template_id
int64 1
2
| template_lang
stringclasses 1
value | inputs
stringlengths 132
27.8k
| targets
stringlengths 63
27.6k
|
---|---|---|---|
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: ஒரு ஊரில் நாய் ஒன்று வசித்து வந்தது. அதற்கு எப்போதும் முட்டைகளை சாப்பிட்டே பழக்கம். ஒரு நாள் அது முட்டை வடிவில் இருந்த ஒரு சிப்பியைப் பார்த்தது. உடனே முட்டை என்று நினைத்து அப்படியே கவ்வி, விழுங்கிவிட்டது. ஆனால், விழுங்கியது சிப்பி என்பதால், நாயின் வயிறு கடுமையாக வலிக்க ஆரம்பித்தது. "எனக்கு இது தேவைதான். முட்டை வடிவில் இருப்பதெல்லாம் முட்டை என்று நினைத்த என் முட்டாள்தனத்திற்கு இதுவும் தேவை, இன்னமும் தேவை" என்று புலம்பியது அந்த நாய். முன்யோசனையின்றி ஒரு செயலில் ஈடுபடுபவர்கள், பெரும்பாலும் எதிர்பாராத சிக்கலில் மாட்டிக்கொள்வார்கள்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'நாயும் சிப்பியும்' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: ஸொயான் ஸாகு, ஆசிரியர், கான்பூசியஸ், சீடர், உறக்கம்
தலைப்பு: கனவு உலகம்
| ஸொயான் ஸாகுவின் சீடன் ஒருவன் கூறிய நிகழ்ச்சி இது. "எங்களுடைய ஆசிரியர் தினமும் பகலில் சிறுதுயில் (உறக்கம்) போடுவது வழக்கம். நாங்கள் ஆசிரியரை எதற்காக மதிய வேலையில் தூங்குகிறிர்கள் என்று கேட்டதற்கு, "கான்பூசியஸினைப் போல் நானும் கனவு உலகத்திற்கு சென்று பண்டைய முனிவர்களையும் அறிஞர்களையும் பார்த்து விட்டு வருகிறேன்" என்று பதில் கூறுவார்." கான்பூசியஸ் சைனாவில் பிறந்த சிறந்த தத்துவஞானி. அவர் மக்களுக்குத் தேவையான வாழ்க்கைக் கோட்பாடுகளையும், அரசர்களுக்கும், அரசுக்கும் தேவையான அரசாட்சி முறையையும் பற்றி விரிவாக எடுத்துக் கூறியவர். ஆசிரியராக இருந்து பல மாணவர்களுக்கு நல்லுபதேசங்களை வழங்கியவர். கான்பூசியஸ் கருத்துக்கள் பல சீன மன்னர்களாலும், மக்களாலும் ஏற்றுக் கொள்ளப் பட்டு இன்றும் நடைமுறையில் உள்ளது. "இன்னும் வாழ்வதைப் பற்றியே நாம் சரியாக புரிந்து கொள்ளவில்லை, எப்படி இறப்பைப் பற்றி நம்மால் அறிந்து கொள்ள முடியும்" என்றவர் கான்பூசியஸ். அவர் தூங்கிய போது கனவுகளில் பழங்காலத்து முனிவர்களை சந்தித்ததாக விழித்ததும் தன்னுடைய சீடர்களிடம் அந்த முனிவர்களைப் பற்றி கூறுவார். "ஒரு நாள் மிகவும் வெப்பமாக இருந்தது. எங்களில் சிலர் மதிய உறக்கம் போட்டோம். எங்கள் ஆசிரிய ஸொயான் ஸாகு எங்களை கடிந்து கொண்டார். "நாங்கள் கனவுலகத்திற்கு சென்று பண்டைய முனிவர்களைப் பார்ப்பதற்காக கான்பூசியஸினைப் போல் சென்றோம்" என்று அவர் கூறியதையே அவரிடம் கூறி மடக்கினோம். "அப்படியா, என்ன செய்தியினை அந்த முனிவர்கள் உங்களிடம் சொல்லி அனுப்பினார்கள்? பதில் சொல்லுங்கள்" என்று எங்கள் பள்ளி ஆசிர்யர் எங்களை கட்டாயப் படுத்தினார்.", "எங்களில் ஒருவன், "நாங்கள் கனவுலகத்திற்கு சென்று முனிவர்களை சந்தித்து, எங்கள் பள்ளி ஆசிரியர் மதிய வேலையில் உங்களை சந்திப்பதற்கு வருகிறாரா என்று கேட்டோம். நீங்கள் கூறியது போல் யாரும் மதியவேலைகளில் எங்களைப் பார்ப்பதற்கு வருவதில்லை என்று பதில் கூறினார்கள்" என்றான்" |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: அந்தியூர் என்ற காட்டில் புறாக்கள் கூட்டமாக சேர்ந்து ஒரு ஆலமரத்தில் வாழ்ந்து வந்தன, அவற்றில் ஒரு வயதான புறாவும் உண்டு, புறாக்கள் எல்லாம் இரை தேடி வந்து மரத்தில் அமரும். அப்போ வயதான புறா தன் அனுபவங்களை கூறும், அப்போ நிறைய புறாக்கள் பழங்கதைகள் சொல்லி எங்களுக்கு ஏன் வீணாக அறிவுரை சொல்லுறீங்க, நாங்களே யோசிக்கும் அளவுக்கு எங்களுக்கும் அறிவு இருக்குது என்று உதாசினப்படுத்துவார்கள். சிலருக்கு உண்மையிலேயே ஆபத்து வந்தால் அப்போ அந்த வயதான புறா தான் நல்ல வழி காட்டும். ஒரு நாள் அனைத்து புறாக்களும் சேர்ந்து உணவு தேடி சென்றன. அப்போ ஓரிடத்தில் பறவைகளைப் பிடிக்க வேடன் ஒருவன் வலை விரித்திருந்தான், அதன் அடியில் பெரிய பெரிய நெல்மணிகளை கொட்டியிருந்தான். அப்போ புறாக்கள் அனைத்தும் அந்த நெல்மணிகளை சாப்பிட திட்டமிட்டன, ஆனால் வயதான புறா அது வேடம் விரித்த வலை, நாம் போய் நெல்லை சாப்பிட்டால் மாட்டிக் கொள்வோம், எனவே வேற இடத்தில் இரைத் தேடலாம் என்றது, ஆனால் மற்றவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. வலையில் மாட்டாமல் நெல்மணிகளை சாப்பிட போகிறோம் என்று கூறி வலையின் மீது சாமர்த்தியமாக அமர்ந்து சாப்பிட்டன, ஒரு புறாவும் வலையில் மாட்டவில்லை, அப்போ வயதான புறாவைப் பார்த்து கேலி செய்தன மற்ற புறாக்கள். திடிரென்று ஒரு குண்டு புறா நிலைத் தடுமாறி ஒரு புறா மேல் விழ, அனைத்தும் சரிந்து நிலை குலைய, அவற்றின் கால்கள் வலையின் பின்னிக் கொண்டன, அவ்வளவு தான் அனைத்து புறாக்களும் வலையில் மாட்டிக் கொண்டன. அவ்வளவு தான் அனைத்தும் என்ன என்ன முயற்சியோ செய்தன, ஆனால் ஒன்றும் முடியவில்லை. வலையானது தரையோடு சேர்த்து அடிக்கப்படிருந்தது. உடனே அனைத்துப் புறாக்களும் வயதான புறாவை பார்த்து மன்னிப்பு கேட்டு, தங்களை காப்பாற்ற உதவி செய்ய வேண்டும் என்றன. வயதான புறா “என் ஒருவனால் உங்கள் அனைவரையும் விடுவிக்க முடியாது, அதற்கான சக்தியும் என்னிடம் இல்லை, ஆனால் என்னுடைய வயதான அனுபவத்தால் கிடைத்ததை வைத்து ஒரு வழி சொல்கிறேன், அதன்படி நடந்தால் தப்பிக்கலாம் என்றது. மற்ற புறாக்கள் கண்டிப்பாக சொல்லுங்க, இதுவரை உங்கள் அனுபவங்களை உதாசினப்படுத்தியதற்கு மன்னியுங்க என்றன. வயதான புறா “இன்னும் கொஞ்ச நேரத்தில் வேடன் வருவான், அவன் வரும் போது நீங்க யாரும் உயிரோடு இருப்பது போல் காட்டிக் கொள்ளக்கூடாது, மரணம் அடைந்த மாதிரி விழுந்து கிடக்க வேண்டும்.” “அவனும் செத்துப் போன புறாக்கள் தானே என்று உங்களை தரையில் போடுவான், கடைசி புறாவை போடும் வரை அமைதி காக்க வேண்டும், கடைசி புறாவைப் போட்டதும், நான் வேகமாக வந்து வேடனை கொத்துவேன், அவன் நிலை குலைந்தவுடன் நீங்க அனைவரும் உடனே பறந்து தப்பிவிடுங்க” அனைத்து புறாக்களும் வயதான புறாவை வணங்கி, அது சொன்னது போல் செத்துப் போனது போல் நடித்தன, அங்கே வந்த வேடனும் அனைத்தும் செத்து கிடப்பதைக் கண்டு, தண்ணீர் குடிக்காததால் ஒருவேளை அனைத்தும் இறந்து போயிருக்கும் என்று நினைத்து, ஒவ்வொரு புறாவையும் வலையில் விடுவித்து கீழே போட்டான். கடைசி புறாவையும் போட்டு நிமிர்ந்து நிற்கவும், நம்ம வயதான புறா வேகமாக பறந்து வந்து வேடனின் தலையில் கொத்தியது, திடிரென்று நடந்த இந்த சம்பவத்தால் வேடன் பயந்து கண்களை மூடிக் கொண்டு, தலையின் மேல் கைகளை வீசினான். அவ்வளவு தான் அந்த சந்தர்ப்பத்தில் அனைத்து புறாக்களும் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்பது போல் தப்பி பறந்தோடின. பின்னர் அனைத்து புறாக்களும் ஆலமரத்தில் கூடி, வயதான புறாவை போற்றின, பெரியவங்க சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் இருக்கும், அவர்கள் சொல்வதை கேட்டு நடந்தால் துன்பமே வராது என்பதை புரிந்துக் கொண்டோம், இனிமேல் உங்கள் அறிவுரைப் படியே நடப்போம் என்று உறுதி கூறின. தினமும் வயதான புறாவின் அறிவுரைகள் கேட்டு நடந்து,. ஆபத்தில்லாமல் சந்தோசமாக வாழ்ந்து வந்தார்கள்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'பெரியவங்க சொன்னா கேட்கணும்' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: பா'ன் யூன், ஷிடோ, நதி, மாசூ
தலைப்பு: நதியினைக் குடி
| ஒரு சமயம் பா"ன் யூன் என்ற துறவி, சா"ன் ஆசிரியர் ஷிடோவை முதன் முதலில் சந்தித்த போது, "எல்லா தர்மங்களின் துணையினையும் உதறித் தள்ளிய மனிதர்கள் எப்படிப் பட்ட மனிதர்களாக இருக்க முடியும்?" என்று கேட்டான். கேட்டவனின் வாயை அப்படியே தனது கைகளால் பொத்தினார் ஷிடோ. துறவியால் சா"ன் ஆசிரியரின் செய்கையை புரிந்து கொள்ள முடியவில்லை. மதிப்புக்குரிய குரு மாசூவிடம் சென்று தன்னுடைய கேள்வியினைக் கேட்பதென முடிவெடுத்து, அதேக் கேள்வியைத் திருப்பிக் கேட்டான். "நீ ஷிஷியாங் ஆற்றின் தண்ணிரினை ஒரே மிடக்கில் குடித்துக் காட்டினால்தான், நான் உன்னுடையக் கேள்விக்கு பதில் அளிக்க முடியும்" என்ற பதிலே கிடைத்தது. அதனைக் கேட்ட பா"ன் யூன் தன்னுடைய அறியாமை நீங்கி தன்னொளி பெற்றான். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: ஒரு காட்டில் கொடிய சிங்கம் ஒன்று இருந்தது. பசி இல்லாவிட்டாலும் விலங்குகளை வேட்டையாடும் இரக்கமற்ற சிங்கம் அது. அந்தச் சிங்கத்தை கண்டாலே எல்லா விலங்குகளும் அஞ்சி ஓடிவிடும். இதற்கு ஒரு தீர்வு காண அனைத்து விலங்குகளும் சிங்கத்தின் குகைக்குச் சென்றன. "சிங்க ராஜா, நீங்கள் வேட்டையாடுவதில் வல்லவர். ஆனால் உங்களால், இந்தக் காட்டில் எல்லா விலங்குகளும் அழிகின்றன. நீங்கள் வேட்டையாடாமல் உங்கள் கூகையிலே இருந்தால், தினம் ஒரு விலங்கை நாங்கள் உங்கள் குகைக்கே அனுப்புகிறோம். அதைத் தின்று நீங்கள் பசி ஆரலாம். இப்படிச் செய்தால் மற்ற விலங்குகள் உயிர் பிழைக்கும்." என்று சிங்கத்திடம் முறையிட்டன. சிங்கமும் தினமும் இரை தன் குகைக்கே வந்தால் வேலை மிச்சம் என்று மகிழ்ந்தது. "இந்த உடன்பாட்டிற்கு நான் சம்மதிக்கிறேன். ஆனால் தினமும் ஒரு விலங்கு என் குகைக்கு வரவேண்டும். ஒரு நாள் தவறினாலும் நான் சும்மா இருக்க மாட்டேன். உங்கள் அனைவரையும் கொன்று விடுவேன்." என்றது. அன்றில் இருந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலங்கு சிங்கத்தின் குகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சிங்கம் குகைக்கு வரும் விலங்கை மட்டும் தின்று விடும். மற்ற விலங்குகள் எல்லாம் நிம்மதியாகக் காட்டை சுற்றி வந்தன. இப்படிப் பல நாட்கள் செல்ல, ஒரு நாள் ஒரு சிறு முயல் தேர்ந்தெடுக்கப்பட்டது. முயலுக்கு இறக்க விருப்பம் இல்லை. சிங்கத்தை எதிர்த்துப் போர் இட தன்னால் முடியாது என்பதை உணர்ந்த புத்திசாலி முயல் யோசித்தது. முன்பு ஒருநாள் தான் பார்த்த கிணற்றின் ஞாபக வர ஒரு திட்டம் தீட்டியது. சிங்கத்தின் குகைக்கு வேண்டும் என்றே தாமதமாக சென்றது. சிங்கம் கடும் பசியில் இருந்தது. இன்னும் சற்று நேரத்தில் முயல் வரவில்லை என்றால் எல்லா விலங்குகளையும் கொன்று விட எண்ணியது. இறுதியில் குகைக்கு ஓடிவந்த முயலைப் பார்த்த சிங்கம் கோபமடைந்து. தன் பெரும் பசிக்கு ஒரு சின்ன முயல் எப்படி ஈடாகும்? சினம் கொண்ட சிங்கம் "ஏ முயலே.. உனக்கு என்ன தயிரியம். ஏன் இவ்வளவு தாமதமாக வந்தாய். நீ மிகவும் சிறியதாகவும் இருக்கிறாய். உன்னைத் தின்றால் எனக்கு எப்படிப் பசி தீரும்? நான் உனக்காகக் காலையில் இருந்து காத்துக் கிடக்கிறேன். முதலில் உன்னைக் கொன்று, பிறகு உன் முயல் கூட்டத்தை கொன்று தின்கிறேன். என்னை ஏமாற்ற நினைத்தால் இது தான் தண்டனை." என்றது. அதற்கு முயல் பணிவுடன் "சிங்க ராஜா, நான் தாமதமாக வந்ததற்கு நான் காரணம் இல்லை. தங்களை ஏமாற்ற யாரும் நினைக்க வில்லை. உங்கள் குகைக்கு வர நான் காலையிலே புறப்பட்டு விட்டேன். ஆனால்..." என்று இழுத்தது. சிங்கம், "ஆனால் என்ன.. ? " என்று கர்ச்சித்தது.அதற்கு முயல், "என்னால் உங்கள் பசியை தீர்க்க முடியாது என்று எனக்கும் முயல் கூட்டத்திற்கும் நன்றாகத் தெரியும். அதனால் தான் என்னோடு வேறு நான்கு முயல்களும் வந்தன. ஆனால் வரும் வழியில் வேறொரு சிங்கம் இருந்தது. நாங்கள் எவ்ளவு சொல்லியும் மற்ற நான்கு முயல்களையும் பிடித்து வைத்துக் கொண்டது. மேலும் அந்தச்சிங்கம் தான் இந்தக் காட்டின் உண்மையான ராஜா என்றும் நீங்கள் போலி என்றும் சொன்னது. உங்களுக்கு உண்மையில் வீரம் இருந்தால் தன்னை வீழ்த்த வரும்படி அழைத்தது. இந்தச் செய்தியை உங்களுக்குத் தர தான் என்னை உயிருடன் விட்டது. இது தான் நான் தாமதமாக வந்ததற்குக் காரணம்." என்றது. தன் காட்டில் இன்னொரு சிங்கம் இருப்பதைக் கேட்ட சிங்க ராஜாவிற்கு கடும் கோவம் ஏற்பட்டது. "உடனே என்னை அந்தச் சிங்கத்திடம் அழைத்துச் செல். அந்தச் சிங்கத்தை ஒரே அறையில் கொன்று விடுகிறேன். என் காட்டில் வந்து என்னையே அவமானப் படுத்துகிறான்." என்று முயலிடம் கேட்டது. அதற்கு முயல், "சிங்க ராஜா, அந்தத் திமிர் பிடித்த சிங்கம் மிகவும் பெரிதாகவும் வலிமையாகவும் இருக்கிறது. அது ஒரு விசித்திர குகையில் இருக்கிறது. நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். " என்று கூறி சிங்கத்தை ஒரு கிணற்றுக்கு அழைத்துச் சென்றது. கிணற்றுக்கு அருகில் வந்தவுடன் முயல், "சிங்க ராஜா!.. இது தான் அந்த பொல்லாத சிங்கத்தின் குகை. நான் இங்கேயே இருக்கிறேன். நீங்கள் சென்று அந்தச் சிங்கத்தைக் கொன்று விடுங்கள்." என்றது. சிங்ககும் கிணற்றை எட்டிப் பார்த்தது. கிணற்று நீரில் தெரியும் தன் பிம்பத்தை பார்த்து, உள்ளே ஒரு சிங்கம் இருப்பதாக நினைத்தது. முயல் சொன்னது உண்மை என்றும் தன் காட்டுக்குள் வேறொரு சிங்கம் நுழைந்து விட்டதென்றும் நம்பியது முட்டாள் சிங்கம். பிறகு சிங்கம் கிணற்றில் எட்டிப்பார்த்து தன் முழு பலத்துடன் கர்ச்சித்தது. உடனே அந்தச் சத்தம் மிக அதிகமாகக் கீழ் இருந்து மேலே எதிரொலித்தது. மீண்டும் கிணற்றில் உள்ள சிங்கம் தான் இப்படிக் கர்ச்சித்ததென்று ஏமார்ந்து சிங்கம். சினம் கொண்ட சிங்கம் கிணற்றுக்குள் குதித்தது. உள்ளே வெறும் தண்ணீர் இருப்பதைக் கண்ட சிங்கம், முயல் தன்னை ஏமாற்றியதை உணர்ந்தது. பலத்த காயம் அடைத்த சிங்கம் மேலே வர முடியாமல் கிணற்றுக்குள் இறந்தது. முயலும் மற்ற விலங்குகளும் நிம்மதியாக இருந்தனர். முயல் அந்தக் காட்டிற்கே செல்ல விலங்கானது.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'முயலும் முட்டாள் சிங்கமும்' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: வேந்தன் என்ற அரசன், சிற்பிகள், இறைவன், கிழவி
தலைப்பு: தன்னலமற்ற சேவை
| முன்னொரு காலத்தில் வேங்கைபுரி என்ற நாட்டை வேந்தன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவர் தமது நாட்டில் இறைவனுக்காக மிகப் பெரிய ஆலயம் ஒன்றை அமைக்க எண்ணினார். இதுவரை எவருமே கட்டியிராதவாறு மிக அழகிய கோயில் கட்டுவதன் மூலம் தமது புகழ் பல்லாண்டு காலம் புகழுடன் விளங்கும் என்பது அவருடைய விருப்பம். இதற்காக நாடெங்கிலுமிருந்து கைதேர்ந்த சிற்பிகளை வரவழைத்தார். கோயில் கட்டுவதற்கான கற்களையும் பாறைகளையும் கொண்டு வரச் செய்தார். சிற்பிகள் வேலையைத் தொடங்கினர். கல்லுளிகளின் ஓசை கேட்கலாயிற்று. கோயில் வேலை துரிதமாக நடைபெற்று வந்தது. மன்னன் நாள்தோறும் கோயில் வேலையை வந்து பார்வையிடுவார். நாளுக்கு நாள் கோயில் கட்டும் வேலை வளர்ச்சி பெறுவது கண்டு உள்ளம் பூரிப்படைந்தான். பல நாட்களுக்குப் பின்னர் ஒரு வழியாகக் கோயில் கட்டி முடிந்தது. அழகிய கோபுரமும் கோபுரத்தில் உள்ள சிற்பங்களும் பார்ப்பவர் உள்ளத்தைப் பரவசமடையச் செய்யும்படியாக விளங்கின. மன்னன் இதனைக் கண்டு பூரிப்படைந்தான். கோயில் பணி பூர்த்தியானதும் மிகப் பெரிய சலவைக்கல் ஒன்றில் கோயிலைக் கட்டிய தனது பெயரைப் பொன்னால் பொறிக்கச் சொன்னான். அதனைக் கோபுர வாசற்படியில் எல்லோர் கண்களிலும் படும்படியாகப் பதித்து வைக்கச் சொன்னான். அன்று இரவு அரசன் துõங்கிக் கொண்டிருக்கும் போது ஒரு கனவு கண்டான். கனவில் இறைவன் தோன்றினார். மன்னன் கட்டிய கோயிலும் தோன்றியது. அதில் மன்னன் பெயர் பொறிக்கப் பெற்ற சலவைக் கல்லும் இருந்தது. இறைவன் நேரே மன்னன் பெயர் பொறிக்கப்பட்டிருந்த சலவைக் கல்லின் அருகே சென்றார். மன்னன் பெயரை அழித்துவிட்டு வேறு யாரோ ஒரு பெண்மணியின் பெயரை எழுதிவிட்டுச் சென்றார். மன்னன் திடுக்கிட்டுக் கண் விழித்தான். நேரே கோயிலுக்குச் சென்றான். சலவைக் கல்லைப் பார்த்தான். அவனுக்குத் துõக்கிவாரிப் போட்டது. ஆம், அவன் பெயர் அழிக்கப்பட்டு யாரோ ஊர் பேர் தெரியாத ஒரு பெண்மணியின் பெயர் அதில் பொறிக்கப்பட்டிருந்தது. இதைக் கண்ட அரசனுக்கு ஒருபுறம் அவமானமாகவும் மறுபுறம் வேதனையாகவும் இருந்தது. "இவ்வளவு பாடுபட்டுப் பெரும் பொருள் செலவு செய்து இந்தக் கோயிலைக் கட்டினேன். முடிவில் என்னுடைய பெயர் பொறிக்கப்படாமல் வேறு யாரோ ஒரு பெண்மணியின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறதே!" என்று வேதனையடைந்தான். காவலர்களை அனுப்பி அந்தச் சலவைக் கல்லில் பெயர் பொறித்துள்ள பெண்மணியை எங்கிருந்தாலும் தேடி அழைத்து வருமாறு கட்டளையிட்டான். காவலர்களும் நகர் பூராவும் சுற்றித் திரிந்து கடைசியில் ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ள ஒரு குடிசையில் தன்னந்தனியாக வசித்து வந்த ஒரு மூதாட்டியை அழைத்து வந்தனர். அவள் பெயர் தான் அந்தச் சலவைக்கல்லில் பொறிக்கப்பட்டிருந்தது. அந்த மூதாட்டியைப் பார்த்த அரசன், ""அந்தச் சலவைக் கல்லில் பொறிக்கப்பட்டிருக்கும் பெயர் உங்களுடையதுதானா?" என்று கேட்டான். கிழவி கண்களை நன்கு துடைத்துக் கொண்டு சலவைக்கல்லைப் பார்த்தாள். பிறகு, ""ஆம் அரசே அது என்னுடைய பெயர் தான்… தவறுதலாகப் பொறிக்கப் பட்டுவிட்டது போல் இருக்கிறது!", ""இல்லை அம்மா, என் பெயர் தான் முதலில் அந்தச் சலவைக் கல்லில் பொறிக்கப்பட்டது. இறைவனே வந்து என் பெயரை அழித்துவிட்டுத் தங்கள் பெயரை இதில் பொறித்துவிட்டுச் சென்றிருக்கிறார். அதன் காரணம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை," என்றான் அரசன். ""நான் இந்தப்பக்கம் வந்தது கூட இல்லை… அப்படியிருக்க இதில் என் பெயர் ஏன் பொறிக்கப்பட்டிருக்கிறது?" என்று வியப்புடன் கேட்டாள் கிழவி. ""தாயே, இந்தக் கோயில் பணியில் நீங்கள் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் இறைவன் தங்கள் பெயரை இதில் பொறித்திருக்கமாட்டார். தாங்கள் செய்த தொண்டு என்னவென்று கூறுங்கள்!" என்றான் அரசன். நெடுநேரம் யோசனை செய்து பார்த்த கிழவி, ""மன்னா! இந்தக் கோயில் பணிக்காக நான் ஒன்றும் செய்யவில்லை ஆனால், ஒன்று மட்டும் செய்திருக்கிறேன். இந்தக் கோயில் கட்டுவதற்கான கற்கள் மரங்கள் முதலியவற்றை ஏற்றிவரும் வண்டிகள் நாள்தோறும் என் வீட்டுப் பக்கமாகத் தான் வரும். அந்த சமயத்தில் வண்டியோட்டிகளுக்குத் தாகந்தீரத் தண்ணீர் கொடுப்பேன்; மோர் கொடுப்பேன். குதிரைகளுக்குச் சிறிது புற்களை கொடுத்து தண்ணீர் காட்டுவேன். அவ்வளவுதான் நான் செய்தது," என்றாள் கிழவி. ""தாயே! நான் வெறும் புகழுக்காக இந்தக் கோயிலைக் கட்டினேன். தாங்களோ புகழை விரும்பாமல் தொண்டு செய்தீர்கள். எனவே, தான் என் பெயரை அழித்துவிட்டு இறைவன் தங்கள் பெயரைப் பொறித்துள்ளார். தன்னலமற்ற தங்கள் தொண்டினை இந்தக் கோயிலில் உள்ள சலவைக்கல் என்றென்றும் எடுத்துக் காட்டும். வாழ்க தங்கள் புகழ்!" என்று கூறிய மன்னன், அந்தக் கிழவிக்கு நிறைய பொருள் பரிசாகக் கொடுத்து அனுப்பினான். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: ஒரு முறை விசுவாமித்திர முனிவர் கடுமையான தவம் செய்து கொண்டிருந்தார். அவருடைய தவம் முற்றுப் பெற்றால் இந்திரனுடைய பதவிக்கே ஆபத்து வந்துவிடும். இதை இந்திரன் விரும்பவில்லை. தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பினான். இதற்காகத் தனது சபையில் நடன மாதர்களாக உள்ள ரம்பை, ஊர்வசி இருவரையும் வரவழைத்தான். இருவரில் ஒருவரை அனுப்பி முனிவரின் தவத்தைக் கலைத்து வருமாறு செய்ய நினைத்தான். இருவரில் யாரை அனுப்புவது என்று இந்திரனுக்குப் புரியவில்லை. செய்தி அறிந்த இருவரும் தாங்களே செல்வதாகப் போட்டியிட்டனர். “”ஒருவர் மட்டும்தான் செல்ல வேண்டும். உங்களில் யாரை அனுப்பலாமென்று நீங்களே கூறி விடுங்கள்,” என்றான் இந்திரன். “”நடனக் கலையில் எனக்கு ஈடு இணை எவருமே கிடையாது. எனவே, நான் தான் பூலோகத்திற்குச் செல்வேன்,” என்று ரம்பை கூறினாள். “”ரம்பை நடனக்கலை ஒன்றில்தான் சிறந்தவள். நான் சகல கலைகளிலும் சிறந்தவள் என்பதைத் தாங்களே அறிவீர்கள். அவ்வாறு இருக்கையில் என்னை விடத் தகுதி பெற்றவர் வேறு எவர் இருக்கக்கூடும்,” என்றாள் ஊர்வசி. இருவருடைய பேச்சையும் கேட்ட இந்திரனுக்கு ஒன்றுமே புரியவில்லை. இருவரில் எவர் சிறந்தவர் என்று தீர்மானிக்க அவனால் முடியவில்லை. இச்சமயத்தில் நாரதர் அவ்விடம் வந்தார். இந்திரன் அவரை வரவேற்று உபசரித்தான். “”இந்திரதேவா, ஏன் வருத்தமுற்று இருக்கிறாய்?” என்று கேட்டார் நாரதர். “”ஐயனே! விசுவாமித்திர முனிவர் கடும் தவம் இயற்றிக் கொண்டிருக்கிறார். அவரது தவத்தைக் கலைக்க எனது நடன மாதர்களில் ஒருவரை அனுப்ப நினைத்தேன். அதற்காக இவர்கள் இருவரையும் வரவழைத்தேன். ஆனால், இப்பொழுது இவர்களில் யாரைப் பூலோகத்திற்கு அனுப்புவது என்று புரியவில்லை…” என்றான் இந்திரன். “”இரண்டு பேரையும் உனது சபையில் நடனமாடச் செய்து சிறப்பாக எவள் நடனமாடுகிறாளோ அவளையே பூலோகத்திற்கு அனுப்பிவிடு…” என்றார் நாரத முனிவர். மறுநாள் இந்திர சபையில் ரம்பை, ஊர்வசி ஆகிய இருவரின் நடன நிகழ்ச்சி நடந்தது. நடனத்தைக் காண தேவர்களும், சகல கலைகளையும் உணர்ந்த கலைவாணர்களும் சபையில் குழுமியிருந்தனர். நடனம் ஆரம்பம் ஆயிற்று. இருவரும் சளைக்காமல் ஆடினர். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கவில்லை. இருவருமே சிறப்பாக நடனம் ஆடினர். ஒருவருடைய நடனத்திலும் குற்றம் குறை சொல்ல முடியவில்லை. இருவருமே சரிசமமாக ஆடினர். இருவருடைய நடனத்தில் எவருடைய நடனம் சிறந்தது என்று தீர்ப்புச் சொல்ல முடியாமல் அனைவரும் குழம்பினர். இச்சமயத்தில் நாரத முனிவர் எழுந்து, “”இந்திரனே, இங்குள்ள எவராலும் முடியாத காரியத்தைச் செய்யக்கூடிய ஒருவன் பூலோகத்தில் வசிக்கிறான். அவன் பெயர் விக்கிரமாதித்தன். உஜ்ஜயினி மாகாளிப்பட்டணத்தை ஆண்டு சகல கலைகளையும் உணர்ந்தவன் விக்கிரமாதித்தன். சிறப்பாக நாட்டியக் கலையில் தேர்ச்சி பெற்றவன். அவனை இங்கு அழைத்து வரச் செய்தால் அவன் ரம்பை, ஊர்வசி ஆகிய இருவரில் எவர் சிறந்தவர் என்பதைக் கூறி விடுவான்,” என்றார். உடனே இந்திரன் தனது தேரோட்டியான மாதிரியை அழைத்து, “”மாதிரி, உஜ்ஜயினி மாகாளிப்பட்டணத்திற்குச் சென்று உடனே விக்கிரமாதித்தனை இங்கு அழைத்து வா!” என்றான். மாதிரிக்கு விக்கிரமாதித்தனை இந்திரலோகத்திற்கு அழைத்துவர விருப்பமில்லை. “ஒரு மானிடன் இந்திர லோகத்திற்கு வருவதா?’ என்று நினைத்தான். இதை அறிந்து கொண்ட நாரதமுனிவர், “”மாதிரி, விக்கிரமாதித்தனை அவ்வளவு சாதாரணமாக நினைத்துக் கொள்ளாதே! தேவர்களுக்கெல்லாம் மேலாக விளங்கக் கூடியவன். இங்கு எழுந்துள்ள சிக்கலான பிரச்னையைத் தீர்த்து வைக்கக் கூடியவன் அவன் ஒருவனே. எனவே, தாமதம் செய்யாமல் அவனை இங்கு அழைத்து வா,” என்றார். மாதிரியும் அரை மனதுடன் பூலோகத்திற்குச் சென்றான். விக்கிரமாதித்தனைக் கண்டு இந்திரன் அவனை அழைத்து வருமாறு கூறினான். விக்கிரமாதித்தன் நேரே காளிகோயிலுக்குச் சென்றான். காளியிடம் எலுமிச்சம் பழமும் திருநீறும் ஆசியும் பெற்று இந்திரலோகம் செல்லக் கிளம்பினான். தேவலோகத்திலிருந்து வந்த விமானத்தில் ஏறுவதற்காக விக்கிரமாதித்தன் தமது வலது காலை எடுத்து வைத்தான். இடது கால் தரையில் இருந்தது. அச்சமயத்தில் மாதிரி, “இந்த மானிடன் இந்திரலோகத்திற்கு வருவதா?’ என்ற எண்ணத்துடன் விமானத்தைத் திடீரென்று கிளப்பினான். இதை அறிந்து கொண்ட விக்கிரமாதித்தன் தமது வலது காலின் பெருவிரலைத் தேர்த் தட்டில் அழுத்தமாக ஊன்றினான். மாதிரி எவ்வளவு முயற்சி செய்தும் விமானத்தை அவனால் மேலே கிளப்ப முடியவில்லை. உடனே மாதிரி விக்கிரமாதித்தனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். பின்னர் விமானம் தேவலோகம் நோக்கிச் சென்றது. இந்திரன் விக்கிரமாதித்தனை எதிர் கொண்டழைத்தான். தங்க ஆசனம் கொடுத்து அமரச் செய்தான். பிறகு விக்கிரமாதித்தனிடம் எல்லாச் செய்தியையும் கூறி அவனிடம் ஒரு பாரிஜாத மாலையைக் கொடுத்தான். “”விக்கிரமாதித்தரே! ரம்பை, ஊர்வசி இருவரில் எவர் சிறப்பாக நடனமாடுகிறாரோ அவருக்கு இந்த மாலையை அணிவியுங்கள்,” என்றான் இந்திரன். போட்டி ஆரம்பமாகியது. இருவரும் முன் போலவே ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் ஆடினர். விக்கிரமாதித்தனுக்கு யாரைத் தேர்ந்தெடுப்பது என்றே புரியவில்லை. போட்டி முடிவுற்ற பிறகு, “”தேவேந்திரா, இருவரும் தனித்தனியாக ஆடினர். எனவே, இவர்களில் எவர் சிறப்பாக ஆடினர் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நாளைய தினம் இருவரையும் சேர்ந்தாற்போல் ஆடச் செய்யுங்கள். அதைப் பார்த்தப் பிறகு என்னுடைய தீர்ப்பை வழங்குகிறேன்,” என்றான் விக்கிரமாதித்தன். மறுநாள் காலையில் விக்கிரமாதித்தன் நந்தவனத்திற்குச் சென்றான். அங்கு மலர்களைப் பறித்தான். அவைகளை இரண்டு பூச்செண்டுகளாகக் கட்டினான். உள்ளே நிறைய வண்டுகளைத் திணித்து வைத்துக் கட்டினான். இரவு நடன நிகழ்ச்சி நடக்கும் போது, தான் தயாரித்து வைத்திருந்த பூச்செண்டுகளுடன் சபைக்குச் சென்றார். நடனம் ஆரம்பமாவதற்கு முன், “”வெறுங்கையுடன் ஆடினால் அழகாக இராது. இந்தப் பூச்செண்டுகளைப் பிடித்துக் கொண்டு ஆடினால் அழகாக இருக்கும்,” என்று கூறிய விக்கிரமாதித்தன் இருவரிடமும் ஆளுக்கொரு பூச்செண்டைக் கொடுத்தான். ரம்பையும், ஊர்வசியும் விக்கிரமாதித்தன் கொடுத்த பூச்செண்டுகளுடன் ஆட ஆரம்பித்தனர். நேரம் செல்லச் செல்ல ரம்பை தன்னை மறந்தாள். கையில் பிடித்திருந்த பூச்செண்டை அழுத்திப் பிடித்தவாறு வெறியுடன் ஆடிக் கொண்டிருந்தாள். பூச்செண்டை அவள் அழுத்திப் பிடித்ததால் அதற்குள்ளிருந்த வண்டுகள் அவள் கையைப் கொட்டத் தொடங்கின. வலி தாங்காத ரம்பை ஆட்டத்தை மறந்தாள். தாறுமாறாக, ஆட ஆரம்பித்தாள். தாளம் தவறி ஆட ஆரம்பித்தாள். ஆனால், ஊர்வசி நிதானமாக ஆடியதால் பூச்செண்டை மென்மையாகக் கையில் பிடித்துக் கொண்டிருந்தாள். இதனால் வண்டுகள் அவளை ஒன்றும் செய்யவில்லை. தாளத்துக்குத் தக்கவாறு அவள் ஆடினாள். இதிலிருந்து ஊர்வசியே சிறப்பாக நடனமாடினாள் என்று தீர்ப்பு வழங்கிய விக்கிரமாதித்தன், இந்திரன் அளித்த பாரிஜாத மாலையை அவளுக்கு அணிவித்தான். விக்கிரமாதித்தனின் தீர்ப்பைக் கண்டு வியந்த இந்திரன் அவரைப் பாராட்டினான். தான் இந்திரப் பட்டம் ஏறிய பொழுது பரமேசுவரனால் அவனுக்குப் பரிசாக அளிக்கப்பட்ட தங்க சிம்மாசனத்தை விக்கிரமாதித்தனுக்குப் பரிசாக அளித்தான். அழகுமிகுந்த அந்த சிம்மாசனத்திற்கு முப்பத்தி இரண்டு படிகள் இருந்தன. ஒவ்வொரு படியிலும் ஓர் அழகிய பதுமை இருந்தது. சிம்மாசனத்தில் ஏறுவதானால் ஒவ்வொரு பதுமையின் தலைமீது கால்வைத்துத் தான் ஏறவேண்டும். இந்த சிம்மாசனத்தை விக்கிரமாதித்தனுக்குப் பரிசாக அளித்த இந்திரன், “”இந்த சிம்மாசனத்தில் இருந்தவாறே ஆயிரம் ஆண்டுகாலம் சிறப்பாக ஆட்சி செய்து வருவாயாக,” என்று வரமும் அளித்தான். ரத்தின மயமான அந்த சிம்மாசனத்துடன் விக்கிரமாதித்தன் உஜ்ஜயினி மாகாளிப்பட்டணத்தை அடைந்தான்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'விக்கிரமாதித்தனும் இந்திரனும்' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: ஒரு நரி பசியினால் இரை தேடித் திரிந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு பெருஞ்சத்தம் கேட்டது. அது கேட்டு நரி நெஞ்சம் துணுக்குற்றது. தன்னைப்போல இரை தேடிக் கொண்டு ஏதேனும் பெரிய மிருகம் ஒன்று புறப்பட்டிருக்கிறதோ என்று அது பயந்தது. தன் பசி தீருமுன் தான் பிறிதொரு கலங்கியது. இருந்தாலும், இது என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று மனத்தைத் திடப்படுத்திக் கொண்டது. மெல்ல மெல்ல அது காட்டைச் சுற்றிக் கொண்டு ஒலி வந்த திசை நோக்கிச் சென்று ஒரு போர்க்களத்தையடைந்தது. அங்கு யாரும் இல்லை. ஆனால், அங்கிருந்துதான் ஒலி வந்தது. நரி, மெல்ல மெல்ல நெருங்கிச் சென்று பார்த்தது. ஒரு மரத்தடியில் பழைய போர் முரசு ஒன்று கிடந்தது. அதற்கு நேரே மேலே இருந்த மரக்கிளை, காற்றில் மேலும் கீழுமாக அசையும் போது, அந்த முரசைத் தாக்கியது. அது தாக்கும் போதெல்லாம் பெரும் சத்தம் கேட்டது. இதை நேரில் கண்ட பிறகு, அந்த நரி, பூ! வெறும் தோல் முரசுதானா? இதற்கா நான் இவ்வளவு பயப்பட்டேன்!” என்று சொல்லிக் கொண்டே போய்விட்டது.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'முரசொலி கேட்ட நரி' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: வெகு காலத்திற்கு முன் ஓர் ஊரில் ஏழைக் கிழவி ஒருத்தி இருந்தாள். சமைப்பதற்காக ஒரு பாத்திரம் நிறைய மொச்சை வாங்கினாள் அவள். அப்பொழுது மொச்சைக்குக் கருப்புப் பகுதி கிடையாது. முழுமையும் வெண்மை கலந்த பழுப்பு நிறமாக இருக்கும். மொச்சைகளை ஒரு பாத்திரத்தில் போட்டாள் அவள். அந்தப் பாத்திரத்தை அடுப்பின் மேல் வைத்தாள். அடுப்பில் நெருப்பு மூட்டினாள். எரிப்பதற்காக வைக்கோலை அடுப்பிற்குள் நுழைத்தாள். பாத்திரம் சூடேறத் தொடங்கியது. தப்பிக்க நினைத்த ஒரு மொச்சை பாத்திரத்தில் இருந்து துள்ளிக் கீழே குதித்தது. தீயில் எரியாமல் ஒரு வைக்கோல் எப்படியோ வெளியே வந்தது. நெருப்புத் துண்டு ஒன்றும் தப்பித்து வெளியே வந்தது. மூன்றும் அருகருகே இருந்தன. "எப்படியோ தப்பித்தேன். இல்லாவிட்டால் கூட்டத்தோடு நானும் இறந்திருப்பேன்" என்றது மொச்சை. "என் நிலையும் உன்னைப் போலத்தான். கிழவியை ஏமாற்றி விட்டு வெளியே வந்தேன். இல்லாவிட்டால் இந்நேரம் எரிந்து இருப்பேன்" என்றது வைக்கோல். "என்னைப் போல இருபது பேரை அந்தக் கிழவி அடுப்பிற்குள் போட்டாள். எல்லோரும் இந்நேரம் புகையால் சூழப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பார்கள். நல்ல வேளை. நான் தப்பித்தேன்" என்றது நெருப்புத் துண்டு. "உங்கள் இருவரையும் சந்தித்ததில் எனக்கு மகிழ்ச்சி. இப்பொழுது நாம் என்ன செய்வது?" என்று கேட்டது மொச்சை. "நாம் மூவரும் எப்படியோ சாவிலிருந்து தப்பித்தோம். இனிமேல் நாம் நல்ல நண்பர்களாக இருப்போம். பல ஊர்களுக்குச் செல்வோம். இனிய அனுபவங்களைப் பெறுவோம்" என்றது வைக்கோல். நெருப்புத் துண்டும் மொச்சையும் இதை ஏற்றுக் கொண்டன. அருகருகே இருந்தபடி மூன்றும் சிரித்துப் பேசிக் கொண்டே நடந்தன. சிறிது தூரம் சென்றன. அவற்றின் எதிரில் ஒரு ஆறு குறுக்கிட்டது. அதில் தண்ணீர் ஓடிக்கொண்டு இருந்தது. மூன்றும் அந்த ஆற்றின் கரையில் நின்றன. "இந்த ஆற்றை எப்படிக் கடப்பது?" என்று கேட்டது மொச்சை. "ஆற்றின் நீர் வேகமாக ஓடுகிறது. எனக்குப் பயமாக இருக்கிறது" என்றது நெருப்புத் துண்டு. இதைக் கேட்ட வைக்கோல், "கவலைப்படாதீர்கள். நான் மிக நீளமாக இருக்கிறேன். இக்கரையில் இருந்து அக்கரை வரை ஆற்றின் மேல் நான் படுத்துக் கொள்கிறேன். நீங்கள் இருவரும் என் மேல் நடந்து அக்கரையை அடைந்து விடுங்கள். பிறகு நானும் அக்கரை வந்து விடுகிறேன்" என்றது. இரண்டும் அதன் திட்டத்தை ஏற்றுக் கொண்டன. வைக்கோல் நீண்டது. இருகரைகளையும் பிடித்துக் கொண்டு ஆற்றின் மேல் பாலம் போல் நின்றது. நெருப்புத் துண்டு மெதுவாக வைக்கோலின் மேல் நடந்தது. ஆற்றின் நடுப்பகுதிக்கு வந்த அது கீழே பார்த்தது. தண்ணீர் சலசலவென்று ஓடுவதைக் கண்டு அஞ்சியது அது. பயத்தால் தயங்கியபடி சிறிது நேரம் அங்கேயே நின்றது. அவ்வளவுதான்! நெருப்புத் துண்டின் வெம்மை தாங்காமல் வைக்கோல் எரிந்து இரண்டு துண்டுகள் ஆயிற்று. நெருப்புத் துண்டு ஆற்று நீருக்குள் விழுந்தது. 'உஸ்' என்ற சத்தத்துடன் புகை எழுப்பி நீருக்குள் மூழ்கியது அது. இரண்டு துண்டுகளான வைக்கோலும் ஆற்று நீருக்குள் விழுந்தது. ஆற்று நீர் அதை அடித்துக் கொண்டு சென்றது. கரையில் இருந்து இந்த வேடிக்கையைப் பார்த்து மொச்சையால் சிரிப்பை அடிக்க முடியவில்லை. "ஆ! ஆ!" என்று வயிறு குலுங்கச் சிரித்தது அது. உடனே அதன் வயிறு வெடித்து விட்டது. உள்ளிருந்த குடல் வெளியே தெரிந்தது. வலி தாங்க முடியாமல் வேதனையால் துடித்தது அது. அந்த வழியாக ஒரு தையல்காரன் வந்தான். மொச்சையின் மீது இரக்கப்பட்டான். தன் கையிலிருந்த ஊசி நூலால் அதன் வயிற்றைத் தைத்தான். கறுப்பு நூலால் அவன் தைத்ததால் இன்றும் மொச்சையிக் வயிற்றில் நீண்ட கறுப்புத் தையல் காணப்படுகிறது.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'மொச்சைக்குத் தையல்' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: அக்பர், பீர்பல், சைதான்கான், தகப்பனார்
தலைப்பு: முட்டாள்களின் கேள்விகள்
| பீர்பாலின் நகைச்சுவையான பேச்சுகளை அக்பர் மட்டுமன்றி தர்பாரில் பலரும் ரசித்தனர். ஆனால், சிலருக்கு மட்டும் பீர்பாலுக்குக் கிடைத்த பாராட்டுகள் பொறாமையை அளித்தன. ஒவ்வொரு முறையும் அக்பர் மனந்திறந்து பீர்பாலைப் பாராட்டுகையில், அவர்களுடைய மனம் பற்றியெரிந்தது. எப்படியாவது பீர்பாலை மட்டம் தட்ட வேண்டும் என்றும்,அவமானப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் ஆவலாயிருந்தனர். அவர்களில் சைதான்கான் முதன்மையானவர். சைதான்கான் தன்னைப்போலவே பீர்பாலின் மீது பொறாமை கொண்ட மற்றவர்களுடன் சேர்ந்து அவரை அவமானப்படுத்தத் திட்டங்கள் தீட்டினார். அவற்றுள் ஒரு திட்டம் அனைவருக்கும் பிடித்துப் போனதால் அதை செயலாற்ற முடிவு செய்தனர். மறுநாள் வழக்கம் போல் தர்பார் கூடியது. முக்கியமான அலுவல்கள் முடிந்தபின், அக்பர் சிம்மாசனத்தில் நன்றாக சாய்ந்து கொண்டு அமர்ந்தார். பொதுவாக அந்த சமயத்தில்தான் அவர் சபையோரிடமிருந்து அறிவுரைகள், யோசனைகள் ஆகியவற்றைக் கேட்பது வழக்கம். உடனே சைதான்கான் எழுந்து நின்று அக்பரை வணங்க, அவரும் பேசுவதற்கு அனுமதி தந்தார். உடனே சைதான்கான் பீர்பாலைப் பார்த்துக் கொண்டே, "சக்கரவர்த்தி! நமது பீர்பாலைப் போல் புத்திசாலி யாருமே இல்லை. அவருக்கு அபார மூளை!" என்று பீர்பாலுக்கு ஐஸ் வைத்தார். "உங்களுக்கு மட்டும் புத்தி குறைவா? நீங்களும் தான் புத்திசாலி!" என்றார் பீர்பால். "என்ன இருந்தாலும் உங்களுடைய புத்திசாலித்தனத்திற்கு ஈடாகுமா?" என்ற சைதான்கான் சக்கரவர்த்தியை நோக்கி விஷமமாக, "சக்கரவர்த்தி! பீர்பாலே இத்தனை புத்திசாலியாக இருந்தால் அவருடைய தகப்பனார் இன்னும் எத்தனை புத்திசாலியாக இருப்பார்?" என்றார். அதைக்கேட்டு நிமிர்ந்து உட்கார்ந்த அக்பர், "அட, ஆமாம்! இது ஏன் எனக்குத் தோன்றவில்லை?" என்றார். "அப்படியானால் உடனே பீர்பாலின் தகப்பனாரை தர்பாருக்கு வரவழைப்போம் பிரபு!" என்றார் சைதான்கான். தன்னுடைய திட்டம் இத்தனை சீக்கிரம் பலிக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. அதைக் கேட்ட பீர்பால் திடுக்கிட்டார். சைதான்கான் ஆரம்பத்தில் இருந்தே தன்னைக் கவிழ்ப்பதற்காகத்தான் திட்டம் போட்டிருக்கிறான் என்று உணர்ந்தார். ஆனால் இவ்வளவு சாமர்த்தியமான திட்டத்தை எதிர்பார்க்கவில்லை. பீர்பாலின் தகப்பனார் அவ்வளவாகப் படிப்பறிவு இல்லாதவர். கிராமத்தைச் சேர்ந்த அப்பாவி. அவரை தர்பாரில் அழைத்து வந்து, தாறுமாறாக அவரை கேள்விகள் கேட்டு, அவரை அவமானப்படுத்துவதன் மூலம், அவர்கள் தன்னை அவமானப்படுத்த நினைக்கிறார்கள் என்று பீர்பால் புரிந்து கொண்டார். இதற்கிடையில் அக்பர், "பீர்பால்! நீ உடனே கிராமத்திற்குச் சென்று உன் தகப்பனாரை அழைத்து வா!" என்று கட்டளை இட்டார். அக்பரின் கட்டளையை ஏற்றுக் கொண்டு ரதத்திலேறி உடனே பீர்பால் தன் தகப்பனார் வசித்து வந்த கிராமத்தை அடைந்தார். அவர் கால்களில் விழுந்து வணங்க, அவரும் தன் மகனை ஆசீர்வதித்தார். பிறகு இருவரும் உணவருந்தினர். இரவில் அவர் படுக்கைக்குச் செல்லுமுன், பீர்பால் தான் வந்த நோக்கத்தைத் தன் தந்தையிடம் மெதுவாக வெளியிட்டார். பரபரப்படைந்த அந்த முதியவர், "நானா… தர்பாருக்கு வருவதா! நான் படிக்காதவன்! தர்பாரில் சக்கரவர்த்திமுன் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்றோ, எப்படி பேசுவதென்றோ அறியாதவன்!" என்று பதைபதைத்தார். "கவலைப்படாதீர்கள்! எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்றும், என்ன பேசவேண்டுமென்றும் நான் சொல்லித் தருகிறேன். தர்பாரில் நுழைந்ததும் சக்கரவர்த்தி முன் தலை தரையில் படும்படி விழுந்து சலாம் செய்யுங்கள். அவருடன் பேசும் போது, பணிவுடன் தலையை குனிந்தப்படி பதில் சொல்லுங்கள். யார் உங்களிடம் எது கேட்டாலும், தலையசைத்துப் புன்னகை மட்டும் செய்யுங்கள். மற்ற விஷயங்களை நான் பார்த்துக் கொள்கிறேன்" என்றார் பீர்பால். "மௌனம் சர்வார்த்த சாதகம்" என்று கூறிய பெரியவர் சிரித்துக் கொண்டே, "அப்படியே ஆகட்டும்!" என்றார். "எல்லாம் முடிந்த பிறகு யாராவது உங்களைப் பார்த்து ஏன் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லவில்லை என்று கேட்டால், உடனே நீங்கள்…" என்று பீர்பால் முதியவர் காதில் ரகசியமாகக் கூற, அவர் விழுந்து விழுந்து சிரித்தார். அதன்பிறகு பீர்பால் தன் தகப்பனாரை அழைத்துக்கொண்டு தலைநகரை அடைந்து, தர்பாருக்குள் நுழைந்தார். தர்பாரில் ஏற்கெனவே அக்பரும், மற்றவர்களும் வந்திருந்தனர். முதலில் பீர்பால் தனது தலை தரையில் படும்படி அக்பரை விழுந்து வணங்க, அவருடைய தகப்பனாரும் அப்படியே செய்தார். "வாருங்கள் பெரியவரே! உட்காருங்கள்!" என்று அக்பர் மரியாதையுடன் கூற முதியவரும் பீர்பாலுக்கருகே ஓர் இருக்கையில் அமர்ந்தார். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: அரசர், ஊர் வழக்காளர்
தலைப்பு: சாட்சி சொன்ன மரம்
| ஒரு பட்டணத்தில் இரண்டு வணிகப் பிள்ளை கள் இருந்தார்கள். ஒருவன் பெயர் நல்ல புத்தி. இன்னொருவன் பெயர் கெட்டபுத்தி. இரண்டு பேரும் பணம் சேர்ப்பதற்காக வெளியூருக்குச் சென் றார்கள். அங்கே நல்லபுத்திக்கு ஆயிரம் பொன் கிடைத்தது, கெட்டபுத்திக்கு எதுவும் கிடைக்க வில்லை. நல்ல நோக்கமுடைய நல்லபுத்தி, கெட்டபுத்தி யைப் பார்த்து, கவலைப்படாதே, நாம் இருவரும் ஆளுக்கு ஐநூறு பொன்னாகப் பங்கிட்டுக் கொள்ளலாம்" என்று கூறினான். சரியென்று ஒப்புக் கொண்ட கெட்டபுத்தி, நாம் உடனே இவ்வளவு பணத்தையும் ஊருக்கு எடுத்துச் சென்றால் கெடுதல் உண்டாகும். இங்கேயே ஒரு மரத்தின் கீழ்ப் புதைத்து வைப்போம். மற்றொரு நாள் வந்து எடுத்துக் கொண்டு போவோம்" என் றான். இது பொருத்தமாகத் தோன்றவே, நல்லபுத்தி ஒப்புக் கொண்டான். உடனே அங்கொரு மரத்தடி யில் பள்ளம் தோண்டிப் பணத்தைப் புதைத்து ஓர் அடையாளம் வைத்துவிட்டு இருவரும் ஊருக்குள் சென்றார்கள். கெட்டபுத்தி அன்று இரவே திரும்பி வந்து ஆயிரம் பொன்னையும் அடித்துக் கொண்டு போய் விட்டான், சில நாள் கழித்து இருவரும் அந்த மரத்தடிக்கு வந்து பார்த்தார்கள். பணம் காணவில்லை. உடனே, கெட்டபுத்தி முந்திக் கொண்டு நல்லபுத்தியைப் பார்த்து, நண்பா இப்படி மோசம் செய்யலாமா? என்று கேட்டான், "நீதான் எடுத்துக் கொண்டு என்னை ஏமாற்றுகிறாய்! என்றான் நல்லபுத்தி. இருவருக்கும் சண்டை வந்து விட்டது. கடைசி யில் வழக்கு மன்றத்திற்குப் போனார்கள். ஊர் வழக்காளர் அவர்களுடைய வழக்கை விசாரித்தார். பிறகு, "ஏதாவது சாட்சி உண்டா?" என்று கேட்டார். "எங்கள் இருவரையும் தவிர அந்த இடத்தில் வேறு யாரும் சாட்சியில்லை" என்றான் நல்லபுத்தி. அந்த மரமே இதற்குச் சாட்சி சொல்லும்" என்றான் கெட்டபுத்தி. ‘உண்மைதானா? காலையில் வாருங்கள் அந்த மரத்தையே கேட்போம்" என்று சொல்லி வழக்காளர் போய்விட்டார். வீட்டுக்கு வந்த கெட்டபுத்தி தன் தந்தையை அழைத்து மரப்பொந்தில் போய் ஒளிந்து கொண்டு, மரம் சாட்சி சொல்வது போல் பேசச் சொன்னான். ‘தம்பி, கொக்கின் முட்டையைத் திருடிய நாகத்தைப் போல் நமக்குத் துன்பம் ஏற்படக் கூடும். இந்தக் கெட்ட நினைப்பை விட்டுவிடு" என்று அறிவுரை கூறினார் அவர். ஆனால், கெட்டபுத்தி அவர் பேச்சைக் கேட்கவில்லை. அவரை வலுவாக இழுத் துச் சென்று அந்த மரப் பொந்தில் ஒளிந்து. கொள்ளும்படி வற்புறுத்தினான். பொழுது விடிந்தது. ஊர் வழக்கர் தன் ஆட்க ளோடு நல்லபுத்தியையும் கெட்டபுத்தியையும் அழைத்துக் கொண்டு வந்து மரத்தைச் சாட்சி சொல்லும்படி கேட்டார். மரம் பேசியது : ‘நல்லபுத்திதான் பணத்தை எடுத்தான்!" ஏன்று அழுத்தந்திருத்தமாகக் கூறி யது. ஆ! என்ன புதுமை! மரம் சாட்சி சொல்லுகிற தே!" என்று ஊர் வழக்காளர் ஆச்சரியப்பட்டார். ‘இது சூது!" என்று தெரிந்து கொண்ட நல்ல புத்தி, மரத்தில் ஏறி அந்தப் பொந்தில் நெருப்பை மூட்டினான். நெருப்பின் சூடு தாங்காமல், கெட்டபுத்தியின் தந்தை மரப்பொந்தின் உள்ளிருந்தபடியே கெட்ட புத்தி, உன்னால் கெட்டேன்!" என்று பதைபதைத்துக் கதறினான். நெருப்பில் வெதும்பி இறந்து போனான். இதைக் கண்ட ஊர் வழக்காளர் அரசரிடம் போய் நிகழ்ந்ததைக் கூறினார். பொன் முழுவதையும் நல்லபுத்திக்குக் கொடுக் கும்படி சொல்லி, கெட்டபுத்தியை அரசர் சித்திரவதை செய்து கொல்லும்படி உத்தர விட்டார். பிறரைக் கெடுக்க நினைப்பவர்கள் தாங்களே கெட்டொழிவார்கள். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: அரசன், தலைமை மருதுவர், மருத்துவர்கள், இளைய மருத்துவன், மந்திரி
தலைப்பு: வழுக்கைக்கு மருந்து
| அரசனுக்கு வயதாகிக் கொண்டிருந்தது. தலைமுடி கொட்டி வழுக்கை அதிகமாகிக் கொண்டிருந்தது. அரசனுக்கு தன் கம்பீரம் குறைந்து விடும் என்ற கவலை அதிகமாகிப் போய் ஒரு நாள் அரசவைத் தலைமை மருத்துவனிடம் நிவாரணம் கேட்டான். தலைமை மருத்துவன் "மன்னா! இதற்கு மருந்தே கிடையாது" என்று உண்மையைச் சொன்னான். அரசனுக்கு அந்த பதில் பிடிக்கவில்லை. கோபமடைந்தான். ஆத்திரம் தலைக்கேறி தலைமை மருத்துவனை சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டான். ஊரில் இருக்கும் அனைத்து சிறந்த மருத்துவர்களையும் வரவழைத்தான். ஒரே வாரத்தில் தன் பிரச்சனைக்குத் தீர்வு கண்டு பிடிக்குமாறு பணித்தான். மருத்துவர்கள் அனைவரும் கூடி விவாதித்தனர். அரசனிடமிருந்து எப்படித் தப்பிப்பது என்றுதான் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒரு துடிப்பான இளைஞன் இருந்தான். பிரச்சினைக்குத் தன்னிடம் தீர்வு இருப்பதாகக் கூறினான். அனுபவம் முதிர்ந்த வயதான மருத்துவர்கள் கூட்டத்தில் இருந்தனர். அவனைப் பார்த்து சிரித்தனர். "வழுக்கைக்குத் தீர்வா? போய் வேறு வேலை இருந்தால் கவனியப்பா" என்று கூறினர். நாள் செல்லச் செல்ல அவர்களுக்கு அரசனிடமிருந்து தப்பிக்கும் வழி தெரியவில்லை. அரசனை இந்த நிலையில் சந்தித்தால் கண்டிப்பாகத் தலைமை மருத்துவனுக்கு நேர்ந்த கதிதான் தமக்கும் நடக்கும் என்று எல்லோருக்கும் புரிந்தது. கதி கலங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது இளைய மருத்துவன் திரும்பவும் "என்னை நம்பினால் நம் எல்லோருக்கும் விடிவு நிச்சயம்" என்று கூறினான். வேறு வழியில்லாமல் அனைவரும் அவன் வழியில் செல்ல ஒத்துக் கொண்டார்கள். அவனோ, மருந்தை நேரடியாக அரசனிடம்தான் தருவேன், என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டான். அடுத்த நாள் சபை கூடியது. மருத்துவர்கள் இளைய மருத்துவனைக் கூட்டிக் கொண்டு அரசவைக்கு வந்தார்கள். அவன் அரசனிடம் ஒரு குடுவையைக் கொடுத்தான். "மன்னா இதில் இருக்கும் மருந்தை தினமும் சிரசில் தேய்த்துக் கொண்டு வந்தால், ஒரே மாதத்தில் முடி கொட்டுவது நின்று போகும். இரண்டே மாதத்தில் முடியில்லாத இடத்திலெல்லாம் முடி வளர ஆரம்பிக்கும், ஆறே மாதத்தில் கருகருவென தலையெங்கும் தலைமுடி அழகாக வளர்ந்திருக்கும்" என்றான். மன்னனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. "இப்போதே அந்தப்புரத்திற்குப் போய் தலையில் மருந்தைத் தடவிக் கொள்கிறேன்" என்று கிளம்பினான். அப்போது மருத்துவன் "மன்னா. இந்த மருந்து வேலை செய்ய வேண்டுமென்றால், அதைத் தலையில் தடவிக் கொள்ளும் போது மட்டும் நீங்கள் குரங்கை நினைக்கக் கூடாது!" என்றான். முட்டாள் மன்னன் சரியென்று சொன்னான். மந்திரியிடம் மருத்துவர்களுக்குப் பொன்னும் பொருளும் கொடுத்து சிறப்பாக மரியாதை செய்து அனுப்பி வைக்கச் சொல்லிவிட்டு அந்தப்புரத்திற்கு வேகமாகச் சென்று விட்டான். மருத்துவர்களும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஊரை விட்டே ஓடி விட்டார்கள். அந்தப்புரத்திற்குச் சென்ற அரசன், அங்கு குடுவையைக் கையில் எடுத்து அதிலிருந்த மருந்தைத் தலையில் தேய்க்கப் போனான். அப்போது அவனுக்கு மருத்துவன் சொல்லிய பக்குவம் கவனத்திற்கு வந்தது. "குரங்கை நினைக்கக் கூடாது" என்று நினைத்தவுடன் குரங்கைப் பற்றி நினைக்க ஆரம்பித்து விட்டான். என்ன முயற்சித்தும் அவன் நினைவிலிருந்து குரங்கை அகற்ற இயலவில்லை. மன்னனுக்கு மருத்துவனின் தந்திரம் புரியவில்லை. சற்று நேரம் கழித்து முயற்சிப்போம் என்று வேறு வேலையில் ஈடுபட்டான். ஆனால் ஒவ்வொரு முறை அவன் மருந்தைக் கையில் எடுத்த போதும் மருத்துவனின் அறிவுரை மனதில் தோன்றி அவனுக்குக் குரங்கு பற்றிய யோசனை வந்து கொண்டே இருந்தது. பல நாள் திரும்பத் திரும்ப முயற்சித்து விட்டு, இந்தச் சிரமத்திற்குப் பேசாமல் வழுக்கையாகவே இருந்து விடலாம் என்று தீர்மானித்து விட்டான். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: ஒருநாள் கிருஷ்ணதேவராயர் அரண்மனையில் கிருஷ்ண லீலா நாடக நாட்டியம் நடைபெற ஏற்பாடு செய்திருந்தார். தெனாலிராமனைத் தவிர மற்ற எல்லா முக்கியப்பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிகழ்ச்சியில் அரசியும் மற்றும் சில பெண்களும் கலந்து கொள்வதால் தெனாலிராமன் இருந்தால் ஏதாவது கோமாளித்தனம் செய்து நிகழ்ச்சியை நடைபெறா வண்ணம் தடுத்துவிடுவான் என எண்ணி தெனாலிராமனை மட்டும் நாடக அரங்கினுள் விட வேண்டாமென்று வாயிற்காப்போனிடம் கண்டிப்புடன் சொல்லி விட்டார் மன்னர். இதை அறிந்தான் தெனாலிராமன் எப்படியாவது அரங்கத்தினுள் சென்று விடுவது என தீர்மானித்துக் கொண்டான். நாடகம் நடைபெறும், அரங்கின் வாயிலை நெருங்கினான் தெனாலிராமன். உள்ளே செல்ல முற்பட்டான். வாயில்காப்பானோ அவனை உள்ளே விட மறுத்து விட்டான். மீண்டும் மீண்டும் கெஞ்சினான். வாயிற்காப்போன் மசியவில்லை. இந்நிலையில் தெனாலிராமன் ஒரு தந்திரம் செய்தான். “ஐயா, வாயிற்காப்போரே என்னை உள்ளே விட்டால் என்னுடைய திறமையால் ஏராளமான பரிசு கிடைக்கும். அதில் பாதியை உனக்குத் தருகிறேன்” என்றான். இதைக் கேட்ட வாயிற்காப்பான் முதலில் சம்மதிக்காவிட்டாலும் பின்னர் கிடைப்பதில் பாதி பரிசு கிடைக்கிறதே என்று மகிழ்ந்து அவனை உள்ளே விட்டான். அரங்கத்தினுள் செல்ல வேண்டுமானால் மீண்டும் இன்னொரு வாயிற்காப்போனை சமாளிக்க வேண்டியிருந்தது. அவனும் தெனாலிராமனை உள்ளே விட மறுத்தான். முதற் வாயிற் காப்போனிடம் சொல்லியதையே இவனிடமும் சொன்னான். இவனும் பாதி பரிசு கிடைக்கிறதே என்று மகிழ்ந்து அவனை உள்ளே விட்டுவிட்டான். ஒருவருக்கும் தெரியாமல் தெனாலிராமன் ஓர் மூலையில் போய் உட்கார்ந்து கொண்டான். அப்போது கிருஷ்ணன் வேடம் போட்டு நடித்தவன் வெண்ணை திருடி கோபிகைகளிடம் அடி வாங்கும் காட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. உடனே மூலையில் இருந்த தெனாலிராமன் பெண் வேடம் அணிந்து மேடையில் தோன்றி கிருஷ்ணன் வேடம் போட்டு நடித்தவனை கழியால் நையப் புடைத்து விட்டான். கிருஷ்ண வேடதாரி வலி பொறுக்கமாட்டாமல் அலறினான். இதைப்பார்த்த மன்னர் கடுங்கோபமுற்று மேடையில் பெண் வேடமிட்டுள்ள தெனாலிராமனை அழைத்து வரச்செய்தார் பின் “ஏன் இவ்வாறு செய்தாய்” என வினவினார். அதற்குத் தெனாலிராமன் “கிருஷ்ணன் கோபிகைகளிடம் எத்தனையோ மத்தடிபட்டிருக்கிறான் இப்படியா இவன் போல் அவன் அலறினான்” இதைக் கேட்ட மன்னருக்கு அடங்காக் கோபம் ஏற்பட்டது. தெனாலிராமனுக்கு 30 கசையடி கொடுக்குமாறு தன் பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். இதைக் கேட்ட தெனாலிராமன் “அரசே இப்பரிசை எனக்கு கொடுக்க வேண்டாம். ஏனென்றால் எனக்குக் கிடைக்கும் பரிசை ஆளுக்குப் பாதி பாதி தருவதாக நம் இரண்டு வாயிற்காப்போன்களிடம் உறுதியளித்து விட்டேன். ஆகையால் இப்பரிசினை, அவர்கள் இருவருக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுங்கள்” என்று கேட்டுக் கொண்டான். உடனே மன்னர் அவ்விரு வாயிற்காப்போன்களையும் அழைத்து வரச்செய்து இது குறித்து விசாரித்தார். அவ்விருவரும் உண்மையை ஒத்துக் கொண்டார்கள். அவ்விருவருக்கும் தலா 15 கசையடி கொடுக்குமாறு மன்னர் பணித்தார். மேலும் தெனாலிராமனின் தந்திரத்தைப் பாராட்டி அவனுக்குப் பரிசு வழங்கினார்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'கிருஷ்ண லீலை' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: முல்லா ஒரு புதிய சுவர் கடிகாரம் வாங்கி வந்தார்.அதை சுவரில் மாட்ட ஆணி அடிக்க அவரிடம் சுத்தியல் இல்லை! பக்கத்து வீட்டுக்காரரிடம் கேட்க வேண்டும்.நேரம் இரவாகிவிட்டது.இந்நேரம் போய் கேட்பது சரியல்ல ம்றுநாள் காலையில் கேட்க்கலாம் என் நினைத்து தூங்க சென்றார்.மறுநாள் காலை எழுந்ததும் கடிகாரம் நினைவுக்கு வந்தது.பக்கத்து வீட்டுக்காரரிடம் சுத்தியல் கேட்க எண்ணியபோது அன்று வெள்ளிக்கிழமை என்பது நினைவுக்கு வந்தது! இன்று போய் கேட்டால் ஏதாவது நினைத்துக்கொள்வாரோ? என எண்ணி அன்றும் சுத்தியல் வாங்கவில்லை!.மறுநாள் போய்கேட்க முடிவு செய்து பக்கத்து வீட்டை நெருங்கினார்.பக்கத்து வீட்டில் நிறைய விருந்தினர்கள் வந்திருப்பதை பார்த்து கேட்காமலே திரும்பினார்.இப்படி பல காரணங்களினால் ஒரு வாரமாகியும் முல்லாவால் கடிகாரத்தை மாட்ட முடியவில்லை! அன்று வாங்கி வந்த கடிகாரம் அவரை பார்த்து சிரிப்பது போல இருந்த்து.உடனே விடுவிடு என பக்கத்து வீட்டுக்கு சென்றார்.பக்கத்து வீட்டுக்காரரைப் பார்த்து”உன் சுத்தியலை நீயே வைத்துக்கொள்! எனக்கு தேவையில்லை”பொல்லாத சுத்தியல்!நீ மட்டும் தான் சுத்தியல் வைத்திருக்கின்றாயா?” என கோபமாக பேசினார்.பக்கத்துவீட்டுக்காரருக்கு ஒன்றும் புரியவில்லை!பரிதாபமாக முல்லாவை பார்த்தார். ந்ம்மில் பலரும் இப்படித்தான் மனதில் உள்ளதை தெளிவாக பேசாமல் மனதில் ஒன்றை வைத்து பேசி பிரச்சினைகளுக்கு காரணமாகின்றோம் என்பதே இக்கதையின் நீதி!!
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'எண்ணங்களை பூட்ட வேண்டாம்' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: நான் யார்? இந்தப் பேரண்டத்திற்குள் நான் எங்கோ ஓரிடத்தில், சிறு உயிரியாக, வாழ்ந்து கொண்டிருப்பவனாகத் தெரிகின்ற போதிலும், சில நாட்களாக இப்படி ஒரு எண்ணவோட்டம்: அண்டத்தினுள் நான் இல்லை. வேறெங்கோ இருக்கிறேன். ஒரு சிறு உயிரியாக பேரண்டத்திற்குள் நான் வாழ்வதாக எனக்குத் தோன்றுவதெல்லாம், வேறொன்றுமல்ல, நான் காணும் கனவு. இந்தக் கனவுதான் வாழ்க்கையென்று நம்பிக் கொண்டு இதுநாள் வரை இருந்துவிட்டேன். இந்தக் கனவை உருவாக்கியவை என் ஆறு அறிவுகள். நான் யார் என்பது கனவைத் துறக்கும்போதுதான் தெரியும். கண்களைத் திறக்கும் போதல்ல; ஐம்புலன்களையும் மூடும்போதுதான் அந்தக் கனவு போகும். இது சுலபமில்லை. ஆனாலும்கூட அந்த நிலையை கற்பனை செய்து கொள்வது சுலபம். கற்பனையில் நான் செய்து கொள்ளும் இந்தப் பரிசோதனைகள், நான் எண்ணிக் கொண்டிருக்கும் இந்தக் கருத்துக்கு மேலும் வலுசேர்க்கக்கூடும்.. கண்திறந்து அமர்ந்திருக்கிறேன் நான். என் முன்னால் அண்டத்தின் பல்வேறு உருவங்கள். குழந்தை ஒன்றின் மனோபாவத்துடன் பார்க்கிறேன் அவற்றை. பல்வேறு வடிவங்களில், நிறங்களில், சிறியதாகவும், பெரியதாகவும் உருவங்கள் தெரிகின்றன. நான் நினைக்கும்போது நினைத்தபடி நகரக்கூடிய, எனக்குக் கீழேயுள்ள உருவம் ஒன்றை மட்டும் என்னுடையதென கருதி வருகிறேன். கைகளை தட்டி விளையாடப் பிடித்திருக்கிறது. ஒவ்வொரு கைத்தட்டலையும் நான்கு விதமாக உணர்கிறேன். கைகள் இணையும் காட்சியாகவும், தட்டிக் கொள்ளும் சப்தமாகவும், கைகள் தொட்டுக் கொள்ளும் உணர்ச்சியாகவும், கைதட்டிக் கொள்ளும் நிகழ்ச்சியாகவும் என நான்கு விதமாக. முதல் பரிசோதனையை மேற்கொள்ளப் போகிறேன். என் கண்களை மூடிக் கொள்கிறேன். உருவங்கள் மறைந்துவிட்டன என நான் நினைத்தாலும் இல்லையென்கின்றன விழிதிரவத்திலுள்ள தூசிகள். அங்குமிங்கும் அசைந்தும், பல வண்ணங்களை உமிழ்ந்து கொண்டும் இருக்கின்றன. இதைவிட பெரிய காட்சியாக, அவற்றிற்கு அப்பால் பிரம்மாண்டமான இருட்டொன்று பார்வையில் பட்டுக்கொண்டே இருக்கிறது. இப்போது, தியானங்கள், தவங்கள் மூலம் ஞானிகள் பெறும் சக்தியை நான் பெற்றுவிட்டதாக வைத்துக்கொள்வோம். அதாவது என் பார்வை என்கிற அறிவை இழந்து விடுகிறேன். இப்போது இருட்டு கூட எனக்குத் தெரிவதில்லை. இருப்பினும் என் மூளையில் கண்கள் மூலம் நான் கண்ட பழைய நினைவுகளின் காட்சிகள் அனைத்தும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இதோ, என் நினைவுகளிலிருந்து காட்சிகளை மட்டும் அழித்துவிடுகிறேன். ஒரு பிறவிக்குருடன் மூலையிலிருப்பது போன்று என் நினைவுகள் இப்போது காட்சிகளற்றுக் கிடக்கின்றன. சற்று நேரத்திற்கு முன்பு நான் கைத்தட்டிய நிகழ்ச்சியும் கூட. பார்வையை இழந்த கையோடு அடுத்த பரிசோதனைக்கு உட்படுகிறேன். என் காதுகளால் இனி எந்த சப்தத்தையும் கேட்கப் போவதும் கிடையாது. கேட்டல் அறிவையும் இழந்து விடுவதாய் என் கற்பனைப் பரிசோதனை நீள்கிறது. இருப்பினும், ஒலியலைகளால் ஆகாத சப்தங்கள் என் மூளையில் ஒலிக்கிறது. நான் கற்ற மொழியால் ஒலி வடிவில் பதிவு செய்யப்பட்டிருந்தன என் நினைவுகள். என் தாய்மொழி வடிவில்தான் நான் இதுவரை சிந்தித்து வந்திருக்கின்றேன். இப்போது என் நினைவுகளிலிருந்து மொழியை நீக்கிவிடும் அதிசயத்தையும் செய்கிறேன். இப்போது பிறந்ததிலிருந்து உள்ள என் நினைவுகள் அனைத்தும், மொழி அறியாத ஆதிவாசி மனிதனின் வார்த்தைகளற்ற மன பதிவுகள் போன்று இருக்கின்றன. நான் கைதட்டியது கூட அவ்வாறே பதிந்திருக்கிறது. என் நுகர்தல், சுவைத்தல் அறிவுகளை அகற்றிவிட்டு, அடுத்த பரிசோதனைக்கு வரும்போது நான் நான்கு அறிவுகளற்று இருக்கிறேன். நான் எங்கோ அமர்ந்திருப்பதாக மட்டும் என்னால் உணரமுடிகிறது. அமர்ந்தபடியே இருக்கிறேனென்பதால் என் முட்டிகள் வலிக்கின்றன. இரத்த ஓட்டம் செல்லாத பாதப் பகுதி சோகை பிடித்து மந்தமாக இருக்கிறது. இதோ இப்போது உடலால் நான் உணரக்கூடிய தொடு உணர்வு, வலி, கூச்சம், சுகம் போன்ற அனைத்தையும் இழக்கிறேன். அதோடு, தொடு உணர்வு, சம்பந்தப்பட்ட என் மூளைப் பதிவுகளையும் கூட. இந்த வினாடி முதல் உடல் என்னுடையதல்லாததாக மாறுகிறது. ஆனாலும் நான் இருக்கிறேன். 'ஏன் கைத்தட்டினேன்' என்பது உள்ளிட்ட பல வருட நினைவுகளோடு மட்டும். ஐம்புலன் அற்றவனாக இன்னும் 'நான்' இருக்கிறேன். ஆனால் என் ஐந்து தூரிகைகளால் வரையப்பட்ட பிரபஞ்சம் என்ற ஓவியத்தின் அழகிற்குள் மயங்கிக் கிடக்கும் வேடிக்கை மனிதனாய் அன்று. இத்தனை பரிசோதனைக்குப் பின்பும், மனநிறைவில்லை. கேள்விகள் நச்சரித்துக் கொண்டிருக்கும் போது எப்படி தூங்கமுடியும். பல கேள்விகள். ஏன் இந்த பேரண்டம் இருந்தது? ஏன் இதை இல்லாமல் செய்ய வேண்டும்? ஏன் நான்? ஏன் பிறப்பு? ஏன் வாழ்க்கை? ஏன் இறப்பு? என்று நீண்டு கொண்டே வந்த பட்டியல் ஒரு கேள்வியோடு முற்றுப் பெற்றது. 'ஏன்' ஏன்? ஏன் என்று நான் காரணங்களைத் தேடுவது ஏன்? என் ஆறாவது அறிவுதான் அதன் காரணம். இப்போது அதையும் நீக்க நான் முற்படுகிறேன். நீக்கினேன். கடைசிப் பரிசோதனையும் முற்றுப் பெற்றது- ஆறாவது அறிவை பயன்படுத்திதான் நான் இந்தக் கற்பனைப் பரிசோதனையை மேற்கொள்கிறேன். அதனால்தான், கடைசி நிலையை என்னால் முழுமையாக உணரமுடியவில்லை. ஆனால் இதுதான் அது ... 'புத்தர், மாவீரர், இயேசு, நம் மண்ணில் சித்தர்கள் என அனைவரும் சொன்ன 'அது' இதுதான். இதை நோக்கிதான் மனிதனின் பயணம் தொடங்க வேண்டும். இதுதான்.... யாரோ என் தோளைப் பிடித்து ஆட்டியதால் ஒரு பள்ளத்திற்குள் விழுந்துவிட்ட நினைப்பு. கண்விழித்துப் பார்த்தபோது கட்டிலின் ஓரத்தில் அம்மா அமர்ந்திருக்கிறாள். மல்லாக்கில் படுத்திருந்த என் நெஞ்சில் கவிழ்த்தப்பட்டிருந்த புத்தகத்தைக் கையில் எடுத்த அம்மா முன் பக்கத்தைப் பார்க்கிறாள். "ஏண்டா... இதுல இருந்துதான் இன்னக்கி கேள்வி கேக்கப் போறாங்களா... பாடுபட்டு இரத்தஞ் சொட்டிச் சம்பாதிச்சு உன்னப் படிக்க வக்கிறோம்... சும்மால்ல.... நீ... பெயிலாப்போயி... அரியர் வக்கிறப்ப எங்க மனசு எவ்வளவு கஷ்டப்படுது" அம்மாவின் குரல், 'மனவலியை' தழுதழுத்தது வெளிக் காட்டியது. நான் எழுந்து அமர்கிறேன் படுக்கையில். "நானும் ரெண்டு நாளாப் பாக்குறேன்... இதே புத்தகத்தத்தான் படிச்சிக்கிட்டிருக்க. இன்னக்கி மதியம் பரிச்சைய வைச்சுக்கிட்டு. இந்தத்தடவயாவது அந்தப் பேப்பர எழுதி முடிப்பேன்னு நெனச்சேன்" அம்மா அழுதே விட்டாள். " அம்மா.... சரி..... படிக்கிறேன்... அழுகாத... ஈஸிதான்... ஏற்கனவே படிச்சுட்டேன்... சரி... இப்ப என்ன... இந்தாப் படிக்க ஆரம்பிச்சுட்டேன்." எழுந்து செல்கிறேன் என் அலமாரியை நோக்கி. பாடப்புத்தகங்கள், கோலப்புத்தகங்கள், சமையல் புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்த அலமாரியின் நடு அரையில் தியானத்தின் முறைகள் பற்றிய அந்தப் புத்தகத்தை வைக்க மனம் ஒப்பவில்லை. காலியாக இருந்த மேல் அறையில் அதை வைத்து, அழகு பார்த்துவிட்டு, பாடப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு திரும்பிப் பார்க்கிறேன். என் அம்மா இன்னும் என்னைப் பார்த்துக் கொண்டே இருக்கிறாள்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'நான்' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: அக்பர் சக்கரவர்த்திக்கு வெற்றிலை போடும் பழக்கம் இருந்தது. அதிலும் குறிப்பாக, சௌகத் அலி தயாரிக்கும் பீடா அவருக்கு மிகவும் பிடிக்கும். அவன் தயாரிக்கும் பீடா மிகப் பிரமாதமாக இருப்பதாக அக்பர் அடிக்கடி அவனிடமே புகழ்ந்து பேசுவதுண்டு! அந்த சமயங்களில் சௌகத் அலி அக்பருக்கு சலாம் செய்து விட்டு, “பீடா தயாரிப்பது எனக்கு கை வந்த கலை! என்னுடைய எட்டாவது வயது முதல் இந்தத் தொழிலை நான் செய்து கொண்டு இருக்கிறேன். சக்கரவர்த்தியான உங்களுக்கு நான் பீடா தயாரித்து கொடுப்பதை பெரும் பாக்கியமாக நினைக்கிறேன்” என்றான். அக்பர் அன்றுமுதல் தான் எங்கு சென்றாலும் தன்னுடன் சௌகத் அலியையும் உடன் அழைத்துச் செல்லத் தொடங்கினார். இவ்வாறு மூன்றாண்டுகள் கழிந்தன! ஒருநாள் அலி பீடாவில் கை தவறி சிறிது அதிகமாக சுண்ணாம்பினைக் கலந்து விட்டான். அதைத் தின்ற அக்பரின் நாக்கு வெந்து விட்டது. உடனே பீடாவைத் துப்பியவாறே, “முட்டாள்! உன்னுடைய பீடாவைத் தின்று என் நாக்கு வெந்து விட்டது. பீடா தயாரிப்பதில் தலை சிறந்தவன் என்று ஓயாமல் பெருமையடித்துக் கொண்டாயே! இதுவா நீ தயாரிக்கும் லட்சணம்?” என்று சீறினார். அலி பயத்தினால் மிகவும் நடுங்க ஆரம்பித்து விட்டான். மிகக் கோபத்துடன் அவனை முறைத்துப் பார்த்தவாறே, “உடனே சென்று ஒரு பை நிறைய சுண்ணாம்பு கொண்டு வா!” என்று கட்டளையிட்டார். அலி கடைக்குப் போய் ஒரு பை நிறைய சுண்ணாம்பு வாங்கினான். அப்போது அங்கே வந்த மகேஷ்தாஸ் “அலி! என்ன விஷயம்? எதற்கு இத்தனை சுண்ணாம்பு?” என்று கேட்டான். “இதை சக்கரவர்த்தி வாங்கி வரச் சொன்னார். ஏன் என்று எனக்குத் தெரியவில்லை!” என்றான் அலி. “தெரியவில்லையா? எந்த சந்தர்ப்பத்தில் இதை வாங்கச் சொன்னார்?” என்று மகேஷ் கேட்க, அலியும் நடந்ததைக் கூறினான். சக்கரவர்த்தி எதற்காக ஒரு பை நிறைய சுண்ணாம்பு வாங்கச் சொன்னார் என்று மகேஷுக்குப் புரிந்து விட்டது. உடனே அவன் அலியிடம், “வயிறு நிறைய நெய் குடித்து விட்டு சக்கரவர்த்தியிடம் செல்!” என்றான். “என்னப்பா! ஏற்கெனவே நான் யானைக் குட்டி போல் பருமனாக இருக்கிறேன். இந்த லட்சணத்தில் நான் வயிறு நிறைய நெய் தின்றால் பூதம் போல் ஆகிவிடுவேன்!” என்றான் அலி! “இன்று ஒருநாள் மட்டும் செய்” என்று சொல்லிவிட்டு மகேஷ் சென்று விட்டான். மகேஷ் சொன்னால் அதில் ஏதோ காரணம் இருக்கும் என்று நம்பிய அலி, வீட்டிற்குச் சென்று ஒரு செம்பு நிறைய நெய் எடுத்து வயிறு முட்ட குடித்த பிறகு அவன் அக்பரை நாடிப் போனான். சபையில் அமர்ந்திருந்த அக்பர் அலியைப் பார்த்து, “ஒரு பை சுண்ணாம்பு வாங்க இத்தனை நேரமா?” என்று கடிந்து கொண்ட பிறகு, ஒரு காவலனை நோக்கி “இவனை சபைக்கு வெளியே அழைத்துச் சென்று பையிலுள்ள சுண்ணாம்பு முழுவதையும் அவன் வாய்க்குள் போட்டு அடைத்து விடு!” என்றார். அப்போதுதான் அக்பர் தனக்குத் தந்த தண்டனையின் கொடூரம் அலிக்குப் புரிந்தது. கதறக் கதற அலியை வெளியே இழுத்துப் போன காவலன், அலியின் பையிலிருந்து சுண்ணாம்பை எடுத்து அலியின் வாயில் போட்டு விழுங்கச் செய்தான். ஒரு கவளம் சுண்ணாம்பு தின்ற உடனேயே, வாய், தொண்டை, வயிறு வெந்து போக அலி சுருண்டு விழுந்தான். தண்டனைக்குள்ளான அலி என்ன ஆனான் என்று பார்க்க அங்கு வந்த அக்பர், அலி தரையில் விழுந்திருந்தும் சுயநினைவுடன் இருப்பதைப் பார்த்து, “நீ இன்னும் சாகவில்லையா?” என்று கேட்டார். “இல்லை, பிரபு!” என்ற அலி சிரமப்பட்டு எழுந்து நின்று, “வயிறு நிறைய நெய் சாப்பிட்டதாலோ என்னவோ, நான் உயிருடன் இருக்கிறேன்!” என்றான். “உன்னை யார் நெய் உண்ணச் சொன்னார்கள்?” என்று அக்பர் கேட்க, அலி மகேஷின் பெயரைக் கூறினான். உடனே மகேஷ் அங்கு அழைத்து வரப்பட்டான். அவனைப் பார்த்ததும், “பீர்பல்! உன் வேலைதானா இது? அவனை ஏன் நெய் சாப்பிடச் சொன்னாய்?” என்று அக்பர் கேட்டார். “பிரபு! அலியிடம் நடந்தைக் கேட்ட பிறகு நீங்கள் அவனை சுண்ணாம்பை விழுங்க வைக்கப் போகிறீர்கள் என்று தெரிந்து கொண்டேன். நெய் தின்ற பிறகு சுண்ணாம்பை விழுங்கினால் உடலுக்குத் தீங்கு ஏற்படாது என்று எனக்குத் தெரியும்! அதனால்தான் அவ்வாறு அவனை செய்யச் சொன்னேன்” என்றான் பீர்பல். “அவன் மீது உனக்கு என்ன அவ்வளவு அக்கறை?” என்று அக்பர் கேட்க, “அக்கறை அவன் மீதில்லை, உங்கள் மீதுதான் பிரபு. அவன் தயாரிக்கும் பீடாவை நீங்கள் மிகவும் விரும்புகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். ஏதோ தெரியாமல் அவன் ஒருநாள் செய்த தவறுக்காக அத்தனை பெரிய தண்டனையை அவன் பெறப் போவதைத் தவிர்க்க விரும்பினேன். நீங்கள் அவன் செய்த சிறிய தவறை மன்னித்து விட வேண்டும். அக்பர் சக்கரவர்த்தி மிகவும் இரக்க குணம் படைத்தவர் என்பதை நிரூபிக்க இதை விட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா?” என்று கேட்டான் பீர்பல். அவனுடைய சாமர்த்தியமான பேச்சினால் கவரப்பட்ட அக்பர், “நீ சொல்வது சரிதான். மூன்று ஆண்டுகளாக அருமையாக பீடா தயாரித்தவன் ஒருநாள் தெரியாமல் செய்த தவறுக்காக தண்டனை பெறுவது சரியல்ல. அவனை நான் மன்னித்து விடுகிறேன்” என்றவர் அலியைப் பார்த்து, “பிழைத்துப் போ” என்றார்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'சிறிய தவறும் பெரிய தண்டனையும்!' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: செல்வன், ஊர், வெளியூர், வேலைக் காரன், நகரம், குள்ளன், திருடன், நீதிபதி, பொற்காசுப் பை, புல்லாங்குழல், காவலன், தூக்குக் கயிறு, இசை, கடைசி ஆசை
தலைப்பு: பாடாதே! செத்தேன்!
| ஓர் ஊரில் செல்வன் ஒருவன் இருந்தான். வெளியூரில் இருந்து வந்த ஒருவன் அவனிடம் வேலைக் காரனாகச் சேர்ந்தான். கள்ளம் கபடம் இல்லாத அந்த வேலைக்காரன் உண்மையாக உழைத்தான். செல்வன் அவனுக்குக் கூலி எதுவும் தரவில்லை. மூன்றாண்டுகள் கழிந்தன. செல்வனைப் பார்த்து அவன், ஐயா என் செந்த ஊருக்குச் செல்ல விரும்புகிறேன். எனக்குச் சேர வேண்டிய கூலியைத் தாருங்கள் என்று கேட்டான். கருமியான அந்தச் செல்வன் அவனை ஏமாற்ற நினைத்தான். தன் பையிலிருந்து மூன்று செப்புக் காசுகளை எடுத்து அவனிடம் தந்தான். நீ என்னிடம் மூன்று ஆண்டுகள் உழைத்தாய். ஒவ்வோர் ஆண்டிற்கும் ஒரு காசு கூலி, என்றான் செல்வன். வேலைக்காரனுக்குப் பணத்தின் மதிப்பு ஏதும் தெரியாது. நன்றி ஐயா! என்று சொல்லிவிட்டு மகிழ்ச்சியுடன் புறப்பட்டான். காட்டு வழியாகச் சென்று கொண்டிருந்தான். அவன் எதிரில் ஒரு குள்ளன் வந்தான். அந்தக் குள்ளன் இரண்டடி உயரமே இருந்தான். அவனின் நீண்ட வெள்ளைத் தாடி தரையில் புரண்டது தலையில் பல வண்ணத் தொப்பி அணிந்து இருந்தான். வேடிக்கையான தோற்றத்துடன் காட்சி அளித்தான் அவன். எதிரில் வந்தவனைப் பார்த்துக் குள்ளன், ஐயா! நான் ஏழை, குள்ளனாக இருப்பதால் யாரும் எனக்கு வேலை தருவது இல்லை. பசியாலும் பட்டினியாலும் வாடுகிறேன். என் மீது இரக்கப்பட்டு ஏதேனும் உதவி செய்யுங்கள், என்று கெஞ்சினான். உன்னைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது. நான் மூன்றாண்டுகள் கடுமையாக உழைத்ததற்குக் கிடைத்த கூலி இது. இதை நீ வைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக இரு. எனக்கு வலிமை இருக்கிறது. மீண்டும் உழைத்து என்னால் பொருள் ஈட்ட முடியும், என்று சொல்லி விட்டுத் தன் பையில் கை விட்டான். மூன்று செப்புக் காசுகளை எடுத்துக் குள்ளனிடம் தந்தான். அதை பெற்றுக் கொண்ட குள்ளன், நீ நல்லவன் உன்னிடம் ஏழைக்கு இரக்கப்படும் பண்பு உள்ளது. மூன்று காசுகளை என்னிடம் தந்து உள்ளாய். என்னால் எதுவும் செய்ய முடியும். உன் மூன்று விருப்பங்களைச் சொல். எப்படிப் பட்டதாக இருந்தாலும் உடனே நிறைவேற்றி வைக்கிறேன், என்றான். சிந்தனையில் ஆழ்ந்த அவன், குறி வைத்தால் குறி தப்பவே கூடாது. அப்படிப்பட்ட வில்லும் அம்புகளும் தேவை. நான் புல்லாங்குழலை இசைத்தால் கேட்பவர் யாராக இருந்தாலும் ஆட வேண்டும் அத்தகைய புல்லாங்குழல் தேவை. நான் எதைக் கேட்டாலும் மற்றவர்கள் அதை மறுக்கக் கூடாது. இதுவே என் மூன்று விருப்பங்கள், என்றான். அடுத்த நொடியே குள்ளனின் கையில் வில்லும் அம்புகளும் புல்லாங்குழலும் இருந்தன. அவற்றை அவனிடம் தந்தான் குள்ளன். உன் விருப்பங்கள் நிறைவேறும், போய் வா, என்றான். குள்ளனை வணங்கிவிட்டு மகிழ்ச்சியுடன் புறப்பட்டான் அவன். சிறிது தூரம் சென்றிருப்பான். அங்கே ஒரு திருடன் கையில் பொற்காசுப் பையுடன் நின்று இருந்தான். அருகே இருந்த மரத்தில் ஒரு பறவை கத்திக் கொண்டிருந்தது. இந்தப் பறவை மட்டும் என் கையில் கிடைத்தால் போதும். என் பசிக்கு நல்ல உணவாகும். என்ன செய்வேன்? அதை அடித்து வீழ்த்த வில்லோ அம்புகளோ என்னிடம் இல்லையே, என்று சொல்லிக் கொண்டு இருந்தான் திருடன். இதைக் கேட்டான் அவன் தன் வில்லில் அம்பு பூட்டிப் பறவைக்குக் குறி வைத்தான். குறி தவறவில்லை. பறவை அருகில் இருந்த புதரில் விழுந்தது. திருடனே! அந்தப் பறவையை எடுத்துக் கொள், என்று கத்தினான் அவன். முள் நிறைந்த புதர் அருகே சென்றான் திருடன். பறவையை எடுப்பதற்காகக் குனிந்தான். உடனே அவன் புல்லாங்குழலை வாயில் வைத்து இசைக்கத் தொடங்கினான். தன்னை அறியாமல் பாட்டிற்கு ஏற்ப ஆடத் தொடங்கினான் திருடன். சிறிது சிறிதாக இசையை அதிகப்படுத்திக் கொண்டே சென்றான் அவன். இசைக்கு ஏற்ப திருடன் இங்கும் அங்கும் வேகமாக ஆடத் தொடங்கினான். சுற்றி இருந்த முட்கள் அவன் உடைகளைக் கிழித்தன. உடலுக்குள் தைத்து வேதனையை ஏற்படுத்தின. திருடன் வலியைத் தாங்க முடியவில்லை. ஐயா! பாடுவதை நிறுத்துங்கள் என்று கெஞ்சினான். எத்தனை பேருக்கு நீ எவ்வளவு துன்பம் தந்து இருப்பாய்? யாருக்காவது இரக்கம் காட்டி இருக்கிறாயா? கொடியவனான உனக்குத் தக்க தண்டனை இதுதான், என்ற அவன் மேலும் வேகமாக இசைக்கத் தொடங்கினான். முட்கள் மேலும் மேலும் திருடனின் உடலைக் கிழித்தன. ஐயா! இனிமேல் என்னால் தாங்க முடியாது. என்னை மன்னித்து விடுங்கள். இனிமேல் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யமாட்டேன். நல்லவனாகி விட்டேன். நான் திருடிச் சேர்த்த இந்த பொற்காசுகளை உங்களுக்குத் தந்து விடுகிறேன். பாடுவதை நிறுத்துங்கள், என்று பரிதாபமாகச் சொன்னான் திருடன். நீ திருந்தி விட்டதாகச் சொல்கிறாய். பெருந்தன்மையுடன் பொற்காசுகளை எனக்குத் தருவதாகச் சொல்கிறாய். பாட்டை நிறுத்துகிறேன், என்ற அவன் புல்லாங்குழலை வாயிலிருந்து எடுத்தான். உடலெங்கும் குருதி சொட்டச் சொட்ட எழுந்தான் திருடன். சொன்னபடியே அவனிடம் பொற்காசுப் பையைத் தந்தான். அதைப் பெற்றுக் கொண்ட அவன் அங்கிருந்து மகிழ்ச்சியுடன் புறப்பட்டான். அவன் கண்ணுக்கு மறைந்ததும் திருடன், டேய்! அயோக்கியப் பயலே! என்னிடம் உன் வேலையைக் காட்டுகிறாயா? நீ விரைவில் கொடுமையாக இறக்கப் போகிறாய், என்று திட்டினான். குறுக்கு வழியாகப் பக்கத்தில் இருந்த நகரத்தை அடைந்தான். நீதிபதியிடம் சென்ற திருடன், ஐயா! நான் உழைத்துத் தேடிய பொற்காசுகளைக் காட்டில் ஒரு திருடன் பறித்துக் கொண்டான். நீங்கள்தான் மீட்டுத் தர வேண்டும், என்றான். அந்தத் திருடன் எப்படி இருப்பான்? என்று கேட்டார் நீதிபதி. எப்படியும் இந்த நகரத்திற்கு அவன் வருவான். தோளில் வில், கையில் புல்லாங்குழல் வைத்திருப்பான். எளிதில் கண்டுபிடித்து விடலாம், என்றான் திருடன். வீரர்களை அழைத்தார் நீதிபதி. இவன் குறிப்பிடும் ஆள் கிடைத்தால் கைது செய்து இழுத்து வாருங்கள், என்று கட்டளை இட்டார். நடக்கப் போவதை அறியாத அவன் நகரத்திற்குள் நுழைந்தான். வீரர்கள் அவனைக் கைது செய்தனர். நீதிபதியின் முன்னர் அவனை இழுத்து வந்தனர். அவனைப் பார்த்ததும் திருடன், நீதிபதி அவர்களே! இவன் தான் திருடியவன், இவனிடம் என் பொற்காசுப் பை இருக்கலாம், என்று கத்தினான். வீரர்கள் அவனைச் சோதனை செய்தனர். பொற்காசுப் பை கிடைத்தது. உடனே அவன், ஐயா! நான் திருடன் இல்லை. இவன்தான் திருடன். இவனே விருப்பப்பட்டு இந்தப் பொற்காசுகளை எனக்குத் தந்தான். நான் சொல்வதை நம்புங்கள், என்றான். முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவர்க்கு யாராவது இவ்வளவு பொற்காசுகளைத் தருவார்களா? நீ பொய் சொல்கிறாய். நீ திருடன் தான். இவனைத் தூக்கில் போடுங்கள், என்று கட்டளை இட்டார் நீதிபதி. அங்கிருந்த தூக்கு மேடைக்கு அவனை வீரர்கள் இழுத்துச் சென்றனர். அவன் கழுத்தில் தூக்குக் கயிற்றை மாட்ட ஒரு காவலன் வந்தான். நீதிபதி அவர்களே! இறப்பதற்கு முன் என் கடைசி ஆசை. இந்தப் புல்லாங்குழலை நான் சிறிது நேரம் இசைக்க வேண்டும்.. அனுமதி தாருங்கள், என்று கேட்டான் அவன். புல்லாங்குழலை அவனிடம் தருமாறு கட்டளை இட்டார் நீதிபதி. அங்கிருந்த திருடன். ஐயோ! வேண்டாம். புல்லாங்குழலை அவனிடம் தராதீர்கள். எல்லோருக்கும் ஆபத்து என்று கத்தினான். சாகப் போகிறவனின் கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டும். அவன் புல்லாங்குழலை இசைப்பதால் என்ன கெடுதி வந்துவிடப் போகிறது இசைக்கட்டும் என்றார் நீதிபதி. அப்படியானால் என்னை இந்தத் தூணோடு சேர்த்துக் கட்டி விடுங்கள். பிறகு அனுமதி கொடுங்கள், என்றான் திருடன். உடனே திருடன் தூணில் கட்டப்பட்டான். புல்லாங்குழலை அவன் இசைக்கத் தொடங்கினான். இசைக்கு ஏற்ப எல்லோரும் ஆடத் தொடங்கினார்கள். காவலன் கையில் இருந்த தூக்குக் கயிறு நழுவிக் கீழே விழுந்தது. அவன் இசைப்பதின் வேகம் அதிகரித்துக் கொண்டே சென்றது. எல்லோரும் வேகமாக ஆடினார்கள். தூணில் கட்டப்பட்டு இருந்த திருடனும் கை கால்களை ஆட்டினான். பாடுவதை நிறுத்து. உன்னை விடுதலை செய்கிறேன், என்று ஆடிக் கொண்டே கெஞ்சினார், நீதிபதி. பாடுவதை நிறுத்தினான் அவன். எல்லோரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். திருடனின் அருகே சென்ற அவன், உண்மையைச் சொல்.. பொற்காசுகளை நான் உன்னிடம் இருந்து திருடினேனா? அல்லது நீயாக எனக்குத் தந்தாயா? மீண்டும் இசைக்கத் தொடங்குவேன், என்றான். கட்டப்பட்டு இருந்ததால் மூச்சுத் திணறிய திருடன், நானாகத்தான் தந்தேன். நான்தான் திருடன். வீணாக இவன் மீது பொய்க் குற்றம் சுமத்தினேன், என்றான். உண்மையை அறிந்த நீதிபதி அந்தத் திருடனுக்குத் தூக்குத் தண்டனை விதித்தார். எல்லோரையும் வணங்கிய அவன் அங்கிருந்து தன் ஊருக்குப் புறப்பட்டான். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: புலவரை வென்ற தெனாலிராமன் ஒரு சமயம் விஜயநகரத்திற்கு வித்யாசாகர் என்ற ஒருவர் வந்திருந்தார். அவர் சகல சாஸ்திரங்களையும் அறிந்த புலவர். தம்மை போல யாரும் புலமை பெற்றவர் இருக்கமுடியாது என ஆணவம் கொண்டவர். அதனால் ஒவ்வொரு ஊராக சென்று அங்குள்ள புலவர்களையெல்லாம் வாதத்திற்கு அழைத்து வெற்றி பெற்று, பெருமையாக திரிந்து கொண்டிருந்தார். அவ்வாறே ஒருநாள் விஜயநகரத்திற்கும் வந்தார்.அவர் இராயரின் அவைக்கு வந்து தன் திறமையை வெளிப்படுத்தினார். அந்த அவையில் பெத்தண்ணா, சூரண்ணா, திம்மண்ணா போன்ற புலவர்கள் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் வல்லவர்கள். அவர்கள் கூட வித்யாசாகரை கண்டு அஞ்சி பின்வாங்கினர். தன்னிடம் வாதிட யாரும் முன்வராதது கண்ட வித்யாசாகர் ஆணவமுற்றார். தன் அவையில் சிறந்தவர்கள் இல்லையோ என இராயருக்கோ வருத்தம்.அந்த சமயத்தில் தெனாலிராமன் அவை முன் வந்து “பண்டிதரே! உம்மிடம் வாதம் புரிய நான் தயார். இன்று போய் நாளை வாருங்கள்” என்றான். இதை கேட்டதும் மன்னருக்கும், மற்ற புலவர்களுக்கும் உற்சாகமாக இருந்தது. அவர்கள் இராமனை வெகுவாக பாராட்டினர். இருந்தாலும் மறுநாள் வித்யாசாகரை இராமனால் வெல்ல முடியுமா? என்ற சந்தேகம் அனைவருக்கும் இருந்தது.மறுநாள் இராமனை ஆஸ்தான பண்டிதரை போன்ற விலையுயர்ந்த ஆபரணங்களால் அலங்கரித்து அவைக்கு அழைத்து வந்தனர். இராமன் தன் கையில் பட்டுத்துணியால் சுற்றப்பட்ட ஒரு கட்டை வைத்திருந்தான். வாதம் ஆரம்பமாகியது. வித்யாசாகர் இராமனின் கையில் இருந்த கட்டைப்பார்த்தார். அது என்னவாக இருக்கமுடியும்? என்று அவரால் ஊகிக்கமுடியவில்லை. எனவே “ஐயா! கையில் வைத்திருக்கிறீர்களே! அது என்ன? ” என்று கேட்டார்.இராமன் அவரை அலட்சியமாகப் பார்த்து, கம்பீரமாக “இது திலாஷ்ட மகிஷ பந்தனம் என்னும் நூல். இதைக்கொண்டுதான் உம்மிடம் வாதிடப்போகிறேன்!” என்றான்.வித்யாசாகருக்கு குழப்பம் மேலிட்டது. அவர் இது வரை எத்தனையோ நூல்களை படித்திருக்கிறார். கேட்டிருக்கிறார். ஆனால் இராமன் கூறியது போல் ஒரு நூலைப்பற்றி இதுவரை கேள்விபட்டதில்லை. அந்த நூலில் என்ன கூறியிருக்குமோ? அதற்கு தம்மால் பதில் சொல்ல முடியுமோ? முடியாதோ? என்ற பயம் ஏற்பட்டது. அதனால் நயமாக “வாதத்தை நாளை வைத்துக்கொள்ளலாம்” என்று சொல்லிவிட்டு சென்றார்.அன்றிரவு வித்யாசாகர் பல்வாறு சிந்தித்து பார்த்தார். இராமன் கூறிய நூல் புரிந்துக்கொள்ள முடியாத நூலாக இருந்தது. இதுவரை தோல்வியே கண்டிராத அவர் இராமனிடம் தோல்வி அடைய விரும்பவில்லை. ஆகவே அந்த இரவே சொல்லிக்கொள்ளாமல் ஊரை விட்டே ஓடிவிட்டார்.மறுநாள் அனைவரும் வந்து கூடினர். ஆனால் வித்யாசாகர் வரவில்லை. விசாரித்த பொழுது அவர் இரவே ஊரை விட்டு ஓடி விட்டார் என்ற செய்திதான் கிடைத்தது. வெகு சுலபமாக அவரை வென்ற இராமனை அனைவரும் பாராட்டினர்.மன்னர் இராமனிடம் “இராமா! நீ வைத்திருக்கும் திலகாஷ்ட மகிஷ பந்த என்ற நூலை பற்றி நானும் இதுவரை கேள்விபட்டதேயில்லை. அதை எங்களுக்கு காட்டு!” என்றார்.இராமன் மூடியிருந்த பட்டுத்துணியை விலக்கினான். ஏடுகள் எதுவும் காணப்படவில்லை. அதற்கு பதிலாக எள், விறகு, எருமையை கட்டும் கயிறு இருந்தது. அதை கண்டதும் எல்லாரும் வியப்புற்றனர்.இராமன், “அரசே! திலகம் என்றால் எள், காஷ்டம் என்றால் விறகு, மகிஷ பந்தனம் என்றால் எருமை கட்டும் கயிறு. இதன உட்பொருளை வைத்து தான் திலகாஷ்ட மகிஷபந்தனம் என்று சொன்னேன். இதைப்புரிந்து கொள்ளாத புலவர் பயந்து ஓடிவிட்டார்” என்று கூறிச்சிரித்தான். அனைவரும் சிரித்தனர். மன்னர் இராமனை பாராட்டி பரிசளித்தார்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'புலவரை வென்ற தெனாலிராமன்' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: லூ கென், வாத்து, ஜாடி, நான் சூவான்
தலைப்பு: ஜாடிக்குள் வாத்து
| ஒரு சமயம் பெரிய பதவியில் இருந்த அதிகாரி லூ கென், சா"ன் ஆசிரியர் நான் சூவானைச் சந்திப்பதற்காக சென்றான். ஆசிரியரைப் பார்த்ததும் லூ கென், "முன்னொரு காலத்தில் தவத்தில் சிறந்து வாழ்ந்த ஒருவர் வாத்து குஞ்சு ஒன்றினை ஜாடிக்குள் வளர்த்தார். அந்த குஞ்சும் நன்றாக வளர்ந்து பெரிதானது. ஆனால் பெரிதாக வளர்ந்த வாத்தினை அவரால் ஜாடிக்குளிருந்து எப்படி வெளியே எடுப்பது என்று தெரியவில்லை" என்று கூறி நிறுத்திவிட்டு, ஆசிரியரை நோக்கி புன்முறுவலுடன் "ஜாடியினை உடைக்காமலும், வாத்திற்கு காயம் படாமலும் எப்படி வாத்தினை ஜாடிக்குள்ளிருந்து வெளியே வரவழைப்பது என்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டான். "ஓ! தலைவரே!" என்று கூறிய ஆசிரியர் நான் சூவான் திடிரென்று சத்தமாக அழ ஆரம்பித்து விட்டார். அதனைப் பார்த்த லூ கென் "இங்கே இருக்கிறேன்!" என்று சொல்லிக் கொண்டே கொஞ்சமும் தாமதிக்காமல் துள்ளி குதித்தார். துள்ளிக் குதித்த லூ கென்னை ஆச்சரியத்துடன் பார்த்து "நல்லது, வெளியே எடுத்தாகி விட்டது" என்றார் ஆசிரியர் நான் சூவான். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: முல்லா, சுவர் கடிகாரம், சுத்தியல்
தலைப்பு: எண்ணங்களை பூட்ட வேண்டாம்
| முல்லா ஒரு புதிய சுவர் கடிகாரம் வாங்கி வந்தார்.அதை சுவரில் மாட்ட ஆணி அடிக்க அவரிடம் சுத்தியல் இல்லை! பக்கத்து வீட்டுக்காரரிடம் கேட்க வேண்டும்.நேரம் இரவாகிவிட்டது.இந்நேரம் போய் கேட்பது சரியல்ல ம்றுநாள் காலையில் கேட்க்கலாம் என் நினைத்து தூங்க சென்றார்.மறுநாள் காலை எழுந்ததும் கடிகாரம் நினைவுக்கு வந்தது.பக்கத்து வீட்டுக்காரரிடம் சுத்தியல் கேட்க எண்ணியபோது அன்று வெள்ளிக்கிழமை என்பது நினைவுக்கு வந்தது! இன்று போய் கேட்டால் ஏதாவது நினைத்துக்கொள்வாரோ? என எண்ணி அன்றும் சுத்தியல் வாங்கவில்லை!.மறுநாள் போய்கேட்க முடிவு செய்து பக்கத்து வீட்டை நெருங்கினார்.பக்கத்து வீட்டில் நிறைய விருந்தினர்கள் வந்திருப்பதை பார்த்து கேட்காமலே திரும்பினார்.இப்படி பல காரணங்களினால் ஒரு வாரமாகியும் முல்லாவால் கடிகாரத்தை மாட்ட முடியவில்லை! அன்று வாங்கி வந்த கடிகாரம் அவரை பார்த்து சிரிப்பது போல இருந்த்து.உடனே விடுவிடு என பக்கத்து வீட்டுக்கு சென்றார்.பக்கத்து வீட்டுக்காரரைப் பார்த்து"உன் சுத்தியலை நீயே வைத்துக்கொள்! எனக்கு தேவையில்லை"பொல்லாத சுத்தியல்!நீ மட்டும் தான் சுத்தியல் வைத்திருக்கின்றாயா?" என கோபமாக பேசினார்.பக்கத்துவீட்டுக்காரருக்கு ஒன்றும் புரியவில்லை!பரிதாபமாக முல்லாவை பார்த்தார். ந்ம்மில் பலரும் இப்படித்தான் மனதில் உள்ளதை தெளிவாக பேசாமல் மனதில் ஒன்றை வைத்து பேசி பிரச்சினைகளுக்கு காரணமாகின்றோம் என்பதே இக்கதையின் நீதி!! |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: தெனாலி ராமன் கிருஷ்ணதேவராயரின் புகழைக் கேள்விப்
பட்டு அவரைக் காண்பதற்காக விஜயநகரத்தை நோக்கிப் புறப்பட்டான். பல நாட்கள் அவ்வூரில்
தங்கி முயற்சித்தும் அரசரைக் காண இயலவில்லை. எப்படியாவது அரசரைப் பார்த்து விடுவது
என்று முயற்சித்துக் கொண்டே அவ்வூரிலேயே தங்கியிருந்தான். தினமும் அரண்மனைக்குப்
போவதும் திரும்பி வருவதுமாக இருந்தான். ஒருநாள் வித்தைகள் செய்து வேடிக்கைகள் செய்து காட்டும் செப்படி வித்தைக்காரனைச்
சந்தித்தான். அவனும் அரசரிடம் தன் வித்தைகளைக் காட்டிப் பரிசு பெரும் எண்ணத்துடன்
இருப்பதைப் புரிந்து கொண்டான். அவனுடனேயே தானும் ஒரு வித்தைக்காரனைப்போல. சேர்ந்து
கொண்டான். அரசர் கிருஷ்ணதேவராயர் முன்னிலையில் வித்தைக்காரன் செப்படி வித்தைகளைச்
செய்து காட்டி அனைவரையும் மகிழ்வித்தான். அரசரும் அவன் செய்து காட்டிய வித்தைகளால்
மிகவும் மகிழ்ந்து ஆயிரம் பொன் பரிசளித்தார். ஆனால் அவன் அந்தப் பரிசைப் பெறுமுன்பாகவே இராமன் "அரசே! இவனை விட வித்தையில்
வல்லவனான நான் இருக்கிறேன். நான் செய்யும் வித்தையை இவனால் செய்ய முடியுமா என்று
கேட்டுப் பாருங்கள். பிறகு பரிசு யாருக்கு என்று முடிவு செய்யுங்கள் " என்றவாறு
முன்னால் வந்து நின்றான். அரசருக்கு மிக்க மகிழ்ச்சி. போட்டி என்று வந்து விட்டாலே அது மிகவும் சுவை
யுடையதாகவே இருக்குமல்லவா? எனவே ' உன் வித்தைகளையும் காட்டு ' என்று அனுமதி
வழங்கினார் மன்னர். செப்படி வித்தைக்காரனுக்கு ஒரே கோபம். "உனக்கு என்னென்ன
வித்தைகள் தெரியும். செய்து காட்டு. நீ செய்யும் அத்தனை வித்தைகளையும் நான் செய்து
காட்டுகிறேன்."என்று சவால் விட்டான். அனைவரும் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
தெனாலிராமனோ பதட்டம் ஏதுமின்றி முன்னால் வந்து நின்றான்."அய்யா! எல்லா வித்தைகளையும்
செய்யவில்லை. ஒரே ஒரு வித்தை மட்டும் செய்கிறேன். அதுவும் கண்களை மூடிக்கொண்டு
செய்கிறேன். நீங்கள் கண்களைத் திறந்து கொண்டு அதே வித்தையைச் செய்து காட்டுங்கள்.
உங்களால் முடியாவிட்டால் அரசர் தரும் ஆயிரம் பொற்காசுகளில் பாதியை எனக்குத் தந்து
விட வேண்டும்."என்றான். வித்தைக்காரனோ வெகு அலட்சியமாக "ப்பூ, நீ கண்ணை மூடிக்கொண்டு செய்யும் வித்தையை நான்
கண்களைத் திறந்துகொண்டே செய்ய வேண்டும் அவ்வளவுதானே? நீ செய்து காட்டு" என்றான்.
உடனே இராமன் அரசரை வணங்கி விட்டுக் கீழே அமர்ந்தான். தன் கை நிறைய மணலை வாரி
எடுத்துக் கொண்டு மூடிய தன் கண்கள் நிறைய கொட்டிக் கொண்டான். அனைவரும் கை தட்டி
ஆரவாரம் செய்து சிரித்தனர். மன்னரும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார். பிறகு
இராமன் தன் கண்களிலிருந்து மணலைத் தட்டிவிட்டுவிட்டு வித்தைக்காரனைப் பார்த்து "இந்த
வித்தையை நீர் உம கண்களைத் திறந்து கொண்டே செய்து காட்டுங்கள்" என்றான்.
வித்தைக்காரனால் எப்படி முடியும்? " நான் தோற்றுப் போனேன். என்னை மன்னித்து விடுங்க"
ளென்று தலை குனிந்து நின்றான். மன்னர் மகிழ்ந்து இராமனை அழைத்து அவனைப் பற்றி
அறிந்து கொண்டார்.பிறகு " தெனாலி ராமகிருஷ்ணா! உன் புத்தி சாதுர்யத்தை மெச்சினேன்.
நீ சொன்னபடி ஐநூறு பொற்காசுகளைப் பெற்றுக் கொள் " என்றார். இராமன் "அரசே! இந்த வித்தைக்காரன் வித்தை காட்டுவதில் தனக்கு மிஞ்சியவர் யாருமில்லை
என்று பேசிக் கொண்டிருந்தான். அவன் கர்வமாகப் பேசியதை நான் கேட்டுக் கொண்டிருந்தேன்.
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை உணர்த்தவும் அவன் கர்வத்தை அடக்கவும்
நான் இவ்வாறு செய்தேன். நான் வித்தைக்காரன் என்று போய் சொன்னதற்கு என்னை
மன்னியுங்கள். ஆயிரம் பொன்னையும் அவருக்கே அளியுங்கள்." என்று கேட்டுக் கொண்டான். அரசர் கிருஷ்ணதேவராயர் மனம் மகிழ்ந்து இராமன் சொன்னபடியே வித்தைக்காரனுக்கு ஆயிரம்
பொற்காசுகளையும் பரிசாக அளித்தார்.. பின்னர் தெனாலி இராமனுக்கும் பரிசளித்து அவனைத்
தன் ஆஸ்தான விகடகவியாக அமர்த்திக் கொண்டார்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'வித்தைக்காரனை வென்ற கதை' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: இரண்டு தூக்கணாங்குருவிகள் ஒரு கூடு கட்டி, அதில் வசித்து வந்தன. ஒருநாள், இரை தேட அவை இரண்டும் வெளியே போயிருந்த சமயத்தில், ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து தூக்கணாங்குருவியின் கூட்டுக்குள் நுழைந்துகொண்டது.சிறிது நேரத்துக்கெல்லாம் ஒரு தூக்கணாங்குருவி பறந்து வந்தது. கூட்டுக்குள் தலையை நுழைத்தது. கூட்டுக்குள் சிட்டுக்குருவி இருப்பதைப் பார்த்துவிட்டு, “குருவி அக்கா. எங்கள் வீட்டில் நுழைந்து எனக்கு இடமில்லாமல் பண்ணிவிட்டாயே. தயவுசெய்து வெளியே போய்விடு” என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டது.“போடி போ. உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள். இனிமேல் இது என் வீடு. நான் இதை விட்டுப் போகமாட்டேன்” என்று குருவி மறுத்து விட்டது. தூக்கணாங்குருவி அங்கிருந்து வருத்தத்துடனும், யோசனையுடனும் பறந்து போனது.சிட்டுக்குருவி, கூட்டில் ஹாயாக உட்கார்ந்து “அப்படிப்போடு………..அப்படிப்போடு” என்று ஜாலியாகக் பாடிக் கொண்டிருந்தது. திடீரென்று தூக்கணாங்குருவிகளின் கூட்டம் பறந்து வந்தது. ஒவ்வொன்றும் ஈரமண்னை அலகில் கொத்தி வந்து, கூட்டின் வாசலைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து பூசின. கூட்டின் வாசல் குறுகிக் கொண்டே போனது.முதலில் சிட்டுக்குருவியின் கழுத்து, அப்புறம் தலைமட்டும், கடைசியாக அலகு என்று தெரிந்துகொண்டே வந்து, கடைசியில் ஒன்றுமே தெரியவில்லை. தூக்கணாங்குருவிகள், சிட்டுக்குருவியை கூட்டுக்குள் வைத்து ஒரேயடியாக அடைத்துப் பூசிவிட்டுப் பறந்து போயின.அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால் இதுதான் கதி என்று தாமதமாக உணர்ந்த சிட்டுக்குருவி, அந்தக் கூட்டுக்குள்ளேயே மூச்சடைத்து இறந்து போனது.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால்' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: ஒரு சமயம் விஜயநகர ராஜ்யத்தில் கடும் வறட்சி ஏற்பட்டது. பருவ மழை தவறி விட்டதால்
குளம், குட்டை, ஏரி எல்லாம் வற்றிவிட்டது. தெனாலிராமன் வீட்டுக் கிணற்றிலும் நீர்
குறைந்து அதிக ஆழத்திற்குப் போய்விட்டது. இதனால் தினமும் தோட்டத்திற்கு தண்ணீர்
பாய்ச்ச மிகவும் சிரமப்பட்டான் தெனாலிராமன். இந்த சமயத்தில் ஒரு நாள் இரவு நான்கு திருடர்கள் தன் தோட்டத்தில் பதுங்கி இருப்பதைக்
கண்டான். உடனே வீட்டிற்கு வந்து தன் மனைவியிடம், "அடியே, நம் நாட்டில் பருவ மழை
தவறிவிட்டதால், பஞ்சம் ஏற்பட்டு விட்டது. எனவே நிறைய திருட்டு நடக்க ஆரம்பித்து
விட்டது. பஞ்ச காலம் முடியும் வரை நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். எனவே
நாம் ஒரு காரியம் செய்வோம்" என்று வெளியே பதுங்கியிருந்த திருடர்களுக்கு கேட்கும்
வண்ணம் உரத்த குரலில் பேசினான். "அதற்கு என்ன செய்யலாம்?" என்று தெனாலிராமனின் மனைவி கேட்டாள். "வீட்டிலுள்ள நகை, மற்றும் விலையுயர்ந்த பொருட்களை எல்லாம் இந்தப் பெட்டியில் போட்டு
பூட்டு. நாம் இந்தப் பெட்டியை யாருக்கும் தெரியாமல் கிணற்றில் போட்டு விடலாம்.
பஞ்சம் தீர்ந்து திருட்டுப் பயம் ஒழிந்ததும் மீண்டும் கிணற்றிலிருந்து எடுத்துக்
கொள்ளலாம்" என்று முன்போலவே உரக்கக் கூறினான் தெனாலிராமன். திருடர்களும் இதைக்
கேட்டனர். அதே சமயம் ரகசியமாக தெனாலிராமன் தன் மனைவியிடம் திருடர்கள் ஒளிந்திருப்பதைக் கூறி
ஒரு பழைய பெட்டியில் கல், மண், பழைய பொருட்களை எல்லாம் போட்டு மூடினான். அந்தப்
பெட்டியைத் தூக்க முடியாமல் தூக்கி வந்து கிணற்றுக்குள் 'தொப்'பென்று போட்டு விட்டு
வீட்டுக்கு திரும்பிவிட்டான் தெனாலிராமன். திருடர்களும், "தெனாலிராமன், வீட்டிற்குள் புகுந்து திருடும் நம் வேலையை
சுலபமாக்கிவிட்டான். நாம் எளிதாக கிணற்றிலிருந்து பெட்டியை எடுத்துக் கொள்ளலாம்"
என்று தங்களுக்குள் பேசிக் கொண்ட்னர். பெட்டியை எடுக்க கிணற்றுக்கு அருகே வந்தனர் திருடர்கள். கிணறு ஆழமாக இருந்ததால்
உள்ளே இறங்கப் பயந்த திருடன் ஒருவன், "அண்ணே! தண்ணீர் குறைவாகத்தான் உள்ளது. நாம்
நால்வரும் ஏற்றம் மூலம் மாற்றி மாற்றி நீரை இறைத்து விட்டால் சுலபமாகப் பெட்டியை
எடுத்துக் கொண்டு போகலாம்" என்று கூறினான். அதைக்கேட்ட மற்றவர்களும் அவன்
திட்டத்துக்கு ஒப்புக்கொண்டனர். அதன்படி ஒருவர் மாற்றி ஒருவர் ஏற்றம் மூலம் நீர்
இறைக்கத் தொடங்கினர். சற்று நேரம் கழித்து வேறு வழியாக தோட்டத்திற்கு சென்ற தெனாலிராமன், திருடர்கள்
இறைத்து ஊற்றிய நீரை தன் தோட்டத்தில் உள்ள செடிகளுக்கும், கொடிகளுக்கும்,
பயிர்களுக்கும் பாயுமாறு கால்வாயைத் திருப்பி விட்டான். இப்படியே பொழுது விடிந்தது விட்டது. ஆனால் கிணற்றில் தண்ணீர் குறையவில்லை. இதனால்
திருடர்களும், "நாளை இரவு மீண்டும் வந்து நீரை இறைத்து விட்டு பெட்டியை எடுத்துக்
கொள்ளலாம்" என்று பேசிக் கொண்டு சென்றனர். அப்போது தோட்டத்திலிருந்து வந்த தெனாலிராமன் அவர்களைப் பார்த்து, "நாளைக்கு
வரவேண்டாம். நீங்கள் இறைத்த தண்ணீர் இன்னும் மூன்று தினங்களுக்குப் போதும். எனவே
மூன்று தினங்கள் கழித்து வந்தால் போதும். உங்கள் உதவிக்கு நன்றி நண்பர்களே!" என்று
கூறினான். திருடர்களுக்கு இதைக் கேட்டதும் மிகவும் அவமானமாய் போய்விட்டது. தங்களை ஏமாற்றி நீர்
இறைக்கச் செய்த தெனாலிராமனின் அறிவை மனத்திற்குள் எண்ணி வியந்தனர். மேலும் அங்கே
இருந்தால் எங்கே மாட்டிக் கொள்வோமோ என்ற அச்சத்தில் திரும்பிப் பார்க்காமல் ஓட்டம்
பிடித்தனர் திருடர்கள்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'நீர் இறைத்த திருடர்கள்' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: விக்கிரமன், வேதாளம், விஜயபுரியில் வசிக்கும் மருத்துவர் ராமு, ராமுவின் மனைவி மனோரமா, ராமுவின் குருவின் தூதுவன் சன்னியாசி, ராமுவின் குரு வைத்தியானந்தா, விஜயபுரி மன்னரின் தாய்
தலைப்பு: ராமு சுயநலவாதியா?
| தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தில் ஏறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் அதைத் தோளில் சுமந்தவாறு மயானத்தை நோக்கிச் செல்கையில், அதனுளிருந்த வேதாளம் அவனை நோக்கி, "மன்னா! நீ இந்த பயங்கர மயானத்தில் எதற்காக கஷ்டப்படுகிறாய்? பரோபகாரச் சிந்தையுடன் பொது நலத்திற்காக இப்படிப் பாடுபடுகிறாயா? ஏன் என்றால் உலகில் பலர் பரோபகாரம், பொதுநலம் என்று பேசுவார்கள். ஆனால் சுயநலவாதிகளாக இருப்பார்கள். அப்படிப்பட்ட ராமு என்பவனின் கதையை இப்போது சொல்லப் போகிறேன். கதை சொல்லத் தொடங்கியது. விஜயபுரியில் ரத்னாகரன் என்ற பணக்கார வியாபாரிக்கு மூன்று புதல்வர்கள் இருந்தனர். முதல் இரண்டு பிள்ளைகளும் திருமணம் செய்து கொண்டு தங்கள் தந்தையுடன் கூட இருந்து அவருடைய வியாபாரத்தில் உதவி செய்து வந்தனர். ஆனால் அவருடைய மூன்றாவது பிள்ளையான ராமுவிற்கு மட்டும் வியாபாரத்தில் நாட்டமேயில்லை. இயற்கையிலேயே மிகவும் தயாள குணம் படைத்த ராமு அவனை நாடி யார் எந்த உதவி கேட்டாலும் உடனே செய்து விடுவான். ராமுவின் போக்கு அவன் பெற்றோருக்குக் கவலையளித்தது. ஒருநாள் ராமுவைப் பற்றி ரத்னாகரன் கவலையுடன் தன் நேருங்கிய நண்பரிடம் பேசிக் கொண்டிருக்கையில், அவருடைய நண்பர், "எனக்கு ராமுவைப் பற்றி நன்றகாத் தெரியும். மிகவும் தயாள குணம் படைத்தவன். என்னுடைய பெண் மனோரமா மிகவும் புத்திசாலி. அவளை ராமுவிற்குத் திருமணம் செய்து கொடுத்தால், அவள் அவனைத் திருத்தி விடுவாள்" என்றார். நண்பருடைய யோசனை சரியென்று தோன்றவே, ரத்னாகரன் அதற்கு சம்மதிக்க விரைவிலேயே ராமுவின் திருமணம் மனோரமாவுடன் இனிதே நடைபெற்றது. ஒருநாள் மனோரமா ராமுவிடம், "உங்களை உதவி செய்ய வேண்டாம் என்று தடுக்கவில்லை. ஆனால் நீங்கள் செய்யும் உதவியினால் ஏதாவது பயன் இருக்கிறதா என்று நீங்கள் யாருக்கெல்லாம் தானம் கொடுத்தீர்களோ அவர்களிடம் சென்று ஆராய்ச்சி செய்யுங்கள். அவர்கள் உங்கள் உதவியினால் சரியானபடி பயன் அடைந்தார்கள் என்று தோன்றினால், நீங்கள் தானம் செய்து கொண்டேயிருங்கள். இல்லையேல் உங்கள் சுபாவத்தை மாற்றிக் கொள்ளுங்கள்" என்றாள். அதை ஒப்புக் கொண்ட ராமு, முதலில் சமீபத்தில் தான் பண உதவி செய்திருந்த சங்கரன் வீட்டிற்குச் சென்றான். அங்கு சங்கரன் கவலையுடன் உட்கார்ந்து இருப்பதைப் பார்த்தான். ராமுவைப் பார்த்து அவன், "நீ தந்த பணத்தில் விருந்து தயாரித்து உண்டதில், என் பிள்ளைக்கும், தந்தைக்கும் உடல் நலம் கெட்டு விட்டது. பணமெல்லாம் விருந்தில் கரைத்து விட்டோம். இப்போது மருத்துவருக்கு வேறு தண்டச் செலவு" என்றான். இதுபோல் இன்னும் சிலர் வீடுகளுக்குச் சென்றான். ஆனால் ஒருவர் கூட ராமு கொடுத்தப் பணத்தை உருப்படியாகப் பயன்படுத்தவில்லையென்று தெரிந்தது. ராமு ஏமாற்றத்துடன் வீடு திரும்பினான். தன் மனைவியிடம் தான் கண்டறிந்ததைப் பற்றி விளக்கிக் கூறிவிட்டு, "நீ சொன்னபடியே தான் நடந்திருக்கிறது. இனிமேலும், நான் மற்றவர்களுக்கு உதவி செய்வதையே விரும்புகிறேன். அது அவர்களுக்குப் பயன்படும்படி எந்த முறையில் உதவி செய்யலாம்?" என்று கேட்டான் ராமு. அதற்கு அவள், "மனிதர்களுக்கு மிக முக்கியமானது உடல் நலம்! மருத்துவத் தொழில் மூலம் மற்றவர்களுக்குப் படி உதவி செய்யலாமே!" என்றாள். "மருத்துவத் தொழிலா? அதை நான் கற்றுக் கொள்ளவே பல ஆண்டுகள் பிடிக்குமே?" என்று கவலையுடன் கேட்டான் ராமு. "வேதாரண்யத்தில் வைத்தியானந்தா என்ற யோகி இருக்கிறார். அவரிடம் கற்றுக் கொண்டால் ஒரே ஆண்டில் நீங்கள் நல்ல மருத்துவர் ஆக முடியும்" என்றாள் மனோரமா. ராமு உடனே வேதாரண்யம் சென்று வைத்தியானந்தாவிடம் சீடனானான். மனோரமா கூறியதுபோல், ஒரே ஆண்டில் மருத்துவத்தை அவனுக்குக் கற்பித்த யோகி, ஆண்டு முடிவில் அவனிடம், "நீ மிகச் சிறந்த சீடனாக விளங்கினாய். எனக்குத் தெரிந்த அனைத்தையும் உனக்கு சொல்லிக் கொடுத்து விட்டேன். மந்திரங்கள் அடங்கிய ஓலைச்சுவடிகள் என்னிடம் உள்ளன. அதை இப்போது உனக்குத் தர மாட்டேன். நீ சுயநலநோக்கமே இல்லாமல், நேர்மையான மருத்துவனாகத் திகழ்கிறாய் என்பது நிரூபணம் ஆன பின்னரே, அதை உனக்குத் தருவேன். சென்று வா!" என்று கூறி அவர் அவனை ஆசீர்வதித்து அனுப்பினார். விஜயபுரி திரும்பிய ராமு தன் மனைவியிடம் நடந்ததையெல்லாம் விளக்கிக் கூறினான். அதற்கு அவள் அவனை நேர்மையாக மருத்துவத் தொழிலைச் செய்யுமாறு கூறினாள். அதன்படியே, ராமு தன் மருத்துவத் தொழிலை புனிதத் தொண்டாகக் கருதி செய்யலானான்.ஓராண்டிற்குப் பிறகு, ஒருநாள் ஒரு சன்னியாசி அவன் வீட்டிற்கு வந்தார். வீட்டின் வரவேற்பறையை அவன் மருத்துவ சாலையாகப் பயன்படுத்தி வந்தான். வாயிலிலே நின்று, சன்னியாசி உள்ளே நடப்பதை கூர்ந்து கவனித்தார். ராமு ஓர் ஏழை நோயாளியை சோதித்துக் கொண்டுஇருக்கையில், தடபுடலாக வந்துஇறங்கிய ஒரு பணக்கார ஆசாமி, "வைத்தியரே! முதலில் என்னை கவனியுங்கள். எத்தனை பணம் வேண்டுமானாலும் தருகிறேன்!" என்றார். அவரை ஒருமுறை கூர்ந்து பார்த்த ராமு, "ஐயா! இப்போது என்னை இந்த நோயாளியை சோதிக்க அனுமதியுங்கள். உங்களுடைய முறை வரும்போது உங்களைக் கூப்பிடுகிறேன்" என்றான்.தற்செயலாக வாயிலில் காத்துக் கொண்டிருந்த சன்னியாசியை நோக்கிய ராமு, "சுவாமி! நீங்கள் சிகிச்சைக்காக வரவில்லை என்று நினைக்கிறேன். தயவு செய்து என்னுடன் அமர்ந்து சாப்பிட்டு விட்டுச் செல்லுங்கள்" என்றான். அதற்கு சன்னியாசி, "அவசரம் இல்லையப்பா! நீ எல்லா நோயாளிகளையும் கவனித்து விட்டு வரும் வரை நான் காத்திருக்கிறேன்!" என்றார். அதன்படியே, ராமு எல்லா நோயாளிகளையும் கவனிக்கும் வரை பொறுமையாகக் காத்திருந்த சன்னியாசி, பிறகு அவனுடன் போஜனம் செய்ய அமர்ந்தார். உண்டு முடித்த பிறகு அவர் ராமுவை நோக்கி, "மகனே! நீ சிகிச்சை செய்யும் முறையை ஆரம்பத்திலிருந்தே கூர்ந்து கவனித்தேன். சுயநல நோக்கு சிறிதுமின்றி, நீ தொழில் புரிந்த விதம் என்னை மிகவும் கவர்ந்து விட்டது. மந்திரங்கள் அடங்கிய ஓலைச்சுவடிகளைப் பெறத் தகுதியானவன்தான் நீ! உடனே, நீ வேதாரண்யம் சென்று அவற்றைப் பெற்றுக் கொள்!" என்றார். அவர் தன் குருநாதர் வைத்தியானந்தா அனுப்பி வைத்தவர் என்று ராமு புரிந்து கொண்டான். வேதாரண்யம் செல்வதைப் பற்றித் தன் மனைவியுடன் கலந்தாலோசித்து விட்டு வந்தவன். சன்னியாசியிடம், "சுவாமி! என்னைத் தேடி தினமும் இங்கு நோயாளிகள் வந்த வண்ணம் இருக்கின்றனர். நான் இல்லாமற்போனால் அவர்கள் கஷ்டப்படுவார்கள். என்றைய தினம் நோயாளிகள் யாரும் வரவில்லையோ, அன்று வேதாரண்யம் செல்வேன்!" என்றான் ராமு. இதற்கிடையில் மன்னரின் தாயார் நோய்வாய்ப்பட, அரண்மனையிலிருந்து ஆட்கள் அவனை அழைத்துச் செல்ல வந்தனர். அவர்களிடம், "நான் விஜயபுரியை விட்டுச் சென்று அரண்மனையில் தங்கி மன்னரின் தாய்க்கு வைத்தியம் செய்தால், என்னை நம்பியுள்ள நோயாளிகள் திண்டாடிப் போவார்கள். அதனால், மன்னரின் தாயை இங்கு அனுப்பி வையுங்கள்" என்று சொல்லி அவர்களை அனுப்பி விட்டான். அதையறிந்த சன்னியாசி மீண்டும் ராமுவிடம் வந்து, "மன்னரின் தாய் என்று அறிந்தும், அவருடைய அதிகாரத்திற்குத் தலை வணங்காமல் நீ உன்னுடைய நோயாளிகளின் நிலைமையே மிகவும் முக்கியமாகக் கருதினாய். நீ தலை சிறந்த மருத்துவனாக மாறத் தகுதியானவன். ஆகவே, நீ உடனே சென்று உன் குருவை சந்தித்து ஓலைச்சுவடிகளைப் பெறுவாய்!" என்றார். அப்போது ராமு மறுத்து விட்டான். ராமுவின் மனைவி மனோரமா நாளாவட்டத்தில் கவலையுற்றாள். நோயாளிகள் ராமுவை நாடி வராத நாள்களே இல்லை. இப்படியே சென்றால், ராமு எப்போதுதான் தன் குருவிடம் சென்று ஓலைச்சுவடிகளைப் பெறுவார்? மந்திர சிகிச்சையும் தன் கணவன் கற்றுக் கொண்டால், இன்னும் பல நோயாளிகள் பலம் அடைவார்கள் எனத் தோன்றியது. ராமுவை வேதாரண்யம் செல்லுமாறு பலமுறை கூறத் தொடங்கினாள். ஆனால் ராமு மறுத்து விட்டான். மனோரமா சன்னியாசியை அழைத்து ராமுவை எவ்வாறு வேதாரண்யத்திற்கு அனுப்புவது என்று ஆலோசிக்க, அவருடைய யோசனைப்படி தான் நோய்வாய்ப் பட்டது போல் பாசாங்கு செய்தாள். ராமு தனக்குத் தெரிந்த எல்லா மருந்துகளை அளித்தும், அவள் குணமாகாதது போல் நடித்தாள். சன்னியாசி ராமுவை அழைத்து, "உன் மனைவியின் நோய் மருந்தினால் தீராது மந்திரத்தினால்தான் தீரும்! இப்போதாவது நீ உடனே உன் குருவிடம் சென்று ஓலைச்சுவடிகளைப் பெற்று வா!" என்றார். ராமுவும் உடனே வேதாரண்யம் சென்று தன் குருவிடமிருந்து ஓலைச்சுவடிகளை வாங்கி வந்தான். அவற்றைக் கற்றுத் தேர்ந்து, தன் மனைவியின் நோய்க்கு மந்திரம் ஓத, அவளும் குணமானதுபோல் நடித்தாள். அன்றுமுதல் ராமு மருந்தினால் தீராத நோய்களையும் மந்திரத்தினால் தீர்த்து வைத்து, அந்தப் பகுதியில் தலைசிறந்த வைத்தியனாகத் திகழ்ந்தான். இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம், "மன்னா! இந்த ராமுவின் சுயநலத்தை என்னவென்று சொல்வது? பலமுறை சன்னியாசி குருவிடம் சென்று ஓலைச்சுவடிகளைப் பெற்றுக் கொள்ளச் சொல்லியும் போகாதவன், தன் மனைவியின் பொருட்டு தனது கொள்கையைக் காற்றில் பறக்க விட்டு விட்டான். சுயநல நோக்கம் இன்றி நேர்மையாக மருத்துவத் தொழில் செய்தால் மட்டுமே ஒலைச் சுவடிகளைத் தருவேன் என்று சொல்லிய அவன் குரு அவனுக்கு அவற்றை எப்படித் தந்தார்? என் சந்தேகத்திற்கு விளக்கம் தெரிந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்" என்றது. அதற்கு விக்கிரமன், "ராமுவை சுயநலக்காரன் என்று சொல்வது முற்றிலும் தவறு. தன் நோயாளிகளை பரிதவிக்க விட்டுவிட்டு குருவிடம் செல்ல மறுத்தது அவன் தன் நோயாளிகளின் மீது கொண்டிருந்த அக்கறையைக் காட்டுகிறது. ஆனால் மனைவிக்கே தீராத நோய் எனும் போது எந்தக் கணவனால் சும்மா இருக்க முடியும்? அவளைக் குணப்படுத்த அவன் தன் கொள்கையிலிருந்து விலகி குருவிடம் சென்றது ஒரு போதும் தவறு ஆகாது. ராமுவின் நேர்மையை நன்கு அறிந்து வைத்து இருந்த குருவும் அதனால்தான் சிறிதுகூட தயக்கமின்றி ஓலைச் சுவடிகளை அவனுக்கு அளித்தார்" என்றான். விக்கிரமனுடைய சரியான பதிலினால் அவனது மௌனம் கலையவே, வேதாளம் தான் சுமந்து வந்த உடலோடு பறந்து சென்று மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது. |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: சூடு பட்ட புரோகிதர்கள் மன்னர் கிருஷ்ணதேவராயருக்கு அவருடைய தாயார் மேல் அன்பும் மரியாதையும் உண்டு. தாய் மேல் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். அவரது தாயாருக்கு வயோதிகம் ஆகிவிட்டபடியால் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார். வைத்தியரை அழைத்து தன் தாயின் உடல் நிலையைப் பரிசோதிக்கச் செய்தார். பரிசோதனை செய்த வைத்தியரும் “தங்கள் தாயார் அதிக நாள் தாங்க மாட்டார்கள். விரைவில் சிவலோகப் பதவி அடைந்து விடுவார்கள்” என்று கூறினார். அது கேட்ட மன்னர் வேதனையுற்றார்.தன் தாயாரிடம் சென்று “அம்மா, உங்களுக்கு சாபிட எது மிகவும் ஆசையாக இருக்கிறது” என்று கேட்டார்.அதற்கு அவரது தாயாரும் “மாம்பழம் தான் வேண்டும்” என்றார். அப்போது மாம்பழம் கிடைக்கக் கூடிய காலமல்ல இருப்பினும் தன் ஆட்களை அனுப்பி எங்கிருந்தாவது மாம்பழம் வாங்கி வர ஏற்பாடு செய்தார். ஆட்கள் மாம்பழம் வாங்கி வர புறப்பட்டனர். மாம்பழம் வந்து சேர்வதற்குள் அவரது தாயார் மரணம் அடைந்து விட்டார்.மாம்பழம் சாப்பிடாமலேயே தன் தாயார் மரணம் அடைந்தது குறித்து மன்னர் மிக வேதனை அடைந்தார். அதற்குப் பரிகாரம் காண எண்ணி அரண்மனைப் புரோகிதர்களை அழைத்து ஆலோசனை கேட்டார்.பேராசைபிடித்த புரோகிதர்களும் “மாம்பழம் சாப்பிடாமல் இறந்ததால் அவரது ஆன்மா சாந்தியடைய தங்கத்தால் 108 மாங்கனைகளைச் செய்து 108 புரோகிதர்களுக்குக் கொடுத்தால் சரியாகிவிடும்” என்றனர்.மன்னரும் அதற்குச் சம்மதித்தார். 108 மாம்பழங்கள் தங்கத்தால் செய்ய ஏற்பாடு செய்தார். சில நாட்களில் தங்க மாம்பழம் தயார் ஆனது. அவற்றை 108 புரோகிதர்களுக்கு மன்னர் கொடுத்தார். புரோகிதர்களும் மிக மகிழ்சியுடன் அவற்றைப் பெற்றுக் கொண்டனர்.இச்செய்தியை தெனாலிராமன் அறிந்து வேதனையுற்றான். புரோகிதர்களுக்குத் தக்க பாடம் கற்பிக்க எண்ணினான். அதன்படியும் செயலாற்றத் துணிந்தான்.புரோகிதர்களைச் சந்தித்தான். “என் அம்மாவிற்குத் திதி வருகிறது. அதற்குத் தாங்கள் அனைவரும் வந்து புரோகிதம் பண்ணுங்கள். என்னால் முடிந்தளவு தருகிறேன்” என்றான்.புரோகிதர்களும் மகிழ்ந்து தெனாலிராமன் வீட்டிற்கு வந்தனர். அவனும் புரோகிதர்களை வரவேற்று உட்காரச் செய்தான். பின் கதவுகளை நன்கு தாழிட்டுப் பூட்டிக் கொண்டான். ஏற்கனவே நன்கு பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியால் ஆளுக்கு ஒரு சூடு போட்டான்.புரோகிதர்கள் அய்யோ அம்மாவென்று கதறினார்கள். பின் மன்னரிடம் சென்று முறையிட்டனர்.இதைப் பார்த்த மன்னர் தெனாலிராமன் மீது அளவிலடங்காக் கோபங்கொண்டார்.பின் தன் பணியாட்களை அனுப்பி தெனாலிராமனை இழுத்து வரச் செய்தார். தெனாலிராமனைப் பார்த்ததும் “ஏனடா புரோகிதர்களுக்கு இவ்வாறு சூடு போட்டாய்” என்று கேட்டார்.“மன்னாதி மன்னா….. என்னை மன்னிக்க வேண்டும் நான் சொல்லுவதை தாங்கள் கவனமாகக் கேட்க வேண்டுகிறேன். என் தாயார் உடல் நலமில்லாதிருந்து இறக்கும் தருவாயில் வலிப்பு நோய் வந்து விட்டது. அதற்கு வைத்தியர்கள் என் தாயாருக்குச் சூடு போடும்படி சொன்னார்கள். நான் சூடு போடும் முன் என் தாயார் இறந்து விட்டார்கள். ஆகையால் என் தாயாரின் ஆன்மா சாந்தியடைய புரோகிதர்களுக்கு சூடு போடும்படி பெரியவர்கள் சொன்னார்கள். அவர்கள் சொன்னபடியே தான் புரோகிதர்களுக்குச் சூடு போட்டேன். இதில் என்ன தப்பு” என்று மன்னரிடம் கேட்டான் தெனாலிராமன்.இதைக்கேட்ட மன்னர் கோபம் கொண்டு “என்னடா தெனாலிராமா, இது முட்டாள் தனமாக இருக்கிறதே” என்றார்.இல்லை அரசே, விளக்கமாகக் கூறுகிறேன் சற்றுக் கேளுங்கள்” என்றான்.முன்பு தங்கள் தாயார் மாம்பழம் சாப்பிடாமல் இறந்ததால் அவர்கள் ஆன்மா சாந்தியடைய 108 பொன்மாங்கனிகள் 108 புரோகிதர்களுக்குக் கொடுத்தால் தான் அவர்கள் ஆன்மா சாந்தியடையும் என்று சொன்னார்களே…… அதன்படியும் தாங்கள் கொடுத்தீர்களே………………….”அதுபோலவே என் தாயாரின் வலிப்பு நோய்க்கு சூடு போட முடியாமல் போனதால் தான் இவர்களுக்குச் சூடு போட்டேன் என்றான். இதைக் கேட்ட மன்னர் நகைத்து விட்டார். தெனாலிராமனைப் பாராட்டினார். புரோகிதர்களின் பேராசையையும் புரிந்து கொண்டார்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'சூடு பட்ட புரோகிதர்கள்' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: ஜென் ஞானி ஒருவரின் மனைவி இறந்து விட்டார்.துக்கம் விசாரிக்க ஊரே திரண்டு வந்திருந்தது.எல்லோர் முகத்திலும் வருத்தம்,கண்ணீர். ஆனால் ஞானியோ கைகளால் தாளம் போட்டபடி பாடிக் கொண்டிருந்தார்,சர்வசாதாரணமாக!வந்தவர்களுக்கு அதிர்ச்சி.ஒருவன் துணிந்து கேட்டான்,”குருவே,நீங்களே இப்படி செய்யலாமா?என்ன இருந்தாலும் இவ்வளவு காலம் உங்களுடன் வாழ்ந்த உங்கள் மனைவி இறந்திருக்கும்போது,நீங்கள் கவலையின்றி பாடிக் கொண்டிருக்கிறீர்களே?”ஞானி சொன்னார்,”பிறப்பில் சிரிக்கவோ.இறப்பில் அழுவதற்கோ என்ன இருக்கிறது?பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை. என் மனைவிக்கு முன்பு உடலோ,உயிரோ இல்லை.பிறகு உயிரும் உடலும் வந்தன. இப்போது இரண்டும் போய்விட்டன.இடையில் வந்தவை இடையில் போயின. இதில் வருத்தப்படுவதற்கு என்ன இருக்கிறது?”
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'மரணம்' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: நான் ஒரு சிறு கதை கூறுகிறேன். இது சீனாவில் லாவோட்சு வாழ்ந்த காலங்களில் நிகழ்ந்தது. இந்த கதையை லாவேட்சு மிகவும் விரும்பினார். லாவேட்சுவை பின்பற்றியவர்கள் பல தலைமுறையாக இந்த கதையை திரும்ப திரும்ப கூறி வந்தனர். இந்த கதையில் மேலும் மேலும் அதிக அர்த்தத்தை அவர்கள் உணர்ந்தனர். இந்த கதை தொடர்ந்து வந்தது. இது ஒரு வாழும் உண்மையென மாறி விட்டது. கதை மிகவும் எளிமையானது. ஒரு கிராமத்தில் வயதான ஏழை ஒருவன் இருந்தான். ஆனால் அரசர்களே பொறாமை கொள்ளுமளவு அழகான வெண் குதிரை ஒன்று அவனிடம் இருந்தது. யாரும் அப்படிப்பட்ட அழகான, வலிமை பொருந்திய, அம்சமான. கம்பீரமான குதிரையை அதற்குமுன் பார்த்திருக்க முடியாது. அரசன் அந்த குதிரையை என்ன விலை கொடுத்தாவது வாங்க தயாராக இருந்தான். ஆனால் அந்த மனிதன், “இந்த குதிரை என்னை பொருத்தவரை வெறும் குதிரையல்ல, என் குடும்பத்தில் ஒருவன். நான் எப்படி மனிதர்களை விற்கமுடியும்? அவன் ஒரு நண்பன். அவன் ஒரு உடமையல்ல, உன்னால் நண்பனை விற்க முடியுமா? அது சாத்தியமில்லை.” என்று கூறி விட்டான். அவன் மிகவும் ஏழை, எல்லா வழியிலும் சபலம் வர வாய்ப்பிருந்தது. ஆனால் அவன் அந்த குதிரையை விற்கவில்லை. ஒருநாள் காலை லாயத்தில் குதிரை இல்லை என்பதை அவன் கண்டான். முழு கிராமமும் ஒன்று திரண்டு, “நீ ஒரு முட்டாள் கிழவன். இப்படி நடக்குமென்று – என்றாவது ஒருநாள் யாராவது குதிரையை திருடி விடுவார்கள் என – எங்களுக்கு முன்பே தெரியும். நீயோ மிகவும் ஏழை – இப்படிப் பட்ட அரிதான ஒன்றை உன்னால் எப்படி பாதுகாக்க முடியும்? இதற்கு பதிலாக அதை நீ முன்பே விற்றிருக்கலாம். நீ என்ன விலை கேட்கிறாயோ அந்த விலைக்கு விற்றிருக்கலாம். நினைத்து பார்க்க முடியாத விலை கிடைத்திருக்கும். இப்போது குதிரை போய்விட்டது. உனக்கு இது ஒரு கெட்டநேரம், இது ஒரு சாபம்” என்றனர். அந்த கிழவன், “அதிகம் பேச வேண்டாம் – குதிரை லாயத்தில் இல்லை என்று மட்டும் கூறுங்கள். இதுதான் உண்மை மற்ற அனைத்தும் அனுமானங்களே. இது அதிர்ஷ்டமா இல்லையா என்பது யாருக்கு தெரியும்? எப்படி உங்களால் முடிவு செய்ய முடியும்?” என்றான். மக்கள், “எங்களை முட்டாளாக்காதே. நாங்கள் சிறந்த தத்துவவாதிகளல்ல, ஆனால் இதற்குத் தத்துவம் எதுவும் தேவையில்லை. அரிதான ஒன்று காணாமல் போய்விட்டது. அது கெட்டநேரம் என்பது மிக சாதாரண உண்மை.” என்றனர். அந்த கிழவன், “லாயம் காலியாக உள்ளது, குதிரை போய்விட்டது என்பது உண்மை என நானும் ஒத்துக்கொள்கிறேன். மற்றபடி எதுவும் எனக்குத் தெரியாது – அது கெட்டநேரமா நல்லநேரமா – ஏனெனில் இது நிகழ்வின் ஒரு பகுதியே. இதை தொடர்ந்து என்ன நடக்குமென்பது யாருக்கு தெரியும்?” என்றான். மக்கள் சிரித்தனர். கிழவனுக்கு புத்தி பிசகிவிட்டதென அவர்கள் நினைத்தனர். அவன் எப்போதும் கொஞ்சம் கிறுக்கனாகவே இருப்பான். அது எல்லோருக்கும் தெரியும். இல்லாவிடில் இந்த குதிரையை நல்ல விலைக்கு விற்று பணக்காரனாகி இருக்கலாம். ஆனால் அவன் விறகுவெட்டியாகவே வாழ்ந்துவந்தான். அவனுக்கும் மிக வயதாகிவிட்டது. இருப்பினும் காட்டுக்கு சென்று மரங்களை வெட்டி கொண்டுவந்து விற்றுக் கொண்டிருந்தான். அவன் சம்பாதிப்பது கைக்கும் வாய்க்குமே போதவில்லை. அவன் வறுமையிலும் வேதனையிலும் வாடிக் கொண்டிருந்தான். இப்போது அவன் ஒரு கிறுக்கன் என்பது மிகவும் ஊர்ஜிதமாகிவிட்டது. பதினைந்து நாட்களுக்கு பிறகு, திடீரென ஒரு இரவில் அந்த குதிரை திரும்பி வந்துவிட்டது. இது திருடப்பட வில்லை. அது காட்டுக்கு தப்பி ஓடிவிட்டது. இப்போது தான் மட்டுமின்றி அது தன்னுடன் கூட தன் இனத்தைச் சேர்ந்த ஒரு டஜன் குதிரைகளையும் கூட்டிக் கொண்டு திரும்பி வந்துள்ளது. திரும்பவும் கிராமத்து மக்கள் திரண்டு வந்து,“அந்த கிழவனிடம், பெரியவரே, நீங்கள் சொன்னது சரிதான், நாங்கள் கூறியது தவறாகிவிட்டது. அது கெட்டநேரமல்ல. அது நல்லநேரம்தான் என்பது நிருபணமாகிவிட்டது. நாங்கள் வலியுறுத்தி கூறியதற்காக மன்னித்துக் கொள்ளுங்கள்.” என்றனர். அந்த கிழவன், “மறுபடியும் நீங்கள் அதிகமாக யோசிக்கிறீர்கள். அந்த குதிரை திரும்ப வந்துவிட்டது என்றும் அதனுடன் இன்னும் பனிரெண்டு குதிரைகள் வந்துள்ளன என்று மட்டும் கூறுங்கள்.- ஆனால் தீர்மானிக்காதீர்கள். இது ஆசீர்வாதமா இல்லையா என்பது யாருக்கும் தெரியாது. இது ஒரு நிகழ்வின் ஒரு பகுதியே. முழு கதையும் தெரியாமல் எப்படி உங்களால் முடிவு செய்ய முடிகிறது? ஒரே ஒரு பக்கத்தை படித்துவிட்டு முழு புத்தகத்தையும் எப்படி விமர்சனம் செய்ய முடியும்? ஒரு பக்கத்தில் ஒரே ஒரு வரியை படித்துவிட்டு எப்படி அந்த பக்கத்தை பற்றி பேச முடியும்? ஒரே ஒரு எழுத்தை மட்டும் பார்த்துவிட்டு எப்படி அந்த வரியை பற்றி கூற முடியும்? நமது கையில் அந்த எழுத்து அளவு கூட இல்லை, வாழ்வு மிகப் பெரியது – எழுத்தின் பகுதிதான் இருக்கிறது. நீங்கள் முழு வாழ்வையும் பற்றி முடிவெடுக்கிறீர்கள். இது ஒரு ஆசீர்வாதம் எனக் கூற வேண்டாம், யாருக்கும் தெரியாது. முடிவெடுக்காமல் இருப்பதே எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அதனால் என்னை தொந்தரவு செய்யாதீர்கள்.” என்றார். இந்த முறை மக்கள் எதுவும் கூறவில்லை. அந்த பெரியவர் சொல்வது சரியாக இருக்கலாம். அதனால் அவர்கள் மெளனமாக இருந்துவிட்டனர், ஆனால் உள்ளே இவன் கூறுவது தவறு என நினைத்துக் கொண்டனர். பனிரெண்டு குதிரைகள் அந்த குதிரையுடன் வந்திருக்கின்றன. சிறிதளவு பயிற்சி கொடுத்தால் போதும் அவைகளை விற்று ஏகப்பட்ட பணம் சம்பாதிக்கலாம் என நினைத்தனர். அந்த பெரியவருக்கு ஒரே ஒரு மகன் இருந்தான். அவன் இளஞன். இவன் அந்த குதிரைகளுக்கு பயிற்சி கொடுக்க ஆரம்பித்தான். ஒரு வாரத்திற்க்குள் ஒரு குதிரை மேலிருந்து விழுந்து அவனது கால் எலும்பு முறிந்துவிட்டது. மக்கள் திரும்பவும் கூடி – மக்கள் எப்போதும் எங்கும் ஒரே மாதிரிதான், உங்களைப் போலவே தான் – தீர்மானித்தனர். அவர்களின் முடிவு மிக எளிதாக வந்துவிடக் கூடியது. அவர்கள், “நீங்கள் கூறியது சரிதான். மறுபடியும் நீங்கள் சொல்வதுதான் சரி என நிருபணமாகியிருக்கிறது. இது ஒரு வரப்பிரசாதமல்ல, இது ஒரு கெட்டகாலம்தான். உனது ஒரே மகன் தனது கால்களை இழந்துவிட்டான். உன்னுடைய வயதான காலத்தில் அவன்தான் உனக்கு ஒரே ஆதரவு. இப்போது நீ மிகவும் கஷ்டப் படப் போகிறாய்.” என்றனர். அந்த வயதானவன், “நீங்கள் முடிவெடுப்பதற்க்கு மிகவும் ஆவலாக உள்ளீர்கள். வெகுதூரம் நினைப்பை ஓடவிட வேண்டாம். எனது மகன் தனது கால்களை ஒடித்துக் கொண்டான். என மட்டும் கூறுங்கள். இது ஒரு சாபமா வரமா என யாருக்குத் தெரியும்?– யாருக்கும் தெரியாது. மறுபடியும் இது நிகழ்வின் ஒரு பகுதியே, முழுமையாக கொடுக்கப்படவில்லை. வாழ்க்கை பகுதிகளாகத்தான் நிகழ்கிறது, முடிவு முழுமையை ஒட்டித்தான் எடுக்க முடியும்.” என்றான். இது நிகழ்ந்து சில வாரங்களுக்குப் பின் இந்த நாடு பக்கத்து நாட்டுடன் சண்டையிட சென்றது. நகரத்தின் அனைத்து வாலிபர்களும் படைக்கு வலுக்கட்டையமாக அழைத்து செல்லப்பட்டனர். அந்த பெரியவரின் மகன் மட்டும் விட்டுவைக்கப் பட்டான். ஏனெனில் அவன் முடமானவன். மக்கள் எல்லோரும் அழுது அரற்றினர். ஏனெனில் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் இளைஞர்கள் வலுக்கட்டாயமாக கூட்டிச் செல்லப் பட்டனர். அவர்கள் திரும்பி வருவதற்க்கான சாத்தியக் கூறே இல்லை, ஏனெனில் அவர்கள் சண்டையிடப் போகும் நாடு மிகப் பெரியது. இந்த சண்டை தோல்வியுறப் போகும் சண்டைதான். அவர்கள் திரும்பி வரப் போவது இல்லை. அந்த நகரம் முழுவதும் அழுது கொண்டும், அரற்றிக் கொண்டும் விம்மிக் கொண்டும் இருந்தது. அவர்கள் அந்த வயதானவனிடம் வந்து, “நீங்கள் சொன்னது சரியே பெரியவரே! கடவுளுக்குத்தான் தெரியும்! நீங்கள் கூறியது மிகவும் சரிதான் – இது வரம்தான் என்பது நிருபணமாகிவிட்டது. உனது மகன் முடமாகி இருக்கலாம், ஆயினும் அவன் உன்னுடன் இருப்பான். எங்களது மகன்கள் ஒரேயடியாக போகப் போகிறார்கள். குறைந்தபட்சம் இவன் உயிருடன் உன்னோடு இருப்பான், மெது மெதுவாக நடக்கக் கூட ஆரம்பிக்கலாம், சிறிதளவு நொண்டி நடப்பானாக இருக்கலாம், ஆனாலும் அவன் சரியாகி விடுவான்.” என்றனர். அந்த வயதானவன், “உங்களுடன் பேசவே முடியாது. நீங்கள் மேன்மேலும் கற்பனை செய்துகொண்டே போகிறீர்கள். – முடிவெடுத்துக் கொண்டே இருக்கிறீர்கள். யாருக்கும் தெரியாது உங்களது மகன்கள் வலுக்கட்டாயமாக படைக்கு போர்முனைக்கு இழுத்துச் செல்லப் படுகிறார்கள்., என்னுடைய மகன் இழுத்துச் செல்ல பட வில்லை என்பதை மட்டும் கூறுங்கள். இது வரமா சாபமா என்பது யாருக்கும் தெரியாது. யாராலும் தெரிந்து கொள்ளவும் முடியாது. கடவுளே அறிவார்.” என்றார். நாம் கடவுளே அறிவார் எனக் கூறுவதன் அர்த்தம் முழுமைக்கு மட்டுமே தெரியும் என்பதுதான். முடிவெடுக்காதே, முடிவெடுத்தால், தீர்மானித்தால், ஒருபோதும் உன்னால் முழுமையுடன் ஒருங்கிணைய முடியாது. நிகழ்வின் பகுதிகளால் கவரப்பட்டு விடுவீர்கள். சிறிய விஷயங்களின் மூலம் முடிவெடுக்கவும் தீர்மானிக்கவும் ஆரம்பித்து விடுவீர்கள்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'மனிதனின் முடிவுகள்' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: முல்லா வசித்துவந்த ஊரில் ஒரு நாத்திகன் வசித்து வந்தான். கொஞ்சமும் தெய்வ நம்பிக்கை இல்லாதவன். தெய்வ நம்பிக்கை உடைய முல்லா போன்றவர்களை
எப்பொழுது பார்த்தாலும் கேலியும் கிண்டலும் செய்து பரிகசித்துக்கொண்டிருப்பான். ஓரு நாள் சந்தைக் திடலில் அந்த நாத்திகன் நின்று கொண்டிருந்தான். அந்தப் பக்கமாக முல்லா நடந்து வந்து கொண்டிருந்தார். அங்கே திரளாகக் கூடியிருந்த
மக்களுக்கு மத்தியிலே முல்லாவை அவமானப்படுத்த வேண்டும் என்று எண்ணினான். முல்லா அருகே வந்ததும், " முல்லா அவர்களே உலகத்திலேயே நீங்கள்தான் முற்றம் துறந்த
துறவி என்று மக்கள் பேசிக்கொள்கிறார்களே? அப்படி எதை நீர் துறந்து ஞானியானீர் "
என்று நாத்திகன் கேலியாகக் கேட்டான். " எந்த முட்டாள் அந்த மாதிரி சொன்னான் என்னைவிட மிகவும் மகத்துவம் வாய்ந்த துறவி
ஒருவர் இருக்கிறாரே!" என்றார் முல்லா. நாத்திகனுக்கு மட்டுமல்ல அங்கு நடமாடிக் கொண்டிருந்த மக்களகட்க்கும் முல்லா சொன்ன
தகவல் ஆச்சரியத்தை விளைவித்தது. முல்லாவையும்விட மேலான துறவி இந்த ஊரில் யார் இருக்க முடியும் என்று அவர்களுக்கு
விளங்கவில்லை. நாத்திகனும் அந்தத் தகவலைக் கேட்டு வியப்படைந்து " முல்லா இந்த ஊரில் உள்ள அந்த
மகத்துவம் வாய்ந்த துறவி யார்?" என்ற கேட்டான். " அந்தத் துறவி நீர் தான் " என்று முல்லா கூறியதைக் கேட்ட நாத்திகன்
அதிர்ச்சியடைந்து
விட்டான். " நானா அந்தத் துறவி அது எப்படி?" என்று கேட்டான். " என்னைப் போன்ற சாதாரணத் துறவிகள் கேவலம் உலகத்தில் இருக்கும் பொருட்களைத் தான்
துறப்பது வழக்கம் நீரோ கடவுளையே துறந்து விட்ட துறவியாயிற்றே உம்மை மிஞ்சக் கூடிய
துறவி உலகத்தில் ஏது?" என்று முல்லா பதிலளித்தார்.
அங்கே சூழ்ந்திருந்த மக்கள் நாத்திகனைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்க ஆரம்பித்தனர்.
நாத்திகன் தலைகுனிந்தவாறு அந்த இடத்தை விட்டு வேகமாக அகன்று விட்டான்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'நாத்திகன் பட்ட அவஸ்த்தை' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: தெனாலிராமன், மனைவி, மன்னன், அரண்மனை, வீடு, கத்தரிக்காய், குழம்பு, கூட்டு, சாதம்
தலைப்பு: தெனாலிராமனும் கத்தரிக்காயும்
| ஒரு முறை தெனாலிராமனுக்கு கத்தரிக்காய் சாப்பிட வேண்டும் என்று அதீத விருப்பம் ஏற்ப்பட்டது. அரண்மனைத் தோட்டத்தில் பிஞ்சு கத்திரிக்காய் அதிகமாக விளைந்திருப்பதைக் கேள்விப்பட்டார். ஆனால் அது அரசாங்கத்திற்குச் சொந்தமானது. நாம் உபயோகிக்கக் கூடாது என்ன செய்வது. என்னவென்றாலும் இன்று கத்தரிக்காய் சாப்பிட்டே தீருவது என்று தீர்மானித்த தெனாலிராமன் ஒரு ஆலோசனை செய்தார். காவலாளிக்கு தெரியாமல் கத்தரிக்காய் அனைத்தையும் சத்தமில்லாமல் பறித்துக் கொண்டார். வீட்டுக்கு சென்று மனைவியிடம் "இன்றைக்கு விதவிதமாய் கத்தரிக்காய் பதார்த்தம் செய்" என்றார். தெனாலிராமன் கொண்டுவந்த கத்தரிக்காய் அரண்மனை தோட்டத்திலிருந்து பறித்து வந்தது என்று தெரிந்ததும் தெனாலிராமனது மனைவி மிகவும் கலக்கமடைந்தார். தெனாலிராமன் "நீ பயப்படாதே! எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன். நீ சமைத்து வை" என்றார். அவரது மனைவியும் மறுபேச்சு பேசாமல் கத்தரிக்காய் குழம்பு, கத்தரிக்காய் கூட்டு என்று வித விதமாக செய்து வைத்தார். இருவரும் சாப்பிடத்தயாரானார்கள். தெனாலிராமன் தனது மகனை எங்கே என்று கேட்டார். அவன் வெளித்தின்னையில் படுத்து உறங்கிக் கொண்டிருப்பதை மனைவி தெரிவித்தார். உடனே தெனாலிராமனுக்கு ஒரு யோசனை தோன்றியது. அவர் ஒரு குடம் நிறைய தண்ணீரைக் கொண்டுவந்து தின்னையில் படுத்திருந்த தனது மகன் மீது ஊற்றினார். பதறியடித்து எழுந்த மகனைப் பார்த்து "வெளியே மழை பெய்கிறது, உள்ளே போய் படுத்துக் கொள்" என்று கூறினார். அரைத்தூக்கத்தில் இருந்த மகனும் அவர் சொன்னதைக் கேட்டவுடன் வேக வேகமாக வீட்டுக்குள் சென்றான். படுத்துறங்கப் போன்றவனை தெனாலிராமன் எழுப்பி "கத்தரிக்காய் சாப்பாடு ருசியாய் இருக்கிறது, சாப்பிட்டு விட்டு தூங்கு" என்று கூறினார். அவனும் தூக்கக்கலக்கத்துடனேயே நன்றாகச் சாப்பிட்டான். பிறகு எல்லோரும் படுத்து நிம்மதியாய் தூங்கினார்கள். மறுநாள், தெனாலிராமன் அரண்மனைத் தோட்டத்தில் கத்தரிக்காய் பறித்த விஷயம் எப்படியோ மன்னருக்குத் தெரிந்து போனது. மன்னர் தெனாலிராமனை அழைத்து வரச் சொன்னார். நடக்கப் போவதை யூகித்துக் கொண்ட தெனாலிராமனும் மன்னர் முன் சென்று நின்றார். மன்னர் தெனாலியைப் பார்த்து கேட்டார்" தெனாலிராமா! அரண்மனைத் தோட்டத்தில் கத்தரிக்காய் எல்லாம் காணாமல் போனது உனக்குத் தெரியுமா ? என்றார். தெனாலிராமனோ எதுவும் அறியாதது போல "என்ன? அரண்மனைத் தோட்டத்துக் கத்தரிக்காய் காணாமல் போனதா?" என்றார். மன்னரோ விடுவதாய் இல்லை. "ஒன்றும் அறியாதது போல் கேட்கிறாய் ராமா! நீ தான் கத்தரிக்காய் அனைத்தயும் பறித்ததாக நான் கேள்விப்பட்டேன். உண்மையை ஒத்துக் கொள்" என்றார். தெனாலி ராமனோ "இல்லவே இல்லை" என்று சாதித்தார். மன்னர் உடனே தெனாலிராமா "நீ உனது மகனை அழித்துவா. குழந்தைகள் பொய் சொல்லாது. நேற்று நீங்கள் என்ன சாப்பிட்டீர்கள் என்பதை நான் உன் மகனை விசாரித்து தெரிந்து கொள்கிறேன். " என்றார். தெனாலிராமனது மகனை காவலாளிகள் அழைத்து வந்தார்கள். மன்னன் சிறுவனிடம் அன்பாக விசாரித்தார். "தம்பி நேற்று உஙகள் வீட்டில் என்ன சாப்பிட்டீர்கள்?" உடனே சிறுவன் சொன்னான் "கத்தரிக்காய் குழம்பு, கத்தரிக்காய் கூட்டு மற்றும் சாதம் எல்லாம் சாப்பிட்டோம். மிகவும் ருசியாக இருந்தது." உடனே மன்னன் தெனாலிராமனைப் பார்த்தார். இப்போது மாட்டிக் கொண்டாயா தெனாலிராமா. இபோதாவது உண்மையை ஒத்துக் கொள்" என்றார். தெனாலிராமனோ விடாப்பிடியாக மறுத்தார். "மன்னா, இவன் இரவில் கனவு கண்டு அதை உளறுகிறான். நன்றாக விசாரியுங்கள். நீங்கள் நம்பும்படியாக அவன் கூறினால் நான் உண்மை என ஒத்துக் கொள்கிறேன்". என்றார். மன்னன் சிறுவனைப் பார்த்து மீண்டும் கேட்டார். "குழந்தாய் நேற்று உங்கள் வீட்டில் என்ன நடந்தது என்று விளக்கமாகச் சொல்" சிறுவனோ நேற்று இரவு ஜோ வென்று மழை பெய்ததா! அப்பா என்னை வீட்டுக்குள் கூட்டிக் கொண்டு போனாரா...! அப்போ கத்தரிக்காய் வைத்து சாப்பிடச் சொன்னார்களா...! சாப்பிட்டிவிட்டு பிறகு நான் உறங்கி விட்டேன்" என்றான். தெனாலிராமனோ நேற்று மழை பெய்ததா மன்னா! நீங்களே சொல்லுங்கள் என்று மன்னரை கேள்வி கேட்டார். மன்னர் குழம்பிப் போனார். அவையில் இருந்தவர்களை விசாரித்தார். நேற்று நகரத்தின் எந்தப்பகுதியிலும் மழை பெய்யவில்லை என்று எல்லோரும் சொன்னார்கள். மன்னரும் சரி தெனாலிராமன் சொன்னதைப்போல குழந்தை கனவில் கண்டதைத்தான் சொல்கிறான் என்று சொல்லி தெனாலிராமனையும் விடுவித்தார். மனதிற்குள் மகிழ்ந்து கொண்டே தெனாலிராமனும் இடத்தை காலிசெய்தார். பிறுதொருநாள் மன்னரிடம் தாம்தான் கத்தரிக்காயை திருடியதாக ஒத்துக் கொண்டு நடந்தவைகளை சொல்ல மன்னர் ஆச்சரியமாத்துடன் சிரித்து மகிழ்ந்தார். பிறகு தெனாலிராமனின் சாதுர்யத்தை மெச்சி பல பரிசுகளை அளித்து மகிழ்ந்தார். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: விக்கிரமன், வேதாளம், கண்ணன், கலாதரன் என்ற சிற்பி, இளமங்கை நீலாஞ்சனா, இளைஞன் பிரபாகரன், பூலோக நீலாஞ்சனா, அவந்தி ராஜ்ஜிய மன்னர், சேனாதிபதி
தலைப்பு: பூலோகத்தில் கந்தர்வப் பெண்
| தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிக் கொண்டு இருந்த உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் அந்த உடலைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லும் போது, அதனுள்ளிருந்த வேதாளம் விக்கிரமனைப் பார்த்து, "மன்னா! உன்னைப் போல் விடாமல் முயற்சி செய்யும் சிலர் கடைசி நிமிடத்தில் தங்கள் கொள்கையைக் கைவிட்டு, அதுநாள் வரை செய்த முயற்சியை வீணாக்குகின்றனர். அத்தகைய ஒரு பெண்ணின் கதையை நான் உனக்கு இப்போது கூறப் போகிறேன். கவனமாகக் கதையைக் கேள்!" என்று கதை சொல்லலாயிற்று. வைசாலி ராஜ்யத்தில் திரிசங்கம் எனும் ஊரில் கலாதரன் என்ற ஒரு தெய்வீக சிற்பி வசித்து வந்தான். அவன் கல்லில் வடிக்கும் சிற்பங்கள் உயிருள்ளவைபோல் தத்ரூபமாக இருக்கும். ஒருநாள் இரவில் பௌர்ணமி நிலவொளியில் மொட்டை மாடியில் அவன் உறங்கிக் கொண்டிருந்தான். அப்போது அவனுடைய கனவில் மிக அழகான ஓர் இளமங்கை தோன்றி "சிற்பியே! என்னுடைய உருவச்சிலையை நீ கல்லில் செதுக்க வேண்டுமென நான் மிகவும் விரும்புகிறேன். என் ஆசையை நீ நிறைவேற்றுவாயா?" என்று கேட்டாள். அதிரூப சுந்தரியான அந்தப் பெண்ணின் அழகில் தன் மனத்தைப் பறிகொடுத்த கலாதரன், "கண்டிப்பாக வடிக்கிறேன். அடுத்த பௌர்ணமி இதே நேரம் உன் சிலையை நீ காண்பாய்!" என்று உணர்ச்சி வசப்பட்டுக் கூறினான். அக்கணமே அவன் கனவும், தூக்கமும் கலைந்தன. கனவுதான் கலைந்ததே தவிர அந்த ரூபவதியின் அழகு அவன் மனத்திரையில் நன்றாகப் பதிந்து விட்டது. உடனே, தன் ஊரின் எல்லையில், மலைகள் சூழ்ந்த பகுதியில், ஒரு நீர் வீழ்ச்சியருகே அமர்ந்து ஒரு பாறையில் இரவும், பகலுமாகப் பாடுபட்டு அடுத்த பௌர்ணமிக்குள் அவளுடைய உருவச்சிலையை செய்து முடித்தான். கலாதரனின் கனவில் தோன்றிய அந்த அழகி ஒரு கந்தர்வ லோகத்துப் பெண். அவள் பெயர் நீலாஞ்சனா! ஒவ்வொரு பௌர்ணமி இரவிலும் அவள் தன் தோழிகளுடன் பூலோகத்தில் சஞ்சாரம் செய்வதுண்டு. அத்தகைய ஓர் இரவில்தான் உறங்கிக் கொண்டிருந்த கலாதரனின் கனவில் தோன்றித் தன்னை சிலை வடிக்குமாறு வேண்டினாள். பிறகு அடுத்த பௌர்ணமி இரவில் வழக்கப்படி அவள் தன் தோழிகளுடன் பூலோக சஞ்சாரத்திற்குப் புறப்பட்டாள். நேராகத் தன் தோழிகளுடன் வைசாலி ராஜ்யத்துத் திரிசங்கத்தை அடைந்து, கலாதரன் வடித்திருந்த சிற்பத்தைக் காட்டி நடந்தவற்றைக் கூறினாள். சிலையைக் கண்டு வியந்த நீலாஞ்சனாவின் தோழிகளில் ஒருத்தி, "இதற்கு உயிர் இருந்தால் இன்னொரு நீலாஞ்சனா பூலோகத்தில் தோன்றி விடுவாள்," என்றாள். மற்றொருத்தி, "நீலா… நீ இதற்கு உயிர் கொடுத்து விடு!" என்றாள். மற்றொருத்தி, "உன்னுடைய அறிவையும், மனத்தையும் இதற்கு அளித்து விடு!" என்றாள். அதற்கு நீலாஞ்சனா, "சிலைக்கு என் உயிரைத் தந்து விட்டால் நான் என்ன ஆவது?" என்றாள். "இல்லை. கந்தர்வர்களாகிய நமக்கு அபூர்வ சக்திகள் உண்டு. நீ சிறிது காலம் உன் உயிரையும், மனத்தையும், புத்தியையும் சிலைக்கு அளிப்பாய். அதே சமயம் உன் உயிர், மனம், புத்தி ஆகியவை உன்னிடமும் இருக்கும். கந்தர்வலோகத்திலும் பூலோகத்திலும் இரட்டைப் பிறவிகள் போல் இருப்பீர்கள்!" என்றாள் இன்னொரு தோழி. "இது என்ன விபரீத விளையாட்டு?" என்று நீலாஞ்சனா கூற, "சிறிது காலம் நீ உன் அறிவினால் பல காரியங்களை சாதித்தபின், பூலோக நீலாஞ்சனாவை அழித்துவிடு!" என்றனர் தோழிகள் அனைவரும். நீலாஞ்சனாவிற்கு அந்த யோசனை பிடித்திருந்தது. உடனே அவள் தன் சக்தியினால் சிலைக்கு உயிர் கொடுத்து, அதனுடன் தன் புத்தியையும், மனத்தையும் பகிர்ந்து கொண்டாள். சிலை உயிர் பெற்று பூலோக நீலாஞ்சனாவாக மாறியது. உறக்கத்திலிருந்து எழுந்தவள் போல் உயிர்த்தெழுந்த பூலோக நீலாஞ்சனா, நகரத்திற்குச் சென்று தன் திறமையைக் காட்டுவோம் என்று எண்ணி இரவு முழுவதும் நடந்தாள். காலையில் ஒரு காட்டை அடைந்தாள். அங்கு புதரிலிருந்து ஒரு புலி அவள் மீது பாய, அடுத்த கணம் புலியின் மீது ஓர் அம்பு பாய்ந்தது. தன்னைக் காப்பாற்றியது யார் என்று நீலாஞ்சனா சுற்றுமுற்றும் பார்க்க, தொலைவில் வில், அம்புகள் ஏந்தி ஓர் இளைஞன் குதிரையின் மீது வருவதைக் கண்டாள். அவளருகில் வந்ததும் அவன், "நீ இந்தக் காட்டில் என்ன செய்கிறாய்?" என்று கேட்டான். முதல் பார்வையிலேயே அவனிடம் மனத்தைப் பறிகொடுத்த நீலாஞ்சனா, "நான் பிழைப்பைத் தேடி தலைநகரம் செல்லும் வழியில் இந்தப் புலி குறுக்கிட்டது. என் உயிரைக் காப்பாற்றியதற்கு நன்றி! ஆனால் என்னிடம் வாள் இருந்திருந்தால், நானே புலியைக் கொன்று இருப்பேன்" என்றாள். "அட! பெண்ணான உனக்கு வாள் வீசத் தெரியுமா?" என்று வியப்புடன் அவன் கேட்க, "என் பெயர் நீலாஞ்சனா! எனக்கு எல்லாப் போர்க்கலைகளும் தெரியும். நான் வைசாலி மன்னரை சந்தித்து என்னைப் படையில் சேர்த்துக் கொள்ளுமாறு வேண்டுவேன்! உங்கள் பெயர் என்ன?" என்று அவள் கேட்டாள். "என் பெயர் பிரபாகரன்!" என்ற அந்த இளைஞன், "நீ மிகவும் அறிவாளி என்று தோன்றுகிறது. ஆனால் பெண்ணான உன்னைப் படையில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். அதனால் நீ ஆண் வேடம் தரித்துக் கொள்! நானும் படையில் சேரத்தான் செல்கிறேன். அவந்தி ராஜ்ஜிய மன்னர் நமது ராஜ்யத்தின் மீது படையெடுத்துள்ளார். அதனால் நம் மன்னர் ஏராளமான வீரர்களைத் திரட்டுகிறார். என்னுடன் வா! உன்னை அழைத்துச் செல்கிறேன்!" என்றான். பிறகு இருவரும் தலைநகரம் சென்று சேனாதிபதியை சந்தித்து, படையில் சேர்ந்தனர். ஒருநாள் யுத்தகளத்தில் மன்னர் சேனாதிபதியுடன் யுத்தம் நடத்தும் விதத்தைப் பற்றி ஆலோசனை செய்து கொண்டுஇருக்கையில், நீலாஞ்சனா அவர்கள் உரையாடிக் கொண்டிருந்த அறைக்குள் நுழைந்து, "மகாராஜா! பகைவர்களின் படை நம்முடையதை விடப் பலமடங்கு பெரியது! அவர்களை நேருக்கு நேர் மோதி வெற்றி காண முடியாது. எதிரிப்படையில் குழப்பம் உண்டாக்கினால் அவர்களைத் தோற்கடிக்க முடியும். அதற்கான திட்டம் என்னிடம் இருக்கிறது" என்று தன் திட்டத்தை மன்னருக்கு விளக்கினாள். அதைக் கேட்டு மன்னர் வியந்து போனார். உடனே, தன் படையில் ஒரு சிறிய பகுதியைப் பிரித்தெடுத்து, அதற்கு அவளை உபதளபதி ஆக்கினார். அவளும் தன் படையை வழிநடத்திச் சென்று, போர்க்களத்தின் இருபுறமும் இருந்த மலைகள் மீதேறிப் பதுங்கிக் கொண்டாள். மறுநாள் போர் தொடங்கியதும், பகைவர் படை மீது எங்கிருந்தோ பாம்புகளும், தேள்களும் வந்து விழுந்தன. மற்றொரு மலையில்இருந்து, தீப்பந்தங்கள் அவர்கள் மீது விழுந்தன. இதனால் பகைவர் படையில் ஒரே குழப்பம் ஏற்பட்டது. அந்த சமயம், வைசாலி ராஜ்ய வீரர்கள் அவர்களைத் தாக்க, பகைவர்கள் சரிவர போர்புரியாமல் பின்வாங்கி ஓடிப் போயினர். அந்த வெற்றிக்கு முழுக்காரணமான புத்திசாலி இளைஞனைப் பாராட்ட மன்னர் அவனைத் தன் அரண்மனைக்கு அழைத்தார். மன்னர் தனிமையில் இருந்தபோது, தன் ஆண்வேடத்தைக் கலைத்தாள் நீலாஞ்சனா. "மகாராஜா! உண்மையில் நான் ஒரு பெண்! உங்களிடம் வேலைக்கு சேர்வதற்காக ஆண் வேடம் போட்டேன். என்னை மன்னிக்கவும்" என்றாள். அவள் எதிர்பார்த்ததற்கு மாறாக, மன்னருக்கு அபார வியப்பும், மகிழ்ச்சியும் உண்டாக, வாரிசில்லாமலிருந்த அவர் நீலாஞ்சனாவைத் தன் மகளாக ஸ்வீகாரம் எடுத்துக் கொண்டு, அவளை இளவரசியாக்கி அவள் விரும்புவதை அறிந்து பிரபாரகரை திருமணமும் செய்வித்தார். இவ்வாறு, தன் புத்திகூர்மையினால் பூலோகத்தில் வைசாலி ராஜ்யத்தின் இளவரசியான நீலாஞ்சனாவைப் பார்த்து, கந்தர்வலோக நீலாஞ்சனா மனம் பூரித்தாள். தன் தோழிகளிடம் தன்னுடைய பிரதிநிதியைப் பற்றிக் கர்வத்துடன் கூறினாள். ஆக, தாங்கள் ஆரம்பித்த விளையாட்டு முடிவுற்றது என்று கந்தர்வலோகப் பெண்கள் கருதினர். அவளை மீண்டும் பழையபடி சிலையாக்குவதற்காக, கந்தர்வலோக நீலாஞ்சனா இளவரசியிடம் வந்தாள். அவள் யார் என்ற உண்மையை இளவரசிக்கு எடுத்துரைத்து, அவளது உயிரை எடுக்கப் போவதாகக் கூறினாள். ஆனால் அவள் அதற்கு இளவரசி மறுத்துவிட்டாள். "சொல்வதைக் கேள்! நாம் இருவரும் நிரந்தரமாக ஒரே சமயத்தில் வாழ முடியாது. நான் என் உயிரை தற்காலிகமாக உனக்குக் கொடுத்தேன். அதைத் திருப்பி எடுத்துக் கொள்ள என்னை அனுமதி!" என்றாள் கந்தர்வ நீலாஞ்சனா. "கந்தர்வப் பெண்ணே! நீ தனிமையாக வாழ்கிறாய். ஆனால் நான் என் வாழ்வை என் கணவடன் பிணைத்துள்ளேன். என் மீது அன்பைப் பொழியும் என் கணவர் நானின்றி உயிர் வாழ மாட்டார். நான் இப்போது வைசாலியின் இளவரசி! நான் மறைந்து போவதை குடிமக்களும் விரும்ப மாட்டார்கள்!" என்றாள் பூலோக நீலாஞ்சனா. அவள் கடைசியாகக் கூறிய சொற்கள் கந்தர்வ நீலாஞ்சனாவின் மனத்தை உருக்கி விட்டன. ஆகையால் தனது இதயத்திலிருந்து தீ உருவாக்கி, அந்தத் தீயில் எரிந்து மறைந்து போனாள். இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம், "மன்னா! கந்தர்வப் பெண் நீலாஞ்சனாவின் மதிகெட்ட செயலைப் பார்! பூலோக நீலாஞ்சனாவிற்கு உயிர் கொடுத்ததே அவள்தான். அதுவும் தற்காலிகமாகத்தான். தன்னுடைய புத்திகூர்மையை தன் பிரதிபிம்பத்தின் மூலம் பூவுலகில் நிரூபித்துக் காட்டியபின், மீண்டும் அதைத் திருப்பி எடுத்துக் கொள்வதாக இருந்தாள். ஆனால் கடைசி நிமிடத்தில் புத்தி பேதலித்து, தன் பிரதிபிம்பத்தை உயிருடன் வாழ அனுமதித்து விட்டு, தான் உயிர் நீத்தாள். இதை முட்டாள்தனம் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது? என்னுடைய இந்த சந்தேகத்திற்கு விளக்கம் தெரிந்திருந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்துச் சுக்கு நூறாகும்" என்றது. அதற்கு விக்கிரமன், "கந்தர்வப் பெண்ணான நீலாஞ்சனா தன் புத்தி சாதுர்யத்தை நிரூபிப்பதற்காக சிலைக்குத் தன் உயிரை தற்காலிகமாகக் கொடுத்தது உண்மைதான்! ஆனால் கடைசி நிமிடத்தில் அவள் மனம் மாறி தன்னுயிரைத் தியாகம் செய்தது முட்டாள்தனத்தினால் அல்ல, அவளுடைய தயாள குணத்தினால்தான்! விளையாட்டாகத் தொடங்கிய நாடகத்தில், பூலோக நீலாஞ்சனா போர்க்களத்தில் தன் தந்திரமான திட்டத்தால் வெற்றி பெற்றாள். அவள் தான் விரும்பிய பிரபாகரனைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டு விட்டாள். மன்னருக்கும், பட்டத்து ராணிக்கும் ஸ்வீகாரப் பெண்ணாகி விட்டாள். குடிமக்களின் மனம் கவர்ந்த இளவரசியாகி விட்டாள். அவள் உயிரைப் பறித்தால் அவளைச் சார்ந்துள்ள அனைவரும் பெரும் துக்கத்தில் மூழ்குவர். ஆகையால் தான் உயிர் நீப்பதே சிறந்தது என்றும், தன் பிரதிபிம்பமாவது மகிழ்ச்சியுடன் வாழட்டும் என்றே அவள் மேற்கூறிய முடிவெடுத்தாள்" என்றான். விக்கிரமனது சரியான பதிலால் அவன் மவுனம் கலையவே, வேதாளம் தான் சுமந்து வந்த உடலுடன் பறந்து போய் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது. |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: ஒரு மீனவன் கடலோரத்தில் வாழ்ந்து வந்தான். வயதாக ஆக முதுமையால் வலுவிழந்த அவனால் கடலுக்குள் போய் மீன் பிடிக்க முடியவில்லை.ஆற்றோரத்திலேயே நாளெல்லாம் தவம் கிடந்து கிடைத்த மீனை சந்தையில் விற்று மிகச் சிரமத்துடன் வாழ்ந்து வந்தான். ஒரு நாள் அவன் அப்படி ஆற்றோரத்தில் வெய்யிலில் காய்ந்து கொண்டிருந்த போது அங்கு ஒரு அழகான பெரிய பறவை வந்தது. அது வெள்ளிச் சிறகுகளாலான இறக்கையைக் கொண்டிருந்தது. பார்ப்பதற்கு கம்பீரத் தோற்றத்துடன் காட்சியளித்தது. அதுதான் தேவலோகப் பறவையான காஹா. காஹா தாத்தாவைப் பார்த்து “ஏன் தாத்தா இந்த வெயிலில் காய்கிறாய். உனக்கு உதவ உன் வீட்டில் யாருமே இல்லையா?” என்று கேட்டது.” ஒரு ஆத்மா கூட இல்லை” என்றான் மீனவன். “நீ இந்த வயதில் இவ்வளவு வேலை செய்யக் கூடாது. நான் இனி தினமும் உனக்கு ஒரு மீன் கொண்டு வந்து தருகிறேன். அதைக் கொண்டு பிழைத்துக் கொள்” என்று கனிவுடன் கூறி விட்டு பறந்து விட்டது. அன்றிலிருந்து சொன்ன சொல் தவறாமல் காஹா யார் கண்ணிலும் படாமல் ஒரு பெரிய மீனை தாத்தாவின் வீட்டில் போட்டு விட்டு போய்விடும். அது வந்து போவது தாத்தாவுக்கு மட்டும்தான் தெரியும். அந்த மீனுக்குச் சந்தையில் மிகுந்த கிராக்கி இருந்ததால் மீனவன் அதை அதிக விலைக்கு விற்றுப் பணம் சேர்க்க ஆரம்பித்தான். வசதியாக வாழத் தொடங்கினான். சுற்றிலும் அழகிய தோட்டத்துடன் ஒரு பெரிய வீட்டைக் கட்டிக் கொண்டான். மனைவியை இழந்த அவன் இன்னோரு திருமணம் செய்யக் கூட நினைத்தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். எது தவறினாலும் காஹா மட்டும் சொன்ன சொல் தவறவேயில்லை. ஒரு நாள் தண்டோரா போட்டார்கள். காஹா என்ற ஒரு பறவை அந்த இடத்தில் சுற்றித் திரிவதாக அறிவதாகவும், அரசருக்கு அந்த பறவை தேவையென்றும் கூறிய தண்டோரா, பறவையைப் பற்றித் தகவல் தெரிவிப்பவர்களுக்கு கருவூலத்திலிருக்கும் பாதித் தங்கம் தர அரசர் தயாராக இருப்பதாகவும் சொன்னார்கள். “அரசனுக்கு காஹா ஏன் தேவை?” மீனவன் தண்டோராவிடம் கேட்டான்.” அரசனுக்குக் கண் போய் விட்டது. அவர் காஹாவின் ரத்ததில் குளித்தால் அவருக்குக் கண் பார்வை திரும்பக் கிடைக்கும்” என்று கூறிய தண்டோரா. சட்டென்று “உனக்கு காஹாவைப் பற்றி தெரிந்திருக்கும் போலிருக்கிறதே?” என்று கேட்டான். இதை மீனவன் எதிர் பார்க்கவில்லை. காஹாவின் மேலிருந்த நன்றி உணர்ச்சிக்கும், அரசன் கொடுக்கப் போகும் வெகுமதி தங்கத்தைப் பற்றிக் கேட்டதால் எழுந்த பேராசைக்கும் நடுவே தத்தளிக்கத் தொடங்கிய அவன் மனம் ஒரு நிலையில்லை. “அது.. வந்து.. இல்லையில்லை.. எனக்குத் தெரியவே தெரியாது” என்று உளறினான். தண்டோராவுடன் வந்த காவலர்களுக்கு சந்தேகம் வந்ததால் மீனவனைப் பிடித்துச் சென்று அரசன் முன்னால் நிறுத்தி விட்டார்கள். பயந்து போன மீனவன், “காஹா பெரிய பறவை. அதை என் ஒருவனால் பிடிக்க முடியாது” என்று கூறினான். அரசன் பத்துக் காவலர்களை மீனவனுடன் அனுப்பினான். அவர்கள் மீனவன் வீட்டில் ஒளிந்து கொண்டார்கள்.அன்று வழக்கம் போல காஹா வந்தது. மீனவன் “காஹா! உனக்கு இத்தனை நாளாக நான் நன்றி சொன்னதே இல்லை. இன்று ஏதோ சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. கொஞ்சம் உள்ளே வந்து விட்டுப் போயேன்” என்று கூறினான். காஹாவும் அவனை நம்பி உள்ளே வந்தது.ஒடிப் போய் அதன் காலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட மீனவன், ஒளிந்து கொண்டிருந்த காவலர்களைக் கூப்பிட்டான். அவர்கள் வருவதற்குள் சுதாரித்துக் கொண்ட காஹா காலைக் கட்டிக் கொண்டிருந்த மீனவனுடன் பறந்து உயர எழுந்து விட்டது. விழுந்தால் சிதறி விடுவோம் என்று பயந்த மீனவனால் கையை எடுக்க முடியவில்லை. அன்றிலிருந்து காஹாவையோ மீனவனையோ யாருமே பார்க்க முடியவில்லை. நீங்கள் பார்த்தால் கொஞ்சம் சொல்லுங்கள்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'நன்மை செய்தவருக்கு தீமை நினைக்கக் கூடாது' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: பரமார்த்தகுரு, முட்டாள், மூடன், மட்டி, மடையன், பேயன், சீடர்கள், பூவரசம்மரம், புத்தர், பயிர், மரவள்ளிக் கிழங்கு
தலைப்பு: பூவரசம் மரமே புத்திகொடு
| மரத்தடியில், உட்கார்ந்த நிலையிலேயே தூங்கிக் கொண்டிருந்தார், பரமார்த்தர். திடீரென்று விழித்துக் கொண்டிருந்தார், பரமார்த்தர். திடீரென்று விழித்து எழுந்து, "சீடர்களே! புத்தருக்குப் போதி மரத்தடியில் ஞானம் பிறந்ததாம். அதுபோல் இப்போது எனக்கு இந்த பூவரசம் மரத்தடியில் புத்தி பிறந்து விட்டது!" என்று மகிழ்ச்சியுடன் கத்தினார். அதைக் கேட்ட சீடர்கள், "புத்தருக்கு ஒரு போதி; எங்கள் பரமார்த்தருக்கு ஒரு பூவரசம்! புத்தி கொடுத்த மரமே, நீ வாழ்க!" என்று அந்த மரத்தைச் சுற்றி வந்து வணங்கினார்கள். "சீடர்களே! நாம் யாருடனாவது கூட்டு சேர்ந்து பயிர் வைப்போம்; கொள்ளை லாபம் அடிப்போம்!" என்றார் குரு. பரமார்த்தரின் யோசனையைக் கேள்விப்பட்ட ஒருவன், அவர்களுடன் கூட்டாகப் பயிர் செய்வதற்கு ஒப்புக் கொண்டான். எப்படியும் குருவும், சீடர்களும் ஏமாந்து விடுவார்கள் என்று நம்பினான். "கூட்டு வாணிகம் என்பதால், மண்ணுக்கு மேலே விளைவதை ஒருவரும், பூமிக்குக் கீழே கிடப்பதை இன்னொருவரும் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இருவருக்கும் லாபம் சமமாக இருக்கும். உங்களுக்குப் பூமிக்குக் கீழே விளைவது வேண்டுமா? மேலே கிடைப்பது வேண்டுமா?" என்று கேட்டான், கூட்டாளி. குருவும் சீடர்களும் தனியாகச் சென்று யோசித்தார்கள். "குருவே! பூமிக்கு மேலே இருப்பது வேண்டாம்! அதை யார் காவல் காப்பது? பூமிக்கு அடியில் இருப்பதையே எடுத்துக் கொள்வோம். எல்லாம் பத்திரமாக இருக்கும்!" என்றனர் சீடர்கள். சீடர்கள் பேச்சை நம்பிய பரமார்த்தரும், "பூமிக்குக் கீழே இருப்பது எல்லாம் எங்களுக்கே!" என்று கூறி விட்டார். ஏமாற்ற நினைத்த கூட்டாளியோ, சோளம், கம்பு, கேழ்வரகு என்று மண்ணுக்கு மேலே கிடைப்பவையாகப் பயிரிட்டான்! செடிகள் நன்றாகச் செழித்து வளர்வதைக் கண்ட பரமார்த்தர், "பலே! மண்ணுக்கு மேலேயே இவ்வளவு செழிப்பாக இருந்தால், அடியில் இன்னும் வளமாகக் காய்க்குமே! இந்தத் தடவை நமக்கு நல்ல லாபம் நிச்சயமாகக் கிடைக்கப் போகிறது!" என்று மகிழ்ந்தார். சீடர்களும் நம் கூட்டாளியும் நன்றாக ஏமாந்து போனான். நம்முடைய திட்டம் அவனுக்குப் புரியவில்லை! என்று நினைத்தனர். அறுவடைக் காலம் வந்தது. குருவையும் சீடர்களையும் அழைத்து வந்த கூட்டாளி, "இதோ பாருங்கள்! பேசிய பேச்சை மீறக்கூடாது. பூமிக்கு அடியில் இருப்பதை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள். மேலே இருப்பதை மட்டும் நான் கொண்டு போகிறேன்" என்று கூறினான். அவன் எல்லாவற்றையும் அறுத்துச் சென்ற பிறகு, குருவும் சீடர்களும் வெறும் மண்ணைக் கிளற ஆரம்பித்தார்கள். எங்கு தோண்டினாலும் வெறும் வேர் மட்டுமே இருந்தது. "குருவே! மோசம் போனோம்!" என்று அலறினான் மட்டி. "ஏதோ மாய வேலை நடந்து விட்டது!" என்று அழுதான் மடையன். "குருவே! பாதாள உலகத்தில் இருப்பவர்கள் தான் எல்லாவற்றையும் அடியிலிருந்தே திருடிக் கொண்டு போய் விட்டார்கள்!" என்றான் முட்டாள். "இத்தனை நாட்கள் கஷ்டப்பட்டு உழைத்தோம். எல்லாம் பாழாகி விட்டதே!" என்று வருத்தப்பட்டார், பரமார்த்தர். "குருதேவா! அடுத்த முறை பயிர் செய்யும் போது மேலே இருப்பதை நாம் எடுத்துக் கொள்வோம். நாம் ஏமாந்தது போல அவனும் ஏமாற வேண்டும்!" என்றான் மூடன். அடுத்த முறை பயிர் செய்யும் காலம் வந்தது. இந்தத் தடவை மண்ணுக்கு மேலே இருப்பது எல்லாம் எங்களுக்கு!" என்று கூறிவிட்டனர், குருவும் சீடர்களும். மறுபடியும் ஏமாற்ற நினைத்த கூட்டாளி, இந்தத் தடவை வேர்க் கடலையும் மரவள்ளிக் கிழங்கும் பயிர் வைத்தான். குருவும் சீடர்களும் கடுமையாக உழைத்தார்கள். "குருவே! செடிகள் வளமாக வளர்கின்றன. கொள்ளை லாபம் கிடைக்கப் போகிறது!" என்றான் மண்டு. அறுவடை நேரம் வந்தது. "சீக்கிரம் மேலே இருப்பதை எல்லாம் கொண்டு போங்கள். நான் மண்ணை தோண்ட வேண்டும்" என்றான் ஏமாற்றுக்காரன். செடியில் ஒன்றுமே காய்க்காததைக் கண்ட சீடர்கள், வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டனர். "குருதேவா! இந்தத் தடவையும் மோசம் போய் விட்டோம்!" என்று கண்ணீர் விட்டான் மட்டி. "இரவு பகலாகக் காவல் காத்தும் பயனில்லாமல் போச்சே!" என்றும் புலம்பினான் மடையன். இது ஏதோ சைத்தான் வேலையாகத்தான் இருக்கும்!" என்றான் முட்டாள். பரமார்த்தர், தனிமையில சிந்தனை செய்து ஒரு முடிவுக்கு வந்தார்! "சீடர்களே! இது சைத்தான் வேலையுமல்ல; சனீஸ்வரன் வேலையுமல்ல! எல்லாம் நான் செய்த தவறுதான்!" என்றார். "என்ன! நீங்கள் செய்த தவறா? என்ன அது?" என்று சீடர்கள் வியப்போடு கேட்டனர். "மரத்தடியில் படுத்துத் தூங்கியபோது, புத்தி வந்ததாகக் கூறினேன். அது தவறு. அந்த மரம் பூவரசம் மரம் இல்லை என்பது தான் நேற்று தான் தெரிந்தது. வேறு ஏதோ ஒரு மரத்தடியில் மாறிப் போய்த் தவறுதலாகத் தூங்கி விட்டேன்! வாருங்கள், உண்மையாக பூவரசம் மரத்தடிக்குப் போவோம்!" என்றார். சீடர்களும், "பூவரசம் மரமே! புத்தி கொடு!" என்று மீண்டும் தவம் செய்யத் தொடங்கினார்கள். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: ஒரு முறை தெனாலிராமனுக்கு கத்தரிக்காய் சாப்பிட வேண்டும் என்று அதீத விருப்பம் ஏற்ப்பட்டது. அரண்மனைத் தோட்டத்தில் பிஞ்சு கத்திரிக்காய் அதிகமாக விளைந்திருப்பதைக் கேள்விப்பட்டார். ஆனால் அது அரசாங்கத்திற்குச் சொந்தமானது. நாம் உபயோகிக்கக் கூடாது என்ன செய்வது. என்னவென்றாலும் இன்று கத்தரிக்காய் சாப்பிட்டே தீருவது என்று தீர்மானித்த தெனாலிராமன் ஒரு ஆலோசனை செய்தார். காவலாளிக்கு தெரியாமல் கத்தரிக்காய் அனைத்தையும் சத்தமில்லாமல் பறித்துக் கொண்டார். வீட்டுக்கு சென்று மனைவியிடம் "இன்றைக்கு விதவிதமாய் கத்தரிக்காய் பதார்த்தம் செய்" என்றார். தெனாலிராமன் கொண்டுவந்த கத்தரிக்காய் அரண்மனை தோட்டத்திலிருந்து பறித்து வந்தது என்று தெரிந்ததும் தெனாலிராமனது மனைவி மிகவும் கலக்கமடைந்தார். தெனாலிராமன் "நீ பயப்படாதே! எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன். நீ சமைத்து வை" என்றார். அவரது மனைவியும் மறுபேச்சு பேசாமல் கத்தரிக்காய் குழம்பு, கத்தரிக்காய் கூட்டு என்று வித விதமாக செய்து வைத்தார். இருவரும் சாப்பிடத்தயாரானார்கள். தெனாலிராமன் தனது மகனை எங்கே என்று கேட்டார். அவன் வெளித்தின்னையில் படுத்து உறங்கிக் கொண்டிருப்பதை மனைவி தெரிவித்தார். உடனே தெனாலிராமனுக்கு ஒரு யோசனை தோன்றியது. அவர் ஒரு குடம் நிறைய தண்ணீரைக் கொண்டுவந்து தின்னையில் படுத்திருந்த தனது மகன் மீது ஊற்றினார். பதறியடித்து எழுந்த மகனைப் பார்த்து "வெளியே மழை பெய்கிறது, உள்ளே போய் படுத்துக் கொள்" என்று கூறினார். அரைத்தூக்கத்தில் இருந்த மகனும் அவர் சொன்னதைக் கேட்டவுடன் வேக வேகமாக வீட்டுக்குள் சென்றான். படுத்துறங்கப் போன்றவனை தெனாலிராமன் எழுப்பி "கத்தரிக்காய் சாப்பாடு ருசியாய் இருக்கிறது, சாப்பிட்டு விட்டு தூங்கு" என்று கூறினார். அவனும் தூக்கக்கலக்கத்துடனேயே நன்றாகச் சாப்பிட்டான். பிறகு எல்லோரும் படுத்து நிம்மதியாய் தூங்கினார்கள். மறுநாள், தெனாலிராமன் அரண்மனைத் தோட்டத்தில் கத்தரிக்காய் பறித்த விஷயம் எப்படியோ மன்னருக்குத் தெரிந்து போனது. மன்னர் தெனாலிராமனை அழைத்து வரச் சொன்னார். நடக்கப் போவதை யூகித்துக் கொண்ட தெனாலிராமனும் மன்னர் முன் சென்று நின்றார். மன்னர் தெனாலியைப் பார்த்து கேட்டார்" தெனாலிராமா! அரண்மனைத் தோட்டத்தில் கத்தரிக்காய் எல்லாம் காணாமல் போனது உனக்குத் தெரியுமா ? என்றார். தெனாலிராமனோ எதுவும் அறியாதது போல "என்ன? அரண்மனைத் தோட்டத்துக் கத்தரிக்காய் காணாமல் போனதா?" என்றார். மன்னரோ விடுவதாய் இல்லை. "ஒன்றும் அறியாதது போல் கேட்கிறாய் ராமா! நீ தான் கத்தரிக்காய் அனைத்தயும் பறித்ததாக நான் கேள்விப்பட்டேன். உண்மையை ஒத்துக் கொள்" என்றார். தெனாலி ராமனோ "இல்லவே இல்லை" என்று சாதித்தார். மன்னர் உடனே தெனாலிராமா "நீ உனது மகனை அழித்துவா. குழந்தைகள் பொய் சொல்லாது. நேற்று நீங்கள் என்ன சாப்பிட்டீர்கள் என்பதை நான் உன் மகனை விசாரித்து தெரிந்து கொள்கிறேன். " என்றார். தெனாலிராமனது மகனை காவலாளிகள் அழைத்து வந்தார்கள். மன்னன் சிறுவனிடம் அன்பாக விசாரித்தார். "தம்பி நேற்று உஙகள் வீட்டில் என்ன சாப்பிட்டீர்கள்?" உடனே சிறுவன் சொன்னான் "கத்தரிக்காய் குழம்பு, கத்தரிக்காய் கூட்டு மற்றும் சாதம் எல்லாம் சாப்பிட்டோம். மிகவும் ருசியாக இருந்தது." உடனே மன்னன் தெனாலிராமனைப் பார்த்தார். இப்போது மாட்டிக் கொண்டாயா தெனாலிராமா. இபோதாவது உண்மையை ஒத்துக் கொள்" என்றார். தெனாலிராமனோ விடாப்பிடியாக மறுத்தார். "மன்னா, இவன் இரவில் கனவு கண்டு அதை உளறுகிறான். நன்றாக விசாரியுங்கள். நீங்கள் நம்பும்படியாக அவன் கூறினால் நான் உண்மை என ஒத்துக் கொள்கிறேன்". என்றார். மன்னன் சிறுவனைப் பார்த்து மீண்டும் கேட்டார். "குழந்தாய் நேற்று உங்கள் வீட்டில் என்ன நடந்தது என்று விளக்கமாகச் சொல்" சிறுவனோ நேற்று இரவு ஜோ வென்று மழை பெய்ததா! அப்பா என்னை வீட்டுக்குள் கூட்டிக் கொண்டு போனாரா...! அப்போ கத்தரிக்காய் வைத்து சாப்பிடச் சொன்னார்களா...! சாப்பிட்டிவிட்டு பிறகு நான் உறங்கி விட்டேன்" என்றான். தெனாலிராமனோ நேற்று மழை பெய்ததா மன்னா! நீங்களே சொல்லுங்கள் என்று மன்னரை கேள்வி கேட்டார். மன்னர் குழம்பிப் போனார். அவையில் இருந்தவர்களை விசாரித்தார். நேற்று நகரத்தின் எந்தப்பகுதியிலும் மழை பெய்யவில்லை என்று எல்லோரும் சொன்னார்கள். மன்னரும் சரி தெனாலிராமன் சொன்னதைப்போல குழந்தை கனவில் கண்டதைத்தான் சொல்கிறான் என்று சொல்லி தெனாலிராமனையும் விடுவித்தார். மனதிற்குள் மகிழ்ந்து கொண்டே தெனாலிராமனும் இடத்தை காலிசெய்தார். பிறுதொருநாள் மன்னரிடம் தாம்தான் கத்தரிக்காயை திருடியதாக ஒத்துக் கொண்டு நடந்தவைகளை சொல்ல மன்னர் ஆச்சரியமாத்துடன் சிரித்து மகிழ்ந்தார். பிறகு தெனாலிராமனின் சாதுர்யத்தை மெச்சி பல பரிசுகளை அளித்து மகிழ்ந்தார்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'தெனாலிராமனும் கத்தரிக்காயும்' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: ஓரு தடவை துருக்கி மன்னர் - காட்டுக்கு வேட்டையாடச் சென்றார். அவருடைய பரிவாரத்துடன்
முல்லாவும் சென்றார். மன்னர் பரிவாரத்துடன் சமையல்காரர் குழு ஒன்றும் சென்றது. சமையல்கார குழுவின் தலைவன் காட்டில் கூடாரமடித்து சமையல் செய்வதற்கான ஏற்பாடுகளில்
முனைந்தபோது அரண்மனையிலிருந்து உப்பு எடுத்து வர மறந்து விட்டது தெரிந்தது. சமையற்காரத் தலைவன் மன்னர் முன் சென்று அச்சத்தோடு தலை கவிழ்ந்து நின்றான். " என்ன சமாச்சாரமஞ் என்று மன்னர் விசாரித்தார். சமையல் குழுத்தலைவன் நடுங்கிக்கொண்டே தான் உப்பு எடுத்து வர மறந்துவிட்ட செய்தியைச் சொன்னான். மன்னர் சமையல் குழுத் தலைவனைக் கடுமையாகக் கண்டித்தார். பிறகு தனது வீரர்களில்
ஒருவனை அழைத்து நீ குதிரை மீதேறி அண்மையிலிருக்கும் கிராமத்திற்குச் சென்று யார்
வீட்டிலாவது கொஞ்சம் உப்பு வாங்கிவா என உத்திரவிட்டார். அப்போது முல்லா முன்னால் வந்து மன்னரை வணங்கினார். " என்ன முல்லா ஏதாவது சொல்ல வேண்டுமா?" என்று கேட்டார் மன்னர். ஆமாம் மன்னவா படை வீரனிடம் கொஞ்சம் காசு கொடுத்து அனுப்புங்கள், குடிமக்களிடம் உப்பு
இனாமாகக் கேட்க வேண்டாம் என்றார் முல்லா. ஏன் குடிமக்கள் ஒரு கை உப்பை இலவசமாகக் கொடுக்க கூட முடியாத நிலையில்
இருக்கிறார்களா என மன்னர் ஆச்சரியந்தோன்றக் கேட்டார். மன்னர்பெருமானே நான் சொன்னதன் உட் பொருளைத் தாங்கள் விருப்பம் அறிந்தால் மக்கள் ஒரு
மூட்டை உப்புகூட இனாமாகக் கொடுப்பார்கள். ஆனால் மக்களுக்கு உங்கள்மீது இருந்த
மரியாதை போய்விடும் என்றார் முல்லா. " ஏன்?" என்று கேட்டார் மன்னர். என்ன காரணத்தினால் நாம் உப்பு கேட்கிறோம் என்று மக்களுக்குத் தெரியாது. உப்பு
மிகவும்
மலிவான பொருள். பரம ஏழை வீட்டிலும் உப்புக்குப் பஞ்சமிருக்காது. மன்னரிடம் உப்பு
இல்லாமல் இல்லை. உப்பு கேட்கிறார் என்றால் அந்த அளவிற்கு அவர் நிலை கேவலமாகிவிட்டது
என்று தான் மக்கள் உங்களைப்பற்றி நினைப்பார்கள். பின்னர் அவர்கள் உங்களை எவ்வாறு
மதிப்பார்கள்? அதனால் நமக்குத் தேவையான உப்பின் விலை மதிப்புக்கு அதிகம் பொருளை
உப்பு தருபவருக்கு கொடுத்துவிட்டு உப்பை வாங்கிவரச் சொல்லுங்கள் என்றார் முல்லா. அவர் சொன்ன தத்துவம் சரிதான் என்று துருக்கி மன்னருக்குத் தோன்றியது. ஆகவே பணம்
கொடுத்தே உப்பை வாங்கிவருமாறு படை வீரனுக்கு உத்தரவிட்டார்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'மலிவான பொருள்' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: பூனை, நான் சூவான், பிணம், சாவோ சாவ்
தலைப்பு: பூனையை வெட்டுதல்
| கிழக்கு மற்றும் மேற்கிலிருந்து வந்திருந்து ஒன்றாக கூடியிருந்த துறவியர்களுக்குள் தீடிரென விவாதம் ஒன்று அங்கிருந்த பூனையைப் பற்றி ஆரம்பித்தது. அவர்களுடைய விவாதத்திற்கு எந்த முடிவும் ஏற்படாமல் இழுபறி நிலையை அடைந்த போது சா"ன் ஆசிரியர் நான்சூ"வான் அங்கிருந்த பூனையை கையில் தூக்கி பிடித்துக் கொண்டு "நீங்கள் உங்கள் விவாதத்திற்கு ஒழுங்காக முற்றுப் புள்ளி வைத்தால் இந்தப் பூனையின் உயிர் தப்பித்தது, இல்லையேல் பிணம் தான்" என்று எச்சரிக்கை விடுத்தார். வந்திருந்த துறவிகள் ஒருவரும் பதில் கூறாமல் அமைதி காத்தனர். கொஞ்ச நேரம் காத்திருந்த நான்சூ"வான் யாரும் பதில் கூறாததால் கையில் வைத்திருந்த அரிவாளால் பூனையை இரண்டாக வெட்டினார். அந்த சமயத்தில் யாத்திரைக்காக சென்றிருந்த ஆசிரியர் சாவோ சாவ் அங்கு வந்து சேர்ந்தார். அவரிடம் நான்சூ"வான் என்ன நடந்தது என்பதனை விளக்கினார். அதனைக் கேட்ட சாவோ சாவ் எந்த பதிலும் கூறாமல் தன்னுடைய காலில் போட்டிருந்த செருப்பை எடுத்து தலையில் தொப்பி மாதிரி வைத்து பிடித்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினார். "நீங்கள் மட்டும் கொஞ்ச நேரத்திற்கு முன்னால் வந்திருந்தால், இந்தப் பூனையை காப்பாற்றி இருக்கலாம்" என்று நான்சூ"வான் போகின்ற சாவோ சாவிடம் அவர் காதில் விழுமாறு கூறினார். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: காயத்ரி, சுந்தரராமன், ரகுராமன், பவித்ரா, சிவகாமி, அரவிந்தன், திலகவதி
தலைப்பு: காலம் மாறிப் போச்சி
| "நோக்கு பாடத் தெரியுமா?", "காயத்ரி... வீணை நன்னா வாசிப்பா", "அப்படியா... எங்கே வாசிக்க சொல்லுங்க" வீணை வந்தது... காயத்ரி "காற்றினிலே வரும் கீதம்.." இசைத்தாள். அனைவரும் மகிழ்ந்தனர். "எங்களுக்கு காயத்ரியை பிடிச்சிருக்கு... மேற்கொண்டு லேளகீக விஷயங்கள் பேசலாமே" என்றார் மாப்பிள்ளையின் அத்திம்பேர். "அவா என்ன செய்யிறான்னு கேளேண்டா" என்றார் மாப்பிள்ளையின் சித்தப்பா. "காயத்ரிக்கு ஐம்பது சவரன் நகையும், வைரத்தோடும் போட்டு கன்னிகாதானம் செய்து தரேன்... வரதட்சணையா ஒரு லட்சம் ரூபாய் தரேன்" என்றான் இரகுராமன் - காயத்ரியின் அண்ணன். சமயபுரத்தில் ஆச்சாரமும் அனுஷ்டானமும் உள்ள குடும்பம். இரகுராமனின் அப்பா வங்கி மேலாளராக இருக்கும் போதே மாரடைப்பால் காலமாகிவிட்டார். கருணை அடிப்படையில் மகனுக்கு வேலை கிடைத்தது. இரகுராமனின் தாயார், சிவகாமி, இரகுராமனின் மனைவி பவித்ரா, அவன் தங்கை காயத்ரி என சிறிய குடும்பம், பவித்ராவும் வங்கியில் வேலை செய்பவள். காயத்ரி ஆசிரியர் பயிற்சி முடித்தவள். இன்னும் வேலை கிடைக்கவில்லை. பொள்ளாச்சி வங்கியில் வேலை செய்யும் சுந்தரராமனுக்கு காயத்ரியை பெண் பார்க்கும் படலம் நடந்து கொண்டிருக்கிறது. மாப்பிள்ளை பேங்க் வேலைன்னா பார்க்கிறான்... நீங்க இரண்டு லட்சம் கொடுத்துடுங்கோ... என்று சுந்தரராமனின் அத்திம்பேர் கேட்டார். சுந்தரராமன் எழுந்து தன் அப்பா, அம்மாவை தனியே அழைத்துப் போய், "அவா இஷ்டத்துக்கு விடுங்கோப்பா... அத்திம்பேர் ஏன் இப்படி முந்திரிக்கொட்டையாட்டம் முந்திக்கிறார்..! "நான்தாண்டா கேக்கச் சொன்னேன். நேத்து சாயரட்சையே சொல்லி வச்சேன்...! "அப்பா இல்லாத குடும்பம். அவள் அண்ணன் இவ்வளவு செய்வதாக ஒத்துண்டதே நேக்கு பெருமையா இருக்கு. என்னம்மா, நீங்க என்ன சொல்றேள்..", "அப்பா இல்லாட்டி என்னடா. அவ அண்ணன் உன்னாட்டம் பேங்கில ஆபிசர் ரேங்கிலேதானே இருக்கான். நோக்கு என்னடா தெரியும். நீ சும்மா இருடா" என்றாள் தாய். இவர்கள் தனித்தனியே பேசுவதைக் கண்ட இரகுராமன் தன் அம்மாவிடம் சென்று கலந்து பேசினான். "அம்மா அவா அதிகமா எதிர்பார்க்கிறா.", "ஒண்ணரை லட்சம் தர்றதா ஒத்துக்கோ ரகு. ஏன்னா மாப்பிள்ளை கண்ணுக்கு லட்சணமா இருக்கான். பேங்க் வேலை நம்மாத்து பொண்ணு அவாத்துக்குப் போனா நன்னா வச்சிருப்பா". "சரீங்கம்மா" என்று சொல்லிவிட்டு வந்து உட்காந்தான். காயத்ரியை உள்ளே அழைத்துச் சென்று மாப்பிள்ளையின் தங்கைகள் விமலாவும் கமலாவும் சிரித்து பேசிக் கொண்டிருந்தனர். விமலாவும் கமலாவும் இரட்டையர்கள். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. சுந்தரராமனுடன் அவன் அப்பா, அம்மா இருவரும் வந்து உட்கார்ந்தார்கள். அத்திம்பேர் முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டார். "ஒண்ணரை லட்சம் தர்றேன். சந்தோஷமா முடிச்சு வையுங்கோ.. என் தோப்பனார் இருந்தா இன்னும் அதிகமா கூடக் கொடுப்பார். காயத்ரி டீச்சர் டிரையினிங் முடிச்சவ...", "சரி... எங்களுக்கும் சம்மதம்... தட்டை மாத்திக்கலாமே..." என்றார் கூந்தரராமனின் அப்பா. இறுக்கம் தளர்ந்து மகிழ்ச்சியான சூழல் உருவானது. திருச்சி தேவர்மகாலில் திருமணம் மிகவும் சிறப்பாக நடந்தேறியது. சுந்தரராமன் - காயத்ரி தம்பதிகளாயினர். சுந்தரராமன் குடும்பத்தார் மிகவும் மகிழும்படி சீர்வரிசைகள் செய்தான். காயத்ரி தன் பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீடு செல்லும் நாள் வந்தது. தன் வீட்டுத் தொட்டத்தில் மாதுளமரத்தையும், கொய்யா மரத்தையும், மருதாணி மரத்தையும் தொட்டு தொட்டு பார்த்தாள். அவள் பொத்தி பொத்தி வளர்த்த முல்லைச் செடிகளையும்... பார்த்து கண்கள் பனிக்க நின்றாள். ஒரு புல்லின் இலையைக்கூட மயிலின் தோகை போல மகிழ்ந்து பார்த்தாள். ஒரு கீரைச்செடி சாய்ந்து கிடந்ததை கீழே குனிந்து நிமிர்த்தினாள். அப்போது அவள் தாய் சிவகாமி அருகில் வந்து அவள் தோளின் மேல் கையை வைத்து மெல்லிய குரலில், "மனுஷா நன்னா புரிஞ்சண்டு அவா போக்குப்படி நடந்துக்கோ. நோக்கு தோப்பனார் இல்லை. அண்ணா மனசு நோகும்படி நடந்துக்காதே. ஆம்படையான் குணமறிஞ்சி நடந்துக்கோ. உன் மாமியார் தங்கமா தெரியறா. புத்திசாலித்தனமா அவளை உன் கைக்குள்ளே வச்சிக்கோ. தெரியரதா? அக்கம்பக்கம் ஆத்துக்கெல்லாம் போவக்கூடாது". என்று புத்திமதி கூறினாள். காயத்ரியை மகிழ்ச்சியுடன் சுந்தரராமனுடன் அனுப்பிவிட்டு இரகுராமன் கண் கலங்கினான். சிவகாமியும் தன் கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். பவித்ரா கணவனை உள்ளே அழைத்துப் போய் கேலி செய்து ஒரு நிலைக்கு அவனைக் கொண்டு வந்தாள். பொள்ளாச்சியின் இயற்கைக் கொஞ்சும் அழகும் புகுந்த வீட்டாரின் அபரிமிதமான அன்பும் காயத்ரியை மெய்மறக்கச் செய்தன. புக்ககம் மாதிரியே துளசி மாடமும் பூந்தோட்டமும், ஊஞ்சலும் புகுந்த வீட்டிலும் இருப்பது கண்டு மிகவும் மகிழ்ந்தாள். அன்பு உள்ளம்தான் குடும்பப் பாசமாகவும், குடும்பப் பொறுப்புக்களாகவும், சமூக உணர்வாகவும் மலர்கிறது என்பதை அனைவருக்கும் உணர்த்துவது இல்லறம் தானே! ஆனி போய் ஆடி வந்தது. இரகுராமனும் பவித்ராவும் பொள்ளாச்சி சென்று காயத்ரியை அழைத்து வந்தார்கள், சமயபுரம் வீடு மறுபடியும் களைகட்டியது. காயத்ரியும், பவித்ராவும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் கேலி பேசி மகிழ்ந்தனர். காயத்ரி தன் மாமியார் வீட்டு பெருமையை மூச்சு விடாமல் பேசினாள். சிவகாமி தன் மகளின் பேச்சை ரசித்தபடி தனக்குள் சிரித்துக்கொண்டாள். தனக்குத் தேவையானவைகளை தன் அண்ணி பவித்ராவிடம் சொல்லி அண்ணனிடமிருந்து வாங்கிக் கொண்டாள். ஆவணி பிறந்தது. சம்பந்தி வந்து இரண்டு நாட்கள் தங்கி காயத்ரியை பொள்ளாச்சிக்கு அழைத்துச் சென்றார்கள். இந்த தடவை காயத்ரி கலங்கவில்லை. கலகலவென்று சிரித்தபடி விடைபெற்றுச் சென்றாள். புரட்டாசி பிறந்ததும் ரகுராமனும் பவித்ராவும் பொள்ளாச்சி வந்து இரண்டு நாட்கள் தங்கிவிட்டுச் சென்றனர். அவர்கள் இருவரும் சமயபுரம் வந்த ஒரு வாரம் கழித்து காயத்ரியின் மாமனார் தொலைபேசியில் அழுதபடி சுந்தரராமன் ஸ்கூட்டர் ஆக்சிடெண்டில் சிக்கி மருத்துவ நிலையத்தில் சேர்த்திருப்பதாகச் சொன்னார். இரகுராமன் உடல் நடுங்கியது. பூமியே இடிந்து விழுவது போல் தென்பட்டது. கதறியபடி மூவரும் காரில் பொள்ளாச்சி விரைந்தனர். இவர்கள் வீட்டினுள் சென்றபோது சுந்தரராமன் பிணமாகக் கிடத்தப்பட்டிருந்தான். இதயமே வெடித்து விடுவதுபோல கதறினான். இரகுராமனை காயத்ரி மாமனார் தேற்றிக் கொண்டிருந்தார். எல்லாம் முடிந்தது... துயரம் ஒரு மனிதனை அழித்து விடுவது போல வேறு எதுவும் அவனுக்கு கேடு செய்யாது என்ற கீதையின் வாக்குபடி இரகுராமன் நடைப்பிணமானான். நாள் பார்த்து நட்சத்திரம் பார்த்து பெயர் பொருத்தம் பார்த்து தெய்வ சன்னதியில் குறி கேட்டு நடந்த இந்தத் திருமணம் ஏன் இப்படி மூன்று மாதங்களிலேயே முடிவானது?.. ஜாதகம் அது இது எல்லாமே மனிதன் தனக்காக ஏற்படுத்திக்கொண்டது தானே! அந்த நாள் வந்தது! பதினாறாம் நாள். பேசும் சக்தியையே இழந்தது போல் அலங்காரம் செய்யப்பட்டு காயத்ரி அமர்ந்திருந்தாள். நாவிதன் வரவழைக்கப்பட்டிருந்தான். ஒரு தட்டில் உத்ராட்சமும், விபூதியும், வெள்ளைச் சேலையும் வைக்கப்பட்டிருந்தனர். அமங்கலப் பெண்கள் சிலர் சில சடங்குகளை செய்ய முற்பட்டிருந்தனர். வயோதிக புருஷாள் சிலர், அவர்களுக்குத் தோன்றிய சம்பரதாயங்களை செய்யத் தொடஙகினர். காயத்ரியின் உடலில் சிறு நடுக்கம் ஏற்பட்டது. இரண்டு அமங்கலப் பெண்கள் காயத்ரியை எழுப்பி நிற்க வைத்து பிறகு கைகூப்பச் செய்தபோது. "நிறுத்துங்கள்!" என்று கதறினான் ரகுராமன். எல்லோருடைய பார்வையும் அவன்மேல் நிலைத்திருந்தது. வயோதிக வைதீகர்கள் படபடப்புடன் ரகுராமன் அருகில் வந்தனர். "காயத்ரிமேல் எவரும் கைவைக்க அனுமதிக்க மாட்டேன். இந்த மூடப் பழக்க வழக்கங்களை நிறுத்துங்கள்..." என்று கூறிக்கொண்டே தன் தங்கை அருகில் சென்று அவள் கரத்தைப் பற்றிக் கொண்டான். அவள் அவன் மேல் சாய்ந்து கதறினாள். அவளது கண்களிலிருந்து கண்ணீர் முத்துக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நட்சத்திரமாய் உதிர்ந்து கொண்டிருந்தன. "பொம்மனாட்டி வாழ்வில் தாலி, மஞ்சள், குங்குமம், ஆகியவை அவளது புருஷனோடு முடிந்து போன ஒன்று... அதைப் போலவே வண்ணச் சேலைகளும், நீண்ட கேசமும் நீக்கணும்... அது தான் குலதர்மம்... சம்பரதாயம்" என்றாள் ஒரு அமங்கலப் பாட்டி. "முடியாது!... செய்ய விடமாட்டேன்... அவளை அந்த கோலத்தில் பார்க்க நான் விரும்பவில்லை... பெண் இனத்தை ஏன் இப்படி கேவலப்படுத்த வேண்டும். காலம் மாறிப் போச்சி... இன்னும் பழைய பஞ்சாங்கமாய் இருக்கணுங்கிற அவசியமில்லை..." பச்சை மரத்தில் விழுந்த கோடாலியாக வார்த்தைகள் வெளிப்பட்டன. சிவகாமி அம்மாளும், சம்பந்திகளும், பவித்ராவும் கண்கலங்க அமைதியாக அமர்ந்திருந்தனர். சில அமங்கலப் பெண்கள் கூடிக்கூடி பேசினர். சிலர் ரகசியமாகப் பேசினர். ரகுராமன்... உலக சம்பரதாயத்தை மாத்தலாமோ... சாஸ்த்திரங்கள் தெரிஞ்ச நீயே இப்படி பேசினால்... போதும் நிறுத்துங்கள்... என் தோப்பனார் காலமான போது என் தாயாரை ஊனப்படுத்தினார்கள். அப்போது எனக்கு விபரம் தெரியாத வயசு. அந்த ரணமே இன்னும் ஆறவில்லை. அழகே உருவான என் அம்மாவை மொட்டையடிச்சு துளசி மாலை போட்டு வெள்ளை புடவையைக் கட்ட வைத்ததை நினைத்து நினைத்து அழுதேன். இந்த நிலை என் தங்கைக்கு வரவேண்டாம். "இந்தப் பாவம் ஏழேழு ஜென்மத்திற்கும் விடாது" என்றாள் ஒரு அமங்கலப்பாட்டி. வாயை மூடு அலமு... புருஷாள் பேசிக் கொண்டிருக்கும்போது பொம்மனாட்டிக்கு என்ன வாய் நிள்கிறது" என்று வார்த்தையால் நறுக்கினார் மற்றொருவர். வேதங்கள், பிரம்மம், சம்பரதாயம், மறுபிறவி, பிதுர்லோகம், தேவலோகம், இவையாவும் மனிதன் வகுத்ததுதானே. நடைமுறைக்கு எது ஏற்றது என்பதை சிந்தித்துப் பாருங்கள். சுந்தரராமன் எங்கள் வீட்டுக்கு வந்தபோது அம்மா இருந்த கோலத்தைப்பார்த்து "என்ன மாமிக்கு இந்த கோலம் தேவையில்லை என்று சொன்னார். இது... இப்பொழுது காயத்ரிக்கும் பொருந்தும்" என்றான் ரகுராமன். அவரவர்கள் அருகில் இருந்தவர்களுடன் ரகுராமன் கூறுவது பிராமணதோஷம்... இதை இப்படியே விட்டால் பிராமணத்துவமே அழிந்துபோகும் என்று பேசினர். அப்போது காயத்ரியின் மாமனார் பேசினார். வேதங்களும், சாஸ்திரங்களும் எழுந்த காலம் வேறு அந்த காலத்திற்குத் தகுந்த மாதிரிதான் விதிமுறைகள் அதில் அமைந்திருந்தன. இப்போதைய விதிமுறைகள் வேறாக உள்ளது. அதை பழைய காலத்தோட ஒப்பிடக்கூடாது... மனிதர்களுக்காகத்தான் மரபுகள் ஏற்பட்டனவே தவிர மரபுகளுக்காக மனிதர்கள் ஏற்படவில்லை. மனிதர்களுக்குப் பயன்படாத மரபுகள் உதறப்பட வேண்டும். என் மாட்டுப் பெண்ணை ஊனமாக்க நான் கூட விரும்பவில்லை. யாரும் அவளைத் தொட வேண்டாம். அவள் புருஷன் கட்டிய மாங்கல்யத்தை அசவளே கழற்றி அந்த பால் கலசத்தில் போட்டுவிட்டால் போதும்... என்று சொல்லிவிட்டு அமைதியானார். ஜனங்கள் வாயடைத்துப் போயினர். குழுமியிருந்த பெண்கள் ஒவ்வொருவராய் எழுந்து போயினர். வைதீகத்தில் ஊறிய சிலர் முனுமுனுத்துக்கொண்டே சென்றனர். ஜடமாய் நின்றிருந்த காயத்ரியை பால் கலசத்தின் அருகில் அமரச் செய்து கலங்கினான் ரகுராமன். "அம்மா காயத்ரி... நான் சொன்னதைச் செய்யும்மா... தோஷமில்லை..." என்று மாமனார் கூற அவ்விதமே செய்துவிட்டு கதறி அழுதாள். அவளை பவித்ரா கை தாங்கலாக வீட்டினுள் அழைத்துச் சென்றாள். மறுநாள் காலை காயத்ரியுடன் ரகுராமன் குடும்பம் சமயபுரம் வந்து சேர்ந்தது. புகை படிந்த ஓவியமாய் காயத்ரி ஒரு அறையில் ஒடுங்கிக் கிடந்தாள். மகனின் முற்போக்கு எண்ணத்தைக் கண்டு பூரித்துப்போனாள் சிவகாமி... யாரைப் பற்றியும் கவலைப்படாமல் சிவகாமி முதலில் வீட்டிற்கு நாவிதன் வருவதை நிறுத்தினாள். வெள்ளை சேலையைத் துறந்து பழையபடி வண்ணச் சேலையைக் கட்டிக்கொண்டாள். இதைப் பார்த்த மகன் ரகுராமன் மிகவும் மகிழ்ந்தான். இதை முன்பே செய்திருக்கலாம் என்று பவித்ரா தன் கணவனிடம் கூறினாள். ஆச்சாரம் அனுஷ்டானம் கொண்ட ஒரு குடும்பம் மூடநம்பிக்கையிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டது. ஒரு மாத காலம் கடந்தது. ஒருநாள் பொள்ளாச்சியில் இருந்து லாரி ஒன்று சமயபுரம் ரகுராமன் வீட்டின் முன் வந்து நின்றது. அதிலிருந்து பொள்ளாச்சியிலிருந்து சுந்தரராமனின் அத்திம்பேர் இறங்கினார். "ஏதோ நடந்தது நடந்து போச்சி... வாழ்வே இல்லைன்னு ஆனப்பிறகு வாழ்வதற்காக நீங்கள் கொடுத்து அனுப்பிய சீர்செனத்தை எல்லாம் அவா ஆத்திலேந்து அனுப்பி இருக்கா... இறக்கி வச்சிட்டு போலாம்னு வந்திருக்கேன். நீங்க கொடுத்த ஒண்ணரை லட்ச ரூபாயும் காயத்ரி பேர்லேயே பேங்க்லே போட்டிருக்கு... இதோ அந்தப் பத்திரம்..." என்று சொல்லிக்கொண்டே ரகுராமனிடம் கொடுத்தார். ரகுராமன் வெப்பமாய் வேதனையாய் அவன் மனம் பொங்கியது. சிவகாமி வாய்விட்டு அழுதாள். லாரியோடு வந்த ஆட்கள் ஏற்றிவந்த உடமைகளை இறக்கி உள்ளே கொண்டு போய் வைத்துவிட்டுப் போனார்கள். காயத்ரியின் வாழ்க்கை ஒரு முற்றுப் புள்ளியாய் முடிந்தது. கதையாய், கானலாய், கனவாய், ஒரு மின்னலாய் முடிந்த தன் வாழ்க்கையை எண்ணி எண்ணி கலங்கினாள். கண்ணீர் வற்றிப்போய் கண்கள் பிசுபிசுத்தன. நல்லவேளை! உடல் ரீதியாக இயற்கை அவளுக்கு எந்த தண்டனையும் வழங்கிடவில்லை. காயத்ரிக்காகத் தெருவே துக்கம் கொண்டாடியது. மூன்று மாதங்கள் கடந்தன. ஒரு நாள் ரகுராமனை அழைத்துக்கொண்டு சமயபுரம் கோயிலுக்கு சிவகாமி சென்றாள். "ரகுராமா... நான் சொல்றேன்னு வருத்தப்படாதே... நேக்கு தோண்றதை சொல்றேன்... காயத்ரி சின்ன வயசு... பவித்ராவும் சின்ன வயசு... அதனாலே நீயும் பவித்ராவும் திருச்சியிலே இருக்கிற நம்மாத்து வீடு இருக்கே அங்கே தனிக்குடித்தனம் போயிடுங்க..." என்றாள். "ஆமாண்டா ரகு... எப்ப பார்த்தாலும் பவித்ரா காயத்ரிகிட்டே இருந்துண்டு அவளுக்கு ஆறுதலா இருக்கா... இது நாளடைவில் வெறுப்பா மாறிடும்... அப்புறம் அவள் மனம் புண்பட்டுப் போகும். நன்னா யோசிச்சுதான் சொல்றேன். நம்ம பவித்ராவும் சின்னவள்... நீங்க ரெண்டு பேரும் தனியே இருப்பது தான் நல்லது". "அந்த வீட்டை வாடகைக்கில்லே விட்டிருக்கோம்... திடுதிப்புன்னு அவாளை எப்படி காலி பண்ணச் சொல்ல முடியும்". "நேத்தே போன்லே சொல்லிட்டேன்... அவா எனக்குத் தெரிந்த குடும்பம்தான்... இந்த மாசமே காலி பண்ணிடறதா சொல்லிட்டா. நேக்கு தெரிஞ்சதை சொல்லிட்டேன்... என் காலம் முடியறவரைக்கும் அவளுக்குத் துணையா இருக்கேன்... அப்புறம் கடவுள் விட்ட வழி... என்னடா சொல்றே!", "நீங்க பெரிய மனுஷி... நீங்க சொல்றதும் நல்லதுதான் பவித்ராகிட்டே பேசிபார்க்கிறேன்...", "நான் நேற்றே பேசிட்டேண்டா... அவ நீ சரின்னு சொன்னா திருச்சி வீட்டுக்கே போயிடறதா சொல்லிட்டா". பழைய வீட்டை விட்டு போக ரகுராமனுக்கு வருத்தமாக இருந்தது. ஒரு நல்ல நாளில் ரகுராமன் - பவித்ரா தனிக்குடித்தனம் போனார்கள். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை இருவரும் வந்து போனது காயத்ரிக்கு ஆறுதலாக இருந்தது. தாய்ப்பறவையின் கதகதப்பில் இருக்கும் குஞ்சுபோல காயத்ரி தன் தாயின் அரவணைப்பில் காலத்தைக் கடத்தினாள். அரசாங்கம் நல்ல திட்டம் ஒன்றை உருவாக்கி நடைமுறைப்படுத்தியது. லஞ்சத்திற்கும், சிபாரிசுக்கும் இடமில்லாமல் போனது. தகுதி அடிப்படையில் ஆசிரியர் பணி என்ற இந்தத் திட்டத்தால் காயத்ரிக்கு நேர்காணல் வந்தது. உடனே வேலையும் கிடைத்தது. ஸ்ரீரங்கத்தில் ஒரு பள்ளியில் ஆசிரியையாகப் பணியில் சேர்ந்தாள். ஓராண்டிற்குப் பின் வெளியுலகை காயத்ரி காண ஆசிரியர் பணி அவளுக்கு உதவியது. காயங்களுக்கு மருந்தாக ஆசிரியர் பணி அமைந்தது. கழிந்து போன வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்படாமல் கண்களில் மட்டும் நம்பிக்கை சுமந்திருந்தது. நினைவுகளில் தேன் தடவிக் கொண்டிருந்த அந்த நினைவு துடைத்து எறியப்பட்டிருந்தது. வரண்டு போன சுனையில் நீர் சுரந்தன. பவித்ரா கருவுற்று, திருச்சி பாரி மருத்துவமனையில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். குழந்தை பிறந்த பிறகு வீட்டில் பழைய கலகலப்பு ஏற்பட்டது. மாதத்தில் பாதி நாட்கள் சிவகாமி பகல்நேரத்தில் தன் பேரனுடன் கழித்தாள். காயத்ரியும் ஞாயிற்றுக்கிழமை அண்ணன் வீட்டிலேயே கழித்தாள். குழந்தை சீனு தவழ ஆரம்பித்ததும் சமயபுரத்திலேயே வளர்ந்தான். காயத்ரியின் மனதை குழந்தை சீனு கொள்ளை கொண்டான். விடுமுறை நாட்களில் பவித்ராவும், ரகுராமனும் சமயபுரம் வீட்டிலேயே கழித்தனர். காயத்ரி இன்றும் நெருப்புதான். சற்று ஊதினாலும் கூடக் குபீரென்று பற்றிக்கொண்டுவிடும் சுடாத நெருப்பு அவள். காயத்ரியைப் பார்க்கும் போதெல்லாம் மனதுக்குள் அழுதாள் சிவகாமி. காயத்ரி வேலை செய்து வந்த பள்ளியில் அரவிந்தன் என்ற ஆசிரியர் பணியாற்றிவந்தார். சொந்த ஊர் வயலூர். முற்போக்கான எண்ணம் கொண்டவன். காயத்ரிக்கு ஏற்பட்ட இழப்பை அவன் கேள்விப்பட்டு மிகவும் வேதனைப்பட்டு அவளை மணந்துகொள்ள விரும்பினான். இதற்கான முயற்சியை அப்பள்ளியிலேயே வேலை செய்யும் தமிழாசிரியை திலகவதி அம்மையார் மேற்கொண்டார். முதலில் தனியாக காயத்ரியிடம் பேசினாள். அவளின் அழுகை தான் பதிலாக அமைந்தது. சிவகாமியிடம் காயத்ரி இல்லாத நேரம் பார்த்து பேசினாள். சிவகாமி நீண்ட நாட்களாக நல்ல இடமாக இருந்தால் சாதி, மதம், பார்க்காமல் காயத்ரியை மறுமணம் செய்து வைத்துவிட எண்ணி இருந்தாள். திலகவதியின் முயற்சிக்கு ஆதரவு அளித்ததோடு அரவிந்தனை சந்தித்து அவன் கருத்தைக் கேட்டறிந்தாள். ஆனால் காயத்ரியின் மனம் மறுமணத்தில் ஊக்கம் பிறக்கவில்லை. பள்ளியில் சுற்றுலா ஏற்பாடாகியது. கூற்றுலாவுக்கு காயத்ரியும் சென்றாள். திலகவதி கன்னியாகுமரியில் காயத்ரி மனதைக் கரைத்துவிட்டாள். அரவிந்தனுடன் மனம் விட்டுப் பேச வாய்ப்பையும் ஏற்படுத்தினாள். இந்த ஏற்பாட்டை முடிக்க வேண்டும் என்ற முனைப்போடு சிவகாமியும் இந்த சுற்றுலாவில் மகளுடன் வந்திருந்தார். கண்களில் நீர்த்திரை மறைக்க... உதடுகளில் சிறு நடுக்கம் ஏற்பட... புல்வெளியில் பூக்கள் விழுவதுபோல் அதிராமல் பேசினாள்... அண்ணன், அண்ணியைக் கேட்டு செய்யுங்கள் அம்மா என்று தயங்கித் தயங்கி சொன்னாள். சிவகாமி மகிழ்ந்தாள். முற்போக்குவாதியான ரகுராமன் இதற்கு சம்மதிப்பான் என்று சென்றபோது ரகுராமன் குளித்தலையில் தன் நண்பன் வீட்டுத் திருமணத்திற்குச் சென்றிருந்தான். பவித்ராவிடம் சிவகாமி அரவிந்தன் படத்தைக் காட்டி கூறினாள். பவித்ரா மிகவும் மகிழ்ந்தாள். ரகுராமனிடம் பக்குவமாக எடுத்துக்கூறும்படி சொல்லிவிட்டு வந்தாள். ஞாயிற்றுக் கிழமையாதலால் சீனு தாயிடம் ஒட்டிக் கொண்டான். கேள்விப்பட்ட ரகுராமன் இரத்தம் கொதித்தது... திங்கள் மாலை புயலாக சமயபுரம் வந்தான். "பவித்ரா சொல்வதெல்லாம் உண்மையா?" காயத்ரி உள்ளே சென்றுவிட்டாள். மகன் குரல்கேட்டு சிவகாமி வந்தாள். "அம்மா நான் கேள்விப்பட்டதெல்லாம் உண்மையா?", "ஏண்டா ரகு எத்தனை நாட்களுக்கு காயத்ரி இப்படியே இருக்க முடியும். சின்ன வயசு...அவள் அங்கு வாழ்ந்தது ஒரு மாசங்கூட இல்லை... லோகத்திலே இதெல்லாம் சகஜம்டா... பையன் நல்லவனா தெரியறான். இவ ஸ்கூலில் வேலை செய்யறான். பெயர் அரவிந்தன்... முற்போக்கானவன்..." ரகுராமனுக்கு இரத்தம் கொதித்தது. அம்மா இப்படியெல்லாம் பேச உங்களுக்கு வெட்கமா இல்லே. நம்ம குலம் என்ன கோத்ரம் என்ன. யாரோ கட்டிக்க ஆசைப்படறான்னா உடனே சம்மதிச்சிடறதா? பவித்ரா வீட்டில் என்ன நினைப்பார்கள்? சீனுவின் எதிர்காலத்தைப் பற்றி உனக்கு அக்கறை கிடையாது. என்மேல் தான் தப்பு. அப்போதே தலையை மழுச்சி, உத்திராட்சம் கொடுத்து வெள்ளைப் புடவை கொடுத்திருக்க வேண்டும். அது சரி.. அவளுக்கு இதில் இஷ்டமா... கூப்பிடு அவளை.. தீப்பொறியில் ஆரம்பித்து விறுவிறுவென்று பற்றி எரிமலையாக வெடித்தது!... மீண்டும் அவனே பேசினான். காயத்ரி அறையில் அழுது கொண்டிருந்தாள். "அவன் முதலியார் சாதியாம்.. கட்டி அறுத்தவளை அவன் கட்டிக்கொள்ள ஆசைப்படுவது முற்போக்கு இல்லைம்மா... அவள் சம்பாதிக்கிற பணத்துக்கு. வேலைக்குப்போற பொண்ணாயிற்றே... அதான் ஆசைப்பட்டுட்டான். எச்சிலாக இருந்தாலும் பரவாயில்லைன்னு உங்ககிட்ட தியாகி வேஷம் போடறான்... அதை நீயும் நம்பிட்டே!... நம்ம வீட்டு கௌரவத்தை குலைக்கும் எந்த காரியத்துக்கும் நான் உடன்பட மாட்டேன்.", "டேய் நிறுத்துடா உன் வியாக்கியானத்தை... நீ நினைக்கிற மாதிரி பணத்துக்காக அவளைக் கட்டிக்க அவன் ஆசைப்படலே... பையன் தங்கமானவன். பணம் என்னடா இன்று வரும் நாளை போகும்.. ஆனால் நம்ம காயத்ரியின் இளம் வயதை நீ நினைத்துப்பார்டா.. சாதியாம் சாதி. சாதி எங்கிருந்துடா வந்துட்டுது... எல்லாமே மனுஷன் வகுத்ததுதாண்டா. நீதான்டா சொன்னே... காலம் மாறிப்போச்சின்னு... பணம் பெரிசில்லைடா மனிதநேயம் தாண்டா முக்கியம்... மனம் பக்குவப்படவேண்டும். அந்தப் பக்குவம் அந்த பிள்ளையாண்டான் கிட்டே இருக்குது... நீ இஷ்டப்பட்டாலும், இஷ்டப்படலைன்னாலும் இந்தக் கல்யாணம் நடக்கத்தான் போகிறது...", "ஓகோ... அப்படியா! அப்படின்னா என்னை மறந்திடுங்க... எக்கேடாவது கெட்டுத் தொலையிங்க... நானும் பவித்ராவும் எங்காவது கண்காணாத இடத்துக்கு மாத்திண்டு போய் தொலையிறோம்... நீயும் உன் மகளும் சௌக்கியமா இருங்கோ!" வேகமாக வெளியேறி மோட்டார்பைக் வேகமாக உதைத்துக் கிளப்பிக் கொண்டு புயலாகப் போனான். அறையிலிருந்த காயத்ரி அழுதபடி ஓடிவந்து சிவகாமி மடியில் தலைவைத்து கதறினாள்... சிவகாமியும் அழுதாள்.. ஆனால் அவள் மனதில் உறுதி வெளிப்பட்டது. கவலைப்படாதேம்மா... நான் உன்னை கரையேற்றுகிறேன் என்று சொல்வது போல் அவளை ஆதரவாக அணைத்துக்கொண்டாள். "அம்மா எனக்கு வேண்டாம்மா இந்த கல்யாணம்" என்று கதறினாள் காயத்ரி. "அசடே... எதுக்கு அழறே... எனக்குப் பின்னாலே உன் கதி என்ன? உன் அண்ணன் அவன் பொண்டாட்டி பிள்ளைன்னுதான் இருப்பான். உன் வேலை மட்டும் வாழ்க்கைக்குத் துணையா அமையாது. இந்த கேடுகெட்ட சமுதாயத்தில் நீ வாழ முடியாதும்மா... நான் உனக்கு நல்லதுதான் செய்வேன்.. அவன் கிடக்கிறான்." திலகவதி அம்மையார் வந்தார்கள். அவர்களுடன் அரவிந்தனின் அப்பா அம்மா வந்தார்கள். பேசினார்கள். பவித்ரா ஒருநாள் ரகுராமனுக்குத் தெரியாமல் வந்து காயத்ரியிடம் பேசினாள். சிவகாமி மகிழ்ந்தாள். மருமகளின் பச்சைக்கொடியைப் பற்றிக் கொண்டாள். துணிச்சலின் பெயர்தான் சிவகாமி என்று மெய்ப்பித்தாள். வயலூரில் முருகன் சன்னதியில் எளிமையான திருமணம். முடிந்த கையோடு திருமணம் பதிவு செய்யப்பட்டது... மகனுக்குச் சொல்லாமலேயே அனைத்தும் முடித்தாள். சீர், செனத்தி அனைத்தையும் வயலூர் அனுப்பிவைத்தாள். அரவிந்தன் - காயத்ரி இருவரையும் சிவகாமியின் ஆசியோடு. நல்ல நாளில் வயலூர்க்கு அனுப்பி வைத்தாள். இவர்கள் வயலூர் போவதற்கு முன்பாகவே பவித்ரா வயலூர் சென்று காயத்ரியை அவர்களோடு வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றாள். பவித்ராவின் அன்பான அரவணைப்பைக் கண்டு கண்களில் கண்ணீர் பெருக மன்னியை அணைத்துக் கொண்டாள். சென்னைக்கு வங்கி பயிற்சிக்கு சென்றிருந்த ரகுராமன் அனைத்தையும் கேள்விப்பட்டு மிகவும் கோபப்பட்டான். அவன் உள்ளம் துடிதுடித்தது. புயலாக வந்தான் சமயபுரம். "எங்கே அந்த ஓடுகாலி... நான் ஒருவன் இருப்பதை எண்ணாமல் உங்களுக்கு இவ்வளவு துணிச்சல் வந்தது? என்னை அவமானப்படுத்த வேண்டும் என்றே திட்டமிட்டு நம்ம குலத்துக்கே அழிவு ஏற்படுத்திட்டே. நீ ஒரு பிராமணச்சியா? அவளை என்ன செய்கிறேன் பார். கொலை செய்து விட்டு ஜெயிலுக்குப் போகவும் தயங்க மாட்டேன். எங்கே அவள்? காயத்ரி... காயத்ரி..." டேய் நிறுத்துடா உன் வியாக்கியானத்தை... அவளை அனுப்பி வச்சிட்டேண்டா... எது பேசினாலும் எங்கிட்டே பேசு. வெளியிலே பேசிண்ட உள்ளுக்குள்ளே உணர்ச்சிகளை அடக்கிண்டு ஜடமா வாழ அவ ஒண்ணும் ஐம்பது வயசு கிழவி இல்லைடா. அவளும் மனுஷிதாண்டா... இவ்வளவு பேசறையே... அப்பொழுதே ஏண்டா அவளுக்கு விதவைக்கோலத்தை நீ தடுத்து நிறுத்தினே... நீ நினைச்சா காலம் மாறிப் போச்சுன்னு பேசுவே! நாங்க செய்தா குலத்துக்கு விரோதம்னு கோபப்படுவே! டேய் ரகு நான் வெள்ளை சேலையிலிருந்து பட்டு சேலைக்கும் நூல் சேலைக்கும் மாறினேனே அன்னிக்கு ஏண்டா நீ தடுத்து நிறுத்தலே!...", "...போடா...பெரிய சம்பரதாயத்தை கண்டுட்டே. பழம் பஞ்சாங்கம் நீதாண்டா அன்னிக்கு அத்தனை பேர் முன்னாலையும் கேலி பேசினே! இன்னிக்கு மட்டும் என்னடா! அவள் சின்ன வயசு... நடத்தையிலே பிசகு ஏற்பட்டு எவன் கூடவாவது ஓடிப்போனா? நாம என்னடா செய்ய முடியும்? உன்னைக்கேட்காம நான் செய்யலையே... கேட்டேன்... மறுத்துட்டே...", "...குலம் குலம்னு பேசறையே கட்டின மனைவியை விட்டுட்டு திரிகிறாரே உன் சித்தப்பா அவரால் குலத்துக்கு இழிவு இல்லையா? மத்தவா பொண்டாட்டியை நாடி அலைந்து குடி கெடுக்கிறானே உன் மைத்துனன் அவனால் குலத்துக்கு இழிவு இல்லையா?... உன் தோப்பனார் மட்டும் என்னடா? நம்ம நிலத்திலே வேலை செஞ்ச முனியன் பெண்சாதியை கள்ளத்தனமா வைச்சிண்டு போகத்துக்கு போகம் ஐஞ்சு மூட்டை ஆறு மூட்டைன்னு நெல்லு கொடுத்து அனுப்பியது ஊருக்கே தெரியும்டா... அதனாலே குலத்துக்கு இழிவு ஏற்படலையா? வயித்துலே புள்ளையோட அவ வந்து நின்னப்ப, அவ கிட்டே ஆயிரம் ரூபாய் நான் கொடுத்து அனுப்பிணேன்டா... அதனால் குலத்துக்கு இழிவு இல்லையா?", "மதம், சாதி, சடங்கு, சாஸ்திரம், சம்பரதாயம், எல்லாமே மனுஷாள் உண்டாக்கினதுதாண்டா? அவள் என்ன பெருசா தப்பு பண்ணிட்டா... ஒரு மாசம் கூட அவள் சேந்தாப்பலே ஆம்படையான்கிட்டே அவ வாழலே.. ஏன் அவளை மூலையில் உட்கார வைக்கணும்..? நீ எப்ப உன்னை மறந்துடுன்னு சொன்னியோ அன்னிக்கே முடிவு பண்ணிட்டேண்டா. அவாளுக்கு ஸ்ரீரங்கத்திலே வீடு இருக்காம். அங்கதான் காயத்ரியும் அரவிந்தனும் வாழப்போறாங்க. உன் தோப்பனார் வீட்டை நீ வித்து பணமாக்கிக்க. நான் என் காலத்தை காயத்ரியோட ஓட்டிடறேன்... வரேண்டா" என்று சொல்லியபடி இரண்டு தோல் பெட்டியை எடுத்துக்கொண்டு தெருவில் நடந்து போனாள் சிவகாமி... இரகுராமன் உடல் நடுங்க வாயடைத்துப் போய் நின்றான். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: மாயன், தர்பூசணி, வெள்ளரி, தக்காளி, சின்னாத்தா, பழையனூர், முருகாயி, குமார்
தலைப்பு: வாசமற்ற மலர்கள்
| மதியம் 12 மணி கத்தரி வெயிலு சுளீர்னு மண்டையப் பொளக்கறாப்ல அடிச்சுச்சு. மாயனுக்கு உடம்பெல்லாம் ஒரே கசகசன்னு இருந்துச்சு. இருந்தாலும் என்ன செய்வது வயித்துப் பொழப்பைப் பார்க்கணுமே. இந்த வெயிலுக்கு தர்பூசணியும், வெள்ளரிக்காயும் போட்டா நல்லா லாபம் கிடைக்கும்னு டவுன்ல சொன்னத வச்சு தனக்குன்னு இருந்த 5 காணி நிலத்துல மாயன் வெள்ளரியும், தர்பூசணியும் விதைச்சான். எல்லாக் கிணத்துலயும் தண்ணிவத்திப் போனாலும் மாயன் கிணத்துல மட்டும் இந்த வெயில் காலத்துலயும் சும்மா வெள்ளியை உருக்கி விட்ட மாதிரி சலசலனு இருக்கும். மாயன் தண்ணியத் தொறந்து விட்டுகிட்டே இந்தக் காய்களைக் கொண்டுபோயி உழவர் சந்தைனு ஒண்ணு வந்திருக்கு அதுல போட்டா லாபம் கிடைக்கும்னு விவசாய ஆபிசரு சொன்னாக. அதமுதலச் செய்யணும்! இந்த புரோக்கர் வெடுவானிப்பயக்கிட்ட காச அழுவணும்னு தேவையில்ல மீதியை ரோட்ல கூறு போட்டு வித்தாக்கூட கைல நாலு காசு கிடைக்கும்னு நினைச்சுகிட்டு வேலையைப் பார்த்தான் மாயன். நெல்லைத் தவிர ஒண்ணும் போட மாட்டான். எப்பவாவது தக்காளி போட்டா போடுவான். மாயன் மடையை அடைச்சுட்டு தோட்டத்தப் பார்த்தான் "பிஞ்சும், பூவுமா, புதுசா கல்யாணமான பொண்ணு கணக்கா சும்மா தளதளனு இருந்துச்சு. சரி இந்தத் தடவையாச்சும் ஆண்டவன் வழிகாட்டட்டும்"னு வேண்டினான். கொஞ்சம் காசு கிடைக்கும். இதவச்சு வர்ற தைக்குள்ள இரண்டாவது புள்ள கல்யாணத்த முடிச்சுடணும்னு கணக்குப்போட்டான். மாயனுக்கு 2 பொம்பளப்புள்ளைக ஒரு பையன் மாயனோட பொண்டாட்டி சின்னாத்தா. மூத்த பொம்பளப்புள்ள செல்லத்த போன வைகாசியில தான் கல்யாணம் பண்ணிக் கொடுத்தான் இங்கதான் பக்கத்துல இருக்குற பழையனூர்ல. ஏதோ அவனால முடிஞ்ச சீர் சினத்தி செஞ்சு அவ வாழ்க்கை போயிட்டு இருக்கு. 2 வது புள்ள முருகாயி அம்மாவுக்கு ஒத்தாசயா வீட்டுல தான் இருக்கா. மாயனோட கடைசிப்பையன் குமார். 12வது வரைக்கும் படிச்சுப்புட்டு வேலை வெட்டிக்குப்போகாம மைனரு மாதிரி ஊர் சுத்திகிட்டு திரியறான். அவனுக்கு வீட்டப்பத்தியும் கவல இல்ல. எதைப்பத்தியும் கவல இல்ல. டிப்டாப்பா டிரஸ் பண்ணிகிட்டு கலெக்டரு உத்தியோகத்துக்கு போற மாதிரி கிளம்பிடுவான். எங்க போறான் என்ன செய்யறான்னு தெரியாது. போன மாசந்தான் ஏதோ கட்சியில இளைஞரணியில சேர்ந்தன்னு சொல்லிகிட்டு திரிஞ்சான். மாயனுக்கு வயிறு பசித்தது காலையில நீராரத்தண்ணியக் குடிச்சுப்புட்டு கருக்கல்ல கிளம்பினவன் தான். வந்ததுல இருந்து களை எடுக்கிறது. தண்ணி பாய்ச்சறது, மருந்து அடிக்கிறதுன்னு வேலை இருந்துக்கிட்டேயிருக்கு. தூரத்துல சின்னாத்தாவும் முருகாயியும் வருவது தெரிஞ்சுக்க சின்னாத்தாவோட கைப்பதம் யாருக்கும் வராது. ரெண்டு மொளகாயக்கிள்ளிப் போட்டு புளியக்கரைத்த ஊத்துனாக்கூட அவ்வளவு ருசியா இருக்கும். நினைக்கியிலேயே நாக்கில் எச்சி ஊறுச்சு. முருகாயிக்கு எப்பயும் வயல்ல சாப்பிடத்தான் பிடிக்கும் அதனால ஆத்தாவோட எப்பவும் வந்திருவா. மூணு பேரும் ஒண்ணாச் சாப்பிடுவாங்க. கிணத்துத்தண்ணியில கை கால், முகம் எல்லாம் கழுவிட்டு துண்டுனால துடைச்சுகிட்டே, என்ன சின்னாத்தா என்ன சாப்பாடு வாசன மூக்கத்துளைக்குதே; அட ஒண்ணுமில்லைங்க, மேல்வீட்டு பெரியாத்தா கொஞ்சம் அயிரைமீன் கொடுத்தாக. அதைக் குழம்புவச்சி, கஞ்சி கொண்டு வந்துருக்கேன். அப்ப சீக்கிரம் போடு, இப்பவே நாக்குல எச்சி ஊறுது. சின்னாத்தா கும்பாவுல கஞ்சிப்போட்டு பூசணி இலையில அயிரமீன் வச்சி மாயனுக்கு வெயிலுக்கு இதமா இருந்துச்சு. மூன்று பேரும் சேர்ந்து வயிறார சாப்புட்டாக சின்னாத்தாவும், முருகாயியும், பாத்திரத்தெல்லாம் கழுவிட்டு "அப்ப நாங்க போறோம் நீங்க சித்த நேரம் உறங்கிட்டு வாங்க"னு சொல்லிட்டுப் போனாக. மாயனுக்கும் அசதியாத்தான் இருந்துச்சு. அப்படியே வேப்பமரத்து நிழல்ல படுத்து உறங்கிட்டான் திடீர்னு முழிப்பு வந்து பார்த்தா வெயிலு கொஞ்சம் இறங்கியிருந்துச்சு மாயன் மம்பட்டி, மத்த சாமானெல்லாம் மோட்டார் ரூம்ல வச்சுப்புட்டு வீட்டுக்குப் போனான். வர்ற வழியில ஊரணிப்பக்கம் பெரிய தேவர் பாத்துப்புட்டாரு" என்ன மாயா! நம்ம குமாரு கட்சியில சேர்ந்துட்டாம்போல ஒரே வெள்ளையும் சொள்ளையுமா திரியறான் கேட்டா செயலாளர், அது இதுங்கறான்." அடப்போங்கப்பே அவக்கிடக்கான் வௌரங் கெட்ட நாயி, அப்பு, கட்சியல்லாம் சோறுபோடாது தினம் உழைச்சாத்தான் வயிறு நியைற சாப்பிட முடியும். நானும் வீட்ல உட்கார்ந்துர்ரேனு வச்சுக்கங்க, இவனக் கொண்டாந்து காசு கொடுக்கச் சொல்லுங்க பாப்பம். அப்படியே கொண்டாந்தாலும் அது அடுத்தவனக் கொன்னு தாலியறுத்தக் காசாத்தான் இருக்கும். அப்பு, உங்ககால அரசியல் வேற. இந்தக்கால அரசியல் வேற, ஒருத்தன் ஆட்சிக்கு வந்தா மொத்தமா அடிக்கிறான் இன்னொருத்தன் கொஞ்சம் கொஞ்சமா அடிக்கிறான். போங்கப்பே! அவன் கெட்டுச் சீரழியப்போறான் நான் வர்றப்பே. என் பொழப்பப் பார்க்கணும் பெரியதேவர் சிரிச்சிகிட்டுப் போனாரு. வீட்டுக்கு வந்து சேர்ந்தான் மாயன். சின்னாத்தா ஏய் புள்ளே! உள்ள என்ன பண்ணிக்கிட்டிருக்க? குளிக்கத் தண்ணி எடுத்து வை. சின்னத்தா தொட்டியில தண்ணியக் கொண்டு வந்து ஊத்துனா. மாயன் குளிச்சுகிட்டிருக்கும் போது உள்ளாற ஏதோ சத்தம் கேட்டுச்சு. அவன் மகன் குமாரு தான். அவன் ஆத்தாகிட்ட சண்ட போட்டுகிட்டிருந்தான். "அம்மா காசு கொடுக்குறியா இல்லையா தலைவருக்கு பொறந்த நாளு சால்வை வாங்கணும் காசு கொடு". "போடா வக்கத்த நாயே. இங்க கோவணத்துணிக்கே வழியக் காணமா இவன் எடுபட்ட நாய்க்கு சால்வை வாங்கறானாம் சால்வை. அந்த மனுசன் வெயில்லகிடந்து மாடா உழைக்கிறாரு இவன் இப்பத்தான் வெள்ளையும், சொள்ளையுமா அலையிறான். ஒரு சல்லிக்காசு கிடையாது போடா வெளிய. மாயன் திரும்பிக் கூட பார்க்காம குளிக்சுகிட்டு இருந்தான் போன வாரமே இவுக ரெண்டு பேருக்கும் சண்டை வந்து பேச்சுவார்த்தையில்லை. பன மட்டையில மழை பெஞ்ச மாதிரி தொறுதொறுனு முனங்கிக்கிட்டே குமாரு வெளியே போனான். அவன் போனவுடன் தான் மாயன் உள்ளுக்குள்ள வந்தான். மனைவி சின்னாத்தா அழுதுகிட்டிருந்தா "ஆம்பளபுள்ள பொறந்துட்டான் கஞ்சி ஊத்திக் காப்பாத்துவான்னு பாத்தா இவன் ஏதோ அட்ரஸ் இல்லாத நாய் வேட்டியல்ல புடிச்சிகிட்டு திரியறான் இவன் வம்புனா என்னாகுறது. ஹீம் - என்னைக்குத்தா இந்த மாரியாத்தா கண்ணத் தொறப்பாளோ! இந்தப் பொட்டப்புள்ளையை கட்டிக் கொடுக்கிற வரைக்கும் பொழப்பு நாய்ப் பொழப்பாவுல்ல இருக்கு. மாயன், "சரி விடுறி! விறைச்சுகிட்டு எங்க போகப் போறாரு, சோத்துக்கு இங்க தான் வரணும். நாளைக்கு அவன் தலைவருனு சொல்லிகிட்டு திரியற நாயை செயில்ல தூக்கி போடப் போறாக. இவன் என்ன பண்ணப்போறானாம். அவன் பொண்டாட்டிபுள்ள குட்டிக எல்லாம் நல்லா இருக்குது. இவன் தான் சீப்பட்டுச் சீரழியப் போறான். போகட்டும் விடுடி சோத்தப்பாரு. ஒரு மாதம் சென்றிருக்கும். இப்பெல்லாம் குமாரு வீட்டுக்கே வர்றதில்ல டவுன்லயே இருக்கறதா செய்தி. இப்ப தர்பூசணியும், வெள்ளரியும் நல்ல அறுவடை செய்யும் பதத்தில இருந்துச்சு. நல்ல தளதளனு பார்க்க நல்லா இருந்துச்சு. சனிக்கிழம உழவர்சந்தைக்கும் கொண்டுபோனா கூட்டம் நிறையவரும். பெரிய பெரிய ஆபிசருக எல்லாம் வந்து வாங்கிட்டுப்போயிருவாக. வியாபாரத்த சீக்கிரம் முடிச்சுடலாம்னு நினைச்சுகிட்டிருந்தான் மாயன். மாயனுக்கு இடி இறங்குனாப்ல இருந்துச்சு. புள்ள பொறந்து பேர்வைக்கப் போகையில செத்துப் போன கணக்கா இருந்துச்சு மாயனுக்கு, பெரியதேவருக்குன்ன அவருபாட்டுக்கு சொல்லிபுட்டாரு. அவுரு நல்ல வசதிவாய்ப்பா இருக்காரு ஹீம் எம்பொழப்பு நாய் பொழப்பு கழுதப் பொழப்பாவுல்ல இருக்கு. நாம் ஒண்ணு நினைச்சா தெய்வம் ஒண்ணு நினைக்குது. மாயனுக்கு 2 நாளா ஒண்ணுமே புரியல பாடுபட்டு பக்கப்பட்டு விளையவச்சத நல்ல விலைக்கு வித்தாத்தானே கையப்பிடிக்காம இருக்கும். கடன, உடன வாங்குனத அடைக்க முடியும். எப்படியோ அறுவடை முடிஞ்சுருச்சு. மறுநாள் மாயன் மாட்டுவண்டியில தர்பூசணியும், வெள்ளரியையும், ஏத்திக்கிட்டு டவுனுக்குப் போனான் பஸ்சுல போனா லக்கேசுக்குன்னு தண்டம் அழுவணும் அதனால குறுக்கால போன சீக்கிரம் போயிரலாம்னு நினைச்சுகிட்டு வண்டிய விரசா விட்டான் கூட ஒத்தாசைக்கு சின்னாத்தா, முருகாயி ரெண்டு பேரும் வந்தாக கூட்டு ரோட்ட தாண்டி போகையிலேயே ஏதோசலசலனு சத்தம் போட்டுச்சு மாயனுக்கு கதக்குச்சு. தூரத்துல கட்சிக்கார பயலுக, சோடாப்பாட்டிலு கைச்செயினு அருவா கத்தினு வச்சுகிட்டு எல்லாரையும் வழிமறிச்சு அடிச்சிட்டிருந்தாணுக என்ன ஏதுனு ஓடிவந்தவன்கிட்ட மாயன் விசாரிச்சான் யாரோ அரசியல் தலைவர செயில்ல போட்டாங்களாம் அதுக்கு அந்த கட்சி ஆளுக மறியல் பண்றாக அங்கிட்டு போகாதிகன்னு சொல்லிட்டு அவுர்ற வேட்டிய கையில புடிச்சுகிட்டு ஓடினான். மாயன், "ஏய் பிள்ளைகளா அப்படியே படுத்துக்கிடுங்க. நான் வண்டிய அந்த நாய்க கண்ணுல படாம வரசா விட்டுறேன். ஒருத்தன் கருகருனு கருவாக்கட்டை மாதிரி இருந்தவன். "டேய் அங்கபார்றா ஒருத்தன் நமக்கு டிமிக்கி கொடுத்துட்டுப் போறான். புடிங்கடா டேய் அடிறா வண்டியச் சாயுடா ஒரே கூச்சலு. அழுரக 10 நிமிசத்துக்குள்ள அம்புட்டும் முடிச்சு போச்சு மாயன் பொம்ளப்பிள்ளைகளை அடிக்கவர்றாகளே தடுக்கப்போக அவனுக்கு நெஞ்சுல வெட்டு, புருஷனுக்கு ஏதாவது ஆயிரப் போவுதுனு சின்னாத்தா தடுக்கப்போக அவளுக்கும் வெட்டு முருகாயி மயக்கமாயிட்டா. 2 உசுரும் 1 நிமிசத்துல அடங்கிப்போச்சு கன்னஞ்செவந்தபுள்ள கட்டழகி பெத்தபுள்ள செய்யதறியாம திகைச்சுப் போயிநின்னா தர்பூசணியும், வெள்ளரியும் ரோடெல்லாம் கிடந்துச்சு. மாயன் ரத்தமும், தர்பூசணித் தண்ணியும் ஒண்ணாக் கலந்துச்சு. அப்பத்தான் சீராட்டிப் பாராட்டி சீரு செய்யப் போற ஆத்தாளப்பறிகொடுத்து வகை செய்யப்போற அப்பனப்பறிகொடுத்த முருகாயி அண்ணணப் பாத்துப்புட்டா அவன் அங்கிட்டு முக்குல எவனையோ புடிச்சு அடிச்சுகிட்டு இருந்தாய் டேய்! எங்க தலவர செயில்ல போட்டாங்க நீங்க கவலையில்லாம திரியறியா உன்ன உரிச்சுப் பொலி போடறேன்பாரு. முருகாயிக்கு ஆத்திரம் வந்துவிட்டது. அண்ணன நோக்கிப்போனா, "டேய்! இங்க பார்றா உங்க அப்பன் ஆத்தா செத்துச் சீரழிந்து கிடக்காக நீ இன்னொருத்தன அடிக்கிறயிடா. நீங்கள்ளாம் உருப்பட மாட்டியளா? நாசமாப்போவீக! அப்பன் ஆத்தாவுக்கு உதவவேணாம் இப்படி உயிரோ கொள்ளி வச்சுட்டியே பாவி நீயெல்லாம் ஒரு ஆம்பள த்தூ!....... முருகாயி ஒரு பாட்டம் பாடி முடிச்சா. காரியமெல்லாம் முடிஞ்சு 1 வாரமாச்சு குமாரு வீட்டுப்பக்கமே வரல துக்கத்துக்கு வந்த சனங்கள்லாம் காக்கா, குருவி கணக்கா பறந்து போயிருச்சுக. அவ அக்காவையும் புருசன்காரன் வந்து சாக்கு போக்குச் சொல்லி கூட்டிக்கிட்டுப் போயிட்டான். முருகாயி தனித்துப்போனா.... சொந்தமிருந்து சீண்டாதவளாயிட்டா அழகா இருந்தாலும் வாசமில்லா மலர யாரும் சீந்தமாட்டாக அப்படியாயிருச்சு முருகாயி நிலம இப்படி எத்தனையோ முருகாயிக தெருக்குத்தெரு, ஊருக்குஊரு இருக்காக. அடுத்தநாள் செய்தியில் - "தலைவரின் கரம் கறைபடியாத கரம் எனவே விடுதலை" என்று பெரிய எழுத்தில் வந்தது. அரசியல் வாதிகள் அவர்களுக்கு வேண்டியதை சுருட்டிக் கொண்டு, நடித்துக் கொண்டு அமோக வாழ்க்கை வாழ்கிறார்கள். ஆனால் வெறிபிடித்த ஓநாய் கூட்டமாய் தொண்டர் இனம் திரிகிறது. இவை நிற்கும் வரையில் நம் நாட்டில் வாசமற்ற மலர்களே அதிகமாய்?....... |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: அக்பர், பீர்பல், நீதிபதி, அப்துல் ரஹ்மான், கிழவர், இளைஞன், வழக்கறிஞர்
தலைப்பு: முதல் வழக்கில் வெற்றி!
| ஒருநாள் சக்கரவர்த்தி அக்பர் தர்பாரில் கூடியிருந்தவர்களை நோக்கி, "நமது நீதி மன்றத்தில் வழக்கு விசாரணைகள் ஒழுங்காக நடை பெறுகின்றனவா?" என்று கேட்டார். "மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றன, பிரபு! நமது நீதிபதி ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு பார்க்காமல் நியாயமாக நீதி வழங்குகிறார்!" என்று ஒரு அதிகாரி நீதிபதியைப் புகழ்ந்தார். பிறகு தர்பாரில் இருந்த அனைவரும் அதை ஆமோதிக்க, நீதிபதிக்கு உச்சி குளிர்ந்து விட்டது. ஆனால் பீர்பல் மட்டும் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்ததை கவனித்த அக்பர், "பீர்பல்! நீ மட்டும் ஏன் மௌனமாக இருக்கிறாய்? மற்றவர்கள் கூறியது முற்றிலும் தவறு என்று நினைக்கிறாயா?" என்று கேட்டார். "முற்றிலும் தவறு என்று சொல்ல மாட்டேன். ஆனால் நமது வழக்கு விசாரணைகளும், நீதி வழங்குதலும் திருப்திகரமாக உள்ளது என்று நான் சொல்ல மாட்டேன்" என்றார் பீர்பல். அக்பர் அவரை மேலும் விளக்கம் கேட்க நினைக்கையில், வாயிற்காவலன் உள்ளே நுழைந்து, "பிரபு! ஒரு கிழவரும், இளைஞரும் நியாயம் கேட்டு வந்திருக்கிறார்கள்" என்றான். "அவர்களை வரச்சொல்!" என்றார் அக்பர். உடனே, தர்பாரில் ஒரு கிழவரும், ஓர் இளைஞனும் உள்ளே நுழைந்து சக்கரவர்த்தியை வணங்கினர். "என்ன விஷயம்? உங்களில் யாருக்கு என்ன குறை?" என்று கேட்டார் அக்பர். "பிரபு! என் பெயர் அப்துல் ரஹ்மான்" என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட கிழவர் தொடர்ந்து, "நான் ஒரு சட்ட நிபுணன்! மாணவர்களுக்கு சட்டத்தின் நுணுக்கங்களையும், வழக்கு விசாரணைகளைப்பற்றியும் கற்பிக்கிறேன். இதோ நிற்கிறானே பிரமோத் பிஹாரி! இவன் என் மாணவனாக இருந்தவன்! இவன் மீது நான் குற்றம் சாட்ட வந்துள்ளேன்" என்றார். அந்த இளைஞன் செய்த குற்றம் குறித்து அக்பர் கேட்டார். "பிரபு! இவன் என்னிடம் மாணவனாக சேர விரும்பிய போது, நான் மாதம் மூன்று பொற்காசு வீதம் குரு தட்சிணை தர வேண்டுமென்றும், ஓராண்டு காலம் சட்டம் படிக்க வேண்டும் என்றும் கூறினேன்.ஆனால் இவன் தான் பரம ஏழை என்றும், தட்சிணை கொடுக்க இயலாது என்றும் கூறினான். படிப்பு முடிந்ததும் வழக்கறிஞனாகி முதல் வழக்கில் வெற்றி பெற்றவுடன், முப்பத்தாறு பொற்காசுகள் சேர்த்து தருவதாகவும் வாக்களித்தான். அதை நம்பி இவனுக்கு ஓராண்டு காலம் கற்பித்தேன்.இவன் மிகவும் கெட்டிக்கார மாணவன் என்பதால் ஓராண்டிலேயே மிகச் சிறப்பாக சட்ட நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு விட்டான். நானும் இவன் வழக்கறிஞனாகி, முதல் வழக்கிலேயே வெற்றி பெறுவான் என்றும், தட்சிணையை மொத்தமாகக் கொடுப்பான் என்றும் நம்பினேன்" என்று சொல்லி நிறுத்தினார் கிழவர். "இப்போது பணம் தராமல் ஏமாற்றுகிறானா?" என்று அக்பர் கேட்டார்."இல்லை பிரபு! இவன் திடீரென வழக்கறிஞனாகப் பணி புரியும் யோசனையை கை விட்டு விட்டான். அந்தத் தொழிலில் ஈடுபடப் போவதில்லையாம்!" என்றார். உடனே அக்பர் அந்த இளைஞனை நோக்கி, "எதற்காக உன்னுடைய உத்தேசத்தை நீ மாற்றிக் கொண்டாய்?" என்று கேட்டார்."பிரபு! நான் சட்டம் பயின்று முடித்ததும் வழக்கறிஞர் தொழிலில் ஈடுபடுவதாகத்தான் இருந்தேன். ஆனால் என் சித்தப்பா திடீரென இறந்து போனார். அவர் தன்னுடைய உயிலில் அவருடைய அனைத்து சொத்துகளுக்கும் என்னை வாரிசாக்கி விட்டார். இப்போது நான் லட்சாதிபதி. அதனால் எந்த வேலையும் செய்யத் தேவையில்லை," என்றான். "அப்படியானால் இவருடைய தட்சிணை என்ன ஆவது?" என்று கேட்டார் அக்பர். "நான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவேன். எனக்கு என்று வழக்கறிஞனாக ஆக வேண்டும் என்று தோன்றுகிறதோ, அப்போதுதான் தட்சிணையும் தர முடியும்" என்றான்.பிரமோத் பிஹாரி கூறுவது சரியே என்று நினைத்தார் அக்பர். உடனே அவர் நீதிபதியை நோக்கித் தீர்ப்பு வழங்கக் கூறினார்.நீதிபதி அவர்கள் இருவரையும் நோக்கி, "இரு தரப்பினரின் வாதத்தையும் கூர்ந்து கவனித்தேன். என்னைப் பொறுத்தவரை இந்த வழக்கில் பிரமோத் பிஹாரியின் பக்கமே நியாயம் இருக்கிறது. கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவேன் என்று இந்த தர்பாரில் அவன் உறுதி அளித்துள்ளான்.அவன் சொல்லை ஏற்றுக் கொண்டு, அவனுக்கு என்று வழக்கறிஞராக வேண்டும் என்று தோன்றுகிறதோ, அன்று அந்தத் தொழிலில் ஈடுபட்டு குருவின் தட்சிணையைத் திருப்பித் தரலாம். அதுவரை குரு காத்திருக்க வேண்டும். இதுவே என் தீர்ப்பு!" என்றார். அக்பர் உட்பட தர்பாரில் அனைவரும் இந்தத் தீர்ப்பைப் பாராட்டினர். இதை எதிர்பார்க்காத கிழவர் ஏமாற்றத்தினாலும், வருத்தத்தினாலும் உடல் குறுகிப் போனார்.ஆனால் பீர்பல் மட்டும் தீர்ப்பைப் பாராட்டாமல் மிகவும் மௌனமாக இருந்ததை கவனித்த அக்பர், இந்தத் தீர்ப்பை மறுஆய்வு செய்யுமாறு பீர்பலிடம் கூறினார். அதைக்கேட்டதுமே கிழவரின் முகம் மலர்ந்தது. மிகவும் புத்திசாலியான பீர்பல் சரியான தீர்ப்பு வழங்குவார் என்று அவர் உறுதியாக நம்பினார்.பீர்பல் இளைஞனை நோக்கி, "நீ கொடுத்த வாக்கில் உறுதியாக இருக்கிறாய் அல்லவா?" என்றார். "அதில் என்ன சந்தேகம்? கண்டிப்பாக அப்போது அதில் கிடைக்கும் வருமானத்திலிருந்து என் குருநாதருக்கு சேர வேண்டிய தட்சிணையைக் கட்டாயம் தந்து விடுவேன்" என்றான் இளைஞன்.பிறகு கிழவரை நோக்கி, "பிஹாரியின் நிபந்தனையை நீங்கள் ஆரம்பத்திலேயே ஒப்புக் கொண்டீர்கள் அல்லவா?" என்று கேட்டார் பீர்பல் "ஆம் ஐயா!" என்றார் கிழவர்."அப்படியானால் சட்டப்படி இளைஞனின் தரப்பில்தான் நியாயம் உள்ளது. அவன் வழக்கில் வெற்றி பெற்று தட்சிணை தரும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டியதுதான்" என்றார் பீர்பல். பீல்பலையும், அக்பரையும் வணங்கிவிட்டு அவர் தள்ளாடித் தள்ளாடி வெளியேற, இளைஞன் பிஹாரி வெற்றிப் பெருமிதத்துடன் வெளியேறினான்.திடீரென பீர்பல் பிஹாரியை அழைத்து, "பிஹாரி! இதுதான் சக்கரவர்த்தியின் நீதிமன்றத்தில் உன்னுடைய முதல் வழக்கு! உன்னுடைய வழக்கை விசாரிக்க வேறு வழக்கறிஞரை நியமிக்காமல் நீயே உன் தரப்பு நியாயத்தை வெகு அழகாக எடுத்துக் கூறினாய்" என்றார் பீர்பல். பிஹாரி மகிழ்ச்சியுடன், "நன்றி ஐயா!" என்றான்.பீர்பல் தொடர்ந்து, "அதாவது உன்னுடைய முதல் வழக்கில் நீயே வழக்கறிஞராக இருந்து வாதாடி அதில் வெற்றி பெற்று விட்டாய். இல்லையா?" என்று பீர்பல் கேட்டார். "ஆம் ஐயா!" என்றான் பிஹாரி மகிழ்ச்சியுடன்."அப்படியானால் நீ வழக்கறிஞராக இருந்து வெற்றி பெற்ற முதல் வழக்கு இது! நீ வாக்களித்தபடியே, குருதட்சிணையை உன் குருவிற்கு இப்போதே இங்கேயே கொடுத்து விடு!" என்றார்.ஒருகணம் திகைத்துப் போன அனைவரும், மறுகணமே கைதட்டி ஆர்ப்பரித்தனர். கிழவர் பீர்பலுக்கு மனமார நன்றிகூற, அக்பர் பீர்பலை மிகுந்த மகிழ்ச்சியுடன் தழுவிக் கொண்டார். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: ''ராசாத்தி மகன் பாண்டி செத்துப் போனான்'' என்ற அதிர்ச்சி. தீப்பிடித்த மாதிரி ஊரெல்லாம் சட்டென்று பரவியது. சாமிநாதன் செவியில் அந்தச் செய்தி நெருப்பாகவே இறங்கி மனசைச் சுட்டது. சர்வாங்கமும் குலுங்கிப்போனான். நெஞ்சைக் கவ்விய துக்கம், தொண்டைக்குள் அடைத்துக் கொண்டு நின்றது. ''நெசந்தானா? என்று நம்ப முடியாமல் மனது திகைத்துக்கிடந்தது. நேற்றுக்கூட குடுகுடுவென்று ஓடிவந்து விரலைப்பிடித்துக் கொண்டு, ''மாமா, மாமா'' என்றானே! அந்த ஏழுவயசுக் சிறுவனைப் பார்த்து ''என்னடா'' என்று அன்பு கனியச் சிரித்தானே.... ''தங்கச்சி ஒனக்குப் பகை, தங்கச்சி மகன் ஒனக்கு உறவா?'' என்று கடைத்தெருவில் யாரோ கேலி செய்தார்களே... ''மருமகனைக் கையிலே பிடிச்சிக்கிட்டாத் தானே... நாளைக்கு மகளை ஓசியா தள்ளிவிடலாம் சாமிநாதன் காரியக்காரன் தானப்பா.'' அந்தப் பெரியவர்களின் கிண்டலான பலத்த சிரிப்புக்கு அர்த்தம் விளங்காமல், மாமா முகத்தைத் திகைப்பாய்ப் பார்த்தான், பாண்டி. ''என்னடா வேணும் பாண்டி?'' ''துட்டு மாமா.. துட்டு'' ''துட்டு எதுக்குடா..? வடை வேணுமா?'' ''ம்'' அந்தப் பிஞ்சு முகத்தில் கும்மாளமிடுகிற களிப்பு. சின்ன உதடுகளில் மின்னுகிற சிரிப்பு. உளுந்த வடையைக் கையில் வாங்கியவுடன் உலகத்தையே ஜெயித்துவிட்ட பெருமை. அந்தச் சிறுவனுக்கு. முகமெல்லாம் பூஞ்சிரிப்பாக விரிய, கால் முளைத்த பூச்செண்டாக ஓடினானே...! நேற்றுதானே.... அந்தப் பயலா செத்துப்போனான்? இதென்னடா... பேய்க்கூத்தாயிருக்கு.... அந்தப் பூவைக் கிள்ளிக் கொண்டு போகச் சாவுக்கு எப்படித்தான் மனசு வந்துச்சு? இந்தச்சாவு வாயிலே மண்ணுவிழ! சாமிநாதன் மனசெல்லாம், மழையில் நனைந்த காகிதமாக நைந்துபோய்..... சோகத்தில் பொதும்பிப் போயிருந்தது. அந்தப் பிஞ்சு முகத்தைக் கடைசியாக ஒரு தடவை பார்த்துவிட மனசு ஆவேசப்பட்டது. பரபரத்தது. ஓடத் துடிதுடித்தது. துண்டைத் தூக்கித்தோளில் போட்டுப் புறப்பட்டவன். அப்படியே திகைத்துப் போனான். ''அதுக்காக.... அந்தப் பயலோட வீட்டு வாசப்படி மிதிக்கவா? மனசில் சுரீரிடுகிற உணர்வுகள், வெக்கையடிக்கிற அனலாக நினைவுகள், ரோஷமாய் எழுகிற அக்கினி. அப்படியே சோர்வுடன் திண்ணையில் உட்கார்ந்துவிட்டான். மட்டியைக் கடித்துக்கொண்டான். மனசைக் கட்டுப்படுத்திக் கொண்டான். முறுக்கிக்கொண்ட மனசுக்குள் விறைத்துக் கொண்ட உணர்வுகள். போலீஸ் ஸ்டேஷனில் பயத்தில் வியர்க்கிற மனசோடு நின்ற காட்சிகள்: கண்ணில் தட்டுப்பட்ட காக்கிச்சட்டைகளுக்கெல்லாம் பயந்து குழைந்த அவலம். ''ஏண்டா. டேய்... நீயெல்லாம் கல்லெடுத்துப் பாய்றதுன்னா... நாங்க நாற்காலிக்கு அலங்காரமாக இருக்கவா இங்கே இருக்கோம்?'' என்று அதட்டலாக நெருங்கிய சப்-இன்ஸ்பெக்டர் ஓங்கிய கை மாறாமல் சப்பென்று அறைந்த அடியில் பொறி கலங்கி நின்ற பயங்கரக்கோலம். அந்தக் கேஸ் கோர்ட் வரைக்கும் போனால் என்ன ஆகுமோ, ஏது ஆகுமோ என்ற அச்சத்தில்.... ஸ்டேஷனிலேயே தீர்த்துக் கொள்ள யார் யாரிடமோ கெஞ்ச வேண்டிய அசிங்கம்..... ஆசை ஆசையாய் வளர்த்த - பணம் பெற்ற பசுமாட்டை, அடிமாட்டுக்கு விற்றதுபோல விற்று யார் யாருக்கோ லஞ்சமாய்க் கொடுத்துச் சீரழிந்த கொடுமை.... இதனாலெல்லாம் அடைந்த கேவலம்.... இந்தக் தலைமுறைக்கே தாங்குமே. ஊரெல்லாம் கைகொட்டிச் சிரிக்கிற சிரிப்பாணியாய்.. அவமானப்பட்டுத் தலைகுனிய வேண்டியதாகியிருந்ததே.... இத்தனைக்கும் காரணமான தங்கச்சி புருஷன் மூக்கையா. ச்சே! இம்புட்டு நடந்த பிறகும்... அந்த அற்பப்பயல் வீட்டிலே போய்க் கால் வைக்கவா? சோறு திங்கிற மானஸ்தன் எவனாவது, அவன் வீட்டிற்குப் போவானா? மனசில கொந்தளித்துக் கொதிக்கிற நினைவுகள். உள்காயத்தின் ரணங்களை நினைவுபடுத்துகிற வேதனை. அப்படியே சுவரில் சாய்ந்துகொண்டான். உள்ளே சின்ன முகம் காட்டுகிற பாண்டி, பூஞ்சிரிப்போடு எச்சில் வடிக்கிற பாண்டி, கால் முளைத்த பூச்செண்டாக ஓடுகிற பாண்டி. வெறியோடு இழுத்த இழுப்பில் பீடியின் முகம் கங்காய் மின்னி வெடிக்க. மனசுக்குள் போலீஸ் ஸ்டேஷன், எஸ்.ஐ. அடித்த அடிகள். செத்துப்போன அம்மா அய்யாவையெல்லாம் இழுத்து நாறிப் போன வார்த்தைகளால் திட்டிய வசவுகள். அப்போது - நாலைந்து பேர்கள் திமுதிமுவென்று வீட்டுக்குள் நுழைந்தனர். ஆள் ஆளுக்குச் சத்தம் கொடுத்துக்கொண்டு, கண்டன வார்த்தைகளை உதிர்த்துக் கொண்டு... ஆளுக்கொரு இடத்தில் உட்கார, ஒரு பெரியவர் மட்டும் நின்றுகொண்டே உரிமையோடு கண்டித்தார். ''என்ன சாமிநாதா. ஒனக்குப் புத்தியேயில்லியே. கிளம்பு. முதல்லே அங்கே போவோம்.'' ''எங்க மாமா?'' ''ஊரே திரண்டு ஒந்தங்கச்சி வீட்டிலே கூடிக்கிடக்கு. வாயிலே வயித்துலே அடிச்சிக்கிட்டுப் புலம்பிக் கிடக்கு. கூடப் பொறந்த அண்ணன் நீ. இப்படிக் குத்துக்கல்லா இருந்தா... எப்படி?'' ''அங்கே எனக்கொன்னும் சோலி இல்லியே, மாமா'' ''அறிவுகெட்டதனமா பேசாதே. உறவு முறைகளுக்குள்ளே சண்டை சத்தம் வரத்தான் செய்யும். அதுக்காக, பகையைப் பத்திரப்படுத்தக்கூடாதப்பா நல்லதுலே கூடிப்போகாட்டாலும்... இழவுலே கட்டாயமா கூடிப்போகணும்'' ''இது கூடிப்போற பகையில்லே மாமா. நா அனுபவிச்ச அவமானம் எனக்குத்தான் தெரியும். அவுகஅவுகளுக்கு வந்தால் தான் தெரியும். காய்ச்சலும் தலைவலியும்!'' ''அதெல்லாம் வாஸ்தவம்தானப்பா.... இதெல்லாம் நினைச்சுக் கிட்டிருக்கிறதுக்கு இது நேரமில்லை. சாமிநாதா, ஒரே நாள் ராத்திரியிலே வாயாலே. வயித்தாலே போய். செத்துக்கிடக்கிற அந்தச் சின்னப்பயலுக்கு நீ தாய் மாமன். நீதான் கோடித்துணி போட்டு, மயானம் வரைக்கும் ஒம் மருமகனைத் தூக்கிட்டு வரணும். சம்பிரதாயம் தெரியாதா, ஒனக்கு? புறப்படு.'' ''தாய்மாமன் இருந்தால்தானே, மாமா? செத்துட்டான்னு வைச்சுக்கோங்க'' ''ஏலேய் சாமிநாதா, நீ மாமா சொல்றதைக் கேக்கப் போறீயா. இல்லியா.'' மாமா. நீங்க இதை விட்டுட்டு வேறு பேச்சைப் பேசுங்க கேக்கறேன்.'' ஒரே பிடி சாதனையாய் மறுத்துவிட்டான். வாய்க்கு வந்தபடி திட்டிப்பார்த்தார் பெரியவர். மற்றவர்களும் அற்பப்பயலே, என்றெல்லாம் திட்டிப்பார்த்தனர். இவன் அசையவேயில்லை. எப்படி அசைவான்? அசைகிற மாதிரியான பகையா? மானத்தையும் பொருளையும் சேதப்படுத்தி, ஊரார் முன்னிலையில் நிர்வாணப்படுத்திய அந்த அவமானத் தீயை அவ்வளவு சுலபமாகவா மறந்துவிட முடியும்? தலைமுறை உள்ளளவுக்கும் மறக்க முடியாத கேவலமாயிற்றே...? சாமிநாதனின் பெரியப்பா இறந்த இழவுக்குத் தங்கச்சி புருஷன் மூக்கையா, வேட்டியும் பாலியஸ்டர் சட்டையும் எடுத்துப்போட்டிருந்தான். மூக்கையா வழியில் ஒரு பெரியவர் இறந்த இழவுக்கு ''செம்பு'' எடுத்திருந்தான். அவனுக்குச் சாமிநாதன் வேட்டி சட்டை எடுத்துப்போடணும் அருங்கோடை, கைக்கும் மெய்க்கும் காசில்லாத நேரம். கண்ணு முழி பிதுங்குகிற காலம். அதற்காகச் செய்ய வேண்டிய ''வளமுறை''யைச் செய்யாமல் இருக்க முடியுமா? எப்படியோ உருட்டிப்புரட்டி கிடைத்த பணத்தில் வேட்டியும் துண்டும்தான் எடுத்துப்போட முடிந்தது. சட்டை எடுத்துப் போடவில்லை என்பதில் மூக்கையாவுக்கு மனச்சடவு கோபம். ''சபையிலே கரியைப் பூசிட்டானே. இவனெல்லாம் மச்சானா?'' என்று சாடை மாடையாய்ப் பேசினான். இவனுக்கு ஆத்திரமாய் வந்தாலும் சகித்துக்கொண்டான். பல்லைக்கடித்துக் கொண்டான். இயலாமையைக் குத்திக் காட்டுகிற அவமானம். உறவில் சின்ன விரிசல். தங்கச்சி கூடப் பார்த்தால் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். மூக்கையன் அதற்கும் மேல். அப்போதுதான்... அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. துட்டுச்சிக்கல் காரணமாகச் புஞ்சைப்பொழியில் நின்ற நான்கு வேலி மரங்களை விலைபேசி விறகுக்கு விற்றிருந்தான் சாமிநாதன். பெரியமரங்கள் அந்த வேலிமரங்கள். சாமிநாதன் புஞ்சைக்கும், மூக்கையா புஞ்சைக்கும் நடுவில் ஓடிய ஓடையில் நின்றன. விறகுக்கு வாங்கியவன் என்ன நினைத்தானோ... சாமிநாதனையே மரத்தை வெட்டித்தரும்படி கூறிவிட்டான். வெட்டுக் கூலியாக ரூபாய் முப்பது கொடுத்துவிட்டான். அரிவாள் கோடாரியோடு புஞ்சைக்குப்போய்..... சாமிநாதன் வேலையைத் தொடங்கினான், துரட்டியால், மேல்முட்களையெல்லாம் இழுத்து ஒதுக்கிவிட்டு, கட்டைவிறகை வெட்டத் துவங்கிய போது. ''எந்த பய மகன்டா விறகை வெட்டுறது?'' என்று குரல், இவனது மனசில் செருப்படியாக விழுந்தது. திரும்பிப் பார்த்தால்... மூக்கையா. ''என்ன மாப்புள்ளே, வாய் நீளுது?'' ''மாப்புள்ளே... எம் புஞ்சை விறகை எதுக்காக வெட்டணும்?'' ''இது ஒம் புஞ்சைக்குப் பாத்தியப்பட்டதில்லே. எம் புஞ்சை பொழியிலேதான் மரம் நிக்குது.'' ''உழுது உழுது பொழியை நகட்டிக்கிட்டே வந்ததுமில்லாம.... மரத்தையும் வெட்டவா வரணும்? இதைப் பார்த்துக்கிட்டுச்சும்மாயிருக்க. நா ஒன்னும் பொட்டப்பய இல்லே.'' ''ஊர்லே பெரியாளுக இருக்காக. கூட்டிக்காட்டுவோம். அவுக சொல்றதைக் கேட்டுக்கிடுவோம்'' ''பெரியாளுக... கிழிப்பாக! இந்த ஊர்லே நியாயம் பேசுற பெரிய மனுசன் எவன் இருக்கான்? மரத்தை வெட்டக்கூடாதுன்னா.... வெட்டக்கூடாது.'' ''மீறி வெட்டினா...?'' ''ஒருத்தனுக்குப் பெறந்த உத்தமன்னா... வெட்டக்கூடாது.'' ''மாப்புள்ளே வௌகாரம் பேசுறப்போ... வார்த்தை சுத்தமா பேசணும். சிந்துனா... அள்ள முடியாது.'' ''எனக்குப் புத்திமதி சொல்ல ஒரு பயலும் வரவேண்டாம்.'' ''பய பரட்டைன்னு பேசினா... மண்டை சிதறிப்போகும்... ஜாக்கிரதை.'' அரிவாளை ஓங்கிய இவனின் கையைப் பிடித்தான் மூக்கையா. வார்த்தைகள் தடித்தன. சாமிநாதன் நெருப்பாகிவிட்டான். கைகலந்துவிட்டார்கள். மல்லுக்கட்டிப் புரண்டார்கள். விலக்கிவிட யாருமில்லை. கீழே கிடந்த சாமிநாதனின் மேலே உட்கார்ந்து மூக்கையா அரிவாளை ஓங்க.... சாமிநாதனுக்கு உயிர்ப்பறவை சிறகடிக்க... அவன் கைக்கு ஒரு பெரிய கல் கிடைக்க ஓங்கியடித்துவிட்டான். முக்கையாவின் வலது நெற்றியில் ரத்தம் சள்ளென்று முகம் காட்டி வழிந்தது. அவன் போட்ட அலறலில் காடுகளில் வேலை பார்த்த ஆட்கள் ஓடிவர. இருவரையும் பிய்த்து விலக்கிவிட்டனர். மூக்கையா ரத்தம் வழிய சைக்கிளை எடுத்துக்கொண்டு போலீஸ் ஸ்டேஷன் போய்விட்டான். எல்லாம்... நூத்தியறுபது ரூபாய்க்கு விற்றவேலி மரத்தால் வந்த வினை.. உணர்ச்சியின் பாதையில் வார்த்தைகளைச் சிதறி வந்த சண்டை. ஒரு பசுமாட்டையே விற்று காக்கிச்சட்டைகளின் வாயில் போட்டதுடன் முடிந்தது. அதையெல்லாம் இப்போது நினைத்தால்கூட... மனசின் ஆழத்திலும் கசந்துகிடக்கிறது அவமானத்தீ எரிகிறது.... ச்சே! இதுக்குப்பிறகும் அந்த வீட்டு. வாசப்படியை நா மிதிக்கவா? வெக்கக்கேடு! அப்படிப்பட்ட மானங்கெட்ட சொந்தம் என்னத்துக்கு? வீட்டுக்குள் விருட்டென்று நுழைகிறாள் மனைவி பார்வதி. அலை குலைய வருகிற அவள் கையில் ரெண்டு மீட்டர் மல்கோடித்துணி. ''என்ன பார்வதி, இது?'' ''நீங்க போங்க. போகணும்'' ''அதெல்லாம் நடக்காது'' ''... இங்க பாருங்க. பெரியாளுக செய்ஞ்ச அக்ரமத்துக்கு, அந்தச்சின்னப்புள்ளை என்ன செய்யும்? சொல்லுங்க. அவுகதான் உங்களுக்குப் பகை. இந்தப்புள்ளை என்னைக்காச்சும் ஒதுங்கி நின்னதா? மாமா, மாமான்னு ஓயாமெ ஓடி வருமே. அத்தை, அத்தைன்னு என்னை வாய்நிறையக் கூப்புடுமே, இனிமே அந்தச் சத்தத்தை எங்க போய்க் கேக்கப்போறேன்... அய்யய்யோ! என்றவள் தாங்கமுடியாமல் கதறியழுதுவிட்டாள். பேச வாய் வராமல் தலையில் ''மடேர், மடேரென்று அடித்துக்கொண்டே அப்படியே உட்கார்ந்துவிட்டாள். அவள் அழுத அழுகையில். இவனும் கலங்கிவிட்டான். ''மாமா, துட்டு'' என்று ஓடி வருவானே... தெருவில் எந்த இடத்தில் உட்கார்ந்திருந்தாலும், மடியில் உரிமையோடு ஏறி உட்காருவானே.... ''உங்ககிட்டே துட்டு வாங்குனா... அய்யா அடிக்காரு. ஏன் மாமா?'' ''உங்கப்பன்கிட்டேதான் கேக்கணும்.'' ''எங்கய்யா ரொம்ப மோசம். என்ன மாமா....'' மனசில் பூக்களை அள்ளித்தூவுகிற அந்தச் சிரிப்பு, காடைக் குருவியாய் அவன் ஓடுகிற அந்த ஓட்டம். அந்தச் சிறுவனின் உதட்டோரங்களில் வழிகிற எச்சில், அதில் ததும்பி நிற்கிற அன்புணர்ச்சி.... சாமிநாதனுக்குள் ஊற்றெடுக்கிற ஒரு பிரவாகம். உள்ளுக்குள் ஏதோ நொறுங்கிச் சரிகிற உணர்வு, கண்களில் உறுத்திக்கொண்டு வெளிவரத் துடிக்கிற கண்ணீர். ''இங்க பாருங்க, உங்களுக்கு உங்க தங்கச்சியும் வேண்டாம். மச்சினனும் வேண்டாம். அவுக பகை. பகையாகவே இருக்கட்டும். அந்தப் புள்ளைக்குத் தாய்மாமன் கடமையை மட்டும் செய்துட்டு வந்துடுங்க'' அழுகையோடு அவள் சொன்ன வார்த்தையில் அர்த்தம் இருந்தது. இவன் அசைந்தான். ''தாய்மாமன் கடமையை மட்டும் செய்துட்டு வந்துடணும். கோடித்துணியைப் போட்டுட்டு, மயானம் வரைக்கும் அந்தப்புள்ளையைக் கையிலே ஏந்திக்கொண்டு போய்க் குழியிலே போட்டுட்டு நேரா வீட்டைப் பார்த்து வந்துடணும் அந்தச் சனியன்ங்க முகத்திலே விழிக்கவே கூடாது!'' பாண்டியைக் குளிப்பாட்டி முடித்துவிட்டார்கள். ஊரே திரண்டு நின்றது. திடீரென்று வந்த சாவின் அதிசயம் பற்றி தாய்மாமன் தீராப்பகை பற்றிப் புலம்பிக்கொண்டு நின்றது. பெரியவர் பெருமூச்சோடு கூறினார். ''இனிமே அந்தப்பய வரமாட்டான். தூக்குறதுக்கு வழியைப் பாருங்க. யப்பா நாவிதா, சங்கை ஊது. ''சாமிநாதன் இந்தா வந்துட்டான்.'' எல்லாரும் இந்தப்பக்கம் திரும்பிப்பார்க்க. சாமிநாதன் ஒற்றையாளாக வந்து கொண்டிருந்தான். அவன் யாரையும் பார்க்காமல். நேராகக் கிடத்தப்பட்டிருந்த பாண்டியின் பக்கம் வந்தான். மஞ்சள் தடவிக் குளிப்பாட்டிக்கிடந்த அந்தச் சிறுவன் சடலத்தைப் பார்த்ததும் அவனுள் உடைப்பெடுத்துப் பாய்ந்த உணர்ச்சிகள்.... நெஞ்சுக்குள் உடைந்து தொண்டைக்குள் வந்து திரண்டு கொண்ட அந்தத் துக்க உணர்வுகள். ''அண்...ணாச்சீ, எம் புள்ளை கிடக்குற கோலத்தைப் பாத்தீகளா?'' என்ற கதறலுடன் தலைவிரிகோலமாய் இவன் கையைப் பிடித்துக்கொண்டு அழுகிற தங்கச்சி ராசாத்தி. முகத்தை மூடிக்கொண்டு இறுகிக்கிடந்த மூக்கையா இவனைக் கண்டதும் உடைந்துபோய், குலுங்கிக் குலுங்கி இவன் தோளில் முகம் புதைக்கிறான். அவனது கண்ணீர் தோளில்.... முழிக்கக்கூடாத முகங்கள் ஒன்று கையில் ஒன்று தோளில். இவனுக்குள் கற்றையாய் ஊற்றெடுத்த மானுடப்பிரவாகம், நொறுங்கிச் சரிந்து கிடந்த கழிசடைகளையெல்லாம் அடித்துக் கொண்டு கரைபுரள..... ஆறுதல் தேடி அலைமோதுகிற அந்த ஆத்மாக்களை அன்போடும் அழுகையோடும் அணைத்துக்கொண்டான். இவனும் துக்கம் தாளாமல் வெடித்துக் கதறிவிட்டான்!.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'மானுடப் பிரவாகம்' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: \ ''ராசாத்தி மகள் மூலையில் உட்கார்ந்து விட்டாள்.'' முந்தா நாளிலிருந்து ஊரில் இதே பேச்சுதான். ஊர்ப் பெண்கள் மூக்கில் விரலை வைத்தனர். வாயைப் பிளந்தனர். ஆச்சரியத்தில் மாய்ந்து போனார்கள். ''நிஜந்தானா'' ''நிஜந்தானா'' என்று ஒவ்வொரு பெண்ணும் திணறித் தவித்தார்கள். பூங்கோதைக்கும் ஆச்சரியம்தான். அத்துடன் கொஞ்சம் அதிர்ச்சியும்கூட. மனசுக்குள் மெல்லிய நெருடல். ஆழத்திற்குள் ஜில்லிட்டுப் பாய்கிற பயம். ''அப்பவும் இப்படியா. அப்பவும் இப்படியா'' என்று வாய்க்கும், கைக்குமாய் புலம்பிக்கொண்டிருந்தாள். புருஷனுக்கும், பிள்ளைகளுக்கும் எல்லாவற்றையும் கவனித்து, சமாளித்து முடித்துவிட்டு, கூலி வேலைக்குக் கிளம்பினாள் பூங்கோதை. அவளுடன் வந்து சேர்ந்து கொண்டாள் மாடத்தி. அவளிடமும் சொல்லிச் சொல்லி மாய்ந்தாள் பூங்கோதை. மாடத்திக்குப் பிடிக்கவில்லை. வெடுக்கென்று மறுத்துப் பேசினாள். ''பொம்பளைப்புள்ளே சடங்காகுறது ஒரு அதிசயமா? இதுக்குப்போயா... இப்படி வாயாடிக்கிட்டிருக்கே?'' ''அப்பவும் இப்படியா பதினோரு வயசுகூட ஆகலே, இன்னும் தாவணியும் போடலை. அதுக்குள்ளேயா? இதெல்லாம் காலக் கூத்துதான். ''அதுக்கென்ன. கணக்கா இருக்கு? சில உடம்புவாகு அப்படி அதனாலே இருக்கும்லே?'' ''என்ன உடம்போ...! நாங்க எல்லாம் சீலை கட்டுன முழுத்த பொம்பளைகளா ஆனப்பெறகுதான், மூலையிலே உக்காந்தோம். இப்ப என்னடான்னா.. பால்குடி மறந்த புள்ளைககூட சமைஞ்சிருதுக.'' ''அதுக இச்சையிலா நடக்குது? அதுக்கு அந்தப் புள்ளைக என்ன செய்யும்?'' ''நானும் அதுகளை குத்தம் சொல்லலை'' ''நீ சொல்றதும் வாஸ்தவம்தான். முந்தி மாதிரி இல்லே இப்ப. ரொம்பச் சின்னஞ் சிறுசுககூட ''பொசுக் பொசுக்'' குன்னு பூத்துருதுக'' ''மூலை மூலைக்கு நடக்குற சினிமா. டிவிகளைப் பாத்துப் பாத்து... வர்ற சீரழிவு'' காலை வெயில் சுள்ளென்று தைக்கிறது. மாடத்தி நடையை எட்டிப்போட்டாள். இவளும் தொடர்ந்தாள். விலகி எங்கோ ஓடுகிற நினைவுகள்.... பூங்கோதை சின்னப் பிள்ளையாக, பாவடை கட்டியிருந்த சமயம்... சினிமா என்றால் அதிசயம். பார்க்கக் கிடைக்காத அபூர்வம் ஆசைப்பட்டவுடன் பார்த்துவிட முடியாது. சினிமா என்றால், அப்போ திருவேங்கடம் போகணும். கெஞ்சிக் கூத்தாடி. அய்யா - அம்மாவிடம் வசவுகள் வாங்கி, அப்புறம் சம்மதம் வாங்கி.... பெரியாள்களுடன் ஈடுகொடுத்து, நாலரை மைல் நடந்து சாகணும். கண்மாய்க் கரையில் - காய்ந்து பொடிப் பொடியான கரிசல் கட்டிகள் நெரிஞ்சிமுள்ளாய் குத்தும். அதையும் தாங்கிக்கொண்டு ''லொக் லொக்'' கென்று மூச்சிறைக்க ஓடணும். டூரிங் தியேட்டரில் மணலைக் கூட்டி, உட்கார்ந்து படம் பார்த்துவிட்டு... மையிருட்டில் முள்ளுக் காட்டில் மறுபடியும் நடை. வீடு வந்து சேர்வதற்குள், கோழி கூப்பிட்டு விடும். மறுநாள் எழுந்திருக்க முடியாது. அடித்துப் போட்ட மாதிரி உடம்பெல்லாம் வலியெடுக்கும். அப்புறம் ரொம்ப நாளைக்கு சினிமா ஆசையே வராது. இப்போது... அப்படியா? வாரம் வாரம் டி.வி.யில் சினிமா. டி.வி. உள்ள புண்ணியவதிகள் வீட்டுக்குள் புளிச்சிப்பமாய் அடைந்து கிடந்து, சிறிசு, பெரிசுகள் எல்லாம் போய்ப் பார்த்து விடுகின்றன. இதுவும் போதாதென்று. ஊர் மைதானத்தில் பத்து நாளைக்கு ஒரு தடவை ''டெக்''கும், டிவியும் வந்துவிடும். யாரோ சிலர் ஏற்பாடு செய்திருப்பார்கள். வீடு தேடி வந்து கதவைத் தட்டுகிற சனியன்கள். ஊரே திரண்டு, விடிய விடிய கண் கூசாமல் பார்க்கும். ஒரு ராத்திரிக்கு நாலு படங்கள். இப்போது வருகிற சினிமாக்கள், மனுச மக்கள் உட்கார்ந்து பாக்கிற மாதிரியாகவா இருக்கிறது? ஒரு கதை உண்டா? கருத்து உண்டா? ஒரு இழவும் இல்லை. ஒரே ஆடுகாலித்தனம்தான். காமக்கூத்தும், அசிங்கமும்தான், டவுசர் போட்ட சின்னப் பையனும், பொண்ணும் காதலிக்க தண்ணீரில் நனைய, தாவணியை உருவ...த்தூ! அசிங்கம். இந்தக் கூத்துக்களை மனம் கூசாமல் விடிய விடிய பார்த்து ரசிக்கிற சின்னதுகளும், பெரியதுகளும்..... பெரியதுகளாவது... காடு கரைகளில் இந்த அசிங்கங்களைப் பேசிச் சிரித்து கழித்து விடுவார்கள். பாவம் சின்னதுகள்.... உள்ளுக்குள்ளேயே பொத்தி, பொத்தி அடைகாத்து.. ஒன்றுக்குப் பத்தாக யூகங்கள் பொறித்து... தீயிலே பிடுங்கிப் போட்ட பிஞ்சுக் காய்களாக அதுகளே வெந்து வெடிச்சிருதுக.... இதைக் காலக் கூத்து என்பதா, சினிமா கூத்து என்பதா? ஹூம்... அடக் கூத்துவனே!.... ''என்ன பூங்கோதை, சத்தத்தையே காணோம்?'' ''ஒண்ணுமில்லே'' என்றவள். பெருமூச்சுடன் வெளி உலகத்துக்கு வந்தாள். இழுத்துக் கொண்டு ஓடுகிற நினைவுகளை இழுத்துப் பிடித்தாள். ''ராசாத்தி மகளைத்தான் நெனச்சுட்டு வாரீயா?'' ''இல்லே. பொம்பளையா ஜென்மம் எடுக்குறதே ஒரு பாவம்தான்'' ''ம்ச்சூ'' ''இதெல்லாம் எங்க ஒழுங்கா நடக்குது? இந்தா, என்னைத்தான் பாரேன். புல்லு மொளைக்காத பொட்டக்காடா.. எம் பொழப்பு'' சட்டென்று குலுங்கிப் போய் விட்டாள் பூங்கோதை. பக்க வாட்டில் திரும்பி அவள் முகத்தைப் பார்த்தாள். மாடத்தி முகத்தில் கனத்து நின்ற சோகம். கண்களின் ஆழத்தில் ஒரு வேதனை. பார்க்கத் திராணியில்லாமல் பாதையைப் பார்த்தாள் பூங்கோதை. மனசு கிடந்து அடித்துக் கொண்டது. பேச விஷயமே இல்லாமல் போய்விட்ட மாதிரி ஒரு வெறுமை. அவர்களைச் சுமையாக அழுத்துகிற ஒரு மௌனம். ஆழ்ந்த துயரமான மௌனம். நல்ல வார்த்தை ஏதாச்சும் சொல்ல ஆசைப்பட்டாள். என்ன சொல்லித் தேற்றுவது? சொல்லி ஆறுகிற சோகமா... மாடத்தி சோகம்? எல்லாக் குமரிகளையும் போல, மாடத்தியும் நல்லபடியாக வளர்ந்தவள்தான். ஆட்டபாட்டமாய் கும்மாளம் போடுகிற புது வெள்ளமாய்.. கனவுகளோடு பொங்கிச் சிரித்தவள்தான். நல்ல இடத்தில்தான் வாழ்க்கைப்பட்டு வெட்கச் சிரிப்போடு போனாள். இன்பத் ததும்பலில் முதல் வருஷத்திலேயே ஆண் பிள்ளை பிறந்தது. செத்தும்போனது. அப்புறம், அவள் வாழ்க்கையில் ஒரே சூறாவளிமயம்தான். புருஷனுக்கு என்ன கேடு வந்ததோ... அவள் மேல் தீராத சந்தேகம். குற்றம் சொன்னால்... இல்லையென்று நிரூபிக்கலாம் கூறுகெட்ட குருட்டுச் சந்தேகத்திற்கு.. ஏது வெளிச்சம்? சீவி முடித்து பூ வைத்தால்... சந்தேகம். ''எந்தப் புருஷனுக்காக?'' என்று கத்திக்குத்து. வருத்தத்தில் நொந்துபோய் எண்ணெய் தேயாமல் காய்ந்து கிடந்தால்... அந்நேரமும் ஈட்டிதான் நெஞ்சில் பாயும் ''எந்தப் பயலை நினைச்சு?'' அனுதினமும் செத்துச் செத்து வாழ்ந்தாள். ''அப்பன் சாயலுமில்லாம, ஆத்தா ஜாடையுமில்லாம புள்ளை பொறந்துருக்கு, பாரு எங்க கிடந்து பொறந்துச்சோ... இது'' பிறந்து செத்த பிள்ளை பற்றி ஒரு கிழவி வெள்ளைத்தனமாய் சொன்ன இந்த வார்த்தைதான். அவனுக்குள் விஷமா இறங்கி. ரத்தமெல்லாம் பரவி, மூளையின் நிறமே நீலம் பாய்ந்து... வாழ்க்கை செத்தது. அடியும், உதையுமாய் அவள் உடம்பு ரணப்பட கொத்திப் பிடுங்குகிற பாம்புச் சொல்லில் மனசு நரகமாக... அஞ்சு வருஷ இழுபறிக்குப் பிறகு ஒரேயடியாக துரத்தப்பட்டு... வாழாவெட்டியாக இங்கு வந்து விழுந்தவள்தான். ஆதரவாயிருந்த அம்மா என்கிற ஜீவனும் ஒடுங்கிப் போய்ச்சேர.. ஒற்றைப் பனைமரமாய் இவள். காய் காய்க்காத வெற்று மரம். இதோ... சூன்யமே ஒரு விடுதலையாகத் தோன்ற... பாதி ஆயுளைக் கரைத்துவிட்டாள். கோடைப் பருத்திச் செடி. நெஞ்சுப் உயரத்துக்கு இருந்தது. கால்வைத்து விலகிச் செல்ல முடியவில்லை. அத்தனை அடர்த்தி. ஆனால், அவ்வளவாக காய்கள் இல்லை. இருக்கிற காய்களும் பூச்சி விழுந்து.... சூத்தையாகி.... அங்கொன்றும் இங்கொன்றுமாய் பருத்திச் சுளைகள், நோயில் வெம்பி வெடித்ததைப் போல.... குத்தலும், கருகலுமாய்.... ஓடி ஓடி பருத்தி எடுத்தாலும் மடி நிறைய மறுக்கிறது. மடியில் கிடக்கிற பருத்தியும் பங்கப்பட்டு மூளியான பெண் வாழ்க்கையைப் போல.... கொத்தையும், கொதுக்கலுமாய்.... வாய்க்காலில் வரிசை வரிசையாக அகத்திகள் அதன் சிம்புகளில் சோற்றுத் தூக்குச் சட்டிகள். அவளைச் சுற்றிலும் பேச்சுத் சத்தம். ஊர்ப்புரணிகள், கேலி, கிண்டல், சிரிப்புச் சத்தங்கள், பூங்கோதை நிறைபிடித்து பருத்தி பொறுக்கினாள். கட்டை விரல் காந்துகிறது. அவளுக்குப் பக்கத்து நிறையில் பருத்தி எடுத்து வருகிறவள் சுந்தரி, ரொம்பப் பிந்திக் கிடந்தாள். ''ஏன் சுந்தரி.... கொமரிப்புள்ளே. இப்படிப் பிந்திக் கிடக்கே? விறுவிறுன்னு எடுத்து வாயேன்...'' ''வந்துக்கிட்டுத்தான் இருக்கேன். மதினி. நீங்கதான் ''பொடு, பொடு''ன்னு போறீக? ...இவள் குமரியாகி ஏழெட்டு வருஷமாகிவிட்டது. கூடுதலாகக் கூட இருக்கும். இன்னும் இவளுக்கு மாலை பூக்கவேயில்லை. இவளுக்குப் பிறகு ஊரில் பூத்த பெண்கள் எல்லாம், மாலை பூத்து, பிரசவம் முடித்து பிள்ளையும் கையுமாக மாறிவிட்டார்கள். இவளைச் சுற்றி கால வெள்ளம் இயல்பாய் கடந்த ஓட. இவள் மட்டும் நாணலாய் நின்று கொண்டே இருக்கிறாள். பார்க்க லட்சணம்தான். மூக்கும் முழியுமாய் சிவந்த திரேகமுமாய் கட்டான அமைப்புதான். பார்த்த எவனும் சொக்கிப் போவான். அப்படியும்.... வந்த வரன்கள் எல்லாம் நகை பிடித்தால் பெண் பிடிக்கலே பெண் பிடித்தால் நகை பத்தாது. ஒவ்வொரு காரணம். வாய்ப்புகள் நழுவி ஓட... இவள் பூத்த பூவாகவே காலமெல்லாம். இவளுக்கும் மனசு இருக்கு. ஆசை இருக்கு. சிலிர்ப்பு இருக்கு. உயிர் இருக்கு. ஆனாலும் மரக்கட்டையாக கிடந்து தீரணும். இது என்ன கொடுமையோ... இப்போதெல்லாம் - ஊர்ப் பெண்கள் முதுகுக்குப் பின்னால் குசுகுசுக்க ஆரம்பித்து விட்டனர். ''இவா பூத்த நேரம், தோஷமான நேரம்.'' பாவம், இவள்! உள்ளுக்குள் எம்புட்டுரணப்படுகிறாளோ. சொல்லி அழமுடியாத அவமானத்திலும், அவஸ்தையிலும் தினம் தினம் நொந்து புழுங்கி... வாழும் உயிரே சுமையாகி, வெதும்பி, வெந்து... வறண்டே போய்விடுவாள். இவளைப் பெற்று வளர்த்த வயறு, என்னமாய் கொதிக்கும்? அடப் பாதரவே. இந்தக் கொடுமை எந்தப் பாதகத்திக்கும் வரக்கூடாதடியம்மா.... சயாங்காலம் பூங்கோதை மனசில் பிள்ளைகள், பள்ளியிலிருந்து வந்திருப்பார்கள். அடைத்த கதவில் வந்து முட்டியிருப்பார்கள். அம்மாவை ஆவலோடு தேடியிருப்பார்கள். மடியில் விழுந்து நடந்த விளையாட்டு சண்டைகள் பற்றியெல்லாம் கெஞ்சல் கெஞ்சலாய் சொல்லி மகிழ ஆசைப்பட்டிருப்பார்கள். பாவம், அம்மாவைப் பார்க்காமல், அடைத்த கதவைப் பார்த்து ஏங்கிப் போயிருப்பார்கள். நினைக்க நினைக்க இவளுக்குள் தவிப்பு. மனசுக்குள் இந்த நினைப்பு பின்னிக்கொள்ள... வேலை, வெறும் பாரமாய்த் தோன்றியது. மனம் பரபரக்கிறது. வீடு நோக்கி ஆலாய்ப் பறக்கிறது. ஆயிற்று விரிந்த சமுக்காளத்தில் கொட்டிய பருத்தியை பெரிய பொட்டலமாகத் கட்ட... மாடத்தியும், பூங்கோதையும் நடையைக் கட்டினர். இப்போது - பூங்கோதை நடையை எட்டிப் போட்டாள். பிள்ளைகள் மனசைச் சுண்டியிழுக்க, கால், தரை பாவாமல் துரிதப்பட்டது. ஊருக்குள் பாய்ந்தாள். தெருவைக் கடந்தாள். வீடு இருக்கும் தெருமுனையைத் தொட்டுவிட்டாள் அதே - பூட்டிக்கிடக்கிற கூரை வீடு. வாசல் படியில் மூன்று பைக்கட்டுகள். மற்ற இரண்டும் விளையாடப் போயிருக்குமோ.... வீட்டு வாசலில் மூத்தவள் மட்டும் சுருண்டு உட்கார்ந்திருக்கிறாள். ஏழாம் கிளாஸ் படிக்கிறாள். வெட்டுப்பட்ட கொடியாக வாடியும் போயிருக்கிறாளே, எதுக்கு? முகம் வெளுத்துப் போய் அப்படியென்ன வாட்டம்? அழுது கரைந்த மாதிரி, கண்களில் அப்படியென்ன சோர்வு? சுருண்டு கிடக்கிற அளவுக்கு அந்தச் சின்ன உடம்பில் என்ன தளர்வு? பூங்கோதைக்குள் பகீரென்றது. அடிவயிற்றைக் கலக்கியது. மனசில் நெருடல். ஆழத்தில் ஜில்லிட்டுப் பாய்ந்த பயம், திகில். ஒருவேளை... பூத்து உக்காந்துட்டாளா? ஐயய்யோ... அதுக்குள்ளாகவா?.... அடிப்பாதகத்தி! இன்னும் பத்து எட்டுக்கள்தான். பூங்கோதைக்குள் பயத்தின் நடுக்கம். குப்பென்று உடம்பெல்லாம் வியர்க்கிறது. மனசில் வியர்வைத் துளிகளாக.... சுத்தரி, மாடத்தி.... ஒரு கணம் வந்து மறைய- படபடப்பு. கால்கள் பரபரத்து பின்னலாட- ஓடிப் பாய்ந்தாள். மனசெல்லாம் பதைத்துப் போக..... படபடத்துக் கேட்டாள். ''என்னாடி... என்னம்மா செய்யுது... என்னடி, சொல்லித் தொலையேண்டி'' ''ஒண்ணுமில்லேம்மா...'' ''பிறகு ஏன்? இப்படி வாடிப் போயிருக்கே?'' ''மத்தியானத்துலேயிருந்து மண்டையடிக்கு'' அம்புட்டுத்தானா?'' அவளுக்கு அப்போதுதான் உயிரே வந்தது. மனசின் முறுக்கெல்லாம் தளர்ந்தது. கால் தரையில் ஊன்றிவிட்ட மாதிரி ஒரு நிம்மதி. பயத்தில் படபடத்த மனசு சற்று அடங்கியது. வியர்வையில் காற்றுப்பட்ட மாதிரி... மனசுக்குள் ஒரு குளிர்ச்சி. கதவைத் திறந்தாள். மகளை ஆதரவோடு அணைத்துக் கொண்டே, உள்ளே வந்தாள். நடையில் உட்கார்ந்து சுவரில் சாய்ந்தாள். உஸ்ஸ்ஸென்று விட்ட பெருமூச்சில் உடம்பின் - மனசின் - அயற்சி முழுவதும் கரைய - ''குடிக்க கொஞ்சம் தண்ணீ குடு'' தண்ணீர்ச் செம்பை நீட்டிய மகளைப் பார்த்தாள். பூங்கோதை உள்ளுக்குள் முள்முள்ளாய் உறுத்தல். மனுஷத்தனமான உறுத்தல். பயந்தது சரிதானா, தெளிந்ததும் சரிதானா? புள்ளை வளர்றதை நெனச்சு சந்தோஷப்பட வேண்டிய பெத்தவள்.... நா எதுக்குப் பயப்படணும். அவளுக்குள் வெட்கமான ஒரு வேதனை உணர்வு மறுபடியும் மனசுக்குள் மாடத்திகள்..... சுந்தரிகள்... ''பொண்ணா ஜென்மமெடுத்தவளை கிழிச்சு கேவலப்படுத்துகிற ஊரு உலகத்துக்குப் பயந்து என்ன ஆகப்போறது? துன்பம் வந்தா செத்தா போறோம்? மல்லுக்கட்டிப் புரளலியா? அப்படித்தான் இதுவும்.'' அந்தப் பெற்ற மனுஷிக்குள் புதிய தெளிவு. துணிச்சலில் வந்த பாசப்பெருக்கேடு. ''இப்ப வா... கண்ணு'' என்று எல்லை மீறிய கனிவில் கூப்பிட்டாள். புரியாமையில் நெருங்கிய சிறுமியை பற்றி இழுத்து மடியில் போட்டு இறுகத் தழுவிக் கொண்டாள். அவளது பிஞ்சுக் கன்னத்தை வலது கையால் வருடி... நெகிழ்ந்து போன மனசோடு மகளின் நடு நெற்றியில் முத்தமிட்டாள், வாழ்த்துவதைப் போல! குழைந்து மிருதுவாகிப் போயிருக்கும் அம்மாவின் உணர்வுகளை உள்வாங்க முடியாமல், மிரள மிரள விழித்தாள், அந்தச் சிறுமி. பூங்கோதையின் கண்களில் ஏனோ ஈரக் கசிவு.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'பூ' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: சின்னராணி, சித்திரலேகா, ராஜகுமாரர்கள், தந்தை, அரசன், மகள், சித்திரசேனன்
தலைப்பு: சின்ன ராணி சித்திரலேகா
| சின்னராணி சித்திரலேகாவின் அழகும், அறிவும் அவனி அம்பத்தாறு தேசங்களிலும் பிரபலம். சின்னராணியை திருமணம் செய்து கொள்ள ராஜகுமாரர்கள் "நீ, நான்" என்று ஒற்றைக் காலில் நின்றனர். சித்ரலேகாவின் தந்தை சித்திரசேனன் யாருக்கு அவளை திருமணம் செய்து கொடுப்பது என்று புரியாமல் குழம்பினார். புத்திசாலியான தன் மகளிடமே இதற்கு ஒரு நல்ல உபாயம் சொல்லுமாறு கேட்டார். சின்னராணியின் ஆலோசனைப்படி அரசன் சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்தான். "அழியாத செல்வம் உடையவர்கள் சுயம்வரத்தில் கலந்து கொள்ளலாம். ஆனால் அதை சின்னராணியிடம் நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபித்த ஆண் மகனுக்கு சின்னராணி மாலை இடுவார்". இப்படி அறிவிக்கப்பட்டது. சின்னராணியின் சுயம்வரச் சேதி காட்டுத் தீ போலப் பரவியது. ராஜகுமாரர்கள் சித்திரசேனனின் நாட்டை நோக்கி விரைந்தனர். சித்திரசேனனின் சிங்காரப்பட்டினம் விழாக் கோலம் பூண்டிருந்தது. மக்கள் தங்கள் ராஜகுமாரியை கைப்பிடிக்கும் அதிர்ஷ்டசாலி யார் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தனர். விழா மண்டபத்தில் மன்னன் சித்திரசேனன் நடுநாயகமாக வீற்றிருந்தான். அவன் பக்கத்தில் ஒருபுறம் பட்டத்து ராணியும் மறுபுறம் சின்னராணியும் அமர்ந்திருந்தனர். எப்போதும் இல்லாத அளவிற்கு ராஜப்பிரதானிகளும் பொது மக்களும் அரசவை மண்டபத்தில் திரண்டிருந்தனர். சுயம்வரத்தில் கலந்து கொள்ள வந்த ராஜகுமாரர்கள் முன் வரிசையில் ஆடம்பரமாக அமர்ந்திருந்தனர். ஒவ்வொரு ராஜகுமாரனும் தன்னுடைய நாட்டின் பரப்பு, செல்வ வளம், இவை எல்லாவற்றையும் பட்டியலிட்டு கொண்டு வந்து சித்திரசேனனிடம் கொடுத்தனர். உலகத்திலேயே விலை மதிப்பற்ற ஒரு அரிய வைரக்கல்லை கொண்டு வந்து சின்னராணியின் காலடியில் வைத்தான் ஒரு ராஜகுமாரன். இன்னொருவன் மாணிக்கங்கள் பதிக்கப்பட்ட மிக அழகிய சிம்மாதனம் ஒன்றைக் கொண்டு வந்தான், தனது செல்வத்தின் அடையாளமாக. இவை எதுவுமே ராஜகுமாரியை திருப்திப்படுத்தவில்லை. ராஜகுமாரர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். அப்போது இளைஞன் ஒருவன் மண்டபத்திற்குள் வந்தான். அவன் கையில் ஓலைச்சுவடி கட்டு ஒன்றை வைத்திருந்தான். பார்ப்பதற்கு ஒரு ஏழைப்புலவன் போல இருந்தான். "புலவரே.. இன்று சுயம்வரம்.. நடக்கிறது நாளை வாருங்கள் சன்மானம் தருகிறேன்.." என்றார் மன்னர். "நான் சன்மானம் பெற வரவில்லை.. சுயம்வரத்தில் கலந்து கொள்ள வந்திருக்கிறேன்.." என்றான் இளைஞன். "நீ.. என்ன விலைமதிப்பற்ற செல்வம் கொண்டு வந்திருக்கிறாய்.." என்று சிரித்தபடியே கேட்டார் மன்னர். உடனே அந்த இளைஞன் தன் கையிலிருந்த ஓலைச்சுவடிக் கட்டை மன்னனிடம் கொடுத்தான். ஓலைச் சுவடிக் கட்டை சின்னராணியிடம் கொடுத்தார் மன்னர். சின்னராணி சுவடியைப் பிரித்தாள். திருக்குறள் அத்தனையும் அதில் எழுதப்பட்டிருந்தது. "நான் கேட்டது விலை மதிப்பற்ற செல்வம்.. அழியாத செல்வம்.. ஆனால் நீ என்னிடம் கொடுத்திருப்பது.. திருக்குறள்.." என்றாள் சின்னராணி. "ஆமாம் இளவரசி.. இரண்டும் ஒன்றுதானே திருக்குறள் கல்வியின் அடையாளம். எல்லாச் செல்வத்திலும் கல்விதான் அழியாத செல்வம். விலைமதிப்பற்ற செல்வம்", "அது எப்படி அழியாத செல்வம் ஆகும்" என்றாள் சின்னராணி. "நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் அள்ளிக் கொடுக்கலாம். அள்ள அள்ள குறையாதது கல்வி ஒன்றுதான்" என்றான். "நீங்கள் போட்டியில் ஜெயித்துவிட்டீர்கள். நீங்கள் யார் என்று தெரிந்து கொள்ளலாமா?" என்றாள் சின்னராணி. "அள்ள அள்ளக் குறையாத செல்வத்தை அள்ளிக் கொடுக்கும் ஒரு ஆசிரியன் நான்" என்றான் அவன். கல்வி கேள்விகளில் சிறந்த ஆசிரியர் சின்னமணி அழகிற் சிறந்த சின்னராணிக்கும் திருமணம் கோலாகலமாக நடந்தது. சின்னமணியும் சின்னராணியும் சிங்காரப்பட்டினத்தில் பல ஆண்டுகள் அரசாண்டு பல பள்ளிகளைத் திறந்து மக்களின் கல்விக் கண்களைத் திறந்தனர். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: மஹாபாரதப் போர் நடந்து கொண்டிருந்தது. ஒரு வீரன் போர்க்களத்திற்குள் வந்து கொண்டிருந்ததை கிருஷ்ணர் கவனித்தார். அவனுடைய நேர்ப் பார்வையும், நிமிர்த்திய நெஞ்சும், வீர நடையும் கிருஷ்ணரை ஈர்த்தது. தன் உருவை மாற்றிக் கொண்டு அவனை அணுகி “வீரனே எங்கு வந்தாய்?” என்று கேட்டார். “நான் போரில் பங்கேற்க வந்தேன்!” என்றான் அவன். “உனக்கு என்னப்பா தகுதியிருக்கிறது” என்றார் கிருஷ்ணர். அவன் தன்னிடம் இருக்கும் வில்லையும் மூன்று அம்புகளையும் காட்டி, “இதில் ஒன்றால் பாண்டவர்களையும், மற்றொன்றால் கௌரவர்களையும், மூன்றாவதால் அந்தக் கிருஷ்ணனையும் கொல்லும் திறமை படைத்தவன் நான்” என்றான். “எப்படி உன்னை நம்புவது?” என்றார் கடவுள். அவன் அவரை மேலும் கீழும் பார்த்து விட்டு தூரத்தில் உள்ள மரத்தைக் காட்டி, அதில் இருக்கும் இலைகள் அனைத்தையும் ஒரே அம்பில் வீழ்த்திக் காட்டுவதாகக் கூறினான். விளையாடிப் பார்த்து விடுவது என்று முடிவு செய்த கிருஷ்ணர், “சரி செய் பார்க்கலாம்” என்றார். அவர் கடவுளல்லவா? அவனுக்குத் தெரியாமல் மரத்தின் ஐந்து இலைகளை முதலில் தன் காலடியின் கீழே மறைத்துக் கொண்டார். வீரன் நாண் ஏற்றி அம்பை எய்தான். அவன் சொன்னது போலவே மரத்தில் அனைத்து இலைகளும் ஒரே அம்பின் தாக்குதலில் கீழே விழுந்து விட்டன. அதோடில்லாமல் அம்பு திரும்பவும் வந்து ஐந்து முறை கிருஷ்ணரின் காலைத் துளைத்தது. வீரன் கிருஷ்ணரைத் தெரிந்து கொண்டு வணங்கினான். கிருஷ்ணரும் அவனது திறமையைப் பாராட்டினார், “சரி, யாருக்காக போராடப் போவதாக உத்தேசம்?” என்று கிருஷ்ணர் கேட்டார். வீரன் “என் திறமைக்கு சவாலாக நான் எப்போதுமே தோற்கும் கட்சிக்கு ஆதரவாகவே போரிடுவேன்” என்றான். “இவன் போரிட்டால் இவன் பக்கம் உள்ள கட்சி ஜெயிக்க ஆரம்பிக்கும், உடனே இவன் எதிர் கட்சிக்குப் போய் விடுவான். பிறகு அது ஜெயிக்க ஆரம்பிக்கும். இது முடியவே முடியாதே. போருக்கு ஒரு முடிவு ஏற்படாமல் போய் விடுமே” என்று கிருஷ்ணர் யோசித்தார். “வீரனே எனக்கு ஒரு உதவி உன்னிடமிருந்து ஆக வேண்டியிருக்கிறது” என்று அவனிடம் சொன்னார். அவனும் செய்யக் காத்திருப்பதாகத் தலை வணங்கினான். ‘இந்தப் போரின் முடிவைப் பாதிக்கும் சக்தியுள்ள ஒருவன் இருக்கிறான். அவன் தலை எனக்கு வேண்டும்” என்றார் கிருஷ்ணர். ‘யார் அவன். சொல்லுங்கள். இப்போதே கொய்து வருகிறேன்” என்றான் வீரன். கிருஷ்ணர் “வீரனே, போரின் முடிவுக்காக உழைக்க எண்ணாமல் உன் திறமைக்குச் சவாலாகப் போரில் பங்கேற்க விழையும் நீதான் அந்த ஆள்” என்று அவன் தலையைக் கேட்டு விட்டார். அவனும் உடனே கொடுக்க ஒப்புக் கொண்டான். கிருஷ்ணர் அவன் பக்தியை மெச்சி, அவனுக்கு வரம் ஒன்று கொடுத்தார். அவன் “தான் இறந்தாலும் மஹாபாரதப் போரைத் தன் கண்ணால் பார்க்க வேண்டும்” என்று வரம் கேட்டான். வரத்தை அருளி விட்டு தலையை வாங்கிக் கொண்டார் கிருஷ்ணர். நீதி: எந்தப் பக்கமும் சாயாமல் மதில் மேல் பூனையாக சுயநல சிந்தனையுடன் இருப்பவர்கள் எவ்வளவு திறமையிருந்தாலும் காரியத்திற்கு உதவ மாட்டார்கள்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: ஒரு சமயம் பரமார்த்த குருவும் – சீடர்கள் ஐவரும் வெளியூர் செல்லத் திட்டமிட்டனர். ஆனால் குருவிற்கு வயதாகி விட்டதால் அவரால் நடப்பதற்குச் சிரமமாக இருக்கும் என்று எண்ணிய சீடர்கள் அவர் பயணம் செய்வதற்கு மட்டும் ஒரு பொதியை காளை மாட்டை வாடகைக்கு அமர்த்தினர். மாட்டுக்காரன் கேட்ட தினக் கூலியாக மாட்டு வாடகை ஐந்து காசுகள் தருவதாக ஒப்புக் கொண்டு அதன்படி பரமார்த்த குருவை மாட்டின் மேல் அமர வைத்து சீடர்கள் பயணத்தைத் பரமார்த்த குருகதைதொடர்ந்தனர். அப்போது கோடைக் காலமாதலால் வெயில் வெகு கடுமையாக இருந்தது. அவர்களின் பயணத்தின் போது வழியில் ஒரு மணற்பரப்பான மரங்கள் எதுவும் இல்லாத வெட்ட வெளியைக் கடக்க வேண்டியிருந்தது. வெட்ட வெளியாக இருந்தமையால் வெயிலும் தாங்க முடியாத வெப்பமாக இருந்தது. வெப்பத்தின் கடுமையை தாங்க முடியாத பரமார்த்த குருவுக்கு நாக்கு வரண்டு தாகம் அதிகமாகி கண்கள் பஞ்சடைந்து மயக்கமடைந்து கீழே விழுகின்ற நிலையை அடைந்தார். அவருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த சீடர்கள், குருவை கீழே விழாதவாறு தாங்கிப் பிடித்து கீழே மணல் சுடாதபடி துணிகளை பரப்பி மாட்டின் நிழலிலேயே படுக்க வைத்தனர். குருவின் மயக்கத்தை தெளிவிக்க சிறிது தண்ணீரை முகத்தில் தெளித்து, தண்ணீரைக் குடிக்கச் செய்தனர். சிறிது நேரத்தில் குருவுக்கு மயக்கம் தெளிந்ததும் பழையபடி மாட்டின் மேல் உட்கார வைத்துப் பயணத்தை தொடர்ந்தனர். வெட்டவெளியைக் கடந்ததும் ஒரு இடத்தில் தங்கி உணவருந்தி விட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்தனர். அதன் பின்னர் பயணத்தை மேற்கொண்டு ஓர் ஊரை சென்றடைந்தனர். அவர்கள் அவ்வூரை சென்றடைய இரவு நேரம் ஆகிவிட்டமையால், அவ்வூரிலேயே தங்கி மறுநாள் காலை பயணத்தை மேற்கொள்ள முடிவெடுத்தனர். இதனை அறிந்த அவ்வூர் மக்கள், பண்ணையாரிடம் பரமார்த்த குருவும் – சீடர்களும் வந்திருக்கும் செய்தியை அறிவித்தனர். பண்ணையார், தங்கியுள்ள அவர்களுக்கு சாப்பாடும், தங்குவதற்கு இடமும் ஏற்பாடு செய்து கொடுத்தார். சாப்பாடு முடிந்த பின்பு – சீடர்கள், மாட்டின் சொந்தக் காரனுக்கு அன்றைய மாட்டு வாடகையாக ஐந்து காசுகளைக் கொடுத்தனர். மாட்டுக்காரன் அவர்கள் கொடுத்த ஐந்து காசுகளை வாங்க மறுத்தான். மாட்டின் மேல் சவாரி செய்வதற்காக ஐந்து காசுகளும், மாட்டின் நிழலின் குரு ஓய்வெடுத்தற்காக மூன்று காசுகளும் சேர்த்து எட்டு காசுகள் வாடகையாகத் தந்தால் தான் வாங்குவேன் என்றான் மாட்டுக்குச் சொந்தகாரன். இது என்ன அநியாயமாக இருக்கிறதே, மாட்டைத் தான் வாடகைக்கு எடுத்தோம். அதெப்படி மாட்டின் நிழலுக்கு வாடகைக் கொடுக்க முடியும். ஆதலின் மாட்டின் வாடகையை மட்டும் பெற்றுக் கொள்ளுங்கள் என்றனர். இவர்களுடைய காரசார விவாதத்திறிகுப் பிறகு இந்த விஷயம் அந்த ஊர் பண்ணையாரிடம் சென்றது. பண்ணையார் மாட்டுகாரனை அழைத்து, ஐயா, தாங்கள் பேசியபடியே ஒருநாள் வாடகை ஐந்து காசுகள் அதன்படி பெற்றுக் கொள்வதுத தான் நியாயம் என்றார். அதற்கு மாட்டுக்காரன். ஐயா நான் ஐந்து காசு பேசியது மாட்டின் மேல் சவாரி செய்வதற்கு மாட்டும்தான். ஆனால் மாட்டின் நிழலில் தங்குவதற்காக அல்ல. ஆகையால், மாட்டின் வாடகை ஐந்து காசுகளும், நிழலுக்காக மூன்று காசுகளும் சேர்த்து எட்டு காசுகள் தரவேண்டும் என்று மீண்டும் பிடிவாதம் செய்தான். இது மிகவும் அநியாயமாக இருக்கிறது? என்றார் பண்ணையார். இது ஒன்றும் அநியாயம் இல்லை. நியாயமாகத் தான் கேட்கிறேன் என்றான் மாட்டுக்காரன். இதனால் ஊர் மக்கள் எல்லோரும் கூடிவிட்டனர். தீர்வே இல்லாமல் இந்தப் பிரச்சனை நீண்டு செல்வதால், மாட்டுக்காரனையும், குருவையும் சீடர்களையும் நோக்கி, நான் ஒரு தீர்ப்பு சொல்கிறேன். அதற்கு நீங்கள் எல்லாம் கட்டுப்படுவீர்களா? என்றார் பண்ணையார். அதற்கு மாட்டுக்காரனும், குருவும், சீடர்களும் கட்டுப்படுவதாக ஒட்டு மொத்தமாக கூறினார்கள். இதற்கு இதுதான் மிகச் சிறந்த தீர்ப்பாகும் என்று மனதில் நினைத்து கொண்டு பண்ணையார் மாட்டின் சொந்தக்காரனை தன் அருகில் அழைத்து, மாட்டின் மீது குரு ஏறி வந்தற்காக வாடகை ஐந்து காசுகளும், மாட்டின் நிழலின் தங்கியதற்காக மூன்று காசுகளின் நிழலையும் பெற்றுக்கொள் என்றார். மாட்டுக்காரன் ஒன்றும் புரியாமல் விழித்தான் எவ்வளவு யோசனை செய்தும் இதன் முடிவு தெரியவில்லை. இப்போது இரவு நேரம். காலையில் தான் நிழலுக்கான பணத்தைப் பார்க்க முடியும் என்று கூறி மறுநாள் காலை சூரியன் உதயமானதும் மாட்டுக்காரனை அருகில் அழைத்து மாட்டின் நிழலுக்கான மூன்று காசுகளை வெயிலில் பிடித்தார்
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'வாடகை மாட்டுக்கா? மாட்டின் நிழலுக்கா?' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: நரி, போர் முரசு
தலைப்பு: முரசொலி கேட்ட நரி
| ஒரு நரி பசியினால் இரை தேடித் திரிந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு பெருஞ்சத்தம் கேட்டது. அது கேட்டு நரி நெஞ்சம் துணுக்குற்றது. தன்னைப்போல இரை தேடிக் கொண்டு ஏதேனும் பெரிய மிருகம் ஒன்று புறப்பட்டிருக்கிறதோ என்று அது பயந்தது. தன் பசி தீருமுன் தான் பிறிதொரு கலங்கியது. இருந்தாலும், இது என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று மனத்தைத் திடப்படுத்திக் கொண்டது. மெல்ல மெல்ல அது காட்டைச் சுற்றிக் கொண்டு ஒலி வந்த திசை நோக்கிச் சென்று ஒரு போர்க்களத்தையடைந்தது. அங்கு யாரும் இல்லை. ஆனால், அங்கிருந்துதான் ஒலி வந்தது. நரி, மெல்ல மெல்ல நெருங்கிச் சென்று பார்த்தது. ஒரு மரத்தடியில் பழைய போர் முரசு ஒன்று கிடந்தது. அதற்கு நேரே மேலே இருந்த மரக்கிளை, காற்றில் மேலும் கீழுமாக அசையும் போது, அந்த முரசைத் தாக்கியது. அது தாக்கும் போதெல்லாம் பெரும் சத்தம் கேட்டது. இதை நேரில் கண்ட பிறகு, அந்த நரி, பூ! வெறும் தோல் முரசுதானா? இதற்கா நான் இவ்வளவு பயப்பட்டேன்!" என்று சொல்லிக் கொண்டே போய்விட்டது. |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: தெனாலிராமன், அமைச்சர், அரசகுரு, கிருஷ்ணதேவராயர், அரசவை, அறை, பொருள், பதில், பால், நகை, சுண்ணாம்பு, மலர், ஜன்னல்கள்
தலைப்பு: உலகிலேயே வெண்மையான பொருள் எது?
| ஒருசமயம், தெனாலிராமன் அரசவையில் இருந்தபோது, தூக்கம் கண்ணைச் செருகியது. அதைக் கண்டு உறுப்பினர்கள் சிரித்து விட்டனர். அப்போது அமைச்சர், "அரசே! தெனாலிக்கு வயதாகி விட்டது. ஓய்வு கொடுங்கள்" என்றார். அரசரிடம் பதில் இல்லை. மறுநாள் அரசர், "என் மனதில் ஒரு கேள்வி, உலகிலேயே வெண்மையான பொருள் எது? இதற்குச் சரியான பதிலை நீங்கள் சொல்லி விட்டால், தெனாலியை ஓய்வு கொடுத்து அனுப்பி விடுவேன்" என்றார். அமைச்சர், "வெள்ளி நகை தான்..." என்றார். அரசகுரு, "பால் தான்!" என்றார். சிலர், "சம்பா மலர்!"" என்றனர். வேறு சிலர், "மல்லிகை தான்"" என்றனர். இன்னும் சிலர், "சுண்ணாம்பு தான்!" என்றனர். அரசர் திருப்தி அடையவில்லை. தெனாலியிடம் கேட்டார். "நாளைக்குக் கூறுகிறேன்" என்றார் தெனாலி. மறுநாள் தெனாலி வெள்ளி நகை, கொஞ்சம் பால், சம்பா மலர், மல்லிகை மலர்கள் ஆகியவற்றை வரவழைத்தார். சுண்ணாம்பும் வந்தது. பிறகு ஒரு பெரிய அறையில் தரை விரிப்பின் மீது அவற்றை வைத்து, கதவு மற்றும் ஜன்னல்களைச் சாத்தித் திரையிட்டார். வெளியில் வந்து, "அரசே! இவர்களிடம் உள்ளே போய் அவரவர்கள் வெண்மை என்று கருதும் பொருளை எடுத்து வரச் சொல்லுங்கள்..." என்றார். அனைவரும் உள்ளே போயினர். அவர்களுக்கு உள்ளே இருட்டில் எதுவும் தெரியவில்லை. ஒருவருக்குப் பால் பாத்திரம் காலில் இடறி, பால் தரையில் கொட்டியது. இன்னொருவர் காலில் நகைகள் இடறின. வேறொருவர் பூக்களை மிதித்து விட்டார். ஒரு பாத்திரத்தில் இருந்த சுண்ணாம்பு கவிழ்ந்தது. மூவரும் பதறி, ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டனர். அதே சமயம் தெனாலிராமன் அறையில் மேற்புறக் கதவைத்திறந்தார். அறையில் ஒளி பரவியது. அப்போது அங்கிருந்த பொருட்கள் பளிச்சென்று தெரிந்தன. அச்சமயம், அரசர் கிருஷ்ணதேவராயர் உள்ளே வந்தார். உடனே தெனாலிராமன், "அரசே! என்னுடைய பதில் இப்போது உங்களுக்கு விளங்கியிருக்குமே! உலகில் எல்லாவற்றையும் விட வெண்மையான பொருள் பாலோ, வெள்ளி நகையோ, சுண்ணாம்போ அல்லது மலர்களோ அல்ல. அப்படியிருந்தால், இருட்டறையில் அவை பளிச்சிட்டிருக்க வேண்டுமே! ஏன் கண்ணுக்குத் தெரியவில்லை? எனவே, உலகில் வெண்மையான பொருள் சூரியனின் பிரகாசம் மட்டும்தான். அதனால்தான் உலகின் மற்ற எல்லாப் பொருள்களும் பிரகாசிக்கின்றன" என்றார். அதைக் கேட்ட அரசர், மகிழ்ச்சியடைந்து, தெனாலியை வாரி அணைத்துக் கொண்டார். சபையினரிடம் அரசர், "தெனாலிராமன் நமக்கு ஏன் இத்தனை பிரியமானவனாக இருக்கிறான் என்பதை இப்போது நீங்கள் அறிந்து கொண்டிருப்பீர்களே...?" என்றார். "தெனாலிக்கு ஓய்வு கொடுத்து அனுப்புங்கள்" என்று யோசனை கூறியவர்கள் எல்லாம் வாயடைத்துப் போயினர். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: முதல் வரி எழுதப்படு முன்பே, முழுசாக நடந்து முடிந்து விட்ட சம்பவத்தைதான் இப்போது சொல்லப் போகிறேன். அதற்கு முந்தின நாள்வரை இருந்த ராகவனே வேறு. மறுநாளில் ஒவ்வொரு காலுக்கும் வெவ்வேறு ரகச் செருப்புகளை அணிந்து அலுவலகம் செல்கிற அளவு மோசமாகிவிட்டது. மனநிலை, உண்மையில். இதை எழுதுகிற நான் இந்தச் சம்பவத்துக்குள் இல்லை. அது நடந்து இருபது வருடமாகிவிட்டது என்பதோடு, நடந்தது ராமநாதபுரத்தில், நான் இருப்பது சென்னையில். இதில் இன்னொரு விசித்திரத்தைக் கவனித்தீர்களா. சம்பவத்துக்குச் சம்பந்தப்பட்ட நான் இதனுள் இல்லை. ஆனால், வரிகள் நகர நகர, வாசிக்கிறவராகிய நீங்கள் இதன் அங்கமாகிக் கொண்டே வருவது புலனாகிறதா. பூச்சியைப் பிடிக்க நீள்கிற தவளையின் நாக்கு போல, ஏதோ ஒரு வரி நீண்டு உங்களை உள்ளே இழுத்துக் கொள்கிறது. பிறகு, உங்கள் சுற்றுச் சூழ்நிலை கவனத்திலிருந்து நீங்கி விடுகிறது. கொஞ்சம் குழப்பமாகப் பேசுகிறேன், இல்லையா. பொறுங்கள். தயவு செய்யுங்கள். இந்த வரிகளுக்கு நான் பொறுப்பில்லை. சௌரிராஜன். அவன் தான் காரணம். நிம்மதியாகப் பெண்களை வேடிக்கை பார்த்துக் கொண்டும், மைதுனச் சித்திரங்களுக்கு உபகரணங்களாக அவர்களை ரகசியமாய்ப் பயன்படுத்திக் கொண்டும், ஒரு நாளைக்கு ஒன்று அல்லது ஒன்றரை பாக்கெட்டுக்கள் சிகரெட் குடித்துக் கொண்டும். டி.ஏ. அர்சியர்ஸ், நடிகர் ரஜினிகாந்தின் உடல் நலக்குறைவு, விடுப்புக் காலத்தை சமர்ப்பித்து ஈடு வாங்கிக் கொள்வதற்கான தகுதி இந்த வருடம் எனக்கு உண்டா என்பது போன்ற எளிமையான ஆனால் முக்கியமான கவலைகளைப் பட்டுக் கொண்டும் இருந்தவன்தான் நான். அந்த ஒரு ராத்திரிக்குப் பிறகு, என் யோசனையின் தடம் மாறி விட்டது. குழப்பமான வாக்கியங்களைச் சுமந்து திரியும் கூடையாகி விட்டேன். நடைமுறைத் தர்க்கத்துக்குட்பட்டு நடக்கும் எதையுமே நடைமுறைத் தர்க்கத்துக்குட்பட்டதாகப் பார்க்கவியலாத வியாதியஸ்தனாகி விட்டேன். வாக்கியங்களில் குழப்பமும், ஒருவிதமான சுழற்தன்மையும் பெருகி, சாதாரணமாக, ஒரு வில்ஸ் குடுங்க. என்று சொல்வது கூட மாபெரும் தத்துவப் பிரச்சினையாகி விட்டது. டாக்டர் சீனிவாசன் போத்தி எம்.டி., அட்டிவான் தெரப்பிக்கு என்னை அறிமுகம் செய்திருக்கிறார். தூக்கம் ஒரு பிரச்சினையாக இல்லை இப்போது. என்ன, பகல்பொழுதுகளில் கொஞ்சம் மந்தமாக இருக்கிறேன் என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். அவர்களுக்கு வேறு வேலை என்ன. கட்டின வீடுகளுக்குக் குற்றம் சொல்கிறவர்கள். மன அழற்சிக்கான அல்லோபதி மாத்திரிகளை வருஷக் கணக்காகச் சாப்பிடுவது, தவறான பின் விளைவுகளை உண்டாக்க வாய்ப்பிருக்கிறது, மாற்று மருத்துவ முறை எதையாவது முயற்சிக்கலாமே என்று இரண்டு வருடங்களாகச் சொல்லி வருகிறார்கள், சண்முகம் போன்ற நண்பர்கள். இந்தச் சிக்கல் தீராதது. இப்போது சௌகரியமானதாக இருக்கிற ஒன்று, எதிர்காலத்தில் கேடு விளைவிப்பதாக ஆகிவிடுகிறது. இதற்கு நேர்மாறாகவும் நடக்க வாய்ப்பிருக்கிறது தான். இதில் நான் கவனிப்பது என்னவென்றால், எதிர்காலம் தானே நிகழ்காலம் ஆகிக்கொண்டே வருகிறது. ஆனால், மேற்சொன்ன விதத்தில், எதிர்காலமும் நிகழ்காலமும் ஒன்றுக்கொன்று விரோதமானவையாகத் தெரியவில்லையா? அல்லது, எதிர்காலம் என்றே நிகழ்காலத்திலிருந்துதான் கிளைக்கிறதோ.... பார்த்தீர்களா, மறுபடி ஆரம்பித்து விட்டது குழப்பம். நான் ஏற்கெனவே சொன்னேனே. சௌரிராஜன்தான் காரணம். இத்தனைக்கும் சௌரி என்னுடைய பலவருட நண்பன். சக ஊழியன், அறைத் தோழன், கல்லூரியில் ஒன்றாகப் பட்டப்படிப்பு முடித்து வெளிவந்தவர்கள் நாங்கள். நான் வணிகவியல் அவன் விலங்கியல். எங்கள் நட்பு உருவானதும் ஒரு ஆபூர்வ சந்தர்ப்பத்தில்தான். அறிவியல் மாணவர்களுக்கும், மானுட - கலையில் மாணவர்களுக்கும் நிகழ்ந்த கோஷ்டிக் கலவரமொன்று, அந்த நாட்களில் மதுரை வட்டார நாளிதழ்களில் மிகவும் விசேஷமாகப் பேசப்பட்டது. பதினைந்து மாணவர்களுக்கு எலும்புகள் முறியவும், அவர்களில் நால்வருக்கு நிரந்தர ஊனம் ஏற்படவும், நூற்று இருபத்தெட்டு மாணவர்கள் தன் பெற்றோருடன் முதல்வரையும் தாளாளரையும் நேர்முகமாகச் சந்திக்க வரவேண்டும் என்று பதிவுத் தபால்கள் பறக்கவும், மூன்று மாணவர்கள் கல்லூரியை விட்டு நீக்கப்படவும் காரணமான கலவுரம் அது. விசாரணை துவங்குவதற்கு முன்னரே, மாணவர்களுக்குள் திரைமறைவுச் சமரசம் ஏற்பட்டு விட்டது. மாணவர்களின் நட்பு ரீதியிலான சிறு தகராறு நடந்துகொண்டிருக்கும்போது, கல்லூரிக்குள் உருட்டுக்கட்டைகளுடன் ஓடிவந்த அந்நியர்களே ரத்தக்காயங்களுக்குக் காரணம்; மாணவ சமுதாயம் தன்னுடைய ஒற்றுமையில் உறுதியாக இருக்கிறது என்று எலும்பு முறிவுக்கான நபர்களே வாக்குமூலம் கொடுத்த பிறகும், தம்மையும், சமரசத்தையும் மறந்து நாளிதழ் நிருபரிடம் நடந்ததை நடந்தபடியே சொன்ன மாணவர்கள் மூவர் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டனர். இதை மிகுந்த மனவருத்தத்தோடு துரதிர்ஷ்ட வசமாகச் செய்ய வேண்டியதாகிவிட்டது என்று தாளாளர் மனம் வெதும்பிப் பேட்டியளித்தார். நீக்கப்பட்ட மாணவர்கள் பேட்டி அளித்திருந்த அதே இதழில். பாருங்கள், இருபது வருடங்களுக்கு முன்னர் நடந்ததைக் கூறுவதாகத் தொடங்கிவிட்டு, இருபத்தேழு வருடம் முன்பு நடந்ததை விலாவாரியாகக் கூறிக்கொண்டிருக்கிறேன். இது ஒரு விதமான காலக் குழப்பம்தானே. சௌரிதான் காரணம்... மொத்தத்தில் நானும் சௌரியும் ஒரே இலையில் சாப்பிடக் கூடியவர்கள். தேவைப்பட்டால் ஒரே கழிவரையையும் பகிர்ந்து கொள்ளக் கூடியவர்கள். அவன் செய்தது என்ன, அவனுக்கு நடந்தது என்ன, அதன் காரணமாக எனக்கு நடந்தது என்ன என்கிற மாதிரி சங்கதிகளெல்லாம் மூட்டம் போட்ட காய்கள் மாதிரி ரொம்ப காலமாக உள்ளே குமைந்து கொண்டிருக்கின்றன. டாக்டர் போத்தி சொல்லியிருக்கிறார். திரும்பத் திரும்ப ஞாபகம் வந்து தொந்தரவு தர்ற விஷயங்களை, ஒரு வெள்ளைத் தாளை எடுத்துக் கடகடகடன்னு எளுதுங்க. ஒரு தடவையோ, ரெண்டு தடவையோ படிச்சுச் பாத்துட்டுக் கிளிச்சுப் போட்ருங்க. மனசைக் காலி பண்ணிக் கிறதுக்கு இது ஒரு வழி. அப்படி நினைத்துத்தான் எழுதினேன். இதை மெனக் கெட்டு எழுதியதைக் கிழித்தெறிவானேன் என்று யோசித்த போது உங்கள் ஞாபகம் வந்தது. சில வரிகளையும் சில வார்த்தைகளையும் மட்டும் மாற்றியமைத்திருக்கிறேன்...... சின்னக்கனி காம்ப்ளக்ஸ் மூன்றாவது மாடியில் நாங்கள் - அது தான், நானும் சௌரியும் - இருந்த போது நடந்தது இது. எங்கள் அறையில் ஒரு சுவர்க்கடிகாரம் இருந்தது. ஒரு மணி நேரத்துக்கொருமுறை, கடிகாரத்தின் அடிப்பாகத்திலுள்ள கூடு திறந்து மரக்குருவி ஒன்று வெளியே எட்டிப் பார்க்கும் குக்....குக்...குக்.. என்று சப்தம் கொடுத்துவிட்டுக் கூட்டுக்குள் திரும்ப போய்விடும். கூடு மூடிக்கொள்ளும். என் பெரிய மாமா வடக்கே பட்டாளத்திலிருந்த போது வாங்கி வந்தது அந்தக் கடிகாரம். பழம் பொருள் பிரியர் அவர். எங்கெங்கோ ஏலங்களில் போய் குடுவையையோ, முக்காலியையோ, தாம்பூலம் துப்பும் கூளாம்பியையோ ஏக விலை கொடுத்து வாங்கி வருவார். அம்மா ஆசைப்பட்டாள் என்று இந்தக் கடிகாரத்தை அவளுக்கு அன்பளித்தார். வடக்கே ஏதோ ஒரு சமஸ்தானத்துக்குள் அடங்கிய ஜமீன்தாரின் சொத்துக்கள் ஏலம் வந்த போது வாங்கினாராம். ஏலத்துக்கு வந்தவற்றில் வாங்கக் கூடிய விலையில் இருந்தது இந்த ஒன்றுமட்டும் தான் என்றார் மாமா. அம்மா, மாமா, இருவருமே செத்துப் போய்விட்டார்கள். கடிகாரமும், குருவியும் துடிப்போடு என் அரையில் இயங்கிக் கொண்டிருந்தன. அறைத்தோழன் சௌரிக்கு இந்த குருவியைப் பிடிக்காது. ரொம்பக் கத்துதுடா என்பான். அந்தக் குருவி கழுகாக மாறிவிடாதா, அந்தப் பயல் சௌரியைக் கண்ணை நோண்டி விடாதா என்று தோன்றியது. அன்று ஓயாத புலம்பல் மனதில் ஒடிக்கொண்டிருந்த முன்னிரவு அது. அன்று சாயங்காலம் நடந்ததைச் சொன்னால்தான் ஏன் இவ்வளவு வேதனைக்கு ஆளானேன் என்பது புரியும். சௌரிக்கும் எனக்கும் இடையில் ரகசியங்கள் கிடையாது. மிக முக்கியமான ரகசியம் ஒன்று என்னிடமிருந்து மறைக்கப்பட்டிருக்கிறது என்பது, அன்று அவனுடைய நாட்குறிப்பை எடுத்துப் படிக்கும்வரை எனக்குத் தெரியாது. என் உடன் பிறந்த தங்கையும் அதில் சம்பந்தப்பட்டிருக்கிறாள் என்று தெரிந்தபோது அது வெறும் ரகசியம் மட்டுமில்லை, பயங்கரம் என்றும் தோன்றியது. வருஷக் கணக்காகத் தோன்றாத ஒரு குறுகுறுப்பு அன்றைக்கு மட்டும் தோன்றியது ஏன் என்று புரியவில்லை நண்பன்தான் என்றாலும் அவடைய பற்பசையையோ ஷவரக் க்ரீமையோ கூடத் தொடாத நான், அவனது நாட்குறிப்பைப் படிக்கிற உந்துதலை எவ்விதம் பெற்றேன் என்பது புரியவில்லை எத்தனையோ பெண்களின் கண்களையும் உதடுகளையும் கண்ணங்களையும் கூந்தலையும் முலைகளையும் மோவாய்க் கட்டகளையும் புட்டங்களையும் பற்றி அபிப்பிராயங்கள் பகிர்ந்து கொண்ட நண்பன், என்னுடைய தங்கையின் மார்பைப் பற்றி வாயித்து எழுதிய நாட்குறிப்பு என்னைக் கொலை வெறிக்கு ஆளாக்கிய மர்மம் புரியவில்லை ஆறுமாதத்துக்கு முன்னால் என் வீட்டுக்கு அவன் வந்த அந்தச் சனியன் பிடித்த அக்டோபர் ஆறு ஏன் அத்தனை அழுத்தமாக எனக்கு ஞாபமிருந்தது என்பதும் புரியவில்லை. மனிதர்கள் இறக்கும்போது, உடல் மட்டுமே அழிகிற நாம்; ஞாபங்கள் காற்று வெளியில் பரமாணுத் துகள்களாகப் பத்திரமாக இருக்கின்றனவாம். இதிலிருந்து தெரிவது என்ன, ஞாபங்கள் ஒரு போதும் அழிவதில்லை. அவன் மூஞ்சியில் முழிக்கப் பிடிக்காமல், கதவை வெறுமனே சாத்திவிட்டு, உறங்கத் தலைப்பட்டேன். உறக்கம்தான் வரவில்லை. சௌரி வருகிறான். துவாலையைத் தோளில் போட்டுக் கொண்டு, கதவை ஓசையெழாமல் முடிவிட்டு, குளியலறைக்குப் போகிறான். பற்பசை, சோப்பு இவற்றின் கலவையான மணம் அறைக்குள் பரவி, அவன் திரும்பி வந்துவிட்டதைக் குறிப்பு உணர்த்துகிறது. அ€றைவாசலுக்கு அருகிலுள்ள மேஜை நாற்காலியில் உட்கார்ந்து படிக்கத் தொடங்குகிறான். சனியன் பிடித்தவன். மேலேந்தின கூழாங்கற்களாமே..... கருமையின் கவின்மிகு கதிர்வீச்சாமே.... காம்புகளின் காந்த ஈர்ப்பாமே... நண்பனின் தங்கை மேல் கௌரவமான அபிப்பிராயம் இல்லை. தலைகாணி தலைகாணியாய்ப் புஸ்தங்கள் என்ன வேண்டிக் கிடக்கிறது. நடு ராத்திரிவரை படிப்பதென்ன வேண்டிக்கிடக்கிறது. நாளைக்குச் சொல்லிவிட வேண்டும். பத்து மணிக்கெல்லாம் விளக்கை அணைச்சுடுறா. தூக்கம் வரமாட்டேங்குது. சொல்லி விட வேண்டியதுதான். வேறு அறை பார்த்துக் கொண்டு போவதானால் போகட்டுமே. அல்லது நான் கூட வேறு அறை பார்த்துக் கொள்ளலாம். அந்தப் பச்சை அட்டைத் தலைகாணியைத் தான் படிக்கிறான். சும்மாப் புரட்டிப் பார்த்தபோது, புத்தகம் ஆரம்பிக்கும் பக்கத்தில் ஒரு பாலைவனம் பற்றி நெடுக வர்ணித்திருந்தது. மணற் கடல் என்கிற மாதிரிச் சொற்றொடர்கள்..... சாவதானமான காற்று மணற் புயலாக மாறும் சாத்தியக் கூறுகள், ஒட்டகங்களில் பயணிக்கும் யாத்திரைக் குழுக்கள்... அபூர்வமாகத் தட்டுப்படும் பேரீச்சை மரச் சோலைகள்... உஷ்ணம் குளிர் இரண்டினுடையவும் அதீத உச்சநிலைகள்... ஆங்கிலப் புத்தகம். எப்போதோ தூங்கிவிட்டிருக்கிறேன். புரண்டு படுத்திருபேன் போல, லேசாக உறக்கம் கலைந்ததில், கண்களின் அரைத் திறப்பு வழி நான் பார்த்தது என்ன என்கிறீர்களா? சௌரி, சௌரிராஜன், என் அறைத் தோழன், என் மாஜி நண்பன், திறந்திருந்த அந்தப் பச்சை அட்டைப் புத்தகத்துக்குள் நுழைந்து கொண்டிருந்தான். முதுகுத் தண்டு வெடவெடத்தது எனக்கு. உடல் முழுக்க நடுங்க, கண்களை அகலத் திறந்து பார்க்கிறேன். வெற்று நாற்காலி. மல்லாந்து கிடக்கும் புத்தகம். திறந்து கிடக்கும் கதவு. அறைக்கு வெளியே தாழ்வாரத்தில் அடர்ந்திருக்கும் இருள். நிசப்தம் ரகசியமாக அறைக்குள் வந்துபோகும் முன்னிரவுக் காற்று. ஒரு கணம் ஏக்கமாக இருந்தது. என்ன இருந்தாலும் நண்பனில்லையா. உடனடியாகத் தோன்றிவிட்டது. நட்பை விடவும் ரத்தபந்தம் உசத்தியானது. Blood is thicker than water ...... சண்டாளன். பாலைவனத்துக்குள் நுழைத்திருக்கிறான் பொசுங்கிச் சாகட்டும். அறைவாசலுக்கு எதிர்புறமாகத் திரும்பிப் படுத்துக் கொண்டேன்... ராகவன் என்னுடைய நெருங்கிய நண்பன் தான். ஆனாலும் அவன் சொல்வதை நீங்கள் முழுக்க நம்ப வேண்டியதில்லை என்றே சொல்வேன். கொஞ்சம் ஊதிப் பெரிதாக்கித்தான் எதையுமே அவனால் சொல்ல முடியும் என்பதோடு, மேற்படி நிகழ்வு அவன் பெரும் தொந்தரவுக்கு ஆளாகியிருந்தபோது நடந்தது. ஆகவே, அறுபது முதல் எழுபது சதவிகிதம் தள்ளுபடி செய்துவிடலாம். என்றாலும், தன் தரப்பைப் பொதுவில் வைத்துவிட்டான் அவன் என்பதால், என் தரப்பை நானும் கூறித்தான் ஆக வேண்டும். இப்போதே இங்கேயே. சொற்களுக்கு அர்த்தம் உரைக்கும் அகராதியிலேயே எதிர்ச் சொற்களும் இருக்கிற மாதிரி. அத்தியந்த நண்பர்கள் என்பதாலேயே ஒரே அறையில் தங்கியிருந்தோம் நாங்கள் இருவரும். ஆனால், அவன் பிரஸ்தாபித்தானே, அந்த இரவு கவியும் வரை. மறுநாள் காலையில், தான் வேறு அறைக்கு மாற்றிச் செல்வதாகத் தெரிவித்தான் ராகவன். நானும் மறுக்கவில்லை. ஏனென்றால், அந்த நாட்களில் அவனுடைய நடத்தையில் சில மாற்றங்கள் தெரிய ஆரம்பித்திருந்தன. பாதி செருகிய கண்களில் வெறுமை கூடியிருந்தது. ஒழுகும் மூக்கைப் பற்றிப் பிரச்ஞையில்லாதவனாய் இருந்தான். வெட்டிச் சீராக்கப்படாத தலைமுடி நிரந்தரமாகக் கலைந்து கிடந்தது. எரிந்து முடிகிற சிகரெட்டிலிருந்து அடுத்த சிகரெட்டைப் பற்றவைத்தான். டீயோ, காப்பியோ, எப்போது குடித்தாலும் இரண்டு கோப்பைகள் வாங்கிக் குடித்தான். எதைப் பேசினாலும் இரண்டிரண்டு தடவைகள் சொன்னான். உச்சமாக மழைத்தண்ணீர் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று சொல்லி. ஆஸ்பெஸ்ட்டாஸ் கூரையிலிருந்து வழியும் அழுக்கு நீரைக் கையிலேந்திக் குடித்தான். மொத்தத்தில், அழுத்தமான ஏதோ ஒன்று நடப்பதற்காகக் காத்திருப்பவன் போல இருந்தான். அது நடந்துவிட்டால் போதும். சுவாதீனம் முழுக்கப் பிறழ்ந்துவிடும். அந்த ஒரு புத்தகத்துக்குள் நான் நுழைந்து விட்டதாகச் சந்தேகப்பட்டானில்லையா, அது எனக்கு அப்போது தெரியாது. சற்றுப் பிற்பாடு தெரிய வந்தபோது ராகவனை நினைத்து மிகவும் கவலையும் வேதனையும் பட்டேன். அவனை ஏதோ பீடித்திருக்கிறது என்பது போக, புத்தகத்துக்குள் நுழைவதைப் பார்த்து மிரண்டிருக்கிறானே, பாவம், என்று தோன்றியது. புத்தகத்துக்குள் மட்டுமில்லை, ஓவியங்களுக்குள் கூட நான் நுழைந்திருக்கிறேன். ஸால்வடார் மாலியின் ஓவியம் ஒன்று. சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பருந்தின் பார்வையில் சித்திரிப்பது. சிலுவையேற்றம் நடந்த அந்தப் பிராந்தியத்தில், அந்த நாளில் சென்று இருக்காமல் அந்த ஓவியத்தைப் பார்க்க முடிந்ததில்லை எனக்கு. சொல்லப் போனால், ஒலியினூடாகச் செல்வது கூட சாத்தியம்தான். ஸரோட் கச்சேரி ஒன்றை மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்துவிட்டு வெளியில் வந்த போதுதான் தெரிந்தது. அத்தனை நேரமும் நான் இருந்தது. இசை அரங்கத்தில் அல்ல, இசைத்தவரின் மனோதர்மத்துக்குள் என்று. சில பேருக்கு இவையெல்லாம் பொழுதுபோக்குகள். வேறு சிலருக்கு பிரயாண மார்க்கங்கள். ஆக, நான் புத்தகத்துக்குள் நுழைந்ததை ராகவன் பார்த்தது சரிதான். ஆனால், நான் நுழைந்த இடம் பற்றி அவன் கூறியது சரியில்லை. உண்மையில் நான் போனது பாலைவனத்துக்கு அல்ல. அடர்ந்த வனம். சம்பல் பள்ளத்தாக்குக்கு. சென்று நூற்றாண்டின் ஆரம்பத்தில். மனிதகுல வரலாற்றில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைப் பற்றிய தொகுப்பு அந்தப் புத்தகம். நிர்வாணமாகக் கால்பந்து விறையாட நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள், ஏர் நுகத்தில் பூட்டி ஊழப் பயன்படுத்தப்பட்டவர்கள், ருதுவான மாத்திரத்தில் பிறப்புறுப்பை முட்டித் தைக்கப் பட்டவர்கள், நூற்றிச் சொச்சமாவது ராணியாக அந்தப்புரத்தில் அலிகளின் காவலில் இருந்த அரசிகள், மேலாடை இன்றி ஒட்டகப் பந்தயத்தில் ஓட்டுநர்களாகப் பணிக்கப்பட்டவர்கள், விருந்தினர்களுக்கு உபசாரமாகப் படைக்கப்பட்டவர்கள், சந்தைகளில் நிறுத்தி ஏலம் விடப்பட்டவர்கள்.... உறவியல் ரீதியாகப் பெண்கள் தரும் இதத்தை அனுபவித்தவாறே, உடலியல் ரீதியாக அவர்கள் சிறுமைப்படுத்தப்பட்டதைச் சொல்லும் மானுடவியல் வரலாறு அந்தப் புத்தகம். சென்ற தடவை போலவே, பழுப்பேறிய செம்மண் தரையாக விரிந்த வனத்தினுள் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தேன். நல்ல கோடை, வெய்யலில் தோள் பொசுங்குகிறது. இலை உதிர்ந்த கிளைகளை, இறைஞ்சும் கைகளாக ஆகாயம் நோக்கி விரித்திருந்த மரங்கள், வியாதி பீடித்த சருமம் போலப் பாளம் பாளமாக வெடித்திருந்த மரப் பட்டைகள். கருகி நின்ற குட்டைச் செடிகள். புதிய இடத்தில் அறியாத்தன்மைக்குள் காரணம் தெரியாமல் பகல் முழுக்க நடந்து கொண்டேயிருக்கிறேன். அந்தி கவியும் நேரத்தில், மனிதர் வாழ்ந்திருந்த இடம் என்பதற்கு ஒரே சாட்சியம் போல, சிதிலமாகியிருந்த குட்டிச் சுவர்த் தொகுப்பு ஒன்று கண்ணில் பட்டது. கூரையும் கதவுகளும் இல்லாது பகுக்கப்பட்ட வெற்று வெளிப் பாத்திகள், மேகம் போல நிறைந்திருந்த நிசப்தம். பீதியூட்டிய அமானுஷ்யம். அதைக் கூட்டும் வகையில், சுவருக்குப் பின்னாலிருந்து விசிக்கும் ஒலி கேட்டது. அவ்வப்போது மூக்கை உறிஞ்சியவாறு கேவும் பெண் குரல். அந்த முன்னால் வீட்டின் நிலைவாசலைப் தயங்கித் தயங்கித் தாண்டி நுழைந்தேன். அவள் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்தாள். முன்பு பார்த்த அதே நிலையில். வெள்ளியால் செய்யப்பட்ட ஆபரணங்களை உடல் முழுவதும் பூட்டியிருந்தாள். பல வருஷங்கள் ஆகி விட்டன என்பதால், ஆடை எதும் உடுத்தியிருந்தாளா என்று ஞாபகமில்லை இப்போது. வெள்ளி மினுங்கிய இடங்கள் போக மற்ற இடங்களில் பளபளக்கும் அட்டைக் கறுப்பு நிறத்தவளாக இருந்தாள் என்பது மட்டும் நினைவிருக்கிறது. நான் வரும் ஓசை கேட்டுத் தலை நிமிர்ந்தாள். மாலை மாலையாகப் புதிய கண்ணீர்த்தலைகள் கன்னத்தில் வழிந்திறங்கின. பல நூற்றாண்டுகளாகத் தேங்கிய துயரம் வெளியேறுவதாகப் பட்டது எனக்கு. மாற்றவியலாத நியதிபோல. இந்த முறையும் கேட்டேன். யாரம்மா நீ? இங்கே வந்து உட்கார்ந்திருக்கிறாய். நான் ஸவிதா .... இங்கிருந்து ஐம்பது கல் தொலைவில் உள்ள ஜமீனைச் சேர்ந்தவள். இந்த இடத்தில் என்ன செய்கிறான்? ஒளிந்திருக்கிறேன். என்ன? ஆமாம். நான் குற்றம் இழைத்தவள்தான். ஆனால், குற்றவாளியல்ல. பின்னே? முழுக்கச் சொன்னால் நீங்களே ஒப்புக்கொள்வீர்கள், மூச்சிரைக்கச் சொல்லத் தொடங்கினாள். ....ஐயா எங்கள் ஜமீனில் நாலாயிரம் குடும்பங்கள் இருந்தன. ஜமீந்தார் மிகவும் நல்லவர். வாழ்க்கை நடத்துவதற்கான வசதிகள் எதிலும்குறை வைக்காவர். ஆனால், உடம்புக்கு மாத்திரம் வசதிகள் இருந்தால் போதுமா. மனதுக்கு வசதியில்லாத இடம் நகரமாகத் தோன்றாதா? ஒரு விசித்திரமான வியாதி ஜமீந்தாருக்கு. எங்கள் ஜமீனில் திருமணமாகும் எந்தப் பெண்ணுக்கும் முதலிரவு ஜமீந்தாருடன் தான் நடக்க வேண்டும். ஜமீந்தார் கடவுளின் அவதாரம் என்பதால் அவருக்குத்தான் முதல் படையலாம். வெகு விசேஷமான சன்மானங்கள் எல்லாம் வழங்குவார்தான். அவற்றை அனுபவிப்பதற்கான மனோ நிம்மதி மட்டும் இல்லாமல் போய்விடும். என்னுடைய திருமணத்தன்றும் சாயங்காலம் ஊரே திரண்டது. ஷெனாயும் பக்வாஜூம் ஒலிக்க ஊர்வலமாய் நடந்து, என்னை ஜமீன் அரண்மனை வாசலில் கொண்டு நிறுத்தியது. முதல் தவையாக ஒரு ஆடவனின் முழுமையான ஸ்பரிஸத்துக்கு ஆயத்தமாகும் பெண்ணுக்கு இயல்பாகவே இருக்கும் பயத்தோடு, உபரியான வெறுப்பும் எங்கள் ஊர்ப்பெண்களுக்கு இருக்கும். என் விஷயத்தில் கூடுதலான அச்சமும் கலந்திருந்தது. என் குடும்பத்தை ஜமீந்தாருக்குப் பிடிக்காது. காரணம், இறந்துவிட்ட என் அண்ணன். அவனுடைய புது மனைவியை ஜமீனுக்கு அனுப்ப வேண்டி வந்தபோது, ஜமீந்தாரை எதிர்த்துப் பேசிவிட்டான் அவன். போன மாதம் உங்கள் மகளுக்குத் திருமணம் நடந்ததே, முதல் ராத்திரியை உங்களுடன்தான் கழித்தாளா அவள்? என்று கூடியிருந்த ஜனங்கள் முன்னிலையில் கேட்டு விட்டான். பதறித் துடித்துவிட்டது. ஊர் உச்சகதியில் எழும்பிய கூச்சல்கள் அடங்கிய பின், ஊர் ஜனங்களே அவனுடைய மனைவியைத் பறித்துப்கொண்டுபோய் ஜமீந்தாரிடம் ஒப்படைத்தார்கள். மறுவாரமே திருட்டுப் பட்டம் கட்டிக் கொன்றுவிட்டார்கள் என் அண்ணனை.... பெருமூச்சு விட்டான். வெள்ளிச் சரங்களுக்குக் கீழ் மதர்த்த மார்புகள் ஏறித் தாழ்ந்தன. துயரத்திலும் எத்னை வடிவாகத் தெரிகிறாள் என்று நினைத்துக் கொண்டேன். அவள் தொடர்ந்தாள். ..... என்னவெல்லாம் பட வேண்டியிருக்கமோ என்ற கிலேசத்துடனே அந்த அறைக்குள் நுழைந்தேன். ஜமீந்தாரின் படுக்கையறை எங்கள் ஊரின் கதிரடிக்கும் பொட்டல் போல விஸ்தாரமாயிருந்தது. அரக்கு நிறத் திரைச் சீரைகள். அரக்கு நிற வெல்வெட் படுக்கை விரிப்பின் மேல் வாசனைப் பூக்கள் இறைந்திருந்தன. சாம்பிராணிப் புகையின் நறுமணம் மயக்கியது. ஒரச் சுவரின் அருகில் தயங்கி நின்றிருந்தவளின் தலைக்கு மேல் குருவியொன்று கத்தும் சப்தம் கேட்டது. திடுக்கிட்டு அண்ணாந்து பார்த்தேன். விசித்திரமான கடிகாரம் ஒன்றின் கீழ்ப் பகுதியில் உள்ள கூட்டிலிருந்து வெளிவந்து ஒசையெழுப்பிவிட்டு உள்ளே சென்று மறைந்தது அந்த மரக்குருவி. ஜமீந்தார் தனியாக வரவில்லை. அவருடைய மெய்க் காப்பாளன் போல உடனிருக்கும் மல்லன் ஒருவனுடன் வந்தார். விரோதியின் குடும்பத்துப் பெண்ணாம் நான். என்னைத் தீண்டுவதே பாவமாம். மல்லன்தான் என்னை ஆளப் போகிறான். அதிகாரம் கைக்கேறிவிட்டால், அவமானப் படுத்துவதற்கு எத்தனை நூதனமான யுக்திகளெல்லாம் தோன்றுகின்றன பாருங்கள்? நிர்க்கதி என்று சொல்வார்களே, அதை முழுமையாக அனுபவித்தேன் அன்று, பெண்ணாகப் பிறந்ததை, அந்த ஜமீனில் பிறந்ததை, என் அண்ணனுக்குத் தங்கையாக பிறந்ததை, கடவுள் என்ற ஒருவர் இல்லாத உலகத்தில் பிறந்ததை நினைத்து என் மனம் மறுகிக் கொண்டிருக்க, மல்லனின் கைகளில் என் உடல் ஆட்பட்டுக் கிடந்தது. மனதில் ஒடிய எண்ணங்கள் கண்ணீராய் வழிவதை, உடல் வலியின் விளைவு என்றெண்ணிக் குதூகலித்தனர் என்னைக் கையாண்ட மல்லனும் பொறுமையாய் உட்கார்ந்து வேடிக்கை பார்த்து ரசித்துக் கொண்டிருந்த ஜமீந்தாரும். முதல் சுற்று முடிந்ததும் என் கையால் மது ஊற்றிக் கொடுக்கச் சொன்னார்கள். மிதமிஞ்சிக் குடித்தார்கள். கிறங்கிச் சாய்ந்தார்கள். ஐயா, வனத்தினுள் போய் சுள்ளி பொறுக்கியும், காட்டுப்பழங்களை உதிர்த்துப் பொறுக்கியும் ஜீவனம் நடத்தும் சமூகத்தைச் சேர்ந்தவள் நான். பத்துப் பதினைந்து பெண்களாகச் சேர்ந்துதான் போவோம் எப்போதும், காட்டுப் பன்றிகளும், முள்ளம்பன்றிகளும், ஓநாய்களும், கரடிகளும் எங்களைக் கடந்து போவதைச் சர்வசாதரணமாகப் பார்த்திருக்கிறேன். ஒரு தடவை புலியைக் கூடப் பார்த்துண்டு. நின்று, நிதானமாய் எங்களை வெறித்துவிட்டுத் திரும்பிப் போய்விட்டது. அத்தனை ஜீவராசிகளிடமும் தப்பியவள், என் இனப் பிராணிகளிடம் சிக்கிக் கிழிபட நேர்ந்ததே என்று துக்கம் மேலிட்டது எனக்குள். அப்போதுதான் அந்த முடிவெடுத்தேன். நான் பட்ட கஷ்டம் வேறு யாருமே படக்கூடாது இனி. பழங்கள் வெட்டுவதற்காக மேஜை மேல் வைத்திருந்த குறுங்கத்தியை எடுத்துக் கிறங்கிக் கிடந்த ஜமீந்தாரின் குரல்வளையில் பாய்ச்சினேன். சத்தம் கேட்டு எழ முடியாமல் போதையில் புரண்ட மல்லனின் ஆணுறுப்பைத் துண்டித்து வீசினேன். நல்லவேளை. யாரும் பார்க்கவில்லை. நடந்து செல்லும் வழியாக ரகசியமாக வெளியேறினேன். என் ஊரை விட்டு. என் வனத்தை விட்டு என் காலத்தை விட்டு. என் ஊர்ப் பெண்கள் என்னைக் காவல் தேவதையாக்கி வழிபடுகிறார்களாம். என் திருமணம் நடந்த நாளில் விரதம் இருந்து படையல் வைக்கிறார்களாம் ஊரில் பாதிப் பெண் குழந்தைகளுக்கு என் பெயர்தான் இடப்பட்டிருக்கிறதாம். காற்றில் வருகின்றன சேதிகள். எனினும் நான் கொலையாளிதானே. இதோ ஒளிந்திருக்கிறேன். காட்டிக் கொடுத்துவிட மாட்டீர்களே.. சௌரீ..... சௌரீ..... முதலில் யார் என்று புரியவில்லை சௌரிராஜனுக்கு. வாசலைப் பார்த்தான். தூங்கிக் கொண்டிருக்கும் ராகவனைப் பார்த்தான். மறுபடி புத்தகத்துள்குள் ஆழ்ந்தான். நாலைந்து தடவை கூப்பிட்டுப் பார்த்தும் பலனில்லாமல் போனதால் மறுபடியும் அறிமுகப்படுத்திக் கொண்டேன்.. சௌரீ.... நான் தான் குருவி. கடிகாரக் குருவி பேசுகிறேன்.... அவன் கண்களில் மிரட்சி. புத்தகத்தைக் சடுதியாக மூடினான். என்ன, நம்ப முடியவில்லையா. தலையை லேசாகக் குனிந்து கொண்டவன், மெதுவாகச் சொன்னான். ஆமாம். என்னப்பா இது, ஓவியத்துக்குள் நுழையலாம், மரக்குருவி பேசச் கூடாதாக்கும். அசட்டுத்தனமாகச் சிரித்தான். நீ பேசுவாய் என்று எதிர்பார்க்கவில்லை. சரிவிடு. எதிர்பார்த்துத்தான் நடக்கிறதா எல்லாம்? என்ன சொல்கிறாய்? இதோ தூங்குகிறானே உன் சினேகிதன். அவன் உன் மேல் ஆத்திரமாக இருக்கிறான். அடடே ஏன்? சாயங்காலம் உன் டைரியை எடுத்துப் படித்து விட்டான். அதற்கு நானல்லவா கோபித்துக்கொள்ள வேண்டும்? அதில் அவன் தங்கையைப் பற்றித் தாறுமாறாக எழுதியிருக்கிறாயாம். அடக் கடவுளே. அந்தப் பெண்ணைப் பற்றி நான் ஏன் ஏழுதவேண்டும்? உனக்குத் தெரிகிறது. எனக்குத் தெரிகிறது. ராகவனுக்குத் தெரியவில்லையே... எந்தத் தேதியிலாம்? அக்டோபர் ஆறு. சௌரிராஜன் அக்டோபர் ஆறு ஞாபகப்படுத்திக் கொள்ள முயன்றான். அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதற்கு மேல் ஒன்றும் பெயரிவில்லை. என்னப்பா குழம்புகிறாய்! அன்றுதானே ராகவன் வீட்டுக்குப் போனது? அங்கிருந்து ஹ’க்கின் பாதம்ஸ் போகவில்லை? அட, ஆமாம்..... அதுசரி, உனக்கெப்படித் தெரிகிறது இதெல்லாம்? எனக்குத் தெரியாமல் எதுவும் நடக்காது சௌரி. சௌரி சிரித்தான். கடவுள் மாதிரியாக்கும் நீ? வைத்துக் கொள்ளேன். ஒருமையில் சொல்லாதே. மாபெரும் கூட்டத்தின் பிரதிநிதிதான் நான். ஓஹோ. உங்களுக்கு வால் கழன்று, ரோமம் உதிர்ந்து, பல் உள்ளடங்கி, இப்போதைய வடிவத்துக்கு நீங்கள் வந்திருக்கிற மாதிரி எங்களுக்கும் வளர்ச்சிப் பாதை ஒன்று உண்டு. என்னுடைய கொள்ளுப் பாட்டனின் பாட்டன் மணல் நிரப்பின குடுவையாய் இருந்தார். அவருடைய ஒன்றுவிட்ட தம்பி, நீர் சொட்டுகையில் சுழலும் சக்கரமாய் இருந்தார். அவருடைய தாத்தா, மைதானத்தின் நடுவில் நட்டுவைத்த கம்பமாய் இருந்ததாய்ச் சொல்வார்கள். குருவிகளைப் பற்றியா சொல்கிறாய்? அட கிறுக்கா. குருவியென்றால் உணவு கொள்ளவும், உயிர்பெருக்கவும் மாட்டோமா? சௌரி கொஞ்சநேரம் அமைதியாய் இருந்தான். பிறகு கேட்டான். போகட்டும். அவன் படித்த குறிப்பில் என்ன எழுதியிருந்தேனாம்? மேலேந்தின கூழாங்கற்கள்.... கருமையின் கவின்மிகு கதிர்வீச்சு... காம்புகளின் காந்த ஈர்ப்பு.... அடப்பாவி. அது அவன் தங்கையைப் பற்றிய வர்ணனை என்றா நினைக்கிறான். ஸவிதாவை முதல் தடவை பார்த்த போது எழுதியதல்லவா அது? ராகவனைத் திரும்பிப் பார்த்தான் சௌரிராஜன். சந்தேகத்தைத் தலையணையாய் வைத்து உறங்கிக் கொண்டிருக்கிறானே என்று தோன்றியிருக்கும். தூக்கத்தில் வெகுளி பூண்ட முகத்தைப் பார்க்கப் பாவமாய் இருந்ததோ என்னவோ. அது கிடக்கட்டும்.... வாதைப்படும் ஒரு பெண்ணைச் சந்தித்ததை எழுதும்போது, இப்படியா அவள் உடம்பைப் பார்த்துக் கிறங்குவது? அட, வேணுமென்றா கிறங்குகிறோம். இதைப் சொல்கிறாய். ஒரு தடவை இடுகாட்டுக்ப் போயிருக்கிறேன். சாயங்காலம். மனம் முழுக்கத் துயரம் நிரம்பியிருக்கிறிது. இடுகாட்டு அரசமரத்திலிருந்து சிலுசிலுவென்று காற்று வீசியது. உடம்புக்கு எவ்வளவு இதமாய் இருந்தது என்கிறாய்.... என் சிநேகிதன் ஒருத்தன் கவிதை எழுதியிருக்கிறான்..... கண்ணீர் உருளும் பெண்ணின் கன்னம் அழைக்கிறது என்னை முத்தமிட.... தொடர்ந்து, ஆதங்கத்துடன் கேட்டான். அது சரி, உனக்குத்தான் தெரிகிறதே. நீயாவது அவனிடம் விளக்கியிருக்கக் கூடாதா? நான் பேசுவது எல்லாருக்கும் கேட்காதே. கேட்பவருக்கெல்லாம் புரியவும் செய்யாதே. ரொம்ப மர்மமாகப் பேசுகிறாய். நிஜ வாழ்வு இன்னும் மர்மமானது சௌரி. அப்படியா. ஆமாம். அந்தப் பெண் ஸவிதா, தான் செய்த கொலைகளை யாருமே பார்க்கவில்லை என்கிறாளே, நீயும் நம்புகிறாய் தானே? ஆமாம். அதுதான் இல்லை. நான் பார்த்தேன் .... குக்... குக்... குக்...........
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'கடிகாரக் குருவி' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: அக்பர், பீர்பல், அப்துல் ரஹ்மான், குரு நாதர், சட்டம், வழக்கறிஞர், நீதிபதி, கிழவர், பிஹாரி
தலைப்பு: முதல் வழக்கில் வெற்றி!
| ஒருநாள் சக்கரவர்த்தி அக்பர் தர்பாரில் கூடியிருந்தவர்களை நோக்கி, "நமது நீதி மன்றத்தில் வழக்கு விசாரணைகள் ஒழுங்காக நடை பெறுகின்றனவா?" என்று கேட்டார். "மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றன, பிரபு! நமது நீதிபதி ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு பார்க்காமல் நியாயமாக நீதி வழங்குகிறார்!" என்று ஒரு அதிகாரி நீதிபதியைப் புகழ்ந்தார். பிறகு தர்பாரில் இருந்த அனைவரும் அதை ஆமோதிக்க, நீதிபதிக்கு உச்சி குளிர்ந்து விட்டது. ஆனால் பீர்பல் மட்டும் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்ததை கவனித்த அக்பர், "பீர்பல்! நீ மட்டும் ஏன் மௌனமாக இருக்கிறாய்? மற்றவர்கள் கூறியது முற்றிலும் தவறு என்று நினைக்கிறாயா?" என்று கேட்டார். "முற்றிலும் தவறு என்று சொல்ல மாட்டேன். ஆனால் நமது வழக்கு விசாரணைகளும், நீதி வழங்குதலும் திருப்திகரமாக உள்ளது என்று நான் சொல்ல மாட்டேன்" என்றார் பீர்பல். அக்பர் அவரை மேலும் விளக்கம் கேட்க நினைக்கையில், வாயிற்காவலன் உள்ளே நுழைந்து, "பிரபு! ஒரு கிழவரும், இளைஞரும் நியாயம் கேட்டு வந்திருக்கிறார்கள்" என்றான். "அவர்களை வரச்சொல்!" என்றார் அக்பர். உடனே, தர்பாரில் ஒரு கிழவரும், ஓர் இளைஞனும் உள்ளே நுழைந்து சக்கரவர்த்தியை வணங்கினர். "என்ன விஷயம்? உங்களில் யாருக்கு என்ன குறை?" என்று கேட்டார் அக்பர். "பிரபு! என் பெயர் அப்துல் ரஹ்மான்" என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட கிழவர் தொடர்ந்து, "நான் ஒரு சட்ட நிபுணன்! மாணவர்களுக்கு சட்டத்தின் நுணுக்கங்களையும், வழக்கு விசாரணைகளைப்பற்றியும் கற்பிக்கிறேன். இதோ நிற்கிறானே பிரமோத் பிஹாரி! இவன் என் மாணவனாக இருந்தவன்! இவன் மீது நான் குற்றம் சாட்ட வந்துள்ளேன்" என்றார். அந்த இளைஞன் செய்த குற்றம் குறித்து அக்பர் கேட்டார். "பிரபு! இவன் என்னிடம் மாணவனாக சேர விரும்பிய போது, நான் மாதம் மூன்று பொற்காசு வீதம் குரு தட்சிணை தர வேண்டுமென்றும், ஓராண்டு காலம் சட்டம் படிக்க வேண்டும் என்றும் கூறினேன். ஆனால் இவன் தான் பரம ஏழை என்றும், தட்சிணை கொடுக்க இயலாது என்றும் கூறினான். படிப்பு முடிந்ததும் வழக்கறிஞனாகி முதல் வழக்கில் வெற்றி பெற்றவுடன், முப்பத்தாறு பொற்காசுகள் சேர்த்து தருவதாகவும் வாக்களித்தான். அதை நம்பி இவனுக்கு ஓராண்டு காலம் கற்பித்தேன். இவன் மிகவும் கெட்டிக்கார மாணவன் என்பதால் ஓராண்டிலேயே மிகச் சிறப்பாக சட்ட நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு விட்டான். நானும் இவன் வழக்கறிஞனாகி, முதல் வழக்கிலேயே வெற்றி பெறுவான் என்றும், தட்சிணையை மொத்தமாகக் கொடுப்பான் என்றும் நம்பினேன்" என்று சொல்லி நிறுத்தினார் கிழவர். "இப்போது பணம் தராமல் ஏமாற்றுகிறானா?" என்று அக்பர் கேட்டார். "இல்லை பிரபு! இவன் திடீரென வழக்கறிஞனாகப் பணி புரியும் யோசனையை கை விட்டு விட்டான். அந்தத் தொழிலில் ஈடுபடப் போவதில்லையாம்!" என்றார். உடனே அக்பர் அந்த இளைஞனை நோக்கி, "எதற்காக உன்னுடைய உத்தேசத்தை நீ மாற்றிக் கொண்டாய்?" என்று கேட்டார். "பிரபு! நான் சட்டம் பயின்று முடித்ததும் வழக்கறிஞர் தொழிலில் ஈடுபடுவதாகத்தான் இருந்தேன். ஆனால் என் சித்தப்பா திடீரென இறந்து போனார். அவர் தன்னுடைய உயிலில் அவருடைய அனைத்து சொத்துகளுக்கும் என்னை வாரிசாக்கி விட்டார். இப்போது நான் லட்சாதிபதி. அதனால் எந்த வேலையும் செய்யத் தேவையில்லை," என்றான். "அப்படியானால் இவருடைய தட்சிணை என்ன ஆவது?" என்று கேட்டார் அக்பர். "நான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவேன். எனக்கு என்று வழக்கறிஞனாக ஆக வேண்டும் என்று தோன்றுகிறதோ, அப்போதுதான் தட்சிணையும் தர முடியும்" என்றான். பிரமோத் பிஹாரி கூறுவது சரியே என்று நினைத்தார் அக்பர். உடனே அவர் நீதிபதியை நோக்கித் தீர்ப்பு வழங்கக் கூறினார். நீதிபதி அவர்கள் இருவரையும் நோக்கி, "இரு தரப்பினரின் வாதத்தையும் கூர்ந்து கவனித்தேன். என்னைப் பொறுத்தவரை இந்த வழக்கில் பிரமோத் பிஹாரியின் பக்கமே நியாயம் இருக்கிறது. கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவேன் என்று இந்த தர்பாரில் அவன் உறுதி அளித்துள்ளான். அவன் சொல்லை ஏற்றுக் கொண்டு, அவனுக்கு என்று வழக்கறிஞராக வேண்டும் என்று தோன்றுகிறதோ, அன்று அந்தத் தொழிலில் ஈடுபட்டு குருவின் தட்சிணையைத் திருப்பித் தரலாம். அதுவரை குரு காத்திருக்க வேண்டும். இதுவே என் தீர்ப்பு!" என்றார். அக்பர் உட்பட தர்பாரில் அனைவரும் இந்தத் தீர்ப்பைப் பாராட்டினர். இதை எதிர்பார்க்காத கிழவர் ஏமாற்றத்தினாலும், வருத்தத்தினாலும் உடல் குறுகிப் போனார். ஆனால் பீர்பல் மட்டும் தீர்ப்பைப் பாராட்டாமல் மிகவும் மௌனமாக இருந்ததை கவனித்த அக்பர், இந்தத் தீர்ப்பை மறுஆய்வு செய்யுமாறு பீர்பலிடம் கூறினார். அதைக்கேட்டதுமே கிழவரின் முகம் மலர்ந்தது. மிகவும் புத்திசாலியான பீர்பல் சரியான தீர்ப்பு வழங்குவார் என்று அவர் உறுதியாக நம்பினார். பீர்பல் இளைஞனை நோக்கி, "நீ கொடுத்த வாக்கில் உறுதியாக இருக்கிறாய் அல்லவா?" என்றார். "அதில் என்ன சந்தேகம்? கண்டிப்பாக அப்போது அதில் கிடைக்கும் வருமானத்திலிருந்து என் குருநாதருக்கு சேர வேண்டிய தட்சிணையைக் கட்டாயம் தந்து விடுவேன்" என்றான் இளைஞன். பிறகு கிழவரை நோக்கி, "பிஹாரியின் நிபந்தனையை நீங்கள் ஆரம்பத்திலேயே ஒப்புக் கொண்டீர்கள் அல்லவா?" என்று கேட்டார் பீர்பல் "ஆம் ஐயா!" என்றார் கிழவர். "அப்படியானால் சட்டப்படி இளைஞனின் தரப்பில்தான் நியாயம் உள்ளது. அவன் வழக்கில் வெற்றி பெற்று தட்சிணை தரும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டியதுதான்" என்றார் பீர்பல். பீல்பலையும், அக்பரையும் வணங்கிவிட்டு அவர் தள்ளாடித் தள்ளாடி வெளியேற, இளைஞன் பிஹாரி வெற்றிப் பெருமிதத்துடன் வெளியேறினான். திடீரென பீர்பல் பிஹாரியை அழைத்து, "பிஹாரி! இதுதான் சக்கரவர்த்தியின் நீதிமன்றத்தில் உன்னுடைய முதல் வழக்கு! உன்னுடைய வழக்கை விசாரிக்க வேறு வழக்கறிஞரை நியமிக்காமல் நீயே உன் தரப்பு நியாயத்தை வெகு அழகாக எடுத்துக் கூறினாய்" என்றார் பீர்பல். பிஹாரி மகிழ்ச்சியுடன், "நன்றி ஐயா!" என்றான். பீர்பல் தொடர்ந்து, "அதாவது உன்னுடைய முதல் வழக்கில் நீயே வழக்கறிஞராக இருந்து வாதாடி அதில் வெற்றி பெற்று விட்டாய். இல்லையா?" என்று பீர்பல் கேட்டார். "ஆம் ஐயா!" என்றான் பிஹாரி மகிழ்ச்சியுடன். "அப்படியானால் நீ வழக்கறிஞராக இருந்து வெற்றி பெற்ற முதல் வழக்கு இது! நீ வாக்களித்தபடியே, குருதட்சிணையை உன் குருவிற்கு இப்போதே இங்கேயே கொடுத்து விடு!" என்றார். ஒருகணம் திகைத்துப் போன அனைவரும், மறுகணமே கைதட்டி ஆர்ப்பரித்தனர். கிழவர் பீர்பலுக்கு மனமார நன்றிகூற, அக்பர் பீர்பலை மிகுந்த மகிழ்ச்சியுடன் தழுவிக் கொண்டார். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: சித்தனூரில் இனிப்பு கடை ஒன்று இருந்தது. சிறுவர்கள் அந்தக் கடையில் இனிப்பு வாங்கிச் சாப்பிடுவர். அந்தக் கடைக்கார கிழவனுக்கு, சிறுவர்களைக் கண்டால் பிடிக்காது. அவர்கள் மீது எரிந்து விழுவான். அவர்களால் ஏதேனும் வேலை ஆக வேண்டி இருந்தால் அவர்களை அழைப்பான். “இந்த வேலையை முடியுங்கள்; இனிப்பு தருகிறேன்’ என்பான். அவர்கள் அதைச் செய்து முடித்ததும் இனிப்பு தர மாட்டான். மாறாக, அவர்களை விரட்டி விடுவான். இதனால், சிறுவர்களுக்கு அவனைக் கண்டாலே பிடிக்காது. நண்பகல் நேரத்தில், கடைக்குள் படுத்துத் தூங்குவான். சிறுவனாக இருந்த அவன் மகன், அப்போதுதான் கடையைப் பார்த்துக் கொள்வான். ஒருமுறை அந்தக் கடைக்காரன் மண்பாண்டம் செய்பவர்களிடம் சென்றான். “”பலகாரங்கள் வைப்பதற்காக வாய் அகன்ற பானைகள் முப்பது செய்ய வேண்டும். எப்போது செய்து தருவீர்கள்?” என்று கேட்டான். “”ஒரு வாரத்தில் தயாராகி விடும்,” என்றனர். குறிப்பிட்ட நாள் வந்தது. அந்தப் பானைகளைக் கடைக்குள் எடுத்து வர வேண்டுமே… என்ன செய்வது என்று சிந்தித்தான் கடைக்காரன். வழக்கம் போலச் சிறுவர்களை ஏமாற்றுவோம் என்று நினைத்தான். சிறுவர்களை அழைத்த அவன், “”மண்பாண்டம் செய்பவர்களிடம் முப்பது பானைகள் உள்ளன. அவற்றைக் கவனமாக எடுத்து வர வேண்டும். எடுத்து வருகிறீர்களா?” என்று கேட்டான். “”அப்படி நாங்கள் எடுத்து வந்தால் எல்லாருக்கும் நிறைய இனிப்பு தருவீர்களா?” என்று கேட்டான் அவர்களில் ஒருவன். “”கொண்டு வாருங்கள். பிறகு பார்க்கலாம்,” என்றான் கடைக்காரன். “”நிறைய இனிப்பு கிடைக்கப் போகிறது,” என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர் சிறுவர்கள். ஒவ்வொரு பானையாக அவர்கள் கடைக்குக் கொண்டு வந்தனர். எல்லாப் பானைகளும் வந்து சேர்ந்தன. “”எங்களுக்குத் தருவதாகச் சொன்ன இனிப்பைத் தாருங்கள். நாங்கள் சாப்பிட்டுக் கொண்டே செல்கிறோம்,” என்றனர் சிறுவர்கள். “”நான் எப்போது உங்களுக்கு இனிப்பு தருவதாகச் சொன்னேன். நீங்கள் கேட்டதற்கு, கொண்டு வாருங்கள் பிறகு பார்க்கலாம் என்றுதானே சொன்னேன். இப்போதும் அதையேதான் சொல்கிறேன். பிறகு பார்க்கலாம்,” என்று அவர்களை விரட்டினான் கடைக்காரன். தாங்கள் ஏமாந்து விட்டதை எண்ணிப் புலம்பியப்படியே அங்கிருந்து சென்றனர் சிறுவர்கள். அந்த வழியாக வந்த கோபால், “”ஏன் அழுது கொண்டே செல்கிறீர்கள்?” என்று கேட்டார். “”கோபால் மாமா! அந்த இனிப்புக் கடைக்காரர் எங்களை ஏமாற்றிவிட்டார்,” என்று நடந்ததை எல்லாம் சிறுவர்கள் கூறினர். “”கவலை வேண்டாம்! உங்களுக்குக் கிடைக்க வேண்டிய இனிப்பிற்கு அதிகமாகவே கொண்டு வருகிறேன். நீங்கள் யாரும் அந்தக் கடைக்குள் வரக் கூடாது. வெளியே நில்லுங்கள்,” என்ற கோபால் கடைக்குள் நுழைந்தார். அப்போது கடைக்காரனின் மகன்தான் கடையைக் கவனித்துக் கொண்டிருந்தான். உள்ளே இருந்த அறைக்குள் கடைக்காரன் தூங்கிக் கொண்டிருந்தான். இவனை எளிதாக ஏமாற்றலாம் என்று நினைத்த கோபால், இனிப்புப் பாத்திரத்திற்குள் கையை விட்டான். இனிப்புகளை எடுத்துச் சாப்பிட்டான். இதைப் பார்த்த சிறுவன், “” என்ன இனிப்பை எடுத்து சாப்பிடுகிறாய்? பணம் தராமல் எதையும் தொடக்கூடாது,” என்று கத்தினான். “”தம்பி! உன் தந்தைக்கு என்னை நன்றாகத் தெரியும். நான் இப்படி இனிப்பை சாப்பிடுவதை அவர் பொருட்படுத்தமாட்டார். என் பெயர் எறும்பு. நீ வேண்டுமானால் அவரிடம் இனிப்பை நான் சாப்பிடுவதாகச் சொல். அவர் ஒன்றும் சொல்ல மாட்டார்,” என்றான் கோபால். “”அப்பா! கடைக்குள் எறும்பு வந்துள்ளது. நான் சொல்லியும் கேளாமல் இனிப்பை எடுத்துச் சாப்பிடுகிறது,” என்று கத்தினான் சிறுவன். தூக்கம் கலைந்ததால், எரிச்சல் அடைந்த கடைக்காரன், “”மகனே! எறும்பு வந்தால் விரட்டு… இல்லையேல் அதை அப்படியே விட்டுவிடு. எறும்பைச் சமாளிக்க உன்னால் முடியாதா?” என்று கத்தினான். இதைக் கேட்ட கோபால் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான். “இனிப்பு நிறைந்திருந்த ஒரு பாத்திரத்தைத் தூக்கினான். சிறுவர் களுக்கு வழங்க இதுபோதும்’ என்று நினைத்து அங்கிருந்து புறப்பட்டான். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவன், “”அப்பா நிறைய இனிப்புகளை எறும்பு எடுத்துச் செல்கிறது. பணம் ஏதும் தர வில்லை,” என்று கத்தினான். இதைக் கேட்ட கடைக்காரன் கோபம் கொண்டான். “”என் தூக்கத்தைக் கெடுக்காதே என்று எத்தனை முறை சொல்வது? நான் எழுந்து வந்தால் உன் தோலை உரித்து விடுவேன். எறும்பு இனிப்பை எடுத்துச் செல்வதற்காக, யாராவது கவலைப்படுவார்களா? போனால் போகட்டும் எவ்வளவு இனிப்பை எடுத்துச் சென்றுவிடப் போகிறது. பேசாமல் இரு,” என்று கத்தினான். இனிப்புப் பாத்திரத்துடன் வெளியே வந்தான் கோபால். அங்கிருந்த சிறுவர்களுக்கு ஒன்றுக்கு இரண்டாக இனிப்புகளைத் தந்தான். அவர்களும் மகிழ்ச்சியாகச் சாப்பிட்டனர். “”உங்களை ஏமாற்ற முயன்ற கடைக்காரனை நன்றாக ஏமாற்றி விட்டேன்,” என்ற கோபால் அங்கிருந்து புறப்பட்டான். தூக்கம் கலைந்து எழுந்த கிழவன், விஷயம் அறிந்ததும் குய்யோ, முய்யோ என கத்தினான். யார் அந்த எறும்பு என்று தெரியாமல் நொந்து போனான்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'எறும்பு தின்னது' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: ஓநாய், ஆட்டுக்குட்டி, ஓடை, தண்டனை
தலைப்பு: ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
| ஒரு ஓநாய் அதிக தாகத்துடனும் பசியாலும் தவித்துக் கொண்டு இருந்தது. அது தண்ணீர் குடிக்க ஒரு ஓடைக்குச் சென்றது. அப்போது சிறிது தூரத்தில் ஒரு ஆட்டுக்குட்டி ஒன்று தண்ணீர் குடிப்பதைக் கண்டது. உடனே அதற்குக் கோபம் வந்தது. அது ஆட்டுக் குட்டியைப் பார்த்து " டேய் முட்டாள்! நான் தண்ணீர் குடித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கவில்லையா! ஓடையைக் கலக்குகிறாயே " என்றது. ஆட்டுக்க்குட்டு மிகுந்த பயத்துடன் " நான் உங்களுக்குக் கீழ்ப் பக்கத்தில் தண்ணீர் குடிக்கிறேன் நீங்களோ மேல் பாகத்தில் குடிக்கிறீர்கள் .நான் இங்கே தண்ணீர் குடிப்பதால் அங்கு தண்ணீர் எப்படி கலங்கும் " என்றது. "ஆறு மாதத்திற்கு முன்னால் உன் தந்தை இப்படித்தான் என்னிடம் வாயாடினார். அதற்காக அவருடைய தோல் உரிக்கப்பட்டது. அது போல் உன் தோலையும் உரித்தால் தான் நீ வாயாடுவதை நிறுத்துவாய்" என்று கோபமாகச் சொல்லியது ஓநாய். ஆட்டுக்குட்டியோ மிகவும் பயந்தது . அதன் உடல் நடுங்க ஆரம்பித்தது. " ஐயா! நான் சொல்வதைக் கேளுங்கள் தயவு செய்து என் பேச்சை நம்புங்கள். நான் பிறந்து இன்னும் ஆறு மாதம் கூட ஆகவில்லை" என்று மிகப் பணிவாகச் சொல்லியது. ஓநாய் கோபமாகப் பற்களைக் கடித்துக் கொண்டு " என்ன கர்வம். எங்கள் இனத்தாரிடம் விரோதம் காட்டுவதே உங்கள் இனத்தாருக்கு வழக்கமாகி விட்டது. இனி நீ உன் முன்னோர்கள் செய்த கொடுமைகளுக்குத் தண்டனை அடைந்தே தீர வேண்டும் " என்று சொல்லிக் கொண்டே ஆட்டுக் குட்டியின் மீது பாய்ந்தது. ஆட்டுக்குட்டி என்ன கத்தியும் விடாமல், அதனைக் கடித்துத் தின்றது ஓநாய். கெட்டவர்கள் தங்கள் செயலுக்கு நீதியையோ தவறுக்கு மன்னிப்பையோ விரும்ப மாட்டார்கள் |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: துறவி, பசு, மலை, காடு, நண்பர்கள், தியானம்
தலைப்பு: மனதின் இடைவிடா தீர்மானங்கள்
| நான் மிகவும் நேசிக்கும் ஜென் கதை ஒன்று உள்ளது. நண்பர்கள் மூவர் காலைநேரத்தில் உலாவ சென்றிருந்தினர். அப்போது அவர்கள் திடீரென மலையில் ஜென் துறவி ஒருவர் நின்றிருப்பதை கண்டனர். அந்த மூன்று நண்பர்களில் ஒருவன், "அவர் அவருடைய நண்பர்களுடன் வந்திருக்க வேண்டும், இவர் அவர்களை விட முன்னால் வந்திருக்க வேண்டும். அதனால் இவர் அவர்களுக்காக காத்திருக்கிறார் என்று நான் நினைக்கிறேன்" என்று கூறினான். இன்னொருவன், "நீ கூறுவதை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது. ஏனெனில் அந்த மனிதரை பார்க்கும் போது ஒரு விஷயத்தை என்னால் நிச்சயமாக கூற முடியும். அவர் யாரோ ஒருவருக்காக காத்திருக்கவில்லை என்பதே அது. ஏனெனில் அவர் ஒருபோதும் பின்னால் திரும்பி பார்க்கவில்லை. அவர் வெறுமனே ஒரு சிலையைப் போல நின்று கொண்டிருக்கிறார். தனியாக விடப்பட்டு மற்றவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கும் யாராக இருந்தாலும் சிறிது நேரத்திற்கு ஒருமுறை அந்த நபர் வந்துவிட்டாரா இல்லையா என்று பார்ப்பார்கள். ஆனால் இவர் நகரவே இல்லை. அவர் எந்த நண்பனுக்காகவும் காத்துக் கொண்டிருக்கவில்லை. இந்த துறவியை நான் அறிவேன். அவரிடம் ஒரு பசுமாடு இருக்க வேண்டும், அந்த பசு இந்த அடர்த்தியான காட்டிற்க்குள் தொலைந்து போயிருக்க வேண்டும். இதுதான் இருப்பதிலேயே மிகவும் உயரமான இடம், எனவே அங்கிருந்து அவரால் இந்த காடு முழுவதையும் பார்த்து அந்த பசு எங்கிருக்கிறது என்று கண்டறிய முடியும் என்று அவர் அங்கிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்" என்றான். மூன்றாவது நபர், "உன்னுடைய சொந்த வாதத்தை நீயே மறுத்துவிட்டாய். அவர் பசுவை தேடிக் கொண்டிருந்தால் அவர் சுற்றிலும் பார்த்துக் கொண்டிருப்பார், அவர் ஒரு திசையை பார்த்தபடி வெறுமனே ஒரு சிலையைப் போல அங்கு நின்று கொண்டிருக்கமாட்டார். தொலைந்து போன பசுவை தேடும் வழி இதுவல்ல "என்று கூறினான். அவன், "எனக்கு தெரிந்த வகையில் அவர் அவருடைய காலை நேர தியானத்தை செய்து கொண்டிருக்கிறார் "எனக் கூறினான். ஆனால் மற்ற இருவரும், "ஜென்னின் அடிப்படை தத்துவமே நீ எங்கு வேண்டுமானாலும் தியானம் செய்யலாம், எதை செய்து கொண்டிருந்த போதிலும் தியானம் செய்யலாம் என்பது தானே. எனவே அந்த மலைக்கு அதிகாலையில் குளிரில் சென்று நின்று கொண்டு தியானம் செய்ய வேண்டிய அவசியம் என்ன?" என்று கேட்டார்கள். "அவர் அவருடைய கதகதப்பான மடாலயத்தில் அவர்களுடைய தனிச்சிறப்பு வாய்ந்த தியான ஆலயத்தில் தியானம் செய்திருக்க முடியும். அவர் அங்கு இருந்திருக்கலாம் – மலைக்கு செல்ல வேண்டிய தேவை என்ன ? இல்லை இதை நாங்கள் ஒத்துக் கொள்ள முடியாது "என்று கூறினார்கள். அவர்கள் விவாதித்தனர். முடிவில் அவர்கள் நாம் மலைக்கு செல்வதுதான் சிறந்ததாக இருக்கும். அது நேரத்தை வீணடிப்பதாக இருக்கலாம், ஆனால் அவர் என்ன செய்கிறார் என்று முடிவு செய்ய இதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை என்று கூறினார்கள். மனதின் ஆர்வம் அத்தகையது – மிகவும் குரங்குத்தனமானது எதற்காக நீ இப்போது உன்னை சிரமப்படுத்திக் கொள்கிறாய் ? அவர் செய்வது என்னவாக இருந்தாலும் செய்துவிட்டு போகட்டும். அவர் ஒருவேளை அவருடைய பசுவை தேடிக் கொண்டிருந்தால் அது அவருடைய பிரச்னை. ஒருவேளை அவர் அவருடைய நண்பருக்காக காத்துக் கொண்டிருந்தால் அது அவருடைய விருப்பம். ஒருவேளை அவர் தியானித்துக் கொண்டிருந்தால் அது அவருடைய சொந்த விஷயம் – நீ எதற்காக உன்னுடைய மூக்கை அதற்குள் நுழைக்கிறாய் ? ஆனால் மக்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் விவாதம் செய்ததில் மிகவும் உற்சாகமடைந்து அவர்கள் நாம் மேலே சென்றாக வேண்டும் என்று முடிவு செய்தனர். அவர்கள் வெறும் சிறிய காலை நேர உலாவலுக்குத்தான் வந்தனர் என்பதை மறந்து விட்டனர். மேலும் மலைக்கு செல்வதற்கு பல மணி நேரம் ஆகும் என்பது மட்டுமல்ல மலையிலிருந்து கீழே இறங்கி வரும்போது சூரியன் கிட்டத்தட்ட உச்சியில் இருப்பான் என்றாலும் கூட கேள்வி……… அவர்கள் ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டும். அது மட்டுமல்ல, உண்மையில் அவர்கள் தாங்கள்தான் சரி என்று நிரூபிக்க விரும்பினார்கள். ஒவ்வொருவரும் நான்தான் சரி என்பதை நிரூபிக்க விரும்பினார்கள். இப்போது அதனை முடிவு செய்யக்கூடிய ஒரே மனிதன் அந்த துறவிதான். அவர்கள் மூச்சு வாங்கிக் கொண்டு அங்கு அடைந்தனர். துறவி அரைக் கண்ணை மூடிக்கொண்டு அங்கு நின்றிருந்தார். அது புத்த மத வழி – நீ தியானம் செய்யும்பொழுது, கண்களை பாதி மூடிக் கொள்வது — ஏனெனில் ஒருவேளை நீ கண்களை முழுவதுமாக மூடிவிட்டால் நீ தூக்கத்தில் விழுந்துவிடக்கூடும். அப்போது தியானத்தில் செல்வதை விட தூக்கத்தில் விழ அதிக சாத்தியக்கூறு உள்ளது. நீ ஒருவேளை உன்னுடைய கண்களை முழுவதுமாக திறந்திருந்தால் நீ ஆயிரத்தோரு விஷயங்களில் ஆர்வம் கொள்வாய். ஒரு அழகான பெண் கடந்து செல்கிறாள், அப்போது தியானம் தொலைந்து விடுகிறது. எது வேண்டுமானாலும் தொல்லை கொடுக்கலாம். எனவே கண்களை பாதி மூடிக் கொண்டிருந்தால் நீ வெளியில் என்ன நடக்கிறது என்று சரியாக பார்க்கமாட்டாய், நீ பாதி கண்களை திறந்து வைத்திருக்க வேண்டும் எனவே நீ தூக்கத்தில் விழுந்து விட மாட்டாய். முதல் மனிதன் கேட்டான், "குருவே, நாங்கள் உங்களைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் நாங்கள் உங்கள் மடாலயத்திற்கு வரும் வாய்ப்பை பெற்றதில்லை. காலை நேர நடைக்காக வந்த நாங்கள் அதிர்ஷ்டவசமாக உங்களைக் கண்டோம். எங்களுக்கு ஒரு கேள்வி உள்ளது. அதற்கு நீங்கள் விடையளிக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். நீங்கள் நண்பருக்காக காத்திருக்கிறீர்களா ?" அரைகண் மூடிய நிலையில் அந்த துறவி, "எனக்கு யாரும் இல்லை, நான் தனியாக உள்ளேன். நான் தனியாக பிறந்தேன், நான் தனியாகத்தான் இறப்பேன், மற்றும் இந்த இரு தனிமைகளுக்கிடையில் என்னுடன் யாரோ இருக்கிறார்கள் என்று என்னை நானே முட்டாளாக்கிக் கொள்ள முயற்சி செய்யவில்லை. நான் தனியாக உள்ளேன், மேலும் நான் யாருக்காகவும் காத்திருக்கவில்லை "என்று கூறினார். இரண்டாவது மனிதன் மகிழ்ச்சியோடு, "அப்படியானால் நிச்சயமாக உங்களுடைய பசு இந்த அடர்த்தியான காட்டில் தொலைந்திருக்க வேண்டும், நீங்கள் கண்டிப்பாக அதனைத்தானே தேடிக் கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டான், துறவி, "வித்தியாசமான அடி முட்டாள்கள்தான் இங்கு வருவார்கள் போலத் தெரிகிறது. என்னிடம் ஒரு பொருளும் இல்லை. என்னிடம் எந்த பசுவும் இல்லை, மடாலயத்தில்தான் அது உள்ளது, அது என்னுடைய வேலை அல்ல, அதனால் நான் எதற்காக பசுவைத் தேடி என்னுடைய நேரத்தை வீணடிக்கவேண்டும் ? என்று கூறினார். மூன்றாவது மனிதன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். அவன், "இப்போது நீங்கள் மறுக்கமுடியாது. நீங்கள் கண்டிப்பாக தியானம் செய்து கொண்டிருக்கவேண்டும். அப்படித்தானே நீங்கள் உங்களுடைய காலை நேர தியானத்தை செய்து கொண்டிருக்கிறீர்கள்தானே ?" என்று கூறினான். துறவி சிரித்தார். அவர் "நீதான் மூவரில் மோசமான முட்டாள். தியானம் செய்யப்படுவதல்ல, அது ஒரு செயலல்ல. நீ தியானத்தில் இருக்கலாம். ஆனால் அதை நீ செய்ய முடியாது. அது ஒரு நிலை. எனவே நிச்சயமாக நான் தியானம் செய்து கொண்டிருக்கவில்லை. நான் தியானத்தில் இருக்கிறேன், ஆனால் அதற்காக இந்த மலைக்கு வர வேண்டியதில்லை, எங்கு இருந்தாலும் நான் தியானத்தில் இருக்கிறேன். தியானம் எனது தன்னுணர்வு. எனவே நீங்கள் அனைவரும் சென்று விடுங்கள். மேலும் அரைக் கண்ணை மூடியபடி இருக்கும் யாரையும் ஒருபோதும் தயவுசெய்து தொந்தரவு செய்யாதீர்கள். அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் "என்று கூறினார். அப்போது அவர்கள் மூவரும் மன்னித்துவிடுங்கள்….. நாங்கள் முட்டாள்தனமாக நடந்து கொண்டுவிட்டோம், நிச்சயமாக மைல்கணக்கில் கடந்து வந்து உங்களிடம் இப்படிப்பட்ட……. எங்களுக்கு அவமானமாக உள்ளது. நாங்கள் முட்டாள்கள்தான், ஆனால் இப்போது எங்கள் மூவரிடம் இருந்தும் தனித்தனியாக இல்லாமல் ஒரே கேள்விதான். பிறகு நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டனர். அப்போது அந்த துறவி ஏதும் சொல்லவில்லை. அந்த ஏதும் அற்ற தன்மையே சாட்சிபாவம். நீ சாட்சிபாவமாக இருக்கும் பொழுது, நீ ஆச்சரியமடைவாய். அதாவது சலிப்பு. சோகம், ஆனந்தம், பரவசம் – எதுவாக இருந்தாலும் அது உன்னை விட்டு விலகி செல்லத் தொடங்குகிறது. உன்னுடைய சாட்சிபாவத்தன்மை ஆழமாக மாற மாற, சக்தி மிக்கதாக ஆகும்போது, அதிக ஒருமை தன்மை கொண்டதாக மாற மாற எந்த அனுபவமாக இருந்தாலும் – நல்லது அல்லது கெட்டது அழகானது அல்லது அசிங்கமானது – அது மறைந்து விடுகிறது. அங்கு தூய்மையான ஏதும் அற்ற தன்மை உன்னை சுற்றி நிலவுகிறது. சாட்சிபாவம் ஒன்று மட்டுமே உன்னைச் சுற்றியுள்ள அளவிடமுடியாத ஏதும் அற்ற தன்மையை குறித்த உணர்வை உனக்கு ஏற்படுத்தும். மேலும் அந்த அளவிடமுடியாத ஏதும் அற்ற தன்மையில்……அது காலியானது அல்ல, நினைவில் கொள். புத்தமத வார்த்தையான சூன்யதா என்பதை மொழி பெயர்க்க ஆங்கிலத்தில் வேறு எந்த வார்த்தையும் இல்லை. அந்த ஏதும் அற்ற தன்மையில்….. அது காலியானது அல்ல, அது உன்னுடைய சாட்சிபாவத்தால் நிரம்பியுள்ளது, உன்னுடைய சாட்சிபாவத்தன்மையால் நிறைந்துள்ளது, உன்னுடைய சாட்சிபாவத்தின் ஒளியால் நிறைந்துள்ளது. |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: சீனிவாசன், வேணித்தாய், சின்னவன், டக்கர் டிரைவர், கூலிக்காரர்கள், தோசை
தலைப்பு: காட்டு ருசி
| அன்றைக்குக் கடைசி ஆடி. ஊர் முழுக்க தோசை வாசனை கம்ம்மென்று முறுகல் மணல். ஆட்டுரல்களில் சட்னி ஆட்டுகிற கடகடா சப்தம். வழக்கத்துக்கு மாறாக... காலில் சக்கரம் கட்டிக் கொண்டு பறக்கிறான் சீனிவாசன். ஒரே பரபரப்பு. அங்கேயும் இங்கேயுமாய்ப் பாய்கிறான். ஆளைக் கையில் பிடிக்க முடியவில்லை. மூக்கின் மேல் நின்ற கோபம் நாலா பக்கமும் சிதறித் தெறிக்கிறது. இன்னார் மீது என்று கணக்கில்லை. சகட்டு மேனிக்கு "சள் சள்" ளென்று சீறுகிறான். மண்ணடிக்க டக்கர் போயிருக்கிறது. வேலை செய்யாமல் கூலியாட்கள் ஏய்த்து விடுவார்களே என்கிற பதற்றம், அவனுக்குள். சம்பளம் வாங்கத் தீயாய் வருகிற ஆட்கள். பாடுபடாமல் தேங்கின தண்ணீராகத் தேய்ந்து போகிற வஞ்சகம். ச்சே! நினைத்தாலே மனசு கிடந்து கொதிக்கிறது. என்றைக்குமில்லாத அதிசயமாக விடிவதற்கு முன்பே விழித்துவிட்டான் சீனிவாசன். டீக்கடை போய், ஓடைக்குப் போய், பல்லையும் தேய்த்துவிட்டு - "என்ன ரெடியா?" என்று காலில் கொதி நீரை ஊற்றிக் கொண்டு நிற்கிறான். வேணித்தாய்க்கு எரிச்சலாக இருக்கிறது. ....வழக்கம் இப்படியல்ல. இந்நேரம் படுத்துக் கிடப்பார். நீட்டி நிமிர்ந்து எழுந்து டீக்கடைக்குப் போனால், ரெண்டு டீக்கடைகளிலும் டீ குடித்து. பேப்பர் பார்த்து, ஊர்க்கதைகள் பேசி.... ஆள் தட்டுப்படவே மாட்டார், ஒன்பது மணி வரைக்கும். இன்றைக்கு என்ன அதிசயமோ... சரியாய் விடிவதற்குள் "ரெடியா" என்கிறான். என்ன கூத்தோ....? கேட்க முடியாது கேட்டால். வள்ளென்று விழுவான். இப்போது தான் முற்றம் தெளித்திருக்கிறாள். வெல்லம், தேயிலை போட்டு, காப்பி போட்டுவிட்டு... அடுப்பில் இட்லிச் சட்டியை தூக்கி வைத்திருக்கிறாள். வழக்கம் போல.... சோறு என்றாலாவது. சட்டு புட்டென்று வேலை முடியும். கடைசி ஆடி... ஊரெல்லாம் தோசை விசேஷம். தோசை என்றாலாவது... சட்டி காய்ந்தவுடன் மாவை சர் சர்ரென்று ஊற்றிப் புரட்டி எடுத்து விடலாம். இந்த ராசாவுக்குத் தோசை என்றால் தொண்டையில் இறங்காது. ஆவியே ஆகாது என்பார். தோசையில் எண்ணெய் வாடை வருமாம். சாப்பிட்டால்... நாவறட்சி எடுக்குமாம். நெஞ்சுக்கரிப்பு ஆளைக் கொல்லும் என்று பயப்படுவார். தோசை என்றால். மூஞ்சி முந்நூறு கோணலாகும். இட்லிக்கு மாவை ஊற்றி வைத்தால்.... வெந்து முடிய ரொம்ப நேரமாகும். சொய்ங்யென்று விசிலடிக்கிற புகைச் சீறல், வேணித்தாய்க்கு எரிச்சல் எரிச்சலாய் வரும். அவசர அவசரமாய் அம்மியில் சட்னிக்கு அரைத்தாள். சீனிவாசன் பறந்து கொண்டு வருகிறான். "சாப்புடலாமா?", "சித்தெ பொறுங்க", "டக்கர் போயிருச்சு மண்ணடிக்க...", "ஆளுக போய்ட்டாகளா?", "ம்", "மண்ணை புஞ்சைக்குள்ளே தட்டவா, வெளியே தட்டவா?", "புஞ்சைக்குள்ளேதான்", "சர்க்கரை தேயிலை வாங்கிக் குடுத்தனுப்பிச்சிட்டீகளா?", "ம் தண்ணிக்கொடம். காப்பிச்சட்டி, கிளாஸ் எல்லாம் குடுத்தனுப்பியாச்சு", "கலிங்கப்பட்டி கம்மாயிலே தண்ணில்லியா?", "ம்", "பாதை நல்லாயிருக்கா?", "என்ன.... தொண தொணன்னு பேசியே உயிரை வாங்குறே?" சிரித்தாள் வேணி. காத்திருத்தலைத் தோன்றவிடாமல் மறக்கடிக்கத்தான் பேச்சை ரப்பராய் இழுத்தாள். "என்ன சிரிப்பாணி?", "கேக்குறதுமா குத்தம்?", "அப்படியில்லே. டக்கருக்கு நானூத்தைம்பது ரூவா வாடகை. கூலியாளுக்கு எறநூத்தம்பது. இம்புட்டு செலவழிச்சு மண்ணடிக்கிறப்ப. நா போய் நிக்க வேண்டாமா? ரெண்டு நடை மண்ணு கொறைஞ்சிட்டாக்கூட... நூற்றி நாப்பது வட்டம் வரும்.", "இப்ப யாரு..... உங்களைப் போக வேண்டாம்னது?", "சாப்புடாம எப்படிப் போக?" உக்காருங்க. இதோ - சட்னியைத் தாளிச்சிடுறேன்", "அந்தா, இந்தா" வென்று கால்மணி நேரம் ஆகிவிட்டது. முள்ளின் மேல் நிற்பவனைப்போல் பொறுமையற்று நெளிந்து கொண்டு உட்கார்ந்திருக்கிற சீனிவாசன் முன்னால்... வட்டில் ஆவி பறக்க இட்லிகள், கருகிப்போன கடுகும், கருவேப்பிலையும் சட்னிக்கு ஒரு லட்சணத்தையும் வாசத்தையும் தந்தது. பறக்கப் பறக்க சாப்பிடுகிறான். "சட்னி இன்னைக்கு அம்சமா அமைஞ்சிருக்கு. தாளிச்ச வாசம் ஆளைத் தூக்குது". நிலக்குளிர்ச்சியான அந்தப் பனிப்பூ வார்த்தையில் வேணியின் எரிச்சல், கோபம் எல்லாம் மாயமாகி மறைகிறது வியர்வைக்குரிய கிரீடம் கிட்டிவிட்ட மனத்ததும்பல் அவளுக்கு அவள் குரலில் ஒரு மென்மையும் குழைவும்.... "நல்லாவாயிருக்கு? அவசர அவசரமா அரைச்சேன்... உப்புக்கூடப் பாக்கலே.", "கச்சிதமாயிருக்கு வேணி. நெசந்தா.", "இன்னும் ரெண்டு இட்லி போட்டுக்கங்க." அந்தக் கணத்தில், அவள் அவளாகியிருக்கிறாள். உள்ளும் புறமும் மிருதுவாகி. அன்பால் நெஞ்சு ததும்ப... புருஷனை புதிய வாஞ்சையோடு பார்க்கிறாள். உள்ளுக்குள் உவகைப் பெருக்கு பீறிடுகிற பரிவுணர்ச்சி கண்ணோரங்களில் நீர்த்துளிகளாய் மனப்பரவசம். காய்ந்து கனல் பறக்கிற லௌகீக வாழ்வை ஜீவதப் படுத்துகிற மனச்சங்கமம். மானுட ஈரத்தில் வேர் விட்டு உயிர் வளர்கிற - முகம் கழுவிக் கொள்கிற - புது வாழ்க்கையின் கணங்கள். கையை கழுவினான். சட்டையை மாட்டிக் கொண்டான். சிகரெட், தீப்பெட்டி, செருப்பு, பரபரப்பு. "வேணி, நீ புஞ்சைக்குப் போவணுமா?", "மேலப் புஞ்சையிலே பருத்தி வெடிச்சு பூத்துக்கெடக்கு.", "போ, சரி... மதியத்துக்கு?", "கம்மாயிலேதானே இருப்பீக?", "ம் சின்னவன் கிட்டே குடுத்து. தெக்குப்புஞ்சைக்கு அனுப்பிவை. மண்ணைத் தட்ட வர்ற டக்கர்லே கம்மாய்க்கு வந்துருவான்.", "ஆட்டும்...", "என்ன குடுத்துவிடப் போறே மதியம்? தோசை தானே சுடுவே?", "உங்களுக்குத்தான் தோசை ஒவ்வாதுல்லே? அவிக்கிற இட்லியிலே மிச்சம் வச்சிருந்து... புதுசட்னியோட குடுத்துவுடட்டா? "ம்.", "ஆறின இட்லின்னு கோவிக்கக்கூடாது?", "ம்" அவன் முகத்தில் மெல்லிய பூஞ்சிரிப்பு. உள்ளுக்குள் பௌர்ணமி வெளிச்ச மகிழ்ச்சி. இங்கிதம் அறிந்து பேசுகிற வேணியின் மன அண்மையில் விளைந்த தன்மை. தெருவில் இறங்கினான். சீனிவாசன் ஓடியாடிப் பாடுபடுகிறவனில்லை. ப்ளஸ் டூ முடித்து, கல்லூரியிலும் ரெண்டு வருஷம் குப்பை கொட்டினான். பாதியில் படிப்பை நிறுத்திவிட்டு, விவசாயத்தைக் கவனிக்க வேண்டிய நிர்ப்பந்தம். நாலா பக்கமும் காடுகரைகள். இறவைத்தோட்டங்கள், மானாவாரிக் கரிசல்காடு. கண்மாய்ப் பாசனத்தில் கொஞ்சம் வயல்காடு. பெரிய பண்ணைப் பிரபு கிடையாது மத்திய தர விவசாயி. வரவு செலவு வருஷா வருஷம் இழுபறிதான். விளைச்சல் சரியாக இருக்காது. விளைந்த வருஷத்தில் விலை கிடைக்காது. ரெண்டும் கைகூடி வருகிற மாதிரியிருந்தால்... கல் மழை மாதிரி இயற்கை உற்பாதம் வந்து நாசக்காடு பண்ணிவிடும். விரல் நகத்தில் அழுக்குப்படாமல் மேற்பார்வை பார்ப்பான். உடலுழைப்புக்கு இயலாது. சில்லான் மாதிரி ஒல்லியான உடம்பு. மம்பட்டி பிடித்து ஒரு வாய்க்கால் வரப்பைக்கூட செதுக்க முடியாது. எல்லாவற்றுக்கும் சம்பள ஆள்தான். தண்ணீர் பாய்ச்ச, பாத்திகட்ட, மூலை முடக்கு கொத்த... எல்லாமே கூலியாட்கள்தான். வேணித்தாய் ஓயாமல் பொருமுவாள். "வெளையுற வெள்ளாமை சம்பளம் குடுத்தே சாம்பலாயிரும்.", "அதுக்கு என்ன செய்யச் சொல்றே?", "உங்களாலே தண்ணி பாய்ச்சவுமா முடியாது பொம்பளைகூட பாய்ச்சுதாளே?", "நமக்கு அதெல்லாம் சரிப்பட்டுவராது" படிப்பு படிச்சவுகளாம்! படிச்சிருந்தா... மம்பட்டியை தொடக்கூடாதுன்னு சட்டமா? கீரிடம் எறங்கிருமாக்கும். "நொய் நொய்ன்னு நச்சரியாதே...", "வேர்வை சிந்தப் பாடுபாட்டாத்தான்.... அதோட அருமையும் அழகும் தெரியும்.", "ஒழைக்கிறதுலே என்ன அழகு இருக்கு. "ஒழைச்சப் பாத்தாத் தெரியும். பசியெடுக்கும். கல்லை முழுங்கினாலும் செமிக்கும். ஒடம்பு வலுப்படும். மனசுலே ஒரு தைர்யம் வரும். வேர்வை சிந்தி ஒழைச்சுப் பார்த்தாத்தான்... மனுசருக்கு மனுசக்குணமே வரும்.", "வேணி... அஞ்சுலே வளையாத ஒடம்பு. முப்பத்தைஞ்சுலே வளைக்கணும்னு ஆசைப்படதே.", "இதுலே ஒரு பெருமையாக்கும்?" விளையாட்டான வெளுப்பாக உதட்டைப் பிதுக்கினாள் வேணி. ஆனாலும் விளையாட்டல்ல. வெளிப்படுகிற ஏளனம். ரொம்ப ஆழத்திலிருந்து கூர்மையாக வருவதாய். உணர்வான். ஆயினும் சீனிவாசன் அசையவில்லை. அப்படியேதான் இருந்தான். புஞ்சையில் கூலியாட்கள் பாத்திக் கட்டிக் கொண்டிருந்தால்... அவன் பாட்டுக்கு. டீக்கடையில் பேப்பர் பார்த்துக் கொண்டிருப்பான். சாயங்காலம் போய்ப்பார்த்துவிட்டு வயிறெரிவான். காட்டுக்கத்தலாய்க் கத்துவான். "வாங்குற காசுக்கு வஞ்சமில்லாம ஒழைக்க வேண்டாம்? ஆள் இருந்தா, ஒரு மாதிரி, இல்லேன்னா ஒரு மாதிரி. மோசக்காரப் பாவிக. பாத்தி கட்டியிருக்குற லட்சணமா, இது? வரட்டும். பேசிக்கிடுதேன். சம்பளம் வாங்க வருகிறவர்களிடம் ஒரே சண்டைக்காடுதான். வருஷம் பூராவும் வம்பு வழக்குதான். தகராறுகள், கூலியாட்களைக் குறை சொல்லிச் சண்டை போடுவது... அவனது சுபாவமாகிவிட்டது. வேலை தளத்துக்க போக முடியாமுலும் ஜோலிகள் வந்துவிடும். மேற்பார்வை ஜோலிகள், போங்குக்கு நகை அடகுவைக்க. கடன் வாங்க, கொடுக்க, உரம் வாங்க.... பூச்சி மருந்து வாங்க என்று ஜோலிகள். ....போன வருஷம் மண்ணடிக்கிறபோது இப்படித்தான் எல்லா சம்சாரிக்கும் டக்கர் பன்னிரண்டு நடைகொண்டு வந்து கொட்டியது. இவனுக்கு பத்துநடை மட்டும். கேட்டால்... கண்மாயிலிருந்து புஞ்சை ரொம்பத் தூரம் என்கிற சால்ஜாப்பு. ஏமாளியாகிப் போய்ட்டோமே என்கிற மனக்கொதிப்பு, ரொம்ப நாளைக்கிருந்தது. இந்தத்தடவை விடக்கூடாது என்ற முடிவு. கண்மாயிலிருந்து கடைசிவரைக்கும் வேலை நடக்கிற லட்சணத்தைக் கண்காணிப்பது என்கிற வைராக்யம். ....வந்தாயிற்று, தெற்குப் புஞ்சை. அதோ. தூரத்தில் சிவப்பாய் வருகிற டக்கர். கோபு ரங்குத்தியாய் மண். நல்ல வண்டல். புஞ்சைக்குள் ரெண்டாவது குமி தட்டி முடித்துவிட்டுத் திரும்பிய டக்கரில் ஏறிக்கொண்டான். வெறும் டிரெய்லர், லோடு இல்லாமல், வண்டி போகிற வேகத்துக்கு "பேய்க்குதி" குதித்து அதிர்ந்தது. தடதட சத்தம் காதைக்குடைந்தது போய்க்கூப்பாடு. கலிங்கப்பட்டியை தாண்டிப் போகணும். இங்கிருந்து கண்மாய் மூன்று மைல் இருக்கும் கண்மாயின் உள்வாய்ப் பகுதி முழுக்க கருவேல மரங்கள். ஒன்றையொன்று உரசிக்கொண்டு. பின்னிக்கொண்டு, அடர்த்தி என்றால் அடர்த்தி, கற்றை அடர்த்தி, ஆள் போக முடியாது. கரையை ஒட்டிய மடைகள், மடைகள் இருக்கிற உட்பகுதிகளில் கொஞ்ச தூரம் மரங்களில்லை. கன்னங்கரேலென்று இருள் மாதிரியான கரிசல் மண். ஈரல் கட்டி மாதிரி. ஆள் உயரத்திற்கு வெட்டுக் கிடங்குகள். அங்குதான் கூலியாட்கள். டக்கர் போய் வட்டமடித்து நின்றவுடன்... அள்ளி வைத்திருந்த அறுபது கூடை மண்ணையும் சடபுடவென்று தூக்கிக் தட்டினார்கள். அள்ளிவிட, தூக்கிவிட என்று புயல் சுறுசுறுப்பாய் வேலைகள், பரஸ்பரம் அதட்டுகிற... ஏவுகிற... உசுப்புகிற சப்த அதிர்வுகள். "மம்பட்டியை ஓங்கிப்போடு!", "கூடையை விருட்டுன்னு தூக்கிப்போடு", "நடுவுலே எட்டி எறி", "வெட்டி அள்ளு", "ஏய், கையிலே உசுர் இல்லியா? ஓங்கிக் குத்து" கண்மூடி முழிப்பதற்குள் வண்டி லோடாகிவிட, பீடியை சுண்டியெறிந்துவிட்டு டிரைவர் ஏறி... டக்கரை உயிர்ப்பித்தார். வண்டி போனவுடன் அவரவர் மரத்தடிகளில் போய்ச்சாயவில்லை. மாறாக, வேலைகள், சுறுசுறுப்புக் குன்றாத வேக வேலைகள். கடப்பாறையில் ஓங்கி ஓங்கி குத்தி மண்ணை நெகிழ்ந்து விடுகிற இருவர். நெகிழ்ந்து புரளும் கட்டிகளை உடைத்து இழுத்துக் குவியலாக்குகிற நால்வர். அறுபது கூடைகளிலும் மண்ணை அள்ளி அடுக்குகிற நால்வர். ரெக்கை கட்டிப்பறக்கிற வேலைகள். வியர்வை வரி வரியாய். துடைக்க நேரமில்லை. கரிசல மண்ணைப் போல கறுத்த உடம்புகளில் வியர்வைக் கசகசப்பில் அடைஅடையாய் கரிசல் தூசி. கருவேல மரத்தடி நிழலில் உட்கார்ந்தான். சீனிவாசன். நிழலும் பொய் நிழல், வெக்கையான நிழல், செருப்பைப்போட்டு அதன் மேல்தான் உட்கார முடிகிறது. வெயில் என்றால் வெயில். அப்படி வெயில், தீ வெயில், நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. கண்ணெல்லாம் காந்துகிறது. அலை அலையாய் அந்தரத்தில் நெளிந்தோடுகிற கானற் சங்கிலிகள். சீனிவாசனைப் பார்த்து அன்போடு சொன்னார்கள். "நீங்க எதுக்கு வெயில்லே சீரழியணும்? வீட்டைப் பாத்துப் போங்க.", "எள்ளு காஞ்சதுன்னு... கூடவே எலிப் புழுக்கையும் காயஞ்சதாம்...", "அதானே? நாங்க காய்றது சரிதான். தலைவிதி. வயித்துப்பாடு. நீங்க எதுக்குக் காயணும்?" எல்லோருக்கும் பொதுவாக மெல்லிசாகச் சிரித்துப் பதில் சொன்னான். "இல்லே... நா இருக்கேன்.", "அப்ப... இருங்க. எங்க தோள்லேயா இருக்கீக? ராசாப்போல இருங்க." வியர்வையைப் போலவே அவர்களுக்குள் வற்றாத கேலிகள், கிண்டல்கள், பரஸ்பர நையாண்டிகள், தாறுமாறான கெட்ட வார்த்தை வசவுகள். சண்டை போடுகிற மாதிரி காட்டமான கோபப் பேச்சுகள். எல்லாமே வேடிக்கை விளையாட்டுகள்தான். அலுப்புத் தெரியாமலிருக்க உணர்ச்சி வடிகால்கள். பேச்சு பேச்சாக இருந்தாலும்... சீனிவாசன் அடிக்கடி மணியைப் பார்த்தான். போயிருக்கிற நடைகளை எண்ணி மனசுக்குள் கணக்குப் போட்டான். பத்து நடைபோய்ச்சேரும் என்பதே சந்தேகம்தான். அவர்கள் சொல்லச் சொல்லக் கேட்காமல்... அவனும் "கூடமாட" வேலைகள் செய்கிறான். சும்மாவே இருப்பதில் ஒரு குற்ற உணர்வு. உள் உறுத்தல். அதற்காகவே அவனும் உழைப்பில் பங்கெடுத்துக் கொண்டான். கடப்பாரையால் ஓங்கி ஓங்கிப் போட்டு அசைத்தான். மண் உருண்டைகளைப் பெயர்த்து உருட்டினான். கருவேலச் சல்லி வேர்களை அறுத்துக்கொண்டு மண் பெயர்கிறபோது... இவனுள் மழலைத்தனமான மகிழ்ச்சி. வெற்றி கண்ட மனப்பூரிப்பு. உழைப்பின் விளைவாய் நிகழும் மாறுதல்கள், அவனுள் ஒரு லாகிரியாய். நிழல் காலடியில் சுருண்டது. மதியமாகிவிட்டது. டக்கர் வந்து லோடு ஏற்றிப்போனவுடன்... லேசுமாசாய் கையைக் கழுவினர். தூக்குச்சட்டிகளை எடுத்து, வெட்ட வெயிலில் வட்டமாய் உட்கார்ந்தனர். திறந்தால்.... ஒவ்வொரு சட்டியிலும் பத்துத் தோசை, பனிரெண்டு தோசை. சட்னியில் நனைந்துகிடந்தது. சீனிவாசன் அசந்து போனான். ஒரு மனுசனுக்கு இம்புட்டுத் தோசையா! சாப்பிட முடியுமா? அதுவும் தோசையா! இவனையும் சாப்பிடச் சொல்லி ஆள் ஆளுக்கு உபசரித்தனர். மறுத்துவிட்டான். தோசை உடம்புக்கு ஒத்துக்காது." அவர்கள் சாப்பிட்ட வேகம். மறைத்துக் கொள்ளாத ஆசையோடு தின்கிற ஆர்வம். ருசி பற்றிய பேச்சுக்கள். அதிலேயே கேலிகளும் கிண்டல்களும்.... வாழ்வின் அவலமும்.... "தின்னுங்க தோசையை... விடாதீக.", "ஆமா... நாளையிலேருந்து புளிச்ச கஞ்சிதான்.", "ஆமப்பா.... புரட்டாசி மொதச் சனிக்குத்தான் தோசையைக் கண்ணாலே பாக்கமுடியும் நம்மாலே!", "கூலிக்காரன் தெனம் தோசைக்கு ஆசைப்பட முடியுமா?", "நடக்குற காரியமா?", "துட்டுக்காரன் வீட்லே தெனம் தெனம் கடைசி ஆடிதான். தோசை மணந்தான்.", "தோசைன்னா... தனி ருசிதான்.", "ஆசைதோசை, அப்பள வடைன்னு சும்மாவா சொல்லுதாக", "அதுலேயும் காட்டு ருசியிருக்கே.... அது ஒரு தனி ருசி.", "கஞ்சின்னா... குடிச்ச மாத்திரத்துலே பசிச்சிரும். தோசைன்னா... கம்முன்னு கெடக்கும்.", "கல்லு மாதிரி." வினோதப் பிறவிகளைப் பார்க்கிற மாதிரி ஆச்சரியமாய்ப் பார்த்தான் சீனிவாசன். "ராட்சஸங்கதான். தோசையையே இந்தப்போடு போடுறாங்களே, பாவிக. நம்மாலே ரெண்டு தோசையைக் கூட சாப்பிட முடியாதே. இவனுக்கு இது ரொம்பப் புதுசு. ஆச்சர்ய அனுபவம் இவனுக்குள் சம்மணம் போட்டு உட்கார்ந்துகொண்ட மலைப்பும், வியப்பும். பசி லேசாக வயிற்றைக் கிள்ளியது. வேலையால் வழிகிற வியர்வை. சட்டையைக் கழற்றி வைத்துவிட்டான். தடதடவென்று பேயிரைச்சலாய்த் திரும்ப வந்த டக்கரின் சின்னவன் உட்கார்ந்திருப்பது தெரிகிறது. அவன் கையில் எவர்சில்வர் தூக்குச் சட்டி. அந்தரத்தில் ஏந்திப்பிடித்திருந்தான். குலுங்காமலிருப்பதற்காக. கடப்பாரையை மண்ணில் குத்தி நிறுத்தினான். உள்ளங்கைகளைப் பார்த்தான். பிசுபிசத்த கரம்பைமண். அதையும் தாண்டித்தெரிகிற கன்றிப்போன சிவப்பு. காந்தலான வலி. குடத்துத் தண்ணீரில் கையை லேசாகக் கழுவினான். ஆட்கள் டக்கருக்கு நிமிஷத்தில் லோடு பண்ணி முடித்தார்கள். திரும்பிப்போன டக்கரில் கோபுரங்குத்தியாக மண். தேர் அசைந்து நகர்கிற மாதிரியான தோற்றம். மரத்தடிக்கி வந்தான். அடத்தியான பெருமூச்சு. உட்கார்ந்தான். "என்னடா... அம்மா குடுத்துவிட்டாளா?", "ஆம்ப்பா....", "நீ சாப்பிட்டுட்டீயாடா?", "சாப்ட்டுட்டேன்ப்பா?", "இங்கேயும் சாப்புடுதியா?", "வேண்டாம்ப்பா", "அம்மா இட்லிதா குடுத்துவிட்டாளா?", "இல்லேப்பா..." சின்னவன் குரலில் மெல்லிய அச்சம். பூகம்பத்தை முன்னுணர்ந்த நடுக்கம். சீனிவாசனுக்குள் சுள்ளென்று வருகிற கோபம். "பொறகு?", "தோசை" சட்டென்று நிமிர்கிற சீனிவாசன். விரிகிற கண்களில் ஒரு விறைப்பு. மூக்கு நுனியில் மெல்லிய துடிப்பு. கன்னக் கதுப்புகளில் பற்கடிப்பின் படைப்பு. "தோ...சை...யா?" அவனுள் சண்டாளமாய்ப் பீறிட்ட வெறி. பிடிக்காது என்று தெரிந்தும் தோசை கொடுத்தனுப்பினால்..... அத்தனை அலட்சியமா? சின்னவன் முகத்தில் ஒரு மிரட்சி. "இல்லேப்பா.... காலையிலே ஒரு விருந்தாளி வந்திருச்சு. எடுத்து வைச்சிருந்த இட்லியை அவுகளுக்கு அம்மா வைச்சிட்டாக.", "ம்" அதில் ஒரு இறுக்கம். "தோசையை குடுத்தனுப்புறப்பவே... அம்மா சொன்னாக", "என்னன்னு", "உங்கப்பா என்னை வையத்தான் போறாரு. வாங்கிக் கட்டிக்கிட வேண்டியதுதான்னு சொன்னாக" வேணித்தாய் சொன்ன சொற்கள் குளிர் நீராய் கொதித்துக் கொண்டிருந்த அவன் மனசை ஆசுவாசப்படுத்தியது. சமாதானப்படுத்தியது. அலட்சியம் செய்யவில்லை. மதிக்கிறாள் என்பதை உணர்ந்த மனத்திருப்தி. உள்ளே புதைந்து கிடந்த பெருந்தன்மையுணர்ச்சியை உசுப்பிவிட்டது. பெருமூச்சோடு சட்டியைத் திறந்தான். நாலு தோசை. ஒரு கிண்ணத்தில் சட்னி. அலம்பி விழுந்து தோசை நனைந்திருந்தது. ஒரு தோசையை மட்டும் சாப்பிடுவது என்று உள்ளுக்குள் வைராக்யமான முடிவு. சகிப்புத்தன்மையை மீறிக்கொண்ட கசிகிற முணுமுணுப்போடு சாப்பிட்டான். சின்னவன் அவனது அம்மாவைப்போல, ரொம்பத் துறுதுறுப்பு. ஓடியாடி வேலை செய்கிற ஆர்வம். உழைப்பின் நாட்டம் ஓடி ஓடி மண்கட்டிகளைத் தூக்கிக் கூடைகளில் வைத்தான். பெரிய பெரிய கட்டிகளாய்க்கிடந்ததை மம்பட்டியால் உடைத்தான். ஓங்கி ஓங்கிப் போட்டான். அந்தப் பிஞ்சுப்பயல் வேலைசெய்கிற நேர்த்தியை - அழகை - சுறுசுறுப்பையே பார்த்துக் கொண்டிருந்த சீனிவாசன். குனிந்து தூக்குச் சட்டியைப் பார்த்தான். அதிர்ந்தே போனான். நாலு தோசையும் காலி. நான்தான் சாப்பிட்டேனா என்கிற மலைப்பு. ஆச்சர்யம் இன்னும் கூட ஒரு தோசை சாப்பிடலாம் போல வயிற்றுக்குள் இடம். எண்ணெய் வாடை ஒத்துக்கொள்ளாது. நிஜம்தான். ஆனால், இப்போது ருசியாகவே இருந்ததாய் நினைவு. எப்படி? நாலு தோசை விழுங்க முடிந்ததே... அது எப்படி? காட்டு ருசியே தனி ருசி என்பது இதுதானா? காட்டு ருசி என்றால்... உழைப்புக்குப் பிறகு வருகிற பசியா? "வியர்வை சிந்தப் பாடுபட்டாத்தான்... அதோட அருமையும் அழகும் தெரியும்.", "ஒழைச்சுப் பாத்தாத் தெரியும். பசியெடுக்கும். கல்லை முழுங்கினாலும் செமிக்கும். வேணி அடிக்கிற சொல்கிற வேதம். நிஜம்தானோ? ராட்சஸமாய் உழைப்பதால்தான்.... இவர்கள் பத்துத்தோசை என்று ராட்சஸதனமாய்ச் சாப்பிடுகிறார்களோ... அவனுக்குள் ஆச்சர்யமான வெளிச்சம். சுபாவத்தையே அலசிக் காயப்போடுகிற அனுபவ வெளிச்சம். உள்ளுக்குள் துருவேறிக்கிடந்த சாளரங்கள் திறந்துகொண்ட உணர்வு. சாயங்காலம்.... சம்பளம், வாங்க வந்த கூலிக்காரர்களோடு சண்டை போடவில்லை. சீனிவாசன். அன்றைக்கு மட்டுமல்ல.... |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: ஆமை, நத்தை, முயல், ஓநாய்
தலைப்பு: நன்றி ஓடுகளே
| ஒரு காட்டில் ஆமையும், நத்தையும் நண்பர்களாய் இருந்தன. அவை இரண்டுக்கும் நீண்டகாலமாக, ஒரு மனக்குறை இருந்தது. தங்களால் வேகமாக நடக்கவோ, தாவிக் குதித்து ஓடவோ முடியவில்லை என்ற மனக்குறைதான் அது. ஒருநாள், அவை இரண்டும் நடந்து சென்றுகொண்டிருந்த போது, ஓர் அழகிய வெள்ளை நிற முயல் தாவிக் குதித்து, ஓடி வருதைக் கண்டன. "முயலே நில்!" என்றது ஆமை. முயல் நின்றது. "நீ எப்படி இவ்வளவு வேகமாய் தாவிக் குதித்து ஓடுகிறாய்?" என்று கேட்டது நத்தை. "இது என்ன கேள்வி! உங்களுக்கு இருப்பதுபோல், என் முதுகில் கனமான ஓடு இல்லை. அந்தச் சுமை இல்லாததால், வேகமாக ஓடுகிறேன்!" என்று சொல்லி விட்டு, முயல் அந்த இரண்டையும் இளக்காரமாகப் பார்த்தது. "ஓஹோ! எங்களின் வேகக் குறைவுக்கு எங்கள் ஓடுதான் காரணமா?", "ஆமாம்! நீங்கள் உங்கள் ஓடுகளைக் கழற்றிப் போட்டுவிட்டால், என்னைப் போல் வேகமாக ஓடலாம். வேகமாக ஓடுவதில், ஓர் அலாதியான சுகம் இருக்கிறது தெரியுமா... அனுபவித்துப் பாருங்கள்!" என்றது முயல். ஆமைக்கும், நத்தைக்கும் அந்த இடத்திலேயே தங்கள் முதுகு ஓடுகளைக் கழற்றிப் போட்டுவிட வேண்டும் என்ற ஆவல் பிறந்தது. அவற்றைக் கழற்ற முயன்றபோது, திடீரென புதர் மறைவில் ஏதோ அசையும் ஓசை கேட்டது. ஆமையும், நத்தையும் ஆபத்தை உணர்ந்து, தங்கள் ஓடுகளைக் கழற்றும் முயற்சியைக் கைவிட்டன. சட்டென, புதர் மறைவிலிருந்து ஓரு ஓநாய் வெளிப்பட்டு, முயலை நோக்கிப் பாய்ந்தது. ஆமையும், நத்தையும், விருட்டென்று தங்கள் உடலை ஓடுகளுக்குள் இழுத்துக் கொண்டு, உயிர் பிழைத்தன. ஓநாய் முயலைப் பிடித்தது. சிறிது நேரம் சென்ற பிறகு ஓடுகளை விட்டு வெளியே வந்த ஆமையும், நத்தையும் முயலின் ரத்தத்தைப் பார்த்து, உறைந்து போயின. தாங்கள் வேகமாய் ஓடுவதைவிட, உயிர் பிழைத்து வாழ்வதே முக்கியமானது என்பதை உணர்ந்தன. தங்கள் எதிரியிடமிருந்து காப்பாற்றிய தங்கள் ஓடுகளுக்கு அவை நன்றி கூறின. |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: சக்ரவர்த்தி அக்பருக்கு பீர்பாலை மிகவும் பிடித்திருந்தது. அதைக்கண்டு தர்பாரில் பலருக்கு பீர்பால் மீது பொறாமை ஏற்பட்டது. அவர்களில் அரண்மனை வைத்தியரான ஹகீம் ஜாலிம்கானும் ஒருவர்! அவரும், பீர்பால் மீது பொறாமை கொண்ட மற்றவர்களும், பீர்பாலை சிக்கலில் ஆழ்த்த நல்லதொரு சந்தர்ப்பத்தை எதிர் நோக்கியிருந்தனர். ஒரு நாள் அக்பருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. உடனே அரண்மனை வைத்தியர் ஜாலிம்கான் அவசரமாக வரவழைக்கப்பட்டார். அவர் பரபரப்புடன் அரண்மனையில் நுழைந்து கொண்டிருக்கையில் பீர்பால் மீது பொறாமை கொண்டிருந்த சிலர் அவரை வழி மறித்தனர். “வழியை விடுங்கள்! சக்ரவர்த்திக்கு உடல் சரியில்லை. நான் அவரை உடனே பார்க்க வேண்டும்” என்றார் ஜாலிம்கான். “நீங்கள் சக்ரவர்த்தியைப் பார்க்கப் போகிறீர்கள் என்பதால் தான் உங்களிடம் அவசரமாக வந்துஇருக்கிறோம்” என்ற அவர்கள், “பீர்பாலைக் காலை வாரிவிட ஒரு அருமையான வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்கிறது” என்றனர். “பீர்பாலை படுகுழியில் தள்ள நான் எது வேண்டுமானாலும் செய்யத்தயார்! உடனே சொல்லுங்கள்!” என்றார் ஜாலிம்கான். வயதான ஒருவர் ஜாலிம்கானின் காதில் தங்களுடைய ரகசியத் திட்டத்தைக் கூறினார். அதைக்கேட்டதும் ஜாலிம்கான் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தார். தனக்கு யோசனை கூறியவர்களுக்கு நன்றி தெரிவித்த பின், அக்பருக்கு சிகிச்சையளிக்கச் சென்றார். அக்பர் தனது படுக்கை அறையில் தலை வரை கம்பளியினால் போர்த்திக் கொண்டு முனகிக் கொண்டிருந்தார். ‘ஜாலிம்கான் அக்பரை கவனமாக சோதித்தார். அவருக்கு ஏற்பட்டு இருப்பது சாதாரண காய்ச்சல்தான் என்று தெரிந்துவிட்டது. ஆனாலும் வெகு நேரம் அக்பரை சோதித்துப் பார்த்தபின், மிகவும் கவலைப்படுவது போல் சற்று நேரம் பாசாங்கு செய்தார். அதன் பிறகு அவர் அக்பரிடம், “பிரபு! உங்களுக்கு வந்திருப்பது விஷக்காய்ச்சல்! அதற்கு மருந்து என்னிடம் இருக்கிறது. ஆனால் காளை மாட்டின் பாலுடன் சேர்த்து சாப்பிட்டால்தான் விரைவில் குணம் அடைவீர்கள் அதனால் தான் கவலைப்படுகிறேன்” என்றார் “காளை மாட்டின் பாலா?” என்று வியப்புடன் கேட்டார் அக்பர். “பால் தரும் காளை மாடுகளும் இருக்கின்றன பிரபு! ஆனால் அவற்றைக் கண்டு பிடிப்பது மிகவும் கஷ்டம்” என்றார் ஜாலிம்கான். “யார் அதைக் கண்டு பிடிப்பது?” என்று அக்பர் கவலையுடன் கேட்க, “ஏன் பிரபு? நமது பீர்பால் மிகவும் புத்திசாலி! அவரால் முடியாத காரியமே எதுவும் இல்லை”என்றார் ஜாலிம்கான். “பீர்பாலால் பால் தரும் காளை மாட்டை எப்படி கண்டுபிடிக்க முடியும்?” என்று அக்பர் சந்தேகத்துடன் ஜாலிம்கானிடம் கேட்டார். “அத்தகைய காளை மாட்டை இந்த உலகில் யாராவது ஒருத்தரால் கண்டு பிடிக்க முடியும் எனில் அது பீர்பால் மட்டுமே!” என்று கூறிய வைத்தியர், “பிரபு! நீங்கள் ஒரு வாரம் ஓய்வெடுங்கள். இந்த மருந்தை ஒரு நாளைக்கு நான்கு முறை காளை மாட்டுப் பாலில் கலக்கிச் சாப்பிடுங்கள். நீங்கள் குணமாகிவிடுவீர்கள்” என்று சொல்லிவிட்டு மருந்தைக் கொடுத்து விட்டு சென்றார் ஜாலிம்கான். உடனே, பீர்பால் அக்பர் முன் வரவழைக்கப்பட்டார். “எப்படிஇருக்கிறீர்கள், பிரபு?” என்று பீர்பால் கேட்க, “நீதான் பார்க்கிறாயே பீர்பால்! எனக்குக் கடுமையான காய்ச்சல்! வைத்தியர் மருந்து தந்திருக்கிறார். ஆனால் அதைக் காளை மாட்டுப் பாலில் குழைத்து சாப்பிட வேண்டுமாம்,” என்றார் அக்பர். “காளை மாட்டின் பாலா?” என்று வியப்புடன் கேட்ட பீர்பால், “காளை மாடு பால்தரும் என்று எந்த மடையன் சொன்னான்?” என்று கேட்டார். “ஏன்? வைத்தியர் ஜாலிம்கான் சொன்னார்! அதுவும் உன் ஒருவனால்தான் காளை மாட்டின் பால் கொண்டுவரமுடியும் என்பதையும் உறுதியாகச் சொன்னார்” என்றார் அக்பர். “அப்படியென்று ஜாலிம்கான் சொன்னாரா?” என்று பீர்பால் கேட்டார். “ஆம்!” என்றார் அக்பர். தன்னை சிக்கலில் ஆழ்த்தி அவமானப்பட வைக்க ஜாலிம்கான் செய்த சூழ்ச்சி என்று பீர்பாலுக்கு உடனே தெரிந்து விட்டது. பீர்பால் வீட்டுக்குப் போகும் வழியெல்லாம் அதைப்பற்றியே யோசித்துக் கொண்டு சென்றார். விரைவிலேயே அவர் மனத்தில் ஓர் அருமையான யோசனை தோன்றியது. உடனே, வீட்டுக்குச் சென்ற பீர்பால் புத்திசாலியான தன் மகளை அழைத்து அரண்மனையில் நடந்ததைக் கூறி, சிக்கலிலிருந்துத் தப்பிக்கத் தான் யோசனை செய்துள்ள திட்டத்தையும் கூறினார். அதைக் கேட்ட அவரது மகள் “கட்டாயம் செய்கிறேன் அப்பா!” என்றவள் “அந்த ஜாலிம்கானுக்கு உங்கள் மீது பொறாமையா?” என்று கேட்க, “அவருக்கு மட்டுமல்ல, இன்னும் பலருக்குப் பொறாமை! இருக்கட்டும்! நீ நான் சொன்னபடி இன்றிரவே செய்!” என்றார் பிர்பால். நடு இரவும் வந்தது. பீர்பாலின் மகள் ஒரு வேலைக்காரியை உடன் அழைத்துக் கொண்டு ஆற்றங்கரைக்குச் சென்றாள். அக்பருடைய அரண்மனைக்கருகே உள்ள படித்துறையைத் தேர்ந்தெடுத்த அவள், தன்னுடன் கொண்டு வந்திருந்த துணிகளை ஆற்றில் அலசித் துவைக்கத் தொடங்கினாள். அக்பரின் படுக்கை அறைக்கு மிக சமீபத்தில் அந்தப் படித்துறை இருந்ததால், பீர்பாலின் மகள் ஓங்கி ஓங்கித் துணிகளை படியில் அடித்த சத்தம் நடுநிசி வேளையில் மிகவும் உரக்கக் கேட்டது. அது போதாதென்று, வேலைக்காரியுடன் சத்தமாக சிரித்துக்கொண்டே பேசினாள். அந்த சத்தத்தில் அக்பரின் தூக்கம் கலைந்து போயிற்று. நடு இரவில் யார் இப்படி சத்தம் போடுவது என்று கோபமுற்ற அக்பர் உடனே ஒரு காவற்காரனை அனுப்பினார். காவற்காரனும் யார் அவ்வாறு சத்தம் போடுவது என்றறிய அரண்மனையை விட்டு வெளியே வந்தான். ஆற்றங்கரையில், நடு இரவில், ஓர் இளம்பெண் வேலைக்காரியுடன் சத்தமாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்ததையும், துணிகளை அடித்துத் துவைத்துக் கொண்டுஇருந்ததையும் பார்த்து கோபமுற்றான். அவன் அவளைத் திட்டிக் கொண்டே நெருங்கி, “முட்டாளே, நீ என்ன பைத்தியமா? இரவு நேரத்தில் யாராவது துணி துவைப்பார்களா?” என்று தன் ஈட்டியை ஆட்டிக் கொண்டே கேட்டான். “ஏன்? இரவு நேரத்தில் ஆற்றில் தண்ணீர் இருக்காதா? பகலில்தான் இருக்குமா? இரவில் ஏன் துவைக்கக் கூடாது?” என்று பீர்பாலின் மகள் வாதம் செய்தாள். “உனக்கு அறிவில்லையா? பக்கத்தில் சக்ரவத்தியின் மாளிகை இருக்கிறது. பாவம், உன்னால் அவர் தூக்கம் கலைந்து விட்டது. நீ உடனே இங்கிருந்து போய்விடு” என்றான் காவலன். ‘அப்புறம் துணிகளை யார் துவைப்பது? நீ செய்வாயா?” என்றாள் அவள். காவலன் கோபத்துடன், “அதிகப்பிரசங்கி! யார் நீ?” என்று கத்தினான். உடனே, அவள் சிரித்துக் கொண்டே “நான் ஒரு பெண்!” என்றாள். “திமிர் பிடித்தவளே! நீ யாருடைய பெண்?” என்றான் காவலன். “நான் என் அப்பாவுடைய பெண்!” என்று இடக்காக அவள் பதில் சொல்ல, காவலன் பொறுமையிழந்தான். “உன்னை சக்ரவத்தியிடம் இழுத்துப் போகிறேன். இதேபோல் அங்க பதிலளித்தால், அவர் உனக்கு சவுக்கடி கொடுப்பார்” என்று காவலன் அவளை இழுத்துக் கொண்டு அக்பரிடம் சென்றான். அக்பரின் முன் நிறுத்தப்பட்ட பீர்பாலின் மகளின் முகத்தில் பயம் துளிக்கூட இல்லை. புன்சிரிப்புடன் தைரியமாக அவள் நிற்க, காவலன் அவள் இரவில் துணி துவைப்பதைப் பற்றி அக்பரிடம் கூறினான். அக்பர் கோபத்துடன் “என்னம்மா? இரவில்தான் துணி துவைக்க நேரம் கிடைத்ததா? என்றார். “ஆமாம் பிரபு! பகலில் நேரம் கிடைக்கவில்லை. இன்று மாலைதான் என் அப்பாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டு ஒரு குழந்தை பிறந்தது. இருவருக்கும் வேண்டிய பணிவிடைகள் செய்துவிட்டு, துணிகளை துவைக்க இப்போது வந்தேன்” என்றாள் அவள். “என்ன உளறுகிறாய்?” என்றார் அக்பர் கோபத்துடன். “நான் உளறவில்லை பிரபு! உண்மையைத்தான் சொல்கிறேன். இன்று மாலைதான் என் அப்பாவுக்குக் குழந்தை பிறந்தது” என்றாள் அவள். “முட்டாளே! மறுபடியும் பைத்தியம் போல் உளறாதே! உன் அம்மாவுக்குக் குழந்தை பிறந்தது என்று சரியாகச் சொல்!” என்று சீறினார் அக்பர். “இல்லை பிரபு! என் அப்பாவுக்குத்தான் குழந்தை பிறந்தது” என்று தான் சொன்னதையே திரும்பித் திரும்பிச் சொன்னாள் அவள். “உனக்கு என்ன பைத்தியமா? உன் அப்பாவுக்கு எப்படி குழந்தை பிறக்கும்?” என்று எரிமலை போல் அக்பர் வெடித்தார். “இதில் கோபப்பட என்ன இருக்கிறது பிரபு? காளை மாடு பால் கொடுக்க முடியும் என்றால், ஓர் ஆணினால் குழந்தையைப் பெற முடியாதா?” என்று அவள் கேட்டவுடன், அக்பருக்கு ‘சுரீர்’ என்று உறைத்தது. உடனே, அவருக்கு விளங்கிவிட்டது. அவர் கோபம் எல்லாம் குறைந்து விட்டது. “பெண்ணே! நீ பீர்பாலின் மகளா?” என்று அக்பர் கேட்டார். “ஆம், பிரபு!” என்றாள். “பீர்பாலைத் தவிர வேறு யாருக்கு இப்படியெல்லாம் யோசனை தோன்றும்… பெண்ணே! பீர்பாலை வீணாக காளை மாட்டின் பாலைத் தேடி அலையவேண்டாம் என்று சொல்! அதை நீயே கொடுத்து விட்டதாக சொல்!” என்ற அக்பர் பொற்காசுகள் நிரம்பிய பை ஒன்றை அவளுக்குப் பரிசாகக் கொடுத்தார். அதைப் பெற்றுக்கொண்ட அவள் அவரை வணங்கி விட்டு வீடு சென்றாள். அவள் சென்றபின் அக்பர் தனக்குத்தானே நினைத்தக் கொண்டார். “சே! இந்த ஜாலிம்கான் பீர்பாலை சிக்க வைக்க வேண்டும் என்றே காளை மாட்டின் பால் கொண்டு வரச் செல்லி என்னையும் முட்டாள் ஆக்கி விட்டான்” ஒரு பொண்ணின் முன்னால் மூக்கு உடைபட்டது தான் மிச்சம்” என்று எண்ணிய அக்பருக்கு அவன் மீது கோபம் கோபமாய் வந்தது. மறுநாள் ஜாலிம்கான் வாழ்நாளில் கேட்டிராத வார்த்தைகளால் அக்பரிடம் திட்டு வாங்கினார்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'காளை மாட்டின் பால்' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: ஒருநாள் முல்லாவின் நண்பர் ஒருவர் முல்லாவிடம் வந்தார். " முல்லா அவர்களே! உங்களுடைய கழுதையை எனக்கு இரண்டு நாட்களுக்கு தயவுசெய்து
இரவலாகத் தாருங்கள் இரண்டு நாட்கள் கழிந்ததும் திருப்பி தந்துவிடுகிறேன் " என்றார்
நண்பர். அந்த நண்பர் முன்பும் இரண்டொரு தடவை கழுதையை இரவல் வாங்கிச் சென்றதுண்டு.
அப்பொழுதெல்லாம் சொன்ன நாட்களில் அவர் கழுதையைத் தரவில்லை. தவிரவும் கழதைக்கு
சரியான உணவளிக்காமலும் விட்டிருந்தார். அதனால் அவருக்குக் கழுதையை இரவல் தரக்கூடாது என்று முல்லா தீர்மானித்து விட்டார்.
நண்பரே! என் கழுதை இப்போது வீட்டில் இல்லை. அதை வேறு ஒருவர் இரவலாகக் கொண்டு
சென்றிருக்கிறார் என்று முல்லா கூறினார். நண்பர் அவரிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்ட சமயம் முல்லாவின் வீட்டுக் கொல்லைப்
புறத்தில் கழுதை கத்தும் குரல் கேட்டது. " முல்லா அவர்களே கழுதை வீட்டில்தான் இருக்கிறது போலிருக்கிறதே! யாரோ
இரவலாகக்கொண்டு சென்றதாகக் கூறினீர்களே" என்ற நண்பர் வியப்புடன் கேட்டார்.
முல்லாவுக்குக் கோபம் வந்த விட்டது. " நான் சொன்ன சொல்லை நீர் நம்பவில்லை. ஒரு கழுதையின் சொல்லைத்தான் நம்புகிறீர். ஏன்
மீது நம்பிக்கை இல்லாத ஒருவருக்குக் கழுதையை இரவல் தரக்கூடாது என்பதற்காகத்தான் வேறு
ஒருவர் அதைக் கொண்டு சென்றார் எனச் சொன்னேன் " என்றார். நண்பர் அவமானமடைந்து அந்த இடத்தை விட்டுக் கிளம்பினார்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'கழுதையால் கிடைத்த பாடம்' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: கதிரவன், பழச்சாறு பெண், குழந்தைகள் நலநிதி, வெள்ளரி, திராட்சை, மனிதநேயம், பேருந்து, உண்டியல், சில்லறை, குளிர்பானம்
தலைப்பு: மனித நேயம்...
| அவனுக்கு அந்தப் பேருந்துப்பயணம் வெறுப்பையும், சலிப்பையுமே தந்திருக்க வேண்டும். பேருந்தில் பயணித்து, பயணித்து அவனுக்கு வாழ்வே வெறுத்துப் போயிருந்தது. பேருந்து இரைச்சலோடு தொலைக்காட்சியின் அலறல் வேறு. இப்பொழுதெல்லாம் நம்மவர்களுக்கு வண்ணத்திரைப் பேருந்து தான் மிகவும் பிடித்தது. ஆனால் அவன் மதுரைக்கு வந்து இறங்கியதும் சிறைச்சாலையிலிருந்து விடுதலை பெற்ற உணர்வை பெற்றிருந்தான். அவன் கோவையிலுள்ள அனாதை மற்றும் குடும்பத்தால் கைவிடப்பட்ட குழந்தைகள் மறுவாழ்வு மையத்தில் ஊர் ஊராகச் சென்று " குழந்தைகள் நலநிதி " திரட்டுகின்ற பணி. அதற்காகவே அவன் இப்பொழுது மதுரைக்கு வந்திருக்கிறான். அவன் பேருந்து நிலையத்திற்கு வந்த பிறகு மதுரை மாநகர் என்பதற்கு அடையாளமாக மக்கள் கூட்டமும், " கொய்யா! அம்மா! " என்றும் வெள்ளரி, திராட்சை என வியாபாரிகளின் குரல் ஒரு பக்கமும் அவனுக்கு தென்பட்டன. இடிக்குப் பயந்து மரத்தில் ஒதுங்கிய கதையாக, பேருந்திலிருந்து தப்பித்தவன், மதுரை மாநகரின் வெயிலுக்கு தப்பிக்க இயலவில்லை. வெயில் தனது கொடூரத்தை மக்களுக்கு காட்டிக் கொண்டிருந்தது. இருந்தாலும், வந்த வேலையை அவன் தொடங்க நினைத்தான். தனது கைப்பையிலிருந்து உண்டியலையும், துண்டுப் பிரசுரங்களையும் கொடுத்துக் கொண்டிருந்தான். ஏதோ, போட வேண்டும் என்பதற்காக உண்டியலில் சில்லறைகளைப் போட்டவர்களே ஏராளம். இறக்கத்தோடு போட்டதாக ஒருவரும் தென்படவில்லை. ஒரு சிலர், நின்று கூட துண்டு பிரசுரங்களை வாங்காமல் நடந்து கொண்டிருந்தனர். அவன் தன் வேலையை நன்றாகத் தான் செய்தான். அவன் நிதி திரட்டிய விதத்தை கண்டால், இந்தியாவின் கடனைப் போக்க உலக நாடுகளிடம் இப்படி நிதி திரட்டினால் கடனை அடைத்து விடலாம் என்று எண்ணத் தோன்றும். உண்டியலுக்கு இன்று நல்ல வேட்டை உண்டியல் குலுக்கியே இந்த நாட்டை உண்டு இல்லை என்று தீர்த்தார்கள் என்பது உண்மைதான் போலும். இந்நிலையில், வெயிலின் கொடூரத்தை அவனால் தாங்க இயலவில்லை. ஏதாவது "ஜில்" என்று குடித்தால் தான் நிற்க முடியும் போல இருந்தது அவனுக்கு. அவனுடைய நாவின் சுரண்டலுக்கு உண்டியலைச் சுரண்டலாம் என எண்ணினான். உண்டியலில் பணத்தை எடுத்தால் யாருக்கு தெரியப் போகிறது? உண்டியலில் இருந்து கொஞ்சம் சில்லறைகளை எடுத்துக் கொண்டு அருகிலிருந்த ஒரு "பழச்சாறுக்" கடைக்கு சென்று குளிர்பானம் வாங்கி குடித்துக் கொண்டிருக்கும் போது, கைகளில் யாரோ சுரண்டுவது போல ஓர் எண்ணம். திரும்பிப் பார்த்தான் அவன். பரட்டைத் தலையுடனும், கிழிந்த ஆடையுடனும் ஒரு சிறுமி "அண்ணே! பசிக்குது ஒரு ரூபாய் இருந்தா தாங்க!" என்று அழுகையுடன் கலந்த குரலில் கேட்டாள். "இல்லை, இல்லை போ. பஸ் ஸ்டாண்ல நிம்மதியாக நிக்க முடியல அதுக் குல்ல இதுக தொல்லை" என்றான் அவன். " இது குழந்தைகளுக்கு திரட்டிய நிதியா? இல்லை இவன் குளிர்பானம் குடிக்க திரட்டிய நிதியா?" தனக்குள்ளேயே கேள்வி கேட்டுக் கொண்டது உண்டியல். அவன் அந்த சிறுமியை தூரத் தள்ளி விட்டு உண்டியலை பைக்குள் வைத்துவிட்டு பேருந்தில் ஏறி கோவைக்கு பயணமானான். பேருந்து மதுரையை விட்டுச் சென்றது. பிறகு, சென்னை, சேலம், திருச்சி என பல ஊர்களில் வசூல் செய்து விட்டு மீண்டும் ஒரு மாதம் கழித்து அவன் மதுரைக்கு வந்தான். மதுரைக்கு வந்தால் அவனது மனதிற்கு ஏதோ, ஒருவித ஆறுதல். அதற்கு காரணம் இப்படியும் கூட இருக்கலாம். மதுரைக்கு வந்தால் நிதி வசூல் கொஞ்சம். அதிகமாக கிடைக்கும். தமிழ் வளர்த்த மதுரையில் மக்கள் தமிழை மறந்து விட்டாலும், தமிழர் பண்பாடான அறத்தை கொஞ்சம் ஞாபகம் வைத்திருக்கிறார்கள் போல. எப்படியோ அவன் இன்றும் வசூலை முடித்து விட்டு புறப்படலாம் என்று எண்ணினான் இன்றும் தாகம், அவன் நடக்க இயலவில்லை. இன்றும் உண்டியலில்லிருந்து சில்லறையை எடுத்துக் கொண்டு குளிர்பானக் கடைக்குப் போனான். அந்த சிறுமி இன்றும் கையில் குழந்தையுடன் அவன் எதிரே ஓடி வந்தாள். "அண்ணே! எனக்காக இல்லாட்டினாக் கூட பரவாயில்லை. இந்த பாப்பா பசியால அழுகிறது இதற்காகவாவது கொடுங்க" என்றாள். "அன்னைக்கும் வந்து தொல்லை கொடுத்த இன்னைக்கு இந்த குழந்தையோடவா? என்ன நீங்க எல்லாம் ஒரு கூட்டமா திரியிறீங்களா?" என்றான். "இல்லை, அண்ணே" என்ற மறுதலித்தாள். "பிறகு யாரு இது?" என்றான் அவன். " ஒரு வாரத்துக்கு முன்னாடி இந்த பஸ்டாண்ல ஒரு ஆக்சிடன்ட் (விபத்து) நடந்தது அதுல எல்லாரும் செத்து போனாங்க அதுல தப்பிச்சுகிட்டது இந்த பாப்பா மட்டுந்தான். யாரும் இவளை தூக்கல; நான் தான் இவளை தூக்கி நான் பிச்சை எடுக்கிற காசுல இவளுக்கு சாப்பாடு கொடுக்கிறேன்" என்றாள். அவனுக்கு கன்னத்தில் ஓங்கி அறைந்தது போல இருந்தது. உண்டியலிலிருந்து கொஞ்சம் காசை அவளுக்கு எடுத்து தந்துவிட்டு புறப்பட்டான். இன்னும் கூட "மனிதநேயம்" மக்களிடம் பிச்சைகேட்டு கொண்டு தான் இருக்கிறது. பணத்திடம் மனம் இருப்பதில்லை; மனிதத்திற்கு மதிப்பு இருப்பது இல்லை. (மனித நேயம், மனித நேயம் என்று பல முறையும் மக்களிடம் சொல்லியும் மறந்து போன கதை இது.) |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: ஒரு கோயிலுக்குள் இரண்டு திருடர்கள், பூட்டை உடைத்துச் சாமி சிலைகளைத் திருடிக் கொண்டு இருந்தார்கள். அந்த வழியே சென்ற பரமார்த்தரும் சீடர்களும் அதைக் கண்டனர். "ஐயா! யார் நீங்கள்? ஏன் இந்தச் சிலைகளை எடுக்கிறீர்கள்?" என்று பணிவுடன் கேட்டார் பரமார்த்தர். குருவையும் சீடர்களையும் கண்ட திருடர்கள் முதலில் சற்று பயந்தார்கள். பிறகு சமாளித்துக் கொண்டு, "நாங்கள் வெளியூரில் இருந்து வருகிறோம். இங்கே உள்ள சிலைகளை எல்லாம் அங்கே கொண்டு போகப் போகிறோம்" என்றனர். "வெளியூருக்கா? ஏன்?" என்று கேட்டான், மட்டி. "இந்தச் சிலைகள் இங்கேயே இருப்பதால் என்ன பயன்? வெளியூருக்குப் போனால்தான் அங்கிருக்கும் மக்களும் பார்ப்பார்கள். அப்போதுதான் உங்கள் ஊரின் பெருமை மற்ற ஊருக்கும் தெரியும்" என்றான், திருடரில் ஒருவன். "ஆழ்வார்கள், நாயன்மார்கள் செய்த தொண்டைவிட, நீங்கள் செய்யும் தொண்டுதான் பெரியது. உங்கள் பக்தியை மெச்சுகிறேன்" என்று பாராட்டினார், பரமார்த்தர். ஆனால், மட்டிக்கு மட்டும் கொஞ்சம் சந்தேகமாக இருந்தது. "இதை நீங்கள் திருடிக் கொண்டு போகிறீர்கள்" என்றான். அதைக் கேட்ட திருடர்கள், "சே, சே! திருடுவதாய் இருந்தால் யாருக்கும் தெரியாமல் அல்லவா திருட வேண்டும்? உங்களுக்குத் தெரிந்துதானே எடுத்துக் கொண்ட போகிறோம்? இது எப்படித் திருடுவது ஆகும்?" என்று கேட்டனர். "ஆமாம்! எங்கள் முன்னிலையில் நடப்பதால் இது திருட்டு இல்லைதான்!" என்று ஒப்புக் கொண்டான் மட்டி. மறுபடியும் சாமி சிலைகளைப் பெயர்த்து எடுத்தனர், திருடர்கள். அவர்கள், கஷ்டப்படுவதைக் கண்ட மடையன் "குருதேவா! இவர்களுடன் சேர்ந்து நாமும் கொஞ்சம் தூக்கி விடலாமே" என்று கேட்டான். "ஓ! தாராளமாக உதவி செய்வோம்" என்று சொல்லியவாறு சிலைகளைத் தூக்கப் போனார் குரு. ஒரு வழியாக இராமர் சிலை, சீதை சிலை, ஆஞ்சநேயர் சிலை எல்லாவற்றையும் பெயர்த்து எடுத்தனர். "குருவே! இவ்வளவு காலமாக இந்தச் சாமி சிலைகள் நம் ஊரில் இருந்தன. இப்போது வெளிநாடு எல்லாம் சுற்றிப் பார்க்கப் போகின்றன. ஆதலால் இன்று விசேஷ பூசை செய்துதான் அனுப்ப வேண்டும்" என்றான், முட்டாள். "யாராவது ஆள் வந்துவிடப் போகிறார்கள் என்று பயந்த திருடர்கள், "சீக்கிரம் செய்யுங்கள்" என்று அவசரப்படுத்தினர். பரமார்த்தரும் அவசரம் அவசரமாக மந்திரம் சொல்லியபடியே பூசை செய்தார். சீடர்களும் சிலைகளின் கால்களில் விழுந்து வணங்கி எழுந்தனர். பூசை முடிந்ததும் கோயிலுக்கு வெளியில் தயாராக இருந்த வண்டியில் சிலைகளைத் தூக்கிக் கொண்டு போக நினைத்தனர், திருடர்கள். அப்போது பரமார்த்தரும், மட்டி, மடையன், முட்டாள் ஆகிய மூன்று சீடர்களுக்கும் உற்சாகம் அதிகம் ஆயிற்று. "சாமிக்கு விடை கொடுத்து அனுப்ப வேண்டும்" என்று சொல்லிக் கொண்டே வாழ்க இராமர்! வாழ்க சீதை! ஆஞ்சநேயருக்கு ஜே!" என்று காட்டுக் கத்தலாகக் கத்தினார்கள். அவர்கள் கத்துவதைக் கண்ட திருடர்களுக்குப் பொறுமை போய் விட்டது. "அடப் பாவிகளா! கடைசி நேரத்தில் சத்தம் போட்டு எங்கள் காரியத்தையே கெடுத்து விடுவீர்கள் போலிருக்கிறதே" என்று திட்டினார்கள். "சத்தம் போட்டால் என்ன தப்பு?" என்று கேட்டான் மடையன். குதிரை மீது ஏறிக் கொண்ட திருடர்கள், வண்டியை ஓட்டியபடியே, "முட்டாள்களே! நாங்கள் இந்தச் சிலைகளைத் திருடிக் கொண்டு போகிறோம். இது கூட உங்களுக்குத் தெரியவில்லையே!" என்று உண்மையைக் கூறினர். அதைக் கேட்டுப் பரமார்த்தருக்கும் சீடர்களுக்கும் ஆச்சரியமாக இருந்தது. "என்ன? திருடிக் கொண்டு போகிறீர்களா?" என்றபடி மயங்கி விழுந்தான், முட்டாள். "ஐயோ, திருடர்கள்! திருடர்கள்!" என்று கத்தினான், மட்டி. அவர்களைப் பிடிப்பதற்குக் குதிரை வண்டியின் பின்னே ஓடிப்போய், கீழே விழுந்து உருண்டான், மடையன். பரமார்த்தரோ, அதிர்ச்சியில் சாமிபோல் சிலையாகி நின்றார். பரமார்த்தரின் மடத்தருகே வந்ததும், திருடர்கள் வண்டியை நிறுத்தினர். சிலைகளுடன் மடத்துக்கள் சென்றனர். உள்ளே மண்டுவும், மூடனும் இருந்தனர். "அடேய்! நாங்கள் கொஞ்ச நேரம் இங்கே தூங்கப் போகிறோம். அதுவரை இந்தச் சிலைகளைப் பத்திரமாக வைத்திருங்கள். தூங்கி எழுந்ததும் சிலைகளை எங்களிடமே ஒப்படைத்து விட வேண்டும்" என்று கட்டளை இட்டனர். அவர்களைப் பார்த்த பயந்து போன மண்டுவும், மூடனும், சரி என்று சம்மதித்தனர். சிறிது நேரத்தில் திருடர்கள் குறட்டை விட்டுத் தூங்கி விட்டனர். "சிலைகளைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டுமே? என்ன செய்வது?" எனக் கேட்டான் மண்டு. "நம்மால் காவல் காக்க முடியாது. தொலைத்து விடுவோம். இல்லாவிட்டால் நாமும் தூங்கி விடுவோம். அதனால் நேராக மன்னரிடமே கொண்டு அரண்மனைக்குப் போனார்கள். அரண்மனையில் பரமார்த்தரும் மற்ற சீடர்களும் அழுது கொண்டு இருந்தனர். மண்டுவும், மூடனும் சிலைகளுடன் வருவதைக் கண்டு, அரசன் உட்பட அனைவரும் வியப்படைந்தனர். நடந்தவற்றை கேள்விப்பட்ட அரசன், "சிலைகள் திருடு போவதற்கு உதவியாக இருந்ததும் நீங்களே! அதனால் தண்டனையும் தராமல், பரிசும் தராமல் அனைவரையும் சும்மா விட்டு விடுகிறேன்" என்றான். குருவும், சீடர்களும் தப்பித்தால் போதும் என்று அரண்மனையை விட்டு ஓடிவந்தனர்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'வாழ்க இராமர் - வாழ்க சீதை' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: "குருநாதா! நாம் ஒரு ஓலைச் சுவடி பத்திரிகை ஆரம்பித்தால் என்ன?" என்று கேட்டான் முட்டாள். "பத்திரிகையா? அதனால் நமக்கு என்ன லாபம்?" என்றார் பரமார்த்தர். "தினம் தினம் நம்மைப் பற்றிப் புகழ்ந்து எழுதிக் கொள்ளலாம். நமக்குப் பிடிக்காதவர்களை விருப்பம் போல் திட்டலாம்" என்றான் மூடன். "அப்படியானால் நம் பத்திரிகைக்குத் 'தினப் புளுகு' என்று பெயர் வைக்கலாம்" என்றார் குரு. "பெயருக்குக் கீழே "கெட்டிக்காரன் புளுகு - எட்டு நாள் உண்மை!" என்று போடலாம்" என்றான் மண்டு. அன்று முதல் பரமார்த்தரின் மடம், பத்திரிகை அலுவலகம் ஆயிற்று. பரமார்த்தர், 'தினப் புளுகு' நாளிதழின் ஆசிரியராக பதவி ஏற்றுக் கொண்டார். மட்டியும், மடையனும் நிருபர்களாக நியமிக்கப்பட்டனர். இருட்டத் தொடங்கியதும், நிருபர்களான மட்டியும், மடையனும் வெளியே புறப்பட்டனர். அப்போது அந்த நாட்டு அரசன், நகர சோதனை செய்வதற்காக மாறு வேடத்தில் புறப்பட்டான். அதைக் கண்ட மட்டி, "அரசர் ஏன் மாறு வேடத்தில் போகிறார்?" என்று கேட்டான். "திருடுவதற்காக இருக்கும்" என்றான் மடையன். "ஒவ்வொரு வீடாக எட்டிப் பார்க்கிறாரே, ஏன்?" என்று சந்தேகம் கொண்டான், மட்டி. "எந்த வீட்டில் கொள்ளையடிக்கலாம் எனத் திட்டம் தீட்டுகிறார்" என்று விளக்கினான், மடையன் "அப்படியானால் இதைச் சும்மா விடக் கூடாது. முதல் பக்கத்திலேயே பெரிதாக எழுத வேண்டும்!" என்றான் மட்டி. மடத்துக்கு வந்ததும், திரட்டி வந்த செய்திகளை எழுதத் தொடங்கினார்கள். வேலியே பயிரை மேய்கிறது! பொதுச் சொத்தைக் கொள்ளையடிக்க அரசரே திட்டம்!! இரவு நேரத்தில், மாறு வேடத்தில் ஒவ்வொரு வீடாக எட்டிப் பார்த்தார். இந்தத் தலைப்பின் கீழ், அரசரைக் கண்டிபடித் தாக்கி எழுதினார்கள். "தேர்தலில் நம்மை எதிர்த்துப் போட்டி போட்டவர்களைச் சும்மா விடக்கூடாது. பழி வாங்கியே தீர வேண்டும்" என்றான் மண்டு. "மந்திரிகள் பேரிலும் ஊழல் பட்டியல் தயாரிப்போம்" என்று கத்தினான் மூடன். உடனே மட்டியும் மடையனும் கீழ்க்கண்டவாறு செய்திகளை எழுதினார்கள். அரசு பணத்தில் அட்டகாசம்! தளபதி தம்புசாமி குடித்து விட்டுக் கலாட்டா! அறிவுகெட்ட அமைச்சர் அப்புசாமி, ஆறு கட்டு சுருட்டு லஞ்சம் வாங்கினார். ஊழலோ ஊழல்! மந்திரி மலர்வண்ணன் மாடி வீடு கட்டிய மர்மம் என்ன? இளவரசர் இந்திரனின் லீலை! இளம் பெண்ணின் கையைப் பிடித்திழுத்து வம்பு! இதே போல் தங்களுக்குப் பிடிக்காதவர்களை எல்லாம் விருப்பம் போல் தாக்கி எழுதினார்கள். "நம்மைப் பற்றிக் கொஞ்சம் புகழ்ந்து எழுதிக் கொள்வோமே!" என்றான் முட்டாள். "என்ன எழுதுவது?" எனக் கேட்டான் மூடன். சுருட்டு மன்னர் பரமார்த்தரின் சாதனை! ஒரே நாளில் தொடர்ந்து முப்பது சுருட்டு பிடித்தார்! என்று எழுதினான், முட்டாள். 'மண்ணில் புரளுவது எப்படி?' என்ற தலைப்பில் மண்ணில் புரளுவதால் உடல் நலம் ஏற்படும் எனப் பேட்டி கொடுத்தான் மட்டி! 'தொப்பை வளர்ப்பது எப்படி?' என்ற ஆராய்ச்சிக் கட்டுரையை 'அறிவியல்' பகுதியில் எழுதினார் பரமார்த்தர். 'பரமார்த்தருக்குச் சிலை! மக்கள் போராட்டம்! 'தத்துவத் தந்தை' பரமார்த்த குருவுக்கும், அவரது சீடர்களுக்கும் சிலை வைக்க வேண்டும் என்று கோரி, மக்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்தச் சிலையை அரண்மனைக்கு எதிரேதான் வைக்க வேண்டும் என்றும் மக்கள் கோஷமிட்டபடி ஊர்வலம் சென்றார்கள்!' இதே போல் ஒவ்வொருவருக்கும் தங்களைப் பற்றிக் கண்டபடி கிறுக்கி வைத்தனர். எல்லாவற்றையும் கொண்டு போய்ப் பரமார்த்தரிடம் கொடுத்ததும், "எல்லாம் நன்றாகத்தான் எழுதியிருப்பீர்கள். விடிந்ததும் விற்றுவிட்டு வாருங்கள்" என்று கூறிவிட்டுப் படுத்து விட்டார். பொழுது விடிந்ததும், சீடர்கள் பத்திரிகைகளை எடுத்துக் கொண்டு விற்கப் போனார்கள். 'தினப் புளுகு வாங்கலையோ, தினப் புளுகு! நாலு பக்கம் நாற்பது காசு!' என்று கத்தினான் முட்டாள். சிலர் ஓடிவந்து ஓலையில் எழுதப்பட்ட பத்திரிகையை வாங்கிப் பார்த்தனர். செய்திகளைப் படித்து விட்டு அதிர்ச்சி அடைந்தனர். செய்தி, அரசருக்கும் மற்ற அமைச்சர்களுக்கும் எட்டியது. நீதி தவறாத மன்னனைப் பற்றியும், அவனது மந்திரிகளைக் குறித்தும் கண்டபடி தவறா எழுதியதற்காகப் பரமார்த்தர் மீதும், சீடர்கள் மீதும் 'குற்றப்பத்திரிகை' வாசிக்கப்பட்டது. "பரமார்த்தரோ, "இதெல்லாம் உண்மை என்று யார் சொன்னது? பத்திரிகையின் பெயரைப் பாருங்கள்; 'தினப் புளுகு' என்று தானே போட்டிருக்கிறோம்" என்று கூறினார். அதன் பின் குருவும், சீடர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'தொப்பை வளர்ப்பது எப்படி?' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: “ஙொய்ய்ய்…” என்ற சப்தம் பரமார்த்தரின் காதைத் துளைத்தது. படுத்துக் கொண்டு இருந்தவர், எழுந்து மேலே பார்த்தார். அவர் தலையைச் சுற்றிலும் சில கொசுக்கள் பறந்து கொண்டு இருந்தன. உடனே தம் சீடர்களைக் கூப்பிட்டார். “குருதேவா! இதென்ன விசித்திரமாக இருக்கிறது? இது மாதிரிச் சின்னச் சின்னப் பறவைகளை இதற்கு முன்பு நாம் பார்த்ததே இல்லையே!” என்றான் மட்டி. அப்போது, குருவையும் சீடர்களையும் சில கொசுக்கள் கடித்தன. வலி தாங்காத குரு, கத்தினார், சீடர்களும் அவருடன் சேர்ந்து கூச்சல் போட்டனர். “குருநாதா! இந்தப் பறவைகள் ஏன் நம்மைக் கடிக்கின்றன?” எனக் கேட்டான், மடையன். அவை கொசுக்கள் என்பது பரமார்த்தருக்குத் தெரியாது. உண்மையைச் சொன்னால் சீடர்கள் கேலி செய்வார்கள் என்று நினைத்தார். அதனால், “ஒரு சமயம் நான் வேட்டையாட காட்டுக்குப் போயிருந்தேன். அப்போது ஒரு மரத்தில் நூறு பறவைகள் இருந்தன. எல்லாவற்றையும் அம்பு கோட்டுக் கொன்று விட்டேன். அதன் ஆவிகள்தான் இப்போது வந்து தொல்லை கொடுக்கின்றன” என்று புளுகினார். உடனே சிஷ்யர்கள், “அன்புள்ள ஆவியே, எங்கள் குருவின் குற்றத்தை மன்னித்து, எங்களுக்குத் தொல்லை தராமல் இருங்கள்” என்று ஒவ்வொரு கொசுவிடமும் வேண்டினார்கள். “உஸ்ஸ்… சத்தம் போடாதே… ஆவிகளுக்கு நாம் பேசுவது கேட்கும். அதனால் எல்லாப் பறவைளையும் தந்திரமாகத்தான் பிடிக்க வேண்டும்” என்று மெல்லக் கூறினான், முட்டாள். “குருவே! ஒவ்வொரு பறவையாகப் பிடித்துத் தூக்கில் தொங்க விட வேண்டும்!” என்று குதித்தான், மூடன். “அதைவிட, அதற்குக் “கிச்சு கிச்சு” மூட்டி, அது சிரித்துக் கொண்டு இருக்கும்போதே, ஊசியால் குத்திக் கொலை செய்து விடலாம்!” என்றான் மண்டு. “சரி…சரி… முதலில் ஒவ்வொரு பறவையாகப் பிடியுங்கள்” என்று கட்டளை இட்டார் குரு. மண்டுவின் மொட்டைத் தலையில் உட்கார்ந்திருந்த ஒரு கொசுவை அடிக்க நினைத்தான் முட்டாள். தன் தலையில் இருந்த கொள்ளிக் கட்டையால் அவன் தலையில் ஓங்கி ஒரு அடி அடித்தான். மண்டையில நெருப்புப் பட்டதும், “ஐயோ…” என்று கதறினான் மண்டு. மெல்ல ஒரு கொசுவைப் பிடித்தான், மட்டி. அதற்குக் கிச்சு கிச்சு காட்டினான், மடையன். பரமார்த்தரோ, தம் கைத்தடியால் அந்தக் கொசுவை நசுக்கப் பார்த்தார். அதற்குள் அது பறந்து போய் விட்டது. சற்று நேரத்தில் எல்லா கொசுக்களும் வேறு எங்கோ பறந்து சென்று விட்டன. “குருவே” இந்தப் பறவைகளுக்கு மந்திரம் தெரியும் போலிருக்கிறது. நம் திட்டத்தைத் தெரிந்து கொண்டு மாயமாய் மறைந்து விட்டன” என்றான். “வேறு வழியில்தான் பிடிக்க வேண்டும்” என்றான், மண்டு. “இந்தப் பறவைகளுக்கு எதிரியாக ஏதாவது பூச்சிகளைப் பிடித்து வந்துவிட வேண்டும். அவை இரண்டும் சண்டை போட்டுக் கொண்டு இருக்கும். நாம் நிம்மதியாகத் தூங்கலாம்” என்றான் முட்டாள். முட்டாளின் திட்டப்படி, மடம் பூராவும் மூட்டைப் பூச்சிகளைப் பிடித்து வந்து விட்டனர். இரண்டு நாட்கள் சென்றன. கொசுவுடன் மூட்டைப் பூச்சிகளும் சேர்ந்து கொண்டு கடித்தன. “சே! பெரிய தொல்லையாகப் போய்விட்டதே! என்ன செய்வது?” என்று பரமார்த்தர் கேட்டார். “குருவே! எனக்கு ஓர் அற்புதமான யோசனை தோன்றி விட்டது. “மூட்டைப் பூச்சிக்குப் பயந்து கொண்டு வீட்டைக் கொளுத்தினானாம்” என்று சொல்கிறார்களே! அதைச் செய்து பார்த்தால் என்ன? என்று கேட்டான் மட்டி. “ஆமாம் குருவே! நாம் பயப்படாமல் வீரத்துடன் கொளுத்துவோம்!” என்றான் மடையன். “குருவே! அப்படியே இன்னொரு திட்டத்தையும் செயல்படுத்துவோம்! எரிகிற மடத்தோடு சேர்ந்து நாமும் எரிவோம்!” என்றான் மூடன். “அப்படிச் செய்தால் செத்துப் போய் விடுவோமே?” என்றான் மண்டு. “செத்தால்தான் ஆவியாகலாம். ஆவியாக மாறினால் நமக்குத் தொல்லை தருகிற சின்னப் பறவைகளை எல்லாம் சுலபமாகப் பிடிக்கலாம்!” என்றான் மூடன். “பலே மூடா!” என்று அவனைப் பாராட்டினார் பரமார்த்தர். அவன் திட்டப்படி, மடத்துக்குக் கொள்ளி வைத்துவிட்டு, எல்லோரும் உள்ளே சென்று நின்றனர். “திகு, திகு” என்று நெருப்பு பிடித்துக் கொண்டு எரிய ஆரம்பித்ததும், காட்டுக் கத்தலாய்க் கூச்சல் போடத் தொடங்கினார்கள். சப்தம் கேட்டு, அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தனர். நெருப்பை அணைத்ததுடன், குருவையும் சீடர்களையும் தீயிலிருந்து காப்பாற்றினார்கள். அப்போதும் “சே! இந்த அறிவு கெட்ட மக்கள் நம் அருமையான திட்டத்தைப் பாழாக்கி விட்டார்களே!” என்று முணு முணுத்துக் கொண்டார், பரமார்த்தர்!
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'அன்புள்ள ஆவியே' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: தெனாலி ராமன், சாமியார், காளி மகாதேவி, கிருஷ்ணதேவராயர், தாத்தாச்சாரியார், ஆந்திரா, பனை மரம், மழை, குளம், ஏரி, குட்டை, பழம்மங்களகிரி, விஜயநகரம்
தலைப்பு: அரசவை விகடகவியாக்குதல்
| அந்த ஆண்டு ஆந்திராவில் மழையே பெய்யவில்லை. அதனால் ஏரி, குளம், குட்டை அனைத்தும் வறண்டு கிடந்தன. அதனால் விவசாயம் நடைபெறவில்லை. அதனால் தண்ணீர்ப் பஞ்சமும் உணவுப் பஞ்சமும் தலை விரித்தாடியது. அப்போது அக்கிராமத்துக்கு ஒரு சாமியார் வந்து சேர்ந்தார். அவர் வந்து சேர்ந்த அன்றே பலமான மழை பெய்ய தொடங்கியது. ஆறு, ஏரி, குளம், குட்டை எல்லாம் நிரம்பிவிட்டன. சாமியார் வந்ததன் காரணமாகத்தான் நல்ல மழை பெய்துள்ளது என்று எண்ணிய அவ்வூர் மக்கள் சாமியாரை வாயாரப் புகழ்ந்து அவரை வணங்கி ஆசி பெற்றனர். இதை பார்த்துக் கொண்டிருந்த தெனாலி ராமன் கலகலவென நகைத்துக் கொண்டிருந்தான். இதைப் பார்த்த சாமியார், தெனாலிராமனை அருகில் அழைத்து தம்பி நீ ஏன் சிரிக்கிறாய்? என வினவினார். அதற்கு தெனாலிராமன் "மழை பெய்வதும் பெய்யாமல் போவதும் இறைவன் செயலே. அப்படியிருக்க தாங்கள் வந்தவுடன் தங்கள் மகிமையால்தான் மழை பெய்துள்ளது என்று மக்கள் எண்ணுவது ஒரு பனை மரத்தில் நன்கு பழுத்துள்ள பனம் பழம் கீழே விழும் நேரத்தில் காக்கை உட்கார்ந்ததாம். காக்கை உட்கார்ந்ததும் பனம் பழம் கீழே விழுந்ததாம். அப்போது அதை பார்த்தவர்கள் காக்கை உட்கார்ந்ததனால் தான் பனம் பழம் விழுந்தது என்று சொன்னார்களாம். அது போலவே இவ்வூர் மக்கள் செயலும் இருந்ததால் தான் சிரித்தேன்" என்றான் தெனாலிராமன். இதைக் கேட்ட சாமியார் உண்மையை உணர்ந்து அவன் மேல் கோபப்படவில்லை. தம்பி உன்னிடம் திறமை இருக்கிறது. நீ காளி மகாதேவியின் அருளைப் பெற்றால் பிற்காலத்தில் புகழ் பெற்று விளங்குவாய் என்று நல்லாசி கூறினார். இதைக்கேட்ட தெனாலிராமன் காளிமகாதேவியின் சந்நிதியை அடைந்தான். அவளின் திருஉருவத்தைக் காண பலவாறு வேண்டி தவம் இருந்தான். கடைசியில் தெனாலிராமன் முன் தோன்றினாள் காளிதேவி. அவளது உருவத்தைப் பார்த்துப் பயப்படுவதற்குப் பதிலாக பலமாக சிரித்தான். அவன் சிரிப்பதைப் பார்த்த காளிதேவி, என் கோர உருவத்தைப் பார்த்து எல்லோரும் அஞ்சுவார்கள். நீயோ பலமாகச் சிரிக்கிறாய்? ஏன் என்று வினவினாள். அதற்கு தெனாலிராமன் எனக்கு சளிபிடித்தால் என்னுடைய ஒரு மூக்கை சிந்துவதற்கு என்னுடைய இரண்டு கைகளே போதவில்லை. அப்படியிருக்க உனக்கு ஆயிரம் தலை உள்ளது. ஆனால் கைகள் இரண்டே பெற்றுள்ளாய். உனக்கு சளிபிடித்தால் ஆயிரம் மூக்கையும் எப்படி இரண்டு கைகளால் சிந்துவாய் என்று எண்ணினேன். அதனால் எனக்கு சிரிப்பு வந்தது என்றான். இதைக் கேட்டதும் காளிமகாதேவியே சிரித்து விட்டாள். பின் மகனே உன்னை ஆசீர்வதிக்கிறேன். பெரும் பேரும் புகழும் பெற்றுத்திகழ்வாய். உனக்கு கஷ்டம் நேரும் போதெல்லாம் என்னை நினை. உனக்கு உதவி செய்கிறேன் எனக்கூறி மறைந்தாள் காளிதேவி. விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் அரண்மனையில் தாத்தாச்சாரியார் என்பவர் ராஜகுருவாக இருந்தார். தெனாலி கிராமத்துக்கு அருகில் உள்ள ஊர் மங்களகிரி அவ்வூருக்கு ராஜகுரு தாத்தாச்சாரியார் வந்திருந்தார். அவ்வூர் மக்கள் ராஜகுருவை வணங்கி ஆசி பெற்றுச் சென்றனர். இதையறிந்த தெனாலிராமன் ராஜகுருவை சந்தித்தான். தன்னுடைய விகடத் திறமையாலும் பேச்சாற்றலாலும் ராஜகுருவின் "சிஷ்யன் ஆனான். ராஜகுருவின் நட்பு கிடைத்த பின் தன் குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பதாகவும் அதனால் மன்னர் கிருஷ்ணதேவராயரிடம் சிபாரிசு செய்து அரண்மனையில் வேலை கிடைக்க ஏற்பாடு செய்யுமாறும் வேண்டிக் கொண்டான். அவன் வேண்டுகோள்படியே ராஜகுருவும் அரண்மனையில் வேலையில் சேர்த்து விடுவதாக வாக்களித்தார். நான் போய் ஆள் அனுப்புகிறேன். அதன் பின் நீ வா என்று சொல்லி விஜயநகரத்துக்குச் சென்று விட்டார். தெனாலிராமன் மிகக் கெட்டிக்காரனாக இருக்கிறான். இவனை மன்னரிடம் சொல்லி அரண்மனையில் விகடகவியாக சேர்த்துவிட்டால் நம் வேலை போய்விடும் என்று எண்ணிய ராஜகுரு தெனாலிராமனுக்கு ஆள் அனுப்பவே இல்லை. தெனாலிராமனும் ராஜகுருவிடமிருந்து ஆள் வரும் வரும் என்று எதிர்பார்த்து பல மாதங்கள் ஓடிவிட்டன. எந்தத் தகவலும் அவனுக்குக்கிட்டவில்லை. ஆகையால் விஜயநகரம் சென்று ராஜகுருவை நேரில் பார்த்து அரண்மனையில் சேர்ந்து விட வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டான். அதன்படியே மனைவி, மகனுடன் பல நாட்கள் நடந்து விஜய நகரம் வந்து சேர்ந்தான். பலவித இடையூறுகளுக்கிடையே தெனாலிராமன் ராஜகுருவை அவரது இல்லத்தில் சந்தித்தான். தெனாலிராமனைப் பார்த்ததும் ராஜகுரு அதிர்ச்சி அடைந்தார். யாரப்பா நீ? உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். இதைக் கேட்ட தெனாலிராமன் பதறினார். ராஜகுருவே நான்தான் தெனாலிராமன். தாங்கள் மங்களகிரிக்கு வந்த போது நண்பர்கள் ஆனோம். நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தாங்கள் அரசவையில் என்னைச் சேர்த்து விடுவதாகச் சொன்னீர்கள். ஆள் அனுப்பிய பின் வா என்றீர்கள். பல மாதங்களாக தங்களிடமிருந்து ஆள் வராததால் தான் நான் நேரில் வந்துள்ளேன். தயவு செய்து என்னை பற்றி மன்னரிடம் சொல்லி அரசபையில் சேர்த்து விடுங்கள் என்று வேண்டினான். உன்னை யாரென்றே எனக்குத் தெரியாதப்பா.... மரியாதையாக வெளியே போ.... இல்லையேல் அவமானப்படுவாய் என்று விரட்டினார். வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட தெனாலிராமன் பழிக்குப்பழி வாங்கத் துடித்தான். காளி மகாதேவியைத் துதித்தான் அன்று கிருஷ்ணதேவராயரின் அரண்மனை அமர்களப்பட்டுக் கொண்டிருந்தது. அறிஞர் பெருமக்களும் மற்றவர்களும் மண்டபத்தில் குழுமியிருந்தனர். தெனாலிராமனும் ஓர் ஆசனத்தில் அமர்ந்தான். மன்னர் கிருஷ்ண்தேவராயர் வந்தவுடன் சபை கூடியது. வேற்றூரிலிருந்து வந்த தத்துவஞானியை விழாவைத் தொடங்கி வைத்து விவாத மன்றத்தை ஆரம்பிக்கச் சொன்னர். தத்துவ ஞானியும் ஏதேதோ சொன்னார். ஒருவருக்கும் ஒன்றும் விளங்கவில்லை. அவர் பேச்சின் இறுதியில் மாய தத்துவம் பற்றி நீண்ட நேரம் பேசினார். அதாவது நாம் கண்ணால் காண்பதும் மாயை, உண்பதும் மாயை என்று சொன்னர். இதைக்கேட்ட அறிஞர்கள் முதல் அரசர்வரை எவருமே வாய் திறக்கவில்லை. ராஜகுரு மௌனமாகி விட்டார். சுற்றும் முற்றும் பார்த்த தென்னாலிராமன் எழுந்து நின்றான். தத்துவஞானியைப் பார்த்து, "ஐயா தத்துவ ஞானியாரே ஏன் பிதற்றுகிறீர் நாம் உண்பதற்கும் உண்பதாக நினைப்பதற்கும் வித்தியாசமே இல்லையா?" எனக் கேட்டான். அதற்கு தத்துவஞானி வித்தியாசம் இல்லை என்றான். அதை சோதிக்க தெனாலிராமன் அரசரிடம் ஒருவிருந்துக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார். விருந்து ஏற்பாடு ஆயிற்று. அனைவரும் பந்தியில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினார். தத்துவஞானிக்கு உணவு பரிமாறியும் சாப்பிடக்கூடாது எனக் கட்டளை இட்டுவிட்டனர். அதனால் தத்துவஞானி தன் தவறை உணர்ந்தான். இதைப்பார்த்த அரசர் தெனாலிராமனின் திறமையைப் பாராட்டி பொன் பரிசளித்தது மட்டுமில்லாமல் அன்று முதல் அவரது அரசவை விகடகவியாக்கினார். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: சிங்கம், எலி, வேடர்கள், வலை
தலைப்பு: சிங்கமும் சிறு எலியும்
| ஒரு நாள் மதிய வேளையில் சிங்கம் ஒன்று காட்டில் தூங்கிக் கொண்டு இருந்தது. அங்கு வந்த எலி சிங்கத்தின் மீது குதித்து விளையாடியது. இதனால் சிங்கம் விழித்தெழுந்தது கோபம் கொண்ட சிங்கம் எலியைப் பிடித்து, "நீ எனக்கு இன்று நல்ல மதிய உணவாக போகிறாய்" என்று கர்ஜித்தது. ஆனால் எலியோ! சிங்கத்திடம், "என்னை மன்னித்து விடுங்கள் நான் தெரியாமல் உங்கள் மீது ஏறிவிட்டேன். என்னை சாப்பிடாதீர்கள்". எனக் கெஞ்சிக் கேட்டது. சிங்கத்திடம் "இன்று நீங்கள் என்னைக் கொல்லாமல் விட்டால் என்றாவது ஒரு நாள் உங்களுக்கு என் நன்றியைத் திருப்பிச் செலுத்துவேன்" என்றது. சிங்கமோ, "இவ்வளவு சிறிய உடம்பை வைத்துகொண்டு எனக்கு நீ உதவ போகிறாயா?" என்று எலியை ஏளனம் செய்தது. இருந்தாலும் எலியைக் கொல்லாமல் போக விட்டது. சில நாட்களின் பின் சிறிய இறைச்சி துண்டிற்கு ஆசைப்பட்ட அந்தச் சிங்கம் வேடர்கள் வைத்திருந்த வலையில் சிக்கிகொண்டது. வலையில் அகப்பட்ட சிங்கம் பலமாகக் கர்ஜித்து அழுதது. அந்தச் சிறிய எலி சிங்கத்தின் சத்தத்தைக் கேட்டு அந்த இடத்திற்கு வந்து வலையைத் தன் பல்லினால் வெட்டி சிங்கத்தைத் தப்பிப் போக உதவியது. சிங்கம் இந்தச் சின்ன எலி என்னைக் காப்பாற்றி விட்டதே என்று வெட்கப்பட்டு எலிக்கு தன்னைக் காப்பாற்றியதற்கு நன்றி சொல்லிச் சென்றது. உருவத்தை யாரையும் பார்த்து ஏளனம் செய்யக் கூடாது. உடலில் பெரியவராக இருப்பதால் தான் மேலானவர் என்று ஆணவம் கொள்ளக் கூடாது. சிறிய பலமற்ற ஒருவர், தன்னிலும் பெரிய பலமான ஒருவருக்கு உதவும் சந்தர்ப்பங்களும் வரும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: தேவசன்மா, ஆஷாடபூதி, அந்தணர், நரி
தலைப்பு: தங்களால் தாங்களே கெட்டோர்
| முன் காலத்தில் ஒரு சாமியார் இருந்தான். அவன் பெயர் தேவசன்மா என்பது. அவன் பிச்சை யெடுத்துப் பிழைத்து வந்தான். பிச்சை யெடுத்துச் சேர்த்த காசை யெல்லாம் அவன் ஒரு கந்தையில் முடிந்து வைத்திருந்தான். அவன் பணம் சேர்த்து வைத்திருப்பது யாருக்கும் தெரியாது. ஆனால், இதை எப்படியோ ஆஷாடபூதி என்ற பார்ப்பனன் தெரிந்து கொண்டு விட்டான். ஆஷாடபூதி ஒரு திருடன் திருடிப் பிழைப்பதே அவன் தொழில். சாமியாருடைய கந்தையைத் திருடி எடுத்துக் கொண்டு விட்டால், பிறகு நாள்தோறும் திருட வேண்டியதில்லை. அந்தப் பணத்தைக் கொண்டு பல நாள் இன்ப வாழ்வு நடத்த முடியும் என்று ஆஷாடபூதி நினைத்தான். இதற்கு அவன் ஒரு சூழ்ச்சி செய்தான். ஆஷாடபூதி சாமியாரிடம் வந்து, அவன் காலில் விழுந்து வணங்கினான். தனக்குத் திருமணமாக வில்லை என்றும், தன்னைச் சீடனாக ஏற்றுக் கொண்டு, நல்ல வழி காட்ட வேண்டும் என்றும் வேண்டினான். தேவசன்மாவும் அவனைத் தன் சீடனாக ஏற்றுக் கொண்டான். ஆஷாடபூதியும் மிகவும் நல்லவன் போல் சாமியாருக்குப் பணிவிடைகள் செய்து வந்தான். இப்படி யிருந்து வரும் நாளில் ஒரு நாள், ஓர் அந்தணன் இவர்களுக்கு விருந்து வைத்தான். விருந் துண்டுவிட்டுப் புறப்பட்ட அவர்கள் நெடுந்துாரம் சென்ற பிறகு, ஆஷாடபூதி தன் தலையில் கிடந்த ஒரு துரும்பைக் காட்டி, சுவாமி, நமக்குச் சோறு போட்ட அந்தணன் வீட்டிலிருந்து இந்தத் துரும்பு என்னையும் அறியாமல் ஒட்டிக் கொண்டு வந்து விட்டது. உணவளித்தவன் வீட்டுப் பொருளை ஒரு துரும்பானாலும் எடுத்து வரலாமா? இதோ நான் ஒடிப்போய் இதைத் திருப்பிக் கொடுத்துவிட்டு வந்து விடுகிறேன்" என்று ஓடினான். சிறிது தூரம் சென்று ஒரு மறைவான இடத்தில் நெடு நேரம் உட்கார்ந் திருந்துவிட்டு அவன் திரும்பி வந்தான். இந் நிகழ்ச்சிக்குப் பிறகு, தேவசன்மாவுக்கு தன் சீடன் மேல் நம்பிக்கை அதிகமாகியது. ஒரு நாள் சாமியாரும் சீடனும் ஒரு குளக் கரையை அடைந்தார்கள். குளத்தில் இறங்கிக் கால் கை கழுவிக் கொண்டு வருவதற்காக சாமியார் போகும் போது, கரையில் இருந்த ஆஷாடபூதியிடம் என்றும் விட்டுப் பிரியாத தன் கந்தை முடிப்பைக் கொடுத்து. வைத்திருக்கும்படி கூறிவிட்டுப் போனான். சாமியார் கை கால் கழுவிக் கொண்டு திரும்பும் போது, குளத்தின் கரையில் மற்றொரு பக்கத்தில், இரண்டு ஆட்டுக் கடாக்கள் முட்டி மோதிச் சண்டை போட்டுக் கொண்டிருந்தன. துரத்திலிருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு நரி அவற்றின் தலை யிலிருந்து வழிந்து தரையில் கிடக்கும் இரத்தத்தைக் குடிப்பதற்காக அங்கு வந்தது. இரண்டு கடாக்களுக்கு இடையில் புகுந்து இரத்தம் குடிக்கத் தொடங்கிய நரி அவற்றின் இடையில் சிக்கி முட்டுப் பட்டு மோதுண்டு உயிரை இழந்தது. இந்த வேடிக்கையைப் பார்த்துக் கொண்டே சாமியார் தேவசன்மா தன்னை மறந்து நின்று கொண்டிருந்தான். இந்த வேளை போனால் இன்னொரு வேளை வாய்க்காது என்று எண்ணிய ஆஷாடபூதி அப் போதே, சமியாரின் கந்தை முடிப்பை எடுத்துக் கொண்டு ஓடி விட்டான். காட்டுக்குள் எங்கோ சென்று மறைந்து விட்டான். திரும்பி வந்த சாமியார் தன் சீடனைக் காணாமல் மனம் வருந்தினான். அவனைத் தேடிக் கொண்டு ஊர் ஊராக அலைந்தான். அலைந்ததுதான் மிச்சம். கடைசிவரை அவன் ஆஷாடபூதியைக் கண்டு பிடிக்கவில்லை. அறிவின்மையால் தேவசன்மா தன் கைப் பொருளை இழந்தான். யோசனையில்லாமல் ஆட்டுக்கடாப் போரில் நடுவில் சென்று மாட்டிக் கொண்டு நரி உயிரிழந்தது. இதுதான் தங்களுக்குத் தாங்களே கேடு செய்து கொண்ட கதை. |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: முதல் வணிகன், இரண்டாவது வணிகன், முதல் வணிகனின் மகன், ஊர் வழக்காளர்
தலைப்பு: எலி இரும்பைத் தின்றது
| ஒரு பட்டணத்தில் இரண்டு செட்டிமார்கள் இருந்தார்கள். இருவரும் நெடுநாள் நண்பர்களாக இருந்தார்கள். அவர்களில் ஒருவன், அயல் நாடு போக வேண்டியிருந்ததால், தன்னிடம் உள்ள ஆயிரம் துலாம் இரும்பையும், தன் நண்பனிடம் பாதுகாப்பாக வைத்துவிட்டு வெளிநாட்டுக்குப் போய்விட்டான். வெளிநாடு சென்றவன் திரும்பி வந்து கேட்ட போது, இரும்பை யெல்லாம் எலி தின்று விட்டது" என்று நண்பன் கூறி விட்டான். சரி, போனால் போகிறது!" என்று சொல்லிவிட்டு, மீண்டும் அவன் முன்போல நண்பனாகவே இருந்து வந்தான். பிறகு ஒரு முறை அந்த நண்பனுடைய வீட்டில் ஒரு விருந்து நடந்தது. விருந்துக்கு அந்த வெளி நாடு சென்று வந்த வணிகன், தன் நண்பனுடைய வீட்டில் எண்ணெய் தேய்த்துக் கொண்டான். நண்ப னுடைய பிள்ளைக்கும் எண்ணெய் தேய்த்து விட் டான். பிறகு அந்தப் பிள்ளையையும் கூட்டிக் கொண்டு குளத்திற்கு குளிக்கச் சென்றான். குளித்த பின், அந்தப் பிள்ளையைத் தகுந்த ஓரிடத்தில் ஒளித்து வைத்து விட்டுத் தான் மட்டும் திரும்பி வந்தான். வீட்டுக்குத் திரும்பி வந்து சேர்ந்த வணிகனைப் பார்த்து, அவனுடைய நண்பன் என் பிள்ளை எங்கே?" என்று கேட்டான். :உன் பிள்ளையைப் பருந்து தூக்கிக் கொண்டு போய் விட்டது!" என்றான் வணிகன். உடனே மற்ற வணிகனுக்குக் கோபம் வந்து விட்டது. எங்கேயாவது பிள்ளையைப் பருந்தெடுத்துப் போகுமா?" என்று சண்டைக்கு வந்து விட்டான். வாய்ச்சண்டை முற்றிக் கைச் சண்டையாகி விட்டது. உடனே அங்கிருந்தவர்கள் இருவரையும் ஊர் வழக்காளர் முன்னே அழைத்துச் சென்றார்கள். வழக்காளர் அந்த வணிகனைப் பார்த்து ஏனையா இது என்ன வேடிக்கை! எங்கேயாவது பிள்ளையைப் பருந்து துக்கிக் கொண்டு போகுமா?" என்று கேட்டார். ‘ஐயா, ஆயிரம் துலாம் இரும்பில் ஓர் அணுவும் மீதி வையாமல், எலி கடித்துத் தின்றிருக்கும் போது, பிள்ளையைப் பருந்து தூக்கிப் போவது என்ன அதிசயம்?" என்று கேட்டான். ‘இந்த அதிசயம் எங்கே நிகழ்ந்தது!" என்று வழக்காளர் விசாரித்தார். உடனே அவன் முன் நடந்தவைகளைக் கூறினான். அப்படியானால், நீ செய்தது சரிதான்!" என்று சொல்லி விட்டு, வழக்காளர் அந்த வணிகனுடைய நண்பனைப் பார்த்து, ஆயிரம் துலாம் இரும்பையும் நீ திருப்பிக் கொடுத்தால், அவன் உன் பிள்ளை யைத் திருப்பிக் கொடுப்பான்" என்று தீர்ப்பளித்தார். சரி யென்று ஒப்புக்கொண்டு இருவரும் திரும்பி னார்கள். - அந்த நண்பன் முன் இரும்பைத் திருடி விற்ற போது விலை குறைத்திருந்தது. இப்போது விலை கூடிவிட்டபடியால் அவன் பெரு நஷ்டப்பட்டு வீடு வாசல் எல்லாவற்றையும் விற்று ஆயிரம் துலாம் இரும்பையும் வாங்கிக் கொடுக்க வேண்டியிருந்தது. இதனால் அவன் ஏழையாகி விட்டான். வஞ்சகம் செய்பவர்கள் வாழ மாட்டார்கள். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: ஆனைக்குடி என்ற ஊரில் அழகேசன் என்ற ஏழை இளைஞன் இருந்தார், அவர் பக்கத்து ஊரில் ஜம்பு என்ற ஜமிந்தாரிடம் வேலை பார்த்து வந்தார், கடுமையாக உழைத்தாலும் ஜமிந்தார் ஒன்றுமே கொடுக்க மாட்டார், சாப்பாடு மட்டுமே போடுவார். இருந்தாலும் தனக்கு வேலை கொடுத்த ஜமிந்தாருக்கு மிகவும் உண்மையாக உழைத்தார், ஜமிந்தார் கொடுப்பதில் தன் தாயாருக்கு பொருட்கள் வாங்கி கொடுத்து அனுப்புவார். இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து வேலை செய்து, பின்னர் தன் தாயை பார்க்க போவதாக ஜமிந்தாரிடம் சொன்னார் அழகேசன். ஜமிந்தாருக்கு அவரை விட மனசு இல்லை, இருந்தாலும் போய் வா, இதோ இரண்டு ஆண்டுக்கான உன் கூலி என்று கூறி 5 செப்பு காசுகள் கொடுத்தார். அவரும் மனம் கோணாமல் தாயாரைப் பார்க்க போகிற மகிழ்ச்சியில் சந்தோசமாக வாங்கி, முதலாளிக்கு நன்றி சொல்லிட்டு ஊருக்கு கிளம்பினார். அதே நேரம் அந்த ஊரில் ஒரு பெரிய திருடன் ஒருவன், ஜம்பு ஜமிந்தாரின் வீட்டை ரொம்ப நாட்களாக நோட்டம் போட்டுட்டு வந்தான். அழகேசன் இருந்தவரை அவனால் திருட முடியவில்லை, அழகேசன் ஊருக்கு கிளம்புவதையும், அவர் சம்பளம் வாங்கி சென்றதையும் பார்த்தான், கண்டிப்பாக நிறைய தங்கம் கொண்டு செல்வார் என்று நினைத்தான், அதற்கு முன்னர் ஜமிந்தார் வெளியே சென்ற நேரம் பார்த்து அவரது வீட்டில் யாருக்கும் தெரியாமல் நுழைந்து, அங்கே பாதுகாப்பாக வைத்திருந்த தங்க காசுகள், நகைகள் மற்றும் அனைத்து ஆபரணங்களையும் கொள்ளை அடித்து, பெரிய மூட்டை கட்டினான். பேராசை யாரை விட்டது, இது போதாது என்று நினைத்து, அழகேசன் கையில் இருக்கும் பொருட்களையும் பிடுங்க திட்டமிட்டான், எப்படி அழகேசன் காட்டு வழியாகத் தான் நடந்து ஊருக்கு செல்வார், எனவே அங்கே அவரை அங்கேயே மடக்கி, இருப்பதை திருடலாம் என்று நினைத்தான். குறுக்கு பாதையில் ஓடி காட்டில் ஒளிந்துக் கொண்டான். அழகேசன் காட்டு வழியாக செல்லும் போது ஒரு இடத்தில் ஒரு குள்ளமான ஒருவர் கீழே விழுந்து கிடந்தார், அவரை ஓடி போய் தூக்கி, குடிக்க தண்ணீர் கொடுத்தார். சிறிது நேரத்தில் அந்த குள்ள மனிதர் கண் விழித்து பார்த்தார், அவரது தோற்றம் வேடிக்கையாக இருந்தது. நீண்ட வெண்ணிறத்தாடி, தலையில் கூம்பு வடிவில் தொப்பி. “அய்யா, பெரியவரே! என்ன ஆச்சு, ஏன் மயங்கி கிடக்கிறீங்க” “தம்பி, என்னை காப்பாற்றியதற்கு நன்றி, நான் பசியாலும், பட்டினியாலும் வாடுகிறேன், எனக்கு உன்னால் முடிந்த உதவியை செய்வாயாக” “அ=ய்யா, நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த வருமானம் இதோ இருக்குது, இதில் 2 செப்பு காசுகள் நீங்க வைத்துக் கொள்ளுங்க” ‘தம்பி! உன் இரக்க குணம் என்னை மகிழ்ச்சி கொள்ளச் செய்யுது, கை மாறாக நான் உனக்கு உதவ இருக்கிறேன். எனக்கு சில மந்திர சக்திகள் இருக்குது, அதனை பயன்படுத்த மற்றவர்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறேன், உனக்கு என்ன வேண்டும் கேள், தருகிறேன்” அழகேசனுக்கு ஆச்சரியம், நம்பமுடியவில்லை. என்னடா இது, நாம இவருக்கு உதவினால் அவர் நமக்கு உதவுகிறாராம், அதுவும் மந்திரசக்தியால், புரியவில்லையே என்று திகைத்தார். “தம்பி, சந்தேகம் வேண்டாம், உனக்கு உதவி செய்ய இருக்கிறேன், என்ன வேண்டும் கேள்” “அய்யா, எனக்கு இசையில் மிக்க ஆர்வம் உண்டு, நான் ஊதினால் இனிமையான இசை வரக்கூடிய ஒரு புல்லாங்குழல் கொடுங்க, அதை கேட்டவர்களும் மெய் மறந்து போகும் அளவுக்கு இருக்க வேண்டும்” உடனே குள்ள மனிதர் கண்ணை மூடி ஏதோ மந்திரம் சொல்ல, கையில் அழகான புல்லாங்குழல் வந்தது, அதை அழகேசனுக்கு கொடுத்து, ஆசிர்வாதம் செய்து, வேறு வழியில் சென்று விட்டார். அழகேசனும் மகிழ்ச்சியாக நடக்கத் தொடங்கினார், திடிரென்று அவர் முன்னால் பெரிய கத்தியோடு அந்த திருடன் வந்து நின்றான், மரியாதையாக உங்க முதலாளி கொடுத்த காசுகளை எனக்கு கொடு என்றான். அழகேசனுக்கு பயம், ஏன் வீணாக திருடனிடம் சண்டை போட்டு, உயிரை இழக்க வேண்டும், என்று நினைத்து, பையில் இருந்த 3 செப்பு காசுகளை கொடுத்தான். என்ன 3 செப்பு காசா, அவர் 5 அல்லவா கொடுத்தார், தங்கம் கிடையாதா, கஞ்சப்பயல், அதான் அவன் வீட்டில் நான் இத்தனை தங்கம் இருந்ததா, ஆமாம் மீதி 2 காசு எங்கே, அதையும் கொடு, இல்லை என்றால் கொன்று விடுவேன்” “என்னிடம் 3 தான் இருக்குது, 2 ஒரு குள்ள மனிதருக்கு கொடுத்து விட்டேன்” “நான், நம்ப மாட்டேன், எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய்?” அழகேசன் என்ன செய்வது என்று யோசித்தார், திருடனிடமிருந்து தப்பிக்க ஒரே ஒரு ஆயுதம், அந்த புல்லாங்குழல் தான், அதை உபயோகிக்கலாம் என்று முடிவு செய்து “மீதி 2 காசு, இதுக்குள்ளே இருக்குது, இரு, ஊதி எடுக்கிறேன்” என்று கூறி புல்லாங்குழலை இசைக்கத் தொடங்கினார். அதிலிருந்து அருமையான இனிய இசை கிளம்பியது, அனைத்து பறவைகளும் மெய் மறந்து கேட்டன, திருடன் சும்மாவா இருக்க முடியும், திருடனும் ஆகா, ஓகோ என்று தை தைக்கா என்று குதிக்கத் தொடங்கினான், அழகேசன் விடாமல் இசைக்க, திருடன் அங்கே இங்கே ஆடத் தொடங்கினான், கீழே விழுந்தான், முள் செடியில் மாட்டிக் கொண்டான், தொடர்ந்து ஆட உடம்பு எல்லாம் அடிப்பட்டு, ரத்தக்களரியாகி, “அய்யா, அய்யா, தயவு செய்து புல்லாங்குழல் இசைப்பதை நிறுத்துங்க, இல்லேன்னா, நான் செத்து போயிடுவேன், என்னால் வலி தாங்க முடியலை, ஆடாமலும் இருக்க முடியலை, நான் திருடியதை எல்லாம் உங்களுக்கே கொடுத்து விடுகிறேன்” என்றான். அழகேசனும் அவனிடமிருந்ததை எல்லாம் வாங்கி விட்டு, அவனை ஒரு மரத்தில் கட்டி வைத்து விட்டு, மீண்டும் ஊருக்கு திரும்பினார். அங்கே ஜமிந்தார் “அய்யோ, எல்லாமே போயிட்டதே, நான் சம்பாதித்தது எல்லாமே களவு போயிட்டதே, நான் தவறாக சம்பாதித்தது முதல் எல்லாமே போயிட்டதே, இனிமேல் நான் என்ன செய்வேன்” என்று புலம்பிக் கொண்டிருந்தார். அழகேசன் அவரை பார்த்து “அய்யா அழ வேண்டாம், திருடன் திருடியதை எல்லாம் நான் வாங்கி வந்து விட்டேன், அவனன காட்டில் கட்டி வைத்திருக்கிறேன், உடனே ஊர்க்காவலர்கல் போய் பிடியுங்க, இதோ உங்க நகைகள், பணம், சரி பாருங்க” என்றார். ஜமிந்தாருக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை, இத்தனை நாள் கொடுமைப்படுத்தியும், நேர்மையாக நடந்து கொண்ட அழகேசன் மீது மரியாதை ஏற்ப்பட்டது, தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டு, அழகேசனுக்கு அந்த ஊரிலேயே பங்களா ஒன்றையும், நிறைய நிலங்களையும் கொடுத்து உதவினார். அழகேசனும் தன் தாயாருடனும், அற்புத புல்லாங்குழலுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'மந்திர புல்லாங்குழல்' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: ஒரு ஊரில் வியாபாரி ஒருவர் வாழ்ந்து வந்தார், அவர் ஒரு கன்று குட்டியை ஆசை ஆசையாக வளர்த்து வந்தார், திடீரென வியாபாரி வெளியூர்க்கு செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார், கன்று குட்டியை தன்னுடன் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது வியாபாரிக்கு, அதனால் கன்று குட்டியை தன் பக்கத்து வீட்டு காரரிடம் கொடுத்துவிட்டு விட்டு, நான் விரைவாக வந்து விடுவேன், நான் எனது கன்று குட்டியை எப்படி விட்டு செல்கிறேனோ நான் கேட்கும் போது அப்படியே திருப்பிக் கொடுக்க வேண்டும், எவ்வித மாற்றமும் சேதமுமின்றி என்று கூறி,கன்றை பக்கத்து வீட்டு காரரிடம் விட்டு சென்றார், நாட்கள் பல கழிந்தது, மாதங்கள் பல கழிந்தது, வருடங்கள் பல கழிந்தது . கன்று வளர்ந்து பசுவானது பால் கொடுக்க ஆரம்பித்தது, பக்கத்து வீட்டு காரரும் தினந்தோறும் பசுவிடம் பால் கறந்து விற்று வந்தார் சிறிது காலம் கழித்து பசு கன்று ஒன்றை ஈன்றது, திடீரென வியாபாரி பக்கத்து வீட்டு காரரிடம் வந்து தனது கன்று வளர்ந்து பசுவாகியிருக்கும் எனது பசுவை தருமாறு கேட்டார், அதற்கு பக்கத்து வீட்டு காரர் மறுப்பு சொல்லவே இருவருக்கும் வாக்குவாதம் முட்டியது மரியாதை இராமனை பற்றி கேள்விபட்டு இருவரும் அவரிடம் சென்று முறையிடுவோம் என்று முடிவு செய்து மரியாதை இராமனிடம் சென்று நடந்ததை கூறி முறையிட்டனர் மரியாதை இராமன் இருவரையும் விசாரித்தார் வியாபாரியோ இது என்னுடைய பசு நான் தான் சிறிது காலத்திற்கு முன்பு இது கன்றாக இருந்த போது இவரிடம் ஒப்படைத்து விட்டு நான் கேட்கும் போது அப்படியே கொடுக்க வேண்டும் என்று கூறி விட்டு சென்றேன் என்றார், பக்கத்து வீட்டு காரரோ இவர் பல காலத்திற்கு முன்பே என்னிடத்தில் கன்றை விட்டு சென்றார், இப்பொழுது வரை நான் தான் எனது கை செலவில் இதற்கு தீவனம் வாங்கி போட்டு வருகிறேன், அதனால் இந்த பசு எனக்கே சொந்தம் என்றார், மரியாதை இராமன் இருவரையும் தனித்தனியாக அழைத்து விசாரணை செய்தார், பிறகு பசுவையும் அது ஈன்ற கன்றையும் நாளை கொண்டு வருமாறு கூறி தீர்ப்பை நாளை கூறுகிறேன் என்றார் இரவு கழிந்தது, சூரியன் உதித்தது, ஊர் மக்களும் தீர்ப்பை கேட்க அவையில் கூடினர், பசு பக்கத்து வீட்டு காரருக்கு சொந்தம் என்றார் மரியாதை இராமன், அதற்கு வியாபாரியோ இது எப்படி நியாயம் என்று உரத்த குரலில் கேட்டார், அதற்கு மரியாதை இராமன் நீங்கள் தானே பக்கத்து வீட்டு காரரிடம் நான் எப்படி என் கன்றை விட்டு செல்கிறேனோ, நான் திருப்பி கேட்கும் போது எவ்வித பாதிப்பும், மாற்றமுமின்றி அப்படியே கொடுக்க வேண்டும் என்றீரே, அந்த பசுவின் கன்று நீங்கள் எப்படி விட்டு சென்றீரோ அப்படியே தானே உள்ளது என்றார் மரியாதையும் ராமன் பசு பக்கத்து வீட்டு காரருக்கு சொந்தம், அது ஈன்ற கன்று வியாபாரிக்கு சொந்தம், மேலும் கன்று வளரும் வரை பசுவையும் கன்றையும் பிரிக்க வேண்டாம் என்று கூறி தீர்ப்பை முடித்து வைத்தார்..
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'கன்று குட்டி' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: கிருஷ்ணதேவராயர், தெனாலிராமன், அதிசயக்குதிரை, புல், தீனி, தாடி
தலைப்பு: அதிசயக்குதிரை
| அதிசயக்குதிரை கிருஷ்ண தேவராயரின் படைகளுள் குதிரைப் படையும் ஒன்று. குதிரைப்படையும் வலிமையுள்ளதாக இருந்தது சண்டை இல்லாத காலங்களில் குதிரைகளைப் பராமரிக்க மந்திரிகளில் ஒருவர் ஒரு யோசனை சொன்னர்.அதாவது ஒரு வீட்டிற்கு ஒரு குதைரையையும் அதற்குத் தீனி போடுவதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையும் கொடுக்கப்பட்டு வந்தது. அத்தொகையைப் பெற்றுக்கொண்டு குதிரையை நன்கு ஊட்டளித்து வளர்த்தனர். அதே போல் தெனாலிராமனுக்கும் ஒரு குதிரை கொடுக்கப்பட்டது. ஆனால் தெனாலிராமனோ ஒரு சிறிய கொட்டகையில் குதிரையை அடைத்து வைத்து புல் போடுவதற்கு மட்டுமே ஒரு சிறிய தூவாரம் வைத்திருந்தான். அந்த துவாரத்தின் வழியாக புல்லை. நீட்டியவுடன் குதிரை வெடுக்கென வாயால் கௌவிக் கொள்ளும். மிகவும் சிறிதளவு புல் மட்டுமே தினமும் போட்டு வந்தான். அதனால் அக்குதிரை எலும்பும் தோலுமாக நோஞ்சானாக இருந்தது.குதிரைக்குத் தீனி வாங்கிப் போடும் பணத்தில் தெனாலிராமன் நன்கு உண்டு கொழுத்தான். ஒரு நாள் குதிரைகள் எப்படி இருக்கின்றன என்று காண அனைவருக்கும் செய்தி அனுப்பி குதிரைகளை அரண்மனைக்கு வரவழைத்தார் மன்னர். அதன்படி குதிரைகள் அனைத்தும் அரண்மனைக்குக் கொண்டு வரப்பட்டன மன்னர் குதிரைகளைப் பார்வையிட்டார். குதிரைகள் அனைத்தும் மிக திருப்திகரமாக இருந்ததால் மன்னர் மகிழ்ச்சியடைந்தார்.அங்கிருந்த தெனாலிராமனை அழைத்து "உன் குதிரையை ஏன் கொண்டு வரவில்லை" என மன்னர் கேட்டார். அதற்கு தெனாலிரானோ "என் குதிரை மிகவும் முரட்டுத்தனமாக இருக்கிறது. அதை என்னால் அடக்க முடியவில்லை. அதனால் தான் இங்கே கொண்டு வர வில்லை." என்றான். "குதிரைப்படைத் தலைவரை என்னுடன் அனுப்புங்கள். அவரிடம் கொடுத்தனுப்புகிறேன்" என்றான் இதை உண்மையென்று நம்பிய மன்னர் குதிரைப்படைத் தலைவனை தெனாலிராமனுடன் அனுப்பினார். குதிரைப்படைத்தலைவருக்கு நீண்ட தாடியுண்டு குதிரைப் படைத்தலைவரும் அந்த துவாரத்தின் வழியாக குதிரையை எட்டிப் பார்த்தார். உடனே குதிரை அது புல்தான் என்று நினைத்து அவரது தாடியைக் கவ்விப் பிடித்துக் கொண்டது. வலி பொறுக்கமாட்டாத குதிரைப் படைத்தலைவர் எவ்வளவோ முயன்றும் தாடியை குதிரையிடமிருந்து விடுவிக்க முடியவில்லை. இச்செய்தி மன்னருக்கு எட்டியது. மன்னரும் உண்மையிலேயே இது முரட்டுக் குதிரையாகத்தான் இருக்கும் என்று எண்ணி தெனாலிராமன் வீட்டுக்கு விரைந்தார்.அங்கு குதிரையின் வாயில் குதிரைப்படைத் தலைவரின் தாடி சிக்கி இருப்பதை அறிந்து அந்தக் கொட்டகையைப் பரிக்கச் செய்தார். பின் குதிரையைப் பார்த்தால் குதிரை எலும்பும், தோலுமாக நிற்பதற்குக் கூட சக்தியற்று இருந்ததைக் கண்டு மன்னர் கோபங்கொண்டு அதன் காரணத்தைத் தெனாலிராமனிடம் கேட்டார். அதற்குத் தெனாலிராமன் "இவ்வாறு சக்தியற்று இருக்கும் போதே குதிரைப் படைத்தலைவரின் தாடியை கவ்விக்கொண்டு விடமாட்டேன் என்கிறது. நன்கு உணவு ஊட்டி வளர்த்திருந்தால் குதிரைப் படைத் தலைவரின் கதி அதோகதிதான் ஆகி இருக்கும்" என்றான்.இதைக் கேட்ட மன்னன் கோபத்திலும் சிரித்து விட்டார். பின்னர் தெனாலிராமனை மன்னித்து விட்டார். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: நாள் தோறும் மீன்களைக் கொத்தித்தின்று உடல் வளர்த்து வந்த ஒரு கொக்கு இருந்தது. அது வழக்கம் போல ஒரு குளத்திற்கு மீன் கொத்தித் தின்னச் சென்றது. அப்போது குளத்தின் கரையில் ஒரு பால்நண்டு மிகக் கவலையோடு நின்று கொண் டிருந்தது. அந்த நண்டைப் பார்த்து, நீ ஏன் கவலையோடிருக்கிறாய்?” என்று கொக்குக் கேட்டது. என்ன சொல்வேன்! கொலைகாரர்களாகிய வலைகாரர்கள் இந்தப் பக்கத்திலுள்ள ஏரி, குளம் எல்லாம் வலை வீசி ஒரு சின்னஞ்சிறு பொடி மீன் கூட விடாமல் பிடித்துக் கொண்டு போய் விட்டார் கள். நாளைக்கு இந்தக் குளத்திற்கு வரவேண்டும் என்று பேசிக் கொண்டு போயிருக்கிறார்கள். நாளைக்கு வந்து பிடித்துக் கொண்டு போய் சந்தைக் கடைகளிலே வைத்து விற்று விடுவார்கள். இவர்கள் கைக்குத் தப்புவது எப்படி என்றுதான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்’ என்று பால்நண்டு பதில் கூறியது. நண்டே, நண்டே, பால் நண்டே! அந்தப் பழிகார வலைகாரர்கள் வருமுன்னே தப்புவிக்க நான் ஒரு வழி சிந்தித்திருக்கிறேன். அந்தப்படி செய்தால் எல்லா மீன்களுமே உயிர் தப்பலாம் என்று கொக்கு கூறியது. எப்படி?’ என்று நண்டு ஆவலோடு கேட்டது. ‘எப்படியாவது, அந்த மீன்களையெல்லாம் இங்கே கூட்டிக் கொண்டு வா. நான் ஒவ்வொரு மீனாகத் தூக்கிக் கொண்டு போய் இன்னொரு குளத்தில் விட்டுவிடுகிறேன்’ என்றது கொக்கு. கொக்கு சொன்னதை நம்பிய அந்த நண்டு, மீன்களிடம் போய் இந்த யோசனையைக் கூறியது. எப்படியும் வலைகாரர்களிடமிருந்து தப்பினால் போதும் என்றிருந்த மீன்கள் இந்தக் கருத்தை உடனே ஒப்புக் கொண்டன. மீன்கள் எல்லாம் கரையோரத்திற்கு வந்தன. கொக்கு ஒவ்வொரு நடைக்கும் ஒவ்வொரு மீனாகக் கொத்திக் கொண்டு பறந்து சென்றது. சிறிது துரம் சென்றதும் அந்த மீன்களைக் கொத்தித் தின்றது. வயிறு நிரம்பிய பிறகு, கொண்டு போன மீன்களை ஒரு பாறையில் காயப் போட்டு வைத்தது. மீன்கள் எல்லாவற்றையும் கொத்திக் கொண்டு சென்ற பின் நண்டுதான் மிஞ்சியது. நண்டின் தசையையும் தின்னலாம் என்ற ஆசையோடு, அதையும் கொத்திக் கொண்டு பறந்து சென்றது. பறந்து செல்லும் வழியில் நண்டு கீழே பார்த்தது. எங்கு பார்த்தாலும் மீன் எலும்புகள் தரையில் கிடப்பதைக் கண்டதும், அது கொக்கு செய்த செயல் என்னவென்று புரிந்து கொண்டது. மீன்களையெல்லாம் தின்றது போதாமல் நம்மையும் இந்தக் கொக்கு கொல்லத் துணிந்து விட்டது. சூழ்ச்சியை, சூழ்ச்சி யால் தான் வெல்ல வேண்டும். நம்மை இது கொல்லு முன் இதை நாம்; கொன்றுவிட வேண்டும்’ என்று எண்ணிய நண்டு, மெல்லத் தன் முன்னங் கால்கள் இரண்டையும் நீட்டி, கொக்கின் கழுத்தை வளைத்துப் பிடித்து நெருக்கியது. கழுத்து நசுங்கியதும், கொக்குக் கீழே விழுந்து இறந்தது. நண்டு வேறொரு குளத்திற்குப் போய்த் தன் இனத்தோடு சேர்ந்து கொண்டது. பெரும் பகையையும் சூழ்ச்சியால் வெல்லலாம் என்பது இக்கதையிலிருந்து விளங்குகிறது.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'கொக்கைக் கொன்ற நண்டு' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: “கடவுள் நேரடியாக பூமிக்கு வருவதாகச் சொல்லப்படுகிறதே. தன்னுடைய தூதுவர்களை அனுப்பமல் ஏன் அவரே நேரடியாக வரவேண்டும்?” இது பேரரசர் அக்பர் பீர்பாலை பார்த்து கேட்ட சந்தேகம் பீர்பால் கூறினார் “இதற்கு உடனே விடை கூற முடியாது, சற்று அவகாசம் வேண்டும்” சில நாட்கள் கழித்து அக்பர் குடும்பத்தாரோடு கங்கையில் படகில் செல்ல வேண்டியிருந்தது. ஆழமான பகுதியில் செல்லும் போது அக்பரின் பேரனை தூக்கி பீர்பால் கங்கை நதியில் போட்டு விட்டார். அக்பருக்கு ஆத்திரம் வந்தாலும், உடனே ஆற்றில் குதித்து தனது பேரனைக் காப்பாற்றினார். பீர்பாலை பார்த்து “முட்டாளே! ஏன் இக்காரியத்தைச் செய்தாய்?” என கோபமாகக் கேட்டார். அதற்கு பீர்பால், பேரரசே! உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன். குழந்தை தண்ணீரில் விழுந்த பொழுது, படைத்தளபதியை, என்னை மற்றும் வீரர்களை நோக்கி ‘குழந்தையைக் காப்பாற்று’ என்று ஆணையிடாமல் நீங்கள் குதித்தது ஏன்? என்று கேட்டார். அதற்கு அக்பர் “குழந்தையைக் காப்பாற்றுவது என் கடமையா? அல்லது ஆணையிட்டுக் கொண்டிருப்பது பெருமையா?” எனப் பதிலுக்கு கேட்டார். பீர்பால் அமைதியாக கூறினார், “சக்ரவர்த்தி அவர்களே! நீங்கள் என்னிடத்தில் கடவுள் தானே பக்தர்களைக் காக்க உலகிற்கு வருவது ஏன்? வேலையாட்கள் இல்லையா? என்று கேட்டீர்கள். எத்தனை பேர் இருந்தாலும், நீங்களே குழந்தையைக் காக்க நினைத்தது போல, ஆபத்தில் இறைவன் தானே வந்து மக்களைக் காப்பான்.” என்றார்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'கடவுளும் தூதுவர்களும்' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: கண்ணப்பன் என்பவனிடம் விலை உயர்ந்த இரத்தினக்கல் ஒன்று இருத்தது. ஒருமுறை அவன் தேச சஞ்சாரம் செல்ல வேண்டியிருந்தது. இரத்தினக் கல்லைத் தனக்குத் தெரிந்த நண்பனான சாமிக்கண்ணு என்பவனிடம் கொடுத்து, "நண்பா நான் தேசாந்திரம் போகிறேன். வருவதற்குப் பல மாதங்கள் ஆகும். அதுவரை இந்த இரத்தினக் கல்லைப் பத்திரமாக வைத்திருத்து நான் வந்ததும் கொடு" என்றான் கண்ணப்பன். சாமிக்கண்ணும் அத்த இரத்தினக் கல்லை வாங்கிக் கொண்டான். ' பல மாதங்கள் சென்றன. கண்ணப்பன் தேச சஞ்சாரம் செய்து முடித்து விட்டு ஊகுக்குத் திரும்பி வத்தான். வந்தபின் ஒரு நாள் சாமிக்கண்ணுவின் வீட்டிற்குச் சென்று தன் இரத்தினக் கல்லைத் திகும்பக் கொடுக்குமாறு கேட்டான். "உன்னுனடய இரத்தினக் கல்லை தான் அப்பொழுதே திருப்பிக் கொடுத்து விட்டேனே" என்றான் சாமிக்கண்ணு. கண்ணப்பன் மரியாதை இராமனிடம் சென்று முறையிட்டான்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'ஆளுக்குத் தகுந்த சாட்சி' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: முன்னொரு காலத்தில் ஓர் ஊரில் செருப்புத் தைப்பவன் ஒருவன் இருந்தான். இங்கு யார் என்னை மதிக்கிறார்கள்? நமக்கு நல்வாய்ப்பு தலைநகரத்தில் காத்திருந்தாலும் காத்திருக்கலாம். இளவரசியைக் கூட நான் மணந்தாலும் மணக்கலாம், என்று நினைத்தான் அவன்.அறிவு நிரம்பிய அவன் கடைக்குச் சென்று கட்டி வெண்ணெய் வாங்கினான். அதைத் தன் மேசையின் மேல் வைத்தான். நான்கு நாட்கள் சென்றன. அந்த வெண்ணெயைப் பார்த்தான் அவன். அது நிறைய ஈக்கள் இருந்தன. தான் செய்து வைத்திருந்த செருப்பு ஒன்றை எடுத்தான். அந்த வெண்ணெயில் ஓங்கி அடித்தான். நிறைய ஈக்கள் செத்தன. ஏராளமான ஈக்கள் துடிதுடித்தன. அவற்ளை எண்ணினான் அவன். இறந்த ஈக்களின் எண்ணிக்கை இருநூறாக இருந்தது. அடிபட்டவற்றின் எண்ணிக்கை முந்நூறாக இருந்தது.அவனுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. கடைத் தெருவிற்குச் சென்ற அவன் வீரர்கள் அணியும் சீருடை வாங்கினான். அதை அணிந்து கொண்டு கம்பீரமாகத் தலை நகரத்துக்குச் சென்றான். அரசவைக்குள் நுழைந்த அவன், அரசர் பெருமானே! என்னை நானே அறிமுகம் செய்து கொள்கிறேன். நான் சிறந்த வீரன். சில நாட்களுக்கு முன் நிகழ்ந்த போரில் நான் ஒருவனே இருநூறு பேரைக் கொன்றேன். முந்நூறு பேரைக் காயப் படுத்தினேன், என்றான். அவனை மேலும் கீழும் பார்த்தான் அரசன். உன்னைப் பார்த்தால் வீரனைப் போலத் தெரியவில்லை. தோற்றத்தை வைத்து முடிவுக்கு வரக் கூடாது. உன்னால் எனக்கு ஒரு வேலை ஆக வேண்டும், என்றான். கட்டளை இடுங்கள் அரசே! இந்த வாளும் என் உயிரும் இனி உங்களுடையது, என்று வீரமாகப் பேசினான் அவன். வீரனே! தலைநகரை அடுத்து உள்ள காட்டில் ஒரு பூதம் உள்ளது அது அவ்வப்பொழுது நாட்டிற்குள் நுழைந்து மனிதர்களைத் தூக்கிச் சென்று சாப்பிடுகிறது. எத்தனையோவீரர்கள் அதைக் கொல்லப் புறப்பட்டார்கள். யாருமே உயிருடன் திரும்பவில்லை. இந்த நாட்டு மக்கள் எல்லோரும் அஞ்சி அஞ்சி வாழ்கிறார்கள், என்றான் அரசன். அரசே என் வீரத்திற்கு இதைப் போன்ற பெரிய வேலையைத்தான் எதிர்பார்த்தேன். நான் அந்தப் பூதத்தின் தலையைக் கொண்டு வருகிறேன். எனக்கு இளவரசியைத் திருமணம் செய்து வைப்பீர்களா? என்று கேட்டான் அவன். யாராலும் செய்ய இயலாத செயல் இது. நீ சொன்னபடி செய்து முடித்தால் இளவரசியை உனக்குத் திருமணம் செய்து வைக்கிறேன், என்றான் அரசன்.நான் அந்தப் பூதத்தைக் கொன்றுவிட்டு வருகிறேன், என்று சொல்லிவிட்டுக் கையில் பிடித்த வாளுடன் காட்டிற்குள் நுழைந்தான் அவன். எவ்வளவு பெரிய கூர்மையான வாளும் பூதத்தை ஒன்றும் செய்ய முடியாது. எவ்வளவு வேகமாக வலிமையாக வெட்டினாலும் அதற்குச் சிறு காயம்தான் ஏற்படும், என்பதும் அவனுக்குப் புரிந்தது. தன் கையில் இருந்த வெண்ணெயை மாவில் உருட்டிப் பந்து போலச் செய்து கொண்டான் அவன். பார்ப்பதற்கு அது உருண்டையான கூழாங்கல் போல இருந்தது. அதைத் தன் சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டான். குருவி ஒன்றைப் பிடித்த அவன் அதையும் தன் பைக்குள் வைத்துக் கொண்டான். அருகே இருந்த பெரிய மரம் ஒன்றில் ஏறி அமர்ந்து கொண்டான். சிறிது நேரத்தில் பெரிய பூதம் ஒன்று அங்கே வந்தது. மூக்கை உறிஞ்சிய அது, இன்று எனக்கு நல்ல வேட்டை, மனித வாடை வீசுகிறதே! எங்கே இருக்கிறாய்? என்னிடம் இருந்து தப்ப முடியாது, என்று மகிழ்ச்சியுடன் கத்தியது. தன் நடுக்கத்தை மறைத்துக் கொண்ட அவன், ஏ! பூதமே! என்னையா தேடுகிறாய்? நான் இந்த மரத்தை விட்டுக் கீழே இறங்கினால் என்ன நடக்கும் தெரியுமா? இந்த உலகத்திலேயே நான் தான் வலிமையானவன். சென்ற வாரம் கூட ஒரே அடியில் இருநூறு பேரை கொன்று முந்நூறு பேரைக் காயப் படுத்தினேன். உன்னைவிட நான் வலிமையானவன். என் ஒரு அடியைக் கூட நீ தாங்க மாட்டாய், என்று பெருமை பேசினான் அவன். நீ வலிமையானவன் என்றால் நிரூபித்துக் காட்டு, என்றது பூதம்.அப்படியா? என்ற அவன் தன் சட்டைப் பையிலிருந்த கூழாங்கல் உருண்டையை எடுத்தான். அந்த உருண்டையை வானத்தில் தூக்கிக் போட்டுப் போட்டுப் பிடித்தான். இது என்ன சொல் பார்ப்போம், என்று கேட்டான், அவன். உருண்டையான கூழாங்கல், என்றது பூதம்.என் வலிமையைப் பார், என்ற அவன் அந்த வெண்ணெய் உருண்டையைக் கைக்குள் வைத்து அழுத்தினான். அது பொலபொலவென்று தூள் தூளாகிக் கீழே விழுந்தது. உண்மையை உணராத அந்த முட்டாள் பூதம் அவனை மிகுந்த வலிமையானவன் என்று நினைத்தது. கீழே வா. உனக்கு இன்னும் ஒரு சோதனை, என்றது அது. எப்படியும் பூதத்தை ஏமாற்றி விடலாம் என்ற எண்ணத்தில் கீழே குதித்தான் அவன். தரையில் கிடந்த சிறு கல்லை எடுத்தது அது. என் வலிமையைப் பார், என்று சொல்லி அந்தக் கல்லை உயரே வானத்தை நோக்கி வீசியது. அரை மணி நேரம் கழித்து அந்தக் கல் கீழே விழுந்தது. எங்கே இதைப் போலச் செய்து உன் வலிமையைக் காட்டு, என்றது பூதம்.நான் கல்லை மேலே வீசினால் கீழே விழவே விழாது. வான் உலகத்தைக் கிழித்துக் கொண்டு சென்று விடும். என்று பெருமையுடன் சொன்ன அவன் தன் பைக்குள் இருந்த சிட்டுக் குருவியை எடுத்தான். அதை மேலே தூக்கி எறிந்தான். அப்படியே பறந்து சென்றது அது.பூதம் நீண்ட நேரம் காத்திருந்தது. மேலே எறிந்த கல் கீழே விழவே இல்லையே. இவனிடம் கவனமாக இருக்க வேண்டும். இல்லையேல் என்னைக் கொன்று விடுவான், என்று நினைத்தது அது.நீ என் விருந்தினன். என் மாளிகைக்கு வா. விருந்து சாப்பிட்டுவிட்டுச் செல்லலாம், என்று அன்புடன் அழைத்தது அது. இருவரும் பூதத்தின் மாளிகையை அடைந்தனர். அந்த மாளிகைகளைச் சுற்றிலும் தோட்டம் இருந்தது. சமையல் செய்ய விறகு இல்லை. காட்டிற்குச் சென்று சிறிது விறகு கொண்டு வா, என்று அவனைப் பார்த்துச் சொன்னது பூதம். உடனே அவன், எதற்காக விறகு? நான் அந்தப் பெரிய மரத்தை அப்படியே இழுத்து வருகிறேன், என்றான். அந்தப் பெரிய மரத்தைப் பார்த்தது பூதம். அது கீழே விழுந்தால் தன் தோட்டம் பாழாகி விடும். மாளிகைச் சுவரும் இடிந்து விடும் என்று நினைத்தது அது. பயந்து போன அது நானே, சென்று விறகு கொண்டு வருகிறேன், என்று புறப்பட்டது. சிறிது நேரத்தில் விறகுடன் அங்கே வந்தது அது. இன்னும் எப்படி எல்லாம் அதை ஏமாற்றலாம் என்று சிந்தித்துக் கொண்டிருந்தான் அவன். பூதம் அவனைப் பார்த்து. சமைப்பதற்கு நீர் வேண்டுமே. கிணற்றுக்குச் சென்று இந்தப் பாத்திரத்தில் நீர் கொண்டு வா, என்றது- பாத்திரத்தில் நீர் கொண்டு வருவதா? எனக்கு எவ்வளவு கேவலம், வலிமை உடைய நான் அந்தக் கிணற்றையே இங்கே இழுத்து வந்து விடுகிறேன். அதைக் கட்டி இழுக்க உறுதியான கயிறு ஒன்றைக் கொடு, என்று கேட்டான் அவன்.இதைக் கேட்ட பூதம் மேலும் பயந்தது. நீ நீர் கொண்டு வர வேண்டாம். நானே கொண்டு வருகிறேன், என்றது அது. இருவரும் சாப்பிட்டு முடித்தனர். அங்கிருந்த கட்டிலில் அவன் படுத்துக் கொண்டான். பக்கத்தில் இருந்த இன்னொரு கட்டிலில் பூதம் படுத்துக் கொண்டது.தன் உயிருக்கு ஆபத்து வரும் என்று நினைத்த அவன் தூங்காமலே இருந்தான். பூதம் தூங்கி விட்டதை அறிந்த அவன் கட்டிலிலிருந்து மெல்ல இறங்கினான். ஒரு பூசனிக் காயைத் தன் கட்டிலில் வைத்தான். அதன் மீது போர்வையைப் போட்டு மூடினான். பார்ப்பதற்குக் கட்டிலில் யாரோ படுத்திருப்பது போலத் தோன்றியது. பிறகு கட்டிலுக்கு அடியில் படுத்துக் கொண்டான் அவன்.நள்ளிரவு நேரம், பூதம் கட்டிலை விட்டு எழுந்தது. பக்கத்தில் இருந்த பெரிய இரும்புத் தடியைத் தூக்கியது. கட்டிலில் படுத்திருந்த அவன் மண்டையில் தன் வலிமை கொண்ட மட்டும் அந்தத் தடியால் அடித்தது. போர்வைக்குள் இருந்த பூசனிக் காய் உடைந்து சிதறியது.அவன் இறந்து விட்டான் என்று மகிழ்ந்தது அது. தன் கட்டிலில் படுத்த அது குறட்டை விடத் தொடங்கியது. கட்டிலுக்கு அடியில் படுத்திருந்த அவன் எழுந்தான். பூசனிக் காய்த் துண்டுகளை எடுத்து வெளியே வீசினான். மீண்டும் அந்தக் கட்டிலில் படுத்துத் தூங்கத் தொடங்கினான்.பொழுது விடிந்தது. விழித்த பூதம் கட்டிலில் அவன் உயிருடன் படுத்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தது. கட்டிலில் இருந்து எழுந்து அமர்ந்தான் அவன்.இரவு நன்றாகத் தூங்கினாயா? உன் தூக்கத்திற்கு ஏதேனும் தொல்லை ஏற்பட்டதா? என்று கேட்டது அது. நள்ளிரவிலே ஏதோ கொசு ஒன்று என் காதில் கடித்தது போல இருந்தது. புரண்டு படுத்தேன். இங்கே கொசு அதிகமா? என்று கேட்டான் அவன்.என் வலிமை எல்லாம் பயன்படுத்தி இருமூபுத் தடியால் இவன் மண்டையில் ஓங்கி அடித்தேன். யாராக இருந்தாலும் இறந்திருக்க வேண்டும். இவனோ கொசு கடித்தது போல இருந்தது என்கிறான். இவனிடம் நன்றாக மாட்டிக் கொண்டோமே. எப்படித் தப்பிப்பது? என்று பயந்து நடுங்கியது அது. நமக்குள் இன்னொரு போட்டி வைத்தால் என்ன? என்று கேட்டான் அவன். என்ன போட்டி? என்று கேட்டது அது.ஒரு பெரிய பாத்திரத்தில் கஞ்சி வைப்போம். அதில் பாதியை நான் சிறிது கூட மென்று தின்னாமல் அப்படியே குடித்து விடுகிறேன், என்றான் அவன்.நான் நம்ப மாட்டேன். நீ மென்றுதான் தின்றிருப்பாய். நீ மெல்லாமல் விழுங்கி இருந்தால் எப்படிக் கண்டுபிடிப்பது? அதை நான் என் வயிற்றுக்குள் இறங்கியா பார்க்க முடியும்? என்று கேட்டது அது. உன்னால் பார்க்க முடியும். நான் கஞ்சியைக் குடித்ததும் வயிற்றில் ஒரு பகுதியைக் கிழித்துக் காட்டுகிறேன். பிறகுஉனக்கே நான் மென்று தின்றேனா இல்லையா என்பது விளங்கும், என்றான் அவன். சரி என்ற பூதம் கஞ்சி சமைக்கத் தொடங்கியது. வேறு அறைக்குச் சென்ற அவன் சாக்குப் பையை எடுத்துத் தன் வயிற்றில் கட்டிக் கொண்டான். அதன் வாய்ப்பகுதி தன் தொண்டைக்கு நேராக இருக்குமாறு வைத்தான். உள்ளே பை இருப்பது தெரியாத வண்ணம் மேலே சட்டையை போட்டுக் கொண்டான்.பூதம் கஞ்சி வைத்திருந்தது. அதைப் பாத்திரத்தோடு எடுத்தான் அவன். தன் தொண்டைக்கு அருகே இருந்த பைக்குள் அதைச் சிறிது சிறிதாக ஊற்றினான். குடிப்பது போல நடித்தான். சூழ்ச்சியை அறியாத பூதம் அவன் குடிப்பதாகவே நினைத்தது.பூதத்தைப் பார்த்து அவன், நான் கஞ்சியை எப்படிக் குடித்து இருகூகிறேன் என்று பார். சிறிது கூட மெல்ல வில்லை. அப்படியே அரிசிச் சோறு இருக்கும். என்று சொல்லி கொண்டே கத்தியால் தன் வயிற்றைக் கிழித்தான். உண்மையில் அவன் கிழித்தது வயிற்றுக்குள் கட்டப்பட்டிருந்த சாக்கையே. அவன் வயிற்றிலிருந்து கொண்டிய கஞ்சியைப் பூதம் பார்த்தது.உன்னைப் போல நானும் செய்கிறேன், என்ற அது. இன்னொரு பாத்திரத்தில் இருந்த கஞ்சியை அப்படியே குடித்தது. நான் எதையும் மெல்லவில்லை. அப்படியே குடித்து இருக்கிறேன் பார், என்று சொல்லிக் கொண்டே தன் வயிற்றைக் கத்தியால் கிழித்தது அது. குருதீ கொட்ட குடல் வெளியே வந்து துடிதுடித்து அங்கேயே இறந்தது அது.வெற்றி வீரனாகத் திரும்பிய அவனுக்கும் இளவரசிக்கும் ஒரு நல்ல நாளில் திருமணம் நடந்தது.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'ஒரே அடியில் இருநூறு பேர்' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: காட்டில் பலசாலியான ஒரு சிங்கம் இருந்தது. ஆனால், அது எப்போது பார்த்தாலும் கவலைப்பட்டுக்கொண்டே இருந்தது.“எனக்கு இவ்வளவு பலம் இருந்தும், இரும்பு போன்ற நகங்களும் பற்களும் இருந்தும் என்ன உபயோகம்? கேவலம், இந்தக் காட்டுச் சேவல் கூவுகிற சத்தம் என்னை நடுங்கவைக்கிறது. இப்படிப் பயந்துகொண்டே வாழ்வது ஒரு வாழ்க்கையா? என்று தன்னைத்தானே நொந்து கொண்டபடி இருந்தது.அதே சமயம், அங்கே ஒரு யானை வந்தது. அது மிகவும் கவலையுடன் தன் காதுகளை முன்னும் பின்னும் அடித்துக்கொண்டே நகர்ந்தது. அதைப்பார்த்த சிங்கம், “ஏய்……..ஜம்போ! உனக்கு என்ன கவலை? யாருமே உன்னை எதிர்த்து ஃபைட் பண்ணமாட்டார்களே! உன் உடலைப் பார்த்தாலே, எல்லா அனிமல்ஸீம் பயந்து ஓடுமே…..எதற்காக நீ கவலையோடு இருக்கிறாய்?” என்று ஆச்சரியத்துடன் கேட்டது.அதற்கு யானை, “இதோ……என் காது பக்கத்தில் பறக்கும் குளவியைப் பார்த்தாயா? இது என் காதுக்குள் நுழைந்து கொட்டிவிட்டால், அவ்வளவுதான்……….என் உயிரே போய்விடும்! அதற்காகத்தான் இது காதுக்குள் போய்விடாதபடி, காதுகளை ஆட்டிக்கொண்டு கவலையோடு நடக்கிறேன்……….”என்றது. அது கேட்டு சிங்கம் யோசித்தது. “இவ்வளவு பெரிய உடம்பை வைத்து இருக்கும் யானை கவலைப்படாது என்று நினைத்தால், அதுகூடக் கவலைப்படுகிறதே! அப்படியானால், பூமியில் இருக்கும் எல்லா உயிர்களுக்கும் ஏதாவது ஒரு கவலை இருக்கத்தான் செய்யும் போலிருக்கிறது!கவலைப்படுவதால் வாழ்க்கை ஒன்றும் நமக்கேற்ற மாதிரி மாறப்போவதில்லை. அது மட்டுமல்லாமல் கவலைப்பட்டு, கவலைப்பட்டு நம் கண்ணெதிரே இருக்கும் ஜாலியான விஷயங்களைப் பார்த்து சந்தோஷமாகக்கூட வாழமுடியாமல் போய்விட்டதே!” என்று அது புரிந்து கொண்டது.அன்றிலிருந்து அது கவலைப்படுவதை விட்டுவிட்டு, ஜாலியாக வாழத் தொடங்கியது!
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'கவலைப்படாதே சகோதரா!' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: நாதஸ்வரம் மற்றம் மேளதாளத்துடன் பாண்டித்தேவரும் அந்த கிராமத்து மக்களும் மந்தை வெளியில் காலை பஸ்ஸ•க்காக காத்துக் கிடந்தனர். மதுரையிலிருந்து வரும் பஸ் அங்குதான் வந்து நிற்கும். அதில்தான் பத்தாவது பாஸ் ஆன பாண்டித்தேவரின் மகன் ரகு வருவான். அந்த கிராமத்தில் ரகு ஒருவன் தான் பள்ளிக்கூடத்தில் படிக்கிறான். அவன் படித்து அந்த கிராமத்தை முன்னுக்குக் கொண்டு வருவான் என்று எல்லோருமே நம்பினர். பஸ் வந்து நின்றது. பஸ்ஸிலிருந்து ரகு இறங்கினான். அடுத்த வினாடி நாதஸ்வரமும் மேளதாளமும் முழங்கியது. பாண்டித் தேவர் தன் கையில் இருந்த மாலையை அவன் கழுத்தில் போட்டார். ரகுவை எல்லோரும் தெருக்களில் ஊர்வலமாக அழைத்து வந்தனர். ரகுவின் அம்மா பேச்சியம்மா வீட்டு வாசலில் ஆரத்தி எடுத்தாள். தான் பரிட்சையில் தேறவில்லை என்பதை எப்படிச் சொல்வது? "பாஸ் பண்ணிட்டியாப்பா" என்றாள் அம்மா "ஆமாம்மா பாஸாயிட்டேன்" ஒரே ஒரு பொய்தானே என்று சமாதானப்படுத்திக் கொண்டான். ஆனால் அடுத்தடுத்து ஊரில் கேட்கும் எல்லோருக்கும் அதே பொய்யைத் திருப்பித் திருப்பிச் சொல்ல வேண்டியிருந்தது. "என்னா தம்பி மேல படிக்கப் போறீயா?" "ஆமாம்" "டாக்டருக்குப் படிக்கப் போறியாமே" "ஆமாம்" "இப்போ எப்படி மதுரையிலேயே படிக்கலாமா. இல்லை மெட்ராசுக்குப் போவணுமா?" இப்படி ஆளுக்கு ஆள் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டனர் இவனும் ஓயாமல் பொய் சொன்னான். "ஒரு பொய்யை மறைக்க ஓராயிரம் பொய் சொல்ல வேண்டி வரும்" என்று தன் ஆசிரியர் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. அடுத்த நாள் ரகுவின் அப்பாவும் அம்மாவும் இவனை பக்கத்து ஊர் கோவிலுக்குக் கூட்டிச் சென்று மொட்டை அடித்துக் கொண்டு வந்தனர். ரகு பத்தாவது பாஸ் செய்தால் மொட்டை போடுவதாக பிரார்த்தனையாம் ரகு உண்மையைச் சொல்ல முடியாமல் திண்டாடினான். இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ என்று பயந்தான். அடுத்த நாள் இவன் பயந்தது போலவே இன்னொரு விஷயம் நடந்தது. பாண்டித் தேவர் கறவை மாட்டை கன்றுடன் சந்தையில் விற்றுவிட்டு வந்தார். இவனை காலேஜில் சேர்ப்பதற்கான ஏற்பாடாம். பாண்டித்தேவர் வசதியானவர் என்று சொல் முடியாது. இவனை காலேஜில் படிக்க வைக்கக் கூட நிலத்தை விற்றுத்தான் செலவு செய்ய திட்டமிட்டிருந்தார். ரகுவின் அம்மா ஒரு பக்கம் தன் மகன் காலேஜில் படிக்கப் போவது பற்றி ஊர்ப் பெண்களிடம் எல்லாம் முறை வைத்துப் பேசினாள். இனிமேலும் தான் உண்மையை மூடி மறைப்பது சரியல்ல என்று உணர்ந்து விட்டான் ரகு. அன்று இரவு தன் அப்பா அம்மா இருவரையும் அழைத்தான். இருவரையும் ஒருசேர நிற்கவைத்தான். இருவரின் கால்களிலும் விழுந்தான் ரகு. "என்ன என்ன?" என்று பதட்டம் அடைந்தார் பாண்டித்தேவர். "நான் உங்களிடம் பொய் சொல்லி விட்டேன். நான் தேர்வில் தவறிய உண்மையை மறைத்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்" என்று சொல்லி குலுங்கிக் குலுங்கி அழுதான். ரகுவின் அப்பாவும் அம்மாவும் ஒரு கணம் செய்வது அறியாமல் மலைத்து நின்றனர். பின்னர் பாண்டித்தேவர் அவனை தூக்கி மார்புடன் தழுவிக் கொண்டார். "பாண்டித் தேவர் மகன் காலேஜில் படிக்கிறான் என்று செல்வதை விட அவன் பொய் செல்ல மாட்டான் என்று சொல்வதையே நான் பெருமையாகக் கருதுகிறேன்' என்றார் பாண்டித்தேவர். "இனி எந்தக் காரணத்தை முன்னிட்டும் பொய் சொல்ல மாட்டேன்" என்று தந்தையின் கையில் அடித்து ஊறுதி சொன்னான் ரகு. பாண்டித்தேவருக்குப் பெருமையாக இருந்தது. அவர் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'பத்தாவது பாஸ்' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: முல்லா நஸ்ரூதின், ஞானி, பயணம், கிராமம், பணம், அல்வா, துறவி, புனிதம் , அறிஞன், விரதம், பிரார்த்தனை, அறிவு
தலைப்பு: கடவுள் சாப்பிடச் சொன்ன அல்வா
| முல்லா நஸ்ரூதினும் அவருடன் இரண்டு ஞானிகளும் மக்காவுக்குப் பயணம் செய்தார்கள். அவர்கள் தங்கள் பயணத்தின் கடைசி நிறுத்தமான ஒரு கிராமத்தை வந்தடைந்திருந்தனர். அவர்களிடமிருந்த பணமும் காலியாகிவிட்டது. மிகச் சொற்பமான பணமே அவர்களிடம் கைவசம் இருந்தது. அந்தக் கிராமத்தில் பிரபலமான அல்வாவை அந்தப் பணத்தில் வாங்கிக்கொண்டனர். மூன்றுபேரும் சாப்பிடும் அளவில் அவர்களால் வாங்க முடியவில்லை. பங்குபோட்டாலும் எல்லாரும் பசியாகத்தான் தூங்கவேண்டியிருக்கும். என்ன செய்வது? ஒருவர் மட்டும் சாப்பிட்டால் பசியாறலாம் என்ற எண்ணத்தில் மூன்றுபேரும் தங்களது பசியே முக்கியமானது என்று சண்டைபோடத் தொடங்கினார்கள். முதல் துறவி சொன்னார். "நான் நோன்பு இருப்பவன். பல ஆண்டுகளாகப் பிரார்த்தனையிலும் ஈடுபட்டுவருபவன். என்னைவிட இங்கே யாரும் புனிதமான மனிதர்கள் இல்லை. அதனால் கடவுள் எனக்கே இந்த அல்வாவைத் தர விரும்புவார்" என்றார். இரண்டாமவரோ மிகவும் படித்தவர். "நீங்களோ பல தவங்களைச் செய்தவர். நானோ அறிஞன். எனது வாழ்நாள் முழுவதும் அறிவைச் சேகரிப்பதிலேயே செலவழித்தவன். விரதமும் பிரார்த்தனையும் செய்பவர்களால் இந்த உலகத்தவர்களுக்கு உண்டாகும் பயனைவிட என்னுடைய அறிவு மேலானது. அதனால் இந்த அல்வா எனக்கே உரியது" என்றார். முல்லா நஸ்ரூதின் சொன்னார். "நான் துறவியும் அல்ல. அறிஞனும் அல்ல. நான் சாதாரண பாவி. கடவுள் பாவிகளிடம் மிகவும் அன்புள்ளவர் என்றே நான் இதுவரை கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால் அல்வா எனக்கே" என்றார். அவர்களால் ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை. கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தனர். அல்வாவைச் சாப்பிடாமலேயே இரவு உறங்கச் செல்வதென்றும், கடவுளே அதை முடிவுசெய்யட்டும் என்றும் தூங்கப்போனார்கள். காலையில் எழுந்து துறவி சொன்னார். "இனிமேல் இந்த அல்வாவுக்காக என்னுடன் யாரும் போட்டிபோட முடியாது. எனது கனவில் கடவுள் வந்தார். அவரது பாதங்களை நான் முத்தமிட்டேன். இதைவிட எனக்கு வேறென்ன தகுதி வேண்டும்? கொடுங்கள் அல்வாவை" என்றார். அறிஞரோ உரத்துச் சிரித்தார். "நீங்கள் கடவுளின் பாதங்களைத் தான் முத்தமிட்டீர்கள். என்னைக் கடவுள் முத்தமிட்டு கட்டிப்பிடிக்கவும் செய்தார். அல்வா எங்கே? அது எனக்குத்தான்" என்றார். அவர்கள் முல்லா நஸ்ரூதினைப் பார்த்து, "நீ என்ன கனவு கண்டாய்?" என்று கேட்டனர். "நான் ஒரு பாவி. எனது கனவும் ரொம்ப சாதாரணமானது. அதை உங்களிடம் சொல்வதற்குக்கூட எனக்கு வெட்கமாக உள்ளது. நீங்கள் கேட்டதால் சொல்கிறேன். எனது கனவில் கடவுள் வந்து ஆணையிட்டார். ‘ஏய், முட்டாளே, இன்னுமா அல்வாவை வைத்துக் கொண்டு காத்திருக்கிறாய். சாப்பிடு" என்று உத்தரவிட்டார். நான் சாப்பிட்டுவிட்டேன்" என்றார் முல்லா நஸ்ரூதின். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: வேடன், காடு, உணவு, விலங்குகள், மரம், பாம்பு, சிங்கம், மனிதன், மகிழ்ச்சி, தனிமை
தலைப்பு: இரண்டு தனிமைகள்
| காட்டில் தொலைந்து போன ஒரு வேடனின் கதை இது. மூன்று நாட்கள் ஆகியும் அவனுக்குக் காட்டை விட்டு வெளியேறும் வழி தெரியவேயில்லை. உணவின்றி, விலங்குளைப் பற்றி சதா அச்சத்தோடு அந்த மூன்று நாட்களையும் அவன் கழித்தான். அவனால் உறங்கக்கூட இயலாமல், ஒரே மரத்தினடியில் அமர்ந்தபடி இருந்தான். பாம்புகள், சிங்கங்கள் மற்றும் கொடூர விலங்குகள் உலவும் வனம் அது. நான்காவது நாள் காலையில், ஒரு மனிதன் இன்னொரு மரத்தினடியில் அமர்ந்திருப்பதைப் பார்த்தான். அவனுக்கு வந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அவன் ஓடோடிச் சென்று அந்த மனிதனைக் கட்டிப்பிடித்தான். அந்த மனிதனும் மகிழ்ச்சியில் அவனைத் தழுவிக்கொண்டான். "நான் இந்தக் காட்டில் தொலைந்து போய்விட்டேன். யாராவது வருவார்களா என்று தேடியபடி இருந்தேன்" என்றான் முதலில் தொலைந்தவன். "நானும் அப்படித்தான். ஆனால் நாம் இருவருமே தொலைந்து போனவர்கள். அதனால் நமது மகிழ்ச்சியோ அர்த்தமற்றது." என்றான் மற்றவன். அப்படித்தான் நேர்கிறது. நீங்களும் தனிமையில் இருக்கிறீர்கள். மற்றவரும் தனிமையில் இருக்கிறார். நீங்கள் சந்திக்கிறீர்கள். முதலில் தேனிலவுதான். தனியாக இருக்கும் இன்னொருவரை சந்தித்துவிட்டதால் இனியும் நீங்கள் தனியர் அல்ல என்ற எண்ணம் தரும் பரவசம் அது. ஆனால் மூன்று நாட்களில், நீங்கள் புத்திசாலியாக இருந்தால், மூன்று நிமிடங்களில், அந்த மகிழ்ச்சி நிலையானதல்ல என்று தெரிந்துவிடும். உங்களின் சேர்தலில் இரண்டு தனிமைகள் இணைகின்றன, அவ்வளவே. இரண்டு புண்கள் ஒன்றையொன்று குணப்படுத்தவே இயலாது. கண்களைக் கட்டிக் கொண்டிருக்கும் இருவர் ஒருவரையொருவர் வழிநடத்தவே முடியாது. |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: கொளஞ்சி, அரசன், வசந்தா, ராசாத்தி, மீசைக்காரர், பூபாலன்
தலைப்பு: உருவங்களின் ரகசியம்
| ஒற்றைப் பெண்பிள்ளையை விட்டுவிட்டு அவள் அப்பன் அரசன் பிழைப்புக்காக வேலை தேடி வெளியூர் சென்று வருடங்களாகிறது. ஊர் திரும்பாமலிருக்கும் அவனைப்பற்றி செய்திகள் மட்டும் ஊருக்குள் வந்து கொண்டிருந்தது. கொளஞ்சியை சிறுவயதிலிருந்தே அவளின் சின்னாத்தாள் அழகம்மாள்தான் பார்த்துக்கொண்டிருக்கிறாள். அவளுக்கும் வேறு ஆதரவு கிடையாது. மீசைக்காரர் வீட்டில் பொழுதுக்கும் அடிமை வேலை செய்து, இரவானால் வீடடைவாள், மீசைக்காரர் குடும்பத்துக்கு தன் உயிரை உழைப்பாக்கி கொட்டிக் கொண்டிருந்தாள். அவர்கள் இரண்டு வேளை சோறும் விழாக்காலங்களில் உடுப்பும் எடுத்துக் கொடுத்தார்கள். உடலெல்லாம் பல்லாய் வாங்கிக் கட்டிக் கொண்டாள். கொளஞ்சிக்கு படிப்பு ஏறவில்லை. சோற்றுத்தட்டை பையில் வைத்துக்கொண்டு பிள்ளைகளோடு பிள்ளையாய் பள்ளிக்கூடம் போனாள்; திரும்பி வந்தாள். தினம் தினம் வகுப்பில் உதையும் அவமானமும் கிடைத்தன. சோற்றுக்காக பள்ளிக்கூடம் போய் வந்தாள். வாத்தியார் அடித்த அடி சூத்தாம்பட்டை பிரம்பு கனத்திற்கு வீங்கி குப்புறடித்துக் கிடந்தாள் வீட்டில். அழகம்மாள் வாத்தியாரை நடுரோட்டில் வைத்து திட்டித் தீர்த்தாள். அவளின் நோட்டுப் புத்தகப் பை சுவரில் அடித்த ஆணியில் கேட்பாரற்று உரையத் தொடங்கியது. அரசன் சிறுவயதிலிருந்து மேளம் அடிப்பவர்கள் கூடவே திரிந்து கொண்டிருந்தான். மேளம் தூக்கவும் சாராயம் வாங்கி வரவும் மேளக்காரர்களுக்கு உபயோகப்பட்டான். சமயங்களில் போதை முற்றிய பின் இழவு வீடுகளில் மேள சப்தத்தை ஒப்பேற்ற அவனைத் தட்டச் சொன்னார்கள். அவன் உயிரைக் கொடுத்து, "தொம் தொம்" எனத் தட்டிக் கொண்டிருந்தான். கைவாகு வரவில்லை. பானையிலும் கதவிலும் ஜோராகத் தாளம் போடும் அவனுக்கு மேளத்தில் சொல் கூடிவரவில்லை. விரல்களைப் புரட்டி சுருட்டி கும் கும்மென குத்தி மேளத்திடம் கேட்டுக் கொண்டிருந்தான் தாளம் வராத காரணத்தினை. கட்டையர் தாத்தா நாதஸ்வரம் சொல்லிக் கொடுத்தார். பிடி கொள்ளவில்லை. தவிலில்தான் முட்டிக்கொண்டு நின்றான். "கழுத போகுது. சொல்லிக்கொடுத்து தொலை" என்றார் கட்டையர் தாத்தா. சம்பிரதாயமாக அரும்பு மீசையை மழித்துக் கொண்டு வந்து நின்றான். "மீசை மழித்ததற்காகவே உனக்கு தவில் சொல்லித் தரவேண்டும்" என்றான் தவில்காரன் கணேசன். கணேசனின் சிஷ்யனாக மேளத்தை தூக்கிக்கொண்டு கணேசன் குரூப்பின் நிழலாய்க் கிடந்தான். நோஞ்சான் உடம்பு. தோளில் தூக்கி மாட்டி வாசிக்கத் திராணியற்று கோணிக்கொண்டு நின்றான். எல்லோரும் சிரித்தார்கள். அவர்களோடு அரசனும் சிரித்தான். மேளக்குச்சும் கழியும் பிடிக்க விரல் வளைத்து பழகிக்கொடுத்தான் கணேசன். கணேசனுக்கு துணை மேளமாய் இழவு வீடுகளில் வாசிக்கத் தொடங்கினான். ஹர்லிங் முடி வளர்த்தான், தேங்காய் எண்ணெய் தடவி. மேளச் சப்தத்தை ஊர் கேட்டுக்கொண்டிருந்தது. காரியம் முடிந்து ஊர் திரும்பும் நாட்களில் ஓய்வில்லாமல் தவிலைத் தட்டிக் கிடந்தான். பகலில் தூங்கும் மேளக்கார குரூப் அவனைத் துரத்தியது. மேளத்தைத் தூக்கிக்கெண்டு ஓடினான். மேளம் மேலும் மேலும் பல தாளங்களை இசைந்து கொடுக்கத் தொடங்கியது. தாளம் பிடி கொடுப்பதை கணேசன் தூரத்திலிருந்து ரசித்துக் கொண்டிருந்தான். வயிசுக்கு வந்து அறை வீட்டிலிருந்து அரசனின் மேளச் சப்தத்தில் தான் வெளிக் கிளம்பினாள் வசந்தா. பதினாறு நாட்கள் வெயில் படாத வசந்தாவின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான் அரசன். அவனது ஹர்லிங் முடி நெறி நெறியாய் வஞ்சனையற்று வளர்ந்து கிடந்தது. மேளம் தாங்கி நிற்கும் தோரணையும் துடித்து அடிக்கையில் குலுங்கும் சுருள் முடியும் வசந்தாவை பார்த்துக்கொண்டிருக்க வைத்தன. முகம் மாசு மருவற்று, பூனை மயிர் பளபளத்தத அவள் காதோரங்களில். அரசன் தாளங்களில் வழி தன் காதலை வாசித்துக்கொண்டிருந்தான். வசந்தா தூது போவதற்குத் தோதான ஆட்கள் தேடிக் கொண்டிருந்தாள். கணேசனுக்கு அரசனின் விருப்பம் தெரிந்து கட்டையர் தாத்தாவிடம் சொன்னான். நாதஸ்வரத்தை ரிப்பேர் செய்தபடி யோசனை செய்தார் கட்டையர் தாத்தா. வசந்தாவின் வயிற்றில் கொளஞ்சி இருந்தபோது அவள் கேட்டறியாத ஊர்களுக்கு மேளம் வாசிக்கச் சென்றான் அரசன். ஒருக்களித்துப் படுத்தபடி சிம்னியின் திரியைத் தூண்டிக் கொண்டே கூரை வீடடில் காத்துக்கிடந்தாள். காகிதம் சுருட்டி அடைக்கப்பட்ட மண்ணெண்ணெய் சீசாவில் மண்ணெண்ணெய் தீர்ந்து கொண்டுவந்தது. விடிந்த பிறகு அவள் மண்ணெண்ணெய் வாங்க கடன் கேட்டுக்கொண்டிருந்தாள். சிறுவயசு கர்ப்பம். மெல்லிய உடலில் வயிறு தள்ளிக்கொண்டு சிரமமாக மூச்சு விட்டாள். அவளுக்கு சிரமமெல்லாம் அரசன் அருகிலிருந்தாள் பறந்து விடும். தரையில் கால் பாவாமல் பார்த்துக் கொள்வான். எல்லோரும் அவளுக்கு ஆறுதல் சொன்னார்கள். அவளின் ஆறுதலுக்காக அரசனைத் திட்டினார்கள். "புள்ளத்தாச்சிப் பொம்பள" என்று துணைக்குப் படுத்துக்கொண்டாள் கட்டையர் தாத்தா மனைவி. அவள் நாதஸ்வரக்காரனைக் கட்டி ஆண்டு அனுபவித்தவள். தூக்கம் வராமல் கதைகள் சொல்லிக்கொண்டு கிடந்தாள். கதைகளைக் கேட்டபடி வீடு விழித்திருந்தது. "அவனுங்களுக்கு என்ன இருக்கு சொல்லு பாப்போம்? நாலு வூட்டு சோறு. ஒரு வீட்டுத் திண்ணை" என்றாள் கிழவி. அரசன் ஊரைத் தேடிக்கொண்டு வந்தான். குழந்தை வசந்தாவை வார்த்ததுபோல் இருந்தது. கொளஞ்சி என்று கூப்பிட்டார்கள். வசந்தாவின் தங்கை அழகம்மாள் பிரசவம் பார்க்க வந்திருந்தாள். சிறுவயதுப் பிரசவம் பிரச்சனைதான் என்றபடியே முடிந்து விட்டிருந்தது. வேலைக்குச் செல்லாத தவில், திண்ணை மூலையில் ரோஸ் கலர் துணியால் மூடிக் கிடந்தது. அரசன் பொழுதுக்கும் புளிய மரத்தடியில் கயிற்றுக் கட்டிலில் அசையும் பிணம் போல் வானம் வெறித்துக் கிடந்தான். கிளைகளைத் தாண்டித் தெரியும் வானம் அவனுக்கு எதையோ சொல்லிக்கொண்டிருந்தது. பாக்கு வைத்து அழைத்தார்கள் அரசனை. தவிலைத் தொடுவதில்லை என்றான். அழகம்மாள் பனைவோலைக் குடிசை முகப்பிலிருந்து அவனுக்கு பாதிமுகம் தெரிய, "வேல வித்து பார்த்தாதாங் இருக்கிறத காபந்து பண்ண முடியும்" என்றான். வந்தவர்கள் கோவில் அழைப்பிதழையும் முன் பணத்தையும் அழகம்மாளிடம் கொடுத்துச் சென்றார்கள். அழகம்மாள் முந்தியில் வாங்கிக் கொண்டாள். குழந்தையை காபந்து பண்ண வேண்டிய பொறுப்பு அவளுக்கு இருந்தது. அரசன் வேலைக்குச் சென்றான்; மேளத்தைத் தூக்கிக் கொண்டு அழகம்மாள் பிள்ளையைப் பார்த்துக் கொண்டாள். சாவு வீடுகளில் அரசன் மூர்க்கமாக வாசித்துக்கொண்டிருந்தான். சாராய டப்பாக்கள் அவனிடம் திணறி விழுந்தன. போதையையும் பலத்தையும் தாளக் குச்சிகளுக்குள் செலுத்திக்கொண்டிருந்தான். கண்கள் ரத்தமாய் மின்ன மின்ன குடித்துக் குடித்து வாசித்துக்கெண்டிருந்தான். ஆட்டக்காரர்கள் சக்தியிழந்து அவன் கைகளைப் பற்றி தாளத்தை நிறுத்தினார்கள். சரஞ்சரமாய் தொங்கும் முடியினை தலை சொடுக்கி வாரிப் போட்டுக்கொண்டு சிரித்தான் சேலத்தில் குரூப் மேளத்திற்கு நபராய் சென்ற அரசன் ராசாத்தியைக் கூட்டிக்கொண்டு வந்தான். ஊர் வேடிக்கை பார்த்தது. அழகம்மாள் பிள்ளையைத் தூக்கிக்கொண்டு தனிவீடு சென்று விட்டாள். அரசன் ராசாத்தியின் மழமழப்பான உடல் வளைவுகளில் இறந்து கிடந்தான். ராசாத்தி அரசனுக்குத் தலைவாரிவிட்டாள்; குளிப்பாட்டி விட்டாள்; வயல் வேலைக்குச் சென்றாள். அரசன் மேளத்தோடு காரிய வீடுகளில் வெற்றிலை குதப்பிக்கொண்டு மைனர் செயின் போட்டுக்கொண்டு களிப்பேறிக் கிடந்தான். மீசைக்காரன் மகன் பூபாலன் அரும்பாத மீசையைக் கண்ணாடியில் பார்த்துக்கொண்டிருந்தான். ராசாத்தியின் வாசனை ஊர் முழுக்கப் பரவிக்கொண்டிருந்தது. சுய மைதுனம் செய்ய மறைவிடம் தேடி மோட்டார் கொட்டகைக்குச் சென்றபோது ராசாத்தி ஊர்க்காரிகளோடு வயல் வேலை செய்துவிட்டு அவனைக் கடந்து சென்றாள், ராசாத்திக்காக அரசனிடம் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். அழகிய மனைவி பற்றிய ஊராரின் வர்ணனைகளில் பெருமை உடலெல்லாம் சுரந்து வழிந்து கொண்டிருந்தது அவனுக்கு. ஆண்கள் குழுமிக் கிடக்கும் இடங்களில், தெருத் திருப்பங்களில், பெட்டிக்கடைகளில், இளைஞர் சங்கத்து கொட்டகை முகப்பில் ராசாத்தி அழகைச் சிந்தி இறைத்தபடி நடந்து சென்ற கொண்டிருந்தாள். சங்கத்து சுவர்களில் ராசாத்தி பெயரை எழுதி விதவிதமாக முலை தொங்கிய படங்கள் வரைந்து அம்புக்குறி போட்டு குறியில் பெயர் எழுதி வைக்கப்பட்டது. ராசாத்திக்கு பிள்ளைகள் எதுவும் பிறக்கவில்லை. மூத்தவள் மகள்தான் என் மகள் என்று சொல்லிக்கொண்டு திரிந்தாள். கொளஞ்சியை வேலைக்குப் போய்விட்டு வந்தபின். தன் வீட்டிற்குத் தூக்கி வந்து பாசத்தில் உளறிக்கொண்டு கிடந்தாள். கொளஞ்சி ராசாத்தியை அடையாளம் தெரிந்து வைத்துக்கொண்டு கை கால்களை உதறிச் சிரித்தாள். குழந்தையின் சிரிப்பொலியும் உடல் தன்மையும் ராசாத்திக்குள் பரவசத்தைப் பெருக்கிக்கொண்டிருந்தது. அழகம்மாள் குழந்தையை ராயசாத்தியை நம்பி ஒப்படைத்துவிட்டுச் சென்றாள். குழந்தை ராசாத்தியிடமும் அழகம்மாளிடமும் கைமாறிக் கிடந்தது. ராசாத்தி மோட்டார் கொட்டகைக்கு மலத்துணி அலசச் சென்றாள். வசந்தாவின் பிரேம் போடாத போட்டோவை சன்னலில் சாத்திவைத்து விசேஷ காலங்களில் கறிச்சோறு படைத்தாள். பத்திப் புகை சுருள் சுருளாய் வசந்தாவின் முகத்தில் படர்ந்து கொண்டிருந்தது. குழந்தைக்கு சாமி கும்பிடக் கற்றக்கொடுத்தாள் கைபிடித்து. குழந்தை எல்லோரையும் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது. மோட்டார் கொட்டகையில் மீசைக்காரர் மகன் காதல் பாடல்களை டேப் ரிக்கார்டரில் போட்டான். ராசாத்தியின் வருகையின் போதெல்லாம் நீர் குதிக்கும் சப்தம் தாண்டி அவளுடைய காதுக்கு பாடல் போய்ச் சேரவேண்டிய கவலை அவனுக்கு இருந்தது. பாடல்களின் வழி தன் காதலை அவளிடம் சொல்லிவிட்டதாக நம்பிக்கொண்டிருந்தான். இரவெல்லாம் கண்விழித்துப் படித்த செக்ஸ் புத்தகத்தில் ராசாத்தி உருமாறி வந்துகொண்டிருந்தாள். கறுப்பு வெள்ளை படங்களில் விதவிதமாக போஸ் கொடுத்துக் கொண்டிருக்கும் ராசாத்திக்கு காகிதத்தில் முத்தம் கொடுத்தான். பேப்பர் வாசனை நாசியில் ஏறியது. எரவாணத்தில் செருகப்பட்ட செக்ஸ் புத்தகம் தூங்கத் தொடங்கியவுடன் கயிற்றுக் கட்டிலில் மோட்டார் இறைக்கும் நீர் குதிப்பு சப்தங்களோடு களைத்துப்போய் தூங்கிக் கொண்டிருந்தான் ஸ்கலிதமாகும் கனவுகளுடன். ராசாத்தி மாதவிடாய்க் காலங்களில் அதிகாலையில் குளிக்க வந்தாள் மோட்டார் கொட்டகைக்கு விழிப்பு தட்டிய அவன் ராசாத்தியின் மினுமினுப்பான அழகு நீரில் முங்கி எழுவதைக் கண்டான். யாருமற்றதான அதிகாலைவெளி என நம்பிக்— காண்டிருந்தாள் அவள். படபடப்பு எழுந்து விடைத்துக்கொண்டு நின்றது அவனுக்கு. தன் இருப்பைக் காட்டிக்கொள்ளாமல் நின்று கொண்டிருந்தான். அவள் ஈரத் துணிகளை உடலில் போர்த்திக்கொண்டு குளிரில் நடுங்கியபடி ஓட்டமும் நடையுமாய் சென்றுவிட்டபிறகு நீரில் இறங்கி சுய மைதுனம் செய்தபடி அவள் பெயரையும் உடலையும் வருத்தி அழைத்துக் கொண்டிருந்தான். அவள் தொலைவில் சென்று கொண்டிருந்தாள். அவள் பெயரை முனகிக் கொண்டிருந்தான். தூரத்தில் சென்று கொண்டிருப்பவள் அருகாமையில் நின்றாள்; அவன் குளியலைப் பார்த்தாள்; அவளும் நீரில் இறங்கி அவனைக் கட்டிப் பிடித்து அவனைத் தனக்குள் வாங்கி அவனை ஒரு புள்ளியாக்கி பருகத் தொடங்கினாள். கண்மூடிக் கிடந்து திறந்தான். தூரத்தில் சென்ற ராசாத்தி அங்கிருந்தபடியே மோட்டார் கொட்டகையைத் திரும்பிப் பார்த்தாள். யாரோ குளிக்கும் அசைவுகள் தெரிந்து கொண்டிருந்தது தூரத்துப் பார்வைக்கு. அவள் பார்ப்பதை இவன் பார்த்தான். பிறகு அவள் செல்லத் தொடங்கினாள் பலவித யோசனைகளுடன். கொளஞ்சி வளர்ந்துகொண்டு வந்தாள். ராசாத்தி சேர்த்து வைத்த காசில் பாவாடை, சட்டை எடுத்தாள் பிள்ளைக்கு. அழகம்மாள் சைக்கிளில் வரும் துணி மூட்டைக்காரனிடம் பாதி பணமும் மீதி கடனும் சொல்லி எடுத்தாள். அரசன் பக்கத்து டவுனில் வரிசையாய் நீல மயில்கள் நிற்கும் பட்டுப் பாவாடை எடுத்துக்கொண்டு வந்தான். பட்டுப் பாவாடை கட்டிக்கொண்டு தெருப் பிள்ளைகளோடு விளையாடப் போகாமல்வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். கொளஞ்சிக்கு ராசாத்தியுடனே அதிக நேரத்தை கழிக்கும்படி ஆனது. மீசைக்காரர் வீட்டில் பிள்ளையைக் கொண்டு வரக்கூடாது வேலைக்கு என்று விட்டதில் வருந்திக்கொண்டிருந்தாள் அழகம்மாள். வேலை கெடுகிறது; இரண்டாள் சாப்பாடு ஆகிறது; நேரத்துக்கு தீனி, சாக்குப் போக்கு என்று கத்தி விட்டாள் ஆச்சி. கொளஞ்சிக்கு முக்காடு போட்டு மரத்தடியில் சோற்று வாளிகளுக்கு காவலாய் உட்கார்த்தி வைத்து விட்டு வயல் வேலை செய்துகிடந்தாள் ராசாத்தி. அழுவாத பிள்ளை என்று எல்லோரும் கிள்ளினார்கள். கொளஞ்சி சிணுங்கிவிட்டு வாயை மூடிக்கொண்டாள். ராசாத்தியின் பேச்சுவழக்கும் காரிய நேர்த்தியும் மணம் கமழும் சமையலும் பின்னாளில் கொளஞ்சிக்கு ஒட்டிக் கொண்டது. தன் எண்ணங்களை ராசாத்தியிடம் நேரடியாகச் சொல்லாமல் பல வழிகளில் தெரிவித்துக்கொண்டிருந்தான் மீசைக்காரர் மகன், அரசன் வசிக்கும் தெருவில் அவன் பாதம் நடந்து நடந்து தேய்ந்து கொண்டிருந்தது. கிழவிகள் அவனைக் கூப்பிட்டு அவன் அப்பாவை விசாரித்தார்கள். ராசாத்திக்கு அவன் வருகை தெரிந்துகொண்டு வந்தது. ராசாத்திக்கு தூரத்திலிருந்து மோட்டார் கொட்டகையின் காட்சிவெளியைப் பார்க்கும்போதெல்லாம் யாருமற்ற காலையில் நீராடியதும் வந்து விட்ட பின் எதேச்சையாய் திரும்பிப் பார்த்த கணத்தில் அங்கு வேறு யாரோ ஒரு உருவத்தின் குளியல் அசைவையும் நின்று உற்றுப் பார்த்தது அவளுக்கு நிழலாடிக்கொண்டிருந்தது. அந்நினைவு அவள் வாழ்க்கையில் மறக்க முடியாத அரூப நினைவாக விழுந்துவிட்டிருந்தது. அந்த மாதத்து மாதவிடாய் காலங்களில் அவளிடம் பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்ததை முகம் பார்க்கும் கண்ணாடியில் கண்டு கொண்டிருந்தாள். தேவையற்ற பரபரப்பும் துயரம் படிந்த முகமும் மறைமுகமான சத்தோஷமும் அதிகாலையில் தோன்றி மறைந்து கொண்டிருந்தது. பறவைகளின் சப்தத்துடனும் மோட்டாரின் தொடர் ரீங்காரத்துடனும் நீராடிக் கொண்டிருந்தவளுக்கு கீற்று மறைவில் நிற்கும் இரண்டு கால்களை மட்டுமே அவதானிக்க முடிந்தது. அவள் இயல்பாய் எழுந்து ஆடை மாற்றும் போக்குகாட்டி கொட்டகைப் பின்புறமாக சுற்றிவந்து உள்ளே எட்டிப் பார்த்தபோது அவள் குளியல் முடித்து விட்டதான எண்ணத்திலும் அவசரத்திலுமான முடியாக் கனவின் துயரத்துடன் சுய மைதுனத்தில் மிதந்து கொண்டிருந்தான். அதை எதிர்பார்த்தவள் அவன் தன்னைப் பார்க்கும்வரை நின்று கொண்டிருந்தாள். அதன் பிறகு அவனைக் கடந்து சென்ற போதெல்லாம் அவள் முகத்தில் விசேஷ பூ சிரித்துக்கொண்டிருந்தது. பேன் பார்க்கும் கிழவிகளை வீட்டு வாசலில் இருந்து கொண்டு தலை மயிரைப் பரப்பிவிட்டு சாடைமாடைப் பேச்சுக்கள் மொழிந்துகொண்டிருந்தாள். எதிர் திண்ணைகளில் பேச்சுக் கொடுத்துக் கிடத்தான் அவன். வயசாளிகளும் குழந்தைகளும் அவனின் அர்த்தமற்ற பேச்சுக்களுக்கு செவிமடுத்துக் கிடந்தார்கள். முகம் தெரியாத அதிகாலை இருட்டில் பாவாடை, சேலைகளைத் தோளில் போட்டுக்கொண்டு குளிக்கச் சென்றாள். அவளின் வருகை அவனுக்கு யாருமே சொல்லாமலே தெரிந்திருந்தது. அவனின் ஒவ்வொரு அசைவுகளையும் கற்பனையில் நினைத்தபடி வரப்பில் நடந்துகொண்டிருந்தாள். மீசைக்காரர் வீட்டின் பயனற்ற பழைய பொருள்கள் குவிக்கப் பட்டிருக்கும் தனி வீட்டில் உடலின் மர்மங்களோடு அவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். சாகக்கிடக்கும் மீசைக்காரர் வீட்டுக் கிழவி அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தாள் சாம்பல் நிறக் கண்களுடன். அவர்களின் இருப்பு தனக்குத் தெரியும் என்பதை எத்தனையோ முறை அவளின் மட்கிய குரலில் இருமியும் கனைத்தும் காட்டியும் அவர்கள் பொருட்படுத்தாதிருந்தார்கள். தன்னைப் பொருட்படுத்தாத அவர்கள் தன்னை அவமானப்படுத்துவதாகக் கருதி சபித்தாள். மரணத்தின் முனகலும் சுகிப்பின் சிரிப்பும் ஒரே அரையில் ஒலித்துக்கொண்டிருந்தது. கிழவியின் மல மூத்திரங்களை சுத்தப்படுத்த வந்த அழகம்மாள் அவர்கள் கட்டிப் பிடித்துத் துயில்வதைப் பார்த்துவிட்டுச் சென்றாள். அரசன் விசனம் பிடித்துக் கிடந்தான். பிரசிடென்ட் வீட்டு மாட்டுக் கொட்டகையில் பஞ்சாயத்து நிகழ்ந்தது. அரசன் கைகளைக் கட்டிக்கொண்டு கல்தூணில் சாய்ந்து நின்றான். ராசாத்தி எல்லோருக்கும் மறைவாய் விசும்பிக்கொண்டு நின்றாள் மாடுகளின் பின்புறம். அரசனை சமாதானப் படுத்தினார்கள். அரசன் அவளை வச்சி வாழமுடியாதென்றான். "பையன் சின்ன பையன்" , "யாருதாங் தவறல்", "இந்த ஒருவாட்டி விட்டுப்புடி", "கழுத மேயுதுன்னா தொலைச்சி தலமொழுவிட்டுப் போ", "அதுக்கப்பறம் நான் இவள உங்கிட்ட சேத்தன்னா உஞ்செருப்பகயிட்டிக்க ஆமா". "உங்க வீட்ல உங்க சம்சாரம் இப்பிடி பண்ணிட்டா இப்படி பேசுவீங்களா?" பிரசிடென்ட் துண்டை உதறி தோளில் போட்டுச் சென்றார். சாயங்காலம் தீர்ந்துபோனது. எல்லோரும் வீட்டுக்குச் சென்றும் ராசாத்தி பிரசிடென்ட் வீட்டில் அவர் மனைவியிடம் அழுது புலம்பிக்கொண்டிருந்தாள். அன்றிரவு வாழ்க்கை பூதாகரமாக மீசைக்காரர் மகனிடம் பற்களைக் காட்டிக்கொண்டு நின்றது. ராசாத்தி அவன் முன் முகம் மூடி அழுதுகொண்டிருந்தாள். விடியும் வரை விரைத்த சடலம் போல் யோசனை செய்துகொண்டிருந்தான். மாட்டுச் சந்தையின் பின்புறம் மாற்றுத் துணிகளும் செருவாட்டுக் காசும் எடுத்துவந்து காத்திருந்த பகல்பொழுது முடிந்து போனது ராசாத்திக்கு. போக்கிடமற்ற கவலை பீடித்து உதடுகள் உலரத் தொடங்கி எச்சில் சுரப்பு நின்றுபோனது. வந்து சேராத அவன் வருகையை அழுது தீர்த்துக் கொண்டிருந்தாள். அழகம்மாளின் தனி வீட்டில் பழம்புடவையில் அவள் உடல் சமனப்படாத விசையுடன் இடமும் வலமுமாய் ஆடிக் கொண்டிருந்ததை கொளஞ்சிதான் முதலில் பார்த்தாள். கொளஞ்சி மாராப்பு போட்டுக் கொண்டாள். அரசன் பிழைப்பு தேடி அயலூர்களுக்கு சென்று கொண்டிருந்தான். தூரத்து ஊரில் பூபாலன் காலேஜ் படிப்பை தங்கிப் படித்தான். அழகம்மாள் கருவாடு போல்ஆகிக் கொண்டு வந்தாள். அவளின் சருமம் மேலும் மேலும் வரிவரியாய் கிழடுதட்டிப் போனது. ஊரறிய அரசனுக்குப் பெயர் சொல்லாத பெண்டாட்டியாக வந்து சேர்ந்தவளுக்கு கல்யாணத்தில் இஷ்டமில்லாமலில்லை. எடுத்து செய்வார் யாருமில்லை. அவள் உடல் மன இறுக்கங்களால் கெட்டித் தட்டி நரம்பாகிப் போனாள். மேலுக்கு ஒரு புடவையைச் சுற்றிக்கொண்டும் அவளின் பழைய அளவைச் சொல்லும் தொளதொள ஜாக்கெட்டைப் போட்டுக் கொண்டும் அடிமை வேலை செய்யச் சென்றாள். வேலைகள் ஆவலாய் அவளைப் பற்றிக்கொண்டு இழுத்தன. சதா சுரந்துகொண்டிருக்கும் முதலாளி வீட்டு வேலைகளின் அன்றைய வேலைக்கான முடிவை இரவுகள் வந்து முற்றுப்புள்ளி இட்டு வைத்தன. கொளஞ்சி சோறாக்கி வைத்துவிட்டு பக்கத்து வீடுகளில் உட்கார்ந்து அழகம்மாளின் வருகைக்குக் காத்திருந்தாள். ராசாத்தியின் உடல் தொங்கிய அக்காட்சி, தனிமையான இரவுகளில் கொளஞ்சிக்கு பயமூட்டுவதாக சொல்லிக் கொண்டு நேரத்தில் வீடுவரும்படி அழகம்மாளை நச்சரித்துக் கொண்டிருந்தாள். வயிசுக்கு வந்த பிள்ளையை காத்து கறுப்பு அண்டினால் ஆயுசுக்கும் போகாது என்று வேறு வீடு பார்க்கச் சொன்னார்கள். அழகம்மாளுக்கும் இரவில் துர்சொப்பனங்கள் வந்து கொண்டிருந்தது. அம்மா இருக்கும் தைரியத்தில் பிள்ளையும் பிள்ளை இருக்கும் தைரியத்தில் அம்மாவும் அவ்வீட்டில் விடிய விடிய விளக்கெரியவிட்டு உறங்கிக் கொண்ருந்தார்கள். அழகம்மாளுக்கு டைபாய்டு ஜூரம் வந்து முனகிக் கொண்டு கிடந்தாள். முதலாளி வீட்டு வேலைகள் அவளைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தது. அம்மாவுக்கு பதிலாய் ஈரிழைத் துண்டை கழுத்தில் சுற்றிக் கொண்டு முதலாளி வீட்டுக்கு வேலைக்குச் சென்றாள். புதிய வேலைக்காரியின் சுறுசுறுப்பும் காரியநேர்த்தியும் ஆச்சிக்கு மிகவும் பிடித்து பழம் புடவைகள் மூன்று கொடுத்தாள். சென்ற விசேஷங்களில் செய்து இன்னும் தின்று தீராத பட்சணங்களை பாத்திரங்களை சுத்தம் செய்யும் பொருட்டு சவ்வுத்தாள் பையில் போட்டு வாரிக் கொடுத்தாள். ஜூரத்தில் முனகிக்கெண்டிருக்கும் அழகம்மாளுக்கு நாக்கு கசந்து போனது. பட்சணங்களை அவளால் ருசி பார்க்க முடியவில்லை. கடைசி காலங்களில் கொளஞ்சி தனக்கு கஞ்சி ஊற்றி காபந்து பண்ணுவாள் என்று ஊர்ஜிதமாகிக் கிடந்தாள். அம்மாவுக்கு உடல் சரியாகும் வரை என்று நினைத்துக்கொண்டு வேலைக்குச் சென்றதைத் தாண்டி ஆத்தாளும் பிள்ளையுமாக ஜோடி போட்டுக்கொண்டு வேலைக்குச் சென்றார்கள். ஆச்சிக்கு நிம்மதியாக இருந்தது. சிறிது காலத்தில் கொளஞ்சி மட்டும் போதும் என்றாள். அழகம்மாள் எப்போதாவது கிடைக்கும் விவசாய வேலையைப் பார்த்துக்கொண்டும் பிள்ளைக்கும் தனக்குமாய் சோறாக்கி வைத்துக் கொண்டும் தனிமையும் பயமும் ஒழுகும் கூரைவீட்டில் காத்துக் கிடந்தாள். கொளஞ்சிக்கு முதலாளி வீட்டின் ஒவ்வொரு அசைவும் தன் நடத்தைகளுக்குள் வந்தபோது பூபாலன் படிப்பு முடித்து வீடு வந்தான். எந்த வகையிலும் அழகாய் தெரியாத அவளிடம் மயங்கி நின்றான். அவள் உடலைத் தாண்டி ஏதோ ஒரு மாய வசீகரத்தில் போதை வயப்பட்டவனாக நின்றுகொண்டிருந்தான். ஏரிக்கரை வயலில் வேலை செய்யும் ஆட்களுக்கு அன்னக் கூடையில் சோறு வளர்த்துக் கொண்டும் குழம்பு வாளியைத் தூக்கிக் கொண்டும் வெயிலில் சென்றாள். பூபாலன் அவளுக்கு ஒத்தாசையாய் குழம்பு வாளியை சைக்கிள் ஓட்டியபடி வாங்கிச் சென்றான். நாவல்பழ மரத்தடியில் வேலை செய்த ஆட்களுக்கு வயிறார சப்பாடு போட்டாள். ஈரம் தீராத உதடுகளில் நாவல் பழங்களை சப்பித் தின்றாள். உதடுகளும் உதடுகளின் சுற்றுப்புறங்களும் ரோஸ்கலர் படிந்திருக்க வீடு வந்த போது, பூபாலன் அவள் நாவல்பழம் தின்ற வக்கணையை கேலி செய்து சிரித்தான். முதலாளி மகனின் கேலி வெட்கத்தை மீறி சங்கடத்தைத் தருவித்தது. ஓடி ஒளிந்துகொண்டாள். அவனுக்காக ஓடியதும் ஒளிந்ததும் இருவருக்குமான சுவாரஸ்யமான காரியமாக இருந்தது. அவள் ஓடி ஓடி ஒளிவதற்கான செயல்களையும் பேச்சுக்களையும் உருவாக்கிக் கொண்டிருந்தான். அவன் குரலைக் கேட்காமல் அவளுக்கு அவ்வீட்டின் இருப்பு நிலைக்கவில்லை. அவளின் அசைவுகள் இல்லாத அவ்விட்டின் இரவுப் பொழுதுகளை, பகலில் நிகழ்ந்தவைகளை நினைத்துக் கழித்தான். பகல்கள் மிகச் சிறியதாகவும் இரவுகள் மிக நீண்டதாகவும் போய்க்கொண்டிருந்தது. கொளஞ்சி பிள்ளைமார் தெருவில் மோர் விற்கச் சென்றபோது நாய்கடித்து குருவிக்கார தாத்தாவிடம் விபூதி வைத்தியம் செய்துகொண்டு வேலைக்கு வராமல் அழகம்மாளை அனுப்பி வைத்தாள். அழகம்மாள் மாலை மாலையாய் அழுதாள் ஆச்சியிடம். பூபாலன் அவளைத் தேடிக்கொண்டு அவள் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது. சாணி மெழுகிய தரையில் சாக்கு விரித்துப் படுத்துக் கிடந்தாள். டாக்டரிடம் செல்ல பணம் கொடுத்தான். அவளை பஸ்ஸில் வரச் சொல்லி டாக்டர் வசிக்கும் தெருவில் சைக்கிளில் காத்திருந்தான். கடைத் தெருவில் இருவரும் பேசிக்கொண்டு சென்றார்கள். நீ இல்லையென்றால் செத்துப் போய்விடுவேன் என்றான். அவனுக்காக, அவ்வார்த்தைகளுக்காக அழத் தொடங்கினாள். இருவரும் சேர்ந்து பிடித்துக்கொண்ட போட்டோவை கொளஞ்சி அடுக்குப்பானையில் ஒளித்து வைத்தாள். பழந்துணி சுருட்டி. கொளஞ்சி இருளில் அரட்டிக்கொண்டு கிடந்தாள். அழகம்மாளுக்கு பயம் பற்றிக்கொண்டு பக்கத்து வீடுகளை துணைக்கு அழைத்தாள் அவர்கள் தூக்கம்போன கண்களுடன் குருவிக்கார தாத்தாவைக் கூட்டி வந்தார்கள். பிள்ளை தலை மயிரைப் பரப்பிப் போட்டுக் கொண்டு பற்களை நறநறவெனக் கடித்தாள். குருவிக்கார தாத்தா பிள்ளையை ஆதுரமாகத் தழுவித் தூக்கினார். அது அவர் மேல் காறித்துப்பியது. மயிரைக் கொத்தாக பிடித்து தூக்கி அறைந்தார். பிள்ளை சுருண்டு விழுந்தாள். கொளஞ்சியின் மேலெல்லாம் திருநீற்று சாம்பல் பூசிவிட்டு அருகிருந்து பார்த்துக் கொண்டிருந்தாள் அழகம்மாள். தடிமனான இரவுகள் அவளை மூச்சுத் திணற வைத்தது. தெருவில் ஆடைகளைக் களைந்து ஓலமிட்டபடி கத்திக்கொண்டு ஓடினாள் கொளஞ்சி. பிரம்படியும் நெருப்புச் சூடும் தடம்பதித்துக் கிடந்தது அவளுடலில். பகல் முழுக்க திராணியின்றி சுருண்டு கிடந்த பிள்ளையை வெந்நீர் வைத்துக் குளிப்பாட்டினாள் அழகம்மாள். சடை பின்னிப் பூ வைத்து ஆடை மாற்றி மடியில் கிடத்தி கொண்டு அழத் தொடங்கினாள். கொளஞ்சியும் சேர்ந்துகொண்டு அழுதாள். பூபாலனுக்கு மீசைக்காரர் கல்யாணப் பேச்சைத் துவங்கத் தொடங்கியதுமே கொளஞ்சியைக் கட்டிக்கொள்ளப் போவதாகச் சொன்னான். கொளஞ்சியைக் வீட்டுக்கு வந்து பார்த்துவிட்டுச் சென்றான் பூபாலன். அழகம்மாள் அவனுக்கு கும்பிடு போட்டு அழுதாள். அவன் சென்ற பிறகு ஊதாங்குழலை அடுப்பில் சூடேற்றி கொளஞ்சியை மிரட்டினாள். கொளஞ்சி அடுப்பங்கரையில் ஆட்காட்டி விரலில் ரத்தமெடுத்து கொளஞ்சி - பூபாலன் என தரையில் எழுதியதை சாணியால் மெழுகி அழகம்மாளால் மறைத்துவிட முடியவில்லை ஆச்சியின் சொந்தக்காரர்கள் வீட்டுக்கு வந்து விருந்துண்டு சென்றார்கள். வந்தவர்களுக்கு விதவிதமாக ஆக்கிப்போட்டு மகிழ்ச்சியூட்டினாள் ஆச்சி. பூபாலனிடம் எல்லோரும் வேலைக்கார பறைச்சியை எப்படி மருமகளாக்குவது என்று கேட்டுவிட்டுச் சென்றார்கள். மீசைக்காரர் காரெடுத்துச் சென்று காரிய வேலைகள் பார்த்துக் கொண்டிருந்தார். பூபாலன் இன்னும் படிக்க வேண்டும் என்றான். " கட்டிக் கொண்டு படி "என்றார்கள். பார்த்திருக்கும் பெண் பாரம்பரியமிக்க வீட்டின் குணவதி என்று பார்ப்போரிடமெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தாள் ஆச்சி. கரும்புக் கொல்லையில் வெய்யில் மிதக்கும் வேளையில் இரண்டு கலர் பாட்டில்களை எடுத்து வைத்தான் கொளஞ்சியிடம். முகம் இறுகி கட்டிக் கொண்டாள் அவனை. இரண்டு பாட்டில்கள் காத்திருக்க இருவரும் புணர்ந்து களைத்தார்கள். இருவரும் கையிலெடுத்துக் கொண்ட பாட்டில்களை வைத்துக்கொண்டு ஒருவரையொருவர் முத்தமிட்டுக் கொண்டார்கள். அவள் பார்த்துக்கொண்டிருக்க, அவன் குடிக்கத் தொடங்கினான். அவள் அவன் குடிப்பதை அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் ஒரே மூச்சில் குடித்துவிட்டு அவளைப் பார்த்தான். நொடிகளில் வேற்றுமையில் அவன் மரணத்தை சம்பவிக்கப் போகிறவனாக அவளிடமிருந்து மாறுபட்டுப் போனான். பாட்டிலை வைத்துவிட்டு அவனைக் கட்டிக்கொண்டு அழுதாள். அவன் அவளைக் குடிக்கச் சொன்னான். அவள் அவனுக்குமேலும் மேலும் முத்தங்களைக் கொடுத்தாள். சட்டென்று கோணிக்கொண்ட அவன் உடல் வலிப்பு போல் இழுக்கத் தொடங்கியதை விலகி நின்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள், உலர்ந்து போய். சிறிது நேரத்தில், சுடப்பட்ட ஒரு மூர்க்கமான விலங்குபோல் அலங்கோலமாய் கோணிக்கொண்டு கிடந்தான். மிச்சமிருந்த ஒரு பாட்டிலை எடுத்துக்கொண்டு வெளியே ஓடத் தொடங்கினாள் பயத்துடன். சிறிது நேரத்தில் அவன் உடலில் ஈ மொய்க்கத் தொடங்கியது. |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: சோழ நாட்டின் தலைநகரம் காவிரிப் பூம்பட்டினம். அரசவை கூடியுள்ளது. அரியணையில் அரசர் பெருவளத்தான் பெருமிதத்துடன் அமர்ந்து உள்ளார். அமைச்சர்களும் படைத் தலைவனும் அவையினரும் இருக்கைகளில் அமர்ந்து உள்ளனர். "அமைச்சரே! சேர நாட்டின் மீது போர் தொடுக்க முடிவு செய்தோம். முறைப்படி நம் தூதரை அந்த நாட்டிற்கு அனுப்பி வைத்தோம். எங்கு எப்பொழுது இரு நாட்டுப் படைகளும் போரிடுவது? இது குறித்து சேர நாட்டு அரசரே முடிவு செய்ய வேண்டும் என்றோம். இதுவரை அந்த அரசரிடம் இருந்து எந்தச் செய்தியும் இல்லை." "வெற்றி வேந்தே! சேர அரசரும் போருக்கு அஞ்சுபவர் அல்லர். எங்கு போர் செய்வது? ஏற்ற இடத்தைத் தேர்ந்து எடுப்பதில் தாமதம் என்று நினைக்கிறேன். விரைவில் செய்தி வரும்" என்றார் அமைச்சர். அப்பொழுது வீரன் ஒருவன் அரசவைக்குள் வந்தான். அரசரைப் பணிவாக வணங்கினான். "காவிரி நாட வாழி! வெற்றி வேந்தே வாழி! நீதிநெறி தவறாத வேந்தே வாழி" என்று வணங்கினான். "வீரனே! என்ன செய்தி?" "அரசே! சேர நாட்டுத் தூதர் வந்திருக்கிறார். உங்கள் அனுமதிக்காக வாயிலில் காத்திருக்கிறார்." "தூதனை உடனே இங்கு அழைத்து வா." "கட்டளை அரசே" என்று வணங்கிவிட்டு வீரன் சென்றான். தூதன் உள்ளே நுழைந்தான். அரசரைப் பணிவா வணங்கினான். "அரசே! வாழி! எங்கள் பேரரசர் சேரமான் நெடுஞ்சேரலாதன் செய்தி அனுப்பி உள்ளார்." "தூதனே! உன் வருகையைத் தான் எதிர்பார்த்து இருந்தோம். அந்த மகிழ்ச்சியான செய்தியைச் சொல். எங்களுக்குத் திறை செலுத்த உங்கள் அரசர் ஒப்புக் கொண்டாரா? அல்லது சோழர் பெரும்படையைச் சந்திக்க உள்ளாரா? எதைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்?" "அரசே! எங்கள் அரசர் பெருமான் வீரர்களுக்கு எல்லாம் வீரர். பகை அரசர்கள் நடுங்கும் பேராற்றல் வாய்ந்தவர். எம் நாட்டு மக்களும் வீர மறவர்கள். போர் வேண்டி எங்கள் நாட்டிற்கு ஓலை வந்தது இல்லை. உங்கள் ஓலையைக் கண்டு எங்கள் அரசர் மகிழ்ச்சி அடைந்தார். வீரர்களோ நல்விருந்து கிடைத்தது என்று ஆரவாரம் செய்தார்கள். போர் என்று முடிவு செய்து விட்டார் எங்கள் அரசர். போரிடுவதற்கு ஏற்ற இடத்தையும் தெரிவு செய்து விட்டார். வெண்ணிப் பறந்தலை என்ற இடம் தான் அது. வரும் முழுமதி நாளன்று இரு படைகளும் அங்கே சந்திக்கலாம். இதுதான் எங்கள் அரசர் அனுப்பிய செய்தி" என்றான் தூதன். சோழ அரசரை வணங்கி விட்டுப் புறப்பட்டான். "அமைச்சரே! கடல் போன்ற பெரும்படை நம்மிடம் உள்ளது. போர்ப் பயிற்சி மிக்க எண்ணற்ற வீரர்கள் உள்ளனர். நம்மை வெல்லும் ஆற்றல் யாருக்கு உள்ளது? நம் பேரரசுக்கு உட்பட்ட சிற்றரசனாக சேரன் இருந்து இருக்கலாம். வீணாக நம்முடன் போரிட்டு அழியப் போகிறான்." "அரசே! சேர அரசரின் தன்மானம் நமக்குக் கீழ்ப்படிய மறுக்கிறது. வரும் முழுமதி நாள் நம் நாட்டிற்கு வெற்றி நாள். உங்கள் வீரச் சிறப்பை உலகமே அறியும் நன்னாள்" என்றார் அமைச்சர். "நன்று சொன்னீர்! அமைச்சரே! படைத்தலைவரே! நம் பெரும்படை நாளையே வெண்ணிப் பறந்தலை நோக்கிப் புறப்படட்டும். சேரர் படையின் வருகைக்காக நாம் அங்கே காத்திருப்போம். வீரம் பேசிய அந்தச் சேரனைப் போர்க்களத்தில் நேருக்கு நேர் சந்திக்கிறேன். என் வேலுக்கு அவன் பதில் சொல்லட்டும்." "கட்டளையை உடனே நிறைவேற்றுகிறேன்" என்றார் படைத்தலைவர். அரசரை வணங்கி விட்டுச் சென்றார். சோழர் படை வெண்ணிப் பறந்தலையை அடைந்தது. "படைத் தலைவரே! இந்த இடம் தான் வெண்ணிப் பறந்தலையா? கண்ணுக்கு எட்டிய தொலைவு மணற் பரப்பு தான் உள்ளது. செடிகளோ கொடிகளோ மரங்களோ எதுவும் இல்லை. நல்ல இடத்தைத்தான் சேர அரசர் தேர்ந்து எடுத்து உள்ளார்" என்றார் சோழ அரசர். "ஆம் அரசே" என்றார் படைத்தலைவர். முழுமதி நாள் வந்தது. காலை நேரம். இரு நாட்டுப் படைகளும் எதிரெதிரே அணிவகுத்து நின்றன. சோழர் பெரும்படை முன் சேரர் படை சிறுத்துக் காட்சி அளித்தது. கரிகாற் பெருவளத்தான் சோழர் படைக்குத் தலைமை தாங்கித் தேரில் அமர்ந்தார். அதே போலச் சேரமான் நெடுஞ்சேரலாதனும் தன் தேரில் அமர்ந்தார். இரு நாட்டு முரசங்களும் ஒரே நேரத்தில் முழங்கின. போர் தொடங்கியது. வீரர்கள் வீர முழக்கம் செய்தனர். ஒருவரோடு ஒருவர் கடுமையாகப் போரிட்டனர். யானைகளின் பிளிறல் ஒரு பக்கம் கேட்டது. குதிரைகளின் கனைப்பொலி இன்னொரு பக்கம் கேட்டது. வாளோடு வாள் மோதும் ஓசை பல இடங்களில் கேட்டது. எங்கும் ஆரவாரம் இருந்தது. கரிகாற் பெருவளத்தானும் நெடுஞ்சேரலாதனும் போர்க் களத்தில் நேருக்கு நேர் சந்தித்தனர். சினத்தால் இருவர் கண்களும் தீ உமிழ்ந்தன. இருவரும் போர் செய்யத் தொடங்கினர். வெற்றி தோல்வி அறியவே முடியவில்லை. இருவரும் இணையாகப் போர் செய்து கொண்டிருந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் அது நடந்து முடிந்தது. சோழ அரசர் தன் வேலைச் சேர அரசரின் மார்பில் பாய்ச்சினார். சேர அரசரின் மார்பை ஊடுருவிப் பாய்ந்தது அந்த வேல். அப்படியே மண்ணில் சாய்ந்தார் சேர அரசர். அவர் உடலிலிருந்து வழிந்த குருதி நிலத்தைச் செம்மை ஆக்கியது. "ஆ! நம் அரசர் வீழ்ந்து விட்டார்" என்ற சேர வீரர்களின் அவலக் குரல் எங்கும் கேட்டது. "நாம் வெற்றி அடைந்து விட்டோம். நம் வீரத்திற்குப் பெருமை சேர்ந்து விட்டது. வீரத்துடன் போரிட்டான் சேர அரசன். என்ன பயன். என்னிடம் தோற்று வீழ்ந்தான். வெற்றி அடைந்த நம் படை போரிடுவதை நிறுத்தட்டும். ஆரவாரத்துடன் நாடு திரும்பட்டும்" என்று கட்டளை இட்டார் சோழ அரசர். வேல் பாய்ந்ததால் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார் சேர அரசர். வீரர்கள் அவரைப் பாசறைக்குக் கொண்டு சென்றனர். அரசரைச் சோதித்த மருத்துவர் "அரசரின் மார்பில் பாய்ந்த வேல் முதுகைத் துளைத்து உள்ளது. ஏராளமான குருதி வெளியேறி விட்டது. வேலைப் பிடுங்கி விட்டேன். மேலும் குருதி வெளியேறா வண்ணம் மருந்திட்டு உள்ளேன். உடனே நம் அரசரை அரண்மனைக்குத் தூக்கிச் செல்லுங்கள். ஆற்றல் வாய்ந்த மூலிகைகள் பல அங்கு உள்ளன. அவர் உயிர் பிழைக்க வாய்ப்பு உண்டு. நாடித்து துடிப்பு அடங்கிக் கொண்டே வருகிறது. விரைந்து செயல்படுங்கள்." மயங்கிக் கிடந்த சேர அரசரைப் பல்லக்கில் வைத்தார்கள் வீரர்கள். பல்லக்கு விரைந்து கருவூரை அடைந்தது. சோழ நாடெங்கும் விழாக் கோலம் பூண்டது. வீதியெங்கும் தோரணங்கள் கட்டப்பட்டன. வெற்றியுடன் திரும்பும் அரசரையும் வீரர்களையும் வாழ்த்தொலி எழுப்பி வரவேற்றனர் மக்கள். எங்கும் வெற்றி விழாக் கொண்டாட்டங்கள் நிகழ்ந்த வண்ணம் இருந்தன. வெண்ணிப் பறந்தலைப் போர் நிகழ்ந்து சில திங்கள் கழிந்தன. வழக்கம் போல அரசவை கூடி இருந்தது. அரியணையில் கரிகாற் பெருவளத்தான் அமர்ந்து இருந்தார். அவையினர் அவரவர் இருக்கையில் இருந்தனர். வீரன் ஒருவன் உள்ளே வந்து அரசரை வணங்கினான். "வெற்றி வேந்தே வாழி! பெரும்புலவர் வெண்ணிக் குயத்தியார் வந்து கொண்டிருக்கிறார்" என்றான். "ஆ! பெரும்புலவர் வெண்ணியக் குயத்தியாரா? இங்கு வருகிறாரா? அவர் வருகையால் நம் நாடே பெருமை பெற்றது" என்று அரியணையில் இருந்து இறங்கினார் அரசர். புலவர் வெண்ணியக் குயத்தியார் உள்ளே நுழைந்தார். அவரை வரவேற்ற அரசர் "வாருங்கள்! வெண்ணிக் குயத்தியாரே! வாருங்கள்" என்ற மலர்ந்த முகத்துடன் வரவேற்றார். அவையினர் எல்லோரும் எழுந்து "புலவர் வெண்ணிக் குயத்தியார் வாழ்க" என்று வாழ்த்தொலி எழுப்பினார்கள். உயர்ந்த இருக்கை ஒன்றைக் காட்டிய அரசர் "புலவரே! இதில் அமருங்கள்" என்று வேண்டினார். தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பைக் கண்டு மகிழ்ந்தார் புலவர். அந்த இருக்கையில் அமர்ந்தார். அரசரும் அரியணையில் அமர்ந்தார். புலவர் எழுந்து நின்று "நானிலம் காக்கும் அரசே வாழி! செங்கோல் தவறாத அரசே வாழி! பகை நடுங்கும் வெற்றி வேந்தே வாழி! தமிழின் மீது நீர் கொண்டிருக்கும் பேரன்பை உலகமே போற்றுகிறது. உம்மைப் போல் புலவர்களை மதிக்கும் அரசர் யார் இருக்கிறார்கள்? உம்மோடு உரையாடி மகிழவே இங்கு வந்தேன். என் சில நாட்கள் இங்கே தங்குவதாகத் திட்டம்" என்றார். "தமிழ் கூறும் நல்லுலகம் போற்றும் புலவர் பெருந்தகையே! கிடைத்தற்கு அரிய பெரும் பேறாகக் கருதுகிறோம். உங்கள் வருகையால் இந்தச் சோழ நாடே சிறப்புப் பெற்றது. நீங்கள் இங்கேயே நிலையாகத் தங்கினால் பெரிதும் மகிழ்வோம்" என்றார் அரசர். "வெற்றி வேந்தே! எங்கள் அறிவுச் செல்வம் ஒரு நாட்டிற்கு உரியது அல்ல. உலகிற்குப் பயன்பட வேண்டும். பல நாடுகளையும் சுற்றி விட்டுச் சேர நாடு சென்றேன். அங்கே சில நாட்கள் தங்கினேன். அங்கிருந்து இங்கு வந்தேன்" என்றார் அவர். "சேர நாட்டிலிருந்தா வருகிறீர்கள்? எனக்கும் சேர அரசனுக்கும் நிகழ்ந்த போரைப் பற்றிக் கேட்டு இருப்பீர்கள். அதைப் போன்று கடுமையான போர் எங்கும் நிகழ்ந்தது இல்லை. அந்தப் போரில் அடைந்த வெற்றி எனக்குப் பெரும்புகழைத் தந்தது. அதைப் போற்றிப் புகழாத புலவர்களே இல்லை. அந்தப் போரைப் பற்றி நீங்களும் கேள்விப்பட்டு இருப்பீர்கள். அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" என்று கேட்டார் அரசர். "அரசே! போர் முடிந்து விட்டது. சேர நாட்டு நிகழ்ச்சிகள் எதுவும் உமக்குத் தெரியாதா?" "புலவரே! சேரரின் படையைப் போர்க்களத்தில் சந்தித்தேன். என் வேலால் தாக்கப்பட்ட ரே அரசன் நிலத்தில் வீழ்ந்தார். வெற்றிக்காகப் போர் செய்தேன். என் எண்ணம் நிறைவேறியது. தோல்வி அடைந்த அவர்களால் பல ஆண்டுகள் போரிட முடியாது. அதனால் அங்கு என்ன நிகழ்ந்தது என்பதை நான் பொருட்படுத்தவில்லை." "அரசே! உங்கள் வேலால் தாக்கப்பட்டார் அரசர் நெடுஞ்சேரலாதன். அவர் உயிர் பிழைத்து விட்டார். அந்தச் செய்தியாவது உங்களுக்குத் தெரியுமா?" "புலவரே" என்னால் நம்ப இயலவில்லையே. என் வேல் நெடுஞ்சேரலாதனின் மார்பைத் துளைத்து ஆழமாகப் பாய்ந்தது. அப்படியே நிலத்தில் அவர் வீழ்ந்தார். அவர் உயிர் பிழைக்க வாய்ப்பே இல்லையே." "அரசே! சேர நாட்டு மூலிகைகளின் ஆற்றல் அளவிட முடியாதது. அவை இறந்தவரின் உயிரையே மீட்கும். அப்படி இருக்கையில் படுகாயம் அடைந்த அரசரின் உயிரையா மீட்காது?" "மூலிகைகளால் சேர அரசர் உயிர் பிழைக்கட்டும். என்னிடம் தோற்ற பழி அவரை விட்டு நீங்காதே. அதற்கு அவர் போர்க்களத்திலேயே இறந்து இருக்கலாம். உயிர் பிழைத்துப் பழி சுமக்கின்ற கொடுமை யாருக்கு வேண்டும்?" "அரசே! சேர அரசர் உயிர் பிழைத்ததால் புகழில் உயர்ந்து விட்டார். புலவர்கள், சான்றோர்கள் எல்லோரும் சேர அரசரையே புகழ்ந்து பேசுகிறார்கள். நீங்கள் போரில் அடைந்த வெற்றிப் புகழும் மங்கி விட்டது." "புலவரே! போரில் பெருவீரம் காட்டி வென்றவன் நான். என்னிடம் தோற்று உயிர் பிழைத்தவன் சேர அரசன். அவனை இந்த உலகம் புகழ்கிறதா? கேட்பதற்கு வேடிக்கையாக உள்ளதே?" "அரசே! உங்கள் வேல் சேர அரசரின் மார்பில் ஆழமாகப் பாய்ந்தது. முதுகைத் துளைத்து வெளியே வந்தது." "என் வீரத்திற்கும் வலிமைக்கும் அந்த வேலே சான்று ஆகிறதே." "அரசே! உங்கள் வேலால் நிலத்தில் வீழ்ந்தார் சேர அரசர். வீரர்கள் அவரைக் கருவூருக்கு எடுத்துச் சென்றார்கள். மருத்துவர்கள் அரிய பச்சிலைகள் கட்டினார்கள். ஒரே திங்களில் அவர் மீண்டும் பழைய வலிமையைப் பெற்றார். மார்பிலும் முதுகிலும் வேல் குத்திய வடு இருப்பை அறிந்து துடித்தார்." "இதில் துடிப்பதற்கு என்ன இருக்கிறது? புலவரே" "அரசே! விழுப்புண் பட்ட வடு மார்பில் இருந்தால் பெருமை. நேருக்கு நேர் நின்று போர் செய்தவர். எதிரியின் படைக் கலங்களை மார்பில் தாங்கியவர் என்று புகழ்வார்கள். முதுகில் வடு இருந்தால் புறமுதுகு காட்டி ஓடி வந்தது ஆகாதா? அது வீரர்களுக்கு மாறாப் பழி தரும் செயல் அல்லவா?" "ஆம் புலவரே! புறமுதுகிட்டு ஓடுவது மிக இழிவான செயல். அப்படிப்பட்டவனை ஈன்ற தாய் வேண்டாள். மனைவி விரும்பாள். உற்றாரும் மற்றோரும் வெறுப்பார்கள். இதில் சேர அரசர் துடிப்பதற்கு என்ன இருக்கிறது? என் வேலை அவர் மார்பில் தாங்கியதை எல்லோரும் அறிவார்களே. அதே வடுதானே முதுகில் உள்ளது." "அரசே! சேர அரசர் மானம் மிக்கவர். முதுகில் வடு உள்ளது. உண்மை அறியாதவர்கள் என்ன நினைப்பார்கள்? புறமுதுகு காட்டியதால் ஏற்பட்ட வடு என்று தானே நினைப்பார்கள். என்ன செய்வது என்று கலங்கினார். அந்தப் பழி நீங்க வடக்கிருந்து உயிர் துறக்கும் முடிவிற்கு வந்தார்." "என்ன! செய்யாத பழிக்காக வடக்கிருக்க நினைத்தாரா? இதைப் புலவர்களும் சான்றோர்களும் தடுக்க வில்லையா?" அரசே! சேர அரசரின் செயலை எல்லோரும் தடுக்க முயற்சி செய்தார்கள். ஆனால் அவரோ எம் சேரர் குடி மானம் மிக்க குடி. என் முன்னோன் ஒருவன் பகைவரால் சிறையிடப்பட்டான் காலந்தாழ்த்து வந்த நீரைப் பருகாமல் உயிரை விட்டான். அப்படிப்பட்ட உயர்ந்த மரபில் வந்தவன் நான். என்னைப் புறப்புண் கண்டவன் என்றால் குடிக்கே இழுக்கு நேருமே. என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. நான் வடக்கிருந்து உயிரைத் துறப்பது உறுதி என்றார். "பிறகு என்ன நடந்தது புலவரே?" "வேறு வழி அவர்களுக்குத் தெரியவில்லை. அரசர் வடக்கிருப்பதற்கு உரிய இடத்தைத் தேர்ந்து எடுத்தார்கள். அங்கேயே வடக்கிருந்து உயிர் துறந்தார் அவர்." "ஆ! என்ன சேர அரசரின் மானச் சிறப்பு! செயற்கருஞ் செயலை அல்லவா அவர் செய்து விட்டார். செய்யாத பழிக்காக இதுவரை யார் உயிரைத் துறந்து இருக்கிறார்கள்? அவர் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்". "அரசே! போரில் பெரு வீரம் காட்டி வெற்றி பெற்றவர் நீங்கள். உங்களிடம் தோற்ற சேர அரசரோ புறப்புண்ணுக்கு நாணினார். வடக்கிருந்து உயிர் துறந்தார். உங்கள் புகழை விட அவர் புகழையே சிறப்பித்துப் பாடுகிறார்கள் புலவர்கள்." "புலவரே! என் வீரத்தினும் சேர அரசரின் மானம் உயர்ந்து நிற்கிறது. வென்ற நான் தோற்றவனாகி விட்டேன். தோற்றும் அவர் புகழில் என்னை வென்று விட்டார். வாழ்க அவர் புகழ்" என்று உணர்ச்சி பொங்கச் சொன்னார் கரிகாற் பெருவளத்தான். 1. "நனியிரு முந்நீர் நாவா யோட்டி வளிதொழி லாண்ட வுரவோன் மருக களியியல் யானைக் கரிகால் வளவ செனறமர்க் கடந்தனின் னாற்றற் றோன்ற வென்றோய் நின்னினு நல்ல னன்றே கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை மிகப்புக ழுலக மெய்திப் புறப்புண் ணாகி வடக்கிருந் தோனே" (புறநானூற்றுப் பாடல் 66, வெண்ணிக் குயத்தியார் பாடியது)
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'மானமே பெரிது' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: முல்லா நசுரூதீன், ஈரான், கல்லறை, சக்ரவர்த்தி, அரசர், வளர்ச்சி, சுஃபி ஞானி, நகரம்
தலைப்பு: முல்லா நசுரூதீன்
| முல்லா நசுரூதீனின் கதை ஒன்று……………….. அவர் ஈரானில் பிறந்தவர், அவரது கல்லறை இன்னும் ஈரானில் உள்ளது. இந்த முழு உலகத்திலும் இல்லாத புது விதமான தனித்துவமான வித்தியாசமான கல்லறை அது. கோடிகணக்கான கல்லறைகள் இருந்தாலும் முல்லா நசுரூதீனின் கல்லறை போல எதுவும் கிடையாது. கல்லறை மீது ஒரு பெரிய பூட்டுடன் கதவு ஒன்று நிற்கிறது. அந்த பூட்டு……. முல்லா தான் சாகும் முன் எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். "நீங்கள் அந்த பூட்டின் சாவியை என்னுடன் புதைத்து விடுங்கள், அப்போதுதான் யாரும் இந்த கதவை திறக்க முடியாது." சக்ரவர்த்தி வந்து கூட பார்த்து விட்டு, "என்ன மடத்தனம் இது, இவரை புத்திசாலி என்று நினைத்துக் கொண்டிருந்தோமே, கொஞ்சம் கிறுக்குத்தனம் உண்டு என்றாலும் எல்லோராலும் இவர் நேசிக்கப்பட்டாரே" என்று கேட்டார். நசுரூதீனின் முக்கிய சீடர்களைப் பார்த்து சக்ரவர்த்திக் கேட்டார், "என்ன விஷயம்?" அவர்கள், "இது புதிதல்ல. அவர் எங்கு சென்றாலும் இந்த கதவை தூக்கிக் கொண்டு செல்வார். நாங்கள் அவரை ஏன் என்று கேட்டோம். அவர், நான் கதவை என்னுடன் தூக்கிக் கொண்டு சென்று விட்டால் யாரும் என் வீட்டினுள் நுழைய முடியாது. எல்லோரும் கதவின் வழியாகத்தான் வீட்டினுள் நுழைந்தாக வேண்டும். வீட்டைக் காப்பாற்றுவதற்காக நான் இந்த கதவை என்னுடன் எடுத்துச் செல்கிறேன் என்பார். இறப்பதற்கு முன் அவர், இந்த கதவை என்னுடைய கல்லறை மீது பொருத்தி பூட்டி விடுங்கள். சாவியை என்னுடன் புதைத்து விடுங்கள். எப்போது நான் சுத்தமான காற்றை சுவாசிக்க விரும்பினாலும் நான் கதவை திறந்து வெளியே வர முடியும் என்றார்". என்றனர். சக்ரவர்த்தி என்ன முட்டாள்தனம் என்று கூறினார். ஆனால் அவரும் முல்லாவை விரும்பினார். முக்கிய சீடர் கூறினார், "அதில் ஒரு விஷயம் இருக்கிறது. அவர் நான் இறந்து விட்டேன் என்று நினைக்காதீர்கள். என்னுடைய உடலைத்தான் நீங்கள் கல்லறையினுள் வைத்திருக்கிறீர்கள். நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன். என்னுடைய வாழ்வு அழிவற்றது என்றார்." ஆனால் அவர் எப்போதும் சிறிது கிறுக்கனாகத்தான் இருப்பார். வாழ்வு அழிவற்றது என்னும் இந்த கூற்றை நிரூபிக்கத்தான் அவர் கதவை கல்லறை மீது வைத்தார். "நான் வெளியே வர விரும்பினால் எந்த கணமும் என்னிடம் சாவி இருந்தால் நான் யாரிடமும் அனுமதி கேட்க வேண்டிய அவசியம் இல்லை. நான் கதவை திறந்து வெளியே வந்து நகரைச் சுற்றி சிறிது உலா வரலாம். உங்களால் என்னை பார்க்க முடியாது, ஆனால் நான் உங்களை பார்க்கலாம்." ஒரு முறை ஈரான் சக்ரவர்த்தி சார்பாக பெரும் பரிசுகளுடன் இந்திய சக்ரவர்த்தியை சந்திக்க முல்லாநசுரூதீன் அனுப்பப் பட்டார். முல்லா இந்திய சக்ரவர்த்தியை முழு நிலவு என புகழ்ந்தார். முல்லாவின் எதிரிகள் இந்த சேதியை கேள்விப்பட்டு அரசரிடம், "நீங்கள் அனுப்பிய ஆள் சரியில்லை. அவர் இந்திய அரசரை முழு நிலவு என்று புகழ்ந்து இருக்கிறார்." என்று குற்றஞ்சாட்டினர். சக்ரவர்த்தி, "அவர் வரட்டும், அவர் இதற்கு சரியான பதில் கூற வேண்டும், இல்லாவிடில் அவர் தனது தலையை இழக்க நேரிடும்." என்றார். முல்லா நசுரூதீன் திரும்பி வந்தார். இந்திய அரசர் அவர் புகழ்ந்து கூறியதில் மிகவும் மகிழ்ந்து பல பரிசுகளை அளித்திருந்தார். அதை பார்த்த ஈரானின் அரசர் மிகவும் ஆத்திரமடைந்து, "நசுரூதீன், உனது வாழ்வே மிகவும் அபாயத்தில் இருக்கிறது." என்றார். நசுரூதீன், "ஒவ்வொருவருடைய வாழ்வும் அபாயத்தில்தான் இருக்கிறது. உங்கள் வாழ்வு அபாயத்தில் இல்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களா?" என்று கேட்டார். சக்ரவர்த்தி, "தத்துவம் பேசாதே. நீ பதில் சொல்ல வேண்டும். நீ இந்திய அரசரை முழு நிலவு என்று புகழ்ந்து கூறியிருக்கிறாய். அது என்னை அவமரியாதை செய்வதாகும்." என்று கூறினார். நசுரூதீன், "நீங்கள் ஒரு முட்டாள். நீங்கள் அதன் பொருளை புரிந்து கொள்ளவில்லை. நீங்கள் வளரும் நிலா, ஒரு சிறிய பிறை போல இருப்பது சில நாட்கள்தான். பின் முழு நிலவாக மலரும். முழு நிலவு என்றால் தேயும் நாட்கள் வந்து விட்டன. அந்த இந்திய அரசர் ஒரு முட்டாள். அவர் நான் அவரை புகழ்ந்ததாக நினைத்துக் கொண்டிருக்கிறார். நான் அவரிடம் உங்களது நேரம் முடிந்து விட்டது. இனிமேல் வளர்ச்சி இல்லை. இனிமேல் தேயும் காலம்தான் என்று கூறினேன். ஆத்திரப்படும் நீங்கள் ஒரு முட்டாள். நீங்கள் வளரும் நிலா. நீங்கள் இன்னும் வெற்றியடைய வேண்டும். பெருக வேண்டும். நீங்கள் முழு நிலவாக மாற இன்னும் காலமிருக்கிறது" என்றார். சக்ரவர்த்தி இந்த விளக்கத்தால் மிகவும் மகிழ்ந்தார். நசுரூதானின் எதிரிகள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் இவர் இப்படி ஒரு விளக்கமளிக்கக் கூடும் என்று எதிர் பார்க்கவேயில்லை. யாரும் இப்படி நினைக்கவில்லை. அவர் எல்லோரும் முல்லா அரசரை அவமதித்துவிட்டதாகத்தான் நினைத்துக் கொண்டிருந்தனர். நசுரூதீன் ஒரு சூபி ஞானி. ஒரு சிறிது கிறுக்குத்தனம் பிடித்தவர். ஆனால் மிகவும் புத்திசாலித்தனம் படைத்தவர். ஒரு நாள் அவர் அந்த நகருக்கு வந்திருந்த அரிதான ஓவியங்கள் கண்காட்சியை காண தனது சீடர்களுடன் சென்றார். இங்கு விஷயம் என்னவென்றால் அவர் தனது கழுதையின் மீது சவாரி செய்ய வேண்டும். அவர் தனது சீடர்களிடம், "இப்போது என்ன செய்வது? நான் எனது கழுதையின் மீது வழக்கமான முறையில் அமர்ந்து சவாரி செய்தால் அப்போது எனது முதுகைத்தான் நீங்கள் பார்க்க முடியும். அது அவமரியாதையாகும். என்னால் எனது சீடர்களை அவமதிக்க முடியாது. நீங்கள் முன்னாடி நடந்தால் உங்களது முதுகுதான் என்னை நோக்கி இருக்கும். நீங்கள் அது போல என்னை அவமதிப்பீர்கள் என்று எனக்கு தோன்றவில்லை. ஆகவே நான் கழுதை மீது உங்களை நோக்கியவாறு அமர்ந்து செல்வது ஒன்றுதான் சாத்தியமான ஒன்றாக தெரிகிறது" என்றார். சீடர்கள், "ஆனால் இந்த நகரம் முழுவதும் அதை பார்த்து சிரிக்குமே!. நீங்கள் எங்களையும் முட்டாள்கள் போல தோன்ற செய்கிறீர்கள். ஆனால் இதிலும் ஒரு பாயிண்ட் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் உங்களுடன் எங்கு சென்றாலும் தொந்தரவுதான்". என்றனர். இந்த ஊர்வலம் நகரம் முழுவதும் சென்றது. எல்லோரும் பார்த்தனர். இது என்ன புது மாதிரியாக இருக்கிறது. யாரும் இது போல கழுதை மீது பின்புறமாக அமர்ந்து போனதை பார்த்ததேயில்லை. இறுதியில் ஒரு கூட்டம் கூடி, "எங்களுக்கு இது போல அமர்ந்து போவது ஏன் என்று தெரியும்வரை நாங்கள் உங்களை போக விட மாட்டோம்." என்றனர். நசுரூதீன், "விளக்கம் எளியது. நான் எனது சீடர்களை அவமதிக்க விரும்பவில்லை எனவே எனது முதுகை அவர்களுக்கு நான் காண்பிக்க முடியாது. எனது சீடர்கள் என்னை அவமதிப்பதை நான் விரும்பவில்லை. எனவே அவர்கள் எனக்கு முதுகை காண்பித்தபடி எனக்கு முன்னால் நடக்க முடியாது. எனக்கு பின்னால்தான் அவர்கள் நடந்தாக வேண்டும். இப்போது என்ன செய்வதென்று நீங்கள் சொல்லுங்கள். இதை எப்படி சமாளிப்பது? இது ஒன்றுதான் வழி."என்றார். மக்கள், "இது பைத்தியகாரத்தனமாக இருக்கிறது. ஆனால் இது ஒன்றுதான் வழி. உன் முதுகை பார்ப்பது யாருக்காவது அவமரியாதையாகிறது எனும்போது இது ஒன்றுதான் வழி. ஆதலால் நிச்சியமாக நீங்கள் செய்வது சரியானதுதான்." என்றனர். ஒரு சாதாரண மனிதன் நிச்சலனமாக இருக்கும்போது அவனது ஒவ்வொரு செயலும் முழுமையான தெளிவோடு இருக்கும், ஆனால் மேல்மட்டத்தில் அது கோமாளித் தனமானதாக தோன்றலாம். அவர் போதிதர்மர், மஹாகாஸியப் போன்றவர்கள் வரிசையில் இருப்பவரே. ஆனால் அவர் அவர்கள் எல்லோரையும் விட ஒரு சிறிது அதிக கிறுக்குத்தனம் உள்ளவராக இருக்கிறார். நிச்சலனமான இதயத்தில் இருந்து வெளிவருபவை யாவும் புத்திசாலித்தனம் போல மக்களால் புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்பது அவசியம் கிடையாது. அவை உனக்கு பொருந்தினால் போதும், யார் உன்னை புரிந்து கொள்கிறார்களோ அவர்கள் உன்னுடன் பொருந்தி இருப்பார்கள். ஆனால் இந்த உலகில் நிச்சலனமான இதயத்தின் தெளிவை புரிந்து கொள்ளும் மக்களை கண்டுபிடிப்பது மிகவும் அரிதான ஒன்றாகவும் கஷ்டமானதாகவும் இருக்கிறது. ஆனால் அது ஒன்றும் பிரச்னையில்லை. நிச்சலனமான இதயத்திற்கு எந்த அங்கீகாரமும் தேவையில்லை. அவர் தன்னுள் நிறைவடைந்து இருப்பதால் அது வெளிஉலகிற்கு பைத்தியக்காரத்தனமாக தோன்றலாம், ஆனால் அது அவரது இயல்பிலிருந்து வெளிவந்தால் அதைப் பற்றிய அக்கறை பட வேண்டிய அவசியம் இல்லை. அக்கறை கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் அது பொய்யானதாகவோ, போலியானதாகவோ, பாசாங்கு செய்வதாகவோ இருக்கக் கூடாது. அது உனது நிச்சலனமான இதயத்திலிருந்து வெளிவருவதாக இருக்க வேண்டும். பின் மக்கள் அதை அங்கீகாரம் செய்கிறார்களோ இல்லையோ செய்யும் ஒவ்வொன்றும் தெளிவானதாக இருக்கும். எத்தனை பேர் முல்லா நசுரூதீனை அங்கீகரித்தார்கள்? மிகவும் சிலரே. எத்தனை பேர் போதிதர்மரை அங்கீகரித்தார்கள்? மிகச் சிலரே. எத்தனை பேர் மஹாகாஷ்யபர் திடீரென சிரித்தவுடன் அங்கீகரித்தார்கள்? கௌதமபுத்தர் மட்டுமே. பத்தாயிரம் புத்த பிக்குகள் அங்கு கூடி இருந்தனர். ஆனால் யாராலும் அந்த கிறுக்குத்தனமான செய்கையை புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அது நிச்சலனமான இதயத்திலிருந்து, தெளிவான கண்ணோட்டத்திலிருந்து வந்தது. அதே போல தெளிவான கண்ணோட்டம் கொண்ட மனிதனால் மட்டுமே அதை புரிந்து கொள்ள முடியும். மனீஷா, யார் தங்களது நிச்சலனத்தில் நுழைந்து விட்டார்களோ அவர்களால் மட்டுமே மற்ற நிச்சலனமான இதயத்தை புரிந்து கொள்ள முடியும். மற்றவர்களுக்கு அது ஒரு புதிராக, கிறுக்காக, மடத்தனமாக தோன்றும். பல் வேறு விதமான அழகான புத்தர்கள் இருக்கின்றனர். அவர்களது செயல்கள் அவர்களது நிச்சலனமான இதயத்துடன் இணைந்ததாக இலயத்துடன் இருக்கின்றன. வேறு எதை பற்றியும் அக்கறை இல்லை. அதை அறிவாளித்தனத்தினால் புரிந்து கொள்ள முடியாது. அதை பொதுவான மக்கள் புரிந்து கொள்வது கடினம். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: ஒரு நாள் காலையில் ஒரு மரத்தின் மீது சேவல் உட்கார்ந்து இருந்தது. காலை நேரம் ரம்மியமாக இருந்தபடியால் உற்சாகமாய் சேவல் கூவியது. பலதடவை கூவியது. இதைக் கேட்ட நரி அங்கே வந்தது. நரிக்கு சரியான பசி இருந்தது. அந்த சேவலை பிடித்து சாப்பிட ஆசைப்பட்டது, ஆனால் சேவல் மரத்தின் மீது இருந்தபடியால் அதைப் பிடிக்க முடியவில்லை. இதற்காக ஒரு தந்திரம் செய்ய நினைத்தது. உடனே சேவலைப்பார்த்து, “சகோதரனே!, வணக்கம். ஒரு நல்ல செய்தியை நீ கேள்விபட்டாயா? பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் ஒரு சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டு விட்டது. இனி ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ளக் கூடாது. அன்பாய் நடந்துக் கொள்ள வேண்டும், சகோதர மனப்பான்மையை வளர்க்க வேண்டும். நீ கொஞ்சம் கீழே வாயேன். இந்த நல்ல செய்தியைப் பற்றி பேசுவோம்” என்றது . நரியின் தந்திரப் பேச்சைச் சேவல் புரிந்து கொண்டது. அதை வெளியே காட்டவில்லை. தூரத்தில் எதையோ பார்ப்பதைப் போல் தலையைத் தூக்கிப் பார்த்தது. இதைக் கண்ட நரி, என்ன சகோதரா!, ரொம்ப அக்கறையாக எதையோ அடிக்கடி பார்க்கிறாயே. அங்கே என்ன இருக்கிறது? என்று கேட்டது. அதற்கு சேவல், அங்கே சில வேட்டை நாய்கள் வருவது மாதிரி தெரிகிறது. வேட்டை நாய்கள் தானா என்பதைக் கவனிக்கிறேன் அவ்வளவு தான் நரிக்கு உடல் நடுங்கி விட்டது, வேகவேகமாக “சரி, சரி நான் அப்புறமாக வந்து உன்னிடம் பேசுகிறேன்” என்று கூறி கிளம்பியது. சேவல், “அருமை சகோதரா, போகாதே, நான் இதோ கீழே வருகிறேன். நாய்களைக் கண்டு ஏன் பயப்படுகிறாய்? இப்பொழுது தானே நீ சொன்னாய், எல்லோருக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது” நரி “அந்த ஒப்பந்தைத்தைப் பற்றி அநேக பேர் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள், அந்த நாய்களுக்கு தெரியாமல் இருந்தால், நான் என்ன கதி ஆவது? நான் போகிறேன்”. இதை சொல்லி விட்டு நரி ஒரே ஓட்டமாக ஓடி காட்டுக்குள் மறைந்தது. சேவல் “யாரிடம் ஏமாற்றப் பார்க்கிறாய், உன்னுடைய கெட்டிக்கார பொய்கள் என்னிடம் பலிக்காது” என்று கூறி சிரித்தது. கெட்டிக்காரன் புளுகினாலும் அது புத்திச்சாலியிடம் வெளிபட்டு விடும்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'கெட்டிக்காரன் புளுகு' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: சந்தையின் வழியாக பான்சான் நடந்து கொண்டிருந்தான். அப்பொழுது அருகில் இருந்த கசாப்புக்கடையில் கசாப்புக் கடைகாரனுக்கும் அங்கு கறி வாங்க வந்திருந்த ஒருவனுக்கும் இடையில் நடந்த உரையாடலைத் தற்செயலாகக் கேட்க நேர்ந்தது. வாங்க வந்தவன் "இருக்கின்ற கறியிலேயே நல்ல பாகமாக இருப்பதிலிருந்து ஒரு துண்டினை வெட்டிக் கொடு" என்று கேட்டான். கசாப்புக் கடைகாரன் "என்னுடைய கடையில் இருக்கின்ற அனைத்துமே நல்லதுதான்" என்றவன், "நன்றாக இல்லை என்று இங்கு உள்ள கறியின் ஒரு துண்டு பாகம் கூட இல்லை" என்று தனக்கே உரிய பாணியில் பதில் அளித்தான். கேட்டுக் கொண்டிருந்த பான்சானுக்கு சட்டென்று ஏதோ உரைத்தது போல் இருந்தது. தன்னொளியைப் பெற்றான்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'அனைத்துமே சிறந்தது' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: ஒரு காட்டில் ..நரி ஒன்று மிகவும் தாகத்துடன் நடந்து வந்துக் கொண்டிருந்தது. அப்போது ஒரு கொடியில் திராட்சைப் பழங்கள் கொத்துக் கொத்தாய் பழுத்திருந்ததை அது பார்த்தது. நம் தாகத்திற்கு ஏற்றது இந்த திராட்சைப் பழங்கள் என எண்ணியது. ஆனால் பழங்கள் சற்று உயரத்தில் நரிக்கு எட்டாத இடத்தில் இருந்தது. நரி சில அடிகள் பின்னுக்குச் சென்று வேகமாக ஓடி வந்து குதித்து பழங்களைப் பறிக்க எண்ணியது.ஆனால் வெற்றி கிடைக்கவில்லை. அதுபோல சிலமுறை செய்தும்..அதனால் பழங்களை பறிக்க முடியவில்லை. தன்னால் எட்ட முடியாத...தனக்குக் கிடைக்காத அந்த திராட்சைப் பழங்கள் புளிக்கும் என தனக்குத்தானே ஆறுதல் கூறிக்கொண்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தது. நமக்குக் கிடைக்காத பொருள் ஒன்றின் மீது தவறு கண்டுபிடிக்கும் குணம் கூடாது. மேலும் நரி தன் மூளையை உபயோகித்து..வேறு வழிகளிலும் முயன்றிருந்தால் பழம் அதற்குக் கிடைத்திருக்கும். கிடைக்காவிட்டால் குறைகூறுவது சிலருக்கு வழக்கம்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'நரியும் திராட்சையும்' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: பரமார்த்தரும் சீடர்களும் கந்தபுரம் என்ற ஊருக்குள் நுழைந்தார்கள். அப்போது அந்த ஊர் மக்கள் பெரும் அச்சத்தில் இருந்தார்கள். அதற்குக் காரணம் நரபலி சாமியார் நாகப்பா அந்த ஊரில் உலவுகிறான் என்பதுதான்! “குருவே! நாம் எந்தக் காரியத்தைச் செய்தாலும் நமக்கே ஆபத்தாக முடிகிறதே! அது ஏன்?” என்று மட்டி கேட்டான். “நாம் எல்லோரும் போன பிறவியில் நிறைய பாவம் செய்து விட்டோம் போலிருக்கிறது!” என்றார் பரமார்த்தர். “குருவே! உடனே இதற்கு ஏதாவது பரிகாரம் செய்தே ஆக வேண்டும்” என்று சொன்னான், முட்டாள். குருவும் சீடர்களும் அன்று இரவே ரகசியமாக ஆலோசனை செய்தார்கள். “குருவே! முனிவர்களைப் போல யாகம் செய்தால் நாம் பாவம் எல்லாம் போய்விடும்” என்றான் மூடன். “அதற்கு நிறைய பணம் செலவாகும். நம்மால் முடியாது. வேண்டுமானால், நரபலி கொடுக்கலாம்” என்றார் பரமார்த்தர். “நரபலியா? ஐயையோ!” என்று சீடர்கள் அனைவரும் அலறினார்கள். “சீடர்களே! நமக்கு நல்ல காலம் பிறக்க வேண்டுமானால் நரபலி கொடுத்தே ஆக வேண்டும் வேறு வழியே இல்லை” என்று முடிவாகச் சொல்லி விட்டார், பரமார்த்தர். “அப்படியானால் யாரைப் பலி கொடுப்பது?” என்று கேட்டான் மண்டு. “வேறு யாரையாவது பிடிக்கப் போனால் மாட்டிக் கொள்வோம்! அதனால்……சீடர்களே… உங்களில் யாராவது ஒருவர்தான் பலியாக வேண்டும்! இந்த நல்ல செயலுக்கு யார் முன் வருகிறீர்கள்?” என்றார் பரமார்த்தர். அவ்வளவுதான்! “ஐயோ நான் பலியாகிவிட்டால், அப்புறம் உங்கள் சுருட்டுக்குக் கொள்ளி வைப்பது யார்?” என்று அழ ஆரம்பித்தான் முட்டாள். “ஐயையோ நான் மாட்டேன்” என்று மூடனும் மூக்கால் அழுதான். “குருவே! நாங்களும் பலியாக மாட்டோம்” என்றபடி மற்ற சீடர்களும் தூர ஓடப் பார்த்தனர். பரமார்த்தருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நெருதூரம் தாடியை உருவிக் கொண்டு யோசனை செய்தார். “சரி, சீடர்களே! நீங்கள் யாரும் பலியாக வேண்டாம்! வேறு ஒரு வழி தோன்றுகிறது. அதன்படிச் செய்வோம்” என்று சொல்லிப் படுத்து விட்டார் பரமார்த்தர். மறுநாள், சீடர்கள் அனைவரும் “எங்கள் குரு நரபலி கொடுக்கப் போகிறார்” என்று ஊர் முழுவதும் பெருமையோடு சொல்லிக் கொண்டு திரிந்தார்கள். அதனால் அந்த ஊர் அரசனுக்கும் செய்தி எட்டியது. பரமார்த்தரை, நரபலி சாமியார் நாகப்பா என்று தவறாக நினைத்து விட்டான். “நாகப்பாவையும் அவன் கூட்டத்தையும் கையும் மெய்யுமாகப் பிடித்து வாருங்கள்” என்று ஆணையிட்டான். நரபலி இடுவதற்காகக் குறிப்பிட்ட நாளும் வந்தது! பரமார்த்தரும் சீடர்களும் யாருக்கும் தெரியாமல் பதுங்கிப் பதுங்கிச் சென்று கொண்டு இருந்தார்கள். ஊர்க் கோடியில் இருந்த காளி கோயிலை அடைந்ததும் பரமார்த்தர் பரம சந்தோஷம் அடைந்தார். மண்டை ஓட்டு மாலையும், நீளம் நீளமான பற்களுமாக இருந்த பத்ரகாளி சிலையைப் பார்த்த சீடர்கள் பயந்து நடுங்கினார்கள். “ஏ, காளியம்மா! வாக்குக் கொடுத்தபடி உனக்கு நரபலி கொடுக்கப் போகிறோம்! நீதான் எங்களைக் காப்பாற்ற வேண்டும். ஜெய் காளி” என்று காளியின் கால்களில் விழுந்து வணங்கினார் பரமார்த்தர். சீடர்களும் ‘தடால்’ என்று விழுந்து கும்பிட்டார்கள். நடு இரவு ஆகிவிட்டதை அறிவிப்பதற்கு, அரண்மனையில் இருந்து மணியோசை கேட்டது. அப்போது, கோயிலைச் சுற்றிலும் மறைந்தபடி நின்று கொண்டிருந்த அரண்மனைக் காவலர்கள் சுறுசுறுப்பானார்கள். “சீடர்களே! சீக்கிரம் நாம் கொண்டு வந்த உயிரைப் பலி பீடத்தின் மீது வையுங்கள்!” என்று அவசரப்படுத்தினார், பரமார்த்தர். சீடர்களும் அவசரம் அவசரமாகத் தாங்கள் கொண்டு வந்த உயிரைப் பலி பீடத்தில் வைத்தனர். “ஓம்…ரீம்…பத்ரகாளி!…… இந்தா நரபலி!” என்று ஆவேசமாய்க் கத்தியபடி, பலி பீடத்தின் மீது கொடுவாளை வீசினார், பரமார்த்தர். உடனே அரண்மனை வீரர்கள் ஓடிவந்தது பரமார்த்தரையும் சீடர்களையும் சுற்றி வளைத்துப் பிடித்தனர். பரமார்த்தர் யாரைப் பலியிட்டார் என்று எல்லோரும் ஆவலோடு பலி பீடத்தைப் பார்த்தனர். அங்கே… ஒரு பல்லி, இரண்டு துண்டாகிக் கிடந்தது. அரண்மனை வீரர்களுக்கு ஒரே அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. “சே, நரபலி சாமியார் என்று நினைத்தோம். இவர் நரபல்லி சாமியாராக அல்லவா இருக்கிறார்” என்றபடி பரமார்த்தரையும் சீடர்களையும் அரசனிடம் அழைத்துச் சென்றார்கள். மன்னா! ஏன் எங்களைக் கைது செய்தாய்? நாங்கள் செய்த தவறு என்ன?” என்றார் பரமார்த்தர். “நரபலி கொடுப்பது எங்கள் நாட்டுச் சட்டப்படி குற்றம்” என்றான் மன்னன். “நாங்கள் என்ன, மனிதர்களையா பலி கொடுத்தோம்? கேவலம் ஒரு பல்லியைத்தானே கொன்றோம்” என்று சொன்னார் பரமார்த்தர். “அதுதான் நீங்கள் செய்த தவறு! எங்கள் நாட்டு மக்களின் குலதெய்வம் பல்லி! என் நாட்டுக் கொடியில் இருப்பதும் பல்லி சின்னம்! அந்தப் பல்லியைக் கொன்று, அவமரியாதை செய்த குற்றத்திற்காக உங்கள் அனைவரையும் சிறையில் இட ஆணையிடுகிறேன் என்று கட்டளையிட்டான், கந்தபுர மன்னன். ஐயோ! நரபலி கொடுத்தால் நல்லது நடக்கும் என்று நினைத்தோம். அதுவும் ஆபத்தில் கொண்டு வந்து விட்டு விட்டதே” என்று புலம்பியபடி குருவும் சீடர்களும் சிறைக்குச் சென்றார்கள்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'நரபலி சாமியார்' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: கிருஷ்ண தேவராயர், தெனாலிராமன், அரண்மனை, மோதிரம், தொட்டி, சிறிய மர டப்பா, யானை
தலைப்பு: மோதிரம்
| விஜயநகரப் பேரரசின் அவை கலைந்தது. அரசர் கிருஷ்ண தேவராயர் வெளியேறிக் கொண்டிருந்தார். மற்ற உறுப்பினர்களும் பின் தொடர்ந்தனர். அப்போது அமைச்சர் தெனாலிராமனிடம் மெல்லிய குரலில், "தெனாலி... உனக்கோ வயதாகி விட்டது. ஏன் நீ அரசரிடம் கேட்டு பணி ஓய்வு பெறக் கூடாது?" என்றார். அது அரசரின் காதில் விழுந்து விடவே, அரசர் சிரித்தவாறு, "தெனாலிராமா! வேண்டுமானால் சொல்... மகிழ்ச்சியோடு தருகிறேன்" என்றார். "அப்படியானால் சரி... ஆனால், ஒரு நிபந்தனை! எனக்குப் பதிலாக வரப்போகிறவரை நான்தான் சோதித்துத் தேர்வு செய்து தருவேன்..." என்றார். "அதற்கென்ன... அப்படியே செய்யலாம்...!" என்று அரசர் ஏற்றுக் கொண்டார். "அப்படியானால் உங்கள் மோதிரத்தை என்னிடம் கொடுங்கள்" என்றார் தெனாலிராமன். ஏன்...? எதற்கு? என்று அரசர் கேட்கவில்லை. கழற்றப் போனார். அதற்குள் முந்திக் கொண்டு, அமைச்சர் தன் மோதிரத்தைக் கழற்றிக் கொடுத்து விட்டார். பெற்றுக்கொண்டே தெனாலிராமன், "அடுத்த வியாழக்கிழமை சோதனை... அதில், வெற்றி பெறுபவர் எனது பதவியைப் பெறுவார்... நான் ஓய்வில் போய்விடுகிறேன்" என்றார். மோதிரத்தைப் பெற்றுக் கொண்ட தெனாலி, ஒரு சிறிய மர டப்பாவில் அதை வைத்து மூடி, அரண்மனையில் இருந்த யானை நீர்குடிக்கும் ஆழமான பெரிய தொட்டியினுள் அதைப் போட்டு விட்டு, "யார் இதை எடுக்கிறாரோ, அவரே எனக்குப் பின் என் பதவிக்கு வரமுடியும்..." என்றார். அடுத்த சில நாட்களில், பதவித் தேர்வுக்கு மனு செய்திருந்த இளைஞர்கள் அனைவரும் வந்து ஆழமான தொட்டியைப் பார்த்தனர். அப்போது தொட்டி முற்றிலும் வறண்டு போயிருந்தது. மோதிர டப்பா அடியில் கிடந்தது. அதனுள் எப்படி இறங்கி அதை எடுப்பது? அனைவரும் பல்வேறு உபாயங்களைச் செய்து பார்த்தனர். எவராலும் எடுக்க முடியவில்லை. அதற்குள் தெனாலிராமன் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. அமைச்சர், அவர் காதில் விழும்படியாகவே, "தெனாலிராமன் அந்த மோதிரத்தைத் தானே அபகரித்துக் கொள்ளச் செய்யும் தந்திரம் இது... இல்லாவிட்டால், அவனே அதை வெளியில் எடுத்துக் காட்டட்டுமே...!" என்றார். அதைக் கேட்டதும், தெனாலிராமன் நேராக அரண்மனைக்குச் சென்றார். அரசர் ஒவ்வொரு வருடமும் ஹோலிப் பண்டிகையின் போது அந்த யானைத் தொட்டியில்தான் வண்ணநீரை நிரப்புவது வழக்கம். அதற்கு நீர் நிரப்பவும் வடி கட்டவும் தனித்தனிக் குழாய்கள் உண்டு. தெனாலி சென்று நீர் நிரப்பும் குழாயை திறந்து விட்டார். தொட்டியில் நீர் நிரம்பவே, அடியில் கிடந்த சிறிய மர டப்பா நீரில் மிதந்து மேலே வந்துவிட்டது. அதை எடுத்துத் திறந்து மோதிரத்தை அரசர் கையில் ஒப்படைத்து விட்டார். அரசரிடமிருந்து அது அமைச்சரைப் போய்ச் சேர்ந்து விட்டது. மகிழ்ச்சி அடைந்த அரசர் கிருஷ்ண தேவராயர், "மோதிரத்தை எடுத்துத் தருபவர் தான் உனக்குப் பிறகு உன் பதவிக்கு வர முடியும் என்றாய்... இப்போது நீயே எடுத்துத் தந்து விட்டாய்... எனவே, உன் பதவி உன்னையே வந்தடைந்து விட்டது. ஆகவே, உனக்கு ஓய்வு தருவது பற்றி இனி நான் எண்ணிக் கூடப் பார்க்க முடியாது" என்றார். அமைச்சர் வெட்கித் தலைகுனிந்தார். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: வீரசிம்மன் ஒரு குறுநல மன்னர்! சிற்றரசராக இருந்த அவர். அக்பருடைய ஆதிக்கத்தில் இருந்தார். முகலாய சாம்ராஜ்யத்திற்கு கப்பம் செலுத்தி, அவர்களுடன் நட்புறவோடிருந்தார். தனது ராஜ்யத்தில் குடிமக்களின் நிம்மதியையே பெரிதாக மதித்த வீரசிம்மன், முகலாயர்களின் அடிமையாக இருந்ததைப் பொருட்படுத்தவில்லை. ஆனால், அவருடைய ராஜ்யத்தில் இருந்த சில இளைஞர்கள் மன்னர் தன்மானத்தை அடகுவைத்து விட்டதாகக் கருதினர். அந்த இளைஞர்கள் தயக்கமின்றி அவரை அணுகி அவருடைய கொள்கைக்குத் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தனர். சுதந்திரம் தங்களுடைய பிறப்புரிமை என்றும், நாட்டின் அமைதிக்காக, முகலாயர்களின் அடிமைகளாகத் திகழ்வது அவமானம் என்றும் தங்கள் கருத்தை வெளிப்படுத்தினர். அதற்கு வீரசிம்மன், “நானும் சுதந்திரத்தை விரும்புகிறேன். ஆனால் அதைப் பெறுவதற்காக, இரத்த ஆறு ஓடுவதை நான் விரும்பவில்லை, முகலாயர்கள் மிகப்பலம் பொருந்தியவர்கள். அவர்களுடைய படைப்பலத்திற்கு முன் குறுநல மன்னனாகிய என்னால் ஒன்றும் செய்ய முடியாது” என்றார். அதற்கு அவர்கள் “படைப்பலத்தை மட்டும் ஏன் ஒப்பிடுகிறீர்கள்? நம்முடைய அறிவினால் முகலாயர்களை வெற்றி கொள்ள முடியாதா?” என்றனர். “நம்மிடம் அத்தகைய அறிஞர்கள் இருக்கிறார்களா?” என்றார் வீரசிம்மன். “ஏன் இல்லாமல்?” என்றனர் இளைஞர்கள். “ஒன்று தெரிந்து கொள்ளுங்கள்! அக்பரின் சபையில் உள்ள அறிஞர்களைப் போல் வேறு எங்குமே காண முடியாது” என்றார். “அவர்களுடைய அறிவுத்திறமையை சோதித்துப் பார்த்து விடலாமே!” என்று சவால் விட்ட ஓர் இளைஞன் “நான் ஒரு சோதனை சொல்கிறேன். நீங்கள் அக்பரிடம் அவருடைய தர்பாரிலிருந்து அறிவு நிரம்பிய ஒரு பானையை அனுப்பச் சொல்லி வேண்டுங்கள்” என்றான். “அறிவு நிரம்பிய பானையா? அது ஏன்? தண்ணீரைப் பிடிப்பதுபோல் பானையில் அறிவை நிரப்ப முடியுமா?” என்று கேட்டார் மன்னர். “அது இயலாது என்று நினைக்கிறீர்களா?” என்றான் அவன். “ஆம்! அது முடியாத ஒன்று!” என்றார் மன்னர். “இயலாததை செய்து முடிப்பவன்தான் அறிவாளி! அக்பரின் தர்பாரில் உலகிலேயே சிறந்த அறிவாளிகள் உள்ளனர் என்று சொன்னீர்களே! அத்தகைய தலைசிறந்த அறிவாளிகள் நாங்கள் கேட்டதை செய்யட்டுமே!” என்று திமிராகக் கேட்டான் அவன். மன்னரும் வேறு வழியின்றி அதற்கு ஒப்புக் கொண்டார். சில நாள்கள் கழித்து, வீரசிம்மன் நன்கு பேசவல்ல ஒரு தூதனை கை நிறைய வெகுமதிகளுடன் அக்பரிடம் அனுப்பினார். வீரசிம்மனின் தூதன் அக்பரின் தர்பாரில் நுழைந்து அவரை வணங்கி விட்டு, தனது மன்னர் கொடுத்தனுப்பியிருந்த வெகுமதிகளை அக்பரிடம் சமர்ப்பித்துவிட்டு, மன்னரின் வாழ்த்துகளையும் தெரிவித்தான். “வீரசிம்மன் நலமாக இருக்கிறாரா?” என்று அக்பர் வினவினார். “சக்கரவர்த்தியின் தயவு இருக்கும் போது எங்கள் மன்னரின் நலத்தைப் பற்றிக் கேட்க வேண்டுமா!” என்றான் தூதன் பணிவுடன். “உங்கள் மன்னருக்கு என் வாழ்த்துகளைத் தெரிவிப்பாய்!” என்ற அக்பர், “மன்னரிடமிருந்து எனக்கு ஏதாவது செய்தி உண்டா?” என்று கேட்டார். “பிரபு! உங்கள் தர்பாரில் பல அறிஞர்கள் நிறைந்துள்ளனர். அதனால் அறிவு நிரம்பிய ஒரு பானையை தயவு செய்து நீங்கள் கொடுத்தருளும் படி எங்கள் மன்னர் வேண்டிக் கொள்கிறார்“ என்றான் தூதன். அதைக் கேட்டு தர்பாரில் இருந்தவர் வியப்படைந்தனர். அறிவை எப்படிப் பானையிலிட்டு நிரப்ப முடியும்? ஆனால் அக்பர் அதைப் பற்றி தீவிரமாக சிந்திக்கவில்லை. தன் தர்பாரில் ஏராளமான அறிஞர்கள் இருக்கையில், இந்த விஷயத்தை அவர்களே கவனித்துக் கொள்வார்கள் என்று விட்டு விட்டார். அதனால் அவர் வீரசிம்மன் விரும்பிய பொருள் ஒரு மாதத்திற்குள் அனுப்பப்படும் என்று தூதனிடம் சொன்னார். “பிரபு! உங்கள் கருணைக்கு எல்லையே இல்லை! உங்களுடைய ஆதிக்கத்திலிருப்பதை எண்ணி எங்கள் மன்னர் பெருமைப்படுகிறார்” என்று தூதனும் சாமர்த்தியமாக அக்பர் மனம் குளிரும்படி பேசிவிட்டு, திரும்பிச் சென்றான். அவன் சென்ற பிறகு, அக்பர் தன் தர்பாரிலிருந்த அறிஞர்களை நோக்க அவர்களுள் ஒருவர் “பிரபு! வீரசிம்மன் கேட்டிருப்பதை கொடுக்க முடியவே முடியாது” என்றார். “முடியாதது என்று ஒன்றுமே கிடையாது. அதைக் கொடுத்தே ஆக வேண்டும்” என்று அக்பர் கோபத்துடன் கூறியதும், அனைவரும் பயத்தினால் ஒன்றும் பேசாமல் இருந்து விட்டனர். “பிரபு!” என்று மெதுவாக அழைத்தவாறே எழுந்த பீர்பால், “எனக்கு ஒரு பதினைந்து நாள் அவகாசம் கொடுங்கள். இந்த சவாலை நான் சமாளிக்கிறேன்” என்றார். “நிச்சயமாக இதை வெற்றிகொள்ள முடியுமா?” என்று அக்பர் கேட்டார். “நான் எப்போதாவது சொல்லிவிட்டு செய்யாமல் இருந்திருக்கிறேனா?” என்று பீர்பால் திருப்பிக் கேட்டதும், “நல்லவேளை! என்னுடைய தர்பாரில் நீ ஒருத்தனாவது அறிவாளியாக இருக்கிறாயே!” என்று பீர்பாலைப் புகழ்ந்து விட்டு மற்றவர்களை ஏளனத்துடன் பார்த்தார். அன்று மாலை வீடு திரும்பிய பீர்பால், தன் தோட்டத்தை நன்றாகப் பார்வையிட்டார். மற்ற காய்கறிச் செடிகளுடன், ஒரு பரங்கிக் கொடியையும் பார்த்தார். அதில் பல பூக்கள், பிஞ்சுகள், காய்கள் இருந்தன. உடனே வீட்டிற்குள் சென்ற அவர் ஒரு காலிப் பானையை எடுத்து வந்தார். அதைத் தரையில் வைத்து விட்டு, பரங்கிக் கொடியில் பிஞ்சுடன் கூடிய ஒரு பகுதியை அந்தப் பானையினுள் நுழைத்து பரங்கிப் பிஞ்சு பானைக்குள் இருக்குமாறு செய்துவிட்டு, கொடியின் நுனியை வெளிப்புறம் நோக்கி இழுத்து விட்டார். பார்ப்பதற்கு, பறங்கிக் கொடி பானையினுள் புகுந்து, பிறகு வெளியே வந்தது போல் இருந்தது. “சரியாக இருக்கிறது!” என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்ட பீர்பால், தன் மனைவியிடமும், தோட்டக்காரனிடமும் அந்தப் பானையையும், பரங்கிக் கொடியையும் மிகவும் பத்திரமாகப் பாதுகாக்கச் சொன்னார். தினமும் அவர் தோட்டத்திற்கு வந்து பானையினுள் இருந்தப் பரங்கிப் பிஞ்சைப் பார்வையிட்டு வந்தார். பத்து நாள்களில் பிஞ்சு காயாகிப் பெருத்தது. அப்படியே விட்டு வைத்தால் காய் இன்னும் பெரிதாக வளர்ந்து பானையை உடைத்து விடும் என்ற நிலை வந்த போது, பீர்பால் பானைக்குள் சென்று, வெளியே வந்த கொடியின் பாகங்களைக் கத்தியால் அறுத்து விட்டார். இப்போது பானைக்குள் நன்கு வளர்ந்த பறங்கிக்காய் மட்டுமே இருந்தது. பானையின் வாயினை துணியினால் இறுக மூடி அடைத்த பீர்பால் பின்னர், அதை தர்பாருக்கு எடுத்துச் சென்றார். அக்பரிடம் பானையை அளித்த பீர்பால், “பிரபு… இதுதான் மன்னர் வீரசிம்மன் விரும்பிய அறிவுப்பானை! இதை அவரிடம் அனுப்பி வையுங்கள்” என்றார். அதைக் கண்ட அக்பர், “என்ன, பீர்பால்! விளையாடுகிறாயா? பானையில் எப்படி அறிவை நிரப்ப முடியும்? இதற்குள் உண்மையில் என்ன இருக்கிறது?” என்று ஆர்வத்துடன் அக்பர் கேட்டார். “பிரபு, அறிவுப்பானைக்குள் அறிவுதான் இருக்கும். வீரசிம்மன் பானைக்குள் இருக்கும் அறிவை எடுத்துக் கொண்டு, பானையை திருப்பி நமக்கு அனுப்பி விட வேண்டும். அதை வெளியில் எடுக்கும் போது அது நசுங்கக் கூடாது. பானையும் உடையக் கூடாது. ஒருக்கால் பானை உடைந்து போனால், வீரசிம்மன் பத்தாயிரம் பொற்காசு அபராதம் செலுத்த வேண்டும். இவை அனைத்தையும் அவருக்குத் தெரிவித்து விடுங்கள்” என்றார் பீர்பால். “என்ன? அபராதம் பத்தாயிரம் பொற்காசுகளா?” என்று அக்பர் கேட்டார். “அறிவின் விலை மிகவும் அதிகம் பிரபு” என்றார் பீர்பால். அவ்வாறே பானையை தூதன் மூலம் கொடுத்தனுப்பியபின், ஆர்வத்தை அடக்க முடியாத அக்பர், “பீர்பால்! பானைக்குள் என்னதான் வைத்திருக்கிறாய் என்று எனக்கு கூறு” என அவசரப்படுத்தினார். உடனே பீர்பால் தான் செய்ததைச் சொன்னார். “பிரபு, வீரசிம்மன் தனது குறும்புத்தனமான கேள்விக்கு சரியாக மூக்குடைப்படுவார். பானைக்குள் இருக்கும் பரங்கிக்காயை அவரால் பானையை உடைக்காமல் முழுதாக வெளியே எடுக்க முடியாது. பரங்கிக்காயை அறுத்து வெளியே எடுப்பதும் கூடாது. அதனால் அவர் நம்மிடம் வசமாக சிக்கிக் கொண்டார். “அடப்போக்கிரி!” என்று பீர்பால் முதுகில் செல்லமாகத் தட்டினார் அக்பர். பானையைப் பெற்ற வீரசிம்மன் பானையினுள் ஒரு பெரிய பரங்கிக்காய் இருப்பதைப் பார்த்தார். கூடவே அந்த இரண்டு நிபந்தனைகளையும் கேட்டார். பரங்கிக்காயை அறுக்கவும் கூடாது. அதே சமயம் முழுதாக வெளியே எடுக்க முயன்றால் பானை உடையும். உடனே அந்த அதிகப் பிரசங்கி இளைஞர்களை அழைத்த மன்னர், அறிவுப்பானையை அவர்களிடம் காட்டி விளக்க, அவர்கள் முகத்தில் அசடு வழிந்தது “உங்கள் பேச்சைக் கேட்டு நானும் முட்டாள் ஆனேன். முன்னமே சொன்னேன், அக்பரின் சபையில் அறிஞர்களுக்குப் பஞ்சமில்லை என்று. என் பேச்சை நீங்கள் கேட்கவில்லை. அபராதத் தொகையை ஈடுகட்ட, நீங்கள் காலம் முழுவதும் என்னிடம் சம்பளமின்றி உழைக்க வேண்டும்” என்றார். பிறகு தலைவிதியை நொந்து கொண்டு, அபராதத் தொகையை அக்பருக்கு அனுப்ப, அவர் அதில் பாதியை பீர்பாலுக்கு வழங்கினார்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'அறிவுப் பானை' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: ஆழ்வார், பாரி, மதி, தலைவர், போஸ்ட் மாஸ்டர், மெத்தை வீட்டு அம்மாள், ஆசிரியர், பொன்னி, மணியக்காரர், பிரியா, தமிழிசை, குருக்கள் ஐயா, பாகீரதி அம்மாள்
தலைப்பு: ஓலை விசிறி
| குள்ள உருவம். நெற்றியில் திருமண். பஞ்சகச்சம் மாதிரி கட்டப்பெற்ற காவிநிற வேட்டி. கழுத்தில் துளசிமாலை. மார்பில் பூணூல். அவரே ஆழ்வார். அவர் பெயரே ஆழ்வாரா? அல்லது வேறு பெயரா? அதுவும் தெரியாது. திருமணம் நடந்ததா? அதுவும் தெரியாது. கேட்டால் சிரித்தபடி போய் விடுவார். ஆழ்வாருக்கு கால்காணி நிலம் உண்டு. அது மானம் பார்த்த பூமி. அதை யாரோ பயிரிட்டு கொடுத்து வந்தான். அதன் வருவாயை விற்று ஸ்ரீபெரும்பூதூர், திருப்பதி, ஸ்ரீரங்கம் போய் வருவார். ரயிலில் டிக்கட் பரிசோதகர் முதல் கார்டு வரை அனைவருமே பழக்கம். கோயிலுக்குப் போயி வந்ததும் அவருக்கு பரிச்சயமான வீடுகளுக்கெல்லாம் பிரசாதம் கொடுப்பார். பதிலுக்கு அவர்கள் கொடுக்கும் பால். மோரை வாங்கி சாப்பிடுவார். குடித்துவிட்டு அமிர்தமாக இருக்கிறது என்று சொல்வார். தென்பெண்ணையாற்றங்கரை ஓரம் தோப்பு. அதைத் தாண்டினால் ஈசுவரன் கோயில். எதிரில் பள்ளிக்கூடம். கோயில் ஓரமாகவே ஆழ்வாரின் கூரை வீடு. மண் சுவர்தான். பெருமாளின் பழைய மர விக்கிரகம் ஒன்றை வைத்து வழிபடுவார். வீட்டினுள் யாரையும் உள்ளே விடமாட்டார். அவரே சமைத்துக்கொள்வார். மார்கழி மாதங்களில் திருப்பாவை, திருவெம்பாவை, சங்கு சேகண்டியுடன் பாடுவார். அவரைச் சுற்றி சிறுவர், சிறுமியர் நின்று கேட்பார்கள். பாட்டு கேட்க அல்ல. அவர் தரும் சூடான சுண்டலை வாங்கி சாப்பிட. அவருடைய முக்கிய வேலை. வீடுகளுக்கு ஓலை விசிறிகள் செய்து வீடு தேடி கொண்டு வந்து கொடுப்பார். பனை மரங்கள் இருக்கும் இடம் தேடிச் சென்று குருத்து பனை ஓலைகளை வெட்டி எடுத்துக்கொண்டு வருவார். அவற்றை படிய வைக்க கற்களைத் தூக்கி வைப்பார். மறுநாள் அவகைள் ஓலை விசிறிகளாக மாறிவிடும். அந்த ஓலை விசிறிகளை காசுக்கு விற்கமாட்டார். அவ்வூரில் அவருக்கு பிடித்த இருபது முப்பது வீடுகளுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை கொடுப்பார். அதற்கு அரிசியோ, கம்போ, கேழ்வரகோ, புளியோ, கொடுப்பதை மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொள்வார். ஒன்றும் கொடுக்கவில்லை என்றாலும் கேட்க மாட்டார். சிறுவர் சிறுமியர்களைக் கண்டால் ஆசையுடன் பேசுவார். அவர் தோற்றத்தை கேலி செய்தாலும் கோபித்துக் கொள்ள மாட்டார். அதனால் ஆழ்வாரை எல்லோருக்கும் பிடிக்கும். ஒருநாள் நடுப்பகல் - உச்சிப் பொழுது திருவரங்கம் போய்விட்டு பள்ளிக் கூடத்தைத் தாண்டி ஓலைகளைத் தலையில் சுமந்தபடி வந்து கொண்டிருந்தார். அவரின் நிழல் அவருக்குள்ளேயே ஒளிந்து கொண்டது. "டேய் யார் வர்றது தெரியுதா?", "நம்ம ஆழ்வார்டா", "இவரு ஏண்டா ஓலை விசிறி விக்கறாரு.... மிட்டாய் வித்தால் கூட காசு கிடைக்குமே.. இல்லைன்னா ஐஸ் கூட விக்கலாமே". "ஆமாண்டா எல்லோர் வீட்டிலும் பேன் வந்துவிட்டது. யார்றா இன்னும் ஓலை விசிறியை விசுருறாங்க. எங்க வீட்டில் இருந்த ஓலை விசிறிகளைத் தூக்கி பரண்மேல எறிஞ்சிட்டோம்டா". "இந்த கிழத்துக்கு வேலையே இல்லை. அப்பப்ப வீட்டுக்கு வந்து ஓலை விசிறிகளைக் கொடுத்துவிட்டு ஏதாவது கொடுப்பாங்களான்னு நிக்கும்டா இந்த கிழம்". "டேய் பாவன்டா. பெரியவங்களை அப்படி பேசக்கூடாது. அவருக்கென்று யாருமே இல்லை. அதாண்டா அவராலே முடிஞ்சதை செய்யிராறுடா". பாரியும் மதியும் பேசிக் கொண்டு வந்ததைக் கேட்டு ஆழ்வார் சிரித்தபடியே தன் வீட்டிற்குச் சென்றார். வெட்டி வந்த பனை ஓலையை படிய வைத்தார். அடுப்பு மூட்டினார். சோறு பொங்கினார். மிளகு சீரக நீர் கொதிக்க வைத்தார். இருவாட்சி இலைத் துவையல் அறைத்தார். சாப்பிட்டார். சிறிதுநேரம் உறங்கினார். மாலை நேரம் எழுந்தார். சுக்கு, பனைவெல்லம் போட்ட தூளைக் கொதிக்கவைத்து அதில் ஏலக்காய் தூள் போட்டு இறக்கி வடிகட்டி பத்து விசிறிகளை எடுத்துக்கொண்டு கிளம்பினார். முதலில் தலைவர் வீட்டுக்குச் சென்றார். வீட்டுக்கார அம்மாவை பெயரிட்டு கூப்பிட்டார். "ஆழ்வார் வந்திருக்கிறேன்". என்று குரல் கொடுக்க, தலைவர் மனைவி வெளியே வந்து தம்ளர் நிறைய அரிசியுடன் வந்து அவர் வைத்திருந்த பையில் கொட்டினார். இரண்டு விசிறிகளை ஆழ்வார் கொடுத்தார். "முன்னாடி கொடுத்த ரெண்டு விசிறிகள் அப்படியே இருக்குதுங்க ஆழ்வார்". "இருக்கட்டும்மா... ஒதவும்... பாப்பா வந்தால் ஊருக்குக் கொடுத்து அனுப்பும்மா...". கிளம்பிவிட்டார் ஆழ்வார். போஸ்ட் மாஸ்டர் வீட்டிற்குள் போனார். பெயரிட்டு கூப்பிட்டார். "விசிறி வாணாம்னு அம்மா சொன்னாங்க தாத்தா". "அம்மாவை கூப்பிடும்மா", "அம்மா வேலையா இருக்காங்க", "நான் வந்திருக்கேன்னு சொல்லும்மா" வீட்டுக்கார அம்மாவே வெளியே வந்தார்கள். "நெல் அறைக்க மிஷினுக்குப் போயிருக்காங்க... அதான்", "அதுக்கென்ன மகராசி... இந்தாங்க..." என்று இரண்டு விசிறிகளைக் கொடுத்துவிட்டுக் கிளம்பினார். "இந்த கிழத்துக்கு வேற வேலை இல்லை. எப்பப்பாரு ஓலை விசிறி. ஓலை விசிறின்னு உயிரை எடுக்குது" என்று சொல்லியபடி விசிறிகளை பரண்மேல் தூக்கிப்போட்டுவிட்டு மின் விசிறியை சுழலவிட்டாள் போஸ்ட் மாஸ்டர் மகள் சகுந்தலை. ஆழ்வார் விசிறியை எடுத்துக்கொண்டு வருவதைப் பார்த்த மெத்தை வீட்டு அம்மாள் கதவை தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு உள்ளே போய்விட்டார்கள். ஆழ்வார் அந்த அம்மாள் பெயரை உரக்கக் கூப்பிட்டுப் பார்த்துவிட்டு தெருவே போனார். யாரோ வெளியூர்க்காரன் தெருவே போனவன் "விசிறி விக்கிறதா", "இல்லை", "ஆறு விசிறி இருக்குதே", "விற்பதற்கு இல்லை" கேட்டவன் முணுமுணுத்துக்கொண்டே சென்றான். ஆசிரியர் வீட்டுக்குச் சென்றார் ஆழ்வார். அந்த வீட்டு மருமகள் வந்தாள். அரிசி கொண்டு வந்து கொடுத்தாள். இரண்டு விசிறிகள் கொடுத்தார். ஆசிரியர் மனைவி காபி கொண்டு வந்து கொடுத்தார். வாங்கி சுவைத்து குடித்தார். விடைபெற்றுக் கிளம்பினார் ஆழ்வார். "எங்கே சாமிபோறீங்க... மழை இருட்டிகிட்டு வருது". "யாரு பொன்னியா... எங்கடியம்மா போறே!", "தலைவர் வீட்டுக்குத்தான்... கம்பு இடிக்கணும்". "சரி இந்தா விசிறி... நாளைக்கு வந்து கேழ்வரகை மிஷினில் அறைச்சுக் கொடுக்கிறீயா?", "வரேன்...வரேன்... எனக்கு எதுக்கு இந்த ஓலை விசிறி. எம்மாமன் பெங்களூர்ல இருந்து "டேபிள்பேன்" வாங்கி வந்திருக்கிறார். போங்க சாமி காலம் மாறிப்போச்சி... இன்னும் இந்த ஓலை விசிறியை வைத்துக்கொண்டு அழறீங்க...", "என்ன ஒரே குஷியா இருக்கிறே... உன் மாமன் வந்துட்டானா?", "வரத்தையில கண்ணாலம் சாமி", "கண்ணாலமா...ஒரு வேளை வடை பாயச சாப்பாடு இருக்குது... பொன்னி... நாளைக்கு வந்து நோம்பி அரைச்சுக் குடுத்திடு". "வரேன் சாமி..." சிரித்துக்கொண்டே தனக்குள் பொல்லாத பொண்ணு.... மணியக்காரர் வீட்டில் வந்து திண்ணையில் உட்கார்ந்தார். பெயரிட்டுக் கூப்பிட்டார். ஒரு பெண் எட்டிப்பார்த்தாள்.. தலை மட்டுமே தெரிந்தது. என்னடியம்மா எட்டிப்பார்த்துட்டு ஓடறே! உம். "அப்பா, அம்மா... திருக்கோவிலூர் போயிருக்காங்க". "போனால் போகட்டும் இங்கே வா...", "விசிறி வேணாம் தாத்தா... இருக்குது". "அம்மா போன தடவை கேட்டாங்க வந்தால் கொடு...", "வேணாம் தாத்தா...", "ஆழ்வார் கொடுத்தார்னு கொடு..." என்று சொல்லிக்கொண்டே இரண்டு விசிறிகளை அவளிடம் கொடுத்துவிட்டு படி இறங்கி தெருவில் நடந்தார். கையில் இரண்டு விசிறிகளே இருந்தது. பிரியாவும், தமிழிசையும் அவர் எதிரில் வந்தார்கள். ஏண்டியம்மா... பள்ளிக்கூடம் விட்டு இப்பதான் வர்றீங்களா "ஆமாம் தாத்தா", "விசிறி வேணுமா", "வேணாம். எங்க வீட்டே அஞ்சு பேன் இருக்குது". "சரிடீயம்மா. போய் வாங்க". கடைசி வீடு குருக்கள் ஐயா வீடு. வீட்டுப் படியில் ஏறினதும். "எங்கே ஆழ்வார்... ரொம்ப நாளா இந்தப் பக்கம் காணோம்... ஸ்ரீரங்கம் போனியா..." என்றார் பாகீரதி அம்மாள். குருக்களின் தாயார். "இல்லைங்கம்மா... போன வாரம் வந்தேன். மாட்டுப் பொண்ணு மடியா இருந்தாங்க... போயிட்டேன்... இந்தாங்க விசிறி..", "வேண்டாம் ஆழ்வார்... வீட்டில் யாருமில்லை. எல்லாம் திருப்பதி போயிருக்கா... நேக்குத்தான் கொடுத்து வைக்கலே... நின்னா உட்கார முடியலே... உட்கார்ந்தா எழுந்திருக்க முடியலே... அதான் நான்போகலே..." என்றாள். "சரி... விசிறியை கொண்டுபோய் உள்ளே வையுங்க", "ஓலை விசிறியா... வேண்டாம் ஆழ்வார். என் பேராண்டி என் ரூமுக்கு பேன் பிட் பண்ணிட்டான்... தோ பார்த்தியா.... திண்ணையில் கூட பேன் பிட் பண்ணிட்டான். இனிமே இந்த ஓலை விசிறி எதுக்கு?.. சித்தே இரு.. வரேன்" என்று கூறிவிட்டு பாகீரதி அம்மாள் உள்ளே சென்றாள் கையில் இரண்டு பொரிவிளங்காய் உருண்டையுடன் வந்தார்... இந்தாங்க ஆழ்வார்...", "எனக்கு இதைக் கடிக்க பல் இல்லையே... வேண்டாம்". "சரி...உட்காரு... நுணுக்கித் தாரேன்.... ஆழ்வார்... பஜகோவிந்தம் பாடுவியே... அதைப்பாடேன்... நீ பாடினா பகவான் நேரிலே வந்த மாதிரி நேக்குத் தோணுது. பாடு..." மண்ணிலிருந்து புறப்பட்டது புழு புழுவைப் பூச்சித்தின்ன பூச்சியை புறாத்தின்ன புறாவை பூனை தின்ன பூனையை மனிதன் தின்ன மனிதனை மண் தின்றது மண்ணிலிருந்து மீண்டும் புறப்பட்டது புழு புனரபி ஜனனம் புனரபி ஜனனம் பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் நிஜ கோவிந்தம் தான் "நன்னா பாடினே, ஆழ்வார் நோக்கு என்ன வயசிருக்கும்". "எனக்கா வர ஆனி வந்தா எண்பத்தி மூணு", "அடேயப்பா என்னைவிட மூணு வயசு மூத்தவன் நீ... இந்தா பொரி விளங்காய் தூளாக்கிட்டேன்... முடிஞ்சுக்க... ஆழ்வார் வானம் இருண்டுண்டு வர்றது... நேரத்தோடு ஆத்துக்குப் போ... ஒரு விசிறி மட்டும் குடு. போதும்". மீதி ஒரு விசிறியை கையில் எடுத்துக்கொண்டு புறப்பட்டார் ஆழ்வார். லேசான தூரல். தலைமேல் விசிறியை வைத்துக்கொண்டு கிளம்பிப்போனார். நடையில் சோர்வு தென்பட்டது. "ஓலை விசிறி" திரும்பிப் பார்த்தார்... யாரையும் காணோம். "ஓலை விசிறி" - மீண்டும் குரல் கேட்டது. சிரித்துக்கொண்டே போனார். வீட்டினுள் போனவுடன் மழை பிடித்துக்கொண்டது. கிழக்குப் புறச்சாரல் வீட்டினுள் அடித்தது. கதவை சாத்தினார். விளக்கை ஏற்றினார். வர.. வர.. காற்று பலமாக வீசியது. வீட்டிற்குப் பின்னால் இருந்த முருங்கை மரம் பலமாக ஆடியது. அரிசி, புளியை அதன் அதன் பாத்திரங்களில் கொட்டினார். காற்று பலமாக வீசிக் கொண்டிருந்தது. தகரப் பெட்டியைத் திறந்து பழைய கம்பளியை வெளியே எடுத்து உதறினார். அதில் இருந்து துணி பை விழுந்தது. அதில் சில்லறைகள் இருந்தன. எடுத்து பெட்டியில் போட்டார். காற்று பலமாக வீசியது. எங்கோ மரம் முறிந்து விழும் ஒலி கேட்டது. மின்சாரம் நின்றது. கூரைகள் தூக்கித் தூக்கிப் போட்டது. விடாமல் மழை பெய்து கொண்டிருந்தது. வீட்டில் சில இடங்களில் ஒழுகின. அங்கெல்லாம் தகர டப்பிகளை எடுத்து வைத்தார். ஒழுகாத இடமாகப் பார்த்து சுவர் ஓரம் ஈச்சம்பாயை விரித்து அதில் உட்கார்ந்தார். கம்பளியை போர்த்திக் கொண்டார். பயங்கர இடி இடித்தது. மின்னல் கண்ணைப் பறிக்கும் அளவுக்கு மின்னியது. காற்று மிகவும் வேகமாக வீசியது. மரம் முறிந்து விழுந்த ஒலி கேட்டது. மண்ணெண்ணெய் விளக்கும் அணைந்தது. பேய்க்காற்றாய் அடித்தது. கோடை மழை என்பதை நிரூபிப்பதுபோல் பெய்தது. ஓட்டு வீடுகளின் ஓடுகள் காற்றில் பறந்தன. கூரை வீடுகள் பிய்த்தெறியப்பட்டன. ஆழ்வார் வீட்டைச்சுற்றி வெள்ளம். வீடு அல்லாடியது. காற்று பிரளியமாக வீசியது. தென்னை மரங்கள் பேய் போல ஆடின. ஊரின் வடக்கே தென்பெண்ணை ஆற்றில் நொப்பும், நுரையும் மிதந்து வெள்ளம் பெருகியது. வெண்ணெய் உருகுவது முன்பாக பெண்ணையாற்றில் வெள்ளம் வரும் என்பது உண்மையாயிற்று. எங்கோ சுவர் விழுந்த ஒலி கேட்டது. உடன் மனித முனகலும் ஒலித்தது. மழை இடைவிடாமல் பெய்த வண்ணம் இருந்தன. எங்கும் மனித ஓலங்கள். விடியற்காலை மழை நின்றிருந்தது. இரவு அடித்த காற்றால் தெருவெங்கும் போர்க்களம் போல் இருந்தன. கோயில் கம்பம் சாய்ந்து கிடந்தது. மின் கம்பங்கள் சாய்ந்துபோய், மின் கம்பிகள் தாறுமாறாக தெருவில் விழுந்து கிடந்தன. ஆற்றோரம் நேற்றுவரை நிழல் கொடுத்து வந்த மரங்களில் சிலவற்றைக் காணமுடியவில்லை. வெள்ளம் அடித்துப்போயிருக்க வேண்டும். காலையில் வானம் தெளிவாக இருந்தது. காலை வெயில் சுள்ளென்று அடித்தது. மக்கள் நடமாட்டம் தொடங்கியது. ஆழ்வாரின் வீடு தரைமட்டமாகக் கிடந்தது. திடுக்கிட்டு எல்லோரும் அங்கு சென்று பார்த்தனர். வீட்டுப்பொருட்கள் வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்தது. ஆழ்வாரைக் காணோமே என்று தேடிய போது மண் சுவருக்குக் கீழே இருப்பது கண்டு திடுக்கிட்டு சுவற்றை அப்புறப்படுத்தினர். ஆழ்வாரின் உயிர் பிரிந்திருந்தது. அவர் அருகில் ஒற்றை விசிறி ஒன்று கிடந்தது. தலைவர் வீட்டிலிருந்து பெஞ்ச் வரவழைக்கப்பட்டது. ஆழ்வாரை அதன்மேல் கிடத்தினார்கள். வீட்டின் மூலையில் அரிசி, கம்பு, கேழ்வரகு, எல்லாம் கலந்து கிடந்தன. வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் தகரப் பெட்டியைத் தூக்கிப் பார்த்தபோது அதில் துணிப்பை ஒன்று கனமாக இருந்தது. அந்தப் பையில் சில்லறை காசுகள் இருந்தன. தர்மகர்த்தா எண்ணிப்பார்த்தார். நானூற்றி ஐம்பது மூன்று ரூபாய் இருந்தது. ஆழ்வார் வீட்டருகே கூட்டம் அலை மோதியது. அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஓலைகள் தண்ணீரில் மிதந்தன. ஒரு ஓலை விசிறி அநாதையாகக் கிடந்தது. அதை எடுத்து அவர் உடல் மேல் ஒருவர் வைத்தார். அன்று மாலையே ஆழ்வார் சாம்பலானார். எவருக்கும் எந்த தொல்லையும் தராமல் வாழ்நாள் முழுவதும் தன் கையே தனக்கு உதவி என்று வாழ்ந்து மறைந்தார். அவரது சேமிப்பு அவரது இறுதிச் சடங்குக்கு உதவியது. இவ்வளவு மழை பெய்தும், கோடை வெயில் மக்களை வாட்டியது. மின் இணைப்பு பதினைந்து நாட்களாகியும் கொடுக்கவில்லை. பெண்ணையாற்றில் இருகரைகளையும் தொட்டுக் கொண்டு வெள்ளம் பாய்ந்து சென்று கொண்டிருந்தது. ஆனால் கோடை புழுக்கம்.. பரண்மேலும், வீட்டின் கூரையிலும் சொருகி இருந்த ஓலை விசிறிகளைத் தேடி எடுத்தனர். விசிறி வேண்டாம் போ என்றவர்கள் ஆழ்வார் கொடுத்துச் சென்ற ஓலை விசிறியை தேடித்தேடி எடுத்து விசிறிக் கொண்டார்கள். எல்லோர் கையிலும் ஓலை விசிறி அணி செய்தது. நிழலின் அருமை வெயிலில் தெரிவது போல... மின்சாரம் இல்லாதபோது ஓலை விசிறிகளின் அருமை அனைவருக்கும் விளங்கியது. |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: குரு, திருடன், ஜென் கதை, ஜென்குரு, ஜப்பான், கஜானா, முத்திரை, அலமாரி, அரசர், கள்வன், மாளிகை
தலைப்பு: திறன் பிறந்தது
| ஒரு குரு வேலை செய்யும் விதம் திருடன் வேலை செய்யும் விதத்தைப் போன்றது. ஒரு ஜென் கதை. ஜென்குருக்கள் இதை மிகவும் விரும்புவர். நீ இந்த கதையை முதன்முறையாக கேட்கும்போது மிகவும் ஆச்சரியப் படுவாய். – இது ஒரு திருடன் குருவான கதை. ஜப்பானில் ஒரு திருடன் மிகச் சிறந்த திருடனாக இருந்தான். அவன் நாடு முழுவதும் பிரபலமானவனாக, எல்லோருக்கும் தெரிந்தவனாக இருந்தான். அவன் திருட்டில் கை தேர்ந்தவனாக இருந்ததால் யாராலும் அவனை பிடிக்க முடியவில்லை. அவன் கையும்களவுமாக பிடிபட்டதேயில்லை. – அவன்தான் திருடியவன் என எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும்கூட – அரசரின் கஜானாவிலிருந்து கூட அவன் திருடியிருக்கிறான். அவன் தனது முத்திரையை பதித்துவிட்டு போவதால் அவன்தான் வந்து போயிருக்கிறான் என எல்லோரும் அறிவர். அதன்மூலம் அது ஒரு கௌரவமான விஷயமாக மாறிவிட்டது. அந்த கை தேர்ந்த கள்வன் உன்னிடம் வந்து திருட உன்னிடம் ஏதோ ஒரு பொருள் இருக்கிறது என்பதே ஒரு மரியாதையாக மாறிவிட்டது. அதனால் அது ஒரு கௌரவம். மக்கள், "நேற்று இரவு அந்தக் கள்வன் என் வீட்டிற்க்கு வந்திருந்தான். என பெருமையாக சொல்லிக் கொண்டனர். ஆனால் அவனுக்கு வயதாகி விட்டது. அவனது மகன் இளைஞன். அவன் தனது தந்தையிடம், உங்களுக்கு வயதாகி விட்டது. அந்தக் கலையை எனக்குக் கற்றுக் கொடுங்கள். எனக் கேட்டான். அந்த தந்தை, சரி இன்று இரவு என்னுடன் வா – ஏனெனில் அது சொல்லித் தரக் கூடிய விஷயமல்ல. என்னுடைய ஆற்றலை கண்டுக் கொள்ளத் தான் வேண்டும். உனக்கு புத்திசாலித் தனமிருந்தால் அதை நீ கணடு கொள்வாய். அதை உனக்கு கற்றுத் தர முடியாது, ஆனால் உன்னால் அதை பிடித்துக் கொள்ள முடியும். நான் உனக்கு தர முடியாது, ஆனால் உன்னால் தெரிந்து கொள்ள முடியும். என்னுடன் இன்றிரவு வா. பார்க்கலாம். என்றான். முதல்தடவை என்பதால் மகன் மிகவும் பயந்தான். இயல்புதானே! சுவற்றை உடைத்து மாளிகைக்குள் சென்றனர். அந்த வயதான காலத்தில்கூட தந்தையின் கரங்கள் நடுங்கவில்லை, ஆடவில்லை, ஒரு டாக்டரின் கரங்கள் போல ஆடாமல் அசையாமல் உறுதியாக நின்றது. அவன் தனது சொந்த வீட்டில் வேலை செய்வதுபோல பயமின்றி சுவற்றில் ஓட்டை போட்டான். சத்தம் கேட்டுவிடுமோ என சந்தேகமே படாமல் தனது வேலையின் திறமை மீது நம்பிக்கை கொண்டு அங்கே, இங்கே யாராவது வருகிறார்களா என திரும்பியே பார்க்கவில்லை. ஆனால் அது குளிர்கால இரவாக இருந்தபோதிலும் இளைஞனுக்கு வேர்த்து கொட்டியது. அவன் பயத்தில் நடுங்கினான். ஆனால் தந்தை தனது வேலையை சப்தமின்றி செய்தான். கள்வன் வீட்டினுள் நுழைந்தான். மகன் தொடர்ந்து நுழைந்தான். அவனது கால்கள் நடுங்கியது. அவன் எந்த விநாடியும் விழுந்துவிடுவோம் என நினைத்தான். அவனுக்கு சுயஉணர்வே இல்லை. ஏனெனில் பயம்……… பிடிபட்டுவிட்டால் பின் என்ன செய்வது. தந்தை அந்த வீட்டினுள் ஏதோ அது அவனது சொந்த வீடு போல நுழைந்தான். அவனுக்கு அந்த வீட்டைப்பற்றி, வீட்டினுள் உள்ள பொருட்கள் இருக்கும் இடம் எல்லாமே தெரிந்திருந்தது. அந்த இருட்டில் கூட எந்த சாமான்கள் மீதும் மோதிக்கொள்ளாமல், கதவில் முட்டிக்கொள்ளாமல் சென்றான். சப்தமேயில்லாமல், எந்த சப்தமும் செய்யாமல் அவன் அந்த மாளிகையின் உள்ளறையை சென்றடைந்தான். அவன் ஒரு அலமாரியை திறந்து மகனிடம் உள்ளே போய் ஏதாவது விலைமதிப்பான பொருட்கள் இருக்கிறதா என பார்க்கச் சொன்னான். மகன் உள்ளே போனான். தந்தை கதவை மூடி வெளியே தாழிட்டுவிட்டு, திருடன், திருடன் ஓடிவாங்க என கத்தியபடி சுவற்றில் அவர்கள் உருவாக்கியிருந்த ஓட்டை வழியாக தப்பிப் போய்விட்டான். இப்போது இது மிகவும் அதிகம். மகனால் என்ன இது என புரிந்துகொள்ள முடியவில்லை. இப்போது அவன் அந்த அலமாரிக்குள் நடுங்கி வேர்த்துக் கொட்டியபடி இருந்தான். வீடு முழுவதும் விழித்துக் கொண்டு விட்டது. திருடன் எங்கே என தேடியது. அப்பாவா இது, என்னை கொன்றே விட்டார், என நினைத்தான். என்ன வகையான பாடம் இது அவன் இதுபோன்ற ஒரு விஷயத்தை கனவில்கூட நினைத்துப் பார்த்ததில்லை. தந்தை பயங்கரமான கனவை மகனுக்கு தந்து விட்டார். இவன் பிடிபடுவது உறுதியாகி விட்டது. தந்தை வெளியேயிருந்து கதவை தாழிட்டுவிட்டார். மகன் கதவை திறந்து தப்பித்து போகமுடியாது. ஒரு மணிநேரத்திற்கு பின் மகன் வீட்டை அடைந்தபோது தந்தை குறட்டைவிட்டு தூங்கிக் கொண்டிருந்தான். மகன் அவன் போர்வையை விலக்கி, என்ன மடத்தனம் இது, எனக் கேட்டான். தந்தை, நீ திரும்பி வந்து விட்டாய். என்ன நடந்தது என சொல்ல வேண்டிய அவசியம் இல்லை – நீயும் போய் தூங்கு. இப்போது உனக்கும் இந்தக் கலை தெரிந்துவிட்டது. நாம் இதை விவாதிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் மகன், என்ன நடந்ததென்று நான் உங்களிடம் சொல்லியே தீர வேண்டும். என்றான். தந்தை, நீ சொல்ல விரும்பினால் சொல், மற்றபடி அது எனக்கு அவசியமில்லை. நீ திரும்பி வந்ததே போதுமான அத்தாட்சி. நாளை இரவிலிருந்து நீயே சொந்தமாக போய் செய்ய ஆரம்பிக்கலாம். ஒரு திருடனுக்கு தேவையான புத்திசாலித்தனமும் சுதாரிப்பும் கவனமும் உன்னிடம் உள்ளது. எனக்கு உன்னைப் பற்றி மிகவும் சந்தோஷமாக உள்ளது, என்றான். ஆனால் மகன் மிகவும் ஆர்வமாக இருந்தான். அவன் முழு விஷயத்தையும் விவரித்து சொல்ல விரும்பினான். அவன் அத்தகைய மிகப் பெரிய வேலை செய்திருந்தான். அவன், கேளுங்களேன். இல்லாவிடில் என்னால் தூங்கவே முடியாது. நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். நீங்கள் கிட்டத்தட்ட என்னை கொன்றே விட்டீர்கள். என்றான். தந்தை, அது அப்படிப்பட்ட கடினமான காரியம்தான். ஆனால் ஒரு குருவானவர் இப்படிதான் வேலை செய்தாக வேண்டும். என்ன நடந்தது முழு கதையையும் சொல் என்றார். மகன், எங்கிருந்தோ – உறுதியாக அது என்னுடைய மனதிலிருந்தோ, என்னுடைய அறிவிலிருந்தோ அல்ல – அது உதித்தது. என்றான். தந்தை, நீ ஒரு திருடனோ, தியானம் செய்பவனோ, காதலனோ, விஞ்ஞானியோ, கவிஞனோ, ஓவியனோ அது முக்கியம் அல்ல. வாழ்வு என்னவாக இருந்தாலும் இதுதான் திறவுகோல். வாழ்வின் தளம் எதுவாக இருப்பினும் நிகழ்வது ஒன்றே – எதுவும் தலையிலிருந்து நிகழ்வது அல்ல. எல்லாமும் நாபியிலிருந்து நிகழ்வதுதான். அதை உள்ளுணர்வு என்றோ, மனமற்ற நிலை என்றோ, தியானம் என்றோ கூறிக்கொள்ளலாம். இவை யாவும் ஒரே விஷயத்தின் வேறுவேறு பெயர்கள். அவ்வளவுதான். அது உன்னுள் செயல்பட ஆரம்பித்துவிட்டது. அதை நான் உன்னுடைய முகத்தில் பார்க்கிறேன். உன்னைச் சுற்றி சக்தி இயக்கத்தை பார்க்கிறேன். நீ ஒரு கை தேர்ந்த கள்வனாக போகிறாய். கை தேர்ந்த கள்வனாக இருப்பதன் மூலமாக நான் தியானநிலையை அடைய முடிந்தது. அதனால் நினைவில் கொள். இதுதான் உனக்கும் தியானத்தை அடைவதற்கான வழி. என்றார். மகன், நான் அந்த அலமாரிக்குள் நின்று கொண்டிருந்தேன். மக்கள் எழுந்து திருடனை தேடிக் கொண்டிருந்தனர். ஒரு வேலைக்காரி கையில் விளக்குடன் வந்ததை சாவித் துவாரத்தின் வழியாக பார்த்தேன். எங்கிருந்தோ உதித்த யோசனையின் பேரில் பூனையை போல சத்தம் கொடுத்தேன் நான். இதற்குமுன் நான் அப்படி செய்ததேயில்லை. – வேலைக்காரி பூனை அலமாரிக்குள் மாட்டிக் கொண்டுவிட்டது என நினைத்து அலமாரி கதவை திறந்தாள். அவள் கதவை திறந்தவுடன் நான் என்ன செய்தேன் எப்படி செய்தேன் என எனக்குத் தெரியாது. ஆனால் அது நிகழ்ந்தது – நான் மெழுகுவர்த்தியை ஊதி அணைத்துவிட்டு, அந்த பெண்ணை தள்ளிவிட்டு ஓடினேன். மக்கள் என்னை துரத்தினார்கள். வீட்டிலுள்ளவர்கள் எல்லோரும் விழித்துக் கொண்டு விட்டனர். பக்கத்து வீட்டுக்காரர்களும் விழித்துக் கொண்டு விட்டனர். தப்பித்து ஓடி வந்த என்னை எல்லோரும் துரத்தி வந்தனர். அவர்கள் என்னை பிடித்து விடக் கூடிய அளவு நெருங்கி வந்துவிட்டனர். அந்த சமயத்தில் நான் ஒரு கிணற்றை கடந்து ஓடினேன். கிணற்றின் ஓரத்தில் பெரிய பாறை ஒன்று இருப்பதை பார்த்தேன். இப்போது அந்த பாறையை என்னால் தூக்க முடியுமா என்பது சந்தேகம்தான். ஆனால் அதை அப்போது நான் செய்தேன். அது போன்ற அபாயமான சந்தர்ப்பங்களில் உங்களது முழு சக்தியையும் உங்களால் செலவிடமுடியும். நீங்கள் மேம்போக்காக இருக்க மாட்டீர்கள். வாழ்க்கை அபாயத்தில் இருக்கும்போது முழு சக்தியோடு இருப்பீர்கள். நான் அந்த பாறையை நகர்த்தி, அதை தூக்கினேன். – அதை என்னால் நகர்த்த முடியும் என்பதையே என்னால் நம்ப முடியாது. அதை எடுத்து கிணற்றில் வீசிவிட்டு ஓடினேன். பாறை கிணற்றில் விழுந்த சத்தத்தால் என்னை பின்தொடர்ந்த மக்கள் என்னை பின் தொடர்வதை நிறுத்தி விட்டனர். அவர்கள் அந்த கிணற்றை சூழ்ந்து கொண்டனர். நான் கிணற்றில் குதித்து விட்டதாக அவர்கள் நினைத்துக் கொண்டனர். இப்படித்தான் நான் தப்பி வந்தேன். என்றான். தந்தை, நீ இப்போது தூங்கு போ, என் வேலை முடிந்தது. இனிமேல் எதையும் என்னை கேட்காதே. உன்னிஷ்டப்படி செயல்படலாம் என்றார். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: சிவசங்கரன் மாமா, டேனியல் வைத்தியர், டெய்சிபாய், நாணிப் பாட்டி, அப்பு அண்ணா, அம்பிகாமணி, வீடு, நாராயணன், கதவு, சாமிதாஸ்
தலைப்பு: பாதைகள்
| குடிவந்த போது சிவசங்கரன் மாமா தன்னை ஓர் ஓவியர் என்று தான் அறிமுகப்படுத்திக் கொண்டார். அந்த வீடு எட்டுவருடமாகப் பூட்டிக் கிடந்தது. அதைக் கட்டியவர் சிங்கப்பூர்க்காரான டேனியல் வைத்தியர். அவ்வருடமே அவரது மகளும், மனைவியும் கார் விபத்தில் இறந்தார்கள். வைத்தியருக்கு ஆரம்பத்தில் ஒன்றும் தெரியவில்லை. அழுகையும் படுக்கையுமாக இருந்தார். ஊரார் போய் துக்கம் கேட்டார்கள். மூன்று மாதத்தில் எழுந்து நடமாடி ஆறுமாதத்தில் வழக்கம் போல புதுமாப்பிள்ளைக் கோலம் பூணுவார் என்றுதான் எதிர்பார்த்தார்கள். சில கல்யாணத்தரகர்கள் கூட போய் துக்கம் விசாரித்து வந்தார்கள். ஆனால் இரண்டுமாதம் கழித்து வைத்தியரின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தது. உடைகளைக் கோணலாக அணிந்து கொண்டு தனக்குத்தானே பேசி சிரித்துக் கொண்டு நடமாட ஆரம்பித்தார். ஒருமாதத்தில் எல்லாம் உறுதியாகி விட்டது. பிடித்துக் கொண்டுபோய் ஊளன்பாறை பைத்திய ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். அங்கு போன எவரும் திரும்ப வருவதில்லை. வைத்தியரின் தம்பி சாமுவேல் உள்ளூரில் பலசரக்குக் கடை வைத்திருந்தார். அவர் ஒரு நாள் புதுவீட்டில் பால்காய்ச்சி பாதிரியாரைக் கூப்பிட்டு ஜெபம் வைத்துக் குடியேறினார். அவர்தான் டேனியல் வைத்தியருக்கு செய்வினை வைத்தது என்று ஊரில் பேச்சிருந்தது. ஆறு மாதத்திற்குள் சாமுவேல் வீட்டைவிட்டு மாறி குலசேகரத்திற்குக் குடிபோனார். அவரது மகள் டெய்சிபாய்க்கு ஏதோ ஆகிவிட்டது என்றார்கள். சும்மா கெட்ட கனவுகள் தான் என்று அவர் சொன்னாலும் மறைக்க முடியவில்லை. டெய்சிபாய்க்கும் மனநிலை பிசகிவிட்டது. அவளைக் கேரளா பக்கமாக ஏதோ குருசடிக்குத்தான் கொண்டு போனார்கள். அதன் பிறகு அந்த வீட்டில் யாரும் குடியேறத் துணியவில்லை. இரவில் வேட்டியை நன்றாக ஏற்றிக் கட்டி தலையில் தலைப்பாகையும் தோளில் குற்றாலம் துண்டுமாக வைத்தியர் வீட்டைச் சுற்றி வருவதை அப்பு நாடார் கண்டதாகச் சொன்னார். துருப்பிடித்த பூட்டுத் தொங்கும் வீட்டுக்குள் இரவில் சில சமயம் விளக்குகள் எரிவதும் ஆட்கள் நடமாடுவதும் தெரிவதாக அம்மிணிப் பாட்டி சொன்னாள். பாட்டியின் வீட்டுக்கு இருநூறடி தொலைவில்தான் வைத்தியரின் வீடு. பெரிய தோட்டத்திலும் எவரும் நடமாடாமலாகி காடு அடர்ந்தது. வீடு அங்காங்கே காரை உதிர்ந்து ஜன்னல் பலகைகளில் பூசணம் பூத்துப் பாழடைந்தது. அந்த வீட்டுக்குத்தான் சிவசங்கரன். மாமா திடீரென்று குடிவந்தார். அவர் வீட்டை கிரயம் செய்தது யாருக்கும் தெரியாது. ஒரு நாள் காலையில் மூன்று மாட்டு வண்டுகளில் வீட்டுச் சாமான்கள் வந்திறங்கின. வீட்டை வண்டிக்காரர்களே கூட்டிப் பெருக்கினார்கள். ஒருவன் முற்றத்தில் அடர்ந்திருந்த புற்களையும் தொட்டால் வாடிச் செடிகளையும் மண் வெட்டியால் செதுக்கினான். செடிகள், கதவுகளிலும், சன்னல் கம்பிகளிலும் படர்ந்திருந்தன. நான் வேலியருகே நின்று வேடிக்கை பார்த்தேன். வழுக்கைத் தலையும் சோடாப்புட்டிக் கண்ணாடியும் அணிந்த குள்ளமான மனிதர் சுறுசுறுப்பாகச் சுற்றி வந்து சாமான்களை இறக்கிக்கொண்டிருந்தார். என்னுடன் அச்சுதன் பணிக்கரும் வந்து நின்று கொண்டார். "வெளியேயிருந்து வந்தவனுகளாக்கும் இல்லாட்டி இப்பிடித் துணிஞ்சு கேறிக்கிடமாட்டானுக" என்றார் பணிக்கர். நான் "அந்த வழுக்கைத்தலை ஆளு ஆராக்கும்?" என்றேன். "அவன்தான் ஓணரு. படம் வரையுத ஆளுண்ணாக்கும் பேச்சு.", "ஆரு கண்டா? சாவதுக்காக்கும் வந்திருக்கான். நீ பாரு மக்கா, இண்ணு இருட்டி நாளை வெளுக்கும்பம் அவன் சங்கதிகள் மனசிலாக்குவான் பாவம்....." நான் வெகுநேரம் கழித்து வீட்டுக்குச் சென்று அம்மாவிடம் விஷயத்தைச் சொன்னேன். அதற்குள் நாணிப் பாட்டி ஊர் முழுக்க எல்லாவற்றையும் சொல்லிவிட்டிருந்தாள். வந்தவர் பெயர் சிவசங்கரன். திருவனந்தபுரத்தில் படம் வரைந்து கொண்டிருந்தவர். மனைவி செத்துப் போய்விட்டாள். பிள்ளைகள் இல்லை. "தனிக்கட்டை. துணிஞ்ச கட்டை. இல்லேன்னா இப்பிடிவருவானா. பாவம்..." என்றாள் பாட்டி. ஆனால் ஒன்றும் நிகழவில்லை. நான் மறுநாள் காலையிலேயே விபரீதச் சேதிக்காக அடித்துப் புரண்டு போய் பூவரச வேலியில் நின்று பார்த்தபோது சிவசங்கரன் மாமா பிரஷ் வைத்துப் பல் தேய்த்துக் கொண்டிருந்தார். எங்களூரில் அப்போது டாக்டர் ஒருவர்தான் அப்படிப் பல் தேய்ப்பார். அவர் சோப்பு போட்டுப் பல் தேய்ப்பதாக நான் நீண்ட நாள் நம்பி வந்தேன். பிறகுதான் அது ஒரு பசை மருந்து என்று தெரிந்துகொண்டேன். என் எதிர்கால லட்சியங்களில் ஒன்றாக அப்படி பல்தேய்ப்பது இருந்தது. நான் பார்ப்பதைக் கவனித்தும் மாமா கையசைத்து என்னைக் கூப்பிட்டார். மறுகணம் நான் திரும்பி ஒரு கையில் அவிழும் காற்சட்டையை பற்றியபடி ஓடி மூச்சுத்தெறிக்க என் வீட்டுக்குள் பாய்ந்து சமையலறைக்குள் நுழைந்தேன். "என்னடா" என்றாள் அம்மா. நான் ஒன்றும் சொல்லவில்லை. "அந்தத் தெருநாய்ட்ட விளையாடாதேன்னு ஆயிரம் மட்டம் சொன்னேம்பிலே?" என்றாள் அம்மா. முதுகில் ஒரு பொய்யடி வைத்தாள். எனக்கு அது சிவசங்கரன் மாமாதானா என்று சந்தேகம் வந்தது. பேய்கள் அப்படி வேடம் மாறி வந்து நிற்கலாமே. கை வீசி என்னை ஏன் அது கூப்பிட வேண்டும். யோசித்துப் பார்த்தபோது, அதன் கால்கள் தரையிலேயே படவில்லை என்றும் தோன்றியது. இரண்டு நாள் இரவு பகலும் அதைப்பற்றி யோசிக்காமலிருக்க முயற்சி செய்து உலவினேன். மூன்றாம் நாள் பயம் குறைந்து ஆவல் ஏறியது. மாலையில் மெல்ல நடந்து போய் வைத்தியர் வீட்டை பார்த்து நின்றேன். வீட்டு முன் யாருமில்லை. உள்ளே போகலாமா வேண்டாமா என்று நான் வெகுநேரமாக யோசித்துக் கொண்டிருக்கும்போது பின்பக்கம் மாமா வந்து நின்றார் நான் மூச்சு அவிந்து பேச்சிழந்து நின்றேன். அவர் கையிலிருந்த பையை கீழே வைத்து வேட்டியை நன்றாகத் தூக்கிக் கட்டினார். "உள்ளே வா. ஏன் இங்க நின்று பாக்கே?" என்றார். நான் "இல்லை" என்றேன். பின்னால் நகர்ந்தேன். "என்ன பயப்படுதே? ஆம்பிளை தானே? இந்த வயசில இப்பிடி பயப்பட்டா எப்பிடி? வா" என்ற படி உள்ளே போனார். ஆண்பிள்ளையா என்ற கேள்வி என்னை உசுப்பியது. மேலும் அவர் சிரிப்பும் நம்பிக்கை தரத்கூடியதாக இருந்தது. மாமா வீட்டின் புதிய பித்தளைப் பூட்டை திறந்து உள்ளே போய் பையை வைத்தார். எனக்கு அந்த வீட்டுக்குள் வெளிச்சம் அலையடிப்பது போல இருந்தது. "கொஞ்சம் பலசரக்கு காய்கறி வாங்கிட்டு வந்தேன். சமையல் சொந்தமாத்தான். என்ன பாக்கே?", "வெளிச்சமா இருக்கு.", "வெள்ளையடிச்சேன்" என்றார் சுவர்களின் பால் வண்ணம் அப்போதுதான் என் கவனத்திற்கு வந்தது. இது வேற மாதிரி வெள்ளையா இருக்கு.", "இது சுண்ணாம்பில்ல, பெயின்ட்.", "நீங்களே அடிச்சீங்களா?", "ஆமா சும்மா இல்லை, இது மேல படம் வரையப் போறேன்.", "சுவரிலயா?" நான் கோயில்களில் அப்படிப்பட்ட படம் பாத்திருக்கிறேன். "சாமி படமா?", "இது வேறமாதிரி படம்." அவர் எனக்குப் பாலில்லாத டீ தந்தார். நான் குடித்துவிட்டு வீட்டைச் சுற்றிப் பார்த்தேன். மிகப் பெரிய வீடு. எங்கள் வீடே பெரிது. இது அதைவிட ஏழெட்டு மடங்கு பெரிது. நிறையக் கூடங்கள், அவற்றிலிருந்து திறக்கும் வாசல்கள். வழி தவறி பல அறைகளில் அலைந்த மீண்டும் கொல்லைக்கே வந்தேன். மாமா வேறு அரையிலிருந்து கூப்பிட்டார். அவருடன் மீண்டும் முகப்புக்கு வந்தேன். "உங்களுக்கு வீட்டில் யாருமே இல்லையே. எதுக்கு இவ்வளவு பெரிய வீடு" என்றேன். "படம் வரையத்தான்" என்றார் மாமா. நான் அந்த வீட்டுக்குள் போன விஷயத்தை அம்மாவிடம் கூறவில்லை. அடுத்த நாள் எங்கள் வீட்டில் எல்லோரும் சுசீந்திரம் தேர் பார்க்கப் போனோம். கன்னியாகுமரிக்கும் போய்விட்டு நாராயணன் சித்தப்பா வீட்டில் தங்கி நான்கு நாள் கழித்து நள்ளிரவில் திரும்பி வந்தோம். மறு நாள் காலையில் எழுந்து கருப்பட்டிக் காப்பி குடித்ததுமே நான் கால்சட்டையை கையில் பிடித்துகொண்டு மாமா வீட்டுக்கு ஓடிப்போனேன். கதவு சாத்தியிருந்தது. "மாமா" என்றேன் "வா வா" என்றார் அவர் உள்ளேயிருந்து. நான் கூடத்துக்குள் நுழைந்ததும் பிரமிப்பும் குழப்பமுமாக நின்றேன். கூடம் முற்றிலும் மாற்றிக் கட்டப் பட்டிருந்தது. இரண்டு புதிய வாசல்கள் திறந்தன. ஒன்று சற்றே இருட்டின ஒர் அறை நோக்கித் திறந்தது. உள்ளே மங்கலான மின் விளக்கு மட்டும் எரிய, உள்ளே யாருமே இல்லை. மேஜை நாற்காலிகள் மீது சில புத்தகங்கள் ஒரு காலி டம்ளர். இன்னொரு கதவு முழுக்கத் திறந்து கிடந்தது. உள்ளே அதற்கடுத்த அறைக்கான வாசல். அப்பால் வெயில் சரிந்து விழுந்த கொல்லைப் புறத்தில் சில வாழையிலைகளும் ஒரு தென்னை ஓலையும் நான் மாமா என்று கூவியபடி அந்த வாசலில் நுழைய முயன்று முகத்திலறைபட்டு நின்றேன். ஒரு கணம் என் மூளை குழம்பிய பிறகே அது சுவரில் வரையப்பட்ட ஓவியம் என்று தெரிந்தது. இன்னொரு வாசலை தொட்டுப் பார்த்தேன். அதுவும் ஓவியம். எனக்கு அறிமுகமான பழைய வாசலையும் மெதுவாக ஐயத்துடன் தொட்டுப் பார்த்தேன். அதுவும் ஓவியமே என்று தெரிந்தபோது என் மனம் முழுக்கப் பயம் பிடித்தது. திரும்பிவிட எண்ணிக் கதவை நோக்கிச் சென்றேன். வெயில் பரவிய தோற்றத்துடன் அவ்வாசலும் ஓவியம் போலத்தான் இருந்தது. அதை நோக்கிச் செல்ல எனக்குத் தைரியம் வரவில்லை. நான்கு பக்கமும் வாசல்கள். நான்கும் ஓவியவாசல்கள். பீதியுடன் நான் அழ ஆரம்பித்தபோது இருண்ட அறையின் சன்னல் பெயர்ந்து விலகி அங்கு ஒர கதவு திறந்து மாமா வந்தார். "பயந்திட்டியா?" என்றார். நான் உடனே விசும்பி அழுதேன். அவர் என்னைத் தோளைத் தொட்டு அணைத்துக் கொண்டார். "வா" என்று அழைத்துச் சென்றார். உள்ளே பல அறைகளில் வண்ணம் தீட்டப்பட்டிருந்தது. முடிவடையாத ஓவியகள் எதிலுமே வழக்கமான ஓவியங்கள் போல மனிதர்கள் விலங்குகள் ஏதும் இல்லை. எல்லாமே கதவுகள், சன்னல்கள், அறைத்திறப்புகள். மாமா எனக்குப் பால் விடாத டீ கொடுத்தார். நான் அதைக் குடித்தபடி "எதுக்கு இப்படி வரையறீங்க?" என்றேன். "சும்மாதான்" என்றார் கண்களைச் சிமிட்டியபடி "பேய்கள் நம்மளைப் பிடிக்க வந்தா வழி தெரியாம குழம்பிப் போய்டும் பாரு அதான்." நான் வயிறு குபீரிட எழுந்து பிட்டேன் மாமா என் கையைப் பிடித்தார். "எங்க ஓடறே?", "இங்கப் பேய் இருக்கா?", "சும்மா சொன்னேன். பேயும் பிசாசும் ஒரு மண்ணும் இல்லை. நீ படித்த பிள்ளைதானே? சிந்திச்சுப் பாக்க வேண்டாமா?", "அப்ப ஏன் இப்பிடி வரையணும்?", "சும்மா ஒரு ஜாலிக்காகத்தான். எனக்குச் சின்ன வீடுகளே பிடிக்காது. எப்பபுமே பெரிய வீட்டில தான் இருப்பேன். வீட்டுக்குள்ளேயே காலார நல்லா நடக்கணும் ஓடணும் எவ்வளவு பெரிய வீட்டுக்கு எங்க போறது? எவ்வளவு பெரிய விடுன்னாலும் அதுக்கு ஒரு அளவு இருக்கே, இது அந்த மாதிரி இல்லை. இஷ்டத்துக்கு விரிச்சுக்கிட்டே போலாம். இப்ப இந்த வீட்டுக்குள்ள எத்தனை ரூம் இருக்குன்னு எனக்கே எண்ணிச் சொல்ல முடியாது. நேத்தைக்கு ராத்திரி கரெண்டு போயிடுச்சு. லாந்தரை எடுத்துக்கிட்டு சமையலறைக்குப் போனேன். வழி தவறிவிட்டது. அலைஞ்சு ஒரு வழியா போய்ச் சேர ஒரு மணி நேரம் ஆச்சு தெரியுமா?" எனக்கு நம்பவும் முடியவில்லை, நம்பாமலிருக்கவும் முடியவில்லை. அந்த வீட்டுக்குள் பார்ப்பவை இப்போது பயத்தையும் பரவசத்தையும் ஏற்படுத்தியது. அதைப்பற்றி அம்மாவிடம் சொல்லாமலிருக்க முடியவில்லை. அரைகுறையாக ஏதோ சொல்லப் போக அம்மா குத்திக் குடைந்து எல்லாவற்றையும் கேட்டாள். அவள் முகத்தில் பீதி வெளுத்துப் படர்ந்து "இனிமே நீ அங்கே போகப்பிடாது. போனா கைய கால முறிச்சிடுவேன்" என்று சொல்லிவிட்டாள். அவள் அப்படி ஒப்புக்கு எதும் சொல்வதில்லையாதலால் நான் அரண்டுபோனேன். நாலைந்து நாள் மாமா வீடுப்பக்கமே தலை காட்டவில்லை. ஐந்தாம் நாள் அப்பக்கமா ஓரக்கண்ணால் பார்த்தபடி போய் "மாமா!மாமா!" என்று கூப்பிட்டேன். "உள்ளே வா" என்று மாமாவின் குரல்கேட்டது. வாசலைத் திறந்து கூடத்தில சமைத்து பிரமித்து நின்றேன். திறந்து கிடந்த ஆறு கதவுகள் வழியாகவும் ஏராளமான கதவுகள் திறந்த நீண்ட பாதைதான் தெரிந்தது மனம் படபடக்க ஒரு கணம் நின்று விட்டுத் திரும்பி ஓடி வந்துவிட்டேன். மாமாவைப் பற்றிய செய்தி அதற்குள் ஊருக்குள் பலவாறாகப் பரவி விட்டது. அவர் ஒரு சூனியக்காரர் என்று நாணிப்பாட்டி சொன்னாள். அவருடைய வீட்டுக்குள் பலவிதமான ரகசிய வாசல்களும் பாதைகளும் திறந்திருப்பதாகவும் அதன் வழியாக டேனியல் வைத்தியரும் அவருடைய மகனும் மனைவியும் எல்லாம் சுற்றி அலைவதாகவும் சில சமயம் அவர்களுக்கும் சிவசங்கரன் மாமாவுக்கும் பெரிய சண்டை நடப்பதாகவும் சொன்னாள். தொடர்ந்து கேட்ட கதைகளால் கிலியடைந்து நான் மாமா வீட்டுப் பக்கமாகப் போவதையே தவிர்த்தேன். திருவனந்தபுரத்தில் ஓட்டலில் வேலைசெய்யும் சிவதாணு ஊருக்குப் புதிய செய்தியுடன் வந்தான் மாமாவிம் மனைவி இறக்கவில்லை. ஒரு ஆசாரியுடன் கோழிக் கோட்டுக்கு ஓடிப் போய்விட்டாள். அதன் பிறகு மாமா சிலகாலம் மனநிலை பிசகிச் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். நெடுமங்காட்டுப் பக்கம் ஒரு வீட்டில் கொஞ்ச நாள் இருந்தார். ஊரார் கூடி அவரை அடித்துத் துரத்தி அந்த வீட்டுக்கும் தீ வைத்திருக்கிறார்கள். அதன் பிறகு பத்து வருடம் ஆளை யாரும் காணவில்லை வடக்கே சாமியாராகி அலைவதாகச் சொல்லப்பட்டது. போன வருடம் திரும்பி வந்து அவரது மனைவியைக் கோழிக்கோட்டில் சந்தித்து கட்டையால் தாக்கியிருக்கிறார். அவளுக்கும் ஆசாரியால் பிறந்த குழந்தைக்கும் அடி விழுந்திருக்கிறது அங்கிருந்து தப்பி ஓடி திருவனந்தபுரம் வந்து பூர்விக வீட்டை விற்றுவிட்டு தலைமறைவாகி விட்டார். கோழிக்கோடு போலிஸ் தேடி வந்தபோதுதான் எல்லாருக்கும் விஷயம் தெரியும். சிவதாணுவின் ஓட்டலுக்கு நேர் பின்னாலதான் அவரது வீடு. "இப்பம் விளிச்சு ஒரு ஃபோனடிச்சா போரும் பிடிச்சு அமுக்கி எடுத்துப்போடுவா. அப்படிப்பட்ட பிடிகிட்டாப் புள்ளியாக்கும்" என்றான் சிவதாணு. நான் மறுநாள் மாமாவின் வீட்டுமுன் பூவரச மரத்தடியில் நின்று வீட்டையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். வெண்ணிறச் சுவர்களும் சிமென்ட் கூரையும் கொண்ட உயரம் குறைவான வீடு. வெளியேயிருந்து பார்க்கும் போது மிகவும் சாதாரணமாக மற்ற எல்லா வீடுகளையும் போலத்தான் இருக்கிறது. ஆனால் அதற்குள் எத்தனை ஊடு வாசல்கள். வராண்டாக்கள், கதவுகள், ஊடுவழிகள், ரகசியப் பொந்துகள். உள்ளே போகும் ஒருவர் மீண்டும் வரவே முடியாதபடி மாட்டிக் கொள்ள முடியும். நாட்கணக்கில் மாசக் கணக்கில் வருடக்கணக்கில் எனக்கு மூச்சுத் திணறியது. சிறுநீர் வந்து முட்டி ஒரே ஓட்டமாகத் திரும்பி ஓடி வந்துவிட்டேன். அன்றிரவும் பிறகும் என் கனவில் நான் விசித்திரமான வாசல்களைத் திறந்து திறந்து சுற்றியலைந்து வழி தவறி, பயந்து, சிறுநீர் கழித்து விழித்து கொண்டேன். மாமாவை வெளியே எவருமே பார்க்கவில்லை என்பதையும் எவரும் கவனிக்கவில்லை. ஒரு மாதம் வரை ஆனபோதுதான் அவர் அங்கே இல்லையோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. சாமான்கள் வாங்குவதற்காவது அவர் வந்தாக வேண்டுமே. பஞ்சாயத்து மெம்பர் சாமிதாஸ் நாடார் என் அப்பாவை வந்து பார்த்து இருவரும் தனியாக வெகு நேரம் பேசிக் கொண்டார்கள். மறு நாள் மீன் சந்தையில் ஊர்ப் பெரியவர்கள் கூடி மாமாவைப் பற்றிப் பேசியதாக அப்பு அண்ணா சொன்னார். முக்கியமான ஏழெட்டுபேர் கூடி மாமாவின் வீட்டுக்குப் போய் பலமுறைக் கூப்பிட்டுப் பார்த்தனர். பதில் இல்லை. ஞானகுணத்தை உள்ளே அனுப்பிப் பார்க்கச் செய்தனர். உள்ளே யாருமில்லை என்று அவர் சொன்னார். வெளியே வீட்டைப் பூட்டி சாவியை மெம்பர் சாமிதாஸ் வைத்துக் கொண்டார். ஆனால் வீட்டுக்குள் இரவில் வெளிச்சம் தெரிவதாக நாணிப் பாட்டி சொன்னாள். "அவரைஅந்த வைத்தியருக்குப் பேய் பிடிச்சு முழுங்கிப் போட்டு அதாக்கும்" என்றான் அப்புக்குட்டான். எனக்குப் பலநாட்கள் இடைவிடாது மூத்திரம் முட்டுவது போன்ற பதற்ற நிலையும் நிலை கொள்ளாமையும் இருந்தது. பிறகு மெல்ல எல்லாரும் மாமாவை மறந்தது போலத் தோன்றியது. சேலக்கரை வீட்டு ருக்மிணித் தங்கச்சியின் மகள் அம்பிகாமணித் த ங்கச்சி அயலூர்க்காரன் ஒருவனுடன் ஊரைவிட்டு ஓடிப்போன தகவல் வந்து ஊரை பரபரப்பாக்கியது. அதன் பிறகு கோயில் திருவாதிரை விழாவில் பாறாசாலை பத்மத்தின் நடன நிகழ்ச்சி. நான் வெகுநாள் யோசித்து தீர்மானித்து மாமாவின் வீட்டை அடைந்தேன். வீடு மேலும் பாழடைந்து மேலும் தனிமையும் மர்மமும் கொண்டு நின்றது. முற்றத்தை முட்செடிகள் பூவரச மரத்தடியில் நின்று வீட்டையே பார்த்தேன். மெதுவாகத் தைரியம் சேகரித்து வீட்டை நெருங்கி கதவருகே போய் "மாமா மாமா சிவசங்கரன் மாமா" என்று பலமுறை கூப்பிட்டேன். பதில் இல்லை பூட்டை இடித்துப் பார்த்தேன். கெட்டியான பூட்டு சற்று துரும்பேற ஆரம்பித்திருந்தது. கதவை தள்ளி பார்த்த போது ஒன்று தோன்றியது வீட்டில் வேறு வாசல்கள் இருக்கக்கூடும் கொல்லைப் பக்கம் போய்ப் பார்த்தேன். உள்பக்கம் மூடியிருக்கிறதா என்று தள்ளினேன். கையில் சுவர் தட்டுப்பட்டது. இன்னொரு கொல்லைப்பக்கம் கதவு இலேசாகச் சாற்றப்பட்டிருந்தது. ஓவியம் போலத்தான் இருந்தது. ஆனால் கைவைத்ததும் திறந்து கொண்டது. உள்ளே நான்கு வாசல்கள் திறந்தன. ஒவ்வொன்றாக மூடினேன். மூன்றாம் வாசல்கள் திறந்தது. மீண்டும் வாசல்கள். வாசல்கள் வழியாகத் திறக்கும் வராண்டாக்கள். பாதி மூடிய கதவுகளுக்கு அப்பால் ஒளி சரிந்திறங்கிய சன்னல்கள் கொண்ட அறைகள் செவ்வக வடிவமானவை. சதுரவடிவமானவை. எல்லா அறைகளிலும் பலவகையான வாசல்கள் திறந்து பல திசைகளுக்கு விரிந்த அறைவாசல் திறப்புகளைக்காட்டின. திசை தடுமாறி விட்டிருப்பதை உணர்ந்தேன். "மாமா மாமா" என்று கூப்பிட்டேன். என் குரல் வேறு எங்கோ எதிரொலித்தது. சற்று நேரம் வரை எப்படியும் மீண்டு விடலாம் என்ற ஆழமான நம்பிக்கையும் அதிலிருந்து உருவான உற்சாகம் மிக்க ஆவலும் என்னிடம் இருந்தன. கால்கள் களைத்து சோர்ந்து உடல் எங்கும் வியர்வை வழிய ஆரம்பித்த போது உற்சாகம் வடிந்தது. இதே வாசல் என்று உறுதியாக நம்பித் திறந்த பல வாசல்கள் பொய் தெரியத்தெரிய பயம் மேலோங்கியது "மாமா!மாமா!" என்று நான் கூவியபோது என் குரல் நடுங்கியதையும் பிறகு தழுதழுத்ததையும் நானே கேட்டேன். யாரோ நடமாடும் காலடி ஓசை கேட்டது. அது என் காலடி ஒசை தானா என்று சோதிக்கச் சட்டென்று நின்று கேட்டேன் இல்லை வேறு யாரோ. வேறு யாரோ மிக நிதானமாக நடந்து செல்லும் ஓசை யாரது?" என்றேன் பதில் இல்லை "மாமா!" மீண்டும் நடந்தேன். இம்முறை என் நடை மெல்ல மெல்ல ஓட்டமாக மாறியது. ஒரு கட்டத்தில் துரத்தப்படுபவன் போல வாயால் மூச்சு விட்டபடி ஓடிக்கொண்டிருந்தேன். களைத்து திரும்பி தலையை கைகளால் பற்றிக்கொண்டு குனிந்து தரையில் அமர்ந்தேன். மூச்சும் தாகமும் தொண்டையை அறுத்தன. எச்சில் கூட்டி விழுங்கி விட்டு எழுந்தபோது எதிரே திறந்த வாசல்களுக்கு அப்பால் ஒரு மனிதர் வேட்டியை வயிற்றுமீது எற்றிக் கட்டி தலையில் தலைப்பாகையும் தோளில் சிவப்புக் குற்றாலம் துண்டுமாக மெல்ல நடந்து செல்வது தெரிந்தது. மித மிஞ்சிய பயத்துடன் உறைந்து நின்று அவரைப் பார்த்தேன். "வைத்தியர்" என்று என் மனம் சொன்னதுமே எல்லா உறுப்புகளும் பரபரப்படைந்தன ஓடி அவ்வாசலை முட்டியபோது அது நிலைக்கண்ணாடி என்று தெரிந்தது. அப்படியானால் அது பிரதிபலிக்கும் வாசல் எது? நேர் எதிரில் இருந்தது ஓர் ஓவியவாசல்தான். வாசல்கள் முட்டு முட்டி இறுதியில் திறந்த அது வேறு ஒரு வராண்டாவிற்குக் கொண்டு சென்றது. அங்கிருந்து இன்னொரு அறைக்கு மீண்டும் அதே வராண்டா. மீண்டும் அறைகள். மீண்டும் நான் வந்தது முதலில் இருந்த அதே அறைக்குத்தான், வேறு திசையிலிருந்து. ஒரு முறை நின்று மூச்சுவாங்கிய போதுதான் நான் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருப்பதை உணர்ந்தேன். அழுதபடியே அறைகள் அறைகளாக ஓடினேன். ஓர் அறைக்குள் ஒரு அம்மாவும் பெண்ணும் இருப்பது சன்னல் இடைவெளி வழியாகத் தெரிந்தது. அம்மா கட்டிலில் படுத்திருக்க பெண் பைபிள் படித்துக் கொண்டிருந்தாள். ஆனால் நான் அறைக்குள் நுழைந்ததும் காட்சிக் கோணம் மாறிவிட்டது. யாருமில்லை. மீண்டும் ஓட்டம். வெகுதொலைவில் மீண்டும் வைத்தியரைக் கண்டேன். அவ்வறைக்குள் நுழைய முயன்று அது ஓர் ஓவியம் என்று கண்டேன். கடைசியில் ஒரு பெரிய கூடத்தில் அப்படியே குப்புற விழுந்து விட்டேன். நான் சில கணங்களில் செத்துவிடுவேன். என்று தோன்றியது. கண்களை மூடிக்கொண்ட போது முதுகு கோடிக்கண்களினாலான ஒரு பரப்பாக மாறிக் காட்சிகள் தெரிய ஆரம்பித்தன. யாரோ நெருங்கி வருகிறார்கள். கூடத்திற்குள் வந்து என்னைப் பார்க்கிறார்கள். சிலகணம் பார்த்தபடி நின்று பிறகு திரும்பி வேறு ஒரு அறைக்குள் நுழைத்தார்கள். நான் பாய்ந்து எழுந்து கூடத்தைப் பார்த்தேன். நான்கு பக்கமும் திறந்த அறைகளில் முடிவற்ற வரிசை. ஓர் அறைக்குள் நுழைய முயன்றேன். அது கண்ணாடிப்பிம்பம். உடனே அதுவரை அறுபட்டிருந்த கண்ணீர் பீறிட்டு வந்தது "அம்மா" என்று அழுதேன். அம்மா அம்மா என்று கூவியபடி கதவுகளை முட்டி ஒன்றில் நுழைந்து இன்னொன்றில் ஊடுருவிச் சென்று மீண்டும் களைத்து நின்றேன். அப்பால் திறந்த பிரகாசமான அறை ஒன்றில் மாமாவைக் கண்டேன். மேஜை மீது பேப்பர் வைத்து வரைந்து கொண்டிருந்தார். மேஜை மீது ஒரு மூன்று வயது பெண் குழந்தை உட்கார்ந்து சாயங்களால் விளையாடிக் கொண்டிருந்தது. மறு பக்கம் ஒரு பெண் ஏதோ படித்தாள். அது அவர் மனைவி என்று தெரிந்தது. நான் மாமா என்று கூப்பிட்டேன் மாமா மாமா என்று கத்தினேன் மாமா அருகே இன்னொருவன் அமர்ந்து டீயை ஸ்பூனால் கலக்கினான். அல்லது ஸ்பூனால் எதையோ அதிலிருந்து எடுத்தான். நான் அவர்களை ஒரு கணம் தான் கண்டேன். குரலெழுப்பியபடி சற்று முன்னகர்ந்த போது கோணம் மாறிவிட்டது அவர்களைத் தெரியவில்லை. மீண்டும் கதவுகளைத் தட்டித் தட்டி திறந்து திறந்து ஓடிக்களைத்து நின்றேன். அப்போது அச்சம் முற்றிலும் விலகிவிட்டது. பிரமிப்பு மட்டும்தான். அவர்கள் என்னை வேறு எங்கிருந்தோ பார்க்கிறார்கள் என்று உணர்ந்தேன். அவர்களைப் போலத்தான் நானும். இனி இவ் வீட்டில் நுழைபவர்கள் என்னையும் ஓவியமாகக் காண்பார்கள். மறுகணம் பீடித்த பேரச்சம் என்னைத் தூக்கி வீசியதுபோல பாய வைத்தது. நான் வெளிவந்த கூடம் பலமுறை அதற்குள் வந்தது தான். சுவரில் ஒரு பெரிய பிம்பம் மாட்டப்பட்டிருந்தது. அது ஒரு புங்கமரம் அதற்க அப்பால் தெரு. வீடுகளில் விளிம்புகள். எனக்கு அறிமுகமான இடம். நான் ஓவியம் நோக்கிப் பாய்ந்தேன். ஆனால் அது ஒரு திறப்பு. தோட்டத்தில் அந்தப் புங்கமரத்தில் வந்து மோதி விழுந்தேன். எழுந்து திரும்பிப் பார்க்காமல் ஒடினேன். மாமா அந்த வீட்டுக்குள் தான் இருக்கிறார் என்று நான் சொன்னதை பல வருடங்கள் எல்லோருமே கிண்டல் செய்தனர். பிறகு அந்த வீடு இடிந்து விழுந்தது. நான் படிப்பிற்காக ஊரைவிட்டு வந்தேன். மேலும் பல வருடங்கள் கழித்து ஒரு நாள் அக்காட்சிகள் உக்கிரமான கனவாக வந்தன. விழித்துக்கொண்ட பின்பு நான் முதலில் அவ்வீட்டுக்குள் அனுபவித்ததும் கனவே என்று பட்டது. அல்லது கனவில் கண்டவை நனவுடன் கலந்து நினைவில் பதிந்து விட்டன. அன்று மாமாவுடன் அவ்வறையில் இருந்தவன் அந்த ஆசாரிதான் என்று ஒரு நினைவுக் கணத்தில் என் மனம் அறிந்தது. மற்றது அவர் மன€வியும் அந்தக் குழந்தையும் தான். உலகத்தை அறிந்துவிட்டிருந்தமையால் எனக்கு அதில் ஆச்சரியம் ஏற்படவில்லை. ஆனால் உடனே அந்த வீட்டில் நான் சுற்றிசுற்றி அலைந்ததை மேலும் பல மடங்கு பீதியுடன் அனுபவித்தேன். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: கிருஷ்ணதேவராயர், தெனாலிராமன், ராஜகுரு, யானை, வண்ணான், குழி, கூனல்
தலைப்பு: கூனனை ஏமாற்றிய கதை
| கூனனை ஏமாற்றிய கதை ஒரு முறை ராஜகுருவை தெனாலிராமன் அவமானப் படுத்தி விட்டான் என்ற குற்றச் சாட்டு அரசவைக்குக் கொண்டு வரப்பட்டது. தெனாலிராமனின் எந்த சமாதானத்தையும் அரசர் கேட்கத் தயாராக இல்லை. இராமனுக்குத் தண்டனையை அளித்து விட்டார். இராமன் மீது பொறாமை கொண்ட ராஜகுருவும் மன்னனைத் தூண்டி விட்டார்.ராஜகுருவை அவமதித்தது மன்னனையே அவமதித்ததாகும். எனவே இக்குற்றத்திற்கு மன்னிப்பே கிடையாதுஎன்று சொல்லி ராஜகுருவையே தண்டனையளிக்கும்படி கேட்டுக் கொண்டார் மன்னர் .ராஜகுரு தண்டனையைக் கூறினார்." கழுத்து வரை தெனாலிராமனை மண்ணில் புதைத்து விட்டு யானையின் காலால் தலையை இடறச் செய்து கொல்ல வேண்டும்" என்று தண்டனையளித்தார். மன்னரும்" அப்படியே செய்யுங்கள்" என்று ஆணை பிறப்பித்தார். ஆணையை சிரமேற்கொண்ட காவலர்கள் தெனாலிராமனை இழுத்துக் கொண்டு காட்டுக்குச் சென்றனர். வழியில் இராமன் அவர்களோடு என்னெனவோ பேச்சுக் கொடுத்துப் பார்த்தான். ஆனால் ராஜகுரு காவலர்களை எச்சரித்து தெனாலிராமன் ஏதேனும் பேசித் தப்பிவிடுவான். அதனால் எதுவும் பேசாதீர்கள் என்று கூறியிருந்தார். இந்த எச்சரிக்கை காரணமாக காவலர்கள் எதுவும் பேசாமல் நடந்தனர். ஊருக்கு எல்லையில் காடு இருந்தது. அங்கே ஒற்றையடிப்பாதை வழியே தெனாலிராமனை அழைத்துச் சென்றனர். மக்கள் நடமாட்டமில்லாத அமைதியாக இருந்த இடத்தில் நின்றார்கள். அந்த இடத்தில் ஒரு பெரிய பள்ளம் தோண்டினார்கள். தெனாலிராமனை அந்தப் பள்ளத்தில் இறக்கி கழுத்தளவு மண்ணால் மூடி விட்டு யானையைக் கொண்டுவர அரண்மனைக்குச் சென்று விட்டார்கள்.தெனாலிராமன் தப்பிச் செல்ல வழியறியாது திகைத்து மண்ணுக்குள் தவித்துக் கொண்டிருந்தான். சற்று தூரத்தில் ஒற்றையடிப் பாதை வழியாக யாரோ வருவது தெரிந்தது. "அய்யா!" தெனாலிராமன் பெருங் குரலெடுத்துக் கூவி அழைத்தான். அந்த மனிதன் ராமனின் குரல் கேட்டு மெதுவாக அச்சத்துடன் அருகே வந்தான். அவனைப் பார்த்த ராமன் "பயப்படாதீர்கள். அருகில் வாருங்கள்."என அழைத்தான். வந்தவன் தன் முதுகில் இருந்த துணி மூட்டையைக் கீழே இறக்கி வைத்து விட்டு ராமனின் முகத்தருகே அமர்ந்தான். "யாரையா உம்மை மண்ணுக்குள் புதைத்தது?" என்றான். இராமன் வந்தவனின் முதுகைப் பார்த்தான். அவன் ஒரு வண்ணான் மூட்டை சுமந்து சுமந்து அவன் முதுகு வளைந்து கூனனாகியிருக்கிறான் என்பதைத் தெரிந்து கொண்டான். சட்டென சமயோசிதமாய்ப் பேசினான் இராமன்."அய்யா! நானும் உம்மைப் போல கூனனாக இருந்தேன். ஒரு பெரியவர் என்னிடம் ஒரு நாள் முழுவதும் மண்ணுக்குள் புதைந்திருந்தால் கூன் நிமிர்ந்து விடும் என்று சொன்னார். நான் காலை முதல் மண்ணுக்குள்ளேயே இருக்கிறேன். என்னைத் தூக்கி விடும் என் கூன் நிமிர்ந்து விட்டதா பார்க்க ஆசையாக இருக்கிறது" என்றான்.கூனனும் இராமனை வெளியே எடுத்தான். இராமன் தன் கூனல் நிமிர்ந்து விட்டதாக மகிழ்ச்சி கொள்வது போல நடித்தான். அதை உண்மையென நம்பிய கூனனாகிய வண்ணான் தன்னையும் மண்ணில் புதைத்து , தன் கூனல் நிமிர வழி செய்யும்படி வேண்டிக் கொண்டான். தெனாலிராமனும் வண்ணானைக் குழிக்குள் இறக்கி கழுத்து வரை மண்ணால் மூடிவிட்டுத் தன் வீடு நோக்கிச் சென்றான்.யானையுடன் வந்த காவலர்கள் தாங்கள் விட்டுச் சென்ற இடத்தில் இராமனுக்குப் பதிலாக வேறொருவன் இருப்பதைப் பார்த்துத் திகைத்தனர். அந்த வண்ணானை அழைத்துக் கொண்டு மன்னரிடம் சென்று ராமனின் தந்திரத்தைக் கூறினர். ராமனின் திறமையைக் கண்டு அவனை மன்னித்து விடுதலை செய்தார் மன்னர். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: ஸென் ஆசிரியர், போர் வீரன், மாணவர்கள், சண்டை, அன்பளிப்பு
தலைப்பு: ஏற்றுக் கொள்ளாத அன்பளிப்பு
| ஒரு கிராமத்தில் வயதான போர் வீரரும் ஸென் ஆசிரியருமான ஒருவர் வசித்து வந்தார். முதுமையை அடைந்து இருந்தாலும் சண்டையில் யாரையும் எளிதில் வெல்லும் ஆற்றலைப் பெற்றிருந்தார். அவருடைய பொருமையும் பெருமையும் சுத்து வட்டாரங்களில் இருந்த கிராமங்களிலும், நகரங்களிலும் பரவி இருந்தது. பல மாணவர்கள் அவரிடம் சேர்ந்து போர்ப் பயிற்சிகளைக் கற்று வந்தனர். ஒரு நாள் வாலிப வயதுடைய போர் வீரன் ஒருவன் அந்தக் கிராமத்திற்கு வந்தான். அவன் முதிய வயதினரான ஆசிரியரை எப்படியும் வலுச்சண்டைக்கு அழைத்து அவரை முதன்முதலாக வென்றவன் என்ற பட்டத்தினைப் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் அந்த ஊருக்கு வந்திருந்தான். அவனுக்கு எதிரியிடம் இருக்கும் குறைபாட்டினை எளிதில் அறிந்து கொள்ளும் திறமையும், இடியைப் போன்ற வேகத்துடன் மின்னெலென கண் இமைக்கும் நேரத்தில் பாய்ந்து தாக்கும் ஆற்றலையும் பெற்றிருந்தான். கருணையே இல்லாத அவன் எதிரியினை வெகு நேரம் உற்று நோக்குவான், எதிரி முதல் அடியை எடுத்து வைக்கும் வரையில் அவர்களை கூர்ந்து நோக்குவான். எதிரி முதல் அடியை எடுத்து வைத்ததும் எதிரியினுடைய சண்டைத் திரனில் உள்ள குறைபாட்டினை அறிந்து உடனடியாக தன்னுடைய ஆற்றைலை எல்லாம் ஒருமுகப் படுத்தி எதிரியைத் தாக்கிக் கொல்லும் ஆற்றலைப் பெற்றிருந்தான். இதுவரை இந்த வாலிபனிடம் அவனுடைய முதல் இடியென தாக்கும் அடியிலிருந்து யாரும் உயிர் தப்பிப் பிழைத்தது இல்லை. தன்னுடைய மாணவர்கள் பலரும் இந்த கெட்ட நோக்குடைய வாலிப போர் வீரனைப் பற்றி சொல்லித் தடுத்த போதும், முதிய ஸென் ஆசிரியர் மிகவும் மகிழ்ச்சியுடன் இளைஞன் விட்ட சவலான சண்டைக்கு ஒத்துக் கொண்டார். இருவரும் போர் செய்யும் இடத்திற்கு சென்றனர். ஊர் மக்களும் மாணவர்களும் சண்டையினைப் பார்ப்பதற்காக சுற்றி நின்று கொண்டிருந்தனர். சண்டை ஆரம்பித்த உடனேயே வாலிப போர் வீரன் ஆசிரியரை ஜப்பானிய மொழியில் இருந்த இழிவான வார்த்தைகளை எல்லாம் உபயோகப் படுத்தி திட்ட ஆரம்பித்தான். கீழே இருந்த குப்பைக் குளங்களை அள்ளி ஆசிரியர் மேல் வீசினான். அவருடைய முகத்தில் படுமாறு காரி உமிழ்ந்தான். ஒரு மனிதனை எதை எதையெல்லாம் செய்தால் அவமானப் படுத்த முடியுமோ அத்தனை விதமான செயல்களையும் செய்தான். வார்த்தைகளை உபயோகப் படுத்தி கோபமுட்டும் படி பேசி சாபமிட்டான். இப்படியாக ஒரு மணி நேரத்திற்கும் மேல் சென்றிருக்கும். ஆனால் ஸென் ஆசிரியர் எந்த விதமான உணர்ச்சியையும் காட்டாமல் அமைதியாக உறுதியுடன் நின்றிருந்தார். கடைசியில் வார்த்தைகள் கிடைக்காமல் இளைஞன் சோர்வடைந்து, தன்னுடைய திட்டம் பலிக்காமை கண்டு, முதியவரை வெல்வது கடினம் என்று நினைத்து அவமானத்துடன் அந்த இடத்தினை விட்டு சென்று விட்டான். முதிய ஆசிரியர் இளைஞனின் எல்லா விதமான அவமானமான செயலுக்கும் கோபமே படாமலும் பதிலே தராமலும் சண்டையிடாமலும் அமைதியாக நின்றிருந்ததைப் பார்த்த மாணவர்கள், ஆசிரியரை சூழ்ந்து கொண்டு கும்பலாக ஒரே நேரத்தில் கேள்வி கேட்க ஆரம்பித்தனர். "எப்படி நீங்கள் இப்படிப் பட்ட அவமானமான வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டு அமைதியாக நிற்க முடிந்தது? எதனால் அந்த கேடுகெட்ட இளைஞன் சண்டையிடாமலேயே இங்கிருந்து ஓடிவிட்டான்?", "யாரோ ஒரு விருந்தினர் உன்னைப் பார்க்க வருகிறார், வருகிறவர் உனக்கு ஒரு பொருளை அன்பளிப்பாகத் தருகிறார் என்று வைத்துக் கொள்வோம், நீ அதனை பெற்றுக் கொள்ளவில்லை எனில் அந்த அன்பளிப்பு யாரைச் சேரும்?" என்று கேட்டார் ஸென் ஆசிரியர். அனைவரும் ஒரே குரலில், "வந்த விருந்தினரையேச் சேரும்" என்று கூறினர். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: அது ஒரு அழகிய காடு, அந்த காட்டில் கெட்ட சுபாவமுள்ள தேள் ஒன்று வசித்து வந்தது. அந்தக் காட்டின் நடுவில் ஒரு நீரோடை இருந்தது. அந்தத் தேளுக்கு இக்கரையில் இருந்து அக்கரைக்கு போக வேண்டி இருந்தது. அக்கரைக்குப் போவதற்காக அந்த நீரோடையில் இருக்கும் பெரிய மீன்கள், நண்டு, ஆமை போன்றவைகளிடம் தேள் உதவி கேட்டது, ஆனால் அந்த பொல்லாத தேள் தம்மை கொட்டிவிடும் என்று அவை மறுத்து விட்டன. எப்படி நீரோடையைக் கடப்பது என்று தேள்யோசித்துக்கொண்டு இருந்தபோது அந்த நீரோடையில் தவளை ஒன்று வந்து கொண்டிருந்தது. தவளையைக் கண்ட தேள், “தவளையாரே! நான் அக்கரைக்குச் செல்லவேண்டும் என்னை அங்கு கொண்டு போய் விட்டு விடுவீரா?” என்று கேட்டது. “நானும் அக்கரைக்குத்தான் போகிறேன், என் முதுகில் ஏறிக்கொள்ளும் உம்மை நான் அக்கரையில் விட்டுவிடுகிறேன்!“, என்றது தவளை. தேளும் தவளையின் முதுகில் ஏறிக்கொண்டது. தவளை நீரில் நீந்திச்செல்ல அரம்பித்தது, சிறிது தூரம் தான் தவளை சென்றிருக்கும் தேளுக்கு ஒரு யோசனை வந்தது, நான் பல பேரைக கொட்டியிருக்கிறேன். அவர்கள் வலியால் துடித்ததையும் பார்த்திருக்கின்றேன். ஆனால் நான் ஒரு நாளும், தவளையை கொட்டவில்லை, இந்த தவளையைக் கொட்டினால் எப்படித் துடிக்கும்? இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது என்று தவளையை கொட்டிப் பார்க்க நினைத்தது. தேள் தவளையின் முதுகில் கொட்டியது. அனால் தவளை பேசாமல் போய்க்கொண்டிருந்தது. தேள் தவளையைப் பார்த்து, “தவளையாரே! உமது உடம்பில் வலியே வருவதில்லையா?” என்று கேட்டது. தேளின் கெட்ட எண்ணத்தைப் புரிந்துகொள்ளாத தவளை, “எனது முதுகு வழவழப்பானது. அதனால் எனக்கு அந்த இடத்தில் வலியே வருவதில்லை” என்று சொன்னது தவளை. ஆனால் எனது கழுத்துப்பக்கம் மென்மையாக இருக்கும். இதில் தான் எனக்கு வலிகள் காயங்கள் ஏற்படும் என்று சொன்னது தவளை. ஓகோ; அப்படியா? என்று கேட்ட தேள், மெதுவாக தவளையின் கழுத்துப் பகுதியை நோக்கிச் சென்றது. கழுத்தில் இருந்து தலைப்பகுதிக்குச் சென்ற தேள் தவளையை கொட்ட ஆரம்பித்தது. தேள் கொட்டவருவதை அறிந்து தவளை தலையை தண்ணீருக்குள் இழுத்துக் கொண்டது. தேள் நீரோடையில் விழுந்து விட்டது. தனக்கு உதவி செய்த தவளைக்கு கேடுவிளைவிக்க நினைத்த தேள் தண்ணீரில் மூழ்கி இறந்தது. தவளை கரையை நோக்கி நீந்திச் சென்றது. ஒருவர் எவ்வித பலனையும் எதிர்பாராமல் எமக்கு உதவி செய்தாராயின், அவரின் உதவியை நாம், எம் வாழ் நாளில் என்றுமே மறந்து விடலாகாது. அவருக்கு நன்றியுடையவனாக இருத்தல் வேண்டும். மாறாக அவருக்கு கெடு செய்ய நினைப்போமாயின், அது எம்மையே வந்து சேரும்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'தேளும் தவளையும்' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: ஜென் ஞானி, மனைவி, தாளம்
தலைப்பு: மரணம்
| ஜென் ஞானி ஒருவரின் மனைவி இறந்து விட்டார்.துக்கம் விசாரிக்க ஊரே திரண்டு வந்திருந்தது.எல்லோர் முகத்திலும் வருத்தம்,கண்ணீர். ஆனால் ஞானியோ கைகளால் தாளம் போட்டபடி பாடிக் கொண்டிருந்தார்,சர்வசாதாரணமாக!வந்தவர்களுக்கு அதிர்ச்சி.ஒருவன் துணிந்து கேட்டான்,"குருவே,நீங்களே இப்படி செய்யலாமா?என்ன இருந்தாலும் இவ்வளவு காலம் உங்களுடன் வாழ்ந்த உங்கள் மனைவி இறந்திருக்கும்போது,நீங்கள் கவலையின்றி பாடிக் கொண்டிருக்கிறீர்களே?"ஞானி சொன்னார்,"பிறப்பில் சிரிக்கவோ.இறப்பில் அழுவதற்கோ என்ன இருக்கிறது?பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை. என் மனைவிக்கு முன்பு உடலோ,உயிரோ இல்லை.பிறகு உயிரும் உடலும் வந்தன. இப்போது இரண்டும் போய்விட்டன.இடையில் வந்தவை இடையில் போயின. இதில் வருத்தப்படுவதற்கு என்ன இருக்கிறது?" |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: மலை உச்சியில் உள்ள மக்கள், அடிவாரத்தில் உள்ள மக்கள், குழந்தை, பெரியவர்கள், இளைஞர்கள், பெண்
தலைப்பு: தாய்மையின் சக்தி
| ஒரு மலைப் பிரதேசத்தில் மலை உச்சியில் ஒர் இனத்தாரும், அடிவாரத்தில் இன்னொரு இனத்தாரும் வாழ்ந்து வந்தார்கள். இரு இனத்தாருக்கும் எப்போதும் பகை. ஒரு முறை உயரத்தில் இருந்தவர்கள் அடிவாரத்தைச் சேர்ந்த ஒரு குழந்தையைக் கடத்தி விட்டார்கள். சமூகத்திலிருந்த சில பெரியவர்கள், மலைமேல் இருந்த சமூகத்தினரிடம் சமாதானமாகப் போய் பேசினால் குழந்தையை மீட்டு வந்து விட சாத்தியம் இருப்பதாக ஊரில் உள்ள இளைஞர்களிடம் அறிவுரை கூறினர். இளைஞர்கள் சிலர் உடனே முன்வந்தார்கள். அவர்கள் கடினமான வேலைகள் செய்து பழகியவர்கள். எந்தச் செயலை எடுத்தாலும் அதை விடாமுயற்சியுடன் முடிக்கும் மனப்போக்கைக் கொண்டவர்கள். ஊர் பெரியவர்களும், இந்தச் செயலை முடிக்க இவர்கள்தான் சிறந்தவர்கள் என்று அவர்களை வாழ்த்தி அனுப்பி வைத்தார்கள். இளைஞர்களும் ஆர்வத்துடன் கிளம்பினார்கள். அந்த மலையின் சில பகுதிகள் மிகவும் செங்குத்தானவை. அந்த இளைஞர்களால் அப்படி ஒரு பகுதியை ஏறிக் கடக்க முடியவில்லை. விடாமுயற்சியுடன் அப்பகுதியைக் கடக்க பலமணி நேரமாக பல வழிகளில் முயன்று கொண்டிருந்தனர். களைத்துப் போனால் ஓய்வெடுத்துக் கொண்டு மீண்டும் முயற்சித்தனர். அப்போது தம் ஊரைச் சேர்ந்த ஒரு பெண் மேலேயிருந்து கடத்தப்பட்ட குழந்தையைத் தூக்கிக் கொண்டு கீழே இறங்கி வருவதைப் பார்த்தார்கள். அவள் அருகில் வந்தவுடன் "நாங்கள் ஏற சிரமப்பட்ட மலையை நீ ஏறிச் சென்றுவிட்டாயே! எப்படி?" என்று வியப்புடன் கேட்டார்கள். அவள் இடுப்பிலிருந்த குழந்தையைக் காட்டி "இது உங்கள் குழந்தை இல்லை. என் குழந்தை. அதுதான் வித்தியாசம்" என்று பதில் சொன்னாள். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: மிகவும் பிரசித்தி பெற்ற சூஃபி கதை ஒன்று எனக்கு நினைவுக்கு வருகிறது. ஒரு அரசன் தன் கனவில் ஒரு கறுப்பு உருவம் ஒன்றைக் கண்டார். அது கனவு என்ற போதிலும் அவர் அரண்டு விட்டார். அவர், “நீ யார்? எதற்காக என் கனவில் வந்தாய்?” என்று கேட்டார். அதற்கு அந்த உருவம், “நான் தான் உன் மரணம். நாளை சூரிய அஸ்தமனத்தில் நாம் சந்திப்போம். உனக்கு மிகவும் பொறுப்புக்கள் இருப்பதால் நான் உன்னிடம் இதை தெரிவிக்கலாம் என்று வந்தேன். சாதாரணமாக நான் யாரிடமும் முன்கூட்டியே தெரிவிக்க போவதில்லை. ஆனால் நீ ஒரு அரசன், மிக முக்கியமானவன், மிக மிக அரிதானவன். என்னால் உன்னை சரியான இடத்தில் சந்திக்க முடியாமல் போய்விடுமோ என்று பயப்படுகிறேன். நீ வேறு எங்காவது சந்திப்பில் சிக்கிக் கொண்டு விட்டால் நான் என்ன செய்வது நீ என்னை சரியான இடத்தில் சரியான நேரத்தில் சந்திக்க வேண்டும் நினைவில் கொள்.” என்று சொல்லியது. அரசர், “எது சரியான இடம்?” என்று கேட்பதற்கு முன் பயத்தினால் அவரது தூக்கம் கலைந்துவிட்டது. நிழல் உருவம் மறைந்துவிட்டது. நேரம் தெரிந்துவிட்டது, சரியான காலம் – நாளை சூரிய அஸ்தமனம் – ஆனால் இடம் எது நான் உன்னை சந்திக்க வேண்டிய இடம் எங்கிருக்கிறது என்று கேட்பதற்க்காக அவர் பலமுறை கண்களை மூடி அந்த நிழல் உருவத்தை பார்க்க முயற்சித்தார். இறப்பை சந்திக்கவேண்டும் என்று அவர் விரும்பினார் என்பதல்ல. அந்த இடம் எது என்று தெரிந்தால் அதை தவிர்த்து விடலாம். ஆனால் இந்த முழு உலகத்தில் அந்த இடம் எதுஆனால் உன்னால் கனவை தொடர முடியாது – அது மிகவும் கடினம். ஒரு முறை கனவுகலைந்துவிட்டால் எவ்வளவு முயற்சி செய்து கண்களை மூடி கனவை தொடர முயன்றாலும் அதுவராது. அரசர் மிகவும் பயந்து போய் தனதுஅரசவை ஜோதிடர்கள், குறி சொல்பவர்கள், அமைச்சர்கள், குருமார்கள்,பூசாரிகள்,ரேகைசாஸ்திரம் சொல்பவர்கள் என யாவரையும் அழைத்து, “அந்த சரியான இடம் எது என்றுஎனக்கு கண்டுபிடித்து சொல்லுங்கள். அப்போதுதான் நான் அங்குசெல்லாமல் அதை தவிர்க்க முடியும்” என கூறினார். உடனே அவர்கள் அனைவரும் தங்களதுபழமையான நூல்களில் பதில் தேட ஆரம்பித்தனர். காலை வந்து சூரியன் எழுந்தது. காலைமுழுமையாக விடிந்தவுடன் அரசர் மிகவும் பயந்து போனார். ஏனெனில் பொழுது விடிந்தால்முடியுமே! முடிவின் ஆரம்பம் தானே விடியல். சூரியன்விடிந்தால் அஸ்தமனம் வெகு தொலைவில் இல்லையே. சூரியன் ஏற்கனவே அஸ்தமனத்தை நோக்கி செல்ல துவங்கி விட்டான். இன்னும் இவர்கள் எந்த முடிவுக்கும் வரவில்லை. அதற்குபதிலாக அவர்கள் தங்களுக்குள் சண்டையிட ஆரம்பித்துவிட்டனர். அரசர், “உங்களுடைய நூல்களைப் பற்றி எனக்கு எந்த அக்கறையும் இல்லை. அது எந்த இடம் என்று மட்டும் சொல்லுங்கள், போதும். அப்போதுதான் அங்கு நான் போகாமல் இருக்கமுடியும் ” என்றார். அவர்கள், “ இருங்கள். இது ஒரு எளிமையான கேள்வி அல்ல. நாங்கள் அதற்கான வழிமுறைகளை கண்டு, பின் ஒரு முடிவுக்கு வரவேண்டும். ஜோதிடர்ஒன்றை சொல்கிறார், பூசாரி வேறு ஒன்றை சொல்கிறார். நாங்கள் உங்களுக்கு பதினைந்துபதில்கள் கொடுத்தால் அதனால்என்ன பயன் ? ஆகையால் நாங்கள் ஒரு முடிவுக்கு வந்த பின் சொல்கிறோம்” என்றனர், அரசரின் வயதான வேலையாள் ஒருவன் அருகில் நின்று கொண்டிருந்தான். அவன் அரசரது காதில் மெதுவாக, “ நான் கிழவன். நான் இந்த பெரிய மனிதர்களின் வாக்குவாதத்தில் தலையிடகூடாது. நான் ஒரு வேலையாள். ஆனால் வயதானவன், எனக்கு உன் தந்தையின் வயதிருக்கும். உங்களது சிறிய வயதிலிருந்து நான் உங்களை வளர்த்திருக்கிறேன். நான் சொல்வதை கேளுங்கள். இவர்கள் ஒருபோதும் ஒரு முடிவுக்கு வர மாட்டார்கள். இவர்கள் தங்களுக்குள் வருடக்கணக்கில் சண்டையிடுவார்களே தவிர ஒரு போதும் ஒரு முடிவுக்கு வர மாட்டார்கள். இரண்டு தத்துவவாதிகளோ, இரண்டு ஜோதிடர்களோ, இரண்டு குறி சொல்பவர்களோ ஒரு போதும் ஒத்துப் போக மாட்டார்கள். ஒத்துப் போகாமைதான் அவர்களது வியாபாரம், அவர்கள் அப்படி ஒத்துப் போகாமல் இருப்பதில்தான் வாழ்கிறார்கள். அதனால் காத்திருக்காதீர்கள். காலம் மிகவும் குறைவாக உள்ளது. நீங்கள் என்னைக் கேட்டால் உங்களிடம் உள்ள மிகச் சிறந்த குதிரை ஒன்றை எடுத்துக் கொண்டு – உங்களிடம் அப்படிபட்ட சிறப்பான குதிரைகள் உள்ளன. இந்த இடத்திலிருந்து ஓடிப் போய்விடுங்கள். ஒரு விஷயம் நிச்சயம். நீங்கள் இந்த இடத்தில், இந்த அரண்மனையில், இந்த நகரத்தில், உங்களது ராஜ்ஜியத்தில் இருக்கக்கூடாது. எங்காவது தப்பிச் சென்று விடுங்கள் ” என்று கூறினான். அரசருக்கு இது சரியென்று பட்டது. அரசர், “ நீ சொல்வது சரிதான். ஏனெனில் இவர்கள் இதை சூரிய அஸ்தமனத்திற்க்குள் முடிக்க மாட்டார்கள் போலிருக்கிறது.” என்றவாறே அவர் தன்னுடைய குதிரைகளில் சிறப்பான ஒன்றை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடினார். மாலையாவதற்குள் அவர் தனது ராஜ்ஜியத்தின் எல்லையை கடந்து வேறொரு ராஜ்ஜியத்திற்க்குள் நுழைந்து விட்டார். அவர் தான் தப்பியதில் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். இப்போது இவர் எங்கிருக்கிறார் என்று இறப்பினால் கண்டுபிடிப்பது சாத்தியமில்லை. இரவு ஓய்வெடுப்பதற்காக அவர் ஒரு சோலையினுள் நுழைந்தார். அவர் தனது குதிரைக்கு மிகவும் நன்றி செலுத்தினார். ஏனெனில் இந்த குதிரை உண்மையிலேயே ஒரு அற்புதமான விஷயத்தை செய்து முடித்திருக்கிறது. நாள் முழுவதும் அது மிகவும் வேகமாக ஓடி வந்திருக்கிறது. அது அப்படி ஓடி அரசர் கூட இது வரை பார்த்ததேயில்லை. அது தண்ணீர் குடிக்கக் கூட ஓய்வெடுக்கவில்லை. அது ஒரு வினாடி கூட ஓய்வெடுக்க நிற்கவும் இல்லை. அது இந்த அவசரத்தை புரிந்து கொண்டதைப் போல நடந்து கொண்டது. அரசர் அதற்கு நன்றி கூறினார். அவர் அதனிடம், “ நீ என்னை காப்பாற்றி விட்டாய். நான் உனக்கு நன்றி கூறுகிறேன், எனக்கு உன் மேல் அன்பு பெருகுகிறது, நான் உனக்கு தகுந்த சன்மானம் அளிப்பேன். நாளை நாம் நமது ராஜ்ஜியத்திற்க்குள் சென்றவுடன் எனக்கு அளிக்கப்படும் அதே அளவு மரியாதையை நீயும் பெறுவாய் ” என்றார். அந்த நேரத்தில் சூரிய அஸ்தமனம்ஆனது, அப்போது ஒரு கரம்……. அரசர் தனது தோள் மீது ஒரு கரம் படிவதை உணர்ந்தார்.அவர் திரும்பி பார்த்தார். அவர் கனவில் பார்த்த அதே கறுப்பு நிழல் உருவம் அங்கே இருந்தது. அந்த நிழல் உருவம் சிரித்தபடி, “நீ அந்த குதிரைக்கு நன்றி சொல்லக் கூடாது. நான் தான் அந்த குதிரைக்கு நன்றி சொல்ல வேண்டும். இதுதான் நான் காத்துக் கொண்டிருக்கும் இடம். உன்னுடைய குதிரையால் இங்கு வர முடியுமோ வர முடியாதோ என்று நான் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் அது வந்து சேர்ந்து விட்டது. இந்தஉலகிலேயே மிக அற்புதமான குதிரை உன்னுடையது. நீ சரியான நேரத்திற்கு சரியானஇடத்திற்கு வந்து சேர்ந்து விட்டாய்.” என்றது. நீ என்ன செய்து கொண்டிருந்தாலும் இறப்பை சந்திக்க சரியான இடத்திற்கு சரியான நேரத்திற்கு வந்தடைந்து விடுவாய்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'மரணத்தின் கதை' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: முல்லா வசித்த ஊரில் நெடுநாட்களாக நீதிபதி யாரையும் மன்னர் நியமிக்கவில்லை. மக்கள் இது குறித்து மன்னரிடம் முறையிட்டனர். ” தற்பெருமை சற்றும் இல்லாத அடக்கமான ஒருவரை உங்கள் ஊரில் நீதிபதியாக நியமிக்க எண்ணியிருக்கிறேன். இதுவரை அத்தகைய தகுதி படைத்தவர் என் கண்களில் படவில்லை . அதனால் தான் உங்கள் ஊரில் நீதிபதியாக யாரையும் நியமிக்கவில்லை” என்றார் மன்னர். இந்தச் செய்தியை முல்லா அறிந்தார். ஒரு நாள் காலையில் முல்லா ஒரு பழைய மீன் பிடிக்கும் வலையை உடலில் போர்த்தியவாறு அரண்மனைப் பக்கமாக நடமாடிக் கொண்டிருந்தார். அரண்மனை உப்பரிகையில் உலாவிக் கொண்டிருந்த மன்னர் முல்லா மீன் வலையை போர்த்திக் கொண்டு உலாவுவது கண்டு ஆச்சரியமடைந்தார். தனது பணியாளன் ஒருவனை அனுப்பி முல்லாவை அழைத்து வரச் சொன்னார். ” முல்லா நீர் ஏன் இப்படி மீன் வலையைப் போர்த்திக் கொண்டு உலாவுகிறீர்?” என்று வினவினார். ” மன்னர் அவர்களே, நான் ஆதி நாளில் மீன் பிடிக்கும் தொழிலைத்தான் செய்து கொண்டிருந்தேன். நான் என்னதான் முல்லா ஆகிவிட்டாலும் பழைய தொழிலை மறக்கலாமா? எந்தத் தொழிலையும் கேவலமாகச் கருதக் கூடாது என்பதற்காக மறுபடியும் மீன் பிடிக்கப் போகிறேன் ” என்றார் முல்லா. இத்தனைக் காலமாகத் தாம் எதிர்பார்த்த அடக்கமான மனிதர் முல்லாதான் என்று மன்னருக்குத் தோன்றியது. அதனால் அவரையே மன்னர் நீதிபதியாக நியமித்தார். சில நாட்கள் சென்ற பிறகு தெரு வழியாகச் சென்று கொண்டிருந்த முல்லாவை அரண்மனை உப்பரிகையிலிருந்து மன்னர் கண்டார். அவரிடம் மீன் வலை இல்லாததை அவர் கவனித்தார். ” என்ன முல்லா மீன் வலையைக் காணோம் ” என்று மன்னர் கேட்டார். ” மன்னர் பெருமானே, மீனைப் பிடித்து விட்ட பிறகு வலை எதற்கு” என்றார் முல்லா. முல்லா மீன் என்று குறிப்பிட்டது நீதிபதி பதவியை.மன்னர் அதைப் புரிந்து கொள்ளவில்லை.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'மீன் பிடித்த முல்லா' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: காட்டு ராஜா சிங்கத்தின் குகை வாசலில், ஏகப்பட்ட மிருகங்களின் கூட்டம். காட்டு ராஜா, வேட்டையாடச் சென்றபோது, கால்விரலில் அடிபட்டு, விரல் துண்டாகி விட்டதென்று அறிந்து துக்கம் விசாரிக்கத்தான் காட்டுப் பிரஜைகளான மிருகங்கள் கூடியிருந்தன. ஒவ்வொரு மிருகமாக வரிசையில் நின்று, குகையின் உள்ளே சென்று, சிங்க ராஜாவைப் பார்த்து விட்டுத் திரும்பின.சிங்கராஜா காலில் பலமான கட்டுடன், கட்டிலில் படுத்துக் கிடந்தது. அருகே சிங்கராணி, வழியும் கண்ரும் சிந்திய மூக்குமாக அமர்ந்து இருந்தது.ஒவ்வொரு மிருகமாக வரிசையாகச் சென்று கொண்டிருந்தபோது, வரிசையின் இடையே வந்து, புகுந்து கொண்ட குள்ளநரி, சிங்கராஜாவின் அருகே சென்றதும் பெருமூச்சு விட்டபடி “ஊம் நடப்பது எல்லாம் நன்மைக்கே” என்றது. சிங்கராஜாவுக்கு கடுங்கோபம் வந்துவிட்டது. நமது காலிலுள்ள ஒரு விரலே போய்விட்டது. இந்தக் குள்ளநரி, நடப்பதெல்லாம் நன்மைக்கே, என்று கூறுகிறதே. “பிடி அதை அடைத்துவை, குகைச்சிறையில்!” எனக் கட்டளை இட்டது சிங்கராஜா.சிப்பாய்க் குரங்குகள் பாய்ந்து, நரியைப் பிடித்து இழுத்துச் சென்றன. “ஒவ்வொரு காரியமும் நமது நன்மைக்குத்தான் நடக்கிறது என்ற உண்மையைத்தானே சொன்னேன்” என்று புலம்பியபடி சென்றது குள்ளநரி.சிங்கராஜாவின் காலிலுள்ள புண் குணமாவதற்கு, மூன்று மாதகாலம் கடந்தது. காலில் ஒருவிரல் இல்லாமையால், சிங்கராஜா கம்பீரமாக நடக்க இயலாமல், நொண்டி நொண்டி நடந்தது. அதனால் மிருகங்கள் எல்லாம் மறைமுகமாக “நொண்டி ராஜா” என அழைத்தன.இப்படிச் சிங்கராஜாவை எல்லாரும் கேலி செய்வதைக் கேட்டு, சிங்கராணிக்கு மிகுந்த வருத்தம். என்ன செய்வது? இந்தப் பட்டத்தைச் சூட்டியது எந்த மிருகம் என்பது தெரிந்தால், இளவரசன் சிங்கக்குட்டியிடம் தண்டனை கொடுக்கச் சொல்லலாமே என நினைத்தது.உண்மையில் இப்படி பெயர் வைத்தது, குறும்புக்கார முயல் என்பது எவருக்கும் தெரியாது.சிறையில் அடைபட்டிருந்த குள்ளநரிக்கு, சைவ உணவே தினசரி ஒரு வேளை தரப்பட்டது. காட்டுக்கிழங்கையும், கனிகளையும், பார்த்தாலே குள்ளநரிக்கு குமட்டிக் கொண்டு வரும், என்ன செய்வது? வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல், வார்த்தையைக் கொட்டிவிட்டு, வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்டோமே, என ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தது குள்ளநரி.வெகுநாட்களாகியும் குணமாகாமல் காலை நொண்டிக் கொண்டே ஒரு நாள் காட்டில், வெகுதூரம் வேட்டைக்கு வந்துவிட்ட சிங்கம், ஒரு இடத்தில் திறந்து வைக்கப்பட்டிருந்த ஒரு கூண்டுக்குள், ஆட்டுக்குட்டி ஒன்று இருந்ததைக் கண்டது. ஆவலுடன் ஆட்டுக்குட்டியின் மீது பாய்ந்து, கடித்துக் குதறித் தின்றது.தின்று முடிந்து, ஏப்பம் விட்டபடி திரும்பிய சிங்கம் அந்த இரும்புக் கூண்டில் கம்பிக்கதவால் மூடப்பட்டிருந்ததைக் கண்டு, திகைத்தது. மடத்தனமாக கூண்டுக்குள் அகப்பட்டுக் கொண்டோமே என்று நினைத்து வேதனைப்பட்டது. ஆத்திரத்தில் கர்ஜனை செய்தது. அப்போது கூண்டில் அடைப்பட்ட சிங்கத்தை, தங்கள் வண்டியில் கட்டி இழுத்துச் சென்ற காவலர்கள், “நம் இளவரசர் கேட்டபடி அவர் விளையாடுவதற்கு ஒரு சிங்கம் கிடைத்துவிட்டது. இதைப் பார்த்தால் மிகவும் மகிழ்ச்சியடைவார். இளவரசரின் மகிழ்ச்சியைக் கண்டு மன்னர் நமக்குப் பரிசுகள் கொடுப்பார்”, என்றெல்லாம் பேசிக்கொண்டே அரண்மனையை அடைந்தனர்.கூண்டிலிருந்த சிங்கத்தை இறக்கியபோதுதான் அது நொண்டி நொண்டி நடந்ததை அறிந்தனர்.இதைக்கண்டு வருந்திய அவர்கள், “இது ஊனமுற்ற சிங்கம். இதை நம் இளவரசர் விளையாடப் பழக்கப்படுத்த முடியாது. “எனவே, இதைக் காட்டில் கொண்டு போய் விட்டுவிடுவதே நல்லது” என்று கூறியபடி சிங்கத்தை மீண்டும் காட்டுக்குள் கொண்டு சென்று விட்டுவிட்டுத் திரும்பினர் காவலர்கள். சிங்கத்திற்கு மகிழ்ச்சி பொங்கியது.“நமது கால் விரல், இல்லாததால்தான் நம்மை விட்டு விட்டார்கள். “நடப்பது எல்லாம் நன்மைக்கே” என்று அன்றைக்கு நரி சொன்னபோது, ஆத்திரப்பட்டு அதைக் கூண்டில் அடைத்தோம். ஆனால் அது சொன்னது சரியென்று இப்போதுதான் உணர முடிகிறது” என்றெல்லாம் நினைத்தபடி தனது குகைக்குச் சென்ற சிங்கம், தனது மனைவியிடமும் குட்டிகளிடமும் நடந்ததைச் சொன்னது.உடனடியாக, சிப்பாய்க் குரங்குகளை அழைத்து, “சிறையைத் திறந்து குள்ளநரியை வெளியில் அனுப்புங்கள்” என்று உத்தரவிட்டது. அதன்படி சிறையை விட்டு, வெளிவந்த குள்ளநரியை வரவேற்ற சிங்கராஜா, “அறிவுக் கடலே, இன்று முதல் நீங்கள்தான் எனது மந்திரி, நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று அன்று நீங்கள் சொன்னது உண்மையாகி விட்டது. யார் எதைச் சொன்னாலும் அவசரப்படாமல் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன் என்று மகிழ்ந்தது.நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று நினைத்தால் துன்பம் தரக்கூடிய செயல் எதுவும் இல்லை
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'நடப்பது எல்லாம் நன்மைக்கே!' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: பரமார்த்தகுரு, முட்டாள், மூடன், மட்டி, மடையன், பேயன், சீடர்கள், சொர்க்கம், சோற்று மூட்டை, புதுத்துணிகள், சுருட்டு, பணம், அரண்மனை, சிறை
தலைப்பு: சொர்க்கம் என்ற சோற்று மூட்டை
| பரமார்த்தர் எங்கோ வெளியே சென்றிருந்தார். சீடர்கள் மட்டும் திண்ணையில் இருந்தனர். அப்போது புளூகன் ஒருவன் அங்கே வந்தான். திண்ணையில் படுத்தபடி, "அப்பாடா! இப்போதுதான் சொர்க்கத்தில் இருப்பது மாதிரி இருக்கிறது!" என்று கூறினான். அதைக் கேட்ட மட்டிக்கு வியப்பாக இருந்தது. "அப்படியானால் நீங்கள் சொர்க்கம் போய் இருக்கிறீர்களா?" என்று கேட்டான். "நேராக அங்கே இருந்துதான் வருகிறேன்!" என்றான் புளுகன். "அடேயப்பா! எங்களால் சந்திரலோகமே போக முடியவில்லை. நீங்கள் எப்படிச் சொர்க்க லோகம் போய் வந்தீர்கள்?" எனக் கேட்டான், மடையன். "சொர்க்கத்தில் யார் யார் இருக்கிறார்கள்?" என்று விசாரித்தான் முட்டாள். "உங்கள் குருவுக்குக் குருவான சோற்று மூட்டை அங்கே தான் இருக்கிறார்" என்றான் புளுகன். "அப்படியா? அவர் நலமாக இருக்கிறாரா?" என்று கேட்டான் மண்டு. "ஊகும்! பேர் தான் சோற்று மூட்டையே தவிர சோற்றுக்கே தாளம் போடுகிறார்! கந்தல் துணிகளைக் கட்டிக் கொண்டு, பைத்தியம் மாதிரி திரிகிறார்! பார்ப்பதற்குப் பாவமாக இருக்கிறது!" என்றான் புளுகன். "பூலோகத்தில் இருந்த போது சுகமாக இருந்திருப்பார்..... அங்கே போய் இப்படிக் கஷ்டப்படுகிறாரே!.. என்று துக்கப்பட்டான் மூடன். "ஐயா நீங்கள் மறுபடி சொர்க்கத்துக்குப் போவீர்களா?" என்று மட்டி கேட்டதும், "ஓ நாளைக்கே போனாலும் போவேன்!" என்றான் புளுகன். "அப்படியானால், எங்களிடம் இருக்கிற புதுத் துணிகளை எல்லாம் தருகிறோம். கொஞ்சம் பணமும், சுருட்டும் கொடுக்கிறோம். எல்லாவற்றையும் கொண்டு போய், எங்கள் குருவுக்குக் குருவிடம் தந்து விடுங்கள்.", "புளுகனோ மகிழ்ச்சியோடு "சரி" என்று சம்மதித்தான். உடனþ ஐந்து சீடர்களும் போட்டி போட்டுக் கொண்டு, மடத்தில் இருந்த துணிமணிகள், சுருட்டு, பணம் பூராவையும் எடுத்து வந்தனர். "போகும் வழியில் சாப்பிடுங்கள்" என்று புளி சாதம் தந்தான் மட்டி. எல்லாவற்றையும் மூட்டை கட்டி எடுத்துக் கொண்ட புளுகன், சொர்க்கம் போவதாகக் கூறி விட்டு, ஓட்டம் பிடித்தான். வெளியே சென்றிருந்த பரமார்த்தர் திரும்பி வந்தார். "குருவே! நீங்கள் இல்லாத சமயத்தில் கூட, நாங்கள் புத்திசாலித்தனமான செயல் செய்துள்ளோம்" என்று பெருமையோடு சொன்னான் மண்டு. உங்கள் "குருநாதரான சோற்று மூட்டை சுவாமிக்கு இனி கவலையே இல்லை!" என்றான் மூடன். "சொர்க்கத்தில் இருந்து ஆள் அனுப்பி இருந்தார். அவரிடம் உங்கள் குருவுக்குத் தேவையானதை எல்லாம் கொடுத்து அனுப்பினோம்!" என்று முட்டாள் சொன்னான். பரமார்த்த குருக்கோ ஒன்றும் விளங்கவில்லை. தாங்கள் செய்த காரியத்தை சீடர்கள் விளக்கியதும், "அடப்பாவிகளா! ஏன் இப்படிச் செய்தீர்கள்?" எனக் குதித்தார். "நாங்கள் நல்லது தானே செய்தோம்?" உங்கள் குருநாதர் பசியால் வாடலாமா?" என்று மட்டி கேட்டான். "முட்டாள்களே! எனக்குக் குருநாதரே யாரும் கிடையாது! இது தெரியாதா உங்களுக்கு? எவனோ உங்களை நன்றாக ஏமாற்றி விட்டுப் போய் விட்டானே!" என்று பரமார்த்தர் சொன்னதும், சீடர்கள் எல்லோரும் "திரு திரு" என்று விழித்தார்கள். "சீடர்களே! நீங்கள் ஏமாந்ததும் ஒரு வகையில் நல்லது தானே! அதே திட்டத்தைப் பயன்படுத்தி, நம் ஊர் அரசனை நாம் ஏமாற்றி விடலாம்!" என்றார் பரமார்த்தர். அப்போதே குருவும், சீடர்களும் அரண்மனைக்குப் போனார்கள். "மன்னா! நாங்கள் நேற்று ராத்திரி சொர்க்கம் போய் வந்தோம். அங்கே எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள். ஆனால் உங்கள் தாத்தா மட்டும் பிச்சை எடுத்துத் திரிகிறார்!" என்று புளுகினார். "ஆமாம் அரசே! ராஜ குடும்பத்தில் பிறந்தவர் இப்படிப் பிச்சை எடுக்கலாமா?" என்று மட்டி கேட்டான். மடையனோ, "அவரைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது!" என்றான். "நாங்கள் மறுபடியும் நாளைக்குச் சொர்க்கலோகமம் போகப் போகிறோம். ஏராளமாகப் பணமும் துணியும் உங்களிடம் இருந்து வாங்கி வரச் சொன்னார்!" என்று புளுகினான் முட்டாள். "அப்படியே உயர்ந்த இனக் குதிரையாக இரண்டு வாங்கி வரச் சொன்னார்" என்று தள்ளி விட்டான், மண்டு. "எல்லாவற்றையும் எங்களிடம் தந்து விடுங்கள். நாங்கள் பத்திரமாகக் கொண்டு போய்க் கொடுத்து விடுகிறோம்!" என்றார் பரமார்த்தர். அரசனுக்கோ, கோபம் கோபமாக வந்தது. "யாரங்கே! இந்த ஆறு முட்டாள்களையும், ஆறு நாளைக்குச் சிறையில் தள்ளுங்கள்!" என்று கட்டளை இட்டான். "அரசே! நாங்கள் என்ன தவறு செய்தோம்? செத்துப்போன உங்கள் தாத்தாதான் எங்களை அனுப்பினார்!" என்று ஏமாற்ற நினைத்தார், பரமார்த்த குரு. அரசனோ, "யாரை ஏமாற்றப் பார்க்கிறீர்கள்? இன்னும் என் தாத்தா சாகவே இல்லையே! இதோ உயிரோடு தான் இருக்கிறார்!" என்று சொன்னபடி பக்கத்தில் அமர்ந்திருந்த தாத்தாவைக் காட்டினான். "ஐயையோ! அரசரின் தாத்தா செத்து விட்டாரே இல்லையா என்று தெரிந்து கொள்ளாமலேயே இப்படி வந்து மாட்டிக் கொண்டோமே!" என்று குருவும் சீடர்களும் அழுதனர். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: பெரியவன், கிளியம்மா, அம்மா, அப்பா, சின்னவன், கோபம், மழை, நீர்
தலைப்பு: முப்போகம்
| பெரியவனே... ஆங்காரமாய் கத்தினாள் கிளியம்மா. ஒன் காதுல என்ன இடியா வுழுந்துட்டு. இப்படி கருங்கல்லாட்டம் உட்கார்ந்து கெடக்கே தெரு மதகிலிருந்து எழுந்தான். அவள் குரல் வந்த திசையைப் பார்த்தான்... அம்மா கிளியம்மா வந்து கொண்டிருந்தாள்... புடவை சுருட்டி இடுப்பில் கொசுவமாக சொருகியிருந்தாள். கோபம் எழுந்தது. வேகமாய் நடந்து வந்தவள் இவனை வெறித்துப் பார்த்தாள். இவன் முகம் கோபத்தில் இருப்பதை பார்த்தும் அவளுக்கும் கோபமாகியது. நல்லது சொன்னாலும் கெட்டது சொன்னாலும் ஒனக்குப் புரியமாட்டங்குது, கல்யாணம் காட்சின்னு பண்ணி எப்படி குடும்பம் நடத்தப் போறேன்னு தெரியல போ... அந்த தாழைக்குடி செல்லியம்மன்தான் ஒன்னக் காப்பாத்தனும் இவளுக்கு மேலும் கோபம் அதிகமாகியது. சின்னவன் வயல் பக்கம் போய் மாட்டுக்கு புல் அறுத்துக் கொண்டு வந்திருந்தான். படிச்சிட்டா போதுமா? எல்லாமும் தான் கத்துக்கனும் ராசா? வயலப் போயிப் பாரு தண்ணியில்லாம? எல்லாம் கருக்கிட்டு இருக்கு சற்று அழுத்தமாகவே இதைச் சொன்னாள்... குரல் கம்மியிருந்தது. அந்தி குறைந்து கொண்டிருந்தது. உங்கப்பனைப் பாரு ஒண்டியா கெடந்து தடுமாறுராரு... ஊருல்ல.. இரத்தத்தை மாத்தி தண்ணிய பாய்ச்சுறாங்க. நீங்க கொஞ்சம் அவருக்கு ஒத்தாசையா இருக்கலாம்முல்ல சமீப காலமாக அவள் பேச்சு இவனுக்கு கோபத்தைத் தவிர வேறெதுவும் தருவதில்லை. கொஞ்ச நாளாவே அவள் பேச்சு முற்றிலுமாக பிடிப்பதில்லை... அம்மாவை... சின்னவன் சத்தமிட்டு அழைத்தான். இவன் வயல் பக்கம் வேகமாக நடக்கத் தொடங்கினான். பயிரை காப்பாற்ற ஆற்றிலிருந்த இஞ்சின் வைத்து குழாய் போட்டு தண்ணீர் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். ஆற்று மடுவில் தேங்கி கிடக்கும் நீரை இப்படித்தான் கொண்டு வர முடியும். அதிகம் நிலம் உள்ளவர்கள் மட்டுமே இஞ்சின் வைத்திருக்க முடிந்தது. சிறு விவசாயிகள் இத்தனை காலமும் மழையையும், ஆற்று நீரையும் நம்பிதான் சாகுபடி செய்தார்கள். ஆனால் இன்று பருவம் தவறிவிட்டது. மழை காலங்களில், பெய்ய வேண்டிய மழை எங்கே போனது. மனிதர்கள் மழையை விரட்டினார்கள். இந்த பிரதேசம் எங்கும் காடுகள் இருந்தன. அவற்றையெல்லாம் இரண்டு பெரும் புயல்கள் அழித்தன... என்றால் மனிதர்கள் அவர்கள் பங்குக்கு வெட்டினார்கள். பெரும் மரங்களை வீழ்த்தினார்கள். அப்பா பத்து வருடங்களுக்கு முன்பே ஒரு மழை கால இரவில் இனிமே மழை தண்ணியெல்லாம் சரிபட்டு வராது என்றது இதை தானோ...? அப்பா தெருமுனையில் இருக்கும் மதகில் அடிக்கடி உட்கார்ந்து வானத்தை பார்ப்பது ... சுருட்டு புகைக்குள் ஒளிந்து போவது... துளிர்விடும் மூங்கில் குருத்தை பார்த்துக் கொண்டிருப்பது... மாட்டின் கழுத்தை வருடி கொடுப்பது... எல்லாம் எதற்காக? என்று நினைத்துக் கொண்டான். சூரியனை பார்த்தாள் வட்டமாய் சுருங்கிக் கொண்டிருந்தது... வரப்பில் நடக்கையில் பொறுக்குகள் குத்தின... நடக்கையில் ஏற்பட்ட அந்த துள்ளல் எதனால்? சூரிய காட்சி ஏற்படுத்திய ஆனந்தமா? இல்லை எதிரே புல் அறுத்துக் கொண்டு வரும் அமுதா ஏற்படுத்திய கிளுகிளுப்பா...? அமுதா இவனோடு ஐந்தாம் வகுப்பு வரை படித்தாள். இவனுக்கு அடிக்கடி வீட்டுப் பாடம் எழுதிக் கொடுப்பாள். நன்றாக படிப்பாள். அவளை படிக்க வைத்து இருந்தால் இவள் வாழ்க்கை மாறியிருக்கக் கூடும். இவள் அப்பா வேளாங்கன்னிக்கு போனவர் திரும்பி வரவில்லை. தொலைந்து போயிருக்க வேண்டும் என்று ஊரில் பேசிக் கொண்டார்கள். குடும்ப வறுமையை போக்க... அம்மாவோடு வயல் வேலைக்கு செல்ல வேண்டியதாகிவிட்டது. இன்னும் இல்வாழ்க்கை குறித்து சிந்தித்து இருக்கவில்லை போலும். இவள் வயசுக்கு இளைய பெண்கள் எல்லாம் திருமணம் முடித்துப் போய் குழந்தை குட்டிகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவள் மட்டும் தன் குடும்பத்தின் மீது மட்டும் அக்கறை கொண்டிருக்கிறாள். இவனோடு கொஞ்சம் கனிவாக பேசுவாள் மற்ற ஆம்பளைகளோடு அவள் பேசியதை இவன் பார்த்தது இல்லை. இவனோடு சிநேகம் கொள்வதில் அவளுக்கும் விருப்பம் தான் என்பதை பல தருணங்களில் உணர்த்தி இருக்கிறாள். பெரிய புல் கட்டினை மிக அசாத்தியமாக தூக்கிக் கொண்டு வந்தாள். எப்பொழுதும் பெயர் சொல்லி அழைக்கக் கூடியவள் இன்று ... ந்தே... என்றாள். இவனுக்கு சிரிப்பு வந்தது அடக்கமுடியாத சிரிப்பு... ஹ"... ஹ".... ஹ"... பல்லு மட்டும்தான் இளிக்க காத்தருக்கே வேற என்னச் செய்ய சொல்றே அமுதா... ம் என்று முணுமுணுத்துக் கொண்டே நடந்தாள். நிறைய பேச ஆசைதான். போய்க் கொண்டிருக்கிறாளே என்ன செய்ய...? கொஞ்ச நேரம்... நடக்கும் பொழுது அவள் பின்னழகு அசைவதை ரசித்தான். சூரியன் மேலும் சுருங்கி சிறுவட்டமாய்... ஒளிர்ந்து கொண்டிருந்தது இன்னும் சில நிமிடங்களில் மறைந்து விடலாம். கடந்து சென்ற பின்பு அவள் குறித்தான சிலிர்ப்புக்களை மீண்டும் எழுப்பிக் கொள்ள முடியவில்லை என்ற பிறகு வயல்வெளி மிகுந்த வெக்கையை எழுப்பியது. இந்த கார்த்திகை மாதத்தை கால் கோடை என்பார்கள். அது எல்லாம் பொய் ஆகி முழு கோடை காலமாய ஆகிவிட்டிருக்கிறது.. பெய்ய வேண்டிய மழை யெல்லாம் எங்கே போயிற்று...? ஒரு மாபெரும் தோட்டம் தொடங்கப்பட்டு விட்டது... நட்ட பயிர் வளராமல்... இட்ட விதை முளைக்காமல்... வயல்வெளி பச்சை நிறத்தை இழந்து... மனிதர்கள் மகசூலை இழந்து... எவ்வளவு காலம் வாழ்வது? மனம் இறுக்கம் அடைந்து வரப்பில் உட்கார்ந்தான். மனம் எழுந்து பின்னோக்கி ஓடியது. இரவில் தெரு பெரிசுகளும், அப்பாவும் கதை கதையாக சொல்வார்கள். இருபது வருடங்களுக்கு முன்பு ஊரில் எப்படியெல்லாம் மழை பெய்தது. பத்து வயது சிறுவனாக இருந்தபொழுது இடைவிடாத மழை... ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் வயல்களில் இருந்த பயிர்கள் வெள்ளத்தில் வயற்காடு முழுமையும் நீர்பரப்பு சூழ்ந்து கிடக்கிறது. தெருவில் வெள்ளம்... சாலையில் வெள்ளம்... மழை வலுக்கத் தொடங்கினால் மனிதர்கள் எல்லாருக்கும் நடுக்கம் எடுக்கத் தொடங்கி விடும். ஆற்றில் கூடி கரைகளை பலப்படுத்திக் கொண்டு தடுப்பு பணிகளில் ஈடுபடுவார்கள். வெள்ளம் குறைய பறையடிப்பார்கள். காவல் தெய்வம் ஈட்டி மாணிக்கத்துக்கு முக்கால பூசையும், சிறப்பு பூசையும் செய்வார்கள். வெள்ளம் குறைய பறையடிப்பது என்பது இங்குள்ள தொன்மையான மரபு. நூறு ஆண்டுகளுக்கு மேலாக வெள்ளம் எடுக்கும் காலங்களில் பறையடித்தே... வெள்ளம் குறைத்தோம்" என்பார்கள். ஆடி மாதம் வரை நீர் வற்றாது குளங்களில் ஊரிலிருக்கும் ஐந்து குளங்களும் வற்றாத ஜீவநதியாகவே கருதினார்கள். ஆற்றில் படுகையில் மரவள்ளி கிழங்கு பயிரிட்டிருப்பார்கள் வெட்ட வெட்ட வந்து கொண்டே இருக்கும். படுகையில் நிறைந்திருக்கும் வண்டலில் அப்படியொரு உரம்... வண்டி வண்டியாக வெட்டுவார்கள். வெளியூர் வியாபாரிகள் வந்து மலிவு விலைக்கு வாங்கிப் போவார்கள். இப்பொழுது ஆற்றுப் படுகையில் காரை செடிகளும் கருவையும் வளர்ந்து கிடக்கிறது. மக்கள் அதை கழிப்பிடமாக பயன்படுத்துகிறார்கள். குறுவைக்கான வேலைகள் வைகாசியிலேயே தொடங்கினால்... ஆடியில் விதையிடல் புரட்டாசியில் அறுவடை... பிறகு சம்பா வேலைத் தொடங்கும்... தையில் அறுவடை தாளடிப் போட்டால் பங்குனியில் அறுவடை... "தாளடி" போட விரும்பாதவர்கள் உளுந்து பயிறு விதைப்பார்கள். இப்படியான தொடர் உழைப்பு நிகழ்ந்து கொண்டிருக்கும் சித்திரையில் தான் ஊர் கோவில் திருவிழா இந்த ஒரு மாதம் மட்டும் தான்... கூத்து கும்மாளம்... ஓய்வு என்றும் கழியும்... மற்ற நாட்கள் இடைவிடாத உழைப்பு.... சூரியன் மறைந்து விட்டிருந்தது. மெல்லிய வெளிச்சம் நிரம்பியது. பூச்சிகள் ஓசை காற்றில் கலந்தது. வானத்தைப் பார்த்தான் நிலவு கிழக்கே தெரிந்தது. பௌர்ணமி வர இன்னும் இரண்டு நாட்கள் இருந்தன. இன்று நிச்சயம் முழு நிலவு வரும். பனைமரங்கள் பெரிய வாய்க்கால் கரையில் வரிசையாய் ஒழுங்கு குறையாமல் நிற்பது இவனுக்கு பிடிக்கும். காற்றில் லேசாக தலையை ஆட்டின. வயல்வெளிகளை பார்த்தான்... பச்சை நிறம் மங்கிய நிறத்தில் பழுப்பு நிறம்... படர்ந்து கொண்டிருந்தது. பயிர்கள் மிகுந்த துயரத்தோடு கதறிக் கொண்டிருப்பது போல தோன்றியது. மனசு வலிக்கத் தொடங்கியது. வரப்பிலிருந்து வயலில் இறங்கினான். பாளம் பாளமாய் வெடித்து பொறுக்குகள்.. உடைந்து கொண்டிருந்தது. இன்னும் இரண்டே நாள் இது நீடிக்குமானால் சாம்பல் தான் மிஞ்சும் தங்களுடைய ஆறு "மா"வும்... கருகிவிடதான் காத்திருக்கிறதா? இது நாள்வரை வசதியானவர்கள் ஆற்றிலிருந்து நீர்க் கொண்டு வருகிறார்கள். நம்ம கதி? பயிர்கள் மிகுந்த கவலையோடு வானத்தைப் பார்த்து நீயாவது கருணை செய் வேண்டுவது என்பது போல... தோன்றியது.... கொஞ்சம் தண்ணீர் விட்டால் போதும் உள்ளேயிருந்து கதிர் வந்துவிடும். கதிர் விடும் பக்குவத்தோடு நிற்கிறது. நடக்கத் தொடங்கினான் வயலுக்கு வரும் கண்ணியின் கரையில் நடந்தான். அது பெரிய வாக்காலில் கலந்தது. அதிலிருந்து பிரிந்து தான்... வயலுக்கு பாய்ச்சல். இதுதான் இந்த பக்கத்துல வயல்களுக்கு பாசன கண்ணி. பெரிய வாய்க்கால் வற்றி ஈரம் உலர்ந்து விட்டது... தலைக்கு மேலேயிருந்து ஏதோ ஒலி கேட்டதும் வானத்தைப் பார்த்தான். மடையான்மகள் அணிவகுத்து பறந்தன. பெரிய வாக்காலிலிருந்து பிரியும் இன்னொரு கண்ணி" பெரிய குளத்துக்கு நீர் விடவும். அதில் வழியில் இருக்கும் வயல்களின் பாசனத்துக்கும் பயன்பட்டது. இப்போது அவன் பெரிய குளத்துக்கு போகும் கன்னிக்கரையில் நடந்தான். குளத்தை மூன்று பக்கமும் சுற்றி நீண்ட திடல்... அதை சூழ்ந்துள்ள மரங்கள்.... மரத்தில் இரவை கழிக்க கொக்குகளும், மடையான்களும் உட்கார்ந்திருந்தன. ஒரு கொன்னை மரத்தில் கொக்குகள் அடர்த்தியாய் உட்கார்ந்து இருப்பது ஒரு விதமான லகிரியை ஏற்படுத்துகிறது. குளத்தினை பார்த்தான். சலனம் அடையாள நீர்பரப்பு. அல்லி செடிகள் படர்ந்து கிடக்கின்றன. அல்லி பூக்கள் இரவில்தான் பூக்கும் என்பார்கள். விண்மீன் ஒளியில் தாளைகள் மலரும் என்றும் சொல்வார்கள். வெய்யிலில் உலர்ந்திருந்த பூக்கள்... லேசாக இதழ் விரிக்கத் தொடங்கியிருந்து, கண்ணி குளத்தோடு நிறையும் இடத்தில் ஒதியன் மரம் நின்றது. இலைகள் உதிர்ந்து வெறும் உடம்பாய் காட்சியளித்தது. மரத்தை பார்த்த அடுத்த கணமே சட்டென்று அவனுக்குள் வெளிச்ச புள்ளிகள் மின்னின. மீண்டும் ஒரு தடவை பார்த்தான். வேகமாக நடக்கத் தொடங்கினான். இருட்டு பூசினாற் போலிருந்தது. நிலவு கிழக்கில் லேசான வெளிச்சத்தோடு வந்து கொண்டிருந்தது. பூசினாற் போலிருந்த இருட்டில் வெளிச்சம் குறைவான நிலவின் ஒளி இணையும் போது ஒரு விதமான மங்கிய ஒளியும் அல்லாத இருட்டும் அல்லாத ஒரு விதமான வெளிச்சம் நிரம்பியது. ஊரில் கால்நடைகளுக்கு கோமாரி வந்து விட்டது. ஏழெட்டு மாடுகள் பலியாகிவிட்டது. இருக்கின்ற மாட்டை காப்பாற்ற வேண்டும். மாடுகளை சிவன்கோவில் குளத்தில் வண்டல் கும்பியல் நிறுத்தியிருக்கிறார்கள். கால்களில் புண்களாகி அதிலிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருக்கிறது. ஆடுகள் இந்த நோய் கண்ட அடுத்த மணி நேரத்துக்குள்ளே உயிரோடு கறிகடைக்காரனிடம் வந்து விட வேண்டும். இது போன்ற மாதத்தில் நோய் வருவது வியப்பாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது. தடுப்பு மருந்துகள் போட்டிருந்தால் தடுத்து இருக்கலாம். தென்னந்தோப்பில் நுழைந்தான். நீர் பற்றாக்குறையால் மரங்கள் காய்ந்து வதங்கியிருக்கிறது. தேங்காய் மகசூல் மொத்தமும் காலி. ஆசையாக அம்மா போட்டிருந்த டிசம்பர் பூக்கள் செடிகள் இனி பூக்காமல் போகலாம். ஏற்றம் இறைக்க தேவையான மிதி மரம், பாலாடை மரம், சால், ஏற்ற மரம் போன்றவை. மூங்கில் கொட்டகையில் இருக்கிறது. அப்பா கொண்டு வந்து இங்க வைத்திருக்கிறார். இவையனைத்தையும் மிக சிரமத்தோடு, இரண்டு தோளிலும் மிகுந்த நுட்பத்தோடு தூக்கி வைத்துக் கொண்டு வேகமாக நடந்தான்... நிலவு அடர்த்தியான வெளிச்சத்தை பரப்பத் தொடங்கியது. அந்த பெரிய குளத்து ஒதியன் மரத்தில் இவற்றை பொருத்துவதற்கு கயிறு வேண்டும். கைக்கு ஒரு அரிவாள்... மண் எடுத்துப் போட மண்வெட்டி, இதைவிட வயிற்றுக்கு கொஞ்சம் சோறு....? குளத்தில் மரத்துக்கு கீழே போட்டான். நிலவு நிர்மல்யமான முறையில் ஒளிர்ந்தது. மணி ஒன்பதாகியிருந்தது, கார குழம்பு வைத்திருந்தாள் அம்மா. சாப்பிட பிடிக்கவில்லை. கவனம் முழுவதும் சாப்பாட்டிலிருந்து சிதைந்திருந்தது. சமயலறையில் கிடந்த அரிவாளை எடுத்து கொல்லைப்புறத்தில் போட்டான். ஒரு முடித்துக் கயிறு மாட்டு கொட்டகையில் சொருகியிருந்தது. அப்பா திண்ணையில் பேசிக் கொண்டிருக்கிறார். முகம் அதிகமான சோர்விலும், கவலையிலும் வாடியிருந்தன. இந்த வருஷம் மட்டுமல்ல, இனி எந்த வருஷமும் சாகுபடியை நம்பி பயனில்லை. அம்மா கதவு ஓரத்தில் எதிர் வார்த்தை செய்கிறாள். வேற என்னதான் செய்யுறது. வித்துப்புடலாம்...? ஆமா ரோட்டோரமா இருந்தாலாவது மனை போடுறவங்க யாராவது வாங்கிட்டு பேயிடுவாங்க தண்ணியும் பாயுமா? வெள்ளமும் வழியுமா? இருக்கிற நிலத்தை யாரு வாங்குவா சொல்லு? அப்பா மேலும் பேச விரும்பாமல் அமைதியானார். வெற்றிலை பொட்டலத்தை அப்பாவிடம் நீட்டினாள். இவற்றையெல்லாம் வாசலில் நின்று கவனித்துக் கொண்டிருந்தான்... சின்னவன் வாய்விட்டு படித்துக் கொண்டிருந்தான். கயிறு, அரிவாள், மண்வெட்டியோடு பெரியகுளம் நோக்கி நடந்தான். அப்பாவும் அம்மாவும் மேலும் பேசத் தொடங்கினார்கள். தூக்கம் வரும் வரை பேசிக் கொண்டிருப்பது தவிர வேறு என்னதான் செய்வது. முப்போகம் வெளைஞ்ச பூமி தரிசா போய்கிட்டு இருக்கிறதை நினைச்சா வயிறு எரியுது. "என்ன பண்றது", "யார்கிட்டேயாவது இஞ்சின் கேட்டிருக்கீங்களா", "ம், கேட்காத ஆளில்லை. நாளைக்கு இன்னிக்கின்னு சொல்வாங்களே தவிர ஒருத்தரும் தரமாட்டேங்கறாங்க. "ஒரு நாலு மணிநேரம் ஓடுனாப் போதும் கதிர் வந்துடும்.", "ஆமாண்டி... உயிர் இருந்தா போருமுன்னு நினைக்கிறேன். கதிர்பத்தி பேசுறே... கோபம் வந்தது அப்பாவுக்கு. அம்மா பெரிய மகனைப் பற்றி குறைச் சொல்லத் தொடங்கினாள். சொல்லி முடித்த பிறகு... ஊர் கதைகள் பேசத் தொடங்கினார்கள். இவர்கள் இடைவிடாது தொடர்ந்து பேசினார்கள். நீண்டு கொண்டே போயிற்று பேச்சு. சின்னவன் புத்தகங்களை எடுத்து வைத்துவிட்டு... படுத்துவிட்டான். "நேரமாயிடுச்சு" படுப்போம் என்றார் அப்பா. "சீக்கிரம் எழுந்திருக்கனும் அம்மா சொல்லியபடி பாயி" - ல் சாய்ந்தாள். காலை விடிந்து விட்டிருந்தது. சின்னவன் எழுந்தான். அண்ணனை காணோம். திண்ணைக்கு வந்தான். அப்பாவும் அம்மாவும் தூங்கி கொண்டிருக்கிறார்கள். அம்மா என்று சத்தமிட்டான். அப்பாவும் அம்மாவும் துடித்து பிடித்து எழுந்தார்கள். அப்பா முகத்தை கழுவிக் கொண்டு வயல் பக்கம் நடந்தார். அம்மா பெரியவன் எங்கே காணோம் என்று சின்னவனிடம் கேட்டாள் தெரியல என்று கையை விரித்தான். அப்பா வரப்பில் நடந்து... தன் வயலின் தலைமேடு பக்கம் வந்தபோது காலை நேரத்து குளிர்ந்த காற்றில் மண் மனம் நாசியை தாக்கியது. அப்பாவுக்குள் ஏதோ ஒளிர்ந்தது. திடீரென்று மகிழ்ச்சி ஏற்பட்டது. வயல்வெளியில் நிறைந்திருந்த குளிர் தன்மை நீர்வரத்தினை உணர்த்தியது. வயலில் இறங்கி பார்த்தவருக்குள் இன்ப அதிர்ச்சி... கண்ணியில் நீர் ஓடிவரும் சப்தம். காலை நேரத்தில் தவளைகள் சத்தமிட்டன. மகிழ்ச்சி பெருக்கெடுக்க... நீர் கண்ட ஆனந்தம்! கண்ணியை நோட்டமிட்டவர் எதேச்சையாக வடக்கே திரும்பினார். பெரிய குளத்தில் ஏற்றம் இறைத்துக் கொண்டிருப்பது யார்? நம்ப முடியவில்லை... பெரியவனே தான்... நிலத்தைப் போலவே அப்பாவுக்கும் "கண்கள் ஈரமாகியது". |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: பரமார்த்தகுரு, முட்டாள், மூடன், மட்டி, மடையன், பேயன், சீடர்கள், மடநாடு, அரண்மனை ஊழியர்கள், முதல் மந்திரி, யானைகள், பன்றிகள், பட்டினி, ஆயிரம் பொற்காசுகள், குதிரை, ஆடுகள், பஞ்சம்
தலைப்பு: தண்டச் சோற்றுத் தடிராமன்கள்
| எப்படியோ அரசனை ஏமாற்றி, மட நாட்டின் முதல் மந்திரி ஆகி விட்டார், பரமார்த்த குரு. அவருக்குத் துணையாகச் சீடர்களும் அரண்மனை ஊழியர்களாக நியமிக்கப்பட்டனர். "நம் குரு முதல் அமைச்சர் ஆகிவிட்டதால், இனி கவலையே பட வேண்டாம்" என்று சந்தோஷம் கொண்டனர், ஐந்து சீடர்களும் ஒருநாள், "நமது நாட்டுப் படை பலம் எப்படி இருக்கிறது?" என்று பரமார்த்தரிடம் கேட்டான் மட மன்னன். இதுதான் நல்ல சமயம் என்ற நினைத்தார், பரமார்த்தர். "மன்னா! உங்களிடம் சொல்லவே நாக்குக் கூசுகிறது. நம் நாட்டு யானைகள் எல்லாம் பட்டினியால் வாடி இளைத்து, பன்றிகள் போல் ஆகிவிட்டன!" என்று புளுகினார். சீடர்களும், "ஆமாம் அரசே! இப்படியே கவனிக்காமல் விட்டால், போரில் கட்டாயம் தோல்வியே ஏற்படும்" என்று ஒத்து ஊதினார்கள். அதைக் கேட்ட மன்னன், "அப்படியா? இரண்டு யானைகளை இங்கே அழைத்து வாருங்கள்" என்று கட்டளை இட்டான். மட்டியும் மடையனும் ஓடிச் சென்று இரண்டு பன்றிக் குட்டிகளை அரண்மனைக்குள் ஓட்டி வந்தனர். அதைப் பார்த்த அரசன், "சே! சே! பார்க்கவே சகிக்கவில்லையே! இவையா நம் நாட்டு யானைகள்?" என்று கேட்டான். முதலில் மட மன்னனுக்குக் கொஞ்சம் சந்தேகம் எற்பட்டது. "இது யானை என்றால், தும்பிக்கையைக் காணோமே?" என்று கேட்டான். "மன்னா! எல்லாம் முதலில் தும்பிக்கையுடன் இருந்த யானைகள் தான். பட்டினி கிடப்பதால் உடலும் மெலிந்து விட்டது, தும்பிக்கையும் சுருங்கி விட்டது" என்று விளக்கினார் பரமார்த்தர். "இவை மறுபடியும் பழைய உருவம் அடைவதற்கு என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான் மடமன்னன். "மன்னா! இன்னொரு விஷயம். அதையும் பாருங்கள், பிறகு வைத்தியம் சொல்கிறோம்" என்றார் குரு. "நமது நாட்டுக் குதிரைப் படைகளும் இதே போல் இளைத்து விட்டன. எல்லாம் ஆட்டுக் குட்டிகள் மாதிரி ஆகிவிட்டன!" என்றான் மூடன். அப்படியா? வியப்பாக இருக்கிறதே! என்ன செய்யலாம் சொல்லுங்கள் என்றான் மன்னன். மன்னா! நாங்கள் அருமையான திட்டம் ஒன்று வைத்துள்ளோம். அதன்படி ஆயிரம் பொற்காசுகள் செலவாகும். அந்த ஆயிரம் பொற்காசுகளையும் எங்களிடமே கொடுத்து விடுங்கள். நாங்கள் எல்லாவற்றையும் பழையபடி குண்டாக்கி விடுகிறோம்! என்றனர், முட்டாளும், மூடனும் மடமன்னன் பெரிய கஞ்சன். அதனால் ஆயிரம் பொற்காசு செலவழிக்க மனம் வரவில்லை. "வேறு ஏதாவது யோசனை இருந்தால் சொல்லுங்கள்!" என்று கட்டளையிட்டான். "சே! நம் திட்டம் எல்லாம் பாழாகி விட்டதே!" என்று வருந்தினார், பரமார்த்தர். சீடர்களுக்கும் ஆத்திரமாக இருந்தது "அரசே! எல்லா யானைகளையும், குதிரைகளையும் நாட்டில் உள்ள வயல்களில் மேயவிடுவோம்! கொஞ்ச நாளில் சரியாகிவிடும்!" என்றான் மண்டு. "இதை வேண்டுமானால் செய்யலாம்!" என்றான் மடமன்னன். பரமார்த்தரின் ஆணையின்படி, மடநாட்டில் உள்ள பன்றிகள், ஆடுகள் அனைத்தும் அவிழ்த்து விடப்பட்டன. எல்லாம் சேர்ந்து கொண்டு, குடி மக்களின் வயல்களில் சென்று மேயத் தொடங்கின. இரண்டே நாளில் எல்லா வகையான தானியங்களும் பாழாகி விட்டன. அடுத்த மாதமே நாடு முழுவதும் பஞ்சம் ஏற்பட்டது. பலபேர் சோற்றுக்கே வழியில்லாமல் இறந்தனர். பரமார்த்தரும், சீடர்களும் ஒரு பயனும் இன்றித் தண்டச் சோற்றுத் தடிராமன்களாக இருப்பதைக் கண்ட மன்னன், எல்லோரையும் விரட்டி அடித்தான். அடடா! எப்படியாவது ஆயிரம் பொற்காசுகளைச் சம்பாதித்து விடலாம் என்று நினைத்தோம். கடைசியில் இப்படிப் பாழாகி விட்டதே! என்று புலம்பியபடி பழையபடி மடத்துக்கே திரும்பினார்கள். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: அந்த ஊரில் குமரேசன் என்ற குல்லா வியாபாரி ஒருவர் இருந்தார்.டவுனுக்கு சென்று வித,விதமான தலைக்குல்லாய்களை வாங்கி அவற்றை எல்லாம் ஒரு பெரிய மூட்டையாக கட்டி தலை சுமையாக நடந்து சென்றுபக்கத்து ஊர்களிலும், சந்தைகூடும் இடங்களிலும் விற்பனை செய்துவந்தார். அவரும் தனது தலையில் எப்போதும் குல்லா அணிந்து இருப்பார். வெயில் காலம் தொடங்கியது.மக்கள் வெயிலுக்கு பயந்து குல்லா வாங்கி அணிய ஆரம்பித்தனர்.வாங்கி வந்த குல்லாக்கள் அனைத்தும் உடனே விற்று தீர்ந்துவிட்டதால், குமரேசன் டவுனுக்கு சென்று விதவிதமான குல்லாக்களை வாங்கி பெரிய மூட்டையாக கட்டி பஸ்சில் ஏற்றி தன் ஊருக்கு கொண்டு வந்தார். அடுத்தநாள் காலை அந்த மூட்டையைதன் தலைமீது வைத்து சுமந்து கொண்டு பக்கத்து ஊருக்கு சென்றார். முதலில் போன ஊரில் சில குல்லாக்கள் மட்டுமே விற்பனையானது. குல்லாவியா பாரி வெயிலையும் பொருட்படுத்தாமல் பக் கத்து ஊருக்கு சென்று கொண்டிருந்தார். ஊர் எல்லையில் இருந்த ஆலமரத்தின் கீழேசற்று நேரம் ஓய்வு எடுக்கநினைத்து குல்லா மூட்டையை இறக்கி வைத்துவிட்டு சற்று நேரம் தூங்கிவிட்டார். குல்லாவியாபாரி குல்லாமூட்டையுடன் தூங்குவதை அந்தமரத்தில் தங்கி இருந்த குரங்குகள் கண்டன. அவர் அணிந்து இருந்த குல்லாவை ரசித்தன.பின்னர் மரத்தில் இருந்து இறங்கிவந்து, குல்லா மூட்டையை பிரித்தன. இதைக்கண்ட வயதான குரங்கு ஒன்று“குரங்கு நண்பர்களே…மூட்டையை அவிழ்க்காதீர்கள். அந்தமனிதர் மிகவும் ஏழ்மையானவர். இந்தக் குல்லாக்களை விற்று தான் அவர் பிழைத்து வருகிறார்.தயவு செய்து மூட்டையை பிரிக்காதீர்கள்”என்றது. மற்ற குரங்குகளோ “போ… போ…கிழட்டுக்குரங்கே உனக்கு ஒன்றும் தெரியாது, அவர் தலையை பார்…அந்தகுல்லா எப்படி கச்சிதமாக இருக்கிறது பார்…நாங்களும் அவரை போல குல்லா அணியப்போகிறோம்நீ பேசாமல் வேடிக்கை பார்” என்றுகூறிவிட்டு குல்லாக்களை ஆளுக்கு ஒன்றாக எடுத்து குரங்குகள் தலையில் அணிந்து கொண்டன. தூக்கம் கலைந்து எழுந்த குல்லா வியாபாரி குல்லா மூட்டை அவிழ்ந்து கிடப்பதைக்கண்டு திடுக்கிட்டார்.அப்போது கிழட்டுக்குரங்கு,“குல்லா வியாபாரியே, உம்முடைய குல்லாக்களை குரங்குகள் எடுத்து தலையில் அணிந்து கொண்டன.நான் எவ்வளவோகூறியும் அவை எனது பேச்சை கேட்கவில்லை” என்று கூறியது. குல்லாவியாபாரி ஆலமரத்தை ஏறிட்டார்.மரத்தில் இருந்த குரங்குகள் ஒவ் வொன்றும் குல்லாக்களை அணிந்து இருந்தன. உடனே குல்லாவியாபாரி, “குரங்குகளே எனதுகுல்லாக்களை கொடுத்துவிடுங்கள்,நான் அவற்றை விற்பனைக்காக வைத்து இருக்கிறேன்”என்றார். குரங்குகள் அவரின் பேச்சை காதுகளில் போட்டுக்கொள்ளவில்லை. உடனே குல்லா வியாபாரி கோபத்துடன் தான் அணிந்து இருந்த குல்லாவை தூக்கி வீசினார். உடனே குரங்குகளும் குல்லாவை கழற்றி வீச முயன்றன.ஆனால் அவைகளால் குல்லாவை கழற்றமுடியவில்லை. குல்லாதலையில் இருந்து கீழே இறங்கி அவற்றின் கண்களை மறைத்தன. இதனால் குரங்குகள் பயந்து நடுங்கின. உடனே குமரேசன்,“குரங்குகளே அந்தக் குல்லாக்கள் மனிதர்களுக்காக தயாரிக்கப்பட் டவை. உங்கள் தலைக்கு ஒத்து வராது. இந்தபுதுக்குல்லாவை தலையில் மாட்டுவது சுலபம், ஆனால் கழட்டுவது மிகவும் கடினம். எனவே அதைகழற்றும் விதமாகத்தான் கழட்ட வேண்டும். ஒவ்வொருவராக வாருங்கள், நான் கழற்றிக் கொள்கிறேன், இல்லைஎன்றால் அந் தக் குல்லாக்கள் உங்கள் கண்களை மறைத்து… நீங்கள் கிளைகளை விட்டு கிளைக்கு தாவ முடியாமலும், உணவை அடை யாளம் காண முடியாமலும் தவியாய் தவிக்க நேரிடும்” என்று கூறினார். உடனே குரங்குகள் குல்லா வேண்டாம், தலை தப்பினால் போதும் என்று குல்லாவியாபாரி முன்பு வரிசையில் வந்து நின்றன. வியாபாரியும் குல்லாக்களை குரங்கின் தலையில் இருந்து கழட்டி எடுத்துக் கொண்டார். “பிறர் பொருட்களைஅவரின் அனுமதி இன்றி அபகரிப்பது அடி முட்டாள் தனமான காரியம்,அது அநாகரீகமும் கூட. அந்த செயலைத்தான் நீங்கள் செய்து இருக்கிறீர்கள்.உங்கள் செயலுக்கு துணை போகாத வயதான குரங்கு மட்டும் தான் நாகரீகம் பேணிய நல்ல குரங்கு. அந்த வயதான குரங்குக்கு நான் ஒரு பரிசு கொடுக்க போகிறேன்”என்று கூறிய குல்லா வியாபாரி தான் தலையில் அணிந்து இருந்தவிலை உயர்ந்த ஜரிகை வேலைப்பாடுடன் கூடிய குல்லாவை எடுத்து அந்த வயதான குரங்கின் தலையில் அணிவித்தார். வயதான குரங்கும் அந்தகுல்லாவை மகிழ்ச்சியுடன் தலையில் அணிந்து கொண்டது. மற்ற குரங்குகள் அந்த வயதான குரங்கை ஏக்கத்துடன் பார்த்தன. இனிமேல் பிறர் பொருட்கள் மீது ஆசை வைக்கக்கூடாது என்று முடிவெடுத்தன. குல்லாவியாபாரி குல்லாக்களை எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு புறப்பட்டார்.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'குல்லா வியாபாரியும் குரங்கு கூட்டமும்' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: இந்த கதை அழகானது. ஜென் குரு ஹேக்குன் அபூர்வ மலர்களில் ஒருவர். ஒரு போர்வீரன் அவரிடம் வந்தான். ஒரு சமுராய், ஒரு சிறந்த வீரன் வந்து ஹேக்குனிடம் நரகம் என்று ஏதாவது உள்ளதா ? சொர்க்கம் என்று ஏதாவது உள்ளதா ? நரகம் மற்றும் சொர்க்கம் என்று ஒன்று இருக்குமானால் அவைகளின் கதவுகள் எங்கே உள்ளன ? நான் எங்கேயிருந்து உள்ளே செல்வது ? நான் எவ்வாறு நரகத்தை தவிர்த்துவிட்டு சொர்க்கத்தை தேர்ந்தெடுப்பது ? என கேட்டான், அவன் ஒரு எளிய வீரன். வீரர்கள் எப்போதும் எளிமையானவர்கள். எளிமையாக இருக்கும் ஒரு வியாபாரியை கண்டுபிடிப்பது கடினம். ஒரு வியாபாரி எப்போதும் தந்திரமான புத்தியை உடையவன். இல்லாவிடில் அவன் ஒரு வியாபாரியாக இருக்கமுடியாது. ஒரு வீரன் எப்போதும் எளிமையானவன், இல்லாவிடில் அவன் ஒரு வீரனாக இருக்கமுடியாது. ஒரு வீரன் இரண்டு விஷயங்களை மட்டுமே அறிவான், வாழ்க்கை மற்றும் இறப்பு – அதிகமல்ல. அவனுடைய வாழ்க்கை எப்போதும் பணயத்திலேயே உள்ளது, அவன் எப்போதும் சூதாடிக்கொண்டிருக்கிறான், அவன் ஒரு எளிமையான மனிதன். அதனால்தான் வியாபாரிகள் ஒரே ஒரு மகாவீரரையோ, ஒரே ஒரு புத்தரையோ கூட உருவாக்கமுடியவில்லை. பிராமணர்களும்கூட ஒரு இராமரையோ, ஒரு புத்தரையோ, ஒரு மகாவீரரையோ உருவாக்கமுடியவில்லை. பிராமணர்களும் தந்திரசாலிகள், வேறு ஒரு வகையில் தந்திரசாலிகள். அவர்களும் ஒரு வேறுபட்ட உலகத்தின், மறு உலகத்தின் வியாபாரிகளே. அவர்கள் இந்த உலகத்தை சேராத ஒரு வியாபாரத்தை செய்கிறார்கள், ஆனால் அது மறு உலகத்தை சேர்ந்தது. அவர்களுடைய பூசாரித்தனம் ஒரு வியாபாரம். அவர்களுடைய மதம் கணிதம், கணக்கீடு. அவர்களும் தந்திரசாலிகளே, வியாபாரிகளை விட அதிக தந்திரசாலிகள். வியாபாரி அவனுடைய உலகத்திற்கு உட்பட்டவன், அவர்களுடைய தந்திரம் அதையும் கடந்து செல்கிறது. அவர்கள் எப்போதும் மறு உலகத்தைப்பற்றி, அவர்கள் மறு உலகத்தை அடையும்போது அங்கு கிடைக்கபோகும் பரிசுகள் பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய சடங்குகள், அவர்களுடைய முழு மனமும் மறு உலகில் அதிக சுகத்தை எப்படி பெறுவது என்பது குறித்து சிந்தித்துகொண்டிருக்கிறது. அவர்களது கவலை சுகத்தை பற்றியது. வியாபாரிகளால் முடியவில்லை. பிராமணர்கள்கூட ஒரு புத்தரை உருவாக்கமுடியவில்லை. இது அதிசயமாய் உள்ளது. 24 தீர்த்தங்கரர்கள் அனைவரும் சத்திரியர்கள், வீரர்கள். புத்தர் ஒரு சத்திரியர், இராமன் மற்றும் கிருஷ்ணர் இருவரும் சத்திரியர்கள். அவர்கள் எளிமையான மக்கள், அவர்களுடைய மனதில் எந்த தந்திரமும், எந்த கணக்கீடும் இல்லை. அவர்களுக்கு இரண்டு விஷயங்கள் மட்டுமே தெரியும் – வாழ்க்கை மற்றும் இறப்பு. இந்த எளிமையான வீரன் ஹேக்குனிடம் சொர்க்கம் எங்கே இருக்கிறது மற்றும் நரகம் எங்கே இருக்கிறது என்று கேட்பதற்காக வந்துள்ளான், அவன் எந்த கோட்பாடுகளையும் தெரிந்துகொள்வதற்காக வரவில்லை. அவன் கதவுகளை தெரிந்துகொள்ள விரும்பினான். அதனால் அவன் நரகத்தை தவிர்த்துவிட்டு சொர்க்கத்தில் நுழையலாம் ஹேக்குன் ஒரு வீரன் மட்டுமே புரிந்துகொள்ளகூடிய வகையில் பதிலளித்தார். அங்கு ஒரு பிராமணன் இருந்திருந்தால், வேதங்கள் தேவைப்பட்டிருக்கும், அவர் வேதங்கள், உபநிடதங்கள், பைபிள், குரான், ஆகியவற்றிலிருந்து மேற்கோள் காட்டியிருப்பார் அப்போதுதான் ஒரு பிராமணன் புரிந்துகொள்ளமுடியும். ஒரு பிராமணனுக்கு தேவையானவை அனைத்தும் வேதங்களில் உள்ளது, வேதங்களே உலகம். ஒரு பிராமணன் வார்த்தைகளில், சொற்களில் வாழ்கிறான். ஒரு வியாபாரி அங்கு இருந்திருந்தால், ஹேக்குன் கொடுத்த பதில், இந்த வீரனோடு அவர் நடந்துகொண்ட விதம், ஆகியவற்றால் இந்த விடையை புரிந்துகொண்டிருக்கமாட்டான். ஒரு வியாபாரி எப்போதும் உன்னுடைய சொர்க்கத்தின் விலை என்ன ? என்ன விலை ? நான் அதனை எப்படி அடைவது? நான் என்ன செய்யவேண்டும்? எவ்வளவு புண்ணியம் செய்திருக்கவேண்டும்? அங்குள்ள நாணயம் எது? சொர்க்கத்தை அடைய நான் என்ன செய்யவேண்டும்? என்றே கேட்டுகொண்டிருப்பான். அவன் எப்போதும் விலையை கேட்பான். நான் ஒரு அழகான கதையை கேள்விப்பட்டிருக்கிறேன். இது தொடக்கத்தில் கடவுள் உலகத்தை படைத்தபோது நடந்தது. கடவுள் வெவ்வேறு இனத்தை சேர்ந்தவர்களிடம் பத்து கட்டளைகளை பற்றி கேட்பதற்காக பூமிக்கு வந்தார். வாழ்வின் பத்து விதிமுறைகள். யூதர்கள் அந்த பத்து விதிமுறைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்துவிட்டார்கள் – கிறிஸ்துவர்களும் முகமதியர்களும். இந்த மதங்கள் அனைத்தும் யூதத்தன்மை உடையவை, அடிப்படை யூதம், யூதன் ஒரு சரியான வியாபாரி. இப்படி அதனை கேட்பதற்காக கடவுள் வந்தார், அவர் இந்துகளிடம் வந்து பத்து கட்டளைகளை பெற்றுகொள்ள விரும்புகிறீர்களா என கேட்டார். இந்துகள் முதல் கட்டளை என்ன ? எங்களுக்கு இந்த பத்து கட்டளைகள் என்னவென்று தெரியாது எங்களுக்கு கண்டிப்பாக ஒரு உதாரணம் தேவை என்றனர். கடவுள் உயிர்களை கொல்லக்கூடாது என கூறினார். இந்துகள் எங்களுக்கு அது கடினமாக இருக்கும். வாழ்க்கை சிக்கலானது, கொல்வதும் உள்ளடங்கியுள்ளது. அது ஒரு பெரிய பிரபஞ்ச விளையாட்டு, அதில் பிறப்பு, இறப்பு, போராட்டம், போட்டி, எல்லாம் உள்ளது. எல்லா போட்டிகளும் எடுக்கப்பட்டுவிட்டால் முழு விஷயமும் தட்டையாக துடிப்பற்றதாகிவிடும். எங்களுக்கு இந்த கட்டளைகள் பிடிக்கவில்லை. அவை முழு விளையாட்டையும் அழித்துவிடும். என கூறினர். பிறகு அவர் முகமதியர்களிடம் சென்று தவறான உறவில் ஈடுபடக்கூடாது என அவர்களுக்கும் அவர் ஒரு உதாரணம் கொடுத்தார். அவர்களும் உதாரணம் கேட்டனர். முகமதியர்கள் இது கடினமாக இருக்கும். வாழ்க்கை எல்லா அழகையும் இழந்துவிடும், குறைந்தபட்சம் நான்கு மனைவிகளாவது தேவை. நீங்கள் அதனை பலவந்தம் என அழைக்கலாம், ஆனால் இதுதான் வாழ்வைத் தரக்கூடியது, எல்லா புனிதமான மக்களும் பெற வேண்டியது. மறு உலகத்தைப்பற்றி யார் அறிவார் ? இதுதான் உலகம், அனுபவிப்பதற்காக எங்களிடம் நீங்கள் இந்த உலகத்தை அளித்துள்ளீர்கள் ஆனால் இப்போது நீங்கள் இந்த பத்து கட்டளைகளோடு வந்துள்ளீர்கள். இது முரண்பாடானது என கூறினர். கடவுள் சுற்றி சுற்றி வந்தார். பிறகு அவர் மோசஸிடம், யூதர்களின் தலைவரிடம் வந்தார். மோசஸ் உதாரணத்தைச் சிறிதும் கேட்கவில்லை, மேலும் கடவுள் பயப்பட்டார், மோசஸ் முடியாது என்று சொல்லிவிட்டால், யாரும் இல்லை, மோசஸ்தான் கடைசி நம்பிக்கை. கடவுள் மோசஸை கேட்டபோது – கடவுள் என்னிடம் பத்து கட்டளைகள் உள்ளன என்று சொன்ன நொடியில் –- மோசஸ் என்ன பதிலளித்தார் ? அவர் அவை என்ன விலை? என்று கேட்டார். இப்படித்தான் ஒரு வியாபாரி யோசிப்பான். அவன் தெரிந்துகொள்ள விரும்பும் முதல் விஷயம் விலை. கடவுள் அவை இலவசம் என கூறினார். மோசஸ் பிறகு நான் பத்தை வைத்துக்கொள்கிறேன். அவை இலவசமாக இருக்கும் பட்சத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என கூறினார். அப்படித்தான் பத்து கட்டளைகளும் பிறந்தன. ஆனால் இந்த சமுராய் ஒரு யூதனல்ல, அவன் ஒரு வியாபாரியல்ல, அவன் ஒரு போர்வீரன். அவன் ஒரு எளிமையான கேள்வியோடு வந்துள்ளான். அவனுக்கு வேதங்களிலோ, விலையிலோ, சொல்லும் பதிலிலோ, ஆர்வமில்லை. அவன் உண்மையின் மீது ஆர்வம் கொண்டிருந்தான். மற்றும் ஹேக்குன் என்ன செய்தார் ? அவர் நீ யார் ? என கேட்டார் போர்வீரன் நான் ஒரு சமுராய் என பதிலளித்தான். ஒரு சமுராயாக இருப்பது ஜப்பானில் மிகவும் பெருமை வாய்ந்த ஒரு விஷயம். அதன் பொருள் ஒரு சிறந்த போர்வீரன், அவனுடைய வாழ்க்கையை இழப்பதற்கு ஒரு நொடிகூட தயங்கமாட்டான். அவனைப்பொறுத்தவரை, வாழ்வும் இறப்பும் வெறும் ஒரு விளையாட்டு. அவன் நான் ஒரு சமுராய், சமுராய்களின் தலைவன். அரசரும்கூட எனக்கு மரியாதை அளிக்கிறார், என கூறினான். ஹேக்குன் சிரித்துவிட்டு, நீ ஒரு சமுராய் ? நீ ஒரு பிச்சைக்காரனைப்போல இருக்கிறாய் என கூறினார். உடனே சமுராயின் பெருமை காயப்பட்டுவிட்டது, அவனுடைய ஆணவம் அடி வாங்கிவிட்டது. அவன் எதற்காக வந்தான் என்பதை அவன் மறந்துவிட்டான். அவன் அவனுடைய வாளை எடுத்து ஹேக்குனை கொல்லப்போனான். சொர்க்கத்தின் கதவைப்பற்றியும் நரகத்தின் கதவைப்பற்றியும் கேட்க இந்த குருவிடம் அவன் வந்துள்ளான் என்பதையே அவன் மறந்துவிட்டான். அப்போது ஹேக்குன் சிரித்துவிட்டு இதுதான் நரகத்தின் கதவு. இந்த வாளோடு, இந்த கோபம், இந்த ஆணவம், கதவு இங்குதான் திறக்கிறது என கூறினார். இதைத்தான் ஒரு போர்வீரன் புரிந்துகொள்ளமுடியும். உடனடியாக அவன் புரிந்துகொண்டான், இதுதான் கதவு. அவன் அவனுடைய வாளை அதன் உறைக்குள் போட்டான். அப்போது ஹேக்குன் இங்கு சொர்க்கத்தின் கதவு திறக்கிறது என கூறினார். நரகமும் சொர்க்கமும் உனக்குள் உள்ளன. இரண்டு கதவுகளும் உனக்குள் உள்ளன. நீ உணர்வற்று செயல்படும்போது அங்கு நரகத்தின் கதவு உள்ளது, நீ கவனமாகவும், உணர்வுடனும் இருக்கும்பொழுது, அங்கு சொர்க்கத்தின் கதவு உள்ளது. இந்த சமுராய்க்கு என்ன நடந்தது? ஹேக்குனை கொல்லப்போகும் அந்த சமயத்தில் அவன் உணர்வோடு இருந்தானா ? அவன் என்ன செய்யப்போகிறான் என்பதுபற்றி அவன் உணர்வோடு இருந்தானா ? அவன் எதற்காக இங்கு வந்துள்ளான் என்பதுபற்றி உணர்வோடு இருந்தானா ? எல்லா உணர்வும் மறைந்துவிட்டது. ஆணவம் ஆட்கொள்ளும்போது, நீ கவனமாக இருக்கமுடியாது. ஆணவம் ஒரு போதை, அந்த போதை உன்னை முழுமையாக உணர்வற்றவனாக்கிவிடும். நீ செயல்படுவாய் ஆனால் அந்த செயல் உனது உணர்வற்ற நிலையிலிருந்து வெளிப்படும் உன்னுடைய உணர்வு நிலையிலிருந்து வெளிப்படாது. மற்றும் உணர்வற்ற நிலையிலிருந்து எந்த செயல் வந்தாலும் அப்போதெல்லாம், நரகத்தின் கதவு திறந்துள்ளது. நீ என்ன செய்தாலும், நீ என்ன செய்கிறாய் என்ற உணர்வு உனக்கு இல்லாவிட்டால் நரகத்தின் கதவு திறந்துவிடுகிறது. திடீரென, ஹேக்குன் இதுதான் கதவு அதை நீ ஏற்கனவே திறந்துவிட்டாய் என சொன்னவுடன் உடனடியாக சமுராய் கவனமடைந்தான் – சூழ்நிலையே கண்டிப்பாக கவனத்தை உண்டாக்கியிருக்கவேண்டும். வெறுமனே கற்பனை செய்து பார். நீ போர்வீரனாக இருந்திருந்தால், சமுராயாக இருந்திருந்தால், வாளை கையில் ஏந்திகொண்டு, கொல்லப்போகிறாய். என்ன நடந்திருக்கும். ஒரு நொடி அதிகமாகியிருந்தால் ஹேக்குனின் தலை வெட்டப்பட்டிருக்கும், ஒரு நொடி அதிகமாகியிருந்தால் அது உடலிலிருந்து பிரிக்கப்பட்டிருக்கும். அப்போது ஹேக்குன் இதுதான் நரகத்தின் கதவு என கூறினார். இது ஒரு தத்துவார்த்தமான பதில் அல்ல. எந்த ஞானியும் தத்துவார்த்தமான முறையில் பதில் அளிப்பதில்லை, சாதாரண ஞானமடையாத மனங்களுக்கு மட்டுமே தத்துவம் இருக்கிறது. ஞானி பதிலளிக்கிறார். அப்போது அந்த பதில் வார்த்தைகளால் ஆனதல்ல. அது முழுமையானது. இந்த மனிதன் அவரை கொன்றிருக்கலாம் என்பது பொருட்டல்ல. நீ என்னை கொன்றால் நீ கவனம் பெறுவாய் என்றால், அது தகுதிவாய்ந்ததே – ஹேக்குன் விளையாட்டை விளையாடினார். ஒரு வினாடி தப்பியிருந்தாலும் அந்த மனிதன் அவரை கொன்றிருக்கலாம். ஆனால் சரியான நொடியில் ஹேக்குன் இதுதான் கதவு என கூறினார். நீ ஒருவேளை சமுராயைப்பற்றி கேள்விபடாமல் இருக்கலாம். நீ ஒரு சமுராயை கொல்லப்போவதாக வைத்துகொள்வோம், உன்னுடைய வாள் உன்னுடைய கையில் உள்ளது, அது இப்போது அவனுடைய கழுத்தை தொடப்போகிறது. அவன் உனக்கு முன்னால், பாதுகாப்பு ஏதுமின்றி, எந்த ஆயுதமும் இன்றி, நின்றுகொண்டிருக்கிறான். சமுராய்கள் ஒரு குறிப்பிட்ட சத்தத்தை வைத்திருக்கிறார்கள், ஒரு மந்திரம். அவன் ஒரே ஒரு வார்த்தையை மிகவும் சத்தமாக கூறுவான், நீ உன்னுடைய சக்தி அனைத்தையும் இழந்துவிடுவாய். நீ இறந்ததை போல, ஒரு சிலைபோல ஆகிவிடுவாய். அவன் வெறுமனே ஒருவேளை ஹே என்று கூறலாம். நீ நிள்றுவிடுவாய். உனது கை நகராது. அந்த சத்தம் எல்லாவற்றையும் கட்டுபடுத்தும் இதயத்தில் குத்தும். உன்னுடைய கை நின்றுவிடும், உன்னுடைய மனம் அதிர்ச்சி அடையும், எல்லா செயல்பாடுகளும் மறைந்துவிடும். அவன் ஆயுதம் ஏதுமின்றி இருந்தால்கூட உன்னால் ஒரு சமுராயை கொல்லமுடியாது. ஒரு சத்தம் அவனுக்கு பாதுகாப்பாகிவிடும். நீ ஒரு துப்பாக்கி வைத்திருந்தால், உன்னுடைய கைகள் நகரமுடியாது, அல்லது நீ குறியை தவறவிடுவாய். அது வெறும் ஒரு சத்தம், ஒரு குறிப்பிட்ட முறையில் எழுப்பபடவேண்டிய ஒரு சத்தம், ஆனால் அது உனது இதயத்திற்குள் ஆழமாக சென்று உன்னுடைய செயல்பாட்டை முழுமையாக மாற்றிவிடும், உன்னுடைய செயல்பாட்டின் வழக்கத்தை மாற்றிவிடும். ஹேக்குன் இதுதான் கதவு என கூறியபோது சமுராய் சிலைபோல கண்டிப்பாக நின்றிருக்கவேண்டும். அந்த சிலைபோன்ற நிலையில், எல்லா செயல்களும் உறையும்போது, நீ கவனமடைகிறாய். ஏதாவது செயல் தேவை . . . இல்லாவிடில் உனது உணர்வற்ற தன்மை உடைந்து நீ உணர்வு பெறுவாய். ஒரு மனிதன் ஆறு மணிநேரம் எதுவும் செய்யாமல் அமர்ந்திருந்தால் அவன் ஞானடைந்துவிடுவான் என ஜென் கூறுகிறது. வெறும் ஆறு மணிநேரம் . . .ஆனால் ஆறுமணிநேரம் உண்மையிலேயே மிக அதிகம். நான் ஆறு நிமிடங்கள் போதும் என கூறுகிறேன். நீ முற்றிலுமாக எந்த செயல்பாடும் இன்றி இருக்கமுடியுமானால் ஆறு நொடிகள் கூட போதும். நீ ஏதும் செய்யாமல் இருக்கும்போது, நீ உணர்வற்று இருக்கமுடியாது, நீ ஏதும்செய்யாமல் இருக்கும்போது உன்னுடைய முழு சக்தியும் உணர்வுதன்மை அடைகிறது. ஒரு பிரம்மாண்ட வெடித்தல் நிகழ்கிறது.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'சொர்க்கம் மற்றும் நரகத்தின் கதவுகள்' என்பதாகும். |
1 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பைக் கொடு.
கதை: ஒரு குளக்கரை. கரையோரத்தில் கிழக்கொக்கு ஒன்று விசனமுடன் ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தது. துள்ளிக் கொண்டிருந்த மீன்களில் ஒன்றுக்கு சந்தேகம் வந்தது. “நம்மைச் சும்மாவிடாதே, ஆனால் செயலற்று நின்றுள்ளதே என்னவாக இருக்கும்” என்று. “நமக்கேன்” என்று இராமல் அதன்முன் வந்தது. “என்ன கொக்காரே! உன் ஆகாரத்தைக் கொத்தாமல் சும்மா நிற்கிறீர்?” என்றது. “நான் மீனைக்கொத்தித் தின்பவன்தான், ஆனாலும் இன்று எனக்கு மனசு சரி இல்லை” என்றது கொக்கு. “மனசு சரி இல்லையா… ஏன்?’ என்றது மீன். “அதைஏன் கேட்கிறாய்…” என்று பிகு பண்ணியது கொக்கு. “பரவாயில்லை சொல்லுங்களேன்” “சொன்னால் உனக்குத் திக் என்றாகும்.” மீனுக்குப் பரபரத்தது. “சொன்னால்தானே தெரியும்” “வற்புறுத்திக் கேட்பதாலே சொல்கிறேன். இப்போது ஒரு செம்படவன் இங்கே வரப்போறான்…” என்று இழுத்தது கொக்கு. “வரட்டுமே” “என்ன வரட்டுமே? உங்களையெல்லாம் ஒட்டுமொத்தமாகப் பிடித்துச் சென்றுவிடப் போகிறான்.” “அய்யய்யோ!” உடனே அம்மீன் உள்ளே சென்றுவிட்டது. சில நிமிடங்கள் ஆகி இருக்கும்; பல மீன்கள் அதன்முன் துள்ளின. அதுமட்டுமா! ஒட்டுமொத்தமாக “நீயே எங்களையெல்லாம் அந்த அபாயத்திலிருந்து காப்பாற்றேன்” என்று கெஞ்சின. அபாயம் சொன்னவனே உபாயமும் சொல்வான் என்று அவைகள் யோசித்து கொக்கிடம் உதவி கேட்டன. “நான் என்ன செய்வேன்? என்னால் செம்படவனோடு சண்டை போடா முடியாது. கிழவன் நான். வேண்டுமென்றால் உங்களை இக்குளத்திலிருந்து வேறொரு குளத்துக்குக் கொண்டு போகலாம். அதனால் எனக்கும் இந்தத் தள்ளாத வயதில் பரோபகாரி என்ற பெயரும் வரும்; நீங்களும் பிழைத்திருப்பீர்கள்” என்றது கொக்கு மிகவும் இறக்கம் கசிய. மீன்கள் எல்லாம் தம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அதன் பேச்சை நம்பின. “அபாயத்தை அறிந்து சொன்ன நீங்களே உபாயத்தையும் தெரிந்து சொல்கிறீர்கள்; அப்படியே செய்யுங்கள்” என்றன ஒருமித்தக் குரலில். கொக்குக்கும் கசக்குமா காரியம்? நடைக்கு ஒவ்வொன்றாக குளத்திலிருந்த மீன்களையெல்லாம் கௌவிக் கொண்டுபோய் சில மீன்களைத் தின்று, மற்ற மீன்களை ஒரு பாறையில் உலரவைத்தது. குளத்திலிருந்த நண்டு ஒன்று இதை கவனித்தது. அதற்கும் வேறு குளத்திற்குச் செல்ல உள்ளுக்குள் ஆசை சுரந்தது. “ஓ சீவகாகுண்யனே! என்னையும் அவ்விடத்திற்குக் கொண்டுபோங்கள்” என்று கெஞ்சியது. வருங்காலத்தில் எதுவும் வழிய வரும் - என்று உள்ளுக்குள் துள்ளிக் கொண்ட கொக்கு, நண்டையும் கௌவிக்கொண்டு பறந்தது. பறக்கும் பொது வழியில் மீன்களின் முள்ளுடல்கள் ஆங்காங்கே சிதறி இருப்பதைக் கண்டது நண்டு. அதற்க்கு “பக்”கென்றது. அத்துடன் வேறு நீர்நிலைக்குக் கொண்டுச் செல்வதாகக் கூறி மீன்களைத் தின்றுவிடும் கொக்கின் வஞ்சகம் நண்டுக்குச் “சட்”டென்று புரிந்துவிட்டது. தன் நிலையம் அப்படித்தானா? உயிராசையால் நண்டுக்கு ஒரு உபாயம் தோன்றியது. வைரத்தை வைரத்தால் அறுப்பதுபோல் அதற்கு மூளை வேலை செய்தது. “கொக்காரே! நீங்கள் என்மேல் இரக்கப்பட்டு எடுத்துக்கொண்டு வந்தீர்கள். அங்கே என் உறவினர்கள் பலர் இருப்பதால், என்னை மீண்டும் அங்கே கொண்டு சென்றால் அவைகளையும் காண்பிப்பேன்” என்றது நண்டு. “அப்படியா? இன்னும் இருக்கிறதா நண்டுகள்?” “எனக்கு உறவினர்கள் அதிகம்; பல இருக்கின்றன.” “ஆஹா! அதிர்ஷ்டம் என்றால் இப்படித்தான் வரவேண்டும்; நம்பாடு யோகம்தான்” என்று மகிழ்ந்த கொக்கு மீண்டும் நண்டைக் கௌவிக் கொன்று பழைய குளத்தை நோக்கிப் பறந்தது. குளத்துக்கு நேராக வரும்போது அதுவரை மண்டுபோலிருந்த நண்டு தன் கொடுக்கினால் கொக்கின் கழுத்தை இரண்டு துண்டாக்கிவிட்டு குளத்து நீரில் விழுந்து உயிர் பிழைத்துக் கொண்டது. அபாயம் சொன்னவனிடமே உபாயம் கேட்ட மீன்கள் செத்தன. வஞ்சமனத்தானின் உபாய மும் அபயாமே என்றறிந்து கொன்றுவிட்ட நண்டு பிழைத்தது.
| கொடுக்கப்பட்டுள்ள கதைக்குப் பொருத்தமான தலைப்பு 'நண்டு, கொக்கைக் கொன்ற கதை' என்பதாகும். |
2 | ['tam'] | கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் தலைப்பையும் பயன்படுத்தி சிறு கதை எழுதுக.
வார்த்தைகள்: வேலன், இராமாயி, முத்து, காலவாசல் முதலாளி, செங்கல், மண் குடிசை, நெருப்பு
தலைப்பு: இதயத்தை சுட்டது
| அதிகாலை ஐந்து மணியிருக்கும். இராமாயி தன்னோட புருஷன் வேலனைத்தட்டி எழுப்பினாள். " ஏய்... ஏய்... எந்திரியா... இன்னும் தூங்கிட்டிருக்கிற. சட்டுபுட்டுன்னு எந்திரிச்சோம், காலவாசப் பக்கம் போயி, மண்ண கொலச்சுப் போட்டோமுன்னு இல்லாம... எந்திரியா" வேலன் முந்திய நாள் செஞ்ச வேலையினால உடம்பு கலச்சுப் போயிருந்தான். அசந்து தூங்கிக் கொண்டிருந்த அவன், இராமாயி போட்ட சத்தத்துல உடலை முறுக்கிக்கொண்டே மெதுவாக எழுந்தான். பக்கத்துல உள்ள கொடத்துல தண்ணிய அள்ளி மூஞ்சியக் கழுவிக்கொண்டான். மண்வெட்டியை எடுத்து தோளில் வைத்துக் கொண்டு காலவாசலுக்குப் புறப்பட்டான். வேலன் மாங்கு மாங்குனு மண்ணை வெட்டி போட்டான். காலையில லேசாக குளிர் இருந்தாலும், அவனோட உடல் பூராவும் வியர்த்திருந்தது. அன்றைக்கு எவ்வளவு செங்கல் அறுக்க முடியுமோ அந்த அளவுக்கு மண்ணை வெட்டி, தண்ணி ஊற்றி கொலச்சுப் போட்டான். கிழக்கே சூரியன் உதித்துக் கொண்டிருந்தான். ஆனால் வேலவனுடைய வாழ்வில் புதிய உதயமே இல்லாததால், தினந்தோறும் உதிக்கும் சூரியன் அவனுக்கு எந்த அர்த்தத்தையும் தரவில்லை. இராமாயி வேகவேகமாய் சமயல் வேலையை முடித்துக்கொண்டிருந்தாள். அம்மியில் தொட்டுக் கொள்வதற்கு தொவயல் அரைத்துக் கொண்டே "டேய்... டேய்... முத்து சீக்கிரம் கிளம்பு. பள்ளிக்கூடம் போக நேரமாச்சுள்ள" அக்கறையோடு தன்னுடைய ஒரே மகனைக் கூப்பிட்டாள். முத்துவுக்கு படிப்பில் கொஞ்சம் ஆர்வம் இருந்தது. இந்த வருடம் ஏழாம் வகுப்பு முடித்து எட்டாவதுக்குச் செல்கிறான். "அம்மா ஸ்கூல் தொடங்கி இரண்டு வாரம் ஆவுது. இன்னும் யூனிபார்ம், புஸ்தகமெல்லாம் வாங்கல... அப்பாக்கிட்ட சொல்லுமா" முத்து நச்சரித்தான். " சரி... சரி... இப்போ நீ பள்ளிக்கூடத்துக்கு போ, நான் கொப்பன்கிட்ட சொல்லி வழக்கம்போல் காலவாசல் முதலாளி கிட்ட கொஞ்சம் கடன் கேட்கச் சொல்றேன்" இராமாயி அவனை அனுப்பிவிட்டு, புருசனுக்கு கஞ்சி எடுத்துகிட்டு காலவாசலுக்கு புறப்பட்டாள். மண்ணை கொலச்சுப் போட்டவுடன், வேலன் செங்கல் அறுக்க வேண்டிய இடத்தை சுத்தம் செய்தான். ஓர் இடத்துல கொலச்சுப் போட்டுக்கிடக்கிற மண்ணை, செங்கல் அறுக்கத் தோதுவா பக்கத்துல அள்ளிப்போட்டான். கட்டையை எடுத்து இரண்டு செங்கலா, வரிசையா அறுக்க ஆரம்பித்தான். ஒரு நாளைக்கு ஆயிரம் அல்லது ஆயிரத்து ஐநூறு செங்கல்தான் இரண்டு பேரும் சேர்ந்து அறுக்க முடியும். ஆயிரம் செங்கலுக்கு நூறு ரூபா கூலி. இராமாயி கஞ்சியைக் கொண்டுவந்து இறக்கி வைத்தாள். சூரியன் உஷ்ணத்தைக் கக்கிக் கொண்டிருந்தான். " இந்தாய்யா... வந்து கஞ்சியக் குடிச்சிட்டுப் போயி வேலையைச் செய் " அவள் அக்கறையோடு புருசனைக் கூப்பிட்டாள். " கொஞ்சம் பொறுடி இன்னும் இரண்டு வரிசைக்கல் அறுத்துட்டு கஞ்சிக் குடிக்கிறேன் ", குனிந்துகொண்டே பேசினான். இராமாயி, உடனே கஞ்சியை காக்கா வந்து கொத்தாம நல்லா மூடிவச்சுட்டு புருசனுக்கு இணையா அவளும் மண்ணை அள்ளி செங்கல் அறுக்க ஆரம்பித்தாள். இரண்டு வரிசை வேகவேகமாக கல்லு அறுத்த பிறகு". சரி வாடி, கஞ்சியக் குடிச்சிட்டு வரலாம்." வேலன் கூப்பிட்டான். கையை நல்லா கழுவிட்டு இரண்டுபேரும் சாப்பிட உட்கார்ந்தார்கள். "வெயிலு ஏறிக்கிட்டிருக்கு வா... வா... கல்ல அறுத்துப் போட்டுட்டு அப்புறம் சாவகாசமா உட்காரலாம்" என்றவாறே வேகமாகச் சாப்பிட்டு வேலன் கையைக் கழுவினான். மீண்டும் இருவரும் வேலை செய்ய ஆரம்பித்தனர். கடும் வெயில் அவர்களை வாட்டியது. வேலனின் உடம்பை வியர்வைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தது. "ஏய்யா", "நம்ம முத்து புதுசா எட்டாவதுக்குப் போயி இரண்டு வாரம் ஆவுது. ஒரு புதுச்சட்டை வாங்கல... புஸ்தகம் வாங்கல...". புலம்பினாள். இராமாயி "ம்... புரியுது... புரியுது, இன்னைக்கு சாயந்தரம் முதலாளியப் பார்த்து ஐநூறு ரூபாய் கடன் கேட்கிறேன்" என்றான் வேலன். கொலச்சிப் போட்ட மண்ணையெல்லாம் செங்கல்லா அறுத்துப்போட மணி ஒன்னாகிவிட்டது, சரியா ஆயிரத்து ஐநூறு கல்லு அறுத்து முடித்தனர். கைகால் முகம் கழுவிக்கொண்டு புளியமரத்தடிக்கு வந்தனர். " பசிக்குதடி... சீக்கிரம் கஞ்சியிருந்தா ஊத்து " வேலன் பசியோடு பேசினான். இருவரும் அமர்ந்து கஞ்சி குடித்தார்கள். புளியமரத்தடி நிழல் ரொம்ப அருமையாக இருந்தது. வேலை செய்து களைப்பில், அங்கேயே அசந்து தூங்கினர். வெயில் மூஞ்சியில் அடித்தவுடன் கண்விழித்துக் கொண்ட இராமாயி, "இந்தாய்யா பொழுது சாயப்போவுது எந்திரிய்யா... வேலனைத் தட்டி எழுப்பினாள். அவசராமாக எழுந்து கண்ணைத் துடைத்தான். "சரி நான் முதலாளிகிட்ட போயி கடன் கேட்டுட்டு வாறேன், நீ போயி குடிசையில கஞ்சியக் காச்சு" சொல்லிக் கொண்டே அவன் நடக்க ஆரம்பித்தான். "வாடா... வேலா என்னா விசயம்? இன்னைக்கு கல்லு அறுத்தாச்சா"? முதலாளி வேலனை விசாரித்தார். முதலாளியைப் பார்த்தவுடன் துண்டை எடுத்து கையில் போட்ட வேலன், "ஆமாயா காலவாசலேர்ந்துதான் வர்றேன்", பணிவுடன் பேசினான். "ஐயா என்னுடைய பையனுக்கு புஸ்தகம், சட்டை துணிமணியெல்லாம் வாங்குறதுக்கு ஐநூறு ரூபா பணம் வேணும். "... வேலன் தயவுடன் கேட்டான். பணம் என்றவுடன் தன்னுடைய தொனியை மாற்றிக் கொண்ட முதலாளி, " இந்தா பாரு ஏற்கனவே நீ கட்ட வேண்டிய நாலாயிரத்துக்கு வட்டி ஏறிக்கிட்டே போவுது. அதவேற கட்டி முடிக்கல. அதுக்கு முன்னால இன்னும் கடனா கேக்குற, போயிட்டு நாளைக்கு வா பேசிக்கலாம்" என்று எரிச்சலுடன் பேசினார். மனதில் கோபத்துடனும் தன் வாடிய முகத்தோடும் வேலன் குடிசைக்குத் திரும்பி வந்தான். சாயந்திரநேரம். வெளியே லேசாக இருட்டி இருந்தது. பிள்ளைகள் குடிசை ஓரம் விளையாடிக் கொண்டிருந்தார்கள். வேலன் மெதுவாகக் குனிந்து குடிசையில் நுழைந்தான். இராமாயி சமயல் வேலையை முடித்து விட்டு சாப்பிட தயாராய் இருந்தாள். அப்பா வந்ததைப் பார்த்து முத்து ஓடிவந்தான். கைகால் முகம் கழுவிக் கொண்டு அவனும் சாப்பிடத் தயாரானான். மூவரும் சாப்பிடும்போது, "நாளைக்கு புஸ்தகமெல்லாம் வாங்கித் தருவீங்களா"? முத்து ஏக்கத்தோடு கேட்டான். "டேய், முதல்ல சாப்பிட்டுப் போயி படு. எல்லாம் பிறகு பாத்துக்கலாம், " வேலன் அதட்டினான். சாப்பிட்டு முடித்தவுடன் மூவரும் பாயை விரித்துப் படுத்தனர். வழக்கத்துக்கு மாறாக, வேலன் ஒன்றும் பேசாதிருந்தான். முதலாளி சொன்ன பதில் அவனை அமைதியாக்கிவிட்டது. இராமாயி வேலனுடைய முகத்தைப் பார்த்து பணம் கிடைக்கவில்லையென்று தெரிந்துகொண்டாள். "அப்பா, நாம வருசம், முழுவதும் செங்கல் அறுக்கிறோம். எத்தனையோ பேரு செங்கல் வாங்கிட்டுப்போயி வீடு கட்றாங்க. நம்ம வீடு மட்டும் ஏம்ப்பா வெறும் மண் குடிசையா நிக்குது?" பதில் சொல்லத் தெரியாத வேலன், "டேய் பேசாமப் படுத்துத் தூங்குடா, பெரிய மனுசன் மாதிரி பேசுற" முத்துவை அதட்டினான். கொஞ்ச நேரம் கழித்து முத்துவும் இராமாயியும் தூங்கி விட்டனர். வேலனால், தூங்க முடியவில்லை. முத்து கேட்ட கேள்வி அவனுடைய இதயத்தைக் குத்திக் கொண்டிருந்தது. வேலனுக்கு அடுத்த நாள் வழக்கமான செங்கல் அறுக்கும் வேலை கிடையாது. அறுத்த செங்கலை சூளையில் வைத்து தீப்போடுகிற வேலை. செங்கலுக்கு இடையே கட்டைகளை அடுக்கி விட்டு, தீப்போட ஆரம்பித்தான். அங்கே எரிந்த நெருப்பு செங்கலை மட்டுமல்ல, வேலனுடைய இதயத்தையும் சுட்டது. |