசனைதான், ஆனால் உப்பு எங்கு போனது என்று சமையலையும் மறந்துபோய் சிந்தனையில் ஆழ்ந்தனர் பரமார்த்த குருவும் சீடர்களும். பார்த்தீர்களா! இவர்கள் எவ்வளவு பெரிய முட்டாள்களாக இருக்கிறார்கள் என்று
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'உப்புக்கு வந்த சோதனை, அதிசயித்த குரு' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: முல்லா, முட்டாள், காசு, கரை தலைப்பு: முட்டாள் யார்?
ஒருநாள் இரவு நேரத்தில் முட்டாள்களும் கோழைகளுமான பத்துப்பேர் கரைபுரண்டு ஒடும் ஒர் ஆற்றின் ஒரு கரையிலே குழப்பத்தோடு நின்று கொண்டிருந்தனர். அந்தப் பக்கம் வந்த முல்லா " என்ன சமாச்சாரம், ஏன் தயக்கத்தோடு நிற்கிறீர்கள்" என வினவினார். " ஆற்று நீரில் இறங்கி அக்கரைக்குச் செல்ல பயமாக இருக்கிறது. எங்களைக் கையைப் பிடித்து அழைத்துச் சென்று அக்கரையில் விடுகிறீர்களா?" என்று முட்டாள்கள் கேட்டார்கள். " உங்கள் விருப்பத்தை நிறைவேற்றினால் என்ன கொடுப்பீர்கள்?" என்று முல்லா கேட்டார். " ஆளுக்குப் பத்துக் காசு கொடுக்கிறோம்" என்றனர் முட்டாள்கள். முல்லா அவர்களை ஒவ்வொருவராக கையைப் பிடித்து அழைத்துச் சென்று அக்கரையில் விட்டுக் கொண்டிருந்தார். கடைசி மனிதனை அவர் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு ஆற்று நீரில் இறங்கினார். பாதி தூரம் சென்று கொண்டிருந்த சமயம் திடீரென வெள்ளம் அதிகமாகப் பெருக்கெடுத்து விட்டது. முல்லா கையைப் பிடித்து அழைத்து வந்த முட்டாள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டான். அவனைக் காப்பாற்ற முல்லா படாதபாடுபட்டார், முடியவில்லை. அவர் வருத்தத்தோடு அக்கரையை அடைந்தார். அங்கே காத்துக் கொண்டிருந்த ஒன்பது முட்டாள்களும் வருத்தம் ததும்பிய முகத்தினராக வந்து சேர்ந்த முல்லாவை நோக்கி " ஐயா, தாங்கள் ஏன் கவலையோடு இருக்கிறீர்கள்?" என்று கேட்டனர். " உங்களிடமிருந்து எனக்கு வரவேண்டிய வருமானத்தில் பத்துக்காசு குறைந்துவிட்டதே என்பதை எண்ணித்தான் வருந்துகிறேன் " என்றார். அவர் சொன்னதன் உட்பொருளை உணராத முட்டாள்கள் " கவலைப்படாதீர்கள். ஒரு பத்துக் காசு சேர்த்துத் தருகிறோம் " என்று கூறினார். அவர்களுடைய முட்டாள்தனத்தை எண்ணி முல்லா மனத்திற்குள் மிகவும் வேதனைப்பட்டார்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: ''ஜெயந்தி.... உனக்கு ஃபோன்'' ராம்மோகன் சொன்ன போது ஜெயந்திக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்போதுதான் அலுவலகத்திற்குள் நுழைந்திருக்கிறாள். ஆடிட்டிங் என்று ஒரே பரபரப்பு! யாராக இருக்கும்? ''ஹலோ நான் ஜெயந்தி பேசறேன்.'' ''நான் பார்வதி பேசறேங்க... உங்க சுமித்ரா வீட்டுக்குப் பக்கத்து வீடு... அவங்களுக்கு வலி வந்திருக்கு. துடிக்கிறாங்க. அவங்க வீட்டில யாரும் கவனிக்க மாட்டேங்கறாங்க. நான்தான் இத்தனை நேரம் கூட இருந்தேன். என்ன பண்றதுன்னு தெரியலை. உங்களுக்கு ஃபோன் பண்றதுக்காக அவங்களைத் தனியா விட்டுட்டு வந்திருக்கேன். உடனே வர்றீங்களா?'' ''அப்படியா... கொஞ்சம் கவனிச்சுக்கங்க.... இதோ வந்திடறேன்'' - பதற்றமாய் ஃபோனை வைத்த ஜெயந்திக்கு என்றுமில்லாத படபடப்பு நெஞ்சில். கைகள் வியர்த்தன. எல்லோரும் இருந்தும் எங்கோ தன் சகோதரி அனாதையாய்த் துடிக்கும் காட்சி நெஞ்சைக் குமுற வைத்தது. என்ன செய்வது இப்போது? அலுவலகத்தில் அத்தனை பேரும் கருமமே கண்ணாக, வரப்போகும் ஆடிட்டருக்காய் வேலை செய்து கொண்டிருந்தார்கள். இப்போது விடுப்பு கேட்பதென்பது மிகப் பெரிய பொறுப்பின்மை! கதவைத் தட்டி அனுமதி பெற்று, உள்ளே சென்று மேனேஜரிடம் லேசான அவமானத்தில் குனிந்த தலையாய், ''சார்... அக்கா வீட்டில இருந்து ஃபோன் வந்தது. அவங்களை ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ணனும். உடனே நான் போகணும்... - நிலைமையை சரியான பரிமாணத்தில் விளக்க முடியாத இயலாமையில் வரப்போகும் பதிலுக்காகக் காத்திருந்தாள். ''மேடம், உங்களுக்கே நல்லாயிருக்கா? வேற ஏதாவது ஆல்டர்னேட்டிவ் அரேன்ஜ்மெண்ட் செய்துட்டு வந்திருக்கணும். இப்ப வந்து லீவு கேட்கிறீங்களே! கொஞ்சம் பொறுப்பா இருந்து என்கூட ஒத்துழைங்க ப்ளீஸ்...'' மேனேஜர் கூறியதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் அந்த நேரத்தில் ஜெயந்திக்கு அவ்வார்த்தைகள் நெருப்புக் கங்குகளாய்ச் சுட்டன. ''சார்... அக்கா வீட்டில கொஞ்சம் பிரச்சினை. நான் இப்ப போகாட்டி அவங்க உயிருக்கே ஆபத்து நேரிடலாம். போயிட்டு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்திடறேன், ப்ளீஸ் சார்...'' பத்து நிமிடங்களுக்குப் பிறகு வெளியில் வந்து கைப்பையை எடுத்துக் கொண்டு வாணியிடம் மட்டும் சொல்லிக் கொண்டு ஓட்டமாய்க் கீழே வந்து ஆட்டோவில் ஏறி, ''ராம்நகர் ராமர் கோயில் வீதிக்குப் போங்க'' என்றாள். ''சுமிக்கா, உனக்கு ஏன் இத்தனைப் பாடு? எத்தனை அருமையாக வளர்ந்த பெண் நீ! வீட்டில் முதல் கல்யாணம். எத்தனை ஆடம்பரமாய்ச் செய்து கொடுத்தோம்! ஏன் இப்படி அதிர்ஷ்டம் இல்லாமல் போய் விட்டது உனக்கு. எப்படி மாறி விட்டாய்! பிறந்து வளர்ந்த வீட்டிற்கு வர அனுமதியில்லை என்று வருவதேயில்லை. வந்த சில தடவைகளிலும் விவரமாய் எதுவும் பேசவில்லை. மௌனமாகிப் போனாய்! பாழுங் கிணற்றில் தள்ளி விட்டோம் என்று எங்கள் மேல் கோபமா சுமிக்கா? ஜெயந்திக்கு உடனே தன் சகோதரியைப் பார்த்து, கைகளை இறுகப் பற்றி, அவள் தலையைத் தன் நெஞ்சில் சாய்த்து, நான் வந்துட்டேன் சுமிக்கா! இனி எதுக்கும் கவலையில்லை'' என்று சொல்ல வேண்டுமாய் இருந்தது. வீட்டை அடைந்து உள்ளே ஓடிய போது அங்கு நிலவியிருந்த நிசப்தத்தில் வாசலிலேயே சுமித்ராவின் முனகல் கேட்டது. சுமியின் மாமனார் மாமியார் கணவன் மூவரும் முகத்தில் பாவம் ஏதும் காட்டாதிருக்க சபதம் செய்தவர்கள் போல ஹாலில் சோஃபா, தரை, சேர் என்று முறையே அமர்ந்திருந்தார்கள். ஒப்புக்குக்கூட ஒரு வார்த்தை பேசவில்லை. ஜெயந்தியும் எதுவும் பேசாமல் உள்ளறைக்கு ஓடினாள். சுமித்ரா! இருபத்திரண்டு வருடங்கள் உடனிருந்து களித்து, ஒரே மலரின் இன்னொரு இதழாய்ச் சிரித்த சகோதரி... பூரண கர்ப்பிணி கட்டிலில் இடமும் வலமுமாய் அசைந்து வலுக்கட்டாயமாகத் தணித்துக் கொண்ட குரலில் ''அம்மா அம்மா'' என்று அனத்தியதை ஜெயந்தியால் சகிக்க முடியவில்லை. ''சுமிக்கா, ஜெயந்தி....! வந்துட்டேன் பாரு....ஒண்ணுமில்லை. இப்பவே போயிடலாம்...'' அருகிலிருந்த பார்வதியிடம் ''கொஞ்சம் பார்த்துக்கங்க, இதே போய் ஆட்டோவைக் கூட்டிக்கிட்டு வந்திடறேன்'' என்றவாறு வெளியே ஓடி வந்தாள். ஹாலுக்கு வந்த போது தன் ஒவ்வொரு செய்கையும் கண்காணிக்கப் படுகிறது என்ற எண்ணம், சட்டென்று தன் கண்களைத் தாழ்த்திக் கொண்ட சிவராமனின் செய்கையிலிருந்து புரிந்தும், ''இல்ல இதுவல்ல நேரம்.... சுமித்ரா, ஆட்டோ, ஆஸ்பத்திரி - இவை மட்டுமே இப்போதைய பிரதான எண்ணங்கள்.'' காலை பத்தரை மணிக்கு ஒரு அலுவலக நாளில் ஒரு முக்கியமான சாலை இப்படியா வெறிச்சென்றிருக்கும்? ஒரு ஆட்டோ கூட கண்ணில் படவில்லை. இந்த சாலைகள் சேரும் பிரதான சாலைக்குத்தான் போக வேண்டும். கஞ்சி போட்ட காட்டன் சேலையும், கவனித்து வாரப்பட்ட கூந்தலுமாய் ஒரு இளம் பெண்ணின் ஓட்டம் அந்த நேரத்திற்கு மிகவும் வித்தியாசமாய் இருந்தது. ஓடினாள், சட்... கால் செருப்பு அறுந்து குப்புற விழ இருந்தவள் சமாளித்துக் கொண்டாள். அழகான ராஜஸ்தான் செருப்பு! ''உன் பிறந்த நாளின் போது எதுவும் கொடுக்க முடியவில்லை. உனக்காகவே காத்திருந்து வாங்கிய செருப்பு இது.'' பிறந்த நாள் பரிசாக செருப்பா? ''இது பரிசு அல்ல.... உன் பாதையில் உன்னுடன் எப்போதும் வரத் தயாராக இருக்கும், உன்னைத் தாங்கக் காத்திருக்கும் என்கிற என் மனத்தின் அடையாளம்... ஆல்வேஸ் வித் யூ!'' - சின்னத்துண்டுப் பேப்பருடன் போன மாதம் பிறந்த நாள் முடிந்து ஒரு வாரம் கழித்து வாணி கொடுத்த கலைவேலைப்பாடுகள் அமைந்த செருப்பு! என்ன செய்வது? செருப்புத் தைப்பவரைத் தேடியலைய நேரமில்லை. எடுத்துப் போட்டுக் கொள்ளக் கைப்பை இல்லை. சமாளித்து, அறுந்து போன வாருடனேயே காலைச் சிறிது இழுத்து நடந்ததில், நடையை மாத்து உன் நடையை மாத்து'' சாலைத் திருப்பத்தில் வேலையற்ற இளைஞர்களின் பாட்டு! நகக்கண்ணில் ஊசி ஏற்றிய வேதனையாக செருப்புகளை சாலையோரத்தில் ''சாரி வாணி'' என்றபடி எறிந்து விட்டு வெற்றுக் கால்களில் ஆட்டோ பிடித்து மீண்டும் வீட்டுக்கு வந்த போது சுத்தமாய்ப் பதினைந்து நிமிடங்கள் கடந்திருந்ததுடன் சேலை கசங்கி, தலை கலைந்து, வியர்வையில் ப்ளவுஸ் முதுகுடன் ஒட்டி யாரோ ஒரு ஜெயந்தி போல் இருந்தாள். சுமித்ராவால் உடனே எழுந்திருக்க முடியவில்லை. பார்வதி மட்டும் இல்லாதிருந்தால் ஜெயந்தி மயக்கமடைந்திருப்பாள். சுமிக்கா... கொஞ்சம் முயற்சி பண்ணு. என் தோளைப் பிடிச்சுக்கோ... வா. வெளியே ஆட்டோ காத்திருக்கு... இதோ ஆஸ்பத்திரிக்குப் போயிடலாம், கொஞ்சம் தெம்பா இரு...'' பார்வதியும் அவளுமாய் சுமித்ராவை நடத்தி வெளியே அழைத்து வந்து ஆட்டோவில் ஏற்றினார்கள். மாமியார்காரி சமையலறைக்குள் இருந்தாள். மாமனார் பேப்பர் படிக்க, சிவராமன் சட்டைகளை உதறி லாண்டரிக்கு அனுப்ப ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தான். சுமித்ராவை ஆட்டோவில் அமர்த்திவிட்டு, விட்டுச் சென்ற கைப்பையை உள்ளறையிலிருந்து எடுத்துக் கொண்டு வெளியே வந்த ஜெயந்தி அப்போதும் ஏதும் பேசும் உத்தேசம் இல்லாதவளாகத்தான் இருந்தாள். ஆனால் மாமியார்க்காரி தொண்டையை செருமிக் கொண்டு ''நல்லாத்தான் இருக்கு நாடகம்... ஓட்டமும் ஆட்டமும்! மகாராணிக்கு இதுக்கெல்லாம் ஒண்ணும் குறைச்சலில்லை'' என்றதில் ஜெயந்தி கடினமாய்ப் போட்டு வைத்திருந்த சங்கிலி அறுத்துக் கொண்டது. இத்தனை நேரம் நெஞ்சை அழுத்தியிருந்த வேதனை பட்டென்று வெடித்து லாவாக் குழம்பாய்க் கொந்தளித்தது. ''ஏன் அத்தை.. நீங்க எல்லாம் மனுஷங்கதானா? ஒரு பொண்ணு, யாரோ இல்லை... உங்க மருமக, நிறைமாதமாய் வயித்தில குழந்தையை வைச்சுக்கிட்டுத் துடிக்கிறாளே ஏதாவது கொஞ்சம் கொஞ்சம் இரக்கம் காட்டினீங்களா? உங்க காசு, பணம், விருப்பு, வெறுப்புக்கெல்லாம் இதுதானா நேரம்? நீங்களும் ஒரு பொம்பளைதானே? நீங்க மட்டும் என்ன உங்க மகனை சுகமா நிண்ணுகிட்டேவா பெத்தீங்க? என் ஜென்மத்தில் இந்த மாதிரி ஒரு குடும்பத்தைப் பார்த்ததில்லேப்பா... அன்போ, பாசமோ, கேவலம் கொஞ்சம் மனிதாபிமானம் கூட இல்லாத நீங்கள்லாம் மனுஷங்களே இல்லை... எங்கேயோ மலை மேலே பாறாங்கல்லா கிடக்க வேண்டியவங்க... தப்பிப் போய் இங்க பிறந்ததுமில்லாம ஒண்ணும் தெரியாத வெகுளிப் பெண்ணைக் கல்யாணம் பண்ணி சித்திரவதை வேற செய்திருக்கீங்க! உங்களையெல்லாம்... ஏன் மாமா, வெளிய உங்க பொண்டாட்டி துடிச்சுக்கிட்டிருக்கா நீங்க சட்டையை உதறிகிட்ட இருக்கீங்க... உங்களுக்கெல்லாம் எதுக்கு சட்டையும் வேட்டியும்? போயி...'' என்றவளை ''ஜெயந்தீ...'' என்ற சுமித்ராவின் அலறல் சுயநினைவுக்குக் கொண்டு வந்தது. வலுக்கட்டாயமாக நிறத்தப்பட்ட குமுறல் பௌதிக நிலைம விதிக்குட்பட்டது போல, த்தூ.... பாறாங்கள் ஜென்மங்க'' என்ற நிச்சயமான, நிதர்சனமான துப்பலுடன் முடிவு பெற்றது. ஆட்டோவில் சுமித்ராவை சமாதானப்படுத்திக் கொண்டே, ''ரிலாக்ஸ் ஜெயந்தி... அவசரப் படாதே'' என்று தனக்குத்தானே தலையில் தட்டி ஆசுவாசப் படுத்திக் கொள்ள செய்த முயற்சி பாதி வெற்றியும் பாதி தோல்வியுமாய் இருந்தது. ஜெயந்தி என்ற 23 வயது இளம் பெண்ணுக்கு ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் அருகாமையும் அவஸ்தையும் மிகவும் புதிது! பொய் வலி, பனிக்குடம் உடைதல், லேபர் பெய்ன் போன்ற வார்த்தைகளைப் பிறர் பேசக் கேட்டிருக்கிறாள். இப்போது சுமித்ராவுக்கு என்ன என்பதை அவளால் நிச்சயமாகத் தீர்மானிக்க முடியவில்லை. இதற்கு என்ன முதலுதவி, உடைகளைத் தளர்த்த வேண்டுமா? பாம்புக்கடிக்கு வாழைப்பட்டை வைத்தியத்தைத் தவிர வேறெதுவும் நினைவுக்கு வரவில்லை ஜெயந்திக்கு. ஆஸ்பத்திரிக்குச் சென்று சுமித்ராவை அட்மிட் செய்யும் வரை ஜெயந்திக்கு சுயநினைவே இருக்கவில்லை. ஒருவேலை ஆட்டோவிலேயே குழந்தை பிறந்தால் குழந்தையைத் தாங்குவதா சுமித்ராவைக் கவனிப்பதா போன்ற அபத்தமான சிந்தனைகள் கூட வந்தன. ஆஸ்பத்திரி வாசலில் சுமித்ராவை அழைத்து வந்த கோலத்தைப் பார்த்து ஆஸ்பத்திரி நர்ஸ் ஓர் அலறலுடன் ''மை காட்... ஏம்மா நீங்கள்லாம் படிச்சவங்கதானே? அறிவிருக்கா? கொஞ்சம் முன்னாடியே கூட்டிகிட்டு வர வேண்டியது தானே?'' என்ற போது ஜெயந்தி எதுவும் உறைக்கும் மனநிலையில் இல்லை. சுமித்ராவை அட்மிட் செய்து, அப்பாவுக்கு ஃபோன் செய்து ஆஸ்பத்திரிக்கு வரவழைத்து, வீட்டிற்குப் போய் அம்மாவுக்கு ஆறுதல் சொல்லி வேண்டிய பொருட்களுடன் அனுப்பி வைத்து, மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்த முரளிக்கு விஷயத்தைச் சொல்லி அவனையும் அழைத்துக் கொண்டு மீண்டும் ஆட்டோவில் ஆஸ்பத்திரிக்கு வந்த போது மணி ஒன்றரை ஆகியிருந்தது. லேசான ஆசுவாசத்துடன் சகோதரனின் அண்மையும் கிடைக்க, மகா ஆத்திரத்துடனும், பொருமலுடனும் நடந்ததைச் சொல்லி முடித்த போது அழுகையில் கண்களும் கன்னமும் நனைந்தன. சகோதரியின் கண்களில் நீர், இயல்பாக அந்த இள ரத்தத்தைத் தூண்டி விட ''பிடிச்சு எகிற வேண்டியதுதானே ஜெயந்திக்கா? அந்த ராஜஸ்தான் செருப்பிலேயே நாலு அறை குடுத்திருக்க வேண்டியதுதானே? பாவம், வாணியக்காவுக்குத் தெரிஞ்சா எவ்வளவு சங்கடப்படுவாங்க?'' என்ற முரளிக்கு, ''நிறைய கெட்ட கெட்ட வார்த்தையா சொல்லித் திட்டணும் போல இருந்து முரளி... ஆனா சொல்லத் தெரியலை. பாறாங்கல் ஜென்மங்கள்னு திட்டினேன். லிட்ரலா துப்பினேன். இவங்க கேட்டவுடனே வைர மோதிரம் தர்றதுக்கு நாம என்ன கோலாரையா குத்தகைக்கு விட்டிருக்கோம்?'' என்றாள். ''கேட்க வேண்டியதுதானே? ஏன்யா வைரமில்லாத பொண்டாட்டி வேண்டாம்... ஆனா அவகூட '' நாக்கைக் கடித்து அடக்கிக் கொண்டான். பேசிப்பேசி பொருமலைத் தீர்த்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு வந்தபோது சுமித்ராவுக்கு ஆண் குழந்தை பிறந்திருந்தது. கொஞ்சம் நிம்மதியுடன் வாசலுக்கு வந்த ஜெயந்தியின் பார்வையில் ஒரு வயதான பெண்மணி ஒரு கர்ப்பிணிப் பெண்ணைக் கைத்தாங்கலாக அழைத்து வரும் காட்சி தென்பட, ''இதே இன்னொரு பாறாங்கல் குடும்பத்தில் வாழ்க்கைப் பட்டவள்'' என்று நினைத்துக் கொண்டாள். குழந்தை பிறந்த சேதியை முரளி மூலம் (''உள்ளே போக மாட்டேன். வெளியவே நிண்ணுதான் சொல்லிட்டு வருவேன். ஏதாவது ஏடாகூடமா பேச்சு வந்தது, அந்தாளு தீர்ந்தான் ஆமா...'') சொல்லியனுப்பியும் யாரும் வரவில்லை. இரண்டு மாதங்கள் சுமித்ரா குழந்தைக்குப் பாலோடு கண்ணீரையும் கலந்துதான் தந்தாள். அவள் பேசுவதே அபூர்வமாய் இருந்தது. கருவுற்ற ஏழாம் மாதம், மெல்லிய கதம்பப் பூக்கள் சூட்டி, சீர்வரிசைகள் நிரம்பத் தந்து பட்டுப் புடவையில் தேவதைப் பெண்ணாய்ப் பார்த்து, கண்ணாடி வளையோசைகளே சின்னக் கண்ணனின் மழலையாய்க் கொண்டு, அடியொற்றி வைக்க ஆயிரம் பேர் அருகாமையில் பணிவிடை செய்ய லாலி பாடி, ஆரத்தி எடுத்திருந்தால் சுமித்ராவும் சிரித்திருப்பாள். சுமித்ராவின் புகுந்த வீட்டு வக்கிரம் வீட்டில் எல்லோரையும் தாக்க, இனி சுமித்ராவை அனுப்பவே வேண்டியதில்லை என்று முடிவு செய்தனர். தாய்மை நிலையில் ஓருயிர் இன்னோர் உயிரை வெளிப்படுத்தத் தயாராய் நின்ற நிலையை நாடகம் என்று வர்ணித்தவர்கள் கொலைக்கும் தயங்காதவர்கள் என்பது புரிந்து போக சுமித்ராவை மீண்டும் அங்கே அனுப்பி முழுசாய்ப் பலி கொடுக்கத் தயாராயில்லை. ஒரு நாள் காலை அலுவலகத்திற்குக் கிளம்பிய போது, சுமித்ரா, ''ஜெயந்தி, நான் எங்க வீட்டுக்குப் போகறதா முடிவு பண்ணிட்டேன்'' என்ற போது, ஜெயந்திக்கு அதிர்ச்சியாக இருந்தது. ''என்னது, உங்க வீடா? அப்படி ஒண்ணு இருக்கா சுமிக்கா உனக்கு?'' ''இல்லை ஜெயந்தி... நான் இப்படியே இருந்துட முடியுமா? எப்ப இருந்தாலும் நான் அங்க போக வேண்டியவதான். எத்தனை நாள் இங்க பாரமா இருக்க முடியும்? நீ வேற கல்யாணம் ஆகி போக வேண்டிய பொண்ணு. உனக்கு எதுவும் தெரியாது.'' ''சுமிக்கா... ப்ளீஸ். யோசி.. நீ என் கூடப் பிறந்தவ. பாரம் இல்லை. அப்படியே உனக்குக் கஷ்டமா இருந்தா இங்கேயிருந்தே ஒரு வேலைக்குப் போய்கிட்டு வந்துகிட்டு இரு உன்னை இழக்கிற அளவுக்கு எங்களுக்கு நெஞ்சுரம் இல்லை.'' யார் வார்த்தையும் சுமித்ராவிடம் செல்லுபடி ஆகவில்லை. ஒரு நாள் காலையில் பிடிவாதமாய் குழந்தையுடன் டாக்ஸியில் ஏறிக்கொள்ள, முணுமுணுத்துக் கொண்டே முரளியும் கலவரமாய் அப்பாவும் கூடப் போனார்கள். வாசலில் அழுகையில் அம்மா. நிலைப்படியில் சாய்ந்து நின்றிருந்த ஜெயந்தி டாக்சி கண்மறையும் வரை பார்த்திருந்தாள். ''நோ கெல்பெர்னியா, சீசர் ஷல் கோ'' - எத்தனை பய ஊசிகளுடன் கெல்பெர்னியா சீசரைப் போக வேண்டாமென்று தடுத்திருப்பாள்... சீசர் வீரன். ஆண்மகன். அதிகாரமாய் ''போவேன்'' என்றான். சுமித்ரா பெண், சாதாரணப் பெண். அடக்கமாய், ஆனால் பிடிவாதமாய் ''போவேன்'' என்றாள். ஜெயந்திக்கு அந்த ஒரு நாள் நினைவுக்கு வந்தது. எத்தனை ஓட்டம், எத்தனை உணர்ச்சிகள், எத்தனை பதட்டங்கள்! ஒரு ஆயுசுக்குப் போதுமான அலைச்சல்! அத்தனையும், ஒரு ''ஷல்கோ''வில் அர்த்தமற்றதாய்ப் போய் விட்டன. ''மனிதாபிமானம், இரக்கம், பாசம் இல்லாத அவர்களைப் பாறாங்கல் ஜென்மங்கள் என்றேன். இதோ மானம், ரோஷம் இல்லாமல் அவர்களைத் தேடிப் போகும் சுமிக்கா கூட ஒரு பாறாங்கல் ஜென்மம்தான்.'' புதிதாய் ஒன்று புரிந்து கொண்ட மாதிரி, ஜெயந்தி கண்களை மூடிக் கொண்டாள்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'சில பதற்றங்களும் பாறாங்கற்களும்' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: சண்முகன், லட்சுமி, சண்முகனின் அம்மா, சண்முகனின் அத்தை, மாப்பிள்ளை, காதல் தலைப்பு: நிலவின் ஒளி
சண்முகனின் முகத்திற்கு நேரே வந்து விழுந்தது நிலவின் ஒளி. அழகாய், நின்று நிதானித்து சிரிக்கும் வெள்ளை தேவதையாய் தெரிந்தது நிலவு அவனுக்கு. நிலவுக்கு மேலே உள்ள மேகக் கூட்டங்கள் தலையில் விறகுக் கட்டுகள் சுமந்து செல்லும் லட்சுமியை நினைவுபடுத்தின. வழக்கம் போலவே நிலவுக்கும் அவளுக்குமான ஒப்பிடுதலை ஆரம்பித்தான். பலத்த காற்றின் காரணமாக வீட்டு மேற்கூரையின் துளை பெரிதானதில் இப்போது நிலவு முழுவதுமாய் தெரிந்தது. அந்த நிலவின் கிரணத்தை கண்களில் வாங்கிக் கொண்டே மெல்லமாய் உறங்கிப்போனான். "சண்முகா, சண்முகா" எந்திரிடா! குவாரிக்கு போகணுமில்ல. நேரமாச்சு எந்திரி! அம்மாவின் குரல் கேட்டு விறைத்தன காது மடல்கள். இன்று கொண்டு வரும் கூலியில்தான் அம்மாவை வைத்தியரிடம் கூட்டிப் போகணும் என்ற நினைப்புடனே காலைக் கடன்களை முடித்துவிட்டு குவாரிக்கு கிளம்பினான். வழியெங்கும் லட்சுமியின் நினைவுகள். இன்றும் அவள் விறகொடிக்க வருவாளா? நான் கல்லுடைக்கும் குவாரிக்கு அருகிலேயே அவள் விறகொடிக்கும் கருவேலங்காடு. நான் உடைக்கும் கற்களின் சப்தத்திலும் அவள் தூக்கிச் செல்லும் விறகின் அசைவிலும் கொஞ்சம் கொஞ்சமாய் பரிமாறப்பட்டது எங்கள் காதல். கற்களின் சப்தமே தேசிய கீதமாகவும் விறகின் அசைவே ஏகாந்த நடனமாகவும் மாற்றம் செய்யப்பட்டது எங்கள் காதல் சாம்ராஜ்யத்தில். "அன்று கொடுத்த நாற்பது ரூபாய் கூலியுடன் அம்மாவை அழைத்துக் கொண்டு வைத்தியரிடம் சென்றேன். "எப்பா சண்முகா! ஒங்கம்மாவுக்கு வந்திருக்கிறது ராச நோய்". பொத்துனாப்ல வச்சிருந்து வைத்தியம் பார்க்கணும்." குளிர் காத்து அண்டப்படாது" என்று சொல்லியனுப்பினார் வைத்தியர். இருந்த பணமும் வைத்தியருக்கு போய்விட, வைத்தியச் செலவுக்கு இனி என்ன செய்ய? தலைக்குமேல் ஆகாயம் சுழல்வது போலிருந்தது. வருத்தத்துடன் வீட்டிற்கு சென்றான். அம்மாவின் தம்பியும் அவர் மகளும் வந்திருந்தனர். அம்மாவின் வைத்தியச் செலவை அவர் ஏற்பதாகச் சொன்னார். வீட்டு மேற்கூரையும் அடைப்பதாக உடன்பாடாயிற்று, நான் அவர் வீட்டு மாப்பிள்ளையாக உடன் பட்டால் மட்டுமே! மறுநாள் குளிர்காற்று நுழையாமலிருக்க புதிதாய் வேயப்பட்டது மேற்கூரை. கூரையினுள் நுழைந்த நிலவின் ஒளி என்னுள் நுழைந்த லட்சுமியின் நினைவுகள் போலவே கொஞ்சம் கொஞ்சமாய் அடைக்கப்பட்டது. இனி குவாரியில் அமைதியாய் அழுது கொண்டிருக்கும் காதலுக்கு சாட்சியாய் நான் உடைத்தெறிந்த கற்கள். வழக்கம்போலவே விவரம் புரியாமல் உலாவரும் லட்சுமியின் விறகுக் கட்டுகள் சுமந்து நடைபோடும் பாதங்கள்!
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: பெண், கணவன், இறப்பு, குழந்தை, பைத்தியம், புத்தர், மருத்துவர், இந்தியா, கிராமம், நிபந்தனை, தீட்சை தலைப்பு: மரணத்தை மறக்காதே
ஒரு பெண்ணின் கணவன் இறந்து விட்டான். அவளுக்கு இளம் வயது, ஒரே ஒரு குழந்தை இருந்தது. அவள் தனது கணவனுடன் சிதையில் குதித்து உடன்கட்டை ஏற விரும்பினாள். ஆனால் இந்த சின்ன குழந்தை அதை தடுத்து நிறுத்தி விட்டது. அவள் அந்த குழந்தைக்காக வாழ்ந்தாக வேண்டும். ஆனால் பின் இந்த சின்ன குழந்தையும் இறந்துவிட்டது. இப்போது பாதிப்பு அதிகமாகி விட்டது. அவள் கிட்டத்தட்ட பைத்தியமாகி விட்டாள். "என்னுடைய குழந்தையை திரும்பவும் உயிர்ப்பித்து தரக் கூடிய மருத்துவர் யாரேனும் இங்கு உண்டா" நான் அவனுக்காகவே வாழ்ந்தேன். ஆனால் இப்போது எனக்கு எனது முழு வாழ்வும் இருளாகி விட்டது." என்று கேட்டு அலைந்து திரிந்தாள். இந்தியாவில் நீ மறுமணம் செய்து கொள்ள முடியாது. அதிலும் குறிப்பாக அந்த காலத்தில் அது சாத்தியமே இல்லாத ஒன்று. ஒரு பெண் மறுமணம் செய்து கொள்ள முடியாது. ஆணின் ஆளுமை வெறி அத்தகையது. ‘ நான் இறந்து விட்டாலும்கூட………. நீ சிரமபட்டாலும் சரி, ஆனால் நீ வேறு யாரையும் மறுமணம் செய்து கொள்ளக் கூடாது." அப்படிப்பட்ட பொறாமை…. இதுதான் ‘இந்தியாவின் பாரம்பரியம்" என்று அழைக்கப்படுகிறது. அப்போது புத்தர் அந்த நகரத்தின் வழியே வந்தார். அதனால் மக்கள் அவளிடம், "எங்களுக்கு எந்த மருத்துவரையும் தெரியாது. ஆனால் புத்தர் வருகிறார். இது ஒரு சிறந்த தருணம். நீ உனது குழந்தையை தூக்கிக் கொண்டு புத்தரிடம் செல். நீ இந்த குழந்தைக்காவே உயிர் வாழ்ந்தாய் என்பதைக் கூறி இப்போது இது இறந்துவிட்டது என் மேல் கருணை காட்டுங்கள். இவனை உயிர்பித்து தாருங்கள் நீங்கள் ஞானமடைந்தவர் என்று கேள்." என்றனர். ஆகவே அவள் புத்தரிடம் சென்றாள். இறந்த குழந்தையின் உடலை புத்தரின் காலடியில் கிடத்தி, "இவனை உயிர்பித்து தாருங்கள். உங்களுக்கு வாழ்வின் அனைத்து மர்மங்களும் தெரியும். நீங்கள் பிரபஞ்சத்தின் உச்சியை தொட்டு விட்டீர்கள். இந்த ஏழை பெண்ணுக்காக ஒரு சிறிய அற்புதத்தை நீங்கள் செய்யக் கூடாதா?" என்று வேண்டினாள். புத்தர், "நான் செய்கிறேன், ஆனால் ஒரு நிபந்தனை!" என்றார். அவள், "அது எதுவானாலும் நான் செய்கிறேன்" என்றாள். புத்தர், "அப்படியென்றால் சரி.! நிபந்தனை இதுதான். இந்த நகரத்தைச் சுற்றி வந்து யார் வீட்டில் இது வரை சாவு எதுவும் நடக்கவில்லையோ அந்த வீட்டிலிருந்து கொஞ்சம் கடுகு விதைகள் வாங்கி வா." என்றார். அந்த கிராமத்தில் கடுகு பயிர் அறுவடை செய்து வந்தனர். எனவே புத்தர் அவளிடம், "இந்த நகரத்தை சுற்றி வந்து…………. என்றார். அந்த பெண்ணால் இதை புரிந்து கொள்ள முடிய வில்லை. அவள் ஒரு வீட்டிற்கு சென்று கேட்டாள். அவர்கள், "கொஞ்சம் கடுகென்ன? புத்தரால் உனது குழந்தைக்கு உயிர் தர முடியுமென்றால் ஒரு மாட்டு வண்டி நிறைய கடுகு வேண்டுமானாலும் தருகிறோம். ஆனால் எங்களது குடும்பத்தில் ஒருவர் அல்ல, ஏகப்பட்ட பேர் இறந்து போயிருக்கின்றனர். காலங்காலமாக நாங்கள் இங்கிருக்கிறோம். தாத்தாவுக்கு தாத்தா, தாத்தாவுக்கு பாட்டி, தாத்தாவின் அப்பா, தாத்தாவின் அம்மா, தாத்தா, பாட்டி என எல்லோரும் இறந்து விட்டிருக்கின்றனர். நாங்கள் பலர் இந்த குடும்பத்தில் சாவதை பார்த்திருக்கிறோம். ஆதலால் இந்த கடுகினால் பயன் இல்லை. ‘எந்த குடும்பத்தில் இது வரை சாவு விழ வில்லையோ" என்பதுதானே புத்தரின் நிபந்தனை." என்றனர். அது ஒரு சிறிய கிராமம். அவள் ஒவ்வொரு வீட்டிற்க்கும் சென்று கேட்டாள். அந்த கிராமத்தில் உள்ள எல்லோரும் கடுகு தர தயாராக இருந்தனர். "எவ்வளவு கடுகு வேண்டும் உனக்கு?" ஆனால் அந்த நிபந்தனை அதுதான் சாத்தியமற்றதாக இருந்தது. எங்களுடைய குடும்பத்தில் பலர் இறந்திருக்கின்றனர்." மாலையில் அவள் புத்தரின் நடவடிக்கை பற்றி உணர்ந்தாள். மேலும் அவளுக்கு உண்மையையும் புரிந்தது. பிறக்கும் யாவரும் இறந்தே தீருவர் என்பது அவளுக்கு புரிந்தது. குழந்தையை திரும்ப உயிர்பித்து என்ன பயன் அவனும் ஒருநாள் இறந்தே தீருவான். அதற்கு பதிலாக எது இறப்பதும் பிறப்பதும் இல்லையோ அந்த அழிவற்றதை நானே தேட வேண்டியதுதானே. என்பதை உணர்ந்தாள். மாலையில் அவள் வெறும் கையுடன் திரும்பி வந்தாள். புத்தர், "எங்கே கடுகு?" என்று கேட்டார். அவள் சிரித்தாள். காலையில் அவள் அழுதவண்ணம் வந்தாள், இப்போது சிரித்தாள். அவள், "நீங்கள் தந்திரம் செய்து விட்டீர்கள், பிறக்கும் யாரும் இறக்கத்தான் வேண்டும். இந்த கிராமத்தில் மட்டுமல்ல, இந்த உலகத்திலேயே யாரும் இறக்காத குடும்பமே கிடையாது. அதனால் நான் எனது மகனை உயிர்பித்துத் தர கேட்கப் போவதில்லை, என்ன பயன்? – சில தினங்களுக்குப் பிறகு, அல்லது சில நாட்களுக்குப் பிறகு, அல்லது சில வருடங்களுக்குப் பிறகு அவன் திரும்பவும் இறந்துவிடுவான். வாழும் அத்தனை வருடங்களும் அவன் துயரத்திலும் துன்பத்திலும் எல்லா விதமான வேதனைகளிலும் இருப்பான். அவனை திரும்பவும் வாழ்வுக்கு கொண்டு வராத உங்களது கருணை மிகவும் பெரியது. குழந்தையை மறந்து விடுங்கள். எனக்கு தீட்சை கொடுங்கள். பிறப்பும் இறப்பும் நிகழாத அழிவற்ற, அந்த உலகத்திற்கு நான் செல்ல எனக்கு தியானமென்னும் வழி காட்டுங்கள்," என்றாள். புத்தர், "நீ மிகவும் புத்திசாலியான பெண். நீ அதை உடனே புரிந்து கொண்டு விட்டாய்." என்றார். நான் இதைத்தான் அதிசயம் என்றழைப்பேன், ஜீஸஸ் லசாரஸை உயிர்பித்ததை நான் அதிசயம் என்று கூற மாட்டேன். அது பார்ப்பதற்கு அதிசயம் போல தோன்றலாம், ஆனால் தோன்றுவதெல்லாம் உண்மை அல்ல. நான் புத்தரின் நடவடிக்கையைத் தான் அதிசயம் என்று கூறுவேன். எல்லோரும் இறந்து போகத் தான் போகிறார்கள். அதில் எந்த வித்தியாசமும் இல்லை. பிறப்பிலிருந்தும் இறப்பிலிருந்தும் ஒருவர் வெளியே வர வேண்டும். புத்தர் அந்த பெண்ணிற்கு தீட்சை கொடுத்தார். அவள் புத்தரின் ஞானமடைந்த சீடர்களில் ஒருவராக விளங்கினாள். அவளது தேடுதல் அத்தகையது….. அவளுக்கு என்னுடைய கணவன் இறந்து விட்டான், என்னுடைய குழந்தை இறந்து விட்டது, இப்போது என்னுடைய முறை, எந்த கணமும் நான் இறப்புக்கு பலியாகி விடலாம். நேரமில்லை, எந்த நேரம் மரணம் வரும் என்று எனக்குத் தெரியாது. எனவே நான் முழுமையாக இந்த தேடுதலில் ஈடுபடவேண்டும், புத்தர் என்னிடம், ‘உள்ளே செல். உன்னுடைய இருப்பின் மையத்திற்குச் செல், நீ பிறப்பையும் இறப்பையும் தாண்டி செல்வாய்." என்று கூறியுள்ள படியால் நான் தேடி சென்றடைய வேண்டும் என்பதை அவள் அறிந்திருந்தாள். இதைதான் நான் ஆணித்தரமான தேடுதல் என்றழைக்கிறேன். எல்லா பிரச்சனைகளையும் வேரறுத்து விடுவது.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: கலீல் கிப்ரான், சூஃபி, கிணறு, அரண்மனை, மந்திரி, யோகாசனம், ராஜா, ராணி, இளவரசன், பைத்தியம், போலீஸ் தலைப்பு: கூட்ட மனப்பான்மை
கலீல் கிப்ரானின் புத்தகத்தில் ஒரு அழகான சூஃபி கதை ஒன்று உண்டு. உண்மையில் நிகழ்ந்ததாக கூறப்படும் அந்தக் கதையில் ஒரு கிராமத்தில் இரண்டு கிணறுகள் இருந்தன. ஒன்று அரண்மனையில் இருந்தது. அதை மந்திரியும் அரச குடும்பத்தினரையும் தவிர வேறு யாரும் உபயோகிக்க முடியாது. மற்றொன்று ஊரின் நடுவே இருந்தது. அதை மற்ற அனைவரும் உபயோகித்தனர். ஆனால் ஒருநாள், ஒரு மந்திரவாதி அந்த ஊருக்கு வந்து சில மந்திரங்களை கூறிக்கொண்டே ஏதோ ஒன்றை அந்த பொது கிணற்றினுள் போட்டான். மக்கள் எல்லோரும் அதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் யாருக்கும் என்ன நிகழ்கிறதென்று புரியவில்லை! அவன் இந்த கிணற்றிலிருந்து தண்ணீர் பருகுபவர் யாராயிருந்தாலும் அவர்கள் பைத்தியமாகி விடுவர் என்று கூறிவிட்டு மறைந்துவிட்டான். தண்ணீர் குடிக்க வேறு வழியில்லை, அரண்மனைக்கு போக முடியாது. எனவே தாங்கள் பைத்தியமாகி விடுவோம் என தெரிந்தபோதிலும் மக்கள் வேறு வழியில்லாமல் இந்த தண்ணீரையே குடித்தனர். சூரியன் மறையும்போது அந்த தண்ணீரைக் குடித்த வயது முதிர்ந்த கிழவனிலிருந்து சிறு குழந்தை வரை அனைவருக்கும் பைத்தியம் பிடித்துவிட்டது. ராஜா, ராணி, இளவரசன், மந்திரி ஆகியோரைத் தவிர தலைநகர் முழுமைக்கும் பைத்தியம் பிடித்துவிட்டது. யாருக்கும் சுயநினைவில்லை! ஏனெனில் எல்லோரும் பைத்தியமாக இருக்கும்போது யாருக்கு சுய உணர்விருக்கும்? ஹிப்பிகள் சொல்வதுபோல ஒவ்வொருவரும் தாங்கள் விரும்பியதை செய்தனர். மக்கள் அம்மணமாக திரிந்தனர், கத்தி கதறி கூக்குரலிட்டனர், பெண்கள் நிர்வாணமாக தெருவில் ஓடினர்! ஒருவர் தலைகீழாக நின்றார், மற்றொருவர் யோகாசனம் செய்தார், எல்லோரும் கொண்டாடிக்கொண்டிருந்தனர்! என்ன செய்வது? நகர் முழுவதும் பைத்தியமாகிவிட்டனர். எல்லோரும் பைத்தியமாகிவிட்டதால் எடுத்துச் சொல்ல யாருமே அங்கு இல்லையே! மந்திரியும் அரச குடும்பத்தினரும் மட்டுமே சோகமாக இருந்தனர். எல்லோரும் பைத்தியமாகி விட்டனரே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தனர். உண்மையில் தங்களது உணர்வைப் பற்றி அவர்களுக்கே சந்தேகமாக இருந்தது. நாம்தான் பைத்தியமாகிவிட்டோமோ என்று சந்தேகப்பட ஆரம்பித்துவிட்டனர். அப்போது அங்கு ஒரு வித்தியாசமான விஷயம் நடந்தது. நகர் முழுவதும் அரசரும் மந்திரியும் வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தது. அரசரும் மந்திரியும் பைத்தியமாகிவிட்டனர் என்ற வதந்தி பரவியது. கூட்டம் முழுமையும் அரண்மனை முன் ஒன்று கூடி அரசன் பைத்தியமாகிவிட்டான் என சத்தமிட ஆரம்பித்தனர். எல்லோருக்கும் பைத்தியம் பிடித்திருந்தது. எனவே அரசர் நம்மைப் போல இல்லை எனும் விஷயத்தில் எல்லோரும் ஒன்றுபட்டனர். காவலாளிகள், போலீஸ், படைபட்டாளம் ஆகிய அனைத்தும் பைத்தியமாகிவிட்டனர்! அதனால் அங்கு எந்த பாதுகாப்பும் இல்லை. அவர்களும் சேர்ந்து கூடி கூத்தாடிக் கொண்டு, "மரியாதையாக இயல்பாகி விடு, இல்லையேல் அரண்மனையை விட்டு வெளியே வா! நாங்கள் எங்களைப் போலவே இருக்கும் ஒருவரை புதிய அரசராக தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம்," என கூக்குரலிட்டனர். அரசர், மந்திரியிடம், "நமது படைகளுக்கும் கூட பைத்தியம் பிடித்து விட்டதே! என்ன செய்வது? நமக்கு பாதுகாப்பில்லையே!" என்று கேட்டார். மந்திரி விவேகமுள்ளவர், வயது முதிர்ந்த அனுபவசாலி. அவர், "ஒரே ஒரு வழிதான் உள்ளது! முன்வாசலை அடைத்துவிட்டு பின்வாசல் வழியே தப்பி சென்று அவர்கள் தண்ணீர் பருகிய அந்த கிணற்றிலிருந்தே தண்ணீர் எடுத்து குடித்து நாமும் பைத்தியமாகி விட வேண்டியதுதான். இல்லாவிடில் இந்த பைத்தியகார கும்பல் நம்மை கொன்றுவிடும்." என்றார். அந்த அறிவுரை மிகவும் சரியானது. அரசரும் மந்திரியும் அரச குடும்பத்தினரும் பின்வாசல் வழியே ஓடினர். அந்த மந்திரவாதி ரசாயன மாற்றம் செய்திருந்த அந்த கிணற்று தண்ணீரைக் குடித்தனர். பின் அவர்கள் பின்வாசல் வழியே வரவில்லை, ஆடிக் கொண்டும், கத்திக் கொண்டும், குதித்துக் கூத்தாடிக் கொண்டும், முன் வாசல் வழியே வந்தனர். தங்களது அரசரும் மந்திரியும் இயல்பாகி விட்டதைக் கண்ட கூட்டம் மிகவும் மகிழ்ச்சியடைந்தது. அன்று இரவு தலைநகரம், ‘அரசரும் அரச குடும்பத்தினரும் மந்திரியும் இயல்பு நிலையடைந்து விட்டனர் ‘ என்று மிகவும் கோலாகலமாக இருந்தது.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: பாபு, சாமி, பரிட்சை, கோவில், உதவி, தோப்புக்கரணம், கடவுள் தலைப்பு: தோப்புக்கரணம்
"நான் பாஸ் பண்ண.. நீதான் உதவி செய்யணும்..." என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டான் பாபு. சாமி சிலை முன்னால் 108 தோப்புக்கரணம் போட்டான். கோவில் பிரகாரத்தில் மூன்று முறை சுற்றி வந்தான். பாபு ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தான். இப்படி பரிட்சை ஏதாவது வந்தால் அன்றைக்கு கண்டிப்பாய் கோவிலில் 108 தோப்புக் கரணம் போடுவான். அன்று தான் முதல் பரிட்சை. ஆசிரியர் கேள்வித்தாளை கொடுத்தார். பாபு சாமியை வேண்டியபடி கேள்வித்தாளை பிரித்தான். ஆச்சரியமாக இருந்தது. ஒன்றிரண்டு கேள்விகளைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை. "நான் உனக்கு என்ன குறை வைத்தேன்.. ஏன் இப்படி என்னை சோதிக்கிறாய்?.." என்று மனசுக்குள்ளாக சாமியைக் கேட்டான். இரண்டாவது பரிட்சைக்குப் போனான். இரண்டாவது முதல் பரிட்சையை விட மோசமாக இருந்தது. அவனுக்கு மனது சரியில்லை. மீண்டும் கோவிலுக்குப் போய் சாமியிடம் வேண்டிக் கொண்டான். "உன்னை நம்பியவர்களை கைவிட மாட்டாய். என்று சொல்லுகிறார்களே.. என்னையும் கைவிட்டுவிடாதே.." என்று வேண்டியபடி பரிட்சை அத்தனையும் எழுதி முடித்தான். எந்தப் பரிட்சையும் அவனுக்குத் திருப்தியாக அமையவில்லை. ஆனால் எப்படியும் கடவுள் கைவிடமாட்டார் என்று மட்டும் பாபு நம்பிக்கையாய் இருந்தான். அன்று தான் பரிட்சை முடிவு தெரியும் நாள். நேராக பள்ளிக்கூடத்திற்கு ஓடினான். அங்கு பரிட்சையில் வெற்றி பெற்றவர்களின் பெயர் பட்டியல் ஒட்டியிருந்தது. அதில் இவன் பெயர் இல்லை. இவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நேராக கோவிலுக்கு ஓடி வந்தான். "அந்தி சந்தி எந்த நேரத்திலும் உன்னையே நினைத்திருக்கும் ... எனக்கு நீ செய்யும் உதவி இதுதானா?" என்று கேட்டான் சாமியிடம் சாமி எப்போதும் போல சிலையாக நின்றிருந்தது. பாபு அழுது புலம்பினான். அன்று இரவு வெகுநேரம் கழித்துத்தான் தூங்கினான் பாபு. "உன்னுடைய சந்நதியில் எத்தனை தோப்புக்கரணம் போட்டிருப்பேன். என்னை கைவிட்டுவிட்டாயே..." என்று தூக்கத்தில் அவன் உதடுகள் முணுமுணுத்தன. அடுத்த வினாடி வானம் இடிந்து விழுவது போன்ற ஒரு சத்தம். பாபு கண்விழித்துப் பார்த்தான். என்ன ஆச்சரியம்? கோவிலில் அவன் கும்பிட்ட அதே சாமி. உயிரோடு சிரித்தபடி நின்று கொண்டிருந்தது. "நான் பரிட்சையில் தோல்வியடைந்து அழுது கொண்டிருக்கிறேன்... உனக்கு சிரிப்பாய் இருக்கிறதா?.." என்று அழுதபடி கேட்டான் பாபு. கடவுள் அவன் அருகில் வந்து அவன் கண்களைத் துடைத்துவிட்டார். "நீ என்னை நம்பியதை விட உன்னை நம்பியிருந்தால், நீ பரிட்சையில் ஜெயித்திருப்பாய்" என்றார் கடவுள். "சாமி, என்ன சொல்கிறாய்...", "ஆமாம் பாபு. என்னைச் சுற்றி வந்த நேரத்தில் நீ எனக்கு தோப்புக்கரணம் போட்ட நேரத்தில் முறையாகப் படித்திருந்தால் நீ வெற்றி பெற்றிருப்பாய்" பாபு மௌனமாக இருந்தான். "கடமையைச் செய்பவன்... கடவுளைக் கும்பிட வேண்டிய அவசியம் இல்லை பாபு" என்றார் கடவுள். பாபு ஆச்சரியமாகக் கடவுளைப் பார்த்தான்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: முல்லா வாழ்ந்துவந்த நாட்டிற்கு அடுத்த நாட்டிலே சட்டம் ஒன்று போட்டிருந்தார்கள். அந்தநாட்டின் எல்லைக்குள் யாரும் கோழி முட்டைகளைக் கொண்டு சென்று வியாபாரம் செய்யக்கூடாது. ஆனால் கோழிகளைக் கொண்டு செல்வதற்குத் தடை ஒன்றும் இல்லை. முல்லா அந்த நாட்டுக்கு பிறர் அறியாமல் கோழிமுட்டைகளைக் கொண்டு சென்று வியாபாரம் செய்து வந்தார். ஒரு நாள் முல்லா கோழி முட்டைக் கூடையுடன் அந்த நாட்டுக்குள் பிரவேசித்தபோது இரண்ட காவலர்கள் அவரைப் பிடித்துக் கொண்டனர். மூடபப்பட்டிருந்த அவர் கையிலிருந்த கூடையைப் பார்த்து " கூடைக்குள் என்ன இருக்கிறது ?" என்று காவலர்கள் கேட்டனர். " கோழிக்குஞ்சுகள் இருக்கின்றன" என்றார் முல்லா " கோழிக்குஞ்சுகளை எடுத்துச் செல்வது குற்றமல்ல என்றாலும் சுங்க அதிகாரிகள் இந்தப் பக்கம் வரும்போது கூடையை அவர்களிடம் காண்பிக்க வேண்டும்!" என்று காவலர்கள் கூறினார். " அவ்வளவு நேரம் என்னால் தாமதிக்க முடியாதே! இன்று ஒரு நாள் என்னை நாட்டுக்குள் போக விடக் கூடாதா?" என்று கேட்டார் முல்லா " அது எப்படி முடியும். உம்மை எதிர்பாராத விதமாக சுங்க அதிகாரிகள் பிடித்துக்கொண்டு உமது கூடையைப் பரிசோதிக்கும்போது இதிலே முட்டை இருந்து விட்டால் உமக்குத் தண்டனை கிடைப்பது மட்டுமல்ல எங்கள் வேலையும் போய்விடும் " என்றனர் காவலர்கள். " என்னுடைய கஷ்டம் உங்களுக்கு விளங்கவில்லை. நான் உடனே செல்லாவிட்டால் குடி முழுகிப் போய்விடும். தயவு செய்து இன்று என்னை விட்டு விடுங்கள் " என்றார் முல்லா. காவலர்கள் யோசித்தனர். பிறகு இருவரும் கலந்து பேசினர். பாவம், இந்தப் பெரியவர் அவசரமாகப் போக வேண்டும் என்கிறார். கூடைக்குள் என்ன இருக்கிறது என்று நாமே பரிசோதித்துப் பார்த்து விட்டு இவரை அனுப்பி விடலாமே என்று இருவரும் தீர்மானித்தனர். " கூடையை நாங்களே பரிசோதனை செய்து பார்த்துவிடுகிறோம்" என்று கூறியவாறு காவலன் ஒருவன் கூடையின் மூடியை அகற்றினான். கூடைக்குள் ஏராளமான முட்டைகள் இருப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். " பெரியவரே, பொய்சொல்லி அல்லவா எங்களை ஏமாற்றப்பார்த்தீர். சுங்க அதிகாரிகளிடம் நீங்கள் பிடிபட்டிருந்தால் எங்கள் வேலை போய்விட்டிருக்கும்" என்றனர் காவலர்கள். முல்லா கோபங்கொண்டவர்போலப் பாவனை செய்து " நீங்கள் இருவரும் அடிமுட்டாளாக இருக்கிறீர்களே! நான் பொய் சொன்னேன் என்று ஏன் அபாண்டமாகப் பேசுகிறீர்கள்?" என்று கேட்டார். " கூடைக்குள் கோழிக்குஞ்சுகள் இருப்பதாக அல்லவா நீர் சொன்னீர்?" என்றான் ஒரு காவலன். " ஆமாம், அப்படித்தான் சொன்னேன்!" என்றார் முல்லா. " கூடைக்குள் கோழி முட்டைகள் அல்லவா இருக்கின்றன. இது பொய் அல்லவா!" எனக் காவலர்கள் வினவினர். " மோசமான முட்டாள்களாக நீங்கள் இருவரும் இருக்கிறீர்கள். இப்போது என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள். கூடைக்குள் என்ன இருக்கின்றன?" என்று முல்லா கேட்டார். " கோழி முட்டைகள்" என்று காவலர்கள் பதில் கூறினார்கள். " கோழி முட்டைகளுக்குள் என்ன இருக்கின்றன?" என்று வினவினார் முல்லா. காவலர்கள் இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திரு திருவென விழித்தனர். " என்ன முழுக்கிறீர்கள்? வேறு மாதிரியாகக் கேட்கிறேன் கோழிக் குஞ்சுகள் எங்கிருந்து வருகின்றன?" என்று முல்லா கேட்டார். " கோழி முட்டைகளுக்குள்ளிருந்து" என காவலர்கள் விடை கூறினர். " அப்படியானால் முட்டைகளுக்குள் கோழிக்குஞ்சுகள் இருக்கின்றன என்று ஆகிறதல்லாவா?" என்று கேட்டார் முல்லா. " ஆமாம் " என்று காவலர்கள் விடை கூறினர். " அதாவது கூடைக்குள் முட்டைகள் இருக்கின்றன அல்லவா" என்று வினவினார் முல்லா. " இதைத்தான் நான் சொன்னேன். ஆக நான் கோழிமுட்டைகளுக்குள் உள்ள குஞ்சுகளைத் தான் எடுத்துச் செல்லுகிறேன். ஆகவே சட்டப்படி இது குற்றமல்ல" என்று முல்லா வாதித்தார். அந்த முட்டாள் காவலர்கள் முல்லாவுக்கு ஒரு கும்பிடு போட்டு நாட்டுக்குள் செல்ல அனுமதித்தனர்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'முட்டாள் காவலர்கள்' என்பதாகும்.
1
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு. கதை: முல்லாவின் வீட்டுக்கு அடுத்த வீட்டில் ஒரு பெண்மணி வசித்து வந்தாள். முல்லா வீட்டில் என்ன சமையல் செய்தாலும் அவள் அதை மோப்பம் பிடித்து தனது சிறிய மகளை அனுப்பி சமைத்த பொருளை கொஞ்சம் கேட்டு வாங்கி வரச் சொல்வாள். அவளுடைய அந்த விரும்பத்தகாத வழக்கம் முல்லாவுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அதை எப்படித் தடுப்பது என்றும் விளங்கவில்லை. ஒருநாள் முல்லாவுக்கு "கோழிக்குஞ்சு சூப் " தயாரிக்கச் செய்து சாப்பிட வேண்டும் என்று ஆசையாக இருந்தது. " சூப்" தயார் செய்யச் சொல்லலாம் என மனைவியை அழைத்தார். மனைவி அவர் முன்னால் வந்து நின்றபோது முல்லாவுக்கு அண்டை வீட்டுகாரியின் நினைவு வந்தது. வீட்டில் சூப் செய்யத் தொடங்கினால் அண்டை வீட்டுக்காரி மோப்பம் பிடித்துக் கொண்டு சூப் வாங்க ஆள் அனுப்பி விடுவாளே என்ற எண்ணம் அவருக்கு ஏற்ப்பட்டது. " சூப் இப்போது தயார் செய்ய வேண்டாம் என்று கூறி மனைவியை அனுப்பி விட்டார்." சற்று நேரத்திற்கெல்லாம் கதவு தட்டப்படும் ஒசை கேட்டது. முல்லா எழுந்து சென்று கதவைத் திறந்தார். அண்டை வீட்டுக்காரியின் சின்னப் பெண் கையில் ஒரு கிண்ணத்துடன் வீட்டுவாசலில் நின்று கொண்டிருந்தாள். என்ன? என முல்லா விசாரித்தார். உங்கள் வீட்டில் கோழி சூப் தயாரித்தீர்களாமே! அம்மா கொஞ்சம் வாங்கிக் கொண்டு வரச்சொன்னாள் என்று சிறுமி கூறினாள். முல்லா உரத்த குரலில் " ஒஹோஹோ" என்று சிரித்தார். உள்ளேயிருந்த மனைவி ஒடிவந்து " உங்களுக்கு என்ன வந்துவிட்டது? ஏன் இப்படிச் சிரிக்கிறீர்கள்?" என்று கேட்டாள். " இந்த வினோதத்தைப் பார்?" இத்தனை காலமாக நாம் சமையல் செய்யும்போதுதான் அண்டை வீட்டுக்காரி மோப்பம் பிடித்து நாம் சமைக்கும் பொருளில் கொஞ்சம் வாங்கி வரச் சொல்லுவாள். இப்போது நான் சூப் செய்யச் சொல்ல வேண்டும் என்று மனத்திலேதான் நினைத்தேன். இதைக்கூட அண்டை வீட்டுக்காரி மோப்பம் பிடித்து சூப் வாங்கி வரச் சொல்லி மகளை அனுப்பியிருக்கிறாள் பார் என்று கூறிவிட்டு முல்லா சிரிக்கலானார்.
கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'பக்கத்து வீட்டுக்காரியின் மோப்பம்' என்பதாகும்.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: நண்பர்கள், ராமன், சோமன், மோதிரம், சொந்தம், மரியாதை இராமன், சொந்தம், பொற்கொல்லர் தலைப்பு: மோதிர மோசக்காரன் கதை
ராமனும் சோமனும் நண்பர்கள். ஒரு நாள் ராமன் சோமனிடம் வந்தான். "சோமா, நான் ஒரு கல்யாணத்திற்குச் செல்ல வேண்டியிருக்கிறது. உன்னுடைய தங்க மோதிரத்தை ஒரு நாள் இரவல் கொடுத்தால் கல்யாணத்திற்குப் போய் வந்ததும் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்" என்றான் ராமன். சோமனும் தன் கையிலிருந்த தங்க மோதிரத்தைக் கழற்றி ராமனிடம் கொடுத்தான். மோதிரம் வாங்கிச் சென்ற ராமன் வெகுநாளாகியும் திரும்பி வரவில்லை. சோமன் அவன் வீட்டுக்குச் சென்றான். "என்ன ராமா! என்னிடமிருந்து தங்க மோதிரம் இரவலாக வாங்கிப் போனாயே, அதை இன்னும் திருப்பித் தரவில்லையே!" என்றான் சோமன். "தங்க மோதிரமா? நான் வைத்திருப்பது எனது மோதிரம் தான். உன்னிடம் இருந்து ஒன்றும் வாங்கவில்லையே!" என்று ஒரு போடு போட்டான் ராமன். அவன் விரலில் அணிந்திருந்தது சோமனின் மோதிரம். ஆனால் ராமனோ அது தன்னுடையது என்றான். சோமன் நேராக மரியாதை இராமனிடம் சென்று ராமன் தனது மோதிரத்தை வாங்கிகொண்டு ஏமாற்றி விட்டான் என்று முறையிட்டான். மரியாதை இராமன் ராமனை அழைத்து விசாரித்தான். ராமனோ "ஐயா சோமன் பொய் சொல்கிறான். நான் இவனிடம் மோதிரம் வாங்கவில்லை. என் விரலில் இருப்பத்து என் மோதிரம் தான்" என்றான். இதைக் கேட்ட மரியாதை இராமன் "நீங்கள் இருவரும் சொல்வதிலிருந்து உண்மையாகவே மோதிரம் யாருக்கு சொந்தம் என்பது தெரியவில்லை. அதனால் நாளை தங்கத்தை மதிப்பீடு செய்பவரை வரச்சொல்லி மோதிரத்தை உரசிப்பார்ப்போம். அவர் என்ன மதிப்பு சொல்கிறாரோ, அந்த மதிப்பிற்கு அதை விற்று அந்த பணத்தை இருவருக்கும் சமமாக பிரித்துக் கொடுத்து விடுகிறேன். இருவரும் சென்று நாளை வாருங்கள்" என்று சொல்லி அனுப்பி விட்டார். மறுநாள் ஒரு பொற்கொல்லர் சபைக்கு வரவழைக்கப்பட்டார். அவரிடம் மோதிரம் கொடுக்கப்பட்டது.
2
['tam']
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக. வார்த்தைகள்: அக்பர், பீர்பல், பச்சைக்கிளி, ஃபயிஸ்கான், சபை, மரணதண்டனை, கிளிக்கூண்டு, அதிகாரி தலைப்பு: யாருக்கு மரண தண்டனை?
அன்றும் வழக்கம் போல் தர்பார் கூடியிருக்க, அக்பர் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கையில் அவருடைய பணியாள் ஒருவன் ஒரு கூண்டுக் கிளியை அங்கு கொண்டுவந்து வைத்தான். கூண்டினுள்ளிருந்த பச்சைக்கிளி சிறகுகளை அடித்துக் கொண்டு ‘கீ" ‘கீ" என்று கத்தியது. அந்தக் கிளியை அன்புடன் பார்த்துக் கொண்டு இருந்த அக்பர், பின்னர் சபையோர் பக்கம் திரும்பி, "என்னுடைய நெருங்கிய நண்பன் இந்தக் கிளியை எனக்குப் பரிசாக அளித்திருக்கிறான். இந்தக் கிளி அழகாக இருக்கிறதல்லவா?" என்று கேட்டார். "ஆம், பிரபு! நானும் எத்தனையோ கிளிகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால், உங்களுடைய கிளியைப் போன்ற அழகான கிளியை இதுவரை நான் பார்த்ததில்லை" என்றார் தர்பாரில் இருந்த அக்பரின் அதிகாரிகளில் ஒருவரான ஃபயிஸ்கான்! உடனே அவர் பக்கம் பார்வையைத் திருப்பிய அக்பர்,"உனக்குக் கிளிகளைப் பற்றி தெரியுமா? எப்போதாவது கிளி வளர்த்தது உண்டா?" என்று கேட்டார். "இன்று வரை நான் பதினைந்திற்கு மேற்பட்ட கிளிகளை வீட்டில் வளர்த்து இருக்கிறேன். ஆனால் அவற்றை விட உங்களுடைய கிளி மிகவும் அழகாக இருக்கிறது" என்றான் ஃபயிஸ்கான். இவ்வாறு சொல்லி அக்பரின் மனத்தைக் குளிரச் செய்ய முயன்றான்! "மிகவும் நல்லதாகப் போயிற்று. உன்னை மாதிரி கிளி வளர்ப்பதில் அனுபவமுள்ள ஒருவனைத்தான் நான் தேடிக் கொண்டிருந்தேன். இதை வளர்க்கும் பொறுப்பை உன்னிடம் தர விரும்புகிறேன். இதை நீ உன் வீட்டுக்கு எடுத்துச் செல்! ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்! இந்தக்கிளி இறந்துவிட்டதாக எவன் செய்தி சொல்கிறானோ, அவனுக்கு மரணதண்டனை விதிப்பேன்!" என்று சொல்லி கிளிக்கூண்டை அவன் கையில் தந்தார். அதைக்கேட்டு ஃபயிஸ்கானுக்குத் தூக்கி வாரிப் போட்டது. அவன் மனத்திற்குள் தன்னைத் திட்டிக் கொண்டே "பிரபு! என்னிடம் ஒப்படைத்துள்ள பொறுப்பை நான் மனமுவந்து ஏற்கிறேன்" என்று மிகவும் மகிழ்ச்சியுற்றவன் போல் அவரை வணங்கி எழுந்தான். பின்னர் அவன் கிளிக்கூண்டை வீட்டுக்கு எடுத்துச் சென்றான். ஏற்கெனவே சிடுசிடுவென்றிருந்த அவன் மனைவி கிளிக்கூண்டைப் பார்த்து "இது ஏது? எதற்காக இதைப்போய் வீட்டுக்கு எடுத்து வந்தாய்?" என்றாள். "இதை நம் வீட்டில் வைத்து பாலூட்டி வளர்க்க வேண்டும்" என்றான் ஃபயிஸ்கான்."சரிதான்! யார் இதை வளர்ப்பது?" என்று கேட்டதற்கு, "நீதான்!" என்று ஃபயிஸ்கான் கூறியதும், அவளுக்குக் கோபம் பற்றிக் கொண்டு வந்தது. பின்னர் ஒரு கணம் நிதானித்து,"இதை சக்கரவர்த்தி உனக்குப் பரிசாக அளித்தாரா?" என்று கேட்டாள். அதற்கு ‘ஆமாம்" என்று அவன் தலையாட்டினான். "வேறு யாரிடமாவது இதைக் கொடுத்துவிடு!" என்று அவள் அலட்சியமாகச் சொல்ல, "இதை வேறு யாரிடமும் கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறேன். இதை நம் வீட்டில் வைத்து வளர்க்கும் பொறுப்பை என்னிடம் சக்கரவர்த்தி கொடுத்து விட்டார். இதற்கு ஏதாவது ஒன்று ஆகிவிட்டால், என் தலை உருளும்" என்று சொல்லிவிட்டு, தர்பாரில் நடந்ததை விளக்கினான். "எத்தனை பெரிய ஆபத்தை விலைக்கு வாங்கியிருக்கிறாய்?" என்று கூறிய அவன் மனைவி, வேறு வழியின்றி அதை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டாள். அன்று முதல், ஜாக்கிரதையாக அவள் அந்தக் கிளியைப் பராமரித்து வந்தாள். ஒருநாள் காலை, பயிஸ்கான் கூண்டினுள் நோக்கியபோது, கிளி மல்லாந்து விழுந்திருந்தது, அதைக் குரல் கொடுத்து அழைத்துப், தொட்டுப் பார்த்தும் அது எழுந்திருக்கவேயில்லை. உடனே அவன் தன் மனைவியைக் கூவி அழைத்தான். அவளும் ஓடிவந்து, கிளியை சோதித்துப் பார்த்தவள்,"ஐயோ! கிளி இறந்து விட்டதே!" என்று கூச்சலிட்டாள். – அதைக் கேட்டு ஃபயிஸ்கான், "ஐயோ! என் தலை உருளப்போகிறதே!" என்று தலையில் ‘படீர்" ‘படீர்" என்று அடித்துக் கொண்டு அழுதான். அவன் மனைவி அவனைத் தேற்றினாள். "நான் சொல்வதைக் கேளுங்கள். பீர்பாலிடம் சென்று முழு விவரத்தையும் சொல்லுங்கள். அவர் எப்படியாவது உங்களைக் காப்பாற்றி விடுவார்" என்று யோசனை கூறினாள். டனே, ஃபயிஸ்கான் கூண்டைத் தூக்கிக்கொண்டு பீர்பால் வீட்டை நோக்கி ஓடினான். அவனைக்கண்ட பீர்பால், கூண்டைக் கையில் எடுத்து வந்திருக்கிறாயே! இந்தக் கிளியை வளர்ப்பதற்கு உன்னிடம் சக்கரவர்த்தி ஒப்படைத்திருந்தார் அல்லவா?" என்றார். "அதை நான் எப்படிச் சொல்வேன் பீர்பால்! ஜாக்கிரதையாக இதை வளர்த்தும், இன்று காலை இது திடீரென இறந்து விட்டது. இந்த செய்தியைக் கேட்டால், சக்கரவர்த்தி எனக்கு மரண தண்டனைதான் அளிப்பார்! நீதான் என்னைக் காப்பாற்ற வேண்டும்!" என்று கூறினான் ஃபயிஸ்கான். "கடவுளே! நீ நன்றாக ஆபத்தில் சிக்கிக் கொண்டாயே! சரி, எனக்கு ஒரு நல்ல யோசனை தோன்றி விட்டது. நீ வா என்னுடன்! சக்கரவர்த்தியை சந்திப்போம்" என்று கூறிய பீர்பால் முன்னே செல்ல, பின்னால் ஃபயிஸ்கான் நடுங்கிக் கொண்டே கூண்டைச் சுமந்து கொண்டு நடந்தான். அக்பர் தர்பாருக்கு வருமுன்னரே இருவரும் அங்கு வந்து விட்டனர். அக்பர் தர்பாரில் நுழைந்து, ஆசனத்தில் அமர்ந்ததும் அக்பர் அவரை நோக்கி "என்ன விஷயம்?" என்று கேட்டார். உடனே, கிளிக்கூண்டை எடுத்துக் கொண்டு அவரை அணுகிய பீர்பால், கிளியைச் சுட்டிக்காட்டி, "பிரபு! உங்களுடைய கிளி யோகாசனம் கற்றுக் கொண்டு இருக்கிறது. பாருங்களேன்!" என்றார். உற்றுப் பார்த்த அக்பர் கோபத்துடன் "என்ன உளறுகிறாய்? கிளி இறந்து விட்டது! எங்கே அந்த முட்டாள் ஃபயிஸ்கான்? அவனுக்கு மரண தண்டனை விதிக்கப் போகிறேன்!" என்றதும், பயந்து கொண்டே ஃபயிஸ்கான் முன்னே வந்தான். "தயவு செய்து நான் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்" என்ற பீர்பால் தொடர்ந்து, "பிரபு! அன்று ஒருநாள் இந்தக் கிளியை வளர்க்கும் மிகப்பெரிய பொறுப்பை ஃபயிஸ்கானிடம் ஒப்படைத்தபோது நீங்கள் சொன்னது நினைவு இருக்கிறதா? "இந்தக் கிளி இறந்துவிட்டது என்ற தகவலைச் சொல்பவனுக்கு மரண தண்டனை" என்றீர்கள். அவ்வாறு சொன்னது நீங்கள்தானே!" என்றார். "ஆம்! அப்படித்தான் சொன்னேன்! இன்றும் அதையே சொல்கிறேன். என்னுடைய கிளி இறந்து விட்டது. அதனால்…" என்ற அக்பரை இடை மறித்தார் பீர்பால். "கிளி இறந்து விட்டது என்று சொன்னது நீங்கள்தான்! அதை ஃபயிஸ்கான் சொல்லவில்லை. அதனால் இப்போது யாருக்கு மரண தண்டனை தரவேண்டும்?" என்றார் பீர்பால். இதைக் கேட்டு அக்பர் உரக்கச் சிரித்தார். "பீர்பால்! நல்ல சமயத்தில் என் கண்களைத் திறந்து விட்டாய். ஒரு கிளிக்காக என் நல்ல அதிகாரிகளில் ஒருவனுக்கு மரண தண்டனை அளிப்பது சரியல்ல!" என்றார். ஃபயிஸ்கானுக்குப் போன உயிர் திரும்பி வர, பீர்பாலுக்கு நன்றி கூறினான்