text
stringlengths 16
178
|
---|
அஞ்சலிவந்தனம் ஆருக்கும் நன்மை. |
அஞ்சனக்காரன் முதுகில் வஞ்சனைக்காரன் ஏறினான். |
அஞ்சா நெஞ்சு படைத்தால் ஆருக்கு ஆவான்? |
அஞ்சாவது பெண் கெஞ்சினாலும் கிடையாது. |
அஞ்சி ஆண்மை செய்யவேணும். |
அஞ்சி நடக்கிறவளுக்குக் காலமல்ல. |
அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா? |
அஞ்சிலே பிஞ்சிலே கொஞ்சாமல், அறுபதிற்குமேல் கொஞ்சினானாம். |
அஞ்சில் அறியாதவன் ஐம்பதில் அறிவானா? |
அஞ்சினவனைக் குஞ்சும் வெருட்டும். |
அஞ்சினவனைப் பேய் அடிக்கும். |
அஞ்சினவன் கண்ணுக்கு ஆகாசமெல்லாம்பேய். |
அஞ்சினாரைக் கெஞ்சுவிக்கும், அடித்தாரை வாழ்விக்கும். |
அஞ்சு காசுக்குக் குதிரையும் வேண்டும், அதுவும் ஆற்றைக் கடக்கப் பாயவும் வேண்டும். |
அஞ்சு குஞ்சும் கறியாமோ, அறியாப் பெண்ணும் பெண்டாமோ? |
அஞ்சுகதவும் சாத்தியிருக்க, ஆமுடையான் வாயிலே பேணவளார்? |
அஞ்சுக்கு அறுகு கிள்ளப்போனவன், திரட்டிக்குக் கொண்டுவந்தானாம். |
அஞ்சுக்கு இரண்டு பழுதில்லை. |
அஞ்சு பணம் கொடுத்தாலும், அத்தனை ஆத்திரம் ஆகாது. |
அஞ்சுபணங் கொடுத்துத் கஞ்சித்தண்ணீர் குடிப்பானேன்? |
அஞ்சு பெண் பிறந்தால் அரசனும் ஆண்டியாவான். |
அஞ்சும் இருக்கிறது நெஞ்சுக்குள்ளே, அதுவுமிருக்கிறது புந்திக்குள்ளே. |
அஞ்சுரு ஆணியில்லாத்தேர் அசைவதரிது. |
அஞ்சுபொன்னும் வாங்கார் அரைப்பணமே போதுமென்பார். |
அஞ்சும் மூன்றும் உண்டானால், அறியாச் இறுக்கியும் கறியாக்குவாள். (பெண்ணாவாள்) |
அஞ்சுருவுத்தாலி நெஞ்சுருவக்கட்டிக் கொண்டு வந்தாற்போல் வலக்காரமாய்ப் பேசுகிறாய். |
அஞ்சு வயதுப் பிள்ளைக்கு ஐம்பது வயதுப் பெண் கால் முடக்கவேண்டும். |
அஞ்சுவோரைக் கெஞ்சடிக்கப் பார்க்கிறான். |
அஞ்சூர்ச்சண்டை சிம்மாளம், ஐங்கல அரிச ஒரு கவளம். |
அஞ்செழுத்தும் பாவனையும் அப்பனைப்போல் (அவனைப்போல்) இருக்கிறது. |
அடக்கத்துப் பெண்ணுக்கு அழகேன்? |
அடக்கமே பெண்ணுக்கு அழகு. |
அடக்கம் ஆயிரம்பொன் தரும். |
அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதார் கல்லார். |
அடக்குவாரற்ற கழுக்காணி. |
அடக்குவாரற்ற கழுக்காணியும் கொட்டுவாரற்ற மேளமுமாய்த் திரிகிறான். |
அடங்காத மனைவியும் ஆங்கார புருஷனும். |
அடங்காப் பாம்பிற்கு ராஜா மூங்கில்தடி. |
அடங்காப்பிடாரியைப் பெண்டுவைத்துக் கொண்டது போல். |
அடங்காப் பெண்சாதியால் அத்தைக்கும் நமக்கும் பொல்லாப்பு. |
அடங்காமாட்டுக்கு அரசன் மூங்கில் தடி. |
அடங்கினபிடி பிடிக்கவேண்டுமேயல்லாமல், அடங்காப்பிட பிடிக்கலாகாது. |
அடம்பங்கொடியும் திரண்டால் மிடுக்கு. |
அடா என்பான், வெளியே புறப்படான். |
அடாது செய்தவன் படாது படுவான். |
அடி அதிரசம் (ஆலங்காய்), குத்து கொழுக்கட்டை. |
அடி உதவுகிறதுபோல அண்ணன் தம்பி உதவார். |
அடி என்கப் பெண்சாதியில்லை, அஷ்ட புத்திரவெகு பாக்கிய நமஸ்து |
அடி என்கிற மந்திரியுமில்லை பிடி என்கிற ராஜனுமில்லை. |
அடி ஒட்டலே கரணம் போடப்பார்க்கிறான். |
அடி ஒட்டையா யிருந்தாலும் கொழுக்கட்டை வேக வேண்டியதுதானே |
அடிக்க அடிக்கப் பந்து அதிக விசைகொள்ளும் |
அடிக்காயிரம் பொன் கொடுக்கவேண்டும். |
அடிக்கிற காற்றுக்கும் பெய்கிற மழைக்கும் பயப்படு. |
அடிக்கிற காற்று வெயிலுக்குப்பயப்படுமா? |
அடிக்கும் ஒரு கை, அணைக்கும் ஒரு கை. |
அடிக்கும் காற்றிலே எடுத்துத் தூற்றவேண்டும். |
அடிக்கும் பிடிக்கும் சரி. |
அடி செய்கிறது அண்ணன் தம்பி செய்யார். |
அடிச்சட்டிக்குன்ளே கரணம் போடலாமா? |
அடித்த இடம் கண்டுபிடித்தழ ஆறு மாசம் செல்லும். |
அடித்த ஏருக்கும் குடித்த கூழுக்கும் சரி. |
அடித்தது ஆட்டம் பிடித்தது பெண்டு. |
அடித்தாலும் புருஷன் புடைத்தாலும் புருஷன். |
அடித்துப் பழுத்ததும் பழமா? |
அடித்துப் பால் புகட்டுகிறதா? |
அடித்து வளர்க்காத பிள்ளையும் முறுக்கி வளர்க்காத மீசையும் செவ்வையாகா. |
அடித்து விட்டவன் பின்னே போனாலும், பிடித்து விட்டவன் பின்னே போகலாகாது. |
அடிநாக்கிலே நஞ்சும் நுனிநாக்கிலே அமிர்தமுமா? |
அடி நொச்சி நுனி ஆமணக்கா? |
அடிப்பானேன் பிடிப்பானேன் அடக்குகிற வழியில் அடக்குவோம். |
அடிமேல் அடி அடித்தால், அம்மியும் நகரும் |
அடிமை படைத்தால் ஆள்வது கடன். |
அடியற்ற பனை போல் விழுந்தான். |
அடியற்ற மரம்போல அலறிவிழுகிறது. |
அடியற்றால் நுனி விழாமலிருக்குமா? |
அடியாத மாடு படியாது. |
அடியிலுள்ளது நடுவுக்கும் முடிக்கும் உண்டு. |
அடியும் நுனியும் தறித்த கட்டையபோல. |
அடியும் பட்டுப் புளித்த மாங்காயா தின்னவேண்டும்? |
அடி யென்று அழைக்கப் பெண்டாட்டி, இல்லை, பிள்ளை எத்தனை பெண் எத்தனை என்கிறான். |
அடியைப்பிடிடா பாரதபட்டா. |
அடி யொட்டி யல்லா மேற்கரணம் போடவேணும்? |
அடிவானம் கறுத்தால், ஆண்டை வீடு வறுக்கும். |
அடிவண்டிக் கடாப்போலே. |
அடிவயிற்றிலே இடிவிழுந்தாற்போல. |
அடுக்களைக் இணற்றிலே அமுதம் எழுந்தாற்போல. |
அடுக்களைக் குற்றம் திருப்பால் குழைந்தது, ஆமுடையான் குற்றம் பெண்ணாகப் பிறந்தது. |
அடுக்களைக்கு ஒரு பெண்ணும் அம்பலத்துக்கு ஒரு ஆணும் இருக்கிறதென்கிறான். |
அடுக்களைப் பூனைபோல் இடுக்கிலே ஒளிக்கிறது. |
அடுக்களைப் பெண்களுக்கு அழகுவேண்டுமா? |
அடுக்குகிற அருமை உடைக்கிற நாய்க்குத் தெரியுமா? |
அடுக்குகிற வருத்தம் உடைக்கிறதுக்குத் தெரியாது. |
அடுத்த கூரை வேவுங்கால் தன் கூரைக்கு மோசம். |
அடுத்ததன் தன்மை ஆன்மாவாகும். |
அடுத்தது காட்டும் பளிங்கதுபோல, (நெஞ்சில்) கடுத்தது காட்டும் முகம். |
அடுத்தவரை அகல விடலாகாது. |
அடுத்தவனைக் கெடுக்கலாமா? |
அடுத்தவன் வாழ்வைப் பகலே குடி கெடுப்பான். |
அடுத்த வீட்டுக்காரி பின்ளை பெற்றாளென்று அம்மிக்குழவி யெடுத்துக் குத்தக்கொண்டாளாம். |